Showing posts with label ஈழம். Show all posts
Showing posts with label ஈழம். Show all posts

Wednesday, May 27, 2009

சாருநிவேதிதா என்ற உளறல் திலகம்

சாருநிவேதிதா என்ற உளறல் திலகம்

தமிழின் மிகப் பெரிய எழுத்தாள சிகாமணி என்று தன் முதுகைத் தானே சொறிந்து கொண்டிருக்கும் தமிழின் மிகப் பெரும் எழுத்தாள சிகாமணிகள் இருவரில் ஒருவரான சாருநிவேதிதா சமீபத்தில் துபாய் ஏசியாநெட் வானொலிக்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார்.

உலகப் புரட்சிகள் குறித்து மேதாவித்தனமாகப் பேசும் இந்த ஞானபீடை எழுத்தாளருக்கு அருகில் இருக்கும் இலங்கைத் தமிழர்களின் ஆரம்ப கால வரலாறோ அல்லது அது குறித்த பிரக்ஞையோ கொஞ்சம் கூட இல்லை என்பதை இப்படி நிரூபிப்பார் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை.

( பிரபாகரனின் 'மறைவு' குறித்து என்னிடம் பேசுமாறு ஏசியாநெட் வானொலி கேட்டபோது 'உறுதியற்ற தகவல்களை என்னால் பேசமுடியாது. தகவல் உறுதியாகும் வரை இதைச் செய்தியாக என் வாயால் நான் சொல்ல மாட்டேன் என்று தீர்மானமாக மறுத்து விட்டேன்.)

எனவே 'சிந்தனையாளரான' சாருவிடம் கேட்டபோது ' எதிர்பார்த்த ஒன்றுதான். ஏன்னா தமிழில் ஒரு பழமொழி இருக்கு. கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான்'' அப்படின்னு வேதாந்தம் ஓதினார் இந்தக் கட்டுடைப்புவாதி.

நெல்சன் மண்டேலா காந்தியவழியில் போராடியதால்தான் ஜெயிச்சாராம். அதை விட்டுட்டு ஆயுதமேந்திப் போராடியதால்தான் தமிழர்களுக்கு இந்த நிலையாம். ஈழத்துல 50கள்ல ஆயுதமேந்தியா செல்வா போராடினாராம்? இந்த 'சவத்து மூதி'க்கு செல்வாங்குறவரைப் பத்தியாவது தெரிஞ்சிருக்குமான்னு தெரியலை.

அதை விடக் கொடுமை என்னன்னா, ராஜ பக்ஷே என்னதான் கொடூரமா கொலை செஞ்சாலும் அவங்க கிட்ட போய் நட்பாப் பேசி பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சி செய்யணுமாம். அடங்கொய்யால!! கூட இருக்குற எழுத்தாளன் கிட்டயே சுமுகமா நட்பா பேசத் தெரியாதவரு ஊருக்கு எப்படி உபதேசம் பண்றாருன்னு பாருங்க மக்கா!

இதையாவது பொறுத்துக்கலாம்.

25 வருசத்துக்கு முன்னால வரைக்கும் சிங்களர்கள்-தமிழ்ர்கள் உறவு நல்லாத்தான் இருந்திச்சாம். இவங்கதான் ஈழம் வேணும்னு ஈழம் வேணும்னு போராடி மக்களை கொன்னுட்டாங்களாம். அதனாலதான் உலகம் முழுக்க அகதிகளாப் போயிட்டாங்களாம். எழுத்துல மட்டும் இல்லாம பேச்சுலயும் இப்படி சுருதி பிசகாம உளற இவரால எப்படி முடியுதுன்னு வியந்து போயிட்டேன்.

இதுதான் அப்படின்னா தன்னோட 'வன்முறையின் தோல்வி' கட்டுரையில் அஹிமசாவாதியாக அவதாரம் எடுத்திருக்கும் இந்த யுகபுருஷன் சொல்லும் பகடியை நினைத்து வாயால் சிரிக்க முடியாது போலிருக்கிறது

பாருங்கள் என்ன சொல்கிறாரென்று
குறைந்த பட்சம் ஆறு மாதத்திற்கு முன்னால் பேச்சு வார்த்தையை நிராகரிக்காமல் இருந்திருந்தால் இன்று ஈழம் ஒரு சுயாட்சி கொண்ட மாகாணமாகவாவது உருவாகியிருக்கும்... தெருவோரம் பிச்சை எடுக்குறவன் கூட இந்த மாதிரி கேணத்தனமா நம்பவோ பேசவோ மாட்டான்.


ஏதோ எலக்கியம் பேசுனமா, ஜெயமோகனைத் திட்டுனமா, எங்க குடிச்சோம், என்னத்தக் குடிச்சோம்னு நவீனம் எழுதுனமா, பார்க்காத படத்துக்கு விமர்சனம் எழுதி வாங்கிக் கட்டுனமான்னு இருக்குறதை விட்டுட்டு ஏன் தனக்குத் தெரியாத விசயத்துலயெல்லாம் மேதாவி மாதிரி உளறிக்கிட்டிருக்காரு இந்த எலக்கியத் திலகம்ன்னு புரியலை.

சும்மாவே துணியில்லாம ஆடிட்டு திரியுதானுவ. இதுல இம்மாதிரி உளறல்கள் வேற. நெனச்சாலே கொதிப்பா இருக்கு. என்னத்த பண்ணச் சொல்லுதிய?

நல்லா இருங்கடே!!

ஆசிப் மீரான்

Wednesday, May 20, 2009

தமிழீழத் தலைவர் மரணம் - மக்கள் தொலைக்காட்சியின் ஆய்வு - இனவாத அரசின் பரப்புரை அம்பலம்



வா தமிழா வா...


வருக தமிழா வருக...
வந்து இங்கு குவிக...
தவறாய் வந்து தவறு சொன்னான்..
தவறுகளை தவறென்று தவறாமால் சொல்ல வைப்போம் தமிழா நீயும் வருக....
தவறானவன் தகவல் கேட்டு தடை போட்ட தவறாளனை தவறென்று சொல்ல வைப்போம்.. தமிழா நீயும் படை திரட்டி தவறாமல் வருக....
உந்தன் ஒப்பங்களை நீயும் இட்டு எங்கள் நீதி பக்கங்களை நீ..காக்க..
வருக தமிழா வருக படையாகி வருக....
பலமாக்கி ஒப்பமதை நீ பலமாக தருக... வா தமிழா வா...

வன்னி மைந்தன்

நன்றி : நிதர்சனம்

Thursday, February 12, 2009

21 ம் தேதி முகவையில் தியாகி முத்துக்குமாரின் அஸ்தி - திரள்வீர் மக்களே! இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரியக்கம்


ஐயா. பரந்தாமன் அவர்கள் உரையாற்றுகிறார் அருகில் தோழர்கள்


இராமநாதபுரம், பிப்ரவரி 11, இலங்கையில் சிங்கள பேரினவாத இரானுவத்தால் அப்பாவி தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் இனவாத படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி இராமநாதபுரம் நகரி்ன் பல இடங்களில் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்ப்படுத்துவதற்காக தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றது.

ஐயா பழ. நெடுமாறன் அவர்களால் அமைக்கப்பட்டுள்ள இங்கைத் தமிழர் பாதுகாப்பு இய்க்கத்தின் சார்பிலும், தமிழ் பாதுகாப்பு பேரவை சார்பிலும் இந்த தெருமுனை பிரச்சார கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


இடமிருந்து தோழர் மதுரை வீரன், தோழர் செளந்தரபாண்டியன், தோழர் முகவைத்தமிழன், தோழர் காமராஜ் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.



இக்கூட்டங்களில் கண்டன உரையாற்றுவதற்காக ஈழத்தமிழர்களுக்காக பொடா சட்டத்தில் கைதாகி சிறை சென்ற தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஐயா. க. பரந்தாமன் அவர்களும், தமிழ் பாதுகாப்பு பேரவையின் ஆலோசகர் தோழர் சை செளந்தர பான்டியன் அவர்களும், இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் விவசாயிகளின் தலைவர் தோழர் மதுரை வீரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வந்து கண்டன உரையாற்றினார்கள்.

ஐயா பரந்தாமன் அவர்கள் தனது உரையில் வலுப்பெற்று வரும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினை பற்றியும், விடுதலைப்புலிகளின் வலிமை பற்றியும், விடுதலைப்புலிகள் அமைப்பினை யாராலும் தோற்கடிக்க இயலாது என்றும், சென்னையில் பல்லாயிரம் பேர் கலந்து கொள்ள நடைபெற்ற நிகழ்வினைப் பற்றியும் விளக்கினார்கள். பின்னர் வரும் 21 ம் தேதி இராமேசுவரம் நோக்கி ஈழத்தமிழர்களுக்காக தன்னுயிரை அற்ப்பனித்த உயிர்த்தியாகி தோழர் முத்துக்குமாரின் அஸ்த்தியை எடுத்து வருவது பற்றியும் அதை இராமநாதபுரம் அரன்மனை முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைப்பது பற்றியும் இந்நிகழ்வில் பெருமளவில் மாணவ, மாணவிகளையும் பொதுமக்களையும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தச் செய்வது பற்றியும் கூறினார்கள். இந்நிகழச்சியின் மூலம் மாவட்டம் முழுவதும் ஈழத்தமிழ் பேராதரவு எழுச்சியை ஏற்ப்படுத்த வேண்டுமு: என்றும் கூறினார். இதற்காக ஏற்பாடுகளை இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தோழர் நாகேசுவரன், தோழர் காமராஜ், தோழர் பிரபாகரன் மற்றும் தோழர் முகவைத்தமிழன் ஆகியோர் முன்னின்று செய்வார்கள்.

கூட்டங்களுக்கு தமிழ் பாதுகாப்பு பேரவையின் பொருளாலர் தோழர் காமராஜ் அவர்கள் தலைமை வகித்தார்கள். தோழர் சி. பிரபாகரன், அமைப்பாளர், தமிழ் பாதுகாப்பு பேரவை, தோழர் முகவைத்தமிழன் - இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம்(முகவை மாவட்டம்) தோழர். க. நாகேசுவரன் - தலைவர், தமிழ் பாதுகாப்பு பேரவை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இடமிருந்து தோழர் காமராஜ், தோழர் மதுரை வீரன், தோழர் முகவைத்தமிழன், ஐயா பரந்தாமன் அவர்கள், தோழர் நாகேசுவரன், தோழர் செளந்தரபாண்டியன் ஆகியோர்.

இக்கூட்டத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தோழர். இராசிவ் காந்தி B.A. B.L. M.L, பொதுச் செயளாலர், தமிழ் பாதுகாப்பு பேரவை, வழக்கறிஞர். பசுமலை B.A. B.L., மாவட்ட செயலாளர், தமிழ் தேசிய இயக்கம், வழக்கறிஞர். மு.த. முருகேசன் B.Sc., B.L தலைவர் ஆதிசேனா இயக்கம், தோழர் ஜெ. ஜெரோன்குமார், தீவுத்தமிழர் கூட்டமைப்பு, தோழர் நம்புக்குமார், தமிழ் பாதுகாப்பு பேரவை , இராமேசுவரம், தோழர் செகன், தோழர் மா. அன்புகரசன், தோழர் ம. எட்வர்டு , தோழர் வாலிதாசன், தமிழ் பாதுகாப்பு பேரவை, தோழ் ஆதித்ய சேக்கிழார், தமிழக ஆசிரிய படைப்பாளிகள் பேரியக்கம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

Sunday, January 18, 2009

தமிழ் புத்தாண்டு கருத்தரங்கு

இடமிருந்து திரு. ஜஹாங்கீர், திரு. முகவைத்தமிழன்,திரு. குத்புதீன் ஐபக், திரு. அணீஸ் அஹமது, திரு. காரத்தே பழனிச்சாமி, திரு. இராமசாமி

தமிழர் திருநாளாம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் பாதுகாப்பு பேரவையின் சார்பாக முகவை மாநாகரில் தமிழ் ஈழம் குறித்த ஒரு மாபெரும் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கருத்தரங்கிற்கு தோழர் மு. காமராஜர் அவர்கள் தலைமை வகிக்க தோழர் மா. ஈழவேந்தன், தோழர் நம்புகுமார் போன்றோர் முன்னிலை வகித்தனர். தோழர் சி. பிரபாகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

திரு. முகவைத்தமிழன் உரையாற்றுகிறார், திரு. பாரதி, திரு. நாகேஸ்வரன் அருகில்

தமிழர்களின் கலாச்சாரம் என்ற தலைப்பில் தோழர். வழக்கறிஞர் வென்மணி , ஆதி தமிழர் பேரவை கருத்துரை வழங்கினார், தமிழர்களின் மரபும் இன்றைய நிலையும் என்ற தலைப்பில் தோழர் வே. பாரதி - தமிழர் தேசிய விடுதலை இயக்கம் அவர்களும், தமிழர்களின் போராட்டமும் சட்ட தொடர்பும் என்ற தலைப்பில் தோழர். இரா. இராசிவ் காந்தி என்ற இயற்கை (உயர் நிதி மன்ற வழக்கறிஞர்) அவர்களும், தமிழர்களின் அடையாள மீட்டெடுப்பு என்ற தலைப்பில் தோழர் ஆதித்ய சேக்கிழார் - தமிழக ஆசிரிய படைப்பாளிகள் சங்கம் அவர்களும் உரையாற்றினார்கள். தமிழ் பாதுகாப்பு பேரவையின் தலைவர் தோழர் திரு நாகேஸ்வரன் அவர்கள் ஏற்புரையாற்றினார்கள்.

திரு. இராமசாமி, திரு. கராத்தே பழனிச்சாமி, திரு. ஆதித்ய சேக்கிழார்.

ஜாதி என்ற போர்வையில் தமிழன் எவ்வாறு பிறிந்து கிடக்கின்றான் என்பதை விளக்கி இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு குத்புதீன் ஐபக் அவர்களும், ஒற்றுமையை வலியுருத்தி இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் டாக்டர் அணீஸ் அஹமது அவர்களும், தமிழன் எப்போதெல்லாம் எழுச்சி கொள்கின்றானோ அப்போதெல்லாம் பார்ப்பனியமும், பாசிச பத்திரிகைகளும் அவனது ஒற்றுமையை குலைக்க செய்யும் சூழ்ச்சி பற்றியும், பாலஸ்த்தீன விடுதலை போர், தமிழ் ஈழ விடுதலை போர் பற்றிய ஒப்பீடு செய்தும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினறும் இணைய தள எழுத்தாளருமான தோழர் முகவைத்தமிழன் அவர்களும், இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட செயளாலர் திரு ஜஹாங்கீர் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

திரு. இயற்கை (எ) இராசிவ் காந்தி, திரு. பாரதி, திரு. வெண்மணி அவர்கள்

நிகழச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் இராமசாமி, மறுமலர்ச்சி திராவிடர் கழக நிர்வாகி சிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சி.பசுமலை அவர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் இராஜ்குமார் அவர்கள், புதிய தமிழகத்தின் ஐ.கதிரேசன் அவர்கள், ம.தி.மு.க இளைஞரணியை சேர்ந்த தோழர் கராத்தே எம். பழனிச்சாமி அவர்கள், தீவு தமிழர் கூட்டமைப்பு தோழர் ஜெரோன் குமார் அவர்கள், தோழர் மு.நா. சந்திர சேகரன் - தி.க மாவட்ட நிர்வாகி அவர்கள் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

செய்திகள் : ஜஹாங்கீர்

Tuesday, November 18, 2008

பழ. நெடுமாறன் தலைமையில் தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் பரமக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம்

இடமிருந்து திரு. குத்புதீன் ஐபக், ஐயா பழ. நெடுமாறன், திரு. முகவைத்தமிழன்

தமிழீழ விடுதலை ஆதரவாளர்கள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் இலங்கையில் நடைபெறும் இனப் படுகொலையை கண்டித்து இன்று இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் 18.11.2008 அன்று மாலை 3 மணியளவில் நடத்தப்பட்டது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு திரு. சி. பசுமலை, தமிழர் தேசிய இயக்கம் தலைமை வகித்தார்கள். இந்திய தேசிய லீக்கை சேர்ந்த திரு. சாகுல் ஹமீது , தமிழ்நாடு உடல் ஊணமுற்றோர் பேரவையை சேர்ந்த திரு. அப்துல் நஜிமுதீன், திரு. ம. காமராஜர், விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் திரு. பீட்டர் வளவன், கவிஞர். திரு. முகவை அரசுமனி, நகர் மலர் செய்தியாளர் திரு. என். சொர்னவேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


ஐயா. பழ. நெடுமாறன் பேசுகிறார் அருகில் தமிழ் பாதுகாப்பு இயக்கம் திரு. நாகேஸ்வரன், அமாந்திருப்பது குத்புதீன் ஐபக், டாக்டர் பக்ருதீன், திரு. முகவைத்தமிழன், திரு. ஜஹாங்கீர்

இந்திய தேசிய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள்,இந்திய தேசிய லீக், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், பாட்டாளி மக்கள் கட்சி உட்பட பல்வேறு அரசியல் கட்சிகள் , அமைப்புகள் கலந்து கொண்ட இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் திரு. முகவைத்தமிழன், தமிழர் தேசிய இயக்க பொதுச் செயளாலர் திரு. கா. பரந்தாமன், தியாகி இமானுவேல் பேரவை பொது செயளாலர் திரு. சந்திரபோஸ், விடுதலை சிறுத்தைகள் மு. குணவேந்தன், செ.அ.தொ.நல சங்கம் ம. நாகராஜன், ம.ச.இ.க செயளாலர் குணசேகரன், வே. முருகேசன், தமிழ் பாதுகாப்பு பேரவை தலைவர் திரு. நாகேஸ்வரன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயளாலர் திரு. தங்கராசு, மனித உரிகைமள் கழகம் செந்தில் விஸ்வனாத், வைகை பாசன விவசாய சங்கம் மாநில செயளாலர் திரு. மு. மதுரை வீரன், விடுதலை சிறுத்தைகள் சிவகங்கை மாவட்ட செயளாலர் திரு. ஆல்பர்ட் (எ) நந்தன், ஆதி தமிழர் பேரவை சுகுமாறன், சி.பி.ஐ ஒன்றிய செயளாலர் சுப்பிரமனியன், சமத்துவ மக்கள் கட்சி வேலுச்சாமி, கோ. இராமசாமி, தோலூர் பஞ்சாசரம், இந்திய தேசிய மக்கள் கட்சியின் திரு. ஜஹாங்கீர் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

விடுதலை சிறுத்தைகள் சார்பாக வைக்கப்பட்டிருந்த வரவேற்பு பலகை

பின்னர் தமிழர் தேசிய இயக்கத்தின் தலைவர் ஐயா. திரு. பழ. நெடுமாறன் அவர்கள் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்து பேருரை நிகழ்த்தினார்கள். நிகழச்சியின் இறுதியில் செ.அ.தெ.ந.மு.ச. தலைவர் திரு. பா. ஞானமுத்து அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள். பின்னர் இராமேசுவரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ள ஐயா பழ. நெடுமாறன் அவர்களோடு அனைவரும் புறப்பட்டு சென்றனர்.

தமிழ் சிந்தனையாளர் திரு. சை. செளந்தரபாண்டியன், தமிழிய சட்ட நிறுவனம் திரு. ப.பா. தியாகராஜன் ஆகியோர் ஒருங்கினைத்திருந்தனர்.

செய்திகள் : திரு. ஜஹாங்கீ்ர்- இ.தே.ம.க

Wednesday, February 20, 2008

என்னைக் கவர்ந்த கருத்துப் படம்

என்னைக் கவர்ந்த கருத்துப் படம். வாழ்த்துக்கள்!!



நன்றி : யாழ் கருத்துக்களம்

Saturday, November 03, 2007

சு.ப.தமிழ்செல்வன் படுகொலை கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்(eelam)


ஈழ (தமிழின்) செல்வனே

எம் கண்களின் முன்னே
உமிழ்கிறது...
உன் புன்னகையின் வசீகரம்
ஒற்றைக்கால் தாங்கி
நீ பயணித்த திசைகளில்
சமாதானத்தின் தூது செல்ல
உன் விரல் படர்ந்த
ஊன்று கோல் மட்டுமே இனி...

விடுதலையின் நீண்ட பாதையில்
துவண்டு வீழாமல்
தோழர்கள் நடைபயில
உடன்வரும் உன் நினைவுகள்



தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் சிந்திய இரத்ததிலிருந்து ஏராளமான இளைஞர்கள் தோன்றி தமிழீழ விடுதலைப் போரை தொடர்ந்து நடத்துவார்கள் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.



மதுரையிலிருந்து பழ. நெடுமாறன் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வன் சிங்கள வான்குண்டு வீச்சுக்குப் பலியாகி உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கடந்த 25 ஆண்டுகாலத்திற்கும் மேலாக தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் நம்பிக்கையினைப் பெற்றவர். பல்வேறு களங்களில் தலைமை தாங்கி போராடியவர்.

சந்திரிகா அரசு இருந்த போது நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் பின்னர் நார்வேயின் முயற்சியால் நடைபெற்ற அனைத்து பேச்சு வார்த்தைகளிலும் புலிகளின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர். இளம் வயதில் சர்வதேச ராஜதந்திர அரசியலில் சிறந்து விளங்கியவர். புலிகளின் சார்பில் சமரச பேச்சுக்களுக்கு தலைமை தாங்கிய தளபதியை குறிவைத்து குண்டுவீசி படுகொலை செய்ததன் மூலம் இனி சமரசப் பேச்சுக்களுக்கு சிங்கள அரசு தயாராக இல்லை என்பதை வெளிப்படுத்தி விட்டது.

தமிழ் ஈழ தேசியத் தலைவரின் அஞ்சலி

மாவீரர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என்பதற்கு இணங்க மறைந்த தமிழ்ச்செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து ஏராளமான இளைஞர்கள் தோன்றி விடுதலைப் போரை தொடர்ந்து நடத்துவார்கள் என்பதில் அய்யமில்லை.

மறைந்த தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகமெங்கும் கூட்டங்களை நடத்தும்படி அனைத்து தமிழ்த்தேசிய அமைப்புகளை வேண்டிக்கொள்கிறேன் என்றார் அவர்.

தமிழகமெங்கும் பெறியார் தி.க சார்பில் சு.ப. தமிழ்செல்வன் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள்

ஆர்ப்பாட்டத்தில் பெறியார் தி.க தோழர்கள்

சிறிலங்கா வான் குண்டுத்தாக்குதலினால் வீரச்சாவடைந்த அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு வீரணவணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் இன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாட்டில் நடைபெற்றன. சேலம்சேலம் போஸ் மைதானம் அருகில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான வீரவணக்க நிகழ்வும் அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளத்தை அழித்த சிறப்புக் கரும்புலி மாவீரர்களின் வித்துடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்டித்தும் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணிக்கு வீரவணக்க நிகழ்வும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பெரியார் திராவிடர் கழக நிர்வாகி டைகர் பாலன் தலைமை வகித்தார்.ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு மனித உரிமைக் கழகம், புதியன பண்பாட்டுக் கழகம், குடியுரிமை பாதுகாப்பு நடுவம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி, தலித் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்றனர். கோவைகோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் திராவிடர் கழக அலுவலகமான பெரியார் படிப்பகத்தின் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் தலைமை வகித்தார்.இந்நிகழ்வில் பெரியார் தி.க.வின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் வெ. ஆறுச்சாமி, நிர்வாகிகள், தமிழின உணர்வாளர்கள் பலரும் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.பிடிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் பெரியார் தி.க.வின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. .

Thursday, October 25, 2007

சிரிக்கும் சிங்கள பேரினவாத நாய்கள்!!

சிரிக்கும் சிங்கள பேரினவாத நாய்கள்!!

 
 
வீரனுக்கு உடை
அவன் வீரமன்றி
துணி அல்ல

துணி அவிழ்த்து
பார்க்கும் கோழையே
நிர்வாண உடம்பில்
என்ன தேடுகிறாய்


 
 
 
 
தொடை நடுங்கி கூட்டமே
துணி அற்ற உடலும்
தொடை நடுங்க
வைக்குதா

பிறந்த பலனை
நாட்டுக்கு கொடுத்தவன்
துணியில்லாமல்
சாவதில் பெருமை இருக்கும்
 
 
சுற்றி நின்று
வேடிக்கை பார்கிறாய்
துணி இருந்தும் நீ
அம்மணம்தானே

குறித்துக்கொள்
சாகும் நாளை
செய்துகொள்
சவபெட்டியை
நினைத்து கொள்
ஈழம் பயந்தவன்
பூமி இல்லை
(அநுராத புரம் தாக்குதல் இறந்த புலிகளுக்கு வீரவணக்கங்கள்
உயிரெனும் ஆயுதம் ஏந்திய உங்களின் புகழுடம்பு மங்காது)


அநுராத புரம் தாக்குதல் இறந்த புலிகளின் உடலை அம்மணப்படுத்தி
வேடிக்கை பார்க்கும் சிங்கள பேரின வாதத்தை கேள்வி கேட்க எழுதியது - தியாகு.

 
 
சிங்களவன் பாதங்களை நக்கும் தமிழர் என்று தங்களை அழைக்க வெட்கப்படும் சில தமிழ் பேசும் இனத்துரோக நாய்கள் தன் எஜமானனை திருப்தி படுத்த "அப்ப இது நியாயமா?" என்று கேட்டு ஒப்பேறாத புகைப்படங்களுடன் விரைவில் பதில் பதிவுகளும் மின்னஞ்சல்களும் அனுப்புவார்கள். .