Tuesday, July 08, 2014

ஷரீஆ நீதி மன்றங்களை தடை செய்ய இயலாது - உச்ச நீதிமன்றம் Supreme Court Refused to ban Sharia Courts in India




முஸ்லிம்களின் ஷரீஅத் நீதிமன்றங்கள் சட்டப்படியானவை அல்ல என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது - முஸ்லிம்களின் ஷரீஅத் நீதிமன்றங்கள் தடை செய்யப்பட்டன, முஸ்லிம்களின் சிவில் சட்ட உரிமையை உச்சநீதி மன்றம் தடை செய்து விட்டதை போன்ற ஒரு பிம்பத்தை ஏற்படுத்த ஊடகங்கள் முயன்று வருகின்றன. இதன் உண்மை நிலை அறியாத இசுலாமிய சகோதரா்கள் சிலரும் கொந்தளித்து போய் பதிவுகளை இட்டும், தலைவா்கள் பேட்டிகளை வழங்கியும் வருகிறாா்கள். ஆனால் உண்மை நிலைதான் என்ன?


விஸ்வா லோச்சன் மதன் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பொது நலமனுவில் முஸ்லிம் சமுதாயத்தினரின் ஷரியத் நீதிமன்றங்கள், நாட்டின் நீதித்துறைக்கு இணையானவையாக செயல்படுகின்றன.'முஸ்லிம் அமைப்புகளால் நியமிக்கப்படும், 'முப்தி'கள் மற்றும் 'குவாசி'கள் பிறப்பிக்கும் உத்தரவுகளால், முஸ்லிம்களின் அடிப்படை உரிமைகள் கட்டுப்படுத்தப்படுகின்றன; பறிக்கப்படுகின்றன. இது, தடுக்கப்பட வேண்டும்' எனவும் ஷரீஅத் நீதிமன்றங்கள் இனி தொடரக்கூடது அவற்றை தடை செய்ய வேண்டும், இவை பிறப்பிக்கும் ஃபத்வா உத்தரவுகள் அரசியல் சட்டத்துக்கு எதிரானவை என்று அறிவிக்க வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

விஸ்வா லோச்சன் மதன் என்ற வழக்கறிஞர் தாக்கல் செய்திருந்த இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், வழங்கிய தீா்ப்பு உண்மையிலேயே ஷரீஅத் நீதிமன்றங்களுக்கோ இசுலாமியா்களுக்கோ எதிரானது அல்ல, அந்த தீா்ப்பின் அடிப்படை என்னவென்றால் அதாவது வேறு வழியில் சொல்வதென்றால் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது புறியாத ஊடகங்களும், வெறு சிலரும் என்னவோ ஷரீஅத் நீதிமன்றங்களை உச்சநீதிமன்றம் தடை செய்து விட்டது போலவும், இனி ஷரீஅத் நீதிமன்றங்கள் செயல்பட இயலாதது போலவும் ஒரு பிம்பத்தை ஏற்படுத்த முயல்கிறாா்கள்.
சரி என்னதான அந்த தீர்ப்பில் சொல்லப்பட்டுள்ளது என்றால் அந்த தீா்ப்பின் சாரம்சம் இதுதான் :

முதலாவதாக உச்சநீதிமன்றம் தனது தீா்ப்பில் இந்த ஷரீஅத்தின் அடிப்படையில் நடைபெறக்கூடிய நீதிமன்றங்களை தடை செய்யவில்லை. தனது தீா்ப்பில் கூறியுள்ள சரியான வாா்த்ரத பிரயோகம் என்னவென்றால் :



"The court however, refused to declare Dar-ul-Qazas (Islamic courts) or practice of issuing fatwas as illegal, saying it was informal justice delivery system for bringing amicable settlement and it was for the persons concerned to accept, ignore or reject it"
---
 

" இந்த நீதி மன்றம் தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்களை தடை செய்ய மறுத்துவிட்டது. அத்துடன் தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்களானது இருதரப்பினருக்கு இடையில் சுமூக தீா்வை ஏற்படுத்தும் ஒரு முறைசாறா நீதிமன்ற அமைப்பு என்றும் தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்கள் வழங்கும் தீா்ப்புக்களை ஏற்பதும் , நிராகரிப்பதும் அதை அனுகிய இரு தரப்பினரையே சாரும் என்றும் , தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்கள் வழங்கும் தீா்ப்புக்களை சட்ட விரோதமானது என அறிவிக்க இயலாது என்றும் மறுத்துள்ளது"


இன்னும் உச்ச நீதி மன்றம் தனது தீா்ப்பில் :

தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்களானது இந்தியாவின் தகுதி வாய்ந்த எந்த ஒரு சட்டமன்றத்தாலுா அல்லது பாராளுமன்றத்தாலோ உண்டாக்கப்பட்டதோ அல்லது அனுமதிக்கப்பட்டதோ இல்லை எனவும், எனவே தாருல் கஸ்ஸாஸ் எனும் இசுலாமிய ஷரீஅத் நீதி மன்றங்களினால் வழங்கப்படும் ஃபத்வா அல்லது தீா்ப்பானது இந்தியாவின் எந்த ஒரு சடடத்தினால் அங்கீகரிக்கப்பட்ட நீதி அமைப்பினால் அனுமதிக்கப்பட்டதல்லா என்றும் இது இருதரப்பினருக்கு இடையில் சுமூக தீா்வை ஏற்படுத்தும் ஒரு முறைசாறா நீதிமன்ற அமைப்பு மட்டுமே என்றும் இது வழங்கும் தீா்ப்புக்களை ஏற்பதும் , நிராகரிப்பதும் அதை அனுகிய இரு தரப்பினரையே சாரும் எனவும் தெறிவித்துள்ளது. ஆகவே மக்கள் யாரும் அச்சப்படவோ, தேவையற்ற வதந்திகளை பரப்பவோ வேண்டாம். இன்னும் இந்தியாவில் ஜனநாயகமும், நீதியும் உயிருடன்தான் உள்ளன.

இது குறித்து மனித நேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ வும், அனைத்து இந்திய தனியாா் சட்ட வாரியத்தின் உறுப்பினரும் ஆன டாக்டா் ஜவாஹிருல்லா அவா்கள் பி.பி.சி தமிழ் வானொலிக்கு அளித்த பேட்டியில் தெளிவாக விளக்கியுள்ளாா்.



No comments: