பெரியபட்டினம், செப். 21, இராமநாதபுரம் மாவட்டம் பெரியபட்டினத்தில் இன்று ஊர் பொதுமக்கள் மற்றும் அனைத்து ஜமாத்தினர் ஒருங்கினைந்து இஸ்லாமியர்களின் உயிருனும் மேலான உன்னத நபி முகம்மது (ஸல்) அவர்களை இழிவு படுத்தி படம் எடுத்தவர்களையும் அதை கண்டிக்க மறுக்கும் அமெரிக்கர்களையும் அந்த திரப்படத்தை வெளியிட்டுள்ள அனைத்து வலைத்தளங்களையும் தடை செயய மறுக்கம் மத்திய அரசை கண்டித்தும் ஒரு மாபெரும் கண்டன பேரணியும் கண்டன பொதுக்கூட்டமும் நடைபெற்றது.
பெரியபட்டினம் ஜலாலியா நகரில் உள்ள அல்கலம் பள்ளி அருகில் இருந்து துவங்கிய இந்த பேரணிக்கு ஆலிம் கிராஅத் ஓத ஊராட்சி தலைவர் திரு கபீர் அம்பலம் அவர்கள் கொடி அசைத்து துவக்கி வைத்தார்கள். பேரணியை வழி நடத்தும் விதமாக திரு. கபீர் அம்பலம் மற்றும் ஊர் முக்கியஸ்த்தர்கள் , இரு ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள், அனைத்து இயக்க நிர்வாகிகள் வீர முழக்கமெழுப்பி கண்டன கோசங்களை உணர்ச்சி பொங்க ஒஞ்கி ஒலித்து வந்தார்கள்.
அல்லாஹ்வின்து£தர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், «لا يؤمن عبد حتى أكون أحب إليه من أهله وماله والناس أجمعين உங்கள் குடும்பத்தினரைவிட உங்கள் செல்வத்தைவிட உங்களுக்கு விருப்பமானவர்களைவிட என்னை அதிகமாக நேசிக்காதவரை நீங்கள் ஒருவரும் மூஃமின்கள் ஆகமாட்டீர்கள் (அறிவிப்பாளர் ; அனஸ்(ரலி), நு£ல் ; புஹாரி, முஸ்லிம்)
இந்த நபிமொழிக்கினங்க பெரியபட்னத்தை சேர்ந்த ஆண்களும், பெண்களும், சிறுவர்களும், சிறுமிகளுமாக வரலாறு காணாத வகையில் ஆயிரக்கணக்கில் கறுப்பு ஆடை அணிந்தவர்களாக கண்டன பதாகைகளை கையில் ஏற்தி பெரியபட்டினம் வீரத்திருமங்கைகள் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து அன்னல் நபியை இழிவு படுத்தியதை கண்டித்தும் பெண்கள் கோசம் எழுப்பி பேரணியாக தெருவெங்கும் நடந்து வந்தது பெரியபட்டினம் அல்ல சுற்று வட்டாரத்தில் எங்கும் காணத சரித்திர சம்பவம். இன்று தங்கள் கண்டனங்களை பதிவு செய்யும் வகையில் ஊரெங்கும் வியாபாரிகள் கடைகளை அடைத்திருந்தனர். பெரியபட்டினத்தின் எல்லையில் இருந்து கூட்டம் நடக்கும் இடம் வரை கறுப்பு கொடிகளை கட்டியிருந்தனர்.
பொங்கி எழுந்த மக்கள் கூட்டத்தையும் பெண்கள் கூட்டத்தையும் எழச்சி மிக்க பெரியபட்டினம் இளைஞர் கூட்டத்தையும் கண்டு அதிசயித்து பிரமையில் திகைத்து நின்றனர் காவல்துறையினரும் மாற்று மதத்தினரும். ஒற்றை கோரிக்கையில் பொங்கி எழுந்த பெரியபட்டினம் இன மக்கள் அன்னல் நபிக்கெதிரான இழிசெயலை கண்டிக்கும் விதமாக ஆர்ப்பாரித்து பெரியபட்டினம் செ்ய அலி வலியுல்லாஹ் தர்ஹா முன்பாக ஆயிரக்கணக்கில் ஒன்று கூடினர். பேரணியில் கலந்து கொள்ளாத பெண்கள் பின்னர் நடந்தும், வாகனங்களிலுமாக வந்து பொதுக்கூட்டத்தில் திரளாக கலந்து தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.ஆட்டோ ஓட்டுனர்கள் தங்கள் ஆட்டோக்களில் வரிசையாக பேரணியில் கலந்து கொண்டு தங்கள் எதிர்ப்பை திவு செய்தனர்.
அமெரிக்க அராஜகத்தை வண்மையாக கண்டித்து பேசினார். அதன் பின்னர் பி.வி.எம் அறக்கட்டளையி்ன் சேர்மன் ஜனாப் அப்துல் ரசாக் அவர்கள் அன்னல் நபிக்கெதிரான இவ்வனியாயத்தை வண்மையாக கண்டித்து சிறப்புரையாற்றினார். எஸ்.டி.பி.ஐ யின் மாவட்ட செயலாளர் சகோ. செய்யது இபுறாஹிம், எஸ்.டி.பி.ஐ யின் முகவை அப்துல் ஜமீல் , முகவைத்தமிழன் (எ) ரைசுதீன் போன்றோர் கண்டன உரையாற்றினர். நிகழ்சியின் இறுதியில் சகோ. காதர் அவர்கள் நன்றியுரை கூற பொதுக்கூட்டம் இனிதே முடிந்தது.
பெரியபட்டினம் சரித்திரத்தில் போற்றத்தக்க நிகழ்வாக இந்நிகழ்ச்சி அமைந்திருந்தது. இவ்வளவு மக்களை ஒருங்கினைத்து இந்த கூட்டத்தை பெரியபட்டினம் பொது மக்கள் சார்பாக அனைத்து ஏற்பாடுகளையும் செய்து நடத்திய ஊராட்சி மன்ற தலைவர் ஜனாப். கபீர் அம்பலம், சகோ. முகம்மது உசேன் மற்றும் அவரது தோழர்கள், திரு. அபி, மற்றும் இரன்டு ஜமாத் நிர்வாகிகள் உட்பட இந்நிகழ்விற்கு காரனமான அனைவரையும் வந்திருந்தோர் பாராட்டினர்.
முகநூலில் (FACEBOOK) இதன் ஒட்டுமொத்த புகைப்படத்தொகுப்பு "பெரியபட்டினம் மக்கள் எழுச்சி" என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ளது இங்குகிளிக் செய்து அதைப்பார்க்கலாம்.
No comments:
Post a Comment