Showing posts with label திமுக. Show all posts
Showing posts with label திமுக. Show all posts

Sunday, May 10, 2009

இமயம் தொலைக்காட்சியில் வராத நேர்காணல்!

கேள்வி: முஸ்லிம்களுக்கு ஒரு இடம்கூட ஒதுக்காத திமுகவுக்கு தவ்ஹீது ஜமாத் வலியச்சென்று ஆதரவு கொடுக்கக் காரணம் என்ன?

பதில் : எங்களின் பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு தமிழகஅரசு 3.5% இட ஒதுக்கீடு கொடுத்தது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ததஜ வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிக்கும் என்று வாக்குறுதி கொடுத்தோம். அதை தற்போது நிறைவேற்றுகிறோம்.

கேள்வி: 3.5% இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்குச் சரியானபடி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று சொன்னீர்களே?

பதில்: உண்மைதான்! அதைதேர்தலுக்குப் பிறகு சரிசெய்வதாக எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்றபிறகே எங்கள் ஆதரவை வழங்குகிறோம்!

கேள்வி: ஆட்சியிலிருக்கும்போதே அதைச் சரிசெய்ய ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வரலாமே! ஏன் நீங்கள் வலியுறுத்தவில்லை?

பதில்: தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தபிறகு அரசாங்கம் எவ்விதச் சலுகையோ அல்லது அதற்கான உத்தரவோ போடமுடியாது.

*****

கேள்வி: சென்ற தேர்தலில் அதிமுகவை ஆதரித்தீர்கள். இந்தத் தேர்தலில் திமுகவை ஆதரிக்கிறீர்கள்?

பதில் : சென்ற தேர்தலில் எங்கள் கோரிக்கையை ஏற்று முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வ்ய் செய்வதற்காக நியமிக்கப்பட்ட கமிட்டியின் ஆயுளை நீட்டித்து உத்தரவிட்டதால் அதற்கு நன்றி செலுத்தும் விதமாக எங்கள் ஆதரவை அதிமுகவுக்கு வழங்கினோம்!

கேள்வி: தேர்தல்விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தபிறகு அரசாங்கம் எவ்விதச்சலுகையோ அல்லது அதற்கான உத்தரவோ போடமுடியாது என்று சொன்னீர்களே?

பதில்: தேர்தல்தேதி அறிவித்தாலும் முன்தேதியிட்டு உத்தரவிட்டதால் அது தேர்தல் விதிமுறையை மீறியதாகாது!

கேள்வி: தற்போதும் முன்தேதியிட்டு உத்தரவிட்டிருக்கலாமே?

பதில் : ஹி...ஹி....

*******

கேள்வி: நீங்கள் எதற்காக தமுமுகவிலிருந்து பிரிந்தீர்கள்?

பதில் : ஜெனீவாவில் ஜவாஹிருல்லாஹ் என்பவரை பேசஅழைக்கப்பட்ட பிறகும், எங்களுடனிருக்கும் பத்துலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களின் கூட்டத்தைப் பார்த்தபிறகும் தமுமுகவிலுள்ள சிலருக்கு பதவியாசை வந்து தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்ற அடிப்படைக் கொள்கையிலிருந்து விலகி அரசியல்வாதிகளுடன் சமரசம் செய்யத் தொடங்கினார்கள். இதனால் தவ்ஹீதுப் பிரச்சாரம் செய்யமுடியவில்லை என்பதால்தான் விலகினோம்!

கேள்வி: ஜெனீவாவிற்குத் தமுமுகவின் பிரதிநிதியாகத்தானே சென்றார்?

பதில் : ஆமாம்!

கேள்வி: பேராசிரியர், பேச்சாளர் மற்றும் தமுமுகவின் முக்கியத்தலைவர் என்பதால் தமுமுக சார்பில் சென்றுள்ளார். இதில் பதவியாசை இல்லையே?

பதில்: ஹி..ஹி...(மனதிற்குள் "ஏன் என்னை அனுப்பியிருக்கலாம்ல?")

கேள்வி: 10 லட்சத்திற்கும் அதிமான முஸ்லிம்கள் உங்களுடன் உள்ளதாகச் சொல்கிறீகள்.முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தபோது ஒருலட்சம் என்று சொன்னீர்களாமே?

பதில்: முதல்வரிடம் உண்மையத்தானே சொல்ல முடியும். உளவுத்துறையும் எத்தனைபேர் எங்கள் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள் என்று தகவல் கொடுத்து விட்டதாக எங்களுக்கும் ரகசியத் தகவல் கிடைத்ததால் பத்து லட்சம் என்று சொல்ல முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

கேள்வி: அப்படியென்றால், கூட்டத்தைப் பார்த்து தேர்தலில் போட்டியிட்டுப் பதவி பெறும் ஆசை வந்ததாகச் சொல்வது தவறுதானே?

பதில் : ஹி...ஹி....

கேள்வி: தேர்தலில் போட்டியிட்டு அரசியல்வாதிகளிடம் கொள்கையை அடகு வைக்க மாட்டோம் என்று சொல்லியே தமுமுகவிலிருந்து பிரிந்து வந்ததாகச் சொன்னீர்கள். நீங்களும்கூட தற்போது அரசியல்வாதிகளிடம் தஞ்சமடைந்துள்ளீர்களே?

பதில் : ததஜ பைலாவில் கொள்கைகளில் நான்காவதாக "சூழ்நிலைக்கேற்ப எந்தக்கட்சிக்கு ஆதரவளிப்பது என்று கருத்து சொல்வோம்" என்று உள்ளது!

கேள்வி: தவ்ஹீது பிரச்சாரம் செய்யபோவதாகச் சொல்லிவிட்டு அரசியல் பிரச்சாரம் செய்வது நியாயமா?

பதில் : ஹி....ஹி....

கேள்வி:சென்றதேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவகாக கருத்து சொன்னீர்கள், அதிமுக தோற்றது! தற்போது திமுகவுக்கு ஆதரவாகக் கருத்து சொல்லி இருக்கிறீர்கள்! திமுக தோற்குமா?

பதில் : வெற்றி/தோல்வியைக் கொடுப்பவன் அல்லாஹ்வே என்பதில் தவ்ஹீதுவாதிகள் உறுதியாக உள்ளோம்.

கேள்வி: மமகவை தோற்கடித்தே தீருவோம் என்று சபதம் எடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறதே?

பதில் :ஆமாம்! மமக ஏன் தோற்கடிக்கப்படவேண்டும் என்று சென்னை மண்ணாடியில் விளக்கமாகப் பேசியுள்ளேன்.சிடி எங்கள் தலைமையகத்தில் கிடைக்கும். ப்ராட்பேண்ட் இருந்தால் www.onlinepj.com இலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்!எங்கள் உயிரைக் கொடுத்தாவது மமகவை தோற்கடித்தே தீருவோம்!

கேள்வி : வெற்றி/தோல்வியைக் கொடுப்பவன் அல்லாஹ்வே என்பதில் தவ்ஹீதுவாதிகள் உறுதியாக இல்லையோ?

பதில் : ஹி..ஹி....

*******

நேயர்களே! நமது நிகழ்ச்சிக்கு வந்து அதிகமாக "ஹி...ஹி..." என்று பதில் கொடுத்ததால் பேட்டியை மேற்கொண்டு தொடர முடியாது. நமது சிறப்புச் செய்தியாளர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும், பேட்டியாளரின் எண்ணஓட்டத்தின்படியும் கீழ்கண்ட முடிவுக்கு வந்துள்ளோம்.

* பேரா.ஜவாஹிருல்லாஹ் ஜெனீவாவில் பேசுவற்கு அழைக்கப்பட்டதால் ததஜ தலைவர் மனோரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.

* பத்து லட்சம் பேர் கூடினார்கள் என்பது உண்மையல்ல.

* ததஜவின் பேச்சை தமிழக முஸ்லிம்கள் கேட்டிருந்தால் சென்றதேர்தலில் அதிமுக வென்றிருக்கும்!

* இந்த தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் தோற்றால் அதற்கு ஈழப்பிரச்சினையில் அதன் நிலைப்பாடே காரணம். நிச்சயமாக ததஜ அல்ல!

* மமக தோற்றால் அதற்கு 100% ததஜவின் பேச்சை தமிழக முஸ்லிம்கள் கேட்டதே காரணமாகும். ஆகவே! இனி தமிழக முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற ஒரே அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தே என்பதால் வக்ப்வாரிய சேர்மன் பதவியையும், சவூதிக்கான இந்தியத் தூதர் பதவியையும்.....................

(நேயர்களே! எமது அடுத்த நிகழ்ச்சி "போங்கடா நீங்களும் உங்க அரசியலும்" என்ற திரைப்படம் என்ற அறிவிப்பு குறுக்கிட்டதால் இறுதிவரியைச்சொல்ல முடியவில்லை ;-)

நன்றி: அதிரை அபூசாலிஹா

நச் கேள்விகள் தொடரும்...

Friday, April 17, 2009

முகவையில் தி.மு.க மாநாடு - மு.க. அழகிரி - ரித்தீஸீக்கு பிரச்சாரம்


இராமநாதபுரம், ஏப்ரல் 17 : ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் இராமநாதபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகம் எதிரில் உள்ள திடலில் மாபெரும் மாநாடு நடத்தப்பட்டது. தென்மன்டல தி.மு.க அமைப்பு செயலாளர் திரு.மு.க. அழகிரி அவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டர்கள்.அத்துடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இருக்கும் இந்திய யுனியன் முஸ்லிம் லீக், விடுதலைச் சிறுத்தைகள், காங்கிரஸ் உட்பட அனைத்து கட்சி தலைவர்களும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.



காங்கிரஸ் சார்பில் இராமநாதபுரம் தொகுதி எம்.எல்.ஏ திரு. ஹஸன் அலி அவர்களும், முஸ்லிம் லீக் சார்பில் மாவட்ட தலைவர் திரு. செளக்கத் அலி அவர்களும், விடுதலை சிறுத்தைகளின் மாவட்ட தலைவரும், தி.மு.க மாவட்ட செயலாளர் திரு. ஆர்.ஜி.ஆர், மாநில இளைஞர் அணி திரு பெருநாழி போஸ், தமிழக் குடிசை மாற்றுத்துறை அமைச்சர் திரு. சுப. தங்கவேலன், காங்கிரஸ் மாவட்ட செயலாளர் திரு. இரவிச்சந்திர ராமவண்ணி, இராமநாதபுரம் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் திரு. பவாணி ராஜேந்திரன் உட்பட பலரும் மாநாட்டில் கலந்து கொண்டனர்.



இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் திமுக வேட்பாளர் திரு. ரித்தீஸ் அவர்களுக்கு ஆதரவாக அனைவரும் பேசினர். பின்னர் பேசி திரு. மு.க அழகிரி அவர்கள் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளர் திரு. ரித்தீஸ் அவர்களை வெற்றி பெற செய்ய வேண்டியது முகவை மக்களின் கடமை எனவும், இராமநாதபுரம் தொகுதி உட்பட தமிழகத்ின் அனைத்து தொகுதிகளிலும் திமுக கூட்டணியே வெற்றி பெரும் எனவும் கூறினார். மாநாட்டில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் பல்லாயிரக் கணக்கில் மக்கள் கலந்து கொண்டனர். மாநாட்டில் கலந்து கொள்ள வந்த ஆயிரக்கணக்கான வாகனங்களால் முகவை நகரே நெரிசலில் சிக்கி தினறியது.

Sunday, April 05, 2009

முஸ்லிம்கள் ஓட்டு எங்களுக்கு தேவை இல்லை தி.மு.க சூசகம்!

தி மு க 21இடங்களில் போட்டியிடுகிறது அனைத்து வேட்பாளர்களையும் அறிவித்தும் விட்டது!


ஆனால்,முஸ்லிம் சமுதாயத்திலிருந்து ஒரு வேட்பாளரைக்கூட நிறுத்தவில்லை!!

கட்சியில்...
குழப்பத்தை ஏற்படுத்தியவர்கள்,
கொலை,
வன்முறை,
கட்டப்பஞ்சாயத்து

இப்படி பல தொடர்ப்பு இருப்பதாக கூறப்படுவர்களுக்கூட பேட்பாளராக களத்தில் நிறுத்தியுள்ளது!

ஆனால்,தி மு க விற்கு ஆரம்பம் முதல் இது நாள் வரை ஆதரவாகவும் வாக்கு வங்கியாகவும் இருக்கும் முஸ்லிம் சமூதாயத்திற்கு வேட்பாளராக நிறுத்தப்பட்டு பாராளுமன்றத்திற்கு செல்ல தகுதி இல்லையா...?


அந்த தகுதியும் திறமையும் முஸ்லிம்களுக்கு இல்லை என்பதுப்போல்தான் உள்ளது அதன் வேட்பாளர் பட்டியல்!!

இதன் மூலம் ஒரு செய்தியையும் முஸ்லிம் சமூதாயத்திற்கு சூசகமாக சொல்லியிருக்கிறது நாங்கள் உங்களை வேட்பாளராக்கூட நிறுத்த மாட்டோம் உங்கள் ஓட்டு எங்களுக்கு தேவையில்லை...!

நல்ல டீல் தான் இது...!

நமது வாக்கை சிந்தாமல் சிதறாமல்

"உதய சூரிய"னுக்கு குத்தாமல் இருப்போம்.....!

பேட்பாளர் பட்டியல் மாற்றப்பட்டு நமது விகிச்சார அடிப்படையில் 2சீட் வேண்டும்.

அல்லது, குறைந்த பட்சம் 1சீட்டாவது நிறுத்த வேண்டும்.....
அது வரை நமது "உதய சூரியன்" புறக்கணிப்பு தொடரும்......

தமிழ்மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்!

முஸ்லிம் இல்லாத வேட்பாளர்கள் பட்டியல்...


1.தென் சென்னை - ஆர்.எஸ்.பாரதி.

2.வட சென்னை - டி.கே.எஸ். இளங்கோவன்

3.மத்திய சென்னை- தயாநிதி மாறன்.

4.திருவள்ளூர் (தனி)- காயத்ரி ஸ்ரீதரன்.

5.ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு.

6.கள்ளக்குறிச்சி - ஆதிசங்கர்.

7.கிருஷ்ணகிரி - சுகவனம்.

8.தர்மபுரி - தாமரைச்செல்வன்.

9.அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்.

10.திருவண்ணாமலை - வேணுகோபால்.

11.பொள்ளாச்சி - சண்முகசுந்தரம்.

12.நாகப்பட்டனம் (தனி)- ஏ.கே.எஸ்.விஜயன்.

13.கரூர் - கே.சி.பழனிச்சாமி.

14.பெரம்பலூர் - நெப்போலியன்.

15.நீலகிரி (தனி) - ராசா.

16.தஞ்சாவூர் - பழனிமாணிக்கம்.

17.மதுரை - மு.க.அழகிரி.

18.ராமநாதபுரம் - ஜே.கே.ரித்தீஷ்.

19.தூத்துக்குடி - ஜெயதுரை.

20.நாமக்கல் - காந்தி செல்வன்.

21.கன்னியாகுமரி - ஹெலன் டேவிட்சன்.


அன்பு வாசகர்களே!

உங்கள் நிலை என்ன...?

தி மு க வின் இந்த முஸ்லிம் புறக்கணிப்பை ஆதரிக்கிறீர்களா?
மனம் திறந்து எழுதுங்கள்...!

உங்கள் கருத்துக்களை பதிய இங்கே அழுத்தவும்!