Showing posts with label முஸ்லிம். Show all posts
Showing posts with label முஸ்லிம். Show all posts

Saturday, February 16, 2013

தோற்றுப்போன திராவிட கலப்பு திருமண கொள்கை!!

தோற்றுப்போன திராவிட கலப்பு திருமண கொள்கை!!






தமுமுக பொதுச்செயலாளர் நடத்தி வைத்த ஹிந்து - முஸ்லிம் கலப்புத் திருமணம் என்ற பெயரில் நாம் செய்தி ஒன்றை இதற்கு முன்னர் வெளியிட்டிருந்தோம்.  திராவிடர் கழகத்தின் கொள்கையை ஏற்று திருமணம் புறிந்த தம்பதியினர் அதன் பின்னர் திடீரென் மீண:டும் இஸ்லாதம்தை தழுவியுள்ளனர்.


மணமகள் மாணிக்கம் த/பெ வையாபுரி இஸ்லாத்தை தழுவியபின் தனது பெயரை "மாலிக்" என மாற்றிக்கொண்டுள்ளார். அதன் பின்னர் மணப்பென் ஹாரிபா த/பெ கவுஸ் என்ற அதே பெண்னை மீண்டும் மஹர் கொடுத்து இசுலாமிய முறைப்படி நிக்காஹ் (எ) திருமணம் செய்துள்ளார் அத்துடன் இதை முறைப்படி அரசிலும் தான் இசுலாத்திற்கு வந்துவிட்டதாக பதிவு செய்துள்ளார். எல்லாப்புகழும் இறைவனுக்கே..!!!

பார்க்க பழைய செய்தி :http://tmpolitics.blogspot.in/2013/02/tmmk.html

தமுமுக, வண்ணியர் முஸ்லிம் திருமணம், புரட்சி திருமணம், முகவைத்தமிழன், ரைசுதீன், மமக, மனித நேய மக்கள் கட்சி, டாக்டர் ஜவாஹிருல்லா, அப்துல் சமது

Friday, February 08, 2013

TMMK- தமுமுக பொதுச்செயலாளர் நடத்தி வைத்த ஹிந்து - முஸ்லிம் கலப்புத் திருமணம்

தமுமுக பொதுச்செயலாளர் நடத்தி வைத்த ஹிந்து - முஸ்லிம் கலப்புத் திருமணம்


கடந்த 5ம் தேதி செவ்வாய்க்கிழமை திராவிட விடுதலைக்கழகத்தினரால் நடத்தப்பட்ட தீண்டாமை ஒழிப்பு மாநாட்டில் தீண்டாமையை ஒழிக்கும் விதமாக ஒரு வண்ணிய இளைஞருக்கும் இசுலாமிய சமயத்தை சேர்ந்த ஒரு முஸ்லிம் யுவதிக்கும் நடந்த புரட்சி திருமணத்தை தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்துள்ளார்கள். இந்த நிகழ்ச்சியில் திராவிட விடுதலைக்கழகத்தின் கொளத்தூர் மணி ஐயா அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்கள். வாழ்த்துக்கள்!!

புகைப்ப்டத்தில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் ப. அப்துல் சமது அவர்கள் மணமக்களுடன்.

செய்திகள் நன்றி : திராவிடர் விடுதலைக் கழகம் / Joshua Isaac (தமிழ் மறவன்)
https://www.facebook.com/photo.php?fbid=522287217794551&set=a.104550569568220.8627.100000398329669&type=1&theater

தமுமுக, வண்ணியர் முஸ்லிம் திருமணம், புரட்சி திருமணம், முகவைத்தமிழன், ரைசுதீன், மமக, மனித நேய மக்கள் கட்சி, டாக்டர் ஜவாஹிருல்லா, அப்துல் சமது

Monday, March 15, 2010

நீங்கள் (முஸ்லிம்கள்) என்ன செய்திருக்கிறீர்கள் இவ்வுலகிற்கு?

இது நீண்டதொரு கட்டுரை ஆதலால் இங்கு க்ளிக் செய்து படிக்கவும்.

Tuesday, September 08, 2009

ரமழான் - இறுதிப் பத்து நாட்கள் (VIDEO)

அஷ்ஷேய்க். பிஸ்மில்லாஹ் கான் பைஜி

ரமளானின் இறுதிப் பத்து நாட்கள் பற்றியும் அதில் செய்ய வேண்டிய அமல்கள் பற்றியும் தமிழகத்தை சேர்ந்த மார்க்க அறிஞர் அஷ்ஷேய்க். பிஸ்மில்லாஹ் கான் பைஜி அவர்கள் ஆற்றிய உரையின் வீடியோ பதிவினை காண்பதற்கு இங்கு சொடுக்கவும்.



ரமளானின் இறுதிப் பத்து. லைலத்துல் கத்ர், இஃதிகாஃப்

புனித மிக்க ரமளான் மாதத்தின் கடைசிப்பத்து நரகின் விடுதலையை உள்ளடக்கிய சிறப்புக்குரியதும், மேலும் லைலத்துல் கத்ர் இரவு போன்ற சிறப்பினை உள்ளடக்கியதுமான பெரும் சிறப்புகளைக் கொண்டதாகும். அருள்மிகு ரமளானின் இவ்விறுதிப் பத்து நாட்களில் பிரயாசைப் பட்டுச் செய்கின்ற நற்செயல்களுக்கு அதிகமதிகம் நன்மைகளும் பன்மடங்காகக்கப்பட்ட நற்கூலிகளும் உண்டு. நபி (ஸல்) அவர்கள் ரமளானின் இறுதிப் பத்து நாட்களில் அதிக சிரத்தையுடன் நன்மைகள் செய்வதில் தீவிரம் காட்டுபவர்களாகவும் அழுத்தம் உடையவர்களாகவும் இருந்தார்கள்.

நபியவர்கள் ரமளான் இறுதிப் பத்தில் கருமமாற்றியது பற்றி ஆயிஷh (ரலி) அவர்கள் தெளிவாக அறிவிக்கின்றார் கள்: ரமளானின் கடைசி பத்து வந்து விட்டால் நபி (ஸல்) அவர்கள் கச்சை கட்டிக் கொண்டு அவற்றின் இரவுகளை விழித்திருந்து கழிப்பார்கள். தம் குடும்பத்தினரையும் விழித்தெழச் செய்வார்கள் (புகாரி)

ஆயிஷh (ரலி) அவர்கள் அறிவிக்கும் பிரிதொரு ஹதீஸ் இவ்வாறு தெளிவு படுத்துகின்றது: நபியவர்கள் முந்தைய இருபது நாள் இரவுகளில் விழித்திருந்து தொழவும் செய்தார்கள். தூங்கவும் செய்தார்கள். ஆனால் இறுதிப் பத்து நாட்கள் வந்து விட்டால் கச்சை கட்டிக் கொண்டு அமல்களில் முழுமையாக ஈடுபடுவார்கள். (முஸ்னத் அஹ்மத்)

ரமளான் மாதத்தின் இறுதிப் பத்தின் மகத்துவமும், சிறப்பும் பற்றி இந்த ஹதீஸ்கள் தெளிவாக விளங்குகின்றன. இந்நாட்களில் நபி (ஸல்) அவர்கள் முதல் இருபது நோன்பு நாட்களையும் விட இந்நாட்களுக்கு அதிக முக்கியத்துவம் அளித்திருக்கினறார்கள் என்பது தெளிவாகின்றது. குர்ஆன் ஓதுவது, அதிகமதிகம் திக்ருகளில் ஈடுவடுவது, அதிகமதிகம் தர்மம் செய்வது இவ்வாறான நன்மைகளாகும்.

இஃதிகாஃப்

இந்தப் பத்து நாட்களில் மற்றுமொரு சிறப்பு இஃதிகாஃப் இருப்பதாகும். இஃதிகாஃப் என்பது இலளகீக காரியங்களிலிருந்து விடுபட்டு அல்லாஹ்வின் வழி பாட்டிலேயே முழுமையாக ஈடுபடுவதற்காக பள்ளிவாசலில் தங்கி விடுவதாகும். ஒரு முஸ்லிம் இப்படிச் செய்வது அல்குர்ஆனும் நபி மொழிகளும் வலியுறுத்தியுள்ளன. நபியவர்கள் இவ்வாறு ஈடுபட்டதற்குக் காரணம் இந்த இரவுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கின்ற முக்கிய சிறப்பயாகும். அவ்வாறு ஒருவர் ஈடுபடும்போது அவர் லைலதுல் கத்ர் இரவைப் பெறக் கூடிய வாய்ப்பைப் பெறுகினறார்.

அபூ ஸஈத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: நபி (ஸல்) அவர்கள் ரமளானின் முதல் பத்து இரவுகளில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு நடுப் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு சொன்னார்கள்: நிச்சயமாக நான் முதல் பத்தில் லைலத்துல் கத்ர் இரவைத் தேடிப் பெருவதற்காக இஃதிகாஃப் இருந்தேன். பிறகு நடுப்பத்தில் இருந்தேன். பிறகு எனது கனவில் வானவர் தோன்றி அறிவித்தார் : அந்த இரவு கடைசிப்பத்து நாளில் உள்ளது என்று. உங்களில் யார் இந்தக் கடைசி நாட்களில் இஃதிகாஃப் இருக்க விரும்புகிறாரோ அவர் இஃதிகாஃப் இருக்கட்டும். (முஸ்லிம்)

ஒருவர் பிற மனிதர்களை விட்டும் விலகி அல்லாஹ்வின் பள்ளிவாசல் ஒன்றில் இஃதிகாஃப் இருப்பதன் நோக்கம்; சங்கடங்களின்றி மனஒருமையோடு அல்லாஹ்வை வழிபடுவதற்காகவாகும். அவ்வாறு இருப்பதனால் அம்மனிதர் லைலதுல் கத்ர் எனும் மகத்துவம் மிக்க இரவை அடைந்து கொள்ளும் வாய்ப்பைப் பெறுகின்றார்;. அத்தோடு உடலுறவு, அதற்கு முன்னுள்ள காரியங்களான முத்தமிடுதல், ஆசையுடன் தொடுதல், போன்ற காரியங்களும் இஃதிகாஃப் இருப்பவருக்கு விலக்கப்பட்டதாகும். அல்லாஹ் திருமறையில் கூறுகின்றான்:

இஃதிகாஃப் இருப்பவர்கள் திக்ர் செய்வதில், குர்ஆன் ஓதுவதில், நஃபிலான தொழுகைகளில், இன்ன பிற வழிபாடுகளில் ஈடுபட்டிருத்தல் அவசியமாகும். மேலும் உலக விஷயங்களில் ஈடுபடுதல் மற்றும் தேவையற்ற காரியங்களை விட்டும் தவர்ந்து இருத்தல் அவசியமாகும். ஆனால் ஏதேனும் முக்கிய நலனை முன்னிட்டு இஃதிகாஃப் இருப்பவர் தனது குடும்பத்தாருடன் ஆகுமான பேச்சுக்கள் பேசுவதில் எவ்விதத் தவறுமில்லை. அல்லாஹ் திருமறையில் குறிப்பிடுகின்றான்: இன்னும் நீங்கள் பள்ளிவாசலில் தனித்த இருக்கும்போது மனைவியர்களுடன் கூடாதீர்கள். (2 : 187)

லைலதுல் கத்ர்

லைலதுல் கத்ர் என்பதன் பொருள் கண்ணியமிக்க இரவு என்பதாகும். ரமளான் மாத இறுதிப் பத்தின் ஒற்றைப்பட்ட நாட்களில் இந்த இரவு வருமென அதிகமனா நபி மொழிகள் கூறுகின்றன. இவ்விரவு ஒரு ஆண்டில் 27லும் மற்றொரு ஆண்டில் 25, 23, 21 29 போன்ற நாட்களிலும் வர வாய்ப்பிருப்பதால் இவ்விரவு ஒவ்வொரு ஆண்டிலும் 27ல் தான் வருமெனத் எண்ணி அமல்கள் செய்வது தவறாகும். அவ்விரவில் பாக்கியமும், அதிக நன்மையும், சிறப்பும் இருப்பதால் இந்த இரவு அருள்பாலிக்கப்பட்ட இரவு என்று அல்லாஹ் அல் குர்ஆனில் சிறப்பித்துக் கூறுகினறான். அந்த இரவில் மலக்குகள் நன்மைகள், அருட்பாக்கியங்கள், சிறப்புகள் ஆகியவற்றைக் கொண்டு பூமியில் இறங்குகின்றார்கள். அந்தச் சிறப்பு வைகரை உதயமாகும் வரையிலும் இருக்கும் என்று அருள்மறையாம் திருமறை குர்ஆன் சான்று பகர்கின்றது.

நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலதுல் கத்ர்) இரவில் இறக்கினோம். மேலும் கண்ணிய மிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? அதில் மலக்குகளும், (ஜிப்ரீல் எனும்) ஆன்மாவும் தன் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்). அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (97 : 1-5)

நபியவர்கள் நவின்றதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கனிறார்கள்: விசுவாசத்துடனும், நன்மையை எதிர் பார்த்தும் எவர் லைலதுல் கத்ர் இரவில் தொழுதாரோ அவருடைய முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுகினறன. (புகாரி, முஸ்லிம்). .

யா அல்லாஹ்! வழிகேட்டில் ஆழ்த்தக் கூடிய குழப்பங்களை விட்டும் எங்களைக் காத்தருள்வாயாக! நன்மையின் பக்கம் விரைந்து செல்லக்கூடிய, தீமைகளை விட்டும் விலகிச் செல்லக்கூடிய, சுவர்க்கத்து மாளிகைகளில் நிம்மதியாக தங்கி வாழக்கூடிய மக்களுடன் எங்களைச் சேர்த்து வைப்பாயாக! உனது அருட்கொடைகளுக்கு நன்றி செலுத்தக் கூடிய, அழகாய் உனக்கு வழிபட்டு நடந்து உனது நேசத்தைப் பெற்றோரின் குழுவில் எங்களையும் இணைத்து வைப் பாயாக! கருணை மிக்க இறைவனே! பயங்கரமான நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாற்றி உனது கருணை கொண்டு எங்களுக்கும் எங்கள் பெற்றோருக்கும். மற்றும் எல்லர் முஸ்லிம்களுக்கும் நீ மன்னிப்பு வழங்குவாயாக!.

Thursday, August 20, 2009

ரமழானின் பயனை பெறுவது எப்படி?" -மெளலவி முபாரக் மதனி(VIDEO)

மெளலவி முபாரக் மதனி அவர்கள்


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

அல்-கோபர் இஸ்லாமிய மையமும் தமிழ் தஃவா கமிட்டியம் இணைந்து கடந்த 19-09-2007 அன்று இரவு அல்கோபர் நகரின் மையப்பகுதியில் அமைந்தள்ள அல்கோபர் இஸ்லாமிய மையத்தால் நடத்தப்படும் இஃப்தார் குடிலில் (நோன்பு திறக்கும் குடில்) சிறப்பான முறையில் ஒரு இஸ்லாமிய குடும்ப நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் இலங்கையில் இருந்து சிறப்பு விருந்தினராக வருகை தந்திருக்கும் பிரபல மார்க்க அறிஞர் முபாரக் மதனி அவர்களும், இந்தியாவை சேர்ந்த பிரபல அழைப்பாளர் மெளலவி அலி அக்பர் உமரி அவர்களும், இலங்கையை சோந்த பிரபல அழைப்பாளர் மெளலவி மன்சூர் மதனி அவர்களும் தங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த தலைப்புகளின் கீழ் சிறப்புரை ஆற்றினார்கள். நிகழ்ச்சிக்கு தமிழ் தஃவா கமிட்டியின் நிர்வாகி மறியாதைக்குறிய மக்கீன் நலீமி அவர்கள் தலைமை தாங்கி நடத்தி தந்தார்கள்.

நிகழச்சிக்குறிய ஏற்பாடகளை அல்கோபர் இஸ்லாமிய மையத்துடன் இணைந்து அல்கோபர் தமிழ் தஃவா கடமட்டியிர் மிகச்சிறப்பாக செய்திருந்தனர். அதன் தன்னார்வ தொண்டர்கள் அயராது உழைத்து இந்நிகழச்சியை சிறப்பாக நடத்தி தந்தனர். இந்நிகழ்ச்சிக்கு ஆன்கள், பெண்கள், குழந்தைகள் என நூற்றுக்கணக்கானோர் குடும்பத்துடன் வந்திருந்து பயன் பெற்றனர்.

நிகழச்சியில் இலங்கையை சேர்ந்த மார்க்க அறிஞர் முபாரக் மதனி அவர்கள் "ரமழானின் பயனை பெறுவது எப்படி?" என்ற தலைப்பில் ஆற்றிய உரையின் வீடியோ தமிழ் முஸ்லிம் மீடியாவில் வெளியிடப்பட்டுள்ளது தமிழ் மக்கள் அணைவரும் இந்த வீடியோவை கண்டு இந்த ரமழானை நல்லபடியாக பணன்படுத்தி பயன் பெற வேண்டும். வீடீயோவை காண கீழே சொடுக்கவும்..


.
நிகழ்ச்சியின் அணைத்து வீடியோக்களையும் இன்னும் பல அற்புத தலைப்புக்களில் இஸ்லாமிய பயான் வீடியோக்களை காண :.
.

Saturday, August 15, 2009

நாங்களும் இந்துக்களே !! - சுதந்திர தின வாழ்த்துக்கள்



நாங்களும் இந்துக்களே!!
இந்தியா எங்கள் தாய் நாடு!! இஸ்லாம் எங்கள் வழிபாடு!!

முஸ்லிம்களாகிய நாங்கள் யார்?

முஸ்லிம்களாகிய நாங்கள், இந்தியத் திருநாட்டில், இந்திய நாட்டவருக்குப் பிறந்த இந்தியராகிய நாங்கள் இஸ்லாத்தை எங்கள் வாழ்க்கை நெறியாக ஏற்றுக் கொண்டுள்ளோம். எம் இந்திய திருநாட்டிற்காக அன்றைய தேசவிடுதலைப் போராட்டத்திலிருந்து நேற்றைய கார்க்கில் யுத்தம் வரை எங்களின் சதவிகிதத்திற்கும் அதிகமாக உயிர்தியாகம் செய்துள்ளோம். நாங்கள் இந்தியராக இங்குதான் பிறந்தோம் இங்குதான் வாழ்கிறோம் இங்குதான் செத்ததுமடிவோம் என்ற இலட்சியத்தில் இருக்கிறோம். நமது நாடு என்று வரும்போது இங்குள்ள ஒரு பிடி மண்ணையும் எவருக்கும் விட்டு கொடுக்க மாட்டோம் என்பதில் தெளிவாக இருக்கிறோம்.

முஸ்லிம்களாகிய எங்களைப் பார்த்து நீ இஸ்லாமியனா? அல்லது இந்தியனா? என்று வினவுவது உனக்கு அம்மா முக்கியமா? அப்பா முக்கியமா? என்று கேட்பதற்குச் சமம். அடிப்படையில் இப்படி கேட்பதே முரண்பாடானது. ஏனெனில் முஸ்லிமா என்ற கேள்வி ஒருவரின் மதநம்பிக்கையை பற்றி வினவுவது. இந்தியனா என்ற இரண்டாவது கேள்வி அவரின் தேசத்தைக்குறித்து வினவுவது. எனவே 'இந்திய முஸ்லீம்களா' அல்லது 'முஸ்லிம் இந்தியர்களா என்ற கேள்வியே அர்தமற்றது.

இந்தக் கேள்விக்கு ஒருபடி மேலாக பதில் சொல்கிறோம். அது, பூலோக விதியின் படி இந்துக்கள் என்னும் சொல் 'இந்துச் சமவெளியில் வாழும் மக்கள்' என்பதைக் குறிக்கும். படைத்த இறைவனாகிய அல்லாஹ்வை கடவுளாகவும், நபிகள் நாயகத்தை இறைவனின் தூதராகவும், இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாகவும் ஏற்றுக்கொண்ட இந்திய முஸ்லிம்களாகிய நாங்கள் இந்துச் சமவெளியில் வாழுகின்ற காரணத்தால் பூலோக விதியின்படி மட்டும் நாங்களும் இந்துக்களே என்று நெஞ்சை நிமிர்த்திச் சொல்கிறோம்.

ஆனாலும் நம்நாட்டு இராணுவ ரகசியத்தை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பார்ப்பன கும்பலால் வகுக்கப்பட்ட இந்துமத தத்துவங்கள் பகுத்தறிவிற்கும், உண்மைக்கும், நீதிக்கும், தர்மத்திற்கும் எதிராக
இருப்பதால் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம்.

கடந்த (10-08-2007) தினமணியில் 'முஸ்லிம் இந்தியன் பெயர் மாறுகிறது' என்ற தலைப்பில் ஒரு ஆக்கம் வெளியாகியது அதற்கு "இஸ்லாமிய இணையப் பேரவை" தக்க பதில் அளித்து ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தது அந்த கட்டுரையில் இருந்து.....முழு கட்டுரையையும் வாசிக்க இங்கு சொடுக்கவும்.

THANKS : WWW.IIPONLINE.ORG

Friday, June 19, 2009

‘தக்லீது’ ஓர் ஆய்வு! – அபூ ஃபாத்திமா

‘தக்லீது’ ஓர் ஆய்வு! – அபூ ஃபாத்திமா
மறு பதிப்பு

இன்றை சூழ்நிலையில், முஸ்லிம் சமுதாய மக்களிடம் ‘தக்லீது’ செய்யாதீர்கள். ‘தக்லீது’ குர்ஆனுக்கும், ஹதீஸுக்கும் முழுக்க, முழுக்க முரணானதாகும் என்று சொன்னவுடன், தக்லீது செய்யக்கூடாது என்றால், மனிதர்களால் ஏட்டில் கோர்வை செய்யப்பட்டுள்ள குர்ஆனைப் பார்க்கக் கூடாது. மனிதர்களால் சேகரம் செய்து தரப்பட்டுள்ள ஹதீஸுகளைப் பார்க்கக் கூடாது. மனிதர்களால் எழுதப்பட்டுள்ள நூல்களைப் பார்க்கக் கூடாது. மனிதர்களின் பேச்சுக்களைக் கேட்கக்கூடாது. அந்நஜாத்தைக் பார்ப்பதும் கூடாது: காரணம் இவை எல்லாம் தக்லீதே ஆகும் என்று உடனே சொல்லி விடுகிறார்கள். தக்லீது செய்யாமல் நடப்பதாக இருந்தால், சுயமாக ஞானோதயத்தில் விளங்கி நடக்க வேண்டும். இது சாத்தியமா? நிச்சயமாக சாத்தியம் இல்லை. ஆகவே தக்லீது செய்ததுதான் ஆகவேண்டும் என்று தக்லீதை நியாயப்படத்த பெரம்பாலான முஸ்லிம்கள் முனைகிறார்கள்.

இந்த ஹிமாலயத் தவறுக்கு அடிப்படைக் காரணம். ‘தக்லீது’ என்றால் பின்பற்றல் என்ற தவறான பொருளை காலங்காலமாக அவர்கள் விளங்கி வைத்திருப்பதேயாகும். ‘தக்லீது’ என்ற அரபி பதம் ‘பின்பற்றல்’ என்ற பொருளை ஒரு போதும் தராது. ஆனால் தலைமுறை, தலைமுறையாகத் ‘தக்லீது’ என்ற அரபி சொல்லுக்குப் ‘பின்பற்றல்’ என்ற தவறான பொருள். சுயநலக்காரர்களால் அவர்களின் உலக ஆதாயம் கருதி கொடுக்கப்பட்டு மக்களிடையேயும் அதுவே வலுவாக வேரூன்றிவிட்டது.

அல்குர்ஆன் வசனங்கள் அனைத்திலும், ஹதீஸ்கள் அனைத்திலும் பல இடங்களில் பின்பற்றுதல் பற்றிக் குறிப்பிடப்பட்டிருந்தும் ஒரு இடத்தில் கூட இந்த ‘தக்லீது’ பதம் பயன்படுத்தப் படவில்லை என்பது முஸ்லிம்களின் ஆழ்ந்த சிந்தனைக்குரிய ஒரு விஷயமாகும். இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால் தவறான பின்பற்றுதலுக்கும். இந்தத் ‘தக்லீது’ பதம் பயன்படுத்தப்படவே இல்லை என்பதையம் முஸ்லிம்கள் ஊன்றிக் கவனிக்க வேண்டுகிறேன்.


‘உங்கள் ரப்பிடமிருந்து, உங்களுக்க இறக்கப்பட்டதையே பின்பற்றுங்கள்: அவனையன்றி வேறெவரையும் பாதுகாவலர்களாக்கி அவர்களைப் பின்பற்றாதீர்கள்: (எனினும் இதன்படி) நல்லுணர்வு பெறுவோர் உங்களில் வெகு சொற்பமே’. அல்குர்ஆன் 7;3


இந்த வசனத்தில் ‘வலாதத்தபிவூ’ என்ற பதமே பின்பற்றாதீர்கள் என்பதற்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தக்லீத் என்ற பதம் பயன்படுத்தவில்லை.

‘எங்கள் ரப்பே! நிச்சயமாக நாங்கள் எங்கள் தலைவர் (ஸய்யிது) களுக்கும், எங்கள் பெரியார் (அகாபிரீன்)களுக்கும் வழிப்பட்டோம்: அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டார்கள்’ (அல்குர்ஆன் 33:67)


நரகவாதிகள் நரகில் வேதனை செய்யப்படும் போது அவர்களின் ஓலம் இது.

இங்கும் தவறான பின்பற்றுதலுக்கு (வழிப்படுதல்) ‘அதஃனா’ என்ற பதமே பயன்படுத்தப்பட்டுள்ளது. மாறாக, தக்லீத் என்ற பதம் பயன்படுத்தப்படவில்லை.


‘அல்லாஹ் இறக்கி வைத்ததைப் பின்பற்றுங்கள். என்று அவர்களிடம் கூறப்பட்டால், அவர்கள் அப்படியல்ல! எங்களுடைய மூதாதையர்கள் எந்த வழியில் நடக்கக் கண்டோமோ, அந்த வழியையே நாங்களும் பின்பற்றுகிறோம்’. அல்குர்ஆன் 2:170


இங்கு வழி தவறியவர்களும் ‘நத்தபிவூ’ என்ற பதத்தையே தவறான பின்பற்றுதலுக்குப் பயன்படுத்தியுள்ளதை பார்க்கிறோம். அனால் தக்லீத் என்ற பதத்தைப் பயன்படுத்தவில்லை.

ஆக குர்ஆன், ஹதீஸுகள் முழுக்கத் தேடினாலும் பின்பற்றுதலுக்கு, அது சரியான பின்பற்றுதலாக இருந்தாலும் சரி, தவறான பின்பற்றுதலாக இருந்தாலும் சரி, ‘தக்லீது’ என்ற பதம் ஓரிடத்தில் பயன்படத்தப்படவில்லை என்பதைச் சகோதர, சகோதரிகள் தங்கள் உள்ளங்களில் நன்கு பதித்துக் கொள்ளவும். எவர் உங்களிடம் வாதம் செய்ய முன்வந்தாலும் குர்ஆனில் ஒரு வசனத்தையோ, உண்மை ஹதீதுகளில் ஒரு ஹதீதையோ, பின்பற்றுதலுக்கு ‘தக்லீது’ பதம் செய்ய பயன் படுத்தப்பட்டுள்ளதைக் காட்டச் சொல்லிக் கேளுங்கள். அப்போது தான் உண்மை உங்களுக்குப் புரிய வரும்.

குர்ஆனில் சூரத்துல் மாயிதாவில் 5:2,97 ஆகிய இரண்டு வசனங்களில், தக்லீதைச் சேர்ந்த ‘கலாயித்’ என்ற பதம் மாலைகளால் அடையாளமிடப்பட்ட குர்பானி, மிருகங்களுக்காகப் பயன்படத்தப்பட்டுள்ளது. ஹதீஸுகளிலும் அடையாளமிடப்பட்ட குர்பானி மிருகங்களைக் ‘கலாயித்’ என்ற அரபி பதத்தின் மூலம் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.


‘தக்லீது’ என்னும் அரபி பதத்தின் மூலம் : கல்லத –யுகல்லிது – தக்லீத்.

கல்லதஹூஃபீகதா, தபிஅஹுமின் ஹ(க)ய்ரி தஅம்முலின் வலாநழ்ரின் எவ்விதப் பார்வையும், பரிசீலனையுமின்றி ஒருவரைப் பின்பற்றல் (கண்மூடிப் பின்பற்றல்) என்பதாகும்.


தக்லீத் தனது மூதாதையர்கள், போதகர்கள், தலைவர்கள் போன்Nறூரை, கொள்கை, கோட்பாடு, கல்வி, செயல்பாடு ஆகியவற்றில் எவ்விதப் பார்வையும், பரிசீலனையுமின்றிப் பின்பற்றல் (கண்மூடிப் பின்பற்றல்) என்பதாகும்.

கிறிஸ்தவர்களிடத்தில் தக்லீது

அவர்களின் வேத நூல்களில் பதிலு வெய்யப்படாது. அவர்களின் பாரதிரிகளின் போதனைகளைக் காலங்காலமாக எவ்வித பார்வையும், பரிசீலனையுமின்றிப் பின்பற்றல் (கண்மூடிப் பின்பற்றல்) என்பதாகும். முன்ஜித்: அரபி மொழி அகராதி

குர்ஆன், ஹதீஸுகளில் காணப்படாத ‘தக்லீது’ பதம் முன்னைய மதவாதிகளால் பயன்படுத்தப்படகின்றது. அவர்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி வழி கெட்டுச் செல்லும் ஒரு கூட்டமே, தங்கள் சுய நலம் கருதி, இஸ்லாத்தின் இந்தத் தக்லீதை நுழைத்தள்ளனர் என்பது சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிரூபணமாகின்றது. இதை நபி(ஸல்) அவர்கள் 1400 வருடங்களுக்கு முன்பே அழகாக முன்னறிவிப்புச் செய்துள்ளார்கள்.

எனது சமுதயாத்திற்கு ஒரு காலம், பனூ இஸ்ராயீல்களுக்கு வந்ததுபோல், ஒரு செருப்பிற்கு அடுத்த செருப்பு ஒத்திருப்பது போல் வந்து சேரும்: அவர்களிலொருவன் தனது தாயிடம் (தவறு செய்ய) பகிரங்கமாக வந்திருந்தால், அவ்வாறே (தவறு செய்பவன்) எனத சமுதாயத்திலும் வருவான்.


‘நிச்சயமாக பனூ இஸ்ராயீல் 72 கூட்டங்களாகப் பிரிந்தார்கள்: எனது உம்மத்தினர் 73 கூட்டங்களாகப் பிரிவார்கள். அவர்களில் ஒர கூட்டத்தாரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் நரகத்தையடைவர்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார். அதற்கு (நபி தோழர்கள்) ‘அவர்கள் யார்” என்று கேட்க, ‘நானும் எனது தோழர்களும் எவ்வாறு நடக்கிறோமோ, அவ்வாறே நடப்பவர்கள்’. என்று விடையளித்தார்கள். (வேறு எந்தப் பயரையும் நபி(ஸல்) அவர்கள் அந்த வெற்றி பெறும் கூட்டத்திற்குச் சூட்டவில்லை என்பது இங்கு ஊன்றி கவனிக்க வேண்டிய ஒரு விஷயம்) அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு(ரழி), நூல்கள்: திர்மிதி, அஹ்மத், அபூ தாவூத்.


அபுதாவூதில் முஆவியா(ரழி) அவர்களின் வாயிலாக பின்வருமாறு பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனது உம்மத்தில் ஒரு கூட்டத்தார் தோன்றுவார்கள். அவர்களிடையே தான்தோன்றித்தனமான வகையில், அனாச்சாரங்கள், வெறி நாய் கடித்தவனது உடலில் அதன் விஷம் நரம்பு, தசைகள் அனைத்திலும் ஊடுருவிச் சென்று விடுவது போன்று, ஊடுருவிச் சென்றுவிடும்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.


‘உங்களின் முன்னோர்களை நீங்கள் சானுக்குச் சாண், முழத்திற்கு முழம் பின்பற்றுவீர்கள்: அவர்கள் உடும்பின் துவாரத்திற்குள் புகுந்திருந்தாலும் அவர்களை (அப்படியே) பின்பற்றுவீர்கள்’ என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு நாங்கள் ‘யாரஸுலல்லாஹ்! யூதர்களையும், கிறிஸ்தவர்களையுமா கூறுகிறீர்கள்’ என்று கேட்டோம்: அதற்கு அவர்கள் ‘வேறு யாரை’ என்றார்கள்.அறிவிப்பவர்: அபூ ஸயீதுல் குத்ரீ(ரழி), நூல் : முஸ்லிம்.


முன்னைய மதவாதிகளின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றி அவர்கள் தக்லீதின் பேரால் செய்யும் காரியமான, ‘அவர்கள் அல்லாஹ்வை விட்டு, தம் பாதிரிகளையும், சந்நியாசிகளையும், மரியமுடைய மகன் மஸீஹையும், தெய்வங்களாக்கிக் கொள்கிறனர்’ (அல்குர்ஆன் 9:31)


என்று அல்லாஹ் சொல்வது போல், இவர்களும் தக்லீதின் பேரால், அல்லாஹ்வை விட்டு தம் இமாம்களையும், ஆலிம்களையும்ட தெய்வங்களாக்கிக் கொள்கின்றனர். அவர்கள் தங்கள் பாதிரிகளையும், சந்நியாசிகளையும் கடவுள் என்று வணங்கவில்லை. தம் பாதிரிகளின் கூறு;றுக்கள். அவர்களின் வேதத்திற்கு முரணாக இருந்தாலும் எடுத்து நடந்தனர். இதே போல் முதல்லிதுகள், குர்ஆன், ஹதீஸுகளுக்கு நேர் முரணான காரியங்களை இமாம்கள், ஆலிம்கள் சொன்னார்கள் என்ற குருட்டு நம்பிக்கையில் பின்பற்றுகின்றனர். நபி(ஸல்) அவரகள், வழிகெட்டுச் செல்வோர் பற்றிக் கூறியவற்றை அப்படியே முதல்லிதுகள் முழுக்க முழுக்க நிறைவேற்றகின்றனர். பனூ இஸ்ராயீல்கள் 72 கூட்டங்களாகப் பிரிந்தது போல், முதல்லிதுகளும் பல வழி தவறிய கூட்டங்களாகப் பிரிந்துள்ளனர். ஒவ்வொரு கூட்டமும் நபி(ஸல்) அவர்களை வழிகாட்டியாக எற்று நடக்கத் தவறிவிட்டனர். அவர்கள் நம்பிக்கை வைத்துள்ள ஒருவரை இமாமாக ஏற்றுக் குருட்டுத்தனமாகப் பின்பற்றுகின்றனர். ஆக ஜோடி செருப்பில் ஒரு செருப்புக்கு மறு செருப்பு ஒத்திருப்பது போல், பனூ இஸ்ராயீல்களின் அடிச்சுவட்டை அப்படியே பின்பற்றுகின்றனர். இதிலிருந்து யூத, கிறிஸ்தவர்களின் அடிச்சுவட்டைப் பின்பற்றுகிறவர்கள் முதல்லிதுகளே: குர்ஆன், ஹதஸ்களை மட்டும் எடுத்துச் செயல்படகிறவர்கள் அல்ல என்பது தெளிவாகின்றது.

இதே போன்று சூஃபிஸ தத்துவமும் (தரீக்கா பிரிவுகள், கபுருச் சடங்குகள்) இது முற்றினதால் ஏற்பட்டுள்ள துறவு மனப்பான்மையும், நபி(ஸல்) அவர்கள் போதித்த இஸ்லாத்தில் இல்லை. குர்ஆன், ஹதீஸ்களில் இவற்றிற்குரிய ஆதாரங்கள் எள்ளளவும் இல்லை. ஆனால் முன்னைய மதவாதிகளிடம், யூத கிறிஸ்தவர்களிடம் இவை இருந்து வருகின்றன. இவற்றையும் அவர்களிடமிருந்தே அப்படியே காப்பி அடித்து, இஸ்லாத்தில் நுழைத்து விட்டார்கள். எனவே இந்தத் தக்லீதையும், தஸவ்வஃபையும் மதவாதிகளாகக் காப்பியடித்து, எடுத்து நடப்பவர்கள், நபி(ஸல்) அவர்களைப் பின்பற்றகிறவர்களாகவோ, நேர்வழி நடப்பவர்களோ, அல்லாஹ்வின் பொருத்தம் பெறக்கூயவர்களாகவோ, ஒருபோதும் ஆக முடியாது என்பது தெளிவான ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த தீய வழிகளிலிருந்து அல்லாஹ்(ஜல்) நம்மைக் காப்பானாக.

அவர்கள் (விசுவாசிகள்) தங்கள் ரப்புடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால், செவிடர்களையும், குருடர்களையும் போல், அவற்றின்மீது விழமாட்டார்கள். (பார்த்துப் பரிசீலனை செய்த செயல்படுவார்கள்) அல்குர்ஆன் 25:73


இந்த வசனத்திலிருந்து குர்ஆனை தக்லீது செய்வதையும் அல்லாஹ் அனுமதிக்கவில்லை என்பது தெளிவாகின்றது. (பார்வை பரிசீலனையில் வரமுடியாத, மறைவான விஷயங்களில் நம்பிக்கைக் கொள்ள வேண்டும் என்பது வேறு குர்ஆன் வசனங்கள் மூலம் உறுதிப் படுத்தப்படுகிறது.
நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின்பற்றுங்கள்: அல்லாஹ் உங்களை நேசிப்பான், உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்குர்ஆன் 3:31


இந்த வசனத்தில் நபி(ஸல்) அவர்களையே தக்லீது செய்யச் சொல்லப்படவில்லை. இந்தியா என்னும் விளங்கிப் பின்பற்றுதலே வலியுறுத்தப்படுகின்றது. இதன் அடிப்படையில் மார்க்க விவகாரங்களைத் தவிர, (அல்லாஹ்வின் கட்டளை, ஒப்புதல் அடிப்படையில் சொல்லப்படுவது) நபி(ஸல்) அவர்களின் சொந்த விருப்பங்கள், அபிப்பிராயங்கள் அனைத்தும் நபி தோழர்களால் எடுத்து நடத்தப்படவில்லை என்பதற்குச் சரியான பல ஹதீஸ் ஆதாரங்களைப் பார்;க்க முடிகின்றது.

இப்போது சிந்தித்துப் பாருங்கள்! அல்லாஹ்வின் வசனங்களையே தக்லீது செய்ய அல்லாஹ் அனுமதிக்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்களையே ‘தக்லீது’ செய்ய அல்லாஹ் அனுமதிக்கவில்லை. மாறாக, சிந்தித்துப் பார்த்தச் செயல்படவே ஆணையிடுகிறான். இந்த நிலையில் வேறு யாரையும் ‘தக்லீது’ செய்ய அல்லாஹ் அனுமதித்து இருப்பானா? ஒருபோதும் அனுமதித்து இருக்கமாட்டான். முன்சொல்லப்பட்ட அல்குர்ஆன் 7:3 வசனம் ‘தக்லீது’ மிக வன்மையான மறுத்தே இறக்கப்பட்டுள்ளதை அறிவுடையவர்கள் எளிதில் விளங்கிக் கொள்ள முடியும். இதைத் தெளிவாக விளங்கி ‘தக்லீது’ விட்டு தவ்பா செய்து முஸ்லிம் சகோதர, சகோதரிகள் கடமைப்பட்டிருக்கிறார்கள். அறிவுடையவர்கள் மட்டுமே முஸ்லிம்களாக இருக்க முடியும். தக்லீதை விட்டு தவ்பா செய்து நீங்கதாதவர்களுக்கு வெற்றி பெறும் வாய்ப்பு இல்லவே இல்லை என்பதே தெளிவாகும்.

தக்லீதிற்கும் இத்திபாவிற்கும் உள்ள வேறுபாடுகள் :

1. சமீப காலத்தில் யூதர்கள் குர்ஆனில் பல இடைச் செருகல்களைச் சேர்த்து, லட்சக்கணக்கான குர்ஆன் பிரதிகள் அடித்து, உலகம் முழுவதும் பரப்பினார்கள். அந்த குர்ஆனை, பார்த்துப் பரிசீலனை செய்யாது. அனைத்தும் அல்லாஹ்வின் வசனங்கள் என்று நம்பிச் செயல்படுகிறவர்கள் தக்லீது செய்யும் முதல்லிதுகள் ஆவார்கள். அதைப் பார்த்துப் பரிசீலனை செய்து இடைச் செருகல்களை நீக்கி, அல்லாஹ்வின் வசனங்களை மட்டும் விளங்கி, எடுத்து நடப்பவர்கள். ‘இத்திபா’ செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

2. இதே போல் ஹதீஸ் நூல்களில், இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள், பலவீனமான ஹதீஸ்கள் இடைச் செருகல்களாக நுழைக்கப்பட்டிருக்கின்றன. அனைத்தையுமு; உண்மை ஹதீஸ்கள் என்று பார்த்துப் பரிசீலனை செய்யாமல் நம்பிச் செயல்படகிறவர்கள் தக்லீது செய்யும் முதல்லிதுகள் ஆவார்கள்.

ஹதீஸ்களைப் பார்த்து பரிசீலனை செய்து, இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களையும் பலவீனமான ஹதீஸ்களையும் நிக்கிவிட்டு உண்மையான ஹதீஸ்களை மட்டும் விளங்கி, எடுத்து நடப்பவர்கள் ‘இத்திபா’ செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

3. எந்த நூலில் எழுதப்பட்டிருந்தாலும், யாருடைய பேச்சாக இருந்தாலும், அவற்றைக் குர்ஆன், ஹதீஸ்களோடு ஒத்துப் பார்த்து பரிசீலனை செய்யாமல், நம்பி எடுத்து நடப்பவர்கள் ‘தக்லீது’ செய்யும் முதல்லிதுகள் ஆவார்கள்.

அவை மனிதர்களால் ஆக்கப்பட்டவை அல்லது மனிதர்களால் பேரப்பட்டவை. இறைவாக்கல்ல என்ற உயர்ந்த நோக்கத்தோடு, அவற்றைப் பார்த்துப் பரிசீலனை செய்த, குர்ஆனுக்கும் உண்மை ஹதீஸ்களுக்கும் ஒத்திருப்பவற்றை மட்டும் எடுத்து நடப்பவர்கள். ‘இத்திபா’ செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

4. அந்நஜாத்திலே வந்து விட்டது என்பதற்காக அது சரியாகத்தான் இருக்கும் என்று நம்பி, அவற்றைப் பார்த்து பரிசீலனை செய்யாமல் எடுத்து நடப்பவர்கள் ‘தக்லீது’ செய்யும் முதல்லிதுகள் ஆவார்கள்: அந்நஜாத்தில் வந்தாலும் அதில் எழுதுகிறவர்களும் மனிதர்களே, அவர்களிலும் தவறுகள் ஏற்படலாம் என்று அவற்றைப் பார்த்துப் பரிசீலனை செய்த குர்ஆனுக்கும் உண்மை ஹதீஸுகளுக்கும் ஒத்திருப்பவற்றை மட்டும்; எடுத்து நடப்பவர்கள் ‘இத்திபா’ செய்யும் விளங்கிப் பின்பற்றுகிறவர்கள் ஆவார்கள்.

இப்போது தக்லீதுக்கும் (கண்மூடிப் பின்பற்றல்) இத்திபாவுக்கும் (விளங்கிப் பின்பற்றல்) உள்ள வேறுபாட்டை நன்கு விளங்கி இருப்பீர்கள் என்று நம்புகிறோம். இன்னும் தெளிவாகச் சொல்வதாக இருந்தால், ஈ அடிச்சான் காப்பி அடிப்பது ‘தக்லீது’ ஆகும். சார் அவன் மிகச் சரியாக எழுதுகிறான். அதனால் தான் நான் அவனைக் காப்பி அடிச்Nசுன் என்று எந்த மாணவனும் சொல்ல முடியாது. காப்பி அடிப்பது அரசால் தடை செய்யப்பட்டிருப்பது போல், ‘தக்லீது’ அல்லாஹ்வால் தடை செய்யப்பட்டுள்ளது. பரீட்சைக்கு முன் திறமைமிக்க மாணவனிடம், பரீட்சையில் வரும் கேள்விகளைப் பற்றிக் கேட்டு விளங்கிக் கொண்டு, பரீட்சையில் சுயமாக எழுதுவது அரசால் அனுமதிக்கப்பட்டிருப்பது போல், திறமை மிக்கவர்களிடம், துர்ஆனையும், ஹதீஸ்களையும் அறிந்தவர்களிடம் (அவர்களின் கற்பனைக் கட்டுக் கதைகளையோ, யூகங்களையோ, அல்ல) கேட்டு, குர்ஆன், ஹதீஸ்களில் உள்ளவைதான் என்று விளங்கி எடுத்து நடப்பதை அல்லாஹ் அனுமதிக்கிறான். இதற்கு இத்திபா என்றே சொல்லப்படும்.

இதற்குப் பிறகும் முஸ்லிம் சகோதர, சகோதரிகள் தக்லீதுக்கும் இத்திபாவுக்கும் உள்ள வேறுபாடு தெரியாமல் இரண்டும் ஒன்றுதான் என்றோ, தக்லீத செய்யாமல் மார்க்கத்தை எடுத்து நடக்க முடியாது என்றோ, சரியாக இருந்தால் தக்லீது செய்யலாம் என்றோ சொல்ல மாட்டார்கள் என்று நம்புகிறோம். அல்லாஹ்வால் அனுமதிக்கப்படாத தக்லீதை விட்டு முற்றிலும் தவ்பா செய்து மீள்வோமாக! அல்லாஹ்வால் அனுமதிக்கப்பட்ட ‘இத்திபா’ செய்யப் பழகுவோமாக!

தக்லீது : கண்மூடிப் பின்பற்றல் – புரோகிதமும், இடைத்தரகர்களும் இஸ்லாத்தில் புகுந்து, ஐக்கிய சமுதாயத்தைக் கூறுபோட்டு சுரண்டுவதற்கு வழிவகை செய்கிறது.

முதல்லிது : பார்த்துப் பரிசீலனை செய்யாமல் கண்மூடித் தனமாகப் பின்பற்றுபவன்.

இத்திபா: விளங்கிப் பின்பற்றல் – புரோகிதத்தையும் இடைத் தரகர்களையும் ஒழித்துக்கட்டி ஐக்கிய, சமத்துவ, சகோதரத்துவ, சமுதாயம் அமைய வழிவகை செய்கிறது.


முஸ்லிம் சமுதாயத்திற்கு தக்லீது வேண்டுமா? ‘இத்திபா’ வேண்டுமா?

அஹ்ல சுன்னத் வல்ஜமாஅத்தினர், நபியையும் நபி தோழர்களையும் பின்பற்றாமல், புரோகித மவ்லவிகளைப் பின்பற்றி நடக்கின்றனர். அஹ்ல சுன்னத் வல்ஜமாஅத்தினர் என்பதில் பொய்யர்களாக இருந்தாலும் தங்களை முதல்லிதுகள் என்று சொல்லதில் உண்மையாளர்களா இருக்கின்றனர். ஆனால் நாங்கள் குர்ஆன், ஹதீஸை பின்பற்றுகிறோம். தவ்ஹீத்வாதிகள் என்று பீற்றுவோர்;, குர்ஆன், ஹதீஸை பின்பற்றுகிறோம் என்பதிலும் பொய்யர்களே, தவ்ஹீத் வாதிகள் என்பதிலும் பொய்யர்களே! தவ்ஹீத் வாதிகள் என்பதிலும் பொய்யர்களே! தவ்ஹீத் மவ்லவிகள் என பொய்யாகப் பீற்றிக் கொள்ளும் புரோகிதர்களை தக்லீத் செய்யும் முதல்லிதுகளே!

எவனொருவன் நேர்வழி இன்னதொரு தனக்குத் தெளிவான பின்னரும், (அவ்லாஹ்வின்) இத் தூதரை விட்டுப் பிரிந்து, (வேறு ஒருவரை இமாமாக ஆக்கிக் கொண்டு முஃமின்கள் செல்லாத வழியில் செல்கின்றானோ, அவனை அவன் செல்லும் (தவறான) வழியிலேயே செல்ல விட்டு, நரகத்திலும் அவனை நுழையச் செய்வோம்: அதுவோ, சென்றடையும் இடங்களில் மிகக்கெட்டதாகும்.
அல்குர்ஆன் 4:115


நன்றி : அந்நஜாத்

Thursday, April 30, 2009

பாசிசத்திற்கு எதிரான முஸ்லிமல்லாத கட்சிகளுக்கு வாக்களியுங்கள்

தேர்தல் 2009! ஏறத்தாழ எல்லா கட்சிகளின் கூட்டணிகளும் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டன! தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், வி-சிறுத்தை மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், அதிமுக மதிமுக பமக மற்றும் இரண்டு கம்யூணிஸ்ட்கள் மறு அணியாகவும் நின்று போட்டியிடுகின்றன. நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவும் களம் காண்கின்றது. போதாக்குறையாக மூன்றாம் அணியென்றும் நான்காவது அணியென்றும் சில லட்டர் பேட் கட்சிகள் அணிகளை உருவாக்கி வேட்பாளர்களையும் அறிவித்திருக்கின்றது.

குறிப்பாக தமுமுக - மமக என்ற பெயரில் தேர்தலை சந்திக்கின்றது.

திமுக கூட்டணியைப் பொறுத்த மட்டில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அறிவித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றது. குறிப்பாகச் சொல்வதென்றால் முஸ்லிம்களுக்கு என மூன்றரைச் சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கின்றது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியானது முஸ்லிம்களுக்கு குறிப்பிடும்படியான ஒன்றும் செய்யாமலிருந்தாலும் தேசிய அளவில் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சிக்கு மாற்றமான ஒரு வலுவான அணியாக உள்ளது.

அதே வேளையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளில் ஒன்றான பாமக ஆகிய கட்சிகள் வெளிப்படையாக இல்லாமல் ரகசிய ஒப்பந்தத்தின் வாயிலாக தேர்தலுக்குப் பின்னர் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவில் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அதனால்தான் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சியும் கூட்டணி என்ற பெயரில் கார்த்திக் போன்றவர்களுடன் பம்மாத்து வேலை செய்துவருகின்றது.

அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சியோடு கூட்டணி சேராமல் இருப்பது எதற்காகவென்றால், கணிசமான தமிழ் முஸ்லிம்களுடைய ஓட்டுக்களையும் பெற்றுவிட்ட பின்னர் ஆட்சியில் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்ற ரகசிய ஒப்பந்தம் ஆகும்.

அதன் அடிப்படையில் மதவெறி பிடித்த கட்சி ஒரு மாநிலத்தை ஆட்சி செய்து முஸ்லிம்களையும் அது போன்று கிறிஸ்தவர்களையும் துவம்சம் செய்து நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்திய காட்சிகள் இன்றும் தொடரவே செய்கின்றது என்றிருக்கையில் இந்த பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சிக்கு ஆதரவளித்து தேசிய அளவில் அரியணை ஏற்றினால் அதன் பின்னர் அவர்களுடைய கோர தாண்டவத்தைச் சொல்லவா வேண்டும்.

ஆக தேசிய அளவிலான பயங்கரவாதம் தடுத்து நிறுத்தப்படவும் முஸ்லிம் - கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு ஓரளவு பாதுகாப்பான நிலையை ஏற்படுத்துவதற்கான மிகச்சரியான ஆயுதம் இந்த தேர்தலேயாகும். இந்த தேர்தல் மூலம் கிடைக்கும் வாய்ப்பை கை நழுவ விட்டுவிட்டு (ஒருவேளை) பாரதீய ஜனதாவின் ஆட்சியில் கோர்ட் கேஸ் என்று அலையலாம் என்பதை ஓரளவு உணர்வுள்ள ஒரு முட்டாள் கூட ஒப்புக்கொள்ளமாட்டான். முன்னர் ஆறு ஆண்டுகள் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது நாட்டில் பெரிய அளவிலான கலவரங்கள் நடக்காமல் இருந்தது கூட அவர்களுடைய கைங்கர்யமும் வெள்ளோட்டமுமே காரணமாக இருந்தது. எனினும் தற்போது பாஜாகாவின் செயல்பாடுகள் வெளிப்படையான பயங்கரவாதம் என்பதை குஜராத் மற்றும் ஒரிசா மாநிலங்களை உதாரணமாகக் கொண்டு புரிந்து கொள்ளலாம்.

எனவே மதவெறி பிடித்த பாரதீய ஜனதா எனும் கட்சிக்கு எதிராக தமிழகத்தில் இருக்கும் கூட்டணி என்பது திமுக தலைமையிலான கூட்டணியே ஆகும். நேற்றுவரை திமுகவை வரம்பின்றி புகழ்ந்து தள்ளிவிட்டு இன்று திமுக தங்களுக்கு இடம் தராத காரணத்தால் அந்த கூட்டணியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் மமகாவின் கூற்றையும் இங்கு கவனிக்கவேண்டியுள்ளது.

தங்களுக்கு வாரியப்பதவி கிடைத்ததால் திமுகாவை ஆதரித்த இவர்கள் திமுகவினால் கழற்றிவிடப்பட்டபோது தங்களால் மிகக்கடுமையாக எதிர்க்கப்பட்ட அதிமுகவினரிடமும் இரண்டு தொகுதிகளுக்காக அலைந்தனர். அங்கும் சரியான சவுக்கடி கிடைத்ததும் தற்போது சமுதாயத்திற்கு பாடுபடும் முஸ்லிம் கட்சி என்று ஊர் ஊராக புலம்புகின்றனர். தாம் ஏற்கனவே கண்ணை மூடி ஆதரித்த திமுக வை (சீட் கிடைக்காத ஒரே காரணத்தால்) கன்னாபின்னாவெனத் திட்டித் தீர்க்கின்றனர். தாங்களும் சில தொகுதிகளில் போட்டியிடவும் செய்கின்றனர். இவர்கள் போட்டியிடாத தொகுதிகளில் இவர்கள் யாரை ஆதரிப்பார்கள்? பாப்பாத்தி என்று இவர்கள் கூறிய ஜெயலலிதாவையா? அல்லது இட ஒதுக்கீட்டுக்காக இவர்களால் நன்றியறிவிப்பு மாநாடு நடத்தப்பட்ட கருணாநிதியின் கூட்டணிக்கா என்பதை தெளிவாக குறிப்பிடவேண்டும்.

மேலும் தேசிய அளவில் ஆட்சியை நிர்ணயிக்கும் தமிழகத்தின் இரண்டு கூட்டணிகளில் தற்போது திமுக தலைமையிலான கூட்டணி ஒருபக்கமும் தேர்தலுக்குப்பின் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்கக் காத்திருக்கும் அதிமுக - பாமக கூட்டணி மறு பக்கமும் வாக்கு சேகரிக்கும் போது முஸ்லிம் கட்சி என்று கூறியே முஸ்லிம்களின் பொது எதிரியான பாரதீய ஜனதா கட்சியின் வெற்றிக்காக ஓட்டுக்களை பிரிக்க நினைக்கும் மமகவின் நிலைபாட்டை நாம் சரியாக புரிந்து கொள்ளவேண்டும். இது மமக வுக்கும் நன்றாகத் தெரியும்.

குறிப்பாக இவர்கள் கூட்டணி வைத்துள்ள (புதிய தமிழகம்) கிருஷ்ணசாமிக்காக தென்காசி தொகுதியில் பாஜக வுடன் கூட்டணி வைத்துள்ள சரத்குமாரும் கார்த்திக்கும் பிரச்சாரம் செய்யப்போவதாக வரக்கூடிய செய்திகளும் கைமாறாக அவர்கள் போட்டியிடும் தொகுதியில் புதிய தமிழகம் போட்டியிடாது என்ற கிருஷ்ணசாமியின் அறிக்கையும் தௌ;ளத் தெளிவாக பாஜகவை ஆதரிக்கும் ஒரு நடவடிக்கை என்றால் மறுக்க இயலாது.

ஆனாலும் தங்களது மானத்தைக் காக்க சமுதாயத்தை அடகு வைத்தாவது காரியம் சாதிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு சமுதாயம் சரியான பாடத்தை புகட்டித்தான் ஆகவேண்டும். அது முஸ்லிம்களுக்கு வேட்டு வைக்கும் மமக போன்ற முஸ்லிம் கட்சியாக இருந்தாலும் சரியே. அதை விட பாசிசத்திற்கு எதிரான முஸ்லிமல்லாத கட்சிகளுக்கு அளிக்கும் வாக்குகள் லட்சம் மடங்குகள் மேலானவை என்பதை தமிழக முஸ்லிம்கள் உணர்ந்து வாக்களிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

எம். எம். அவுலியா

Monday, April 20, 2009

2 வசனங்கள் நீக்கப்பட்ட குர்ஆன் வெளியீடு - தடுத்து நிறுத்தியது சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை

சென்னை ஏப்ரல் 19, இஸ்லாத்தின் எதிரிகளான இஸ்ரேலாலும், யூதர்களாலும், கிருத்துவர்களாலும் நிதி உதவி செய்யப்பட்டு முஸ்லிம்கள் மததியிலும் பொதுமக்கள் மத்தியிலும் நச்சுக் கருத்தக்களை விதைப்பதற்காக உறுவாக்க பட்ட அமைப்பான "அஹ்லுல் குர்ஆன்" என்ற அமைப்பின் தலைவன் ரசாது கலீபா என்பவன் தன்னைத்தானே இறுதி தூதர் என்றும் குர்ஆன் திறிக்கப்பட்டுள்ளது என்றும் கூறி குர்அனில் சில வசனங்களை நீக்கி அதை ஆங்கிலத்தில் வெளியிட்டான் பின்னர் அவன் சுட்டுக் கொல்லப்பட்டான்.

இந்த அயோக்கியனின் அமைப்பான "அஹ்லுல் குர்ஆன்" அமைப்பினர் தமிழகத்திலும் உள்ளனர் அவர்களின் தலைமை அலுவலகம் சென்னை மின்ட் பகுதியில் உள்ளது. அவர்கள் நேற்று சென்னையில் ஒரு சுவரொட்டியை ஒட்டியிருந்தனர் அந்த சுவரொட்டியில் கூறப்பட்டிருந்ததாவது :


கடவுளின் பெயரால் அருளாளர் அன்பாளர் ஒரு சரித்திர குற்றம் அம்பலமாகிறுது !!
உலகம் முழுவதும் பரபரப்பூட்டிய இறைத்தூது?


முழு வடிவில் தமிழகத்தில் முதல் முறையாக குரானில் சோக்கப்பட்ட இரு வசனங்கள் ஆதாரப்பூர்வமாக நீக்கப்பட்டு குரானை துர்ய்மை படுத்தி சததியத்தை எடுத்தரைத்ததால் இறை மறுப்பாளர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட மெய்ப்பிக்கும் தூதர் டாக்டர் ரசாது கலீபா பி.எச்.டி அவர்களால் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட குரானின் தமிழாக்கம்.

(குர்ஆன் இறுதி வேதம் வெளியீட்டு விழா)

19.4.2009 நேரம் மாலை 5.30 மி.

பாவாணர் கலையரங்கம்

அனைவரும் வருக ஆத்மார்த்தி பெறுக
அஹ்லுல் குரான்


இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையின் பொதுச்செயலாளர் திரு. மேலை நாசர் அவர்களை உடனடியாக தொடர்பு கொண்டனர். நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவையினர் உடனடி நடவடிக்கையில் இறங்கினர். திரு. மேலை நாசர், திரு. ஜமாலி ஆகியோர் உடனடியாக காவல்துறையினரை தொடர்பு கொண்டு இந்நிகழ்ச்சியை தடை செய்து உடனடியாக அந்த புத்தகங்களை கைப்பற்றி சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய கோரினர்.

அதன் பின்னர் சென்னையில் "அஹ்லுல் குர்ஆன்" அமைப்பின் அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் முஸ்லிம்களை திரட்டி சுன்னத் ஜமாத் ஐக்கிய பேரவை சார்பாக முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக காவல்துற "அஹ்லுல் குர்ஆன்" அமைப்பினரின் அலுவலகததில் அதிரடியாக புகுந்து அங்கு விநியோகத்திற்காக வைக்கப்பட்டிருந்த சரச்சைக்குறிய நூல்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Friday, April 17, 2009

நம் தலைவர்கள் ???

நம் தலைவர்கள் ???

என் அன்புக்குறிய சகோதரர்களே, அஸ்ஸலாமு அலைக்கும்,
இறைவனைப் புகழ்ந்தவனாக துவங்குகிறேன்..

ஒரு சாதாரண தமிழ் நாட்டின் முஸ்லீம் குடிமகனாக தற்போது நம் சமுதாயத்தில் உள்ள ஒற்றுமை நிலை குறித்து என் மனதில் தோன்றுபவைகளை கொட்டி வைத்திருக்கிறேன். தவறுகள் இருப்பின் இறையோனுக்காய் மனம் பொறுக்கவும்.

நம்முடைய சங்கங்கள்:

இந்த தலைவர்களும், அவர்களுடைய சங்கங்களும் நம் சமுதாயத்திற்காக எதையாவது செய்யாதா என்ற ஏக்கத்தில், எதிர் காலம் எம் சமுதாயத்திற்கு எதையாவது ஒரு நல்ல பாகாப்புத் தன்மையை அளிக்காதா என்ற நோக்கில் நானும் ஒவ்வொரு நாளும் இந்த அமைப்புகளையும் அதன் தலைவர்களையும் கூர்ந்து நோக்கி கவனித்துக் கொண்டுதான் வருகின்றேன். என்னால் முடிந்த அளவில் உடலாளும், உழைப்பாலும், பணத்தாலும் ஒரு சாதாரண தொண்டனாக இந்த சங்கங்களுக்கு, அமைப்புகளுக்கும் உழைத்தும் என்னுடைய சிறப்பான பங்களிப்பை தந்தும் என்னுடைய கஷ்டப்பட்டு உழைத்து சம்பாதித்த பணத்தில் இந்த கழகங்களுக்காக நன்கொடையும், நிதியுதவியும் செய்து அவர்களின் புத்தக, ஆடியோ, வீடியோ, சி.டி போன்றவைகளையும் நானும் வாங்கியும், பிறருக்கு விற்பனை செய்தும் அதன் மூலமாகவும் இந்த சங்கங்களின், அமைப்புகளின் நிதி நிலையை கூட்டி இருக்கிறேன். ஆனால் இந்த சங்கங்களும், தலைவர்களும் நமக்காக இதுவரை என்ன சாதித்திருக்கிறார்கள் என்று ஒரு தொலைநோக்கு பார்வையில் பார்த்தால் எஞ்சி நிற்பது பூஜ்யம்தான்;. இந்த சங்கங்களையும், அமைப்புகளையும் அதன் தலைவர்களையும், அவர்களின் செயல்பாடுகளையும் இந்த அமைப்புகளுக்குள் நடக்கும் கோஷ்டி பூசல்கள் சண்டைகளையும் நினைத்தால் சலிப்பும், வெறுப்பும்தான் மிஞ்சுகிறது. நம்முடைய ஓற்றுமை மற்றும் நம் சமூக மக்களின் பாதுகாப்பு என்பது இன்னும் கேள்விக்குறியாகத்தான் இருக்கிறது.


இந்த சங்கங்கள் அமைப்புகள் என்ன செய்தார்கள் நமக்காக:

நம் சமுதாயத்திற்காக இந்த அமைப்புகள் ஓன்றுமே செய்யவில்லை பூஜ்யம்தான் என்று நாம் சொல்லும் போது, தான் என்ற கர்வம் பிடித்து உழலும், தாம் சொல்வதே சிறந்தது, தாம் நடத்தும் அமைப்பே சிறந்தது என்று மார்தட்டிக் கொள்ளும் நம் தலைவர்களுக்கு கோபம் வரலாம். சிலவைகளை செய்கிறார்கள். அவைகளை பற்றியும் காண்போம்.

கூட்டங்கள், மாநாடுகள் போடுகிறார்கள்:

நாங்கள் கூட்டங்கள் போடுகிறோம், மாநாடு போடுகிறோம் என்று சொல்வார்கள் அதில் கூட மார்க்க அறிஞர்களைப் போல யாரும் உரைகளை நிகழ்த்துவதில்லை. மற்ற அமைப்பினரை சாடுவதற்காகத்தான் அதிக நேரம் வாய் கிழிய பேசுகிறார்கள். மற்றவர்களை திட்டுவதற்காகவே எம் மக்களிடம் வசூல் செய்து மாநாடு போட்டு மார்தட்டி பேசி பிற அமைப்புகளை குறை கூறுவதிலேயே விரயம் செய்கிறார்கள். தம் அமைப்புக்கு விளம்பரம் தேடிக் கொள்கிறார்கள், வேறு எதாவது உபயோகமான விளைவுகள் அந்த மாநாடுகளால் நிகழ்ந்தது என்று இந்த தலைவர்கள் சொல்வார்களா. கூட்டத்தை கூட்டி நம் மக்களின் நேரத்தையும், செல்வத்தையும் செலவழித்ததை தவிர எதையாவது உருப்படியாக இந்த அமைப்புகள் செய்திருக்குமா என்று இந்த தலைவர்கள் சொல்லட்டும்.

பத்திரிக்கைகள், புத்தக வெளியீடுகள்:

பத்திரிக்கைகள், புத்தக வெளியீடுகள் செய்கின்றார்கள், இதில் இறைமறை தமிழில், மற்றும் பயனள்ள ஹதீஸ் தொகுப்புகளை வெளியிட்டவர்களுக்காக நம் சமுதாயம் கடமைப்பட்டுள்ளது. அவர்களுக்காக நாம் எப்பவும் நம் ஆதரவை தெரிவித்துக் கொண்டும் இருக்கிறோம். அவர்கள் உழைப்பும், பணியும் பாராட்டத்தக்கது. இவைகளை தவிர்த்து குப்பைகளாக வெளிவந்து கொண்டிருக்கும் மற்ற அமைப்புகளின் பத்திரிக்கை வெளியீடுகள் பற்றிப் பார்ப்போம்.

இந்த பத்திரிக்கைகளின் தரம் கூட அதை பார்த்தால் தெரிந்துவிடும். ஏதோ பெயருக்கு சங்க நிதிக்கு வலு சேர்க்க வேண்டும் என்பதற்காகவும், தம் அமைப்பின் கொள்கை விளக்க வெளியீடாகவும் வெளியிடப்படும் சஞ்சிகைகளாகவும், மற்ற அணியினரை தாக்கி அறிக்கைப் போர் நடத்தவும்தான் அவைகள் உதவி இருக்கின்றனவே தவிர அவைகள் நம் இளைஞர்களுக்குள் ஒரு எழுச்சியையோ, எம் பெண்களுக்கு உள் நாட்டில் என்ன நடக்கிறது என்பதையோ புரிந்து கொள்ள முடியாத அளவில்தான் இருக்கிறது. அதில் வெளிவரும் கட்டுரைகள் மிக பழைய செய்திகளை தாங்கியிருக்கும். அது கூட எதாவது இணையத்தில், அல்லது ஆங்கில பதிப்பின் தழுவல்களை சுட்டு எழுதியிருப்பார்கள். கூடுவாஞ்சேரியில் பள்ளியில் நடந்த கலவரத்தை பற்றி தெரியாத அந்த ஊர்க்கார இளைஞரின் கையில் தவழும் நம் சங்க கொள்கை முழக்க பத்திரிக்கையில் ஈராக்கையும், பாலஸ்தீனையும், அமெரிக்காவையும் பற்றிய கட்டுரைகள். ஈராக், பாலஸ்தீனம் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டும் வேண்டாம் என்று சொல்லவில்லை ஆனால் முதலில் நம் ஊர் அரசியல், சமூக சதிகளை இளைஞர்கள், பெண்கள் மத்தியில் பரப்ப வேண்டும். மற்ற பத்திரிக்கைளை பார்த்தாவது நமது பத்திரிக்கைகளின் தரத்தை கூட்ட எந்த தலைவராவது தாம் நடத்தும் பத்திரிக்கைகளில் முயன்றதுண்டா... ?

ஏற்கனவே படிப்பறிவிலும், பொது அறிவு, அரசியல், சமூக சிந்தனைகளில் மிகவும் பின்தங்கிய நிலையில் இருக்கும் நம் சமுதாய மக்களை இன்னும் அதள பாதாளத்தில் தள்ளும் முயற்சியாகவே இந்த பத்திரிக்கைகள் விளங்கி வருகின்றன. நாமும் இந்த குப்பைகளை வாங்கி நம் காசை கரியாக்கிக் கொண்டிருக்கிறோம். மக்களிடம் விழிப்புணர்வையும், ஒற்றுமையையும் வளர்க்க எந்த பத்திரிக்கையாவது முயன்றதுண்டா என்று சிந்தித்துப் பார்க்கவும்.

இணையத்தளங்கள், மற்றும் மிண்ணணு ஊடகங்கள் :

நம்முடைய அமைப்புகள், சங்கங்களிடையே இணையத்தளங்களுக்கு குறைவில்லை, ஆனால் அவைகள் இதுவரை என்ன பணியாற்றிருக்கிறது என்று காண்போம்.

அந்த இணையத்தளங்களை திறந்தாலே முதல் பக்கத்தில், தலைப்பு செய்தியாக, குண்டர்கள், ரவுடிகள் என்று மற்ற நம் அணியினரை தாக்கியே செய்திகள் அனுதினம் வந்து கொண்டிருக்கிறது. மற்ற அணியினரை சாடியே அதிக பக்கங்களை செலவிடுகிறார்கள் இன்டர்நெட் என்பது இன்றைக்கு எத்தனை வலிமையான ஊடகம் அவற்றை எப்படி பயன்படுத்தி பயன்பெறலாம் என்று என்றைக்காவது இந்த சங்கங்களும் அதன் நிர்வாகிகளும் ஒரு நொடியேனும் சிந்தித்திருப்பார்களா. ?

சின்ன சின்ன குழுக்களாகவும். தனி நபர்களின் ஆர்வத்தாலும் நம் சமுதாய சகோதரர்களால் நடத்தப்படும் இனையத்தளங்கள் எத்தனை வலிமையாக நடை போடுகிறது என்பதையாவது இவர்கள் உணர்ந்திருப்பார்களா ? அழைப்புப்பணி மற்றும் குர்ஆன், சுன்னாவையும் பரப்புவதில் தனிநபர் இணையத்தளங்கள் எத்தனை நன்றாக இயங்குகிறது என்பதை ஏற்றுக் கொள்வதற்கு கூட முடியாத நிலையில்தான் இன்று நம் சங்கங்களும் அதன் நிர்வாகிகளும் தான் என்ற அகந்தையில் உழல்கின்றார்கள். எப்போதாவது நம்மிடம் இருக்கும் சிறிய ஊடகங்களை வலிமையாக்க, ஆக்கபூர்வமாக உபயோகிக்க எந்த சுயநல தலைவர்களாவது சிந்தித்திருப்பார்களா ?

ஆடியோ, வீடியோ, சி.டி வெளியீடுகள் :

நம் அமைப்புகளின் மற்ற அணியினரை தாக்கியும், சுய நிலை விளக்கம் என்று வரும் ஆடியோ, வீடியோ சீ.டி வெளியீடுகளை மாற்று மதத்தினர் பார்த்தால் உங்களுக்குள்ளே இவ்வளவு குழுக்களும், குழப்பங்களும் பிரச்னைகளும் இருக்கிறதா என்று ஓடியே போய்விடுவான். அந்த அளவிற்கு தரம் தாழ்ந்து மற்றவரை தாக்கி வரும் வெளியீடுகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உபயோகமான வெளியீடுகள் பற்றி மட்டும் இனி யோசிப்பார்களா இந்த தலைவர்கள்.

பாதிக்கப்பட்ட நம் சமுதாய மக்களுக்கு உதவிகள் :

கலவரங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் செய்கின்றனர், ஆனால் கலவரம் வருவதற்கு முன்பாக என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை, நமக்குள் ஒற்றுமை நிலையை ஏற்படுத்தி வைத்தீர்கள் என்பதுதான் நம் கேள்வி. அதில் கூட பொது வசூல் செய்த பணத்தை பொதுவாக உதவிகள் செய்வது கிடையாது. பாதிக்கப்பட்ட எல்லோரையும் ஒன்றாக பார்ப்பது கிடையாது. தம் அமைப்பை சார்ந்தவர்களுக்கு மட்டுமே உதவிகள் செய்வது என்ற பாகுபாட்டையும், பிரிவினையையும் இந்த தலைவர்கள் என்றாவது களைய முயற்சித்து இருப்பார்களா ?

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

இனக் கலவரங்களால் நம் மக்கள் பாதிக்கப் படுவதற்கு முன் இந்த அமைப்புகள் என்ன பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து வைத்தார்கள்;. பாதிக்கப் படும் வரை பார்த்துக் கொண்டிருந்து விட்டு எதிரிகளிடம் அடி வாங்கியும், வெறித்தனமாக எம் பெண்களை சூறையாடி மானபங்கம் செய்தும், எம் குழந்தைகளையும், இளைஞர்களையும், வெட்டி நெருப்பில் வீசி எறிந்தும், நம் சமுதாய மக்களின் சொத்துக்களை கொள்ளையடித்தும், அழித்தும் எல்லாம் முடிந்த பின்னர் அவர்களுக்காக பொது வசூல் செய்து நாடோடி கேம்ப்களில் வீடு, வாசல், சொத்து உறவினர்களை இழந்து நிற்கும் அவர்களுக்கு எதாவது உதவியை செய்து விட்டு அவர்களுக்காக பரிதாபப்படும் ஏஜெண்டுகளாகதான் நம் சங்கங்கள் இதுவரை இருந்து வந்திருக்கிறது. இத்தனை அடிபட்டும், உதைபட்டும் நம்மில் ஒற்றுமை வேண்டும் என்றும், நம் எதிரிகளை சந்திக்க அவர்களின் சதிகளை முறியடிக்க நாம் ஒன்றுபட்ட சமுதாயமாக இருக்க வேண்டும் என்று எந்த தலைவராவது அதற்காக பாடுபட்டார்களா.

ஈகோ மற்றும் தான் என்ற கர்வம் பிடித்த தலைவர்கள் :

ஏதேதோ பெரிய லாஜிக்கெல்லாம் பேசும் தலைவர்கள், கூட்டங்களில் சவால் விடும் தலைவர்கள் மிக சாதாரண விஷயமாக '' நீங்கள் ஒற்றுமை என்னும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் '' என்று எம் தலைவர் நபி (ஸல் ) அவர்கள் போதித்ததை மட்டும் காதில் போட்டுக் கொள்ள யாரும் தயாராக இல்லை. இதைப்பற்றி நினைத்தாவது பார்த்திருப்பார்களா.

எல்லா தலைவர்களும் ஈகோவால், தான் என்ற மமதையால். தான் சொல்வதே சிறந்தது, தன் கட்சியே உயர்ந்தது என்றும். வறட்டு பிடிவாதம் பிடிக்கின்றார்களே ஒழிய நம் சமுதாயத்திற்கும் அதிலும் குறிப்பாக நம் பெண்களுக்கு எந்தவிதமான பாதுகாப்பை ஏற்படுத்தி வைத்திருக்கின்றோம் நாம் என்ன நிலையில் இன்று இருக்கின்றோம் என்று இந்த தலைவர்கள் உணர்வார்களா. அநேக குடும்பங்களில் ஆண்கள் எல்லாம் வெளிநாடுகளில் இருக்க பெண்களும், குழந்தைகளும், முதியவர்களுமே இருக்கும் நம் சமுதாய மக்களின் பாதுகாப்பு நிலை என்ன என்று உணர்வார்களா இந்த தலைவர்கள்.

பம்பாய், குஜராத், பாபரி மஸ்ஜித், கோவை (இன்னும் எத்தனையோ) சம்பவங்கள் நடந்து நடு ரோட்டில் எம் பெண்களை மானபங்கப்படுத்தி, எம் குழந்தைகளை கொன்று தீயில் போட்டு எரித்த பின்னர் எஞ்சி அறைகுறையாக செத்து ஏதாவது ஒரு அகதிகள் கேம்பில் இருப்பவர்களுக்கு பொது வசூல் செய்து உதவி செய்வதுதான் நம் கழகங்கள் செய்யும் பணியா ? அதற்காகத்தான் இவர்கள் கழகம் நடத்துகிறார்களா ?

இந்த சம்பவங்கள் நடந்து முடிந்த பின்னர் எல்லாம் கூடி ஆர்பாட்டம் செய்ததில் என்ன நன்மையை இதுவரை கண்டோம் என்று நம் எல்லோரும் அறிந்ததே. அதையேனும் இந்த தலைவர்கள் உணர்வார்களா.?

பிற சிறிய கட்சியினரின் ஒற்றுமை நிலை :

சில சிறிய கட்சிகளும், சிறிய சாதி சார்ந்த கட்சிகளும் தங்கள் ஒற்றுமையால் அரசியலிலும், சமூகத்திலும் நல்ல அந்தஸ்தை பெற்று தம்மை சார்ந்து இருக்கும் மக்களுக்காக போராடுவதையும் நாம் கண்கூடாக பார்க்கின்றோம். அதற்கு ஒரே காரணம் அவர்களுக்குள் இருக்கும் ஒற்றுமை என்பதுவும் யாம் அறிந்ததே. இந்த தலைவர்களுக்கு இது கூட தெரியாதா என்ன.

பா.ம.க, ம.தி.மு.க போன்ற சிறிய கட்சிகள் தங்கள் ஒற்றுமையினால் இன்று அரசியலில் எத்தனை பலம் வாய்ந்ததாக இருக்கிறது என்பதை நாம் அறிவோம். அந்த அமைப்பை சேர்ந்த மக்களுக்கு அவைகள் எத்தனை சிறப்பாக செயல்படுகிறது என்பதை இந்த தலைவர்கள் சிந்தித்தார்களா.


போர்களமாய் பிற அணியினருடன்:

இவை எல்லாவற்றையம் விட அசிங்கமான செயல் இப்பபோது நம்மிடையே பிரிந்து கிடக்கும் கழகங்களிடையே காண முடிகிறது. நமக்குள்ளாகவே அடித்துக் கொள்வதும். ஒருவர் மற்றவரை தாக்கி அறிக்கைப் போர் என்று எல்லா ஊடகங்களிலும் எவரையாவது திட்டியும், புறம் பேசியும் வசை பாடியும் போர்களமாகதான் காட்சியளிக்கிறது. காவல் நிலையங்களுக்கு கூட சென்று மற்ற அணியினர் மீது புகார்கள் தந்தும். வழக்குகள் தொடர்ந்தும் தங்கள் தரத்தையும் தாழ்த்திக் கொள்ள இந்த மார்க்க அறிஞர்களும், இந்த அமைப்புகளும், தலைவர்களும் தயங்குவதில்லை.

இந்த தலைவர்களுக்கு:

இந்த தலைவர்களுக்கு ஒன்று நாம் சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். நம் எதிரிகள், அந்நிய சக்திகள் நம்மை வேறறுக்க காத்துக் கொண்டிருக்கிறார்கள், அதற்கு முன்னால் நீங்களாகவே நமக்குள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு பலவீனப்பட்டுப் போகாதீர்கள் அவர்களிடமும் கொஞ்சம் உதை வாங்குவதற்காக பிரிந்து கிடந்து பலவீனப்பட்டுக் கொண்டிருக்கும் நீங்கள் உங்கள் சக்தியை கொஞ்சம் சேமித்து வைத்துக் கொள்ளுங்கள். நம் எதிரிகள் எல்லோரும் ஓரணியில் நின்று உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். தக்க தருணம் பார்த்து நம் மீது பாயவும் காத்திருக்கிறார்கள் என்பதை எப்பவும் மனதில் வைத்து செயல்படுங்கள்.

நம் அரசியல் நிலை :

அரசியலில் மிக சாதுர்யமாக காய்களை நகர்த்தித்தான் நம் எதிரிகள் நம்மை பந்தாடிக் கொண்டிருக்கிறார்கள் ஆகவே நாமும் பல்வேறு மதங்கள் வாழும் இந்த சமுதாயத்தில் நம் குரல் பாராளுமன்றத்திலும், நாடாளு மன்றத்திலும் ஒலிக்க வேண்டும், நமக்கென்று நம்முடைய குறைகளை எடுத்து வைக்க நம் பிரதிநிதிகள் அரசியலில் பங்கு வகிக்க வேண்டும் என்ற எண்ணமாவது தோன்றியிருக்கிறதா இதுவரை அதற்கான எந்த முன்னேற்பாடுகளை செய்து வைத்திருக்கின்றீர்கள். அரசியலே வேண்டாம் என்று நாம் ஒதுங்கி விலகிப் போய்விட முடியாது.

என்ன நிலையை தேர்வு செய்வது:

அரசியலையும், ஆண்மீகத்தையும் ஒன்றாக போட்டு நாம் குழப்பிக் கொள்ளவும் வேண்டாம்.
இரண்டையும் ஒன்றாக போட்டு குழப்புவதால்தான் பிரச்னைகள் அதிகம் வருகிறது. ஆகவே இரண்டு பிரிவுகளாக பிரித்து செயல்படுவதில் எந்த பிரச்னையும் இருக்காது.

மதம் சார்ந்த பிரச்னைகளை அணுக தனிப் பிரிவும், அரசியல், சமூக பிரச்னைகளை அணுக அரசியல் பிரிவும் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். குர்ஆன், சுன்னா, தொளஹீத் இப்படி எந்த விதமான பிரச்னைகளையும், தீர்வையும் தருவதற்காக அதற்கான அறிஞர்களைக் கொண்ட பிரிவை ஏற்படுத்தி அவர்கள் முற்றிலும் மதம் சார்ந்த பிரச்னைகளுக்கும் தொப்பி போட்டு தொழலாமா, வேண்டாமா, விரலசைத்து தொழலாமா வேண்டாமா என்ற பிரச்னைகளை அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும். அது போலவே ஒரே அமைப்பாக, ஒரே தலைவர், ஒரே குடையின் கீழ் ஒரு அரசியலமைப்பில், நம்மிடம் உள்ள அரசியல், சமூக சிந்தனைகள் அதிகம் நிறைந்தவர்கள், படித்தவர்கள், அரசியலில் முதிர்ச்சி உள்ளவர்கள், சமூக அரசியல் ஞானம் அதிகம் உள்ளவர்களை அரசியல் பிரிவில் ஏற்படுத்தி தேர்தல் காலங்களில், மற்றும் சமூக, அரசியல், சட்ட பிரச்னைகள் நமக்கு வரும்போது அவர்கள் பாடுபடும் வகைக்கு நாம் ஒத்துழைக்க வேண்டும். நிச்சயமாக நம்மிடம் அரசியல் பிரிவு வேண்டும். நாமும் அரசியலில் பங்காற்றித்தான் நம் உரிமைகளையும், பாதுகாப்பையும் பெற முடியும் என்பது மிக தெளிவானது. இதில் எந்த குழப்பமும் இல்லை. இதில் மார்க்க விஷயங்களை நுழைத்து குழம்பிக் கொள்ள வேண்டாம்.

இன்று நம் நிலை:

நம் எதிரிகள் அவர்கள் செய்ய துடிப்பதை நாமே செய்து கொள்கிறோம் சிறிய சிறிய குழுக்களாக பிரிந்து கிடக்கிறோம். நம் எதிரிகள் நம்மை பகடைக் காய்களாக ஆக்கி அரசியல் களத்தில் நம்மை பந்தாடி விளையாடிக் கொண்டு இருக்கிறார்கள். பெண்களை, முதியவர்களை, குழந்தைகளை மட்டும் வீட்டில் விட்டு விட்டு வெளிநாட்டில் வாழும் ஆண்கள் எல்லோரும் இந்த அமைப்புகள் எல்லோரும் ஒன்று கூடி ஒரு நல்ல தீர்வையும், நம் மக்களுக்கு நல்ல பாதுகாப்புத் தன்மையையும் தராதா என்று காத்திருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் நாளுக்கு நாள் புதிய அமைப்புகள் தோன்றுவதும், நான்தான் தலைவர் என்று புதிய தலைவர் வருவதும் தினசெய்திகளாக இருக்கிறது. ஒன்றாக பலமாக இருந்த அமைப்புகள் தனிப்பட்ட தொலைநோக்கு பார்வையில்லாத தலைவர்களின் அகம்பாவத்தால், தான் என்ற கர்வத்தால் நாளுக்கொரு அமைப்பாக உடைந்து மக்கள் மத்தியில் பலவீணப்பட்டு கிடக்கிறார்கள். சில நேரங்களில் இவர்கள் ஒருவேளை நம் எதிரிகளின் கைக்கூலிகளோ என்று சந்தேகப்படும் அளவிற்கு இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் இருந்து வருகிறது. ஒருவர் மற்ற சகோதரரையும், மற்ற அணியினரையும் அப்படித்தான் நடத்திக் கொள்கிறார்கள். நம் சமுதாயத்தின் முன்னேற்றம், பாதுகாப்புத் தன்மை என்பது இன்னும் ஒரு பெரிய கேள்விக் குறியாகத்தான் தொக்கி நிற்கிறது.

இளைஞர்களுக்கு:

கண் மூடித்தனமாக தலைவர்களின் பின்னால் போகும் இளைஞர்களே...செத்த நாயிலும் கேவலமான நம் வாழ்க்கை எந்த உரிமையும் இல்லாத நமக்கு, ஒற்றுமைக்காக பாடுபடாத இந்த தான் என்ற ஈகோ பிடித்த தலைவர்களின் பின்னால் உங்கள் மாபெரும் சக்தியை வீணடித்துக் கொண்டிருக்கின்றீர்கள் எப்போதாவது உங்களை நோக்கி கேள்விக் கேட்டிருக்கின்றீர்களா. அல்லது உங்கள் தலைர்களை நோக்கி இந்த கேள்விகளை கேட்டு இருக்கின்றீர்களா. இந்த வாழ்கையை எப்போது மாற்றிக் கொள்ளப் போகிறீர்கள். எப்போதாவது ஒற்றுமையைப் பற்றி நீங்கள் சிந்தித்தது உண்டா. செத்த பிணம் போல, ஆட்டு மந்தைகளைப் போல சுயமாக சிந்திக்காமல் எத்தனை நாளைக்கு இந்த தலைவர்களின் பின்னால் ஓடி உழைக்கப் போகிறீர்கள். எத்தனை நாளைக்கு இந்த தலைவர்களின் பின்னால் கொடி பிடித்துக் கொண்டு இருக்கப் போகிறீர்கள். சுயமாக சிந்தியுங்கள், உங்களுக்குள்ளே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள், தலைவர்களையும் கேள்வி கேளுங்கள். நாளை நம் சமுதாயம் ஒற்றுமையாய் ஓரே அணியின் கீழ் ஒரே குடையின் கீழ் நிற்க பாடுபடும் தலைவரை இனம் காணும் வரை எந்த தலைவரின் பின்னாலும் உங்கள் சக்தியை வீணாக்காதீர்கள்.

தலைவர்களுக்கு:

அரசியலையும் மதத்தையும் போட்டு மக்களை குழப்பாதீர்கள், அரசில் பிரிவு, மதம் சார்ந்த பிரிவுகளை ஏற்படுத்தி அந்தந்த பிரச்னைகளை அந்தந்த துறைகளில் நிபுணத்துவம், முதிர்ச்சியும் பெற்ற நம் பெரியார்களை, அறிஞர்களை கொண்டு தீர்வுகாண முயலுங்கள், எல்லாம் எனக்கு தெரியும், நான்தான் தலைவர் என்ற அகந்தையில், தலைவர்கள் தான் என்ற கர்வத்தில், சுயமாக மமதையில் உழலாதீர்கள்.

தலைவர்களே நாங்கள் நன்றாக உங்கள் முகம் நோக்கி கேள்வி கேட்போம்தான். பொது வாழ்க்கைக்கு வந்து விட்டால். மக்களுக்கு நல்லது செய்கிறேன் என்று மக்களின் உழைத்த பணங்களில் சந்தா, நன்கொடை, புத்தக விற்பனை செய்து உங்கள் கழகத்தை மட்டும் பலப்படுத்த அல்ல எங்கள் சமுதாயத்திற்கும் பாதுகாப்பும், சமூக உரிமையையும் பெற்றுத் தரத்தான். நம்மிடையே ஒற்றுமையை வளர்க்கத்தான். இதையெல்லாம் செய்ய இயலாது என்றால் நல்ல ஒரு பர்தாவை போர்த்திக் கொண்டு உங்கள் வீட்டிலேயே முடங்கிப்போங்கள், உங்களை எவனும் கேள்வி கேட்க மாட்டான். நீங்கள் முடங்கிப் போவதால் எம் சமுதாயம் ஒன்றும் அழிந்து விடாது. ஒரு புரட்சியையும், ஒற்றுமையையும் எங்களுக்குள் கொண்டு வர எம்மில் ஒருவன் பிறந்திருப்பான் அல்லது இறைவன் பிறக்க வைப்பான் இன்ஷா அல்லாஹ்...

ஒற்றுமையாய் வாழ கற்றுக்கொள்ளுங்கள், எங்களுக்கும் கற்றுக் கொடுங்கள் இல்லையேல் புதியவர்களுக்கு வழி விட்டு ஒதுங்கி ஓடிப்போய் வீட்டோடு ஒளிந்து கொள்ளுங்கள்.

எம் சமுதாயத்தில் எல்லோரும் ஓற்றுமையாக ஒரே குடையின் கீழ் ஓரே அணியாக எல்லோரும் சகோதரர்களாக நின்று குரல் கொடுக்கும் நாளை (இன்ஷா அல்லாஹ்) மிக ஆதங்கத்துடன், ஆவலுடன் எதிர் பார்த்தவனாக இறைவனிடம் கையேந்தியவனாய்.

சுலைமான்
sulai_sa@yahoo.com
(எப்போதோ மின்னஞ்ச் மூலம் கிடைக்க பெற்ற கட்டரை)

Thursday, April 16, 2009

வாலிபருக்கு தமுமுக உறுப்பினர் என்பதால் மறுக்கப்பட்ட சிறை வார்டன் பணி வழங்க பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவு

மதுரை: கன்னியாகுமரியை சேர்ந்தவருக்கு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தில் உறுப்பினராக இருந்ததற்காக மறுக்கப்பட்ட சிறை வார்டன் பணியை வழங்க சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவருக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது. கன்னியாகுமரியை சேர்ந்த சகுபர் சாதிக் தாக்கல் செய்த ரிட் மனு: நான் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக வடக்குசூரங்குடி கிளையில் உறுப்பினராக இருந்தேன். ஒரு வாரஇதழ் ஏஜன்ட்டாகவும் பணிபுரிந்தேன். என் மீது ஈத்தான்மொழி போலீசில் ஒரு குற்றவழக்கு பதிவாகியிருந்தது. அதில் என் மீது குற்றச்சாட்டுகள் நிரூபணமாகவில்.


இந்நிலையில் நான் சிறை வார்டன் கிரேடு 2 பணிக்கு அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சிபெற்றேன். எனக்கு பணி நியமன உத்தரவு வழங்கப்படவில்லை. சீரூடை பணியாளர் தேர்வாணைய தலைவர், சிறை ஐ.ஜி., எஸ்.பி.,யிடம் கேட்ட போது என் மீது வழக்கு, முஸ்லீம் முன்னேற்ற கழக உறுப்பினர், வார இதழ் ஏஜன்ட் என காரணம் காட்டி பணியில் நியமிக்க மறுத்து விட்டனர். என்னை பணி நியமனம் செய்ய உத்தரவிட வேண்டும். இவ்வாறு கோரினார். மனுதாரர் சார்பில்வக்கீல்கள் லஜபதிராய், ஜின்னா ஆஜராயினர்.


நீதிபதி எஸ்.மணிக்குமார் பிறப்பித்த உத்தரவு: முஸ்லீம் முன்னேற்ற கழகம் அமைதியை குலைக்கும், வெறுப்பை தூண்டும் அமைப்பு என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இங்கு தாக்கல் செய்யப் படவில்லை. அரசால் தடை செய்ய இயக்கமோ, மதரீதியான இயக்கமோ என அறிவிக்கப்படவில்லை. அதில் உறுப்பினராக இருக்கிறார் என்பதற்காக மட்டுமே மனுதாரர் தகுதியற்றவர் என கூற முடியாது. இவ்விஷயத்தில் சீருடை பணியாளர் தேர்வாணைய தலைவர் உட்பட மூன்று பேரது அணுகுமுறை தவறு. மனுதாரரை மேலும் கஷ்டபடுத்த அனுமதிக்க கூடாது. அவரை பணியில் அமர்த்த மூன்றுஅதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டார்.

நன்றி : தினமலர்

Saturday, April 11, 2009

சாக்கடைடையில் விழுந்த சமுதாய இயக்கம் -C.I.D சிங்காரம்


சாக்கடைடையில் விழுந்த சமுதாய இயக்கம் -C.I.D சிங்காரம்

தமிழகத்தில் பலவகையில் சிதறிக்கிடந்த முஸ்லீம் மக்களை ஒன்று திரட்டி 1995 ஆம் ஆண்டு தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் ஒரு சமுதாய இயக்கம் உருவாக்கப்பட்டது. அதன் செயல்பாடுகள் இன்றுவரை குறைசொல்ல முடியாத அளவிற்கு அளப்பறிய பணிகளையாற்றி வருகிறது. உதாரணமாகச் சொல்லப்போனால் உயிர்காக்கும் இரத்த தானத்தில் இருந்து அவசரகால ஊர்திகள் வழங்குதல் போன்ற மருத்துவம் மற்றும் உயிர்காக்கும் பணிகளை செய்து வருவது யாராலும் மறுக்கமுடியாது.

ஆம்புலன்ஸ் என்றாலே என்ன என்று தெரியாத குக்கிராமங்களில் கூட தமுமுகவின் சேவையால் இப்போது அங்கெல்லாம் ஆம்புலன்ஸ்கள் இயக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த ஆம்புலன்ஸ் சேவையால் முஸ்லீம்கள் மட்டுமல்லாமல் எல்லா சமுதாய மக்களும் பேதமின்றி பயனடைவதைக் கண்கூடாக காணமுடிகிறது.இது போன்ற சமுதாயப் பணிகளில் தமுமுகவை முன்னிறுத்தி வந்த அதன் தலைவர்கள் குறிப்பாக திரு.ஜவாஹிருல்லா மற்றும் திரு.ஹைதர் அலி ஆகியோர் மிகமிக ஆசையோடு தமுமுக என்னும் சமுதாய இயக்கத்தை சாக்கடையில் இறக்க முடிவு செய்து அதற்கான தீவிர முயற்சிகளில் இறங்கினார்கள்.

அவர்களின் இலக்கு கலைஞரை கவுத்தி சீட் வாங்கவேண்டும் என்பதே.அதற்கான முயற்சிகளில் முழுமூச்சாய் இறங்கியது தமுமுக தலைமை.கலைஞரை கவுக்க சிறந்த வழி என்ன? பாராட்டு விழா எடுக்க வேண்டும் என்ற தாரக மந்திரத்தைக் கையாண்டு இடஒதுக்கீட்டுக்கு பாராட்டுவிழா என்ற பெயரில் கலைஞருக்கு நேரு உள்விளையாட்டு அரங்கிலே பிரம்மாண்ட பாராட்டுவிழாவை நடத்தி கலைஞரோடு நெருக்கத்தை ஏற்படுத்திக்கொண்டனர். மேற்கண்ட தலைவர்களின் ஒரே குறிக்கோள் எப்படியாவது M.P ஆவது தான். அதற்காகவே உருவாக்கப்பட்டது தான் மனித நேயமக்கள் கட்சி.

நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப் பட்டநிலையில் தங்கள் கட்சிக்கு 6 தொகுதியில் செல்வாக்கு இருக்கிறது எனவே 6 தொகுதிதரும் கட்சிகளுடன் கூட்டணி என்று கோசத்துடன் களமிறங்கியது மமக.இவர்களின் கணக்கு 6 கேட்டால் இரண்டாவது தருவார்கள் என்பது தான்.அதன்படி கலைஞரிடம் பேச்சி வார்த்தைக்குப் போயும் பேரம் படியவில்லை. காற்றிலே வெண்ணை எடுத்து நூலே இல்லாமல் கயிறு திரிக்கும் கலைஞர், தான் முன்பு காயிதேமில்லத் அவர்களுக்கு செய்து கொடுத்த சத்தியப் பிரமாணப்படி ஒரு சீட் தான் தரமுடியும் என்று சொல்லி இவர்களை வெளியே தள்ளி கதவைச்சாத்திவிட்டார். இவர்கள் ஒரு சீட்டில் போட்டியிடக்கூடத் தயார்தான்.ஆனால் அந்த ஒரு சீட்டு யாருக்கு என்பது பற்றி மேற்கண்ட தலைவர்களிடையே சண்டை வந்து விடும் என்பதால் தான் ஒரு சீட்டை மறுத்தார்கள்.ஜெயலலிதாவும் இவர்களைக் கண்டுகொள்ளாத நிலையில் தற்போது சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி மற்றும் கிருஷ்ணசாமியின் புதிய் தமிழகம் ஆகிய லட்டர்பேடுகளோடு இணைந்து மயிலாடுதுறை,இராம நாதபுரம்,தென்சென்னை ஆகியவற்றில் போட்டியிடுகிறார்கள்.

நாம் நினைத்தது போலவே தென்சென்னையில் திரு.ஹைதர் அவர்களும், மயிலாடுதுறையில் திரு.ஜவாஹிருல்லாவும், இராம நாதபுரத்தில் திரு.சலீம் கான் ஆகியோரும் போட்டியிடுகிறார்கள்.அதாவது இவர்களின் லட்சியத்தை அப்பாவித் தொண்டர்களின் மீதேறி நிறைவேற்றிக் கொள்கிறார்கள். நிச்சயமாக இவர்கள் தமுமுக எனும் சமுதாய இயக்கத்திற்கு குழிதோண்டும் வேலையை ஆரம்பித்து விட்டார்கள் என்பது உறுதி. மமக ஆரம்ப விழாவில் மமக சார்பாக போட்டியிடும் வேட்பாளர்களின் செலவை தமுமுகவே ஏற்றுக்கொள்ளூம் என்ற ஒரு சூசக பாயிண்டையும் போட்டு கடைசியில் நாங்கள் தான் அந்த வேட்பாளர்கள் எங்களுக்கு தமுமுகவே செலவு செய்யும் என சொல்லாமல் சொல்லிவிட்டார்கள் சூத்திரதாரிகள்.

சினிமா நடிகர்கள் என்றாலே உவ்வே என சொல்லி வந்த தமுமுக தலைவர்களுக்கு இன்று சரத்குமார் ஒரு நடிகராகத் தெரியாதது ஏனோ? இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா என்பதாலா? அது சரி சாக்கடையில் விழுந்த பிறகு பன்றி என்ன எறுமை என்ன, எல்லாமே கருப்புத் தான் எல்லாமே கருப்புத் தான் கருப்புத்தான் கருப்புத்தான்.

பாவம் தமுமுகவின் அப்பாவித் தொண்டர்கள். பார்க்கலாம் மக்கள் எந்த அளவிற்கு விழிப்புடன் இருக்கிறார்கள் என்று.

-C.I.D சிங்காரம்

பின்குறிப்பு: இந்தப் பதிவு குறித்த தகவல்களை எனக்கு மெயில் மூலம் வழங்கிய தமுமுகவின் தொண்டர் (தவ்ஹீத் ஜமாத் தொண்டர் அல்ல) மற்றும் என் நண்பருக்கு என் மணமார்ந்த நன்றிகள்

தேர்தல் - முஸ்லிம்களுக்கு அல்வா

தேர்தல் - முஸ்லிம்களுக்கு அல்வா

சில தினங்களுக்கு முன் ஒரு பதிவை பார்க்க நேரிட்டது முஸ்லிம்கள் ஓட்டு எங்களுக்கு தேவை இல்லை தி.மு.க சூசகம்! என்றும் அதனால் இந்த தேர்தலில் தி.மு.க.வை புறக்கணிக்குமாறும் அந்த பதிவில் கேட்டுக் கொள்ளப்படிருந்தது. தி.மு.க.வுக்கு வாக்களிக்காவிட்டால் யார் வருவார்கள் என்று இவர்களுக்கு தெரியாதா?

தி.மு.க. தன் கூட்டணியில் உள்ள முஸ்லிம் லீக்கிற்கு ஒரு இடம் கொடுத்துள்ளது ஆனால் அ.தி.மு.க.வோ ஒரு முஸ்லிம் வேட்பாளரை நிறுத்தாததோடு மட்டுமல்லாமல் முஸ்லிம் இயக்கத்தை சேர்ந்த்த எந்த ஒரு கட்சியையும் திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. தன் கூட்டணியில் பல காலமாக இருக்கும் இருக்கும் முஸ்லிம் கட்சியானாலும் சரி தனக்கு வேண்டிய சீட் கிடைக்காததால் முறுக்கிக் கொண்டு போன ம.ம.க.வாகட்டும் அ.தி.மு.க. அவர்களை திரும்பி கூட பார்க்கவில்லை. ஏற்கனவே முஸ்லிம்களே இல்லாத அமைச்சரவையை நடத்திய பெருமைக்குரியவர் தான் ஜெயலலிதா

தி.மு.க.விடம் முறுக்கி கொண்டு போன எல்லா கட்சிகளின் நிலைமையையும் பார்த்தோம், கம்யூனிஸ்டுகளாகட்டும் வைகோவாகட்டும் எல்லோருமே கெஞ்சி கூத்தாடி தான் சீட்டுகளை பெற்றனர் அதுவும் அவர்கள் விரும்பிய சீட்டுகள் கூட கிடையாது. இதில் இருந்து தப்பித்தவர் ராமதாஸ் மட்டுமே அதுவும் அவர் வளர்த்து வைத்து இருக்கும் ஜாதி சங்கத்தால் மட்டுமே. அது இல்லை என்றால் அவருக்கும் இதே நிலை தான்

முஸ்லிம்களாகட்டும் ஈழம் ஆகட்டும் அல்லது வேறு யாரகட்டும் தமிழகத்தில் இரண்டே நிலைகள் தான் இங்கு ஏதாவது கிடைக்கும் அங்கு எதுவுமே கிடைக்காது. இங்கே தான் முறுக்கி கொள்ள முடியும் அங்கே போனால் சுருட்டிக் கொள்ள வேண்டும்

நன்றி : தமிழினத் தலைவர் டாக்டர் கலைஞர் அவர்களின் புகழ்பரப்பும் வலைப்பூ

Sunday, April 05, 2009

முஸ்லிம்கள் ஓட்டு எங்களுக்கு தேவை இல்லை தி.மு.க சூசகம்!

தி மு க 21இடங்களில் போட்டியிடுகிறது அனைத்து வேட்பாளர்களையும் அறிவித்தும் விட்டது!


ஆனால்,முஸ்லிம் சமுதாயத்திலிருந்து ஒரு வேட்பாளரைக்கூட நிறுத்தவில்லை!!

கட்சியில்...
குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள்,
கொலை,
வன்முறை,
கட்டப்பஞ்சாயத்து

இப்படி பல தொடர்ப்பு இருப்பதாக கூறப்படுவர்களுக்கூட பேட்பாளராக களத்தில் நிறுத்தியுள்ளது!

ஆனால்,தி மு க விற்கு ஆரம்பம் முதல் இது நாள் வரை ஆதரவாகவும் வாக்கு வங்கியாகவும் இருக்கும் முஸ்லிம் சமூதாயத்திற்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு பாராளுமன்றத்திற்கு செல்ல தகுதி இல்லையா...?


அந்த தகுதியும் திறமையும் முஸ்லிம்களுக்கு இல்லை என்பதுப்போல்தான் உள்ளது அதன் வேட்பாளர் பட்டியல்!!

இதன் மூலம் ஒரு செய்தியையும் முஸ்லிம் சமூதாயத்திற்கு சூசகமாக சொல்லியிருக்கிறது நாங்கள் உங்களை வேட்பாளராக்கூட நிறுத்த மாட்டோம் உங்கள் ஓட்டு எங்களுக்கு தேவையில்லை...!

நல்ல டீல் தான் இது...!

நமது வாக்கை சிந்தாமல் சிதறாமல்

"உதய சூரிய"னுக்கு குத்தாமல் இருப்போம்.....!

பேட்பாளர் பட்டியல் மாற்றப்பட்டு நமது விகிச்சார அடிப்படையில் 2சீட் வேண்டும்.

அல்லது, குறைந்த பட்சம் 1சீட்டாவது நிறுத்த வேண்டும்.....
அது வரை நமது "உதய சூரியன்" புறக்கணிப்பு தொடரும்......

தமிழ்மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்!

முஸ்லிம் இல்லாத வேட்பாளர்கள் பட்டியல்...


1.தென் சென்னை - ஆர்.எஸ்.பாரதி.

2.வட சென்னை - டி.கே.எஸ். இளங்கோவன்

3.மத்திய சென்னை- தயாநிதி மாறன்.

4.திருவள்ளூர் (தனி)- காயத்ரி ஸ்ரீதரன்.

5.ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு.

6.கள்ளக்குறிச்சி - ஆதிசங்கர்.

7.கிருஷ்ணகிரி - சுகவனம்.

8.தர்மபுரி - தாமரைச்செல்வன்.

9.அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்.

10.திருவண்ணாமலை - வேணுகோபால்.

11.பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்.

12.நாகப்பட்டனம் (தனி)- ஏ.கே.எஸ்.விஜயன்.

13.கரூர் - கே.சி.பழனிச்சாமி.

14.பெரம்பலூர் - நெப்போலியன்.

15.நீலகிரி (தனி) - ராசா.

16.தஞ்சாவூர் - பழனிமாணிக்கம்.

17.மதுரை - மு.க.அழகிரி.

18.ராமநாதபுரம் - ஜே.கே.ரித்தீஷ்.

19.தூத்துக்குடி - ஜெயதுரை.

20.நாமக்கல் - காந்தி செல்வன்.

21.கன்னியாகுமரி - ஹெலன் டேவிட்சன்.


அன்பு வாசகர்களே!

உங்கள் நிலை என்ன...?

தி மு க வின் இந்த முஸ்லிம் புறக்கணிப்பை ஆதரிக்கிறீர்களா?
மனம் திறந்து எழுதுங்கள்...!

உங்கள் கருத்துக்களை பதிய இங்கே அழுத்தவும்!

Tuesday, March 24, 2009

முஸ்லிம் கட்சிகள் தனி தேர்தல் அறிக்கைகளை வெளியிடுமா?

இந்திய யூனியன் முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய தேசிய மக்கள் கட்சி, இந்திய தேசிய லீக் ஆகிய முஸ்லிம் கட்சிகள் தனி தேர்தல் அறிக்கைகளை வெளியிடுமா? அல்லது தங்கள் கூட்டணியின் தேர்தல் அறிக்கையே தங்கள் தேர்தல் அறிக்கை என அறிவிக்குமா?

நன்றி : மக்களவைத் தேர்தல் 2009

Friday, November 07, 2008

காவல்துறையில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை


மகாராஷ்டிர மாநில காவல்துறையில் முஸ்லிம்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் உறுதியளித்துள்ளார்.

இதுகுறித்து, சிறுபான்மை கல்வி கூட்டமைப்பின் விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசுகையில் இதனை தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது:

முஸ்லீம் மதத்தை சேர்ந்த ஒருவர் சிறப்பு காவல்துறை அதிகாரியாக நியமிக்கப்படுவார். இதன் மூலம், முஸ்லிம் இளைஞர்கள் காவல்துறை பணியில் சேர மேலும் வாய்ப்புகள் உருவாகும்.

எனவே, முஸ்லிம் இளைஞர்கள் உருது மொழியுடன் மராத்தியையும் கற்றுக்கொள்ள வேண்டும். இது, அவர்கள் காவல்துறை பணியில் சேர மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Thursday, August 28, 2008

குறைந்த செலவில் சமையல் எரிவாயு : திண்டுக்கல் முஸ்லிம் ஆராய்ச்சியாளர் சாதனை


திண்டுக்கல்: குறைந்த செலவில் எரிவாயு உற்பத்தி செய்வதை திண்டுக்கல் ஆராய்ச்சியாளர் அப்துல் அஜீஸ் கண்டுபிடித்துள்ளார். திண்டுக்கல்லை சேர்ந்தவர் அப்துல்அஜீஸ்.இவர் விறகிலிருந்து செலவில்லாமல் மின்சாரம் தயாரிப்பதை கண்டுபிடித்தார். விசாகப்பட்டினத்தில் நடந்த அகில இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில் இவரது கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு நிதியுதவியும் செய்யப்பட்டது. இதையடுத்து தாவர எரிபொருள் சேர்மானம் கண்டுபிடித்தார். தற்போது புதிய கண்டுபிடிப்பாக பகுதிநீர் எரிவாயு கலன் மூலம் குறைந்த செலவில் சமையல் எரிவாயு கண்டுபிடித்துள்ளார்.


நான்கு அறைகள் கொண்ட கலன் ஒன்றில் மரக்கறி, விறகுத்தூள், முந்திரிக்கொட்டை, தேங்காய் சிரட்டை,வறட்டி இவற்றில் ஏதேனும் ஒன்றை 15 கிலோ போடவேண்டும். இதில் தீ பற்ற வைத்து காற்றை செலுத்தி தொடர்ந்து எரியச்செய்ய வேண்டும். இது எரியும் போது கார்பன்டை ஆக்சைடு உருவாகும்.கலனுக்குள் ஒரு பகுதிக்குள் சென்று கார்பன் மோனாக்சைடாக மாறி வெளி வருகிறது. அதே நேரம் அதிக வெப்பம் கொடுக்கக்கூடியதாக இது இருப்பதில்லை. இதனுடன் சொட்டுச்சொட்டாக தண்ணீரை சேர்க்கும் போது பகுதி நீர் எரிவாயு உருவாகிறது.இது டீசல் ஆயில் எரிபொருளுக்கு சமமானது.ஒரு கிலோ எல்.பி.ஜி.,காஸ் வீட்டு உபயோகத்திற்கு ரூ.25க்கும்,கடைகளுக்கு ரூ.55 க்கும் விற்கப்படுகிறது. ஆனால் இவரது கண்டுபிடிப்பு மூலம் ஒரு கிலோ எல்.பி.ஜி.,காஸ் க்கு சமமான எரிபொருளை 2 கிலோ மரக்கறி மூலம் தயாரிக்கலாம். இதற்கு ஆகும் செலவு ரூ. 16 மட்டுமே. விறகை கொண்டு தயாரித்தால் ஆகும் செலவு ரூ. 8 மட்டுமே.


ஒரு கிலோ எல்.பி.ஜி., திரவ எரிபொருளுக்கு ஈடான எரிபொருள் தயாரிக்க 2 கிலோ மரக்கறி அல்லது 4 கிலோ விறகு அல்லது 3 கிலோ முந்திரிக்கொட்டை அல்லது கொட்டாங்குச்சி 3 கிலோ தேவை. ஹோட்டல் மற்றும் பெரிய நிறுவனங்களின் எரிவாயு தேவையை இவரது கண்டுபிடிப்பு குறைந்த செலவில் பூர்த்திசெய்யும். புதிய கண்டுபிடிப்பை பதிவு செய்து விரைவில் சந்தைப்படுத்தவும் முடிவு செய்துள்ளார்.

நன்றி : தினமலர்

Tuesday, April 22, 2008

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்: சிறுபான்மை அமைப்புகள் தீர்மானம்

முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்: சிறுபான்மை அமைப்புகள் தீர்மானம்

முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கான தனி இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு தலா 3.5 சதவீத தனி இடஒதுக்கீடு சட்டம் தொடர்பான கலந்தாய்வுக் கூட்டம் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில்முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்புகளின் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற மாநிலச் செயலாளர் எம்.ஜி. தாவூத் மியாகான் நிருபர்களிடம் கூறியது:

சிறுபான்மையினரான முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு கடந்த 100 ஆண்டுகளாக இல்லாத பாதிப்புகள் இடஒதுக்கீடு சட்டத்தின் மூலம் தற்போது ஏற்பட்டுள்ளது.

முதுகலை மருத்துவப் படிப்பில் ரோஸ்டர் முறை என்கிற சுழற்சி முறை கடைப்பிடிக்கப்படுகிறது. அதனடிப்படையில் கிறிஸ்தவர்கள் 14-வது இடத்திலும், முஸ்லிம்கள் 28-வது இடத்திலும் உள்ளனர்.

முதுகலை மருத்துவப் படிப்பில் இரண்டு சமுதாயத்துக்கும் ஒரு இடம் கூட ஒதுக்கீடு செய்யப்படவில்லை. மேலும் பல ஆண்டுகள் விண்ணப்பிக்கவே முடியாத நிலைக்கு முஸ்லிம்களும், கிறிஸ்தவர்களும் தள்ளப்பட்டுள்ளனர்.

பொறியியல், மருத்துவம் கவுன்சலிங்கிலும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்களுக்கு பாதிப்பு கடுமையாக இருக்கும்.

தமிழக அரசின் இடஒதுக்கீடு இல்லாமலேயே அரசுப் பணிகளில் 3.2 சதவீத முஸ்லிம்கள் உள்ளனர். பலதுறைகளில் 4 முதல் 9 சதவீதம் வரை இரு சமுதாய மக்களும் பணியில் இருந்ததை புள்ளி விவரங்கள் கூறுகின்றன.

சிறுபான்மை மக்களுக்கு உதவுவதாக் கூறி அளிக்கப்பட்டுள்ள இந்த இடஒதுக்கீடு முற்றிலும் ஏமாற்று வேலையாக இந்தக் கூட்டம் கருதுகிறது.

அண்மையில் நியமிக்கப்பட்ட 2.5 லட்சம் அரசுப் பணியாளர்களில் கிறிஸ்தவர்கள் 2.5 சதவீதமும், முஸ்லிம்கள் .5 சதவீதமும் பணியமர்த்தப்பட்டுள்ளார்கள் என்று அறிய முடிகிறது.

ரோஸ்டர் முறைக்கான அரசாணையை உடனடியாக ரத்து செய்ய வேண்டும், இடஒதுக்கீடு சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும்.

அரசின் தவறான சட்டத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பை ஈடுகட்டும் வகையில் 10 ஆயிரம் அரசுப் பணிகள் முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி முஸ்லிம், கிறிஸ்தவ அமைப்புகளை ஒன்று திரட்டிப் போராட உள்ளோம்' என்றார் அவர்.

Friday, April 11, 2008

பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் மீலாது விழா!

பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் மீலாது விழா!


பாங்காக் தமிழ் முஸ்லிம் சங்கத்தின் சார்பில் கடந்த 23.03.2008 அன்று மீலாது விழா நடத்தப்பட்டது. முன்னதாக ரபீஉல் அவ்வல் பிறை 1 முதல் 12 வரை தினமும் மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்பட்டது.

23.03.2008 ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணியளவில் பாங்காக் மஸ்ஜிதில் மீலாது விழா நடத்தப்பட்டது. துவக்க நிகழ்ச்சியாக, காலை 9.30 மணி முதல் 10.45 மணி வரை மவ்லித் மஜ்லிஸ் நடத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து சங்கத்தின் தலைவர் ஹாஜி அஹ்மத் சுலைமான் தலைமையில் மீலாது விழா நிகழ்ச்சிகள் துவங்கின. காயல்பட்டணம் ஹாஜி எஸ்.எம்.மிஸ்கீன் ஸாஹிப் ஃபாஸீ முன்னிலை வகித்தார்.

காயல்பட்டணம் ஹாஃபிழ் ஓ.எ.சி. செய்யிது முஹம்மத் கிராஅத் ஓதினார். சங்கத்தின் செயலாளர் ஹாஜி ஹ{மாயூன் வரவேற்புரையாற்றினார். ஹாஜி கத்தீப் மீராஸாஹிப், ரைட் ஜெம்ஸ் - ஹாஜி அஷ்ரஃப் ஆகியோர் பைத் பாடினர்.

ஹாஃபிழ் ஐதுரூஸ் ஆலிம் மற்றும் பாங்காக் மஸ்ஜித் இமாம் மவ்லவீ முஹம்மத் முஹ்யித்தீன் ஆகியோர் சொற்பொழிவாற்றினர்.

தொடர்ந்து சென்னை - மந்தைவெளி மஸ்ஜித் இமாம் மவ்லவீ இல்யாஸ் மீலாது சிறப்புரையாற்றினார். பின்னர் அனைவராலும் ஸலாம் பைத் பாடப்பட்டது. நன்றியுரைக்குப் பின், மவ்லவீ ஓ.எ.சி.ஷாதுலீ ஆலிம் துஆவுடன் விழா நிறைவுற்றது.

விழாவில் கலந்துகொண்ட சுமார் 300 பேருக்கு லுஹ்ர் தொழுகைக்குப் பின் மதிய உணவு விருந்துபசாரம் செய்யப்பட்டது.

விழாவில் பாங்காக் மஸ்ஜித் மக்தப் பிரிவு மாணவ-மாணவியரின் சன்மார்க்கப் போட்டிகள் நடைபெற்றன. விழாவில் பாகிஸ்தான், தாய்லாந்து மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளிலிருந்தும் மக்கள் கலந்துகொண்டனர்.

விழா நிகழ்ச்சிகளை சங்கத்தின் துணைத்தலைவர் ஹாஜி வாவு எம்.எம்.ஷம்சுத்தீன் தொகுத்து வழங்கினார்.

http://www.kayalpatnam.com/shownews.asp?id=1698

Monday, March 24, 2008

ஏர்வாடியில் பெண்கள் இஜ்திமா

ஏர்வாடியில் பெண்கள் இஜ்திமா


கடந்த 22.03.2008 அன்று நெல்லை மாவட்டம், ஏர்வாடி ஓ.கே.திருமண மண்டத்தில் ஏர்வாடி த.மு.மு.க.மகளிர் பிரிவு சார்பாக பெண்கள் இஜ்திமா சகோதரி பாத்திமா தலைமையில் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு தொடங்கிய நிகழச்சி இரவு 8 மணி வரை நடைபெற்றது.

இதில் வரதட்சணை, இஸ்லாமிய பெண்கள் அன்றும் இன்றும் போன்ற பல்வேறு தலைப்புகளில் உரை நிகழ்த்தப்பட்டது. இதில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏர்வாடி சகோதரிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டனர். இதன் முடிவில் பெண்களுக்கு எதிரான சமுதாயக் கொடுமைகளை தீவிரமாக எதிர்த்து போராடுவது, பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கான தண்டனைகளை கடுமையாக்க மத்திய அரசை கோருவது, ஏர்வாடியில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் அமைந்துள்ள மதுக்கடையை அகற்றக் கோருவது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஏர்வாடி த.மு.மு.க.வினர் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.

செய்தி: நெல்லை உஸ்மான்.