Tuesday, June 23, 2015

விலகல் அறிவிப்பு

தோழர்கள் அனைவரின் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டமாக,

தமிழக சிறைகளில் வாடும் ஆயுள்சிறைவாசிகள்,அரசியல் சிறைவாசிகள், அனைவருக்குமான நீதியில் தனித்து புறக்கணிக்கப்பட்ட இசுலாமிய நீண்ட நாள் சிறைவாசிகளின் விடுதலை கோரிக்கையை குறிப்பாக முன்வைத்து கடந்த 2012ல் தமிழகத்தில் இருக்கும் அனைத்து ஜனநாயக சக்திகளை ஒன்று படுத்தி ஒரே மேடையில் ஒற்றை முழக்கமாக ”10ஆண்டுகளுக்கு மேல் தமிழக சிறைகளில் வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகள், ஆயுள்சிறைவாசிகளை விடுதலை செய்” என்ற கோரிக்கையுடன் பல களப்பணிகளையும், சட்ட பணிகளையும் செய்து வரும் தோழர் வழக்கறிஞர் உமர்கயான் அவர்கள் தலைமையிலான இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் பால் ஈர்க்கப்பட்டு கடந்த சில வருடங்களாக நானும் அதில் என்னை இணைத்து கொண்டு அதன் செயல்பாடுகளுக்கு ஆதரவாக ஏதோ என்னால் ஆன ஆதரவினை செய்து வந்தேன்.

10ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்க…

இசுலாமிய சிறைவாசிகள் 10 ஆண்டுகள் கழித்து விடுதலைக்கு தகுதியிருந்தும் கடந்த ஆட்சியின் பாரபட்ச போக்கால் விடுதலை செய்யப்படவில்லை கடந்த ஆட்சியின் தவறுகளை கழைந்து இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க..

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலையில் மட்டும் பாரபட்சம் ஏன் தமிழக சிறைகளில் உள்ள இசுலாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க

மற்ற மாநிலங்களில் ஆயுள் சிறைவாசிகள் விடுதலையில் முடிவில்லா சிறைவாசம் இல்லாமல் 7.10, ஆண்டுகளில் விடுதலை செய்வதைப்போல் தமிழகத்திலும் வாழும் உரிமையை ஆயுள் சிறைவாசிகளுக்கு அளிக்கவேண்டும்.

அனைத்து சிறைவாசிகளுக்கும் இருப்பது போல் வழிகாவல் இல்லாமல் இசுலாமிய சிறைவாசிகளுக்கு பரோல் விடுப்பு அளிக்கவேண்டும் என தமிழக அரசிடம் கோரிக்கைவைக்கவேண்டும்.

இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் முன் விடுதலைக்கு தடையாக முந்தைய ஆட்சியாளர்கள் பாரபட்சத்தோடு பிரப்பித்த அனைத்து அரசானைகளையும் ரத்து செய்ய தமிழக அரசு ரத்து செய்யவேண்டும்.
சிறையில் இனம்புரிய சிறைநோயில் தினம் செத்துக்கொண்டிருக்கும் அபுதாஹீரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும்.

சாதிய வண் கொடுமைக்கு எதிராக போராடி சிறைபட்டிருக்கும் தோழர் துரைபாண்டி,ஜோதி உள்ளிட்ட தமிழகம் முழுவதும் சிறையில் இருக்கும் ஒடுக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட,தமிழ்தேசிய விடுதலைப் போராளிகளை விடுதலை செய்யவேண்டும்.

தமிழக சிறைகளில் வாடும் 10 ஆண்டுகள் சிறைவாசம் கழித்த அனைத்து ஆயுள் சிறைவாசிகளையும் விடுதலை செய்க

சிறப்பு முகாம்கள் என்ற பெயரில் தமிழீழ அகதிகளை சிறையைவிட கொடுமையான முகாம்களை அடைத்து வைத்துள்ளவர்களை விடுதலை செய்து அவர்கள் குடும்பத்துடன் சுதந்திரமாக சேர்ந்து வாழ செய்யவேண்டும் சிறப்பு முகாம்களை உடனடியாக இழுத்து மூடவேண்டும் போன்ற இந்த அமைப்பின் நியாயமான கோரிக்கைகளுக்காக எந்தவித பிரதிபலனையும் எதிர்பாராது அயராது உழைக்கும் தோழர்களாக இவ்வமைப்பில் தன்னை ஈடுபடுத்தி கொண்டு உழைத்த தோழர் எமனை சர்புதீன், தோழர் தமிழ்பிரியன் செந்தில், தோழர் சதீஸ் குமார், தோழர் எட்கர் சாலமோன், தோழர் உமர்கயான இவர்களோடு எனது பயனமும் தொடர்ந்தது.

இவர்களின் இவ்வுன்னதமான கோரிக்கை போராட்டங்கள் வெற்றி பெற வேண்டுமென்றால் அனைத்து சமுதாய அமைப்புகளின் ஆதரவும் இவர்களுக்கு தேவைப்படக்கூடிய ஒரு நிலையில் இவ்வியக்கம் உள்ளது. சிறைக்கொட்டடிகளில் தங்கள் வாழ்வை தொலைத்து வாடி வரும் விளிம்பு நிலை மனிதர்களான சிறைவாசிகளின் விடுதலைக்கான இப்போரோட்டம் வெற்றி பெற வேண்டும் என்பதில் எவ்வித கருத்து முரன்பாடுகளும் இல்லை. இவ்விளிம்பு நிலை மனிதர்களுக்கான போராட்டத்தில் தனது வாழ்வாதாரங்கள் அனைத்தையும் செலவழித்து போராடி கொண்டிருக்கும் தோழர் உமர்கயானின் தியாகங்களை வார்த்தைகளால் வர்னிக்க இயலாது. சில நல்லுள்ளங்களின் சின்ன சின்ன அன்பளிப்புக்களோடு தனது உழைப்பு முழுவதையும் இதிலேயே செலவழிக்கும் தோழர் உமர்கயான தனது வாகணத்தை முதற்கொண்டு விற்று இதற்காக செலவழித்து கொண்டுள்ளார். அவரின் இப்பயனத்தில் இசுலாமியர்களை வட இசுலாமியர் அல்லாத தமிழ் சொந்தங்கள் இப்போராட்டத்தின் அர்த்தத்தினை உணர்ந்து தங்களையும் இணைத்து கொண்டு போராடி வருகின்றனர்.

எனக்கும் சில மதவாத சித்தாந்த அமைப்புகளுக்குமிடையேயான கருத்து மோதல் இவர்கள் முன்னெடுத்து செல்லும் போராட்டங்களுக்கு இடையூராக உள்ளது. என்னால் எப்போதும் எனது சுயத்தை மாற்றிக்கொள்ள இயலாது. ஆகையினால் இன்றிலிருந்து இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் மாநில் ஒருங்கினைப்பாளர், அடிப்படை உறுப்பினர் எட்பட அனைத்து பதவிகள் பொறுப்புக்களில் இருந்து என்னை விடுவித்து கொள்கிறேன் என்பதை இவ்வமைப்பின் முதன்மை ஒருங்கினைப்பாளர் உட்பட அனைத்து நிர்வாகிகளுக்கும் இதன் மூலம் அறிவித்து கொள்கிறேன். இனிமுதல் எனக்கும் இன் அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்துக்கும் எவ்வித தொடர்புகளும் இருக்காது எனவும், அதன் அனைத்து செயல்பாடுகளில் இருந்தும் நான் விலகி நிற்பேன் எனவும் தெறிவித்து கொள்கிறேன். எனது இந்த விலகலின் மூலம் இநி வரும் காலங்களில் நீங்கள் எவ்வித நிர்ப்பந்தத்திற்கும் ஆளாக்க பட மாட்டீர்கள் என நம்புகிறேன். எனது எந்த பதிவுகளிலும் இவ்வமைப்பின் உறுப்பினர்கள், நிர்வாகிகள் யாரும் டேக் செய்யப்பட மாட்டீர்கள் எனவும் அதுபோல் இனிவரும் காலங்களில் இவ்வமைப்பினர் யாரும் தங்களது இயக்கம் சம்பந்தப்பட்ட பதிவுகளில் என்னை டேக் செய்ய வேண்டாம் எனவும் பணிவுடன் கேட்டு கொள்கிறேன்.

ஆகையால் இன் அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தின் "சகோதர இயக்கங்களுடனான முரண்பாடுகளை ஏற்படுத்தும் விதமாக நமது தனிப்பட்ட செயல்பாடுகள் இருக்ககூடாது" என்ற இவ்வமைப்பின் புதிய கொள்கையின்படி எனது தனிப்பட்ட செயல்பாடுகள் இதன் மூலம் இனி இவ்வமைப்பிற்கு இடையூராகவோ அல்லது முரன்பாடுகளை ஏற்படுத்தும் விதமாகவோ இருக்காது என நம்புகிறேன்.இன் அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கத்தினர் முன்னெடுத்து செல்லும் உன்னதமான அனைத்து போராட்டங்களும் வெற்றி பெற வாழ்த்தி விடைபெறுகிறேன்.

நன்றி
என்றும் அன்புடன்
முகவைத்தமிழன் (எ) முகம்மது ரைசுதீன்
9047507665

No comments: