Sunday, May 10, 2009

இமயம் தொலைக்காட்சியில் வராத நேர்காணல்!

கேள்வி: முஸ்லிம்களுக்கு ஒரு இடம்கூட ஒதுக்காத திமுகவுக்கு தவ்ஹீது ஜமாத் வலியச்சென்று ஆதரவு கொடுக்கக் காரணம் என்ன?

பதில் : எங்களின் பல்வேறு கட்டப் போராட்டங்களுக்குப் பிறகு தமிழகஅரசு 3.5% இட ஒதுக்கீடு கொடுத்தது. அதற்கு நன்றி தெரிவிக்கும் விதமாக ததஜ வரும் நாடாளுமன்றத் தேர்தலில் திமுகவை ஆதரிக்கும் என்று வாக்குறுதி கொடுத்தோம். அதை தற்போது நிறைவேற்றுகிறோம்.

கேள்வி: 3.5% இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்குச் சரியானபடி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று சொன்னீர்களே?

பதில்: உண்மைதான்! அதைதேர்தலுக்குப் பிறகு சரிசெய்வதாக எழுத்துப்பூர்வ உறுதிமொழி பெற்றபிறகே எங்கள் ஆதரவை வழங்குகிறோம்!

கேள்வி: ஆட்சியிலிருக்கும்போதே அதைச் சரிசெய்ய ஒரு சட்டத்திருத்தம் கொண்டு வரலாமே! ஏன் நீங்கள் வலியுறுத்தவில்லை?

பதில்: தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தபிறகு அரசாங்கம் எவ்விதச் சலுகையோ அல்லது அதற்கான உத்தரவோ போடமுடியாது.

*****

கேள்வி: சென்ற தேர்தலில் அதிமுகவை ஆதரித்தீர்கள். இந்தத் தேர்தலில் திமுகவை ஆதரிக்கிறீர்கள்?

பதில் : சென்ற தேர்தலில் எங்கள் கோரிக்கையை ஏற்று முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து ஆய்வ்ய் செய்வதற்காக நியமிக்கப்பட்ட கமிட்டியின் ஆயுளை நீட்டித்து உத்தரவிட்டதால் அதற்கு நன்றி செலுத்தும் விதமாக எங்கள் ஆதரவை அதிமுகவுக்கு வழங்கினோம்!

கேள்வி: தேர்தல்விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தபிறகு அரசாங்கம் எவ்விதச்சலுகையோ அல்லது அதற்கான உத்தரவோ போடமுடியாது என்று சொன்னீர்களே?

பதில்: தேர்தல்தேதி அறிவித்தாலும் முன்தேதியிட்டு உத்தரவிட்டதால் அது தேர்தல் விதிமுறையை மீறியதாகாது!

கேள்வி: தற்போதும் முன்தேதியிட்டு உத்தரவிட்டிருக்கலாமே?

பதில் : ஹி...ஹி....

*******

கேள்வி: நீங்கள் எதற்காக தமுமுகவிலிருந்து பிரிந்தீர்கள்?

பதில் : ஜெனீவாவில் ஜவாஹிருல்லாஹ் என்பவரை பேசஅழைக்கப்பட்ட பிறகும், எங்களுடனிருக்கும் பத்துலட்சத்திற்கும் அதிகமான முஸ்லிம்களின் கூட்டத்தைப் பார்த்தபிறகும் தமுமுகவிலுள்ள சிலருக்கு பதவியாசை வந்து தேர்தலில் போட்டியிடமாட்டோம் என்ற அடிப்படைக் கொள்கையிலிருந்து விலகி அரசியல்வாதிகளுடன் சமரசம் செய்யத் தொடங்கினார்கள். இதனால் தவ்ஹீதுப் பிரச்சாரம் செய்யமுடியவில்லை என்பதால்தான் விலகினோம்!

கேள்வி: ஜெனீவாவிற்குத் தமுமுகவின் பிரதிநிதியாகத்தானே சென்றார்?

பதில் : ஆமாம்!

கேள்வி: பேராசிரியர், பேச்சாளர் மற்றும் தமுமுகவின் முக்கியத்தலைவர் என்பதால் தமுமுக சார்பில் சென்றுள்ளார். இதில் பதவியாசை இல்லையே?

பதில்: ஹி..ஹி...(மனதிற்குள் "ஏன் என்னை அனுப்பியிருக்கலாம்ல?")

கேள்வி: 10 லட்சத்திற்கும் அதிமான முஸ்லிம்கள் உங்களுடன் உள்ளதாகச் சொல்கிறீகள்.முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தபோது ஒருலட்சம் என்று சொன்னீர்களாமே?

பதில்: முதல்வரிடம் உண்மையத்தானே சொல்ல முடியும். உளவுத்துறையும் எத்தனைபேர் எங்கள் கூட்டங்களில் கலந்து கொள்கிறார்கள் என்று தகவல் கொடுத்து விட்டதாக எங்களுக்கும் ரகசியத் தகவல் கிடைத்ததால் பத்து லட்சம் என்று சொல்ல முடியாத நிர்ப்பந்தம் ஏற்பட்டது.

கேள்வி: அப்படியென்றால், கூட்டத்தைப் பார்த்து தேர்தலில் போட்டியிட்டுப் பதவி பெறும் ஆசை வந்ததாகச் சொல்வது தவறுதானே?

பதில் : ஹி...ஹி....

கேள்வி: தேர்தலில் போட்டியிட்டு அரசியல்வாதிகளிடம் கொள்கையை அடகு வைக்க மாட்டோம் என்று சொல்லியே தமுமுகவிலிருந்து பிரிந்து வந்ததாகச் சொன்னீர்கள். நீங்களும்கூட தற்போது அரசியல்வாதிகளிடம் தஞ்சமடைந்துள்ளீர்களே?

பதில் : ததஜ பைலாவில் கொள்கைகளில் நான்காவதாக "சூழ்நிலைக்கேற்ப எந்தக்கட்சிக்கு ஆதரவளிப்பது என்று கருத்து சொல்வோம்" என்று உள்ளது!

கேள்வி: தவ்ஹீது பிரச்சாரம் செய்யபோவதாகச் சொல்லிவிட்டு அரசியல் பிரச்சாரம் செய்வது நியாயமா?

பதில் : ஹி....ஹி....

கேள்வி:சென்றதேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவகாக கருத்து சொன்னீர்கள், அதிமுக தோற்றது! தற்போது திமுகவுக்கு ஆதரவாகக் கருத்து சொல்லி இருக்கிறீர்கள்! திமுக தோற்குமா?

பதில் : வெற்றி/தோல்வியைக் கொடுப்பவன் அல்லாஹ்வே என்பதில் தவ்ஹீதுவாதிகள் உறுதியாக உள்ளோம்.

கேள்வி: மமகவை தோற்கடித்தே தீருவோம் என்று சபதம் எடுத்துள்ளதாகச் சொல்லப்படுகிறதே?

பதில் :ஆமாம்! மமக ஏன் தோற்கடிக்கப்படவேண்டும் என்று சென்னை மண்ணாடியில் விளக்கமாகப் பேசியுள்ளேன்.சிடி எங்கள் தலைமையகத்தில் கிடைக்கும். ப்ராட்பேண்ட் இருந்தால் www.onlinepj.com இலிருந்து இலவசமாக டவுன்லோட் செய்து கொள்ளலாம்!எங்கள் உயிரைக் கொடுத்தாவது மமகவை தோற்கடித்தே தீருவோம்!

கேள்வி : வெற்றி/தோல்வியைக் கொடுப்பவன் அல்லாஹ்வே என்பதில் தவ்ஹீதுவாதிகள் உறுதியாக இல்லையோ?

பதில் : ஹி..ஹி....

*******

நேயர்களே! நமது நிகழ்ச்சிக்கு வந்து அதிகமாக "ஹி...ஹி..." என்று பதில் கொடுத்ததால் பேட்டியை மேற்கொண்டு தொடர முடியாது. நமது சிறப்புச் செய்தியாளர்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையிலும், பேட்டியாளரின் எண்ணஓட்டத்தின்படியும் கீழ்கண்ட முடிவுக்கு வந்துள்ளோம்.

* பேரா.ஜவாஹிருல்லாஹ் ஜெனீவாவில் பேசுவற்கு அழைக்கப்பட்டதால் ததஜ தலைவர் மனோரீதியாகப் பாதிக்கப்பட்டுள்ளார்.

* பத்து லட்சம் பேர் கூடினார்கள் என்பது உண்மையல்ல.

* ததஜவின் பேச்சை தமிழக முஸ்லிம்கள் கேட்டிருந்தால் சென்றதேர்தலில் அதிமுக வென்றிருக்கும்!

* இந்த தேர்தலில் திமுக பெரும்பாலான இடங்களில் தோற்றால் அதற்கு ஈழப்பிரச்சினையில் அதன் நிலைப்பாடே காரணம். நிச்சயமாக ததஜ அல்ல!

* மமக தோற்றால் அதற்கு 100% ததஜவின் பேச்சை தமிழக முஸ்லிம்கள் கேட்டதே காரணமாகும். ஆகவே! இனி தமிழக முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்ற ஒரே அமைப்பு தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தே என்பதால் வக்ப்வாரிய சேர்மன் பதவியையும், சவூதிக்கான இந்தியத் தூதர் பதவியையும்.....................

(நேயர்களே! எமது அடுத்த நிகழ்ச்சி "போங்கடா நீங்களும் உங்க அரசியலும்" என்ற திரைப்படம் என்ற அறிவிப்பு குறுக்கிட்டதால் இறுதிவரியைச்சொல்ல முடியவில்லை ;-)

நன்றி: அதிரை அபூசாலிஹா

நச் கேள்விகள் தொடரும்...

5 comments:

Abu Aysha said...

நயவஞ்சகத் தன்மையை அழகாக கூறுகின்றது இந்த பேட்டி. பாக்கருடன் பாதிக்கு மேல் இருந்த ததஜவினர் பிரிந்து விட்டனர். இன்று மீதியுள்ளவர்களும் பீஜேயின் அரசியல் நிலைபாட்டை அமைதியாக எதிர்த்து வருகின்றனர். மண்ணடி தெருக்களின் பைத்தியமாக திரியப் போகும் நாள் இப்படியே போனால் வந்து விடும். அல்லாஹ் நேர்வழி காட்டுவானாக .

நெல்லை ரபிக் said...

தமிழன் தொலைக்காட்சிகளில் வெளி வராத நச் கேள்விகள், ஹிஹிஹி பதில்கள்
---------------------------------
கேள்வி : தி மு க விற்கு ஏன் முஸ்லிம்கள் வாக்களிக்க கூடாது?
த மு மு க @ ம ம க : அவர்கள் முஸ்லிம்களின் முதுகில் ஏறி சவாரி செய்து நம்மை அடிமைகளாக வாக்கு வங்கிகளாக இவ்வளவு காலம் ஏமாற்றி விட்டார்கள்.. நமது சமுதாயத்திற்கு துரோகம் செய்தனர்.

கேள்வி : தனித்து போட்டி என்று அறிவிப்பதற்கு முன் தி மு க வோடு பேச்சு வார்த்தை நடத்திநீர்களே? அப்போது தி மு கவின் துரோகம் தெரியவில்லையா?
த மு மு க @ ம ம க : ஹி ஹி ஹி
கேள்வி : ரெண்டு இடம் தந்தால் நமக்கு துரோகமே செய்திருக்க மாட்டார்கள் இல்லையா? மறுபடியும் முதுகில் ஏறி இருப்பார்களே?
த மு மு க @ ம ம க : ஹி ஹி ஹி

--------------------------------
கேள்வி : எஸ். எம். பாக்கரை ஐஸ் ப்ரூட் ஆசாமி, மைனர் குஞ்சு என்று பெயர் வைத்து ஊரெல்லாம் அசிங்க படுத்தினீர்களே, இப்பொது அவருடைய ஆதரவை கேட்டு அலைகிறீர்களே இதை பற்றி?
த மு மு க @ ம ம க : ஹி ஹி ஹி

---------------------------

கேள்வி: நமது சமுதாயத்தை சேர்ந்த ஒருவருக்கு (ம ம க) வாக்களிப்பதை த த ஜ வினர் எதிர்கிறார்களே ஏன்?
த மு மு க @ ம ம க: அவர்கள் சமுதாய எதிரிகள்.. நமது முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த ஹைதர் அலியை வீழ்த்தி தயாநிதி மாறனை வெற்றி பெற செய்ய நினைப்பவர்கள். அவர்களா முஸ்லிம்களின் பாது காவலர்கள்?

கேள்வி : கடந்த சட்ட மன்ற தேர்தலில் சேப்பாக்கம் தொகுதியில் நமது சமுதாயத்தை சேர்ந்த தாவூத் மியா கானை தோற்கடித்து மாற்று சமுதாயத்தை சேர்ந்த கருணாநிதி யை ஜெயிக்க வைத்து பற்றி?
த மு மு க @ ம ம க : ஹி ஹி ஹி
----------------------------------
இன்னும் இது போன்ற ஹி ஹி ஹி பதில்கள் தொடரும் இன்ஷா அல்லாஹ்

Anonymous said...

தமுமுக என்று பெயர் வைத்ததும் அதனுடைய போராட்டங்களும் பேரணிகளும் மற்றும் எல்லா இயக்கங்களும்,கழகங்களும் ஹராம் என்று பத்வா கொடுத்த அபூ அப்துல்லா இன்று பீஜே அவர்களை திட்ட வாய்ப்பு கிடைத்துவிட்டது என்பதற்காக தமுமுக வை ஆதரித்து எழுதியுள்ளார் இவர் பீஜே அவர்களை விமர்சிப்பது சமூக நலன் கருதி அல்ல என்பது இவரது கண்ணியமற்ற வார்த்தைகளிலிருந்தே அரிந்துகொள்ள முடியும் இயக்கங்கள் கூடவே கூடாது என்று பிரச்சாரம் செய்து ஒரு சில முஸ்லிம்களை சமூக நலன் கருதி செய்யப்படும் போராட்டங்களில் கலந்துகொள்வதை தடுத்து முஸ்லிம் சமுதாயத்தின் ஒற்றுமையை குழைத்த இவர் இன்று ஒற்றுமையை பற்றி எழுதியிருப்பது நகைப்பிற்குறியது

Nellai Rafique said...

Assalamu alaikum dear brother,
Why don't you publish my comments? I can understand that you will publish any comments if it is favour for you or against TNTJ especially PJ. Beware of allah and the day of judgement.

May the almighty allah give us hidayath.

நெல்லை ரபிக் said...

கேள்வி : தி மு க வை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் என்ன?

த மு மு க @ ம ம க : குஜராத் கலவரத்தின் போது அதை கண்டித்து ஒரு வார்த்தை கூட கலைஞர் சொன்னதில்லை.. மாறாக பி ஜே பி யுடன் கூட்டணியில் தொடர்ந்து கொண்டிருந்தார்

கேள்வி : கடந்த சட்ட மன்ற தேர்தலில் இது உங்களுக்கு தெரிய வில்லையா? அபோது குஜராத் கலவரம் நினைவில் இல்லையா?

த மு மு க @ ம ம க: ஹி ஹி ஹி