Saturday, April 11, 2009

சாக்கடைடையில் விழுந்த சமுதாய இயக்கம் -C.I.D சிங்காரம்


சாக்கடைடையில் விழுந்த சமுதாய இயக்கம் -C.I.D சிங்காரம்

தமிழகத்தில் பலவகையில் சிதறிக்கிடந்த முஸ்லீம் மக்களை ஒன்று திரட்டி 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு சமுதாய இயக்கம் உருவாக்கப்பட்டது. அதன் செயல்பாடுகள் இன்றுவரை குறைசொல்ல முடியாத அளவிற்கு அளப்பறிய பணிகளையாற்றி வருகிறது. உதாரணமாகச் சொல்லப்போனால் உயிர்காக்கும் இரத்த தானத்தில் இருந்து அவசரகால ஊர்திகள் வழங்குதல் போன்ற மருத்துவம் மற்றும் உயிர்காக்கும் பணிகளை செய்து வருவது யாராலும் மறுக்கமுடியாது.

ஆம்புலன்ஸ் என்றாலே என்ன என்று தெரியாத குக்கிராமங்களில் கூட தமுமுகவின் சேவையால் இப்போது அங்கெல்லாம் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த ஆம்புலன்ஸ் சேவையால் முஸ்லீம்கள் மட்டுமல்லாமல் எல்லா சமுதாய மக்களும் பேதமின்றி பயனடைவதைக் கண்கூடாக காணமுடிகிறது.இது போன்ற சமுதாயப் பணிகளில் தமுமுகவை முன்னிறுத்தி வந்த அதன் தலைவர்கள் குறிப்பாக திரு.ஜவாஹிருல்லா மற்றும் திரு.ஹைதர் அலி ஆகியோர் மிகமிக ஆசையோடு தமுமுக என்னும் சமுதாய இயக்கத்தை சாக்கடையில் இறக்க முடிவு செய்து அதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கினார்கள்.

அவர்களின் இலக்கு கலைஞரை கவுத்தி சீட் வாங்கவேண்டும் என்பதே.அதற்கான முயற்சிகளில் முழுமூச்சாய் இறங்கியது தமுமுக தலைமை.கலைஞரை கவுக்க சிறந்த வழி என்ன? பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்ற தாரக மந்திரத்தைக் கையாண்டு இடஒதுக்கீட்டுக்கு பாராட்டுவிழா என்ற பெயரில் கலைஞருக்கு நேரு உள்விளையாட்டு அரங்கிலே பிரம்மாண்ட பாராட்டுவிழாவை நடத்தி கலைஞரோடு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டனர். மேற்கண்ட தலைவர்களின் ஒரே குறிக்கோள் எப்படியாவது M.P ஆவது தான். அதற்காகவே உருவாக்கப்பட்டது தான் மனித நேயமக்கள் கட்சி.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப் பட்டநிலையில் தங்கள் கட்சிக்கு 6 தொகுதியில் செல்வாக்கு இருக்கிறது எனவே 6 தொகுதிதரும் கட்சிகளுடன் கூட்டணி என்று கோசத்துடன் களமிறங்கியது மமக.இவர்களின் கணக்கு 6 கேட்டால் இரண்டாவது தருவார்கள் என்பது தான்.அதன்படி கலைஞரிடம் பேச்சி வார்த்தைக்குப் போயும் பேரம் படியவில்லை. காற்றிலே வெண்ணை எடுத்து நூலே இல்லாமல் கயிறு திரிக்கும் கலைஞர், தான் முன்பு காயிதேமில்லத் அவர்களுக்கு செய்து கொடுத்த சத்தியப் பிரமாணப்படி ஒரு சீட் தான் தரமுடியும் என்று சொல்லி இவர்களை வெளியே தள்ளி கதவைச்சாத்திவிட்டார். இவர்கள் ஒரு சீட்டில் போட்டியிடக்கூடத் தயார்தான்.ஆனால் அந்த ஒரு சீட்டு யாருக்கு என்பது பற்றி மேற்கண்ட தலைவர்களிடையே சண்டை வந்து விடும் என்பதால் தான் ஒரு சீட்டை மறுத்தார்கள்.ஜெயலலிதாவும் இவர்களைக் கண்டுகொள்ளாத நிலையில் தற்போது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் கிருஷ்ணசாமியின் புதிய் தமிழகம் ஆகிய லட்டர்பேடுகளோடு இணைந்து மயிலாடுதுறை,இராம நாதபுரம்,தென்சென்னை ஆகியவற்றில் போட்டியிடுகிறார்கள்.

நாம் நினைத்தது போலவே தென்சென்னையில் திரு.ஹைதர் அவர்களும், மயிலாடுதுறையில் திரு.ஜவாஹிருல்லாவும், இராம நாதபுரத்தில் திரு.சலீம் கான் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.அதாவது இவர்களின் லட்சியத்தை அப்பாவித் தொண்டர்களின் மீதேறி நிறைவேற்றிக் கொள்கிறார்கள். நிச்சயமாக இவர்கள் தமுமுக எனும் சமுதாய இயக்கத்திற்கு குழிதோண்டும் வேலையை ஆரம்பித்து விட்டார்கள் என்பது உறுதி. மமக ஆரம்ப விழாவில் மமக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் செலவை தமுமுகவே ஏற்றுக்கொள்ளூம் என்ற ஒரு சூசக பாயிண்டையும் போட்டு கடைசியில் நாங்கள் தான் அந்த வேட்பாளர்கள் எங்களுக்கு தமுமுகவே செலவு செய்யும் என சொல்லாமல் சொல்லிவிட்டார்கள் சூத்திரதாரிகள்.

சினிமா நடிகர்கள் என்றாலே உவ்வே என சொல்லி வந்த தமுமுக தலைவர்களுக்கு இன்று சரத்குமார் ஒரு நடிகராகத் தெரியாதது ஏனோ? இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா என்பதாலா? அது சரி சாக்கடையில் விழுந்த பிறகு பன்றி என்ன எறுமை என்ன, எல்லாமே கருப்புத் தான் எல்லாமே கருப்புத் தான் கருப்புத்தான் கருப்புத்தான்.

பாவம் தமுமுகவின் அப்பாவித் தொண்டர்கள். பார்க்கலாம் மக்கள் எந்த அளவிற்கு விழிப்புடன் இருக்கிறார்கள் என்று.

-C.I.D சிங்காரம்

பின்குறிப்பு: இந்தப் பதிவு குறித்த தகவல்களை எனக்கு மெயில் மூலம் வழங்கிய தமுமுகவின் தொண்டர் (தவ்ஹீத் ஜமாத் தொண்டர் அல்ல) மற்றும் என் நண்பருக்கு என் மணமார்ந்த நன்றிகள்

8 comments:

Anonymous said...

சீ ஐ டி சிங்காரம் சொன்னது முற்றிலும் உண்மை, இந்த கேடு கேட்ட மமக தலைவர்கள் சாக்கடை அரசியலுக்காக அரசியல் வாதிகள் காலைகூட கழுவி குடிப்பார்கள் தங்கள் சுயலாபதிர்க்காக, (பாவம்) தொண்டர்களை தலைவர்கள் தங்கள் கால் பாதங்களுக்கு காலனியாக பயன் படுத்துகிறார்கள். இதை மமக தொண்டர்கள் உணரவேண்டும்.

Abu Abdullah said...

கனநாள் கண்டு வாங்க..... தூக்கம் கலைத்து வருகிறீர்கள்...

எதிர்பார்ப்புக்கள் என்பதும் கானல் நீரே...என்றுயில்லாமல்லிருக்க!!!
வல்ல ரஹ்மான் நமக்குத் துணை நிற்பான்....

ஒன்று பட்ட சமுதாயமாக வாழ நம் அனைவருக்கும் அந்த வல்ல இறைவன் அருள் புரியட்டும்.ஆமீன்


சமுதாய சிந்தனை கொண்ட ஒரு சாதரண மனிதன்..

புன்னகையுடன்…

அபு அப்துல்லாஹ்..
KSA AL-KHOBAR

rafiq said...

Mr.mohammad,Indian muslims need muslim party mps in parliment.pls tell us what is the way.if pj stand in his own emblam many muslimpeople ready vote for him also. we need muslim mps in their own party emblom. everybody knows that the pervious parliment only ovaisi ask more question and action for muslim community.why you should know the details.pls change your mentality. if any muslim party mp will go to parliment he will may cheat atleast he will no act again muslim community. pls try to understand the muslims situvation in india.

Anonymous said...

