Sunday, January 18, 2009

தமிழ் புத்தாண்டு கருத்தரங்கு

இடமிருந்து திரு. ஜஹாங்கீர், திரு. முகவைத்தமிழன்,திரு. குத்புதீன் ஐபக், திரு. அணீஸ் அஹமது, திரு. காரத்தே பழனிச்சாமி, திரு. இராமசாமி

தமிழர் திருநாளாம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் பாதுகாப்பு பேரவையின் சார்பாக முகவை மாநாகரில் தமிழ் ஈழம் குறித்த ஒரு மாபெரும் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கருத்தரங்கிற்கு தோழர் மு. காமராஜர் அவர்கள் தலைமை வகிக்க தோழர் மா. ஈழவேந்தன், தோழர் நம்புகுமார் போன்றோர் முன்னிலை வகித்தனர். தோழர் சி. பிரபாகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

திரு. முகவைத்தமிழன் உரையாற்றுகிறார், திரு. பாரதி, திரு. நாகேஸ்வரன் அருகில்

தமிழர்களின் கலாச்சாரம் என்ற தலைப்பில் தோழர். வழக்கறிஞர் வென்மணி , ஆதி தமிழர் பேரவை கருத்துரை வழங்கினார், தமிழர்களின் மரபும் இன்றைய நிலையும் என்ற தலைப்பில் தோழர் வே. பாரதி - தமிழர் தேசிய விடுதலை இயக்கம் அவர்களும், தமிழர்களின் போராட்டமும் சட்ட தொடர்பும் என்ற தலைப்பில் தோழர். இரா. இராசிவ் காந்தி என்ற இயற்கை (உயர் நிதி மன்ற வழக்கறிஞர்) அவர்களும், தமிழர்களின் அடையாள மீட்டெடுப்பு என்ற தலைப்பில் தோழர் ஆதித்ய சேக்கிழார் - தமிழக ஆசிரிய படைப்பாளிகள் சங்கம் அவர்களும் உரையாற்றினார்கள். தமிழ் பாதுகாப்பு பேரவையின் தலைவர் தோழர் திரு நாகேஸ்வரன் அவர்கள் ஏற்புரையாற்றினார்கள்.

திரு. இராமசாமி, திரு. கராத்தே பழனிச்சாமி, திரு. ஆதித்ய சேக்கிழார்.

ஜாதி என்ற போர்வையில் தமிழன் எவ்வாறு பிறிந்து கிடக்கின்றான் என்பதை விளக்கி இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு குத்புதீன் ஐபக் அவர்களும், ஒற்றுமையை வலியுருத்தி இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் டாக்டர் அணீஸ் அஹமது அவர்களும், தமிழன் எப்போதெல்லாம் எழுச்சி கொள்கின்றானோ அப்போதெல்லாம் பார்ப்பனியமும், பாசிச பத்திரிகைகளும் அவனது ஒற்றுமையை குலைக்க செய்யும் சூழ்ச்சி பற்றியும், பாலஸ்த்தீன விடுதலை போர், தமிழ் ஈழ விடுதலை போர் பற்றிய ஒப்பீடு செய்தும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினறும் இணைய தள எழுத்தாளருமான தோழர் முகவைத்தமிழன் அவர்களும், இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட செயளாலர் திரு ஜஹாங்கீர் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

திரு. இயற்கை (எ) இராசிவ் காந்தி, திரு. பாரதி, திரு. வெண்மணி அவர்கள்

நிகழச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் இராமசாமி, மறுமலர்ச்சி திராவிடர் கழக நிர்வாகி சிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சி.பசுமலை அவர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் இராஜ்குமார் அவர்கள், புதிய தமிழகத்தின் ஐ.கதிரேசன் அவர்கள், ம.தி.மு.க இளைஞரணியை சேர்ந்த தோழர் கராத்தே எம். பழனிச்சாமி அவர்கள், தீவு தமிழர் கூட்டமைப்பு தோழர் ஜெரோன் குமார் அவர்கள், தோழர் மு.நா. சந்திர சேகரன் - தி.க மாவட்ட நிர்வாகி அவர்கள் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

செய்திகள் : ஜஹாங்கீர்

No comments: