Showing posts with label முஸ்லிம் லீக். Show all posts
Showing posts with label முஸ்லிம் லீக். Show all posts

Thursday, October 15, 2009

லால்பேட்டை நன்நகருக்கு தாய்ச் சபை தலைவர்கள் வருகை!!

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் வரலாற்றில் தனி இடம் பெற்றிருக்கும் லால்பேட்டைக்கு தாய்ச்சபை முஸ்லிம் லீக் தலைவர்கள் வருகைதரும் பொழுதெல்லாம் அவர்களின் வருகையில் கல்வித்துறை கட்டாயம் இடம் பெற்றிருந்தது என்பது உலகறிந்த உண்மை!

ஆம்! தமிழகத்தின் தலை சிறந்த கல்லுரியாக விளங்கும் ஜாமிஆ மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரி விழாவில் துவங்கும் முஸ்லிம் லீக் தலைவர்களின் பங்கேற்ப்பு மாலையில் கொடியேற்றத்தைத் தொடர்ந்து பொதுக் கூட்டத்தில் நிறைவடையும்.இந்த இனிய வறலாறு இன்றும் நிகழப் போகிறது.

ஆம்! இன்ஷா அல்லாஹ் அக்டோபர் 18- ம் தேதி காலை லால்பேட்டை முஸ்லிம் பட்டதாரிகள் கல்விச் சங்கம் தோற்றுவித்த வறலாற்றுச் சிறப்பு மிக்க,(இன்ஷா அல்லாஹ் விரைவில் கல்லூரியாக மிளிரப் போகின்ற) இமாம் கஸ்ஸாலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் முப்பெரும் விழாவிலும்,மாலையில் தாய்ச் சபை முஸ்லிம் லீகின் மாபெரும் பொதுக் கூட்டம் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளிலும் பங்கேற்க்க இருக்கிறார்கள்.

பள்ளி நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக பங்கேற்க்கும் தாய்ச் சபை முஸ்லிம் லீகின் பாராளுமன்ற உருப்பினரும், அனைத்துலக காயிதே மில்லத் பேரவையின் அமைப்பாளர்,
அல்லாஹ்விற்க்கு பிடித்தமான பெயரை வைத்துக் கொண்டதாலோ என்னவோ,எல்லோருக்கும் பிடித்துப் போனவர்.
வேட்பாளர் விமர்ச்சனத்தின் போது முஸ்லிம் லீக் தலைவர்கள் காட்டிச் சென்ற லட்சியப் பாதையில்தான் பயணிப்பேன் என்று சொல்லி விமர்ச்சனத்திற்க்கு வேட்டு வைத்தவர்.
தமிழக முஸ்லிம்களின் தேசிய பிரதிநிதி,இவர் பங்கெடுக்கும் எந்த நிகழ்விலும் முஸ்லிம் லீகை பதிய வைக்காமல் இருந்ததில்லை.மொத்தத்தில் முஸ்லிம் லீகின் சொத்தாகத் திகழக் கூடியவர் அத்தகைய பெருமைக் குரியவர் கண்ணியத்தின் வழி வந்த நம்மவர் தாஜுல் மில்லத் அல்ஹாஜ் எம்.அப்துல் ரஹ்மான்.M.A.M.P.

மாணவர் அணிக்கு மகுடமாய் மிளிர்ந்த மாண்பாளர்,தான் கால் பதித்த அயல் தேசங்களிலெல்லாம் தாய்ச் சபையை தடம் பதிக்கச் செய்தவர்,சிராஜுல் மில்லத்தோடு வலம் வந்தவர் முனீருல் மில்லத்தோடு களம் காணுபவர்.தமிழக முஸ்லிம் லீக் வரலாற்றில் தனி முத்திரையாக மாநில பொதுச் செயளாலர் பொறுப்பை தன் தூய தொண்டால் தொட்டவர்.இவரே இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தமிழ் நாடு மாநில பொதுச் செயளாலர் ஹாஜி K.A.M. முஹம்மது அபூபக்கர் B.Sc., .

சமுதாயம் எதிர் நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் ,அவைகளை சில வார்த்தைகளில் சிறப்பாக முடிக்கும் ஆற்றல் பெற்றவர்,காரியம் பெரிதா?வீரியம் பெரிதா? என்ற கேள்வியை முன் வைத்து,இன்றைய இளைஞர்கள் வீரியத்தின் நிலையை வெகுவாக விரும்பினாலும் பல அமைப்புக்களுக்குச் சென்றாலும்முஸ்லிம் லீக்கிற்க்கு காரியம் தான் பெரிது என்று கம்பீரமாக சொல்லக்கூடிய முஸ்லிம் லீகின் துடிப்பு மிக்க சட்ட மன்ற உறுப்பினர்,மாநில அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர் ஆம்பூர் H. அப்துல் பாஸித் M.L.A.

அரசியலில் நீ தனித்தவன் அல்ல ,தனித்தன்மை வாய்ந்தவன் என்று முழங்கிய சிராஜுல் மில்லத்தின் சொந்தங்கள், திருப்பு முனைக்கு புதிய வடிவம் கொடுத்துக் கொண்டிருக்கும் இந்திய முஸ்லிம்களின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழ்வது இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தான் என்று முழங்கி வரும் முனீருல் மில்லத்தின் தொண்டர்கள்.

ஆக இம்மூவரும் தாய்ச் சபை முஸ்லிம் லீகின் தலமை நிர்வாகிகள் இவர்கள் கண்ணியத்தின் பிறப்பிடத்திலிருந்து வந்தவர்கள்.இவர்களின் உரையை லால்பேட்டை மட்டும் தான் கேட்க போகிறது என்ற எண்ணத்தில் இருந்த எங்களுக்கு ஒரு இனிப்பான செய்தி.

ஆம்! மாவட்டம் முழுவதிலுமிருந்தும் மட்டுமின்றி அருகில் உள்ள விழுப்புரம்,நாகை,திருவாரூர்,பாண்டிச்சேரி உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும் திரளானவர்கள் பங்கேற்க்கத் தயாராகிக் கொண்டிருக்கிரார்கள் என்ற இனிய செய்தி கடல் கடந்து வாழும் எங்களின் கல்புக்கு மகிழ்ச்சியளிக்கிறது அல்ஹம்துலில்லாஹ்!

இனிய இதயங்களே! முஸ்லிம் லீகைச் சார்ந்த பெருமக்கள் எதைத்தான் சொல்லுகிறார்கள்?எந்தப் பாதையில் செல்லுகிறார்கள்,அந்தப் பாதை வெல்லும் பாதைதானா? என்பதை முடிவெடுக்க தாங்கள் அனைவரும் பங்கெடுக்க வேண்டுமென உரிமையோடும்,உள்ளன்போடும் கேட்டுக் கொள்கிறோம்.

மாறா அன்புடன்,

ஐக்கிய அரபு அமீரக காயிதே மில்லத் பேரவை லால்பேட்டை நண்பர்கள்.

Sunday, October 11, 2009

லால்பேட்டை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம்


Monday, October 05, 2009

சிராஜுல் மில்லத் 84- வது பிறந்த நாள் சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழா


இந்திய ய+னியன் முஸ் லிம் லீகின் மறைந்த மாபெ ரும் தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாகிப் 84-வது பிறந்த நாள் விழா அக்..4-ம் தேதி மாலை 6.30 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது.

தமிழ்நாடு மாநில இந் திய ய+னியன் முஸ்லிம் லீக் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சிக்கு தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையேற் றார்.

தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஆலிம்கள் அணி அமைப்பாளர் என். ஹாமித் பக்ரி இறைமறை ஓதினார். மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் அனைவரையும் வரவேற்று பேசினார். மாநிலச் செயலாளர் கமுதி பஷீர் விழா அறிமுக வுரை நிகழ்த் தினார்.

உலமாக்கள் பணியா ளர் நலவாரியம் அமைத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி தெரிவித்து மாநிலப் பொருளாளர் வடக்கு கோட்டையார் வ.மு. செய்யது அஹமது, உல மாக்களின் சார்பில் மவ் லானா குடியாத்தம் அய்ய+ப் ரஹ்மானி ஹஜரத் ஆகியோர் உரையாற்றினர்.

சமூக நல்லிணக்க விருது பெறுவோருக்கான பாராட்டு குறிப்புரைகளை அரவாக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், வாணியம்பாடி சட்டமன்ற உறுப்பினர் ஹெச். அப்துல் பாசித், வேலூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான் ஆகியோர் வாசித்து உரையாற் றினர்.

இந்திய சமூக நீதி இயக்கத் தலைவர் பேராயர் எஸ்றா. சற்குணம் வாழ்த்துரை வழங்கினார்.

நூல்கள், குறுந்தகடு வெளியீடு
மறைந்த இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் பெருந்தலைவர் ஜி.எம். பனாத் வாலா அவர்கள் நாடாளுமன்றத்தில் ஆற் றிய உரைகளின் தமிழாக் கமான முஸ்லிம் தனியார் சட்டத்தை முஸ்லிம் லீக் வழக்கறிஞர் அணியின் அமைப்பாளர் ஜீவகிரிதரன் மொழியாக் கம் செய்துள்ளார் அந் நூலும், பேரறிஞர் அண் ணாவின் பார்வையில் இஸ்லாம், முஸ்லிம், முஸ் லிம் லீக் என்ற தலைப்பில் மணிச்சுடர் செய்தியாளர் இரா.ச.மு. ஹமீது தொகுத்த நூலும், அய்யம் பேட்டை ஆலிமான் ஆர்.எம். ஜியாவுதீன் தொகுத்த சிரா ஜுல் மில்லத் பாமாலை என்ற நூலும், பாபரி மஸ்ஜித் தகர்ப்பிற்குப் பின் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாகிப் ஆற்றிய சமூக நல்லிணக்கம் தழைத் தோங்க வேண்டும் என்ற குறுந்த கடும் வெளியிடப் பட்டன. அவைகளை தமிழக நிதியமைச்சர் பேரா சிரியர் க. அன்பழகன் வெளியிட்டார். முதல் பிரதியை இ.அஹமது பெற்றுக் கொண்டார்.

இரண்டாம் பிரதியை மாநிலப் பொருளாளர் வடக்கு கோட்டையார் வி.எம்.செய்யது அஹமது, மூன்றாம் பிரதியை காயல் பட்டினம் நகராட்சி தலைவர் வாவு. சா. செய்யது அப்துர் ரஹ்மான் ஆகி யோரும் பெற்றுக் கொண் டனர்.

உலமாக்கள் நல வாரியம் அமைத்ததற்கு நன்றி
உலமாக்கள் பணியா ளர் நல வாரியம் அமைத்த முதல்வர் கலைஞர் அவர் களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் அதன் தேசியத் தலைவர் இ.அஹமது, தேசிய பொதுச் செயலாளர் பேரா சிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர் முதல்வர் கலைஞருக்கு நினைவுப் பரிசை பேராசிரி யர் அன்பழகனிடம் அளித் தனர். அதனைத் தொடர்ந்து சமூக நல்லிணக்க விருது கள் அருட்தந்தை சேவியர் அருள்ராஜ், மானுட வசந்தம் டாக்டர் கே.வி. எஸ். ஹபீப் முஹம்மது, இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் ஆகியோருக்கு வழங்கப்பட்டன.

இந்த விருதுகளை மாண்புமிகு நிதியமைச்சர் பேராசிரியர் க. அன்பழகன் வழங்கினார். பாராட்டுக் குறிப்புரை பத்திரங்களை மாண்புமிகு மத்திய அமைச்சர் இ.அஹமது வழங்கினார். பொன்னா டைகளை பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் அணிவித்தார் அமைச்சர் க.அன்பழகன் விழாப் பேருரை நிகழ்த்தினார்.

விருது பெற்ற அருட் தந்தை சேவியர் அருள்ராஜ், மானுட வசந்தம் டாக்டர் கே.வி. எஸ். ஹபீப் முஹம் மது, இலக்கியச் செல்வர் குமரி அனந்தன் ஆகியோர் ஏற்புரை நிகழ்த்தினர்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசிய தலைவரும் மத்திய அமைச் சருமான இ.அஹமது வாழ்த்துரை வழங்கினார்.. தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவருமான பேரா சிரியர் கே.எம்.காதர் மொகி தீன் நிறைவுரை நிகழ்த்தி னார்.

மாநில மகளிர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். ஃபாத்திமா முஸப்பர் நன்றி கூறினார். மாநில மார்க் கத்துறை செயலாளர் தளபதி ஷபீகுர் ரஹ்மான் துஆ ஓதினார். மாநில கொள்கை பரப்புச் செய லாளர் காயல் மகப+ப் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

முன்னதாக மாலை 4.30 மணிக்கு தாய்ச்சபை பாடகர் முகவை சீனி முஹம்மது குழுவினரின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி நடைபெற்றது.

முஸ்லிம்களின் தேவைகளை கேட்காமலேயே செய்பவர் முதல்வர் கருணாநிதி சமூக நல்லிணக்க விருதுகளை வழங்கி அன்பழகன் பேச்சு


சென்னை, அக்.5-
முஸ்லிம்களின் தேவைகளை கேட்காமலேயே நிறைவேற்றுபவர் முதல்-அமைச்சர் கருணாநிதி என்று சமூக நல்லிணக்க விருதுகள் வழங்கும் விழாவில் அமைச்சர் அன்பழகன் கூறினார்.
சமூக நல்லிணக்க விருது
இந்திய ïனியன் முஸ்லிம் லீக் சார்பில் அப்துல் சமது பிறந்த நாளையொட்டி சமூக நல்லிணக்க விருதுகள் வழங்கும் விழா நேற்று சென்னையில் நடந்தது. விழாவுக்கு மாநில தலைவர் கே.எம்.காதர்மொய்தீன் தலைமை தாங்கினார்.
நிதி அமைச்சர் அன்பழகன், சமூக நல்லிணக்க விருதுகளை பனை தொழிலாளர் நல வாரிய தலைவர் குமரிஅனந்தன், இஸ்லாமிய நிறுவன அறக்கட்டளை துணைத் தலைவர் டாக்டர் ஹபீப் முகம்மது, சிறுபான்மையோர் பொருளாதார மேம்பாட்டு கழக தலைவர் சேவியர் அருள்ராஜ் ஆகியோருக்கு வழங்கி பேசினார்.
உடல்நிலை சரியில்லை
அமைச்சர் அன்பழகனுக்கு வாழ்த்தி பேசிய இந்திய சமூக நீதி இயக்க தலைவர் எஸ்றா.சற்குணம் குல்லா ஒன்றை பரிசாக வழங்க, அதனை காதர்மொய்தீன் அவருக்கு அணிவித்தார். அமைச்சர் அன்பழகன் அந்த குல்லாவை அணிந்தபடியே பேசினார். அவர் பேசியதாவது:-
இங்கு விருதுகளை வழங்கி பேச வேண்டிய முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு எதிர்பாராத வகையில் 2 நாட்களாக காய்ச்சல் காரணமாக வரமுடியாத நிலையில் அவர் வீட்டிலேயே சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். கழகம் சார்பில் நீயாவது கலந்து கொண்டு வாழ்த்துக்களை தெரிவிக்க வேண்டும் என்று கூறியதன் பேரில் அவர் சார்பில் நான் கலந்து கொண்டுள்ளேன்.
அனைவரும் திராவிடர்கள்
திராவிட இயக்கத்திற்கு இஸ்லாமிய சமூகத்தோடு நீண்ட தொடர்பு உண்டு. கருத்து ஒற்றுப்போனால் மன வேறுபாடு வராது. வன்முறை தவிர்க்கப்படுமேயானால் நியாயங்கள் தானாக நிலைக்கும். அந்த வகையில் நான் இந்த விழாவில் பங்கு கொண்டிருக்கிறேன். சிறுபான்மை, பெரும்பான்மை எல்லாம் எண்ணிக்கைக்காகத் தான். ஆனால் நாம் அனைவரும் சகோதரத்துவத்தால் ஒன்றாக இருக்கிறோம். மதம் வெவ்வேறாக இருந்தாலும் மொழி நமக்கு தமிழ் ஒன்று தான்.
நான் இந்த குல்லாவை அணிந்திருப்பதால் முழுக்க முஸ்லிமாகிவிடவில்லை. நண்பர்களை மதிப்பதற்கு தான் இந்த அடையாளம். நாம் அத்தனை பேரும் திராவிடர்கள். உலகிலேயே தென்னகத்து மக்கள் தான் மூத்த குடிமக்கள். தொன்மையான இனம் திராவிடம், தொன்மையான மொழி தமிழ். இஸ்லாமுக்கும், கிறிஸ்துவத்துக்கும் அன்பும், சமத்துவமும் அடிப்படையானவை. இதற்கு அடிப்படை காரணம் திராவிட அடிப்படை. அந்த அடிப்படையில் நாம் எல்லோரும் ஓர் இனம்.
பிற்பட்டோர் பட்டியலில்
இஸ்லாமியர்களுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி கேட்காமலேயே கொடுக்கக் கூடியவர். இந்த சமுதாயத்திற்காக தி.மு.க. ஆட்சி செய்த சாதனைகளை, உதவிகளை அவர் பட்டியலிட்டுக் கொடுத்திருக்கிறார். மிலாது நபிக்கு முதன்முதலாக விடுமுறை அளித்தது தி.மு.க. ஆட்சி தான். தெக்கனி, லெப்பை முஸ்லிம்களை பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்த்தது, அரசு கல்லூரிக்கு காயிதே மில்லத் பெயர் சூட்டியது, சிறுபான்மையினர் நல ஆணையம் அமைத்தது, ஓய்வூதியம் பெறும் உலாமாக்கள் எண்ணிக்கையை 2400 ஆக உயர்த்தியது தி.மு.க. ஆட்சி தான்.
98-ல் மதுரை வக்பு வாரிய கல்வி நிறுவனங்களை பராமரிக்க ரூ.5.95 லட்சம் வழங்கப்பட்டது. 99-ல் ஹஜ் புனித யாத்திரைக்கு விண்ணப்பித்த அனைவருக்கும் அனுமதி வழங்க ஆணை பிறப்பிக்கப்பட்டது. தமிழ்நாடு சிறுபான்மை பொருளாதார மேம்பாட்டு கழகம் உருவாக்கியது, முஜாபர்களுக்கும் ஓய்வூதியம் நீட்டிப்பு, உருது அகாடமி தொடங்கியதும் தி.மு.க. ஆட்சியில் தான்.
கேட்காமலேயே செய்வார்
ரூ.58.69 லட்சம் செலவில் காயிதே மில்லத்துக்கு மணி மண்டபம் கட்டப்பட்டது. இஸ்லாமிய ஆய்வு மையம் ஏற்படுத்தியது, முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கியது, தனி இயக்குனரகம் அமைத்தது, உலாமாக்கள் வாரியம் ஏற்படுத்தியது போன்ற பணிகளை தி.மு.க. ஆட்சி தான் செய்தது. எனவே முஸ்லிம்களுக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி கேட்காமலேயே செய்யக் கூடியவர்.
இவ்வாறு அமைச்சர் அன்பழகன் பேசினார்.
மின்கட்டண சலுகை
முன்னதாக மசூதிகளுக்கும், மதரஸாக்களுக்கும் மின் கட்டணம் வணிக ரீதியில் அல்லாமல், வீட்டு கட்டண ரீதியில் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.
விழாவில் முஸ்லிம் லீக்கின் தேசிய தலைவரும் மத்திய மந்திரியுமான அகமது வாழ்த்தி பேசினார். மாநில பொதுச் செயலாளர் அபூபக்கர் வரவேற்றார். அப்துல்ரஹ்மான் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் கலிலூர்ரஹ்மான், அப்துல்பாஷித், அய்ïப் ரஹ்மானி, செய்யது அகமது, மாவட்ட தலைவர் ஜெய்னுலாபுதீன், இளைஞர் அணி அமைப்பாளர் நிஜாமுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். மகளிர் அணி அமைப்பாளர் பாத்திமா முஸப்பர் நன்றி கூறினார்.

Wednesday, September 30, 2009

அக்டோபர் 4 சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழா பாரீர்! தாய்ச்சபை அழைக்கிறது அணி திரண்டு வாரீர்!

அப்துஸ் ஸமத்
தேவையற்றவனின் அடிமை என்ற பொருள் பொதிந்த பெயருக்குச் சொந்தக்காரர்.

சிராஜுல் மில்லத்
சமுதாயம் தன் கிரீடமாக இவரை அலங்கரித்து கொண்டபோது ஹசமுதாயத்தின் ஒளிவிளக்கு என்ற மனம் நிறைந்த பட்டத்தை சூட்டி மகிழ்ந்தது. சந்தனத் தமிழ் மணக்கும் சிந்தனைச் செம்மல்

தமிழ் கொஞ்சி விளையாடிய அந்த நாவுக்கரசரை அறிவுலகம் இப்படி அழைத்த போது கருத்துச் சுரங்கமாகவும், காலப் பெட்டகமாகவும் பவனி வந்தவர். அவர் உரை கேட்க அறிஞர்களும் ஆசைப்பட்டனர்@ அவருடன் உறவாட அரசியல் மேதைகளும் ஆர்வப் பட்டனர்.

பொது மேடைகளில் அவர் சொற்பொழிவை துவக்கியதில்லை, ஹவார்த்தைகளைத் தொடங்கு வார். அதில் வரலாறு வலம் வரும்@ கருத்துக்கள் கண்ணியம் பெறும்.

சாதனைகளை அவர் சொல்லிக் காட்டும் போது ஹமன்னிக்கத்தக்க பெருமிதம் கொள்வார்@. மகிழ்வை அவர் பரிமாறும் போது ஹபுளகாங்கிதமடைவார்.

அவரது உச்சரிப்புகள் பெரும்பாலும் உபதேசங்கள் தான்.
வல்ல இறைவனை வணங்கி வாழ்வோம்
இல்லாதோர்க்கு வழங்கி வாழ்வோம்@
எல்லாருடனும் இணங்கி வாழ்வோம்!@
மதஉணர்வையும், மனிதநேயத்தையும், சமூக நல்லிணக்கத்தையும் ஒருங்கிணைத்துச் சொன்ன அற்புதச் சொற்றொடர் அது.
ஹவன்முறைக்கு துணியவும் கூடாது@ வன்முறைக்கு பணியவும் கூடாது என அவர் உதிர்த்தது வார்த்தை ஜாலமல்ல - இந்த தேசத்தின் நிலைப்பாடு! தமிழக முஸ்லிம்களை அவர் அடையாளப்படுத்திய போது, இஸ்லாம் எங்கள் வழி@ இன்பத்தமிழ் எங்கள் மொழி என்றார்.

இரண்டே சொல்லில் எல்லாவற்றையும் அடக்கி விட்ட இச் சொற்றொடர்தான் அனைத்துலக இஸ்லாமியத் தமிழ் இலக்கிய மாநாடுகளை அலங்கரித் தது. தி.மு.க.வுடன் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அரசியல் உறவுக்கு அடித்தளம் அமைத்து கண்ணியத் திற்குரிய காயிதெமில்லத் அவர்களை அறிஞர் அண்ணாவுக்கு அறிமுகம் செய்தது என்பது சிராஜுல் மில்லத் அவர்களின் பழைய வரலாறு.

ஹநேருவின் மகளே வருக@ நிலையான ஆட்சி தருக! என்ற முழக்கத்தோடு இந்திரா அம்மையாரையும், டாக்டர் கலைஞரையும் கரம் கோர்க்க வைத்து அரசியல் அரங்கில் புதிய அத்தியாத்தை உருவாக்கி காட்டியது இவரது சாதனையின் மகுடம்.

அந்த சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிபின் 84-வது பிறந்த நாள்தான் அக்டோபர் 4.

தாய்ச்சபை இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் விழா எடுத்து மகிழ்கிறது. முத்தமிழ் அறிஞர் முதல்வர் கலைஞர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்பிக்க உள்ளார்.

அவர் கரத்தால் சமூக நல்லிணக்க விருதுகளை இலக்கியச் செல்வர் குமரி அனந்தன், மானுட வசந்தம் டாக்டர் கே.வி.எஸ். ஹபீப் முஹம்மது, அருட்தந்தை பேராயர் சேவியர் அருள்ராஜ் ஆகியோர் பெறு கின்றனர்.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் மத்திய அமைச்சர் இ.அஹமது, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மத்திய அமைச்சர் ஜி.கே. வாசன், பேராயர் எஸ்றா சற்குணம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கு கின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துர் ரஹ்மான், சட்டமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ. கலீலுர் ரஹ்மான், எச். அப்துல் பாஸித், பாராட்டுக் குறிப்புரைகளை படித்து மகிழ உள்ளனர்.

உலமாக்கள் பணியாளர் நல வாரியம் அமைத்த தமிழ்நாடு அரசுக்கு இந்த விழாவில் நன்றி அறிவிப்பு செய்யப்பட உள்ளது.

அருள்மறை குர்ஆனுக்கு தமிழில் முதன் முதலில் விளக்கவுரை எழுதிய அல்லாமா ஆ.கா.அப்துல் ஹமீது பாகவி அவர்கள் புதல்வரின் பிறந்த நாள் விழாவில் சங்கைக்குரிய உலமா பெருமக்கள் இந்த நன்றியை செலுத்துகின்றனர். எவ்வளவு பொருத்தம்!

தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை தலைவர் மௌலானா எம்.இ.எம். அப்துர் ரஹ்மான் ஹஸரத், மௌலானா அய்ய+ப் ரஹ்மானி ஹஸரத், முஸ்லிம் லீக் சார்பில் மாநில பொருளாளர் வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது ஆகியோர் முதல்வர் கலைஞருக்கு நன்றி கூறுகின்றனர்.

சமுதாய நலனே என் மூச்சு, தாய்ச்சபை வளமே என் பேச்சு என தன்னை அர்ப்பணித்துக்கொண்ட சமுதாயத் தலைவர் முனீருல் மில்லத் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையேற்கிறார்.

முஸ்லிம் லீகை வசந்த காலமாக்கும் பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர் வரவேற்றுப் பேசுகிறார். தாய்ச்சபையின் மகளிர் அணி அமைப்பாளர் ஏ.எஸ். ஃபாத்திமா முஸப்பர் நன்றி கூறுகிறார்.

அக்.4 தலைநகரில் சமுதாயம் சங்கமிக்கட்டும்!
தலைநிமிர்ந்து வாழ தக்பீர் முழக்கம் ஓங்கி ஒலிக்கட்டும்!
இதயங்களை இணைப்போம்@ சமூக நல்லிணக்கம்
சமைப்போம்@ அணி திரண்டு வாரீர்!

- காயல் மகப+ப்

Tuesday, September 29, 2009

அக். 4-ல் சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழா மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு


அக்.4 ஞாயிற்றுக் கிழமை மாலை 5 மணிக்கு சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் சாஹிப் 84-வது பிறந்த தின சமூக நல்லிணக்க விருது வழங் கும் விழாவிற்கு சென்னை மற்றும் செனைன புறநகர் மாவட்டங்களிலிருந்து பெருந்திரளாக பங்கேற்கச் செய்வது என்று மாவட்ட நிர்வாகிகளின் ஆலோ சனை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

வடசென்னை, தென் சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் முஸ்லிம் லீக் நிர்வாகிகள், அணி களின் அமைப்பாளர்கள் மற்றும் முக்கிய செயல் வீரர்கள் பங்கேற்ற ஆலோ சனைக் கூட்டம் மாநிலத் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸிலில் நேற்று மாலை நடைபெற்றது.

வடசென்னை மாவட் டத் தலைவர் எம். ஜெய் னுல் ஆபிதீன் தலைமை யில் நடைபெற்ற இக் கூட் டத்திற்கு தென் சென்னை மாவட்டத் தலைவர் கே.பி. இஸ்மத் பாஷா, காஞ்சி புரம் மாவட்டத் தலைவர் கே.எம். அப்துல்லா பாஷா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

வடசென்னை மாவட்ட செயலாளர் ஏ.எச். இஸ்மா யில் இறைமறை ஓதி கூட் டத்தை துவக்கி வைத்தார். தென்சென்னை மாவட்டச் செயலாளர் ப+வை முஸ் தபா அனைவரையும் வர வேற்றுப் பேசினார். இயக்கப் பாடகர் இ.வி.கே. முத்து முஹம்மது இன் னிசை வழங்கினார்.

மாநில நிர்வாகிகள் பங்கேற்பு
தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், மாநில பொதுச் செயலா ளர் கே.ஏ.எம். முஹம்மது அப+பக்கர், பொருளாளர் வடக்குகோட்டையார் வ.மு. செய்யது அஹமது, மாநில செயலாளர் கமுதி பஷீர், இளைஞர் அணி அமைப்பாளர் கே.எம். நிஜாமுதீன், மகளிர் அணி அமைப்பாளர் ஃபாத்திமா முஸப்பர், மவ்லானா அப்துல் காதர் மிஸ்பாஹி, சலாஹ{தீன் அய+ப்கான், அப்துல் ரஹீம் ஆகியோர் உரையாற்றினர். மாநில கொள்கை பரப்புச் செயலாளர் காயல் மஹப+ப், மாநில காயிதெ மில்லத் பேரவை அமைப் பாளர் திருப்ப+ர் சத்தார், மாநில கல்வி மேம்பாட்டு அணி அமைப்பாளர் முஸப்பர் அஹமது, காஞ்சி புரம் மாவட்டச் செயலா ளர் கே.எஸ். தாவ+து, வடசென்னை மாவட்டப் பொருளாளர் கேப்டன் பஷீர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அக்டோபர் 4-ம் தேதி சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறும் சிராஜுல் மில்லத் அப்துஸ் ஸமத் சாஹிப் பிறந்த நாள் சமூக நல்லிணக்க விருது வழங்கும் விழாவிற்கு சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களிலிருந்து பெருந்திரளான சமுதாய மக்களை திரட்டுவது என்று முடிவு செய்யப்பட் டது. சென்னை மாநகரின் ஒவ்வொரு பகுதியிலிருந் தும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் உறுப்பி னர்கள் மற்றும் ஆதரவா ளர்களை அந்தந்த பகுதிக ளின் பொறுப்பாளர்கள் அழைத்து வருவது என்று முடிவு செய்யப்பட்டது.

ஜும்ஆக்களில் அறிவிப்பு செய்ய முடிவு
இந்த விழாவில் உலமாக்கள் பணியாளர் நல வாரியம் அமைத்த தமிழ்நாடு அரசுக்கு நன்றி அறிவிக்கவும், ஜமாஅத்துல் உலமா சபையின் நிர்வாகி கள் முதல்வர் கலைஞருக்கு நினைவுப் பரிசும் வழங்க இருப்பதால் ஒவ்வொரு மஹல்லாக்களிலும் உள்ள ஜமாஅத் நிர்வாகிகள் சங்கைக்குரிய இமாம்கள், ஆலிம் பெருமக்கள் அனை வரையும் இவ் விழா வில் பங்கேற்கச் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

இதற்காக வரக்கூடிய வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின்போது, ஒவ்வொரு பள்ளியிலும் அறிவிப்புகள் செய்வ தோடு, ஜும்ஆ தொழு கைக்கு வருகின்ற மக்களி டம் துண்டுப் பிரசுரம் மூலம் இந்த விழா பற்றி அறிவிப்பு செய்வது என் றும் முடிவு செய்யப்பட் டது.

இரு சக்கர வாகனங்கள் மற்றும் 4 சக்கர வாகனங் களில் விழாவிற்கு வருகை தருவோர் பச்சிளம் பிறைக் கொடியை கட்டிக் கொண்டு வருகை தர வேண்டும் எனவும், தங்கள் இல்லங்களிலிருந்து தங்கள் ஆண், பெண், உறவினர் களையும் அழைத்து வர வேண்டும் என்றும் வேண்டுகோள் விடப்பட் டது. சென்னையிலுள்ள கல் லூரி மாணவர்களை திர ளான அளவில் இந் நிகழ்ச்சி யில் பங்கேற்கச் செய்யவும் ஆலோசனை வழங்கப் பட்டது.

முதல்வர் கலைஞர் பங்கேற்பு
இது முதல்வர் கலைஞர் பங்கேற்கும் நிகழ்ச்சி என்பதால் 4 மணிக்கே கலைவாணர் அரங்கத்திற்கு அனைவரும் வந்து விட வேண்டும் என்றும், சென்னைக்கு வெளியி லுள்ள பகுதிகளிலிருந்து வருகை தருகின்றவர் களுக்கு முக்கியத்துவம் தரும் வகையில் அவர்க ளுக்கு கலைவாணர் அரங் கத்தில் இருக்கைகளை ஏற்பாடு செய்து தர வேண் டும் என்று கேட்டுக் கொள் ளப்பட்டது.

இவ் விழாவை முன் னிட்டு சென்னையில் விளம்பர தட்டிகள், கேபிள் தொலைக்காட்சி களில் ஒளிபரப்பு, கொடி தோரணங்கள் கட்டுதல் போன்றவைகளை செய் வது என்றும் முடிவு செய்யப்பட்டது.

வட சென்னை
இக் கூட்டத்தில் வட சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த ரப்பானி அப்துல் குத்தூஸ், துறைமுகம் ப+க் குளம் கப+ர், பஸல், இம் ரான், ஜே. மக்ரூப், ராயபுரம் காதர் பாய், ஜாபர், வண்ணை நாசர், எம். காதர் ஷா, பெரம்ப+ர் எம்.ஏ. உஸ்மான் அலி, ஹாரிஸ், ப+வை காதர், ஏ. ஹைதர் அலி, ஜே. ஜாஹீர், ஏ.கே. முஹம்மது ரபி, கஜினி, ஆவின் சாகுல், காதர் பாஷா, ஆர்.கே. நகர் ஹனீபா, கே.எம். யாஸின், சுலைமான் ஆலிம், திரு.வி.க. நகர் இர்பான், எம். முஸ்தபா, ஷெரீப், ஆர். ஜானுல்லா, கே. அப்துல் கபார், ஜே. முஹம்மது சலீம், வில்லிவாக்கம் ஷேக் தாவ+து, ரஹ்மானியா ஆட்டோ சங்கம் பரக்கத், நாசர், தென் சென்னை மாவட்டம் ஆலந்தூர் எம்.எஸ். அப்துல் வஹாப், கிண்டி மேத்தப்பிள்ளை மரைக்காயர், வி.என். அப்துல் ஜலீல், ஐ. முஹம் மது சலாஹ{தீன், எச். முஹம்மது சுபைர் பாஷா, எம்.எஸ். அப்துல் வஹாப், மேத்தா நகர் அப்துல் ரஹீம், ஹைதர் அலி கான், ஏ.எச். கான், கே.எம்.ஓ. நூருல் மியான், எம்.எஸ்.ஒ. அய்ய+ப்கான், கௌஸ் பேக், சேப்பாக்கம் ஆலம்கான், மீரான் முகைதீன், ஓ.எம். சாகுல் ஹமீது, கலீமுல்லா கான், திருவல்லிக்கேணி நாசர், கே.எம்.ஓ. நாகூர் மீரான்

காஞ்சிபுரம் மாவட் டம் - மாவட்ட அமைப்புச் செயலாளர் புதுப்பட்டி னம் ஜாஹீர், மாவட்டப் பொருளாளர் எஸ். அப்துல் ஹலீம், பொதுக் குழு உறுப்பினர் ஏ. அஸ் லம் பாஷா, காஞ்சி நகரத் தலைவர் எஸ்.எம். அப்துல் குத்தூஸ், செயலாளர் மக்ப+ல் பாஷா, பொருளா ளர் கே.எஸ். உஸ்மான், காஞ்சி ஒன்றியச் செயலா ளர் ஏ.எம். முஹம்மது அலி, தாம்பரம் அப்துல் ரஷீத், பனைய+ர் ய+னுஸ், ஷேக் அப்துல் காதர், முஸ்தபா, குர்ரான், அப்துல் அலி, பேரூர் முஹம்மது அப+பக் கர், இளைஞர் அணி எம். முஹம்மது ய+னுஸ், சர்தார் பாஷா, ஏ. ஆஸிப், ஷரீப், அப்துல் காதர், அன்சாரி, ஆரோக்கிய சுந்தரனார் உள்ளிட்ட முஸ்லிம் லீக் முன்னோடிகள், அணி களின் நிர்வாகிகள், இக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
http://www.muslimleaguetn.com/hqreleases.asp?id=138

Saturday, September 05, 2009

ஹஜ் யாத்திரைகளுக்கு சாதனை புரிந்தவரை பழிசுமத்தலாமா? கே.எம்.கே

ஹஜ் யாத்திரைகளுக்கு சாதனை புரிந்தவரை பழிசுமத்தலாமா? கே.எம்.கேசென்ற வருடம் புனிதஹாஜிகள் அனுப்பியதில் ஊழல் நடந்து விட்டது என்றும், அன்றைய அமைச்சர் இ. அஹமது அவர்கள் இதில் சம்மந்தப்பட்டுள்ளார் என்றும் ஒரு பொய்யான குற்றச்சாட்டைத் திரும்பத்திரும்பக் கூறுவதன் மூலம் உரிமையை மறைத்து விடலாம் என்னும் நப்பாசையில் தமிழகத்தில் சில சமுதாய புல்லுருவிகள் ஈடுபட்டுவருகிறார்கள்.சென்ற ஆண்டு வெளிவிவகாரத்துறை அமைச்சர் பிரனாப் முகர்ஜி, அவருக்குக் கீழ் வெளிவிவகார இணை அமைச்சராகப் பணிபுரிந்தவர் இ. அஹமது அவர்கள்.சென்ற ஐந்து ஆண்டுகளில் வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள், குறிப்பாக இ. அஹமது அவர்கள் நாடும் ஏடும் நானிலமும் போற்றும் வகையில் செயல்பட்டு வந்தார் என்பது வரலாற்று உண்மையாகும்.
இந்தியாவுக்கும் முஸ்லிம் உலகிற்கும், குறிப்பாக அரபுலகத்துக்கும் ஒரு பாசப்பிணைப்பிலான நெருக்கத்தை உருவாக்கி, இந்தியாவின் பேருக்கும் புகழுக்கும் பெருமை சேர்த்துள்ளவர் அமைச்சர் இ. அஹமது என்று பிரதமர் மன்மோகன் சிங், திருமதி சோனியா காந்தி மட்டுமன்றி, எதிர்க்கட்சித் தலைவர்களும் சிறப்பாகப் பாராட்டியிருக்கிறார்கள்.இ. அஹமது அவர்கள் மத்திய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளதால் இந்தியா முழுவதிலும், குறிப்பாக முஸ்லிம் உலகத்திலும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் பேரும் செயல்பாடும் மிகவும் பரவலாகப் புகழப்படுகிறது. இந்தியாவில் எங்கோ உள்ள ஒரு குக்கிராமத்தில் கூட இன்றைக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவர் இ. அஹமது மத்திய மந்திரியாக இருக்கிறார் என்று பெருமையோடு பேசுகின்ற நிலைமை ஏற்பட்டிருக்கிறது.
முஸ்லிம் லீகிற்கு ஏற்பட்டுள்ள இந்த சிறப்பான எழுச்சியையும் ஏற்றத்தையும் கண்டு மனம் புழுங்கும் சிலர், இ. அஹமது அவர்களைப் பற்றி குறை பேசத் துவங்கியுள்ளனர். முஸ்லிம் லீக் என்னும் பெயரைக் கேட்டாலே சீறிப்பாயும் சிலர் இன்னும் இருக்கிறார் கள். முஸ்லிம் லீக் தலைவர் இ. அஹமது அவர்களின் பெயர் இத்தகையவர்களுக்கு அவர்களின் காதுகளில் நாராசமாகக் கேட்கிறது. இதனால் இல்லாததும் பொல்லாததும் சொல்லி புலம்பித் திரிகிறார்கள். அதற்குத் தமிழகத்தில் சிலர் எடுபிடி வேலை செய்ய இறங்கியிருக்கிறார்கள்.சுதந்திர இந்தியாவில் புனித ஹஜ் பணிகள் மிகவும் அதிகமாகக் செல்வதற்கு வழிவகை கண்டவர் இ. அஹமதுதான்! சவ+தி மன்னருடனும் அமைச்சர்களு டனும் நேரில் பேசி, இந்தியாவின் கோட்டாவை அதிகரிக்கச் செய்து ஒரு லட்சம் அறுபது ஆயிரம் பேர் புனிதப் பயணம் செய்வதற்கு வழி ஏற்படுத்தியவர் இ. அஹமதுதான்.சவ+தி அரசின் ஒப்பந்தப்படி 4ல் ஒரு பங்கினர் தனியார் நிறுவனங்கள் மூலம் புனித ஹஜ் பயணம் மேற் கொள்ளலாம், 4ல் மூன்று பங்கினர் அரசாங்க ஹஜ் கமிட்டி மூலம் ஹஜ் செல்வர்.

மாநிலங்களுக்கு ஹஜ் கோட்டா என்பது அந்தந்த மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கணக்கிற்கு ஏற்ப ஒதுக்கப்படுவதாகும். இதை பிரணாப் முகர்ஜியோ, இ. அஹமதுவோ செய்வ தில்லை. மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அறிவிப்பு செய்கிறது. அதற்கேற்ப கோட்டா வழங்கப்படுகிறது.தனியார் நிறுவனங்கள் அனுப்பும் ஹாஜி கோட்டாகளும் மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரைப் படியேதான் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் விருப்பத்துக்கு எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் அதிகமான ஹாஜி கோட்டா வழங்கிவிட முடியாது. உண்மை இவ்வாறிருக்க ஏதோ இ. அஹமது தான் எல்லா ஹாஜிகளையும் அனுப்பியுள்ளதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக எழுதுவதும் பேசுவதும் பித்தலாட்டமான பிரச்சாரமாகும்.சென்ற ஆண்டில் உத்திர பிரதேசத்திற்கு 1440 ஹாஜிகள் மட்டுமே கோட்டா வழங்கியதாக புழுகுகிறார்கள். ஆனால். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உ.பி. ஹாஜிகள் பயணம் செய்துள்ளனர்.
சென்ற ஆண்டு இ. அஹமது அவர்களின் தனிச் செல்வாக்கினால் பத்தாயிரம் ஹாஜிகள் அதிகம் கிடைத்தனர். இந்த கூடுதலான ஹாஜிகளை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரித்துக் கொடுப்பதில் கூட அரசாங்கம் நிர்ணயித்த கோட்டாபடியேதான் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. அதன்படி உ.பி.க்கு கூடுதலாகக் கொடுக்கப்பட்ட ஹாஜிகள்தாம் 1440 இந்த விவரம் புரியாமல் இ. அஹமது அவர்கள் மீது பழிபோட முனைவதும் கோயபல்ஸ் முறையைப் பின்பற்றி பொய்யும் புனைந்துரையும் எழுதி பிரசுரிப்பதும் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.கூடுதலாகப் பெற்ற அந்த ஹாஜிகளில் சற்றொப்ப அறுநூறு பேருக்கு தமிழகத்தில் அனுமதி கிடைத்தது. மகாராஸ்ட்ராவுக்கு 1200 பேருக்குக் கிடைத்தது. கேரளாவுக்கு 900 பேருக்குக் கிடைத்தது.ஹஜ் பயணிகளுக்கு எல்லாவித வசதிகளையும் பெருக்கித்தருவதற்கும், இந்தியாவில் இருந்து அதிக ஹாஜிகளை ஒவ்வோர் ஆண்டும் அனுப்புவதற்கும் பல சிரமங்களை மேற்கொண்டு சாதனை புரிந்த இ. அஹமது அவர்கள் மீது ஊழல் புகார் கூறுவதும் பொறாமையின் வெளிப்பாடே தவிர வேறல்ல.
பாராட்ட வேண்டிய சாதனைகள் புரிந்துவருப வரை, பழிபோட்டுக் களம்படுத்தி விடலாம் என்று நினைப்போரும் எழுதுவோரும் இ. அஹமதுவுக்கு எதிராகச் செய்யவில்லை@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சி இந்தியா முழுவதிலும் ஏற்படுவதைத் தடுத்திடும் சாத்தானிய நோக்கத்தில்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.இந்திய அரசியலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் எழுச்சியையும் வளர்ச்சியையும் இத்தகைய பொறாமைத் தீயால் தடுத்துவிட முடியாது.!பொறாமைப்படுவோரே பொறாமைத் தீக்கு எரிபொருள் ஆவர் என்பது சரித்திரம்!பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தேசிய பொதுச்செயலாளர் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மாநிலத்தில் உள்ள முஸ்லிம்களின் மக்கள் தொகைக் கணக்கிற்கு ஏற்ப ஒதுக்கப்படுவதாகும். இதை பிரணாப் முகர்ஜியோ, இ. அஹமதுவோ செய்வ தில்லை. மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரையை மத்திய அரசு ஏற்று அறிவிப்பு செய்கிறது. அதற்கேற்ப கோட்டா வழங்கப்படுகிறது.தனியார் நிறுவனங்கள் அனுப்பும் ஹாஜி கோட்டாகளும் மத்திய ஹஜ் கமிட்டியின் பரிந்துரைப் படியேதான் நடக்கிறது. இதில் அமைச்சர்கள் விருப்பத்துக்கு எந்தவொரு தனியார் நிறுவனத்துக்கும் அதிகமான ஹாஜி கோட்டா வழங்கிவிட முடியாது. உண்மை இவ்வாறிருக்க ஏதோ இ. அஹமது தான் எல்லா ஹாஜிகளையும் அனுப்பியுள்ளதுபோல ஒரு தோற்றத்தை ஏற்படுத்தும் விதமாக எழுதுவதும் பேசுவதும் பித்தலாட்டமான பிரச்சாரமாகும்.சென்ற ஆண்டில் உத்திர பிரதேசத்திற்கு 1440 ஹாஜிகள் மட்டுமே கோட்டா வழங்கியதாக புழுகுகிறார்கள். ஆனால். 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உ.பி. ஹாஜிகள் பயணம் செய்துள்ளனர்.
சென்ற ஆண்டு இ. அஹமது அவர்களின் தனிச் செல்வாக்கினால் பத்தாயிரம் ஹாஜிகள் அதிகம் கிடைத்தனர். இந்த கூடுதலான ஹாஜிகளை, ஒவ்வொரு மாநிலத்துக்கும் பிரித்துக் கொடுப்பதில் கூட அரசாங்கம் நிர்ணயித்த கோட்டாபடியேதான் செயல்படுத்தப் பட்டிருக்கிறது. அதன்படி உ.பி.க்கு கூடுதலாகக் கொடுக்கப்பட்ட ஹாஜிகள்தாம் 1440 இந்த விவரம் புரியாமல் இ. அஹமது அவர்கள் மீது பழிபோட முனைவதும் கோயபல்ஸ் முறையைப் பின்பற்றி பொய்யும் புனைந்துரையும் எழுதி பிரசுரிப்பதும் வன்மையான கண்டனத்துக்கு உரியதாகும்.கூடுதலாகப் பெற்ற அந்த ஹாஜிகளில் சற்றொப்ப அறுநூறு பேருக்கு தமிழகத்தில் அனுமதி கிடைத்தது. மகாராஸ்ட்ராவுக்கு 1200 பேருக்குக் கிடைத்தது. கேரளாவுக்கு 900 பேருக்குக் கிடைத்தது.ஹஜ் பயணிகளுக்கு எல்லாவித வசதிகளையும் பெருக்கித்தருவதற்கும், இந்தியாவில் இருந்து அதிக ஹாஜிகளை ஒவ்வோர் ஆண்டும் அனுப்புவதற்கும் பல சிரமங்களை மேற்கொண்டு சாதனை புரிந்த இ. அஹமது அவர்கள் மீது ஊழல் புகார் கூறுவதும் பொறாமையின் வெளிப்பாடே தவிர வேறல்ல.
பாராட்ட வேண்டிய சாதனைகள் புரிந்துவருப வரை, பழிபோட்டுக் களம்படுத்தி விடலாம் என்று நினைப்போரும் எழுதுவோரும் இ. அஹமதுவுக்கு எதிராகச் செய்யவில்லை@ இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் வளர்ச்சி இந்தியா முழுவதிலும் ஏற்படுவதைத் தடுத்திடும் சாத்தானிய நோக்கத்தில்தான் செய்து கொண்டிருக்கிறார்கள்.இந்திய அரசியலில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் எழுச்சியையும் வளர்ச்சியையும் இத்தகைய பொறாமைத் தீயால் தடுத்துவிட முடியாது.!பொறாமைப்படுவோரே பொறாமைத் தீக்கு எரிபொருள் ஆவர் என்பது சரித்திரம்!
பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன்
தேசிய பொதுச்செயலாளர்
இந்திய ய+னியன் முஸ்லிம் லீக்

Sunday, July 12, 2009

தமிழ்நாடு மாநில முஸ்லிம் லீக் பொதுச் செயலாளராக கே.ஏ.எம். அபூபக்கர் தேர்வு

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கூட்டம் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் நடைபெற் றது.

மாவட்டங்களில் முஸ்லிம் லீகின் பணிகளை விரிவுபடுத்தவும், தாய்ச் சபையை பலப்படுத்தவும் மாவட்டவாரியாக கலந் தாய்வுக் கூட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்யப்பட்டது.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் முஸ்லிம் லீக் போட்டியிட வாய்ப்பு உள்ள தொகுதிகளில் பணி களை முடுக்கிவிட முடிவு செய்யப் பட்டது.

தமிழ்நாடு மாநில இந்திய
யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் கூட்டம் மாநிலத் தலைமையகமான காயிதெ மில்லத் மன்ஸிலில் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் தலைமையில் இன்று காலை 10.30 மணிக்கு துவங்கியது.

மாநில முஸ்லிம் லீகின் அணிகளின் அமைப்பாளர் கள், துணை அமைப்பாளர் கள், குழுக்களின் உறுப்பி னர்கள் சிறப்பு அழைப் பாளர்களாக பங்கேற்றனர்.

நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் முதன்முறையாக நடை பெற்ற இந் நிர்வாகி கள் கூட்டத்தில் இயக்கத் தின் எதிர்கால செயல் திட் டங்கள் விரிவாக ஆலோ சிக்கப்பட்டன.

இந்த ஆலோசனையின் அடிப்படையில் மாவட் டங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் செயல் பாட்டை விரிவுபடுத்தவும், எதிர்கால பணிகளை திட்டமிட்டு அமைக்கவும் மாவட்ட வாரியாக மாவட்ட நிர்வாகிகள், அணிகளின் நிர்வாகிகள், நகர, கிராம, பிரைமரி அளவிலான நிர் வாகிகளை உள்ளடக்கிய கலந்தாய்வு கூட்டங்களை நடத்துவது, சென்னை, வேலூர், கோவை, திருச்சி, தஞ்சை, மதுரை, நெல்லை ஆகிய ஏழு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு, அந்த மண் டலங்களுக்குள் வருகின்ற மாவட்டங்கள் அம் மண் டலத்தில் உள்ள ஒரு ஊரில் மாவட்டவாரியாக இந்த கலந்தாய்வு கூட்டங்கள் நடத்துவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

தமிழ்நாட்டில் முஸ்லிம் லீக் போட்டியிடும் வாய்ப் புள்ள தொகுதிகள் கண்ட றியப்பட்டு அந்த தொகுதி களில் முழு கவனமும் செலுத்தப்பட்டு வாக்கா ளர்களை சரிபார்த்தல், பிரைமரி அமைப்புக் களை ஊர்கள்தோறும் ஏற்படுத் துதல், வீடு வீடாக சென்று முஸ்லிம் லீக் உறுப்பினர் களை சேர்ப்பது என்றும் தீர்மானிக்கப்பட்டது.

தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் மாநில செயற்குழு கூட்டத்தை வரும் ஆகஸ்டு மாதம் 2-ம் தேதி ஞாயிற் றுக்கிழமை திருநெல்வேலி மாவட்டம் குற்றாலத்தில் நடத்துவது என்று இக் கூட்டத்தில் முடிவு செய் யப்பட்டது.

தமிழ்நாடு மாநில இந்திய
யூனியன் முஸ்லிம் லீகிற்கு பொதுச் செயலா ளர் பொறுப்பு பதவியில் இருக்கின்ற கே.எ.எம். முஹம்மது அபூபக்கர் இனி பொதுச் செயலாளராக செயல்படுவார் என இக் கூட்டம் ஏகமனதாக தேர்வு செய்தது.

கூட்டத்தில் கலந்து கொண்டோர் விவரம் வருமாறு- கே.ஏ.எம். முஹம்மது அ
பூபக்கர் - பொதுச் செயலாளர் (பொறுப்பு), வடக்குகோட்டையார் அல்ஹாஜ் வ.மு. செய்யது அஹமது - பொருளாளர். துணைத் தலைவர்கள் வாணியம்பாடி அரூர் அப்துல் காலிக், சேலம் எம்.பி. காதர் ஹ{சேன், திருநெல்வேலி பேட்டை எஸ்.எம். கோதர் மொய் தீன், திருப்பூர் பி.எஸ். ஹம்ஸா. செயலாளர்கள் லால்பேட்டை மவ்லவி ஷபீகுர் ரஹ்மான், இராம நாதபுரம் எம்.எஸ்.ஏ. ஷாஜ ஹான், கடையநல்லூர் நெல்லை அப்துல் மஜீத், காயல் மஹபூப், கமுதி பஷீர். அரசியல்ஆலோசனைக் குழு அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் எம்.பி., ஆம்பூர் எச். அப்துல் பாஸித், எம்.எல்.ஏ., சொத்து பாதுகாப்புக்குழு எஸ்.எம். கனி சிஷ்தி, திருவாரூர் எம்.எம். ஜலாலு தீன், கணக்கு தணிக்கைக்குழு பள்ளப்பட்டி எம்.ஏ. மஹபூப் அலி, கம்பம் எம். ஷாகுல் ஹமீது, வாணியம் பாடி முஹம்மது நயீம், சென்னை கே.பி. இஸ்மத் பாஷா. ஒழுங்கு நடவடிக்கைக்குழு வாணியம்பாடி எஸ்.டி. நிஸார்அஹமது, சென்னை எம். ஜெய்னுல் ஆபிதீன். அணி அமைப்பாளர்கள் வழக்கறிஞர் அணி வெ. ஜீவகிரிதரன், ஆலிம் அணி மவ்லவி எம். ஹாமித் பக்ரீ, சுதந்திர தொழிலாளர் ய+னியன் கோவை எம்.எஸ். முஹம்மது ரஃபீக், காயிதெ மில்லத் பேரவை - திருப்பூர் எம்.எஸ். சத்தார், சிராஜுல் மில்லத் பேரவை - கோட் டக்குப்பம் வி.ஆர். முஹம்மது இப்ராஹீம், மாணவர் பேரவை - மேலப் பாளையம் எல்.கே. எஸ். மீரான் மைதீன், இளைஞர் அணி- சென்னை கே.எம். நிஜாமுதீன், தொண்டர் அணி - திருச்சி ஜி.எம். ஹாஷிம், மருத்துவர் அணி - கோட்டக்குப்பம் டாக்டர் இக்பால் பாஷா, கொள்ளிடம் ரஷீத் ஜான், முஸ்லிம் லீக் பதிப்பக பொறுப்பாளர் மில்லத் இஸ்மாயில், வர்த்தகர் அணி - விழுப் புரம் கே.எம். ஷேக் தாவ+து, ரயில்வே தொழிற்சங்கம் - அப்சல். துணை அமைப்பாளர்கள் விவசாய அணி திருச்சி வி.எம். பாரூக், சிராஜுல் மில்லத் பேரவை துணை அமைப் பாளர் கண்ண மங்கலம் கவிஞர் ஹ{சைன் தாசன், கல்வி மேம்பாட்டு அணி - கவிஞர் ஏ. ஷேக் மதார், மாணவர் பேரவை ஏ.டபிள்ய+. காதர் ஷெரீப், மற்றும் அமீரக காயிதெ மில்லத் பேரவை பொதுச் செயலாளர் குத்தாலம் எம். லியாகத் அலிகான், ஹபீ புர் ரஹ்மான், கோவை அல்ஹாஜ் எல். எம். அப்துல் ஜலீல், சென்னை ஏ.எச். இஸ்மா யில், ப+வை எம். எஸ். முஸ்தபா, நத்தம் வி.ஏ. ஜஹாங்கீர், திண்டுக் கல் அல்தாப் உசைன், புதுப் பேட்டை கே.எஸ். முஹம் மது ஆரிப், ரப்பானி அப்துல் குத்தூஸ், காஞ்சி புரம் கே.எம். அப்துல்லா பாஷா, வேலூர் ரஹமத் துல்லாகான். நிறைவாக நாடாளு மன்ற உறுப்பினர் எம்.அப் துர் ரஹ்மான் நன்றி கூறினார்.

Wednesday, June 03, 2009

மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவேன் வேலூர் எம்.பி. அப்துல் ரகுமான் பேட்டி

வேலூர் தொகுதி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்துல் ரகுமான் நாடாளுமன்ற உறுப்பினராக தான் மேற்கொள்ளவுள்ள பணிகள் குறித்து தமிழன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு பேட்டியளித்துள்ளார்.

அதன் விபரம் வருமாறு:
நிச்சயம் எம்.பி.க்களின் இமேஜை மாற்று வொம். அதற்காக இப்போதே களத்தில் இறங்கிவிட்டோம். தெரு முனையிலே மைக் பிடித்து வாக்காளர்களுக்கு நன்றி சொல்லாமல், தேர்தலின் போது எப்படி வீடு, வீடாகச் சென்று வாக்கு கேட்டேனோ அதேபோல் வீடு வீடாக அனைவரையும் சந்தித்து நன்றி சொல்லி வருகிறேன்.


இந்த தொகுதியைச் சுற்றி வந்ததில் இருந்து குடிநீர் பிரச்சினைதான் முக்கியப் பிரச்சினையாக இருக்கிறது என்பது தெரிகிறது. முதலில் அந்தப் பிரச்சினையை தீர்க்க முயற்சி எடுப்பேன். என் முழுநேரப் பணியே வேலூர் தொகுதியையும், அங்குள்ள மக்களையும் சுற்றி வருவதுதான். இந்தத் தொகுதி மக்கள் எந்த வேறுபாடும் இல்லாமல் என்னை ஆதரித்த பெருந்தன்மையுடைய வர்கள். அவர்கள் காட்டிய பெருந்தன்மைக்கு நன்றிக் கடனாக நானும் யாரையும் வேறுபடுத்திப் பார்க்காமல் அனைவருக்கும் பணியாற்றப் போகிறேன்.


மேலும், பொது மக்களுக்கான சேவையை நான் இளம் வயதில் இருந்தே செய்து வந்திருக்கிறேன். எம்.பி. பதவி என்பது எனக்கு மெருகூட்டுவதாக இருப்பதோடு, நிறைய பொறுப்புகளை யும் வைத்திருக்கிறது. நிச்சயம் மக்களோடு மக்களாக இருந்து மக்கள் பார்க்க முடியாதவர்கள் எம்.பி.க்கள் என்ற இமேஜை உடைத்துக் காட்டுவேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Sunday, April 12, 2009

வெற்றியை நோக்கி முஸ்லிம் லீக்!

வேலூர் நாடாளும‌ன்ற‌ தொகுதி இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் க‌ட்சியின் வேட்பாளராக‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் உல‌க ஒருங்கிணைப்பாள‌ரும், அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் த‌லைவ‌ருமான‌ முத்துப்பேட்டை எம். அப்துல் ர‌ஹ்மான் அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.
முத்துப்பேட்டை எம். அப்துல் ர‌ஹ்மான் ப‌ள்ளிக்க‌ல்வியை ஆக்கூர் ஓரிய‌ண்ட‌ல் உய‌ர்நிலைப்ப‌ள்ளியில் ப‌டித்தார். ப‌ள்ளிப்ப‌டிப்பின் போதே மாநில‌ அள‌விலான‌ பேச்சுப் போட்டிக‌ளில் வெற்றி பெற்றுள்ளார். பின்னர் ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரியில் க‌ல்லூரிப் ப‌டிப்பினைப் ப‌யின்றார்.



உத‌ய‌சூரிய‌ன் சின்ன‌த்தில் போட்டியிடுகிறார்!


நக்கீரன் சர்வே!

இந்த நிலையில் நக்கீரன் வார இதழ் (ஏப்- 11- 2009) முடிவின் படி

இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர் முத்துப்பேட்டை

எம். அப்துல்ர‌ஹ்மான் அவர்கள் 48% ஓட்டுக்களைப்பெற்று வெற்றிப் பெறுவார்!

இன்ஷா அல்லாஹ்(இறைவன் நாடினால்)


தமிழ்மணத்தில் வாக்களிக்க அழுத்தவும்!

உன்மையில் முத்துப்பேட்டை எம். அப்துல் ர‌ஹ்மான்

அவர்களை வேட்பாளராக பெற்ற வேலுர் தொகுதிவாசிகள்

கொடுத்துவைத்தவர்கள்....!

Friday, April 10, 2009

மு.லீக் வேட்பாள‌ராக‌ அப்துல் ர‌ஹ்மான் தேர்வு - உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவார்

மு.லீக் தலைவர் காதர் மொய்தீனுடன் அப்துல் ரஹ்மான்


வேலூர் நாடாளும‌ன்ற‌ தொகுதி வேட்பாள‌ராக‌ அப்துல் ர‌ஹ்மான் தேர்வு

வேலூர் நாடாளும‌ன்ற‌ தொகுதி இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் க‌ட்சியின் வேட்பாளராக‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் உல‌க ஒருங்கிணைப்பாள‌ரும், அமீர‌க‌ காயிதெமில்ல‌த் பேர‌வையின் த‌லைவ‌ருமான‌ முத்துப்பேட்டை எம். அப்துல் ர‌ஹ்மான் அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ளார்.

இத்த‌க‌வ‌ல் வியாழ‌க்கிழ‌மை இர‌வு இந்திய‌ யூனிய‌ன் முஸ்லிம் லீக் மாநில‌ த‌லைமை நிலைய‌மான‌ காயிதெமில்ல‌த் ம‌ன் ஜிலில் மாநில‌ த‌லைவ‌ர் முனீருல் மில்ல‌த் பேராசிரிய‌ர் கே.எம். காத‌ர் மொகிதீன் எம்.பி. த‌லைமையில் ந‌டைபெற்ற‌ அவ‌ச‌ர‌ செய‌ற்குழுக்கூட்ட‌த்தில் முடிவு செய்ய‌ப்ப‌ட்ட‌து.

மேலும் ச‌முதாய‌ வேண்டுகோளின்ப‌டி உத‌ய‌சூரிய‌ன் சின்ன‌த்தில் போட்டியிடுவ‌து என்றும் முடிவு செய்ய‌ப்ப‌ட்ட‌து.

முத்துப்பேட்டை எம். அப்துல் ர‌ஹ்மான் ப‌ள்ளிக்க‌ல்வியை ஆக்கூர் ஓரிய‌ண்ட‌ல் உய‌ர்நிலைப்ப‌ள்ளியில் ப‌டித்தார். ப‌ள்ளிப்ப‌டிப்பின் போதே மாநில‌ அள‌விலான‌ பேச்சுப் போட்டிக‌ளில் வெற்றி பெற்றுள்ளார். பின்னர் ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரியில் க‌ல்லூரிப் ப‌டிப்பினைப் ப‌யின்றார்.

க‌ட‌ந்த‌ கால் நூற்றாண்டுக்கும் மேலாக‌ அமீர‌க‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ரும் இவ‌ர் துபாய் இஸ்லாமிய‌ வ‌ங்கியின் த‌க‌வ‌ல் தொழில்நுட்ப‌த்துறையில் உத‌வித் த‌லைவ‌ராக‌ இருந்து வ‌ருகிறார்.

துபாய் ஈமான் அமைப்பின் துணைத்த‌லைவ‌ர்க‌ளில் ஒருவ‌ராக‌வும், ஜ‌மால் முஹ‌ம்ம‌து க‌ல்லூரி ப‌ழைய‌ மாண‌வ‌ர் ச‌ங்க‌ பொதுச்செய‌லாள‌ராக‌வும் இருந்து வ‌ருகிறார்.

அமீர‌க‌த்தில் ச‌முதாய‌ப் ப‌ணிக‌ளின் மூல‌ம் இந்திய‌ ம‌க்க‌ளுக்கு ப‌ல்வேறு சேவைக‌ளைச் செய்து வ‌ருகிறார். அமீர‌க‌த்தில் ப‌ணிபுரிந்து வ‌ந்தாலும் தாய‌க‌த்தில் ச‌மூக‌ந‌ல‌ப்ப‌ணி மேற்கொள்ள‌ வேண்டும் என்ற‌ ஆவ‌லைக் கொண்ட‌வ‌ர்.

இந்த‌ அவ‌ச‌ர செய‌ற்குழுவில் மாநில‌ பொதுச்செய‌லாள‌ர் டாக்ட‌ர் சைய‌த் ச‌த்தார், மாநில‌ நிர்வாகிக‌ள், அமீர‌க காயிதெமில்ல‌த் பேரவை பொதுச்செய‌லாள‌ர் குத்தால‌ம் ஏ. லியாக்க‌த் அலி உள்ளிட்ட‌ ப‌ல‌ர் ப‌ங்கேற்ற‌ன‌ர்.

அமீர‌க‌ப் பிர‌முக‌ர்க‌ள் வாழ்த்து

எம். அப்துல் ர‌ஹ்மான் தேர்வு செய்ய‌ப்ப‌ட்ட‌ செய்திய‌றிந்து அமீரக‌த்தில் செய‌ல்ப‌ட்டு வ‌ரும் ப‌ல்வேறு அமைப்புக‌ளின் நிர்வாகிக‌ள் த‌ங்க‌ள‌து ம‌கிழ்ச்சியினையும், வாழ்த்தினையும் தெரிவித்துள்ள‌ன‌ர்.

அமெரிக்கா

அமெரிக்கா காயிதெமில்ல‌த் பேரவை அமைப்பாள‌ர் தோப்புத்துறை முஹ‌ம்ம‌து நூர்தீன், குவைத் காயிதெமில்ல‌த் பேர‌வை அமைப்பாள‌ர் டாக்ட‌ர் அன்வ‌ர் பாஷா, ச‌வுதி அரேபிய‌ காயிதெமில்ல‌த் பேரவை நிர்வாகிக‌ள் உள்ளிட்ட‌ ப‌ல‌ர் த‌ங்க‌ள‌து வாழ்த்தினை வெளிப்ப‌டுத்தியுள்ளன‌ர்.

செய்தி : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )

Sunday, April 05, 2009

முஸ்லிம் லீக் ஏணி சின்னத்தில் போட்டி


சென்னை :வேலூர் தொகுதியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் காதர் மொய்தீன் எம்.பி., மீண்டும் போட்டியிடுகிறார். "ஏணி' சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


தி.மு.க., கூட்டணியில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு வேலூர் தொகுதி ஒதுக்கப்பட்டது. இந்த தொகுதியில் தற்போதைய எம்.பி.,யும், கட்சித் தலைவருமான காதர் மொய்தீன் மீண்டும் போட்டியிடுகிறார். சென்னையில் நேற்று நடந்த கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


செயற்குழு கூட்டத்திற்குப் பின், காதர் மொய்தீன் எம்.பி., நிருபர்களிடம் கூறியதாவது: கட்சியின் முடிவுப்படி வேலூர் தொகுதியில் நான் மீண்டும் போட்டியிடுகிறேன். கடந்த முறை உதய சூரியன் சின்னத்தில் போட்டியிட்டேன். இதை முஸ்லிம் சமூகத்தில் பல்வேறு இயக்கங்கள், கட்சியை தி.மு.க.,வில் அடகு வைத்து விட்டதாக பிரசாரத்தில் ஈடுபட்டன. இந்த பிரசாரத்தை முறியடிக்கும் வகையில், இந்த முறை "ஏணி' சின்னத்தில் போட்டியிடுகிறேன்.தி.மு.க., காங்., தேர்தல் அறிக்கைகளில், முஸ்லிம்கள் இதுவரை கேட்டு வந்த பல்வேறு கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதாக அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது. இந்த தேர்தல் அறிக்கை, எங்கள் கட்சியின் தேர்தல் அறிக்கை போலவே உள்ளது. தி.மு.க., கூட்டணி 40 தொகுதிகளிலும் அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும். மூன்றாவது, நான்காவது அணி என்பதெல்லாம் இல்லாத ஊருக்கு, செல்லாத வழிகாட்டுவது போன்றது. மீண்டும் மன்மோகன் தான் பிரதமராக வருவார்.இவ்வாறு காதர் மொய்தீன் கூறினார்.
நன்றி : தினமலர்

Friday, March 27, 2009

தம்மாம் மாநகரில் காயிதெ மில்லத் பேரவை ஆலோசனை கூட்டம்

சவூதி அரேபியா - தம்மாம் மாநகரில் காயிதெ மில்லத் பேரவை ஆலோசனை கூட்டம்



சவூதி அரேபியாவின் கிழக்கு மண்டலமாக திகழக் கூடிய தம்மாம் மாநகரில் தமிழக முஸ்லிம் லீகர்களின் காயிதெ மில்லத் பேரவை பொறுப்பாளர்கள் மற்றும் கேரள முஸ்லிம் லீகர்களின் கேரள முஸ்லிம் கலாச்சார சங்கம் நிர்வாகிகள் ஆலோ சனை கூட்டம் தம்மாம் - பதர் பாலி கிளினிக் கூட்ட அரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தின் தம்மாம் மண்டல தலைவர் எம். உம்மர் தலைமை தாங்கினார்.

எதிர்வரும் இந்திய பாராளுமன்ற தேர்தல் குறித்தும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் அது ஆதரிக்கக் கூடிய அணிக் காக சவூதி அரேபியாவிலிருந்து எவ்வாறு பிரச்சார உத்திகளை மேற்கொள்வது குறித்தும், தம்மாம் மண்டபத்தில் பணியாற்றி வரு கின்ற தமிழக முஸ்லிம் களுக்கு மத்தியில் முஸ்லிம் லீகின் காயிதெ மில்லத் பேரவையை வலுப்படுத்து வதற்கான நட வடிக்கைகள் குறித்தும் மற்றும் பல முக்கிய விஷயங்கள் குறித்தும் ஆலோசனை செய்யப்பட்டது.

கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தின் தம்மாம் மண்டல துணைத் தலைவர் குஞ்சு முஹம்மது, காயிதெ மில்லத் பேரவை யின் தம்மாம் மண்டல அமைப்பாளர் எஸ்.கே.எம். ஹபிபுல்லா, கேரள மாநில இளைஞர் லீகின் மலப்புர மாவட்ட முன்னாள் கன்வீனர் இப்ராஹீம், கடலூர் முஹைதீன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கேரள முஸ்லிம் கலாச்சார சங்கத்தின் நிர்வாகிகள் ஷரீப், சுலைமான், இக்பால் சாஹிப், பதர் பாலி கிளினிக் முஹம்மது, காயிதெ மில்லத் பேரவை பொறுப் பாளர்களான கோவை நாசர் ஹம்ஸா, பரங்கிப் பேட்டை கரீமுல்லாஹ், நெல்லை அப்துல் கனி, திவான், அப்துல் காதர், திவான் மைதீன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இறுதியாக தம்மாம் - கதீப் பகுதி கே.எம்.சி.சி. அமைப்பாளர் அப்துல் சமத் நன்றி கூறினார்.

தகவல் . இளம்பிறையான, தம்மாம்

Saturday, February 28, 2009

இலங்கையில் உடனே போர் நிறுத்தம் தேவை இடம்பெயர்ந்த முஸ்லிம்களை சொந்த மண்ணில் குடியமர்த்த வேண்டும் டெல்லி செய்தி நிறுவனத்திற்கு. K.M.K.பேட்டி


இலங்கையில் விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கைவிடவேண்டும் போர் நிறுத்தத்தை இலங்கை அரசு தீவிரமாக பரிசீலிக்க வேண்டும். விடுதலைப் புலிகளால் இடம் பெயர்ந்த முஸ்லிம்கள் சொந்த இடத்தில் குடியமர்த்தப்படவேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்நாடு மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., டெல்லியிலுள்ள ஏசியன் டிரிபியூன் என்ற செய்தி நிறுவனத்திற்கு பேட்டியளித்துள்ளார்.


பேட்டியில் பேராசிரியர் கே.எம்.கே கூறியிருப்பதாவது:இலங்கையில் மிகப்பெரிய மனித இன படுகொலையை தடுக்க உடனடியாக போர் நிறுத்தம் செய்ய வேண்டும்.


அதற்காக விடுதலைப்புலிகள் அப்பாவி தமிழ் மக்களை கேடயமாக பயன்படுத்துவதை நிறுத்திவிட்டு, ஆயுதங்களை கைவிட்டுவிட்டு போர் நிறுத்தத்திற்கு உடன்பட வேண்டும்.இலங்கை அரசு அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக போர் நிறுத்தத்தை தீவிரமாக பரிசீலிக்க வேண்டும்.


விடுதலைப் புலிகள் அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றுவதற்காக ஆயுதங்களை கீழே போட்டுவிட்டு சரணடைய வேண்டும்.


போர்க்களத்தில் சிக்கியுள்ள அப்பாவி தமிழ் மக்களை காப்பாற்றும் மனித நேயத்துடன் இலங்கை அரசு செயல்பட வேண்டும்.இலங்கையில் வடக்கு மாகாணத்தில் 19 ஆண்டுகளுக்கு முன்பாக விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்கள் இடம் பெயர்ந்து சென்றுள்ளார்கள். அவர்கள் அனைவரையும் அகதிகள் முகாமிலிருந்து வெளியேற்றி சொந்த மண்ணில் குடியமர்த்த வேண்டும்.


இலங்கை தமிழர் பிரச்சினையை பொறுத்தவரை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாடு என்னவென்றால் உடனடியாக அங்கே போர்நிறுத்தம் நடைபெறவேண்டும் என்பதுதான்.


ஏதோ போர் நிறுத்தத்திற்காக இதை நாங்கள் வலியுறுத்தவில்லை. போர்க்களத்தில் அப்பாவி பொதுமக்களை ஆபத்திலிருந்து காப்பாற்றவே இலங்கை அரசை நாங்கள் வலியுறுத்தி வருகிறோம்.பல்லாயிரக்கணக்கான ஆண்கள், பெண்கள், குழந்தைகள் ஆகியோர் போர்க்களத்தில் சிக்கிக்கொண்டு குண்டடிப்பட்டு இறக்கிறார்கள்.


விடுதலைப் புலிகள் இந்த இனப் படுகொலை குறித்து கொஞ்சம்கூட கவலைப்பட்டதாக தெரியவில்லை. இரு தரப்பாரும் அப்பாவி பொதுமக்களை தவிர்த்துவிட்டு அவர்கள் போர் நடத்த முடியுமானால் நடத்தட்டும்.


பயங்கரவாதிகளை மட்டும் தனிமைப்படுத்திட முடியுமானால் இலங்கை அரசு ராணுவ நடவடிக்கை தொடரலாம் அப்படி என்றால் அது நல்லது.ஆனால், விடுதலைப் புலிகள் அப்பாவி பொதுமக்களை கேடயங்களாக பயன்படுத்தி அவர்கள் தலையின் மேலே துப்பாக்கிகளை வைத்து போரில் ஈடுபடும்பொழுது தீவிரவாதிகளை தனிமைப்படுத்தி போர்நடத்த முடியாது.மேற்கண்டவாறு பேராசிரியர் கே.எம்.கே. கூறினார்.


அவரிடம் கேட்கப்பட்ட கேள்விகளும் அதற்கு அவர் அளித்த பதில் வருமாறு:


கே. இலங்கையில் அதி கரித்துவரும் மனித படுகொலை குறித்து உங்கள் கருத்து எனன?


ப. இலங்கையில் என்ன நடக்கிறது என்று பத்திரிகையாளர்களுக்கு நன்றாக தெரியும். அந்த பிரச்சினை தொடர்பாக மத்திய அரசின் கொள்கை என்ன வென்றால் விடுதலைப் புலி கள் ஆயுதங்களைகை விட்டுவிட்டு சரணடைய வேண்டும் அதே நேரத்தில் இலங்கை அரசு உடன டியாக போரை நிறுத்திவிட்டு சமரச பேச்சில் ஈடுபடவேண்டும் என்பதுதான்.


கே. பயங்கரவாதிகளுடன் ஏன் போர் நிறுத்தம் செய்ய வேண்டும்?


ப. இலங்கை அரசு விடுதலைப் புலிகளுடன்தான் போர் நடத்துகிறது. ஆனால், அப்பாவி மக்களும் தமிழர்களும் கொல்லப்படுகிறார்கள். இரு தரப்பிலும் வீசும் குண்டுகள் இவர்கள் மீது விழுகின்றன.


ஆயிரக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. அவர்களெல்லாம் இரு தரப்பினரிடையே மாட்டிக்கொண்டு மாய்பவர்கள்தான். அது போக விடுதலைப் புலியினர் அப்பாவி தமிழர்களை கேடயமாக பயன்படுத்தி போர் புரிகிறார்கள்.


எனவேதான் போர் நிறுத்தம் வேண்டும் என்று மத்திய அரசு கூறுகிறது. உண்மையில் அங்கே என்ன நடக்கிறது என்பதை பத்திரிகைகள் வாயிலாகத்தான் தெரிந்து கொள்கிறோம். கள நிலவரம் புரியவில்லை. மத்திய அரசின் கொள்கைதான் எங்கள் கொள்கையும்.


போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்பதுதான் மத்திய அரசின் நிலைப்பாடு.இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களின் பிரச் சினைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.அவர்களுடைய பிரச்சினைகள், உரிமைகள் அரசியல் ரீதியாகவும், அரசியல் சட்டத்திற்கும் உட்பட்டு தீர்க்கப்பட வேண்டும்.


இதைத்தான் மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.இலங்கைத் தமிழர் பிரச்சினைகளை இலங்கை அரசு ராணுவ நடவடிக்கை மூலம் தீர்க்காமல் அமைதியாக தீர்க்க வேண்டும்.


அப்படி மேற்கொள்ளும் தீர்வானது இலங்கை அரசியல் சட்டத்திற்கு உட்பட்டும் அங்கே உள்ள சிங்களவர்களுக்கு நிகராக தமிழர்களும், முஸ்லிம்களும் சம உரிமை பெற்று வாழும் வரையிலும் அமையப்பட வேண்டும்.


அனைத்து தரப்பினருக்கும் சம சீராக உரிமைகள் வழங்கப்படும் என்பது மத்திய அரசின் கொள்கை.


கே. இலங்கை பிரச்சினை குறித்தும் விடுதலைப் புலிகள் பிரச்சினை குறித்தும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாடு என்ன?


ப. இது தொடர்பாக மத்திய அரசின் நிலைப்பாட்டை நாங்கள் ஆதரிக் கிறோம். அதே நேரத்தில் வடக்கு மாகாணத்திலிருந்து விடுதலைப் புலிகளால் இடப்பெயர்வுக்கு உட்பட்டு தற்போது அகதி முகாம்களில் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள் சொந்த மண்ணில் குடியமர்த்தப்பட வேண்டும் என்பதையும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தனது நிலைப்பாடாக கொண்டுள்ளது.


கே. கடந்த 19 ஆண்டுகளாக ஏறத்தாழ 1 லட்சம் முஸ்லிம்கள் நிவாரண முகாம்களில் தங்கியிருப்பதாக தகவல்கள் கூறுகின்றனவே?.


ப. ஆமாம் அவர்களின் பிரச்சினையும் தீர்க்கப்பட வேண்டும்.


கே. யாரால் தீர்க்கப்பட வேண்டும்?


ப. இலங்கையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசால் தீர்க்கப்பட வேண்டும்.


தற்போது விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்திலிருந்த பெரும்பாலான நிலப்பகுதியை இலங்கை ராணுவம் கைப்பற்றிவிட்டதால் முஸ்லிம்களை அகதிகள் முகாம்களிலிருந்து வெளிக் கொண்டு வந்து அவர்கள் சொந்த இடங்களில் குடியமர்த்த வேண்டும்.


கே. தமிழகத்தில் பெரும் பாலான கட்சிகள் விடுதலைப் புலிகளின் தனி நாடு கோரிக்கையை ஆதரிப்பதாக தெரிகிறது. இந்நிலையில் அந்த கட்சிகளுடன் உங்களுடைய தொடர்பு குறித்தும், உங்கள் நிலை பாடு குறித்தும் சொல்லுங்கள்?


ப. ஆமாம் அவர்கள் அப்படித்தான் செய்கிறார்கள். ஆனால், நாங்கள் அவர்கள் நிலைப்பாட்டை ஆதரிக்கவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆதரிக்கவில்லை விடுதலைப் புலிகளால் இலங்கையில் ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளும் மோதல்களும் அந்த நாட்டின் உள் விவகாரம் ஆகும்.


இந்த வகையில் மத்திய அரசின் நிலைப்பாடும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் நிலைப்பாடும் ஒன்றுபோல் இருப்பதை கவனிக்க வேண்டும்.


இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினையை பொறுத்தவரை அவர்கள் பிரச்சினையை இலங்கை அரசு சுமூகமாக தீர்க்க வேண்டும்.


கே. அதாவது விடுதலைப் புலிகளால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டிருக்கும் பிரச்சினைகளை இலங்கை அரசு தீர்க்க வேண்டும் என்கிறீர்களா?


ப. ஆமாம். அது சர்வதேச அளவில் தெரிந்தது. இந்த நேரத்தில் ராணுவ நடவடிக்கை மூலம் நிரந்த தீர்வை ஏற்படுத்த முடியாது என்று வலியுறுத்தி கூறுகின்றேன்.ராணுவ நடவடிக்கை இன்றோ நாளையோ வெற்றி பெறுவதாக தெரியலாம். ஆனால் நாளை மறுநாள் கொரில்லா போர் மூளலாம். மனித குண்டு வெடிப்புகள் நிகழலாம். மீண்டும் பிரச்சினைகள் தொடரும். எனவே, இலங்கையின் அரசும் இலங்கை அதிபரும் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்படுகிற ஒரு அரசியல் தீர்வுதான் சரியான பதிலாகும் என்பதை ஏற்றுக்கொள்ள வேண்டும்.


கே. சமீபத்தில் மேற்கத்திய செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட பேட்டிகளில் இருந்து போர்க்களத்தில் இருந்து தப்பிவரும் பொதுமக்கள் மனநிலை வெளிப் பட்டுள்ளது அவர்கள் பொதுமக்கள் வாழும் பகுதிகளிருந்து விடுதலைப் புலிகள் சுடுவதாகவும் எனவே, வேறு வழியின்றி இலங்கை ராணுவம் திருப்பி சுடுவதாகவும் சொல்லியிருக்கிறார்களே ஆனால் இலங்கை ராணுவம் பொது மக்களை நோக்கி சுடுவதை மறுத்திருக்கிறார்களே இதில் விடுதலைப்புலிகளின் பிரச்சார தந்திரம் இருக்கிறதா?


ப. பொதுமக்கள் பலியாகவில்லை என்றால் அது மகிழ்ச்சிக்குரியதே.இவ்வாறு பேராசிரியர் கே.எம்.கே.காதர் மொகிதீன் பேட்டியளித்துள்ளார்.

Friday, February 27, 2009

சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் ஆசிரியர் நியமனங்களை உடனே நிறைவேற்றி தாருங்கள் முதல்வர் கலைஞருக்கு பேராசிரியர்வேண்டுகோள்


சிறுபான்மை கல்வி நிறு வனங்களில் காலியாக உள்ள இடங்களில் ஆசிரியர் நியமனங்களை உடனடி யாக செய்து தரும்படியும், பணிபுரியும் ஆசிரியர்க ளுக்கு அரசு ஊதியத்தை வழங்கி உதவும்படியும் முதல் வர் கலைஞரிடம் முஸ்லிம் லீக் சார்பில் கேட்டுக் கொள்வோம். என்று பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., தெரிவித் தார்.


சென்னை புதுக் கல்லூரியில் வரலாற்று ஆய்வு மன்றம் துவக்க விழா இன்று (வெள்ளி) நடை பெற்றது.


இந்திய யூனியன் முஸ் லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்மாநில தலைவரு மான பேராசி ரியர் கே.எம். காதர் மொகி தீன் எம்.பி., சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு வர லாற்று ஆய்வு மன்றத்தை துவக்கிவைத்து உரையாற்றி னார்.


அப்போது அவர் குறிப் பிட்டதாவது:
இந்த வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பினை எனக்கு அளித்த கல்லூரி யின் முதல்வர், துணை முதல்வர், பேராசிரியர்கள், துறை மாணவர்கள் அனை வருக்கும் முதற் கண் எனது வாழ்த்துக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


இங்கு நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் பெற்றுள்ள மாணவர்களையும் வாழ்த்த கடமைப் பட்டுள்ளேன்.


இங்கு வரவேற்புரை யாற்றுகையில் கல்லூரியின் தேவைகள் குறித்தும் பிரச்சினைகள் குறித்தும் சுட்டிக் காட்டினார்கள். குறிப்பாக கல்லூரி ஆசிரி யர் நியமன பிரச்சினை குறித்து குறிப்பிட்டார்கள்.


இன்று மாலை முதல்வர் கலைஞர் அவர்களை முஸ் லிம் லீக் சார்பில் சந்திக்க உள்ளோம். அப்போது இந்த பிரச்சினை குறித்து அவரிடம் எடுத்துக் கூறி விரைவில் நல்ல முடிவு கான வலியுறுத்துவோம் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்.


சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங் களில் ஆசிரியர்களாக நிய மிக்கப்படுபவர்களுக்கு அவர்களின் பணிக்கு ஏற்ற சரியான ஊதியங்களை பெறுவதற்கு சான்றிதழ்கள் அவசியமாக இருக்கின்றன.


பல்கலைக் கழகங்கள் குறிப்பாக சென்னைப் பல் கலைக் கழகம் இந்த விஷயத்தில் இடையூறு அளிக்கும் வகையில் செயல் பட்டு வருவது நமது கவ னத்திற்கு வந்துள்ளன.


அவை விரைவில் சரி செய்யப்பட முதல்வரிட மும் அரசிடமும் வலியுறுத் துவோம்.
ஏற்கெனவே, இது போன்ற பிரச்சினை திருச்சி ஜமால் முஹம்மது கல்லூ ரிக்கு ஏற்பட்டது. அதனை கல்லூரி சார்பில் நாம் எதிர் கொண்டு வெற்றி பெற் றோம் என்பதையும் இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.


நேற்று முன்தினம் பாரா ளுமன்றத்திலே சிறுபான் மையினர் கல்வி திருத்த மசோதா ஒன்று நிறை வேற்றப்பட்டுள்ளது. நான் காண்டுகளுக்கு முன்பு நிறைவேற்றப்பட இருந்த இந்த மசோதாவில் பல் வேறு குறைபாடுகள் இருந்தன. அவற்றையெல் லாம் நாம் சுட்டிக்காட்டி மத்திய அரசிடம் தொ டர்ந்து வலியுறுத்தி வந் தோம்.


இப்போழுது மத்திய அரசு அந்த தவறுகளை குறைபாடுகளை சரிசெய்து திருத்தப்பட்ட மசோ தாவை தாக்கல் செய்துள் ளது.


சிறுபான்மையினர் கல்வி நிலையங்களை தொடங்க மாநில அரசின் தடையில்லா சான்றிதழ் பெற வேண்டிய நிலை இத் துனை காலமும் இருந்து வந்தது.


மாநில அரசுகள் அவ் வளவு எளிதாக என்.ஓ.சி., கொடுப்பது கிடையாது. இந்தப் பிரச்சினையை கருத்தில் கொண்டு இப் போழுது தாக்கல் செய்யப் பட்டுள்ள புதிய மசோதா வில் சிறுபான்மையினர் மாநில அரசின் அனுமதி இல்லாமலேயே கல்வி நிலையங்களை துவங்கி நடத்திட வலிவகை செய் யப் பட்டுள்ளது என்பதை யும் இந்த நேரத்தில் குறிப் பிட விரும்புகின்றனர்.


இப்பொழுதுள்ள நமது தமிழக அரசானாலும், மத் திய அரசானாலும் இரண்டு அரசுகளுமே சிறு பான்மையினர் நலனை அக் கரை கொண்டு அவர்க ளின் உணர்வுகளை மதித்து நடக்கின்றன.


இத்தகைய நல்லாட் சியில் சிறுபான்மையினர் கல்வி நிலையங்களில் ஆசி ரியர் நியமனங்கள் நல்ல முறையில் நடந்தேறும் என்று நான் உறுதியாக நம்புகின்றேன். இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் பேசும் பொழுது குறிப்பிட்டார்.


இந்நிகழ்ச்சியில் புதுக் கல்லூரி முதல்வர் டாக்டர் அல்தாப் தலைமை தாங் கினார், பேராசிரியர் ஜப ருல்லா கான் வரவேற்புரை யாற்றினார். துணை முதல் வர் நயீமுர் ரஹ்மான், பேராசிரியர் முஹம்மது மன்சூர், ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் துணை முதல்வர் டாக்டர் நிஜா முத்தீன், டாக்டர் சே.மு.மு. முஹம்ம தலி, பேராசிரியர் நத்தர் ஷா, இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைமை நிலைய செயலாளர் அபூபக்கர், மாநில செய லாளர் கமுதி பஷீர், தென் சென்னை மாவட்ட தலை வர் இஸ்மத் பாட்சா, செயலாளர் ப+வை முஸ் தபா, ஒருங்கினைப்பாளர் பீர் முஹம்மது, நத்தம் ஜஹாங்கீர், ஆலம் கான், கவிஞர் ஷேக் மதார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Sunday, February 15, 2009

நாடாளுமன்ற தேர்தல் குறித்து சோனியாகாந்தியுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் டெல்லியில் ஆலோசனை

புதுடெல்லி, பிப்.15-

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அண்மையில் நடைபெற உள்ள சூழ்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் இ. அஹமது, தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர்சந்தித்து பேசினர்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அண்மையில் நடைபெறவிருப்பதால் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இறங்கியுள் ளன.

தேசிய அளவில் புதிய எழுச்சி பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடஇந்தியாவிலும் பல தொகுதிகளில் போட்டியிடுவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இதன் முயற்சியாக உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அளவிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பிரதிநிதிகள் மாநாடு நடத் தப்பட்டு தேர்தல் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தோழமை நிலைப்பாடு மற்றும் வடஇந்திய மாநி லங்களில் போட்டியிடு கின்ற சூழ்நிலைகள் குறித்தும் ஆலோசித்து வருகிறது.

இன்று காலை புதுடெல்லியில் உள்ள தேசியத் தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ.அஹமதுவின் இல்லத்தில் உத்தரபிரதேச மாநிலத்தின் முஸ்லிம் லீக் நிர்வாகிகளின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் இ.அஹமது தலைமையில் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., முன்னிலையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தேசிய துணைத் தலைவர் வழக்கறிஞர் இக்பால் அஹமது, தேசிய செயலாளர் குர்ரம் ஹனீஸ் உமர், உ.பி. மாநிலத் தலைவர் மவ்லானா கவுஸர் ஹயாத்கான், உ.பி. மாநில பொதுச் செயலாளர் டாக்டர் மத்தீன்,
உ.பி. மாநிலச் செயலாளர்கள் நிஸார் மஹமூத், சௌத்ரி ரஸீயுதீன், இன்ஜினியர் அலி ஆரீப் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில்
தி..மு.க. கூட்டணி...
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடும் வகையில்- அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் மாநாடுகளை நடத்தி வருகிறது.
கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையில் அமைக்ப்பட்டுள்ள கூட் டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஸ்லிம்கள் வாக்குகளை ஒருமுகப் படுத்தும் நிகழ்ச்சியாக பல்வேறு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

சோனியாகாந்தியுடன்
முஸ்லிம் லீக் தலைவர்கள் சந்திப்பு
இதனிடையே நேற்றைய முன்தினம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தியை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் இ. அஹமது, தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர் சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதித்துள்ளனர்.
இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக எமது டெல்லி செய்தியாளர் தெரிவிக்கிறார்.

Friday, February 13, 2009

இலங்கைத் தமிழர்களின் நல்வாழ்வுக்கு மத்திய - மாநில அரசுகள் முயற்சிகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் துணை நிற்கும் ஈரோட்டில் கமுதி பஷீர் பேச்

ஈரோடு, பிப்.13-
இலங்கைத் தமிழர் நல்வாழ்வுக்கு மத்திய அரசும் - தமிழக அரசும் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்திற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுதியுடன் துணை நிற்கும் என்று தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு செயலாளர் கமுதி பஷீர் குறிப்பிட்டார்.

ஈரோட்டில் நடைபெற்ற இலங்கை தமிழர் நல உரிமை பேரவையின் மாபெரும் பொதுக் கூட் டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் பேசியதாவது-
இலங்கைத் தமிழர் நல உரிமைப் பேரவையின் சார்பில் இன்று நாடு முழுவதும் பேரணியும் - பொதுக் கூட்டங்களும் நடைபெற்று வருகின்றது.
மாண்புமிகு தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்கள் தன்னுடைய உடல் நலிவையும் பொருட்படுத்தாமல் தான் சிகிச்சை பெற்று வரும் சென்னை ராமச்சந்திரா மருத்துவமனையிலேயே தோழமைக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டி இலங்கை தமிழர்களின் துயர் துடைத்திட மனிதநேயத்தோடும் - தமிழ் இன உணர்வோடும் எடுத்த முடிவின் அடிப்படையிலேயே இந்த நிகழ்வுகள் நாடெங்கிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

இது அகில இந்திய அளவில் மட்டுமின்றி உலகளாவிய அளவிலும் இலங்கை தமிழர் பிரச்சினை மீது மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது.
சிங்கள அரசை சிந்திக்க வைத்திருக்கின்றது. கடந்த 7-ம் தேதியும், 8-ம் தேதியும் வட சென்னையிலும் - தென் சென்னையிலும் பிரமாண்டமான வகையில் நடைபெற்ற பேரணியும்- பொதுக்கூட்டமும் தமிழக மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் எழுச்சியோடு அமைந்தன.
தி.மு.க. - காங்கிரஸ் - முஸ்லிம் லீக் கட்சியின் தொண்டர்களும் மற்றும் இலங்கை தமிழர் நல உரிமை பேரவையில் அங்கம் வகிக்கும் தோழமைக் கட்சியினரும் மடைதிறந்த வெள்ளம்போல் கலந்து கொண்ட மாட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.
இன்று தமிழகம் இலங்கைத் தமிழர்களுக்காக எழுச்சியோடு அணி திரண்டுள்ளது.

இதற்கு காரணம் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் என்பது மறுக்க முடியாத உண்மையாகும்.

இன்று தமிழகத்தின் வீதியிலே ஒரு சிலர் வேறு விதமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் சுயநலவாதிகள் - இலங்கைத் தமிழர் நலனில் அக்கறையில்லாதவர்கள் - இரட்டை வேடம் போடும் தீய சக்திகள் என்பதை தமிழக மக்கள் இனம் கண்டுகொள்ள வேண்டும்.
இலங்கைத் தமிழர் பிரச்சினையின் வரலாற்றை திரும்பிப் பார்த்தால் பல உண்மைகள் புரியும்.

நம்முடைய முதல்வர் கலைஞருக்கு வயது 85. அவருடைய பொது வாழ்வுக்கு வயது 75. இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு வயது 53. இந்த வரலாற்று பின்னணியில் சங்கமித்தி ருக்காதவர்கள் - அப்போது பிறந்தேகூட இருக்காதவர்கள் எல்லாம் இன்று கலைஞரை குறை கூறுவது வினோதமாக இருக்கிறது.

1956-ம் ஆண்டு இலங்கைத் தமிழர் தலைவர் தந்தை செல்வ நாயகம் அவர்களும் அவ ரோடு அப்போது இளைஞராக இருந்த நாவலர் அமிர்தலிங்கம் அவர்களும் தந்தை - பெரியாரையும் - பேரறிஞர் அண்ணா அவர்களையும் - டாக்டர் கலைஞர் அவர்களையும் சந்தித்து இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு - அவர்தம் வாழ்வுரிமைக்கு வழிகாண கோரிக்கை வைத்தார்கள்.

அதுமுதல் திராவிட முன்னேற்றக் கழகம் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு காண மத்திய அரசின் மூலம் வலியுறுத்தியே வந்துள்ளது.
தமிழகத்தின் உணர்வுகளை பிரதிபலித்துக் கொண்டே வந்துள்ளது.
எங்களுடைய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியப் பெருந்தலைவர் காயிதெ மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள் தந்தை செல்வநாயகம் போன்ற மூத்த தலைவர்களின் கோரிக்கையை ஏற்று இலங்கைத் தமிழர்களுக்காக உரிய நடவடிக்கை களை மேற்கொண்டு வந்துள்ளார்கள்.

அவர்கள் இலங்கை சென்றபோதெல்லாம் இலங்கைத் தமிழர்களின் வாழ்வுரிமை குறித்தும் - இலங்கையில் உள்ள முஸ்லிம்களும் - தமிழ் மக்களும் இணக்கமாக வாழ்வது குறித்தும் இலங்கை தலைவர்களை சந்திக்கும் போதெல்லாம் கவலையோடு ஆலோசனை களை வழங்கியிருக்கிறார்கள்.

அந்த வகையிலேதான் இன்றைக்கு இலங்கையிலேயே அமைதி ஏற்பட, இலங்கையிலே போர் நிறுத்தம் ஏற்பட, அப்பாவி தமிழர்களின் உயிர் - உடைமைகள் காப் பாற்றப்பட இலங்கைத் தமிழர் நலஉரிமைப் பேரவையின் வாயிலாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் குரல் கொடுத்து கொண்டிருக்கிறது.

இந்திராகாந்தி - ராஜீவ்காந்தி - வி.பி.சிங், வாஜ்பாயி ஆகியோர் பிரதமராக இருந்த கால கட்டத்திலும் இப்போது அன்னை சோனியாகந்தி வழிகாட்டுதலில் நடைபெறும் டாக்டர் மன்மோகன்சிங் தலைமையிலான மத்திய அரசிடமும் வலியுறுத்தி இலங்கைத் தமிழர்களுக்காக உரிய நட வடிக்கைகளை மேற்கொண்டு வரும் தலைவர் முதல்வர் கலைஞர் அவர்களாகும்.

இரண்டு முறை இதற்காக பிரணாப் முகர்ஜி அவர்கள் இலங்கை சென்று வந்துள்ளார். சமீப காலத்தில் ஒருமுறை வெளியுறவு செயலாளர் இலங்கை சென்று வந்தார். நேற்றுகூட போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று இலங்கை அரசை பிரணாப் முகர்ஜி அவர் களும் - ப. சிதம்பரம் அவர்களும் வலியுறுத்தி வந்துள்ளனர்.

இதன்வாயிலாக உலக நாடுகளின் கவனம் இலங்கைத் தமிழர் பிரச்சி னைக்காக உற்று நோக்கியுள்ளது. முன்பு நார்வே நாடு மட்டும்தான் இலங்கை தமிழர் பிரச் சினையில் கவனம் செலுத்தியது.

இப்போது அமெரிக்கா - பிரிட்டன் - ஜப்பான் - பிரான்சு போன்ற நாடுகள் போர் நிறுத்தம் செய்து இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்று சிங்கள அரசை வலியுறுத்தி உள்ளன. ஐ.நா. சபை கவனம் செலுத்த தொடங்கியுள்ளது.

போப் ஆண்டவர் தன்னுடைய பிரதிநிதியை இலங்கைக்கு அனுப்பி போர்நிறுத்தம் குறித்து வலியுறுத்தியுள்ளனர்.

இதற்கு காரணம் காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசும் - முதல்வர் கலைஞர் அவர்களின் விவேகமான நடவடிக்கைகள்தானே தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
இதனைப் புரிந்தும் புரியாதவர்களாக ஒரு சிலர் திரிபுவாதம் செய்கிறார்கள்.
மத்தியில் காங்கிரஸ் அரசும் - மாநிலத்தில் தி.மு.க. அரசும் - பதவி இழக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

அவர்களின் நோக்கம் இலங்கைத் தமிழர்களை காப்பாற்றுவது அல்ல.
உள்நாட்டு அரசியலுக்காக - குறிப்பாக தமிழக அரசியலுக்காக வரும் நாடாளுமன்ற தேர்தல் அரசியல் ஆதாயத்திற்காக செத்து மடிந்து கொண்டிருக்கும் அப்பாவி இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையை பகடைக்காயாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை நாட்டு மக்கள் மன்னிக்க மாட்டார்கள்.

இலங்கைத் தமிழர் களின் நல்வாழ்வுக்காக மத்திய அரசும் - குறிப்பாக தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் அவர்களும் மேற்கொண்டு வரும் விவேகமான நடவடிக்கைகளுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுதியாக துணை நிற்கும்.

அதுவே உயரிய வழியாக இலங்கை தமிழர்களை பாதுகாக்கும்.
இவ்வாறு கமுதி பஷீர் உரையாற்றினார்.

Sunday, June 22, 2008

மவுலானாக்களுக்கெல்லாம் மவுலானா கலைஞர் கருனாநிதி



தி.மு.கழகத்திற்கும் எங்களுக்கும் தொப்புள் கொடி உறவு
கலைஞரின் வழியில் அவருக்கு உற்ற துணையாக முஸ்லிம் சமுதாயம் என்றும் அணி வகுத்து நிற்கும்


இந்திய யூனியன் முஸ்லிம் தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் பேச்சு (நன்றி – முரசொலி – 20.01.2004 இதழில் வெளிவந்தது)

கலைஞரின் வழியில் அவருக்கு உற்ற துணையாக முஸ்லிம் சமுதாயம் என்றும் அணி வகுத்து நிற்கும். தி.மு.கழகத்திற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகிற்கும் உள்ள உறவு தாய்க்கும் பிள்ளைக்குமுள்ள தொப்புள் கொடி உறவாகும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தமிழ் மாநில தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் பேசுகையில் குறிப்பிட்டார்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழுவில் அக்கட்சியின் தமிழ் மாநிலத்தலைவர் பேராசிரியர் காதர் மொய்தீன் பேசியதாவது:-

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் தலைவர்கள் கலைஞர் தலைமையிலான மதநல்லிணக்க முற்போக்கு கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சேர்கிறது என்பதைத் தெரிவித்தோம். கலைஞர் அவர்களும் நம்மை அன்போடு சேர்த்துக் கொண்டார்கள்.

கலைஞருக்கு முழு ஆதரவு

தமிழ்நாட்டிலே வாழக்கூடிய முஸ்லிம் சமூகத்தினருக்கு அங்கீகரிக்கப்பட்ட, ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரே அரசியல் பேரியக்கமாக இருக்கக்கூடிய இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கலைஞருக்கும் அவரது முற்போக்கு கூட்டணிக்கும் தன்னுடைய முழு ஆதரவையும் தந்து கலைஞருடைய தலைமையை ஏற்றுக் கொள்கிறது.

இந்த முடிவினை உங்களுக்கு தெரிவிப்பதில் நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகினைச் சேர்ந்த நாம், கலைஞர் அவர்களை புதிதாகப் பார்க்கக் கூடியவர்கள் அல்லர். நாம் அவர்களோடு இல்லாத நேரத்தில் கூட அவர்கள் அருகிலேதான் இருந்திருக்கிறோம்.

அவர்களிடமிருந்து நாம் தூரத்திலே சென்றிருந்தாலும் கூட அவர்களோடு நாம் இதயபூர்வமான உறவை தொடர்ந்தே வந்திருக்கிறோம்.

கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களுக்குப் பிறகு அவர்களுடைய ஸ்தானத்திலே இச்சமுதாயம் கலைஞர் அவர்களை அன்று முதல் இன்று வரை வைத்துப் போற்றி வருகிறது என்பதை இத்தருணத்திலே சொல்ல வேண்டியது என்னுடைய கடமை!

கலைஞரின் அற்புதமான உரை:

கலைஞர் அவர்களை விமர்சித்த காலம் எல்லாம் கூட உண்டு. அந்த சமயத்தில் அவர்கள் ஒரு நிகழ்ச்சியில் உரையாற்றியிருந்தார். முரசொலியிலே அந்த உரை வெளியாகியிருந்தது. அந்த உரை ஒரு அற்புதமான உரை அதனைச் சொல்வது பல பேருக்கு அதிசயமாக் கூட இருக்கலாம். திருக்குரானிலே உள்ள 6,666 வசனங்களில் ஆண்டவனைப் பற்றிய வர்ணனை: ஒரு வசனம்:

இறைவன் வானம் பூமிக்கெல்லாம் ஒளிமயமாக இருக்கக்கூடியவன், ஒளியாய் இருக்கக்கூடியவன் - என்று ஒளியைப் பற்றி திருக்குரானிலே இறைவனை சம்பந்தப்படுத்தி வருகிற அந்த ஆயத்துக்கு வசனத்துக்கு நானும் எனது 50 ஆண்டு கால ஆராய்ச்சிpலே தமிழ்நாட்டிலே உள்ள வியாக்யான கர்த்தாக்கள், உலகளவிலே உள்ள திருக்குரானுடைய காமெண்டேட்டர்கள், மாபெரும் அறிஞர்களுடைய உரைகளையெல்லாம் படித்திருக்கிறேன். அந்த ஆராய்ச்சிpயிலே நான் 40 ஆண்டு காலமாக என்னை இணைத்துக் கொண்டிருக்கிறேன்.

அந்த திருக்குரான் வசனத்திற்கு தமிpழிலே ஒரு அழகான இரத்தினச் சுருக்கமான விளக்கத்தை சொல்ல வேண்டுமென்று ஆசைப்பட்டிருந்த நேரத்திலேதான் கலைஞர் அவர்கள் தந்திருந்த அந்த உரையினை படித்து மெய்சிலிர்த்துப் போனேன்.

இது சாதாரண மனிதர் சொல்லக்கூடியது அல்ல. இது வலியுல்லாக்களும், ஆன்மீகச் செல்வங்களும், சொல்லக்கூடிய விளக்கம் என்று அவர்களுக்கே நான் எழுதினேன். இதை எப்படி நீங்கள் சொன்னீர்கள். எதைப் படித்துச் சொன்னீர்கள்? என்று கேட்ட போது சிரித்துக் கொண்டார்.

பட்டது சொன்னேன் என்றார். என்ன சொன்னார் தெரியுமா?

கற்பனைக்கு எட்டாத வெட்;ட வெளியிpலிருந்து தானே எழுந்து வெளிக் கிளம்பி வருகிற ஒளி வெள்ளம் என்று அதற்கு விளக்கம் சொல்லியிருக்கிறார்.

உங்களுடைய இந்த விளக்கம் : கலைஞர் அவர்களே உங்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காக இதை நான் சொல்லவில்லை. சரித்திரம் காணாத அளவிற்கு உங்களது பெயரும் புகழும் உயர்ந்திருக்கிறது.


உண்மையாகச் சொல்கிறேன், திருக்குரானில் இந்த வசனத்திற்கு யாரும் சொல்லாத அழகிய அர்த்தத்தை, அழகிய தெளிவுரையைச் சொன்ன உங்களை எங்களுடைய மவுலானாக்களுக்கெல்லாம் மவுலானவாக நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம். எங்களுடைய ஆன்மீக குருவாக நான் என்னைப் பொருத்தவரை ஒப்புக் கொள்கிறேன். ஆன்மீக ரீதியாக எனக்கு அறிவுரை கூறிய மிகப் பெரிய அறிஞராக நான் கலைஞரை ஏற்றுக் கொண்டிருக்கிறேன். அந்த உணர்வில்தான் அவர்களோடு நாம் என்றும் பழகி வந்திருக்கிறோம். அவர்களைப் போற்றி வருகிறோம். அவர்களைப் பாராட்டி வருகிறோம்.

நாடித்துடிப்பை அறிந்தவர்

கலைஞர் அவர்கள் ஏதோ இன்று நேற்று இந்த சமுதாயத்Nhடு உறவு கொண்டவரல்லர். இந்த சமுதாயத்தின் அடிமட்டத்திலிருந்து இந்த சமுதாயத்தினுடைய ஒவ்வொரு நாடித்துடிப்பையும் அறிந்தவர்.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கைப் பற்றி அணு அணுவாகப் புரிந்து கொண்டிருக்கிற மாமேதை அவர். நான் வெட்கப்படாமல் சொல்வேன், வெளிப்படையாகச் சொல்வேன் - திராவிட முன்னேற்றக் கழகத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் இருந்த காலத்திலேதான் நாங்கள் மதிக்கப்பட்டிருக்கிறோம். எங்களுடைய உரிமைகள் தரப்பட்டிருக்கின்றன. எங்களுக்கு கண்ணியம் காக்கப்பட்டிருக்கிறது.

உங்களோடு இருந்த காலத்திலே எங்களுக்கு அருகிலே எம்.பி. என்ற பட்டம் போட முடிந்தது. உங்களோடு இருந்த காலத்திலே ராஜ்ய சபை உறுப்பினர்களாக நாங்கள் ஆக முடிந்தது. உங்களோடு இருந்த காலத்திலேதான் சட்டமன்றத்திலே எம்.எல்.ஏக்கள் என்ற அந்த பட்டங்கள் எல்லாம் எங்களால் போட முடிந்தது. உங்களோடு இருந்த காலத்திலே தான் முனிசிபாலிட்டியிலே மாநகராட்சிpயிலே தலைவர்களாக துணைத் தலைவர்களாக எங்களால் வர முடிந்தது.

இதற்கு என்ன காரணம் என்று சொன்னால் தி.மு.கழகத்திற்கும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும் உள்ள உறவு மற்ற கட்சிகளுக்கு இடையே உள்ள உறவு போன்றதல்ல. இது தாய்க்கும் பிள்ளைக்கும் இடையே உள்ள உறவைப் போன்றது.

இது தொப்புள்கொடி உறவு என்று சொல்வார்களே அப்பேர்ப்பட்ட உறவு. யாதும் ஊரே யாவரும் கேளீர், ஒன்றே குலம் ஒருவனே தேவன், பிறப்பொக்கும் எல்லாவுயிர்க்கும் என்று தமிழ் நெறியை நீங்கள் (கலைஞர்) வரிவரியாக விளக்கி விவரித்து இந்த நாட்டு மக்களுக்கு போதனையாகச் செய்து கொண்டிருக்கிறீர்களே அந்த போதனையை தமிழ்நெறியை அந்தத் தமிழ்த் தத்துவங்களை உலகமெல்லாம் பரப்பிக் கொண்டிருக்கிற இஸ்லாமிய மார்க்கத்திலே பிறந்து வாழ்ந்து கொண்டிருக்கிற இந்த முஸ்லிம் சமுதாயம் தமிழ் நெறியின் தத்துவ மேதையாக தங்களை ஏற்றுக் கொண்டது மாத்திரமல்லாமல், இஸ்லாமிய நெறியின் போதகராக தங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறது என்பதை இந்நேரத்தில் சொல்ல வேண்டியது எனது கடமை!


கலைஞரோடு இருப்பது பொற்காலம்

உங்களோடு இருந்தகாலம், எங்களுக்குப் பொற்காலம். உங்களோடு இல்லாத காலம் எங்களுக்கு கற்காலம். அந்த கற்காலம் சில காலம் ஆனால் உங்ளோடு இருக்கக்கூடிய அந்த பொற்காலம் மீண்டும் திரும்பி விட்டது என்று அன்றைக்கு சொன்னீர்களே, அந்த பொற்காலம் இன்று திரும்பி விட்டது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கும், தி.மு.க.விற்கும் உள்ள இந்த உறவு ஏதோ அரசியல் ரீதியான உறவல்ல. குடும்ப ரீதியான உறவல்ல. பண்பாட்டு ரீதியிலான உறவு. தத்துவ ரீதியான உறவு. இதய பூர்வமான உறவு. உணர்ச்சி பூர்வமான உறவு. உண்மையான உறவு. யாராலும் தவிர்க்க முடியாத அற்புதமான நிரந்திர உறவு என்பதை நான் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அரசியலில் அவ்வப்போது சில விரும்பத்தகாத மாற்றங்கள் ஏற்பட்டது உண்டு. ஆனால் இத்தகைய மாற்றங்கள் இனி ஒரு போதும் ஏற்படமுடியாது ஏற்படக்கூடாது என்பதை நான் மீண்டும் தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

அத்தகைய பழைய கால பண்பாட்டு உறவை நினைவிலே வைத்து உங்களுடைய நடவடிக்கை அத்தனையும் எங்கள் மீது இருக்கும் என்பது எங்களுக்கு நன்றாகத் தெரியும்.

அந்த அன்பும் பாசமும் என்றும் தழைக்கும், நாளையும் தழைக்கும், நிரந்தரமாக தழைத்து நிற்கும்.

கலைஞருக்கு துணை நிற்போம்

இந்தச் சமுதாயம் உங்கள் பின்னே நின்று உங்களுக்கு ஒத்தாசையாக, நீங்கள் எடுக்கக்கூடிய எந்த முடிவாக, நீங்கள் செல்லக்கூடிய எந்த வழியாக இருந்தாலும், நீங்கள் ஆற்ற கூடிய பணி எதுவாக இருந்தாலும் அனைத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீகைப் பொறுத்தவரை மட்டுமல்ல, தமிழக முஸ்லிம் சமுதாயம் அனைத்தும்.. அதற்கு உறுதுணையாக நிற்போம், எங்களது அழைப்பை ஏற்று நீங்கள் சிறப்பாக வருகை தந்து எங்களுக்கு அறிவுரை கூற வந்திருப்பது கண்டு நாங்கள் மெத்தவும் மகிழ்ச்சி அடைகிறோம்.

எங்களது அகில இந்திய பொதுச்செயலாளர் அகமது அவர்கள் பல்வேறு பணிகளுக்கிடையிலும் நீங்கள் வருகிறீர்கள் என்று சொன்னவுடன் உடனே நிகழ்ச்சிக்கு வந்து சிறப்பித்துக் கொண்டிருக்கிறார். அவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.


தி.மு.க வின் பார்வையில் அன்று கண்ணியத்திற்குறிய காயிதே மில்லத் அவர்கள்

தி.மு.க வின் பார்வையில் இன்று கண்ணியமிழந்த முனீருல் மில்லத்??? அவர்கள்


அதிர்ச்சியடையாமல் முகவைத்தமிழனின் இந்த பதிவையும் பார்க்கவும்....