Showing posts with label இந்திய யூனியன் முஸ்லிம் லீக். Show all posts
Showing posts with label இந்திய யூனியன் முஸ்லிம் லீக். Show all posts

Saturday, June 19, 2010

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு பற்றி முஸ்லிம் லீக் மாநில செயலாளர்

கொங்கு மண்டலத்தில் நடைப்பெற இருக்கும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் வெற்றிச் செய்திகளை நாள் தோறும் கேட்டு மகிழ்கிறோம் முத்தமிழ் காவலர் டாக்டர் கலைஞர் அவர்கள் தலைமையில் நடைப்பெற இருக்கும் இந்த சிறப்பான உலகத் தமிழ் செம்மொழி மாநாடு போன்று உலகில் இது வரையில் யாரும் மாநாடு நடத்தவில்லை என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்கள் சொல்லிக்காட்டி இருப்பது சரியான செய்தியாகும்.

 உலகெங்குமிருந்தும் அறிஞர் பெருமக்கள் இந்த மாநாட்டில் பங்கேற்கிறார்கள் அரபு நாடுகளிலிருந்தும் அறிஞர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்ப்பத்தின் மூலம் தமிழகத்துக்கும் -அரபகத்துக்குமுள்ள நெருக்கத்தையும் நேசத்தையும் காட்டுகிறது நம் நாட்டு அரசியல் நிர்ணயச் சபையில் என் தாய் மொழியான தமிழ் மொழியை இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக ஆக்குங்கள்


தமிழ் மொழி இந்திய நாட்டின் ஆட்சி மொழியாக திகழ்வதற்கு எல்லாத் தகுதியையும் பெற்ற மொழியாக திகழ்கிறது என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் காயிதே மில்லத் கூறினார்கள்

இன்று நம் தாய் மொழியான தமிழ் மொழிக்கு உலகம் தழுவிய அளவில் மாநாடு நடத்தி தமிழ் மொழியின் சிறப்பை பற்றியும் அதன் இனிமையைப்பற்றியும் உலகெங்கும் அறியச்செய்த முத்தமிழ் காவலர் டாக்டர் கலைஞர் அவர்களின் பணி சிறப்பானதாகும்

இஸ்லாம் எங்கள் வழி இன்பத்தமிழ் எங்கள் மொழி என்று நாடெல்லாம் நறுமணம் வீசச்செய்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவராக பணியாற்றிய அப்துல் சமத் அவர்களின் சந்தனத்தமிழ் உரைகளை எண்ணி மகிழ்கிறோம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் அவர்களின் வேண்டுகோள் ஏற்று நாடெங்குமுள்ள இஸ்லாமிய சமுதாயத்தினர் இந்த மாநாட்டில் அணி அணியாய் பங்கேற்ப்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சியாகும் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு சிறக்க வாழ்த்துகிறோம்


இங்ஙனம்

ஏ.ஷபிகுர் ரஹ்மான்

மாநில செயலாளர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

36,காயிதே மில்லத் மன்ஜில்,மண்ணடி சென்னை -01

அலைபேசி- 9787280133

Friday, October 16, 2009

ஹைதராபாத் செய்தியாளர் கூட்டத்தில் முஸ்லிம் லீக் கடும் கண்டனம்

இந்தியாவிற்கு பொது சிவில் சட்டம்| கொண்டு வரப்பட வேண்டும் என வலியுறுத்தி கருத்தரங்கு நடத்தி அதில் இஸ்ரேல் போன்ற வெளிநாட்டு பேராசிரியர்களை பேச வைத்ததன் மூலம் இந்திய உள்நாட்டு விவகாரங்களில் அந்நிய தலையீட்டை அனு மதித்துள்ளது கடும் கண்ட னத்திற்குரியது என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் தேசியப் பொதுச் செயலாளர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் ஹைதராபாதில் செய்தியாளர்களிடம் பேசுகையில் தெரிவித்ததாவது-

இந்தியாவில் பொது சிவில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்து அவ்வப்போது ஆங்காங்கே திணிக்கப்பட்டு வரும் நேரத்தில் இந்தியாவின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கே.ஜி. பால கிருஷ்ணன் புது டெல்லியில் எம்.கே. நம்பியார் நினைவு சொற் பொழிவில் சிறப்புரை யாற்றியபோது பொது சிவில் சட்டம் என்பது மிக மிக உணர்வுப்ப+ர்வமான பிரச்சினை. ஏனெனில் இந்தியாவில் பல்வேறு மத, சாதி, இன மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். அவர் களிடையே பொது சிவில் சட்டம் போன்ற ஒன்றை அமல்படுத்துவது என்பது மிகவும் கடினமானது என்று கருத்து தெரிவித் திருந்தார். பிரச்சினையின் ஆழத்தை புரிந்து கொண்டு வரவேற்கத்தக்க இந்த கருத்தை அவர் வெளிப்ப டுத்தியதற்காக இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் சார்பில் பாராட்டுதலை தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னையில் எம்.கே. நம்பியார் நினைவு அறக் கட்டளை சார்பில் கடந்த 10-ம் தேதி இந்தியாவிற்கு பொது சிவில் சட்டம்| என்ற தலைப்பில் நடை பெற்ற ஒரு கருத்தரங்கில் இஸ்ரேல் நாட்டின் பேராசிரியர்கள் ஷிமோன் ஷெட் ரிட், ஹிராம் சூடோஸ் ஆகியோர் கலந்து கொண்டு இந்தியாவில் பொதுசிவில் சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

வெளிநாட்டைச் சேர்ந் தவர்கள் இந்தியாவின் உள் விவகாரத்தில் தலையிட்டு உணர்ச்சிமயமான ஒரு விஷயத்தில் கருத்து தெரிவித்திருப்பது மிகுந்த கண்டனத்துக்குரியது. இவர்கள் பங்கேற்ற இந்த விழாவிற்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எச்.எல். கோகலே தலைமை ஏற்றுள்ளார் என்ற செய்தி துரதிருஷ்டவசமானது.

நாம் அறிந்த வரையில் இந்திய அரசு பண்டித ஜவஹர்லால் நேரு அளித்துள்ள உறுதிமொழி இன்னமும் தொடர்வதாகவே நம்புகிறோம். சிறு பான்மை மக்கள் தாங்க ளாகவே முன்வந்து தங்களுக்கும் பொதுவான சிவில் சட்டம் வேண்டும் என்று கூறுகின்ற வரையில் அரசு ஒருபோதும் பொது சிவில் சட்டம்| பற்றிய எந்த ஒரு முடிவையும் அறிவிக்காது என்று நேருவின் அந்த உறுதிமொழியில் தெளி வாக குறிப்பிடப்பட்டிருந்தது.

ஹபொது சிவில் சட்டம்| பற்றி அரசியல் தலைவர்களும், நீதியரசர்களும் ஆட்சியாளர்களும் பின்பற்ற வேண்டிய கருத்தை நேரு அவர்களுடைய உறுதிமொழி தெளிவுபடுத்தியிருக்கிறது. இதற்கு மாற்றமான கருத்தை யார் பேசினாலும் அது இந்த நாட்டில் தேவையற்ற குழப்பத்தையே விளைவிக்க வழி வகுக்கும் என இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சுட்டிக் காட்ட கடமைப்பட்டுள்ளது.

ஆந்திர மாநிலத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் புதிய எழுச்சி
ஆந்திர மாநிலத்தில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் புதிய எழுச்சியுடன் உத்வேகம் அடைந்து வரு கிறது. மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் இன்று புதிய நிர்வாகக் குழு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் உயிர்க் கொள்கை சமூக நல்லிணக்கம். பச்சிளம்பிறைக் கொடி எங்கெல்லாம் பறக்கிறதோ அங்கெல்லாம் அமைதியும், சமூக நல்லிணக்கமும் தழைத்தோங்குகிறது என்பது வரலாற்று உண்மை. இந்த வரலாறு ஆந்திர மாநிலம் முழுவதும் எல்லா இடங்களிலும் புதுப்பிக்கப்பட வேண்டும் என புதிய நிர்வாகக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் முஸ்லிம் லீகின் மீது அதிக ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது. பல்வேறு மாநிலங்களிலும் ஏராளமான இளைஞர்கள் பல்வேறு அமைப்புகளிலி ருந்து விலகி இந்திய ய+னி யன் முஸ்லிம் லீகில் சேர்ந்த வண்ணம் உள்ளனர். ஆந்திர மாநிலத்திலும் இதே நிலைமையைப் பார்க்கிறோம்.

கர்நாடகத் தலைநகர் பெங்களுருவில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பிரதிநிதிகள் மாநாடு அடுத்த ஆண்டு ஜனவரி முதல் வாரம் நடைபெற உள்ளது. இந்த மாநாடு இந்தியாவில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்தும். இந்தியா முழுவதும் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் ஒரேவிதமான கொள்கை நடைமுறை களை பின்பற்ற வழி ஏற் படுத்தும்.

இந்த மாநாடு இந்திய அரசியலில் முஸ்லிம் லீகிற்கு தனிப்பெரும் முக்கி யத்துவம் பெறும் வாய்ப்பை உருவாக்கித் தரும். நாடு முழுவதிலு மிருந்து 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் இம் மாநாட்டில் பங்கேற் கிறார்கள்.

இவ்வாறு பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் செய்தியாளர்களிடம் தெரி வித்தார்.

Sunday, September 06, 2009

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் சமூக நல்லிணக்க மாநாடு - கலைஞர் பங்கேற்கிறார்


அக்.4 சென்னையில் இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் சமூக நல்லிணக்க மாநாடு - கலைஞர் பங்கேற்கிறார்

வரும் அக்டோபர் 4-ம் தேதி சென்னையில் சமூக நல்லிணக்க மாநாட்டை தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் நடத்துகிறது.
இம் மாநாட்டில் முதல்வர் கலைஞர் பங் கேற்று இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவ சமயங்களைச் சேர்ந்த மூன்று அறிஞர் பெரு மக்களுக்கு சிராஜுல் மில்லத் சமூக நல்லிணக்க விருது வழங்கி சிறப்புரை யாற்றுகிறார்.
கலைஞருடன் சந்திப்பு தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், வேலூர் தொகுதி நாடாளு மன்ற உறுப்பினர் எம். அப்துல் ரஹ்மான், மாநில பொதுச் செயலாளர் கே.ஏ.எம். முஹம்மது அப+ பக்கர், மாநிலச் செயலா ளர்கள் காயல் மகப+ப், கமுதி பஷீர், வடசென்னை மாவட்டத் தலைவர் எம். ஜெய்னுல் ஆபிதீன் ஆகி யோர் இன்று (6-09-09) ஞாயிறு காலை 9.45 மணிக்கு முதல்வர் கலை ஞரை அவரது கோபால புரம் இல்லத்தில் சந்தித்துப் பேசினர். தமிழ்நாட்டில் உலமாக் கள் பணியாளர் நல வாரி யம் அமைத்தற்காக நன்றி தெரிவித்தனர். அதற்கு முதல்வர் மகிழ்ச்சி தெரிவித் தார்.
தமிழ்நாட்டிலுள்ள மதரஸாக்களில் பயில் கின்ற மாணவர்கள் அனை வருக்கும் இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனைப் பரிசீலிப்பதாக முதல்வர் உறுதியளித்தார்.
சிறைவாசிகள் விடுதலைக்கு கோரிக்கை அறிஞர் அண்ணா நூற் றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு தமிழ் நாட்டு சிறைச்சாலைகளில் ஏழு ஆண்டு சிறைவாசம் அனு பவித்த மத மோதல், குண்டு வெடிப்பு, ஆயுத தடை சட்டம் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளில் தண்டனை பெற்றோர் உள்ளிட்ட அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் எனவும், 12 ஆண்டுகளுக்கு மேல் விசாரணை சிறைவாசியாக சிறையில் உள்ள குணங்குடி ஹனீபா உள்ளிட்ட 8 விசா ரணை சிறை வாசிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர். இதுதொடர்பாக மத்திய அரசிடம் தமிழக அரசு தொடர்பு கொண்டி ருப்பதாகவும் அவர்களின் பதிலை எதிர்பார்ப்பதாக வும் முதல்வர் தெரிவித்தார்.
மத்திய அரசிடம் தங்க ளுக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி இக் கோரிக் கையை அவசியம் நிறை வேற்றித் தருமாறு முஸ்லிம் லீகினர் முதல்வரிடம் வலி யுறுத்தினர்.
சிறைவாசிகளை விடு விக்கும் வேண்டுமென திராவிடர் கழகத்தலைவர் கி. வீரமணி, பாரதீய ஜனதா கட்சி தமிழ் மாநிலத் தலைவர் இல. கணேசன் உள்ளிட்டோர் கோரிக் கையாக வைத்துள்ளதை யும் எடுத்துச் சொன்ன பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் முதல்வர் கருணை உள்ளத்தோடு இதனை பரிசீலித்து இக் கோரிக்கையை நிறை வேற்றித்தர வேண்டும் என மீண்டும் வலியுறுத்தினார்.
சிராஜுல் மில்லத் பிறந்த நாள் சமூக நல்லிணக்க மாநாடு இந்திய ய+னியன் முஸ்லிம் லீகின் மறைந்த மாபெரும் தலைவர் சிராஜுல் மில்லத் ஆ.கா.அ. அப்துஸ் ஸமத் பிறந்த நாள் அக்டோபர் 4-ம் தேதி வருகிறது. இந்த நாளை சமூக நல்லிணக்க நாளாக இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் அனுசரிக்கிறது. இதனைத் தொடர்ந்து அந்நாளில் சமூக நல்லி ணக்க மாநாடு தமிழ்நாடு மாநில இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் சார்பில் நடத் தப்படுகிறது.
சமூக நல்லிணக்கத்திற்கு பாடுபடும் இந்து - முஸ்லிம் - கிறிஸ்தவ சமயங்களைச் சார்ந்த சான்றோர்கள் மூவரை தேர்வு செய்து அவர்களுக்கு சிராஜுல் மில்லத் சமூக நல்லிணக்க விருது வழங்கப்பட உள் ளது.
இம் மாநாட்டில் தமிழ் நாடு முதல்வர் கலைஞர் பங்கேற்று இந்த விருதை வழங்கி விழாப் பேரு ரையாற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்றுக் கொண்ட முதல் அமைச்சர் கலைஞர் இம் மாநாட்டில் பங்கு கொள்ள இசைவு தெரிவித்தார்.

Monday, February 16, 2009

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக டாக்டர் ராமதாஸ் அபாண்டம் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம்

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராகடாக்டர் ராமதாஸ் அபாண்டம்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கண்டனம்
பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று முன்தினம் திண்டிவனம் தைலாபுரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது, இலங்கை கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் பாகிஸ்தானுக்கு அனுப்பப்பட்டு அவர்கள் ஐ.எஸ்.ஐ. உளவாளிகளிடம் பயிற்சி பெற்று திரும்பி இருப்பதாகவும் அவர்களால் இந்தியாவிற்கு ஆபத்து என்றும், குறிப்பாக கூடங்குளம், கல்பாக்கம் அணுமின்நிலையம் போன்ற கேந்திரங்களுக்கு பெரும் ஆபத்து என்றும் குறிப்பிட்டு அந்த பேட்டி முக்கியமான நாளிதழ்களில் முக்கியதுவத்துடன் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

வட இந்தியாவில் இந்துத்துவ வகுப்புவாத சக்திகள் முஸ்லிம்கள் மீது சுமத்தி வந்த குற்றச்சாட்டுகளுக்கு ஈடாக தமிழக முஸ்லிம்களையும் தவறான கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடிய சூழ்நிலைக்கு டாக்டர் ராமதாஸின் பேட்டி வழிவகுத்துள்ளது. இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும். அப்பாவி தமிழ் மக்கள் இன்னல்களுக்கு ஆளாக்கப்படகூடாது என்பதில் தமிழக முஸ்லிம்களும் இலங்கை வாழ் முஸ்லிம்களும் அக்கறை கொண்டவர்கள்.

ஏனெனில் இலங்கை இராணுவத்தின் கோரத் தாக்குதலில் அப்பாவி தமிழர்கள் இலங்கையில் பாதிக்கப்படுவதைபோல், விடுதலைப்புலிகளால் இலங்கை முஸ்லிம்கள் பலமடங்கு பாதிக்கப்பட்ட வர்கள்.குறிப்பாக யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களில் நள்ளிரவு 12 மணிக்கு துப்பாக்கி முனையில் புகுந்த விடுதலைப்புலிகள், இலட்சத்திற்கும் மேற்பட்ட அங்குள்ள முஸ்லிம்களின் அசையும், அசையா சொத்துக்கள் அனைத்தையும் பிடுங்கி கொண்டு 24 மணி நேர அவகாசத்தில் வாழ்ந்த இடங்களை விட்டு உடுத்திய உடைகளோடு வெளியேற்றியதை வரலாறு மறக்க தயாராக இல்லை.

அவர்களில் பலரது பூர்வீகம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி, இராமநாதபுரம், தஞ்சை மாவட்டங்கள் என்ற வரலாறு ராமதாஸை போன்ற வர்களுக்கு தெரியாமல் இருக்கலாம்.இலங்கையின் கிழக்கு மாகானத்திலுள்ள காத்தான் குடி பள்ளிவாசலில் இரவு தொழுகை தொழுது கொண்டிருந்த நிராயுதபாணிகளான முஸ்லிம்கள் நூற்றுக்கணக்கானவர்களை விடுதலை புலிகள் ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றது டாக்டர் ராமதாஸை போன்றவர்களுக்கு மறந்திருக்கலாம். ஏனெனில் இலங்கை தமிழர்களுக்காகவே வாழ்நாள் எல்லாம் உழைத்த தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி யின் தலைவர்களான அமிர்தலிங்கம், சிவசிதம்பரம், உள்ளிட்டவர்கள் விடுதலைப்புலிகளால் கொல்லப் பட்டதையே மறந்து விட்டவர்கள்தானே இவர்கள்.புலனருவ மாவட்டத்தில் நள்ளிரவில் புகுந்த விடுதலைப்புலிகள் முஸ்லிம் பச்சிளம் குழந்தைகளை கண்டம் துண்டமாக வெட்டிக் கொன்றதை மனசாட்சி உள்ள எவருமே மறக்க மாட்டார்கள்.

தமிழகத்தின் தொப்புள்கொடி உறவு தமிழர்கள் இலங்கையில் உள்ள தேயிலைத்தோட்ட தொழிலாளர்கள்தான் அவர்களுக்கு குடியுரிமை கொடுக்கக் கூடாது என தடுத்தவர்கள் யாழ்ப்பாண தமிழர்கள் என்பதும், இதைப்பற்றி 30 ஆண்டுகளுக்கு முன்பே இந்திய நாடாளுமன்றத்தில் திரு.கே.டி. கோசல்ராம் நாடார் அவர்கள் சுட்டிக்காட்டியதும் வரலாற்றில் பதிவுசெய்யப்பட்ட ஒன்று.இவைகள் அனைத்தையும் மறந்து விட்டு, சொந்த நாட்டிலும் பிற நாடுகளிலும் அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்ற அப்பாவி இலங்கை முஸ்லிம்கள் மீது அநியாயமான அவதூறை டாக்டர் ராமதாஸ் சுமத்துவது, இந்திய தாய் நாட்டின் மீது விசுவாசம் கொண்டு பிரிவினை நேரத்தில் கிழக்கு பாகிஸ்தானி லிருந்து அஸ்ஸாமிற்கு வந்து குடியேறிய முஸ்லிம்களை, வங்கதேச வெளிநாட்டவர் என்று விரட்டத்துணியும் பாரதிய ஜனதாவின் செயலை விட கொடூர செயலாகும்.

நாடாளுமன்ற தேர்தலை மனதில் வைத்து இலங்கை பிரச்சினையில் காய் நகர்த்தும் டாக்டர் ராமதாஸ், இலங்கை தமிழர்கள் மீது அக்கறை கொண்டவராக இருப்பாரேயானால், இந்திய அரசு இலங்கை தமிழர்களை காப்பாற்ற உருப்படியாக எதையும் செய்யவில்லை என்று அவர் சொல்வது உண்மையாக இருக்குமேயானால் மத்திய அமைச்சராக உள்ள அவரது மகன் பதவியை விலக செய்துவிட்டு அறிக்கைகளை வெளியிடட்டும்.

அதை விட்டுவிட்டு முஸ்லிம்கள் மீது அபாண்ட பழி சுமத்துவது அவரது சாயத்தை வெளுக்க வைக்கும் செயலாகும். இதனை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வன்மையாக கண்டிக்கிறது.
- காயல் மகபூப்.
மாநில செயலாளர்தமிழ்நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீக்

Wednesday, November 28, 2007

குவைத்தில் பாபர் மசூதி நினைவு சிறப்பு கருத்தரங்கம்


பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்

குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML)
ஏற்பாடு செய்யும்
பாபர் மசூதி நினைவு சிறப்பு கருத்தரங்கம்

இன்ஷா அல்லாஹ் வருகின்ற 30-11-2007 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி முதல் குவைத், ஃபஹாஹீல் பகுதியில் உள்ள பிஸ்மில்லாஹ் (அல்-ஷாஃபி) ஹோட்டல், சிராஜுல் மில்லத் அரங்கத்தில் குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML) ஏற்பாடு செய்யும் பாபர் மசூதி நினைவு சிறப்பு கருத்தரங்கம் 'சாய்க்கப்பட்ட பாபர் மசூதியம், சமுதாய அரசியலும்...' என்ற தலைப்பில் கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரல்படி நடைபெற இருக்கின்றது.


தலைமை : ஆலி ஜனாப் அல்ஹாஜ் K. அப்துல் காதர் (டில்லி பாட்சா)
முன்னாள் தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், துறையூர் வட்டம், திருச்சி முன்னாள் தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் கலாச்சாரப் பேரவை (TMCA), குவைத்.

கிராஅத் : மவ்லவீ காரீ A.R. முஹம்மது அலீ ரஷாதி
தலைமை நிலைய சொற்பொழிவாளர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

முன்னிலை : ஆலி ஜனாப் லால்குடி M. அப்துல் மஜீத்
முன்னாள் தலைவர், குவைத் முஸ்லிம் நல அமைப்பு

வரவேற்புரை : மவ்லவீ M.S. முஹம்மது மீராஷா ஃபாஜில் பாகவி
துணைத்தலைவர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

தொடக்கவுரை: ஆலி ஜனாப் Y. முபாரக் ரஸ்வி
துணையாசிரியர், குவைத் தமிழ் டாட் காம் மாத இதழ்

சிறப்புரை : சமுதாய சிந்தனைச் செல்வங்கள்
பேராசிரியர் மவ்லவீ A. அப்துஸ் ஸலாம் தாவூதி
மார்க்க அறிஞர்(உலமாக்)கள் குழு, K-Tic

ஆலி ஜனாப் கா. ரஹ்மத்துல்லாஹ்
தலைவர், தமிழக இஸ்லாமிய மாணவர் பேரவை (TISA), குவைத்

சமுதாயக் கவிஞர் - எழுச்சிப் பாவலர் விழுப்புரம் ஷாஜி M.A., B.Ed.,

மவ்லவீ அஃப்ஜலுல் உலமா அ.பா. கலீல் அஹ்மத் பாகவீ M.A.,
பொதுச் செயலாளர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic )

நிறைவுரை : டாக்டர் K.S. அன்வர் பாட்சா
அமைப்பாளர், குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML)
துணைத்தலைவர், குவைத் தமிழ் இஸ்லாமியச் சங்கம் (K-Tic)

நன்றியுரை : ஆலி ஜனாப் ஷாஹின் ஷா கான்
தலைவர், இந்திய யூனியன் முஸ்லிம் லீக், புளியந்தோப்பு வட்டம், சென்னை


வருகை தரும் அனைவருக்கும் குவைத், ஃபஹாஹீல் பகுதியிலுள்ள பிஸ்மில்லாஹ் (அல்-ஷாஃபி) ஹோட்டல் நிர்வாகத்தினர் மூலமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரவு உணவுடன் நிகழ்ச்சிகள் இனிதே நிறைவுபெறும்.

இச்சிறப்பு மிகு நிகழ்ச்சியில் குவைத் வாழ் இந்திய, இலங்கையைச் சார்ந்த தமிழ் இஸ்லாமியர்கள், முஸ்லீம் லீக்கர்கள், சமுதாய ஆர்வலர்கள் அனைவரும் பங்கேற்று பயனடையுமாறு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சிறப்பான முறையில் செயது கொண்டிருக்கும் குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML) அமைப்பாளர்கள் அன்புடன் அழைக்கின்றனர்.

மேலதிக விபரங்களுக்கு
iumlkuwait@yahoo.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவோ, 7862316, 7302747, 7549025, 6948224, 7872482 போன்ற தொலைபேசி எண்களிலோ தொடர்பு கொள்ளும்படியும் செய்தி அறிக்கை தெரிவிக்கின்றது.

செய்தி :
தகவல் தொடர்பு பிரிவு,
குவைத் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (KIUML)
மின்னஞ்சல் :
iumlkuwait@yahoo.com