Monday, April 21, 2014

ததஜ வினர் ஹைதர்அலி பேசிய ஆடியோவை வெளியிட சவால்...

 
 
அன்பார்ந்த சகோதரர்களே, அஸ்ஸலாமு அழைக்கும்(வரஹ்)...

கடுமையான களப்பணிகள் மற்றும் பரப்புரைகளுக்கு மத்தியில் தேவையற்ற ஒரு விசயத்திற்காக ஒரு கடிதத்தை எழுதவேண்டியதற்காக வருந்துகிறேன்.

அவதூறு ஒன்று சுற்றிவரும் நிலையில், அதற்கு விளக்கம் கொடுக்கும...ாறு வெளிநாடு வாழ் சகோதரர்கள் கேட்டுகொண்டனர்.

24 கூட்டமைப்பை சேர்ந்த அப்பொல்லோ ஹனிபா கூறியதாக ஒரு அவதூறை ததஜாவினர் பரப்பிவருகின்றனர்.

அதாவது, ததஜாவிடம் ஆதரவு கேட்குமாறு மமக நிர்வககுழுவில் சகோ.ஹைதர்அலி அவர்கள் கூறியதாகவும். அதை நானும், பேராசிரியர்.ஜவாஹிருல்லாஹ் அவர்களும் நிராகரித்ததாகவும், இதை அண்ணன் ஹைதர் அலி அவர்கள் அப்பொல்லோ ஹனிபாவிடம் வேதனையோடு கூறியதாகவும் அவதூறு பரப்பப்ட்டு வருகிறது.

இவ்விசயத்தில் முதலில் தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி மீது பழிபோட்டர்கள். இப்போது இரண்டு நாள் கழித்து என்மீதும், பேராசிரியர் மீதும் பழிபோடுகிறார்கள்.

இதுகுறித்து 20.04.2014 அன்று மாலை 4 மணியளவில் நானும் அண்ணன் ஹைதர்அலியும் பேசிக்கொண்டோம். இந்த அவதூறை கடுமையாக மறுக்கவேண்டும் என்றார். அவதுறு பரப்புபவர்கள் மீது கடும்கண்டனத்தையும் அவர் வெளிபடுத்தினார்.

பிறகு நான் இதுகுறித்து தலைவர் ஜெ.எஸ்.ரிபாயி அவர்களிடமும், பேராசிரியர்.ஜவாஹிருல்லாஹ் அவர்களிடமும் பேசினேன். நாங்கள் இந்த அவதூறு குறித்து ஒருமித்த கண்டனத்தை பதிவு செய்தோம்.

இரவு 9 மணிக்கு அபொல்லோ ஹனிபாவிடம் நான் பேசினேன், அவர் நானும் ஹைதரும் அப்படி எதுவும் பேசவே இல்லை என்றும், தேவைஇல்லாமல் அவதுறு பரப்பப்படுகிறது என்றும் கூறினர்.

மேலும், மயிலாடுதுறையில் மமகவிற்கு ததஜா ஆதரவு தரவேண்டும் என்று ததஜா தலைமையிடம் அவர் பேசியதாகவும், மன்னிப்பு கடிதம் ஒன்று எழுதி தந்தால்தான் அதுபற்றி பரிசீலிக்கமுடியும் என்று அவர்கள் கூறியதாகவும், அது சாத்தியமில்லை என்பதால் நான் அந்த முயற்சியை கைவிட்டதாகவும் கூறினார்.

எனவே சகோதரர்கள் இதையே விளக்கமாக ஏற்று இந்த அவதூறுக்கு முற்றுபுள்ளிவைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.
சிலர் மயிலாடுதுறையில் எடுத்த தவறான-சுயநல அரசியல் முடிவு காரணமாக, பெறும் நெருக்கடியில் தத்தளித்துக்கொண்டுள்ளனர். அந்த இயக்கத்தில் இருக்கும் மனசாட்சியுள்ள தொண்டர்கள் இதனால் அதிருப்தியில் உள்ளனர்.

அதை திசைதிருப்புவதர்க்காகவும், தங்கள் தொண்டர்களை சமாதானபடுத்துவதர்க்காகவும் சிலர் பரப்பும் அவதூறுகளை புறக்கணிக்க வேண்டுகிறோம்.

அவர்கள் சகோ.ஹைதர்அலி பேசியதாக கூறும் அந்த ஆடியோவை வெளியிடுமாறு சவால்விடுகிறோம்.

சகோதரர்களே... இறைவன் அருளால் மயிலாடுதுறை தொகுதியில் நமக்கு வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது. மஹல்லாக்கள் தோறும் 99% வாக்குகள் ஓரணியில் திரண்டு இருக்கிறது.

எனவே எமது வெற்றிக்காக இறைவனிடம் பிரார்த்திக்குமாறு கேட்டுகொள்கிறோம்.

எம்.தமிமுன் அன்சாரி
பொதுசெயலாளர்

Friday, April 18, 2014

முகவையில் மோடிக்கு கூடிய கூட்டம் ஒரு எச்சரிக்கை!!

 
 

நேற்று முகவையில் பா.ஜ.க வின் வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் பிரதமா் வேட்பாளா் நரமாமிச நரேந்திர மோடி பிரச்சாரத்திற்கு வந்திருந்தாா். எவ்வருடமும் சேராத கூட்டமாக பா.ஜ.க வின் இந்த கூட்டத்திற்கு சுமாா் 3000 முதல் 5000 மக்கள் கலந்து கொண்டனா். கூட்டம் குறைவாக இருந்தாலும் இந்த கூட்டம் ஏனைய மற்ற கட்சிகளான திமுக, அதிமுக போன்றவை கூட்டுவதுபோல் பல மாவட்டங்களில் இருந்து காசு கொடுத்து கூட்டி வந்ததாக தெறியவில்லை. முற்றிலும் உள்ளுா் மக்கள் மட்டுமே கூடியிருந்தனா்.

இதில் கவனிக்கத்தக்கது என்னவென்றால் கூட்டத்தில் கலந்து கொண்டோரில் அதிகமாக இருந்தது யாதவா் (கோனாா்) , செட்டியாா், நாடாா் இன மக்கள்தான். கூட்டம் நடந்து கொண்டிருந்தபோது முகவை நகருக்குள் உலா வந்தபோது முகவையில் மேற்கூறிய சமுதாய மக்களின் வா்த்தக நிறுவனங்கள் ஒன்றுகூட திறக்கவில்லை. செட்டியாா்களும், நாடாா்களும், யாதவா்களும் தங்கள் வா்த்தக நிறுவனத்தை ஒரு நாள் மூடிவிட்டு மோடியை காண ஒற்றுமையுடன் சென்றுள்ளனா்.

இது இஸ்லாமியா்களுக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது. பல ஜாதிகள் உள்ளது, தாழ்த்தப்பட்டவன், உயா்ந்தவன் என்ற பேதம் உள்ளது என நம்மால் சொல்லப்படும் ஒரு மதத்தினா் தங்களுக்குள் உள்ள உயா்வு தாழ்வுகளை மறந்து ஜாதி வேறுபாடுகளை மறந்து ஹிந்துத்துவா என்ற ஒற்றை கொள்கையின் கீழ் அணிவகுக்க முடிகிறதென்றால் , உயா்வு தாழ்வு இல்லாத ஜாதி வேறுபாடுகள் அல்லாத சமூகம் என நம்மால் பெறுமையுடன் சொல்லப்படும் இஸ்லாம் மதத்தை பின்பற்றும் முஸ்லிம்களாகிய நம் மக்களால் ஏன் இஸ்லாம் எனும் ஒற்றை கொள்கையின் கீழ் ஒன்றினைய முடியவில்லை? எஞ்சி நிற்கும் மில்லியன் டாலா் கேள்வி இது.

நம்முடன் சகோதரனாய் பழகிய பிற சமூக மக்களை நம்முள் தோன்றிய சில இயக்கங்களின் கொள்கை கூச்சல்களும், ஜிஹாதிய கூப்பாடுகளும், நம்முள் சமூக அவலங்களை வைத்துக்கொண்டு தவறான புறிதல், முறைாயன விசாரிப்புகளின்றி நம் பெண்பிள்ளைகளுக்கு படித்து கொடுக்கும் மாற்று சமூக ஆசிரியா்கள், தம்முடன் பள்ளி கல்லுாரிகளில் பயிலும் நம் சமூக பெண்பிள்ளைகளோடு பழகிய அச்சமூக இளைஞா்கள் மீது நமது இயக்கவாதிகள் நடத்திய கொடூர தாக்குதல்களின் விளைவுகள் இன்று அச்சமூக மக்களை ஹிந்துத்துவாவின் பால் அழைத்து சென்றுள்ளது. இது நாமே அவா்களை பாசிசத்தின் பால் தள்ளிவிட்டு ஒன்றினைய வைத்ததாகும்.

மோடிக்கு முகவையில் கூடிய கூட்டம் குறைவோ அதிகமோ பா.ஜ.க வெற்றி பெறுமா பெறாதா என்பது கேள்வியில்லை. முகவையில் மேற்கூறிய யாதவா் (கோனாா்) , செட்டியாா், நாடாா் இன மக்களின் ஹிந்துத்துவா பக்கமான முன்னகா்வு நமது இயக்கங்களின் இளைஞா்களின் தவறான நடத்தையின் வெளிப்பாடு இன்னும் இது சிந்திக்க கூடிய ஒன்றாகும். நிச்சயமாக இது கவணமாக கையாளப்பட வேண்டிய ஒன்று. நம்முடன் ஒன்றாக விளையாடின, படித்த, பழகிய , ஒரு தட்டில் உணவுண்ட, ஒரே தெருவில் வசித்த நட்புகள் , உரவுகள் இன்று நம்மை விட்டு விலகி செல்கின்றன என்பது ஒரு அபாயத்தை நமக்கு உணா்த்துகிறது. இதை இந்த பிரிவை, சமூக பிளவை அபாயமாக உணராமல் தங்கள் இயக்கங்களின் வெற்றியாக கருதும் இறக்குமதி செய்யப்பட்ட கொள்கையை பேசித்திறியும் இஸ்லாமிய இளைஞா்களுக்கும், அமைப்புகளுக்கும் எச்சரிக்கை...!! நாளை முகவையும் கோவையாக , குஜராத்தாக மாறலாம் என்பதற்கான முன்னறிவிப்பு மற்றும் அடையாளங்களே இவை.

இன்று ஹிந்துத்துவாவை நோக்கி நகரும் இச்சமூக மக்கள் வேறு யாருமில்லை நம்மோடு ஒரே ஊரில் , ஒரே தெருக்களில், வசிக்க கூடியவா்கள், நம்முடன் ஒன்றாக விளையாடின, படித்த, பழகிய , ஒரே தட்டில் உணவுண்ட தோழமைகள் . இவா்கள் நாளை நமது எதிரிகளாக இவா்கள் பரினாம வளாச்சி அடையும் முன் இவா்களை தடுத்தாக வேண்டிய கடமை நமது சமூகத்திற்கு உள்ளது. இவா்களை தடுப்பதற்கு ஆயுதங்களும் ஜிஹாதிய கூச்சல்களும் தேவையில்லை. இஸ்லாம் காட்டித்தந்த பொறுமையும் சகோதரத்துவதும் போதும். இந்த இஸ்லாமிய இயக்கங்கள் வருவதற்கு முன் உள்ள கால கட்ட மனநிலைக்கு நாம் சென்றாலே போதும், அப்புக்களாகவும், அப்பன் மகன்களாகவும், மாமன் , மாப்பிள்ளைகளாகவும் பழகினாலே போதும், திரை தானாக விலகி மீண்டும் உரவுகள் மலரும் ஆயுதமதின்றி , இரத்தமின்றி, கூப்பாடுகளின்றி மனங்களை வெல்லலாம் சமூக ஒற்றுமையை பேனலாம். இதுவே ஹிந்துத்துவாவிற்கு நாம் கொடுக்கும் சம்மட்டி அடியாக இருக்கும். சிந்திக்க வேண்டியவாகள் சிந்திப்பாா்களா?

அன்புடன் முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்.
9047507665

Sunday, February 23, 2014

முஸ்லிம் பாசிஸ்ட்டுகள்???
பொய்யான பரப்புரைகள், தவறுகளை மறைக்க மதத்தை சம்பந்தப்புடுத்துதல், தங்கள் அரசியல் நாடகங்களை தான் சார்ந்திருக்கும் மதத்தின் புனித போர்களுக்கு ஒப்பிடுதல் என சமீபத்திய நிகழ்வுகளை பார்க்கும்போது பாசிசத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்ய வந்தவர்களே பாசிஸ்ட்டுகளாக மாறிவிட்டார்களோ என்ற ஐயம் ஏற்படுகிறது. பாசிசம் என்றால் என்ன என்று தெறியாத அப்பாவி சிறுவர்கள், இளைஞர்கள், முதியோர் , பெண்கள், குழந்தைகளை தங்களது பாசிச சிந்தனைக்கு பலியாக்கிவிட்டார்களோ என்ற என்னமும் எழுகின்றது.

மக்களாட்சியில் மக்களின் மத நம்பிக்கை முக்கியமற்றது. அவர்கள் எந்த மதத்தை பின்பற்றுபவர்களாகவும் இருக்கலாம். மத நம்பிக்கை இல்லாதவர்களாகவும் இருக்கலாம். இருப்பினும் அவர்கள் தங்களை மதச் சார்பற்ற முறையில் நிர்வகித்துக் கொள்ளலாம் என்பது சமூக ஜனநாயகம் பற்றி பேசும் இவர்களுக்கு மக்களாட்சி என்றால் சமத்துவம் என்பது தெறியாது. அதனால் சமத்துவம் இவர்களுக்கு ஒவ்வாது. இவர்களுக்கு தங்கள் அமைப்பில் இல்லாதோர் தங்கள் அமைப்பினருக்கு சமமானவர்கள் அல்ல. முஸ்லிம்கள் கூட தங்களுக்குள் அனைவரும் சமமானவர்கள் இல்லை என்ற பாசிச சித்தாந்தத்தின் உறு உள்ளது.

பாசிசம் (fascism) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும்.தனிமனித உரிமைகளை நாட்டு நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அரசுக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்.

மேலே உள்ளதை அப்படியே சற்று மாற்றி "பாசிசம் (fascism) என்பது ஒரு சமுதாயத்தின் அதிகார வர்க்கத்தால் சர்வாதிகார முறையில் பொருளாதார மற்றும் மற்றைய விடயங்கள் தீர்மானிக்கப்படுவதையே குறிக்கும்.தனிமனித உரிமைகளை அமைப்பின் நலனுக்காக, வல்லமைக்காக எனக் கூறி மதிக்காமல் அமைப்புக்கு எதிராகக் கேள்வி கேட்பவர்களை அடக்குமுறைகள் மற்றும் வன்முறை மூலம் நசுக்குகின்ற அரசியல் நடைமுறையே பாசிசம் எனப்படும்" என வாசித்து பாருங்களேன்.

The New Dictionary of Cultural Literacy, (Third Edition. 2002) என்ற புத்தகத்தில் பாசிஸ்ட்டுகளை பற்றி கூறும்போது “பொதுவாக, பாசிச அரசுகள் ஒரு சர்வாதிகாரியின் அதிகாரத்தில் இருக்கும். இவர் பொதுவாக கவர்ச்சியான தோற்றத்தையும், பகட்டான சீருடைகளையும் கொண்டிருப்பார். இவர் தனது தொண்டர்களை பிரமாண்டமான பேரணிகள் மூலமும், தேசியத்தைப் பற்றிய கூச்சலான கோஷங்களுடனும் ஒன்று திரட்டுவார். அன்னியர்களைப் பற்றியும் தங்களுக்குள் உள்ள ‘அசுத்த’ மான மக்களைப் (ஜெர்மனியின் யூதர்கள்) பற்றியும் சந்தேகத்தையும் வெறுப்பையும் வளர்ப்பார்.”

மேலே உள்ள இந்த கருத்தாக்கத்தை அப்படியே சமீபத்தில் ஒரு அமைப்பு நடத்திய பகட்டான் சீருடை அணிவகுப்புடன் ஒப்பிட்டு பாருங்கள் யார் பாசிஸ்ட்டுகள் என்பதும் எனது சந்தேகம் சரியானதுதான் என்பதும் உங்களுக்கு புறியும்.

இறுதியாக பாசிசம் என்பது இந்துக்களுக்கும் மட்டுமோ அல்லது யூத கிருத்துவ மக்களுக்கு மட்டுமானதல்ல காவல்துறையும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினரும் , இஸ்ரேலிய யூத பயங்கரவாதிகளும் மட்டும் பாசிசம் இருப்பதில்லை இசுலாமியர்களிளும் பாசிச கருத்தியலுடன் கூடிய அமைப்புகள் இருக்கலாம் என்பதுடன் பாசிசத்திற்கு எதிராள களமாடி பாசிசத்தை அழிக்க புறப்பட்டவர்கள் தங்களையும் அந்த சித்தாந்தத்திற்குள் ஆட்படுத்தி தாங்களும் நவீன பாசிஸ்ட்டுகளாக மாறியது மட்டும் நிதர்சனமான உண்மை.

- அன்புடன்
முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்
அலைபேசி 9047507665


Monday, February 17, 2014

முகவையில் இசுலாமியர்கள் மீது காவல்துறை கடும் தாக்குதல்இந்திய சனநாயக நாட்டின் சட்ட திட்டங்களுக்கு கட்டுப்பட்டு சனநாயக ரீதியாக எமது சகோதர இயக்கம் நடத்திய பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் பேரணியில் திட்டமிட்டு உட்புகுந்து கலவரத்தை ஏற்படுத்தும் நோக்குடன் செயல்பட்ட விசமிகளை கைது செய்யாமல் பேரணியில் கலந்து கொண்ட ஒட்டு மொத்த சனத்திரள் மீதும் தனது வக்கிரமான கோரத்தாக்குதலை நடத்திய காவல்துறையின் செயல் வண்மையாக கண்டிக்கத்தக்கது. இந்த கொடூர தடியடி பிரயோகத்தில் காயமடைந்தவர்கள் பெரும்பாலானோர் பெண்களும், முதியவர்களும், குழந்தைகளும் என்பது இன்னும் கவலையளிக்க கூடிய விசயமாகும்.

நாம் இந்திய சனநாயக நாட்டில்தான் வாழ்கின்றோமா அல்லது ஏதாவது காட்டாட்சியின் கீழ் வாழ்கின்றோமா என்ற சந்தேகம் எம்முள் எழுந்துள்ளது. இந்திய தேசியத்தில் சிறுபான்மையினரின் மீதான அரசபயங்கரவாதத்தின் கோர அடையாளங்களில் இதுவும் ஒன்றாக இன்று பதிந்துள்ளது. இதன் மூலம் சிறுபான்மை இன மக்கள் இந்த அரசின் மீதான நம்பிக்கையின்மையின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளார்கள் என்பது நிதர்சனமான உண்மை.


எது எப்படியாக இருந்தாலும் எம் சமுதாயத்தின் மீதான இந்த அரச பயங்கரவாதம் என்பது எத்தகைய முறையிலும் ஏற்றுக்கொள் இயலாதது. வரும் தேர்தல் களத்தில் இதற்கான பதிலை எம் மக்கள் எதிரொலிப்பார்கள் என்று நம்புகிறோம்.

நாங்கள் எம் முன்னோர் மூட்டிய சுதந்திர யாகத்தில் பிறந்த அக்கிணி குஞ்சுகள்...எம் மீதான தாக்குதலை கொண்டு எம்மை அடக்கி ஆளலாம் என்று நினைத்தால் அது நடக்காது.....வல்ல இறைவனை தவிர வேறு யாருக்கும் அஞ்சிடவோ ...அடி பனிந்திடவோ மாட்டோம் நாங்கள்....!!

இந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையில் பரப்பப்படும் வதநதிகளை யாரும் நம்ப வேண்டாம். யாருடைய உயிருக்கும் எந்த ஆபத்துமில்லை. காயமடைந்தவர்களில் பெரும்பகுதியினர் சிகிச்சை முடித்துவிட்டனர். பெருங்காயமுள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. களத்தில் நயவஞ்சகர்களை தவிர அனைத்து அமைப்பினரும் ஒற்றுமையுடன் செயல்பட்டுக்கொண்டுள்ளனர்.
https://www.facebook.com/raisudeen/posts/10152585169128154?notif_t=like

Wednesday, January 08, 2014

மற்றவனெல்லாம் இந்தியனாகிறான் நான் மட்டும் தீவிரவாதியாகிறேன்.....???

 
 
பால்வாடிப் பள்ளியில் பாடம் பயின்றவன் நான்
 மூக்கில் சீல் வடிய துள்ளி விளையாடியவன் நான்
 முதல் வகுப்பு பாடத்தை கைப்பிடித்து சொல்லித் தந்த
 கருப்பையா மாஸ்டரும்,கோவிந்தராஜ் மாஸ்டரும்
 என்ன சாதி என்ன மதம்..
ஐந்தாம் வகுப்பு பாடத்தை அன்போடு சொல்லித் தந்த
 குழந்தை தெரசா டீச்சர் என்ன சாதி என்ன மதம்
 பிராமண நண்பனின் வீட்டில் தயிர் சாதமும்,
தலித் நண்பனின் வீட்டில் பழைய சாதமும்
 கிறிஸ்தவ நண்பனின் வீட்டில் மீன் சாதமும்
 பண்போடு உண்ட நாட்கள் அது..
இதுவெல்லாம் நடந்தது இந்தியாவில்தான்
 இந்தோனேசியாவில் அல்ல...
இதுவெல்லாம் நடந்தது இந்தியாவில்தான்
 பாகிஸ்தானில் அல்ல.. -- காலச் சக்கரம் சுழல்கிறது
 எங்கோ ஓர் இடத்தில் எவனோ ஓர் சுயநலக்காரனால்
 குண்டு வெடிக்கிறது ....
பிராமண நண்பன் இந்தியனாகிறான் --
தலித் நண்பன் இந்தியனாகிறான் ---
கிறிஸ்த்தவ நண்பன் இந்தியனாகிறான் --- இந்த நாட்டில்
 நான் மட்டும் தீவிரவாதியாகிறேன்.........இது நியாயமா?????????????
நன்றி : Niroz Khan


Tuesday, November 26, 2013

தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள் இன்று 26.11.2013தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பிறந்த நாள் இன்று 26.11.2013

வரலாறு தமிழர்களுக்கு தந்த ஒரு பெருந் தலைவன் பிரபாகரன். அடி பணிந்து, தலைகுனிந்து, அடிமைப்பட்டு வீழ்ந்த தமிழன் ஆர்த்தெழுந்து, படைதிரண்டு அடிகொடுத்து வென்ற பொற்காலம் ஒன்றின் பிதாமகன். அவர் ஓர் அற்புதமான மனிதர். அபூர்வமான மனிதர். பிரபாகரன் என்றால் தமிழர்களின் ஆன்மா என்று பொருள். தமிழர்களின் வாழ்வு என்று பொருள். தமிழர்களின் கீர்த்தி என்று பொருள். இப்பெருந் தலைவனைத் தமிழீழ தேசம் பெற்றெடுத்த நாள் இன்று.

Wednesday, November 20, 2013

இந்திய அரசு மீதும் தமிழக அரசு மீதும் வழக்கறிஞா் உமா்கயான் வழக்கு


 


தமிழக சிறைகளில் பல்லாண்டுகாலமாக சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அரசியல் சிறைவாசிகள், ஆயுள்சிறைவாசிகள் விடுதலை தொடர்பில் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் சார்பாக பல்வேறு முன்னேடுப்புகள் செய்து வருவது தாங்க...ள் அனைவரும் அறிந்ததே.

ஆயுள்சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அரசின் கொள்கை முடிவுகள் என்பது ஆட்சியாளர்களின் சுய விருப்பு வெறுப்புகளில் இருந்தே வெளிப்படுகிறது. பொதுவான சொல்லாடல்களாக அனைவரின் மனதிலும் இருப்பது 14 ஆண்டுகள் ஆயுள்சிறைவாசம் அனுபவித்தால் போதுமானது, அவர்கள் மகிழ்சியுடன் வீடு திரும்பிவிடுவார்கள் என்பதே.

ஆனால் எதார்த்தம் என்பது வேறாகவே இருக்கிறது. பல மாநிலங்களில் ஆயுள்சிறைவாசிகள் விடுதலை என்பது 10, 7, 5 ஆண்டுகள் என்று ஒரே சீரான முறையில் இல்லாமல் அரசியல், தேர்தல், தங்களுக்கு விருப்பமானவர்களை விடுதலை செய்வதற்காக விடுதலை செய்வது என்று அனைத்தும் இங்கே அரசியல்மயப்படுத்தியே உள்ளது.

சிறையில் இருப்பவர்கள் என்றால் அவர்களுக்கு என்று ஆன்மா இல்லை என்ற எண்ண‌ங்களும், தப்பு செய்தால் தண்டனை அடைந்துதான் தீரவேண்டும் என்ற பொது உரையாடல்கள் தவிர்த்து நமது சிந்தனை முறை விரிவடைவதில்லை.

தண்டனை முறைகளைப் பற்றி பேசும் நாம் நமது தேசத்தில் நிலவி வரும் சமுக, பொருளாதாரப் பிரச்சனைகள், அரசியல் சூழல்கள் இவை குறித்தும் இவற்றால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் பேசுவதில்லை.

"சட்டங்களை சார்ந்துதான் சமுகம் இருக்கிறது என்பது சட்டப்பூர்வ கற்பனையே. மாறாக சட்டங்கள்தான் சமூகத்தை பிரதிபலிக்க வேண்டும். மக்களுக்காகத்தான் சட்டங்களே அன்றி சட்டத்திற்காக மக்கள் அல்ல என்பதான சட்டமுறைகள்தான் இங்கே சிறந்த சமூக அமைப்பு முறைகளை உருவாக்கும்”

தமிழகம் மட்டும் அல்ல இந்திய துணைக் கண்டம் முழுமைக்கும் இந்த சட்ட வன்முறைகளில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் இசுலாமியர்கள், தலித்துகள், ஏழைகள், அரசியல் காரணிகளுக்காக போராடுபவர்கள், பழங்குடியினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஏதும் அற்ற அப்பாவிகள்.(உதாரண‌மாக கூடன்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போராடிவரும் இடிந்தகரை மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் மீது ஏராளமான பொய் வழக்குகள். சிறுவர்கள், பெண்களையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. 70 வயது முதியவர் மீது குண்டர் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது)

உங்களுக்குத் தெரியுமா, அபுதாஹீர் என்ற இளைஞனை. சிறுவனாக சிறைக்குச் சென்ற இந்த இளைஞன் இன்றைக்கு 10 ஆண்டுகள் கடந்து SLE என்ற சிறை நோயால் தன் உடலில் ஒவ்வொரு உறுப்புகளாக செயல் இழந்து தன் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறான். இடைக்காலமாக ஒரு நீண்ட பரோல் கொடுக்க சிறைசட்டங்களில் இடம் இருந்தாலும் இவனை விடுதலை செய்ய அரசும், ஆட்சியாளர்களும் தயாராக இல்லை. அபுதாஹீருக்கும், மதானிக்கும் கருணை காட்டாத சட்டங்கள், இவர்கள் என்ன வகையான வழக்குகளில் சிறையில் இருக்கிறார்களோ அதே வகையான வழக்குளில் சிறையில் இருக்கும் பெண் சாமியார்களுக்கும், நடிகர்களுக்கும் கருணை காட்டுவது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாக்குவதாக இருக்கிறது.

இங்கே சட்டங்கள் சமூகங்களை இரண்டுவகையான‌ பாகுபாடுகளுடன் அணுகுகிறது. இசுலாமியர்கள், தலித்துகள், பழங்குடியினர், ஏழைகள், சமூக மாற்றத்திற்காக போராடுபவர்களை சட்டம் அணுகும் முறையே எந்த அறங்களும் அற்றதாய் இருக்கிறது.

இந்த பாகுபாடுகளுக்கு எதிரான நமது சட்ட பூர்வமான போராட்ட களத்தை விரிவுபடுத்தவேண்டிய கட்டாயத்தில் கடந்த 14.11.2013 அன்று டெல்லியில் தேசிய மனித உரிமை ஆனையம்(NCHR)ல் மனுதாக்கல் செய்துள்ளோம். இந்திய அரசையும், தமிழக அரசையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட இம் மனு விரைவில் விசாரனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.


நீண்ட காலமாக நீதி மறுக்கப்பட்டு சிறையில் வாடும் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை நோக்கிய எமது போராட்டம் உங்கள் அனைவரின் கரங்களையும் இனைத்துக்கொண்டு பயணப்படுகிறோம்.
விளிம்பு நிலை மனிதர்களான சிறைவாசிகளின் விடுதலைக்காக தாங்கள் அனைவரும் சாத்தியப்பட்ட அனைத்து வழிகளிலும் செய்திகளை கொண்டு செல்லவேண்டுகிறோம்.

இந்த வேலையில் எம்மோடு இப்போராட்டத்தில் துனை நிற்கும் அனைத்து தோழர்களையும் நன்றியுடன் நினைத்துபார்க்கிறோம்.

முகநூல் வழியாக எமது முயற்சிகளுக்கு துனைநிற்கும் தோழமைகளுக்கும் நன்றிகளும்.நேசிப்புகளும்...

இந்த முயற்சியில் எம்மோடு துனைநின்ற மேபதினேழு இயக்க தோழர்கள். மற்றும் அதன் ஒருங்கினைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, எழுத்தாளர் தோழர் வளர்மதி உள்ளிட்ட அத்தனை தோழர்களுக்கும் நன்றி.

Sunday, November 17, 2013

AMWAY ஆம்வே நிறுவன மோசடி - உஷாா்!!

 
 
"AMWAY" இந்திய மக்களுக்கு வேலைவாய்ப்பு தருவதாக உலா வரும் ஒரு அந்நிய நிறுவனம். இந்த நிறுவனத்தின் சில கொள்ளை உண்மைகளை கண்டறிய நான் எடுத்த சிறு முயற்சியின் விளைவுதான் இந்த பதிவு.
இந்த நிறுவனத்தில் உள்ள நண்பர்கள் கண்ணில் பட்டவர்களை எல்லாம் பார்த்து சொல்லும் முதல் வார்த்தை "ஒரு பிஸ்னஸ் சொல்றேன் பண்றிங்களா?". இது தான் MLM நண்பர்களின் தாரக மந்திரம். ஒருவன் என்னதான் மாதம் முப்பதாயிரம் ரூபாய் சம்பாதிச்சாலும் 'உங்களுக்கு மேல் வருமானம் வருவதற்கு நான் ஒரு பிஸ்னஸ் சொல்லுறேன் பண்ணுங்க' என்றால் மனுஷன் உடனே மண்டைய ஆட்டத்தான் செய்வான். அப்படி இருக்கும்போது வறுமையில் இருப்பவனையும், நடுத்தரகுடும்பத்தை சார்ந்தவனையும் பார்த்து இந்த வார்த்தையை சொன்னால் என்ன மாட்டேன் என்றா சொல்லுவான்?.

ஒருவனை இரண்டு வகையில் சுலபமாக மூளைச்சலவை செய்துவிடலாம் ஒன்று "இந்த தொழில் செய்தால் நீ செல்வந்தன் ஆகிவிடலாம் என்று, மற்றொன்று நீ இதை சாப்பிட்டால் உன் நோய் குணமாகிவிடும்" என்று. இவை இரண்டையும் சொல்லி சுலபமாக கொள்ளையடிக்கும் கொள்ளைக்கும்பல் இனத்தை சேர்ந்ததுதான் "AMWAY" இதுவரை தமிழ்நாட்டில் பல MLM நிறுவனங்கள் பலவிதமான வித்தைகளைக்காட்டி கொள்ளையடித்து ஓடிவிட்டனர். ஆனால் AMWAY நிறுவனம் கொஞ்சம் வித்தியாசமானது, சட்டப்பூர்வமான கொள்ளை கும்பல்.

ஒரு நாட்டில் இருந்து இன்னொரு நாட்டிற்கு வணீக ரீதியிலான பொருட்கள் விற்பனைக்கு வருகிறது என்றால் உள்ளூர் கம்பனிகளும், நிறுவனங்களும் பாதிக்காத வகையில்தான் முடிவு எடுக்கப்படும். காரணம் வேறு ஒரு நாட்டில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்தால் உள்ளூர் நிறுவனங்களுக்கு வெளிநாட்டு நிறுவனத்தால் நஷ்ட்டம் ஏற்பட்டுவிடும் என்பதால், இது நடக்காதவாறு கவனித்துக்கொள்வது அரசின் கடமை. இந்த கொள்கையைத்தான் வளர்ந்துவரும் நாடுகள் என்று சொல்லப்படும் அனைத்து நாடுகளும் பின்பற்றி வருகின்றன. ஆனால் நம் இந்தியா அரசு மட்டும் இதுப்போன்ற நிறுவனங்களுக்கு வளைந்து கொடுத்து வருகிறது. இப்படி அரசின் அனுமதியில் கொள்ளையடிக்கும், மக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நிறுவனங்களில் ஒன்று தான் இந்த நிறுவனம். இந்த AMWAY நிறுவனம் விற்பனை செய்யும் அனைத்துப்பொருட்களும் FMCG(FAST MOVING CONSUMER GOODS) மற்றும் PHARMACEUTICAL பிரிவை சேர்ந்தவை.

FMCG பொருட்கள் என்றால் நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்கள் பிரிவை சேர்ந்தது(உதாரணம்: சோப்பு,ஷாம்பு போன்றவை). இது போன்ற பொருட்களை விற்பனை செய்ய இந்தியாவில் ஏற்கனவே பல இந்திய நிறுவனங்கள் போட்டிப்போட்டுக்கொண்டு வருகின்றன, பின்பு எதற்காக இந்த பொருட்களை விற்பனை செய்ய அந்நிய நிறுவனத்துக்கு அரசு அனுமதி கொடுக்க வேண்டும்?. அடுத்தது PHARMACEUTICAL பொருட்கள், ஒருவனுக்கு உடலில் ஏதாவது பாதிப்பு என்றால் அவன் உடனே மருத்துவரை ஆலோசிப்பதுதான் சிறந்தது என்று அரசே அறிவுறுத்தி வருகிறது அப்படி இருக்கும்போது இவர்கள் எப்படி மருந்து பொருட்களை நேரடியாக விற்பனை செய்யலாம்?.

பொருளாதார வீழ்ச்சியும் ஆம்வே நிறுவனமும்:
ஒரு நாட்டில் பொருளாதார வீழ்ச்சி(RECESSION) ஏற்பட்டால் பங்குசந்தையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் பாதிப்படையும்/பங்கு விலைகள் வீழ்ச்சி அடையும். இது போன்ற நேரங்களில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைவதை சற்று தடுத்து நிறுத்துவது சில செக்ட்டார்கள் தான். அதனை டிபன்ஸ் செக்டார்(DEFENCE SECTOR) என்று சொல்வார்கள். அந்த DEFENCE SECTOR என்று சொல்லப்படும் செக்டர்களில் முக்கியமான இரண்டு செக்டார்கள் தான் இந்த FMCG மற்றும் PHARMACEUTICAL செக்டார்கள். இந்த இரண்டு பிரிவுகளையும் உள்ளடக்கி விற்பனை செய்து வரும் நிறுவனம்தான் இந்த AMWAY நிறுவனமும். ஆனால் இது இந்திய நிறுவனம் இல்லை, இது ஒரு அயல்நாட்டு நிறுவனம். நம் நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் இந்த நிறுவனத்தால் நம் நாட்டிற்கு கடுகளவும் பயன் இல்லை. இப்படி இருக்கும்போது இந்த AMWAY நிறுவனம் DIRECT SALE என சொல்லப்படும் நேரடி விற்பனையில் வேறு ஈடுப்பட்டு வருகிறது. இதனால் DEFENCE SECTOR என சொல்லப்படும் இந்திய நிறுவனங்களுக்கு பதிப்பு கண்டிப்பாக இருக்கும், இப்படிப்பட்ட சூழ்நிலையில் எதிர்க்காலத்தில் நமது நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் பாதிப்பு முன்பை விட அதிகமாகவே இருக்கும். இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் நமது பாரத பிரதமர் இந்த AMWAY நிறுவனத்துக்கு அனுமதி கொடுத்து வருகிறார் என்றால் நீங்களே யோசித்துப்பாருங்கள் மன்மோகன் சிங்கின் திறமையை.
இதனால் நமக்கு என்ன பாதிப்பு என நீங்கள் நினைத்து விட முடியாது, கண்டிப்பாக பாதிப்பு உண்டு. நாட்டில் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டால் வேலை இழப்பால் பாதிக்கப்படப்போவது நாம்தான் மன்மோஹன்சிங் இல்லை. இவர் எப்படியும் அரசு வருவாயில் காலத்தை ஓட்டிவிடுவார். இப்போதாவது இந்திய குடிமகனுக்கு இருக்கும் கடமையை உணர்ந்து செயல்படுங்கள்.

இதுவரை நான் எழுதியதெல்லாம் நாட்டிற்கு பொருளாதார ரீதியில் எந்த ஒரு பாதிப்பும் வந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் தான். ஆனால் இதையெல்லாம் பொருட்படுத்தாமல் எவன் எப்படி போனால் எனக்கென்ன எனக்கு பணம் வந்தால் போதும் என்று ஒருசிலர் இருப்பார்கள், இதோ உங்களுக்காகவே ஒரு சிறிய விளக்கம். நீங்கள் AMWAY நிறுவனத்தில் சம்பாதிப்பதை விட இழப்பதுதான் அதிகம் என்பதற்கு.

ஏமாற்றும் வழிகள்:

இந்த நிறுவனத்தில் யாரும் பிடித்துபோய் சேருவது இல்லை. நண்பனோ அல்லது உறவினரோ ஒரு பிசினஸ் பண்ணலாம் என்று சொல்லி ஒரு குறிப்பிட்ட இடத்துக்கோ அல்லது வீட்டிற்கோ அழைத்து செல்வார்கள். அங்கு அவர்களால் முடிந்தளவுக்கு மூளைச்சலவை செய்யப்படும்.
உதாரணத்துக்கு ஒரு குறுப்பிட்ட நபரை காண்பித்து இவர் மாதம் ஒருலட்சம்/ஐம்பதாயிரம் ரூபாய் ஆம்வே நிறுவனத்தால் சம்பாதிக்கிறார் என்று ஆசை வார்த்தையை கட்டவில்ப்பார்கள். இந்த வார்த்தையால்தான் பலர் நமது வறுமைக்கு ஒரு விடிவு வந்துவிடாதா என்று சேர்ந்து விடுகின்றனர்.

நமது இந்திய நிறுவனங்கள் ஒரு பொருளை தயாரிக்க செலவிடும் விற்பனை செலவில் இருந்து 30% தான் செலவு செய்கின்றன, ஆனால் அது பயனாளர் கைக்கு வரும்போது மொத்த விற்பனை விலைக்கு வருகிறது, இதனால் நஷ்டம் அடைவது பயனாளர்தான். பயனாளர் மூலம் கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர் என பலர் லாபம் பெறுகின்றனர் என்று சொல்லிதான் இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் மக்களை ஏமாற்றுகின்றனர். இவர்கள் சொல்வது உண்மைதான். மூன்று ரூபாய் பொருட்செலவில் தயாரிக்கும் பொருளை நாம் பத்துரூபாய்க்கு வாங்குவது நிஜம்தான், இந்த வார்த்தைகளை கேட்டு பலர் ஏமார்ந்து விடுகின்றனர். நமது இந்திய நிறுவனத்துடன் ஆம்வே நிறுவனத்தின் பொருட்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தால் இந்திய நிறுவனங்களின் பொருட்கள்தான் மிகவும் விலை குறைவாக உள்ளது.
►இந்திய நிறுவனத்தின் தரமான சோப் 15 - 20 ரூபாய்(கடைக்காரர், விநியோகஸ்த்தர், விளம்பரதாரர், நிறுவன லாபம் எல்லாம் உட்பட).
►ஆனால் ஆம்வே நிறுவனத்தில் ஒரு சோப்பின் விலை 37 ரூபாய்(விளம்பரதாரர், விநியோகஸ்த்தர், கடைக்காரர் இவர்கள் யாருக்கும் லாபம் கொடுக்காமலே)

மேலும் சில ஆம்வே நிறுவன பொருட்களின் விலைகள்.
TOOTHBRUSH(1) - 19 ரூபாய்
HAIR OIL(500 ML) - 95 ரூபாய்
SHAVING CREAM(70G) - 86 ரூபாய்
OLIVE OIL (1 LITRE) -400 ரூபாய்
FACE WASH -229 ரூபாய்
PROTIEN POWDER(1KG) - 2929 ரூபாய்
மேலே இருக்கும் விலை பட்டியல் உதாரணம் மட்டும்தான். கொஞ்சம் யோசித்துப்பாருங்கள், இந்த விலை நமது இந்திய நிறுவனத்தின் விலையை விட குறைவா?. இத்தனைக்கும் இவர்கள் விளம்பர நிறுவனங்கள், விநியோகஸ்தர்கள், கடைக்காரர் என பலத்தரப்பட்டவர்களின் தொழில்களுக்கு நஷ்டம் விளைவித்து மக்களுக்கு குறைந்த விலைக்கு(நேரடி விற்பனை(DIRECT SALE)) விற்பதாக சொல்லி விற்று வருகின்றனர்.

நேரடி விற்பனை(DIRECT SALE) என்றால் ஒருபொருளின் தயாரிப்பு செலவில் நிறுவனத்தில் லாபம் மட்டுமே வைத்து குறைந்த விலைக்கு விற்பதுதான் DIRECT SALE. ஆனால் ஆம்வே நிறுவனம் நேரடி விற்பனை செய்வதாக தம்பட்டம் அடித்துக்கொண்டு மற்ற இந்திய நிறுவனங்களை விட அதிக விலைக்கு விற்று வருகின்றனர். இந்திய நிறுவனங்கள் ஒரு டூத்பிரஷ் தயாரிக்க செய்யும் செலவு 4 ரூபாய்தான் ஆகிறது ஆனால் விற்பனை செய்யும்போது 15 ரூபாய்க்கு விற்பதாக ஆம்வே நிறுவனம்(ஊழியர்கள்) நமது இந்திய நிறுவனம் மீது குற்றம் சொல்கிறது. ஆனால் இவர்கள் விற்பனை செய்யும் டூத்பிரஷ்ஷின் விலையோ 19 ரூபாய் அப்படியென்றால் இவர்களுக்கு தயாரிக்க ஆகும் செலவே 15 ரூபாயா?

► ஆம்வே நிறுவனத்தில் ஒருவர் இணைய வேண்டும் என்றால் 995 ரூபாய் கட்ட வேண்டும். (எந்த ஒரு செலவும் இல்லாமல் ஆம்வே நிறுவனத்துக்கு 995 ரூபாய் லாபம்)
►பின்பு தனக்கு கீழே இரண்டு நபர்களை சேர்த்து விட வேண்டும்.
(எந்த ஒரு செலவும் இல்லாமல் நிறுவனத்துக்கு 1990 ரூபாய் லாபம், ஆக மொத்தம் உங்களால் ஆம்வே நிறுவனத்துக்கு 2985 ரூபாய் லாபம். இது நீங்கள் அந்த நிறுவனத்தில் இணையும்போது மட்டும்தான்)
► இந்த நிறுவனத்தில் நீங்கள் சம்பாதிக்க வேண்டும் என்றால் மாதம் குறைந்தது 6000 முதல் 6200(100 pv) ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும். ஒரு நிறுவனம் தனது பொருட்களை தயாரிக்க ஆகும் செலவு பொருட்களின் விற்பனை செலவில் 30% தான். சரி ஆம்வே நிறுவனத்துக்கு 50 % என்று வைத்தால் கூட 3000 ரூபாய் லாபம் வருகிறது.
இப்போது கொள்ளை கும்பலின் கோள்ளை கணக்கை பாருங்கள்:
►நீங்கள் ஆம்வே நிறுவனத்தில் இணையும்போது கட்டிய தொகை 995 ரூபாய்.
►நீங்கள் பொருட்கள் வாங்கிய விலையில் கம்பனி லாபம் 3000 ரூபாய்(6000-3000).இது 50 % தான் லாபம், கூடலாம்.
►ஆக மொத்தம் நீங்கள் இந்த நிறுவனத்தில் இணையும் போதே உங்கள் பக்க இழப்பு 3995 ரூபாய்.
இந்த நிறுவனத்தில் இணைபவர்கள் எவனோ ஒருவன் இந்த நிறுவனத்தில் ஒருலட்சம் ரூபாய் சம்பாதித்து விட்டான், நாம் ஏன் சம்பாதிக்க முடியாது என்று எண்ணித்தான் இணைகின்றனர் அவர்களுக்காக ஒரு சிறிய விளக்கம்.
►ஒருவன் ஒருலட்ச்ம் ரூபாய் இந்த நிறுவனத்தில் சம்பாதித்தான் என்றால் இவன் தனக்கு கீழே குறைந்தது 100 நபர்களையாவது இணைத்திருப்பான்.(ஒரு நபர் இணையும்போது இந்த நிறுவனத்தில் கட்ட வேண்டிய தொகை 995 ரூபாய்)
100 x 995 = 99500 ரூபாய்
இந்த ஒருவன் மூலம் நிறுவனம் அடைந்த லாபம் மட்டும் 99500 ரூபாய். ஆனால் இதில் அவனுக்கு எந்த ஒரு லாபமும் கிடையாது. இவனுக்கு கீழே இருக்கும் ஒவ்வொருவரும் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்கள் வாங்க வேண்டும் இதை 100 PV என்று சொல்வார்கள்.
3000 x 100 = 300000 ரூபாய்
அப்படிபார்த்தால் இவன் ஒருவன் மூலம் ஆம்வே நிறுவனத்துக்கு வந்த லாபம் மட்டும் 399500 ரூபாய். நிறுவனத்துக்கு ஒருமாத லாபம் 300000 ரூபாய் (மூன்று லட்சம்).
இவ்வளவு கொள்ளைகளும் போதாதென்று மேலும் ஒரு கொள்ளையாய் கணக்கை புதுப்பித்தல் (ACCOUNT RENEWABLE) சார்ஜ் வேறு 480 ரூபாய் ஆண்டொன்றுக்கு.

இன்னொரு கொள்ளை விதிமுறை பற்றி சொல்லவேண்டும் என்றால் இந்த நிறுவனத்தில் இணைந்தால் வாங்கும் பொருட்களுக்கெல்லாம் கமிஷன் கொடுக்க மாட்டார்கள். அதிலும் ஒரு கொள்ளை விதிமுறையை வகுத்துள்ளனர். ஒருவன் இந்தநிறுவனத்தில் இணைந்திருக்கிறான் என்றால் மாதம் 6000 ரூபாய்க்கு பொருட்களை கண்டிப்பாக வாங்கியே தீர வேண்டும். இல்லையென்றால் இவனுக்கு கீழே எவ்வளவு பொருட்கள் விற்பனை ஆனாலும் இவனுக்கு கமிஷன் கிடையாது. அதேபோல் இவர்கம் PV என்னும் POINT VALUE வேறு கடைப்பிடிக்கிறார்கள் தனக்கு கீழே 300 அல்லது 900 PV, அதற்கு மேல் பொருட்கள் விற்பனை செய்தால் தான் சம்பாதிக்க முடியும்.
300 PV = 16,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)
900 PV = 49,500 ரூபாய் (விற்பனை விலையில் சலுகை போக)
இந்த PV விஷயத்தில் பல தில்லுமுல்லு வேலைகள் உள்ளது. இந்த நிறுவனத்தில் இணைந்தவர்கள் வீட்டில் உட்க்கார்ந்து கணக்கு போட்டு பாருங்கள் விளங்கும்.

லட்சங்களையும், கோடிகளையும் சம்பாதிக்கலாம் என்று ஆசை வார்த்தையை காட்டி இவர்கள் கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடித்து வருகின்றனர். ஆனால் இதெல்லாம் அறியாத மக்கள் தனது பணத்தை இது போன்ற நிறுவனங்களில் தொடர்ந்து இழந்துகொண்டேதான் வருகின்றனர். மாதம் பத்தாயிரம் ரூபாய் சம்பாதித்தவன்(கவுரவமாய்) கூட இந்த நிறுவனத்தில் இனைந்து தனது உறவினர்கள் நண்பர்கள் வீட்டில் நாயாய் பேயாய் அழைந்து ஆம்வே பொருட்களை விற்பனை செய்து துளியளவு கூட லாபம் ஈட்ட முடியாமல் இருப்பதே நிஜம்.

இந்த நிறுவனத்தில் நான் பார்த்த மிகப்பெரிய கொடுமை, ஒரு வாலிபன் தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்த நிறுவனத்தில் நாயாய் பேயாய் அழைந்து முழு நேரமாக தனது பொருட்களை விற்பனை செய்து, ஆட்களை சேர்த்து விட்டு வருவதுதான். இவன் தனது பழைய நிறுவனத்தில் வாங்கிய மாத சம்பளம் 8000 ரூபாய், ஆனால் இந்த ஆம்வே நிறுவனத்தில் இவன் வாங்கிய சம்பளம் பாதி கூட இல்லை இதுவும் இவன் தான் ஏமார்ந்து வருவதை உணரும் வரைதான்.

இந்த பதிவைப் படிக்கும் ஒவ்வொரு வலைப்பதிவருக்கும் ஒரு சிறு வேண்டுகோள்:

தயவு செய்து இந்த பதிவை உங்கள் நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ இந்த பதிவில் உள்ள எழுத்துக்கள் சென்றடைய உதவுங்கள். இதில் உள்ள கருத்துக்களை எடுத்து சொல்லுங்கள்.
"நான் ஒருத்தனிடம் ஏமாந்தேன்; நீ என்னிடம் ஏமாறு" என்பதே மல்டி லெவல் மார்கெட்டிங் தாரக மந்திரம்..
 
நன்றி   YOUSUF SP


Sunday, November 03, 2013

ரைசுதீன் விபச்சார புரோக்கரா - ஜீனியா் விகடன்

வி.ஐ.பி-களை காப்பாற்ற பேரம் பேசுகிறதா காவல்துறை?திருவனந்தபுரத்தில் ஒரு சிறுமியைப் பாலியல் தொழிலில் பந்திவைத்த அதிர்ச்சியே தீராத நிலையில்... தமிழகத்திலும் ஒரு கொடுமை அம்பலம் ஆகியுள்ளது! மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே வாகைக் குளத்தைச் சேர்ந்த  ஈஸ்வரிக்கு (பெயர் மாற்றப்பட்டுள் ளது) 14 வயதில்  திருமணம் நடந்தது. மண வாழ்வுக்கான பக்குவம் அடையாத நிலை யில், அந்த உறவு முறிந்தது. அதன் பிறகு ஜவுளிக் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தார், ஈஸ்வரி.

ஒரு நாள், வேலை முடித்து வீடு திரும்பக் காத்திருந்த ஈஸ்வரியை, அவருடன் வேலை பார்த்த தோழி ஒருவரின் தாய் ஆசை வார்த்தை காட்டி அழைத்துச் சென் றார். பாலியல் தொழிலில் தள்ளினார். அதைத் தொடர்ந்து பல்வேறு ஊர்களில் உள்ள புரோக்கர்களின் கைகளில் சிக்கிய ஈஸ்வரி, கடந்த இரண்டு ஆண்டுகளாக பலரால் சீரழிக்கப்பட்டார். ஈஸ்வரியின் குழந்தைப் பாங்கான தோற்றம் மற்றும் வயதைக் காட்டி, ஒவ்வொரு கஸ்டமரிடமும் 'ஃப்ரெஷ் பீஸ்’ என்று சொல்லியே கொள்ளைப் பணம் கறந்துள்ளனர் புரோக்கர்கள். இந்த நிலையில் கடந்த சனிக்கிழமை அன்று, ஈஸ்வரியை ரைசுதீன் என்பவர் மீட்டு, ராமநாதபுரம் போலீஸாரிடம் ஒப்படைத்தார்.

போலீஸாரது விசாரணையில் தென்மாவட்டங்களில் உள்ள பல முக்கியப் பிரமுகர்கள் ஈஸ்வரியை சிதைத்தது தெரியவந்துள்ளன. இதில், மதுரை புரோக்கர்கள் மற்றும் ராமேஸ்வரம் நகராட்சி சேர்மன் ஜலீல் உள்ளிட்ட 14 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது!ஈஸ்வரியை போலீஸாரிடம் அழைத்துவந்த ரைசுதீனிடம் பேசினோம். ''கடந்த சனிக் கிழமை ஈஸ்வரியை புரோக்கர் கள் செல்வியும், ருக்மணியும் ராமநாதபுரத்துக்குக் கூட்டிவந்து, பாரதிநகரில் அழகு நிலையம் நடத்தி வரும் ஒரு பெண்ணிடம் ஒப்படைத்தனர். அமுதா என்பவ ரின் வீட்டில் இதற்கான டீலிங் நடக்க... ஈஸ்வரி மைனர் பெண் என அமுதாவுக்குத் தெரியவந்துள்ளது. உடனே, ஈஸ்வரியை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அமுதா கூட்டிப் போய்விட்டார். ஆனால், அங்கிருந்த போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் துரத்திவிட்டார்கள். இதன் பிறகு ஈஸ்வரியை அமுதா, தன்னுடன் அழைத்துப் போய்விட்டார். இதனால் கடுப்பான செல்வி குரூப் வாகைக்குளம் சென்று, ஈஸ்வரியின் தாயிடம், 'உன் மகளை ராமநாதபுரத்தில் பிடிச்சு வெச்சிருக்காங்க. அவளை வெளிநாட்டுக்கு அனுப்பிடுவாங்க. நீங்க வந்தா, விட்டுருவாங்க’ன்னு சொல்லி இருக்காங்க. கடந்த ஒரு வருஷமா ஈஸ்வரி பத்தின தகவல் எதுவும் தெரியாம இருந்த அந்தம்மாவும் இவங்களோட ராமநாதபுரம் வந்து... அமுதா வீட்டுக்குப் போய், தன் மகளின் நிலையைப் பார்த்து அதிர்ச்சி ஆயிட்டாங்க. ஈஸ்வரியை அவங்க அம்மாவோட அனுப்ப அமுதா ஏற்பாடு செய்ய... இதற்கு எதிர்ப்பு தெரிவிச்சு, செல்வி தரப்பினர் தகராறு செய்தனர். அந்த நேரத்தில் ஈஸ்வரி அருகில் இருந்த தொண்டு நிறுவனத்துக்குள் ஓடி வந்து விட்டார்.. அங்கிருந்த நான், ஈஸ்வரியை விசாரிச்சப்பதான்மொத்தக் கொடுமையும் தெரிஞ்சது.

இது பத்தி தென்மண்டல ஐ.ஜி. பொறுப்பு வகிக்கும் கண்ணப்பன் சாரிடம் சொன்னேன். ஈஸ்வரியை ராமநாதபுரம் எஸ்.பி. ஆபீஸில் ஒப்படைக்கச் சொன்னார். போகும் வழியில், புரோக்கர் கும்பல் வழி மறிச்சுத் தகராறு செய்ய... ஈஸ்வரியை என் வீட்டுக்குக் கூட்டிட்டு வந்துட்டேன். அதன் பிறகு அந்த புரோக்கர்கள் மதுரையில் உள்ள ரவுடிகள் மூலமாக என்னை மிரட்டினாங்க. அதுக்கெல்லாம் பயப் படாம மறுநாள், எஸ்.பி. ஆபீஸ்ல ஈஸ்வரியை ஒப்படைச்சேன்!'' என்று சொன்னார்.இந்த வழக்குத் தொடர்பாக நம்மிடம் பேசிய காவலர் ஒருவர், ''ராமநாதபுரத்திலும், ராமேஸ்வரத்திலும் விபசாரம் தடை இன்றி நடக்கிறது. எங்காளுங்க கண்டுக்கறதில்லை. இந்தப் பொண்ணை ஏற்கெனவே பல முறை ராமநாதபுரத்துக்குக் கூட்டிட்டு வந்திருக்காங்க. பஸ் ஸ்டாண்ட் பக்கத்தில் உள்ள ஒரு லாட்ஜ் மற்றும் இறந்துபோன அ.தி.மு.க. பிரமுகர் ஒருவருக்கு சொந்தமான லாட்ஜ், இந்த ரெண்டு இடங்களிலும் வெச்சு ஈஸ்வரியைப் பல பேர் பாழாக்கியிருக்காங்க. அந்த லாட்ஜின் உரிமையாளர்கள், உள்ளூரில் நிதி நிறுவனம் நடத்தி வரும் ஒருவர், கட்சிக்காரர்கள் சிலர், காவல் துறையைச் சேர்ந்த இருவர் மற்றும் அரசு அலுவலகங் களில் பணியாற்றும் சிலர் என ஏராளமான பேர் இதில் ஈடுபட்டுள்ளனர். இது தவிர, சென்னை அடையாறு பகுதியை சேர்ந்த ரியல் எஸ்டேட் ஓனர் ஒருவரும் சென்னைக்கு அழைத்து, தன் சொகுசு பங்களாவில் வைத்து ஈஸ்வரியை சீரழித்துள்ளார். இதே போல்தான் ராமேஸ்வரம் சேர்மன் ஜலீலும் கொடைக்கானலுக்கு அழைத்துச் சென்று அனுபவித்து இருக்கிறார். விசாரணையின்போது, இவர்களின் பெயர்களை அந்தப் பெண்ணே சொல்லுச்சு. ஆனால் சில அதிகாரிகள், ஜலீல் உள்ளிட்ட சிலரை மட்டுமே இந்த வழக்கில் சேர்த்துவிட்டு, ஈஸ்வரியால் குற்றஞ்சாட்டப்படும் பல வி.ஐ.பி-களை வழக்கில் சேர்க்காமல் இருக்க பேரம் பேசி வருகின்றனர்!'' என்று சொல்லி, அதிரவைத்தார்.

ராமநாதபுரம் எஸ்.பி-யான அனில்குமார் கிரியிடம் இதுபற்றிக் கேட்டபோது, ''ஈஸ்வரி கேஸ் சம்பந்தமா எஃப்.ஐ.ஆர். போட்டுருக்கோம். குற்றவாளிகளைப் பிடிக்க மூன்று ஸ்பெஷல் டீம் போட்டிருக்கோம்...'' என்று மட்டும் சொன்னார்.

இந்த வழக்கில் காவல் துறை மந்தமாகச் செயல்படுவதாக ரைசுதீன் புகார் செய்யவே, அவரையும் இந்த வழக்கில் சம்பந்தம் இருப்பதாகச் சொல்லிக் கைது செய்து இருக்கிறார்கள்.என்னதான் நடக்கிறது என்பதை மேலிடம் கவனமாக விசாரிக்க வேண்டும்.

- இரா.மோகன், படங்கள்: உ.பாண்டி


ரைசுதீனை கைது செய்துவிட்டு அவதுாறு பரப்பிய காவல்துறை

Aadil1 Years ago
மிருகங்களை தூக்கில் போட வேண்டும் உடனடியாக விசாரணை ஏதும் இல்லாமல். இந்த சிறுமியை வைத்து அடையாளாம் காட்டச் சொல்லி அனைவரையும் கூண்டோடு தூக்கிலிடவேண்டும்.
Reply Like | Report AbuseHari Sankar1 Years ago
புரோக்கர் பெண்கள் என்று அடையாளம் காட்டப்படுபவர்கள் கைதாகி விட்டனரா? அவர்களைப் பிடித்து நாடு கடத்துங்கள்!!!! இது போன்ற ஒவ்வொரு கேஸிலும்... ஒன்றிரண்டு அல்லக்கைகள் தண்டிக்கப் பட்டால், நாளடைவில் நாடு முன்னேறும்..... இல்லாவிட்டால்.... ஆட்கள் மாறுவார்கள்... காட்சி மாறாது......
Reply Like 2 | Report Abuse


Senthil1 Years ago
இன்டர் நேஷனல் சட்டமே வந்தாலும் காசு வாங்கிகொண்டு சிறுமிகளை காவு கொடுப்பார்கள் நம் அரசியல்வாதிகள்
Reply Like | Report Abuse


jaya1 Years ago
""ஈஸ்வரியை அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு அமுதா கூட்டிப் போய்விட்டார். ஆனால், அங்கிருந்த போலீஸார் நடவடிக்கை எடுக்காமல் துரத்திவிட்டார்கள்"" Immediately enquire and suspend them...Innocnets going police station finally..but that time also,they are not getting help..Stupid officers..

Reply Like 2 | Report Abuse


usha1 Years ago
பால் காந்தி சார் அந்த சட்டம் வந்தாலும்,இவர்கள் என்ன மாட்டவா போகிறார்கள்..அந்த 14வயது குழந்தை பட்டிருக்கும் உடல்ரீதியான துன்பத்தை நினைத்தால் ,மனம் ரணமாக உள்ளது.
Reply Like 1 | Report Abuse


usha1 Years ago

ரைசுதீனை கைது செய்துள்ளதில் இருந்தே தெரியவில்லையா காவல்துறை எப்படி செயல்படுகிறது என்று,வெறுப்பாக உள்ளது.

Reply Like 2 | Report Abuse


Rajendran1 Years ago

"இந்த வழக்கில் காவல் துறை மந்தமாகச் செயல்படுவதாக ரைசுதீன் புகார் செய்யவே, அவரையும் இந்த வழக்கில் சம்பந்தம் இருப்பதாகச் சொல்லிக் கைது செய்து இருக்கிறார்கள்."
இனிமே யாராவது எதுக்காவது புகார் கொடுத்தா அந்த வழக்கில் புகார் கொடுத்தவரையும் கைது செய்யுங்கப்பா. விளங்கிரும்.
Reply Like 1 | Report Abuse


Tamil1 Years ago
இவ்வாறே தினமும் பல சிறுமிகள் சீரழிக்கப்பட்டு வருகிறார்கள்.. இதை தடுக்க கடுமையான நடவடிக்கையை எடுக்க வேண்டும் அரசு...
Reply Like | Report Abuse


Murugesan1 Years ago
What is action from Girls parent side. They are first criminal. why they didn't search girl past 2 years???
Reply Like 1 | Report Abuse


Padmanabhan1 Years ago
ப்ரொக்கர்கள் செல்வி, ருக்மணி மட்றும் சேர்மன் ஜலீல் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகள் காவல்துரை கருப்பு ஆடுகள் அனைவரையும் மொத்தமாக கைது செய்து கடுங்காவல் சிறையில் இருபது ஆண்டுகள் வைத்து முறைப்படி விசாரணை செய்து தண்டணை அளிக்கவேண்டும்.
Reply Like 1 | Report Abuse


சித்திர குப்தன்1 Years ago
பாவம் ரைசுதீன், மக்கள் அவர் பக்கம் நிற்க வேண்டும். அவரைக் கைது செய்த காவல் துறை மீது துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Reply Like 4 | Report Abuse


raju1 Years ago
ரைசுதின் என்ன ஷெயிதார்?
Reply Like | Report Abuse


Pal Gandhi1 Years ago
சிறுமிகளை கடத்தி பாலியில் தொழில் செய்தால் தூக்கு தண்டனை என்று சொல்லுகிறார்கள். இன்னும் இந்த இன்டர் நேஷனல் சட்டம் இந்தியா வரவில்லையா?


நன்றி : ஜீனியர் விகடன் : http://www.vikatan.com/article.php?mid=2&sid=247&aid=8947

முகவைத்தமிழன், ரைசுதீன், முகம்மது ரைசுதீன், ரைஸீதீன், ரயீசுதீன், விபச்சாரம், முகவை, இராமநாதபுரம்,

இஸ்லாமியா்களின் கூட்டமைப்பில் இருந்து SDPI விலகுமா?

 


SDPI கட்சியின் இஸ்லாத்திற்கு முறன்பட்ட நடவடிக்கைகளை (கோவில் கும்பாபிசேகம், முருகன் கோவிில் திருவிழா, தீக்குழி இறங்குதல், பங்குணி உத்திர தண்ணீர்் பந்தல், கோவில் திருவிழாக்களுக்கு பேப்பரில் விளம்பரம், பேணா் வைத்தல்) போன்றவற்றை இஸ்லாமிய சகோதரா்கள் யாராவது விமா்சித்தால் உடனே எஸ்.டி.பி.ஐ தொண்டா்களும் தலைவா்களும் ”ஸ்டீரியோ டைப்பாக” சொல்லும் ஒரே பதில் SDPI என்பது ஒரு தேசிய கட்சியாகும் இது முஸ்லிம்களின் கட்சி அல்ல SDPI என்பது பொதுவான கட்சியாகும், இதற்குமு் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என்பதாகும். அப்படியானால் இவா்கள் ஏன் தங்களை இஸ்லாமிய கட்சி எஸ்.டி.பி.ஐ ஒரு முஸ்லிம் அமைப்பு என்று கூறி ”தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில்” உறுப்பினராக இணைய வேண்டும்? மேற்படி கூட்டமைப்பில் இருந்து வெளியேருவா்களா?
 
தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பில் உள்ள இயக்கங்கள் மற்றும் கட்சிகள்:
 
தமிழ் மாநில ஜமாத்துல் உலமா சபை , பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா , தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் , ஜமாத்தே இஸ்லாமி ஹிந்த் , இந்திய தவ்ஹீத் ஜமாஅத் , சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா (SDPI) , மனித நேய மக்கள் கட்சி , தேசிய லீக் , வெல்பேர் பார்ட்டி ஆப் இந்தியா , இந்திய தேசிய லீக் , அகில இந்திய முஸ்லிம் சட்ட வாரியம் , மறுமலர்ச்சி முஸ்லிம் லீக் , தமிழ் மாநில தேசிய லீக் , தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் , சுன்னத் ஜமாஅத் ஐக்கிய பேரவை , இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம் , ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் (அர்ஷத் மதனி) , ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த் (மஹ்மூத் மதனி) , ஆல் இந்தியா மில்லி கவுன்சில் , தாருல் இஸ்லாம் பவுண்டேஷன் டிரஸ்ட் , இஸ்லாமிய இலக்கிய கழகம் , ஐக்கிய சமாதானப் பேரவை , ஷரிஅத் பாதுகாப்புப் பேரவை


https://www.facebook.com/photo.php?fbid=10152302253868154&set=a.10150831919698154.507584.592838153&type=1&theater

Wednesday, October 23, 2013

ரைசுதீனுக்கு பொண்ணாடை போா்த்தும் ஊராட்சி தலைவா்

 
 
22.10.2013 அன்று பெரியபட்டினத்தில் நடந்த மகான் செய்யது அலி ஒலியுல்லாஹ் 112 ம் வருட சந்தனக்கூட்டு வைபவ நிகழ்ச்சியில் முகவைத்தமிழன் (எ) முகம்மது ரைசுதீன் Mohamed Raisudeen கௌரவிக்கும் விதமாக கூட்டு கமிட்டியின் சாா்பாக பெரியபட்டினம் ஊராட்சி மன்ற தலைவா் டாக்டா் எம்.எஸ். கபீா் அம்பலம் அவா்கள் பொண்ணாடை போா்த்தினாா்கள் உடன் கூட்டுக் கமிட்டியின் செயலாளா் ஜனாப் மஜீத் மரைக்காயா் அவா்கள்.
https://www.facebook.com/photo.php?fbid=10152270411813154&set=a.10150831919698154.507584.592838153&type=1&theater


Thursday, October 17, 2013

பாம்பன் விவேகானந்தர் இல்லம்
உலக அரங்கில் இந்து மதத்தின் புகழைத் தன் சொற்பொழிவால் நிலைநிறுத்தியவர் சுவாமி விவேகானந்தர்,அமெரிக்கப் பயணத்தை முடித்து விட்டு இலங்கை மார்க்கமாக 26.01.1897 அன்று பாம்பன் குந்துகால் பகுதியில் வந்திறங்கினார் . பாம்பனில் மிகச் சிறப்பான வரவேற்பை அளித்தார் அன்றைய ராமநாதபுரம் சமஸ்தான மன்னர் பாஸ்கர சேதுபதி. விவேகானந்தரின் பாதங்கள் தன் தலையில் பட்ட பிறகே தரையைத் தொடவேண்டும் என முழங்காலிட்டு அமர்ந்த சேதுபதி மன்னரின் செயலை மறுத்து அவரை ஆரத் தழுவினார் விவேகானந்தர். 

பாம்பன் வரவேற்பு விழாவில் பேசிய விவேகானந்தர், “உலக சர்வசமய மாநாட்டில் கலந்துகொள்ள வேண்டும் என்று பாஸ்கர சேதுபதி தனக்கு வந்த அழைப்பிதழை என்னிடம் கொடுத்து, என்னை கலந்துகொள்ள வலியுறுத்தினார். இடையறாது என்னைத் தூண்டி முழு உதவியும் செய்து வழியனுப்பினார். இதுவரை வெளியுலகு அறியாது சாதாரணத் துறவியாக இருந்த என்னை உலகறிய உலக ஞானியாக மாற்றியவரும் பாஸ்கர சேதுபதியே. இந்த நல்ல பணிக்கு இந்திய நாடே கடமைப்பட்டுள்ளது. இந்து மதத்திற்கு என்னால் ஏதேனும் நன்மை உண்டாகுமானால் அதன் சிறப்பனைத்திற்கும் பாத்திரமானவர் சேதுபதி” என்று தமது அருகில் இருந்த பாஸ்கர சேதுபதி மன்னரை நெகிழ்ச்சியுடன் சுட்டிக்காட்டி மகிந்தார் விவேகானந்தர்.

இந்தச் சம்பவம் நடந்து நூறாண்டுகள் கழித்து விவேகானந்தர் இந்தியா வந்திறங்கிய பாம்பன் குந்துகால் பகுதியில் நினைவிடம் கட்ட வேண்டும் என பணிகளை ஆரம்பித்தபோது விவேகானந்தர் நினைவிடத்திற்குரிய இடம், மண்டபம் மரைக்காயர்களின் உரிமையில் இருந்தது.
ராமகிருஷ்ண தபோவனத்தில் இருந்து நிலத்தை விலைக்குக் கேட்டு மண்டபம் மரைக்காயர் குடும்பத்தினரை அணுகினார்கள். ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு பல தலைமுறைகளாக நெருக்கமாக இருந்துவந்த மண்டபம் மரைக்காயர் குடும்பத்தினர் பாஸ்கர சேதுபதியின் வழியைப் பின்பற்றி இலவசமாகவே ஐந்து ஏக்கர் நிலத்தை அளித்து நினைவிடம் கட்ட அனுமதித்தனர். பின்னர் 2009 ஆம் ஆண்டு விவேகானந்தர் இல்லம் திறக்கப்பட்டது. இந்த இடத்தில் வருடந்தோறும் ஜனவரி 26 அன்று விவேகானந்தர் இந்தியா வந்திறங்கிய நாளை நினைவுகூறும் விதமாக சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும்.

ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் யாத்ரீகர்கள், விவேகானந்தர் நினைவிடத்துக்கு ஆர்வத்துடன் வருகின்றனர். இங்கிருக்கும் கண்காட்சிக் கூடத்தில் விவேகானந்தர் பாம்பன் கடற்கரையில் வந்திறங்கிய போது, அவரை சேதுபதி மன்னர் வரவேற்ற காட்சி, அங்கிருந்து ராமேஸ்வரத்திற்கு ரதத்தில் விவேகானந்தர் பயணித்த காட்சி போன்ற பல நிகழ்ச்சிகள் ஓவியங்களா தத்ரூபமாக தீட்டப்பட்டுள்ளன. இங்கு விவேகானந்தர் வாசக சாலையும் அமைந்துள்ளது. விவேகானந்தர் இல்லத்தின் மாடியில் இருக்கும் தொலைநோக்கி மூலம் அருகில் உள்ள தீவுகளையும் பார்க்கமுடியும்.

விவேகானந்தர் நினைவிடம் செல்ல ராமேஸ்வரத்தில் இருந்து பேருந்து வசதி உண்டு. பாம்பனில் இருந்து தென்னந்தோப்புகள் ஊடாக கடல் காற்றைச் சுவாசித்தபடியே 4 கிலோ மீட்டர் நடந்தும் செல்லலாம். 

Thursday, October 10, 2013

ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ கார் விபத்தில் தப்பினார்கள் (அல்ஹம்துலில்லாஹ்)


முகவை தொகுதி எம்.எல்.ஏ.வும், மனிதநேய மக்கள் கட்சியின் மூத்த தலைவருமான ஜனாப் ஜவாஹிருல்லா அவர்கள் நேற்று இராமநாதபுரத்தில் இருந்து காரில் சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது இரவு 9 மணியளவில் மதுராந்தகம் தெற்கு பைபாஸ் ரோட்டில் எதிர்பாராதவிதமாக கார் கவிழ்ந்து விபத்துக்கள்ளாகியள்ளது. இறைவனின் மாபெரும் கருனையினால் ஜனாப் ஜவாஹிருல்லா அவர்களும், கார் டிரைவரும் காயமின்றி தப்பியுள்ளார்கள். தகவல் கிடைத்தவுடன் உடனடியாக இன அழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர்கள் இயக்கத்தின் மாநில ஒருங்கினைப்பாளர் என்ற முறையில் நான் (முகவைத்தமிழ்ன (எ) ரைசுதீன்) ஜனாப் ஜவாஹிருல்லாஹ் எம்.எல்.ஏ அவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்தேன். தான் நலமாக உள்ளதாகவும், இறைவனின் மாபெரும் கருனையினால் காயங்களின்றி தப்பித்ததாகவம் பிறார்த்தனை செய்யும் படியும் சொன்னார்கள். இன்சா அல்லாஹ் ஜனாப் ஜவாஹிருல்லாஹ் அவர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை வழங்கி இந்த சமுதாயத்திற்கு அவரத சேவைகள் தொடர பிறார்த்திப்போம்.

https://www.facebook.com/photo.php?fbid=10152239797273154&set=a.10150831919698154.507584.592838153&type=1&theater

Saturday, September 28, 2013

முகவை வழக்கறிஞர் மைதீன் (எ) ராஜா மரணம்

வழக்கறிஞர் மைதீன் (எ) ராஜா


அன்பின் தோழர்களுக்கு,
இன்று மாலை எனது தோழனும் இராமநாதபுரத்தில் பிரபல வழக்கறிஞருமான மைதீன் (எ) ராஜா (வழக்கறிஞர் சம்சுதீன் மைத்துனர்) அவர்கள் திருநெல்வேலி மாவட்டம் ஆற்றங்கலர சென்றிருந்தபோது ஹார்ட் அட்டாக்கால் உயிரிழந்துள்ளார்கள். எனது தோழனுக்காகவும் அவனது குடும்பத்தினருக்காகவும் பிறார்த்திக்கவும். யாரிடமும் எதையும் எதிர்பாராத வாழ்க்கை வாழந்தவன்....இறுதியாக தனது மைத்துனருடன் ஏற்ப்பட்ட மனக்கசப்பில் அலுவலகத்தை விட்டு வெளியேறி தனியாக வழக்குகளை பார்த்தபோது கூட அதைப்பற்றி யாரிடமும் வெளியே கூறாதவன்...மனதிற்குள் சோகங்களை புதைத்தவன்...ஏழைகளின் நன்பன்...இல்லாதவர்களுக்காக இலவசமாகவே வழக்காடுபவன்....ண்மையின் பக்கம் துனை நின்றவன்...சத்தியம் சாகாது காத்தவன்......தனது பணிகளை பாதியில் விட்டு சென்றுவிட்டான்...எங்களை மீழாத்துயரில் ஆழ்த்திவிட்டான்....இலங்கைத்தமிழர் நலனுக்காகவும்....அனு உலைக்கெதிரான போராட்டங்களிலும் வழக்கறிஞர்களுடன் முன்னணியில் நின்று போராடியவன்......இறுதியாக 19.03.2013 அன்று இலங்கை அரசை போர்க்குற்றாளியாக அறிவிக்க வலியுருத்தி இராமநாதபுரம் வழக்கறிஞர் சங்கத்தின் சார்பாக மாபெரும் தொடர் உண்ணாவிரத நடந்தபோது எங்களையெல்லாம் அழைத்து அதில் கலந்து கொள்ள செய்தவன். அப்போது எடுத்த புகைப்படத்தில் நான், வழக்கறிஞர்கள் மைதீன், காலித், மைதீன் ஜீனியர் டேவிட் , பிரபாகர் ஆகியோர் உள்ளோம்.இறுதியாக 24 மணி நேரத்திற்கு முன்னர்தான் நாங்கள் ஒன்றாக அமர்ந்து எஸ்.ஏ லாட்ஜில் கேரம் விளையாடினோம் நாங்கள் இருவரும் ஒரு டீமாக இருந்து 3 முறை தொடர் தோல்விகளை சந்தித்தபோது கூட மைதீன் என்னிடம்...மாப்புள...வெளயாடுடா....வெற்றியும் தோல்வியும் வீரனுக்கழகு....தோல்விதான் வெற்றிக்கு முதல்படி....அடிடா மூதேவி ....என்று உரிமையுடன் சிரித்து கொண்டே சொன்னான்....24 மணி நேரத்திற்குள் எனது தோழனின் இதயம் தனது துடிப்பை நிறுத்தும் என எதிர் பார்த்திரவில்லை....சென்று வா தோழா.....வெற்றியும் தோல்வியும் வீரனுக்கழகுதான்.....நீ வீரன்தான்.....சாதனை பல புறிந்தாய்...வெற்றியாளனாகவே மரணித்துள்ளாய்...உனக்காக உறுதியாய் பிறார்த்திக்கும் உள்ளங்களையே நீ இந்த உலகில் விட்டுச்செல்கிறாய்....சென்று வா தோழா...சென்று வா....!!
https://www.facebook.com/raisudeen/posts/10152212813873154

Wednesday, September 25, 2013

அமைச்சருடன் முகவைத்தமிழன் சந்திப்பு

அமைச்சர் அவர்களுடன் ரைசுதீன்

25.09.2013 அன்று இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் மாநில ஒருங்கினைப்பாளர் முகவைத்தமிழன் (எ) முகம்மது ரைசுதீன் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் மான்புமிகு டாக்டர் எஸ். சுந்தர்ராஜ் அவர்களை சந்தித்து பெரியபட்டினம் கிராமத்தில் சமூக விரோத கும்பலால் ஒற்றுமையை கெடுக்கும் விதமாக தீவைத்து எரிக்கப்பட்ட சந்தன கூட்டை மீண்டும் எடுக்கவும் , அதனை தீவைத்து எரித்த சமூக விரோத சக்திகளை கைது செய்ய சொல்லி காவல்துறைக்கு அறிவுருத்தவும் வலீயுருத்தி கோரி்ககை மனு அளிக்கப்பட்டது.

மனுவுக்கு பதில் அளித்த அமைச்சர் அவர்கள் உடனடியாக வக்பு வாரியத் தலைவர் ஜனாப் தமிழ் மகன் உசேன் அவர்களை அழைத்து உடனடி ந்டவடிக்கைக்கு பரிந்துறைத்து குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் சந்தனக்கூட்டை செய்து அதை எடுக்கவம் பரிந்துரைத்தார். அதன் பின்னர் காவல்துறை அதிகாரிகளையும் மாவட்ட நிர்வாகத்தையம் அழைத்து 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த சந்தன கூட்டை எரித்த கயவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கவும் மீண்டும் அவர்கள் சந்தன கூட்டை எடுக்கும்போது இடையூறு செய்யாதிருக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.

அதன் பின்னர் வக்பு வாரியத்தின் இராமநாதபுரம் மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களையும் சந்தித்து இது கோரிக்கைகளை வலியுருத்தி மனு அளிக்கப்பட்டது. அவரும் உடனடி நடவடிக்கைக்கு பறிந்துரைத்து நாளையே சந்தனக்கூட்டு வேலைகளை ஆரம்பிக்க உத்தரவிட்டுள்ளார். எல்லா புகழும் இறைவனுக்கே.
https://www.facebook.com/photo.php?fbid=10152206297313154&set=a.10150831919698154.507584.592838153&type=1&theater