Thursday, April 30, 2009

பாசிசத்திற்கு எதிரான முஸ்லிமல்லாத கட்சிகளுக்கு வாக்களியுங்கள்

தேர்தல் 2009! ஏறத்தாழ எல்லா கட்சிகளின் கூட்டணிகளும் தங்கள் வேட்பு மனுவை தாக்கல் செய்துவிட்டன! தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், வி-சிறுத்தை மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகள் ஒரு அணியாகவும், அதிமுக மதிமுக பமக மற்றும் இரண்டு கம்யூணிஸ்ட்கள் மறு அணியாகவும் நின்று போட்டியிடுகின்றன. நடிகர் விஜயகாந்தின் தேமுதிகவும் களம் காண்கின்றது. போதாக்குறையாக மூன்றாம் அணியென்றும் நான்காவது அணியென்றும் சில லட்டர் பேட் கட்சிகள் அணிகளை உருவாக்கி வேட்பாளர்களையும் அறிவித்திருக்கின்றது.

குறிப்பாக தமுமுக - மமக என்ற பெயரில் தேர்தலை சந்திக்கின்றது.

திமுக கூட்டணியைப் பொறுத்த மட்டில் கடந்த சட்டசபைத் தேர்தலில் அறிவித்திருந்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகின்றது. குறிப்பாகச் சொல்வதென்றால் முஸ்லிம்களுக்கு என மூன்றரைச் சதவிகித இட ஒதுக்கீட்டை வழங்கியிருக்கின்றது. அதன் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சியானது முஸ்லிம்களுக்கு குறிப்பிடும்படியான ஒன்றும் செய்யாமலிருந்தாலும் தேசிய அளவில் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சிக்கு மாற்றமான ஒரு வலுவான அணியாக உள்ளது.

அதே வேளையில் அதிமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளில் ஒன்றான பாமக ஆகிய கட்சிகள் வெளிப்படையாக இல்லாமல் ரகசிய ஒப்பந்தத்தின் வாயிலாக தேர்தலுக்குப் பின்னர் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சிக்கு ஆதரவு அளிப்பது என்ற முடிவில் இருப்பதை யாரும் மறுக்க முடியாது. அதனால்தான் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சியும் கூட்டணி என்ற பெயரில் கார்த்திக் போன்றவர்களுடன் பம்மாத்து வேலை செய்துவருகின்றது.

அதிமுக மற்றும் பாமக ஆகிய கட்சிகள் பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சியோடு கூட்டணி சேராமல் இருப்பது எதற்காகவென்றால், கணிசமான தமிழ் முஸ்லிம்களுடைய ஓட்டுக்களையும் பெற்றுவிட்ட பின்னர் ஆட்சியில் கூட்டணி வைத்துக்கொள்ளலாம் என்ற ரகசிய ஒப்பந்தம் ஆகும்.

அதன் அடிப்படையில் மதவெறி பிடித்த கட்சி ஒரு மாநிலத்தை ஆட்சி செய்து முஸ்லிம்களையும் அது போன்று கிறிஸ்தவர்களையும் துவம்சம் செய்து நடுத்தெருவில் கொண்டுவந்து நிறுத்திய காட்சிகள் இன்றும் தொடரவே செய்கின்றது என்றிருக்கையில் இந்த பாரதீய ஜனதா எனும் மதவெறி பிடித்த கட்சிக்கு ஆதரவளித்து தேசிய அளவில் அரியணை ஏற்றினால் அதன் பின்னர் அவர்களுடைய கோர தாண்டவத்தைச் சொல்லவா வேண்டும்.

ஆக தேசிய அளவிலான பயங்கரவாதம் தடுத்து நிறுத்தப்படவும் முஸ்லிம் - கிறிஸ்தவர்கள் ஆகிய சிறுபான்மையினருக்கு ஓரளவு பாதுகாப்பான நிலையை ஏற்படுத்துவதற்கான மிகச்சரியான ஆயுதம் இந்த தேர்தலேயாகும். இந்த தேர்தல் மூலம் கிடைக்கும் வாய்ப்பை கை நழுவ விட்டுவிட்டு (ஒருவேளை) பாரதீய ஜனதாவின் ஆட்சியில் கோர்ட் கேஸ் என்று அலையலாம் என்பதை ஓரளவு உணர்வுள்ள ஒரு முட்டாள் கூட ஒப்புக்கொள்ளமாட்டான். முன்னர் ஆறு ஆண்டுகள் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சி நடைபெற்ற போது நாட்டில் பெரிய அளவிலான கலவரங்கள் நடக்காமல் இருந்தது கூட அவர்களுடைய கைங்கர்யமும் வெள்ளோட்டமுமே காரணமாக இருந்தது. எனினும் தற்போது பாஜாகாவின் செயல்பாடுகள் வெளிப்படையான பயங்கரவாதம் என்பதை குஜராத் மற்றும் ஒரிசா மாநிலங்களை உதாரணமாகக் கொண்டு புரிந்து கொள்ளலாம்.

எனவே மதவெறி பிடித்த பாரதீய ஜனதா எனும் கட்சிக்கு எதிராக தமிழகத்தில் இருக்கும் கூட்டணி என்பது திமுக தலைமையிலான கூட்டணியே ஆகும். நேற்றுவரை திமுகவை வரம்பின்றி புகழ்ந்து தள்ளிவிட்டு இன்று திமுக தங்களுக்கு இடம் தராத காரணத்தால் அந்த கூட்டணியை எதிர்த்துப் பிரச்சாரம் செய்யும் மமகாவின் கூற்றையும் இங்கு கவனிக்கவேண்டியுள்ளது.

தங்களுக்கு வாரியப்பதவி கிடைத்ததால் திமுகாவை ஆதரித்த இவர்கள் திமுகவினால் கழற்றிவிடப்பட்டபோது தங்களால் மிகக்கடுமையாக எதிர்க்கப்பட்ட அதிமுகவினரிடமும் இரண்டு தொகுதிகளுக்காக அலைந்தனர். அங்கும் சரியான சவுக்கடி கிடைத்ததும் தற்போது சமுதாயத்திற்கு பாடுபடும் முஸ்லிம் கட்சி என்று ஊர் ஊராக புலம்புகின்றனர். தாம் ஏற்கனவே கண்ணை மூடி ஆதரித்த திமுக வை (சீட் கிடைக்காத ஒரே காரணத்தால்) கன்னாபின்னாவெனத் திட்டித் தீர்க்கின்றனர். தாங்களும் சில தொகுதிகளில் போட்டியிடவும் செய்கின்றனர். இவர்கள் போட்டியிடாத தொகுதிகளில் இவர்கள் யாரை ஆதரிப்பார்கள்? பாப்பாத்தி என்று இவர்கள் கூறிய ஜெயலலிதாவையா? அல்லது இட ஒதுக்கீட்டுக்காக இவர்களால் நன்றியறிவிப்பு மாநாடு நடத்தப்பட்ட கருணாநிதியின் கூட்டணிக்கா என்பதை தெளிவாக குறிப்பிடவேண்டும்.

மேலும் தேசிய அளவில் ஆட்சியை நிர்ணயிக்கும் தமிழகத்தின் இரண்டு கூட்டணிகளில் தற்போது திமுக தலைமையிலான கூட்டணி ஒருபக்கமும் தேர்தலுக்குப்பின் பாரதீய ஜனதா கட்சிக்கு ஆதரவளிக்கக் காத்திருக்கும் அதிமுக - பாமக கூட்டணி மறு பக்கமும் வாக்கு சேகரிக்கும் போது முஸ்லிம் கட்சி என்று கூறியே முஸ்லிம்களின் பொது எதிரியான பாரதீய ஜனதா கட்சியின் வெற்றிக்காக ஓட்டுக்களை பிரிக்க நினைக்கும் மமகவின் நிலைபாட்டை நாம் சரியாக புரிந்து கொள்ளவேண்டும். இது மமக வுக்கும் நன்றாகத் தெரியும்.

குறிப்பாக இவர்கள் கூட்டணி வைத்துள்ள (புதிய தமிழகம்) கிருஷ்ணசாமிக்காக தென்காசி தொகுதியில் பாஜக வுடன் கூட்டணி வைத்துள்ள சரத்குமாரும் கார்த்திக்கும் பிரச்சாரம் செய்யப்போவதாக வரக்கூடிய செய்திகளும் கைமாறாக அவர்கள் போட்டியிடும் தொகுதியில் புதிய தமிழகம் போட்டியிடாது என்ற கிருஷ்ணசாமியின் அறிக்கையும் தௌ;ளத் தெளிவாக பாஜகவை ஆதரிக்கும் ஒரு நடவடிக்கை என்றால் மறுக்க இயலாது.

ஆனாலும் தங்களது மானத்தைக் காக்க சமுதாயத்தை அடகு வைத்தாவது காரியம் சாதிக்க வேண்டும் என நினைப்பவர்களுக்கு சமுதாயம் சரியான பாடத்தை புகட்டித்தான் ஆகவேண்டும். அது முஸ்லிம்களுக்கு வேட்டு வைக்கும் மமக போன்ற முஸ்லிம் கட்சியாக இருந்தாலும் சரியே. அதை விட பாசிசத்திற்கு எதிரான முஸ்லிமல்லாத கட்சிகளுக்கு அளிக்கும் வாக்குகள் லட்சம் மடங்குகள் மேலானவை என்பதை தமிழக முஸ்லிம்கள் உணர்ந்து வாக்களிக்கக் கடமைப்பட்டுள்ளார்கள்.

எம். எம். அவுலியா

14 comments:

Abutharr said...

Hmm...Ethanai naalaikuthaan ipadiye pesi pesi muslim katchigalai valaravidama panidunga..TMMK/MMK panrathellam sarinu sollala aana ethavathu oru muslim katchi per solra madiri irukaatangra yekkam thaan. Naalaiku TMMK/MMK illatha vere oru balamana muslim katchi vanthaalum ungamadiri aalaunga yaravaathu intha madiri eluthi valaravidaama paniduvenga...enna solrathu..namaku ethiri naamalethaan...ipadi pesi pesiye kaaltha ootunga..allah pothumanavan.

smbsulthan said...

இது முட்டாள் தனமான முடிவு. முகவை தமிழன் ஏன் இவ்வாரு போய் விட்டீர்கள் என்ரு தெரிய வில்லை. த மு மு க உன்கலுக்கு பிடிக்கவில்லை யென்றால் நீங்கள் ஒதுங்கிவிடுங்கள் அதற்காக ஒரு வளர்ந்து வரும் கட்சியெ லெட்டர் பேட் கட்சி யென்டு விமர்சனம் செய்ய வேண்டாம்.லெட்டர் பேட் கட்சியாக இருந்தால் விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பாமக நிறுவனர் ராமதாஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, மகேந்திரன், மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்த டி.கே.ரங்கராஜன் ஆகியோர் தமுமுக தலைமையகத்திற்கு நேரில் வந்து ஆதரவு கேட்க மாட்டார்கள். இது போன்ற தலைவர்கள் இதுவரைகும் எந்த அமைப்பிலாவது போய் உதவி கேட்டு இருக்கீற்களா? அல்லாவுக்கு பயந்து நடங்கள். இப்படிக்கு எந்த அமைப்பையும் சேராத SMB SULTHAN AL JUBAIL SAUDI ARABIA

Mujeeb said...

அறை வேக்காடு முகவை தமிழனெ,
உன்னுடுடைய சுயனல வாதத்தை இத்தோடு நிறுத்திகொள் ஆதாரமற்ற அடிபடை அறிவற்ற உனது கட்டுரைகளை இத்தோடு நிறுத்தி கொள்

Anonymous said...

Dei "M.M. Aulia", unnai madhiri durogigal irrukkum varai, muslim samudhayame vettri peradhu.

Anonymous said...

குறுகெட்ட மாமாகட்சியின் தேர்தல் நிலைப்பாட்டை பாறுங்கள்? அவர்களின் அதிகாரப்பூர்வ இனையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தி?...

நம்மிடம் நேரில் வந்து ஆதரவு கேட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்இ இந்தியக் கம்யூனிஸ்ட்இ பாமகஇ விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளை அவர்கள் போட்டியிடும் இடங்களில் மனிதநேய மக்கள் கட்சி ஆதரிக்கும்.

திமுகஇ அதிமுகஇ பாஜக நேரடியாகப் போட்டியிடும் தொகுதிகளிலும் இதேபோல் காங்கிரஸ்இ அதிமுகஇ பாஜக போட்டியிடும் தொகுதிகளிலும் அந்த கட்சிகளைத் தவிர வேறு கட்சிகளின் வேட்பாளர்களுக்கோ அல்லது நற்பண்பு கொண்ட வேட்பாளர்களுக்கோ வாக்களிக்கு மாறு ம.ம.க. கேட்டுக் கொள்கிறது. இதுதான் பாராளுமன்றத் தேர்தலில் நமது நிலைப் பாடாகும்.

இது நாள் வரை கலைஞருக்கு வலைபிடித்து வந்தவர்கள், அவருக்கு பாராட்டு விழா எடுத்தவர்கள், திடிரென்று அவரை எதிர்க்க காரணம் எண்ண? சமுதாய நலனா இல்லை சுய நலனா என்று நிங்களே நன்கு அறிவீர்கள்? இன்னும் இவர்களின் அரசியல் நிலைப்பாட்டில் எத்தனை குழப்பம் என்று பாருங்கள்? இதன் முலம் இவர்கள் யாருக்கு மறைமுக்மாக ஆதரவு தருகிறார்கள் என்று பாருங்கள்? நமது சமுதாய ஒட்டுக்கள் பிரிந்தால் இதனால் மலர்வது ரோஜா என்று இவர்களுக்கு புரியவில்லையா? அல்லது வாங்கிய காசுக்கு விசுவாசமா?

மக்களே சிந்தீப்பீர்கள்?

மாமா கட்சி அப்பாவி தொண்டர்களே, இவர்களின் இன்னோரு திருட்டுத்தனத்தை கடந்த வாரம் உணர்வு இதழ் வெளியிட்டு இருந்தது, சுட்டிக்காட்டப்பட்ட தவரை திருத்த முடியாத இவர்கள் தங்களுடைய வளைதளத்தில் பைலாவை இரவோடு இரவாக எடுத்துவிட்டார்கள்? இந்த முனாபிக்களின் பின்னால் இன்னும் போகலாமா? அல்லாஹ் கொடுத்துள்ள ஞானத்தை வைத்து கொஞ்சம் சிந்திப்பீர்.

இவர்களுக்கு மத்தியில் தவ்ஹீத் ஜமாத்தின் நிலைப்பாட்டை பாருங்கள் எவ்வளவு தெளிவாக சமுதாய நண்மையை மட்டுமே முன்னிலைப்படுத்தி எடுத்த முடிவுகள் யாவும் அறிவுப்பூர்வமாக உள்ளது. அல்ஹம்துலில்லாஹ்...

பாமகஇ விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் இவர்களிடம் ஆதரவு கோட்டுவிட்டார்கள் என்று ஆதரவு தருகிறார்களாம். அப்படியன்றால், பா.ஜ.கவும் இவர்களின் அலுவலகத்திற்க்கு வந்து ஆதரவு கோட்டால் கொடுத்துவிடுவார்களா? ஏன்னா ஞானம்??? முஸ்லீம்களின் எதிரியான விடுதலைப்புலிகளை ஆதரிப்பதில் முதலிடத்தில் இருப்பது பாமக மற்றும் ஒரு வேளை பாஜக ஆட்சி அமைக்க இவர்களின் ஆதரவு தேவைபட்டால் இவர்கள் ஆதரவு தரமாட்டார்கள் என்று இவர்கள் கூறுவார்களா? எல்லா பத்ரிக்கையும் பாமக, மதிமுக, அதிமுக தேர்தலுக்கு பிறகு பாஜக விடம் சாய்ந்துவிடும் என்று எழுதுகிறார்கள்? இதை இன்றுவரை இந்த கட்சிகள் மறுக்கவும் இல்லை? மாமா கட்சியின் தெலைநோக்கு அரசியல் பார்வையை பாருங்கள்? அடுத்து விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளே முஸ்லீம் செல்வந்தர்களின் நிலங்களை அபகரிப்பதில் பாஜகவுக்கு இனையாக உள்ளார்கள்? இவர்களை ஆதரித்து இன்னும் நம்முடைய சமுதாய செல்வத்தை இழக்கவா?

எல்லாம் வல்ல ரஹ்மான் நம் அனைவருக்கும் நோர் வழி காட்டுவானாக.
சமுதாய காவலன்

Anonymous said...

சமுதாய நலன் கருதி எழதியிருக்கும் முகவைத் தமிழனுக்கு...
மமக-வின் வளர்ச்சியை பிடிக்காத நிலையில் தான் அதனை ஒரு லட்டர்பேடு கட்சி என இங்கே நீங்கள் விமர்சனம் பதிந்துள்ளீர்கள் தங்களின் உண்மை முகம் எங்கே...
தாங்கள் நிறுவிய IDMK-வை எந்த தேர்தல் ஆணையம் அங்கீகாரம் செய்ததை தெளிவுபடுத்த வேண்டுகிறேன்.ஆனால் தங்கள் கட்சியை லட்டர்பேடு கட்சி என யாரும் விமர்சிக்கவில்லை...
தங்களின் தற்பொழதைய நிலை (DMK ஆதரிப்பது) எதன் அடிப்படையில் எப்பொழது எடுக்கப்பட்டது?...தங்களின் கட்சியை தேர்தல் ஆணையம் புறந்தள்ளிய பொழது தான்!?....

சகோ.சமுதாய காவலனே!...

தங்களின் தலைவர் எடுத்தமுடிவு சரி என வாதாடும் முன் சிறிது சிந்தித்து எழதியிருக்கலாம்.
அன்று ADMK, இன்று DMK
தங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லும் போது மட்டும் நாங்கள் அரசியலுக்கு அப்பாற் பட்டவர்கள்
என்பீர்கள் தேர்தல் சமயத்தில் அறிக்கைகள்யிடுவீர்கள் '' நாங்கள் ஏன் இவர்களை ஆதரிக்கின்றோம் தெரியுமா?...'' ஏன் இந்த பீலா? எதற்காக இந்த வெட்டி பந்தா?????
மமக - தங்களை அரசியல் கட்சி என அறிவித்து அதனை தேர்தல் ஆணையத்தில் முறைப்படி பதிந்து தேர்தலிலும் போட்டியிடுகிறது இதில் என்ன அதிசயம்...
தமுமுக-வை பற்றி எழதும் போது சுனாமி திருடர்கள் என்பீர்கள்!... பாக்கரை தன் கட்சியிலிருந்து கழட்டியிடும் போது அவர் சுனாமி கணக்கை சரிவர காட்டாத காரணத்தை கண்டுபிடித்து கேட்டதன் பின்பு கணக்கை சரி செய்தார்??? என்கிறது தங்களின் அறிக்கை அப்படியானால் யார் சுனாமி திருடர்? தங்களின் மேலான முடிவுக்கு...

சூத்திரதாரிக்கு எல்லாம் சூத்திரதாரி நம்மை படைத்து பரிபாழித்து வரும் வல்ல அல்லாஹ்விடம் மற்றவைகளை விட்டுவிட்டேன்....

Anonymous said...

இணைய தலதில் மட்டுமெ இயக்கம் நடத்தும் உனக்கெ இவ்வலவு திமிர்ன்னா எஙலுக்கு எவ்வல்வு இருக்கும்...கொய்யல

Anonymous said...

சகோ. சமுதாய காவலனே..?? தவ்கீத் ஜமாஅத் சமுதாய நலனை மட்டும் முன்னிறுத்தி முடிவு எடுத்துள்ளதாக கூறுகிறீர்கள்..

மத்தியில் காங்கிரஸ் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க முன் வர வில்லை என்பதால் அவர்களுக்கு ஆதரவு இல்லை என அறிவித்த நீங்கள் மயிலடுடுரையில் மட்டும் ஏன் மணி சங்கர் "அய்யருக்கு" கொடுக்கிறீர்கள்?

என்னே உங்கள் சமுதாய நலன்?

Anonymous said...

MMK wants more seats, if DMK /ADMK are not ready to give, they came out and do politics under society name. Till last month, MK is good and nice man, now MK is against muslims????? hello MMK,

Iqbal said...

உணர்வு உரிமை 05 குரல் 06, அக். 20-26,2000 இதழின் 12-ம் பக் கம் கூறியுள்ளதைப் பாருங்கள்.
தமுமுக எனும் சமுதாயப் பேரியக்கம் இன்று அவசியத்திலும் அவசியம் என்பதை உங்களை விட நான் அதிகமாகவே நம்புகிறேன். இந்தக் கழகம் சிதறுண்டுவிட்டால் மீண்டும் இந்தச் சமுதாயத்தை ஒன்று திரட்டுவதற்கு எத்தனையோ ஆண்டுகள் காத்திருக்க வேண்டும். இதன் காரணமாகத்தான் இக்கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப் பிலிருந்து நான் விலகுவதாக இல்லை.
தமுமுகவின் இன்றைய தலைமை நிர்வாகிகள் மீது நான் அதிருப்தியடைந்து ஒதுங்குவதாகவும் யாரும் நினைத்து விட வேண்டாம். இன்று இருக்கின்ற தலைமைக்குக் கட்டுப்பட்டு நடக்கும் உறுப்பினராக நான் இருப்பதே இதற்குச் சான்று.
மறுமையை முன்னிறுத்தி சமுதாயச் சீர்திருத் தத்துக்காக நானும் சேர்ந்து உருவாக்கிய தவ்ஹீது இயக்கத்தில் கூட, சுயநலனையும், பதவி மோகத்தையும், பணம் திரட்டும் குறிக் கோளையும் நான் காண்கிறேன். சம்பளம் இல்லாவிட்டால் அவர்கள் இப்பணியைச் செய்ய மாட்டார்கள் என்பதையும் உணர்கிறேன்.
ஆனால் உலகில் அடைய வேண்டிய உரிமைகளுக்காகத் துவக்கப்பட்ட தமுமுகவின் தலைமை நிர்வாகிகளிடம் அல்லாஹ்வின் மீது ஆணையாக இந்த நிலையை நான் காண வில்லை.
n தமுமுகவின் தலைமை நிர்வாகிகளில் எவருக்கும் இப்பொறுப்பைச் செய்வதற்காக மாத ஊதியம் இல்லை.
n கூட்டங்களில் பேசச் சென்றால் அதற்காகக் கட்டணம் கேட்பதில்லை.
n எந்த நேரத்தில் கதவைத் தட்டினாலும் சொந்த வேலையைப் புறந்தள்ளிவிட்டு பிரச்சினைகளைத் தீர்க்கும் தியாக மனப் பான்மை.
n எந்தப் பிரச்சனையை யாருக்கு முடித்துக் கொடுத்தாலும் அவர்களிடமிருந்து எந்தப் பிரதி பலனையும் எதிர்பாராத தன்மை.
n எத்தகைய மிரட்டலுக்கும் அடக்கு முறை களுக்கும் அஞ்சாத துணிவு.
n கலவரத்தீ மூண்ட நேரத்திலும் உயிரைப் பணயம் வைத்துச் சென்று களப்பணியாற்றும் பாங்கு.
n தங்களை முன்னிறுத்தாமல் கழகத்தை முன்னிறுத்தும் அடக்கம்.
n எந்தவொரு பிரச்சனை குறித்தும் கலந்து ஆலோசித்து அல்லாஹ்வின் திருப்தியையே குறிக்கோளாகக் கொண்டு முடிவெடுத்தல்.
n சிறை செல்லும் நிலை ஏற்பட்டால் தங்களை முதலில் நிறுத்திக் கொள்ளக் கூடிய பொறுப்புணர்வு.
n உணர்வுகளைத் து}ண்டிவிட்டு குளிர்காய நினைக்காமல் சமுதாயத்தால் தாங்கிக் கொள்ளக் கூடிய முடிவுகளை மேற்கொள்ளு தல்.
இப்படிச் சரியான தலைமைக்கு உரிய எல்லா பண்புகளையும் மாநில தலைமை நிர்வாகிகளிடம் நான் காண்கிறேன். தன்னலமற்ற இந்தத் தலைவர்களை வழங்கியதற்காக எல்லாம் வல்ல அல்லாஹ்வுக்கு நாம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டுள்ளோம்.
இதன் பிறகும் வேறு காரணங்களை யாரேனும் கற்பித்தால் மறுமை நாளில் அவர் களுக்கு எதிராக நான் அல்லாஹ்விடம் முறையி டுவேன். உணர்வு அக்.20-262000 பக்கம் 12.

Anonymous said...

ம‌.ம.க. மீது சேற்றை வாரி இறைக்கும் அவுலியாவே.. ஒன்றை மறந்து விட்டீர்கள் தேர்தல் கூட்டணி என்பது கொள்கையளவில் இணைவது இல்லை. தேர்தல் வெற்றிக்காக ஒன்றிணைவது தான். அதனால் குழப்பிக்கொள்ள வேண்டாம்.

இஸ்லாமியர்களின் தன்மானம் காக்கப்படவேண்டுமானால் ஒரு சீட் கலாச்சாரம் ஒழிக்கப்படவேண்டும். மேலும் தனிச்சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற வேண்டும். அப்போது தான் முஸ்லிம்களின் பிரச்சினையை யாருடைய குறுக்கீடுமின்றி நாடளுமன்றத்தில் விவாதிக்க முடியும். எந்தக் கட்சியின் சின்னத்திலாவது நின்று முஸ்லிம் கட்சிகள் வெற்றிப் பெற்றால் கொறடா உத்தரவு கிடைத்தால் தான் நாடாளுமன்றத்தில் பேசவே முடியும். நமது பிரச்சினையை பேச நாம் தீர்மானிக்க முடியாத அவலமான நிலையே ஏற்படும். இதையெல்லாம் களையப்பட வேண்டும் என்று தான் ம.ம.க. தனித்து நிற்பது முஸ்லிம்களின் தன்மானம் காக்கவே என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும். ம.ம.க. வேட்பாளர் ஜெயிக்கும் போது அவர் நாடளுமன்றத்தில் முஸ்லிம்களின் பிரச்சினையை விவாதிக்க எந்த அரசியல் கட்சிகளின் அனுமதியையும் கேட்கத் தேவையில்லை. நம் பிரச்சினையை பேசவும் விவாதிக்கவும் நாம் ஏன் அந்நிய கட்சிகளிடம் மன்றாட வேண்டும். இந்த கோணத்தில் யோசித்துப் பார்க்கவும்.

அடுத்து.. தவழும் குழந்தையாகிய ம.ம.க ஒருவேளை தோற்றாலும், நமது வாக்கு வங்கியின் அளவை தீர்மானிக்கவும் உதவும். நாளை நமது பலம் அரசியல் கட்சிகளுக்கு புரிய உதவும். ஆகவே.. நீங்களும் குழம்பி மற்றவர்களையும் குழப்பி சமுதாயத்தை இருண்ட சூழ்நிலைக்கு தள்ள வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன். இந்த தேர்தலில் முஸ்லிம்களின் நோக்கம், எந்த கொறடாவும் கட்டுப்படுத்தாத சுதந்திரமான நாடளுமன்ற உறுப்பினர் வேண்டும்; அடுத்து முஸ்லிம்களின் வாக்கு வங்கியின் அளவு தெரியவேண்டும். மற்றவற்றை புறம் தள்ளுவோம், வெற்றி பெற மையிடுவோம்.

basheer ahamed said...

இயக்கம்,கொள்கை,காழ்புனர்ச்சி, அனைத்தையும் விட்டொழிந்து ஒன்றினைந்த முஸ்லிம் சமுதாயமாய் வாக்களிபோம் மமக விற்கு... ஒரு வேலை தோற்றாலும் அந்த தொகுதியின் பலம் வாய்ந்த அரசியல் கட்சியின் தோல்விக்கு நாமே காரணமாக இருப்போம், இன்ஷா அல்லாஹ்.. நாயாக நக்கி வாழ்வதைவிட சிங்கமாக கர்ஜித்து செத்துவிட்டு போவதே மேல் ....

நான் எந்த ஒரு இயக்கத்திலும் இல்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்..

basheer ahamed said...

இயக்கம்,கொள்கை,காழ்புனர்ச்சி, அனைத்தையும் விட்டொழிந்து ஒன்றினைந்த முஸ்லிம் சமுதாயமாய் வாக்களிபோம் மமக விற்கு... ஒரு வேலை தோற்றாலும் அந்த தொகுதியின் பலம் வாய்ந்த அரசியல் கட்சியின் தோல்விக்கு நாமே காரணமாக இருப்போம், இன்ஷா அல்லாஹ்.. நாயாக நக்கி வாழ்வதைவிட சிங்கமாக கர்ஜித்து செத்துவிட்டு போவதே மேல் ....

நான் எந்த ஒரு இயக்கத்திலும் இல்லை என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்..

தமிழ் முஸ்லிம் முன்னேற்றக் கழகம்-குவைத் said...

அஸ்ஸலாமு அலைக்கும்
துரோகிகளிக் முகமூடி கிழித்த முகவைத்தமிழன் இன்று முரண்பாடுகளின் மொத்த உறுவமாகிவிட்டார். இன்ஷா அல்லாஹ் மமகவின் வெற்றி கலைஞருடன் சேர்த்து இவரையும் திருத்தும்.