ONDRUME SEYYAMAL IRUPPATHARRKU YETHAVATU SEIVATHU NALLATHU ! MP AANAAL YENNA THAPPU, AVARGAL MP AANA PINBU SAMUTHAYATHIN NALAM KAAKKA VILLAIYAANAAL THAAN THAPPU ! MP AAHIRUVAANG, MP AAHIRUVAANGA NNU KOOVOKITTE IRUNTHAAL NAMMA SAMUTHAYATHILE IRUNTHU YAARUM MP AAHAKOODATHAA ??? ITHA THANAPPA INTHUTHVAAVUM YETHIRPRKITHU !!! SIRUBAANMAI SAMTUTHAUAM AANAAL IYAKKAMUM, KATCHIYUM PERUMBAANMAI.YELLA IYAKKAMUM, KATCHIYUM ONNU SERANUMNU AASAI PADUNGA! ATHUKKANA MUYARCHIYAI INSHA ALLAH ILAIYA THALAIMURAIHAL SEYYATTUM. AVAN SOTTHAI, IVAN SOOLAI NNU SOLLITU THIRINJAA AVAN AVAN VANTHU NAMMALA EASYYA ALICHITTU POIYURUVAAN!!!

Anonymous said...

Hmm... Hamas 'n Hezbullah ellam kalapanai seithalum arasiyalukunu oru wing vachu irukanga..athanalathana avangaloda voice ella idathuleyum kektkuthu. so namalum arasiya reethiya india arasangatha santhiaknumna kandippa namaku oru arasyal amaipu kandippa thevai...illaina nama alaluku sandai pottukite saga vendiyathuthaan....intha PJ DMK ku aatharavunu solitu vaya moodikalam, MMK ku aatharavu illainu solli thannoda suyaroobatha kaaturaar. Kaafir ku atharavu kodukka ninaikura intha madiri poli arasiyavathinga muslim ku aatharavu therivikka marupathu yeen...yosikanaum sinthikanum..allah pothumanavan

Anonymous said...

Dinamalaril Varum Seithigalai www.TMMK.in websiteil veliyidum MMK .. Ithai Veli iduvargala ?????????????""நடிகர் கட்சியோட தேர்தல் கூட்டணி வச்சு, அவருக்கு எல்லாம் செஞ்சு தர புதுக் கட்சி ஒண்ணு முடிவு செஞ்சிருக்காம் பா...'' என அடுத்த மேட்டரை ஆரம்பித்தார் அன்வர்பாய்.
""சரத்குமாரை தானே சொல்றீங்க... அவரு முதல்ல பா.ஜ.,வுடன் கூட்டணி வைக்கிறேன்னு போனாரே... இப்ப யாரோட கூட்டணி பேசிக் கிட்டிருக்காரு வே...'' என்று கேட்டார் பெரியசாமி அண்ணாச்சி.
""நடிகர் கட்சியோட கூட்டணி வைக்க முயற்சி பண்ணி, கையைச் சுட்டுண்டது தான் பா.ஜ., வுக்கு மிச்சம் பா... சமீபத் தில் தடபுடலா துவக்கப் பட்ட மனித நேய மக்கள் கட்சிக்காரங்க தி.மு.க - அ.தி.மு.க., கூட்டணியில் "சீட்' கேட்டு கிடைக்காம போனதால வருத்தத்தில் இருக்காங்க...
""சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியுடனும், கிருஷ்ணசாமியின் புதிய தமிழகம் கட்சியுடனும் கூட்டணி அமைச்சு தேர்தலில் குதிக்க சுறுசுறுப்பா பேசிட்டிருக்காங்க... ரெண்டு கட்சித் தலைமையும் திருப்திபடும் அளவுக்குத் தேவையான "எல்லா'த்தையும் செய்து கொடுக்க, புதுக் கட்சி நிர்வாகிகள் சம்மதம் தெரிவிச்சிருக்காங்களாம் பா... இதனால, ரொம்ப சீக்கிரமே கூட்டணி அறிவிப்பு வந்துடும் பா...'' என முடித்தார் அன்வர்பாய்.

Anonymous said...

Dear Brothers,
I would like to tell you all, We, muslims have been divided into several groups in Tamil Nadu. If you think it deeply this has happend because of lack of knowledge in Quran & Hadees. When you strictly follow these two, then Allah Almighty will guide us. As long as we are away from these two, still we may divided into several groups and others may simply laugh at us.

I urge you all of us, please perform your prayer, recite quran, read hadees and implement in your daily life. Forget about all these parties and leaders. Allah will help us in day to day life.

If you feel a leader is good for your area/yourself then vote for him. whether he is muslim or non muslim.

Try to convey quran message and islamic literature to non-muslim leaders to whom you voted. Instead of blaming each others do some dawa and try to be good muslim...

சுட்டிப் பையன் said...

மத்திய சென்னையை தென் சென்னை என்று எழுதுபவர் சி.ஐ.டியாக இருக்க முடியாது. சிறுபிள்ளையாகத் தான் இருக்க வேண்டும்.