Wednesday, May 27, 2009

சாருநிவேதிதா என்ற உளறல் திலகம்

சாருநிவேதிதா என்ற உளறல் திலகம்

தமிழின் மிகப் பெரிய எழுத்தாள சிகாமணி என்று தன் முதுகைத் தானே சொறிந்து கொண்டிருக்கும் தமிழின் மிகப் பெரும் எழுத்தாள சிகாமணிகள் இருவரில் ஒருவரான சாருநிவேதிதா சமீபத்தில் துபாய் ஏசியாநெட் வானொலிக்கு ஒரு பேட்டி அளித்திருக்கிறார்.

உலகப் புரட்சிகள் குறித்து மேதாவித்தனமாகப் பேசும் இந்த ஞானபீடை எழுத்தாளருக்கு அருகில் இருக்கும் இலங்கைத் தமிழர்களின் ஆரம்ப கால வரலாறோ அல்லது அது குறித்த பிரக்ஞையோ கொஞ்சம் கூட இல்லை என்பதை இப்படி நிரூபிப்பார் என்று நான் நினைத்தே பார்க்கவில்லை.

( பிரபாகரனின் 'மறைவு' குறித்து என்னிடம் பேசுமாறு ஏசியாநெட் வானொலி கேட்டபோது 'உறுதியற்ற தகவல்களை என்னால் பேசமுடியாது. தகவல் உறுதியாகும் வரை இதைச் செய்தியாக என் வாயால் நான் சொல்ல மாட்டேன் என்று தீர்மானமாக மறுத்து விட்டேன்.)

எனவே 'சிந்தனையாளரான' சாருவிடம் கேட்டபோது ' எதிர்பார்த்த ஒன்றுதான். ஏன்னா தமிழில் ஒரு பழமொழி இருக்கு. கத்தி எடுத்தவன் கத்தியால்தான் சாவான்'' அப்படின்னு வேதாந்தம் ஓதினார் இந்தக் கட்டுடைப்புவாதி.

நெல்சன் மண்டேலா காந்தியவழியில் போராடியதால்தான் ஜெயிச்சாராம். அதை விட்டுட்டு ஆயுதமேந்திப் போராடியதால்தான் தமிழர்களுக்கு இந்த நிலையாம். ஈழத்துல 50கள்ல ஆயுதமேந்தியா செல்வா போராடினாராம்? இந்த 'சவத்து மூதி'க்கு செல்வாங்குறவரைப் பத்தியாவது தெரிஞ்சிருக்குமான்னு தெரியலை.

அதை விடக் கொடுமை என்னன்னா, ராஜ பக்ஷே என்னதான் கொடூரமா கொலை செஞ்சாலும் அவங்க கிட்ட போய் நட்பாப் பேசி பிரச்னைக்குத் தீர்வு காண முயற்சி செய்யணுமாம். அடங்கொய்யால!! கூட இருக்குற எழுத்தாளன் கிட்டயே சுமுகமா நட்பா பேசத் தெரியாதவரு ஊருக்கு எப்படி உபதேசம் பண்றாருன்னு பாருங்க மக்கா!

இதையாவது பொறுத்துக்கலாம்.

25 வருசத்துக்கு முன்னால வரைக்கும் சிங்களர்கள்-தமிழ்ர்கள் உறவு நல்லாத்தான் இருந்திச்சாம். இவங்கதான் ஈழம் வேணும்னு ஈழம் வேணும்னு போராடி மக்களை கொன்னுட்டாங்களாம். அதனாலதான் உலகம் முழுக்க அகதிகளாப் போயிட்டாங்களாம். எழுத்துல மட்டும் இல்லாம பேச்சுலயும் இப்படி சுருதி பிசகாம உளற இவரால எப்படி முடியுதுன்னு வியந்து போயிட்டேன்.

இதுதான் அப்படின்னா தன்னோட 'வன்முறையின் தோல்வி' கட்டுரையில் அஹிமசாவாதியாக அவதாரம் எடுத்திருக்கும் இந்த யுகபுருஷன் சொல்லும் பகடியை நினைத்து வாயால் சிரிக்க முடியாது போலிருக்கிறது

பாருங்கள் என்ன சொல்கிறாரென்று
குறைந்த பட்சம் ஆறு மாதத்திற்கு முன்னால் பேச்சு வார்த்தையை நிராகரிக்காமல் இருந்திருந்தால் இன்று ஈழம் ஒரு சுயாட்சி கொண்ட மாகாணமாகவாவது உருவாகியிருக்கும்... தெருவோரம் பிச்சை எடுக்குறவன் கூட இந்த மாதிரி கேணத்தனமா நம்பவோ பேசவோ மாட்டான்.


ஏதோ எலக்கியம் பேசுனமா, ஜெயமோகனைத் திட்டுனமா, எங்க குடிச்சோம், என்னத்தக் குடிச்சோம்னு நவீனம் எழுதுனமா, பார்க்காத படத்துக்கு விமர்சனம் எழுதி வாங்கிக் கட்டுனமான்னு இருக்குறதை விட்டுட்டு ஏன் தனக்குத் தெரியாத விசயத்துலயெல்லாம் மேதாவி மாதிரி உளறிக்கிட்டிருக்காரு இந்த எலக்கியத் திலகம்ன்னு புரியலை.

சும்மாவே துணியில்லாம ஆடிட்டு திரியுதானுவ. இதுல இம்மாதிரி உளறல்கள் வேற. நெனச்சாலே கொதிப்பா இருக்கு. என்னத்த பண்ணச் சொல்லுதிய?

நல்லா இருங்கடே!!

ஆசிப் மீரான்

1 comment:

annamalaiar said...

Saruniveta's behaviour is always erratic. In the name of telling truth he was insulting his wife etc.. He does not have have responsibilty. He can not be participant in any movement or any constructive work. He talks are mostly hurting, even when he was writing in Dinamalar. When he was attending vivatha medai, he insult the opponents with filthy language, which he will say that he is frank and truthful.He can be played in the hands of reactioneries. He is not for any progressive work to the society. he talks as if a useless 'samiyar' and makes irresponsible statement. he will go to 5 stars in somebody's money etc..