Wednesday, June 24, 2009

சஹாபாக்கள் ஒருவரை ஒருவர் வெட்டி கொண்டார்கள், அவர்களை விட நாம் பெட்டர் - பி.ஜே

அஸ்ஸலாமு அலைக்கும்
அன்பு சகோதரர்களே

கடந்த ஞாயிறு (21.06.09) அன்று இமயம் டி.வியில் சகோ. பி.ஜே அவர்கள் இலண்டன் நேயர்கள் ஆன்லைன் மூலம் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்தார். அதில் கருத்து வேறுபாடுகள் பற்றிய கேள்விக்கு: .


“கருத்து வேறுபாடுகள் இன்று மட்டுமல்ல, ஸஹாபாக்கள் காலத்திலேயே இருந்தது. அபூபக்கர், உமருக்கு பின் எல்லா குழப்பங்களும் இருந்தன என்றவர் உமருக்கு எதிராக அவர் மகன் கொடுத்த பத்வாக்களே நூற்றுக்கணக்கில் உள்ளன. அபூபக்கர் ஆட்சி மட்டும் தான் சரியாக இருந்தது என்றவர் அதையும் தேடி பார்த்தால் குறை தெரியும் என்றார். மேலும் நாம் அடித்து கொள்வதில்லை. ஸஹாபாக்கள் ஒருவரை ஒருவர் அடித்து கொண்டார்கள், வெட்டி கொண்டார்கள், அந்த சமுதாயத்தை விட நம் சமுதாயத்தை அல்லாஹ் பெட்டராக வைத்திருக்கிறான்”


என்று போடு போட்டார். அது போல் அமீர் பற்றிய கேள்வி ஒன்றுக்கு பத்து பேர் உள்ள ஜமாத்தே இஸ்லாமி எல்லாம் அதற்கு ஒரு அமீர் வைத்திருப்பான். எல்லா அமைப்புகளும் அமீரின் பேச்சை முழுமையாக பின்பற்றுகின்றன. த.த.ஜ மட்டும் தான் குரான் - ஹதீஸுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறது எனும் தொனியில் பேசினார்.

த.த.ஜ சொந்தங்களே, குரான் ஹதீஸூக்கு நீங்கள் முக்கியத்துவம் அளிக்கும் ஓரே உலகளாவிய இயக்கம் எனும் அண்ணனின் வார்த்தை படி சில கேள்விகள். அதற்கு முன் நினைவூட்டலுக்கு ஒர் வாரம் முன் கேட்ட இரு கேள்விகளை மீண்டும் வைக்கிறேன் (அபஸ வதவல்லா சம்பந்தமாக)

1. குறைஷிகள் அவ்வாறு சகோதரத்துவம் ஒன்றை தவிர இஸ்லாத்தில் அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாக சொன்னார்களா ? அதற்கான ஆதாரம்?

2. நபி (ஸல்) குறைஷிகள், அடிமைகள் இருவரையும் ஒன்றாக நடத்த கூடாது என்று எண்ணிணார்களா ? அதற்கான ஆதாரம்?

புதிய கேள்விகள்

3. ஸஹாபாக்களை விட நாம் பெட்டர் ஏனென்றால் நாம் அடித்து கொள்ளவில்லை என்கிறாரே அப்போது தமுமுக - ததஜ, கடையநல்லூர் த.த.ஜ - ஜாக் விவகாரம் எல்லாம் என்ன? வெட்டி கொல்ல வில்லை என்றார் அதிகாரம் கொடுக்க பெற்ற இதர நாடுகள் பாகிஸ்தான், ஆப்கன், ஈராக்கில் வெட்டி கொள்ளவில்லையா?

4.ஸஹாபாக்களிடத்தில் ஆயிரம் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் ஒரு தலைமையின் கீழ் ஒன்றுபட்டு இருந்தார்களே? இப்னு உமரும் உமரின் ஆட்சியை ஏற்று தானே இருந்தார்? நாம் ஒரு தலைமையின் கீழ் இருக்கிறோமோ

5.அலீ (ரலி) யும் ஆயிஷா (ரலி) யும் சண்டை போட்டு கொண்டாலும் போரில் தோற்று போன பிறகு முஃமின்களின் அன்னையை அலீ (ரலி) கண்ணியத்தோடு அனுப்பினார்களே? அவர்களும் இற்க்கும் வரை அதை நினைத்து வருந்தினார்களே? அந்த பண்பு நம்மிடம் உள்ளதா ?

6. ஸஹாபாக்களை எப்படியாவது கீழாக பேசி எதையும் சாதிக்க போவதில்லை. என் தோழர்களை ஏசாதீர்கள். உஹது அளவு தர்மம் செய்தாலும் அவர்களுக்கு ஈடாக மாட்டீர்கள் எனும் நபிமொழி மறந்து விட்டோமா?


7. அல்லாஹ்வையும் அவன் தூதரின் திருப்தியையும் தவிர அனைத்தையும் அர்ப்பணித்த அபூபக்கர் (ரலி), சுவன நற்செய்தி பெற்ற பிறகும் தன் அமலில் நம்பிக்கை இல்லாமல் முனாபிக் பட்டியலில் தன் பெய்ர் உள்ளதா என கேட்ட உமர்(ரலி), தான் கொடுத்த தர்மத்தின் காரணத்தால் செய்த பாவம் மட்டுமல்ல, செய்யும் பாவத்தையும் அல்லாஹ் மன்னித்து விட்டான் என சொல்லப்பட்ட உஸ்மான் (ரலி), ஹிஜ்ரத்தின் போது உயிரே போய் விடும் அபாயம் இருந்தும் நபிக்கு பதிலாக படுத்த அலீ (ரலி), 100% சொத்தை நபியோடு வாழ அர்ப்பணித்த சுஹைப் (ரலி), சொத்து சுகங்களை இழந்து கபனிட கூட துணியின்றி ஷஹீதான முஸைப் (ரலி) இது போன்ற ஸஹாபாக்களை வரலாற்று ஓட்டத்தில் நாம் எங்குமே பார்க்க இயலாது. அப்படியிருக்க அவர்களோடு ஒப்பிடுவோதோ, அல்லது ஒரு சில தவறுகள் இருந்தாலும் ஒட்டு மொத்தமாக குறை சொல்வதோ எப்படி சரியாகும்?

த.த.ஜ சொந்தங்களே பதில் சொல்லுங்கள்

அன்பு சகோதரன்
ஃபெரோஸ்கான் (fiverose@gmail.com)

மேலே உள்ள மின்னஞ்சலுக்கு சகோதரர் அபூசுமையா அவர்கள் தான் கேட்ட கேள்விகளுக்கே இன்னும் பதில் அளிக்கவில்லை இதற்கா பதில் சொல்ல போகிறார்கள் என்று அனுப்பிய ஆதங்க பதில் மின்னஞ்சல்.

வ அலைக்குமுஸ் ஸலாம் வரஹ்...
அன்புச் சகோதரர் 'ஃபெரோஸ்கான்,

உங்களின் எதிர்பார்ப்பு நிறைவேற வாழ்த்துக்கள்!
ஆனால் எனக்கு நம்பிக்கையில்லை!

1. கடலூர் முபாஹலா விஷயமாக குர்'ஆனிலிருந்து கேட்ட ஆதாரத்திற்கு இதுவரை பதிலில்லை.

2. கடையநல்லூர் பள்ளிவாசலில் ஜமாஅத் தொழுகைக்கு இழைத்த இடையூறு தொடர்பாக ஆதாரம் கேட்டதற்குப் பதிலில்லை.

3. திருவிதாங்கோட்டில் தௌஹீது பள்ளிவாசல் எங்குள்ளது என்பதற்கு இதுவரை பதிலில்லை.

4. உண்டியல் பணம் தொடர்பாக ஜாக்கின் மீது இட்டுக்கட்டி, காட்டிக்கொடுத்ததற்கு இதுவரை பதிலில்லை.

5. தொழுகையில் தொடை தெரியும் படியான ஆடை உடுத்து தொழுவதற்கான ஆதாரத்திற்கு இதுவரை பதிலில்லை.

6. கேரள தௌஹீது ஜமாஅத்தினர்களான முஜாஹிதீன்கள் குறித்து அவதூறு பேசியதற்கு இதுவரை பதிலில்லை.

7. "தடம் புரண்டவர்கள் பட்டியல்" வைத்ததற்கு இதுவரை விளக்கம் இல்லை.

8. குர்'ஆன் மொழிபெயர்ப்பில் நபி(ஸல்) அவர்கள் கூறாத விஷயத்தை நபிகளின் மீது இட்டுக்கட்டி எழுதியதற்கு இதுவரை பதிலில்லை.

9. கத்தரில் சைபுல்லா ஹாஜாவிற்கு தாயி விசா அனுமதி மறுக்கப்பட்டதற்கான காரணத்திற்கு இதுவரை பதிலில்லை.

10. சுனாமி கணக்கில் ததஜ சீருடை வாங்கியதை இணைத்தற்கு இதுவரை பதிலில்லை.

11. அன்னிய பெண்ணுடன் ஒரே இருக்கையில் அமர்ந்து பிரயாணம் செய்வது தொடர்பாக இதுவரை பதிலில்லை.

இப்படி எண்ணற்றவை அடுக்கிக் கொண்டே போகலாம்.

விவாத மன்னர்களாக பெயர் எடுத்துள்ள ததஜ இயக்கத்திற்குத் தங்களின் செயல்பாடுகள் மீதான மார்க்க விரோத செயல்பாடுகள் குறித்து கேட்கப்படுவதற்குப் பதில் இல்லாமல் போவது ஆச்சரியமான விஷயம்.

சகோதரர் அதிரை ஃபாரூக், சகோதரர் அபூ நூறா, சகோதரர் சாதிக், சகோதரர் அமீன், சகோதரர் குமரி முஸ்லிம் என எண்ணற்ற சகோதரர்கள் இணையத்தில் ததஜவுக்கு ஆதரவாக எழுதிக் கொண்டும் மற்றவர்களை விமர்சித்துக் கொண்டும் இருக்கும் நிலையில், தங்கள் மீதான மார்க்க விரோத செயல்பாடுகள் குறித்துக் கேட்கப்பட்ட போது அமைதி காப்பதன் அர்த்தம் ஏனோ?

இதே சம்பவம் ததஜ சகோதரர்கள் மற்றவர்கள் மீது கேள்வி கேட்டு, அவர்கள் அமைதியாக இருந்து விட்டால், "பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம்" என்ற சொல்லை எத்தனை முறை நாம் இவர்களிடமிருந்து கேட்கவேண்டி இருந்திருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கிறேன்.

"பின்னங்கால் பிடரியில் அடிக்க ஓட்டம்" என்பது பூமராங்காக ததஜ சகோதரர்களுக்கே திரும்ப வந்திருப்பது இறைவன் அவர்களின் தலைக்கனம், அகங்காரத்திற்குக் கொடுத்த மிகப் பெரிய அடியாக எடுத்துக் கொள்ளலாம்.

"தூய ஏகத்துவத்துக்குச் சொந்தக்காரர்கள்" என சுயமாக பட்டம் சூட்டிக் கொண்டு பெருமை அடித்துக் கொண்டால் போதாது. அதற்கு ஏற்ப தங்களின் செயல்பாடுகளையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை இனிமேலாவது ததஜ சகோதரர்கள் உணர்வார்கள் என்று நம்புவோம்.

என் கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் அமைதியாகி ஒதுங்கி விடுவதன் மூலம், இவர்கள் அல்லாஹ்வுக்கு அல்ல, ததஜவுக்கே தக்லீது செய்கின்றனர் என்பது அப்பட்டமாக தெளிவாகிறது. அவ்வாறு அல்ல, ததஜவினர் அல்லாஹ்வுக்கு மட்டுமே தக்லீது செய்வோம் என்பதை நிரூபிக்க வேண்டிய கடமை இப்போது ததஜ சகோதரர்களுக்கு இருக்கிறது.

எனவே, சகோதரர் 'ஃபெரோஸ்கானின் கேள்விகளுக்காவது விளக்கத்தோடு வருவார்களா? என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.

16 comments:

Anonymous said...

அந்நிய பெண்ணுடம் தனியாக பயணம் செய்த உத்திம புத்திரன் உங்கள் சகாக்களோடு தான் இருக்கிறார் அவரிடன் நீங்க நேரடியாக கேட்டுக்கொள்ளலாம்.

Anonymous said...

நம்மால் முடிந்தளவுக்கு நாம் சமுதாய, ஏகத்துவ பணியை செய்துக் கொண்டும் உங்களைப் போல அரை பைத்தியத்தையும் விளக்கிக் கொண்டு தான் இருக்கிறோம். ஆனால், ஒன்று அழகாக தெரிகிறது, உங்களின் லட்சியம் எல்லாம் நம்முடைய நோரத்தையும், சிந்தனையும் விணாக்கி விடலாம் என்று? இன்ஷா அல்லாஹ் அதில் தவ்ஹீத் ஜமாத் விழிப்புணர்வுடன் தான் இருக்கிறது. நம்முடைய பணகள் இன்ஷா அல்லாஹ் என்றும் தொடரும்.

உண்மையில் நிங்கள் விளக்கம் பெற வேண்டும் என்றால், எல்லாவற்றுக்கும் ஏற்கனவே பதில் செல்லப்பட்டுள்ளது. நமது இனையதளத்தில் பார்த்துக் கௌ;ளவும். நமக்கு நெறிய பணிகள் உண்டு, உங்களைப் போல சமுதாய பெறுப்பு இல்லாமல் வெட்டிக் கோள்விக்கு எல்லாம் பதில் செல்லி சமுதாயத்தில் உங்களைப் போல சமுதாய துரேகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க நோரமில்லை.

இப்படிக்கு
வழிப்போக்கன்

Anonymous said...

Dear Brothers in Islam,

Please admit brother P.J. in a better mental hospital for better treatment. May Allah(swt) recover him very soon. Aaamin.

Anonymous said...

he is not a mental he is a mental doctarடா மடயா எத்தனையோ லட்சம் இணை வைப்பாலர்கலுக்கு அல்லது இணை வைத்தவர்களுக்கு மருத்துவம் பார்த்தவர் இன்று நீயெல்லாம் இப்படி வக்கணையாக பேசுவதற்கு கற்றுத்தந்தவர் அவர்தான் பேசத்தெரியாத அல்லது பேசினால் பொய் மட்டுமே பேசும் வாணியம்பாடி வத்தியாருக்கெலாம் டாக்டர் பட்டம் உண்னையிலேயே சமுதாய சேவை செய்த அண்ணன் PJ பைத்தியமா தேர்தலில் தோற்றுப்போய் இருக்கும் இடம் தெரியாமல் இருக்கும் உனக்கும் உனது TMMK தலைவனுக்கும் இன்னும் இவர் மருந்து கொடுத்துக்கொண்டேதான் இருப்பார் உங்களின் பைத்தியம் தீரும்வரை இன்ஷா அல்லாஹ்

Anonymous said...

பி.ஜே அதில் சொல்லிய கருத்து வேறு, நீங்கள் திரித்து எழுதிய கருத்து வேறு.

எல்லா சகோதரர்களுக்கும் ஒரு வேண்டுகோள். பி.ஜே அவர்களின் அந்த போச்சை நீங்கள் நேரடியாக கேட்டு முடிவு செய்யுங்கள்.

சிலர் பி.ஜே அவர்களை பேசி தான் பிலபல்மாக வேண்டும் என்று நினைத்து மனநோயாளியாக திரிகிறார்கள். இது போன்ற சில்லரைகளை புறக்கணித்து, குற்றம்சாற்றப்படுபவரின் கூற்றை நேரடியாக கேட்டு முடிவு செய்யுங்கள். பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டகட்டும்.

Anonymous said...

orusamuthaya thurokiyin (PJ) munnal sako.peros sila calvikalai vaithirukkirar.avarin akkapurvamana panikalai parattukirom.sacothararin kelvikalukku pathil alikka mudiyatha samuthaya thurokiyin adivarudikalana sila kalusadaikal than mulaikku attiyavatrai ellam vimarsanangalaka eluthi thangal tharathai velippaduthiyullanar.entha kalisadaikalin vularalai porutpaduthamal sacotharar than paniyai thodara vandum.

Anonymous said...

Bismillahirrahummanirrahim

Doctor, I think you are little bit infected by some virus so, try to clean your head and brain by our sacred water zamzam that make your way as good.

Why you are comparing your life to Rali Angu, for what you are saying, what is the purpose may be i think you are like ......... Insha Allah, Allah knows everything...........

Anonymous said...

Yes, Mr. PJ will give medicine to all. B'cos he is the master of medicine and he knows what is the exact problem of TNTJ members. May Allah save those Muslim brothers from him(PJ).

Anonymous said...

யாருக்கும் யார் சளைத்தவர் இல்லை என்று உங்கள் ஆக்கங்கள் போய்கொண்டு இருக்கிறது. ஒன்றை விளங்கிக்கொள்ளுங்கள். மக்கள் ஒன்றும் மடையர்கள் அல்ல அது தஜக சகோதரர்கள் ஆனாலும் சரி அல்லது மற்ற அமைப்புகளை பின்பற்றுவர்கலானாலும் சரியே. தாங்கள் தஜக சகோதரர்கள் அனைவரும் என்னவோ மூளையற்றவர்கள் என்பதுபோல் கருதுகிறீர்களே. என்னை பொருத்தவரை எங்கு சத்தியம் இருக்கிறது யன்று மக்கள் தேர்வு சைகிரார்களோ அங்கு மக்களும் இருப்பார்கள். சத்தியம் தங்களிடம் இருக்கும் யன்று மக்கள் கருதினால் மக்கள் தங்களுக்கு பின்னால் இருப்பார்கள். ஆதலால் தயவு கூர்ந்து மக்கள் அனைவரும் முட்டாள்கள் என்று கருதாதீர்கள். அப்படி கருதினால் நீங்களே உங்களை முட்டாலாக்கிகொல்கிறீர்கள்.

Anonymous said...

அந்த 'பரதேசி ஜைன் ஒf லா தீனை'
இன்னுமா நம்புது
இந்த மட போதை ஏறுன கூட்டம்

Anonymous said...

Dear Brothers in Islam,
Assalamu Alaikum.

I think some brothers have super natural power to identify myself as a member of TMMK. Insha Allah, May allah(swt) give them little bit of common sense that in the forum not only TMMK members would comment but some moderate muslim would also comment.
The truth is i am not belongs to any of these party. I am only a moderate muslim. I hate the dirty internal politics among the muslims. And debating among ourself like you are wrong and i am good.

Even anyone from any party say the samething. I would recommend the same thing to go for a better treatment. I am not an idoitic folks like anyone who BLINDFOLDEDly follow your leaders. It is not the way of islam.

Dears brothers, dont blindfoldedly follow any think. Please be moderate and think moderately. Your thinking should be wise and just but not biased. In Islam, we should question our leaders even caliph infront of sword if the they are unjust and divert from sunnah.

I like to suggest the muslim brothers, please go and sit in a silent place and think about your leaders what they are saying and following. Please please please use your brain to think atleast once in your life time for the sake of Allah(swt) and for our muslim community.

Dear brothers, Please request you leaders to talk more sensible and responsible. Request them to think and talk how our community could be united rather giving speech to develop hatered among muslims. Request them to think how our community could improve in education, business and governance and last but not the least brotherhoodness among the muslims.

If they failed to think about unity of muslim , Insha Allah, very soon Allah(swt) shall replace them with better leader for the muslim community.

Ya Allah, We muslims beg you to give us better muslim leader to serve and unity the muslim community.
Ya Allah, Please save the muslims from the selfish leaders and remove the selfish leaders from this world.

Aamin.

Wassalam.

Moderate Muslim

Unknown said...

in the name of allah assalamualaikkum anbana sahotar mutalil p j kuriyathu tavaru anral atarkana vilakkattai kuraum kelvi kattal unkalku athai partri theriyathu anru ahividukirathu ahai yal pj kuriyathu tavaru anral atarku ungal vilakkam ana ungal vilakkam sari yaral neengal kuruvathai atrukkolom ungal manthukku tonriya kalvikalai yarumkatkalam pathil pathil yarum collalaam anal pathil qran hathees adipadail neenagal vilakkaum kalvikatu pathil illai antru colvataivida cariyanapathilai kuraum

Anonymous said...

இந்த சண்டைய நிறுத்த
எனக்கு ஒரு யோசனை தோன்றுது சொல்லட்ட

நாம ஏல்லாரும் ததஜவுல சேந்துட்ட என்ன. அவரு புதிய இயக்கத்தை
உருவாக்காமல் இருக்க வேண்டும்.
ஏன் சொல்லுகிறேன் என்றால்.இவருடைய பேச்சை கேட்டுத்தான் நான் தமுமுகவில் சேர்ந்தேன் .இப்போ அங்கு எல்லாரும் ஏமாத்துறாங்க என்கிறார்.என்னங்க பண்ணுறது நான் அப்பாவி ஏனக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியல.அல்லா தான் காப்பத்தனும் இந்த சமுதாயத்தைச்

ali
dubai

Anonymous said...

உங்களுக்கெல்லாம் எங்கலப்பார்த்த காமெடிய போச்சு.

சரி சரி கடைய மூடுங்க நேரம் ஆச்சு

ali
dubai

Thoobaah said...

AssaLAAmu aLAIKUM....

salaam.....மற்றும் சபூர் ...இப்போ ரொம்ப தேவை

muslims fighting each other...?

Taqleed ஒரு பெரிய விஷம் என்பது இப்போ எனக்கு புரியுது ......

அரசியல் , Democracy...என்று எப்போ ஒரு muslim Allah வின் way விட்டு தள்ளி போறானோ ....அப்போ அவன் ...kaafir ஆகா தயாராகிறான் ....

நம் கூட இருக்கும் ஷய்தான் ....அல்லாஹ் அவனுக்கு நிறைய ஆற்றலை குடுதிரிக்கிறான் ....நம்மை சோதிக்க.

ஷய்தான் ....அவனை பற்றி தெரிந்தும் ...நம்மில் பலர் ...அவன் வழியிலே செல்ல முயல்கிறோம் ...

So, let's keep our eyes towards ourselves first, and then to our family and then to relations and then to neighbour and then to society....

insha Allaah.....

Wallaahu A'lam...


Wassalaau alaikum....

Abbas

Thoobaah said...

b