Thursday, April 30, 2009
பாசிசத்திற்கு எதிரான முஸ்லிமல்லாத கட்சிகளுக்கு வாக்களியுங்கள்
குறிப்பாக தமுமுக - மமக என்ற பெயரில் தேர்தலை சந்திக்கின்றது.
திமுக கூட்டணியைப் பொறுத்த மட்டில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அறிவித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றது. குறிப்பாகச் சொல்வதென்றால் முஸ்லிம்களுக்கு என மூன்றரைச் சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கின்றது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியானது முஸ்லிம்களுக்கு குறிப்பிடும்படியான ஒன்றும் செய்யாமலிருந்தாலும் தேசிய அளவில் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சிக்கு மாற்றமான ஒரு வலுவான அணியாக உள்ளது.
அதே வேளையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளில் ஒன்றான பாமக ஆகிய கட்சிகள் வெளிப்படையாக இல்லாமல் ரகசிய ஒப்பந்தத்தின் வாயிலாக தேர்தலுக்குப் பின்னர் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவில் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அதனால்தான் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சியும் கூட்டணி என்ற பெயரில் கார்த்திக் போன்றவர்களுடன் பம்மாத்து வேலை செய்துவருகின்றது.
அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சியோடு கூட்டணி சேராமல் இருப்பது எதற்காகவென்றால், கணிசமான தமிழ் முஸ்லிம்களுடைய ஓட்டுக்களையும் பெற்றுவிட்ட பின்னர் ஆட்சியில் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்ற ரகசிய ஒப்பந்தம் ஆகும்.
அதன் அடிப்படையில் மதவெறி பிடித்த கட்சி ஒரு மாநிலத்தை ஆட்சி செய்து முஸ்லிம்களையும் அது போன்று கிறிஸ்தவர்களையும் துவம்சம் செய்து நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்திய காட்சிகள் இன்றும் தொடரவே செய்கின்றது என்றிருக்கையில் இந்த பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சிக்கு ஆதரவளித்து தேசிய அளவில் அரியணை ஏற்றினால் அதன் பின்னர் அவர்களுடைய கோர தாண்டவத்தைச் சொல்லவா வேண்டும்.
ஆக தேசிய அளவிலான பயங்கரவாதம் தடுத்து நிறுத்தப்படவும் முஸ்லிம் - கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு ஓரளவு பாதுகாப்பான நிலையை ஏற்படுத்துவதற்கான மிகச்சரியான ஆயுதம் இந்த தேர்தலேயாகும். இந்த தேர்தல் மூலம் கிடைக்கும் வாய்ப்பை கை நழுவ விட்டுவிட்டு (ஒருவேளை) பாரதீய ஜனதாவின் ஆட்சியில் கோர்ட் கேஸ் என்று அலையலாம் என்பதை ஓரளவு உணர்வுள்ள ஒரு முட்டாள் கூட ஒப்புக்கொள்ளமாட்டான். முன்னர் ஆறு ஆண்டுகள் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது நாட்டில் பெரிய அளவிலான கலவரங்கள் நடக்காமல் இருந்தது கூட அவர்களுடைய கைங்கர்யமும் வெள்ளோட்டமுமே காரணமாக இருந்தது. எனினும் தற்போது பாஜாகாவின் செயல்பாடுகள் வெளிப்படையான பயங்கரவாதம் என்பதை குஜராத் மற்றும் ஒரிசா மாநிலங்களை உதாரணமாகக் கொண்டு புரிந்து கொள்ளலாம்.
எனவே மதவெறி பிடித்த பாரதீய ஜனதா எனும் கட்சிக்கு எதிராக தமிழகத்தில் இருக்கும் கூட்டணி என்பது திமுக தலைமையிலான கூட்டணியே ஆகும். நேற்றுவரை திமுகவை வரம்பின்றி புகழ்ந்து தள்ளிவிட்டு இன்று திமுக தங்களுக்கு இடம் தராத காரணத்தால் அந்த கூட்டணியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் மமகாவின் கூற்றையும் இங்கு கவனிக்கவேண்டியுள்ளது.
தங்களுக்கு வாரியப்பதவி கிடைத்ததால் திமுகாவை ஆதரித்த இவர்கள் திமுகவினால் கழற்றிவிடப்பட்டபோது தங்களால் மிகக்கடுமையாக எதிர்க்கப்பட்ட அதிமுகவினரிடமும் இரண்டு தொகுதிகளுக்காக அலைந்தனர். அங்கும் சரியான சவுக்கடி கிடைத்ததும் தற்போது சமுதாயத்திற்கு பாடுபடும் முஸ்லிம் கட்சி என்று ஊர் ஊராக புலம்புகின்றனர். தாம் ஏற்கனவே கண்ணை மூடி ஆதரித்த திமுக வை (சீட் கிடைக்காத ஒரே காரணத்தால்) கன்னாபின்னாவெனத் திட்டித் தீர்க்கின்றனர். தாங்களும் சில தொகுதிகளில் போட்டியிடவும் செய்கின்றனர். இவர்கள் போட்டியிடாத தொகுதிகளில் இவர்கள் யாரை ஆதரிப்பார்கள்? பாப்பாத்தி என்று இவர்கள் கூறிய ஜெயலலிதாவையா? அல்லது இட ஒதுக்கீட்டுக்காக இவர்களால் நன்றியறிவிப்பு மாநாடு நடத்தப்பட்ட கருணாநிதியின் கூட்டணிக்கா என்பதை தெளிவாக குறிப்பிடவேண்டும்.
மேலும் தேசிய அளவில் ஆட்சியை நிர்ணயிக்கும் தமிழகத்தின் இரண்டு கூட்டணிகளில் தற்போது திமுக தலைமையிலான கூட்டணி ஒருபக்கமும் தேர்தலுக்குப்பின் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்கக் காத்திருக்கும் அதிமுக - பாமக கூட்டணி மறு பக்கமும் வாக்கு சேகரிக்கும் போது முஸ்லிம் கட்சி என்று கூறியே முஸ்லிம்களின் பொது எதிரியான பாரதீய ஜனதா கட்சியின் வெற்றிக்காக ஓட்டுக்களை பிரிக்க நினைக்கும் மமகவின் நிலைபாட்டை நாம் சரியாக புரிந்து கொள்ளவேண்டும். இது மமக வுக்கும் நன்றாகத் தெரியும்.
குறிப்பாக இவர்கள் கூட்டணி வைத்துள்ள (புதிய தமிழகம்) கிருஷ்ணசாமிக்காக தென்காசி தொகுதியில் பாஜக வுடன் கூட்டணி வைத்துள்ள சரத்குமாரும் கார்த்திக்கும் பிரச்சாரம் செய்யப்போவதாக வரக்கூடிய செய்திகளும் கைமாறாக அவர்கள் போட்டியிடும் தொகுதியில் புதிய தமிழகம் போட்டியிடாது என்ற கிருஷ்ணசாமியின் அறிக்கையும் தௌ;ளத் தெளிவாக பாஜகவை ஆதரிக்கும் ஒரு நடவடிக்கை என்றால் மறுக்க இயலாது.
ஆனாலும் தங்களது மானத்தைக் காக்க சமுதாயத்தை அடகு வைத்தாவது காரியம் சாதிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு சமுதாயம் சரியான பாடத்தை புகட்டித்தான் ஆகவேண்டும். அது முஸ்லிம்களுக்கு வேட்டு வைக்கும் மமக போன்ற முஸ்லிம் கட்சியாக இருந்தாலும் சரியே. அதை விட பாசிசத்திற்கு எதிரான முஸ்லிமல்லாத கட்சிகளுக்கு அளிக்கும் வாக்குகள் லட்சம் மடங்குகள் மேலானவை என்பதை தமிழக முஸ்லிம்கள் உணர்ந்து வாக்களிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.
எம். எம். அவுலியா
Tuesday, April 28, 2009
பொது அறிவிப்பு - இந்திய தேசிய மக்கள் கட்சி
Sunday, April 26, 2009
ஏன் முஸ்லிம்கள் இராமநாதபுரம் தொகுதியில் மட்டும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது?
• 1960 முதல் தி.மு.க ஆட்சியமைத்த காலத்தில் இருந்து ஒவ்வொரு தி.மு.க ஆட்சியின் போதும் ஏனைய ஆட்சிகளில் மறுக்கப்பட்டு வந்த சமூக நீதி இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டது.
• இஸ்லாமியர்கள் கல்வி அறிவு பெற்று வேலை வாய்ப்புக்களிலும், பொருளாதாரத்திலும் ஏனைய சமூகத்தினரை போல் முன்னேற வேண்டும் என்ற காரனத்தினால் டாக்டர் கலைஞர் அவர்கள் 1960 ல் தான் ஆட்சியமைத்தவுடன் இஸ்லாமிய சமூகத்தினருக்காக முதலில் மதுரையில் வக்பு வாரிய கல்லூரி அமைக்க இட ஒதுக்கீடு செய்து கல்லூரி கட்ட நிதி ஒதுக்கினார். பின்னர் அது பத்தாது என்று சென்னையில் கலைஞரின் அரசியல் குரு காயிதே மில்லத் பெயரில் கல்லூரி அமைக்க இட ஒதுக்கீடு செய்து கல்லூரி கட்ட நிதி ஒதுக்கினார்.
• உருது மொழி பேசக் கூடிய சிறுபான்மையின மக்களுக்காக உருது அக்காடமி அமைத்து தந்தார் தமிழினக் காவலர் கலைஞர்; அவர்கள்.
• 1990 முதல் முஸ்லிம் சமுதாயத்தினரை குறிவைத்து ஜெயலலிதாவாலும் மதவெறி பா.ஜ.க வாலும் போடப்பட்ட ஆயிரக்கணக்கான தடா மற்றும் பொடா வழக்குகளை விடுதலை செய்து அவற்றை சாதாரன வழக்குகளாக மாற்றி தடா சட்டத்தை ரத்து செய்ய வைத்தார்.
• ஜெயலலிதா ஆட்சியில் முஸ்லிம்களால் என்ன செய்து விட முடியும் என்ற அகம்பாவத்தில் முஸ்லிம்களின் ஜீவாதார உரிமையான வக்பு வாரியத்திற்கு முஸ்லிமை நியமிக்காமல் ஒரு முஸ்லிம் அல்லாத நபரை அமைச்சராக நியமித்தது. ஆதை மாற்றி டாக்டர் கலைஞர் அவர்கள் தனது ஆட்சியில் இரன்டு முஸ்லிம்களுக்கு அமைச்சர் பதவி அளித்து ஒரு முஸ்லிமை வாரியத் தவைராக ஆக்கியது.
• முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 3.5 மூ இட ஒதுக்கீடு. மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்கியது.
• உலமாக்கள் நல வாரியம் அமைத்து உலமா பெருமக்களின் நீண்ட கால அவல நிலைக்கு முற்றுப் புள்ளி வைத்தது.
• பி.ஜே.பியின் நீண்ட நாள் கணவான பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெறிவித்து அதை வராமல் தடுத்து நிறுத்தியது.
• ஜெயலலிதாவால் முதல் முறையாக சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக புகுத்தப்பட்ட 'தலித் முஸ்லிம் என்ற வாசகத்தை நீக்கியது.
• ஏழை சிறுபான்மை குடும்பங்களுக்கு எட்டாக் கனியாக இருந்த கேஸ் அடுப்பு, தொலைக்காட்சி பெட்டி முதலியவற்றை இலவசமாக வழங்கியது.
• ஏழை விவசாயிகளின் கடன் தள்ளுபடி, ஒரு ரூபாயில் அரிசி, சிறுபான்மை மானவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் என வழங்கியது. இலவசமாக முஸ்லிம் மாணவர்களுக்கான தொழில் பயிற்சி மற்றும் கல்வி திட்டம்.
• அப்பாவி ஊனமுற்ற சிறைவாசியான மதானிக்கு ஜெயலலிதாவால் மறுக்கப்பட்டு வந்த அவரது நோய்க்கான சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட காரனத்தால் முஸ்லிம் அதிகாரி என்ற ஒரே காரனத்தல் உள்துறை செயலாளராக இருந்த முனீர் ஹோடாவை தேச துரோக குற்றம் சாட்டி ஜெயலலிதா பதவி நீக்கம் செய்தார். கலைஞர்; ஆடசிக்கு வந்தவுடன் முதல் காரியமாக முனீர் ஹோடாவின் பதவி நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பதவியில் அமர்த்தி முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தியது.
ஏன் சிறுபான்மை இனத்தவர்கள் இந்த தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் மட்டும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது?
• முஸ்லிம் வேட்பாளர்களுக்கு சிறுபான்மை சமுதாயத்தினர் வாக்களித்தால் ஏறத்தாள நமது சமுதாயத்தின் 185,000 வாக்குகள் பிறிந்து போகும் அதனால் மிக எளிதாக பி.ஜே.பி (B.J.P) மற்ற சமூக ஆதரவுடன் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. (செட்டியார், நாடர், அகமுடையார் என பல சங்கங்கள் பி.ஜே.பி க்கு ஆதரவு தெறிவித்துள்ளன)
• தி.மு.க வேட்பாளர் திரு. சிவக்குமார் (எ) ரித்தீஸ் அவர்கள் ஜாதி, மத பேதமற்ற ஒரு சிறந்த மனிதராவார். இது வரை அவர் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக செயல்பட்டதாக எந்த ஒரு ஆதாரமான தகவல்களும் இல்லை. திரு. சிவக்குமார் (எ) ரித்தீஸ் அவர்கள் நமது சமுதாய மக்கள் மீது அளப்பாறிய பாசமும், அன்பும், மறியாதையும் கொண்ட கண்னியமான நபர்.
• மற்றவர்களுக்கு வாக்களித்தால் நமது மாவட்டத்தின் வாழ்வாதார திட்டமான சேது சமுத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டு நம் மாவட்டம் மீண்டும் வறுமை மாவட்டமாக்கப்படும்.
• முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களித்து அதன் மூலம் மதவாத பா.ஜ.க (B.J.P) ஆட்சிக்கு வந்தால் நமது மாவட்டம் 'ராமர் பாலம் பெயரால் மதக்கலவரங்களை தோற்றுவித்து குஜராத்தை போல் சிறுபான்மை மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகும் அபாயம்.
• பா.ஜ.க முன்வைத்துள்ள ஹிந்துத்துவம் எனும் செல்திட்டம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், மதச் சார்பின்மைக்கும், அரசியல் சாசன சட்டத்திற்கும் ஏன் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் எதிரானதாகும். நீங்கள் இந்த தேர்தலில் மட்டும் நமது தொகுதியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் இந்த செயல் திட்டத்தை செயல் படுத்தும் பா.ஜ.க வின் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கின்றீர்கள்.
• இராமநாதபுரம் மக்களவை தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பா.ஜ.க வின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
• சிந்திப்பீர்!! கலைஞர் அவர்கள் தான்' நமது சமுதாயத்திற்கு 4 எம்.பி சீட்டுகளுக்கும் மேல (10%); வழங்க முன்வந்தார்கள் (காங்கிரஸ் -1 மு.லீக் -1 தமுமுக -1 மாநிலங்களவை – 1 (ரஹ்மான்கான்) ) ஆனால் ஒட்டுமாத்த 4 சீட்டும் தங்களுக்கே வேண்டும் என்று கேட்டு சமுதாயத்தை நட்டாற்றில் விட்டுவிட்டு இன்று உங்களிடம் கலைஞர் துரோகி என்கிறார்கள். சுற்று சிந்திப்பீர் சமுதாய நல்லுள்ளங்களே! கலைஞரா துரோகி? யார் துரோகிகள் என்பதை முடிவு செய்யுங்கள். உங்கள் வாக்குகளை நமது வேட்பாளர் திரு. சிவக்குமார் (எ) ரித்தீஸ் அவர்களுக்கு வழங்குங்கள்.
• இது சட்டமன்ற தேர்தல் அல்ல! பாராளுமன்ற தேர்தல்!! சுpந்தியுங்கள் யார் ஆட்சி வேண்டும் நமக்கு? பாபர் பள்ளியை இடித்து, நமது சமூகத்திற்கு தீவஜரவாத முத்திரை குத்திய பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியா? ஆல்லது மதச்சார்பற்ற காங்கிரஸ் ஆட்சியா? சுpந்திப்பீர் செயல்படுவீர்.
நமது சமுதாய ஓட்டுக்களை சிந்தாமல் சிதறாமல் திரு. சிவக்குமார் (எ) ரித்தீஸ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாரி வழங்குவீர்.
இவன்
அக்பர் ராஜா B.A.B.L
ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்
மாவட்ட தலைவர்
தொடர்புக்கு : 9047507665 - 9894262100 - 9865252519
இந்திய தேசிய மக்கள் கட்சி
மாவட்ட தலைமையகம்
66, திருச்சி ரோடு
கேணிக்கரை, இராமநாதபுரம்
தொலைபேசி : 04567 - 221545
Friday, April 24, 2009
இந்திய தேசிய மக்கள் கட்சி தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு
பத்திரிகையாளர் சந்திப்பில் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அக்பர் ராஜா B.A.B.L மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் திரு. ஜாஃபர் ஆகியோர்.
கூட்டத்தின் முடிவில் பெரும்பான்மை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கருத்துக்கேற்ப இந்த 15 வது மக்களவைத் தேர்தலில் சமுதாய நலன் கருதியும், மதவாத கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்காகவும், சிறுபான்மை சமுதாயத்திற்கு சமூக நீதி கிடைத்திட வேண்டியும் திராவிட முன்னேற்ற கழகம் அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு ஆதரவளித்து அவர்களை வெற்றி பெறச் செய்வதென தீர்மானிக்கப்பட்டது.
இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இப்பகுதி மக்களின் வாழ்வாதார திட்டமான சேது சமுததிர திட்டம் தடையின்றி நிறைவேற்றிடவும், கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு பகுதி மக்களின் குடிநீர் தேவைகள் நிறைவேற்றப்படவும், மீனவர்களின் பாதுகாப்புக்காவும் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் நடிகர் ரி்த்தீஸ் என்ற சிவக்குமாரை ஆதரித்து அவரது வெற்றிக்கு உழைப்பதெனெ முடிவு செய்யப்பட்டுள்ளது.
கூட்டத்தின் நிறைவில் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் திரு. முகவை பாலா அவர்கள் நன்றி கூறினார்.
இப்படிக்கு
வழக்கறிஞர் அக்பர் ராஜா B.A.B.L
ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்
மாவட்ட தலைவர்
இராமநாதபுரம்
தொலைபேசி : 9894262100
Wednesday, April 22, 2009
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா - 37 இடங்களில் தி.மு.க விற்கு ஆதரவு

மனித நேய மக்கள் கட்சிக்கு 3 இடங்களில் ஆதரவு
தி.மு.க கூட்டணிக்கு 37 இடங்களில் ஆதரவு
15 வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேர்தல் நிலைப்பாடு குறித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் திரு. முகம்மது அலி ஜின்னா தெறிவிக்கையில் :
சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் 60 ஆண்டு காலமாக அரசியல் அதிகாரத்தில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பது பட்டவர்த்தனமான உண்மை. இந்தியாவில் 13.4% வாழும் முஸ்லிம்கள் சுதந்திரமடைந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவாத்தில் தனது சதவீதத்தில் பாதியை கூட் பெறவில்லை.
அரசியல் பிரதிநிதித்துவத்தில் முஸ்லிம்கள், தலி்த்துகள், இதர சிறுபானடமையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அரசியல் ரீதியில் சக்திப்படுத்துதல் என்ற குறிக்கோளுடன் PFI செயல்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் இதற்கான முயற்சியை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா எடுத்து வரும் இந்த தருனத்தில்தான் மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறோம். இந்த மக்களவை தேர்தலில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நேரடியாக போட்டியிடவில்லை. ஆனால் தேர்தல் சம்பந்தமான முக்கிய நிலைப்பாட்டை திர்மானித்தள்ளது.
தமிழ்நாட்டில் முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் முயற்சியாக மனித நேய மக்கள் கட்சி (MMK) தனி சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றது. இதனை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா வரவேற்கின்றது. எனவே மயிலாடுதுறை, மததிய சென்னை, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்யவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மதவாத ஃபாசிஸக் கட்சிகள் அரசியல் அதிகாரத்திற்கு வருவதை தடுக்கும் வகையிலும் கடந்த இரன்டரை வருட திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு கல்வி , ஏவேலை வாய்ப்பில் 3.5% இட ஒதுக்கீடு, உலமா நல வாரியம் அமைப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டும் , கிலோ 1 ரூபாய் அரிசி, ஏழைகளுக்கு எரிவாயு இனைப்புடன் இலவச கேஸ் அடுப்பு, தமிழகத்திற்கு பயனளிக்கும் சேது கால்வாய் திட்டத்திற்கான உறுதியான முயற்சி போன்ற மக்கள் நலத்திட்டங்களை கருத்தில் கொண்டும் புதுவை உட்பட மீதமுள்ள 37 தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை கொண்ட கூட்டணிக்கு ஆதரவிளத்து வெற்றி பெறச் செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்து.
பாரதீய ஜனதா கட்சி ஹிந்துத்துவா என்னும் அரசியல் செயல்திட்டத்துடன் செயல்படும் ஓர் அரசியல் கட்சி. ஹிந்துத்துவா என்னும் இந்த செயல்திட்டம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் அரசியல் சாசன சட்டத்திற்கும் ஏன் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குமே எதிரானதாகும். இதற்கு பா.ஜ.க நாடு முழுவதும் நடத்திய முஸ்லிம், தலித், கிருத்துவர்களுக்கு எதிரான கலவரங்களே சாட்சி. கடந்த கால பா.ஜ.க வின் ஆட்சிக்காலம் இந்திய வரலாற்றில் ஓர் இருன்ட காலமாகும்.
எனவே பா.ஜ.க வை தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் புறக்கணித்தது போல் ஒட்டுமொத்த மக்களும் புறக்கணிக்கும் வகையில் பாரதீய ஜனதா போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா களமிறங்கி பா.ஜ.க வுக்கு எதிராக களப்பணியாற்றி அதனை படுதோல்வியடையச் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இப்பத்திரிகையாளர் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாலர் ஷேக் முகம்மது தெஹ்லான் பாகவி, மாறிலத் துணைத் தலைவர் ஏ.எஸ் இஸ்மாயீல் , மாநில பொதுச் செயலாளர் ஏ. ஃபக்ருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.
Tuesday, April 21, 2009
இ.தே.ம.க பெயரில் தாக்கல் செய்ய முற்ப்பட்ட வேட்பாளர் வேட்பு மனு நிராகரிப்பு
வேட்புமனு தாக்கல் செய்ய 3ம் நாளான நேற்று இந்திய தேசிய மக்கள் கட்சி சார்பில் அதன் ராமநாதபுரம் பாரதிநகரை சேர்ந்த ஜஹாங்கீர்(40) என் பவர் வேட்பு மனு செய்ய தனது கட்சியினருடன் கலெக்டர் அலுவலகம் வந் தார். வேட்பு மனு தாக்கல் செய்ய முன்மொழிய வேண் டியவர்கள் யாரும் இல்லாததாலும், இ.தே.ம.க வின் அதிகாரப்பூர்வ கடிதம் இல்லாததாலும் அவரின் வேட்பு மனு ஏற்றுக் கொள்ளப்படவில்லை. இது குறித்து கருத்து தெறிவித்த குத்பதீன் ஐபக் என்பவர், இது அதிகாரிகளின் சதி, நாங்கள் மீண்டும் முயற்சிப்போம் என்று கூறினார்.
முன்னதாக, வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது விதிமுறைகளை மீறி குத்பதீன் ஐபக் மற்றும் டாக்டர் ஃபக்ருதீன் , ஜஹாங்கீர் ஆகியோர் ஆட்சியர் அலுவலக பிரதான வாசல் வரை விதிமுறைகளை மீறி வாகனத்தில் சென்றனர் ஆனால் யதார்த்தமாக எஸ்.பி செந்தில் வேலனின் வாகனம் வருவதை கண்ட குத்புதீன் ஐபக் வந்த வாகனத்தின் டிரைவர் வண்டியை நடு ரோட்டில் நிப்பாட்டி விட்டு ஓடி விட்டார். அதனால் ஏற்ப்பட்ட வாக்குவாதத்தில் கேனிக்கரை எஸ்.ஐ யிடம் எஸ்.பி என்ன வாணத்தில் இருந்து குதித்து வந்தாரா? என்று கேட்டுள்ளார்கள். இதனால் குத்புதீன் ஐபக் வந்த வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு, குண்டுக்கட்டாக குத்பதீன் ஐபக் மற்றும் டாக்டர் ஃபக்ருதீன் , ஜஹாங்கீர் ஆகியோரை காவல்துறையினர் வாகனத்தில் இருந்து வெளியேற்றி காவல்நிலையத்தில் காவலில் வைத்திருந்து பிறகு எச்சரிக்கை செய்து விடுவித்த சம்பவமும் நடந்தது.
Monday, April 20, 2009
2 வசனங்கள் நீக்கப்பட்ட குர்ஆன் வெளியீடு - தடுத்து நிறுத்தியது சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை
சென்னை ஏப்ரல் 19, இஸ்லாத்தின் எதிரிகளான இஸ்ரேலாலும், யூதர்களாலும், கிருத்துவர்களாலும் நிதி உதவி செய்யப்பட்டு முஸ்லிம்கள் மததியிலும் பொதுமக்கள் மத்தியிலும் நச்சுக் கருத்தக்களை விதைப்பதற்காக உறுவாக்க பட்ட அமைப்பான "அஹ்லுல் குர்ஆன்" என்ற அமைப்பின் தலைவன் ரசாது கலீபா என்பவன் தன்னைத்தானே இறுதி தூதர் என்றும் குர்ஆன் திறிக்கப்பட்டுள்ளது என்றும் கூறி குர்அனில் சில வசனங்களை நீக்கி அதை ஆங்கிலத்தில் வெளியிட்டான் பின்னர் அவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.இந்த அயோக்கியனின் அமைப்பான "அஹ்லுல் குர்ஆன்" அமைப்பினர் தமிழகத்திலும் உள்ளனர் அவர்களின் தலைமை அலுவலகம் சென்னை மின்ட் பகுதியில் உள்ளது. அவர்கள் நேற்று சென்னையில் ஒரு சுவரொட்டியை ஒட்டியிருந்தனர் அந்த சுவரொட்டியில் கூறப்பட்டிருந்ததாவது :
கடவுளின் பெயரால் அருளாளர் அன்பாளர் ஒரு சரித்திர குற்றம் அம்பலமாகிறுது !!
உலகம் முழுவதும் பரபரப்பூட்டிய இறைத்தூது?
முழு வடிவில் தமிழகத்தில் முதல் முறையாக குரானில் சோக்கப்பட்ட இரு வசனங்கள் ஆதாரப்பூர்வமாக நீக்கப்பட்டு குரானை துர்ய்மை படுத்தி சததியத்தை எடுத்தரைத்ததால் இறை மறுப்பாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட மெய்ப்பிக்கும் தூதர் டாக்டர் ரசாது கலீபா பி.எச்.டி அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட குரானின் தமிழாக்கம்.
(குர்ஆன் இறுதி வேதம் வெளியீட்டு விழா)
19.4.2009 நேரம் மாலை 5.30 மி.
பாவாணர் கலையரங்கம்
அனைவரும் வருக ஆத்மார்த்தி பெறுக
அஹ்லுல் குரான்
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் பொதுச்செயலாளர் திரு. மேலை நாசர் அவர்களை உடனடியாக தொடர்பு கொண்டனர். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையினர் உடனடி நடவடிக்கையில் இறங்கினர். திரு. மேலை நாசர், திரு. ஜமாலி ஆகியோர் உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொண்டு இந்நிகழ்ச்சியை தடை செய்து உடனடியாக அந்த புத்தகங்களை கைப்பற்றி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரினர்.
அதன் பின்னர் சென்னையில் "அஹ்லுல் குர்ஆன்" அமைப்பின் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் முஸ்லிம்களை திரட்டி சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை சார்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக காவல்துற "அஹ்லுல் குர்ஆன்" அமைப்பினரின் அலுவலகததில் அதிரடியாக புகுந்து அங்கு விநியோகத்திற்காக வைக்கப்பட்டிருந்த சரச்சைக்குறிய நூல்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்துள்ளனர்.
Sunday, April 19, 2009
1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வேன் - ம.ம.க வேட்பாளர் சலிமுல்லா கான்
ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மனு தாக்கல் துவங்கிய முதல் நாளில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இரண்டாம் நாளான நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாகான் தேர்தல் அலுவலரான கலெக்டர் வாசுகியிடம் மனு தாக்கல் செய்தார். அவருடன், புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலர்கள் காளிதாசன், கதிரேசன், மனித நேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் ரகமத்துல்லா வந்திருந்தனர்.
சொத்து விவரம்: ரொக்கம் கையிருப்பாக ஐந்து லட்சத்து 79 ஆயிரத்து 855 ரூபாய், வங்கியிருப்பு, வாகனங்கள், நகைகள், அசையா சொத்துக்கள், பாலிசி இல்லை. வழக்குகள்: ராமநாதபுரம், பரமக்குடி போலீஸ் ஸ்டேஷன்களில் ஒன்பது வழக்குகள் உள்ளன. கோர்ட்டில் தீர்ப்பான மூன்று வழக்குகளில் விடுதலை.
சலிமுல்லாகான் கூறுகையில், "பணத்தை வைத்து தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என மற்ற கட்சிகள் களத்தில் உள்ள சூழ்நிலையில், மக்கள் பலம் கொண்ட மனித நேய மக்கள் கட்சி, 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்' என்றார்.
Saturday, April 18, 2009
முகவை மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்
மேடையில் சலிமுல்லா கான், தஸ்பீக் அலி, வாணி சித்தீன், ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், கோவை செய்யது
இராமநாதபுரம் ஏப்ரல் 18, மனித நேய மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் சமூக ஜனநாயக முன்னணியின் செயல் விரர்கள் கூட்டம் இராமநாதபுரம் வலம்புரி மஹாலில் நடந்தது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் திரு. ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். சமூக ஜனநாயக முன்னணியின் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு. சலிமுல்லாஹ்கான் அவர்களை ஆதரித்து P.V.M அறக்கட்டளை உரிமையாளர் திரு. அப்துல் ரசாக், மாவட்ட பொருளாளர் திரு. வாணி சித்தீக், திரு. பாக்கர், திரு. தஸ்பீக் அலி, புதிய தமிழகத்தின் மாவட்ட செயலாளர் திரு. காளிதாஸ், இந்திய தேசிய லீக் நிர்வாகிகள், கோவை செய்யது உட்பட பலர் பேசினார்கள்.
ஒ.யூ.ரஹ்மத்துல்லாஹ், கோவை செய்யது பிரச்சார வாகனத்தில்
அதன் பின்னர் மதியம் சுமார் 1.00 மணியளவில் இராமநாதபுரம் அரன்மனை முன்பாக வேட்பாளர் அறிமுக கூடடம் நடந்தது. கோவை செய்யது அவர்கள் ஏன் மனித நேய மக்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தலைப்பில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அதன் பின்னர் வேட்பாளர் திரு. சலிமுல்லாஹ்கான் அவர்கள் உரையாற்றினார்கள் பின்னர் அங்கிருந்து ஆயிரக்கணக்கான தமுமுக தொண்டர்கள் பின்தொடர வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்றனர். வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு 100 மீட்டர் முன்பே வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும் போன்ற தேர்தல் கமிசனின் விதிமுறைக் அமலில் உள்ளதால் தொண்டர்கள் அனைவரும் தூரத்தில் நிற்க கோவை செய்யது தலைமையில் கூட்டணியை சேர்ந்த 5 நர்கள் மட்டும் வேட்பாளர் சலிமுல்லா கான் உடன் சென்றனர்.
வேட்பாளர் சலிமுல்லாஹ் கான் தனது ஆதரவாளர்களுடன்
வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வளமாக தமுமுக வினர்
சமூக ஜனநாயக முன்னணியின் இந்த வேட்பு மனு தாக்கல் நிகழச்சியில் ஆயிரக்கணக்கில் புதிய தமிழகம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உட்பட பொதுவான பல முஸ்லிம்களும் கலந்து கொண்டனர். அத்துடன் பல்வேறு ஜமாத் நிர்வாகிகளும் வந்திருந்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்களில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடும் வெயிலையும் பொருட்படுத்தாது வந்திருந்தனர்.
அரன்மனை முன்பாக கூட்டணியினர் மத்தியில் உரையாற்றும் கோவை செய்யது
முன்னதாக செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்
Friday, April 17, 2009
முகவையில் தி.மு.க மாநாடு - மு.க. அழகிரி - ரித்தீஸீக்கு பிரச்சாரம்
இராமநாதபுரம், ஏப்ரல் 17 : ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் இராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள திடலில் மாபெரும் மாநாடு நடத்தப்பட்டது. தென்மன்டல தி.மு.க அமைப்பு செயலாளர் திரு.மு.க. அழகிரி அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்கள்.அத்துடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் இந்திய யுனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
காங்கிரஸ் சார்பில் இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ திரு. ஹஸன் அலி அவர்களும், முஸ்லிம் லீக் சார்பில் மாவட்ட தலைவர் திரு. செளக்கத் அலி அவர்களும், விடுதலை சிறுத்தைகளின் மாவட்ட தலைவரும், தி.மு.க மாவட்ட செயலாளர் திரு. ஆர்.ஜி.ஆர், மாநில இளைஞர் அணி திரு பெருநாழி போஸ், தமிழக் குடிசை மாற்றுத்துறை அமைச்சர் திரு. சுப. தங்கவேலன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் திரு. இரவிச்சந்திர ராமவண்ணி, இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. பவாணி ராஜேந்திரன் உட்பட பலரும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் திரு. ரித்தீஸ் அவர்களுக்கு ஆதரவாக அனைவரும் பேசினர். பின்னர் பேசி திரு. மு.க அழகிரி அவர்கள் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் திரு. ரித்தீஸ் அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டியது முகவை மக்களின் கடமை எனவும், இராமநாதபுரம் தொகுதி உட்பட தமிழகத்ின் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெரும் எனவும் கூறினார். மாநாட்டில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் கலந்து கொள்ள வந்த ஆயிரக்கணக்கான வாகனங்களால் முகவை நகரே நெரிசலில் சிக்கி தினறியது.
நம் தலைவர்கள் ???
என் அன்புக்குறிய சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்,
இறைவனைப் புகழ்ந்தவனாக துவங்குகிறேன்..
ஒரு சாதாரண தமிழ் நாட்டின் முஸ்லீம் குடிமகனாக தற்போது நம் சமுதாயத்தில் உள்ள ஒற்றுமை நிலை குறித்து என் மனதில் தோன்றுபவைகளை கொட்டி வைத்திருக்கிறேன். தவறுகள் இருப்பின் இறையோனுக்காய் மனம் பொறுக்கவும்.
நம்முடைய சங்கங்கள்:
இந்த தலைவர்களும், அவர்களுடைய சங்கங்களும் நம் சமுதாயத்திற்காக எதையாவது செய்யாதா என்ற ஏக்கத்தில், எதிர் காலம் எம் சமுதாயத்திற்கு எதையாவது ஒரு நல்ல பாகாப்புத் தன்மையை அளிக்காதா என்ற நோக்கில் நானும் ஒவ்வொரு நாளும் இந்த அமைப்புகளையும் அதன் தலைவர்களையும் கூர்ந்து நோக்கி கவனித்துக் கொண்டுதான் வருகின்றேன். என்னால் முடிந்த அளவில் உடலாளும், உழைப்பாலும், பணத்தாலும் ஒரு சாதாரண தொண்டனாக இந்த சங்கங்களுக்கு, அமைப்புகளுக்கும் உழைத்தும் என்னுடைய சிறப்பான பங்களிப்பை தந்தும் என்னுடைய கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் இந்த கழகங்களுக்காக நன்கொடையும், நிதியுதவியும் செய்து அவர்களின் புத்தக, ஆடியோ, வீடியோ, சி.டி போன்றவைகளையும் நானும் வாங்கியும், பிறருக்கு விற்பனை செய்தும் அதன் மூலமாகவும் இந்த சங்கங்களின், அமைப்புகளின் நிதி நிலையை கூட்டி இருக்கிறேன். ஆனால் இந்த சங்கங்களும், தலைவர்களும் நமக்காக இதுவரை என்ன சாதித்திருக்கிறார்கள் என்று ஒரு தொலைநோக்கு பார்வையில் பார்த்தால் எஞ்சி நிற்பது பூஜ்யம்தான்;. இந்த சங்கங்களையும், அமைப்புகளையும் அதன் தலைவர்களையும், அவர்களின் செயல்பாடுகளையும் இந்த அமைப்புகளுக்குள் நடக்கும் கோஷ்டி பூசல்கள் சண்டைகளையும் நினைத்தால் சலிப்பும், வெறுப்பும்தான் மிஞ்சுகிறது. நம்முடைய ஓற்றுமை மற்றும் நம் சமூக மக்களின் பாதுகாப்பு என்பது இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.
இந்த சங்கங்கள் அமைப்புகள் என்ன செய்தார்கள் நமக்காக:
நம் சமுதாயத்திற்காக இந்த அமைப்புகள் ஓன்றுமே செய்யவில்லை பூஜ்யம்தான் என்று நாம் சொல்லும் போது, தான் என்ற கர்வம் பிடித்து உழலும், தாம் சொல்வதே சிறந்தது, தாம் நடத்தும் அமைப்பே சிறந்தது என்று மார்தட்டிக் கொள்ளும் நம் தலைவர்களுக்கு கோபம் வரலாம். சிலவைகளை செய்கிறார்கள். அவைகளை பற்றியும் காண்போம்.
கூட்டங்கள், மாநாடுகள் போடுகிறார்கள்:
நாங்கள் கூட்டங்கள் போடுகிறோம், மாநாடு போடுகிறோம் என்று சொல்வார்கள் அதில் கூட மார்க்க அறிஞர்களைப் போல யாரும் உரைகளை நிகழ்த்துவதில்லை. மற்ற அமைப்பினரை சாடுவதற்காகத்தான் அதிக நேரம் வாய் கிழிய பேசுகிறார்கள். மற்றவர்களை திட்டுவதற்காகவே எம் மக்களிடம் வசூல் செய்து மாநாடு போட்டு மார்தட்டி பேசி பிற அமைப்புகளை குறை கூறுவதிலேயே விரயம் செய்கிறார்கள். தம் அமைப்புக்கு விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள், வேறு எதாவது உபயோகமான விளைவுகள் அந்த மாநாடுகளால் நிகழ்ந்தது என்று இந்த தலைவர்கள் சொல்வார்களா. கூட்டத்தை கூட்டி நம் மக்களின் நேரத்தையும், செல்வத்தையும் செலவழித்ததை தவிர எதையாவது உருப்படியாக இந்த அமைப்புகள் செய்திருக்குமா என்று இந்த தலைவர்கள் சொல்லட்டும்.
பத்திரிக்கைகள், புத்தக வெளியீடுகள்:
பத்திரிக்கைகள், புத்தக வெளியீடுகள் செய்கின்றார்கள், இதில் இறைமறை தமிழில், மற்றும் பயனள்ள ஹதீஸ் தொகுப்புகளை வெளியிட்டவர்களுக்காக நம் சமுதாயம் கடமைப்பட்டுள்ளது. அவர்களுக்காக நாம் எப்பவும் நம் ஆதரவை தெரிவித்துக் கொண்டும் இருக்கிறோம். அவர்கள் உழைப்பும், பணியும் பாராட்டத்தக்கது. இவைகளை தவிர்த்து குப்பைகளாக வெளிவந்து கொண்டிருக்கும் மற்ற அமைப்புகளின் பத்திரிக்கை வெளியீடுகள் பற்றிப் பார்ப்போம்.
இந்த பத்திரிக்கைகளின் தரம் கூட அதை பார்த்தால் தெரிந்துவிடும். ஏதோ பெயருக்கு சங்க நிதிக்கு வலு சேர்க்க வேண்டும் என்பதற்காகவும், தம் அமைப்பின் கொள்கை விளக்க வெளியீடாகவும் வெளியிடப்படும் சஞ்சிகைகளாகவும், மற்ற அணியினரை தாக்கி அறிக்கைப் போர் நடத்தவும்தான் அவைகள் உதவி இருக்கின்றனவே தவிர அவைகள் நம் இளைஞர்களுக்குள் ஒரு எழுச்சியையோ, எம் பெண்களுக்கு உள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதையோ புரிந்து கொள்ள முடியாத அளவில்தான் இருக்கிறது. அதில் வெளிவரும் கட்டுரைகள் மிக பழைய செய்திகளை தாங்கியிருக்கும். அது கூட எதாவது இணையத்தில், அல்லது ஆங்கில பதிப்பின் தழுவல்களை சுட்டு எழுதியிருப்பார்கள். கூடுவாஞ்சேரியில் பள்ளியில் நடந்த கலவரத்தை பற்றி தெரியாத அந்த ஊர்க்கார இளைஞரின் கையில் தவழும் நம் சங்க கொள்கை முழக்க பத்திரிக்கையில் ஈராக்கையும், பாலஸ்தீனையும், அமெரிக்காவையும் பற்றிய கட்டுரைகள். ஈராக், பாலஸ்தீனம் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் முதலில் நம் ஊர் அரசியல், சமூக சதிகளை இளைஞர்கள், பெண்கள் மத்தியில் பரப்ப வேண்டும். மற்ற பத்திரிக்கைளை பார்த்தாவது நமது பத்திரிக்கைகளின் தரத்தை கூட்ட எந்த தலைவராவது தாம் நடத்தும் பத்திரிக்கைகளில் முயன்றதுண்டா... ?
ஏற்கனவே படிப்பறிவிலும், பொது அறிவு, அரசியல், சமூக சிந்தனைகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் நம் சமுதாய மக்களை இன்னும் அதள பாதாளத்தில் தள்ளும் முயற்சியாகவே இந்த பத்திரிக்கைகள் விளங்கி வருகின்றன. நாமும் இந்த குப்பைகளை வாங்கி நம் காசை கரியாக்கிக் கொண்டிருக்கிறோம். மக்களிடம் விழிப்புணர்வையும், ஒற்றுமையையும் வளர்க்க எந்த பத்திரிக்கையாவது முயன்றதுண்டா என்று சிந்தித்துப் பார்க்கவும்.
இணையத்தளங்கள், மற்றும் மிண்ணணு ஊடகங்கள் :
நம்முடைய அமைப்புகள், சங்கங்களிடையே இணையத்தளங்களுக்கு குறைவில்லை, ஆனால் அவைகள் இதுவரை என்ன பணியாற்றிருக்கிறது என்று காண்போம்.
அந்த இணையத்தளங்களை திறந்தாலே முதல் பக்கத்தில், தலைப்பு செய்தியாக, குண்டர்கள், ரவுடிகள் என்று மற்ற நம் அணியினரை தாக்கியே செய்திகள் அனுதினம் வந்து கொண்டிருக்கிறது. மற்ற அணியினரை சாடியே அதிக பக்கங்களை செலவிடுகிறார்கள் இன்டர்நெட் என்பது இன்றைக்கு எத்தனை வலிமையான ஊடகம் அவற்றை எப்படி பயன்படுத்தி பயன்பெறலாம் என்று என்றைக்காவது இந்த சங்கங்களும் அதன் நிர்வாகிகளும் ஒரு நொடியேனும் சிந்தித்திருப்பார்களா. ?
சின்ன சின்ன குழுக்களாகவும். தனி நபர்களின் ஆர்வத்தாலும் நம் சமுதாய சகோதரர்களால் நடத்தப்படும் இனையத்தளங்கள் எத்தனை வலிமையாக நடை போடுகிறது என்பதையாவது இவர்கள் உணர்ந்திருப்பார்களா ? அழைப்புப்பணி மற்றும் குர்ஆன், சுன்னாவையும் பரப்புவதில் தனிநபர் இணையத்தளங்கள் எத்தனை நன்றாக இயங்குகிறது என்பதை ஏற்றுக் கொள்வதற்கு கூட முடியாத நிலையில்தான் இன்று நம் சங்கங்களும் அதன் நிர்வாகிகளும் தான் என்ற அகந்தையில் உழல்கின்றார்கள். எப்போதாவது நம்மிடம் இருக்கும் சிறிய ஊடகங்களை வலிமையாக்க, ஆக்கபூர்வமாக உபயோகிக்க எந்த சுயநல தலைவர்களாவது சிந்தித்திருப்பார்களா ?
ஆடியோ, வீடியோ, சி.டி வெளியீடுகள் :
நம் அமைப்புகளின் மற்ற அணியினரை தாக்கியும், சுய நிலை விளக்கம் என்று வரும் ஆடியோ, வீடியோ சீ.டி வெளியீடுகளை மாற்று மதத்தினர் பார்த்தால் உங்களுக்குள்ளே இவ்வளவு குழுக்களும், குழப்பங்களும் பிரச்னைகளும் இருக்கிறதா என்று ஓடியே போய்விடுவான். அந்த அளவிற்கு தரம் தாழ்ந்து மற்றவரை தாக்கி வரும் வெளியீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உபயோகமான வெளியீடுகள் பற்றி மட்டும் இனி யோசிப்பார்களா இந்த தலைவர்கள்.
பாதிக்கப்பட்ட நம் சமுதாய மக்களுக்கு உதவிகள் :
கலவரங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்கின்றனர், ஆனால் கலவரம் வருவதற்கு முன்பாக என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை, நமக்குள் ஒற்றுமை நிலையை ஏற்படுத்தி வைத்தீர்கள் என்பதுதான் நம் கேள்வி. அதில் கூட பொது வசூல் செய்த பணத்தை பொதுவாக உதவிகள் செய்வது கிடையாது. பாதிக்கப்பட்ட எல்லோரையும் ஒன்றாக பார்ப்பது கிடையாது. தம் அமைப்பை சார்ந்தவர்களுக்கு மட்டுமே உதவிகள் செய்வது என்ற பாகுபாட்டையும், பிரிவினையையும் இந்த தலைவர்கள் என்றாவது களைய முயற்சித்து இருப்பார்களா ?
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
இனக் கலவரங்களால் நம் மக்கள் பாதிக்கப் படுவதற்கு முன் இந்த அமைப்புகள் என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து வைத்தார்கள்;. பாதிக்கப் படும் வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு எதிரிகளிடம் அடி வாங்கியும், வெறித்தனமாக எம் பெண்களை சூறையாடி மானபங்கம் செய்தும், எம் குழந்தைகளையும், இளைஞர்களையும், வெட்டி நெருப்பில் வீசி எறிந்தும், நம் சமுதாய மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்தும், அழித்தும் எல்லாம் முடிந்த பின்னர் அவர்களுக்காக பொது வசூல் செய்து நாடோடி கேம்ப்களில் வீடு, வாசல், சொத்து உறவினர்களை இழந்து நிற்கும் அவர்களுக்கு எதாவது உதவியை செய்து விட்டு அவர்களுக்காக பரிதாபப்படும் ஏஜெண்டுகளாகதான் நம் சங்கங்கள் இதுவரை இருந்து வந்திருக்கிறது. இத்தனை அடிபட்டும், உதைபட்டும் நம்மில் ஒற்றுமை வேண்டும் என்றும், நம் எதிரிகளை சந்திக்க அவர்களின் சதிகளை முறியடிக்க நாம் ஒன்றுபட்ட சமுதாயமாக இருக்க வேண்டும் என்று எந்த தலைவராவது அதற்காக பாடுபட்டார்களா.
ஈகோ மற்றும் தான் என்ற கர்வம் பிடித்த தலைவர்கள் :
ஏதேதோ பெரிய லாஜிக்கெல்லாம் பேசும் தலைவர்கள், கூட்டங்களில் சவால் விடும் தலைவர்கள் மிக சாதாரண விஷயமாக '' நீங்கள் ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் '' என்று எம் தலைவர் நபி (ஸல் ) அவர்கள் போதித்ததை மட்டும் காதில் போட்டுக் கொள்ள யாரும் தயாராக இல்லை. இதைப்பற்றி நினைத்தாவது பார்த்திருப்பார்களா.
எல்லா தலைவர்களும் ஈகோவால், தான் என்ற மமதையால். தான் சொல்வதே சிறந்தது, தன் கட்சியே உயர்ந்தது என்றும். வறட்டு பிடிவாதம் பிடிக்கின்றார்களே ஒழிய நம் சமுதாயத்திற்கும் அதிலும் குறிப்பாக நம் பெண்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பை ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம் நாம் என்ன நிலையில் இன்று இருக்கின்றோம் என்று இந்த தலைவர்கள் உணர்வார்களா. அநேக குடும்பங்களில் ஆண்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருக்க பெண்களும், குழந்தைகளும், முதியவர்களுமே இருக்கும் நம் சமுதாய மக்களின் பாதுகாப்பு நிலை என்ன என்று உணர்வார்களா இந்த தலைவர்கள்.
பம்பாய், குஜராத், பாபரி மஸ்ஜித், கோவை (இன்னும் எத்தனையோ) சம்பவங்கள் நடந்து நடு ரோட்டில் எம் பெண்களை மானபங்கப்படுத்தி, எம் குழந்தைகளை கொன்று தீயில் போட்டு எரித்த பின்னர் எஞ்சி அறைகுறையாக செத்து ஏதாவது ஒரு அகதிகள் கேம்பில் இருப்பவர்களுக்கு பொது வசூல் செய்து உதவி செய்வதுதான் நம் கழகங்கள் செய்யும் பணியா ? அதற்காகத்தான் இவர்கள் கழகம் நடத்துகிறார்களா ?
இந்த சம்பவங்கள் நடந்து முடிந்த பின்னர் எல்லாம் கூடி ஆர்பாட்டம் செய்ததில் என்ன நன்மையை இதுவரை கண்டோம் என்று நம் எல்லோரும் அறிந்ததே. அதையேனும் இந்த தலைவர்கள் உணர்வார்களா.?
பிற சிறிய கட்சியினரின் ஒற்றுமை நிலை :
சில சிறிய கட்சிகளும், சிறிய சாதி சார்ந்த கட்சிகளும் தங்கள் ஒற்றுமையால் அரசியலிலும், சமூகத்திலும் நல்ல அந்தஸ்தை பெற்று தம்மை சார்ந்து இருக்கும் மக்களுக்காக போராடுவதையும் நாம் கண்கூடாக பார்க்கின்றோம். அதற்கு ஒரே காரணம் அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை என்பதுவும் யாம் அறிந்ததே. இந்த தலைவர்களுக்கு இது கூட தெரியாதா என்ன.
பா.ம.க, ம.தி.மு.க போன்ற சிறிய கட்சிகள் தங்கள் ஒற்றுமையினால் இன்று அரசியலில் எத்தனை பலம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். அந்த அமைப்பை சேர்ந்த மக்களுக்கு அவைகள் எத்தனை சிறப்பாக செயல்படுகிறது என்பதை இந்த தலைவர்கள் சிந்தித்தார்களா.
போர்களமாய் பிற அணியினருடன்:
இவை எல்லாவற்றையம் விட அசிங்கமான செயல் இப்பபோது நம்மிடையே பிரிந்து கிடக்கும் கழகங்களிடையே காண முடிகிறது. நமக்குள்ளாகவே அடித்துக் கொள்வதும். ஒருவர் மற்றவரை தாக்கி அறிக்கைப் போர் என்று எல்லா ஊடகங்களிலும் எவரையாவது திட்டியும், புறம் பேசியும் வசை பாடியும் போர்களமாகதான் காட்சியளிக்கிறது. காவல் நிலையங்களுக்கு கூட சென்று மற்ற அணியினர் மீது புகார்கள் தந்தும். வழக்குகள் தொடர்ந்தும் தங்கள் தரத்தையும் தாழ்த்திக் கொள்ள இந்த மார்க்க அறிஞர்களும், இந்த அமைப்புகளும், தலைவர்களும் தயங்குவதில்லை.
இந்த தலைவர்களுக்கு:
இந்த தலைவர்களுக்கு ஒன்று நாம் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். நம் எதிரிகள், அந்நிய சக்திகள் நம்மை வேறறுக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள், அதற்கு முன்னால் நீங்களாகவே நமக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு பலவீனப்பட்டுப் போகாதீர்கள் அவர்களிடமும் கொஞ்சம் உதை வாங்குவதற்காக பிரிந்து கிடந்து பலவீனப்பட்டுக் கொண்டிருக்கும் நீங்கள் உங்கள் சக்தியை கொஞ்சம் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். நம் எதிரிகள் எல்லோரும் ஓரணியில் நின்று உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தக்க தருணம் பார்த்து நம் மீது பாயவும் காத்திருக்கிறார்கள் என்பதை எப்பவும் மனதில் வைத்து செயல்படுங்கள்.
நம் அரசியல் நிலை :
அரசியலில் மிக சாதுர்யமாக காய்களை நகர்த்தித்தான் நம் எதிரிகள் நம்மை பந்தாடிக் கொண்டிருக்கிறார்கள் ஆகவே நாமும் பல்வேறு மதங்கள் வாழும் இந்த சமுதாயத்தில் நம் குரல் பாராளுமன்றத்திலும், நாடாளு மன்றத்திலும் ஒலிக்க வேண்டும், நமக்கென்று நம்முடைய குறைகளை எடுத்து வைக்க நம் பிரதிநிதிகள் அரசியலில் பங்கு வகிக்க வேண்டும் என்ற எண்ணமாவது தோன்றியிருக்கிறதா இதுவரை அதற்கான எந்த முன்னேற்பாடுகளை செய்து வைத்திருக்கின்றீர்கள். அரசியலே வேண்டாம் என்று நாம் ஒதுங்கி விலகிப் போய்விட முடியாது.
என்ன நிலையை தேர்வு செய்வது:
அரசியலையும், ஆண்மீகத்தையும் ஒன்றாக போட்டு நாம் குழப்பிக் கொள்ளவும் வேண்டாம்.
இரண்டையும் ஒன்றாக போட்டு குழப்புவதால்தான் பிரச்னைகள் அதிகம் வருகிறது. ஆகவே இரண்டு பிரிவுகளாக பிரித்து செயல்படுவதில் எந்த பிரச்னையும் இருக்காது.
மதம் சார்ந்த பிரச்னைகளை அணுக தனிப் பிரிவும், அரசியல், சமூக பிரச்னைகளை அணுக அரசியல் பிரிவும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குர்ஆன், சுன்னா, தொளஹீத் இப்படி எந்த விதமான பிரச்னைகளையும், தீர்வையும் தருவதற்காக அதற்கான அறிஞர்களைக் கொண்ட பிரிவை ஏற்படுத்தி அவர்கள் முற்றிலும் மதம் சார்ந்த பிரச்னைகளுக்கும் தொப்பி போட்டு தொழலாமா, வேண்டாமா, விரலசைத்து தொழலாமா வேண்டாமா என்ற பிரச்னைகளை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். அது போலவே ஒரே அமைப்பாக, ஒரே தலைவர், ஒரே குடையின் கீழ் ஒரு அரசியலமைப்பில், நம்மிடம் உள்ள அரசியல், சமூக சிந்தனைகள் அதிகம் நிறைந்தவர்கள், படித்தவர்கள், அரசியலில் முதிர்ச்சி உள்ளவர்கள், சமூக அரசியல் ஞானம் அதிகம் உள்ளவர்களை அரசியல் பிரிவில் ஏற்படுத்தி தேர்தல் காலங்களில், மற்றும் சமூக, அரசியல், சட்ட பிரச்னைகள் நமக்கு வரும்போது அவர்கள் பாடுபடும் வகைக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும். நிச்சயமாக நம்மிடம் அரசியல் பிரிவு வேண்டும். நாமும் அரசியலில் பங்காற்றித்தான் நம் உரிமைகளையும், பாதுகாப்பையும் பெற முடியும் என்பது மிக தெளிவானது. இதில் எந்த குழப்பமும் இல்லை. இதில் மார்க்க விஷயங்களை நுழைத்து குழம்பிக் கொள்ள வேண்டாம்.
இன்று நம் நிலை:
நம் எதிரிகள் அவர்கள் செய்ய துடிப்பதை நாமே செய்து கொள்கிறோம் சிறிய சிறிய குழுக்களாக பிரிந்து கிடக்கிறோம். நம் எதிரிகள் நம்மை பகடைக் காய்களாக ஆக்கி அரசியல் களத்தில் நம்மை பந்தாடி விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். பெண்களை, முதியவர்களை, குழந்தைகளை மட்டும் வீட்டில் விட்டு விட்டு வெளிநாட்டில் வாழும் ஆண்கள் எல்லோரும் இந்த அமைப்புகள் எல்லோரும் ஒன்று கூடி ஒரு நல்ல தீர்வையும், நம் மக்களுக்கு நல்ல பாதுகாப்புத் தன்மையையும் தராதா என்று காத்திருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் நாளுக்கு நாள் புதிய அமைப்புகள் தோன்றுவதும், நான்தான் தலைவர் என்று புதிய தலைவர் வருவதும் தினசெய்திகளாக இருக்கிறது. ஒன்றாக பலமாக இருந்த அமைப்புகள் தனிப்பட்ட தொலைநோக்கு பார்வையில்லாத தலைவர்களின் அகம்பாவத்தால், தான் என்ற கர்வத்தால் நாளுக்கொரு அமைப்பாக உடைந்து மக்கள் மத்தியில் பலவீணப்பட்டு கிடக்கிறார்கள். சில நேரங்களில் இவர்கள் ஒருவேளை நம் எதிரிகளின் கைக்கூலிகளோ என்று சந்தேகப்படும் அளவிற்கு இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் இருந்து வருகிறது. ஒருவர் மற்ற சகோதரரையும், மற்ற அணியினரையும் அப்படித்தான் நடத்திக் கொள்கிறார்கள். நம் சமுதாயத்தின் முன்னேற்றம், பாதுகாப்புத் தன்மை என்பது இன்னும் ஒரு பெரிய கேள்விக் குறியாகத்தான் தொக்கி நிற்கிறது.
இளைஞர்களுக்கு:
கண் மூடித்தனமாக தலைவர்களின் பின்னால் போகும் இளைஞர்களே...செத்த நாயிலும் கேவலமான நம் வாழ்க்கை எந்த உரிமையும் இல்லாத நமக்கு, ஒற்றுமைக்காக பாடுபடாத இந்த தான் என்ற ஈகோ பிடித்த தலைவர்களின் பின்னால் உங்கள் மாபெரும் சக்தியை வீணடித்துக் கொண்டிருக்கின்றீர்கள் எப்போதாவது உங்களை நோக்கி கேள்விக் கேட்டிருக்கின்றீர்களா. அல்லது உங்கள் தலைர்களை நோக்கி இந்த கேள்விகளை கேட்டு இருக்கின்றீர்களா. இந்த வாழ்கையை எப்போது மாற்றிக் கொள்ளப் போகிறீர்கள். எப்போதாவது ஒற்றுமையைப் பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா. செத்த பிணம் போல, ஆட்டு மந்தைகளைப் போல சுயமாக சிந்திக்காமல் எத்தனை நாளைக்கு இந்த தலைவர்களின் பின்னால் ஓடி உழைக்கப் போகிறீர்கள். எத்தனை நாளைக்கு இந்த தலைவர்களின் பின்னால் கொடி பிடித்துக் கொண்டு இருக்கப் போகிறீர்கள். சுயமாக சிந்தியுங்கள், உங்களுக்குள்ளே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள், தலைவர்களையும் கேள்வி கேளுங்கள். நாளை நம் சமுதாயம் ஒற்றுமையாய் ஓரே அணியின் கீழ் ஒரே குடையின் கீழ் நிற்க பாடுபடும் தலைவரை இனம் காணும் வரை எந்த தலைவரின் பின்னாலும் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.
தலைவர்களுக்கு:
அரசியலையும் மதத்தையும் போட்டு மக்களை குழப்பாதீர்கள், அரசில் பிரிவு, மதம் சார்ந்த பிரிவுகளை ஏற்படுத்தி அந்தந்த பிரச்னைகளை அந்தந்த துறைகளில் நிபுணத்துவம், முதிர்ச்சியும் பெற்ற நம் பெரியார்களை, அறிஞர்களை கொண்டு தீர்வுகாண முயலுங்கள், எல்லாம் எனக்கு தெரியும், நான்தான் தலைவர் என்ற அகந்தையில், தலைவர்கள் தான் என்ற கர்வத்தில், சுயமாக மமதையில் உழலாதீர்கள்.
தலைவர்களே நாங்கள் நன்றாக உங்கள் முகம் நோக்கி கேள்வி கேட்போம்தான். பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால். மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்று மக்களின் உழைத்த பணங்களில் சந்தா, நன்கொடை, புத்தக விற்பனை செய்து உங்கள் கழகத்தை மட்டும் பலப்படுத்த அல்ல எங்கள் சமுதாயத்திற்கும் பாதுகாப்பும், சமூக உரிமையையும் பெற்றுத் தரத்தான். நம்மிடையே ஒற்றுமையை வளர்க்கத்தான். இதையெல்லாம் செய்ய இயலாது என்றால் நல்ல ஒரு பர்தாவை போர்த்திக் கொண்டு உங்கள் வீட்டிலேயே முடங்கிப்போங்கள், உங்களை எவனும் கேள்வி கேட்க மாட்டான். நீங்கள் முடங்கிப் போவதால் எம் சமுதாயம் ஒன்றும் அழிந்து விடாது. ஒரு புரட்சியையும், ஒற்றுமையையும் எங்களுக்குள் கொண்டு வர எம்மில் ஒருவன் பிறந்திருப்பான் அல்லது இறைவன் பிறக்க வைப்பான் இன்ஷா அல்லாஹ்...
ஒற்றுமையாய் வாழ கற்றுக்கொள்ளுங்கள், எங்களுக்கும் கற்றுக் கொடுங்கள் இல்லையேல் புதியவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கி ஓடிப்போய் வீட்டோடு ஒளிந்து கொள்ளுங்கள்.
எம் சமுதாயத்தில் எல்லோரும் ஓற்றுமையாக ஒரே குடையின் கீழ் ஓரே அணியாக எல்லோரும் சகோதரர்களாக நின்று குரல் கொடுக்கும் நாளை (இன்ஷா அல்லாஹ்) மிக ஆதங்கத்துடன், ஆவலுடன் எதிர் பார்த்தவனாக இறைவனிடம் கையேந்தியவனாய்.
சுலைமான்
sulai_sa@yahoo.com
(எப்போதோ மின்னஞ்ச் மூலம் கிடைக்க பெற்ற கட்டரை)
Thursday, April 16, 2009
சரத்குமாருடன் சுமுகமான கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது - இல. கணேசன்
சென்னை : நடிகர்கள் சரத்குமார், கார்த்திக் கட்சிகளுடன், பா.ஜ., நடத்திய கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது.தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் 12 வேட்பாளர்களின் பட்டியல் பா.ஜ., சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. இந்நிலையில், பா.ஜ., மாநிலத் தலைவர் இல.கணேசனை, ச.ம.க., தலைவர் சரத்குமார், நாடாளும் மக்கள் கட்சித்தலைவர் கார்த்திக் ஆகியோர் நேற்று சந்தித்து, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
அதில், நெல்லை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர் உட்பட ஆறு தொகுதிகளில் ச.ம.க.,வும், விருதுநகர், தேனி உட்பட ஐந்து தொகுதிகளில் நா.ம.க.,வும் போட்டியிடுவது என சுமுகமாக முடிவு எடுக்கப்பட்டது. வரும் 18ம் தேதி ச.ம.க., சார்பில் இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்படுகிறது.
இதுகுறித்து பா.ஜ., மாநிலத் தலைவர் இல.கணேசனிடம் கேட்டபோது, "பா.ஜ., - ச.ம.க., - நா.ம.க.,வுடன் சுமுகமான கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. மற்ற கட்சிகள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளின் முழுமையான பட்டியல் இன்று வெளியிடப்படும்' என்றார்.
நன்றி : தினமலர்
தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?
சரத்துடன் கூட்டணி என்று தமுமுக அறிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில் நாம் சரத்குமார் பி.ஜே.பி யுடன் கூட்டணியில் உள்ளார் என்று நாம் சுட்டிக்காட்டி தமுமுக பி.ஜே.பி யுடன் கூட்டணியா? என்று கேள்வி எழுப்பியிருந்தோம். அதை மறுக்கும் விதமாக சரத்குமார் பி.ஜே.பி யுடன் கூட்டணியில் இல்லை ஆகவேதான் நாங்கள் சரத்துடன் கூட்டணி என்று தமுமுக வினர் தங்களது இணையத்தில் மறுத்து செய்தி வெளியிட்டிருந்தனர். தற்சமயம் சரத்குமாருடன் பி.ஜே.பி யின் கூட்டணி உறுதி செய்யப்பட்டு இல.கணேசன் அவர்களால் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன? இன்றும் சரத்குமாருடன் கூட்டணி தொடர்கின்றதா இல்லையா? - முகவைத்தமிழன்
வாலிபருக்கு தமுமுக உறுப்பினர் என்பதால் மறுக்கப்பட்ட சிறை வார்டன் பணி வழங்க பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு
இந்நிலையில் நான் சிறை வார்டன் கிரேடு 2 பணிக்கு அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சிபெற்றேன். எனக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. சீரூடை பணியாளர் தேர்வாணைய தலைவர், சிறை ஐ.ஜி., எஸ்.பி.,யிடம் கேட்ட போது என் மீது வழக்கு, முஸ்லீம் முன்னேற்ற கழக உறுப்பினர், வார இதழ் ஏஜன்ட் என காரணம் காட்டி பணியில் நியமிக்க மறுத்து விட்டனர். என்னை பணி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரினார். மனுதாரர் சார்பில்வக்கீல்கள் லஜபதிராய், ஜின்னா ஆஜராயினர்.
நீதிபதி எஸ்.மணிக்குமார் பிறப்பித்த உத்தரவு: முஸ்லீம் முன்னேற்ற கழகம் அமைதியை குலைக்கும், வெறுப்பை தூண்டும் அமைப்பு என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இங்கு தாக்கல் செய்யப் படவில்லை. அரசால் தடை செய்ய இயக்கமோ, மதரீதியான இயக்கமோ என அறிவிக்கப்படவில்லை. அதில் உறுப்பினராக இருக்கிறார் என்பதற்காக மட்டுமே மனுதாரர் தகுதியற்றவர் என கூற முடியாது. இவ்விஷயத்தில் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் உட்பட மூன்று பேரது அணுகுமுறை தவறு. மனுதாரரை மேலும் கஷ்டபடுத்த அனுமதிக்க கூடாது. அவரை பணியில் அமர்த்த மூன்றுஅதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.
நன்றி : தினமலர்
Wednesday, April 15, 2009
சமூக ஜனநாயக முன்னணி உதயம் - ஒரே சின்னத்தி்ல் போட்டியிட முயற்சி

இதைத்தொடர்ந்து மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி, இந்திய தேசிய லீக் மாநில தலைவர் சையத்இனாயத்துல்லா ஆகியோர் கூட்டாக சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
தி.மு.க., அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக “சமூக ஜனநாயக முன்னணி” என்ற புதிய கூட்டணியை நாங்கள் அமைத்திருக்கிறோம். கடந்த 1 மாதமாக பேசி இன்று இந்த கூட்டணி உருவாகி இருக்கிறது. எங்களுடன் சமத்துவ மக்கள் கட்சி, கொங்கு வேளாளர் பேரவை மற்றும் சில அமைப்புகள் பேசி வருகின்றன.
இந்த கூட்டணியில் இடம் பெற்றுள்ள மனித நேய மக்கள் கட்சி 4 தொகுதியில் போட்டியிடுகிறது. மயிலாடுதுறை- ஜவாஹிருல்லா, மத்திய சென்னை- எஸ்.ஹைதர்அலி, பொள்ளாச்சி-உமர், ராமநாதபுரம்-சலீமுல்லா கான் ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.
இன்னும் சில தொகுதிகளில் போட்டியிடுவது பற்றி பின்னர் அறிவிப்போம்.
புதிய தமிழகம் கட்சி தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய 3 தொகுதிகளில் போட்டியிடுகிறது. தென்காசியில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிடுகிறார். மற்ற தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் பின்னர் அறிவிக்கப்படும்.
இந்திய தேசிய லீக் 3 தொகுதியில் போட்டியிடுகிறது. திருச்சி, தஞ்சை, கோவை அல்லது தேனி ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. இந்த கூட்டணியின் தேர்தல் அறிக்கை விரைவில் வெளியிடப்படும்.
இந்த அணியில் விரைவில் இன்னும் பலர் சேருவார்கள்.
கேள்வி:- தி.மு.க., அ.தி. மு.க. போன்ற பெரிய கட்சிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி விட்டு புதிய கூட்டணியை உருவாக்கியது ஏன்?
ஜவாஹிருல்லா பதில்:- தி.மு.க.வுடன் 1995-ம் ஆண்டு முதல் கூட்டணி சேர்ந்து போட்டியிட்டோம். இந்த தேர்தலில் போட்டியிட பேச்சுவார்த்தை நடத்தினோம். ஆனால் சிறுபான்மையினரான எங்கள் கட்சி தனி முத்திரை பதித்து விடும் என்று கருதி 1 தொகுதியை கொடுத்து ஓரம் கட்டப்பார்த்தார்கள்.
அதுவும் தி.மு.க. சின்னத்தில் போட்டியிட வேண்டும் என்று வற்புறுத்தினார்கள். தி.மு.க. காலம் காலமாக இப்படித்தான் செய்து வருகிறது.
சொந்த சின்னத்தில் போட்டியிட விரும்பினோம். அதை அவர்கள் ஏற்க வில்லை. இப்போது தி.மு.க. 21 தொகுதியில் அல்ல 22 தொகுதியில் போட்டியிடுகிறது. காதர்மொய்தீன் முஸ்லிம் லீக் கட்சியும் தி.மு.க. சின்னத்திலேயே நிற்கிறது. அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்த வில்லை.
கேள்வி:- டாக்டர் ராமதாஸ் உங்களிடம் அ.தி.மு.க. வுக்கு ஆதரவு கேட்டாரா?
பதில்:- டாக்டர் ராமதாசுடன் நீண்ட காலமாக பழகியுள்ளேன். அவரது கோட்பாடு எனக்கு பிடிக்கும். அ.தி.மு.க. அணிக்கு ஆதரவு தர வேண்டும் என அவர் கேட்டார். நான் எங்கள் நிலைப்பாட்டை எடுத்துக்கூறினேன்.
கேள்வி:- எல்லாத்தொகுதிகளிலும் போட்டியிடுவீர்களா?
பதில்:- 40 தொகுதிகளிலும் போட்டியிட வாய்ப்பு உள்ளது.
கேள்வி:- தேர்தல் பிரசாரம் எப்போது தொடங்குவீர்கள்?
பதில்:- நாளை தொடங்குகிறோம்.
கேள்வி:- எதை மையமாக வைத்து பிரசாரம் செய்வீர்கள்?
கிருஷ்ணசாமி பதில்:- இலங்கை தமிழர் பிரச்சினையை தி.மு.க., அ.தி.மு.க. கைவிட்டு விட்டது. இலங்கை பிரச்சினையை எடுத்து வைப்போம். வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்பது போல தென் மாவட்டங்கள் புறக்கணிக்கப்படுகின்றன. கடந்த 40 வருடத்தில் தென் மாவட்டங்களில் கல்வி, மருத்துவம், தொழிற்சாலை போன்றவை உருவாக்கப்பட வில்லை.
கேள்வி:- எந்த சின்னத்தில் போட்டியிடுவீர்கள்?
பதில்:- எல்லோரும் ஒரே சின்னத்தில் போட்டியிட விரும்புகிறோம்.
Tuesday, April 14, 2009
தமுமுக தலைமை அலுவலகத்தில் ஒரு கூட்டணி பேச்சுவார்த்தை: ஒரு காமெடி ரிப்போர்ட்!
லோக்சபா தேர்தல் கூட்டணி குறித்து தமுமுகவின் மம கட்சி, சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம், கொங்கு வேளாளர் பேரவை மற்றும் பல்வேறு சமூக அமைப்புகளiடையே நடைபெற்று வரும் கற்பனை தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தமுமுக மண்ணடி தலைமை அலுவலகத்தில் காலையிலேயே பெரும் பரபரப்பு, தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாவும், பொதுச் செயலர் ஹதர் அலி உப்பட்ட அனைத்து முக்கிய தலைவர்களும் ஆஜர், விசேஷ சுவீட்டோடு, காபி வாங்கி வந்த ஆபிஸ் பையன், கூட்டணி குறித்து பேசுறதுக்கு, பெரிய பெரிய தலைவர்கள்லாம் வர்றாங்களாம்ப்பா..என வாட்சி மேனிடம் சொல்லிவிட்டு சென்றார். சரத்துகுமார் வந்துட்டாரு..என ஹைதர் அலி வந்து சொன்னவுடன், ஜவாஹிருல்லா வாசலுக்கே வந்து, சரத்தையும் ராடன் டிவி இயக்குநர் நடிகை ரதிகாவையும் அழைத்து செல்கிறார். குசல விசாரிப்புகளுக்குப் பிறகு கூட்டணி பேச்சுவார்த்தை துவங்குகிறது.
ஹைதர் அலி: நம்மள, அதிமுக-திமுக ரெண்டு பேருமே கண்டுக்க மாட்டேங்கிறாங்க.. இந்த லோக்சபா தேர்தல்ல, நம் கூட்டணி, ஒரு தொகுதியிலயாவது ஜெயிச்சு, நாம யாருங்கறத அந்த கட்சிகளுக்கு காட்டணும்…
சரத்குமார்: அந்த அளவுக்கெல்லாம் எனக்கு பேராசை கிடையாதுங்க. போட்டியிடற தொகுதிகள்ல, தேமுதிமுக விட கூடதலா ஒட்டு வாங்கிட்டாலே போதும்னு பெருந்தமையா முடிவு பண்ணியிருக்கோம். இப்பதானே அரசியல் கட்சியாக வந்துள்ளோம். எங்களுக்கு 2011 தான் இலக்கு.
ஜவாஹிருல்லா: நீங்க முடிவு பண்ணது தப்புங்க, நாங்க எடுத்துவுடனேயே தேர்தலில் போட்டி போட்டி டெல்லி போய் தான் ஆக வேண்டும். இதை நம்பி தான் வாரிய பதவியை வேறு நம்ம ஹைதர் அலி விட்டு விட்டார். இந்த தேர்தலிfல் எப்படி சாணக்கியத்தனமா நடந்து வெற்றியே எங்களiன் லட்சியம்.
சரத்குமார்: சரி விடுங்க, கூட்டணியில எங்களுக்கு 15 இடங்கள் ஒதுக்கணும்.. இல்லைன்னா கூட்டணி பத்தி பேசுறதில பிரயோஜனமில்ல.
ஜவாஹிருல்லா: அதென்ன அப்படி சொல்லிட்டீங்க..நாங்களே 15 தொகுதியில தான் போட்டியிடறதா இருக்கோம். எங்களiன் 50 கோடி தான் இருக்கு. மிச்சம் 25ம் நீங்களே நில்லுங்க..அதுதான் கூட்டணி தர்மம்..
ராதிகா குறுகீட்டு: அப்ப எங்க கட்சி தொகுதியை விட உங்கள் கட்சி நிற்கும் தொகுதிக்கு பிரச்சாரத்திற்கு வருகிறேன். உங்களiடம் தான் 50 கோடி இருக்கே எனக்கு ஒரு பத்து கோடி சன்மானம் தந்துடுங்க. நான் சுறாவளi சுற்றுபயணம் உங்கள் கட்சிக்காக செய்கிறேன்.
திடீரென நுழைந்த விஜய்.டி.ராஜந்தர்: அவமானம், எங்க கட்சியை கூட்டணி பேச்சுவார்த்தைக்கு கூப்பிட்டுட்டு, எல்லா தொகுதியையும், சரத்குமாருக்கு கொடுத்துட்டா எப்படி? நாங்க ஆட்சிமைக்க வேண்டாமா?
ஹைதர் அலி: கோபப்படாதீங்க, உங்களை காணோம் ன்னு சொல்லிட்டாங்க அதனால் தான் நீங்க வருவீங்களோ மாட்டீfங்களோன்னு தெரியாம தப்பு நடத்துருச்சு மன்னிச்சுக்கோக்க..
சரத்குமார்@ அப்பாடா நல்ல வேளை எங்களுக்கு 15, மம கட்சிக்கு 15 போக மிச்சம் 10 தொகுதியிலயும் டி.ஆர் கட்சியே போட்டியிடட்டும் ஐ... ஜாலி! தான்
ஹைதர் அலி: கிருஷ்ணசாமியும் நம்ம கூட கூட்டணிக்கு ஒத்துக்கிட்டிருக்காரு..அவங்களுக்கு ஆறு தொகுதி கொடுக்கறதா சொல்லியிருக்கோம். அதனால் டி.ஆருக்கு ஆறு கொடுத்துடலாம்.
விஜய்.டி.ராஜந்தர்: சேச்சே..அவ்வளவெல்லாம் வேண்டாம். ரெண்டு தொகுதியில மட்டும் போட்டியிட்டே எங்க பலத்தை நிரூபிச்சுட முடியும்..தொகுதிக்கு 10 ஆயிரம் ரூபாய் டிபாசிட் கட்டணுமாமே..
ஜவாஹிருல்லா: நல்ல கணக்கா இருக்கே நாங்க கூடத்தான் 15 தொகுதியில டிபாசிட் கட்டப்போறோம். பலனை எதிர்பாத்தா, அரசியல் பண்ண முடியும்? எங்களுக்கு கவலை எதாவது ஒரு நிவாரணம் என்று நிதி வசுல் செய்து விடுவோம்.
விஜய்.டி.ராஜந்தர்: ரெண்டு தொகுதின்னா, ரெண்டு தான், அதுக்கு மேல போட்டி போடணும்ன்னு ரொம்ப வற்புறுத்துனீங்கன்னா, தனிச்சு போட்டியிட்டு, எங்க பலத்தை நரூபிக்க வேண்டி வந்துடும்.
சரத்குமார்: அவசரப்படாதீங்கள, தேர்தல் செலவுக்கு காசு வேணும்னாலும் வாங்கிக்கோங்க ஆறு தொகுதியில போட்டியிட்டுடுங்க
விஜய்.டி.ராஜந்தர்: ஆங்..அப்படி வாங்க வழிக்கு. ஆறு தொகுதிக்கு தலா 10 கோடின்னு 60 கோடி ரூபாய் கொடுத்துடுங்க..தென்மாவட்டங்கள்ல அத்தனை தொகுதியையும் அள்ளiடலாம்.
ஜவாஹிருல்லா: என்னது..60 கோடி ரூபாயா? சொக்கா மொத்த தமிழ்நாட்டுக்கே அவ்வளவு ஆகாதே, எதாவது குண்டு வெடிப்பு நடத்தால் அதை வைத்து எங்கள் வெளiநாட்டில் இருப்பவர்களiடம் ஒரு நிதி திரட்டி விடலாம் ஆனால் இப்போது அதற்கு அவகாசமில்லையே.
விஜய்.டி.ராஜந்தர்: ஒரு சுப்பர் ஐடியா. விஜயகாந்தை எதிர்த்து பிரசாரம் பண்றதுக்கு நம்ம கூட்டணியில வடிவேலுவையும் சேர்த்துப்போமா?
ஹைதர் அலி: அய்யய்யோ, வேண்டாம் அப்புறம் நம்ம 4 வது கூட்டணிய எல்லாரும் காமெடி கூட்டணி ன்னு சொல்லிடுவாங்க.
ராதிகா முணுமுணுக்கிறார்: ஆமா..இப்ப மட்டும் என்ன வாழுதாம்
அப்போது திஙரென கிருஷ்ணசாமியிடமிருந்து போன் வந்ததும், ஹைதர் அலி ஒடிப்போய் பேசிவிட்டு வருகிறார். ஜவாஹிருல்லா காதில் ஒதுகிறார். கிருஷ்ணசாமி கூட்டணிபேச்சு வார்த்தை பற்றி தான் அதிகமா கவலைப்படார் எப்படியாவது இந்தக் கூட்டணியை இறுதி பண்ணிடுங்க, இதையும் விட்டா, நம்ம கூட யார் கூட்டணிக்கு வருவா ன்னு கேட்டார். அப்புறம் எப்படி நம்ம 4வது அணியை பலப்படுத்துவது என்று வேறு கேட்டார் சொல்லுகிறார்.
ஜவாஹிருல்லா: ஆங் ! நம்ம கூட்டணிதலைவர்களiடமிருந்து நல்ல செய்தி வந்துடுச்சு, நம்ம கூட்டணி உறுதியாகிடுச்சு. இவ்ளோ வலுவான கூட்டணி நமக்கு அமைஞ்சுட்டதால திமுக, அதிமுக நிலைமை என்ன ஆகுமோன்னு தான் எனக்கு கவலையா இருக்கு..
வெளியீடு : அமீரக காயிதே மில்லத் பேரவை
Monday, April 13, 2009
P.J.P = B.J.P ஒற்றுமைகள் ஓர் ஆய்வு (மீள் பதிவு)
குஜராத் படுகொலைக்கு பின் சென்னையில் நடந்த
ஒரு ஜீம்மா பிரசங்கத்தில் பி.ஜெயினுல்லாபுதீன் "குஜராத்தில் இரயிலை முஸ்லிம்கள் எரித்ததால்தான் அவர்கள் இவ்வாறு படுகொலை செய்யப்படுகின்றார்கள்" என்று குஜராத்தில் முஸ்லிம்கள் மீது மோடியால் நடத்தப்பட்ட அக்கிரமத்தை நியாயப்படுத்திப் பேசினார். ஆனால் இன்று நீதி விசாரனையோ இரயில் எரிப்பு சம்பவம் முஸ்லிம்களால் நடத்தப்படவில்லை என்று கண்டறிந்து அறிவித்துள்ளது என்பதை மக்களுக்கு நிணைவுப் படுத்த கடமைப்பட்டுள்ளோம்.
மோடி: ஆஹா என்ன பொருத்தம்! நமக்குள் இந்தப் பெருத்தம்!!
பி.ஜெ.: ஆன்மீகம் எனும் நாடகத்தில் கொள்ளை அடிப்பது சுகமே!!
மோடி,பி.ஜெ.: ஆஹா என்ன பொருத்தம்!
மோடி: கோத்ராவில் ரெயிலை எரித்து விட்டு முஸ்லிம்கள் மீது பழி போட்டவன் நானே!
பி.ஜெ: கோத்ராவில் நீங்கள் செய்த ரெயில் எரிப்பை முஸ்லிம்கள் செய்தார்கள் என்று உறுதியகாச் சொன்னவன் நானே !
மோடி: ஆஹா என்ன பொருத்தம் நமக்குள் இந்தப் பொருத்தம்!
பி.ஜெ.: ஆன்மீகம் எனும் நாடகத்தில் கிடைத்ததை சுருட்டுவது சுகமே.
மோடி, பி.ஜெ.(கோரசாக)ஆஹா என்ன பொருத்தம்! ஆஹா என்ன பொருத்தம்!!
நன்றி : தமிழ்நாட்டில் ஏகத்துவ எழுச்சி.
Sunday, April 12, 2009
பேரா.காதர் மொயதீனுக்கு ஆப்பு வைத்தது யார்?
-டாக்டர் சித்தீக், ஐக்கிய அரபு அமீரகம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் அகில இந்திய பொதுச் செயலாளரும், அதன் தமிழ் மாநில தலைவருமான பேராசிரியர் காதர் மொய்தீன் வேலூர் தொகுதி வேட்பாளராக கடந்த சில நாட்களுக்கு முன் கட்சி தலைமையால் அறிவிக்கப்பட்டார்.
அப்படி அறிவிக்கப்பட்டபோது காதர் மொய்தீன் கடந்த முறை உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டதால் கட்சிக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லையென்றும், கட்சியிலிருந்து நீக்கப்பட்ட சிலர் தன்னை கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்று சுப்ரீம் கோர்ட் வரை வழக்கு தொடர்ந்ததை நினைவுபடுத்தியும், நாடாளுமன்ற நிகழ்வுகளில் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நேரங்களில் மட்டுமே அவர்களுடன் பகிர்ந்து கலந்து கொள்ள முடியும் என்று கூறியதோடு, இம்முறை ஏணி சின்னத்தில் (கேரள முஸ்லிம் லீக்கின் அங்கீகரிக்கப்பட்ட சின்னம்) நிற்பதாக அறிவித்தார்.
அறிவிப்பு செய்யப்பட்ட சில நாட்களிலேயே மிகப் பெரும் மாற்றங்கள். வேட்பாளரான காதர் மொய்தீனே மாறிவிட்டார்.
இதன்மூலம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் திமுகவில் அடகு வைக்கப்பட்ட ஒரு இயக்கம், அதற்கென்று எந்தவித அங்கீகாரமும் இல்லையென்ற கூற்று இப்பொழுது உண்மையாகி விட்டது. ஏணி சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்த தனது ஆதரவாளரான காதர் மொய்தீனையே முதல்வர் கருணாநிதி ஓரம் கட்டி விட்டார்.
காதர் மொய்தீன் கட்சியை சரியான முறையில் நடத்தவில்லை, உதயசூரியன் சின்னத்தில் நின்று தன்னை திமுகவின் சிறுபான்மை பிரிவு இயக்க உறுப்பினர் என்று நிரூபித்து விட்டார்…இப்படியெல்லாம் குறை கூறிக் கொண்டு துபாய், காயிதே மில்லத் பேரவை மற்றும் பல அமைப்புகளில் அமீரக புரவலர்கள் பலத்தால் தன்னை நிலைநிறுத்துக் கொண்ட அப்துல் ரஹ்மான், தற்போது தமிழ்நாட்டில் கட்சிக்காக உழைத்தவர்களையெல்லாம் ஓரம் கட்டி விட்டு, எந்த உதயசூரியன் சின்னம் வேண்டாம் என்று சொன்னாரோ அதே உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவோம் என்று அறிவித்திருப்பது சுயநல அரசியலின் உச்சகட்டம்!.
அதுமட்டுமின்றி காதர் மொய்தீன் ஆசியால் அமைச்சர்கள் துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோரோடு நெருக்கத்தை ஏற்படுத்திக் கொண்டு, இன்று காதர் மொய்தீனையே ஒதுக்கிவிட்டு போட்டியிடும் அளவிற்கு தன்னை தயார்படுத்திக் கொண்டு, அதில் சாதித்தும் விட்டார்.
காதர் மொய்தீன் போட்டியிடாவிட்டால், அவருக்குப் பதிலாக பிற தகுயான வேட்பாளர் தான் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
அந்த வகையில் மறைந்த அப்துஸ் சமத் அவர்களின் மகளான பாத்திமா முஸப்பர் எல்லா தரப்பு மக்களிடமும் மிகவும் பரிச்சயமானவர், மத நல்லிணக்கம் மற்றும் சமய ஒற்றுமைக்காக பாடுபட்டுக் கொண்டிருப்பவர். ஆனால் இவர் புறக்கணிக்கப்பட்டுள்ளார்.
அதே போல கட்சியின் பொதுச் செயலாளர் டாக்டர். சையத் சத்தார். இவர் வேலூர் மக்களுக்கு மிகவும் பரிச்சயமானவர். மக்கள் மத்தியில் பிரபல்யமான இவரும் புறம் தள்ளப்பட்டுள்ளார்.
சமீபத்தில் வடக்கு கோட்டை ஹாஜியார் பொருளாளராக நியமிக்கப்பட்டு கட்சிக்கு வலுவூட்டினார். ஆனால் அந்தோ பரிதாபம்! இவரும் மிக நளினமாக ஓரம் கட்டப்பட்டுள்ளார்.
இன்னும் ஆரம்ப காலம் முதல் கட்சிக்காக தனது உடல், பொருள் அனைத்தையும் தியாகம் செய்த ஏழை நெல்லை மஜீது மற்றும் அவரைப் போன்றவர்களும் பொருளாதார பலமில்லாததால் ஒதுக்கப்பட்டுவிட்டனர்.
மொத்தத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், திமுக தலைவர் கருணாநிதியின் கைப்பாவையாகிவிட்ட உண்மை உறுதியாகி விட்டது. வேட்பாளரையே மாண்புமிகு அமைச்சர்கள் ஸ்டாலினும், துரைமுருகனும், கலைஞரும் தான் முடிவு செய்கின்றனர்.
இந் நிலையில் முஸ்லிம் லீக் எப்படி ஒரு சக்தி வாய்ந்த இயக்கமாக மாறும்?
இந்த குற்றச்சாட்டு தவறு!:ஒருமனதாக தேர்வானார் ரஹ்மான்:
இந் நிலையில் அப்துல் ரஹ்மானுக்கு ஆதரவாக ஐக்கிய அரபு எமிரேட்டில் இயங்கும் காயிதே மில்லத் பேரவையின் இணைச் செயலாளர் ஹமீத் ரஹ்மான் அனுப்பியுள்ள விளக்கத்தில்,
இந்தக் கட்டுரையை வெளியிடும் முன் எங்கள் கருத்தையும் கேட்டிருக்கலாம். அப்துல் ரஹ்மானுக்குப் பிடிக்காதவர்கள் மேற்கண்ட கருத்தைத் தெரிவித்திருக்கலாம். இந்தச் செய்தியில் உண்மையில்லை.
தமி்ழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லீம் லீக்கின் செயற் குழுக் கூட்டத்தில் தான் அப்துல் ரஹ்மான் ஒருமனதாக வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டார். அந்தக் கூட்டத்தி்ல் டாக்டர் சத்தார், பாத்திமா முஸாபர் ஆகியோரும் இருந்தனர் என்று கூறியுள்ளார்.
நன்றி : தட்ஸ்தமிழ்
வெற்றியை நோக்கி முஸ்லிம் லீக்!
முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் பள்ளிக்கல்வியை ஆக்கூர் ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளியில் படித்தார். பள்ளிப்படிப்பின் போதே மாநில அளவிலான பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். பின்னர் ஜமால் முஹம்மது கல்லூரியில் கல்லூரிப் படிப்பினைப் பயின்றார்.உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுகிறார்!
நக்கீரன் சர்வே!
இந்த நிலையில் நக்கீரன் வார இதழ் (ஏப்- 11- 2009) முடிவின் படி
இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முத்துப்பேட்டை
எம். அப்துல்ரஹ்மான் அவர்கள் 48% ஓட்டுக்களைப்பெற்று வெற்றிப் பெறுவார்!
இன்ஷா அல்லாஹ்(இறைவன் நாடினால்)
தமிழ்மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்!
உன்மையில் முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான்
அவர்களை வேட்பாளராக பெற்ற வேலுர் தொகுதிவாசிகள்
கொடுத்துவைத்தவர்கள்....!
விடியல் வெள்ளி - சந்தா தள்ளுபடி

அஸ்ஸலாமுஅலைக்கும்,
உங்கள் அனைவருக்கும் ஓர் அறிய வாய்ப்பு......
தமிழகத்தின் முன்னணி தமிழ் மாதாந்திர பத்திரிக்கைகளில் ஒன்றான விடியல் வெள்ளி தனது வருடாந்திர சந்தா திட்டத்தை குறைக்கப்பட்ட (தள்ளுபடி) விலையில் அறிவித்து உள்ளது.
இந்தியாவில் ஒரு வருட சந்தா : ரூபாய். 150/- மட்டுமே.
இரண்டு வருட சந்தா : ரூபாய். 300/- மட்டுமே.
சலுகை காலம் ஏப்ரல் 05, 2009 முதல் ஏப்ரல் 15, 2009 வரை மட்டுமே.
UAE-ல் (இந்திய முகவரிக்கு)
ஒரு வருட சந்தா : திர்கம் 15௦/- மட்டுமே
இரண்டு வருட சந்தா : திர்கம் 25/- மட்டுமே
சலுகை காலம் ஏப்ரல் 10, 2009 முதல் ஏப்ரல் 20, 2009 வரை மட்டுமே.
உங்களுக்கு அருகாமையில் உள்ள விடியல் வெள்ளி முகவர்களையோ அல்லது கீழே உள்ள விடியல் வெள்ளி அலுவலக முகவரிக்கோ தொடர்பு கொண்டு இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் அடைவீர்.
அறிவின் புதையல் - அதுவே விடியல்!
விடியல் வாசகர் - அறிவின் போதகர்!
படியுங்கள்! பரப்புங்கள்! பாதுகாத்துவையுங்கள்!
பா.ஜ.,வுடன் கூட்டணி* கார்த்திக் தகவல்

மதுரை : லோக்சபா தேர்தலில் தமிழகத்தில் பா.ஜ.,வுடன் அ.இ.நா.ம.க., (அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி) கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக கட்சித் தலைவர் கார்த்திக் தெரிவித்தார்.
மதுரையில் அவர் கூறியதாவது:தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி முடிவு செய்யப்பட்டுள்ளது. எங்கள் கட்சி நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், தேனி, திருப்பூர், நீலகிரி தொகுதிகளில் ஏதாவது ஏழு தொகுதிகளில் போட்டியிடும்.பா.ஜ., 10க்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியிடலாம். இக்கூட்டணியில் மேலும் பல கட்சிகள் இணையும் வாய்ப்புகள் உள்ளன. கூட்டணி இல்லாத இடங்களில் கட்சியின் மாவட்ட செயலர்கள் எந்த கட்சிக்கு ஓட்டளிப்பது என அறிவிப்பார்கள். இந்த லோக்சபா தேர்தலுடன் இக்கூட்டணி முடிந்துவிடும்.இவ்வாறு கார்த்திக் கூறினார்.
நன்றி : தினமலர்
சென்னையில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா
Saturday, April 11, 2009
அரசியல் ஹராமா? (VIDEO)
"அரசியல் ஹராமா?"
அஷ்ஷேய்க். நாசர் அலிகான் அவர்கள்
Al-Sheikh. Nasar Al Khan
CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO
சாக்கடைடையில் விழுந்த சமுதாய இயக்கம் -C.I.D சிங்காரம்

தமிழகத்தில் பலவகையில் சிதறிக்கிடந்த முஸ்லீம் மக்களை ஒன்று திரட்டி 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு சமுதாய இயக்கம் உருவாக்கப்பட்டது. அதன் செயல்பாடுகள் இன்றுவரை குறைசொல்ல முடியாத அளவிற்கு அளப்பறிய பணிகளையாற்றி வருகிறது. உதாரணமாகச் சொல்லப்போனால் உயிர்காக்கும் இரத்த தானத்தில் இருந்து அவசரகால ஊர்திகள் வழங்குதல் போன்ற மருத்துவம் மற்றும் உயிர்காக்கும் பணிகளை செய்து வருவது யாராலும் மறுக்கமுடியாது.
ஆம்புலன்ஸ் என்றாலே என்ன என்று தெரியாத குக்கிராமங்களில் கூட தமுமுகவின் சேவையால் இப்போது அங்கெல்லாம் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த ஆம்புலன்ஸ் சேவையால் முஸ்லீம்கள் மட்டுமல்லாமல் எல்லா சமுதாய மக்களும் பேதமின்றி பயனடைவதைக் கண்கூடாக காணமுடிகிறது.இது போன்ற சமுதாயப் பணிகளில் தமுமுகவை முன்னிறுத்தி வந்த அதன் தலைவர்கள் குறிப்பாக திரு.ஜவாஹிருல்லா மற்றும் திரு.ஹைதர் அலி ஆகியோர் மிகமிக ஆசையோடு தமுமுக என்னும் சமுதாய இயக்கத்தை சாக்கடையில் இறக்க முடிவு செய்து அதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கினார்கள்.
அவர்களின் இலக்கு கலைஞரை கவுத்தி சீட் வாங்கவேண்டும் என்பதே.அதற்கான முயற்சிகளில் முழுமூச்சாய் இறங்கியது தமுமுக தலைமை.கலைஞரை கவுக்க சிறந்த வழி என்ன? பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்ற தாரக மந்திரத்தைக் கையாண்டு இடஒதுக்கீட்டுக்கு பாராட்டுவிழா என்ற பெயரில் கலைஞருக்கு நேரு உள்விளையாட்டு அரங்கிலே பிரம்மாண்ட பாராட்டுவிழாவை நடத்தி கலைஞரோடு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டனர். மேற்கண்ட தலைவர்களின் ஒரே குறிக்கோள் எப்படியாவது M.P ஆவது தான். அதற்காகவே உருவாக்கப்பட்டது தான் மனித நேயமக்கள் கட்சி.
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப் பட்டநிலையில் தங்கள் கட்சிக்கு 6 தொகுதியில் செல்வாக்கு இருக்கிறது எனவே 6 தொகுதிதரும் கட்சிகளுடன் கூட்டணி என்று கோசத்துடன் களமிறங்கியது மமக.இவர்களின் கணக்கு 6 கேட்டால் இரண்டாவது தருவார்கள் என்பது தான்.அதன்படி கலைஞரிடம் பேச்சி வார்த்தைக்குப் போயும் பேரம் படியவில்லை. காற்றிலே வெண்ணை எடுத்து நூலே இல்லாமல் கயிறு திரிக்கும் கலைஞர், தான் முன்பு காயிதேமில்லத் அவர்களுக்கு செய்து கொடுத்த சத்தியப் பிரமாணப்படி ஒரு சீட் தான் தரமுடியும் என்று சொல்லி இவர்களை வெளியே தள்ளி கதவைச்சாத்திவிட்டார். இவர்கள் ஒரு சீட்டில் போட்டியிடக்கூடத் தயார்தான்.ஆனால் அந்த ஒரு சீட்டு யாருக்கு என்பது பற்றி மேற்கண்ட தலைவர்களிடையே சண்டை வந்து விடும் என்பதால் தான் ஒரு சீட்டை மறுத்தார்கள்.ஜெயலலிதாவும் இவர்களைக் கண்டுகொள்ளாத நிலையில் தற்போது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் கிருஷ்ணசாமியின் புதிய் தமிழகம் ஆகிய லட்டர்பேடுகளோடு இணைந்து மயிலாடுதுறை,இராம நாதபுரம்,தென்சென்னை ஆகியவற்றில் போட்டியிடுகிறார்கள்.
நாம் நினைத்தது போலவே தென்சென்னையில் திரு.ஹைதர் அவர்களும், மயிலாடுதுறையில் திரு.ஜவாஹிருல்லாவும், இராம நாதபுரத்தில் திரு.சலீம் கான் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.அதாவது இவர்களின் லட்சியத்தை அப்பாவித் தொண்டர்களின் மீதேறி நிறைவேற்றிக் கொள்கிறார்கள். நிச்சயமாக இவர்கள் தமுமுக எனும் சமுதாய இயக்கத்திற்கு குழிதோண்டும் வேலையை ஆரம்பித்து விட்டார்கள் என்பது உறுதி. மமக ஆரம்ப விழாவில் மமக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் செலவை தமுமுகவே ஏற்றுக்கொள்ளூம் என்ற ஒரு சூசக பாயிண்டையும் போட்டு கடைசியில் நாங்கள் தான் அந்த வேட்பாளர்கள் எங்களுக்கு தமுமுகவே செலவு செய்யும் என சொல்லாமல் சொல்லிவிட்டார்கள் சூத்திரதாரிகள்.
சினிமா நடிகர்கள் என்றாலே உவ்வே என சொல்லி வந்த தமுமுக தலைவர்களுக்கு இன்று சரத்குமார் ஒரு நடிகராகத் தெரியாதது ஏனோ? இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா என்பதாலா? அது சரி சாக்கடையில் விழுந்த பிறகு பன்றி என்ன எறுமை என்ன, எல்லாமே கருப்புத் தான் எல்லாமே கருப்புத் தான் கருப்புத்தான் கருப்புத்தான்.
பாவம் தமுமுகவின் அப்பாவித் தொண்டர்கள். பார்க்கலாம் மக்கள் எந்த அளவிற்கு விழிப்புடன் இருக்கிறார்கள் என்று.
-C.I.D சிங்காரம்
பின்குறிப்பு: இந்தப் பதிவு குறித்த தகவல்களை எனக்கு மெயில் மூலம் வழங்கிய தமுமுகவின் தொண்டர் (தவ்ஹீத் ஜமாத் தொண்டர் அல்ல) மற்றும் என் நண்பருக்கு என் மணமார்ந்த நன்றிகள்
சரத்குமார் , கார்த்திக்குடன் பேசி வருகிறோம் - பா.ஜ.க
அவர் கூறுகையில்,
பாஜகவுடன் புரிந்துணர்வு அடிப்படையில் நாங்கள் இந்த 7 தொகுதிகளில் போட்டியிடுகிறோம். எங்களது கூட்டணி வேட்பாளர்கள் போட்டியிடாத தொகுதிகளில் தொண்டர்கள் தங்களது விருப்பத்துக்கேற்ப வாக்களிக்கலாம்.
நாங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும் என்றார்.
ஆனால், இந்தக் கூட்டணி குறித்து பாஜக தரப்பிலிருந்து எந்தத் தகவும் இல்லை. ராமநாதபுரத்தில் பாஜக தேசியப் பொதுச் செயலாளரான திருநாவுக்கரசர் போட்டியிட திட்டமிட்டுள்ள நிலையில் கார்த்திக்கின் இந்த அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
கார்த்திக்குடன் கூட்டணி அமைத்துலும் கூட ராமநாதபுரத்தை பாஜக விட்டுத் தருமா என்று தெரியவில்லை. இதனால் இந்தக் கூட்டணி குறித்து குழப்பமான நிலையே நீடிக்கிறது.
சரத்குமாரின் குழப்பம்:
அதே போல நாடாளுமன்றத் தேர்தலில் சரத்குமார் யாருடன் கூட்டணி அமைப்பார் என்ற குழப்பமும் தீரவில்லை.
பாஜக, மனித நேய மக்கள் கட்சி என அரசியலில் இரு வேறு துருவங்களில் நிற்கும் கட்சிகளுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டே இருக்கிறார். அதே போல கார்த்திக்குடனும் பேசிப் பார்த்தார். (அதாவது இன்று 11.04.2009 மாலை 4.00 மனி வரை)
இந் நிலையில் நாளை மறுநாள் (13ம் தேதி) சென்னையில் கூட்டணி பற்றிய அறிவிப்பையும் வேட்பாளர் பட்டியலையும் சரத்குமார் வெளியிடுகிறார் என்கிறார்கள்.
பாஜகவோ வேட்பாளர் பட்டியலை வெளியிடப் போகிறோம் என்பதோடு சரத்குமார், கார்த்திக்குடன் பேசி வருகிறோம் என்கிறது.
நன்றி : தட்ஸ் தமிழ்
மனிதநேய மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார்?
மனித நேய மக்கள் கட்சி 3 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும், அக்கட்சி டாக்டர் கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம், நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுடன் தொகுதி உடன்பாடு செய்துள்ளதாகவும் அறிவித்துள்ளது. சில வட இந்திய தொழிலதிபர்கள் மோடி பிரதமாராக வேண்டும் என்று பேசியதற்காக அவர்களது பொருட்களைப் புறக்கணிக்க த.மு.மு.க வேண்டுகோள் விடுத்தது. நடிகர் சரத்குமார் புது டில்லிக்குச் சென்று பா.ஜ.க தலைவர்களுடன் கூட்டணி பற்றி பேசி முடிவு செய்துள்ளார். இவர் கட்சிக்கு பிரதமர் வேட்பாளர் அத்வானி. திருமங்கலம் சட்டமன்ற இடைத்தேர்தலில் இக்கட்சி பெற்ற வாக்குகள் சுமார் ஆயிரம் தான். நடிகர் சரத்குமார் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிடுகிறார். இங்கு முஸ்லிம் வாக்குகள் அதிகம். இங்கு த.மு.மு.கவுக்கும், மனிதநேய மக்கள் கட்சிக்கும் வலிவான வாக்கு வங்கி இருக்கிறது. மனிதநேய மக்கள் கட்சி இவரை ஆதரிப்பதால், இவர் தோற்றாலும் அது கௌரவமான தோல்வியாகவே இருக்கும்.
புதிய தமிழகம் கடந்த முறை பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து, அக்கட்சி சின்னத்தில் போட்டியிட்டது. இந்த முறை பா.ஜ.கவுடன் டாக்டர் கிருஷ்ணசாமி கூட்டணி அமைத்துள்ளது அவருக்கு அழிவு தான். தமிழகம் முழுவதும் வலுவான அடித்தளம் உள்ள ஒரே தலித் அமைப்பு ‘விடுதலைச் சிறுத்தைகள்’ மட்டும் தான். புதிய தமிழகம் கட்சிக்கு பல ஊர்களில் கிளைகளே இல்லை.
