Showing posts with label லால்பேட்டை இணையதளம். Show all posts
Showing posts with label லால்பேட்டை இணையதளம். Show all posts

Friday, February 27, 2009

இந்தியா இஸ்லாமிய நாடா?

பாரதிய ஜனதா கட்சியின் சார்பு அமைப்புகளான விஷ்வ இந்து பரிசத் ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட அமைப்பினர் தர்ம ரக்ஷ மன்ச் என்ற பெயரில் கூட்டமைப்பு ஏற்படுத்தி முஸ்லிம்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.

இந்திய நாடு இஸ்லாமியர்களின் நாடல்ல, இந்தியா இஸ்லாத்திற்கு எதிரான நாடு மல்ல, இந்தியா சமாதானத்திற்கான நாடு என முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் பத்வா வெளியிட வேண்டுமென அந்த இந்து அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.


1924ம் ஆண்டிலேயே வெள்ளையர் ஆட்சியின்போதே முஸ்லிம் மார்க்க அறிஞர்கள் இந்தியா சமாதானத்திற்கான நாடு என்பதை வலியுறுத்தி பத்வா கொடுத்துள்ளனர்.


இந்த உலகம் மூன்று பிரிவாக உள்ளது. ஒன்று தாருல் இஸ்லாம். அதாவது இஸ்லாமிய நாடு.


இன்னொன்று தாருல் ஹர்பு. இஸ்லாத்திற்கு எதிரான நாடு.
மூன்றாவது தாருல் அமான். நடுநிலையான சமாதானமான நாடு. இந்த நாட்டில் இருக்கக் கூடியவர்கள் வேதங்களை பின் பற்றுகின்றவர்கள்.


1924-ல் மார்க்கத் தீர்ப்பளித்த இஸ்லாமிய அறிஞர்கள் இந்தியாவை தாருல் அமான் - சமாதானமான நாடு என்று மார்க்க தீர்ப்பு வெளியிட்டுள்ளனர். இந்த வரலாற்றை தெரிந்து கொள்ளாதவர்கள் புதிதாக ஃபத்வா கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

இந்திய தேச பற்றில் முஸ்லிம் சமுதாயம் எப்பொழுதுமே முன்னணியிலே இருந்து வருகிறது. அது என்றும் தொடரும்.


தாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இராமர் கோவிலை கட்டுவோம் என பாரதீய ஜனதா கட்சி செயற்குழுவில் அறிவிக்கப்பட்டுள்ளது.


இராமருக்கு கோவில் கட்டுவதை நாங்கள் எதிர்க்கவில்லை ஆனால் பாபரி மஜ்ஜித் இருந்த இடத்தில்தான் இராமர் கோவில் கட்டுவோம் என்பதை முஸ்லிம் சமுதாயம் மட்டுமல்ல இந்தியாவில் அனைத்து சமுதாய மும் ஏற்றுக்கொள்ளாது.


பள்ளிவாசல் திருமண பதிவை ஏற்க வேண்டும்
திருமணங்கள் அனைத்தும் பதிவாளர் அலுவல கங்களில் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் என அண்மையில் உச்சநீதி மன்றம் அறிவித்துள்ளது.


முஸ்லிம்களை பொறுத்தவரை ஒவ்வொரு திருமணமும் பள்ளிவாசல் திருமண பதிவேட்டில் முறைப்படி சாட்சியங்களோடு பதிவு செய்யப்படுகின்றன. இந்த பதிவே போதுமானது. இது பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்படும் பதிவிற்கு இணையானது.

ஏற்றுக்கொள்ளப்பட்டு நடைமுறையில் உள்ள இது தொடரப்பட வேண்டும். இவர்கள் பதிவாளர் அலுவலகத்திற்கு சென்று பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்துவது நல்ல தல்ல.


இந்த திருமணப் பதிவேடுகளுக்கு அத்தாட்சி வழங்குகின்ற அதிகாரம் பெற்றவர்களாக காஜிகள் உள்ளனர்.


தமிழ்நாட்டிலுள்ள 33 மாவட்டங்களில் கிட்டத்தட்ட பாதி மாவட்டங்களுக்கு காஜிகள் நியமிக்கப்பட்டுவிட்டனர். மீதியுள்ள மாவட்டங்களுக்கும் காஜிகள் நியமிக்கப்பட வேண்டும்.


இவ்வாறு பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

லால்பேட்டை இணையதளம்

Monday, February 23, 2009

தமிழகத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் 2 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.


சென்னை, பிப்.23-

தமிழகத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் 2 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

சினிமா துறையினருக்கான மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதினை இந்திய வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இரண்டு முறை பெறும் சாதனையை படைத் துள்ள ஏ.ஆர். ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் கலைஞர், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலா ளர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளதுடன். தமிழக சட்டமன்றத்தில் ஏ.ஆர். ரஹ்மானை பாராட்டி தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருது

உலகில் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ்ஏஞ்சல்சில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த ஸ்லம் டாக் மில்லினர் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

சிறந்த இசைக்கான விருது மற்றும் சிறந்த பாடல் ஜெய் ஹோவிற்கான விருதை ஏ.ஆர். ரஹ்மான் பெற்றுள்ளார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெறும் முதல் இந்தியர் ஏ.ஆர். ரஹ்மான் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். ஆஸ்கர் விருதை பெறும் 4-வது இந்தியர் இவர்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே

தமிழில் நன்றி கூறினார்

ஸ்லம்டாக் படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர்| விருது கிடைத் துள்ளது. விருதுகளைப் பெற்றுக்கொண்ட அவர், ஹஎல்லாப் புகழும் இறைவ னுக்கே| என்று தமிழில் கூறி நன்றி தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எட்டு ஆஸ்கர்

ஸ்லம்டாக் படத்தின் திரைக்கதை, ஒளிப்பதிவு, சவுண்ட் மிக்சிங், பிலிம் எடிட்டிங், இசையமைப்பாளர் ஆகிய பிரிவுகளை சேர்த்து மொத்தம் 5 ஆஸ்கர் விருது வழங்கப் பட்டுள்ளது.

மேலும் பின்னனி பாடலுக்காக ஏ.ஆர். ரஹ்மா னுக்கு ஒரு விருதும் மற்றும் இருவருக்கு தலா ஒரு விருது உட்பட மொத்தம் 8 ஆஸ்கர் விருதுகள் இந்தி யாவுக்கு கிடைத்துள்ளது.

ரஹ்மானுக்கு தலைவர்கள் பாராட்டு

ஹஸ்லம்டாக் மில்லினர்' படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசை மற்றும் சிறந்த பாடலுக்கான இரண்டு ஆஸ்கார் விருது கிடைத்தது. ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சிறந்த மிக்சிங் சவுண்டு அமைத்த ரசல்ப+குட்டிக்கு ஜனாதிபதி பிரதிபா பட்டீல், பிரதமர் மன்மோ கன் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள் ளார். இந்தியாவுக்கு பெறுமை சேர்த்திருக்கிறார்கள் என்று கூறியுள் ளனர். சபாநாயகர் சோம் நாத் சட்டர்ஜியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் கலைஞர்

முதல்வர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இசை என்றாலே தமிழில் புகழ் என்றுதான் பொருள். அந்தப் பொருளுக்கு ஏற்ப ப+த்து மலர்ந்து, புகழ் பெருக்கி இன்று சிகரத்திற்கே சென்று சிரித்த முகத்தோடு நம்முடைய வாழ்த்துக்களை பெறுகிற சென்னையில் பிறந்த செல்வன் ஏ.ஆர்.ரகுமான். இவருக்குக் கிடைத்துள்ள ஆஸ்கார் விருதுகள் கண்டு முத்தமிழே முறுவலிக்கிறது. சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இந்த செல்வம் இன்று ஆஸ்கார் விருதுகளைப் பெற்றதின் மூலம் தரணிவாழ் கலைஞர்கள் உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்று விட்டார். குறிப்பாகவும் சிறப்பாகவும் உரிமையோடு சொல்ல வேண்டுமானால் இது நம் வீட்டுப் பிள்ளைக்குக் கிடைத்த மிகப் பெரிய கீர்த்தி சிறப்பு பெருமை ரகுமான் புகழ் மகுடத்தில் இந்த ஆஸ்கார் பதித்துள்ள மாணிக்க மரகதகற்களாக இந்த விருதுகளை நான் கருதுகிறேன். தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும், அதற்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிற நானும், தமிழ்நாட்டின் ஆறு கோடி மக்களும், ஏன் இந்தியத் திருநாட்டின் நூறு கோடி மக்களும், உலகக் கலைஞர்களும் மலர் தூவி, வரவேற்று, மகிழ்ச்சியைத் தெரிவித்து - மாசற்ற மனதோடு சேயாகப் பாவித்து-தாயாக நின்று வாழ்த்துகின்றபோது- அந்த வாழ்த்துக்களில் என் வாழ்த்துக்களும் இணைகிறது. வாழ்க ரகுமான்! ஆஸ்கார் விருதுகள் பெற்ற அருமைத் தம்பி இன்னும் ஆயிரம் ஆயிரம் விருதுகள் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

சட்டபேரவையில் பாராட்டு

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது உறுப்பினர்கள் அனைவரும் மேஜையை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சென்னை மாநாகராட்சி பாராட்டு

இதேபோல், சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் விவாத கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் தொடங்கியதும் மேயர் மா.சுப்பிரமணியன், இந்திய திரைத் துறையின் கனவாக இருந்த ஆஸ்கார் விருதை தமிழகத்தை சேர்ந்த குறிப்பாக சென்னையை சேர்ந்த இளம் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பெற்றுள்ளதற்கு சிறப்பு பாராட்டு தீர்மானத்தை வாசித்தார்.

பேராசிரியர் கே.எம்.கே. வாழ்த்து

இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள ஏ.ஆர். ரஹ்மானுக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவித்து தந்தி அனுப்பியுள்ளார்.

பெருமிதத்தில் தமிழகம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருது பெற்றுள்ளதற்கு பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர்.

தமிழகமே பெருமிதத்தால் விழாக்கோலம் ப+ண்டுள்ளது. விருதினை பெற்று சென்னை திரும்பும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு மிகப் பிரமாண்டமான வரவேற்பும் பாராட்டு கூட்டமும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

லால்பேட்டை இணையதளம்,

Thursday, February 19, 2009

பாராளுமன்ற தேர்தல்_ கருத்துக்கணிப்பு

பிரபல தொலைக்காட்சி மற்றும் ஆய்வு நிறுவனங்கள் (CNN-IBN CSDS) இணைந்து நடத்திய பாராளுமன்ற தேர்தல் முடிவு முன்னோடி கணிப்பு நேற்று (17/2/09) இரவு 10 மணிக்கு CNN-IBN தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பட்டது.

நாளை பாராளுமன்ற தேர்தல் நடந்தால் மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்று மக்கள் வினவப்பட்டு அதன் அடிப்படையிலான - முன்னோடி கணிப்புகள் தரப்பட்டன.

தமிழகத்தில் அ.தி.மு.க - வலுவடைந்து வருகிறதாம். கடந்த இரண்டு ஆண்டுகளில் தி.மு.க தனது செல்வக்கை இழந்து விட்டதாம். .

2007ல் 67 சதவிகித வாக்களர்கள் தி.மு.க கூட்டனியின் செயபாடுகள் திருப்திகரமாக உள்ளதாக கூறியதாகவும் ஆனல் தற்போது (2009) 63 சதவிகிதத்தினரே அவ்வாறு கூறுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.

தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலா 28 சதவிகித வாக்குகளையும் காங்கிரஸ் 13% வாக்குகளை பெறுமென்று கணிக்கப்பட்டிருக்கிறது..

நடிகர் விஜயகாந்த் தலைமையிலான தேசிய முற்போக்கு திராவிட கழகம் 9 சதவிகித வாக்குகளை பெற்று மற்ற கட்சிகளை விட குறிப்பாக பா.ம.க (4%), இடது சாரிகள் (3%) விட முன்னனியில் உள்ளது.

அதிகமாக வாக்குகளை பெறும் என்று எதிர்ப் பார்க்கப்பட்ட ம.தி.மு.க ஒரே ஒரு சதவிகித வாக்கைத்தான் பெறுமாம். வகுப்பு வாத பா.ஜ.க வரும் தேர்தலில் தமிழகத்தில் 6 சதவிகித வாக்குகளை பெறும் என்று இந்த முன்னோடி முடிவுகள் கணித்திருப்பது - அதிர்ச்சிடனும் - துக்கத்துடனும் சற்று சிந்திக்க வைக்கிறது.

அ.தி.மு.க வுக்கு செல்வாக்கு யார் மத்தியில் உயர்ந்திருக்க்கிறது தெரியுமா?

உயர் வகுப்பினர்கள் மத்தியில் 35 சதவிகிதமும்வன்னியர்கள் மத்தியில் 33 சதவிகிதமும் நாடார்கள் மத்தியில் 17 சதவிகிதமும்பெண்கள் மத்தியில் 13 சதவிகிதமும் அதிகரித்திருக்கிறதாம்.

தமிழக இஸ்லாமியர் மத்தியிலும் அ.தி.மு.க வின் செல்வாக்கு அதிகரித்திருக்கிறதாம்.கடந்த தெர்தலில் அதிமுக வுக்கு வாக்களித்த முஸ்லிம்களின் எண்ணிக்கையை விட 10 சதவிகித அதிக தமிழக முஸ்லிம்கள் இந்த முறை அ.தி.மு.க வுக்கு வாக்களிப்பார்களாம்.

இயக்கமின்றி முடங்கி கிடக்கும் அமைப்புக்கள் நிறைய இருந்தும்- நிறைவில்லாமல் - புற்றீசல்களாய் புதுப்புது இயக்கங்களை தொடங்கி வரும் சுயநலமில்லாத (!) 'சமுதாயக்காவலர்களின் (?)' 'அதாபு' தாங்காமல் - தமிழக முஸ்லிம்களே சலிப்படைந்து 'அம்மாவுக்கு' வாக்களித்து விடுவோம் என்று முடிவு செய்து விட்டார்கள் போலிருக்கிறது..

நன்றி
தோழமையுடன் பிறைநதிபுரத்தான்

ஐ.ஏ.எஸ். தேர்வு: ஏழை முஸ்லிம்களுக்கு இலவச பயிற்சி

பொருளாதார வசதியற்ற, படிப்பில் தகுதி பெற்ற முஸ்லிம் மாணவர்கள் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற தேர்வுகளை எழுதி வெற்றிபெற சென்னையில் இலவச தங்குமிடம், உணவு மற்றும் சிறந்த பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி அளித்து உதவ தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம் முன்வந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கத்தின் பொதுச் செயலாளர் பேராசிரியர் சே.மு. முஹம்மதலி வெளியிட்டுள்ள பத்திரிகை செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது-பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய ஆர்வமுடைய முஸ்லிம் மாணவர்களுக்கு ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.எஃப்.எஸ். போன்ற தேர்வுகளை எழுதி வெற்றிபெற வழிகாட்டும் வகையில் இத்திட்டத்தினை துவக்கியுள்ளோம்.

இத்திட்டத்தின் கீழ் ஐ.ஏ.எஸ். முதல் நிலைத் தேர்வு எழுத இருப்பவர்கள்முதல் நிலை தேர்வில் தேர்ச்சி பெற்று முதன்மைத் தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருப்பவர்கள் பயன் பெறலாம்.

விண்ணப்பிக்கும் மாணவர்களிடம் நேர்காணல் செய்து, தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக் கப்படும் மாணவர்களுக்கு சென்னையில் தங்குமிடம், உணவு, சிறந்த மையத்தின் மூலம் பயிற்சி, நூலக வசதி முதலியன முற்றிலும் இலவசமாக செய்து தரப்படும்.

ஆர்வமுள்ள மாணவர்கள் எஸ்.எஸ்.எல்சி., (10-ம் வகுப்பு), பிளஸ் 2, பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு முதலான மதிப்பெண் சான்றிதழ்களின் நகல்களோடும், ஜமாஅத் தலைவர் சான்றிதழோடும் சுய விவரக் குறிப்பினை க்ஷiடி-னுயவய உடனடியாக அனுப்பி விண்ணப் பிக்கலாம்.

முகவரி -
தமிழ்நாடு முஸ்லிம் தொண்டு இயக்கம்,
118ஃ13, வேப்பேரி நெடுஞ்சாலை,
பெரியமேடு,
சென்னை - 3.
அலைபேசி, பொதுச் செயலாளர் - 9444165153

Tuesday, February 17, 2009

பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மத்ரஸாக்களில் பணியாற்றும் உலமாக்கள், பணியாளர்களுக்கு நல வாரியம் நிதி அமைச்சர் க.அன்பழகன் அறிவிபப்பு

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிவாசல்கள், தர்ஹாக்கள் மதரஸாக்களில் பணியாற்றும் உலமாக்கள், பணியாளர்களுக்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியம் அமைக்கப்படும் என தமிழக சட்டப் பேரவையில் இன்று தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் கூறிப்பிடப்பட்டுள்ளது.

உலமாக்கள், பணியாளர்களுக்கு நல வாரியம் அமைக்கப்பட வேண்டுமென்ற சமுதாயத்தின் கோரிக்கையை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முன்னிலைப்படுத்தி வந்தது.

கடந்த 1ம் தேதி சென்னை கலைவானர் அரங்கில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நடத்திய மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு உலமாக்கள்-உமராக்கள் மாநாட்டில் இது பிரதான தீர்மானமாக இடம்பெற்றிருந்தது.

இம்மாநாட்டில் பங்கேற்று நிறைவுறையாற்றிய தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் தளபதி மு.க.ஸ்டாலின் உரிய நேரத்தில் உணர்வோடும் உரிமையோடும் இத்தீர்மானத்தை கலைஞர் நிறைவேற்றி தருவார் அதற்கு நான் துணை நிற்பேன் என உறுதியளித்தார்.

இன்று தமிழக சட்டப் பேரவையில் 2009-10ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை தமிழக நிதி அமைச்சர் பேராசிரியர் க.அன்பழகன் தாக்கல் செய்தபோது இந்த கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பேராசிரியர் க.அன்பழகன் தாக்கல் செய்துள்ள நிதிநிலை அறிக்கையில் சிறுபான்மை முஸ்லிம் களுக்காக குறிப்பிடப்பட் டுள்ள விவரங்கள் வருமாறு:

சிறுபான்மையினர் நலன்

சமூகப் பொருளாதார மற்றும் கல்வி நிலையில் பின்தங்கியுள்ள சிறுபான்மையினரான இஸ்லாமியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு களில் 3.5 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்கியதோடு, சிறுபான்மையினர் முன்னேற்றத்தில் தனிக் கவனம் செலுத்துவதற்காக, சிறுபாமையினருக்கான தனி இயக்குநரகம் ஒன்றையும் இந்த அரசு ஏற்படுத்தியுள்ளது.

சிறுபான்மையின இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை பெறத் தேவையான திறன் மேம்பாட்டுப் பயிற்சி திட்டத்தின் கீழ் சுமார் 8 ஆயிரம் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

வரும் நிதியாண்டில் தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம், 10 ஆயிரம் சிறுபான்மையினருக்கு ரூ.30 கோடி கடனுதவி வழங்கப்படும்.

மேலும், மாநிலத்தில் உள்ள பள்ளிவாசல்கள், தர்காக்கள் மற்றும் மதரஸாக்களில் உள்ள உலமாக்கள் மற்றும் பணியாளர்களுக்கென உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியம் ஒன்று அமைக்கப்படும்.

இவ்வாறு பேராசிரியர் க. அன்பழகன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

தமிழ்நாடு அரசின் இந்த அறிவிப்பிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நன்றி தெரிவித்துள்ளது.
.

Monday, February 16, 2009

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் அபாண்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம்

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராகடாக்டர் ராமதாஸ் அபாண்டம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று முன்தினம் திண்டிவனம் தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் ஐ.எஸ்.ஐ. உளவாளிகளிடம் பயிற்சி பெற்று திரும்பி இருப்பதாகவும் அவர்களால் இந்தியாவிற்கு ஆபத்து என்றும், குறிப்பாக கூடங்குளம், கல்பாக்கம் அணுமின்நிலையம் போன்ற கேந்திரங்களுக்கு பெரும் ஆபத்து என்றும் குறிப்பிட்டு அந்த பேட்டி முக்கியமான நாளிதழ்களில் முக்கியதுவத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் இந்துத்துவ வகுப்புவாத சக்திகள் முஸ்லிம்கள் மீது சுமத்தி வந்த குற்றச்சாட்டுகளுக்கு ஈடாக தமிழக முஸ்லிம்களையும் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடிய சூழ்நிலைக்கு டாக்டர் ராமதாஸின் பேட்டி வழிவகுத்துள்ளது. இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும். அப்பாவி தமிழ் மக்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்படகூடாது என்பதில் தமிழக முஸ்லிம்களும் இலங்கை வாழ் முஸ்லிம்களும் அக்கறை கொண்டவர்கள்.

ஏனெனில் இலங்கை இராணுவத்தின் கோரத் தாக்குதலில் அப்பாவி தமிழர்கள் இலங்கையில் பாதிக்கப்படுவதைபோல், விடுதலைப்புலிகளால் இலங்கை முஸ்லிம்கள் பலமடங்கு பாதிக்கப்பட்ட வர்கள்.குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் நள்ளிரவு 12 மணிக்கு துப்பாக்கி முனையில் புகுந்த விடுதலைப்புலிகள், இலட்சத்திற்கும் மேற்பட்ட அங்குள்ள முஸ்லிம்களின் அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கி கொண்டு 24 மணி நேர அவகாசத்தில் வாழ்ந்த இடங்களை விட்டு உடுத்திய உடைகளோடு வெளியேற்றியதை வரலாறு மறக்க தயாராக இல்லை.

அவர்களில் பலரது பூர்வீகம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி, இராமநாதபுரம், தஞ்சை மாவட்டங்கள் என்ற வரலாறு ராமதாஸை போன்ற வர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.இலங்கையின் கிழக்கு மாகானத்திலுள்ள காத்தான் குடி பள்ளிவாசலில் இரவு தொழுகை தொழுது கொண்டிருந்த நிராயுதபாணிகளான முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கானவர்களை விடுதலை புலிகள் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றது டாக்டர் ராமதாஸை போன்றவர்களுக்கு மறந்திருக்கலாம். ஏனெனில் இலங்கை தமிழர்களுக்காகவே வாழ்நாள் எல்லாம் உழைத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி யின் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், உள்ளிட்டவர்கள் விடுதலைப்புலிகளால் கொல்லப் பட்டதையே மறந்து விட்டவர்கள்தானே இவர்கள்.புலனருவ மாவட்டத்தில் நள்ளிரவில் புகுந்த விடுதலைப்புலிகள் முஸ்லிம் பச்சிளம் குழந்தைகளை கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றதை மனசாட்சி உள்ள எவருமே மறக்க மாட்டார்கள்.

தமிழகத்தின் தொப்புள்கொடி உறவு தமிழர்கள் இலங்கையில் உள்ள தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள்தான் அவர்களுக்கு குடியுரிமை கொடுக்கக் கூடாது என தடுத்தவர்கள் யாழ்ப்பாண தமிழர்கள் என்பதும், இதைப்பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய நாடாளுமன்றத்தில் திரு.கே.டி. கோசல்ராம் நாடார் அவர்கள் சுட்டிக்காட்டியதும் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட ஒன்று.இவைகள் அனைத்தையும் மறந்து விட்டு, சொந்த நாட்டிலும் பிற நாடுகளிலும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற அப்பாவி இலங்கை முஸ்லிம்கள் மீது அநியாயமான அவதூறை டாக்டர் ராமதாஸ் சுமத்துவது, இந்திய தாய் நாட்டின் மீது விசுவாசம் கொண்டு பிரிவினை நேரத்தில் கிழக்கு பாகிஸ்தானி லிருந்து அஸ்ஸாமிற்கு வந்து குடியேறிய முஸ்லிம்களை, வங்கதேச வெளிநாட்டவர் என்று விரட்டத்துணியும் பாரதிய ஜனதாவின் செயலை விட கொடூர செயலாகும்.

நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இலங்கை பிரச்சினையில் காய் நகர்த்தும் டாக்டர் ராமதாஸ், இலங்கை தமிழர்கள் மீது அக்கறை கொண்டவராக இருப்பாரேயானால், இந்திய அரசு இலங்கை தமிழர்களை காப்பாற்ற உருப்படியாக எதையும் செய்யவில்லை என்று அவர் சொல்வது உண்மையாக இருக்குமேயானால் மத்திய அமைச்சராக உள்ள அவரது மகன் பதவியை விலக செய்துவிட்டு அறிக்கைகளை வெளியிடட்டும்.

அதை விட்டுவிட்டு முஸ்லிம்கள் மீது அபாண்ட பழி சுமத்துவது அவரது சாயத்தை வெளுக்க வைக்கும் செயலாகும். இதனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிக்கிறது.
- காயல் மகபூப்.
மாநில செயலாளர்தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Sunday, February 15, 2009

நாடாளுமன்ற தேர்தல் குறித்து சோனியாகாந்தியுடன் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் டெல்லியில் ஆலோசனை

புதுடெல்லி, பிப்.15-

நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அண்மையில் நடைபெற உள்ள சூழ்நிலையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சியின் தலைவருமான சோனியா காந்தியை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர்கள் இ. அஹமது, தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர்சந்தித்து பேசினர்.

நாடாளுமன்ற பொதுத்தேர்தல் அண்மையில் நடைபெறவிருப்பதால் அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளில் இறங்கியுள் ளன.

தேசிய அளவில் புதிய எழுச்சி பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வரும் நாடாளுமன்ற தேர்தலில் வடஇந்தியாவிலும் பல தொகுதிகளில் போட்டியிடுவதை குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறது.

இதன் முயற்சியாக உத்தரப்பிரதேசம், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மாநில அளவிலான இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் பிரதிநிதிகள் மாநாடு நடத் தப்பட்டு தேர்தல் தொடர்பாக முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

இந்த தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தோழமை நிலைப்பாடு மற்றும் வடஇந்திய மாநி லங்களில் போட்டியிடு கின்ற சூழ்நிலைகள் குறித்தும் ஆலோசித்து வருகிறது.

இன்று காலை புதுடெல்லியில் உள்ள தேசியத் தலைவரும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான இ.அஹமதுவின் இல்லத்தில் உத்தரபிரதேச மாநிலத்தின் முஸ்லிம் லீக் நிர்வாகிகளின் உயர்மட்ட ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் இ.அஹமது தலைமையில் தேசிய பொதுச்செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., முன்னிலையில் நடைபெறும் இக்கூட்டத்தில் தேசிய துணைத் தலைவர் வழக்கறிஞர் இக்பால் அஹமது, தேசிய செயலாளர் குர்ரம் ஹனீஸ் உமர், உ.பி. மாநிலத் தலைவர் மவ்லானா கவுஸர் ஹயாத்கான், உ.பி. மாநில பொதுச் செயலாளர் டாக்டர் மத்தீன்,
உ.பி. மாநிலச் செயலாளர்கள் நிஸார் மஹமூத், சௌத்ரி ரஸீயுதீன், இன்ஜினியர் அலி ஆரீப் உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டுள்ளனர்.

தமிழ்நாட்டில்
தி..மு.க. கூட்டணி...
வரும் நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் தி.மு.க. தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் 40 தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடும் வகையில்- அரசியல் விழிப்புணர்ச்சி ஏற்படுத்தும் வகையில் மாநாடுகளை நடத்தி வருகிறது.
கேரள மாநிலத்தில் காங்கிரஸ் தலைமையில் அமைக்ப்பட்டுள்ள கூட் டணியில் இடம் பெற்றுள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் முஸ்லிம்கள் வாக்குகளை ஒருமுகப் படுத்தும் நிகழ்ச்சியாக பல்வேறு ஒருங்கிணைப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது.

சோனியாகாந்தியுடன்
முஸ்லிம் லீக் தலைவர்கள் சந்திப்பு
இதனிடையே நேற்றைய முன்தினம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தியை இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசியத் தலைவர் இ. அஹமது, தேசிய பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஆகியோர் சந்தித்து நாடாளுமன்ற தேர்தல் குறித்து விவாதித்துள்ளனர்.
இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக எமது டெல்லி செய்தியாளர் தெரிவிக்கிறார்.