Showing posts with label பெரியபட்டனம். Show all posts
Showing posts with label பெரியபட்டனம். Show all posts

Friday, September 21, 2012

உத்தம நபியின் கெளரவம் காக்க பெரியபட்டினம் மக்கள் எழுச்சி



பெரியபட்டினம், செப். 21, இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் இன்று ஊர் பொதுமக்கள் மற்றும் அனைத்து ஜமாத்தினர் ஒருங்கினைந்து இஸ்லாமியர்களின் உயிருனும் மேலான உன்னத நபி முகம்மது (ஸல்) அவர்களை இழிவு படுத்தி படம் எடுத்தவர்களையும் அதை கண்டிக்க மறுக்கும் அமெரிக்கர்களையும் அந்த திரப்படத்தை வெளியிட்டுள்ள அனைத்து வலைத்தளங்களையும் தடை செயய மறுக்கம் மத்திய அரசை கண்டித்தும் ஒரு மாபெரும் கண்டன பேரணியும் கண்டன பொதுக்கூட்டமும் நடைபெற்றது.



பெரியபட்டினம் ஜலாலியா நகரில் உள்ள அல்கலம் பள்ளி அருகில் இருந்து துவங்கிய இந்த பேரணிக்கு ஆலிம் கிராஅத் ஓத ஊராட்சி தலைவர் திரு கபீர் அம்பலம் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள். பேரணியை வழி நடத்தும் விதமாக திரு. கபீர் அம்பலம் மற்றும் ஊர் முக்கியஸ்த்தர்கள் , இரு ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள், அனைத்து இயக்க நிர்வாகிகள் வீர முழக்கமெழுப்பி கண்டன கோசங்களை உணர்ச்சி பொங்க ஒஞ்கி ஒலித்து வந்தார்கள்.



அல்லாஹ்வின்து£தர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், «لا يؤمن عبد حتى أكون أحب إليه من أهله وماله والناس أجمعين உங்கள் குடும்பத்தினரைவிட உங்கள் செல்வத்தைவிட உங்களுக்கு விருப்பமானவர்களைவிட என்னை அதிகமாக நேசிக்காதவரை நீங்கள் ஒருவரும் மூஃமின்கள் ஆகமாட்டீர்கள் (அறிவிப்பாளர் ; அனஸ்(ரலி), நு£ல் ; புஹாரி, முஸ்லிம்)



இந்த நபிமொழிக்கினங்க பெரியபட்னத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளுமாக வரலாறு காணாத வகையில் ஆயிரக்கணக்கில் கறுப்பு ஆடை அணிந்தவர்களாக கண்டன பதாகைகளை கையில் ஏற்தி பெரியபட்டினம் வீரத்திருமங்கைகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து அன்னல் நபியை இழிவு படுத்தியதை கண்டித்தும் பெண்கள் கோசம் எழுப்பி பேரணியாக தெருவெங்கும் நடந்து வந்தது பெரியபட்டினம் அல்ல சுற்று வட்டாரத்தில் எங்கும் காணத சரித்திர சம்பவம். இன்று தங்கள் கண்டனங்களை பதிவு செய்யும் வகையில் ஊரெங்கும் வியாபாரிகள் கடைகளை அடைத்திருந்தனர். பெரியபட்டினத்தின் எல்லையில் இருந்து கூட்டம் நடக்கும் இடம் வரை கறுப்பு கொடிகளை கட்டியிருந்தனர்.



பொங்கி எழுந்த மக்கள் கூட்டத்தையும் பெண்கள் கூட்டத்தையும் எழச்சி மிக்க பெரியபட்டினம் இளைஞர் கூட்டத்தையும் கண்டு அதிசயித்து பிரமையில் திகைத்து நின்றனர் காவல்துறையினரும் மாற்று மதத்தினரும். ஒற்றை கோரிக்கையில் பொங்கி எழுந்த பெரியபட்டினம் இன மக்கள் அன்னல் நபிக்கெதிரான இழிசெயலை கண்டிக்கும் விதமாக ஆர்ப்பாரித்து பெரியபட்டினம் செ்ய அலி வலியுல்லாஹ் தர்ஹா முன்பாக ஆயிரக்கணக்கில் ஒன்று கூடினர். பேரணியில் கலந்து கொள்ளாத பெண்கள் பின்னர் நடந்தும், வாகனங்களிலுமாக வந்து பொதுக்கூட்டத்தில் திரளாக கலந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் ஆட்டோக்களில் வரிசையாக பேரணியில் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை திவு செய்தனர்.





பொதுக்கூட்த்தில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்ட இசுலாத்திற்காக உயிர் நீத்த புரட்சி போராளி ஷஹித் பழனி பாபாவின் முதன்மை தொண்டரும் பல அரசியல் கட்சி தலைவர்களை ஒருங்கினைக்க கூடிய திறமை படைத்தவருமான சகோ. வேங்கை இபுறாஹிம் அவர்கள் ஷஹித் பழனி பாபாவின் வழியில் ஆக்ரோஷமாக வீர உரை நிக்ழ்தினார்.

அமெரிக்க அராஜகத்தை வண்மையாக கண்டித்து பேசினார். அதன் பின்னர் பி.வி.எம் அறக்கட்டளையி்ன் சேர்மன் ஜனாப் அப்துல் ரசாக் அவர்கள் அன்னல் நபிக்கெதிரான இவ்வனியாயத்தை வண்மையாக கண்டித்து சிறப்புரையாற்றினார். எஸ்.டி.பி.ஐ யின் மாவட்ட செயலாளர் சகோ. செய்யது இபுறாஹிம், எஸ்.டி.பி.ஐ யின் முகவை அப்துல் ஜமீல் , முகவைத்தமிழன் (எ) ரைசுதீன் போன்றோர் கண்டன உரையாற்றினர். நிகழ்சியின் இறுதியில் சகோ. காதர் அவர்கள் நன்றியுரை கூற பொதுக்கூட்டம் இனிதே முடிந்தது.



பெரியபட்டினம் சரித்திரத்தில் போற்றத்தக்க நிகழ்வாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது. இவ்வளவு மக்களை ஒருங்கினைத்து இந்த கூட்டத்தை பெரியபட்டினம் பொது மக்கள் சார்பாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து நடத்திய ஊராட்சி மன்ற தலைவர் ஜனாப். கபீர் அம்பலம், சகோ. முகம்மது உசேன் மற்றும் அவரது தோழர்கள், திரு. அபி, மற்றும் இரன்டு ஜமாத் நிர்வாகிகள் உட்பட இந்நிகழ்விற்கு காரனமான அனைவரையும் வந்திருந்தோர் பாராட்டினர்.





நமது உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுப் படுத்திய அமெரிக்க கயவர்களை கண்டித்து நடந்த இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்த்தில் பங்கெடுத்து அன்னல் நபிகளுக்கெதிரான அநீதிக்கு கண்டன் தெறிவித்தவர்களாக சரித்திரத்தில் தங்களை இம்மக்கள் பதிவு செய்து கொண்டனர். புகழ் அனைத்தும் இறைவன் ஒருவனுக்கே!!

முகநூலில் (FACEBOOK) இதன் ஒட்டுமொத்த புகைப்படத்தொகுப்பு "பெரியபட்டினம் மக்கள் எழுச்சி" என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது இங்குகிளிக் செய்து அதைப்பார்க்கலாம்.

Monday, May 21, 2012

ஓய்வு பெற்ற முஸ்லிம் ஐ ஏ எஸ் அதிகாரியின் மகள் தனது காதலன் ரகுபதி சுந்தரம் மீது போலிஸில் புகார்

சென்னை, மே.20-ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி மகள் தனது கணவர் மீது புகார் மனு கொடுத்துள்ளார்.ரகமத் பானுஅணாநகர் திருமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் ரகமத் பானு (வயது 35). எம்.பி.பி.எஸ். டாக்டரான இவர் சொந்தமாக ஆஸ்பத்திரி வைத்துள்ளார். இவருடைய தந்தை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ஆவார்.ரகமத்பானுவுக்கு ஏற்கனவே திருமணமாகி முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டார். முதல் கணவர் மூலம் ஒரு மகனும், மகளும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ரகுபதி சுந்தரம் (36) என்பவரை ரகமத் பானு காதலித்து 2-வது திருமணம் செய்து கொடார்.இனிதாக தொடங்கிய இவர்களின் இல்லற வாழ்க்கையில் புயல் வீசி விட்டதாக தெரிகிறது. நேற்று ரகமத் பானு தனது கணவர் ரகுபதி சுந்தரம் மீது திருமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்தார்.அடித்து துன்புறுத்துகிறார்அந்த புகார் மனுவில், தனது கணவர் தினமும் குடிபோதையில் வந்து அடித்து துன்புறுத்துகிறார் என்றும், அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கவேடும் என்றும் பரபரபான குற்றச்சாட்டுகளை சுமத்தி இருந்தார். அந்த புகார் மனு மீது பெ போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா பெகள் வன்கொடுமை தடுபுச் சட்டத்தின்கீழ் நேற்று இரவு வழக்குபதிவு செய்தார்.தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. புகார் கூறபட்டுள்ள ரகுபதி சுந்தரம் ஈரோட்டைச் சேர்ந்தவர். எம்.பிஏ. பட்டதாரியான அவர் சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் அதிகாரியாக வேலை பார்க்கிறார். அவரை விசாரணை நடத்தி அதன் பிறகு மேல் நடவடிக்கை எடுக்கபடும் என்று போலீசார் தெரிவித்தனர் தினத்தந்தி : 20.05.2012 http://dailythanthi.com/article.asp?NewsID=731667&disdate=5/20/2012&advt=2

Saturday, September 05, 2009

பெரியபட்டினம் - சிறப்பு குர்ஆன் போட்டி

இந்த நோட்டிசை பெரிதாக்கி பார்ப்பதற்கு அதன் மேல் கிளிக் செய்யவும்.