புதிய தமிழகம், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி ஆகிய கட்சிகளுக்கு மயிலாடுதுறை, மத்திய சென்னை, இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் வாக்கு வங்கி இல்லை. இவர்களது ஆதரவு மனிதநேய மக்கள் கட்சிக்கு துளியும் உதவப் போவது இல்லை.
பீகாரில் லாலு பிரசாத் யாதவும், உ.பியில் முலாயம் சிங் யாதவும் காங்கிரஸுடன் தொகுதி உடன்பாடு செய்து கொள்ளாவிட்டாலும் தங்கள் பிரதமர் வேட்பாளர் மன்மோகன் சிங் தான் என்று அறிவித்துள்ளனர். மனித நேய மக்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார்? அத்வானியா? பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ்வா? அல்லது ஹைதர் அலியா?
த.மு.மு.க வலைத்தளத்தில் தினமலரின் செய்திகளை அதிகமாக காணமுடிகிறது. முஸ்லிம் எழுத்தாளர்கள், வலைப்பதிவர்கள், தலைவர்கள் ஆகியோரின் விமர்சனங்களுக்கு அந்த தளத்தில் எந்த பதிலும் இல்லை. தினமலர் நாளிதழ் ‘பகையாளி குடியை உறவாடி கெடு’ என்ற கணக்கில் கூட உங்களை உயர்த்தி எழுதலாம். ஆனால் முஸ்லிம்களிடம் இருந்து வருவது தோழமை விமர்சனம். நீங்கள் அரசியல்வாதிகளாக மாறி விட்டதால் சகோதர விமர்சனங்களோ அல்லது
தோழமை விமர்சனங்களோ உங்கள் காதில் விழுவதில்லை.நன்றி : திரு. அருளடியான் (மக்களவை தேர்தல் 2009)
தேர்தல் - முஸ்லிம்களுக்கு அல்வா
சில தினங்களுக்கு முன் ஒரு பதிவை பார்க்க நேரிட்டது முஸ்லிம்கள் ஓட்டு எங்களுக்கு தேவை இல்லை தி.மு.க சூசகம்! என்றும் அதனால் இந்த தேர்தலில் தி.மு.க.வை புறக்கணிக்குமாறும் அந்த பதிவில் கேட்டுக் கொள்ளப்படிருந்தது. தி.மு.க.வுக்கு வாக்களிக்காவிட்டால் யார் வருவார்கள் என்று இவர்களுக்கு தெரியாதா?
தி.மு.க. தன் கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக்கிற்கு ஒரு இடம் கொடுத்துள்ளது ஆனால் அ.தி.மு.க.வோ ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தாததோடு மட்டுமல்லாமல் முஸ்லிம் இயக்கத்தை சேர்ந்த்த எந்த ஒரு கட்சியையும் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. தன் கூட்டணியில் பல காலமாக இருக்கும் இருக்கும் முஸ்லிம் கட்சியானாலும் சரி தனக்கு வேண்டிய சீட் கிடைக்காததால் முறுக்கிக் கொண்டு போன ம.ம.க.வாகட்டும் அ.தி.மு.க. அவர்களை திரும்பி கூட பார்க்கவில்லை. ஏற்கனவே முஸ்லிம்களே இல்லாத அமைச்சரவையை நடத்திய பெருமைக்குரியவர் தான் ஜெயலலிதா
தி.மு.க.விடம் முறுக்கி கொண்டு போன எல்லா கட்சிகளின் நிலைமையையும் பார்த்தோம், கம்யூனிஸ்டுகளாகட்டும் வைகோவாகட்டும் எல்லோருமே கெஞ்சி கூத்தாடி தான் சீட்டுகளை பெற்றனர் அதுவும் அவர்கள் விரும்பிய சீட்டுகள் கூட கிடையாது. இதில் இருந்து தப்பித்தவர் ராமதாஸ் மட்டுமே அதுவும் அவர் வளர்த்து வைத்து இருக்கும் ஜாதி சங்கத்தால் மட்டுமே. அது இல்லை என்றால் அவருக்கும் இதே நிலை தான்
முஸ்லிம்களாகட்டும் ஈழம் ஆகட்டும் அல்லது வேறு யாரகட்டும் தமிழகத்தில் இரண்டே நிலைகள் தான் இங்கு ஏதாவது கிடைக்கும் அங்கு எதுவுமே கிடைக்காது. இங்கே தான் முறுக்கி கொள்ள முடியும் அங்கே போனால் சுருட்டிக் கொள்ள வேண்டும்
நன்றி : தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் புகழ்பரப்பும் வலைப்பூ
Friday, April 10, 2009
சென்னையில் ஒட்டுமொத்த நிர்வாகிகள் விலகல் - கலகலத்த IDMK கூடாரம்
இந்திய தேசிய மக்கள் கட்சியின் வட சென்னை, ஆர்.கே நகர், மயிலாப்பூர், ராயபுரம், திருவல்லிக்கேணி உட்பட பல கிளை நிர்வாகிகள் தங்கள் கிளைகளை ஒட்டுமொத்தமாக கலைத்து இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்கள்.
பல்வேறு பட்ட கவர்ச்சியான வாக்குறுதிகளை அள்ளி வீசி, சமூக ஒற்றுமை, இரவல் அரசியலுக்கு விடை கொடுப்போம், என கூறப்பட்ட வாக்குறுதிகளை நம்பி பல்வேறு அமைப்புகளிலும் இருந்து விலகி இந்திய தேசிய மக்கள் கட்சியல் வந்து சேர்ந்தனர். தலைமை பதவியால் ஏற்பட்ட அகங்காரத்தாலும், சகோ.அமீர் ஜவஹர் போன்றோர் சமூக ஒற்றுமைக்காக இதன் தலைவர் குத்புதீன் ஐபக்கை இரு முறை அழைத்து தொலைக்காட்சியல் பேச செய்ததால் ஏற்ப்பட்ட மமதையாலும் தன்னிலை மறந்த இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் குத்பதீன் ஐபக், கட்சிக்காக அயராது உழைத்த தொண்டர்களால் ஏற்ப்பட்ட புகழ்ச்சியாலும் கிறங்கிப்போன குத்பதீன் ஐபக் இவை யாவும் தனக்கும் தன்னுடைய எழுத்தக்களுக்கும், பேச்சுக்கும் கிடைத்த பெருமை என தவறாக புறிந்து கொண்டு தலைகால் புறியாமல் நிர்வாகிகளிடம் அகம்பாவமாக நடந்ததால் இன்று சென்னையின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.
இந்திய தேசிய மக்கள் கட்சயில் இருந்து அதன் முக்கிய தலைவர்களில் ஒருவரும் வடசென்னை மாவட்ட அமைப்பாளருமான ஏ.கே ஜான்பாஷா அவர்கள் இந்திய தேசிய மக்கள் கட்சியின் வெளியீடான "சந்தி சிரிக்கும் டாக்டர் கலைஞரின் சமூக நீதி" என்ற பிரசுரத்தை வெளியிட்டதால் கலைஞர் அரசால் கைது செய்யப்பட்டு அந்த செய்தி ஜீனியர் விகடன் உட்பட பல பத்திரிகைகளிலும் வந்து பிரபலமானவர். இன்றும் யாராலும் அறியப்படாமல் இருந்த இந்திய தேசிய மக்கள் கட்சியை சென்னை நகரெங்கும் அதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்து கட்டமைத்தவர். இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவராக அகம்பாவம் பிடித்து தறியும் குத்புதீன் ஐபக் சென்னை வரும்போதெல்லாம் அவரது உணவு, தங்குமிடம் என அனைத்து செவுகளையும் இன்று வரை செய்தவர். இவரது தலைமையில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் வட சென்னை, ஆர்.கே நகர், மயிலாப்பூர், ராயபுரம், திருவல்லிக்கேணி உட்பட பல கிளைகளின் 50 க்கும் மேறப்பட்ட நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக கிளைகளை கலைத்துவிட்டு இராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ளனர். இவர்கள் தங்கள் இராஜினாமாவிற்கான காரனங்களாக தெறிவித்துள்ளதாவது.
1) இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்கள் வாக்குறுதி தவறியது. வாய்மை இல்லாமல் பொய்மை நிறைந்த அவரது பேச்சுக்கள். கட்சியில் சேரும்போது இந்திய தேசிய மக்கள் கட்சி முறைப்படி பதிவு செய்யப்பட்டு , தேர்தல் கமிசனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்று பொய் சொல்லி ஏமாற்றியது. கட்சி இன்று வரை சங்கமாக கூட தமிழகத்தில் எங்குமே பதிவு செய்யப்படவில்லை. சென்னையில் பேட்டியில் தமுமுக, முஸ்லிம் லீக் தனித்து நின்றால் அவர்கள் நிற்கும் தொகுதிகளில் போட்டியிட மாட்டோம் என்று கூறிவிட்டு அதற்கு நேர்மாறக பணத்திற்காக வேட்பாளர்களை நிறுத்துவது. உளவுத்துறை மற்றும் இஸ்லாத்தின் எதிரிகளோடு கைகோர்த்து சமூகத்தை பிளவு படுத்தி அதை பலகீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டது.
2) தலைக்கனம் பிடித்த குத்பதீன் ஐபக், வட சென்னை ஜான்பாசா உட்பட பல நிர்வாகிகளை பற்றி தரக்குறைவாக மற்றவர்களிடத்தில் விமர்சித்தது. ஒருவரை பற்றி மற்றவாரிடத்தில் தரக்குறைவாக கூறி இருவருக்கும் இடையில் பகைமையை ஏற்படுத்த முயன்றது. கையும் களவுமாக பிடிபட்டபோது அதை ஹிக்மத், அரசியல் சாதுர்யம் என்று பேசி ஏமாற்ற முயன்றது.
3) குத்புதீன் ஐபக் ஒரு முழுமையான முனாபிக்காக மாறியது, அதாவது குர்ஆன் ஹதீஸ்களில் இறைவன் முனாபிக் குறித்து கூறியுள்ள அனைத்து அம்சங்கள், அடையாளங்களை தன்னகத்தே கொண்ட மனிதராக உள்ளது. தொழுகை, இபாதத் இல்லாமை, ஒரு கூட்டத்தாரோடு இருக்கையில் தான் அவர்களோடு உள்ளதாகவும், மற்றொரு கூட்டத்தாரோடு இருக்ககையில் தான் அவர்களது ரத்த உரவு என்றும் அவர்களுக்கேஎன்றும் ஆதரவு என்றும் பேசுவது. முஸ்லிம்களுக்கிடையே பகைமையை வளர்க்க முனைந்தது. இந்திய தேசிய மக்கள் கட்சி என்ற அமைப்பின் தலைவர் பதவியை பயன்படுத்தி இஸ்லாத்தின் எதிரிகளோடு கைகோர்த்து மற்ற சமுதாய அமைப்புகளுக்கும் , கட்சிகளுக்கும் இன்னும் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்திற்கும் எதிராக செயலாற்ற திட்டமிட்டது.
4) இன்னும் குத்புதீன் ஐபக்கோடு இருக்கும் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் சிலரும், கீழக்கரை, திருச்சி, தஞ்சையை சேர்ந்த சில மாநில நிர்வாகிகள் சிலரும் குத்புதீன் ஐபக் கட்சியையும், சமுதாயத்தின் பெயரையும் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறி முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த தனவந்தர்களிடம் வசூலித்த பணத்தின் சில லகரங்களுக்காகவும், அரசியல் பதவி ஆசையிலும் குத்புதீன் ஐபக்கிற்காக ஜல்ரா போடுவது. அதாவது ஜால்ரா போடும் மாநில நிர்வாகிகள் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள்.
5) இந்திய தேசிய மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட உழைக்கும் அடிமட்ட தொண்டர்களிடத்தில் தான் ஏதோ காயிதே மில்லத், கருனாநிதி போன்ற மிதப்பில் அகம்பாவமாகவும், உதாசீனமாகவும் குத்புதீன் ஐபக் பேசுவது, இன்றும் தன்னை காயிதே மில்லத், அறிஞர் அண்ணா அளவிற்கு தற்புகழச்சி செய்து கொண்டு மற்ற தலைவர்களை ஏமாளி, கோமாளி என்று சோட்டிஸ் போட்டு நக்கல் செய்வது.
என பல காரனங்களை இவர்கள் கூறியுள்ளார்கள். இன்னும் சென்னை மாநகரில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் முனாபிக் குத்புதீன் ஐபக் மற்றும் அவரோடு கூட இருக்கும் ஆடசி மன்ற குழு உறுப்பினர், மாநில நிர்வாகி ஆகியோரின் முகத்திரைகளை கிழித்து மக்களுக்கு இவர்களின் "சமுதாய துரோகிகள்" எனும் மறு முகத்தையும், குத்புதீன் ஐபக் இந்த சமுதாயத்திற்கு செய்த மாபெரும் துரோகத்தையும் மக்களுக்கு அம்பலப்படுத்தும் வரை தாங்கள் ஓயப்போவதில்லை என்றும் இந்நிர்வாகிகள் சூழுரைத்துள்ளனர்.
இராஜினாமா செய்துள்ள நிர்வாகிகளில் சிலர் :
1. ஏ.கே ஜான் பாசஷா - வட சென்னை மாவட்ட அமைப்பாளர்
2. எஸ் செய்யது நிஹமத் - ஆர்.கே நகர் கிளை தலைவர்
3. எச். சலீ்ம் பாஷா - ஆர்.கே நகர் கிளை செயலாளர்
4. முனீர் பாஷா - மயிலாப்பூர் கிளை தலைவர்
5. கவுஸ் பாஷா - ராயபுரம் கிளை தலைவர்
6. பசீர் அஹமது - 5 வது வட்ட கிளை
7. மகேந்திரன் - 13 வது வட்டம்
8. சர்தார் பாஷா -
9. பசீர் அஹமது - ஆர்கே நகர் கிளை து. தலைவர்
10. ஹமீது - 13 வது வட்டம் கிளை
11. ஜலால் - 10 வது வட்டம் கிளை
12. அஹமது புன்யாமின் - திருவல்லிக்கேணி செயலாளர்
13. ஹயாத் பாஷா - மயிலாப்பூர் கிளை
14. புர்ஹான்
15. மஹபூப் பாஷா (பின்சின் லைன்)
16. பாரூக் - 12 வது வட்டம்
17. தமீம் - நேதாஜி நகர்
18 . பாசா - ஆர்கே நகர் பொருளாலர்
19. சாகுல் ஹமீது
20. முஸ்த்தஃபா
வக்ஃப் வாரிய தலைவர் பதவி ஹைதர் அலி ராஜினாமா செய்தார்
வாரியத் தலைவராக கடந்த 27.03.2007 அன்று த.மு.மு.க வின் திரு. ஹைதர் அலி பதவியேற்றபோது.
தி.மு.க கூட்டணியில் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்காததாலும், த.மு.மு.க அங்கம் வகிக்கும் மனித நேய மக்கள் கட்சி சார்பில் திரு. ஹைதர் அலி அவர்கள் மத்திய சென்னை தொகுதியில் போட்டியிடுவதாலும் தி.மு.க வால் வழங்கப்பட்டிருந்த வக்ஃப் வாரியத் தலைவர் பதவியை இன்று திரு. ஹைதர் அலி அவர்கள் ராஜினாமா செய்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள் :
மு.லீக் வேட்பாளராக அப்துல் ரஹ்மான் தேர்வு - உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்
வேலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளராக அப்துல் ரஹ்மான் தேர்வு
வேலூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் வேட்பாளராக காயிதெமில்லத் பேரவையின் உலக ஒருங்கிணைப்பாளரும், அமீரக காயிதெமில்லத் பேரவையின் தலைவருமான முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் அறிவிக்கப்பட்டுள்ளார்.
இத்தகவல் வியாழக்கிழமை இரவு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில தலைமை நிலையமான காயிதெமில்லத் மன் ஜிலில் மாநில தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி. தலைமையில் நடைபெற்ற அவசர செயற்குழுக்கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
மேலும் சமுதாய வேண்டுகோளின்படி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.
முத்துப்பேட்டை எம். அப்துல் ரஹ்மான் பள்ளிக்கல்வியை ஆக்கூர் ஓரியண்டல் உயர்நிலைப்பள்ளியில் படித்தார். பள்ளிப்படிப்பின் போதே மாநில அளவிலான பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். பின்னர் ஜமால் முஹம்மது கல்லூரியில் கல்லூரிப் படிப்பினைப் பயின்றார்.
கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக அமீரகத்தில் பணிபுரிந்து வரும் இவர் துபாய் இஸ்லாமிய வங்கியின் தகவல் தொழில்நுட்பத்துறையில் உதவித் தலைவராக இருந்து வருகிறார்.
துபாய் ஈமான் அமைப்பின் துணைத்தலைவர்களில் ஒருவராகவும், ஜமால் முஹம்மது கல்லூரி பழைய மாணவர் சங்க பொதுச்செயலாளராகவும் இருந்து வருகிறார்.
அமீரகத்தில் சமுதாயப் பணிகளின் மூலம் இந்திய மக்களுக்கு பல்வேறு சேவைகளைச் செய்து வருகிறார். அமீரகத்தில் பணிபுரிந்து வந்தாலும் தாயகத்தில் சமூகநலப்பணி மேற்கொள்ள வேண்டும் என்ற ஆவலைக் கொண்டவர்.
இந்த அவசர செயற்குழுவில் மாநில பொதுச்செயலாளர் டாக்டர் சையத் சத்தார், மாநில நிர்வாகிகள், அமீரக காயிதெமில்லத் பேரவை பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
அமீரகப் பிரமுகர்கள் வாழ்த்து
எம். அப்துல் ரஹ்மான் தேர்வு செய்யப்பட்ட செய்தியறிந்து அமீரகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகள் தங்களது மகிழ்ச்சியினையும், வாழ்த்தினையும் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்கா
அமெரிக்கா காயிதெமில்லத் பேரவை அமைப்பாளர் தோப்புத்துறை முஹம்மது நூர்தீன், குவைத் காயிதெமில்லத் பேரவை அமைப்பாளர் டாக்டர் அன்வர் பாஷா, சவுதி அரேபிய காயிதெமில்லத் பேரவை நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்தினை வெளிப்படுத்தியுள்ளனர்.
செய்தி : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )
Thursday, April 09, 2009
ம.ம.க வேட்பாளர்கள் அறிவிப்பு - பி.ஜே.பி யுடன் கூட்டணி???
மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டன. மத்திய சென்னை, மயிலாடுதுறை மற்றும் இராமநாதபுரம் ஆகிய தொகுதிகளில் மனிதநேய மக்கள் கட்சி போட்டியிடுகின்றது.
தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்,
மயிலாடுதுறையில் தமுமுக தலைவர்
பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ், மத்திய சென்னையில் தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி, இராமநாதபுரத்தில் மாவட்டச் செயலாளர் சலிமுல்லாஹ் கான் ஆகியோர் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளனர்.
தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி,
மேலும் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி, டாக்டர். கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியும் மனித நேய மக்கள் கட்சிக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இவ்விரண்டு கட்சிகள் போட்டியிடும் இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும்.
தமுமுக பி.ஜே.பி யுடன் கூட்டணியா?
மேலே உள்ள செய்தியின் படி தமுமுக - மனிதநேய மக்கள் கட்சி அதிகாரப்பூர்வமாக தாங்கள் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியுடன் கூட்டணி என்று அறிவித்துள்ளார்கள். சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி பாரதிய ஜனதாவுடன் கூட்டணியில் உள்ளது. அப்படியானால் தமுமுக வின் நிலைப்பாடு என்ன?
ஒரு வேலை தவறுதலாக வெப்மாஸ்ட்டர் கட்சிபெயரை பிழையாக அடித்துவிட்டாரா? தெளிவுபடுத்தினால் சரி!!
பாஜக-வுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி: சரத்குமார்
சென்னை, மார்ச் 23 மக்களவைத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்து போட்டியிடப் போவதாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார். குறைந்தபட்சம் 15 இடங்களில் போட்டியிடப் போவதாகவும், சிவகங்கை தொகுதியில் நடிகை ராதிகா போட்டியிட உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
நன்றி : மக்கள் முரசு
உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட நெருக்கடி - மு.லீக் விலக முடிவு
காதர் மொய்தீன் கடந்த 2004ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் இதே வேலூர் தொகுதியில்தான் போட்டியிட்டார். அப்போதும் திமுக கூட்டணியில்தான் அவர் இருந்தார். அம்முறை அவர் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.
ஆனால் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சித் தலைவராக இருந்து கொண்டு, திமுகவின் சின்னத்தில் போட்டியிட்டதால் அவரது பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கோரி சுப்ரீம் கோர்ட்டில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும் இந்த வழக்கில் காதர் மொய்தீனுக்கு ஆதரவாகவே தீர்ப்பு வந்தது.
இந் நிலையில் இதுபோன்ற சர்ச்சை ஏற்படாமல் இருக்க வரும் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திற்குப் பதில், முஸ்லீம் லீக்கின் ஏணி சின்னத்தில் போட்டியிடுவேன் என காதர் மொய்தீன் கூறியிருந்தார்.
ஆனால் திமுக தரப்பிலோ, ஏணி சின்னத்தில் நின்றால் சுயேச்சை வேட்பாளர் என மக்கள் கருதுவார்கள். சின்னத்தை பிரபலப்படுத்துவது சிரமம். எனவே உதயசூரியன் சின்னத்தில்தான் நிற்க வேண்டும் என வலியுறுத்தியதாக தெரிகிறது.
இதுதவிர தமிழகம் முழுவதும் சென்று இஸ்லாமியர்களின் வாக்குகளை திரட்ட பிரசாரம் செய்ய வேண்டும் எனவும் அவருக்கு திமுக தரப்பு நெருக்கடி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் தேர்தலில் போட்டியிடுவதில்லை என்ற முடிவுக்கு காதர் மொய்தீன் வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இன்று மாலை கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் மண்ணடியில் நடக்கிறது. அப்போது யுனானி டாக்டர் ஹக்கீம் சையத் சத்தார் அல்லது துபாய் பிரிவு இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பிரிவு தலைவர் அப்துல் ரஹ்மான் ஆகியோரில் ஒருவர் வேட்பாளராகலாம் எனத் தெரிகிறது.
நன்றி : தட்ஸ்தமிழ்
Wednesday, April 08, 2009
தமிழக அரசியலில் முஸ்லிம்களுக்கு ஏப்ரல் ஃபூல்?

சிலநாட்களுக்கு முன்பு அதிரை எக்ஸ்ப்ரஸில் "காணாமல்போன தவ்ஹீதுவாதிகள்" என்ற பதிவில் துவக்கத்தில் இருந்த தவ்ஹீதுப் பிரச்சார விழிப்புணர்வு இன்று சிலரின் முரண்பட்ட அணுகுமுறைகளால் தடம்புரண்டு, மாற்றார் நகைக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்துள்ளது என்று நான் அவதானித்தவற்றைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். எனது சொல்லாடல் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதோ அல்லது அவர்களுக்கு என்மீது ஏதும் தனிப்பட்ட விரோதமோ தெரியாது பின்னூட்டத்தில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்கள்.
எந்தகருத்துக்கும் எதிர்கருத்து உண்டென்பதை ஒரு நேர்மையான விமர்சகன் மனதில் வைத்தே விமர்சிக்க வேண்டும்.விமர்சனங்களுக்கான எதிர்வினைகளையும் எதிர்கொள்ளும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியம் என்பதால் பாராட்டுக்களைவிட எதிர்விமர்சனங்களையே கவனத்தில் கொண்டு முந்தையப் பதிவின் தொடர்ச்சியாக இதை வாசிக்கவும்.
மக்களவைத் தேர்தல்தேதி அறிவிப்பிற்குமுன்பே மத்திய மாநில அரசியலில் கட்சிகளிடையே கூட்டணி பேரங்களும் திரைமறைவு பரிவர்த்தனைகளும் நடந்து முடிந்துவிட்டன. சென்ற தேர்தலில் ஓரணியிலிருந்தவர்கள் இந்த தேர்தலில் எதிரணியில் இருக்கிறார்கள். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மீண்டும் பேரங்களும் திரைமறைவுப் பரிவர்த்தனைகளும் நடந்து காட்சிகள் மாறக்கூடும்.அரசியலில் நிரந்தர நண்பருமில்லை; நிரந்தரப் பகைவரும் இல்லை என்று பொதுமொழி அனைத்துக் கட்சியினராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.
இவ்வுலகமே கதியென்று கட்சிநடத்து தொழில்முறை அரசியல்வாதிகள் எப்படியும் போகட்டும். அவர்களின் கூட்டணி அடுத்த தேர்தல்வரை மட்டுமே. தேவையெனில் கைகொடுப்பதும் தேவையில்லாவிட்டால் காலை வாரிகொள்வதும் அரசியலில் சகஜம். ஆனால் முஸ்லிம் தலைவர்களும் இம்மனநிலைக்கு சமீபகாலங்களில் வந்துள்ளதை எண்ணி வேதனைப் படாமலிருக்க முடியவில்லை. இந்தியளவில் நடக்கும் அவலங்களைவிடவும் தமிழக முஸ்லிம் அமைப்புகள் இடையே நடக்கும் உள்குத்துகள்,காலைவாருதல்,பேரங்கள் சகிக்கமுடியவில்லை. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் தமுமுக-ததஜ இடையே நடக்கும் பனிப்போர் தமிழக முஸ்லிம்களை எங்குபோய் விடுமோ என்ற அச்சம் எழுகிறது.
1994ல் தமிழக முஸ்லிம்களை மார்க்கம் மற்றும் அரசியல் ரீதியாக விழிப்படையச் செய்து கொடிபிடிக்கும் சமுதாயம் மட்டுமல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் தமுமுகவின் பங்களிப்பு மகத்தானது.வாழ்வுரிமை மாநாடு,எழுச்சி மாநாடு என தமிழக முஸ்லிம்களை ஓரணியில் கொண்டுவந்து சகலதரப்பையும் மலைக்க வைத்தனர்.இதுவரை இருந்த முஸ்லிம் இயக்கங்கள் மார்க்கத்தையோ அல்லது அரசியலையோ மட்டுமே முன்னிலைப் படுத்தி வந்ததால் ஒருவருக்கொருவர் தொடர்பின்றி முஸ்லிம்கள் தனித்தனி பாதையில் பிரிந்து கிடந்தனர்.தமுமுக இவ்விருவரையும் சரியான பாதையில் ஒருங்கிணைத்ததால் அழைத்த போதெல்லாம் முஸ்லிம்கள் குடும்பத்துடன் வந்து ஆதரவைத் தெரிவித்தனர்.
பத்தாண்டுகளில் எல்லாமே தலைகீழாக மாறியது! வழக்கமான அரசியல் கட்சிகளைவிடத் தரம் தாழ்ந்து ஒருவரை குற்றஞ்சாட்டிக் கொண்டு பிரிந்து நின்றதோடு, குழிபறிக்கவும் செய்தனர். தமுமுகவில் தவ்ஹீதுப் பிரச்சாரம் செய்ய முடியவில்லை என்ற காரணத்தைச் சொல்லி சகோதர். பி.ஜெய்னுல் ஆபிதீன் தலைமையில் சிலர் பிரிந்து தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் என்று செயல்பட்டு வந்தனர். ஒருசில மாதங்களில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வந்துவிட்டதால் சமுதாயப் பணிகளோடு அரசியலிலும் ஈடுபட்டுவந்த தமுமுக திமுகவை ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது.
தமுமுகவின் அரசியல் அணுகுமுறைகளாலும் சமரசங்களாலும் தவ்ஹீதுப் பிரச்சாரத்தை முழுமையாகச் செய்யமுடியவில்லை என்று பிரிந்தவந்த ததஜ,தமுமுகவுக்கு எதிராக அதிமுக ஆதரவுப் பிரச்சாரம் செய்து தவ்ஹீது+அரசியல் என்று நிலை தடுமாறியதிலிருந்து தமிழக முஸ்லிம்கள் பரிதாப நிலையை நோக்கி மீண்டும் தள்ளப்பட்டுள்ளனர்.
சகோ.பி,ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் எழுச்சியான, வசீகரமான மார்க்கப் பிரச்சாரங்கள் தமிழக முஸ்லிம்களை வெகுவாகக் கவர்ந்தன. இதுவே மார்க்கம் என்று சொன்னதையும் கண்டதையும் கேட்டதையும் செயல்படுத்தியவர்கள் குர்ஆனையும் ஹதீஸ்களையும் ஆராயத் தொடங்குமளவுக்கு வீரியமான தர்க்க ரீதியிலான பேச்சுக்கள் அமைந்தன. இவர் சொல்வதும் நியாயமாகத்தானே இருக்கிறது என்று சிலரை நிரந்தர ஆதரவாளர்களாகவும் மாற்றியது.1430 வருடங்களுக்கு முன்பே இறுதிப்படுத்தப்பட்ட இஸ்லாத்தில் இருந்த/இல்லாத விசயங்களை தர்க்கத்திற்கு உள்ளாக்கியது விழிப்புணர்வா அல்லது வீழ்ச்சியா என்பதை அல்லாஹ் நன்கறிவான்.
இமாம்கள் சொல்லியதெல்லாம் மார்க்கமல்ல என்றவர்கள் பிஜே சொல்வதே மார்க்கம் என்று பேசாமடந்தைகளாகினர். அல்லாஹ்வும் ரஸூலும் சொல்லாததைச் செய்பவன் வழிகேடர்கள் என்று சொல்லத் தொடங்கி பீஜெ சொல்வதை எதிர்ப்பவரெல்லாம் வழிகேடர் என்று நிலைபிறழ்தனர்.நேருக்குநேர் விவாதம் செய்ய வேண்டும் அல்லது சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற புதியசித்தாந்தம் போதிக்கப்பட்டது.
மார்க்க விசயத்தில் பிஜே சற்றுஅதிகமாகவே கற்றறிந்தவர் என்பதால் சொல்பவை தவறாக இருக்க வாய்ப்பில்லை என்று நம்புவதில் நியாயமிருக்கிறது.மார்க்கமே பிரதானமென்று போர்க் கொடியேந்தி வெளியேறி, இன்று அரசியலிலும் குழம்பிப்போய் குழப்புவதையும் சகோதரர்கள் நியாயப்படுத்துவதை என்னவென்று சொல்வது?
தவ்ஹீதுப் பிரச்சாரத்திற்கு அரசியல் பின்னணி அவசியம் என்றால் அதை தமுமுகவிலிருந்து தனிக்கொடியுடன் பிரியாமலேயே செய்திருக்கலாமே? ஏப்ரல்-5 கோவையில் நடந்த ததஜ செயற்குழுத் தீர்மானத்தின்படி திமுகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு எடுத்திருப்பது சரி அல்லது தவறாக இருக்கலாம். (தவ்ஹீதுக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம்?) ஆனால், தனிக்கட்சியாக அரசியல் களம்கண்டுள்ள முன்னாள் சகாக்கள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் செய்து மண்ணைக் கவ்வ வைப்பதாகத் தீர்மானம் இயற்ற வேண்டிய அவசியமென்ன?தவ்ஹீது மட்டும் என்றுப் பிரிந்து வந்ததிலாவது ஓரளவு நியாயமிருந்தது. தமுமுகவை வீழ்த்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைவதற்கு எதற்கு தவ்ஹீது ஜமாத்?
"நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே;ஆகவே,உங்கள் இருசகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள்மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்."(49:10) என்ற வேதவரிகளையும்,வெற்றி தோல்விகளைத் தருபவன் அல்லாஹ்வே அவன் நாடியோருக்கு ஆட்சியதிகாரங்களை வழங்குவான் என்பதையும் மறந்து
"மனிதநேயமக்கள் கட்சி எங்கு நின்று போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக அவர்களின் சமுதாய துரோகங்களை அடையாளம் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கி அவர்களை தோல்வியை தழுவச் செய்யும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது." என்று தீர்மானம் இயற்றுமளவுக்கு சகமுஸ்லிம் ஓரிருவருடங்கள் முன்புவரை ஒரே தட்டில் உணவருந்தி சுக/துக்கங்களில் பங்கேற்ற முன்னாள் சகாக்களை வீழ்த்தியே தீருவோம் / தீருவேன் என்பதற்கு எந்த ஹதீஸில் முன்மாதிரி உள்ளது என்று யாராவது கேட்டீர்களா? உலகளவில் இருதுருவங்களாகப் பிரிந்துள்ள ஷியாளுக்கும் சுன்னத்திக்களுக்கும்கூட இந்தளவுக்கு கொலைவெறியுடன் மோதவில்லையே!
அல்லாஹ்வின் தீர்மானங்கள் மட்டுமே மாற்றமுடியாதவை. அல்லாஹ்வும் ரஸூலும் ஒன்றைத் தீர்மானித்துவிட்டால் மட்டுமே மாற்றுக் கருத்துக் கொள்ளக்கூடாது என்பதில் உறுதியானவர்களாக இருப்பின் தயவுசெய்து செயற்குழுத் தீர்மானம் #8ஐ மாற்றங்கள்.மாற்ற மறுத்தால் அல்லாஹ்வின் கட்டளையை மதிக்கத் தவறியவர்களை அல்லாஹ்வுக்காக வெருத்து ஒதுக்க/ஒதுங்க வேண்டிய தருணம் இதுதான் என்பதை உணராவிடில் நமக்குநாமே ஏப்ரல் ஃபூல் முத்திரை குத்திக் கொண்டுள்ளதாகவே மாற்றார் கருதுவர்.
சில விளக்கங்கள்: இப்பதிவிலும் ததஜவுக்கு எதிரான கருத்துக்களைப் பதிவு செய்திருப்பதால் ததஜ அனுதாபிகள் எதிர்முத்திரை குத்தக்கூடும் என்பதால் நான் இயக்கசார்பற்ற சாதாரண இந்திய முஸ்லிம் குடிமகன் மட்டுமே என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.
தமுமுக குறித்து விமர்சனங்களே இல்லையா? என்ற சந்தேகமும் எழும். தமுமுக சமுதாயப் பணிக்கு என்றும் மமக அரசியலுக்கு என்றும் தெளிவாக இருப்பதால் அது குறித்து எழுதவில்லை.
மேலும் அவர்கள் தவ்ஹீது ஜமாத்தை அழித்தே தீருவோம் என்று எந்தத்தீர்மானமும் இயற்றவில்லை என்பதோடு, ததஜ - தவ்ஹீது பிரச்சாரம் என்று விலகி அரசியல் பிரச்சாரம் செய்வதால் தமுமுகவைவிட ததவே எனது பார்வையில் சற்று விமர்சனத்துக்குறியதாகப்பட்டது. தமுமுக அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்தபிறகு ஏதேனும் விமர்சனம் இருந்தால் இன்ஷா அல்லாஹ் அதையும் பதிவு செய்வேன்.
அன்புடன்,
அபூஅஸீலா
நன்றி : அதிரை எக்ஸ்ப்ரஸ்



