Wednesday, August 12, 2015

12.08.2015 வீரமுனைப் படுகொலைகள் (Veeramunai massacre) நினைவு நாள்




வீரமுனைப் படுகொலைகள் (Veeramunai massacre) என்பது 1990 ஆம் ஆண்டு ஆகத்து 12ம் நாளில் கிழக்கிலங்கை அம்பாறை மாவட்டத்தில் வீரமுனை என்னும் கிராமத்தில் 400க்கும் மேற்பட்ட தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட நிகழ்வைக் குறிக்கும்.

சம்மாந்துறை பிரதேசத்தில் நிகழ்ந்த இனவன்செயல் காரணமாக வீரமுனையையும் அதன் சுற்றுவட்டக் கிராமங்களான வீரச்சோலை, மல்லிகைத்தீவு, மல்வத்தை, வளத்தாப்பிட்டி, சொறிக்கல்முனை, அம்பாறை பகுதிகளைச்சேர்ந்த பல நூற்றுக்கணக்கான மக்கள் தங்கள் குழந்தை குட்டிகளுடன் வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் கோயில் வளவினுள்ளும் வீரமுனை இராமகிருட்டிண மிசன் பாடசாலை வளவினுள்ளும் 1990 சூன் மாதம் முதல் சூலை மாதம் வரை தஞ்சம் புகுந்திருந்தனர்.

இக்காலகட்டத்தில், ஆகத்து 12 ம் நாளன்று இவற்றினுள் புகுந்த ஊர்காவல்படைக் கும்பல் ஒன்று 400க்கும் அதிகமான பொதுமக்களை சுட்டும் வெட்டியும் தாக்கினர். இவர்களில் பெண்கள், குழந்தைகள் உட்பட 55 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். அதிகமானோர் படுகாயமுற்றனர். அவ்வேளையில் கடத்தப்பட்டோர் பற்றி எவ்விதத் தகவலும் இல்லை.
வீரமுனை பிள்ளையார் கோவில் உட்பட சைவ ஆலயங்களில் தஞ்சம் அடைந்திருந்த தமிழ் மக்களை முஸ்லீம்கள் ஈவிரக்கமின்றி வெட்டி கொலை செய்தனர்.பெண்களை பாலியல் பலாத்காரம்
செய்து படுகொலை செய்தனர்.கைக்குழந்தைகளை கூட இரண்டு துண்டாக வெட்டி வீசினர்.


வீரமுனை தமிழ் கிராமத்தில் தமிழர்கள் மீது 1990ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஒரு சில படுகொலைகளை தேதி வாரியாக பார்ப்போம் :

20.06.1990 வீரமுனை பிள்ளையார் கோவில் படுகொலை அதிரடிப்படை மற்றும் முஸ்லீம்களால் 69 தமிழர்கள் படுகொலை

05.07.1990 வீரமுனையில் 13 தமிழர்கள் படுகொலை

10.07.1990 வீரமுனையில் 15 தமிழர்கள் படுகொலை .

16.07.1990 மல்வத்தை இராணுவத்தினரும் முஸ்லீம் ஊர்காவல்படையினருமாக சுமார் 30 பேர் 8 பெண்களை பாலியல்பலாத்காரம் செய்து படுகொலை செய்தனர்.

26.07.1990 வீரமுனையில் 23 சிறுவர்கள் உட்பட 32 இளைஞர்கள் முஸ்லீம்ஊர்காவல்படையினராலும் விசேட அதிரடிப்படையினராலும் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.

29.07.1990 8 ஆசிரியர்கள் குடும்பத்துடன் பஸ் ஒன்றில் வீரமுனையை விட்டு வெளியேறிக்கொண்டிருந்த போது அவர்கள் அனைவரும் கடத்தி செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

01.08.1990 சவளக்கடையில் 18பேர் கைது செய்யப்பட்டு காணாமல் போயினர்.

12.08.1990 வீரமுனை அகதிமுகாமில் புகுந்த முஸ்லீம் குழு வாள்களால் வெட்டி தாக்குதல் நடத்தியது. இதில் ஆலய பரிபாலனசபை தலைவர் தம்பிமுத்து சின்னத்துரை உட்பட 14பேர் கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். வீரமுனையில் 600வீடுகளும், சம்மாந்துறை, மல்லிகைத்தீவு, வளத்தாப்பிட்டி
கணபதிபுரம், மல்வத்தை ஆகிய கிராமங்களில் இருந்த 1352 தமிழர்களின் வீடுகள் முஸ்லீம்களால் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டது.

20.06.1990க்கும் 15.08.1990க்கும் இடைப்பட்ட காலத்தில் வீரமுனையில் மட்டும் 232 பொதுமக்கள் கொல்லப்பட்டதுடன் 1600க்கு மேற்பட்ட
வீடுகள் தீக்கிரையாக்கப்பட்டது. இதனை முன்னின்று செய்தவர்கள் அயல்கிராமமான சம்மாந்துறையை சேர்ந்த முஸ்லீம்களே.

இனப்படுகொலை என்பது எங்கு நடந்தாலும் வண்மையாக கண்டிக்கப்பட வேண்டிய ஒன்று. ஆனால் ஒரே இனத்தை , ஒரே மொழி பேசக்கூடிய மக்களை மதத்தின் பெயரால் கொல்வதென்பது ஏற்றுக்கொள்ள இயலா ஒன்றாகும்.
காத்தான்குடி...காத்தான்குடி என கத்தும் நியாயவான்களே....இதற்கு என்ன பதில் சொல்ல போகிறீர்கள்? இவர்கள் காஃபீர்கள் என்றா?

No comments: