Showing posts with label IDMK. Show all posts
Showing posts with label IDMK. Show all posts

Sunday, April 26, 2009

ஏன் முஸ்லிம்கள் இராமநாதபுரம் தொகுதியில் மட்டும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது?

ஏன் இஸ்லாமியர்கள் தி.மு.க விற்கு வாக்களிக்க வேண்டும் ?

• 1960 முதல் தி.மு.க ஆட்சியமைத்த காலத்தில் இருந்து ஒவ்வொரு தி.மு.க ஆட்சியின் போதும் ஏனைய ஆட்சிகளில் மறுக்கப்பட்டு வந்த சமூக நீதி இஸ்லாமியர்களுக்கு வழங்கப்பட்டது.

• இஸ்லாமியர்கள் கல்வி அறிவு பெற்று வேலை வாய்ப்புக்களிலும், பொருளாதாரத்திலும் ஏனைய சமூகத்தினரை போல் முன்னேற வேண்டும் என்ற காரனத்தினால் டாக்டர் கலைஞர் அவர்கள் 1960 ல் தான் ஆட்சியமைத்தவுடன் இஸ்லாமிய சமூகத்தினருக்காக முதலில் மதுரையில் வக்பு வாரிய கல்லூரி அமைக்க இட ஒதுக்கீடு செய்து கல்லூரி கட்ட நிதி ஒதுக்கினார். பின்னர் அது பத்தாது என்று சென்னையில் கலைஞரின் அரசியல் குரு காயிதே மில்லத் பெயரில் கல்லூரி அமைக்க இட ஒதுக்கீடு செய்து கல்லூரி கட்ட நிதி ஒதுக்கினார்.

• உருது மொழி பேசக் கூடிய சிறுபான்மையின மக்களுக்காக உருது அக்காடமி அமைத்து தந்தார் தமிழினக் காவலர் கலைஞர்; அவர்கள்.

• 1990 முதல் முஸ்லிம் சமுதாயத்தினரை குறிவைத்து ஜெயலலிதாவாலும் மதவெறி பா.ஜ.க வாலும் போடப்பட்ட ஆயிரக்கணக்கான தடா மற்றும் பொடா வழக்குகளை விடுதலை செய்து அவற்றை சாதாரன வழக்குகளாக மாற்றி தடா சட்டத்தை ரத்து செய்ய வைத்தார்.

• ஜெயலலிதா ஆட்சியில் முஸ்லிம்களால் என்ன செய்து விட முடியும் என்ற அகம்பாவத்தில் முஸ்லிம்களின் ஜீவாதார உரிமையான வக்பு வாரியத்திற்கு முஸ்லிமை நியமிக்காமல் ஒரு முஸ்லிம் அல்லாத நபரை அமைச்சராக நியமித்தது. ஆதை மாற்றி டாக்டர் கலைஞர் அவர்கள் தனது ஆட்சியில் இரன்டு முஸ்லிம்களுக்கு அமைச்சர் பதவி அளித்து ஒரு முஸ்லிமை வாரியத் தவைராக ஆக்கியது.

• முஸ்லிம்களுக்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் 3.5 மூ இட ஒதுக்கீடு. மறுக்கப்பட்டு வந்த இட ஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்கியது.

• உலமாக்கள் நல வாரியம் அமைத்து உலமா பெருமக்களின் நீண்ட கால அவல நிலைக்கு முற்றுப் புள்ளி வைத்தது.

• பி.ஜே.பியின் நீண்ட நாள் கணவான பொது சிவில் சட்டத்திற்கு எதிர்ப்பு தெறிவித்து அதை வராமல் தடுத்து நிறுத்தியது.

• ஜெயலலிதாவால் முதல் முறையாக சமுதாயத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக புகுத்தப்பட்ட 'தலித் முஸ்லிம் என்ற வாசகத்தை நீக்கியது.

• ஏழை சிறுபான்மை குடும்பங்களுக்கு எட்டாக் கனியாக இருந்த கேஸ் அடுப்பு, தொலைக்காட்சி பெட்டி முதலியவற்றை இலவசமாக வழங்கியது.

• ஏழை விவசாயிகளின் கடன் தள்ளுபடி, ஒரு ரூபாயில் அரிசி, சிறுபான்மை மானவர்களுக்கு இலவச பாட புத்தகங்கள் என வழங்கியது. இலவசமாக முஸ்லிம் மாணவர்களுக்கான தொழில் பயிற்சி மற்றும் கல்வி திட்டம்.

• அப்பாவி ஊனமுற்ற சிறைவாசியான மதானிக்கு ஜெயலலிதாவால் மறுக்கப்பட்டு வந்த அவரது நோய்க்கான சிகிச்சை அளிக்க உத்தரவிட்ட காரனத்தால் முஸ்லிம் அதிகாரி என்ற ஒரே காரனத்தல் உள்துறை செயலாளராக இருந்த முனீர் ஹோடாவை தேச துரோக குற்றம் சாட்டி ஜெயலலிதா பதவி நீக்கம் செய்தார். கலைஞர்; ஆடசிக்கு வந்தவுடன் முதல் காரியமாக முனீர் ஹோடாவின் பதவி நீக்க உத்தரவை ரத்து செய்து மீண்டும் பதவியில் அமர்த்தி முஸ்லிம்களுக்கு பாதுகாப்பான உணர்வை ஏற்படுத்தியது.
ஏன் சிறுபான்மை இனத்தவர்கள் இந்த தேர்தலில் இராமநாதபுரம் தொகுதியில் மட்டும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க கூடாது?

• முஸ்லிம் வேட்பாளர்களுக்கு சிறுபான்மை சமுதாயத்தினர் வாக்களித்தால் ஏறத்தாள நமது சமுதாயத்தின் 185,000 வாக்குகள் பிறிந்து போகும் அதனால் மிக எளிதாக பி.ஜே.பி (B.J.P) மற்ற சமூக ஆதரவுடன் வெற்றி பெறக்கூடிய சூழ்நிலை உருவாகிறது. (செட்டியார், நாடர், அகமுடையார் என பல சங்கங்கள் பி.ஜே.பி க்கு ஆதரவு தெறிவித்துள்ளன)

• தி.மு.க வேட்பாளர் திரு. சிவக்குமார் (எ) ரித்தீஸ் அவர்கள் ஜாதி, மத பேதமற்ற ஒரு சிறந்த மனிதராவார். இது வரை அவர் சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக செயல்பட்டதாக எந்த ஒரு ஆதாரமான தகவல்களும் இல்லை. திரு. சிவக்குமார் (எ) ரித்தீஸ் அவர்கள் நமது சமுதாய மக்கள் மீது அளப்பாறிய பாசமும், அன்பும், மறியாதையும் கொண்ட கண்னியமான நபர்.

• மற்றவர்களுக்கு வாக்களித்தால் நமது மாவட்டத்தின் வாழ்வாதார திட்டமான சேது சமுத்திர திட்டம் ரத்து செய்யப்பட்டு நம் மாவட்டம் மீண்டும் வறுமை மாவட்டமாக்கப்படும்.

முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களித்து அதன் மூலம் மதவாத பா.ஜ.க (B.J.P) ஆட்சிக்கு வந்தால் நமது மாவட்டம் 'ராமர் பாலம் பெயரால் மதக்கலவரங்களை தோற்றுவித்து குஜராத்தை போல் சிறுபான்மை மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாகும் அபாயம்.

• பா.ஜ.க முன்வைத்துள்ள ஹிந்துத்துவம் எனும் செல்திட்டம் இந்தியாவின் ஜனநாயகத்திற்கும், மதச் சார்பின்மைக்கும், அரசியல் சாசன சட்டத்திற்கும் ஏன் ஒட்டுமொத்த மனித சமுதாயத்திற்கும் எதிரானதாகும். நீங்கள் இந்த தேர்தலில் மட்டும் நமது தொகுதியில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிப்பதன் மூலம் இந்த செயல் திட்டத்தை செயல் படுத்தும் பா.ஜ.க வின் வேட்பாளருக்கு வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கின்றீர்கள்.

• இராமநாதபுரம் மக்களவை தேர்தலில் போட்டியிடும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு நீங்கள் அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் பா.ஜ.க வின் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்தும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிந்திப்பீர்!! கலைஞர் அவர்கள் தான்' நமது சமுதாயத்திற்கு 4 எம்.பி சீட்டுகளுக்கும் மேல (10%); வழங்க முன்வந்தார்கள் (காங்கிரஸ் -1 மு.லீக் -1 தமுமுக -1 மாநிலங்களவை – 1 (ரஹ்மான்கான்) ) ஆனால் ஒட்டுமாத்த 4 சீட்டும் தங்களுக்கே வேண்டும் என்று கேட்டு சமுதாயத்தை நட்டாற்றில் விட்டுவிட்டு இன்று உங்களிடம் கலைஞர் துரோகி என்கிறார்கள். சுற்று சிந்திப்பீர் சமுதாய நல்லுள்ளங்களே! கலைஞரா துரோகி? யார் துரோகிகள் என்பதை முடிவு செய்யுங்கள். உங்கள் வாக்குகளை நமது வேட்பாளர் திரு. சிவக்குமார் (எ) ரித்தீஸ் அவர்களுக்கு வழங்குங்கள்.

• இது சட்டமன்ற தேர்தல் அல்ல! பாராளுமன்ற தேர்தல்!! சுpந்தியுங்கள் யார் ஆட்சி வேண்டும் நமக்கு? பாபர் பள்ளியை இடித்து, நமது சமூகத்திற்கு தீவஜரவாத முத்திரை குத்திய பாரதீய ஜனதா கட்சியின் ஆட்சியா? ஆல்லது மதச்சார்பற்ற காங்கிரஸ் ஆட்சியா? சுpந்திப்பீர் செயல்படுவீர்.

நமது சமுதாய ஓட்டுக்களை சிந்தாமல் சிதறாமல் திரு. சிவக்குமார் (எ) ரித்தீஸ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாரி வழங்குவீர்.

இவன்
அக்பர் ராஜா B.A.B.L
ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்
மாவட்ட தலைவர்
தொடர்புக்கு : 9047507665 - 9894262100 - 9865252519

இந்திய தேசிய மக்கள் கட்சி
மாவட்ட தலைமையகம்
66, திருச்சி ரோடு
கேணிக்கரை, இராமநாதபுரம்
தொலைபேசி : 04567 - 221545

Friday, April 24, 2009

இந்திய தேசிய மக்கள் கட்சி தி.மு.க கூட்டணிக்கு ஆதரவு

ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் திரு. முகவைத்தமிழன் அவர்களுக்கு வேட்பாளர் திரு. ரித்தீஸ் அவர்கள் பொன்னாடை அனிவிக்கிறார். அருகில் தென்மன்டல தி.மு.க அமைப்பு செயலாளர் திரு.மு.க. அழகிரி, அமைச்சர் சு.ப. தங்கவேலன், திருமதி. பவானி எம்.பி ஆகியோர்
இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) யின் இராமநாதபுரம் கேணிக்கரையில் அமைந்துள்ள அதன் மாவட்ட அலுவலகத்தில் 15 வது மக்களவைத் தேர்தல் நிலைப்பாடு குறித்து ஆராய்வதற்காக இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில ஆட்சி மன்றக் குழு மற்றும் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அக்பர் ராஜா B.A.B.L தலைமை வகித்தார் அதன் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் திரு. முகவைத்தமிழன் முன்னிலை வகித்தார்.


பத்திரிகையாளர் சந்திப்பில் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் மற்றும் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அக்பர் ராஜா B.A.B.L மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர் திரு. ஜாஃபர் ஆகியோர்.

கூட்டத்தின் முடிவில் பெரும்பான்மை நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களின் கருத்துக்கேற்ப இந்த 15 வது மக்களவைத் தேர்தலில் சமுதாய நலன் கருதியும், மதவாத கட்சிகளை ஆட்சிக்கு வரவிடாமல் தடுப்பதற்காகவும், சிறுபான்மை சமுதாயத்திற்கு சமூக நீதி கிடைத்திட வேண்டியும் திராவிட முன்னேற்ற கழகம் அங்கம் வகிக்கும் கூட்டணிக்கு ஆதரவளித்து அவர்களை வெற்றி பெறச் செய்வதென தீர்மானிக்கப்பட்டது.

இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் இப்பகுதி மக்களின் வாழ்வாதார திட்டமான சேது சமுததிர திட்டம் தடையின்றி நிறைவேற்றிடவும், கூட்டுக் குடிநீர் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்பட்டு பகுதி மக்களின் குடிநீர் தேவைகள் நிறைவேற்றப்படவும், மீனவர்களின் பாதுகாப்புக்காவும் திராவிட முன்னேற்ற கழகத்தின் வேட்பாளர் நடிகர் ரி்த்தீஸ் என்ற சிவக்குமாரை ஆதரித்து அவரது வெற்றிக்கு உழைப்பதெனெ முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தின் நிறைவில் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் திரு. முகவை பாலா அவர்கள் நன்றி கூறினார்.


இப்படிக்கு

வழக்கறிஞர் அக்பர் ராஜா B.A.B.L

ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்
மாவட்ட தலைவர்
இராமநாதபுரம்
தொலைபேசி : 9894262100

Friday, April 10, 2009

சென்னையில் ஒட்டுமொத்த நிர்வாகிகள் விலகல் - கலகலத்த IDMK கூடாரம்

சென்னையில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் கூண்டோடு ராஜினாமா

திரு. ஜான் பாஷா


இந்திய தேசிய மக்கள் கட்சியின் வட சென்னை, ஆர்.கே நகர், மயிலாப்பூர், ராயபுரம், திருவல்லிக்கேணி உட்பட பல கிளை நிர்வாகிகள் தங்கள் கிளைகளை ஒட்டுமொத்தமாக கலைத்து இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர்களுக்கு பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளார்கள்.

பல்வேறு பட்ட கவர்ச்சியான வாக்குறுதிகளை அள்ளி வீசி, சமூக ஒற்றுமை, இரவல் அரசியலுக்கு விடை கொடுப்போம், என கூறப்பட்ட வாக்குறுதிகளை நம்பி பல்வேறு அமைப்புகளிலும் இருந்து விலகி இந்திய தேசிய மக்கள் கட்சியல் வந்து சேர்ந்தனர். தலைமை பதவியால் ஏற்பட்ட அகங்காரத்தாலும், சகோ.அமீர் ஜவஹர் போன்றோர் சமூக ஒற்றுமைக்காக இதன் தலைவர் குத்புதீன் ஐபக்கை இரு முறை அழைத்து தொலைக்காட்சியல் பேச செய்ததால் ஏற்ப்பட்ட மமதையாலும் தன்னிலை மறந்த இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் குத்பதீன் ஐபக், கட்சிக்காக அயராது உழைத்த தொண்டர்களால் ஏற்ப்பட்ட புகழ்ச்சியாலும் கிறங்கிப்போன குத்பதீன் ஐபக் இவை யாவும் தனக்கும் தன்னுடைய எழுத்தக்களுக்கும், பேச்சுக்கும் கிடைத்த பெருமை என தவறாக புறிந்து கொண்டு தலைகால் புறியாமல் நிர்வாகிகளிடம் அகம்பாவமாக நடந்ததால் இன்று சென்னையின் ஒட்டுமொத்த நிர்வாகிகளும் கட்சியில் இருந்து விலகி உள்ளனர்.

இந்திய தேசிய மக்கள் கட்சயில் இருந்து அதன் முக்கிய தலைவர்களில் ஒருவரும் வடசென்னை மாவட்ட அமைப்பாளருமான ஏ.கே ஜான்பாஷா அவர்கள் இந்திய தேசிய மக்கள் கட்சியின் வெளியீடான "சந்தி சிரிக்கும் டாக்டர் கலைஞரின் சமூக நீதி" என்ற பிரசுரத்தை வெளியிட்டதால் கலைஞர் அரசால் கைது செய்யப்பட்டு அந்த செய்தி ஜீனியர் விகடன் உட்பட பல பத்திரிகைகளிலும் வந்து பிரபலமானவர். இன்றும் யாராலும் அறியப்படாமல் இருந்த இந்திய தேசிய மக்கள் கட்சியை சென்னை நகரெங்கும் அதற்கு அடித்தளம் அமைத்து கொடுத்து கட்டமைத்தவர். இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவராக அகம்பாவம் பிடித்து தறியும் குத்புதீன் ஐபக் சென்னை வரும்போதெல்லாம் அவரது உணவு, தங்குமிடம் என அனைத்து செவுகளையும் இன்று வரை செய்தவர். இவரது தலைமையில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் வட சென்னை, ஆர்.கே நகர், மயிலாப்பூர், ராயபுரம், திருவல்லிக்கேணி உட்பட பல கிளைகளின் 50 க்கும் மேறப்பட்ட நிர்வாகிகள் ஒட்டுமொத்தமாக கிளைகளை கலைத்துவிட்டு இராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ளனர். இவர்கள் தங்கள் இராஜினாமாவிற்கான காரனங்களாக தெறிவித்துள்ளதாவது.

1) இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்கள் வாக்குறுதி தவறியது. வாய்மை இல்லாமல் பொய்மை நிறைந்த அவரது பேச்சுக்கள். கட்சியில் சேரும்போது இந்திய தேசிய மக்கள் கட்சி முறைப்படி பதிவு செய்யப்பட்டு , தேர்தல் கமிசனால் அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்று பொய் சொல்லி ஏமாற்றியது. கட்சி இன்று வரை சங்கமாக கூட தமிழகத்தில் எங்குமே பதிவு செய்யப்படவில்லை. சென்னையில் பேட்டியில் தமுமுக, முஸ்லிம் லீக் தனித்து நின்றால் அவர்கள் நிற்கும் தொகுதிகளில் போட்டியிட மாட்டோம் என்று கூறிவிட்டு அதற்கு நேர்மாறக பணத்திற்காக வேட்பாளர்களை நிறுத்துவது. உளவுத்துறை மற்றும் இஸ்லாத்தின் எதிரிகளோடு கைகோர்த்து சமூகத்தை பிளவு படுத்தி அதை பலகீனப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டது.

2) தலைக்கனம் பிடித்த குத்பதீன் ஐபக், வட சென்னை ஜான்பாசா உட்பட பல நிர்வாகிகளை பற்றி தரக்குறைவாக மற்றவர்களிடத்தில் விமர்சித்தது. ஒருவரை பற்றி மற்றவாரிடத்தில் தரக்குறைவாக கூறி இருவருக்கும் இடையில் பகைமையை ஏற்படுத்த முயன்றது. கையும் களவுமாக பிடிபட்டபோது அதை ஹிக்மத், அரசியல் சாதுர்யம் என்று பேசி ஏமாற்ற முயன்றது.

3) குத்புதீன் ஐபக் ஒரு முழுமையான முனாபிக்காக மாறியது, அதாவது குர்ஆன் ஹதீஸ்களில் இறைவன் முனாபிக் குறித்து கூறியுள்ள அனைத்து அம்சங்கள், அடையாளங்களை தன்னகத்தே கொண்ட மனிதராக உள்ளது. தொழுகை, இபாதத் இல்லாமை, ஒரு கூட்டத்தாரோடு இருக்கையில் தான் அவர்களோடு உள்ளதாகவும், மற்றொரு கூட்டத்தாரோடு இருக்ககையில் தான் அவர்களது ரத்த உரவு என்றும் அவர்களுக்கேஎன்றும் ஆதரவு என்றும் பேசுவது. முஸ்லிம்களுக்கிடையே பகைமையை வளர்க்க முனைந்தது. இந்திய தேசிய மக்கள் கட்சி என்ற அமைப்பின் தலைவர் பதவியை பயன்படுத்தி இஸ்லாத்தின் எதிரிகளோடு கைகோர்த்து மற்ற சமுதாய அமைப்புகளுக்கும் , கட்சிகளுக்கும் இன்னும் ஒட்டுமொத்த இஸ்லாமிய சமுதாயத்திற்கும் எதிராக செயலாற்ற திட்டமிட்டது.

4) இன்னும் குத்புதீன் ஐபக்கோடு இருக்கும் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் சிலரும், கீழக்கரை, திருச்சி, தஞ்சையை சேர்ந்த சில மாநில நிர்வாகிகள் சிலரும் குத்புதீன் ஐபக் கட்சியையும், சமுதாயத்தின் பெயரையும் பயன்படுத்தி தேர்தலில் போட்டியிடப் போவதாக கூறி முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த தனவந்தர்களிடம் வசூலித்த பணத்தின் சில லகரங்களுக்காகவும், அரசியல் பதவி ஆசையிலும் குத்புதீன் ஐபக்கிற்காக ஜல்ரா போடுவது. அதாவது ஜால்ரா போடும் மாநில நிர்வாகிகள் மற்றும் ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள்.

5) இந்திய தேசிய மக்கள் கட்சியின் வளர்ச்சிக்காக அரும்பாடுபட்ட உழைக்கும் அடிமட்ட தொண்டர்களிடத்தில் தான் ஏதோ காயிதே மில்லத், கருனாநிதி போன்ற மிதப்பில் அகம்பாவமாகவும், உதாசீனமாகவும் குத்புதீன் ஐபக் பேசுவது, இன்றும் தன்னை காயிதே மில்லத், அறிஞர் அண்ணா அளவிற்கு தற்புகழச்சி செய்து கொண்டு மற்ற தலைவர்களை ஏமாளி, கோமாளி என்று சோட்டிஸ் போட்டு நக்கல் செய்வது.


என பல காரனங்களை இவர்கள் கூறியுள்ளார்கள். இன்னும் சென்னை மாநகரில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் முனாபிக் குத்புதீன் ஐபக் மற்றும் அவரோடு கூட இருக்கும் ஆடசி மன்ற குழு உறுப்பினர், மாநில நிர்வாகி ஆகியோரின் முகத்திரைகளை கிழித்து மக்களுக்கு இவர்களின் "சமுதாய துரோகிகள்" எனும் மறு முகத்தையும், குத்புதீன் ஐபக் இந்த சமுதாயத்திற்கு செய்த மாபெரும் துரோகத்தையும் மக்களுக்கு அம்பலப்படுத்தும் வரை தாங்கள் ஓயப்போவதில்லை என்றும் இந்நிர்வாகிகள் சூழுரைத்துள்ளனர்.

இராஜினாமா செய்துள்ள நிர்வாகிகளில் சிலர் :

1. ஏ.கே ஜான் பாசஷா - வட சென்னை மாவட்ட அமைப்பாளர்
2. எஸ் செய்யது நிஹமத் - ஆர்.கே நகர் கிளை தலைவர்
3. எச். சலீ்ம் பாஷா - ஆர்.கே நகர் கிளை செயலாளர்
4. முனீர் பாஷா - மயிலாப்பூர் கிளை தலைவர்
5. கவுஸ் பாஷா - ராயபுரம் கிளை தலைவர்
6. பசீர் அஹமது - 5 வது வட்ட கிளை
7. மகேந்திரன் - 13 வது வட்டம்
8. சர்தார் பாஷா -
9. பசீர் அஹமது - ஆர்கே நகர் கிளை து. தலைவர்
10. ஹமீது - 13 வது வட்டம் கிளை
11. ஜலால் - 10 வது வட்டம் கிளை
12. அஹமது புன்யாமின் - திருவல்லிக்கேணி செயலாளர்
13. ஹயாத் பாஷா - மயிலாப்பூர் கிளை
14. புர்ஹான்
15. மஹபூப் பாஷா (பின்சின் லைன்)
16. பாரூக் - 12 வது வட்டம்
17. தமீம் - நேதாஜி நகர்
18 . பாசா - ஆர்கே நகர் பொருளாலர்
19. சாகுல் ஹமீது
20. முஸ்த்தஃபா

Monday, March 16, 2009

பார்த்திபனூரில் IDMK விளக்க கூட்டம்

டாக்டர் பகுருதீன் விளக்க உரையாற்றுகின்றார், மேடையில் மாவட்ட தலைவர் திரு. அக்பர் ராஜா B.A.B.L செயலாளர் திரு. ஜஹாங்கீர்


இராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரில் நேற்று (15.03.2009) ஞாயிறு மாலை சுமார் 5.30ல் இருந்து இரவு 7.30 வரை இந்திய தேசிய மக்கள் கட்சியின் கொள்கை விளக்க கூட்டம் நடைபெற்றது.

உள்ளரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்கள் டாக்டர் பகுருதீன் (9344510369) மற்றும் திரு. முகவைத்தமிழன் (9047507665), இந்திய தேசிய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் திரு. அக்பர் ராஜா B.A.B.L (9894262100), மாவட்ட செயலாளர் திரு. ஜஹாங்கீர் (9443021050), மாவட்ட பொருளாலர் திரு. நஜ்முதீன்(9842388428), பிரபல வழக்கறிஞர் திரு. காந்தி M.A.B.L (9486651744) உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

நிகழச்சிக்கான ஏற்பாடுகளை பார்த்திபனூரை சோந்த திரு. அஷ்ரப் அவர்கள் ஏற்பாடு செய்திரந்தார்கள். நிகழச்சியில் பல்வேறு மகளிர் சுய உதவிக் குழுக்களின் தலைவிகளும், பார்த்திபனூர் நகர் பொறுப்பில் உள்ள பல்வேறு கட்சிகளையும் அமைப்புகளையும் சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Saturday, March 14, 2009

IDMK யாருடன் கூட்டணி?

திரு. செல்வப் பெருந்தகையுடன் தலைவர்கள்


வரக்கூடிய லோக்சபா தேர்தலை முன்னிட்டு இந்திய தேசிய மக்கள் கட்சி தமிழகத்திலும் தேசிய அளவிலும் பல்வேறுபட்ட மாநில, தேசிய அரசியல் கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகின்றது. சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக நிர்வாகிகளை அதன் அலுவலகத்தில் சந்தித்து இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக், ஆட்சிமக்றக் குழு உறுப்பினர் டாக்டர் பகுருதீன், முகவை மாவட்ட செயலாளர் திரு. ஜஹாங்கீர், தமிழகம் திரு. இக்பால், பொதுச் செயலாளர் திரு. வருசைக்கனி ஆசியோர் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இராமநாதபுரம் லோக்சபா தொகுதி உள்ளிட்ட 10 தொகுதிகள் இந்திய தேசிய மக்கள் கட்சி சார்பில் கேட்கப்பட்டுள்ளது.

தேர்தல் நெருங்கி விட்ட நிலையில் பல்வேறு பட்ட தேசிய, மாநில கட்சிகள் இந்திய தேசிய மக்கள் கட்சியுடன் கூட்டண குறித்து பேசி வருகின்றன. யாருடன் கூட்டணி என்பது குறித்த இறுதி முடிவு பின்னர் அறிவிக்கப்படும் என்று இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் தெறிவித்துள்ளார்.

Wednesday, February 18, 2009

IDMK பிரச்சார பாடல்கள் (பாடல்கள் DOWNLOAD)

Wednesday, February 04, 2009

IDMK யின் தேர்தல் பிரச்சார பாடல்கள் வெளியீடு (பாடல்கள் DOWNLOAD)


பாடல்களின் முதல் குறுந்தகட்டினை திரு. ஜான் பாஷா அவர்கள் வெளியிட பெற்றுக் கொள்கிறார் ஆசிரியர் அப்துல் ரசாக் அவர்கள்

இந்திய தேசிய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட தலைமை அலுவலக திறப்புவிழா நிகழ்ச்சி கடந்த 26.01.2009 அன்று முகவை மாநகரில் நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்டமெங்கும் இருந்து பல முக்கிய பிரமுகர்களும் ஜமாத் நிர்வாகிகளும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

பாடல்களின் குறுந்தகட்டினை திரு. கண்ணன் அவர்கள் வெளியிட பெற்றுக் கொள்கிறார் கீழக்கரை நிர்வாகி அவர்கள்

இந்த நிகழ்ச்சியின் போது இந்திய தேசிய மக்கள் கட்சி தேர்தல் பிரச்சாரத்திற்காக வெளியட்டுள்ள தனது புதிய "தேர்தல் பிரச்சார பாடல்கள்" என்ற குறுந்தகட்னை வெளியிட்டது. இந்த குறுந்தகடில் கருத்தாற்றல் மிக்க, இன்றைய இளைஞர்களின் உணர்வுகளை சுன்டியிலுத்து சிந்திக்க வைக்கக்கூடிய அருமையான 6 பாடல்கள் அடங்கியுள்ளது.

பாடல்களின் குறுந்தகட்டினை மருத்துவர். அனீஸ் அஹமது அவர்கள் வெளியிட பெற்றுக் கொள்கிறார் தமிழ் பாதுகாப்பு பேரவை நிறுவனர் அவர்கள்


பாடல்களுக்கான இசையை பிரபல சினிமா இசையமைப்பாளர் திரு. A.C. தினகரன் அவர்கள் அமைத்துள்ளார்கள்.பாடல்களை திரு. முகேஷ், திரு. உதயபாண்டியன், திருமதி சுசித்ரா ராமன் ஆகியோர் தங்கள் அழகிய குரலில் பாடியுள்ளனர்.


பாடல்களின் குறுந்தகட்டினை திரு. அக்பர் ராஜா அவர்கள் வெளியிட பெற்றுக் கொள்கிறார் திரு. P.V.M அப்துல் ரசாக் அவர்கள்

இந்திய தேசிய மக்கள் கட்சியின் புதிய வெளியீடான "தேர்தல் பிரச்சார பாடல்கள்" என்ற பாடல்களை கேட்க இங்கே சொடுக்கவும்.



பாடல்களின் குறுந்தகட்டினை திரு. ஜாங்கீ்ர் அவர்கள் வெளியிட பெற்றுக் கொள்கிறார் ஏர்வாடி ஆசிரியர் ஹபீப் அவர்கள்

Friday, January 30, 2009

பரமக்குடியில்..IDMK ஏன் ? எதற்கு? மாபெரும் கருத்தரங்கமும்

பரமக்குடியில்........
இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுக்க
முஸ்லிம்களின் முதல் பொது அரசியல் கட்சி
IDMK நடத்தும்
இந்திய தேசிய மக்கள் கட்சி ஏன் ? எதற்கு?
மாபெரும் கருத்தரங்கமும்
உங்கள் கேள்விகள், சந்தேகங்கள், விமர்சனங்கள்,குற்றச்சாட்டுக்கள்,
கண்டனக்கனைகள், ஐயங்கள் வரவேற்கப்படுகின்றன. வீழந்த சமுதாயத்தின் அரசியல் விடியலை தட்டி எழுப்பிட உங்கள் வினாக்கள் வீறு கொண்டு எழட்டும்

இடம் : பாரதிநகர் பள்ளிவாசல் எதிர்புறம், முதுவை டிம்பர் அருகில்
நாள் : 31.01.2009 சனிக்கிழமை
நேரம் : மாலை 4.30 மணி

தலைமை

திரு. H.அப்துல் நஜ்முதீன் அவர்கள்
மாவட்ட பொருளாலர்

வரவேற்புரை
திரு. மாமன்னன் இபுறாம்ஷா அவர்கள்
துவக்க உரை
திரு. M. அக்பர் ராஜா அவர்கள் B.A. B.L,
மாவட்ட தலைவர்

முன்னிலை

திரு. முகவைத்தமிழன் அவர்கள்
மாநில ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்

திரு, எம்.ஐ. ஜஹாங்கீர் அவர்கள்
முகவை மாவட்ட செயளாலர்

மருத்துவர் திரு. பக்ருதீன் அவர்கள்
மாநில ஆட்சி மன்றக்குழு உறுப்பினர்

திரு. முகைதீன் அடுமை அவர்கள்
நகர் தலைவர் - கீழக்கரை

விளக்கவுரை

திரு. M. குத்பதீன் ஐபக் அவர்கள்
மாநில தலைவர்

நன்றியுரை

திரு J.முகம்மது ஹபீப் அவர்கள்

துவன்டு இருக்கும் சமுதாயத்தை தூக்கி நிமிர்த்திட
தூங்கி கொண்டிருக்கும் சமுதாயத்தை விழிக்க செய்திட
துள்ளிக் குதித்து வாரீர்! வாரீர்!! வாரீர்!!!

அனைவரும் வாரீர் !! அழைக்கிறது பரமக்குடி நகர் IDMK

விடுதலையும், விடியலும் வெகுதூரம் இல்லை...

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
9894262100 , 9443021050, 9842388428

Wednesday, January 28, 2009

IDMK மாவட்ட அலுவலக் திறப்புவிழா நிகழ்ச்சி

IDMK மாவட்ட தலைமையகம்


கடந்த 26.01.2009 திங்கள் கிழமை அன்று இராமநாதபுரம் கேணிக்கரை கார்னரில் மையமான பகுதியில் அமைந்துள்ள கட்டிடத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட தலைமையகம் திறப்புவிழா விமரிசையாக நடைபெற்றது. மாவட்டமெங்கும் இருந்து திரளான பொதுமக்களும் முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

தமிழகம் இக்பால் அவர்கள் திறந்து வைக்கிறார், அருகில் திரு.முகவைத்தமிழன், திரு. ஜஹாங்கீர், திரு. நஜ்முதீன்,திரு. அக்பர் ராஜா, திரு. குத்புதீன் ஐபக் ஆகியோர்

இந்திய தேசிய மக்கள் கட்சியின் இராமநாதபுரம் மாவட்ட தலைவர் திரு. அக்பர் ராஜா B.A. B.L., அவர்கள் தலைமை வகிக்க, பரமக்குடி பிரபல வழக்கறிஞர் திரு. பசுமலை B.Sc. B.L அவர்கள், திரு. நாகேஸ்வரன், தமிழ் பாதுகாப்பு பேரவை, திரு. காமராஜ, மாநில ஊணமுற்றோர் பேரவை தலைவர், திரு. K.S. அன்வர், இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட வர்த்தகர் அணி செயளாலர், மருத்தவர் அணீஸ் அஹமது - இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞரணஜ செயளாலர், திரு. முகவைத்தமிழன் - இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில ஆட்சி மன்றகுழு உறுப்பினர் உட்பட பலர் முன்னிலை வகித்து உரையாற்றினார்கள்.

திரு. தமிழகம் இக்பால், திரு. ஜான் பாஷா, திரு. P.V.M அப்துல் ரசாக் ஆகியோர் உரையாற்றுகையில்


இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில ஆட்சி மன்றகுழு உறுப்பினர் மருத்துவர் பகுர்தீன் அவர்கள், PVM அறக்கட்டளையின் நிறுவனர் திரு. PVM அப்துல் ரசாக் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட செயளாலர் திரு. ஜஹாங்கீர் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட பொருளாலர் திரு. நஜிமுதீன் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் வட சென்னை மாவட்ட அமைப்பாளர் திரு. ஜான் பாஷா அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் வழக்கறிஞர் அணி செயளாலர் திரு. K. கண்ணன் M.B.A. M.L., அவர்கள் உட்பட பலர் வாழத்தரை வழங்கினார்கள்.

திரு. முகவைத்தமிழன் @ ரைசுதீன் அவர்களுக்கு பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்குகிறார்கள் திரு. தமிழகம் இக்பால் மற்றும், மூத்த உயர் நீதி மன்ற வழக்கறிஞர் திரு. கண்ணன் M.B.A. M.L., அவர்கள், அருகில் நிர்வாகிகள்.

இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில துனை பொதுச் செயளாலர் தமிழகம் S. இக்பால் அவர்கள் மாவட்ட தலைமை அலுவலகத்தை திறந்து வைத்து உரையாற்றினார்கள். அதன் பின்னர் இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் முகவை சிங்கம் திரு. M. குத்புதீன் ஐபக் அவர்கள் சிறப்புரையாற்றினார்கள். நிகழச்சியின் இறுதியில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் கீழக்கரை மாநகர தலைவர் திரு. முஹைதீன் அடுமை அவர்கள் நன்றியுரை நல்க நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.

திரு. அக்பர் ராஜா B.A. B.L அவர்களுக்கு பொன்னாடை போர்த்துகிறார் வழக்கறிஞர் திரு. கண்ணன் அவர்கள். திரு. நஜ்முதீன் அவர்களுக்கு பொனடனாடை போர்த்துகிறார் டாக்டர். அனீஸ் அஹமத அவர்கள்.


நிகழ்ச்சியில் மாவட்டத்தின் பல முக்கிய பிரமுகர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

மாவட்ட தலைமை அலுவலக நிர்வாகிகளுக்கு வட சென்னை மாவட்ட அமைப்பாளர் திரு. ஜான் பாஷா அவர்கள் அளித்த நினைவு பரிசினை வழங்குகிறார் மாநில தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்கள்.

Monday, January 26, 2009

அதோ வருகிறது அரசியல் குழப்பம் - உஷார்! உஷார்!! உஷார்!!!

அதோ வருகிறது அரசியல் குழப்பம்!
உஷார்! உஷார்!! உஷார்!!!


அரசியல் ஹராம், ஜனநாயகம் ஒரு ஷிர்க்கு, ஓட்டு போடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்று வாயை வாளாக பயன்படுத்தி , வேஷம் போட்டவர்கள் நம்முடைய ஜமாத் ஒற்றுமையை உடைத்து, அரசியல் வலிமையை சிதைத்து, ஒற்றுமைக்குள் ஒற்றுமையை உடைத்து நம்மை வஞ்சித்தவர்கள்களுக்கு மாறி, மாறி ஓட்டளித்து சமூகத்தை ஓட்டாண்டியாய் ஆககியவர்கள். ஆம் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போனார்களாம் என்பதைப்போன்று, மார்க்கத்தை குழப்பியவர்கள் இன்று மக்களை குழப்ப இன்று மனித நேய வேஷம் போட்டு சமூகத்திற்கு துரோகம் செய்ய மீண்டும் வருகின்றார்கள். சமுதாயமே எச்சரிக்கை!!

ஊரை அடித்து உலையில் போட்டவர்கள், கோடிக்கு கொள்கைகளை குப்பையில் போட்டவர்கள் சமுதாய இளைஞர்களின் விழி பறித்தவர்கள் , வழிகாட்ட அரசியல் வியாதிகளாக வருகின்றார்கள், தொற்று நோயிடம் எச்சரிக்கையாக இருங்கள். அன்று பாபர் பள்ளி உடைத்த காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு, கரசேவை ஜெயலலிதாவிற்கு ஆதரவு, இட ஒதுக்கீடு துரோகத்திற்கு பாராட்டு, அண்ணா நூற்றான்டு விழாவில் கைதிகள் விடுதலையில் பாரபட்சத்தில் இவர்களது மெளனம், வக்ஃபு சொத்து அபகரிப்பில் ஆதரவு, திருமங்களத்தில் தி.மு.க விற்கு ஆதரவு, மறுபுரம் தி.மு.க விற்கு பாஸ் மார்க் போட முடியாது, இட ஒதுக்கீட்டில் திருப்தியில்லை த.மு.மு.க தலைவர் பேட்டி, காதர் மைதீன் எம்.பி இஸ்லாமிய அமைப்பை லஸ்க்கரே தய்யிபா என துக்ளக்கில் பேட்டி. இவர்களின் கோமாளி சேட்டைகளை எழுதினால் நாடு சிரிக்கும். நடுநிலையாளர்கள் முகத்தை திருப்பி கொள்வார்கள்.

மூளையை மூலையில் வைத்து விட்டு பாலையில் பணியாற்றும் நம்மவர்கள் நிஜத்திற்கும், நிழலுக்கும் வித்தியாசம் தெறியாமல் குயிலை கோட்டான் என்றும், கோட்டானை குயில் என்றும் கடல் கடந்து காசை கொடுத்துவிட்டு உண்மை நிலை புறியாமல் கத்துகிறார்கள். சோரம் போனவர்களால் சோபிதம் கிடைக்கும் என்று இன்னும் கூட நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். மரணித்து விட்ட இதயங்களால் மாற்றம் வரும் என்று எண்ணுகிறார்கள். ஏமாற்றம்தான் மிச்சம் என மிரண்டு ஓடியவர்களும், ஏமாற்றுக்காரர்களை சரியாக இனம் கண்டு கொண்டவர்களும், IDMK வில் இளைப்பாரிக் கொண்டிருக்கிறார்கள். பாவம் செய்தி படத்திற்கு தெருக்கூட்டும் மந்திரியை போன்று டி.வி யில் வந்து போகும் கிராபிக் மேஜிக்கில் மயங்கி நிற்கிறாய். அருள்மறையை புறிந்து கொண்டவனே சற்று சிந்தி. தேவைப்பட்டால் எங்களை சந்தி.

உரிமை, உணர்வு என உரக்க முழங்கியவர்களின் அன்றைய நிலை என்ன? சில்லரையை எண்ணிக் கொண்டிருந்தவர்கள், கட்டுக்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கட்டுக்களை எண்ணிக்கலைத்தவர்கள் கட்டுக்களை நிறுத்துப் பார்க்கிறார்கள். செந்நீரை சிந்திய நீயோ கண்ணீரை கணக்கு பார்க்கிறாய். எலி வாலை பிடித்துக் கொண்டு ஏழு கடலை தாண்டினேன் என்றால் மதி மயங்கி நம்பகின்றாய். உன் நிலைமையை எப்படி சொல்ல ? பிறருக்கு கைதட்டியே காணாமல் போனவனே, உன் முதுகில் தட்டி சிந்திக்க , ஆம்!! இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுக்க , உஷாராக IDMK க்கு ஓட்டுப் போட உன்னை அழைக்கின்றோம்.


இவன்

இந்திய தேசிய மக்கள் கட்சி
தமிழ்நாடு - 9629471303, 9843160860, 9443021050, 9047507665

Thursday, January 15, 2009

உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!!

தமிழகமெங்கும் உழவர் திருநாளை முன்னிட்டு இந்திய தேசிய மக்கள் கட்சியினரால் ஒட்டப்பட்டிருந்த வாழ்த்து சுவரொட்டி.

ஓர் இறை ஓர் குலம்
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்

சில்லறைக் கூட்டங்களின் திரநாள் அல்ல !
புழுதியின் புத்திரர்களின் பெருநாள் !!
உலகத்தை சுமக்கும் உலவனின் திருநாள்!
இத்திருநாளில் எல்லோரும் எல்லா வளமும்
பெற்று வாழ பிரார்த்தித்து வாழ்த்துகின்றோம்..

இவன்
இந்திய தேசிய மக்கள் கட்சி
மாநில விவசாய அணி
செல் : 9443021050 - 9894262100 - 9344510369

Tuesday, November 25, 2008

டிசம்பர் 6-அர்த்தமற்ற ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டம் வேண்டாம்

டிசம்பர் 6- இஸ்லாமியர்கள் இதயத்தில் ஈட்டி பாய்ந்த நாள் அர்த்தமற்ற ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டம் வேண்டாம். அரசியல் வலிமைபெற உறுதிமொழி எடுப்போம் வாரீர்!


பாப்ரி மஸ்ஜித் பின்புற தோற்றம் .

துடிக்கும் இதயங்கள் எல்லாம் வெடிக்கும் எரிமலையாய் துக்கம் அனுஷ்டிக்கும் துயரச் சம்பவம் அரங்கேற்றப்பட்ட நாள் டிசம்பர் 6. இஸ்லாமியர்களின் இதயத்தில் ஈட்டி பாய்ந்த நாள். நாஜிசத்தையும், பாஸிசத்தையும் விஞ்சிய காவி இசத்தின் காட்டு தர்பாரில் 400 ஆண்டு கால பாபர் பள்ளி இடிக்கப்பட்ட நாள். இந்திய ஒருமைப்பாடும் சமூக நல்லிணக்கமும் மனிதநேயமும் மாய்க்கப்பட்ட நாள். ஆம் நரபலி ரத்தக்காட்டேறிகள் நாடாண்டதால் பாரத பண்பாட்டின் மானம் உலக அரங்கில் பாழ்படுத்தப்பட்ட நாள். இந்திய அரசியல் சட்டம் எங்கள் கால்களுக்கு கீழே என்று சொல்லி ராணுவம், காவல்துறை வேடிக்கை பார்க்க பட்டப்பகலில் பாபர் பள்ளி உடைக்கப்பட்ட கருப்பு நாள் டிசம்பர் 6.

சுதந்திரத்தின் பெருமை அடிமைகளுக்கு தெரிவதில்லை. ஆகையால் தான் அவர்கள் அடிமைகளாக இருக்கின்றனர் என்றான் கலில் ஜிப்ரான். ஜனநாயகத்தில் அரசியல் வலிமை தெரியாத காரணத்தினால் நீங்கள் அரசியல் அடிமைகளாக வாழ்க, ஒழிக என கோஷமிட்டு மாறி மாறி ஓட்டளித்து உருமாறி நீற்கிறீர்கள். 3ல் 2பங்கு பாராளுமன்றத்தில் எப்பொழுது நுழைகிறமோ அப்பொழுது பாபர் பள்ளி இடத்தில் கோயில் கட்டுவேபம் என்கிறார்கள். பி.ஜே.பி சங்பரிவாரக்கூட்டம்.

நீயோ அரசியலை புறக்கணித்து விட்டு பாபர் பள்ளியை மீட்க ரயிலை மறிப்போம், வான் ஊர்தியை மறிப்போம் என வெற்று கோஷ\மிட்டு கூடிக், கூடிக் களைகிறாய். சோடாபாட்டிலை திறந்தவுடன் குப் என்று அடிக்கும் சப்தத்தைப் போன்று டிசம்பர் 6 வந்தால் அர்த்தமற்ற ஆர்ப்பாட்டம், போர்ப்பாட்டம் என்று சடங்கைப்போன்று கோஷமிட்டு ஆடி அமர்ந்து விடுகிறாய்.

இதயம் வெடிக்கிறது. சமுதாய இளைஞனே இது அல்ல தீர்வு. இங்கும், அங்கும் மாறி மாறி எத்தனை நாள் இரவல் அரசியலில் சமூகத்தை அடகு வைக்கப்போகிறாய். மார்க்கத்தையும், அரசியலையும் குழப்பி விரக்தியின் விளிம்பிற்கு இளைஞனை அழைத்துச்சென்றது போதும். கொடுக்காத இடஒதுக்கீட்டிற்கு நன்றி பாராட்டி கூனிக்குறுகி நின்றது போதும். இளைஞனே சிந்தி.

எத்தனை கலவரங்கள், எத்தனை உயிர் உடமை இழப்புக்கள், எத்துனை மனித உரிமை இயக்க குற்றச்சாட்டுகளின் சான்றுகள், எத்தனை விசாரணைக் கமிஷன்களின் ரிப்போர்ட்டுகள், இளைஞனே அரசியலை புறக்கணித்து விட்டு நீதி கேட்கிறாயே? நீதி கிடைத்ததாக வரலாறு உண்டா? குற்றவாளிகள் தண்டிக்கப்பட்டதாக வரலாறு உண்டா? இந்திய தேசத்தில் நிமிர்ந்து நிற்கவேண்டிய நீதிமன்றம் குனிந்து நிற்கிறது. குனிந்து நிற்கவேண்டிய குற்றவாளி நிமிர்ந்து நிற்கிறான். ஆம் பாபர் பள்ளியை இடித்த குற்றவாளிகள் அரசியலில் அதிகாரம் பெற்றதால் சிவப்பு நிற கம்பளத்தில் உலா வருகிறார்கள். நாங்கள் தாம் இடித்தோம் பள்ளியை என்று மார்தட்டுகிறார்கள்.

இன்றோ பள்ளி இடிப்பதற்கு துனை நின்ற காங்கிரஸிற்கு மத்தியில் ஆதரவு, பி.ஜே.பி யோடு கைகோர்த்து ஐந்து ஆண்டு பதவி சுகம் அனுபவித்த தி.மு.க விற்கு தமிழகத்தில் ஆதரவு உன் கோமாளி தனங்களை கணக்கிட்டால் இன்னொரு இமயமலையை உருவாக்கிவிடலாம். குதிரை போனபிறகு லாடத்தை தேடும். முட்டாள்களைப்போல் தேர்தல் முடிந்து விட்ட பிறகு நாங்களும் அரசியலுக்கு வருகிறோம் என்று குழப்பத்தை அறங்கேற்ற வருகிறாய். ரயிலில் ஏறுவதால் ரயில் நமக்கு சொந்தமாகி விடுவது இல்லை. ரயிலை மறிப்பதால் பாபர் பள்ளி மீண்டு விடுவது இல்லை. திட்டமிட்டு காலத்திற்கேற்ற செயலை செய்ய தவறுகிற சமுதாயம் அழிவை நோக்கி செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை.

பாபர் பள்ளி குஜராத், கோயம்புத்தூர்,முத்துப்பேட்டை என அநீதி தொடர்கிறது. வல்லவன் வைத்ததே வாய்க்கால் என்ற கூற்றுக்கு ஏற்ப அரசியலில் சிலர் ஆதிக்கம் பெற்றதால் உன்னை அசைக்கிறார்கள். காரணம் நீ அரசியல் அதிகாரம் பெறாததுதான். போதும் இளைஞனே பூக்கடையில் போர்வாள் கேட்கும் இழிநிலையை இதோடு நிறுத்திக்கொள். குறத்தி கூட்டத்தை கூட்டி வித்தை காட்டி களையும் செயலை நிறுத்திக்கொள். நம் உணர்வுகளுக்கு எண்ணக் குமுறல்களுக்கு இதயப் பொறுமல்களுக்கு வடிவம் கொடுத்திட, சட்ட மன்றம், பாராளுமன்றத்தில் சொந்த சின்னத்தில் நின்று நிமிர்ந்திட துயரத்தில் இருந்து ஞானம் பெற்றிட டிசம்பர் 6ல் IDMKல் உறுதிமொழி ஏற்ப்போம். உடன்பிறப்பே, கழிக்க முடியாத கடன் பிறப்பாய் வீழ்ந்த சமுகத்தை அரசியலில் தூக்கி நிறுத்திட சமுகத்தில் அரசியல் குழப்பம் விளைவிக்கும் குள்ளநரிகளை கூண்டோடு விரட்டிட, தொலைநோக்கு பார்வையோடு சிந்தித்து செயலாற்றிட, காட்டாற்று வெள்ளமாய் கடமையாற்றிட புறப்படுவீர் IDMK யை நோக்கி. பிறக்கட்டும் உன் உழைப்பில் அரசியல் வெற்றி. துடிக்கட்டும் ஜால்ரா போடும் சமுதாய துரோகிகள். துலங்கட்டும் உன் வெற்றி. தொடர்பு கொள்வீர். உன் பங்களிப்பை சமுகத்திற்கு பறைசாற்ற. IDMKல்


இவண் :

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
தமிழ்நாடு தொடர்புக்கு : 9790318182, 9344510369

WWW.IDMK.ORG

Monday, November 24, 2008

வக்ஃபு இடத்தில் அறிவாலயமா? வெட்ககேடு!! வெட்ககேடு!! - IDMK Interview in JUVEE

திருச்சி ருஸ்த்தும் பீவீ பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தை திமுக வினர் கலைஞர் அறிவாலயத்திற்காக ஆக்கிரமித்துள்ளதால் அதை மீட்டெடுக்கும் போராட்டத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சி ஈடுபட்டுள்ளதை அணைவரும் அறிவர்.இதன் ஒரு பகுதியாக தமிழகமெங்கும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. இது குறித்து ஜீனியர் விகடன் பத்திரிகையில் வெளியாகியுள்ள இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்களின் பேட்டி இங்கு வெளியிடப்படுகின்றது. புகைப்படங்களின் மேல் சொடுக்கி அதை பெரிதாக்கி படிக்கவோ பிரின்ட் எடுக்கவோ செய்யலாம்.
தமிழகத்தை கலக்கிய சுவரொட்டி



பக்கம் 1



பக்கம் 2


Tuesday, November 18, 2008

பழ. நெடுமாறன் தலைமையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் பரமக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்

இடமிருந்து திரு. குத்புதீன் ஐபக், ஐயா பழ. நெடுமாறன், திரு. முகவைத்தமிழன்

தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையை கண்டித்து இன்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 18.11.2008 அன்று மாலை 3 மணியளவில் நடத்தப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திரு. சி. பசுமலை, தமிழர் தேசிய இயக்கம் தலைமை வகித்தார்கள். இந்திய தேசிய லீக்கை சேர்ந்த திரு. சாகுல் ஹமீது , தமிழ்நாடு உடல் ஊணமுற்றோர் பேரவையை சேர்ந்த திரு. அப்துல் நஜிமுதீன், திரு. ம. காமராஜர், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் திரு. பீட்டர் வளவன், கவிஞர். திரு. முகவை அரசுமனி, நகர் மலர் செய்தியாளர் திரு. என். சொர்னவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஐயா. பழ. நெடுமாறன் பேசுகிறார் அருகில் தமிழ் பாதுகாப்பு இயக்கம் திரு. நாகேஸ்வரன், அமாந்திருப்பது குத்புதீன் ஐபக், டாக்டர் பக்ருதீன், திரு. முகவைத்தமிழன், திரு. ஜஹாங்கீர்

இந்திய தேசிய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள்,இந்திய தேசிய லீக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் , அமைப்புகள் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் திரு. முகவைத்தமிழன், தமிழர் தேசிய இயக்க பொதுச் செயளாலர் திரு. கா. பரந்தாமன், தியாகி இமானுவேல் பேரவை பொது செயளாலர் திரு. சந்திரபோஸ், விடுதலை சிறுத்தைகள் மு. குணவேந்தன், செ.அ.தொ.நல சங்கம் ம. நாகராஜன், ம.ச.இ.க செயளாலர் குணசேகரன், வே. முருகேசன், தமிழ் பாதுகாப்பு பேரவை தலைவர் திரு. நாகேஸ்வரன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயளாலர் திரு. தங்கராசு, மனித உரிகைமள் கழகம் செந்தில் விஸ்வனாத், வைகை பாசன விவசாய சங்கம் மாநில செயளாலர் திரு. மு. மதுரை வீரன், விடுதலை சிறுத்தைகள் சிவகங்கை மாவட்ட செயளாலர் திரு. ஆல்பர்ட் (எ) நந்தன், ஆதி தமிழர் பேரவை சுகுமாறன், சி.பி.ஐ ஒன்றிய செயளாலர் சுப்பிரமனியன், சமத்துவ மக்கள் கட்சி வேலுச்சாமி, கோ. இராமசாமி, தோலூர் பஞ்சாசரம், இந்திய தேசிய மக்கள் கட்சியின் திரு. ஜஹாங்கீர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

விடுதலை சிறுத்தைகள் சார்பாக வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பலகை

பின்னர் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் ஐயா. திரு. பழ. நெடுமாறன் அவர்கள் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்து பேருரை நிகழ்த்தினார்கள். நிகழச்சியின் இறுதியில் செ.அ.தெ.ந.மு.ச. தலைவர் திரு. பா. ஞானமுத்து அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள். பின்னர் இராமேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஐயா பழ. நெடுமாறன் அவர்களோடு அனைவரும் புறப்பட்டு சென்றனர்.

தமிழ் சிந்தனையாளர் திரு. சை. செளந்தரபாண்டியன், தமிழிய சட்ட நிறுவனம் திரு. ப.பா. தியாகராஜன் ஆகியோர் ஒருங்கினைத்திருந்தனர்.

செய்திகள் : திரு. ஜஹாங்கீ்ர்- இ.தே.ம.க

Monday, November 17, 2008

இயக்குனர் அமீர் உடன் சந்திப்பு


இடமிருந்து திரு. ஜஹாங்கீர், திரு. பக்ருதீன், திரு. அமீர், திரு. குத்புதீன் ஐபக்

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தக் கோரியும், இந்திய குடிமக்களான 500 க்கும் மேறப்பட்ட தமிழ் மீனவர்கள் சிங்கள் இன வெறி கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டும் வாய்மூடி மெளனம் காக்கும் தன்மானம் இல்லாத இந்திய அரசை கண்டித்தும், உடனடி நடவடிக்கை எடுத்து இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாத இலங்கை இரானுவத்தை தடுத்து நிறுத்தக் கோரியும், இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைக்கு ஆயுதம் வழங்குவதை இந்திய அரசு நிறுத்கத் கோரியும் இராமேஸ்வரத்தில் நடந்த பேரனியில் ஆக்ரோச உரை நிகழ்த்திய காரனத்திற்காக பொய் வழக்குகள் புனையப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது பினையில் உள்ள இனமானத் தமிழன், தமிழ் இனப் போராளி பிரபல இயககுனர் திரு. அமீர் அவர்களை இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் திரு. முகவைத்தமிழன், இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட செயளாலர் திரு. ஜஹாங்கிர், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் டாக்டர். பக்ருதீன் B.H.M.S ஆகியோர் நேற்று மதுரையில் சந்தித்தனர்.

இஸ்லாமிய பத்திரிகையான சமரசத்தில் இயக்குனர் அமீர் அவர்களின் பேட்டியின் மூலம் வெளியான சமுதாய அக்கரையை அனைவரும் அறிவர். இவ்வாறு பல இஸ்லாமிய அறிவு ஜீவிகளின் பாராட்டுதலை பெற்ற சிந்தனையாளர் திரு. அமீர் அவர்களுடன் டாக்டர். பக்ருதீன் B.H.M.S, திரு. முகவைத்தமிழன், திரு. குத்புதீன் ஐபக் ஆகியோர் தற்போது ஊடகத்துரைகளில் நமது சமுதாயத்தின் நிலை குறித்தும் இதை எவ்வாறு மாற்றி அமைப்பது என்றும் இன்னும் சமுதாயத்தை எப்படி ஒற்றுமைப்படுத்துவது என்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.

Friday, November 14, 2008

இனப்போராளி சீமானுடன் ஒரு சந்திப்பு


இடமிருந்து திரு. நாகேஸ்வரன், திரு. ஜஹாங்கீர், திரு. குத்புதீன் ஐபக், திரு. முகவைத்தமிழன், திரு. சீமான் ஆகியோர்

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தக் கோரியும், இந்திய குடிமக்களான 500 க்கும் மேறப்பட்ட தமிழ் மீனவர்கள் சிங்கள் இன வெறி கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டும் வாய்மூடி மெளனம் காக்கும் தன்மானம் இல்லாத இந்திய அரசை கண்டித்தும், உடனடி நடவடிக்கை எடுத்து இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாத இலங்கை இரானுவத்தை தடுத்து நிறுத்தக் கோரியும், இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைக்கு ஆயுதம் வழங்குவதை இந்திய அரசு நிறுத்கத் கோரியும் இராமேஸ்வரத்தில் நடந்த பேரனியில் ஆக்ரோச உரை நிகழ்த்திய காரனத்திற்காக பொய் வழக்குகள் புனையப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது பினையில் உள்ள இனமானத் தமிழன், இனப் போராளி திரு. சீமான் அவர்களை இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் திரு. முகவைத்தமிழன், இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட செயளாலர் திரு. ஜஹாங்கிர், தமிழ் பாதுகாப்பு பேரவையின் தலைவர் திரு. நாகேஸ்வரன் அவர்கள், இந்திய மாணவர் பேரவை (AISF) செயளாலர் தோழர் பிரபாகரன் ஆகியோர் நேற்று மதுரையில் சந்தித்தனர்.

திரு. முகவைத்தமிழன், திரு. சீமான் , திரு. குத்புதீன் ஐபக்

இந்த சந்திப்பின் போது திராவிடர் கழக தோழர் திரு. இலங்கோ உட்பட பலர் உடனிருந்தனர். திரு. குத்பதீன் ஐபக், திரு. முகவைத்தமிழன், திரு. நாகேஸ்வரன், திரு. பிரபாகரன் ஆகியோர் இனப் போராளி திரு. சீமான் அவர்களுக்கு தங்கள் ஆதரவையும் அன்பையும் தெறியப்படுத்தினர். இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்களோடும், திரு. முகவைத்தமிழன் அவர்களோடும் இன்ப்போராளி திரு. சீமான் அவர்களும் அவர் உடனிருந்த திராவிடத் தோழர்களும் இரன்டரை மனி நேரத்திற்கும் அதிகமாக கலந்துரையாடினர்.

திரு. நாகேஸ்வரன், திரு. சீமான், திரு. பிரபாகரன் (AISF) ஆகியோர்

இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக், தமிழ் பாதுகாப்பு பேரவையின் தலைவர் திரு. நாகேஸ்வரன், இந்திய மாணவர் பேரவை (AISF) செயளாலர் தோழர் பிரபாகரன், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் திரு. முகவைத்தமிழன், திரு. ஜஹாங்கீர் ஆகியோர் தங்களுடன் ஒத்த கருத்துடைய இன்ன பிற அமைப்புக்களை ஒன்றினைத்து விரைவில் முகவையின் தலைநகர் இராமநாதபுரம் அரன்மனை திடலில் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவதென்றும் அந்த நிகழச்சியில் இனப்போராளிகள் திரு. சீமான் மற்றும் திரு. அமீர் ஆகியோர் கலந்து கொள் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்றுக் கொண்ட திரு. சீமான் அவர்கள் அந்த நிகழச்சியில் தான் கட்டாயம் கலந்து கொள்வேன் என்று வாக்களித்தார்.

பின்னர் அனைவரும் சோந்து தேனீருடன் கூடிய சின்றுன்டியுடன் தங்கள் கலந்துரையாடலை முடித்துக் கொண்டனர். இந்திய மாணவர் பேரவை (AISF) செயளாலர் தோழர் பிரபாகரன் அவர்கள் இந்நிகழச்சிக்காக மாணவர் அமைப்புக்களை கலந்து பேசி இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைமையில் மாணவர்களை ஒருங்கினைத்து போராட துனை புரிவதாக வாக்களித்தார்.இந்த சந்திப்பில் பேராளி திரு. சீமான் அவர்களுடன் பல்வேறு தரப்பட்ட அரசியல் நிகழ்வுகளை பற்றி ஆராயப்பட்டது. இறுதியில் வரும் தேர்தலில் நாம் அனைவரும் ஒருங்கினைந்து தமிழகமெங்கும் அனைத்து தொகுதிகளிலும் களமாடி இனத்துரோகிகளை மக்களுக்கு அடையாளப்படுத்தி அவர்களை தோற்கடிப்போம் என்றும் அதற்கு திரு. அமீர் உட்பட அனைத்து தோழர்களையும் இனைத்து ஓரணியில் நின்று அரச அடக்குமுறைக்கு எதிரான போராடுவோம் என்றும் உறுதியளித்தார்.

செய்தி தொகுப்பு : திரு. ஜஹாங்கீர்

Tuesday, November 04, 2008

கீழக்கரை இட ஒதுக்கீடு குறித்த கருத்தரங்கம் - செய்திகள்

மேடையில் தலைவர்கள்

நவம்பர் 04, கீழக்கரை, இன்று கீழக்கரையில் இந்திய தேசிய மக்கள் கட்சியால் நடத்தப்பட்ட இட ஒதுக்கீடு குறித்த கருத்தரங்கு சிறப்பாக நடைபெற்றது. தமிழக அரசால் சிறுபான்மையினருக்கு வழங்கப்பட்ட இட ஒதுக்கீடு ஒரு ஏமாற்று வேலை அந்த இட ஒதுக்கீடு தேவையில்லை என்று கிருஸ்த்தவர்கள் அதை திருப்பி கொடுத்து விட்டனர் ஆனால் இன்னும் முஸ்லிம்களில் சிலர் கிடைக்காத ஒன்றை கிடைத்ததாக கூறி ஏமாற்றி வருகின்றார்கள்.

இந்நிலையில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் கீழக்கரை கிழை "தமிழக இட ஒதுக்கீடு ஏமாற்று வேலையா? " என்ற தலைப்பில் கீழக்கரை மாநாகரில் கருத்தரங்கு ஒன்றிற்கு ஏற்பாடு செய்திருந்தது. ஹீசைனியா மஹாலில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக்கருத்தரங்கை திரு. எஸ். முஹைதீன் அடுமை அவர்கள் , நகர் தலைவர் - கீழக்கரை தலைமையேற்று துவக்கி வைத்தார்கள்.


திரு. குத்புதீன் ஐபக், திரு. முகவைத்தமிழன், திரு. சான்பாஷா, திரு. அப்துல் ரவூஃப் பாக்கவி

திரு. முகவைத்தமிழன் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் மற்றும், இணைய தள பத்திரிகையாளர், திரு, எம்.ஐ. ஜஹாங்கீர் அவர்கள் இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட செயளாலர், திரு. ஏ. செய்யது இபுறாஹிம் அவர்கள் இந்திய தேசிய மக்கள் கட்சியின் நகர் துனை பொருளாலர் - கீழக்கரை, திரு. எஸ். அயூப்கான் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் நகர் துனை செயளாலர் - கீழக்கரை ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

திரு. சான் பாஷா அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் வட சென்னை மாவட்ட அமைப்பாளர், திரு. அஹமது அனீஸ் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட இளைஞர் அணி செயளாலர், திரு. முகம்மது இக்பால் அவர்கள் இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில துனை பொதுச்செயளாலர், திரு. எம். முகம்மது நஜீம் அவர்கள் இந்திய தேசிய மக்கள் கட்சியின் பொருப்பாளர் அமீரகம், திரு. கிங்காங் முகம்மது இபுறாஹிம் அவர்கள் இந்திய தேசிய மக்கள் கட்சியின் திருப்புல்லானி ஒன்றிய செயளாலர், திரு. தேவ சந்துரு அவர்கள் மாநில செயளாலர் - தமிழ்நாடு சிறுபான்மை இளைஞர் பேரவை, திரு. க. நாகேஸ்வரன் அவர்கள் தலைவர் - தமிழர் பாதுகாப்பு பேரவை ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

நிகழ்ச்சியில் முஸ்லிம் இட ஒதுக்கிடா ? மோசடியா ? என்ற தலைப்பில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் டாக்டர். பக்ருதீன் B.H.M.S அவர்கள் மிகச்சிறப்பாக விளக்க உரை ஆற்றினார்கள். பின்னர் பேச வந்த பன்நூல் ஆசிரியரும், திருக்குர்ஆன் விரிவுரையாளரும் ஆன திரு. காஞ்சி அப்துல் ரவூஃப் பாக்கவி அவர்கள் " சமுதாய அரசியல் வீழ்ச்சிக்கு யார் காரணம்?" என்ற தலைப்பில் ஆவேச உரையாற்றினர்கள். தனது உரையில் இந்த 15 வருடங்களுக்குள் தோன்றிய சில அமைப்பினர் தெளகீத், ஏகத்துவம் என்ற பெயரில் எப்படி தாங்களும் பிரிந்து சமுதாயத்தையும் கூறு போட்டார்கள் என்று மெளலவி அப்துல் ரவூஃப் பாக்கவி அவர்கள் ஆவேச உரையாற்றினார்கள்.

திரு. நாகேஸ்வரன், திரு. தமிழகம் இக்பால், திரு. நிரோஸ், திரு. கிங்காங் இபுறாஹிம்

அதன் பின்னர் பேச வந்த இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்கள் "இந்திய தேசிய மக்கள் கட்சியின் அவசியமும், அவசரமும்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்கள். தனது உரையில் இந்திய தேசிய மக்கள் கட்சியை துவக்க வேண்டியதன் அவசியம் ஏற்பட்டதன் காரனத்தையும் தற்சயமயம் அதன் அவசியம் என்ன என்பதையும் விளக்கினார்கள்.


பின்னர் நடந்த கேள்வி பதில் நிகழ்ச்சியில் பொது மக்களின் அறிவார்ந்த கேள்விகளுக்கு இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர்கள் தெளிவான பதிலை வழங்கினார்கள். இறுதியாக இந்திய தேசிய மக்கள் கட்சியின் கீழக்கரை நகர் செயளாலர் திரு முகம்மது நிரோஸ் அவர்கள் நன்றியுரை கூற நிகழ்ச்சி இனிதே முடிவடைந்தது.


இந்நிகழ்ச்சியில் நூற்றுக்கணக்கான மக்கள் அரங்கின் உள்ளேயும் வெளியேயுமாக தலைவர்கள் ஆற்றிய உரையினை கவனமாக கேட்டனர்.இந்திய தேசிய மக்கள் கட்சியின் திருப்புல்லானி ஒன்றிய செயளாலர் திரு. கிங்காங் முகம்மது இபுறாஹிம் அவர்கள் உள்ளூரில் உள்ள பிரச்சினைகளை பற்றி பேசியதும், அந்த பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் இந்திய தேசிய மக்கள் கட்சி மக்களை திரட்டி போராடும் என்றும் இன்னும் சட்ட ரீதியான நடவடிக்ககைகளில் ஈடுபடு்ம் என்று பேசியது அனைவரின் பாராட்டுதலையும் பெற்றது.


இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)
9790318182, 994050565, 9842461363,

WWW.IDMK.ORG

Saturday, October 11, 2008

ஊழல் செய்யப்பட்ட வக்ஃப் சொத்துக்களை மீட்டெடுப்போம் - IDMK தலைவர்கள் சூளுரை

இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாபெரும் அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும சமூக நல்லிணக்கப் பெருவிழா

மேடையி்ல் தலைவர்கள் வலமிருந்து முதலில் திரு. முகவைத்தமிழன், திரு. தங்கம் T. இராதாகிருஷ்ணன், திரு. குத்புதீன் ஐபக், திரு. மேலை நாசர், திரு. அப்துல் ரவூஃப் பாக்கவி உட்பட பலர்

இராமநாதபுரத்தின் மத்தியப் பகுதியும், இஸ்லாமியர் அதிகம் வசிக்க கூடிய பகுதியுமான சின்னக்கடை வீதியில் அமைந்துள்ள காயிதே மில்லத் திடலில் கடந்த 04.10.2008 அன்று சனிக்கிழமை மாலை 6.00 மணியில் இருந்து இரவு 10.00 மணி வரை இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாபெரும் அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் சமூக நல்லிணக்கப் பெருவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டத்தின் ஒரு பகுதி

பெருமளவில் அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்ட இந்நிகழச்சிக்கு முகவை மாவட்ட செயலாளர் திரு. M.I ஜாஹாங்கீர் அவர்கள் தலைமை வகித்தார். இந்திய தேசிய மக்கள் கட்சியின் கீழக்கரை நகர் தலைவர் திரு. S. முஹைதீன் அடுமை அவர்கள் வரவேற்புரை நல்கினார். இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் A.S. அலாவுதீன், இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைமைக் கழக செளலாளர் திரு. ஹாஜா முஹைதீன், முகவை நகர் துனைச் செயலாளர் திரு. அயூப்கான் அவர்கள், திருப்புல்லானி ஒன்றியச் செயலாளர் திரு. கிங்காங் முகம்மது இபுறாஹிம் அவர்கள், சென்னை முஸ்த்தபா மற்றும் J. யூசுஃப் E.E.E ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சேவை இயக்கத்தை சேர்ந்த திரு. தங்கம் T. இராதாகிருஷ்ணன் அவர்கள், ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு. K. ரவி அவர்கள், சமூக ஆர்வலர் திரு. முகவைத்தமிழன் ஆகியோர் நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் Dr.M. பக்ருதீன் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் வட சென்னை மாவட்ட அமைப்பாளர் திரு. A.K. ஷான் பாஸா அவர்கள் , இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு. தமிழகம் S.இக்பால் ஆகியோர் விளக்க உரை ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியில் உரையாற்றும் தலைவர்கள்


தமிழ்நாடு சுன்னத் அல் ஜமாத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. மேலை நாசர் அவர்களும், பிரபல மார்க்க அறிஞரும், திருக் குர்ஆன் விரிவுரையாளரும் ஆன மெளலவி. காஞ்சி அப்தர் ரவூஃப் பாக்கவி M.A., அவர்களும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. M. குத்பதீன் ஐபக் M.A., அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழச்சியின் இறுதியில் பிரபல மூலிகை மருத்துவர் திரு. அணீஸ் அஹமத் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.

இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக் உட்பட நிகழச்சியில் பேசிய பலரும் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசயில் நிலை குறித்தும், அப்பாவி முஸ்லிம்கள் மீது ஏவப்படும் அரசின் அடக்குமுறை குறித்தும், முத்துப்பேட்டை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்களில் எந்த வத நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காக்கும் தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டத்தின் ஒரு பகுதி

இன்னும் பரமக்குடியில் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம் மாணவனின் வழக்கில் அரசியல் குறுக்கீடுகள் இல்லாது வழக்க நடத்த வேண்டும் என்றும், இன்னும் இவ்வழக்கில் நீதி கேட்ட காரனத்திற்காக அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதை வண்மையாக கண்டித்தும், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இத்தனை கொடுமைகள் நடந்து அப்பாவி போல் அரசில் அங்கம் வகித்து கொண்டு போராட்டம் நடத்துவது போல் இரட்டை வேடம் போடும் தமுமுக வின் இரட்டை வேடத்தை கண்டித்தும் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியி்ல் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முஸ்லிம்கள் இல்லாமல் யாரும் அரசியல் பண்ண முடியாது, ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை உண்டாக்குவது.

இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுக்க சுயமாக சொந்த சின்னத்தில் நின்று நிமிர்ந்திட நம் தனித்தன்மையை காக்க பாடுபடுதல்.

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, முஸ்லிம், கிறிஸ்த்தவ, தலித் மக்களை ஒன்றினைத்து பொறுப்புக்களை பகிாந்தளிக்கப்பட்டு பொது அரசியல் கட்சியாக செயல்படும்.

வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களில் ஜாதி, மதம், பிராந்தியம் பூன்ற குறுகிய எல்லைகளை கடந்து மானிடத்திற்கு இந்திய தேசிய மக்கள் கட்சி உதவி செய்யும்.

முஸ்லிம்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு உள்ள பலகோடி ரூபாய் மதிப்புள்ள வக்ஃபு சொத்துக்களை அரசிடம் இருந்தும் சமூக விரோதிகளிடம் இருந்தும் மீட்டெடுக்க இந்திய தேசிய மக்கள் கட்சி பாடுபடும்.

தமிழகத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை வண்மையாக கண்டிக்கின்றது. இன்னும் முத்துப்பேட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் முஸ்லிம்களின் மீது நடத்தப்பட்ட வண்முறைக்கு காரனமானவர்கள் மீதும், சம்பந்தப்பட்டவர்கள் மீதும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது.

என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இழந்த அரசியல் உரிமைகளை மீட்டெடுக்க அழைக்கின்றது
இஸ்லாமியர்களின் முதல் அரசியில் பொதுக் கட்சி


இந்திய தேசிய மக்கள் கட்சி
தொடர்புக்கு : 9443021050, 8789304109

http://www.idmk.org/

Wednesday, October 08, 2008

சந்தி சிரிக்கும் கலைஞரின் சமூக நீதி - ஜீனியர் விகடன் செய்தி

சமூக நீதி கோரி இந்திய தேசிய மக்கள் கட்சியால் தமிழகமெங்கும் பொதுமக்கள் மத்தியில் விநியோகிக்கப்பட்ட பிரசுரம் தற்சமயம் தமிழகமெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகமெங்கும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் நிர்வாகிகள் மீது அரசின் அடக்குமுறை ஏவப்பட்டுள்ளது. இது குறித்து இந்த வார ஜீனியர் விகடன் பத்திரிகை முழுப்பக்க அளவிற்கு "சந்தி சிரிக்கும் கலைஞரின் சமூக நீதி" என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தியை இங்கே பிரசுரிக்கின்றோம்.

படத்தை பெரிதாக்கி வாசிக்க அதன் மேல் சொடுக்கவும்.

Monday, October 06, 2008

முகவையில் IDMK கழக கொடி ஏற்றுவிழா


இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியும், நகரின் மையப்பகுதியும் ஆன சின்னக்கடை வீதியில் அமைந்துள்ள ஒத்தக்கடை மைதானத்தில் கடந்த 04.10.2008 சனிக்கிழமை மாலை சுமார் 4.00 மனியளவில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்கள் நிகழச்சிக்கு தலைமை வகிக்க இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் டாக்டர். பக்ருதீன் அவர்கள் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட செயலாளர் திரு. எம்.ஐ ஜஹாங்கீர் அவர்கள், கீழக்கரை நகர தலைவர் திரு. முஹைதீன் அடுமை, திருப்புல்லானி ஓன்றிய செயலாளர் திரு. கிங்காங் முகம்மது இபுறாஹிம் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழச்சியில் பெருமளவில் ஆட்டோ ஓட்டுனர்களும், சின்னக்கடை பொதுமக்களும் கலந்து கொண்டனர்.