Showing posts with label இஸ்லாம். Show all posts
Showing posts with label இஸ்லாம். Show all posts

Tuesday, September 07, 2010

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்

WISH YOU ALL A HAPPY EID-EL-FITR AL MUBARAK

ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்



அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)


ஈமானின் சீமான்களே!
இறைநேச ரோஜாக்களே!

ரம்மிய ரமழான் நோன்பேற்று
வல்ல அல்லாஹ்வின் அழகிய
நற்கூலியை பெறப்போகும் அதிர்ஷ்ட்டசாலிகளே!

சுவனத்தின் தலைவாயிலாம்
'ரையானில்' சுகந்த தென்றலாய்
நுலையவிருக்கும் உங்கள் வாழ்வில்

இந்த இனிமையும், இன்பமும்
என்றும் நிலவ
கருனை ரஹ்மானின்
கனிவுக்கு வேண்டுகிறேன்

என்றும் அன்புடன்

முகவைத்தமிழன்



வாழ்த்து : சிறு வயதில் எங்கோ படித்தது

தமிழ் முஸ்லிம் அரசியல் மேடை வாசகர்கள் அனைவருக்கும் மற்றும் அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும் எனது இனிய ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்.

www.tmpolitics.net

Sunday, September 05, 2010

அன்பு சகோதரர் களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்

அன்பு சகோதரர் களுக்கு ஒரு பனிவான வேண்டுகோள்

அன்பு சகோதரர்களே அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

புனித ரமழான் வாழ்த்துக்கள்.

இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஐ வேலைத் தொழுகைகளை நாம் தான் நிறைவேற்றுகிறோம். ரமழான் மாத நோன்புகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். அதுபோல மற்ற எல்லா பர்ளான கடமைகளையும் நாம் தான் நிறைவேற்றுகிறோம். ஆனால், ஷகாத் ம்ற்றும் பித்ராக்களை மட்டும் சில சகோதர அமைப்புகளிடம் தந்துவிட்டு நமது கடமைகள் முடிந்து விட்டதாக எண்ணி வாழா இருந்து விடுகிறோம்.

அந்த அமைப்புகள் நம்மிடம் வாங்கிய ஷகாத் ம்ற்றும் பித்ராக்களை அதற்குத் தகுதியானவர் களுக்கு முறைப்படி கொடுக்கிறார்களா என்பதை நாம் கவனிக்க மறந்து விடுகிறோம்.

சமீபகாலமாக சகோதர அமைப்புகளுக் கிடையே இந்த ஷகாத்/பித்ரா மூலமாக வசூலித்த தொகையை எவ்வாறெல்லாம் தன் இயக்க வளர்ச்சிக் காகவும், தன் சொந்த வளர்ச்சிக் காகவும் தவறாக பயன் படுத்துகிறார்கள் என்பதை அந்த அமைப்புக்கள் ஒருவர் மீது ஒருவர் வரம்பு மீறி அசிங்கமான வார்தைகளால் குற்றம் சாற்றிக் கொண்டு நம் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் தலை குனிய வைத்து விடுகிறார்கள் என்பதை நாம் கண்கூடாக கண்டு கொண்டுதான் இருக்கிறோம்.

இஸ்லாமிய சகோதரர்கள் கஷ்ட்டப்பட்டு உழைத்து, அந்த இயக்கங்கள் மீது நம்பிக்கை கொண்டு கொடுத்த அந்த அமானிதத்தை, தேவைக்கு போக; பேருக்காக கொடுப்பதற்க்கு ஒருசிலரை தேர்வு செய்து புகைபடம், வீடியோ, இயக்க சீறுடை, மற்றும் அளவுக்கு அதிகமாக விளம்பரப் படுத்தி இஸ்லாம் சொன்ன அளவுகோலை மறந்து ஒரு பெரிய ஆற்பாட்டம் செய்து விடுகிறாகள். அதன் பிறகு இதை தங்கள் வலை தலதில் பதிவு செய்து சாதனை பட்டியலாக்கி விடுகிறார்கள். நாளை மறுமையில் இவர்கள் செய்த இந்த தவறுகளுக்கு நாமும் ஒரு பொறுப்பாளர்களாக ஆகிவிடுகிறோம் மற்றும் ஷகாத், பித்ரா கொடுத்தும் கொடுக்காதவர்களாக பதியப்படுவோம்.

ஆகவே, சகோதரர்கள் அனைவரும், உங்களுக்கு கடமை ஆக்கப் பட்ட பித்ரா மற்றும் ஷகாஅத்தை உங்கள் சொந்த ஊர்களில் இதைப்பெற தகுதியானவர்களை ம்ற்றும் உங்கள் உறவுகளில் உள்ள ஏழை சொந்தங்களை கண்டறிந்தும்; எத்தனையோ வசதியற்ற மத்ரஸாக்கள்; எத்தீம்ஹாணாக்கள் போன்ற அமைப்புகளுக்கு கொடுத்தால்; அல்லாஹ் விடம் இருந்து நீங்கள் பெரும் நன்மைகளை பெருவீர்கள்; மற்றும் சகோதர அமைப்புகளை அனாச்சாரம் செய்வதை விட்டும் தடுத்தற்காண நற் கூலியையும் அல்லாஹ்விடம் பெறலாம்.

ஆகவே, இஸ்லாமிய பெருமக்கள் மற்றும் சகோதரர்கள் அனைவரும் உங்கள் மீது கடமை ஆக்கப்பட்ட பித்ரா மற்றும் ஷகாஅத்தை உங்கள் கைகளால் உறியவர்களுக்கு கொடுத்து அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றி இருலோக நல்வாழ்வுகளைப் பெற முயற்ற்சி செய்வோமாக.


வஸ்ஸலாம்

அ. சஜருதீன்

ரியாத் - சௌதி அரேபியா

+966 557316929

Tuesday, March 16, 2010

பணத்துக்காக இஸ்லாத்தை தழுவினேனா? டாக்டர் பெரியார்தாசன் சாட்டையடி விடியோ




பணமே உலகத்தின் ஒரே கடவுள்,அதற்காக எத்தனை குட்டிக்கரணங்களும் போடும் இவ்வுலகில் பாமரர்களுக்கு இந்த படித்த அறிவாளி எவ்விதத்திலும் சளைத்தவரில்லை என இவர் எச்சத்தால் அறிகிறோம். நேற்று முன்தினம் இந்து நேற்று பவுத்தம் இன்று முஸல்மான் இடையில் பெரியாரிஸ்ட் நாளை கிறித்துவர்?!?!?! ஆனாலும் ஆகலாம்.

அறிஞர்கள் என மக்களால் காட்டப்படுகிற சிலரில் இது போன்ற கோமாளிகளும் உண்டு என்பது தான் கசப்பான உண்மை. அதுசரி இவருடைய பயணத்திற்கும்,ம(த)ன மாற்றத்திற்கும் என்ன செலவு ஆனது??

This Periyar thasan is one useless guy.
He is looking for monetary gain for converting to Islam and hence announced that in Riyadh. It's good for Hinduism and loss to Islam.

என்றும் இன்னும் பலவாறும் பெரியார்தாசன் இஸ்லாத்தை தானாக தழுவி ஏற்றுக்கொண்ட பின் வர்ணிக்கின்றவர்களுக்கு பெரியார்தாசன் தரும் விடியோ பதில் இதோ.


இது நீண்டதொரு கட்டுரை ஆதலால் க்ளிக் செய்து படிக்கவும்.


பணத்துக்காக இஸ்லாத்தை தழுவினேனா? டாக்டர் பெரியார்தாசன் சாட்டையடி விடியோ.

Monday, January 18, 2010

இஸ்லாமியரும்-எதிர் நீச்சலும்.


(டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி.பி.எச்.டி. ஐ.பி.எஸ்(ஓ)


உலக மக்களினை நல் வழிப்படுத்தி ஏக இறை தத்துவத்தினை எடுத்தியம்ப அனுப்பப்பட்ட நபிமார்கள் மூசா(அலை), ஈசா(அலை), முகம்மது (ஸல்)அவர்களால் அடித்தளம் அமைக்கப்பட்ட மதங்கள் தான் ஜூடேயிஸமும், கிறித்துவமும், இஸ்லாமும் என நாம் அறிவோம்.

ஆனால் இஸ்ரேயிலர்கள் ழூசாவை கடவுளாகவும், கிறித்துவர்கள் ஈசாவை கடவுளின் மகனாகவும் நெறி தவறி அழைக்கின்றனர். ஆனால் இஸ்லாமியர் மட்டும் முகம்மது(ஸல்)வை எந்த நேரத்திலும் கடவுளாகவோ அல்லது கடவுளின் மகனாகவோ நினைக்கவில்லை.

பெருமானாருக்கு வஹி மூலம் இறக்கப்பட்ட குர்ஆனில் மூசா(அலைவையும், ஈசா(அலை)வையும் இறைத்தூதர்கள் என்றே அழைக்கப்பட்டுள்ளது.. அவர்களுக்கு இறக்கப்பட்ட தவ்ராத்-இன்ஜில் வேதத்தையும் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளது.. இறைவனால் படைக்கப்பட்ட மூசா(அலை)வையும், ஈசா(அலை)வையும் கடவுளாக அழைக்காது இஸ்லாமியர் நபிகளாக ஏன் அழைக்க வேண்டும் என்ற கோபத்தினாலோ என்னவோ முஸ்லிம்களை இஸ்ரவேலர்களும், கிறித்துவர்களும் எதிரிகளாக நினைக்கின்றனர்..

மக்கா நகரில் ரஸூலல்லா பாலகனாக இருந்தபோது நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் என்று அழைத்தபோதும் தனது 40 வயதில் தனக்கு அல்லாஹ்வால் வஹி இறக்கப்பட்டது என்று சொன்ன மாத்திரத்தில் யாரும் அதனை நம்பவில்லை. ஆனால் அவரது அன்புத் துணைவியார் கதிஜா பிராட்டியார் மட்டும் அவர்களை அரவணைத்து முதலில் ஏக இறை தத்துவத்தினை ஏற்றுக் கொண்டார்கள் என்பது வரலாறு.

அன்னை கதிஜா ஒருவரே முதலில் இஸ்லாமை ஏற்றதிலிருந்து கல்லடியும், சொல்லடியும், மேலை நாடுகளின் நவீன பாஸ்பரஸ் குண்டடியும் பொருப்படுத்தாது அரேபியாவிலிருந்து-ஜிம்பாவே வரை 130 நாடுகளில் 130 கோடி மக்கள் ஏக இறை தத்துவத்தினை ஏற்று முஸ்லிம்களாக மாறி இமய மலைபோல உயர்ந்து நிற்கவில்லையா இஸ்லாம்?

இன்று உலகில் அதிகமாக 210 கோடி கிறித்துவர் கொண்ட கிறிஸ்துவ மதமிருந்தாலும், அதனுடைய வளர்ச்சி 1900 ஆண்டிலிருந்து 2000 வரை 26.9சதவீதத்திலிருந்து 29.9 சதவீதம் தான்;. அதாவது வெறும் மூன்று சதவீதம் தான்.

ஆனால் இஸ்லாமியர் வளர்ச்சி 12.4 சதவீதத்திலிருந்து 19.2 சதவிதத்தினை எட்டி, ஏழு சதவீத வளர்ச்சி அடைந்திருக்கிறது என்றால் ஆச்சரியமாக இல்லையா?

இத்தனைக்கும் இஸ்லாமிய நாடுகள் வளர்ச்சியடைந்த வல்லரசாக இல்லையே! ஆனால் முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்தால் வல்லரசுகள் வல்லூராக மாறி ஆப்கானிஸ்தானிலும், இராக்கிலும் வேட்டையாடுவது ஏன்?

அவர்களுக்குத் தெரியாது விளையாடும் பந்தினை சுவற்றிலோ-தரையிலோ எவ்வளவு வேகம் ஓங்கி அடிக்கிறோமோ அவ்வளவு தூரம் எழும்பும் என்பதினை பார்க்கிறோம். அதேபோல் இஸ்லாமியர் எவ்வளவு நசுக்கப்பட்டாலும் பீனிக்ஸ் பறவையாக எரியும் சாம்பலிருந்து சீறிப் பாய்வார்கள் என ஆதிக்க சக்திகள் அறிய மாட்டார்கள்.

வரலாற்று இடைக்காலத்தில் இஸ்லாமிய அரசர்களால் இஸ்லாம் வாளால் பரப்பப்பட்டது என்று ஒரு வாதத்திற்காக வைத்துக் கொண்டாலும் இன்று உலகத்தினையே தனது ஆயுத பலத்தால் மிரட்டும் அமெரிக்காவினாலேயோ அல்லது நேட்டோ கிறித்துவ நாடுகளினாலேயோ வலுக்கட்டாயமாக மக்களை கிறித்துவ மதத்திற்கு மாற்றம் செய்ய முடியுமா?

கிறித்துவ சேவை மையங்கள் கூட ஏழை மக்களை கவர கல்வி, உணவு, வீடு, சுகாதாரம் போன்ற அன்பின் அடையாங்களை மக்களிடையே அள்ளி வீசித்தானே அவர்களை கிறித்துவ மதத்திற்கு இழுக்கிறார்கள்.

பின் எப்படி இஸ்லாமிய மன்னர்கள் மட்டும் வரலாற்று இடைக்காலத்தில(மெடீவல்) மக்களை கட்டாயப்படுத்தி இஸ்லாத்தில் இணைத்திருப்பார்கள் என்று ஏன் அவர்கள் சிந்திக்க மறுக்கிறார்கள்?

வரலாற்று இடைப்பட்ட(மெடீவல்) காலத்தில் நடந்தது என்ன? யூதர்கள், கிறித்துவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கும் புண்ணிய தலமாக கருதப்படும் ஜெரூசலம் முஸ்லிம்கள் ஆட்சி செய்த பாலஸ்தீன நாட்டில் இருந்தது. முஸ்லிம்களிடமிருந்த ஜெரூசலத்தினை கைப்பற்ற நீண்ட (CRUSADE )‘புனிதப்போர் என்று பெயரிட்ட பெரியதோர் போரினை ஐரோப்பிய துணைக் கண்டத்தில் நடத்தினர்.

சிலுவைப்போர் என்பது ஒரு மாதமோ, ஓர் ஆண்டோ, சில ஆண்டுகளோ நடந்த யுத்தமல்ல. கிட்டத்தட்ட முந்நூறு ஆண்டுகள் ஓயாது தொடர்ந்த பேரழிவு யுத்தம் அது
CLICK AND READ

23-24. பாலஸ்தீன் நிலப்பரப்பின் பொற்காலம். சிலுவைப்போர் தொடக்கம்.



25-26. முழங்கால் அளவு ரத்தம்.-நீண்டு போன சிலுவை யுத்தம்.



27-28.சுல்தான் ஸலாஹுதீன்..கிறிஸ்தவர்களிடம் கரிசனம்.



29-30. அரசர் ரிச்சர்ர்டும் சுல்தான் ஸலாஹுதீனும்.சுல்தான் ஸலாஹுதினின் மரணமும் கிறிஸ்தவர்களும்.

ஆனால் முஸ்லிம்கள் ஈமானை கேடயமாகவும், ஏக இறைத்தத்துவத்தினை வாளாகவும் கையிலெடுத்து பல உயிர்களை பறிகொடுத்ததால் ஜெரூசலத்தினை தங்களுடன் தக்க வைத்தனர் எனறால் எப்படி அவர்களால் அன்று மட்டும் முடிந்தது?

இறைவனால் இறைக்கட்டளைகளை இஸ்ரவேலர்கள் மீறியதால் பழிக்கப்பட்டது மட்டுமல்ல, முதலாவது-இரண்டாவது உலகப்போர்களில் பந்தாடப்பட்டனர். கிறித்துவ-இஸ்ரேயிலக் கூட்டுப்படை இரண்டாம் உலகப் போரில் வெற்றியடைந்த களிப்பில் பாலஸ்தீனர்களுக்கிடையே இஸ்ரேயில் என்ற நாட்டினை உருவாக்கி பாலஸ்தீனர்களுக்கு நாடு என்ற அமைப்பே இல்லாமல் அகதிகளாக ஆக்கப்பட்டனர்.

1945 ஆம் ஆண்டு சர்வதேச சபையான ஐ.நா அமையப்பட்டாலும், 1948 ஆம் ஆண்டு சர்வதேச மனித உரிமை சாசனம் எழுதப்பட்டாலும் பாலஸ்தீனர்களுக்கு இன்று வரை தனிநாடு என்று பிரகடனம் செய்ய உரிமை இல்லை. இன்றைய முஸ்லிம் உலகின் கொந்தளிப்பிற்கு காரணமே பாலஸ்தீனத்தின் பரிதாப நிலையே என்று உலக ஊடகங்கள் சொல்கின்றன.

ஆகவே முஸ்லிம் நாடுகளான ஈரானோ, ஈராக்கோ, பாகிஸ்தானோ இஸ்ரேயிலுக்கு எதிராக பலம் வாய்ந்ததாக மாறக்கூடாது என்பதால் தான் கிறித்துவ கூட்டமைப்பு ஈராக்கை சின்னாபின்னமாக்கி, பாக்கிஸ்தானின் அணு ஆயிதத்தினை கண்காணித்து அந்த நாட்டில் ரகசியமாக ஊடுருவி ஆளில்லா விமானங்கள் மூலம் நிர்மூலமாக்குகின்றனர்.

பாலஸ்தீன குழந்தைகளோ அல்லது ஈராக் அல்லது ஆப்பானிஸ்தான் குழந்தைகளோ பள்ளிக்கூடங்களுக்குக்கூட செல்ல முடியாது பரிதவிக்கின்றனர். இவ்வளவிற்கும் 1989 ஆம் ஆண்டு ஐ.நா வின் சர்வதேச குழந்தைகள் ஆண்டு என்று அறிவித்து அவர்களுக்கான உரிமை 20 ஆண்டுகளாகியும் பறிக்கப்டுகிறதே வேதனையாக இல்லையா?

அமெரிக்காவின் இரட்டைக்கோபுரங்கள் 2001 ஆம் ஆண்டு தாக்கப்பட்டதிற்கு ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள் தான் காரணம் என்று அந்த நாட்டில் படையெடுத்து தாலிபான்களை விரட்டிய பின்பு அந்த நாட்டை விட்டு வெளியேறாமால் ஊழல் நிறைந்த அமெரிக்காவில் வசித்த டாக்டர் கரசாய் ஆட்சியினை நிறுவி அதற்கு ஆதரவு கொடுத்ததோடு மட்டுமல்லாமல், உயிர் கொல்லி ஆயுதங்கள் ஈராக் ஜனாதிபதி வைத்திருக்கிறார் என்று 2003 ஆம் ஆண்டு ஈராக்கில் படையெடுத்த கூட்டுப்படை உயிர் கொல்லி ஆயுதங்கள் ஈராக்கில் இல்லை என்ற உண்மையினை ஒப்புக் கொண்டு வெளியேறாமால் இன்னும் அட்டைபோல் ஒட்டி அந்த நாட்டின் எண்ணெய் வளத்தினை உறிஞ்சிக் கொண்டுள்ளது என்ற செய்திகள் நாள்தோறும் நாம் படிக்க வில்லையா?

ஈரான் சிவில் உபயோகத்திற்காக அதாவது மின்சாரம் போன்றவைகளை தயாரிப்பதிற்காக அணுவினை பயன்படுத்துகிறோம் என்றாலும் அதற்கு பொருளாதார தடையேற்படுத்துவதா?

இதே போன்றுதான் 60 ஆண்டுகளுக்கு முன்பு சீனா நாட்டிற்கு தடை விதிக்கப்பட்டது. அது என்னவானது?

விவசாய நாடான சீன நாட்டினை தொழிற்சாலை மிகுந்த நாடாக ஆக்கி இன்று ஏற்றுமதியினை 17.7 சதவீதம் அதிகரித்து ஜெர்மனி நாட்டினை பின்தள்ளி உலக ஏற்றுமதியின் முன்னணி நாடாக சீனாவினை மாசேதுங் உருவாக்கவில்லையா?

ஏன் இஸ்லாமியர்களால் முடியாதா? ஏகாபத்திய நாடுகள் இஸ்லாமியர்களை நடத்தும் விதம் கோபமூட்டும் செயலானது தான் அதற்காக தீவிரவாதம் ஒரு வடிகாலாகுமா?

இன்றைய இஸ்லாமியர் வாழ்வு கொந்தளிக்கும் கடலில் கப்பல் ஓட்டும் மாலுமியைப் போன்றது தான். நான் ஒப்புக் கொள்கிறேன். ஆனால் அதனை சமாளித்து திறம்பட வழி நடத்துபவனே சிறந்த மாலுமியாகக் கருதப்படும். தோல்வி-அவமானங்களை வெற்றியின் ழூலதனமாக எடுத்துக் கொண்டு உலகத்தில் தலை நிமிர்ந்து நிற்க சில யோசனைகளை சொல்லலாம் என நினைக்கிறேன்:

1) கிராம பொருளாதாரத்தினை மேன் படுத்தி-உற்பத்திற்கு உதவும் தொழில்களை தொடங்க வேண்டும்.

2) சீனர் உலகில் எப்படி இவ்வளவு தூரத்திற்கு வளர்ச்சியடைந்த வல்லரசாக மாறியது என்று ஆராயும் போது வருடத்திற்கு 20 லட்சம் சீனர் ஆங்கிலக் கல்வி கற்கின்றனர் என்பது தெரிய வந்தது. அதன் ழூலம் ஆங்கிலம் பேசும் நாடுகளுடன் தொடர்பு கொண்டு அவர்கள் முன்னேற்றத்தின் ரகசியங்களை அறிந்து-அவர்களுக்கு மேலாக ஒரு படி உயர்துள்ளனர். அதே போன்று இஸ்லாமியரும் ஆங்கிலக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

3) இன கருத்து வேறுபாடுகளை களைய வேண்டும். அதாவது ஷியா-சன்னி என்ற வேறுபாடு களைந்து பிரிந்து நிற்கும் ஐக்கிய அரபு நாடுகள்-எகிப்து-சிரியா-ஜோர்டன்-அரேபியா-ஈரான்-பாகிஸ்தான ஆகியவை ஒரு குடையின் கீழ் நிற்க வேண்டும். அந்த அமைப்புகள் நாட்டோ போன்ற பாதுகாப்பு அமைப்பினை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.

4) பொருளாதார ஏற்றுமதி-இறக்குமதியில் வரியில்லா வர்த்தகத்தினை எற்படுத்த வேண்டும். தங்களுக்கென்ற ஈரோ போன்ற நாணயம் உருவாக்க வேண்டும்.

5) அதே போன்று விஞ்ஞான-ஆராய்ச்சிகளை தங்களுடன் பரிமாற்றம செய்து கொள்ள வேண்டும்.6) வறுமையில் தவழும் இஸ்லாமிய நாடுகளுக்கு பொருளுதவி கொடுக்க வேண்டும். எப்படி பொருளாதாரத்தில் சிக்கி தவிக்கும் துபாய் நாட்டிற்கு அபுதாபி நாடு கடன் கொடுத்து கை தூக்கியதோ அதேபோன்ற உதவிகளை செய்ய வேண்டும். இஸ்லாமிய ஏழை நாடுகளில் பசியாலும்-நோயாலும் உழலும் மக்களுக்கு கல்வி-மருத்துவம்-வீடு-வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும்.

உலக இஸ்லாமியர் நினைத்தால் வானத்தையும் வில்லாக முறித்து-கடலிலும் எதிர் நீச்சலடித்து, பூமியிலும் வல்லரசாக மாறி எதிர்கால சவால்களை முறியடிக்கலாம் என்று எதிர்பார்க்கலாமா?

Wednesday, January 06, 2010

ஈமானே-உன் விலையென்ன?

ஈமானே-உன் விலையென்ன?

ஒரு மதம் மூன்று முக்கிய மாற்றங்களினை ஏற்படுத்த வேண்டும்:
1) மூடநம்பிக்கை என்ற திக்குத் தெரியாக்காட்டில் திண்டாடிக் கொண்டிருப்பவனை நேர் வழிகாட்டி நேர்மைப் படுத்த வேண்டும்.

2) சமுதாயத்தில் மகிழ்ச்சியினை ஏற்படுத்த வேண்டும்

3) தனி மனித அடையாளத்திலிருந்து சர்வதேசம் என்ற விசாலமான உலகத்தில் சஞ்சரிக்கச் செய்ய வேண்டும்.
அந்த மூன்று தகுதிகளும் இஸ்லாத்திற்கு இருக்கிறதா என்று பார்க்கலாம்.
********************
1) அஞ்ஞான அரபு உலகமான ‘அய்யாமே ஜாஹிலியா’ என்ற இருண்ட சூழ்நிலையில் ஒளியேற்றி வைத்த என்பெருமானார் முகம்மது நபி (ஸல்)அவர்களுக்கு அல்லாஹ்வால் அருளப்பட்ட வஹி மூலம் மனிதனை புனிதமாக்க இறக்கப்பட்டது குர்ஆன் ஆகும்.

பல உருவங்களில் கடவுள் என்ற பெயரில் வழிபட்டும், நெறிகெட்டும் இருந்தவர்களை ஏக இறை தத்துவத்தினை ஆணித்தரமாக எடுத்துறைத்தது இஸ்லாம்.

வானம், பூமி,கடல்,அண்டத்திலுள்ள அத்தனை ரகசியங்களையும்-அவைகளின் மாற்றங்களையும் அறிந்தவன் எடுத்துரைத்து, அவனிடமே உங்கள் உதவியினை தேடுங்கள் என்று சொல்லி மூட நம்பிக்கைக்கு சாவு மணியடித்தது இஸ்லாம் என்பதை ஈமானுள்ள யாரும் மறுக்க மாட்டார்கள.

2) இரண்டாவது தனி மனித சுதந்திரத்திற்கு வித்திட்டது இஸ்லாம். ஆண்டான்-அடிமை என்ற வித்தியாசத்தினை களைந்தெடுத்து, 1400 ஆண்டுகளுக்கு முன்னர் அடிமைகளுக்கு உரிமை சாசனம் அளித்தது இஸ்லாம் தானே. கருப்பினராக இருந்தாலும் தொழுகைக்கு அழைக்கும் முன்னுரிமையினை ஹஸரத் பிலாலுக்கு வழங்கி கவுரவித்த பெருமை ரசூலுல்லாவினைச் சாரும்.


உலகத்தில் நாங்கள் தான் முதல் ஜனநாயக நாடு என்று தம்பட்டம் அடிக்கும் அமெரிக்கா கூட 200 ஆண்டுகளுக்கு முன்பு தான் அடிமைகளுக்கு ஜனாதிபதி அப்ரகாம் லிங்கனால் சுதந்திரம் வழங்கப்பட்டது.

பெண் சிசுக்களை பிறந்த உடனேயே உயிருடன் புதைக்கும் வழக்கத்திற்கு முற்றுப் புள்ளி வைத்தது இஸ்லாம். இந்தியாவில் பெண் குழந்தை பிறந்தால் கள்ளிப்பாலை-ஊமத்தழை சாறினை வாயில் ஊற்றி சாகடித்த பழக்கத்திற்கு பதிலாக பெண் குழந்தைகளை காப்பாற்றும் தொட்டில் குழந்தை திட்டம் 21ஆம் நூற்றாண்டில் தானே தமிழகத்தில் வந்தது.

அத்தோடு இல்லாமல் ஒரு படி மேலாக பெண்களுக்கு சொத்தில் பங்கு என்றும் நிலைநாட்டியது.

திருமணம் சாட்சிகளோடு நடக்க வேண்டும் என்று சொன்னதோடு இல்லாமல் பதிவும் செய்து பெண்களுக்கு உத்திரவாதமும் அளித்தது. அந்தச் சட்டம் தற்போது தான் இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் இஸ்லாம் எவ்வளவு தொலை நோக்குப் பார்வை கொண்டுள்ளது என அறியலாம். இனப் படுகொலைகளை தடுத்து நிறுத்தி இன ஒற்றுமைக்கு அடித்தளம் அமைத்தது.


3) மூன்றாவதாக தனி மனித நலனை விரட்டி பொது நலனுக்கும்-சர்வதேச நலனுக்கும் வித்திட்டது. ஈகைக்காகவே வறியவர்களுக்கு பொருளை ஜக்காத், சதக்கா என்று வாரி வழங்குவதிற்காக ஒரு ஈகைப் பெருநாளை ஏற்படுத்தித் தந்தது


கம்யூனிஸ்ட்டுகளின் பொதுவுடமை தத்துவத்திற்கு முன்னோடி இஸ்லாம்.

ரசூலுல்லா மக்காவில் மதீனாவிலிருந்து வெற்றிக் களிப்புடன் வராமல் மாறாக புன்னகையுடன் வரும்போது குரைசியர்களுடன் செய்து கொண்ட ஹுதைபியா அமைதி உடன்பாடு 1945 ஆம் ஆண்டு இரண்டாம் உலக யுத்தத்திற்கு பின் ஏற்பட்ட ஐ.நா. உடன்படிக்கைக்கு முன்னோடி என்றால் மிகையாகுமா?

ஆனால் அமெரிக்காவும், இங்கிலாந்தும் ஏதோ ஒரு பொய் காரணத்திற்காக ஈராக்கினை சின்னா பின்னமாக்கியது போல் அப்போது நடந்ததுண்டா?

சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் கூட ஈராக் மீது அமெரிக்காவுடன் கைகோர்த்து இங்கிலாந்து முன்னால் பிரதமர் டோனி பிளேயர் இங்கிலாந்தினை இராக் போருக்குள் நுழைத்தது தவறு என்றும், ஜார்ஜ் புஷ் இராக் ஜனாதிபதி சதாம் ஹுசேன் மீது ஏற்பட்ட பயத்தில் அவர் போர் தொடுத்து விட்டார் என்றும் கூறுகிறார்.

செய்த தவறுகள் மீண்டும் நிலை நிறுத்த முடியுமா? யாராலும். ஆகவே தான் குர்ஆனுடைய போதனைகளும் சர்வத்திற்கும் பொருத்தமானதாகும் என்பது வெள்ளிடைமலை.


மேற்கூறிய மூன்று தாரகை மந்திரங்களையும்-அதனை வஹி மூலம் ரஸூலுல்லாவிற்கு குர் ஆனாக இறக்கிய அல்லாவையும்-கடைசி நபி ரஸூலல்லா என்று ஏற்றுக் கொண்டவர்கள் தான் உண்மையான முஸ்லிம் என சொல்லலாம்.

ஆனால் 28.12.09 ஆம் அன்று முகரம் பத்தாம் நாள் என்று அனைவரும் அறிவர். அன்று மாலை டி.வியில் செய்திகளை பார்த்துக் கொண்டிருந்த எனக்கு ஒருவர் கொடுத்த பேட்டி அதிர்ச்சியாக இருந்தது. சென்னை வாசிகளுக்கும், மற்றும் சில ஊர்களிலும் துன்பமான முகரத்தினை பெரும் திருவிழா போன்று தீ மிதித்தும், கோசாப் பெண்கள் மார்களில் கைகளால் அடித்துக் கதறியும், ஆண்கள் கூரிய கத்திகளால் உடலில் குருதியினை ஏற்படுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது அறிந்ததே.

அதே போன்ற நிகழ்ச்சியினை முதன் முதலாக நான் 1966 ஆம் ஆண்டு சென்னை புதுக்கல்லூரி மாணவனாக இருந்தபோது தான் பார்த்தேன். அப்போது அது எனக்கு எங்களூரில் இல்லாத நிகழ்ச்சியாக இருந்ததால் ஆச்சரியப்பட்டேன். அவர்கள் இஸ்லாமியர்களா என்று கூட எனக்கு ஐயப்பாடு ஏற்பட்டது.

ஆனால் 28.12.09 அன்று முகரம் விழாவினை திருவல்லிக்கேணியில் ஏற்பாடு செய்தவர் நிருபர்களுக்கு பேட்டி கொடுக்கும் போது, ‘அலி ரஸூலல்லாஹ் அவர்கள் மகன்களான ஹசன்‍ ஹுசைன் ஆகியோரை வழிபடுவதிற்காக கொண்டாடப்படும் பண்டிகை என சொன்னது என்னைத் தூக்கி வாரிப்போட்டது.

எல்லா முஸ்லிம்களுக்கும் ரசூலுல்லாஹ் என்பது முஹம்மது (ஸல்) அவர்களை குறிக்கும் என்பதினையும், ரலியல்லாஹ் என்றால் நபித்தோழர்களைக் குறிக்கும் என்பதினையும் அறிவர்.

அலி (ரலியல்லாஹ் அன்ஹு) அவர்கள் பெருமானார் அவர்களின் அருமை மகள் பாத்திமாவை மணந்து மருமகனாகவும்-வெற்றிக்கு பெயரெடுத்த வீரத்தளபதியாகவும் திகழ்ந்தவர் என்பதினை அனைத்து முஸ்லிம்களுக்கும் இருவேறு கருத்து இருக்க முடியாது. அவருடைய மகன்கள் ஹசன்,ஹூசைன் ஆகியோர் பெருமானார் நெஞ்சில் ஏறி தவழ்ந்தவர்கள் என்பதினையும் அனைவரும் அறிந்ததே.

ரஸுலுல்லா உயிருடன் இருந்தபோது தலை தூக்காத இனபோர்கள் அவர்கள் மறைந்த பின்பு தலைதூக்கியது. முவாவியாவின் வழித்தோன்றல் யசீதால் ஹசனும், ஹூசைனும் அவர்கள் குடும்பத்துடன் படுகொலை செய்யப்பட்டனர் என்பது நெஞ்சில் நீங்கா வடுவாக உள்ளது.

அல்லாஹ் இபுறாகிம் நபி அவர்களுக்கு வயதான காலத்திலும் இஸ்மாயில் என்ற மகனைக் கொடுத்ததோடு மட்டுமல்லாமல் அவருடைய ஈமானைச் சோதிப்பதிற்காக இஸ்மாயில் என்ற பாலகனை அறுத்துப் பலியிட ஆணையிட்டு அதற்கும் இபுறாகிம் நபி அவர்களையும் அவருடைய அருமை மகனார் அவர்களையும் வழிகெடுக்க சாத்தான் முற்பட்ட போதும் கூட மனந்தளராது அது இறைவன் கட்டளையென அறுக்க முற்படும் போது இறைவன் தன் வஹி மூலம் அவர்கள் ஈமானை சோதிப்பதிற்காகவே அந்த ஆணை பிறப்பித்ததாகவும்-இறைவன் சதையையோ, குருதி சிந்துவதையோ விரும்புவதில்லை என்று கூறி தடுத்து நிறுத்தினான் என்பது அல் குர்ஆனில் சொல்லப்பட்ட உண்மை.

ஆனால் இன்று கூட ஏசு பிரான் சிலுவையில் அறையப்பட்டு ரத்தம் சிந்தி இறந்தார் என்பதிற்கு அடையாளமாக மெக்சிகோ-தாய்லாந்து போன்ற நாடுகளில் மனிதர்களை சிலுவையில் அடித்தும், தீ மிதித்தும் வழிபாடுகள் நடக்கின்றன. அதுபோன்ற செயல்களால் இறைவன் திருப்திபடுகிறானா? என்பதினை ஏன் சிந்திக்க மறுக்கிறார் முகரத்தினை திருவிழாவாகக் கொண்டாடுபவரகள்? அப்படிப்பட்ட செயலில் ஈடுபடுவதால் மாற்று மதத்தினர் கேலிப்பேச்சுக்கு இடம் முஸ்லிம்கள் கொடுக்கலாமா?

அல்லாவிஹ்வின் இடைத்தரகர்கள் என்று சிலர் கிளம்பி அவர்கள் செய்யும் அனாச்சாரங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டால் தவறில்லை.

சில மாதங்களுக்கு முன்னர் இமான் இனைய தளத்தில் திண்டுக்கல்லைச் சார்ந்த சகோதரர் சபீயுல்லா எனபவர் ‘சிலோன் மவுலானா’ என்பவர் எப்படியெல்லாம் அவருடைய குடும்பத்தில் நுழைந்து குழப்பத்தினை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல்-சகோதர யுத்தத்திற்கும் வழிவகுக்குகிறார் என்றும்- அவருடைய காலில் விழுந்தும் ஆசிர்வாதம் வாங்கவும் கொடுமை செய்திருக்கிறார் என்று அழாத குறையாக முறையிட்டு இருந்தார்.

அதபோன்ற என் நண்பர் சொன்ன இன்னொரு உண்மைச் சம்பவத்தினையும் உங்களுடன் இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்ள ஆசைப்படுகிறேன்.

சென்னையில் குடியிருக்கும் கடற்கரையோர செல்வக் செழிப்பான முஸ்லிம் ஊரைச்சார்ந்த ஒரு குடும்பத்தில் பண்ருட்டியினைச் சார்ந்த வருங்காலத்தினை கணிக்கும் இமாம் என்ற போர்வையில் ஒரு மவுலானா நுழைந்து தாயை வசியப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் திருமணம் நடந்த சில நாட்களிலேயே தோசம் இருக்கிறது என்ற மகளையும் அவள் கணவனிடமிருந்து பிரித்ததோடு நில்லாமல்-அந்தப் புதுப்பெண்ணுக்கு ஆபாச செல்போன் எஸ்.எம்.எஸ் தொந்தரவும் கொடுப்பதாகவும் சொல்லி வருத்தப்பட்டார்.

நான் 1983 ஆம் ஆண்டு மலேசியா சென்ற போது எங்களூரைச்சார்ந்த ஒருவரை கோலாலம்பூர் மலேயா மேன்சனில் பார்க்கச் சென்றேன். அப்போது ஒரு வியாபாரி அறையில் கேரளாவினைச் சார்ந்த "தங்கள்" என்ற பெரியவர் தங்கியிருந்தார். அவரைப் பற்றி அந்த வியாபாரி, ‘தங்கள்' அருளால் தான் இந்த அளவு தொழில் முன்னேற்றம் அடைந்தேன் என்றும் அவரைக் கேட்காமல் காலையில் எந்த வேலையும் செய்ய மாட்டேன் என்றும் அந்த "தங்கள்" மந்திரித்துக் கொடுத்த தாயத்தினை கையிலும், இடுப்பிலும் கட்டியிருப்பதாகவும’; சொல்லி அதனையும் காட்டினார். அந்த வியாபாரிக்கு தன்னுடைய உழைப்பில் நம்பிக்கையில்லாததும்-ஈமானில் பிடிப்பில்லாத பேச்சாக உங்களுக்கு தெரியவில்லையா?

நான் புனையப்பட்ட வழக்கு ஒன்றில் இழுக்கப்பட்டு சிறை சென்று வந்ததினை கேள்விப்பட்டு எங்களூரைச் சார்ந்த ஒருவர் என்னை சந்திக்க வந்தார். அவர் என்னிடம் உங்களுக்கு நேர்ந்த கொடுமைக்கு பரிகாரம் செய்ய வேண்டுமென்றால் சென்னை ஐஸ்ஹவுசில் வந்துள்ள பைஜி என்ற இமாமைப் பார்த்து அவர் துவா செய்தால் எல்லாத் துன்பங்களும் விலகும் என்று வற்புறுத்தி அழைத்தார். இவ்வளவிற்கும் அவர் படித்தவர்-மேல்நாட்டில் வேலை பார்ப்பவர். அவரிடம் நான் அதில் எனக்கு நம்பிக்கையில்லை என மறுத்துவிட்டேன். அவருக்கு ஈமானில் ஊசலாடல் இருப்பதினை நீங்கள் ஏற்றுக் கொள்வீர்கள் என நினைக்கிறேன்.

2..1..2010 ஆம் தேதி தினத்தந்திப் பத்திரிக்கையில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் நாகூர் தர்காவிற்கு தொழுகை நடத்த வந்தவருக்கு டிரஸ்டி கலிபா பொன்னாடைப்போர்த்தி கவுரப்படுத்தினார் என்ற செய்தி படத்துடன் வெளியாகி இருந்தது.

மாற்று மதத்தினர் நாகூர் தர்காவினையும் தொழுகை நடத்தும் பள்ளிவாசல் என்று நினைக்க மாட்டார்களா? ஆகவே ஏன் அவர்களுக்கு நாம் தவறான செய்திக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டும்.

மறைந்த முன்னால் அமைச்சர் முகம்மது ஆசிப் அவர்கள் அமைச்சராக பதவியேற்றபோது அப்போதைய முதல்வர் காலில் விழுந்து வணங்கினார். நான் அந்த சமயத்தில் சென்னை சட்டம் ஒழுங்கு டி.சியாக பணியாற்றினேன். அவரிடம், ‘உங்களுக்கு 70 வயதிற்கு மேலாகிறது, வசதியான குடும்பத்தில் பிறந்திருக்கிறீர்கள், அத்துடன் ஒரு முஸ்லிம் ஏன் காலில் விழுந்தீர்கள்’ என்ற வினவினேன்.

அதற்கு அவர், ‘மற்ற அமைச்சர்கள் எல்லாம் காலில் விழும்போது நான் மட்டும் காலில் விழாமல் இருந்தால் முதல்வர் கோபித்துக் கொள்வார்கள்’ என்றார். நான் சொன்னேன், “மற்றவர்களில் கண்டதையெல்லாம் கடவுள் என்று எண்ணி காலில் விழுவார்கள். ஆனால் முஸ்லிம் சஜ்தா செய்வது அல்லாஹ்வினைத் தொழும் போது தானே என்று நீங்கள் இருந்திருக்கலாமே’ என்றேன்.

நான் அதிகாரியாக இருந்ததால் அதற்குமேல் அவரிடம் வாதம் செய்யவும் அவர் பதில் கூறவும் எதிர்பார்க்கவில்லை. சமீபத்தில் கூட மத்திய அமைச்சர் அஹமது அவர்கள் சென்னையில் ஒரு நிகழ்ச்சியில் குத்த விளக்கு ஏற்ற மறுத்து விட்டார்கள். அதற்காக வேற்று மதத்தினர் அவர் மீது ஏவுகணை தொடுத்தார்களா? இல்லையே!

ஏனென்றால் படித்த மாற்று மதத்தினருக்கு அவருடைய இஸ்லாமிய மத வழிபாடுகளை தெரியாமலில்லை..

சமீபத்தில் சென்னை கலைவானர் அரங்கில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இப்போது ஒரு பெரிய பதவியில் இருக்கும் பெயரளவிற்கு முஸ்லிமாக இருக்கும் மேதாவி கவிஞர் ஒருவர் அந்த உயர்ந்த பதவியினைப் பெறுவதிற்காக புகழ்ச்சியில் முக்கிய பிரமுகரை திளைக்க வைக்க வேண்டுமென்ற நோக்கத்தில் பேசும் போது, ‘பிறை பிச்சைப் பாத்திர வடிவில் உங்களிடம் பிச்சை’ கேட்பதாகச் சொன்னதாகவும் அதற்காக சமுதாயம் கண்டனக்குரல் எழுப்பியதினையும் அறியலாம்.

கவிஞர் அல்லாமா இக்பால் தன் கவிதையில், ‘இளம் பிறையே வருந்தாதே உன்னுடன் பூரணச்சந்திரன் மறைந்து இருக்கிறான்’ என்று அவர் கூறிய பூரணச்சந்திரன் வேறு யாருமில்லை. அகிலத்தினைப் படைத்து அத்தனை ஜீவராசிகளுக்கும் வாழ்வதிற்கு வழிவகுக்கும் அல்லாஹ்வினைத்தானே அவ்வாறு குறிப்பிட்டார்.

பின் ஏன் ஆண்டவனிடம் படைப்புகளிடம் சில சலுகைகளை தட்டிக் கேட்பதிற்குப் பதிலாக ஏன் மண்டியிட வேண்டும்?

சிலர் தவறான தகவல்களையும் சென்னையில் பரப்பி வருகின்றனர். அது என்ன தெரியுமா?

ஒவ்வொரு வசதியுள்ள முஸ்லிமும் ஹஜ் செல்வது கடமையாகும். அதனைத் தெரிந்த சில வேடதாரிகள், “திருமுல்லை-சப்பைப் பட்டணம் தர்காக்கலுக்கும் சென்றால் ஹஜ் செய்வது வேண்டியதில்லை” என்றும் தவறான செய்தியினை பரப்பி வருகிறார்கள்.

சிலர் தங்கள் வீட்டில் நடக்கும் நல்ல நிகழ்ச்சிகளுக்குக் கூட பழனி சென்று முருகனை வழிபட்டு-நாடிஜோசியம் பார்க்கவும் செல்கின்றனர்.

இவர்களின் சோரம் போன ஈமானைக் கண்டுதான் சில இமாம்கள்-மவுலானாக்கள்-தங்கள் போன்ற வேடதாரிகள் முரீது கொடுக்கிறேன் என்று அனாச்சாரங்களில் ஈடுபடுகின்றனர்.இந்த வேதனையினை உங்களிடம் பகிர்ந்து கொள்ளத்தான் என் கட்டுரையின் தலைப்பினை ஈமானே உன் விலை என்ன என்றேன்?

மேலே சொன்ன செய்திகள் எல்லாம் புனையப்பட்ட கட்டுக்கதைகள் அல்ல. தினந்தோறும் வாழ்க்கையில் நடக்கும் சம்பவம் தானே.

ஈமான் இழந்த சிலர் செய்யும் செயல்களால் படித்த இளைஞரகள் தவறான பாதையில் சென்று விடக்கூடாது. ஒவ்வொரு இஸ்லாமிய அமைப்பும், ஜமாத்தும் இஸ்லாமிய மக்கள் அநாகரியங்கள், அநாச்சாரங்களில் தடம் புரளாது கண்ணை பாதுகாக்கும் இமையாக இருக்க வேண்டும் என வேண்டுகிறேன்.

எழுதியது : டாக்டர் ஏ.பீ. முகம்மது அலி. பி.எச்.டி. ஐ.பி.எஸ்(ஓ)
**********************
கீழே லிங்கை கிளிக் செய்து விடியோவையும் காணுங்கள்.

நவீன ஷைத்தானின் உளற‌ல்கள். தரீக்கா - ஷைகு -முரீது - பைஅத்.

Wednesday, October 14, 2009

இட்டுக்கட்டக்கூடிய அறிவிப்பாளர் பி.ஜே யா?

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்


முஜிபுர்ரஹ்மான் உமரியுடன் விவாதம் செய்வது சம்மந்தமாக மூன்று மாதங்களுக்குப் பின் பீ. ஜைய்னுல் ஆபிதீன் அவர்களுக்கு ‘நினைவு’ திரும்பியுள்ளது. (எஸ்.பி.பட்டிணம் பள்ளிவாசல் தொடர்பான என்னுடைய நோட்டீஸைப் பார்த்திராவிட்டால் இன்னும் நினைவு திரும்பிஇருக்காது போலும்)


நினைவு திரும்பி, ‘முக்கிய அறிவிப்புகள்’ என்று தலைப்பிட்டு முஜிபுர்ரஹ்மான் உமரி கலந்துறையாடலுக்கு வராமல் ஓடுகிறார் என்றும், இன்னொரு தலைப்பிட்டு அதில் முஜிபுர்ரஹ்மான் உமரியை நேருக்கு நேர் சந்தித்த செய்தியையும் அப்போது பதிவு செய்யப்பட்ட வீடியோ காட்சியை இனைத்தும் சில செய்திகளை பீ. ஜைய்னுல் ஆபிதீன் எழுதியிருக்கிறார்.
மாய்ந்து மாய்ந்து அவர் எழுதியருப்பதில் முக்கிய பாயிண்ட் என்னவென்றால், ‘கடந்த மார்ச் மாதம் பீ. ஜைய்னுலாபிதீனின் தர்ஜமா தவறுகள் தொடர்பான விவாதத்தில் ஜைனுலாப்தீன் வென்றார் முஜிபுர்ரஹ்மான் தோற்றார். அதனால் அடுத்த கலந்துரையாடல்களுக்கு முஜிபுர்ரஹ்மான் பயப்படுகிறார்’ இது தான் அவர் முக்கியமாக வைப்பது.


தோல்வி அடைந்தது பீ. ஜைனுல் ஆபிதீன்-தான்:


அவர் தோற்றதற்கு தெளிவான ஆதாரத்தைத் தருகிறோம். அதை மூளை சரியாக வேலை செய்யக்கூடிய, சிந்திக்கின்ற ஆற்றல் உள்ள தமிழ் படிக்கத்தெறிந்த எல்லோரும் இலகுவாக அறிந்து கொள்ளலாம்.
முஜிபுர்ரஹ்மான் எடுத்துவைத்த பீஜேவின் தவறுகளில் முக்கியமான ஒன்று, ‘திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு’ என்ற தலைப்பில் பீ.ஜைனுல் ஆபிதீன் தன் கருத்தைப் புகுத்துவதற்காக ஹதீஸில் இடைச்செறுகள் செய்துள்ளது பற்றியதாகும்.


அதாவது ஒவ்வொரு வருடமும் ஜிப்ரீல் (அலை) வந்து நபியுடன் குர்ஆனை ஓதி செல்வது பற்றிய ஹதீஸில், “அந்த வருடத்தில் அருளப்பட்ட வசனங்களை திரும்ப” என்று எழுதி, அந்த வருடத்தில் என்ற வாசகத்தை செறுகி இருக்கிறார்.


இது, அவர் பின்னால் சொல்லப்போகிற ஒரு கருத்தை முன் கூட்டியே படிப்பவர்கள் மனதில் பதியவைப்பதற்காக செய்துள்ள காரியம் எனபதனால் இது ஹதீஸில் செய்கிற தில்லு முல்லு என்ற ரீதியில் முஜிபுர்ரஹ்மான் தனது வாதத்தை வைத்தார்.


ஆனால் ஜைனுல் ஆபிதீன் இதனை மறுத்தார். விவாதத்தில் ஓன்றுக்கு மேற்பட்ட சுற்றுக்கள் இது பற்றி பேசப்பட்ட போதும், தான் தவறு செய்யவில்லை என்றும் தான் எழுதியது சரிதான் என்று சமாளித்தார்.
ஆனால் விவாதத்திற்குப் பின் வெளியிட்டுள்ள தனது தர்ஜமாவின் எட்டாவது பதிப்பில், முஜிபுர்ரஹ்மான் தவறானது என்று நிரூபித்த வாசகத்தை பீ ஜைனுல் ஆபிதீன் நீக்கியுள்ளார். இங்கே முக்கியமாக ஒன்றைக் குறிபிட்டாக வேண்டும். இதே தவறை விவாதத்தில் சுட்டிக்காட்டும் போது அந்த நேரத்திலும் பிடிவாதமாக மறுத்தார். விவாதத்தின் இறுதி உரையிலும் முஜிபுர்ரஹ்மான் ஒரு தவறையும் எடுத்து வைத்து நிரூபிக்கவில்லை என்றும் இவர் கூறும் தவறு எதுவும் தவறு இல்லை என்றும் திமிராக பேசினார்.


இங்கே விவாதத்திற்கு முன்பு இருந்த பாதிப்புகளில் இடைச்செறுகலான வாசகம் இடம் பெற்று இருப்பதையும் விவாதத்திற்கு பின்பு அது நீக்கப்பட்டிருப்பதையும் தருகிறோம்.-பீ.ஜைனுல் ஆபிதீனின் தர்ஜமாவில் ‘திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு’ தலைப்பின் கீழ் ஏழாம் பதிப்பிலும் அதற்கு முந்திய பதிப்புகளிலும் இடம் பெற்றதாவது


அதாவது விவாதத்துக்குமுன்:இது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரீல் என்ற வானவர் வந்து அந்த வருடத்தில் அருளப்பட்ட வசனங்களைத் திரும்ப நினைவுப்படுத்தி முறைப்படுத்தி வரிசைப்படுத்திச் செல்வார்.

(பக்கம்:35-36 ஏழாம் பதிப்பு)
பெரிதாகப் பார்க்க, படத்தின் மீது சொடுக்கவும்




விவாதத்திற்குப் பின் இது தவிர ஒவ்வொரு ஆண்டிலும் ஒரு முறை ஜிப்ரில் என்ற வானவர் வந்து அருளப்பட்ட வசனங்களை திரும்ப நினைவு படுத்தி முறைப்படுத்தி வரிசைப்படுத்திச் செல்வார். (பக்கம் 41, எட்டாவது பதிப்பு, ஆகஸ்ட் 2009)


பெரிதாகப் பார்க்க, படத்தின் மீது சொடுக்கவும்




முந்தைய பதிப்புகளில் ‘அந்த வருடத்தில்’ என்று செறுகியிருந்த வாசகத்தை விவாதத்திற்குப் பின் நீக்கியுள்ளார்.


இந்த வாசகத்தின் விபரீதத்ததை புரியாதவர்கள் இதிலென்ன பெரிய தவறு வந்துவிடப்போகிறது என்று நினைக்கலாம். இதற்கு ஒரு சில பக்கங்களுக்குப் பின் குர்ஆனின் சூராக்களின் வரிசை நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்பட்டதல்ல என்ற கருத்தை பீ. ஜைனுல் ஆபிதீன் தேர்ந்தெடுத்துள்ளார். அந்த கருத்தை முன்பே வாசகர்களின் மனதில் போடுவதற்காக மேற்கண்ட ஹதீஸூக்கு மாற்றமான செய்தியை அதற்குள் லாவகமாக இடைச் செறுகல் செய்துள்ளார்.


ஹதீஸ் வாய்வழியாக அறிவிக்கப்பட்டுக்கொண்டிருந்த காலகட்டத்தில் இந்த ஜைனுல் ஆபிதீன் அவர்கள் வாழ்ந்திருந்தால் ஹதீஸ் கலை அறிஞ்ர்கள அவரை இட்டுக்கட்டக்கூடிய அறிவிப்பாளர் என்று அறிவித்திருப்பார்கள்.
தான் எழுதியது சரி தான் என்று விவாதத்தில் வைத்து சமாளித்ததுக்கொண்டிருந்தவர் இதனை நீக்கியிருக்கிறார். நீக்கியபின், முஜிபுர்ரஹ்மான் அது எப்படி இருக்கவேண்டுமென்று சொன்னாரோ அப்படியே வந்திருக்கிறது. (இன்னும் பல திருத்தங்கள் உள்ளன நாம் பின்பு மக்களுக்கு எடுத்துவைப்போம் இன்ஷா அல்லாஹ்) ஆனாலும் தானே ஜெயித்தாக பரையடித்ததுக்கொண்டிருக்கிறார் சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் விவாதத்தில் தோற்றவர்தான் தனது தோல்வியையும் பலவீனமான வாதத்தையும், விதண்டாவாதத்தையும், மறைப்பதற்காக சீடியை எடிட் செய்து வெளியிடுவார். ஆகவே விவாத சீடியை எடிட் செய்து வெளியிட்ட சகோதரர் பீ.ஜைனுல் ஆபிதீன் மேற்படி விவாதத்தில் தோற்றவர் என்பது நிரூபனமாகிவிட்டது.


ஆனாலும் அவர் துணிச்சலாக, தான் வென்றதாக எழுதிக்கொண்டும் எதிராளியை மட்டம் தட்டி பரிகாசம் செய்து கொண்டும் இருக்கிறார் என்றால் அதற்குக் காரணம் என்ன?


அதற்குக் காரணம் மக்களை (அதாவது அவரது இது போன்ற பேச்சுக்களையும் எழுத்துக்களையும் நம்பும் மக்களை) அவர் ஆடு மாடுகள் போல் கருதுவதால்தான், இதை நாமாகச் சொல்லவில்லை. அவர் வாயினாலேயே சொன்னது!


TNTJ உருவாக்கப்பட்ட ஆரம்ப நாட்களில் அதன் மாநிலச்செயலாளராயிருந்த ஒரு சகோதரர் அப்போது நடந்த (சகோதர இயக்கத்துக்கெதிரான) வன்முறை சம்பவத்தில் சந்தேகிக்கப்பட்டு கைது செய்யப்படுகிறார்.


அது பற்றி பேசுவதற்காக, பீ ஜைனுல் ஆபிதீனுக்கு போன் செய்த அந்த சகோதரரின் டிரைவர் (இவர் மார்க்கப் பிரச்சாரத்தில் ஈடுபாடுள்ளவர்) இப்போது நடக்கும் சம்பவங்களால் மக்களிடத்திலே தவ்ஹீத்துக்குப் பின்னடைவு ஏற்பட்டுவிடுமே என்ற கவலையை தெரிவித்துள்ளார். அதற்கு பீ.ஜைனுலாபிதீன் சொன்ன பதில்:

‘மக்கள் என்பது ஆடு மாடுகள் மாதிரி , சீக்கிரமே மறந்து
விடுவார்கள்.

ஆக இவரை நம்பும் TNTJ காரர்களை இவர் இப்படித்தான் வைத்திருக்கிறார். இவர் நிலையை தெரிந்து கொண்ட எங்களைப்போல் பலர் அவரிடமிருந்து விலகிக் கொண்டோம். இவ்வளவும் தெரிந்த பின்னும் அவருக்கு ஆதரவாளர்களாயிருக்கும் சகோதரர்கள் சற்று யோசிக்க வேண்டும். இன்னும் எவ்வளவு காலம் ஆடு மாடுகள் மாதிரி இருக்கப்போகிறீர்கள்? ஜைனுல் ஆபிதீனிடம்!


அவர் இவ்வாறு கருதும் மக்களை –குறிப்பாக TNTJ-யிலுள்ள மக்களை ஏமாற்றுவதற்கு முஜிபுர்ரஹ்மான் உமரீயுடன் கலந்துரையாடல் நடக்காதது குறித்து தவறான தகவல்களை அள்ளிக் கொட்டியுள்ளார். ஆடு, மாடுகள் மாதிரியில்லாத மனிதர்களுக்கு அது குறித்து சுருக்கமான தெளிவைத் தருகிறோம்.


பீ. ஜைனுல்ஆபீதீனீன் தர்ஜூமா தவறுகளின் விவாத முடிவில், மற்ற தலைப்புகளை கலந்துரையாடலாக வைத்துக் கொள்ளும்படி ஜாக் மதுரை மாவட்டத் தலைவர் இமாம் ஹூசைன் கேட்டுக் கொண்டதனால் கலந்துரையாடலுக்கு தாம் ஒப்புக் கொண்டதாக எழுதி தவறான செய்தியை தருகிறார். உண்மையில் கலந்துரையாடலாக வைத்துக் கொள்ளலாம் என்று ஆரம்பித்ததே ஜைனுல் ஆபிதீன்தான்.


அடுத்த மூன்று தலைப்பு விவாதங்கள் பற்றி மேடையில் இருந்நதவர்கள் ஆலோசனை செய்த போது ஒரே நாளில் மூன்று விவாதங்களையும் வைத்துக் கொள்ளலாம். என்று நான் கூறினேன். அதை இமாம் ஹூசைன் ஜைனுலாபீதீன் அவர்களிடம் சொன்ன போது, ஒரு நாளா? போதாது அப்படியென்றால் கலந்துரையாடலாக வைத்துக் கொள்ளலாம், என்று முதலவாதாக கூறியது ஜைனுலாபிதீதான் அதனை முஜீபுர்ரஹ்மானிடம் இமாம் ஹூசைன் எடுத்துக்கூறிய போது அவரும் ஒப்புக்கொண்டார்.
இதுவெல்லாம் சிடியில் பதிவாகியிருந்தும் அதை மட்டும் துண்டித்திருக்கிறார். பிறரை மட்டம் தட்டுவதற்காக இவர் கையாளும் இழிந்த தந்திரங்களில் இது முதலாவது அல்ல என்பது ஆடு, மாடுகள் போல் இல்லாத மக்களுக்கும் தெரியும்.


முஜிபுர்ரஹ்மான் உமரீ ஓடி ஒளிவதாகவும் அவர் மீது பரிதாபப்பட்டு தான் மவுனம் காத்ததாகவும் பி.ஜைனுலாபிதீன் கதைத்திருக்கிறார். ‘வாக்களித்த காலம் முடிந்து மாதங்கள் பல ஓடிவிட்டன. தொடர்ந்து ஓட்டம் பிடிக்கிறார். என்று எழுதிய ஜைனுலாபிதீனுக்கு நாம கூறுகிறோம் வாக்களித்த காலம் முடிந்தவுடன் உடனடியாக நேரில் அவரிடம் ஆள் அனுப்பிக்கேட்கவில்லை. விருதுநகரில் அவர் இருக்கும் பகுதியில் தான் TNTJ மாவட்டச் செயலாளாரும் நகர நிர்வாகிகளும் இருக்கிறார்கள். அல்லது நேரடியாக தபால் எழுதியும் கேட்க வில்லை. நாம் இதில் தொடர்ந்து தலையிட மறுத்து நேரடியாக பேசிக்கொள்ளட்டும் என்று ஒதுங்கிய பின் மேற்கண்டவாறு பீ ஜைனுல் ஆபிதீன் செய்திருந்தால் இப்போது அவர் கதைப்பது உண்மையாக இருந்திருக்கும். ஆனால் நேரடியாக தனது கட்சி பொறுப்பாளரை அனுப்பி பேசுவதற்கோ அல்லது தபால் மூலம் தொடர்பு கொள்ளவோ பயந்தார் ஜைனுலாப்தீன். ஏனென்றால் அப்படிச் செய்திருந்தால், விவாத சி.டி.யில் பல இடங்களில் எடிட் மோசடி செய்து வெளியிட்டது அதைப்பற்றி முஜிபுர்ரஹ்மான் கேள்வி எழுப்புவார் தான் அவமானப்பட வேண்டியது வரும் என்ற பயத்தினாலேயே மவுனம் காத்தார்.


ஆனால் முஜிபுர்ரஹ்மான் உமரீ மீது பரிதாபப்பட்டு மவுனம் காத்ததாக சொல்லி இவர் ஆடு மாடுகளாக கருதும் மக்களின் காதுகளில் பூ சுற்றுகிறார்.
யாருக்கு பரிதாபப்படுகிறாராம் இவர்? இவரது கருத்துப்படிதவ்ஹீதுக்கு எதிராக பிரச்சாரம் செய்யக்கூடிய, பணத்துக்காக சத்தியக் கொள்கையிலிருந்து வழி கெட்டுக்குபோய் அந்த வழிகேட்டைப் பிரச்சாரம் செய்யக்கூடிய, இவரது தர்ஜமாவில் தவறே இல்லாதவற்றை தவறென்று கூறிய, தவ்ஹூதுக்கு எதிராக சதி செய்யக்கூடிய, இஸ்லாத்தின் அடிப்படைகளிலேயே மாற்றம் செய்துவிட்ட ஜாக் இயக்கத்தினரோடு சேர்ந்து கொண்டு மார்க்கத்தில் குழப்பம் செய்யும் ஒருவரை மார்க்க அடிப்படையில் எதிர்கொண்டு அடையாளம் காட்டாமல் பரிதாபப்பட்டு சும்மா இருந்நதாராம். இதை நம்புபவர் ஆடு மாடுகளைப் போன்றவர்கள் அல்ல, ஆடுமாடுகளாகத்தான் இருக்க முடியும்!
முஜிபுர்ரஹ்மானிடம் விவாதம் குறித்துப் பேச நாம் மேற்குறிப்பிட்ட இலகுவான வழிகள் இருக்கும் போது குப்பை, குப்பை என பிதற்றிக்கொண்டு டாட்காம்களுக்கும் சவால் விடுகிறார் என்றால் இதன் மூலம் ‘இவரைத் தெரிந்துக் கொள்ளுங்கள்!’


கடந்த 25.9.2009 அன்று முஜிபுர்ரஹ்மான் உமரீ தொண்டியில் பீஜே அவர்களை எதார்த்தமாக கண்டபோது தானே சென்று , ஸலாம் சொல்லி கைகுலுக்கியதை இவர்களாக வலுக்கட்டாயமாக அவரிடம் போய் பேசியதாக திசை திருப்பியிருக்கிறார்.


அதோடு அப்போது நடந்த பேச்சுக்களையும், நிகழ்வுகளையும் பதிவு செய்து அதிகார பூர்வ இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார். (அதிலும் கட்டிங்)
அதை வெளியிட்டதும் மிகுந்த நன்மையாக போய் விட்டது. பீ. ஜைனுலாபிதீன் அவர்கள் தன் ஆதரவாளர்களை ஆடு மாடுகளை மாதிரி கருதி வைத்திருக்கிறார். என்பது அவரே சொன்னது. அதன் உதாரண நிகழ்வுதான் அந்த பதிவில் நாம் காண்பது.


முஜீபும் பீ.ஜைனும் லாபிதீனும் உரையாடியதை சற்று நேரம் அமைதியாக தொடரவிட்டிருந்தால், சில உண்மைகள் வெளிப்பட்டிருக்கும், ஆனால் அதற்கு வாய்ப்பளிக்காமல், இருவரும் பேசுவதை குழப்பும் விதத்தில் சுற்றி நின்றவர்களில், பீ.ஜைனுவால் ஆடு மாடுகள் மாதிரி என்று சரியாக கணிக்கப்பட்டவர்கள், இடையிலே தாங்கள் சொல்வதையே திரும்பத்திரும்ப சொல்லி கூச்சல் குழப்பம் செய்வதை நாம் பார்க்கிறோம்.


மரியாதையான வார்த்தைகளால் பேச்சு நடந்து கொண்டிருக்கும் போது, தரக்குறைவான வார்த்தைகளை – வேண்டுமென்றே இடையில் புகுந்து பேசி அதை சண்டையாக மாற்றும் ததஜ ஜமாஅத் பொறுப்பாளர்களையும் அந்தப் பதிவில் பார்க்கிறோம்.


பேச்சு நாகரீகமும், மரியாதையும் ஒழுங்கும் அறியாத முரடர்கள் தான், ததஜ ஜமாஅத்தின் பொறுப்பாளர்கள் என்பதால் அந்த ஜமாஅத்தின் தரம் பற்றி முடிவு செய்வது மக்களுக்கு எளிதாகி விட்டது.
பீ.ஜைனுல் ஆபிதீன் பெரிய அறிவாளி, புத்திசாலி, மனோநிலை அறிந்து பேசுபவர் என்பது எல்லோருக்கும் தெரியும், அதன்படி தன் ஆதரவாளர்களைப்பற்றி ஆடுமாடுகள் மாதிரி என்று அவர் கூறியதற்கு சரியான எடுத்துக்காட்டாக இப்போது தனது இணைய தளத்தில் வெளியிட்ட – முஜிபுர்ரஹ்மானுடன் சச்சரவு செய்த – வீடியோ காட்சிகள் உள்ளன.
ஆகவே, அதை அவசியம் பார்க்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் வைக்கிறோம்! அதை நீண்ட நாட்களுக்கு வைத்திருக்குமாறு ஆன்லைன் பீஜே இணைய தளத்தைக் கேட்டுக் கொள்கிறோம்.


தவறுகளுக்கு தண்டனை கொடுக்காமல் அல்லாஹ் விட்டு வைத்திருப்பதை தவறாக பயன்படுத்தி மேலும் மேலும் தவறுகள் செய்து, தங்களை கூடுதல் அழிவுக்கு ஆளாக்கிக் கொள்கிறார்கள் வழிகேடர்கள்.
அத்தகையவர்களின் வழிமுறையில் தொடர்ந்து செயல்படாமல், வருந்தி திருந்துங்கள் என்று பீ.ஜைனுல் ஆபிதீன் அவர்களை கேட்டுக் கொள்கிறேன்.
எனக்கும் மற்றவர்களுக்கும் நான் நினைவுபடுத்தும் இறை வசனம் :


يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنظُرْ نَفْسٌ مَّا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ


ஈமான் கொணடவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சி நடந்து கொள்ளுங்கள், மேலும், ஒவ்வொருவரும் (மறுமை) நாளுக்காக தான் முற்படுத்தி வைத்திருப்பதைப் பார்த்துக் கொள்ளட்டும், இன்னும், நீங்கள் அல்லாஹ்வை அஞ்சி நடந்து கொள்ளுங்கள், நீங்கள் செய்பவற்றை, நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன். (59:18)


- M. அப்துர் ரஹ்மான் மன்பஈ

நன்றி : இஸ்லாம் கல்வி

Monday, September 21, 2009

ஷவ்வால் மாத நோன்பு

ஷவ்வால் மாத நோன்பு.

யார் ரமளான் மாத நோன்பிற்கு பிறகு ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்புகளை வைக்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போலாவார் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூ அய்யூப் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், திர்மிதி.

ஹஜ் மாதத்தில் அரஃபா நோன்பு (ஹாஜிகள் அல்லாதவருக்கு)

அரஃபா நாளில் நோன்பு நோற்பது பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்டதற்கு அவர்கள் ''அது கடந்த வருடத்தின் மற்றும் வரக்கூடிய வருடத்தின் பாவத்தை போக்கும் என நான் ஆதரவு வைக்கிறேன் என்று கூறினார்கள். அறிப்பாளர் அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், திர்மிதி.

ஹாஜிகள் நோன்பு நோற்கத் தடை.

அரஃபா தினத்தன்று, அரஃபா மைதானத்தில் (கூடியிருப்போர்) நோன்பு நோற்பதை நபி(ஸல்) அவர்கள் தடைவிதித்துள்ளார்கள். அறிப்பாளர் அபூஹுரைரா (ரலி) அபூதாவூத், அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா.

முஹர்ரம் மாத நோன்பு

நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோது ஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவுனையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்) மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். அந்நாளில் நோன்பு நோற்றார்கள், மேலும் நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். அறிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அபூதாவூத்

நபி(ஸல்) அவர்கள் யூதர்களின் வழிமுறைக்கு மாற்றம் செய்யும் விதமாக ஆஷுரா நாளின் முந்திய (ஒன்பதாம்) நாளும் நோன்பு நோற்குமாறு கூறினார்கள். மேலும் நான் வரக்கூடிய வருடம் இருந்தேனேயானால் ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் என்று குறிப்பிட்டார்கள். ஆனால் அதே வருடத்தில் மரணமடைந்தார்கள். அறிப்பாளர் இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: முஸ்லிம்.

மாதத்தில் மூன்று நோன்புகள்.

மாதந்தோறும் மூன்று நாட்கள் நோன்பு நோற்பதும், ரமளானில் நோன்பு நோற்பதும் காலமெல்லாம் நோன்பு நோற்பதாக அமையும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூகதாதா (ரலி) நூல்கள்: முஸ்லிம், அஹ்மத், அபூதாவூத்.

''நீர் மாதத்தில் மூன்று நோன்புகளை நோற்றால் அதை பதிமூன்று, பதினான்கு, பதினைந்து ஆகிய நாட்களில் நோற்குமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூதர் (ரலி) நூல்கள்: திர்மிதி, நஸயீ, அஹ்மத்.

திங்கள், வியாழன் கிழமைகளில் நோன்பு

நபி (ஸல்) அவர்கள் திங்கள், வியாழன் ஆகிய நாட்களைத் தேர்ந்தெடுத்து நோன்பு நோற்று வந்தனர். அறிப்பாளர் அன்னை, ஆயிஷா (ரலி) நூல்கள்: அஹ்மத், நஸயீ, திர்மிதி, இப்னுமாஜா.

ஒவ்வொரு வியாழனும், திங்களும் அமல்கள் சமர்ப்பிக்கப்படுகின்றன. நான் நோன்பு நோற்றிருக்கும் போது என் அமல்கள் சமர்ப்பிக்கப்படுவதை நான் விரும்புகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூஹீரைரா (ரலி) நூல்கள்: அஹ்மத், திர்மிதி, இப்னுமாஜா..

நபி (ஸல்) அவர்கள் மாதத்தில் மூன்று நோன்புகளை மாதத்தின் ஆரம்பவார திங்கட்கிழமை, அடுத்து வரக்கூடிய வாரம் வியாழக்கிழமை, அதற்கு அடுத்து வரக்கூடிய வியாழக்கிழமை என்று நோற்பார்கள். அறிப்பாளர் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: நஸயீ.

வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கலாமா?

நான் ஜாபிர்(ரலி) அவர்களிடம் வெள்ளிக்கிழமை நோன்பை நபி(ஸல்) அவர்கள் தடுத்துள்ளார்களா? என்று வினவினேன் அதற்கு ''ஆம்'' என்றார்கள். அறிவிப்பாளர், முஹம்மது பின் அப்பாத் (ரஹ்) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

''உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமைக்கு முந்திய பிந்திய நாள் நோன்பு நோற்றாலன்றி வெள்ளிக்கிழமை மட்டும் நோன்பு நோற்க வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அபூஹுரைரா (ரலி) புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னுமாஜா.

சனிக்கிழமை மட்டும் நோன்பு நோற்கக்கூடாது.

உங்கள் மீது கடமையாக்கப்பட்டு இருந்தாலே தவிர சனிக்கிழமை நோன்பு நோற்க வேண்டாம், (சனிக்கிழமைகளில் உண்பதற்கு) திராட்சைத் தொலி அல்லது மரக்குச்சியைத் தவிர வேறு ஏதும் கிடைக்காவிட்டால் அதையாவதுமென்று விடட்டும் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் ளும்மாயி பின்த் புஸ்ர்(ரலி) திர்மிதி, அபூதாவூத்

இரு பெருநாள்களில் நோன்பு இல்லை.

நபி(ஸல்) அவர்கள் இரண்டு நாள்கள் நோன்பு நோற்பதை தடை விதித்துள்ளார்கள் அவை ஃபித்ரு பெருநாள் மற்றும் குர்பானி பெருநாள். அறிப்பாளர் அபூஸயீதில் குத்ரி (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

அய்யாமுத் தஷ்ரீக் (ஹஜ் பெருநாள் அடுத்த மூன்று) நாட்களும் உண்பதற்கும், பருகுவற்கும் உரிய நாட்களாகும். அந்நாட்களில் நோன்பு ஏதும் இல்லை என்று பிரகடனம் செய்யுமாறு எனக்கு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். அறிப்பாளர் ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) நூல்: அஹ்மத்.

காலமெல்லாம் தொடர் நோன்பு கூடாது

''நீங்கள் தொடர் நோன்பு நோற்காதீர்கள்'' என்று நபி(ஸல்) அவர்கள் கூறியபோது ''நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே? என்று நபித்தோழர்கள் கேட்டனர் அதற்கு நபி (ஸல்) அவர்கள் ''நான் (எல்லா விஷயத்திலும்) உங்களைப் போன்றவனல்லன் நிச்சயமாக நான் உண்ணவும், பருகவும் வழங்கப்படுகிறேன் என்றோ உண்ணவும் பருகவும் வழங்கப்பட்டு இரவு பொழுதை கழிக்கிறேன் என்றோ கூறினார்கள். அறிப்பாளர் அனஸ்(ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம்.

மாதந்தோறும் மூன்று நோன்பு நோற்பீராக என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறியபோது, இதைவிட எனக்கு அதிக சக்தியுள்ளது என்றேன். முடிவில் நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் நோன்பு நோற்று, ஒரு நாள் விட்டு விடுவீராக அதுதான் நோன்புகளில் சிறந்ததாகும், என் சகோதரர் தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
காலமெல்லாம் நோன்பு நோற்பவர் நோன்பு நோற்கவே இல்லை. என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிப்பாளர் அப்துல்லாஹ் பின் அம்ரு (ரலி) நூல்கள்: புகாரி, முஸ்லிம், அஹ்மத்.

Tuesday, September 08, 2009

ரமழான் - இறுதிப் பத்து நாட்கள் (VIDEO)

அஷ்ஷேய்க். பிஸ்மில்லாஹ் கான் பைஜி

ரமளானின் இறுதிப் பத்து நாட்கள் பற்றியும் அதில் செய்ய வேண்டிய அமல்கள் பற்றியும் தமிழகத்தை சேர்ந்த மார்க்க அறிஞர் அஷ்ஷேய்க். பிஸ்மில்லாஹ் கான் பைஜி அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ பதிவினை காண்பதற்கு இங்கு சொடுக்கவும்.



ரமளானின் இறுதிப் பத்து. லைலத்துல் கத்ர், இஃதிகாஃப்

புனித மிக்க ரமளான் மாதத்தின் கடைசிப்பத்து நரகின் விடுதலையை உள்ளடக்கிய சிறப்புக்குரியதும், மேலும் லைலத்துல் கத்ர் இரவு போன்ற சிறப்பினை உள்ளடக்கியதுமான பெரும் சிறப்புகளைக் கொண்டதாகும். அருள்மிகு ரமளானின் இவ்விறுதிப் பத்து நாட்களில் பிரயாசைப் பட்டுச் செய்கின்ற நற்செயல்களுக்கு அதிகமதிகம் நன்மைகளும் பன்மடங்காகக்கப்பட்ட நற்கூலிகளும் உண்டு. நபி (ஸல்) அவர்கள் ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் அதிக சிரத்தையுடன் நன்மைகள் செய்வதில் தீவிரம் காட்டுபவர்களாகவும் அழுத்தம் உடையவர்களாகவும் இருந்தார்கள்.

நபியவர்கள் ரமளான் இறுதிப் பத்தில் கருமமாற்றியது பற்றி ஆயிஷh (ரலி) அவர்கள் தெளிவாக அறிவிக்கின்றார் கள்: ரமளானின் கடைசி பத்து வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் கச்சை கட்டிக் கொண்டு அவற்றின் இரவுகளை விழித்திருந்து கழிப்பார்கள். தம் குடும்பத்தினரையும் விழித்தெழச் செய்வார்கள் (புகாரி)

ஆயிஷh (ரலி) அவர்கள் அறிவிக்கும் பிரிதொரு ஹதீஸ் இவ்வாறு தெளிவு படுத்துகின்றது: நபியவர்கள் முந்தைய இருபது நாள் இரவுகளில் விழித்திருந்து தொழவும் செய்தார்கள். தூங்கவும் செய்தார்கள். ஆனால் இறுதிப் பத்து நாட்கள் வந்து விட்டால் கச்சை கட்டிக் கொண்டு அமல்களில் முழுமையாக ஈடுபடுவார்கள். (முஸ்னத் அஹ்மத்)

ரமளான் மாதத்தின் இறுதிப் பத்தின் மகத்துவமும், சிறப்பும் பற்றி இந்த ஹதீஸ்கள் தெளிவாக விளங்குகின்றன. இந்நாட்களில் நபி (ஸல்) அவர்கள் முதல் இருபது நோன்பு நாட்களையும் விட இந்நாட்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருக்கினறார்கள் என்பது தெளிவாகின்றது. குர்ஆன் ஓதுவது, அதிகமதிகம் திக்ருகளில் ஈடுவடுவது, அதிகமதிகம் தர்மம் செய்வது இவ்வாறான நன்மைகளாகும்.

இஃதிகாஃப்

இந்தப் பத்து நாட்களில் மற்றுமொரு சிறப்பு இஃதிகாஃப் இருப்பதாகும். இஃதிகாஃப் என்பது இலளகீக காரியங்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் வழி பாட்டிலேயே முழுமையாக ஈடுபடுவதற்காக பள்ளிவாசலில் தங்கி விடுவதாகும். ஒரு முஸ்லிம் இப்படிச் செய்வது அல்குர்ஆனும் நபி மொழிகளும் வலியுறுத்தியுள்ளன. நபியவர்கள் இவ்வாறு ஈடுபட்டதற்குக் காரணம் இந்த இரவுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கின்ற முக்கிய சிறப்பயாகும். அவ்வாறு ஒருவர் ஈடுபடும்போது அவர் லைலதுல் கத்ர் இரவைப் பெறக் கூடிய வாய்ப்பைப் பெறுகினறார்.

அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெருவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி அறிவித்தார் : அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று. உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். (முஸ்லிம்)

ஒருவர் பிற மனிதர்களை விட்டும் விலகி அல்லாஹ்வின் பள்ளிவாசல் ஒன்றில் இஃதிகாஃப் இருப்பதன் நோக்கம்; சங்கடங்களின்றி மனஒருமையோடு அல்லாஹ்வை வழிபடுவதற்காகவாகும். அவ்வாறு இருப்பதனால் அம்மனிதர் லைலதுல் கத்ர் எனும் மகத்துவம் மிக்க இரவை அடைந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றார்;. அத்தோடு உடலுறவு, அதற்கு முன்னுள்ள காரியங்களான முத்தமிடுதல், ஆசையுடன் தொடுதல், போன்ற காரியங்களும் இஃதிகாஃப் இருப்பவருக்கு விலக்கப்பட்டதாகும். அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:

இஃதிகாஃப் இருப்பவர்கள் திக்ர் செய்வதில், குர்ஆன் ஓதுவதில், நஃபிலான தொழுகைகளில், இன்ன பிற வழிபாடுகளில் ஈடுபட்டிருத்தல் அவசியமாகும். மேலும் உலக விஷயங்களில் ஈடுபடுதல் மற்றும் தேவையற்ற காரியங்களை விட்டும் தவர்ந்து இருத்தல் அவசியமாகும். ஆனால் ஏதேனும் முக்கிய நலனை முன்னிட்டு இஃதிகாஃப் இருப்பவர் தனது குடும்பத்தாருடன் ஆகுமான பேச்சுக்கள் பேசுவதில் எவ்விதத் தவறுமில்லை. அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகின்றான்: இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்த இருக்கும்போது மனைவியர்களுடன் கூடாதீர்கள். (2 : 187)

லைலதுல் கத்ர்

லைலதுல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். ரமளான் மாத இறுதிப் பத்தின் ஒற்றைப்பட்ட நாட்களில் இந்த இரவு வருமென அதிகமனா நபி மொழிகள் கூறுகின்றன. இவ்விரவு ஒரு ஆண்டில் 27லும் மற்றொரு ஆண்டில் 25, 23, 21 29 போன்ற நாட்களிலும் வர வாய்ப்பிருப்பதால் இவ்விரவு ஒவ்வொரு ஆண்டிலும் 27ல் தான் வருமெனத் எண்ணி அமல்கள் செய்வது தவறாகும். அவ்விரவில் பாக்கியமும், அதிக நன்மையும், சிறப்பும் இருப்பதால் இந்த இரவு அருள்பாலிக்கப்பட்ட இரவு என்று அல்லாஹ் அல் குர்ஆனில் சிறப்பித்துக் கூறுகினறான். அந்த இரவில் மலக்குகள் நன்மைகள், அருட்பாக்கியங்கள், சிறப்புகள் ஆகியவற்றைக் கொண்டு பூமியில் இறங்குகின்றார்கள். அந்தச் சிறப்பு வைகரை உதயமாகும் வரையிலும் இருக்கும் என்று அருள்மறையாம் திருமறை குர்ஆன் சான்று பகர்கின்றது.

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) இரவில் இறக்கினோம். மேலும் கண்ணிய மிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அதில் மலக்குகளும், (ஜிப்ரீல் எனும்) ஆன்மாவும் தன் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்). அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (97 : 1-5)

நபியவர்கள் நவின்றதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கனிறார்கள்: விசுவாசத்துடனும், நன்மையை எதிர் பார்த்தும் எவர் லைலதுல் கத்ர் இரவில் தொழுதாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகினறன. (புகாரி, முஸ்லிம்). .

யா அல்லாஹ்! வழிகேட்டில் ஆழ்த்தக் கூடிய குழப்பங்களை விட்டும் எங்களைக் காத்தருள்வாயாக! நன்மையின் பக்கம் விரைந்து செல்லக்கூடிய, தீமைகளை விட்டும் விலகிச் செல்லக்கூடிய, சுவர்க்கத்து மாளிகைகளில் நிம்மதியாக தங்கி வாழக்கூடிய மக்களுடன் எங்களைச் சேர்த்து வைப்பாயாக! உனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தக் கூடிய, அழகாய் உனக்கு வழிபட்டு நடந்து உனது நேசத்தைப் பெற்றோரின் குழுவில் எங்களையும் இணைத்து வைப் பாயாக! கருணை மிக்க இறைவனே! பயங்கரமான நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றி உனது கருணை கொண்டு எங்களுக்கும் எங்கள் பெற்றோருக்கும். மற்றும் எல்லர் முஸ்லிம்களுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக!.

Saturday, September 05, 2009

பெரியபட்டினம் - சிறப்பு குர்ஆன் போட்டி

இந்த நோட்டிசை பெரிதாக்கி பார்ப்பதற்கு அதன் மேல் கிளிக் செய்யவும்.

Thursday, August 20, 2009

ரமழானின் பயனை பெறுவது எப்படி?" -மெளலவி முபாரக் மதனி(VIDEO)

மெளலவி முபாரக் மதனி அவர்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்-கோபர் இஸ்லாமிய மையமும் தமிழ் தஃவா கமிட்டியம் இணைந்து கடந்த 19-09-2007 அன்று இரவு அல்கோபர் நகரின் மையப்பகுதியில் அமைந்தள்ள அல்கோபர் இஸ்லாமிய மையத்தால் நடத்தப்படும் இஃப்தார் குடிலில் (நோன்பு திறக்கும் குடில்) சிறப்பான முறையில் ஒரு இஸ்லாமிய குடும்ப நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் பிரபல மார்க்க அறிஞர் முபாரக் மதனி அவர்களும், இந்தியாவை சேர்ந்த பிரபல அழைப்பாளர் மெளலவி அலி அக்பர் உமரி அவர்களும், இலங்கையை சோந்த பிரபல அழைப்பாளர் மெளலவி மன்சூர் மதனி அவர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த தலைப்புகளின் கீழ் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சிக்கு தமிழ் தஃவா கமிட்டியின் நிர்வாகி மறியாதைக்குறிய மக்கீன் நலீமி அவர்கள் தலைமை தாங்கி நடத்தி தந்தார்கள்.

நிகழச்சிக்குறிய ஏற்பாடகளை அல்கோபர் இஸ்லாமிய மையத்துடன் இணைந்து அல்கோபர் தமிழ் தஃவா கடமட்டியிர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர். அதன் தன்னார்வ தொண்டர்கள் அயராது உழைத்து இந்நிகழச்சியை சிறப்பாக நடத்தி தந்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஆன்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்திருந்து பயன் பெற்றனர்.

நிகழச்சியில் இலங்கையை சேர்ந்த மார்க்க அறிஞர் முபாரக் மதனி அவர்கள் "ரமழானின் பயனை பெறுவது எப்படி?" என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் வீடியோ தமிழ் முஸ்லிம் மீடியாவில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ் மக்கள் அணைவரும் இந்த வீடியோவை கண்டு இந்த ரமழானை நல்லபடியாக பணன்படுத்தி பயன் பெற வேண்டும். வீடீயோவை காண கீழே சொடுக்கவும்..


.
நிகழ்ச்சியின் அணைத்து வீடியோக்களையும் இன்னும் பல அற்புத தலைப்புக்களில் இஸ்லாமிய பயான் வீடியோக்களை காண :.
.

Saturday, August 15, 2009

நாங்களும் இந்துக்களே !! - சுதந்திர தின வாழ்த்துக்கள்



நாங்களும் இந்துக்களே!!
இந்தியா எங்கள் தாய் நாடு!! இஸ்லாம் எங்கள் வழிபாடு!!

முஸ்லிம்களாகிய நாங்கள் யார்?

முஸ்லிம்களாகிய நாங்கள், இந்தியத் திருநாட்டில், இந்திய நாட்டவருக்குப் பிறந்த இந்தியராகிய நாங்கள் இஸ்லாத்தை எங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளோம். எம் இந்திய திருநாட்டிற்காக அன்றைய தேசவிடுதலைப் போராட்டத்திலிருந்து நேற்றைய கார்க்கில் யுத்தம் வரை எங்களின் சதவிகிதத்திற்கும் அதிகமாக உயிர்தியாகம் செய்துள்ளோம். நாங்கள் இந்தியராக இங்குதான் பிறந்தோம் இங்குதான் வாழ்கிறோம் இங்குதான் செத்ததுமடிவோம் என்ற இலட்சியத்தில் இருக்கிறோம். நமது நாடு என்று வரும்போது இங்குள்ள ஒரு பிடி மண்ணையும் எவருக்கும் விட்டு கொடுக்க மாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

முஸ்லிம்களாகிய எங்களைப் பார்த்து நீ இஸ்லாமியனா? அல்லது இந்தியனா? என்று வினவுவது உனக்கு அம்மா முக்கியமா? அப்பா முக்கியமா? என்று கேட்பதற்குச் சமம். அடிப்படையில் இப்படி கேட்பதே முரண்பாடானது. ஏனெனில் முஸ்லிமா என்ற கேள்வி ஒருவரின் மதநம்பிக்கையை பற்றி வினவுவது. இந்தியனா என்ற இரண்டாவது கேள்வி அவரின் தேசத்தைக்குறித்து வினவுவது. எனவே 'இந்திய முஸ்லீம்களா' அல்லது 'முஸ்லிம் இந்தியர்களா என்ற கேள்வியே அர்தமற்றது.

இந்தக் கேள்விக்கு ஒருபடி மேலாக பதில் சொல்கிறோம். அது, பூலோக விதியின் படி இந்துக்கள் என்னும் சொல் 'இந்துச் சமவெளியில் வாழும் மக்கள்' என்பதைக் குறிக்கும். படைத்த இறைவனாகிய அல்லாஹ்வை கடவுளாகவும், நபிகள் நாயகத்தை இறைவனின் தூதராகவும், இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகவும் ஏற்றுக்கொண்ட இந்திய முஸ்லிம்களாகிய நாங்கள் இந்துச் சமவெளியில் வாழுகின்ற காரணத்தால் பூலோக விதியின்படி மட்டும் நாங்களும் இந்துக்களே என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறோம்.

ஆனாலும் நம்நாட்டு இராணுவ ரகசியத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பார்ப்பன கும்பலால் வகுக்கப்பட்ட இந்துமத தத்துவங்கள் பகுத்தறிவிற்கும், உண்மைக்கும், நீதிக்கும், தர்மத்திற்கும் எதிராக
இருப்பதால் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.

கடந்த (10-08-2007) தினமணியில் 'முஸ்லிம் இந்தியன் பெயர் மாறுகிறது' என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் வெளியாகியது அதற்கு "இஸ்லாமிய இணையப் பேரவை" தக்க பதில் அளித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது அந்த கட்டுரையில் இருந்து.....முழு கட்டுரையையும் வாசிக்க இங்கு சொடுக்கவும்.

THANKS : WWW.IIPONLINE.ORG

Wednesday, August 05, 2009

காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி

காஞ்சி அப்துல் ரவூஃப் பாக்கவி அவர்களுடன் முகவைத்தமிழன் ஒரு நிகழ்ச்சியில்
காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி
இன்று காஞ்சி அப்துல் ரவூஃப் பாகவி எனும் ஒரு காவியத்திற்கு பிரிவு உபச்சார நிமித்தமாக நாம் கூடியுள்ளோம்! அவரைப்பற்றிச் சொல்ல பல விஷயங்கள் உண்டு என்பதால் அவற்றை பகுதி பகுதியாக பிரித்துக் கூறப்போகிறேன்! முடிவில் நீங்கள் விருப்பப்பட்டால் மொத்தமாகவும் .. இன்னும் சத்தமாகவும் கூற நான் தயார் என்று கூறி நிகழ்ச்சிக்குள் செல்கிறேன்!

இவர் ஒரு கவிஞர்

ஒற்றை வரி ஹைக்கூ

கருவெடுத்து

புதுக்கவிதைகளின்

புதுமைச் சேர்த்து

மரபுக்கவிதைகளின்

மரபுமீறாமல்

இவர்தரும் அதிரடி

கவி கேட்போர்

‘சும்மா அதிருதில்ல”

எனச்சொல்வார்…


இவர் ஒரு பேச்சாளர்

வார்த்தைச் சரம் தொடுத்து – அதில்

தன் சிம்மக்குரல் கோர்த்து – கூட்டத்தை

சிறுத்தைபோல் சில கணம் பார்த்து

அவர் கர்ஜி;கும் சத்தத்தில்

கட்டுண்டு கிடக்கும் கூட்டம்

இவர் மேடையில் நடத்துவார்

பேச்சில் ஆட்டம் பாட்டம்


இவர் ஒரு ஆன்மீகவாதி

ஆன்மீகம் என்றுவிட்டால்

யார்மீதும் நாட்டமில்லாமல்

உலகின்மீது நோட்டமில்லாமல்

தன்னைச்சுற்றிக் கூட்டமில்லாமல்

தனித்திருப்பார் சிலர்!

இவர் இலக்கியம் இஸ்லாம்

இரண்டையும் இருகண்களாய் கொண்டவர்

இலக்கியம் என்று வந்துவிட்டால்

கலக்கிடுவார்

இஸ்லாம் என்று வந்துவிட்டால்

கலங்கிடுவார்


மதமென்று மதங்கொள்ளாமல்

மார்க்கமெனும் வாழ்க்கை நெறிகாட்டி

இவர் செய்யும் மார்க்கப்பிரசாரம்;!

மனம்நொந்தோருக்கும் கிடைக்கும்

வாழ்க்கைப் பிரசாதம்!

இவர் ஒரு நடிகர்

இதற்கு முன் வந்தமுகம்

தெரிந்திருந்தாலும்

இந்த முகம் உங்களுக்கு

தெரிய வாய்ப்பில்லை

விருச்சங்கள் சிலநேரம்

விதைக்குள்ளே நசுக்கப்படுவதுபோல்

இந்தத் திறன் இவர்தம்

பள்ளி நாட்களுடன்

தள்ளிப் போனது

பச்சையப்பன் கல்லூரியில்

இவர் நடித்த நாடகங்களின் காட்சிகள்

அவர்தம் நடிப்புத்திறனுக்கான மாட்சிகள்!


இவர் ஒரு பழம்பெரும்கவிஞர்

பலம்பெற்ற கவிஞர் - அவ்வப்போது

பழம்பெற்ற கவிஞர்

புலவர் நாராயணனால்

நடத்தப்பட்ட

மகிழ்நன் தமிழ்க்கழகத்தினரால்

நிகழ்த்தப்பட்ட பழங்கள் கவியரங்கி;ல்

இவர் பாடிய ‘மாதுளம்பழம்’ கவிதை

இவர் இலக்கிய வாழ்விற்கு ஆனது விதை!


எத்தனையோ திறமைகள் இவருள்

அடங்கியிருந்தாலும் - அவையில்

அடங்கியிருத்தல் இவர்

தனித்திறன்..

அதற்கேற்றார் போல்

வேலூர் கவியரங்கில்

இவர்பாடிய அவையடக்கக் கவிதை

இவருக்கு சபையடங்கா கைத்தட்டை

பெற்றுத்தந்தது!

இவர்தம் கவித்திறனை விற்றுத்தந்தது1


இவர் ஒரு திறனாய்வாளர்;

மற்றவர் இவர் திறன் ஆய்வு

செய்து கொண்டிருந்த வேளையில்

மு.மேத்தாவின்

கண்ணீர்ப+க்களை இவர்செய்த

திறனாய்வு

இவர் திறன் மேன்படச்

செய்த ஆய்வு

என்றுமே இல்லை இவர்தம்

திறன் ஓய்வு

இவர் ஒரு கவிக்கடல்

இவர் ஒரு கவிக்கடல் - ஆம்

அரபுமொழி என்று விட்டால

இவர் ஒரு அரபிக்கடல்!

இந்தி உருது என வந்துவிட்டால்

இவர் ஒரு இந்து மகா சமுத்திரம்

முத்தமிழை முகர்ந்து விட்டால்

முக்கடல் சங்கமம்

கவி எழுத கங்கணம் கட்டிவிட்டால்

இவர் ஒரு செங்கடல்

இதை அன்றே அறிந்தோ

என்னவோ சென்னையில்

கவிஞர் பொன்னடியான்

நடத்திய கடற்கரை கவியரங்கில்

இந்த கவிக்கடலின் பங்கு ஏராளம்

கவிதைகளோ தாராளம்!


இவருக்கு வெடிகுண்டு

வைத்த அனுபவமும் உண்டு

எவன் எப்படி போனால் என்னவென்று

வெறித்தனமாய் வைக்கப்படும்

வீணர்களின் வெடியல்ல இது

எம்மதமும் சம்மதம் என வேற்றுமையை அகற்ற

வைக்கப்பட்ட கவிதை வெடிகுண்டு இது..

ஆம்.. சென்னை இஸ்லாமியக் கவியரங்கில்

வேற்றுமைக்கு வெடிவைப்போம்

என்ற தலைப்பில் இவர் பாடிய கணங்கள்

சமூக அக்கறை கொண்டோரின்

மறக்க இயலா தினங்கள்!


25 வருடங்கள் இலக்கிய உலகைவிட்டு ஒதுங்கியிருந்தார்! சில காலம் பதுங்கியிருந்தார்! புலி பதுங்கல் பாய்வதற்கே! பாயும் காலம் வந்தது.. காவிரிமைந்தனின் பழக்கம் தந்தது.. கிரசண்ட் டி.வி.யின் முதல் சந்திப்பு அந்தப் பிறை தொலைக்காட்சியின் சந்திப்பிற்குப்பிறகு அவர்தம் இலக்கிய ஆர்வ பிறை முழுநிலவாக வளர ஆரம்பித்தது! நிலாவண்ணனாக ஜொலி ஜொலித்தது!


அப்படி புதைந்த சந்திரனை

தூசுதட்டி தூக்கிய நிறுத்திய பெருமை

நம் காவிரிமைந்தனை; சாரும்..

அவரை அப்துல் ரவ+ப் சார்பாகவும் சிலநொடிகள் கரகோசத்தினால்

சுரம் சேருங்கள்..

இங்கு காவிரிமைந்தனைப் பற்றி ஓரிருவரிகள் கூறியாக வேண்டும் - சில பேர் கவிதைகளை உருவாக்குகிறார்கள். வெகுசிலர் அந்தக் கவிஞர்களை உருவாக்குகிறார்கள். அந்த வெகுசிலரில் ஒருவர் நம் காவிரிமைந்தன். ஆவர் முழுநேர கவிஞர் ஆனாலும் சிலநேரம் அவர் ஒருதொல் பொருள் ஆராய்ச்சியாளர்! அவர் ஒரு அகழ்வாரர்ய்ச்சியாளர்! அதிகம் புகழ்வதாய் நினைத்துவிட வேண்டாம்! கவிதைக்கு பொய்யழகு என்றாலும் என் கவிதையில் நான் அழகு சேர்க்க முயற்சிப்பதில்லை. வானலை வளர்தமிழின் பெரும்பாலோனாரில் யாரிடம் கேட்டாலும் என்னை, எனது திறமையைக் கண்டுபிடித்தவர் காவிரிமைந்தன் .. எனது திறன்களை என்னுள் தோண்டியெடுத்தவர் காவிரிமைந்தன் என்பார்கள்! மொத்தத்தில் இவர் வானலை வளர்தமிழின் ஆராய்ச்சியாளர்!


அதன்பின் ரவ+ஃபின் வளர்ச்சிக்கு அவர்தம் கவிதை எழுத்திற்கு அவர் எண்ண ஓட்டத்திற்கு எந்த எழுத்தாணியும் ஈடுகொடுக்கவில்ல என்பது வேறு விஷயம்!


அதன்பின் வானலை வளர்தமிழில் அவர் பாடிய கவி வரிகள்! தேனலை நினைவுகளுடன் கூடிய கவிச்சரங்கள்!


ரவ+ஃப் அவர்கள் கவிபாடும் வானலை வளர்தமிழில் நாமும் பாடுவதே பெருமை என்போர் இங்கே ஏராளம்!

இவரின் மறுபக்கத்தை அறிய முயன்றால் நமக்குள் ஒரு பயம் வந்து விடுகிறது!

இவரா.. இவருடனா நாம் சக நண்பராக இத்தனை நாள் பழகிவந்தோம் .. ஆச்சரியத்தில் மூழ்கிப்போகிறேன்..

திருக்குர் ஆன் .. இஸ்லாமியர்களின் புனித நூல்..

அதன் தமிழ் மொழி பெயர்ப்பில் இவரின் பங்கு ஏராளம்!

மொழி பெயர்ப்புக் குழுவில் இவரும் ஒருவர்.. அதன் ஒருங்கிணப்பாளர்

புகாரி – ஹதீஸின் 6 பாகங்கள் மொழிபெயர்ப்பு

மொழி பெயர்ப்புக் குழுவில் இவரும் ஒருவர்.. அதன் ஒருங்கிணப்பாளர் -

நபி வரலாறு – பெரியவர்கள், சிறியவர்கள் இருவருக்குமாக தனித்தனியாக..

இப்படி இவரின் பின்னணியில்

பல முன்னணிப் பதவிகள் உண்டு..


இன்று வரை இவர் எழுதப்படாத கவிதை

விடைகாண இயலா வினா..

இவர் இங்கு தொட்டுச்சென்ற இலக்கியப் பயணத்தை

நாட்டில் சென்று தொடர்ந்து இன்னும் பல வெற்றிகளைப் பெற

எல்லாம் வல்லோனை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்!


RAJAKHAN ARCHITECT
dateTue, Aug 4, 2009 at 11:42 AM
ABDUL RAVOOF - KEEZHAI RAZA WRITE UP (PRESENTED ON THE STAGE)

நன்றி : முதுவை ஹிதாயத்

Saturday, July 18, 2009

இஸ்ராவும் மிஃராஜும்

இஸ்ராவும் மிஃராஜும்


நபி (ஸல்) அவர்கள் மேற்கொண்ட விண்ணுலக யாத்திரையானது ஓர் அதிசய நிகழ்வாகும். ஓர் அற்புதமாகவும் மாத்திரமின்றி பல தத்துவங்களையும்- தாத்பரியங்களையும் தன்னகத்தே பொதிந்ததாகவும்- அடிப்படையான பல உண்மைகளை உணர்த்துவதாகவும் அமைந்துள்ளது. நபியவர்களின் இவ்விண்ணுலக யாத்திரை இரு கட்டங்களைக் கொண்டதாக அமைந்தது. மக்காவில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து பலஸ்தீனில் அமைந்துள்ள அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு மேற்கொண்ட பயணம் அதன் முதற் கட்டமாகும். அதனை அல் இஸ்ரா என வழங்குகிறோம். இப்பயணத்தின் இரண்டாம் கட்டமாக நபியவர்கள் அல் மஸ்ஜிதுல் அக்ஸாவிலிருந்து வானுலகம் நோக்கி அழைத்துச் செல்லப்பட்டமை அமைந்தது. இதுவே மிஃராஜ் எனப்படுகிறது. இந்த யாத்திரையின் முதற் கட்டத்தை அல்குர்ஆன் கீழ்வருமாறு விளக்குகிறது.

(அல்லாஹ்) மிகப் பரிசுத்தமானவன். அவன் தன் அடியாரை பைத்துல் ஹராமிலிருந்து (கஃபத்துல்லாஹ்விலிருந்து தொலைவிலிருக்கும் பைத்துல் முகத்தஸிலுள்ள) மஸ்ஜிதுல் அக்ஸாவிற்கு ஓரிரவில் அழைத்துச் சென்றான். (மஸ்ஜிதுல் அக்ஸாவின்) சற்றெல்லைகளை நாம் அபிவிருத்தி செய்திருக்கின்றோம். நம்முடைய அத்தாட்சிகளை அவருக்குக் காண்பிப்பதற்காக (அவ்வாறு அழைத்துச் சென்றோம்); நிச்சயமாக அவன் (யாவற்றையும்) செவியுறுவோனாகவும். பார்ப்போனாகவும் இருக்கின்றான்.

நபியவர்களின் இப்புனித யாத்திரை முஸ்லிம்களின் இரு முக்கிய தலங்களுடன் தொடர்புற்று இருப்பதைக் காண முடிகிறது. அல் மஸ்ஜிதுல் ஹராமும்- அல் மஸ்ஜிதுல் அக்ஸாவுமே இவ்விரு புனித ஸ்தலங்களாகும்.


Wednesday, June 24, 2009

சஹாபாக்கள் ஒருவரை ஒருவர் வெட்டி கொண்டார்கள், அவர்களை விட நாம் பெட்டர் - பி.ஜே

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே

கடந்த ஞாயிறு (21.06.09) அன்று இமயம் டி.வியில் சகோ. பி.ஜே அவர்கள் இலண்டன் நேயர்கள் ஆன்லைன் மூலம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் கருத்து வேறுபாடுகள் பற்றிய கேள்விக்கு: .


“கருத்து வேறுபாடுகள் இன்று மட்டுமல்ல, ஸஹாபாக்கள் காலத்திலேயே இருந்தது. அபூபக்கர், உமருக்கு பின் எல்லா குழப்பங்களும் இருந்தன என்றவர் உமருக்கு எதிராக அவர் மகன் கொடுத்த பத்வாக்களே நூற்றுக்கணக்கில் உள்ளன. அபூபக்கர் ஆட்சி மட்டும் தான் சரியாக இருந்தது என்றவர் அதையும் தேடி பார்த்தால் குறை தெரியும் என்றார். மேலும் நாம் அடித்து கொள்வதில்லை. ஸஹாபாக்கள் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டார்கள், வெட்டி கொண்டார்கள், அந்த சமுதாயத்தை விட நம் சமுதாயத்தை அல்லாஹ் பெட்டராக வைத்திருக்கிறான்”


என்று போடு போட்டார். அது போல் அமீர் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பத்து பேர் உள்ள ஜமாத்தே இஸ்லாமி எல்லாம் அதற்கு ஒரு அமீர் வைத்திருப்பான். எல்லா அமைப்புகளும் அமீரின் பேச்சை முழுமையாக பின்பற்றுகின்றன. த.த.ஜ மட்டும் தான் குரான் - ஹதீஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது எனும் தொனியில் பேசினார்.

த.த.ஜ சொந்தங்களே, குரான் ஹதீஸூக்கு நீங்கள் முக்கியத்துவம் அளிக்கும் ஓரே உலகளாவிய இயக்கம் எனும் அண்ணனின் வார்த்தை படி சில கேள்விகள். அதற்கு முன் நினைவூட்டலுக்கு ஒர் வாரம் முன் கேட்ட இரு கேள்விகளை மீண்டும் வைக்கிறேன் (அபஸ வதவல்லா சம்பந்தமாக)

1. குறைஷிகள் அவ்வாறு சகோதரத்துவம் ஒன்றை தவிர இஸ்லாத்தில் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாக சொன்னார்களா ? அதற்கான ஆதாரம்?

2. நபி (ஸல்) குறைஷிகள், அடிமைகள் இருவரையும் ஒன்றாக நடத்த கூடாது என்று எண்ணிணார்களா ? அதற்கான ஆதாரம்?

புதிய கேள்விகள்

3. ஸஹாபாக்களை விட நாம் பெட்டர் ஏனென்றால் நாம் அடித்து கொள்ளவில்லை என்கிறாரே அப்போது தமுமுக - ததஜ, கடையநல்லூர் த.த.ஜ - ஜாக் விவகாரம் எல்லாம் என்ன? வெட்டி கொல்ல வில்லை என்றார் அதிகாரம் கொடுக்க பெற்ற இதர நாடுகள் பாகிஸ்தான், ஆப்கன், ஈராக்கில் வெட்டி கொள்ளவில்லையா?

4.ஸஹாபாக்களிடத்தில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட்டு இருந்தார்களே? இப்னு உமரும் உமரின் ஆட்சியை ஏற்று தானே இருந்தார்? நாம் ஒரு தலைமையின் கீழ் இருக்கிறோமோ

5.அலீ (ரலி) யும் ஆயிஷா (ரலி) யும் சண்டை போட்டு கொண்டாலும் போரில் தோற்று போன பிறகு முஃமின்களின் அன்னையை அலீ (ரலி) கண்ணியத்தோடு அனுப்பினார்களே? அவர்களும் இற்க்கும் வரை அதை நினைத்து வருந்தினார்களே? அந்த பண்பு நம்மிடம் உள்ளதா ?

6. ஸஹாபாக்களை எப்படியாவது கீழாக பேசி எதையும் சாதிக்க போவதில்லை. என் தோழர்களை ஏசாதீர்கள். உஹது அளவு தர்மம் செய்தாலும் அவர்களுக்கு ஈடாக மாட்டீர்கள் எனும் நபிமொழி மறந்து விட்டோமா?


7. அல்லாஹ்வையும் அவன் தூதரின் திருப்தியையும் தவிர அனைத்தையும் அர்ப்பணித்த அபூபக்கர் (ரலி), சுவன நற்செய்தி பெற்ற பிறகும் தன் அமலில் நம்பிக்கை இல்லாமல் முனாபிக் பட்டியலில் தன் பெய்ர் உள்ளதா என கேட்ட உமர்(ரலி), தான் கொடுத்த தர்மத்தின் காரணத்தால் செய்த பாவம் மட்டுமல்ல, செய்யும் பாவத்தையும் அல்லாஹ் மன்னித்து விட்டான் என சொல்லப்பட்ட உஸ்மான் (ரலி), ஹிஜ்ரத்தின் போது உயிரே போய் விடும் அபாயம் இருந்தும் நபிக்கு பதிலாக படுத்த அலீ (ரலி), 100% சொத்தை நபியோடு வாழ அர்ப்பணித்த சுஹைப் (ரலி), சொத்து சுகங்களை இழந்து கபனிட கூட துணியின்றி ஷஹீதான முஸைப் (ரலி) இது போன்ற ஸஹாபாக்களை வரலாற்று ஓட்டத்தில் நாம் எங்குமே பார்க்க இயலாது. அப்படியிருக்க அவர்களோடு ஒப்பிடுவோதோ, அல்லது ஒரு சில தவறுகள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக குறை சொல்வதோ எப்படி சரியாகும்?

த.த.ஜ சொந்தங்களே பதில் சொல்லுங்கள்

அன்பு சகோதரன்
ஃபெரோஸ்கான் (fiverose@gmail.com)

மேலே உள்ள மின்னஞ்சலுக்கு சகோதரர் அபூசுமையா அவர்கள் தான் கேட்ட கேள்விகளுக்கே இன்னும் பதில் அளிக்கவில்லை இதற்கா பதில் சொல்ல போகிறார்கள் என்று அனுப்பிய ஆதங்க பதில் மின்னஞ்சல்.

வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...
அன்புச் சகோதரர் 'ஃபெரோஸ்கான்,

உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேற வாழ்த்துக்கள்!
ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை!

1. கடலூர் முபாஹலா விஷயமாக குர்'ஆனிலிருந்து கேட்ட ஆதாரத்திற்கு இதுவரை பதிலில்லை.

2. கடையநல்லூர் பள்ளிவாசலில் ஜமாஅத் தொழுகைக்கு இழைத்த இடையூறு தொடர்பாக ஆதாரம் கேட்டதற்குப் பதிலில்லை.

3. திருவிதாங்கோட்டில் தௌஹீது பள்ளிவாசல் எங்குள்ளது என்பதற்கு இதுவரை பதிலில்லை.

4. உண்டியல் பணம் தொடர்பாக ஜாக்கின் மீது இட்டுக்கட்டி, காட்டிக்கொடுத்ததற்கு இதுவரை பதிலில்லை.

5. தொழுகையில் தொடை தெரியும் படியான ஆடை உடுத்து தொழுவதற்கான ஆதாரத்திற்கு இதுவரை பதிலில்லை.

6. கேரள தௌஹீது ஜமாஅத்தினர்களான முஜாஹிதீன்கள் குறித்து அவதூறு பேசியதற்கு இதுவரை பதிலில்லை.

7. "தடம் புரண்டவர்கள் பட்டியல்" வைத்ததற்கு இதுவரை விளக்கம் இல்லை.

8. குர்'ஆன் மொழிபெயர்ப்பில் நபி(ஸல்) அவர்கள் கூறாத விஷயத்தை நபிகளின் மீது இட்டுக்கட்டி எழுதியதற்கு இதுவரை பதிலில்லை.

9. கத்தரில் சைபுல்லா ஹாஜாவிற்கு தாயி விசா அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணத்திற்கு இதுவரை பதிலில்லை.

10. சுனாமி கணக்கில் ததஜ சீருடை வாங்கியதை இணைத்தற்கு இதுவரை பதிலில்லை.

11. அன்னிய பெண்ணுடன் ஒரே இருக்கையில் அமர்ந்து பிரயாணம் செய்வது தொடர்பாக இதுவரை பதிலில்லை.

இப்படி எண்ணற்றவை அடுக்கிக் கொண்டே போகலாம்.

விவாத மன்னர்களாக பெயர் எடுத்துள்ள ததஜ இயக்கத்திற்குத் தங்களின் செயல்பாடுகள் மீதான மார்க்க விரோத செயல்பாடுகள் குறித்து கேட்கப்படுவதற்குப் பதில் இல்லாமல் போவது ஆச்சரியமான விஷயம்.

சகோதரர் அதிரை ஃபாரூக், சகோதரர் அபூ நூறா, சகோதரர் சாதிக், சகோதரர் அமீன், சகோதரர் குமரி முஸ்லிம் என எண்ணற்ற சகோதரர்கள் இணையத்தில் ததஜவுக்கு ஆதரவாக எழுதிக் கொண்டும் மற்றவர்களை விமர்சித்துக் கொண்டும் இருக்கும் நிலையில், தங்கள் மீதான மார்க்க விரோத செயல்பாடுகள் குறித்துக் கேட்கப்பட்ட போது அமைதி காப்பதன் அர்த்தம் ஏனோ?

இதே சம்பவம் ததஜ சகோதரர்கள் மற்றவர்கள் மீது கேள்வி கேட்டு, அவர்கள் அமைதியாக இருந்து விட்டால், "பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம்" என்ற சொல்லை எத்தனை முறை நாம் இவர்களிடமிருந்து கேட்கவேண்டி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

"பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம்" என்பது பூமராங்காக ததஜ சகோதரர்களுக்கே திரும்ப வந்திருப்பது இறைவன் அவர்களின் தலைக்கனம், அகங்காரத்திற்குக் கொடுத்த மிகப் பெரிய அடியாக எடுத்துக் கொள்ளலாம்.

"தூய ஏகத்துவத்துக்குச் சொந்தக்காரர்கள்" என சுயமாக பட்டம் சூட்டிக் கொண்டு பெருமை அடித்துக் கொண்டால் போதாது. அதற்கு ஏற்ப தங்களின் செயல்பாடுகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இனிமேலாவது ததஜ சகோதரர்கள் உணர்வார்கள் என்று நம்புவோம்.

என் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அமைதியாகி ஒதுங்கி விடுவதன் மூலம், இவர்கள் அல்லாஹ்வுக்கு அல்ல, ததஜவுக்கே தக்லீது செய்கின்றனர் என்பது அப்பட்டமாக தெளிவாகிறது. அவ்வாறு அல்ல, ததஜவினர் அல்லாஹ்வுக்கு மட்டுமே தக்லீது செய்வோம் என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை இப்போது ததஜ சகோதரர்களுக்கு இருக்கிறது.

எனவே, சகோதரர் 'ஃபெரோஸ்கானின் கேள்விகளுக்காவது விளக்கத்தோடு வருவார்களா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

Friday, June 19, 2009

‘தக்லீது’ ஓர் ஆய்வு! – அபூ ஃபாத்திமா

‘தக்லீது’ ஓர் ஆய்வு! – அபூ ஃபாத்திமா
மறு பதிப்பு

இன்றை சூழ்நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களிடம் ‘தக்லீது’ செய்யாதீர்கள். ‘தக்லீது’ குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முழுக்க, முழுக்க முரணானதாகும் என்று சொன்னவுடன், தக்லீது செய்யக்கூடாது என்றால், மனிதர்களால் ஏட்டில் கோர்வை செய்யப்பட்டுள்ள குர்ஆனைப் பார்க்கக் கூடாது. மனிதர்களால் சேகரம் செய்து தரப்பட்டுள்ள ஹதீஸுகளைப் பார்க்கக் கூடாது. மனிதர்களால் எழுதப்பட்டுள்ள நூல்களைப் பார்க்கக் கூடாது. மனிதர்களின் பேச்சுக்களைக் கேட்கக்கூடாது. அந்நஜாத்தைக் பார்ப்பதும் கூடாது: காரணம் இவை எல்லாம் தக்லீதே ஆகும் என்று உடனே சொல்லி விடுகிறார்கள். தக்லீது செய்யாமல் நடப்பதாக இருந்தால், சுயமாக ஞானோதயத்தில் விளங்கி நடக்க வேண்டும். இது சாத்தியமா? நிச்சயமாக சாத்தியம் இல்லை. ஆகவே தக்லீது செய்ததுதான் ஆகவேண்டும் என்று தக்லீதை நியாயப்படத்த பெரம்பாலான முஸ்லிம்கள் முனைகிறார்கள்.

இந்த ஹிமாலயத் தவறுக்கு அடிப்படைக் காரணம். ‘தக்லீது’ என்றால் பின்பற்றல் என்ற தவறான பொருளை காலங்காலமாக அவர்கள் விளங்கி வைத்திருப்பதேயாகும். ‘தக்லீது’ என்ற அரபி பதம் ‘பின்பற்றல்’ என்ற பொருளை ஒரு போதும் தராது. ஆனால் தலைமுறை, தலைமுறையாகத் ‘தக்லீது’ என்ற அரபி சொல்லுக்குப் ‘பின்பற்றல்’ என்ற தவறான பொருள். சுயநலக்காரர்களால் அவர்களின் உலக ஆதாயம் கருதி கொடுக்கப்பட்டு மக்களிடையேயும் அதுவே வலுவாக வேரூன்றிவிட்டது.

அல்குர்ஆன் வசனங்கள் அனைத்திலும், ஹதீஸ்கள் அனைத்திலும் பல இடங்களில் பின்பற்றுதல் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தும் ஒரு இடத்தில் கூட இந்த ‘தக்லீது’ பதம் பயன்படுத்தப் படவில்லை என்பது முஸ்லிம்களின் ஆழ்ந்த சிந்தனைக்குரிய ஒரு விஷயமாகும். இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால் தவறான பின்பற்றுதலுக்கும். இந்தத் ‘தக்லீது’ பதம் பயன்படுத்தப்படவே இல்லை என்பதையம் முஸ்லிம்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டுகிறேன்.


‘உங்கள் ரப்பிடமிருந்து, உங்களுக்க இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள்: அவனையன்றி வேறெவரையும் பாதுகாவலர்களாக்கி அவர்களைப் பின்பற்றாதீர்கள்: (எனினும் இதன்படி) நல்லுணர்வு பெறுவோர் உங்களில் வெகு சொற்பமே’. அல்குர்ஆன் 7;3


இந்த வசனத்தில் ‘வலாதத்தபிவூ’ என்ற பதமே பின்பற்றாதீர்கள் என்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தக்லீத் என்ற பதம் பயன்படுத்தவில்லை.

‘எங்கள் ரப்பே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர் (ஸய்யிது) களுக்கும், எங்கள் பெரியார் (அகாபிரீன்)களுக்கும் வழிப்பட்டோம்: அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள்’ (அல்குர்ஆன் 33:67)


நரகவாதிகள் நரகில் வேதனை செய்யப்படும் போது அவர்களின் ஓலம் இது.

இங்கும் தவறான பின்பற்றுதலுக்கு (வழிப்படுதல்) ‘அதஃனா’ என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மாறாக, தக்லீத் என்ற பதம் பயன்படுத்தப்படவில்லை.


‘அல்லாஹ் இறக்கி வைத்ததைப் பின்பற்றுங்கள். என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் நடக்கக் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்’. அல்குர்ஆன் 2:170


இங்கு வழி தவறியவர்களும் ‘நத்தபிவூ’ என்ற பதத்தையே தவறான பின்பற்றுதலுக்குப் பயன்படுத்தியுள்ளதை பார்க்கிறோம். அனால் தக்லீத் என்ற பதத்தைப் பயன்படுத்தவில்லை.

ஆக குர்ஆன், ஹதீஸுகள் முழுக்கத் தேடினாலும் பின்பற்றுதலுக்கு, அது சரியான பின்பற்றுதலாக இருந்தாலும் சரி, தவறான பின்பற்றுதலாக இருந்தாலும் சரி, ‘தக்லீது’ என்ற பதம் ஓரிடத்தில் பயன்படத்தப்படவில்லை என்பதைச் சகோதர, சகோதரிகள் தங்கள் உள்ளங்களில் நன்கு பதித்துக் கொள்ளவும். எவர் உங்களிடம் வாதம் செய்ய முன்வந்தாலும் குர்ஆனில் ஒரு வசனத்தையோ, உண்மை ஹதீதுகளில் ஒரு ஹதீதையோ, பின்பற்றுதலுக்கு ‘தக்லீது’ பதம் செய்ய பயன் படுத்தப்பட்டுள்ளதைக் காட்டச் சொல்லிக் கேளுங்கள். அப்போது தான் உண்மை உங்களுக்குப் புரிய வரும்.

குர்ஆனில் சூரத்துல் மாயிதாவில் 5:2,97 ஆகிய இரண்டு வசனங்களில், தக்லீதைச் சேர்ந்த ‘கலாயித்’ என்ற பதம் மாலைகளால் அடையாளமிடப்பட்ட குர்பானி, மிருகங்களுக்காகப் பயன்படத்தப்பட்டுள்ளது. ஹதீஸுகளிலும் அடையாளமிடப்பட்ட குர்பானி மிருகங்களைக் ‘கலாயித்’ என்ற அரபி பதத்தின் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


‘தக்லீது’ என்னும் அரபி பதத்தின் மூலம் : கல்லத –யுகல்லிது – தக்லீத்.

கல்லதஹூஃபீகதா, தபிஅஹுமின் ஹ(க)ய்ரி தஅம்முலின் வலாநழ்ரின் எவ்விதப் பார்வையும், பரிசீலனையுமின்றி ஒருவரைப் பின்பற்றல் (கண்மூடிப் பின்பற்றல்) என்பதாகும்.


தக்லீத் தனது மூதாதையர்கள், போதகர்கள், தலைவர்கள் போன்Nறூரை, கொள்கை, கோட்பாடு, கல்வி, செயல்பாடு ஆகியவற்றில் எவ்விதப் பார்வையும், பரிசீலனையுமின்றிப் பின்பற்றல் (கண்மூடிப் பின்பற்றல்) என்பதாகும்.

கிறிஸ்தவர்களிடத்தில் தக்லீது

அவர்களின் வேத நூல்களில் பதிலு வெய்யப்படாது. அவர்களின் பாரதிரிகளின் போதனைகளைக் காலங்காலமாக எவ்வித பார்வையும், பரிசீலனையுமின்றிப் பின்பற்றல் (கண்மூடிப் பின்பற்றல்) என்பதாகும். முன்ஜித்: அரபி மொழி அகராதி

குர்ஆன், ஹதீஸுகளில் காணப்படாத ‘தக்லீது’ பதம் முன்னைய மதவாதிகளால் பயன்படுத்தப்படகின்றது. அவர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி வழி கெட்டுச் செல்லும் ஒரு கூட்டமே, தங்கள் சுய நலம் கருதி, இஸ்லாத்தின் இந்தத் தக்லீதை நுழைத்தள்ளனர் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகின்றது. இதை நபி(ஸல்) அவர்கள் 1400 வருடங்களுக்கு முன்பே அழகாக முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

எனது சமுதயாத்திற்கு ஒரு காலம், பனூ இஸ்ராயீல்களுக்கு வந்ததுபோல், ஒரு செருப்பிற்கு அடுத்த செருப்பு ஒத்திருப்பது போல் வந்து சேரும்: அவர்களிலொருவன் தனது தாயிடம் (தவறு செய்ய) பகிரங்கமாக வந்திருந்தால், அவ்வாறே (தவறு செய்பவன்) எனத சமுதாயத்திலும் வருவான்.


‘நிச்சயமாக பனூ இஸ்ராயீல் 72 கூட்டங்களாகப் பிரிந்தார்கள்: எனது உம்மத்தினர் 73 கூட்டங்களாகப் பிரிவார்கள். அவர்களில் ஒர கூட்டத்தாரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் நரகத்தையடைவர்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார். அதற்கு (நபி தோழர்கள்) ‘அவர்கள் யார்” என்று கேட்க, ‘நானும் எனது தோழர்களும் எவ்வாறு நடக்கிறோமோ, அவ்வாறே நடப்பவர்கள்’. என்று விடையளித்தார்கள். (வேறு எந்தப் பயரையும் நபி(ஸல்) அவர்கள் அந்த வெற்றி பெறும் கூட்டத்திற்குச் சூட்டவில்லை என்பது இங்கு ஊன்றி கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்) அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி), நூல்கள்: திர்மிதி, அஹ்மத், அபூ தாவூத்.


அபுதாவூதில் முஆவியா(ரழி) அவர்களின் வாயிலாக பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனது உம்மத்தில் ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்களிடையே தான்தோன்றித்தனமான வகையில், அனாச்சாரங்கள், வெறி நாய் கடித்தவனது உடலில் அதன் விஷம் நரம்பு, தசைகள் அனைத்திலும் ஊடுருவிச் சென்று விடுவது போன்று, ஊடுருவிச் சென்றுவிடும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


‘உங்களின் முன்னோர்களை நீங்கள் சானுக்குச் சாண், முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள்: அவர்கள் உடும்பின் துவாரத்திற்குள் புகுந்திருந்தாலும் அவர்களை (அப்படியே) பின்பற்றுவீர்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு நாங்கள் ‘யாரஸுலல்லாஹ்! யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா கூறுகிறீர்கள்’ என்று கேட்டோம்: அதற்கு அவர்கள் ‘வேறு யாரை’ என்றார்கள்.அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரீ(ரழி), நூல் : முஸ்லிம்.


முன்னைய மதவாதிகளின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி அவர்கள் தக்லீதின் பேரால் செய்யும் காரியமான, ‘அவர்கள் அல்லாஹ்வை விட்டு, தம் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மரியமுடைய மகன் மஸீஹையும், தெய்வங்களாக்கிக் கொள்கிறனர்’ (அல்குர்ஆன் 9:31)


என்று அல்லாஹ் சொல்வது போல், இவர்களும் தக்லீதின் பேரால், அல்லாஹ்வை விட்டு தம் இமாம்களையும், ஆலிம்களையும்ட தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர். அவர்கள் தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும் கடவுள் என்று வணங்கவில்லை. தம் பாதிரிகளின் கூறு;றுக்கள். அவர்களின் வேதத்திற்கு முரணாக இருந்தாலும் எடுத்து நடந்தனர். இதே போல் முதல்லிதுகள், குர்ஆன், ஹதீஸுகளுக்கு நேர் முரணான காரியங்களை இமாம்கள், ஆலிம்கள் சொன்னார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் பின்பற்றுகின்றனர். நபி(ஸல்) அவரகள், வழிகெட்டுச் செல்வோர் பற்றிக் கூறியவற்றை அப்படியே முதல்லிதுகள் முழுக்க முழுக்க நிறைவேற்றகின்றனர். பனூ இஸ்ராயீல்கள் 72 கூட்டங்களாகப் பிரிந்தது போல், முதல்லிதுகளும் பல வழி தவறிய கூட்டங்களாகப் பிரிந்துள்ளனர். ஒவ்வொரு கூட்டமும் நபி(ஸல்) அவர்களை வழிகாட்டியாக எற்று நடக்கத் தவறிவிட்டனர். அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒருவரை இமாமாக ஏற்றுக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுகின்றனர். ஆக ஜோடி செருப்பில் ஒரு செருப்புக்கு மறு செருப்பு ஒத்திருப்பது போல், பனூ இஸ்ராயீல்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றுகின்றனர். இதிலிருந்து யூத, கிறிஸ்தவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுகிறவர்கள் முதல்லிதுகளே: குர்ஆன், ஹதஸ்களை மட்டும் எடுத்துச் செயல்படகிறவர்கள் அல்ல என்பது தெளிவாகின்றது.

இதே போன்று சூஃபிஸ தத்துவமும் (தரீக்கா பிரிவுகள், கபுருச் சடங்குகள்) இது முற்றினதால் ஏற்பட்டுள்ள துறவு மனப்பான்மையும், நபி(ஸல்) அவர்கள் போதித்த இஸ்லாத்தில் இல்லை. குர்ஆன், ஹதீஸ்களில் இவற்றிற்குரிய ஆதாரங்கள் எள்ளளவும் இல்லை. ஆனால் முன்னைய மதவாதிகளிடம், யூத கிறிஸ்தவர்களிடம் இவை இருந்து வருகின்றன. இவற்றையும் அவர்களிடமிருந்தே அப்படியே காப்பி அடித்து, இஸ்லாத்தில் நுழைத்து விட்டார்கள். எனவே இந்தத் தக்லீதையும், தஸவ்வஃபையும் மதவாதிகளாகக் காப்பியடித்து, எடுத்து நடப்பவர்கள், நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றகிறவர்களாகவோ, நேர்வழி நடப்பவர்களோ, அல்லாஹ்வின் பொருத்தம் பெறக்கூயவர்களாகவோ, ஒருபோதும் ஆக முடியாது என்பது தெளிவான ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த தீய வழிகளிலிருந்து அல்லாஹ்(ஜல்) நம்மைக் காப்பானாக.

அவர்கள் (விசுவாசிகள்) தங்கள் ரப்புடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல், அவற்றின்மீது விழமாட்டார்கள். (பார்த்துப் பரிசீலனை செய்த செயல்படுவார்கள்) அல்குர்ஆன் 25:73


இந்த வசனத்திலிருந்து குர்ஆனை தக்லீது செய்வதையும் அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்பது தெளிவாகின்றது. (பார்வை பரிசீலனையில் வரமுடியாத, மறைவான விஷயங்களில் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்பது வேறு குர்ஆன் வசனங்கள் மூலம் உறுதிப் படுத்தப்படுகிறது.
நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள்: அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்குர்ஆன் 3:31


இந்த வசனத்தில் நபி(ஸல்) அவர்களையே தக்லீது செய்யச் சொல்லப்படவில்லை. இந்தியா என்னும் விளங்கிப் பின்பற்றுதலே வலியுறுத்தப்படுகின்றது. இதன் அடிப்படையில் மார்க்க விவகாரங்களைத் தவிர, (அல்லாஹ்வின் கட்டளை, ஒப்புதல் அடிப்படையில் சொல்லப்படுவது) நபி(ஸல்) அவர்களின் சொந்த விருப்பங்கள், அபிப்பிராயங்கள் அனைத்தும் நபி தோழர்களால் எடுத்து நடத்தப்படவில்லை என்பதற்குச் சரியான பல ஹதீஸ் ஆதாரங்களைப் பார்;க்க முடிகின்றது.

இப்போது சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ்வின் வசனங்களையே தக்லீது செய்ய அல்லாஹ் அனுமதிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களையே ‘தக்லீது’ செய்ய அல்லாஹ் அனுமதிக்கவில்லை. மாறாக, சிந்தித்துப் பார்த்தச் செயல்படவே ஆணையிடுகிறான். இந்த நிலையில் வேறு யாரையும் ‘தக்லீது’ செய்ய அல்லாஹ் அனுமதித்து இருப்பானா? ஒருபோதும் அனுமதித்து இருக்கமாட்டான். முன்சொல்லப்பட்ட அல்குர்ஆன் 7:3 வசனம் ‘தக்லீது’ மிக வன்மையான மறுத்தே இறக்கப்பட்டுள்ளதை அறிவுடையவர்கள் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். இதைத் தெளிவாக விளங்கி ‘தக்லீது’ விட்டு தவ்பா செய்து முஸ்லிம் சகோதர, சகோதரிகள் கடமைப்பட்டிருக்கிறார்கள். அறிவுடையவர்கள் மட்டுமே முஸ்லிம்களாக இருக்க முடியும். தக்லீதை விட்டு தவ்பா செய்து நீங்கதாதவர்களுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு இல்லவே இல்லை என்பதே தெளிவாகும்.

தக்லீதிற்கும் இத்திபாவிற்கும் உள்ள வேறுபாடுகள் :

1. சமீப காலத்தில் யூதர்கள் குர்ஆனில் பல இடைச் செருகல்களைச் சேர்த்து, லட்சக்கணக்கான குர்ஆன் பிரதிகள் அடித்து, உலகம் முழுவதும் பரப்பினார்கள். அந்த குர்ஆனை, பார்த்துப் பரிசீலனை செய்யாது. அனைத்தும் அல்லாஹ்வின் வசனங்கள் என்று நம்பிச் செயல்படுகிறவர்கள் தக்லீது செய்யும் முதல்லிதுகள் ஆவார்கள். அதைப் பார்த்துப் பரிசீலனை செய்து இடைச் செருகல்களை நீக்கி, அல்லாஹ்வின் வசனங்களை மட்டும் விளங்கி, எடுத்து நடப்பவர்கள். ‘இத்திபா’ செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

2. இதே போல் ஹதீஸ் நூல்களில், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள், பலவீனமான ஹதீஸ்கள் இடைச் செருகல்களாக நுழைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்தையுமு; உண்மை ஹதீஸ்கள் என்று பார்த்துப் பரிசீலனை செய்யாமல் நம்பிச் செயல்படகிறவர்கள் தக்லீது செய்யும் முதல்லிதுகள் ஆவார்கள்.

ஹதீஸ்களைப் பார்த்து பரிசீலனை செய்து, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களையும் பலவீனமான ஹதீஸ்களையும் நிக்கிவிட்டு உண்மையான ஹதீஸ்களை மட்டும் விளங்கி, எடுத்து நடப்பவர்கள் ‘இத்திபா’ செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

3. எந்த நூலில் எழுதப்பட்டிருந்தாலும், யாருடைய பேச்சாக இருந்தாலும், அவற்றைக் குர்ஆன், ஹதீஸ்களோடு ஒத்துப் பார்த்து பரிசீலனை செய்யாமல், நம்பி எடுத்து நடப்பவர்கள் ‘தக்லீது’ செய்யும் முதல்லிதுகள் ஆவார்கள்.

அவை மனிதர்களால் ஆக்கப்பட்டவை அல்லது மனிதர்களால் பேரப்பட்டவை. இறைவாக்கல்ல என்ற உயர்ந்த நோக்கத்தோடு, அவற்றைப் பார்த்துப் பரிசீலனை செய்த, குர்ஆனுக்கும் உண்மை ஹதீஸ்களுக்கும் ஒத்திருப்பவற்றை மட்டும் எடுத்து நடப்பவர்கள். ‘இத்திபா’ செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

4. அந்நஜாத்திலே வந்து விட்டது என்பதற்காக அது சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி, அவற்றைப் பார்த்து பரிசீலனை செய்யாமல் எடுத்து நடப்பவர்கள் ‘தக்லீது’ செய்யும் முதல்லிதுகள் ஆவார்கள்: அந்நஜாத்தில் வந்தாலும் அதில் எழுதுகிறவர்களும் மனிதர்களே, அவர்களிலும் தவறுகள் ஏற்படலாம் என்று அவற்றைப் பார்த்துப் பரிசீலனை செய்த குர்ஆனுக்கும் உண்மை ஹதீஸுகளுக்கும் ஒத்திருப்பவற்றை மட்டும்; எடுத்து நடப்பவர்கள் ‘இத்திபா’ செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

இப்போது தக்லீதுக்கும் (கண்மூடிப் பின்பற்றல்) இத்திபாவுக்கும் (விளங்கிப் பின்பற்றல்) உள்ள வேறுபாட்டை நன்கு விளங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால், ஈ அடிச்சான் காப்பி அடிப்பது ‘தக்லீது’ ஆகும். சார் அவன் மிகச் சரியாக எழுதுகிறான். அதனால் தான் நான் அவனைக் காப்பி அடிச்Nசுன் என்று எந்த மாணவனும் சொல்ல முடியாது. காப்பி அடிப்பது அரசால் தடை செய்யப்பட்டிருப்பது போல், ‘தக்லீது’ அல்லாஹ்வால் தடை செய்யப்பட்டுள்ளது. பரீட்சைக்கு முன் திறமைமிக்க மாணவனிடம், பரீட்சையில் வரும் கேள்விகளைப் பற்றிக் கேட்டு விளங்கிக் கொண்டு, பரீட்சையில் சுயமாக எழுதுவது அரசால் அனுமதிக்கப்பட்டிருப்பது போல், திறமை மிக்கவர்களிடம், துர்ஆனையும், ஹதீஸ்களையும் அறிந்தவர்களிடம் (அவர்களின் கற்பனைக் கட்டுக் கதைகளையோ, யூகங்களையோ, அல்ல) கேட்டு, குர்ஆன், ஹதீஸ்களில் உள்ளவைதான் என்று விளங்கி எடுத்து நடப்பதை அல்லாஹ் அனுமதிக்கிறான். இதற்கு இத்திபா என்றே சொல்லப்படும்.

இதற்குப் பிறகும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் தக்லீதுக்கும் இத்திபாவுக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் இரண்டும் ஒன்றுதான் என்றோ, தக்லீத செய்யாமல் மார்க்கத்தை எடுத்து நடக்க முடியாது என்றோ, சரியாக இருந்தால் தக்லீது செய்யலாம் என்றோ சொல்ல மாட்டார்கள் என்று நம்புகிறோம். அல்லாஹ்வால் அனுமதிக்கப்படாத தக்லீதை விட்டு முற்றிலும் தவ்பா செய்து மீள்வோமாக! அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்ட ‘இத்திபா’ செய்யப் பழகுவோமாக!

தக்லீது : கண்மூடிப் பின்பற்றல் – புரோகிதமும், இடைத்தரகர்களும் இஸ்லாத்தில் புகுந்து, ஐக்கிய சமுதாயத்தைக் கூறுபோட்டு சுரண்டுவதற்கு வழிவகை செய்கிறது.

முதல்லிது : பார்த்துப் பரிசீலனை செய்யாமல் கண்மூடித் தனமாகப் பின்பற்றுபவன்.

இத்திபா: விளங்கிப் பின்பற்றல் – புரோகிதத்தையும் இடைத் தரகர்களையும் ஒழித்துக்கட்டி ஐக்கிய, சமத்துவ, சகோதரத்துவ, சமுதாயம் அமைய வழிவகை செய்கிறது.


முஸ்லிம் சமுதாயத்திற்கு தக்லீது வேண்டுமா? ‘இத்திபா’ வேண்டுமா?

அஹ்ல சுன்னத் வல்ஜமாஅத்தினர், நபியையும் நபி தோழர்களையும் பின்பற்றாமல், புரோகித மவ்லவிகளைப் பின்பற்றி நடக்கின்றனர். அஹ்ல சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்பதில் பொய்யர்களாக இருந்தாலும் தங்களை முதல்லிதுகள் என்று சொல்லதில் உண்மையாளர்களா இருக்கின்றனர். ஆனால் நாங்கள் குர்ஆன், ஹதீஸை பின்பற்றுகிறோம். தவ்ஹீத்வாதிகள் என்று பீற்றுவோர்;, குர்ஆன், ஹதீஸை பின்பற்றுகிறோம் என்பதிலும் பொய்யர்களே, தவ்ஹீத் வாதிகள் என்பதிலும் பொய்யர்களே! தவ்ஹீத் வாதிகள் என்பதிலும் பொய்யர்களே! தவ்ஹீத் மவ்லவிகள் என பொய்யாகப் பீற்றிக் கொள்ளும் புரோகிதர்களை தக்லீத் செய்யும் முதல்லிதுகளே!

எவனொருவன் நேர்வழி இன்னதொரு தனக்குத் தெளிவான பின்னரும், (அவ்லாஹ்வின்) இத் தூதரை விட்டுப் பிரிந்து, (வேறு ஒருவரை இமாமாக ஆக்கிக் கொண்டு முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்ல விட்டு, நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்: அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக்கெட்டதாகும்.
அல்குர்ஆன் 4:115


நன்றி : அந்நஜாத்

Saturday, April 11, 2009

சாக்கடைடையில் விழுந்த சமுதாய இயக்கம் -C.I.D சிங்காரம்


சாக்கடைடையில் விழுந்த சமுதாய இயக்கம் -C.I.D சிங்காரம்

தமிழகத்தில் பலவகையில் சிதறிக்கிடந்த முஸ்லீம் மக்களை ஒன்று திரட்டி 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு சமுதாய இயக்கம் உருவாக்கப்பட்டது. அதன் செயல்பாடுகள் இன்றுவரை குறைசொல்ல முடியாத அளவிற்கு அளப்பறிய பணிகளையாற்றி வருகிறது. உதாரணமாகச் சொல்லப்போனால் உயிர்காக்கும் இரத்த தானத்தில் இருந்து அவசரகால ஊர்திகள் வழங்குதல் போன்ற மருத்துவம் மற்றும் உயிர்காக்கும் பணிகளை செய்து வருவது யாராலும் மறுக்கமுடியாது.

ஆம்புலன்ஸ் என்றாலே என்ன என்று தெரியாத குக்கிராமங்களில் கூட தமுமுகவின் சேவையால் இப்போது அங்கெல்லாம் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த ஆம்புலன்ஸ் சேவையால் முஸ்லீம்கள் மட்டுமல்லாமல் எல்லா சமுதாய மக்களும் பேதமின்றி பயனடைவதைக் கண்கூடாக காணமுடிகிறது.இது போன்ற சமுதாயப் பணிகளில் தமுமுகவை முன்னிறுத்தி வந்த அதன் தலைவர்கள் குறிப்பாக திரு.ஜவாஹிருல்லா மற்றும் திரு.ஹைதர் அலி ஆகியோர் மிகமிக ஆசையோடு தமுமுக என்னும் சமுதாய இயக்கத்தை சாக்கடையில் இறக்க முடிவு செய்து அதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கினார்கள்.

அவர்களின் இலக்கு கலைஞரை கவுத்தி சீட் வாங்கவேண்டும் என்பதே.அதற்கான முயற்சிகளில் முழுமூச்சாய் இறங்கியது தமுமுக தலைமை.கலைஞரை கவுக்க சிறந்த வழி என்ன? பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்ற தாரக மந்திரத்தைக் கையாண்டு இடஒதுக்கீட்டுக்கு பாராட்டுவிழா என்ற பெயரில் கலைஞருக்கு நேரு உள்விளையாட்டு அரங்கிலே பிரம்மாண்ட பாராட்டுவிழாவை நடத்தி கலைஞரோடு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டனர். மேற்கண்ட தலைவர்களின் ஒரே குறிக்கோள் எப்படியாவது M.P ஆவது தான். அதற்காகவே உருவாக்கப்பட்டது தான் மனித நேயமக்கள் கட்சி.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப் பட்டநிலையில் தங்கள் கட்சிக்கு 6 தொகுதியில் செல்வாக்கு இருக்கிறது எனவே 6 தொகுதிதரும் கட்சிகளுடன் கூட்டணி என்று கோசத்துடன் களமிறங்கியது மமக.இவர்களின் கணக்கு 6 கேட்டால் இரண்டாவது தருவார்கள் என்பது தான்.அதன்படி கலைஞரிடம் பேச்சி வார்த்தைக்குப் போயும் பேரம் படியவில்லை. காற்றிலே வெண்ணை எடுத்து நூலே இல்லாமல் கயிறு திரிக்கும் கலைஞர், தான் முன்பு காயிதேமில்லத் அவர்களுக்கு செய்து கொடுத்த சத்தியப் பிரமாணப்படி ஒரு சீட் தான் தரமுடியும் என்று சொல்லி இவர்களை வெளியே தள்ளி கதவைச்சாத்திவிட்டார். இவர்கள் ஒரு சீட்டில் போட்டியிடக்கூடத் தயார்தான்.ஆனால் அந்த ஒரு சீட்டு யாருக்கு என்பது பற்றி மேற்கண்ட தலைவர்களிடையே சண்டை வந்து விடும் என்பதால் தான் ஒரு சீட்டை மறுத்தார்கள்.ஜெயலலிதாவும் இவர்களைக் கண்டுகொள்ளாத நிலையில் தற்போது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் கிருஷ்ணசாமியின் புதிய் தமிழகம் ஆகிய லட்டர்பேடுகளோடு இணைந்து மயிலாடுதுறை,இராம நாதபுரம்,தென்சென்னை ஆகியவற்றில் போட்டியிடுகிறார்கள்.

நாம் நினைத்தது போலவே தென்சென்னையில் திரு.ஹைதர் அவர்களும், மயிலாடுதுறையில் திரு.ஜவாஹிருல்லாவும், இராம நாதபுரத்தில் திரு.சலீம் கான் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.அதாவது இவர்களின் லட்சியத்தை அப்பாவித் தொண்டர்களின் மீதேறி நிறைவேற்றிக் கொள்கிறார்கள். நிச்சயமாக இவர்கள் தமுமுக எனும் சமுதாய இயக்கத்திற்கு குழிதோண்டும் வேலையை ஆரம்பித்து விட்டார்கள் என்பது உறுதி. மமக ஆரம்ப விழாவில் மமக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் செலவை தமுமுகவே ஏற்றுக்கொள்ளூம் என்ற ஒரு சூசக பாயிண்டையும் போட்டு கடைசியில் நாங்கள் தான் அந்த வேட்பாளர்கள் எங்களுக்கு தமுமுகவே செலவு செய்யும் என சொல்லாமல் சொல்லிவிட்டார்கள் சூத்திரதாரிகள்.

சினிமா நடிகர்கள் என்றாலே உவ்வே என சொல்லி வந்த தமுமுக தலைவர்களுக்கு இன்று சரத்குமார் ஒரு நடிகராகத் தெரியாதது ஏனோ? இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா என்பதாலா? அது சரி சாக்கடையில் விழுந்த பிறகு பன்றி என்ன எறுமை என்ன, எல்லாமே கருப்புத் தான் எல்லாமே கருப்புத் தான் கருப்புத்தான் கருப்புத்தான்.

பாவம் தமுமுகவின் அப்பாவித் தொண்டர்கள். பார்க்கலாம் மக்கள் எந்த அளவிற்கு விழிப்புடன் இருக்கிறார்கள் என்று.

-C.I.D சிங்காரம்

பின்குறிப்பு: இந்தப் பதிவு குறித்த தகவல்களை எனக்கு மெயில் மூலம் வழங்கிய தமுமுகவின் தொண்டர் (தவ்ஹீத் ஜமாத் தொண்டர் அல்ல) மற்றும் என் நண்பருக்கு என் மணமார்ந்த நன்றிகள்

Thursday, March 12, 2009

புனித வெள்ளி, ஈஸ்டர் - ஒரு வரலாற்றுப் புரட்டு


உன்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன? (பாகம் 2)
கிறிஸ்தவ தளத்துக்கு பதில்

தலைச்சிறந்த இஸ்லாமிய அறிஞரும், உலகலாவிய அளவில் கிறிஸ்தவர்களுக்கு குர்ஆன் மற்றும் பைபிளை ஒப்பிட்டு இஸ்லாத்தை எடுத்துரைத்தவருமான காலம் சென்ற இஸ்லாமியப் பிரச்சாரகர் சகோதரர். அஹமத் தீதாத் அவர்கள், இயேசுவின் சிலுவை மரணம் பற்றிய அவர்களின் ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக 'WHAT WAS THE SIGN OF JONAH? என்ற புத்தகத்தை வெளியிட்டார்கள். அந்த புத்தகத்தின் கருத்தை உள்ளடக்கிய ஒரு கட்டுரையை சமீபத்தில் இஸ்லாமிய இணையப்பேரவை (IIP ONLINE) தமிழில் வெளியிட்டது.

இந்த கட்டுரைக்கு பதில் என்ற பெயரில் உமர் என்ற கிறிஸ்தவர் ஆங்கிலத் தளத்திலிருந்து எடுத்து மொழிப்பெயர்த்து வெளியிட்ட கட்டுரை எந்த அளவுக்கு முரண்பாட்டையும், குழப்பத்தையும் கொண்டிருந்தது என்பதை 'உன்மையில் யோனாவின் அடையாளம் என்றால் என்ன? (பாகம் 1)' என்ற எமது பதில் கட்டுரையின் மூலம் வெளிச்சம்போட்டு காட்டி இருந்தோம்.

சகோதரர்.அஹமத் தீதாத் அவர்கள், மேற்சொல்லப்பட்ட தனது புத்தகத்தில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்னரும் உயிருடன் தான் இருந்திருக்க வேண்டும் என்பதை பைபிளின் வசனத்தின் மூலம் நிரூபிக்கும் அதே வேலையில் மற்றொரு உன்மையையும் அதில் வெளிச்சம் போட்டு காட்டி இருந்தார்கள். அதாவது, இயேசு முன்னறிவித்ததாகச் சொல்லப்படும் 3 பகல் 3 இரவு என்ற அடையாளம் இன்றைய கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்கு ஒத்துபோகாததுடன், புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் என்பது ஒரு வரலாற்றுப் புரட்டு என்பதையும் நிரூபித்திருந்தார்கள். ஆனால் அதையும் தனது மொழிப்பெயர்ப்புக் கட்டுரையின் மூலம் அந்த கிறிஸ்தவர் மறுத்திருந்தார். அந்த மறுப்பும் எந்த அளவுக்கு முரண்பாடானது குழப்பம் நிறைந்தது என்பதை இனி பார்ப்போம்:

இயேசுவிடம் ஒரு அடையாளத்தைத் காட்டும் என்று வேதபாரகரிலும் பரிசேயரிலும் சிலர் கேட்டதற்கு அவர் பின்வருமாறு பதில் அளித்தாக பைபிளில் எழுதப்பட்டுள்ளது :

இந்தப் பொல்லாத விபசாரச் சந்ததியார் அடையாளத்தைத் தேடுகிறார்கள். ஆனாலும் யோனா தீர்க்கதரிசியின் அடையளமேயன்றி வேறே அடையாளம் இவர்களுக்குக் கொடுக்கப்படுவதில்லை. யோனா இரவும் பகலும் மூன்றுநாள் ஒரு பெரிய மீனின் வயிற்றில் இருந்தது போல, மனுஷகுமாரனும் இரவும் பகலும் மூன்றுநாள் பூமியின் இருதயத்தில் இருப்பார். - மத்தேயு 12:39

For as Jonas was three days and three nights in the whale's belly; so shall the Son of man be three days and three nights in the heart of the earth

அதாவது, யோனா தீர்க்கதரிசி மீனின்வயிற்றில் உயிருடன் இருந்தது போல தானும் 3 பகல் 3 இரவு (3 days and 3 nights) பூமியின் இருதயத்தில் இருப்பேன் என்கிறார். இந்த 3 பகல் 3 இரவு என்ற காலக்கணக்கை வைத்து தான் பல அப்பாவிக் கிறிஸ்தவர்கள், இயேசு தான் சொன்னதன் படியே சிலுவையில் அறையப்பட்டு 3 நாள் கழித்து உயிர்த்தெழுந்தார், அதன் மூலம் தங்களது 'ஆதிபாவம்' என்னும் ஜென்ம பாவம் மண்ணிக்கப்பட்டது என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர். இப்படித்தான் கிறிஸ்தவ மிஷினரிகள் அவர்களின் அறியாமையைப் பயன் படுத்தி நம்பவைத்துக்கொண்டிருக்கின்றன. இது தான் இன்றைய கிறிஸ்தவத்தின் அடிப்படை நம்பிக்கையும் கூட. இதை நம்பாதவன்; மோட்சம் அடைய மாட்டான் என்று சொல்வதுடன், நம்மையும் இவ்வாறு நம்புங்கள், இல்லை என்றால் நீங்கள் பரலோக இரஜ்யத்தை அடைய முடியாது என்று பூச்சாண்டி காட்டுவோரும் உண்டு. அதனால் தான் வருடந்தோரும் இயேசு சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளி என்றும், அதற்கு அடுத்து வரும் ஞாயிற்றுக்கிழமையை ஈஸ்டர் அதாவது இயேசு மூன்று நாள் கழித்து உயரித்தெழுந்த தினம் என்றும் கொண்டாடுகின்றனர்.

இந்த நம்பிக்கை சரியா? இவர்கள் சொல்வது போன்று தான் பைபிளும் கூறுகின்றதா? இன்றைய அப்பாவிக் கிறிஸ்தவர்கள் நம்பிக்கொண்டிருப்பது போல் உன்மையிலேயே இயேசு 3 இரவு 3 பகல் பூமியில் இருதயத்தில் இருந்து பின்னர் உயிர்த்தெழுந்தாரா? அவர் முன்னறிவித்த காலக்கணக்கு பைபிளுடன் ஒத்துப்போகின்றதா? புனித வெள்ளியும் ஈஸ்டர் தினமும் சரியானது தானா? என்பதை எல்லாம் பைபிளின் ஒளியில் சற்று விரிவாக ஆராய்வோம்.


தொடர்ந்து படிக்க இங்கே அழுத்தவும்...