Showing posts with label இராமநாதபுரம். Show all posts
Showing posts with label இராமநாதபுரம். Show all posts

Thursday, September 27, 2012

இராமநாதபுரத்தில் சரித்திர நிகழ்வு


இராமநாதபுரம், செப். 25, இராமநாதபுரம் நகரில் இன்று தமுமுக, எஸ்.டி.பி.ஐ, ஐ.என்.டி.ஜே , சுன்னத் ஜமாத்தார்கள் , அனைத்து உலமா பெருமக்கள், அனைத்து ஊர் ஜமாத்தினர்கள். இதர இஸ்லாமிய இயக்கங்கள், சங்கங்கள் ஆகியோர் இனைந்த இராமநாதபுரம் மாவட்ட அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின் சார்பாக  இஸ்லாமியர்களின் உயிருனும் மேலான உன்னத நபி முகம்மது (ஸல்) அவர்களை இழிவு படுத்தி படம் எடுத்தவர்களையும் அதை கண்டிக்க மறுக்கும் அமெரிக்கர்களையும் அந்த திரப்படத்தை வெளியிட்டுள்ள அனைத்து வலைத்தளங்களையும் தடை செயய மறுக்கம் மத்திய அரசை கண்டித்தும் ஒரு மாபெரும் கண்டன பேரணியும் கண்டன பொதுக்கூட்டமும் நடைபெற்றது.


கொல்லம்பட்றைத்தெரு ஜமாத் நிர்வாகி ஜனாப் M.A. முத்தலிப் அவர்கள்

இராமநாதபுரம் நகர் கொல்லம்பட்டரை தெருவில் உள்ள இராமநாதபுரத்தின் மிக பழமையானதும் , முதல் பள்ளியுமான கொல்லம் பட்டறை பள்ளியில் இருந்து துவங்கிய இந்த பேரணிக்கு ஆலிம் கிராஅத் ஓத அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளரும் கொல்லம்பட்டறை தெரு ஜமாத் நிர்வாகியுமான ஜனாப் M.A. முத்தலிப் அவர்கள் துவக்கி வைத்தார்கள். பேரணியை வழி நடத்தும் விதமாக அனைத்து  இயக்கத்தவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்த்தர்கள் , மாவட்டத்தின் அனைத்து ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள், அனைத்து இயக்க நிர்வாகிகள் வீர முழக்கமெழுப்பி கண்டன கோசங்களை உணர்ச்சி பொங்க ஒஞ்கி ஒலித்து வந்தார்கள்.
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பேச்சாளர் முகவை அப்துல் ஜமீல்


அல்லாஹ்வின்து£தர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், «لا يؤمن عبد حتى أكون أحب إليه من أهله وماله والناس أجمعين உங்கள் குடும்பத்தினரைவிட உங்கள் செல்வத்தைவிட உங்களுக்கு விருப்பமானவர்களைவிட என்னை அதிகமாக நேசிக்காதவரை நீங்கள் ஒருவரும் மூஃமின்கள் ஆகமாட்டீர்கள் (அறிவிப்பாளர் ; அனஸ்(ரலி), நு£ல் ; புஹாரி, முஸ்லிம்)


மேடையில் தலைவர்கள் எஸ்டிபிஐ பரமக்குடி ஜியாவுதீன்

இந்த நபிமொழிக்கினங்க மாவட்டமெங்கிலும் இருந்து இசுலாமிய வீர இளைஞர்கள் ஆர்ப்பரித்து வரலாறு காணாத வகையில் ஆயிரக்கணக்கில் கண்டன பதாகைகளை கையில் ஏந்தி சின்க்கடை வீதியெங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து அன்னல் நபியை இழிவு படுத்தியதை கண்டித்தும் மாநபியின் வீர வேங்கைகள் கோசம் எழுப்பி பேரணியாக தெருவெங்கும் நடந்து வந்தது இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கும் காணத சரித்திர சம்பவம். இன்று தங்கள் கண்டனங்களை பதிவு செய்யும் வகையில் இராமநாதபுரத்தில் உள்ள அனைத்து இசுலாமிய வியாபார நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. 
தமுமுக வின் கோவை செய்யது


பொங்கி எழுந்த வீர இசுலாமியர்களின் ஆர்பரிப்பில் இராமநாதபுரம் தினறியது. தப்புக்கணக்கு போட்டு வாகனங்களில் வந்து முஸ்லிம்களை பீதியடைய செய்யலாம் என்று திறலாக குவிக்கப்பட்டிருந்த காவல்துறை எம் மாவட்ட இசுலாமிய வீரவேங்கைகளின் ஆக்ரோசத்தில் பின்வாங்கியது.


எஸ்.எம் பாக்கர் மற்றும் முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்

பேரணியி்ன் பின்னர் இராமநாதபுரம் தீரர் திப்பு சுல்தான் சந்தை திடலில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்த்தில் முதலாவதாக பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பேச்சாளர் முகவை அப்துல் ஜமீல் வீர உரையுடன் துவக்கினார் பின்னர் த.மு.மு.க வின் பேச்சாளர் ஜனாப் கோவை செய்யது அவர்கள் ஆக்ரோசத்துடன் கண்டன உரை நிகழ்த்தினர் அதன் பின்னர் உரையாற்ற வந்த முகவையின் மைந்தன் இந்திய தவ்ஹித் ஜமாத்தின் எஸ்.எம். பாக்கர் அவர்கள் தனது சிம்மக் குரலில் கண்டனத்தை பதிவு செய்தார்கள் ,  நிகழ்சியின் இறுதியில் த.மு.மு.க வின் சகோ. அன்வர் அவர்கள் நன்றியுரை கூற கண்டன பொதுக்கூட்டம் இனிதே முடிந்தது.நிகழ்ச்சிகளை அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளர் ஜனாப் M.A முத்தலிப் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

பதாகை ஏற்திய பாலகர்கள்


முகவை மாநகர சரித்திரத்தில் திரன்டிராத கூட்டமிது. காவல்துறையும் உளவுத்துறை உட்பட ஏனைய அனைத்து மக்களும் திரன்டிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் ஓழுக்கமான கூடலை பார்த்து ஆச்சர்யத்தில் வியந்தனர். கூட்டத்தில் சிறப்பம்சமாக பெண்கள் வரவேண்டாம் என கூறியும் பெரியபட்டினம் என்ற இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பென்கள் வாகனங்களில் வந்து மேடையின் பின்புறம் அமர்ந்திருந்தது வியப்பாக இருந்தது.


நமது உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுப் படுத்திய அமெரிக்க கயவர்களை கண்டித்து நடந்த இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்த்தில் பங்கெடுத்து அன்னல் நபிகளுக்கெதிரான அநீதிக்கு கண்டன் தெறிவித்தவர்களாக சரித்திரத்தில் தங்களை இம்மக்கள் பதிவு செய்து கொண்டனர். இறுதியாக இந்நிகழ்ச்சியை ஒருங்கினைத்த சகோதரர்கள் , இதற்காக ஊர் ஊராக ஓடி அழைப்பு விடுத்து கூட்டத்தை கூட்டிய சகோதரர்கள் என பல்வேறு சகோதரர்கள் இதில் முகம் காட்டாமல் தூரமாக நின்றார்கள். இவர்களுக்கு வல்ல ரஹ்மான் பரக்கத் செய்வானாக. இவர்களின் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை இருந்தாலும் இவ்வரலாற்று நிகழ்வின் முக்கிய பங்கு இவர்களுக்குறியது. வாழ்த்துக்கள் சகோதரர்களே!!

மேலதிக படங்களுக்கு இராமநாதபுரத்தில் சரித்திர நிகழ்வு கிளிக் செய்து பார்க்கவும்

Friday, September 21, 2012

இராமநாதபுரத்தில் பள்ளிவாசல்கள் மீது குன்டுவீச்சு


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பின் சொந்தங்களே,

இராமநாதபுரம் நகரில் இன்று அதிகாலை சுமார் 2.30 மனியளவில் இராமநாதபுரம் ரயில்வே ஸ்டேசன் அருகில் உள்ள சென்ட்ரல் மஸ்ஜிதிலும், இராமநாதபுரம் குமரய்யா புரத்தில் (பாரதிநகர்) உள்ள புஹாரி அப்பா பள்ளிவாசலிலும் சமூக விரோதிகள் , பாசிச சக்திகள் சமுதாய ஒற்றுமையை சீர் குழைத்து நமது உயிர் நபிகள் நாயகத்தை இழிவு படுத்தி படம் எடுத்தமைக்கு எதிராக நடக்க இருக்கும் அனைத்து மக்கள் கூட்டமைப்பின் ஒற்றுமையான கண்டன போராட்டத்தை சீர்குழைக்கும் முயற்சியில் முகவை மாநாகரத்தை கலவர காடாக்கி ரத்த ஆறு ஓடச்செய்யும் முயற்சியில் மேற்கூறிய இறை ஆலயங்கள் மீது பெட்ரோல் வெடிகுன்டினை வீசி தாககுதல் நடத்தியுள்ளார்கள்.



தற்சமயம் இராமநாதபுரம் நகரின் அனைத்து இசுலாமிய அமைப்புகளும் காவல்துறைக்கு குற்றவாளிகளை கைது செய்ய சொல்லி நாளை மாலை வரை கெடு விதித்துள்ளார்கள். காவல்துறை உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இதன மூலம் எங்களின் ஒற்றுமையை ஒரு போதும் குழைக்க இயலாது என்பதை சமூக விரோத சக்திகள் புறிந்து கொள்ள வேண்டும். எங்கள் இரத்தம்...உயிர்...உடல்...உடமை இன்னும் எங்கள் தாய் தந்தையரும் எமது குழந்தைகளும் உங்களுக்கே அர்ப்பனம் எங்கள் நபியே!! இவை அனைத்தையும் இழந்தாவது உமது கண்ணியத்தை காப்போம் யா ரசூலல்லாஹ்...!!!

காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் இல்லையேல்மாபெரும் போராட்டத்தினை சந்திக்க நேரிடும் என்பதை இசுலாமிய அமைப்புகள் காவல்துறையிடம் கூறி எச்சரித்துள்ளன.

----------------------------------------------------------------------------------------------------

ராம‌நாத‌புர‌த்தில் ப‌ள்ளிவாச‌ல் மீது காவி பயங்கரவாதிகள் பெட்ரோல் குண்டு வீச்சு - போலீசார் குவிப்பு...............!! 

ராமநாதபுரத்தில் இன்று மாலை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால் நகரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் பார‌தி ந‌க‌ர் குமரய்யா கோயில் பஸ் ஸ்டாப் அருகே பள்ளிவாசல் உள்ளது. குழந்தைகளுக்கு காலை, மாலை நேரங்களில் மதரசாவும் இங்கு செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு தொழுகை முடிந்த பின்னர் அனைவரும் சென்று விட்டனர்.

துணை இமாம் சபியுல்லா மட்டும் பள்ளிவாசலில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றனர். சத்தம் கேட்டு சபியுல்லா எழுந்து வந்து பார்த்தார். தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனே சபியுல்லா சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.இது பற்றி தகவல் அறிந்த இமாம் சையது அக்பர் மற்றும் முஸ்லிம்கள் ஏராளமானோர் பள்ளிவாசல் முன் குவிந்தனர். இது குறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்யப் பட்டது. சிவகங்கை ஏடிஎஸ்பி கண்ணன், ராமநாதபுரம் டிஎஸ்பி முரளிதரன் தலைமையிலான போலீசார் வந்து பள்ளிவாசலை பார்வையிட்டு நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர்.


ராமநாதபுரத்தில் இன்று மாலை இந்து முன்னணி சார்பில் 28 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளன. இந்நிலையில் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘விநாயகர் சிலை ஊர்வலம் முடியும் வரை எந்த பிரச்னையிலும் ஈடுபட வேண்டாம், நாளை மாலைக்குள் குற்றவாளிகளை கைது செய்வோம்’ என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து முஸ்லிம்கள் கலைந்து சென்றனர்.

பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.இஸ்லாமிய‌ர்க‌ள் ம‌த்தியில் பெரும் கொந்த‌ளிப்பை ஏற்ப‌டுத்தியுள்ளது.குற்றவா
ளிக‌ளை உட‌ன‌டியாக‌ பிடிக்க‌ காவ‌ல்துறையின‌ரை வ‌ற்புறுத்தி வ‌ருகின்ற‌ன‌ர்.
இன்று நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்துக்காக நகர் முழுவதும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்,வேண்டுமென்றே இருத‌ர‌ப்புக்கும் இடையில் க‌ல‌வ‌ர‌த்தை தூண்ட‌ வேண்டும் என்ற‌ நோக்க‌த்துட‌ன் விஷ‌மிக‌ள் செய‌ல்ப‌ட்ட‌தாக‌ தெரிகிற‌து பள்ளிவாசல் அருகே உள்ள டயர் தடயங்களை வைத்துப் பார்க்கும் போது 3 பைக்குகளில் மர்ம நபர்கள் வந்துள்ளனர் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இவர்களை கைது செய்வோம்’ என்றனர்

Sunday, April 26, 2009

ஏன் முஸ்லிம்கள் இராமநாதபுரம் தொகுதியில் மட்டும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது?

ஏன் இஸ்லாமியர்கள் தி.மு.க விற்கு வாக்களிக்க வேண்டும் ?

• 1960 முதல் தி.மு.க ஆட்சியமைத்த காலத்தில் இருந்து ஒவ்வொரு தி.மு.க ஆட்சியின் போதும் ஏனைய ஆட்சிகளில் மறுக்கப்பட்டு வந்த சமூக நீதி இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டது.

• இஸ்லாமியர்கள் கல்வி அறிவு பெற்று வேலை வாய்ப்புக்களிலும், பொருளாதாரத்திலும் ஏனைய சமூகத்தினரை போல் முன்னேற வேண்டும் என்ற காரனத்தினால் டாக்டர் கலைஞர் அவர்கள் 1960 ல் தான் ஆட்சியமைத்தவுடன் இஸ்லாமிய சமூகத்தினருக்காக முதலில் மதுரையில் வக்பு வாரிய கல்லூரி அமைக்க இட ஒதுக்கீடு செய்து கல்லூரி கட்ட நிதி ஒதுக்கினார். பின்னர் அது பத்தாது என்று சென்னையில் கலைஞரின் அரசியல் குரு காயிதே மில்லத் பெயரில் கல்லூரி அமைக்க இட ஒதுக்கீடு செய்து கல்லூரி கட்ட நிதி ஒதுக்கினார்.

• உருது மொழி பேசக் கூடிய சிறுபான்மையின மக்களுக்காக உருது அக்காடமி அமைத்து தந்தார் தமிழினக் காவலர் கலைஞர்; அவர்கள்.

• 1990 முதல் முஸ்லிம் சமுதாயத்தினரை குறிவைத்து ஜெயலலிதாவாலும் மதவெறி பா.ஜ.க வாலும் போடப்பட்ட ஆயிரக்கணக்கான தடா மற்றும் பொடா வழக்குகளை விடுதலை செய்து அவற்றை சாதாரன வழக்குகளாக மாற்றி தடா சட்டத்தை ரத்து செய்ய வைத்தார்.

• ஜெயலலிதா ஆட்சியில் முஸ்லிம்களால் என்ன செய்து விட முடியும் என்ற அகம்பாவத்தில் முஸ்லிம்களின் ஜீவாதார உரிமையான வக்பு வாரியத்திற்கு முஸ்லிமை நியமிக்காமல் ஒரு முஸ்லிம் அல்லாத நபரை அமைச்சராக நியமித்தது. ஆதை மாற்றி டாக்டர் கலைஞர் அவர்கள் தனது ஆட்சியில் இரன்டு முஸ்லிம்களுக்கு அமைச்சர் பதவி அளித்து ஒரு முஸ்லிமை வாரியத் தவைராக ஆக்கியது.

• முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 3.5 மூ இட ஒதுக்கீடு. மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்கியது.

• உலமாக்கள் நல வாரியம் அமைத்து உலமா பெருமக்களின் நீண்ட கால அவல நிலைக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

• பி.ஜே.பியின் நீண்ட நாள் கணவான பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெறிவித்து அதை வராமல் தடுத்து நிறுத்தியது.

• ஜெயலலிதாவால் முதல் முறையாக சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக புகுத்தப்பட்ட 'தலித் முஸ்லிம் என்ற வாசகத்தை நீக்கியது.

• ஏழை சிறுபான்மை குடும்பங்களுக்கு எட்டாக் கனியாக இருந்த கேஸ் அடுப்பு, தொலைக்காட்சி பெட்டி முதலியவற்றை இலவசமாக வழங்கியது.

• ஏழை விவசாயிகளின் கடன் தள்ளுபடி, ஒரு ரூபாயில் அரிசி, சிறுபான்மை மானவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் என வழங்கியது. இலவசமாக முஸ்லிம் மாணவர்களுக்கான தொழில் பயிற்சி மற்றும் கல்வி திட்டம்.

• அப்பாவி ஊனமுற்ற சிறைவாசியான மதானிக்கு ஜெயலலிதாவால் மறுக்கப்பட்டு வந்த அவரது நோய்க்கான சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட காரனத்தால் முஸ்லிம் அதிகாரி என்ற ஒரே காரனத்தல் உள்துறை செயலாளராக இருந்த முனீர் ஹோடாவை தேச துரோக குற்றம் சாட்டி ஜெயலலிதா பதவி நீக்கம் செய்தார். கலைஞர்; ஆடசிக்கு வந்தவுடன் முதல் காரியமாக முனீர் ஹோடாவின் பதவி நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பதவியில் அமர்த்தி முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தியது.
ஏன் சிறுபான்மை இனத்தவர்கள் இந்த தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் மட்டும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது?

• முஸ்லிம் வேட்பாளர்களுக்கு சிறுபான்மை சமுதாயத்தினர் வாக்களித்தால் ஏறத்தாள நமது சமுதாயத்தின் 185,000 வாக்குகள் பிறிந்து போகும் அதனால் மிக எளிதாக பி.ஜே.பி (B.J.P) மற்ற சமூக ஆதரவுடன் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. (செட்டியார், நாடர், அகமுடையார் என பல சங்கங்கள் பி.ஜே.பி க்கு ஆதரவு தெறிவித்துள்ளன)

• தி.மு.க வேட்பாளர் திரு. சிவக்குமார் (எ) ரித்தீஸ் அவர்கள் ஜாதி, மத பேதமற்ற ஒரு சிறந்த மனிதராவார். இது வரை அவர் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக செயல்பட்டதாக எந்த ஒரு ஆதாரமான தகவல்களும் இல்லை. திரு. சிவக்குமார் (எ) ரித்தீஸ் அவர்கள் நமது சமுதாய மக்கள் மீது அளப்பாறிய பாசமும், அன்பும், மறியாதையும் கொண்ட கண்னியமான நபர்.

• மற்றவர்களுக்கு வாக்களித்தால் நமது மாவட்டத்தின் வாழ்வாதார திட்டமான சேது சமுத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டு நம் மாவட்டம் மீண்டும் வறுமை மாவட்டமாக்கப்படும்.

முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களித்து அதன் மூலம் மதவாத பா.ஜ.க (B.J.P) ஆட்சிக்கு வந்தால் நமது மாவட்டம் 'ராமர் பாலம் பெயரால் மதக்கலவரங்களை தோற்றுவித்து குஜராத்தை போல் சிறுபான்மை மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகும் அபாயம்.

• பா.ஜ.க முன்வைத்துள்ள ஹிந்துத்துவம் எனும் செல்திட்டம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், மதச் சார்பின்மைக்கும், அரசியல் சாசன சட்டத்திற்கும் ஏன் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் எதிரானதாகும். நீங்கள் இந்த தேர்தலில் மட்டும் நமது தொகுதியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் இந்த செயல் திட்டத்தை செயல் படுத்தும் பா.ஜ.க வின் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கின்றீர்கள்.

• இராமநாதபுரம் மக்களவை தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பா.ஜ.க வின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிந்திப்பீர்!! கலைஞர் அவர்கள் தான்' நமது சமுதாயத்திற்கு 4 எம்.பி சீட்டுகளுக்கும் மேல (10%); வழங்க முன்வந்தார்கள் (காங்கிரஸ் -1 மு.லீக் -1 தமுமுக -1 மாநிலங்களவை – 1 (ரஹ்மான்கான்) ) ஆனால் ஒட்டுமாத்த 4 சீட்டும் தங்களுக்கே வேண்டும் என்று கேட்டு சமுதாயத்தை நட்டாற்றில் விட்டுவிட்டு இன்று உங்களிடம் கலைஞர் துரோகி என்கிறார்கள். சுற்று சிந்திப்பீர் சமுதாய நல்லுள்ளங்களே! கலைஞரா துரோகி? யார் துரோகிகள் என்பதை முடிவு செய்யுங்கள். உங்கள் வாக்குகளை நமது வேட்பாளர் திரு. சிவக்குமார் (எ) ரித்தீஸ் அவர்களுக்கு வழங்குங்கள்.

• இது சட்டமன்ற தேர்தல் அல்ல! பாராளுமன்ற தேர்தல்!! சுpந்தியுங்கள் யார் ஆட்சி வேண்டும் நமக்கு? பாபர் பள்ளியை இடித்து, நமது சமூகத்திற்கு தீவஜரவாத முத்திரை குத்திய பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியா? ஆல்லது மதச்சார்பற்ற காங்கிரஸ் ஆட்சியா? சுpந்திப்பீர் செயல்படுவீர்.

நமது சமுதாய ஓட்டுக்களை சிந்தாமல் சிதறாமல் திரு. சிவக்குமார் (எ) ரித்தீஸ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாரி வழங்குவீர்.

இவன்
அக்பர் ராஜா B.A.B.L
ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்
மாவட்ட தலைவர்
தொடர்புக்கு : 9047507665 - 9894262100 - 9865252519

இந்திய தேசிய மக்கள் கட்சி
மாவட்ட தலைமையகம்
66, திருச்சி ரோடு
கேணிக்கரை, இராமநாதபுரம்
தொலைபேசி : 04567 - 221545

Saturday, April 18, 2009

முகவை மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

முகவை மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் வேட்பு மனு தாக்கல்

வேட்பாளர் சலிமுல்லாஹ் கான்

மேடையில் சலிமுல்லா கான், தஸ்பீக் அலி, வாணி சித்தீன், ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ், கோவை செய்யது

இராமநாதபுரம் ஏப்ரல் 18, மனித நேய மக்கள் கட்சி அங்கம் வகிக்கும் சமூக ஜனநாயக முன்னணியின் செயல் விரர்கள் கூட்டம் இராமநாதபுரம் வலம்புரி மஹாலில் நடந்தது. இக்கூட்டத்திற்கு தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் பொருளாளர் திரு. ஓ.யூ. ரஹ்மத்துல்லாஹ் தலைமை தாங்கினார். சமூக ஜனநாயக முன்னணியின் இராமநாதபுரம் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் திரு. சலிமுல்லாஹ்கான் அவர்களை ஆதரித்து P.V.M அறக்கட்டளை உரிமையாளர் திரு. அப்துல் ரசாக், மாவட்ட பொருளாளர் திரு. வாணி சித்தீக், திரு. பாக்கர், திரு. தஸ்பீக் அலி, புதிய தமிழகத்தின் மாவட்ட செயலாளர் திரு. காளிதாஸ், இந்திய தேசிய லீக் நிர்வாகிகள், கோவை செய்யது உட்பட பலர் பேசினார்கள்.



ஒ.யூ.ரஹ்மத்துல்லாஹ், கோவை செய்யது பிரச்சார வாகனத்தில்

அதன் பின்னர் மதியம் சுமார் 1.00 மணியளவில் இராமநாதபுரம் அரன்மனை முன்பாக வேட்பாளர் அறிமுக கூடடம் நடந்தது. கோவை செய்யது அவர்கள் ஏன் மனித நேய மக்கள் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற தலைப்பில் பொதுமக்கள் மத்தியில் உரையாற்றினார். அதன் பின்னர் வேட்பாளர் திரு. சலிமுல்லாஹ்கான் அவர்கள் உரையாற்றினார்கள் பின்னர் அங்கிருந்து ஆயிரக்கணக்கான தமுமுக தொண்டர்கள் பின்தொடர வேட்புமனு தாக்கல் செய்வதற்காக ஊர்வலமாக புறப்பட்டு மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் சென்றனர். வேட்பு மனு தாக்கல் செய்யும் இடத்திற்கு 100 மீட்டர் முன்பே வாகனங்கள் நிறுத்தப்பட வேண்டும் போன்ற தேர்தல் கமிசனின் விதிமுறைக் அமலில் உள்ளதால் தொண்டர்கள் அனைவரும் தூரத்தில் நிற்க கோவை செய்யது தலைமையில் கூட்டணியை சேர்ந்த 5 நர்கள் மட்டும் வேட்பாளர் சலிமுல்லா கான் உடன் சென்றனர்.

வேட்பாளர் சலிமுல்லாஹ் கான் தனது ஆதரவாளர்களுடன்

வேட்பு மனு தாக்கல் செய்ய ஊர்வளமாக தமுமுக வினர்

சமூக ஜனநாயக முன்னணியின் இந்த வேட்பு மனு தாக்கல் நிகழச்சியில் ஆயிரக்கணக்கில் புதிய தமிழகம், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் உட்பட பொதுவான பல முஸ்லிம்களும் கலந்து கொண்டனர். அத்துடன் பல்வேறு ஜமாத் நிர்வாகிகளும் வந்திருந்தனர். நூற்றுக்கணக்கான வாகனங்களில் தமுமுக மற்றும் மனித நேய மக்கள் கட்சியினர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கடும் வெயிலையும் பொருட்படுத்தாது வந்திருந்தனர்.

அரன்மனை முன்பாக கூட்டணியினர் மத்தியில் உரையாற்றும் கோவை செய்யது

முன்னதாக செயல்வீரர் கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள்

Monday, March 09, 2009

இராமநாதபுரம் (முகவை) லோக்சபா தொகுதி விபரம்

ராமநாதபுரம் லோக்சபா தொகுதி வாக்காளர்கள் கவனத்திற்கு...

ராமநாதபுரம் லோக்சபா தொகுதியில் மறு சீரமைப்பிற்கு பின் முதுகுளத்தூர், ராமநாதபுரம், அறந்தாங்கி, திருச்சுழி, பரமக்குடி (தனி) மற்றும் திருவாடானை சட்டசபை தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. தொகுதியில் இடம்பெற்றுள்ள 6 சட்டசபை தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகள் விபரம் வருமாறு:


முதுகுளத்தூர்: முதுகுளத்தூர் தாலுகா, கடலாடி தாலுகா, கமுதி தாலுகாவைச்சேர்ந்த முடிமன்னார் கோட்டை, நீராவி, நீ.கரிசல்குளம், மேலராமநதி,கீழராமநதி, க.நெடுங்குளம், ஆனையூர், பாக்குவட்டி, செங்கப்படை, முதல்நாடு, முஷ்டக்குறிச்சி, சீமானேந்தல், புதுக்கோட்டை, பேரையூர், கள்ளிக்குளம், ஊ.கரிசல்குளம், க.வேப்பங்குளம், பம்மனேந்தல், மாவிலங்கை, அரியமங்களம், கோவிலாங்குளம், கொம்பூதி, வில்லானேந்தல், மு.புதுக்குளம், இடிவிலகி, பொந்தம்புளி, திம்மநாதபுரம், து.வாலசுப்பிரமணியபுரம், பா.முத்துராமலிங்கபுரம், பெருநாழி, காடமங்களம், சடையனேந்தல், சம்பகுளம், கமுதி மற்றும் தவசிக்குறிச்சி (பசும்பொன்) கிராமங்கள் மற்றும் கமுதி பேரூராட்சி.


ராமநாதபுரம்: ராமேஸ்வரம் தாலுகா,ராமநாதபுரம் தாலுகாவைச்சேர்ந்த ஆற்றாங்கரை, பெருங்குளம், வாலாந்தரவை, குயவன்குடி, ராஜசூரியமடை, வெள்ளாமரிச்சுக்கட்டி, அச்சடிபிரம்பு, குதக்கோட்டை, வண்ணாங்குண்டு, ரெகுநாதபுரம், கும்பரம், இரட்டையூரணி, நாகாச்சி, என்மனம்கொண்டான், பிரப்பன்வலசை, சாத்தக்கோன் வலசை, மண்டபம், நொச்சியூரணி, புதுமடம், காரான், பெரியபட்டணம், களிமண்குண்டு, திருப்புல்லாணி, களரி, உத்திரகோசமங்கை, மல்லல், ஆலங்குளம், நல்லிருக்கை, பனையடியேந்தல், வேளனூர், குளபதம், பள்ளமோர்க்குளம், காங்சிரங்குடி, கீழக்கரை, மாணிக்கனேரி, புல்லந்தை மற்றும் மாயாகுளம் கிராமங்கள். ராமநாதபுரம் (நகராட்சி), கீழக்கரை (மூன்றாம்நிலை நகராட்சி), மண்டபம் பேரூராட்சி.


அறந்தாங்கி: மணமேல்குடி, ஆவுடையார் கோவில் தாலுகாக்கள்,அறந்தாங்கி தாலுவை சேர்ந்த ஆளப்பிறந்தான், முக்குடி, ரெத்தினக்கோட்டை, மேமங்களம், கோவில்வயல், மேலப்பட்டு, பள்ளத்திவயல், ஊர்வணி, ஆலங்குடி, இடையார், குளத்தூர், புதுவாக்கோட்டை, தர்மராஜன்வயல், கம்மங்காடு, உலகளந்தான் வயல், வீரமங்கலம், பெருநாவலூர், பஞ்சாத்தி, ஆமாஞ்சி, அல்லரைமேலவயல், குண்டகவயல், கீழச்சேரி, சிவந்தான்காடு, வேங்கூர், சீனமங்கலம், அருணாசலபுரம், கூகனூர், ராயன்வயல், தேடாக்கி, காரவயல், நாகுடி, அரியாமறைக்காடு, களக்குடி, கீழ்குடி, ஏகணிவயல், ஏகப்பெருமாளூர், ஆடலைக்கால பைரவபுரம், காரைக்காடு, அத்தாணி, கலக்காமங்கலம்,திருவாப்பாடி, ஓமக்கன்வயல், நெம்மிலிக்காடு, முன்னூத்தான்வயல்,பங்கயத்தான்குடி, வெள்ளாட்டு மங்கலம், கண்டிச்சங்காடு, பிராமணவயல், அம்மன்சாக்கி, மாணவநல்லூர், மெய்வயல், வேட்டனூர், கோங்குடி, சுப்பிரமணியபுரம், சித்தக்கன்னி கிராமங்கள் மற்றும் அறந்தாங்கி (நகராட்சி).


திருச்சுழி: காரியாபட்டி, திருச்சுழி தாலுகாக்கள் மற்றும் அருப்புக்கோட்டை தாலுகாவை சேர்ந்த குலசேகர நல்லூர், மாங்குளம், மேலகண்டமங்கலம், குருணைக்குளம், கொங்கணக்குறிச்சி, ஆலடிபட்டி, பொம்மக்கோட்டை, கல்லூரணி, சவ்வாஸபுரம், குல்லம்பட்டி, முத்துராமலிங்கபுரம், நார்த்தம்பட்டி, காளையார்கரிசல்குளம், கல்யாணசுந்தரபுரம், கல்லுமடம், எறசின்னம்பட்டி, பரட்டநத்தம், தம்மநாயக்கன்பட்டி, வேடநத்தம், சிலுக்கபட்டி, மண்டபசாலை, மறவர்பெருங்குடி, தும்முசின்னம்பட்டி, திருமலைபுரம், சலுக்குவார்பட்டி, சுத்தமடம், தொப்பலாக்கரை, ராஜகோபாலபுரம், புல்லாநாயக்கன்பட்டி, செட்டிகுளம், கணக்கை, பரளச்சி, மேலையூர், வடக்குநத்தம், தெற்குநத்தம், செங்குளம், பூலாங்கால், கள்ளக்கறி, புரசலூர் மற்றும் கீழ்க்குடி கிராமங்கள்.


பரமக்குடி(தனி): பரமக்குடி தாலுகா, கமுதி தாலுகாவை சேர்ந்த த.புனவாசல், வங்காருபுரம், பெரியானைக்குளம், அச்சங்குளம், அ.தரைக்குடி, வல்லந்தை, எழுவனூர், கூடக்குளம், காக்குடி, நகரத்தார்குறிச்சி, அபிராமம், நத்தம், மரக்குளம், மண்டலமாணிக்கம் கிராமங்கள் மற்றும் அபிராமம் பேரூராட்சி.


திருவாடானை: திருவாடானை தாலுகா, ராமநாதபுரம் தாலுகாவை சேர்ந்த பாண்டமங்கலம்,ஆண்டிச்சியேந்தல், வெண்ணத்தூர், பத்தனேந்தல், நாரணமங்கலம், அலமனேந்தல், தேவிபட்டிணம், பெருவயல், குமரியேந்தல், காவனூர், காரேந்தல், புல்லங்குடி, சித்தார்கோட்டை, அத்தியூத்து, பழங்குளம், தொருவளுர்,வன்னிவயல், சூரங்கோட்டை, பட்டிணம்காத்தான், திருவொத்தியகழுகூரணி, தேர்போகி, அழகன்குளம், சக்கரக்கோட்டை, கூரியூர், அச்சுந்தன்வயல், லாந்தை, பனைக்குளம், மாலங்குடி, மற்றும் எக்ககுடி கிராமங்கள்.

நன்றி :தினமலர்

Sunday, February 11, 2007

சவுதியில் வேலை வாய்ப்பு (AL-SUWAIDI LTD)

சவுதியில் வேலை வாய்ப்பு

அன்பின் சகோதரர்களே,

அல் சுவைதி நிறுவனத்தில் பணிபுறியும் ஒரு தமிழ் முஸ்லிம் சகோதரர் எமக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலில் அவரின் நிறுவனத்தில் பல முக்கிய பதவிகளுக்கு ஆட்கள் எடுப்பதாக தெறிவித்துள்ளதுடன் அந்த பணிகளுக்கான பட்டியலையும் அனுப்பியுள்ளார்.

AL-SUWAIDI SERVICES CO. LTD. (SSC)
AL-SUWAIDI EQUIPMENT AND TRANSPORT CO. LTD (SET)
AL-SUWAIDI SCAFFOLDING SERVICES AND ACCESS SOLUTIONS (SSSAS)
AL-SUWAIDI REAL ESTATE ENTERPRISES CO. LTD. (SRE)
INFORMATION MANAGEMENT TECHNOLOGY (IMT)
PRECISION FORGING FACTORY (PFF)

போன்ற அல் சுவைதி குழுமத்தின் சகோதர நிறுவனங்களுக்கு மேனேஜர் முதல் ஹெல்ப்பர் வரை பல்வேறுபட்ட நூற்றுக்கணக்கான பதவிகளுக்கு ஆட்கள் எடுக்கின்றார்கள். தகுதி வாய்ந்த நமது சகோதரர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்தி கொள்ளவும். எந்த எந்த பதவிகளுக்கும் வேலைகளுக்கும் ஆட்கள் எடுக்கின்றார்கள் என்பதை கீழக்கண்ட தொடுப்பை சொடுக்கி டவுன்லோட் செய்து கொள்ளவும்.

Al SUWAIDI VACANCIES

AL SUWAIDI MEMO


தங்களுக்கு தேவையான பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் சகோதரர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது தொலைநகல் (ஃபேக்ஸ்) நம்பருக்கோ தங்களது RESUME (BIODATA) வை அனுப்பவும்.

Mr. ShafaQattullah Khan
Recruitement Manager
E.Mail : shcrecruitment@alsuwaidi.com.sa
Fax : 00966 3 6670304 Ext. 252


இராமநாதபுரம்,காரைக்குடி,இஸ்லாம்,முஸ்லிம்