Wednesday, April 22, 2009

பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா - 37 இடங்களில் தி.மு.க விற்கு ஆதரவு

தமிழகத்தில் பாப்லர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேர்தல் நிலைப்பாடு
மனித நேய மக்கள் கட்சிக்கு 3 இடங்களில் ஆதரவு
தி.மு.க கூட்டணிக்கு 37 இடங்களில் ஆதரவு

15 வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேர்தல் நிலைப்பாடு குறித்து பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத் தலைவர் திரு. முகம்மது அலி ஜின்னா தெறிவிக்கையில் :

சுதந்திர இந்தியாவில் முஸ்லிம்கள் 60 ஆண்டு காலமாக அரசியல் அதிகாரத்தில் வஞ்சிக்கப்பட்டுள்ளனர் என்பது பட்டவர்த்தனமான உண்மை. இந்தியாவில் 13.4% வாழும் முஸ்லிம்கள் சுதந்திரமடைந்து அரை நூற்றாண்டுக்கு மேலாகியும் பாராளுமன்ற பிரதிநிதித்துவாத்தில் தனது சதவீதத்தில் பாதியை கூட் பெறவில்லை.

அரசியல் பிரதிநிதித்துவத்தில் முஸ்லிம்கள், தலி்த்துகள், இதர சிறுபானடமையினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களை அரசியல் ரீதியில் சக்திப்படுத்துதல் என்ற குறிக்கோளுடன் PFI செயல்பட்டு வருகிறது. அகில இந்திய அளவில் இதற்கான முயற்சியை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா எடுத்து வரும் இந்த தருனத்தில்தான் மக்களவை தேர்தலை எதிர்கொள்கிறோம். இந்த மக்களவை தேர்தலில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா நேரடியாக போட்டியிடவில்லை. ஆனால் தேர்தல் சம்பந்தமான முக்கிய நிலைப்பாட்டை திர்மானித்தள்ளது.

தமிழ்நாட்டில் முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் முயற்சியாக மனித நேய மக்கள் கட்சி (MMK) தனி சின்னத்தில் தேர்தலில் போட்டியிடுகின்றது. இதனை பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா வரவேற்கின்றது. எனவே மயிலாடுதுறை, மததிய சென்னை, பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் மனித நேய மக்கள் கட்சியின் வேட்பாளரை ஆதரித்து வெற்றி பெறச் செய்யவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மதவாத ஃபாசிஸக் கட்சிகள் அரசியல் அதிகாரத்திற்கு வருவதை தடுக்கும் வகையிலும் கடந்த இரன்டரை வருட திமுக ஆட்சியில் நிறைவேற்றப்பட்ட முஸ்லிம்களுக்கு கல்வி , ஏவேலை வாய்ப்பில் 3.5% இட ஒதுக்கீடு, உலமா நல வாரியம் அமைப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டும் , கிலோ 1 ரூபாய் அரிசி, ஏழைகளுக்கு எரிவாயு இனைப்புடன் இலவச கேஸ் அடுப்பு, தமிழகத்திற்கு பயனளிக்கும் சேது கால்வாய் திட்டத்திற்கான உறுதியான முயற்சி போன்ற மக்கள் நலத்திட்டங்களை கருத்தில் கொண்டும் புதுவை உட்பட மீதமுள்ள 37 தொகுதிகளிலும் திமுக, காங்கிரஸ் , விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியை கொண்ட கூட்டணிக்கு ஆதரவிளத்து வெற்றி பெறச் செய்வதெனவும் தீர்மானிக்கப்பட்டுள்து.

பாரதீய ஜனதா கட்சி ஹிந்துத்துவா என்னும் அரசியல் செயல்திட்டத்துடன் செயல்படும் ஓர் அரசியல் கட்சி. ஹிந்துத்துவா என்னும் இந்த செயல்திட்டம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும் அரசியல் சாசன சட்டத்திற்கும் ஏன் ஒட்டுமொத்த மனித சமூகத்திற்குமே எதிரானதாகும். இதற்கு பா.ஜ.க நாடு முழுவதும் நடத்திய முஸ்லிம், தலித், கிருத்துவர்களுக்கு எதிரான கலவரங்களே சாட்சி. கடந்த கால பா.ஜ.க வின் ஆட்சிக்காலம் இந்திய வரலாற்றில் ஓர் இருன்ட காலமாகும்.

எனவே பா.ஜ.க வை தமிழகத்தின் ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் புறக்கணித்தது போல் ஒட்டுமொத்த மக்களும் புறக்கணிக்கும் வகையில் பாரதீய ஜனதா போட்டியிடும் அனைத்து தொகுதிகளிலும் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியா களமிறங்கி பா.ஜ.க வுக்கு எதிராக களப்பணியாற்றி அதனை படுதோல்வியடையச் செய்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இப்பத்திரிகையாளர் சந்திப்பில் பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொருளாலர் ஷேக் முகம்மது தெஹ்லான் பாகவி, மாறிலத் துணைத் தலைவர் ஏ.எஸ் இஸ்மாயீல் , மாநில பொதுச் செயலாளர் ஏ. ஃபக்ருதீன் ஆகியோர் உடனிருந்தனர்.

19 comments:

Anonymous said...

இம்முறை பாசிச சக்திகளை எதிர் கட்சியாகக்கூட அமரவிடக்கூடாது இன்ஷா அல்லாஹ்

முகவைத்தமிழன் said...

இன்ஷா அல்லாஹ்....நிச்சயமாக நாம் ஃபாசிஸ சக்திகளை ஆட்சிக்கு வர விட கூடாது.

chellam said...

Insha allah

May allah accept our Duva's

Anonymous said...

Masha allah....
what about ramanathaburam MMK member?

Anonymous said...

இரமாநாதபுரத்தில் யாருக்கு ஆதரவாம்?

Abuthar said...

Namakkul evvalavu verupadugal irunthaalum nammudaya pothuvana ETHIRIYAI santhipothu naam kandippaga inaya vendum..Alhamdulillah... Insha Allah ..Ottumoththa thamizhaga muslimgal anaivarum viraivil aniservom...

Anonymous said...

Alhamdulillah! good decession

thippu sulthan said...

ramanathapuram thohudyil DMK vukku aadharavu...

yen yenral angu muslim vetpalargal DMDK, IDMK, MMK yena adhigamaga pottiyiduvadhal muslim vote piriya adhigamaga vaippulladhu...

MMK vai aadharikkum pudhiya thamilagathin dalith vote galum BSP in dhalith vetpalar john pandiyan manaivikku dan kedaikkum...

ippadi muslim vote galum dalith vote galum pirindhal BJP in thirunavukkarasar vetri pera vaippulladhu...

thirunavukkarasar yerkanavae vetri petra arandhangi thogudhi tharpodhu ramanathapuram MP thogudhiyil dan ulladhu...

RSS thamilagathil motham 3 mandalangalaga seyalpattu varugiradhu.. adhil oru mandalam ramanadhapuram.. indha mandalathil varakkodiya 10 maavatta RSS uruppinargalum angae kalathil irakkapppatullanar...

ramanadhapuram thogudhiyai vetriyadaya BJP thayarahivittadhu.. DMK ADMK ku nigaraga panam selavu seiven endru thirunavukkarasar yerkanavae arivithullan...

indha nilayil BJP yai thorkadikka.. andha thogudiyil nam DMk yai aadharikkirom...

இனியவன் said...

ராமநாதபுரத்தில் தங்கள் அமைப்பு சொல்லும் காரணங்கள் நொண்டி காரணமாகத்தான் தெரிகிறது...முஸ்லிம் சமுகத்தின் வலிமையை நான்கு தொகுதிகளிலும் காட்ட வேண்டிய சூழ்நிலையில் தங்கள் இவ்வாறு முடிவெடுத்திருப்பது சரி அல்ல...ஏதோ திருநாவுக்கரசர் வென்று விட்டால் பாசிச சக்திகள் தமிழகத்தையே நாசம் செய்து விடுவார்கள் என்பது வீண் பயம்.இந்த பாசிஸ்டுகள் ௫ வருடங்கள் மத்தியில் ஆட்சி செய்த பொது நம்மை என்ன செய்து விட முடிந்தது. சில பொய் வழக்குகளை தவிர...மேலும் திருநாவுக்கரசர் ஒன்றும் பெரிய சக்தி அல்ல..கடந்த சட்டமன்ற தேர்தலில் இவரால் இதே ஆர் எஸ் எஸ் காரர்களை வைத்து என்ன செய்ய முடிந்தது....ம.ம.க வேட்பாளர் ஸலிமுல்லஹ் கான் உடனான தங்கள் அமைப்பின் பழைய மோதல்தான் தங்களின் இந்த முடிவு என்று செய்தி உலா வருகிறதே....உண்மையா ....இதை தெளிவு படுத்துங்கள்.இல்லை என்றால் இக்கட்டான நேரத்தில் சகோதரர்களை கை விட்ட குற்றம் தங்களை சாரும்...

திப்பு சுல்தான் said...

கண்டிப்பாக நீங்கள் சொல்லும் காரணம் தவறு.. ஆறு வருடங்கள் ஆட்சி செய்த பாரதீய ஜனதாவால் என்ன செய்ய முடிந்தது என்று நண்பன் இனியவன் கேட்கிறார்.. ஆறு வருடத்தில் அவர்கள் பல உள் வேலைகளை செய்திருக்கிறார்கள்..

சலிமுள்ளாஹ் காணுக்கும் பாப்புலர் ப்ரண்ட் க்கும் முன் விரோதம் எதுவும் இல்லை.. சலிமுள்ளாஹ் கானை விட ரீதிஷ ஒன்றும் சிறந்தவரும் இல்லை...

இன்று தமிழகத்தில் அடித்தலமே இல்லாத BJP கூட்டணி இன்றி ஆட்சிக்கு வந்தால் அவர்கள் தமிழகத்தில் கால் பதிக்க முக்கிய காரணமாகிவிடும்

இந்த முடிவு குறித்து ம.ம.க தலைமையிடமும் தெரிவிக்கப்பட்டுள்ளது...

இந்த முடிவு ஸூரா செய்து எடுக்கப்பட்டது... ஸூராவின் முடிவில் ஹைர் உள்ளது..

சமுதாய நலன் கருதி எடுக்கப்ப்பட்ட முடிவை கொச்சைப்படுத்த வேண்டாம்..

அன்புடன்
பாப்புலர் ப்ரண்ட் உறுப்பினர்
ச. இஜாஸ் காண்

rafiq said...

First step for IDMK shows they are wrost then munafiqeen.they wrote toomuch articles,songs and now their stand is stupidity.if they are really keep their words,songs and articles they must join one gorup and ask their sheet.inthis stage they must support mmk.unfortunatly not,and they take wroung decision. may be this ritish have toomuch money he may paid,it means they finish their party themself.onething allah will support they correct people.

இனியவன் said...

ராமநாதபுரத்தில் பிஜேபி யின் பலம் கடந்த 2006 சட்டமன்ற தேர்தலில் பி. ஜெ.பி ராமநாதபுரம் - 5624 கடலாடி -2090 முதுகுளத்தூர் -2178 திருவாடனை -2064 பரமக்குடி - 2090அறந்தாங்கி -14713 மொத்தம் - 27,659இவ்வளவுதான் பி.ஜெ.பி. பெற்ற வோட்டு , இவர்களுக்கு பயந்து தான் முஸ்லிம்களின் காவலர் கருணாநிதிக்கும் கருப்பு நோட்டு ரிதிஷுக்கும் ஆதரவா? இதை நம்ப நான் தயாரில்லை.

திப்பு சுல்தான் said...

nadri sagodharar iniyavan avargalae..

neengal ketta kelvikku adu dhan unmayana badhil..

nambuvadhum nambadhadhum ungal viruppam...

இனியவன் said...

சகோதரர் சொல்வது சரிதான்.உங்கள் அமைப்பு ம.ம.க போட்டி இடும் மூன்று தொகுதிகளிலும் நல்ல ஒத்துழைப்பு கொடுப்பதாக கேள்விப்படுகிறோம். ஆனால் ராமநாதபுரத்தில் பி.ஜெ.பி இன் பலத்தை பெரிதாக நினைத்து கொண்டு தவறான முடிவு எடுத்து விட்டீர்கள் என்பதுதான் என் கருத்து.ஏன் என்றால் தி.மு.க, ஆ.தி.மு.க பா.ஜ.க. மூன்றுமே முக்குலதோரை நிறுத்துவதால் வோட்டுக்கள் பிரியும். தாழ்த்தப்பட்ட மக்கள் மற்றும் நடுநிலை, நமது சமுதாய வோட்டுக்கள் பெற உழைத்தால் சகோ. சலீம் வெற்றி பெறுவது உறுதி..ஏற்கனவே சமுதாய லெட்டர் பேடுகளை வரிசையாக நமக்கு எதிராக அறிக்கை விட வைக்கும் திமுகவுக்கு ஓரளவுக்கு பலமுள்ள தங்கள் அமைப்பு ஆதரவு கொடுத்துதான் என்னுடைய கவலை..உங்களுக்கும் சலீமுக்கும் ஏதும் பிரச்னை இல்லை என்றால் நன்று. நான்தான் தவறாக சொல்லி இருக்கிறேன். மன்னிக்கவும்.......மேலும் உங்கள் அமைப்பின் மாசூர வுக்கு நீங்கள் கட்டுப்பட்டு தான் ஆக வேண்டும் என்பதும் புரிகிறது.எனினும் இன்னும் நேரம் இருக்கிறது...மறுபரிசீலனை செய்யலாமே என்பதும் எனது தாழ்மையான வேண்டுகோள்.

திப்பு சுல்தான் said...

இந்த முடிவு நன்கு விவாதித்த பிறகே எடுக்கப்பட்டுள்ளது..
இது குறித்து ம.ம.க தலைமையிடமும் ஆலோசனை செய்யப்பட்டு பின்னரே முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது..

எனினும் உங்கள் கருத்தை நான் நிர்வாகிகளிடம் தெரிவித்திருக்கிறேன்

MOHAMMED BILAL said...