Monday, February 23, 2009

தமிழகத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் 2 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.


சென்னை, பிப்.23-

தமிழகத்தைச் சேர்ந்த உலகப் புகழ்பெற்ற திரைப்பட இசையமைப்பாளரான ஏ.ஆர். ரஹ்மான் 2 ஆஸ்கார் விருதுகளை பெற்றுள்ளார்.

சினிமா துறையினருக்கான மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கார் விருதினை இந்திய வரலாற்றிலேயே ஒரே நேரத்தில் இரண்டு முறை பெறும் சாதனையை படைத் துள்ள ஏ.ஆர். ரஹ்மானுக்கு உலகம் முழுவதும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

இந்திய ஜனாதிபதி பிரதீபா பாட்டீல், பிரதமர் மன்மோகன்சிங், தமிழக முதல்வர் கலைஞர், இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தேசிய பொதுச் செயலா ளர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன் உள்ளிட்ட தலைவர்கள் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளதுடன். தமிழக சட்டமன்றத்தில் ஏ.ஆர். ரஹ்மானை பாராட்டி தீர்மானம் நிறை வேற்றப்பட்டுள்ளது.

ஆஸ்கர் விருது

உலகில் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ்ஏஞ்சல்சில் நடைபெற்று வருகிறது. உலகம் முழுவதும் ரசிகர்களை கவர்ந்த ஸ்லம் டாக் மில்லினர் திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

சிறந்த இசைக்கான விருது மற்றும் சிறந்த பாடல் ஜெய் ஹோவிற்கான விருதை ஏ.ஆர். ரஹ்மான் பெற்றுள்ளார். இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெறும் முதல் இந்தியர் ஏ.ஆர். ரஹ்மான் என்பது பெருமைக்குரிய விஷயமாகும். ஆஸ்கர் விருதை பெறும் 4-வது இந்தியர் இவர்.

எல்லாப் புகழும் இறைவனுக்கே

தமிழில் நன்றி கூறினார்

ஸ்லம்டாக் படத்திற்கு இசையமைத்த ஏ.ஆர். ரஹ்மானுக்கு இரண்டு ஆஸ்கர்| விருது கிடைத் துள்ளது. விருதுகளைப் பெற்றுக்கொண்ட அவர், ஹஎல்லாப் புகழும் இறைவ னுக்கே| என்று தமிழில் கூறி நன்றி தெரிவித்தார்.

இந்தியாவுக்கு எட்டு ஆஸ்கர்

ஸ்லம்டாக் படத்தின் திரைக்கதை, ஒளிப்பதிவு, சவுண்ட் மிக்சிங், பிலிம் எடிட்டிங், இசையமைப்பாளர் ஆகிய பிரிவுகளை சேர்த்து மொத்தம் 5 ஆஸ்கர் விருது வழங்கப் பட்டுள்ளது.

மேலும் பின்னனி பாடலுக்காக ஏ.ஆர். ரஹ்மா னுக்கு ஒரு விருதும் மற்றும் இருவருக்கு தலா ஒரு விருது உட்பட மொத்தம் 8 ஆஸ்கர் விருதுகள் இந்தி யாவுக்கு கிடைத்துள்ளது.

ரஹ்மானுக்கு தலைவர்கள் பாராட்டு

ஹஸ்லம்டாக் மில்லினர்' படத்துக்கு இசையமைத்த ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறந்த இசை மற்றும் சிறந்த பாடலுக்கான இரண்டு ஆஸ்கார் விருது கிடைத்தது. ஆஸ்கார் விருது பெற்ற ஏ.ஆர்.ரகுமான் மற்றும் சிறந்த மிக்சிங் சவுண்டு அமைத்த ரசல்ப+குட்டிக்கு ஜனாதிபதி பிரதிபா பட்டீல், பிரதமர் மன்மோ கன் சிங் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள் ளார். இந்தியாவுக்கு பெறுமை சேர்த்திருக்கிறார்கள் என்று கூறியுள் ளனர். சபாநாயகர் சோம் நாத் சட்டர்ஜியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதல்வர் கலைஞர்

முதல்வர் கலைஞர் வெளியிட்டுள்ள அறிக்கையில், இசை என்றாலே தமிழில் புகழ் என்றுதான் பொருள். அந்தப் பொருளுக்கு ஏற்ப ப+த்து மலர்ந்து, புகழ் பெருக்கி இன்று சிகரத்திற்கே சென்று சிரித்த முகத்தோடு நம்முடைய வாழ்த்துக்களை பெறுகிற சென்னையில் பிறந்த செல்வன் ஏ.ஆர்.ரகுமான். இவருக்குக் கிடைத்துள்ள ஆஸ்கார் விருதுகள் கண்டு முத்தமிழே முறுவலிக்கிறது. சிறுபான்மை சமுதாயத்தைச் சேர்ந்த இந்த செல்வம் இன்று ஆஸ்கார் விருதுகளைப் பெற்றதின் மூலம் தரணிவாழ் கலைஞர்கள் உள்ளத்தில் எல்லாம் இடம் பெற்று விட்டார். குறிப்பாகவும் சிறப்பாகவும் உரிமையோடு சொல்ல வேண்டுமானால் இது நம் வீட்டுப் பிள்ளைக்குக் கிடைத்த மிகப் பெரிய கீர்த்தி சிறப்பு பெருமை ரகுமான் புகழ் மகுடத்தில் இந்த ஆஸ்கார் பதித்துள்ள மாணிக்க மரகதகற்களாக இந்த விருதுகளை நான் கருதுகிறேன். தமிழ்நாடும், தமிழ்நாடு அரசும், அதற்குத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கிற நானும், தமிழ்நாட்டின் ஆறு கோடி மக்களும், ஏன் இந்தியத் திருநாட்டின் நூறு கோடி மக்களும், உலகக் கலைஞர்களும் மலர் தூவி, வரவேற்று, மகிழ்ச்சியைத் தெரிவித்து - மாசற்ற மனதோடு சேயாகப் பாவித்து-தாயாக நின்று வாழ்த்துகின்றபோது- அந்த வாழ்த்துக்களில் என் வாழ்த்துக்களும் இணைகிறது. வாழ்க ரகுமான்! ஆஸ்கார் விருதுகள் பெற்ற அருமைத் தம்பி இன்னும் ஆயிரம் ஆயிரம் விருதுகள் பெற வாழ்த்துகிறேன் என்று கூறியுள்ளார்.

சட்டபேரவையில் பாராட்டு

சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் சபாநாயகர் ஆவுடையப்பன் ஆஸ்கார் விருது பெற்ற இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு பாராட்டு தெரிவித்தார். அப்போது உறுப்பினர்கள் அனைவரும் மேஜையை தட்டி மகிழ்ச்சி தெரிவித்தனர்.

சென்னை மாநாகராட்சி பாராட்டு

இதேபோல், சென்னை மாநகராட்சியின் பட்ஜெட் விவாத கூட்டம் இன்று நடந்தது. கூட்டம் தொடங்கியதும் மேயர் மா.சுப்பிரமணியன், இந்திய திரைத் துறையின் கனவாக இருந்த ஆஸ்கார் விருதை தமிழகத்தை சேர்ந்த குறிப்பாக சென்னையை சேர்ந்த இளம் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் பெற்றுள்ளதற்கு சிறப்பு பாராட்டு தீர்மானத்தை வாசித்தார்.

பேராசிரியர் கே.எம்.கே. வாழ்த்து

இரண்டு ஆஸ்கர் விருதுகளை பெற்று இந்தியாவுக்கும் தமிழகத்திற்கும் பெருமை சேர்த்துள்ள ஏ.ஆர். ரஹ்மானுக்கு இந்திய ய+னியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாளரும் தமிழ்மாநில தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் எம்.பி., பாராட்டும் வாழ்த்துக்களும் தெரிவித்து தந்தி அனுப்பியுள்ளார்.

பெருமிதத்தில் தமிழகம்

தமிழ்நாட்டைச் சேர்ந்த ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருது பெற்றுள்ளதற்கு பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும் தெரிவித்துள்ளனர்.

தமிழகமே பெருமிதத்தால் விழாக்கோலம் ப+ண்டுள்ளது. விருதினை பெற்று சென்னை திரும்பும் ஏ.ஆர். ரஹ்மானுக்கு மிகப் பிரமாண்டமான வரவேற்பும் பாராட்டு கூட்டமும் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

லால்பேட்டை இணையதளம்,

No comments: