Showing posts with label முகவை. Show all posts
Showing posts with label முகவை. Show all posts

Thursday, September 27, 2012

இராமநாதபுரத்தில் சரித்திர நிகழ்வு


இராமநாதபுரம், செப். 25, இராமநாதபுரம் நகரில் இன்று தமுமுக, எஸ்.டி.பி.ஐ, ஐ.என்.டி.ஜே , சுன்னத் ஜமாத்தார்கள் , அனைத்து உலமா பெருமக்கள், அனைத்து ஊர் ஜமாத்தினர்கள். இதர இஸ்லாமிய இயக்கங்கள், சங்கங்கள் ஆகியோர் இனைந்த இராமநாதபுரம் மாவட்ட அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின் சார்பாக  இஸ்லாமியர்களின் உயிருனும் மேலான உன்னத நபி முகம்மது (ஸல்) அவர்களை இழிவு படுத்தி படம் எடுத்தவர்களையும் அதை கண்டிக்க மறுக்கும் அமெரிக்கர்களையும் அந்த திரப்படத்தை வெளியிட்டுள்ள அனைத்து வலைத்தளங்களையும் தடை செயய மறுக்கம் மத்திய அரசை கண்டித்தும் ஒரு மாபெரும் கண்டன பேரணியும் கண்டன பொதுக்கூட்டமும் நடைபெற்றது.


கொல்லம்பட்றைத்தெரு ஜமாத் நிர்வாகி ஜனாப் M.A. முத்தலிப் அவர்கள்

இராமநாதபுரம் நகர் கொல்லம்பட்டரை தெருவில் உள்ள இராமநாதபுரத்தின் மிக பழமையானதும் , முதல் பள்ளியுமான கொல்லம் பட்டறை பள்ளியில் இருந்து துவங்கிய இந்த பேரணிக்கு ஆலிம் கிராஅத் ஓத அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளரும் கொல்லம்பட்டறை தெரு ஜமாத் நிர்வாகியுமான ஜனாப் M.A. முத்தலிப் அவர்கள் துவக்கி வைத்தார்கள். பேரணியை வழி நடத்தும் விதமாக அனைத்து  இயக்கத்தவர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்த்தர்கள் , மாவட்டத்தின் அனைத்து ஜமாத்தை சேர்ந்த நிர்வாகிகள், அனைத்து இயக்க நிர்வாகிகள் வீர முழக்கமெழுப்பி கண்டன கோசங்களை உணர்ச்சி பொங்க ஒஞ்கி ஒலித்து வந்தார்கள்.
பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பேச்சாளர் முகவை அப்துல் ஜமீல்


அல்லாஹ்வின்து£தர்(ஸல்) அவர்கள் கூறினார்கள், «لا يؤمن عبد حتى أكون أحب إليه من أهله وماله والناس أجمعين உங்கள் குடும்பத்தினரைவிட உங்கள் செல்வத்தைவிட உங்களுக்கு விருப்பமானவர்களைவிட என்னை அதிகமாக நேசிக்காதவரை நீங்கள் ஒருவரும் மூஃமின்கள் ஆகமாட்டீர்கள் (அறிவிப்பாளர் ; அனஸ்(ரலி), நு£ல் ; புஹாரி, முஸ்லிம்)


மேடையில் தலைவர்கள் எஸ்டிபிஐ பரமக்குடி ஜியாவுதீன்

இந்த நபிமொழிக்கினங்க மாவட்டமெங்கிலும் இருந்து இசுலாமிய வீர இளைஞர்கள் ஆர்ப்பரித்து வரலாறு காணாத வகையில் ஆயிரக்கணக்கில் கண்டன பதாகைகளை கையில் ஏந்தி சின்க்கடை வீதியெங்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை கண்டித்து அன்னல் நபியை இழிவு படுத்தியதை கண்டித்தும் மாநபியின் வீர வேங்கைகள் கோசம் எழுப்பி பேரணியாக தெருவெங்கும் நடந்து வந்தது இராமநாதபுரம் மாவட்டத்தில் எங்கும் காணத சரித்திர சம்பவம். இன்று தங்கள் கண்டனங்களை பதிவு செய்யும் வகையில் இராமநாதபுரத்தில் உள்ள அனைத்து இசுலாமிய வியாபார நிறுவனங்களும் அடைக்கப்பட்டிருந்தன. 
தமுமுக வின் கோவை செய்யது


பொங்கி எழுந்த வீர இசுலாமியர்களின் ஆர்பரிப்பில் இராமநாதபுரம் தினறியது. தப்புக்கணக்கு போட்டு வாகனங்களில் வந்து முஸ்லிம்களை பீதியடைய செய்யலாம் என்று திறலாக குவிக்கப்பட்டிருந்த காவல்துறை எம் மாவட்ட இசுலாமிய வீரவேங்கைகளின் ஆக்ரோசத்தில் பின்வாங்கியது.


எஸ்.எம் பாக்கர் மற்றும் முகவைத்தமிழன் (எ) ரைசுதீன்

பேரணியி்ன் பின்னர் இராமநாதபுரம் தீரர் திப்பு சுல்தான் சந்தை திடலில் நடைபெற்ற கண்டன பொதுக்கூட்த்தில் முதலாவதாக பாப்புலர் ஃப்ரன்ட் ஆஃப் இந்தியாவின் மாநில பேச்சாளர் முகவை அப்துல் ஜமீல் வீர உரையுடன் துவக்கினார் பின்னர் த.மு.மு.க வின் பேச்சாளர் ஜனாப் கோவை செய்யது அவர்கள் ஆக்ரோசத்துடன் கண்டன உரை நிகழ்த்தினர் அதன் பின்னர் உரையாற்ற வந்த முகவையின் மைந்தன் இந்திய தவ்ஹித் ஜமாத்தின் எஸ்.எம். பாக்கர் அவர்கள் தனது சிம்மக் குரலில் கண்டனத்தை பதிவு செய்தார்கள் ,  நிகழ்சியின் இறுதியில் த.மு.மு.க வின் சகோ. அன்வர் அவர்கள் நன்றியுரை கூற கண்டன பொதுக்கூட்டம் இனிதே முடிந்தது.நிகழ்ச்சிகளை அனைத்து இஸ்லாமிய மக்கள் கூட்டமைப்பின் ஒருங்கினைப்பாளர் ஜனாப் M.A முத்தலிப் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள்.

பதாகை ஏற்திய பாலகர்கள்


முகவை மாநகர சரித்திரத்தில் திரன்டிராத கூட்டமிது. காவல்துறையும் உளவுத்துறை உட்பட ஏனைய அனைத்து மக்களும் திரன்டிருந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் ஓழுக்கமான கூடலை பார்த்து ஆச்சர்யத்தில் வியந்தனர். கூட்டத்தில் சிறப்பம்சமாக பெண்கள் வரவேண்டாம் என கூறியும் பெரியபட்டினம் என்ற இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் கிராமத்தை சேர்ந்த நூற்றுக்கணக்கான பென்கள் வாகனங்களில் வந்து மேடையின் பின்புறம் அமர்ந்திருந்தது வியப்பாக இருந்தது.


நமது உயிரினும் மேலான முஹம்மது நபி (ஸல்) அவர்களை இழிவுப் படுத்திய அமெரிக்க கயவர்களை கண்டித்து நடந்த இந்த மாபெரும் கண்டன ஆர்ப்பாட்த்தில் பங்கெடுத்து அன்னல் நபிகளுக்கெதிரான அநீதிக்கு கண்டன் தெறிவித்தவர்களாக சரித்திரத்தில் தங்களை இம்மக்கள் பதிவு செய்து கொண்டனர். இறுதியாக இந்நிகழ்ச்சியை ஒருங்கினைத்த சகோதரர்கள் , இதற்காக ஊர் ஊராக ஓடி அழைப்பு விடுத்து கூட்டத்தை கூட்டிய சகோதரர்கள் என பல்வேறு சகோதரர்கள் இதில் முகம் காட்டாமல் தூரமாக நின்றார்கள். இவர்களுக்கு வல்ல ரஹ்மான் பரக்கத் செய்வானாக. இவர்களின் பெயர்களை குறிப்பிட விரும்பவில்லை இருந்தாலும் இவ்வரலாற்று நிகழ்வின் முக்கிய பங்கு இவர்களுக்குறியது. வாழ்த்துக்கள் சகோதரர்களே!!

மேலதிக படங்களுக்கு இராமநாதபுரத்தில் சரித்திர நிகழ்வு கிளிக் செய்து பார்க்கவும்

Friday, September 21, 2012

இராமநாதபுரத்தில் பள்ளிவாசல்கள் மீது குன்டுவீச்சு


அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) அன்பின் சொந்தங்களே,

இராமநாதபுரம் நகரில் இன்று அதிகாலை சுமார் 2.30 மனியளவில் இராமநாதபுரம் ரயில்வே ஸ்டேசன் அருகில் உள்ள சென்ட்ரல் மஸ்ஜிதிலும், இராமநாதபுரம் குமரய்யா புரத்தில் (பாரதிநகர்) உள்ள புஹாரி அப்பா பள்ளிவாசலிலும் சமூக விரோதிகள் , பாசிச சக்திகள் சமுதாய ஒற்றுமையை சீர் குழைத்து நமது உயிர் நபிகள் நாயகத்தை இழிவு படுத்தி படம் எடுத்தமைக்கு எதிராக நடக்க இருக்கும் அனைத்து மக்கள் கூட்டமைப்பின் ஒற்றுமையான கண்டன போராட்டத்தை சீர்குழைக்கும் முயற்சியில் முகவை மாநாகரத்தை கலவர காடாக்கி ரத்த ஆறு ஓடச்செய்யும் முயற்சியில் மேற்கூறிய இறை ஆலயங்கள் மீது பெட்ரோல் வெடிகுன்டினை வீசி தாககுதல் நடத்தியுள்ளார்கள்.



தற்சமயம் இராமநாதபுரம் நகரின் அனைத்து இசுலாமிய அமைப்புகளும் காவல்துறைக்கு குற்றவாளிகளை கைது செய்ய சொல்லி நாளை மாலை வரை கெடு விதித்துள்ளார்கள். காவல்துறை உடனடியாக குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். இதன மூலம் எங்களின் ஒற்றுமையை ஒரு போதும் குழைக்க இயலாது என்பதை சமூக விரோத சக்திகள் புறிந்து கொள்ள வேண்டும். எங்கள் இரத்தம்...உயிர்...உடல்...உடமை இன்னும் எங்கள் தாய் தந்தையரும் எமது குழந்தைகளும் உங்களுக்கே அர்ப்பனம் எங்கள் நபியே!! இவை அனைத்தையும் இழந்தாவது உமது கண்ணியத்தை காப்போம் யா ரசூலல்லாஹ்...!!!

காவல்துறை உடனடி நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும் இல்லையேல்மாபெரும் போராட்டத்தினை சந்திக்க நேரிடும் என்பதை இசுலாமிய அமைப்புகள் காவல்துறையிடம் கூறி எச்சரித்துள்ளன.

----------------------------------------------------------------------------------------------------

ராம‌நாத‌புர‌த்தில் ப‌ள்ளிவாச‌ல் மீது காவி பயங்கரவாதிகள் பெட்ரோல் குண்டு வீச்சு - போலீசார் குவிப்பு...............!! 

ராமநாதபுரத்தில் இன்று மாலை விநாயகர் சிலை ஊர்வலம் நடைபெற உள்ள நிலையில், நேற்று நள்ளிரவு பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனால் நகரில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ராமநாதபுரம் பார‌தி ந‌க‌ர் குமரய்யா கோயில் பஸ் ஸ்டாப் அருகே பள்ளிவாசல் உள்ளது. குழந்தைகளுக்கு காலை, மாலை நேரங்களில் மதரசாவும் இங்கு செயல்பட்டு வருகிறது. நேற்று இரவு தொழுகை முடிந்த பின்னர் அனைவரும் சென்று விட்டனர்.

துணை இமாம் சபியுல்லா மட்டும் பள்ளிவாசலில் தூங்கிக் கொண்டிருந்தார். நள்ளிரவில் பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டை வீசி விட்டு தப்பிச் சென்றனர். சத்தம் கேட்டு சபியுல்லா எழுந்து வந்து பார்த்தார். தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்தது. உடனே சபியுல்லா சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்து தீயை அணைத்தனர்.இது பற்றி தகவல் அறிந்த இமாம் சையது அக்பர் மற்றும் முஸ்லிம்கள் ஏராளமானோர் பள்ளிவாசல் முன் குவிந்தனர். இது குறித்து கேணிக்கரை போலீசில் புகார் செய்யப் பட்டது. சிவகங்கை ஏடிஎஸ்பி கண்ணன், ராமநாதபுரம் டிஎஸ்பி முரளிதரன் தலைமையிலான போலீசார் வந்து பள்ளிவாசலை பார்வையிட்டு நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினர்.


ராமநாதபுரத்தில் இன்று மாலை இந்து முன்னணி சார்பில் 28 விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட உள்ளன. இந்நிலையில் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. ‘விநாயகர் சிலை ஊர்வலம் முடியும் வரை எந்த பிரச்னையிலும் ஈடுபட வேண்டாம், நாளை மாலைக்குள் குற்றவாளிகளை கைது செய்வோம்’ என போலீசார் உறுதி அளித்ததை தொடர்ந்து முஸ்லிம்கள் கலைந்து சென்றனர்.

பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது.இஸ்லாமிய‌ர்க‌ள் ம‌த்தியில் பெரும் கொந்த‌ளிப்பை ஏற்ப‌டுத்தியுள்ளது.குற்றவா
ளிக‌ளை உட‌ன‌டியாக‌ பிடிக்க‌ காவ‌ல்துறையின‌ரை வ‌ற்புறுத்தி வ‌ருகின்ற‌ன‌ர்.
இன்று நடைபெறும் விநாயகர் சிலை ஊர்வலத்துக்காக நகர் முழுவதும் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு வருகின்றனர்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில்,வேண்டுமென்றே இருத‌ர‌ப்புக்கும் இடையில் க‌ல‌வ‌ர‌த்தை தூண்ட‌ வேண்டும் என்ற‌ நோக்க‌த்துட‌ன் விஷ‌மிக‌ள் செய‌ல்ப‌ட்ட‌தாக‌ தெரிகிற‌து பள்ளிவாசல் அருகே உள்ள டயர் தடயங்களை வைத்துப் பார்க்கும் போது 3 பைக்குகளில் மர்ம நபர்கள் வந்துள்ளனர் என சந்தேகிக்கப்படுகிறது. இவர்கள் யார் என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் இவர்களை கைது செய்வோம்’ என்றனர்

Thursday, July 09, 2009

முகவை மாவட்ட புதிய ஆட்சித்தலைவர் பதவியேற்பு மக்கள் வாழ்த்து

முகவை மாவட்ட புதிய ஆட்சித்தலைவர் பதவியேற்பு மக்கள் வாழ்த்து


மாவட்ட கலெக்டர் திரு. டி.என்.ஹரிஹரன் அவர்களுக்கு திரு. முகவைத்தமிழன் தனது வாழ்த்துக்களை தெறிவித்தபோது.

இராமநாதபுரம்c,ஜுலை.09-

ராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டராக நிய மிக்கப்பட்டுள்ள டி.என். ஹரிஹரன் இன்று பொறுப்பேற்று கொண்டார். புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டரை இராமநாதபுரம் மாவட்ட நேசனல் ஆல் இந்தியா பாரத் சேவாக் சமாஜ் (PFI) அமைப்பின் மவட்ட சேர்மனும் பி.வி.எம் அறக்கட்டளை நிறுவனருமான திரு. அப்துல் ரசாக், நேசனல் ஆல் இந்தியா பாரத் சேவாக் சமாஜ் (PFI) அமைப்பின் செக்ரட்டரி ஆடிட்டர் திரு. சுந்தர்ராஜன், நேசனல் ஆல் இந்தியா பாரத் சேவாக் சமாஜ் (PFI) அமைப்பின் ஜாய்ன்ட் செக்கரட்டரி திரு. முகம்மது ரைசுதீன் ஆகியோர் நேரில் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் சென்று சந்தித்து வரவேற்று தங்கள் வாழத்துக்களை தெறிவித்து கொண்டனர். பின்தங்கிய மாவட்டமான இராமநாதபுரம் மாவட்டத்தின் முன்னேற்றத்திற்காக பல்வேறு பணிகளை இப்பொறுப்பில் இருந்து தாம் மேற்கொள்ள இருப்பதாகவும் அதற்கு அனைவரின் முழு ஒத்துழைப்பும் தேவை என்று திரு. டி.என் ஹரிஹரன் அவர்கள் தெறிவித்தார்.

மாவட்ட கலெக்டர் திரு. டி.என்.ஹரிஹரன் அவர்களுக்கு பி.வி.எம் அறக்கட்டளை நிறுவனர் திரு. அப்துல் ரசாக் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெறிவித்தபோது.

இராமநாதபுரம் மாவட்ட புதிய ஆட்சித்தலைவரைப்பற்றிய ஒரு சிறு குறிப்பு :

இராமநாதபுரம் மாவட்ட புதிய கலெக்டராக டி.என். ஹரிஹரன் நியமிக்கப்பட் டுள்ளார். இவர் இன்று (9-ந்தேதி) இராமநாதபுரம் கலெக் டராக பொறுப்பேற்றார். சென்னையை சேர்ந்தவ ரான இவர் கடந்த 92ம் ஆண்டு வேலூரில் பயிற்சி துணை கலெக்டராக பயிற்சி முடித்த பின் 93ம் ஆண்டு கோவில்பட்டி, கொடைக் கானல், சைதாப்பேட்டை ஆகிய கோட்டங்களில் வரு வாய் கோட்டாட்சியராக பணியாற்றி உள்ளார். 97-ல் சென்னை வருவாய் அலுவல ராகவும், 98 முதல் 2001 வரை நாகபட்டினம் மாவட்ட வரு வாய் அலுவலராகவும் பணி யாற்றி உள்ளார்.

மாவட்ட கலெக்டர் திரு. டி.என்.ஹரிஹரன் அவர்களுக்கு அடிட்டர் திரு. சுந்தர்ராஜன் அவர்கள் தனது வாழ்த்துக்களை தெறிவித்தபோது.



தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் கொள்ளை போன ரூ.7.5 லட்சத்தை விரைந்து நடவடிக்கை எடுத்து திரும்ப பெற்று தந்த மைக்காக இவருக்கு தமி ழக அரசு சார்பில் வீரதீர செயலுக் காக அண்ணா விருது வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழக முது நிலை மண்டல மேலாளராக வும், கலால் துறை மண்டல மேலாளராகவும் பதவி வகித் தார்.

நியமனம்

2006ம் ஆண்டு சேலம் மாவட்ட வருவாய் அலுவல ராகவும், அதைத்தொடர்ந்து சென்னையில் மாநில இணை புரோட்டோகால் அலுவலரா கவும் பணிபுரிந்தார். கடந்த 2008ம் ஆண்டு முதல் சென்னை மெட்ரோ குடிநீர் செயல் இயக்குனராக பணி புரிந்து வரும் இவர் தற்போது இராமநாதபுரம் மாவட்ட கலெக் டராக நியமிக்கப்பட்டுள் ளார். இவருக்கு சந்திரிகா என்ற மனைவியும், சாய்ரித் திக், குமார் என்ற இரு குழந் தைகளும் உள்ளனர்.

Sunday, May 17, 2009

திரு. ரித்தீஷ் அவர்கள் வெற்றி !! - முகவை தேர்தல் முடிவுகள்

திரு. ரித்தீஷ் (எ) சிவக்குமார் M.P அவர்கள்

ராமநாதபுரம் தொகுதியில்
தி.மு.க.வேட்பாளர் ரித்திஷ் வெற்றி

ராமநாதபுரம்,மே.17-
ராமநாதபுரம் தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் ரித்திஷ் வெற்றி பெற்றார்.

வாக்கு எண்ணிக்கை

பாராளுமன்ற தேர்தல் அறி விப்பு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி வெளியிடப்பட்டது. கடந்த 13-ந்தேதி வாக்குப்பதிவு நடை பெற்றது.இதில் 68.7 ச தவீத வாக்குகள் பதிவாகியது. இதற்கான வாக்குஎண்ணிக்கை நேற்று ராமநாதபுரம் செய்யதம்மாள் என்ஜினீயரிங் கல்லூரியில் நடந்தது. காலை 8 மணிக்கு மாவட்ட கலெக்டரும் தேர்தல் அதிகாரியுமான வாசுகி முன்னிலையில் தொகுதிவாரியாக தனி அறையில் சீல் வைக்கப்பட்டு இருந்த வாக்குபதிவு எந்திரங்கள் அந்ததந்த தொகுதி வாக்குகள் என்னும் இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

ராமநாதபுரம்,திருவாடானைசட்டசபை தொகுதிக் கான வாக்கு எண்ணிக்கை மைய கட்டிடத்தின் கிழக்கு பகுதியில் உள்ள தரைத் தளத்திலும்,திருச்சுழி,அறந் தாங்கிதொகுதி வாக்குஎண் ணிக்கை மேற்குபகுதியில்உள்ள தரைத்தளத்திலும், பரமக்குடி தொகுதி வாக்கு எண்ணிக்கை முதல் மாடியில்கிழக்குபகுயிலும், முதுகுளத் தூர் தொகுதி வாக்குஎண் ணிக்கை முதல் மாடியில் மேற்கு பகுதியிலும் நடந்தது.வாக்குகள் எண்ணுவதற்கு ஒவ்வொருசட்ட மன்றதொகுதிக்கும் 12 மேஜைகள் வீதம் 72 மேஜைகள்அமைக்கப்பட்டு ள்ளன. ஒவ்வொரு மேஜைக் கும் ஒரு மேற்பார் வையாளர், ஒரு உதவியாளர், ஒரு நுண்பார் வையாளர் வீதம் மொத்தம் 216 அரசுஅலுவ லர்கள் வாக்கு எண்ணும் பணியில்ஈடுபட்டனர்.

வாக்குஎண்ணிகை மையத்துக்குள்வேட்பா ளர்கள், அனுமதி பெற்ற அவர்களது ஏஜெண்டுகள் மற்றும் தேர்தல் ஆணைய அனுமதி பெற்றவர்கள் தவிர வேறு யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை.அனைத்து கட்சியை சேர்ந்த நிர்வாகிகள்,தொண்டர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் யாரையும் போலீசார் அனுமதிக்கவில்லை. வாக்கு எண்ணிக்கை மையத்தைசுற்றி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தலைமையில்ஏராள மான போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டு இருந்தனர்.
தி.மு.க.வெற்றி

வாக்கு எண்ணிக்கை மொத்தம் 27 சுற்றுகள் நடந்தது. இதன் முடிவில் தி.மு.க.வேட்பாளர் சிவக்குமார் என்ற ஜே.கே.ரித்திஸ் 69 ஆயிரத்து 915 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றார். வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் விவரம் வருமாறு:-
ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் திரு. முகவைத்தமிழன் அவர்களுக்கு திரு. ரித்தீஸ் அவர்கள் பொன்னாடை அனிவிக்கிறார். அருகில் தென்மன்டல தி.மு.க அமைப்பு செயலாளர் திரு.மு.க. அழகிரி, அமைச்சர் சு.ப. தங்கவேலன், திருமதி. பவானி எம்.பி , திரு. ரகுமான்கான் ஆகியோர்

மொத்தவாக்குகள் -11,30,489

பதிவானவை - 7,75,461

தபால்ஓட்டு - 2,378

செல்லாதவை - 499

ஜே.கே.ரித்திஷ்(தி.மு.க.வெற்றி)- 2,94,945

வ.சத்திய மூர்த்தி(அ.தி.மு.க.) - 2,25,030

சு.திருநாவுக்கரசர்(பா.ஜ.க.) - 1,28,322

சிங்கைஜின்னா (தே.மு.தி.க.) - 49,571

பிரிசில்லாபாண்டியன்(ப.சமாஜ்)- 39,086

சலிமுல்லாகான்(ம.ம.க.) - 21,439

முகமதுஅபிதலி(ஜா.மு.மோ) - 1,496

ஜகாங்கீர்(சுயேட்சை) - 5,872

முருகேந்திரன்(சுயே) - 3470

பாஸ்கரன் (சுயே) -2329

காளிமுத்து(சுயே) -1769

பாலமுருகன்(சுயே) -1244

செல்லதுரை(சுயே) - 1186

சண்முகையாபாண்டியன்(சுயே) -1119

சுவார்ட்ஸ்துரை (சுயே) - 961


பாராளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற தி.மு.க.வேட்பாளர் ரித்திசுக்கு தேர்தல் அதிகாரி வாசுகி சான்றிதழை வழங்கினார். அப்போது வேட்பாளர் ரித்திசை அமைச்சர் சுப.தங்கவேலன்,எம்.எல்.ஏ.க்கள்அசன்அலி, முருகவேல்,ராம்பிரபு,உதயம்சண்முகம், முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், நகர்தி.மு.க.செயலாளர் ஆர்.ஜி.ரெத்தினம், ïனியன் தலைவர்கள் திவாகரன், நல்லசேதுபதி, எம்எ.சேக், பெருநாழிபோஸ்,மாவட்டதுணை செயலாளர் அகமதுதம்பி, ராமர்,திசை வீரன், சேது கருணாநிதி, துரைச்சாமி, நாகநாதசேதுபதி உள்பட தி.மு.க.நிர்வாகிகள் வாழ்த்தினர்.
செய்தி நன்றி : தினத்தந்தி

Sunday, April 19, 2009

1 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெல்வேன் - ம.ம.க வேட்பாளர் சலிமுல்லா கான்

திரு. சலிமுல்லாஹ் கான் வேட்பு மனு தாக்கல் செய்தபோது

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் மனு தாக்கல் துவங்கிய முதல் நாளில் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை. இரண்டாம் நாளான நேற்று பிற்பகல் 2.40 மணிக்கு மனித நேய மக்கள் கட்சி வேட்பாளர் சலிமுல்லாகான் தேர்தல் அலுவலரான கலெக்டர் வாசுகியிடம் மனு தாக்கல் செய்தார். அவருடன், புதிய தமிழகம் கட்சியின் மாவட்ட செயலர்கள் காளிதாசன், கதிரேசன், மனித நேய மக்கள் கட்சி மாநில பொருளாளர் ரகமத்துல்லா வந்திருந்தனர்.
சொத்து விவரம்: ரொக்கம் கையிருப்பாக ஐந்து லட்சத்து 79 ஆயிரத்து 855 ரூபாய், வங்கியிருப்பு, வாகனங்கள், நகைகள், அசையா சொத்துக்கள், பாலிசி இல்லை. வழக்குகள்: ராமநாதபுரம், பரமக்குடி போலீஸ் ஸ்டேஷன்களில் ஒன்பது வழக்குகள் உள்ளன. கோர்ட்டில் தீர்ப்பான மூன்று வழக்குகளில் விடுதலை.

சலிமுல்லாகான் கூறுகையில், "பணத்தை வைத்து தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என மற்ற கட்சிகள் களத்தில் உள்ள சூழ்நிலையில், மக்கள் பலம் கொண்ட மனித நேய மக்கள் கட்சி, 50 ஆயிரம் முதல் ஒரு லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும்' என்றார்.
நன்றி : தினமலர்

Sunday, January 25, 2009

IDMK முகவை மாவட்ட தலைமையக திறப்பு விழா அழைப்பிதழ்

இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுப்போம்!!

இனியில்லை வீழ்ச்சியென முரசு அரைவோம்!!

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)

முகவை மாவட்ட புதிய தலைமையக திறப்பு விழா அழைப்பிதழ்

நாள் : 26.01.2009 நேரம் : மாலை 6.00 மணி

இடம் : கேணிக்கரை கார்னர், இராமநாதபுரம்

தலைமை

திரு. M. அக்பர் ராஜா B.A., B.L, அவர்கள்

மாவட்ட தலைவர் IDMK

முன்னிலை

திரு. பசுமலை B.Sc., B.L., அவர்கள்

திரு. நாகேஸ்வரன் அவர்கள்Bold

தமிழ் பாதுகாப்பு பேரவை

திரு முகவைத்தமிழன் அவர்கள்

ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் - IDMK

திரு. காமராஜர் B.A அவர்கள்

மாநில ஊணமுற்றோர் பேரவை தலைவர்

திரு. K.S. அன்வர் அவர்கள்

மாவட்ட வர்த்தக அணி செயலாளர் - IDMK

வாழ்த்துரை

டாக்டர் பகுர்தீன் அவர்கள்

ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் - IDMK

திரு. M.I. ஜஹாங்கீர் அவர்கள்

மாவட்ட செயலாளர் - IDMK

திரு. நஜிமுதீன் அவர்கள் (பரமக்குடி)

மாவட்ட பொருளாளர் - IDMK

திரு. ஜான்பாஷா அவர்கள்

வட சென்னை மாவட்ட அமைப்பாளர் - IDMK

திரு. கண்ணன் M.B.A., M.L

உயர் நீதி மன்ற வழக்கறிஞர் மற்றும் மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் IDMK

திறப்பாளர்

திரு. தமிழகம் S. இக்பால் அவர்கள்

மாநில துனை செயளாலர் - IDMK

சிறப்புரை

திரு. குத்பதீன் ஐபக் அவர்கள்

மாநில தலைவர் IDMK

நன்றியுரை

திரு. முஹைதீன் அடுமை அவர்கள்

நகர் தலைவர் - கீழக்கரை - IDMK

அன்புடன் அழைக்கின்றது Bold

இந்திய தேசிய மக்கள் கட்சி

முகவை மாவட்டம்

தொடர்புக்கு : 9894262100 - 9443021050 - 9047507665

Sunday, January 18, 2009

தமிழ் புத்தாண்டு கருத்தரங்கு

இடமிருந்து திரு. ஜஹாங்கீர், திரு. முகவைத்தமிழன்,திரு. குத்புதீன் ஐபக், திரு. அணீஸ் அஹமது, திரு. காரத்தே பழனிச்சாமி, திரு. இராமசாமி

தமிழர் திருநாளாம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு தமிழ் பாதுகாப்பு பேரவையின் சார்பாக முகவை மாநாகரில் தமிழ் ஈழம் குறித்த ஒரு மாபெரும் கருத்தரங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கருத்தரங்கிற்கு தோழர் மு. காமராஜர் அவர்கள் தலைமை வகிக்க தோழர் மா. ஈழவேந்தன், தோழர் நம்புகுமார் போன்றோர் முன்னிலை வகித்தனர். தோழர் சி. பிரபாகரன் அவர்கள் வரவேற்புரையாற்றினார்.

திரு. முகவைத்தமிழன் உரையாற்றுகிறார், திரு. பாரதி, திரு. நாகேஸ்வரன் அருகில்

தமிழர்களின் கலாச்சாரம் என்ற தலைப்பில் தோழர். வழக்கறிஞர் வென்மணி , ஆதி தமிழர் பேரவை கருத்துரை வழங்கினார், தமிழர்களின் மரபும் இன்றைய நிலையும் என்ற தலைப்பில் தோழர் வே. பாரதி - தமிழர் தேசிய விடுதலை இயக்கம் அவர்களும், தமிழர்களின் போராட்டமும் சட்ட தொடர்பும் என்ற தலைப்பில் தோழர். இரா. இராசிவ் காந்தி என்ற இயற்கை (உயர் நிதி மன்ற வழக்கறிஞர்) அவர்களும், தமிழர்களின் அடையாள மீட்டெடுப்பு என்ற தலைப்பில் தோழர் ஆதித்ய சேக்கிழார் - தமிழக ஆசிரிய படைப்பாளிகள் சங்கம் அவர்களும் உரையாற்றினார்கள். தமிழ் பாதுகாப்பு பேரவையின் தலைவர் தோழர் திரு நாகேஸ்வரன் அவர்கள் ஏற்புரையாற்றினார்கள்.

திரு. இராமசாமி, திரு. கராத்தே பழனிச்சாமி, திரு. ஆதித்ய சேக்கிழார்.

ஜாதி என்ற போர்வையில் தமிழன் எவ்வாறு பிறிந்து கிடக்கின்றான் என்பதை விளக்கி இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு குத்புதீன் ஐபக் அவர்களும், ஒற்றுமையை வலியுருத்தி இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாவட்ட இளைஞரணி தலைவர் டாக்டர் அணீஸ் அஹமது அவர்களும், தமிழன் எப்போதெல்லாம் எழுச்சி கொள்கின்றானோ அப்போதெல்லாம் பார்ப்பனியமும், பாசிச பத்திரிகைகளும் அவனது ஒற்றுமையை குலைக்க செய்யும் சூழ்ச்சி பற்றியும், பாலஸ்த்தீன விடுதலை போர், தமிழ் ஈழ விடுதலை போர் பற்றிய ஒப்பீடு செய்தும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி மன்ற குழு உறுப்பினறும் இணைய தள எழுத்தாளருமான தோழர் முகவைத்தமிழன் அவர்களும், இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட செயளாலர் திரு ஜஹாங்கீர் அவர்களும் வாழ்த்துரை வழங்கினார்கள்.

திரு. இயற்கை (எ) இராசிவ் காந்தி, திரு. பாரதி, திரு. வெண்மணி அவர்கள்

நிகழச்சியில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட தலைவர் வழக்கறிஞர் இராமசாமி, மறுமலர்ச்சி திராவிடர் கழக நிர்வாகி சிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி சி.பசுமலை அவர்கள், பாட்டாளி மக்கள் கட்சியின் இராஜ்குமார் அவர்கள், புதிய தமிழகத்தின் ஐ.கதிரேசன் அவர்கள், ம.தி.மு.க இளைஞரணியை சேர்ந்த தோழர் கராத்தே எம். பழனிச்சாமி அவர்கள், தீவு தமிழர் கூட்டமைப்பு தோழர் ஜெரோன் குமார் அவர்கள், தோழர் மு.நா. சந்திர சேகரன் - தி.க மாவட்ட நிர்வாகி அவர்கள் உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்கள்.

செய்திகள் : ஜஹாங்கீர்

Saturday, October 11, 2008

ஊழல் செய்யப்பட்ட வக்ஃப் சொத்துக்களை மீட்டெடுப்போம் - IDMK தலைவர்கள் சூளுரை

இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாபெரும் அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும சமூக நல்லிணக்கப் பெருவிழா

மேடையி்ல் தலைவர்கள் வலமிருந்து முதலில் திரு. முகவைத்தமிழன், திரு. தங்கம் T. இராதாகிருஷ்ணன், திரு. குத்புதீன் ஐபக், திரு. மேலை நாசர், திரு. அப்துல் ரவூஃப் பாக்கவி உட்பட பலர்

இராமநாதபுரத்தின் மத்தியப் பகுதியும், இஸ்லாமியர் அதிகம் வசிக்க கூடிய பகுதியுமான சின்னக்கடை வீதியில் அமைந்துள்ள காயிதே மில்லத் திடலில் கடந்த 04.10.2008 அன்று சனிக்கிழமை மாலை 6.00 மணியில் இருந்து இரவு 10.00 மணி வரை இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாபெரும் அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் சமூக நல்லிணக்கப் பெருவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டத்தின் ஒரு பகுதி

பெருமளவில் அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்ட இந்நிகழச்சிக்கு முகவை மாவட்ட செயலாளர் திரு. M.I ஜாஹாங்கீர் அவர்கள் தலைமை வகித்தார். இந்திய தேசிய மக்கள் கட்சியின் கீழக்கரை நகர் தலைவர் திரு. S. முஹைதீன் அடுமை அவர்கள் வரவேற்புரை நல்கினார். இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் A.S. அலாவுதீன், இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைமைக் கழக செளலாளர் திரு. ஹாஜா முஹைதீன், முகவை நகர் துனைச் செயலாளர் திரு. அயூப்கான் அவர்கள், திருப்புல்லானி ஒன்றியச் செயலாளர் திரு. கிங்காங் முகம்மது இபுறாஹிம் அவர்கள், சென்னை முஸ்த்தபா மற்றும் J. யூசுஃப் E.E.E ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சேவை இயக்கத்தை சேர்ந்த திரு. தங்கம் T. இராதாகிருஷ்ணன் அவர்கள், ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு. K. ரவி அவர்கள், சமூக ஆர்வலர் திரு. முகவைத்தமிழன் ஆகியோர் நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் Dr.M. பக்ருதீன் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் வட சென்னை மாவட்ட அமைப்பாளர் திரு. A.K. ஷான் பாஸா அவர்கள் , இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு. தமிழகம் S.இக்பால் ஆகியோர் விளக்க உரை ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியில் உரையாற்றும் தலைவர்கள்


தமிழ்நாடு சுன்னத் அல் ஜமாத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. மேலை நாசர் அவர்களும், பிரபல மார்க்க அறிஞரும், திருக் குர்ஆன் விரிவுரையாளரும் ஆன மெளலவி. காஞ்சி அப்தர் ரவூஃப் பாக்கவி M.A., அவர்களும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. M. குத்பதீன் ஐபக் M.A., அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழச்சியின் இறுதியில் பிரபல மூலிகை மருத்துவர் திரு. அணீஸ் அஹமத் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.

இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக் உட்பட நிகழச்சியில் பேசிய பலரும் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசயில் நிலை குறித்தும், அப்பாவி முஸ்லிம்கள் மீது ஏவப்படும் அரசின் அடக்குமுறை குறித்தும், முத்துப்பேட்டை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்களில் எந்த வத நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காக்கும் தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டத்தின் ஒரு பகுதி

இன்னும் பரமக்குடியில் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம் மாணவனின் வழக்கில் அரசியல் குறுக்கீடுகள் இல்லாது வழக்க நடத்த வேண்டும் என்றும், இன்னும் இவ்வழக்கில் நீதி கேட்ட காரனத்திற்காக அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதை வண்மையாக கண்டித்தும், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இத்தனை கொடுமைகள் நடந்து அப்பாவி போல் அரசில் அங்கம் வகித்து கொண்டு போராட்டம் நடத்துவது போல் இரட்டை வேடம் போடும் தமுமுக வின் இரட்டை வேடத்தை கண்டித்தும் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியி்ல் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முஸ்லிம்கள் இல்லாமல் யாரும் அரசியல் பண்ண முடியாது, ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை உண்டாக்குவது.

இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுக்க சுயமாக சொந்த சின்னத்தில் நின்று நிமிர்ந்திட நம் தனித்தன்மையை காக்க பாடுபடுதல்.

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, முஸ்லிம், கிறிஸ்த்தவ, தலித் மக்களை ஒன்றினைத்து பொறுப்புக்களை பகிாந்தளிக்கப்பட்டு பொது அரசியல் கட்சியாக செயல்படும்.

வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களில் ஜாதி, மதம், பிராந்தியம் பூன்ற குறுகிய எல்லைகளை கடந்து மானிடத்திற்கு இந்திய தேசிய மக்கள் கட்சி உதவி செய்யும்.

முஸ்லிம்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு உள்ள பலகோடி ரூபாய் மதிப்புள்ள வக்ஃபு சொத்துக்களை அரசிடம் இருந்தும் சமூக விரோதிகளிடம் இருந்தும் மீட்டெடுக்க இந்திய தேசிய மக்கள் கட்சி பாடுபடும்.

தமிழகத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை வண்மையாக கண்டிக்கின்றது. இன்னும் முத்துப்பேட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் முஸ்லிம்களின் மீது நடத்தப்பட்ட வண்முறைக்கு காரனமானவர்கள் மீதும், சம்பந்தப்பட்டவர்கள் மீதும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது.

என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இழந்த அரசியல் உரிமைகளை மீட்டெடுக்க அழைக்கின்றது
இஸ்லாமியர்களின் முதல் அரசியில் பொதுக் கட்சி


இந்திய தேசிய மக்கள் கட்சி
தொடர்புக்கு : 9443021050, 8789304109

http://www.idmk.org/

Sunday, June 15, 2008

முகவை தமுமுக வின் கல்வி உதவி


அல்லாஹ்வின் திருப்பெயரால்...

இராமநாதபுரத்தில் தமுமுக வின் கல்வி உதவி


இராமநாதபுரத்தில் நகர் தமுமுக வழங்கிய கல்வி உதவி நிகழ்சியில் வீட்டு வசதி வாரியம் மற்றும் குடிசை மாற்று வாரிய அமைச்சர் சுப தங்கவேலன், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர் ரவி சந்திர ராமவன்னி மற்றும் இராமநாதபுர (மத்திய) மாவட்ட தமுமுக தலைவர் சலிமுல்லாஹ் கான் உட்பட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.




(இன்ஷாஅல்லாஹ்) கல்லாமை என்பதை இல்லாமையாக்குவோம்!

இரத்த தானம் செய்தீடுவீர்! மனித உயிர் காக்க உதவிடுவீர்!!

வரதட்சணைக் கொடுமைகளை ஒழிப்போம்! மஹர் கொடுத்து மணம் முடிப்போம்!!!

Thursday, December 06, 2007

பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம்

திரன்டிருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

இன்று தமிழகமெங்கும் முஸ்லிம்களால் பர்பரி மஸ்ஜித் மீட்பு நாள் அனுசரிக்கப்பட்டது. சங்பரிவார தீவஜரவாதிகளால் இடிக்கப்பட்ட பாபரி மஸ்ஜிதை மீண்டுமு் கட்டித்தர கோரியும் முஸ்லிம்களின் உரிமைகளை கோரியும் தமிழகமெங்கும் முஸ்லிம்கள் த.மு.மு.க வினரோடு போரட்டங்களில் ஈடுபட்டார்கள்.

மாவட்ட தலைவர் சலிமுல்லா கான்

முகவையிலும் பாபரி மஸ்ஜித் மீட்பு போராட்டம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. த.மு.மு.க மாவட்ட தலைவர் திரு. சலிமுல்லா கான் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாவட்டடெங்கும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டு எழுச்சியுடன் கோசமிட்டனர்.

திரன்டிருந்த மக்கள் கூட்டத்தின் ஒரு பகுதி

முகவை மூன்றாக பிரிக்கப்பட்டு அம்மாவட்டத்தில் மூன்று இடங்களில் த.மு.மு.க வினர் போராட்டங்களை இதே தினத்தில் நடத்தினாலும் மூன்று இடங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் பெருந்திரளாக வந்து கலந்து கொண்டனர்.

பதாகை தாங்கி கோசமிடும் முஸ்லிம் ஒருவர்

நூற்றுக் கணக்கான வாகனங்களில் வந்திருந்த முஸ்லிம்கள் த.மு.மு.க வினர் முகவை மாவட்ட நீதிமன்றமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகமும் அமைந்துள்ள வளாகத்தின் வெளியே நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

போராட்டத்திற்கு வந்த மக்கள் வந்த நூற்றுக்கணக்கான வாகனங்களின் ஒரு பகுதி

சித்தார்கோட்டையில் நடைபெற்ற கொலையில் அப்பாவி முஸ்லிம்கள் மீது பதியப்பட்ட வழக்கை வாபஸ் பெறவேண்டுமெனவும் பாபரி மஸ்ஜிதை மீளக் கட்டித்தர வேண்டும் எனவும், குஜராததில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் இனப்படுகொலைக்கு காரனமான மோடி அரசை கலைத்து அவனை கைது செய்ய வேண்டும் எனவும் கோசங்கள் எழுப்பப்பட்டன.

போராட்டத்திற்கு வந்த மக்கள் வந்த நூற்றுக்கணக்கான வாகனங்களின் மற்றொரு பகுதி



Sunday, November 11, 2007

முகவையில் மோடியை கைது செய்யக்கோரி போராட்டம்


நவம்பர் 09,2007, குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களின் படுகொலைக்கு காரணமான ஃபாசிச தீவிரவாதி குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பதவி நீக்கம் செய்து கைது செய்யக் கோரி முகவை மாவட்ட த.மு.மு.க சார்பில் கடந்த நவம்பர் 9ம் தேதி அன்று இராமநாதபுரம் அரசு பணிமன முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடந்தது.


ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட த.மு.மு.க தலைவர் சலிமுல்லாகான் தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் தஸ்பீக் அலி, துனைசெயலாளர் அஜ்மல்,துனைத் தலைவர் ஹீமாயுன் கபீர், ஒன்றியச் செயலாளர் பாக்கர் அகியோர் முன்னிலை வகித்தனர். தலைமைக் கழகசசெயலாளர் பாளையங்கோட்டை ரஃபீக் அவர்கள் கோரிக்கையை வலியுருத்தி பேசினார். த.மு.மு.க வின் பரமக்குடி நிர்வாகி அப்பாஸ் உட்பட ஏராளமானோர் இதில் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய பதிவுகள் :

வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள் (PART-I)

வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள் (PART-II)

வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள் (PART-III)

பாரத் மாதா கீ.......அடத்தூ! போடாங்..........!

பாரத் மாதா கி.......... ஆதார வீடியோ!

Tuesday, May 22, 2007

மே 26 - முகவையில் தமுமுக அணிவகுப்பு


ஏக இறைவனின் திருப்பெயரால்

இச்சமூகம் ஒரு போர்க்களம் !! இதில் அறிவுதான் நமக்கு ஆயுதம்!!


நீதிபதி இராஜேந்திர சச்சார் அறிக்கையை அமுல்படுத்தக் கோரி

தமுமுக தொண்டரணி அணிவகுப்பு

முகவை மாநகரில்

நாள் : மே 26, 2007
நேரம் : மாலை 4.15 (இன்சா அல்லாஹ்)
புறப்படும் இடம் :
சின்னக்கடை

தலைமை : எஸ். சலிமுல்லாஹ் கான் (மாவட்ட தலைவர்)

தொடங்கி வைப்பவர் : எஸ். ஹைதர் அலி (மாநில பொதுச் செயலாளர்)


மற்றும் கீழ்க்கானும் நிர்வாகிகளும் கலந்து கொள்கின்றார்கள்:

எம்.தமிமுன் அன்சாரி (மாநில செயலாளர்)

கோவை செய்யது (மாநில பேச்சாளர்)

முகம்மது ரஃபீக் (மாநில தொண்டரணி செயலாளர்)

ஹாரூன் ரஷீத் (மாநில துனைச் செயலாளர்)

அன்புடன் அழைக்கின்றது

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழக தொண்டரணி

முகவை

Thursday, April 12, 2007

முஸ்லிம்களுக்கு தனி உள் ஒதுக்கீடு தேவை - Hasan Ali M.L.A

முகவை சட்டமன்ற உறுப்பினர் ஹசன் அலி அவர்கள்


முஸ்லிம்களுக்கு தனி உள்ஒதுக்கீடு வேண்டும்!
சட்டமன்றத்தில் உறுப்பினர் ஹசன் அலி உரை


(தமிழக சட்டமன்றத்தில் சிறுபான்மையினர் நலன் தொடர்பான மானியக் கோரிக் கையின்போது. கடந்த ஏப்ரல் 5 அன்று ராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் ஹஸன் அலி, முஸ்லிம்களுக்கு தனி இடஒதுக்கீடு ஏன் தேவை என்பதை எடுத்துரைத்து 30 நிமிடங்கள் உரை நிகழ்த்தினார். இதனைத் தொடர்ந்து சி.பி.எம். உறுப்பினர் பால பாரதி மற்றும் திமுக உறுப்பினர் கலீலுர்ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினர். இந்த உரைகளைத் தொடர்ந்து முதல்வர் இடஒதுக்கீடு அறிவிப்பை செய்தார் இங்கே சட்டமன்ற உறுப்பினர் ஹஸன் அலி அவர்களின் உரையிலிருந்து சில முக்கியப் பகுதிகளை அளிக்கிறோம்.)


மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே... உங்கள் அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக!

''தேர்தல் சமயத்திலே அன்னை சோனியாவினுடைய தொண்டனாக நான் தேர்தலிலே நின்றபோது கலைஞர் அவர்களுடைய வாக்குறுதியான சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீடு என்பதை சொல்லித்தான் நான் சிறுபான்மையினரிடம் வாக்களிக்குமாறு கேட்டேன்.

திருச்சியிலே நடந்த மாநாட்டிலே, சேது சமுத்திரத் திட்டம் எப்படி தமிழர்களின் நீண்டநாள் கனவாக இருக்கின்றதோ, அதேபோல் சிறுபான்மை கிறிஸ்தவ சமுதாயத்திற்கும், இஸ்லாமிய சமுதாயத்திற்கும் இந்த இடஒதுக்கீடு நீண்ட கால கனவாக இருக்கிறது. நான் ஆட்சிப் பொறுப்பேற்றால் உடனடியாக அதை நிறைவேற்றுவேன் என்று சொன்ன கலைஞர், ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் ஆளுநர் உரையிலும், நிதிநிலை அறிக்கையிலும் அரசு கொள்கை விளக்கக் குறிப்பிலும் இடம்பெறச் செய்தார்கள்.

இந்த இடஒதுக்கீடு என்பது இன்றைக்கு இங்கே சட்டமன்றத்திலே நான் உங்களிடம் கேட்க வேண்டுமா அல்லது நீதிமன்றத்திலே போய் எனக்கு இடஒதுக்கீடு கேட்க வேண்டுமா என்கின்ற ஒரு நிலை இருக்கிறது. ஏனென்றால் Judiciary யிலே போய்க் கேள் என்றுதான் இன்றைக்குச் சொல்கிறார்கள்.

பிற்படுத்தப்பட்ட மக்கள் யார் என்பதை எப்படி அறிய வேண்டும் என்று சொல்லுகின்ற தகுதி நீதிமன்றங்களுக்கு இல்லை. அதற்கு நீதிமன்றங்கள் ஏற்புடை யவும் அல்ல. ஏனென்றால் சமுதாயத்தில் யார் யார் எவ்வளவு பின்தங்கிய நிலையில் உள்ளார்கள் என்பதை அளவிடக்கூடிய அளவுகோல் எதுவும் நீதிமன்றங்களிடம் இல்லை. இதற்கு நீதிமன்றங்கள் சமுதாயத்திலுள்ள மக்களுடைய ஏற்றத்தாழ்வுகளிலிருந்து ஒதுங்கியிருப்பதுவே காரணம். இதை நான் சொல்லவில்லை. நீதியரசர் சின்னப்ப ரெட்டி அவர்கள், வசந்தகுமாருடைய வழக்கிலே சொல்லியிருக்கிறார்.

இதே போல நீதிபதி தேசாயும் சொல்லியிருக்கிறார். நீதி தேவதையினுடைய கண்களிலே கட்டியிருக்கி றார்களே கறுப்புத் துணி, அதை யார் என்று பார்க்காமல் சம நீதி
செய்வதற்கு. ஆனால் இன்றைக்கு கட்டியிருக்கும் கறுப்புத் துணியோ இந்த மக்களிடமிருந்து விலக்கி வைப்பதற்கு, இந்த மக்களைப் பார்க்கக் கூடாது என்பதற்காக கட்டி வைப்பது என்று. இப்படி எத்தனையோ இருக்கின்றன. இவைகளைச் சொல்லியிருக்கிறார்கள்.


ஆனால் இன்று இவைகளையெல்லாம் மீறி முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இடஒதுக்கீடு செய்வதில் தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் எந்தவித சட்டசிக்கலும் இல்லை. ஏற்கனவே தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோருக்கு 30 சதவிகிதம் இடஒதுக்கீடு உள்ளது. மண்டல் ஆணையம் தொடர்பான வழக்கில் தமிழக முஸ்லிம்கள் 94.61 சதவிகிதம், கிறிஸ்தவர்கள் 79.83 சதவிகிதமும் பிற்படுத்தப்பட்ட நிலையில் உள்ளார்கள் என்று உச்சநீதிமன்றமே கூறியிருக்கிறது. 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பு NSSO தேசிய மாதிரி ஆய்வு நிறுவனங்களை மேற்கோள் காட்டி தமிழக முஸ்லிம்கள் 93.3 சதவிகிதம் பிற்படுத்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள் என்று சச்சார் குழு அட்டவணை 10ல் 3ஆம் பாகத்தில் 204வது பக்கத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது.

கேரளாவிலே உள் ஒதுக்கீடு வழங்குவதிலே எந்த இடர்ப்பாடும் எழவில்லை. கர்நாடகாவிலே சிறுபான்மையினருக்கு உள்ஒதுக்கீடு வழங்குவதிலே எந்த இடர்ப்பாடும் எழவில்லை. அதுபோல இந்த இடஒதுக்கீட்டுக்கு அரசியல் சாசன சட்டத்திருத்தமோ தேவையில்லை. 2007லி2008ஆம் ஆண்டு பிரதமரின் 15 அம்ச திட்டத்தின் அடிப்படையில் வளர்ச்சிப் பணிகளுக்காக தமிழக அரசு செலவிடும் மொத்த தொகையில் 15 சதவிகிதத்தை மத ரீதியான சிறுபான்மையினருக்கு மேற்கு வங்காளம் ஒதுக்கியிருப்பது போல இந்த தமிழக அரசும் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.


நீதிபதி ராஜேந்திர சச்சார் அவர்களுடைய குறிப்பிலே மிக அழகாகச் சொல்லப் பட்டிருக்கிறது. 25 சதவிகிதம் இந்த பிற்படுத்தப்பட்ட நலிவுற்ற முஸ்லிம் சமுதாயக் குழந்தைகள் பள்ளிக்கே செல்வதில்லை. அப்படியே சென்றாலும் பாதியிலேயே அந்தப் பள்ளிப் படிப்பை விட்டு விடுகிறார்கள். இதைக் களைவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலாவதாக முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதிகளிலே மானியங்களும், ஊக்கத் தொகைகளும் வழங்கப்பட வேண்டும். அவர்கள் நடத்துகின்ற பள்ளிகளை தரமான பள்ளிகளை முன்வந்து தமிழக அரசே நடத்த வேண்டும். அதிலும் குறிப்பாக மாணவிகளுக்கு என்று தனியாக பள்ளிகள் அமையப்பட வேண்டும். அவர்கள் தங்கும் விடுதிகளும் அமையப்பட வேண்டும். தமிழ் வழியில் சிறுபான்மையினர் நடத்தும் பள்ளிகளிலே அவர்கள் தொடங்கும் புதிய வகுப்புகளுக்கு மானியம் அளிப்பதில்லை என்ற முடிவை அரசாங்கம் மறுபரிசீலனை செய்ய வேண்டும். அதேபோல் முஸ்லிம் கல்லூரிகளில் புதிதாக தொடங்கப்படும் பாடங்களுக்கு மானியம் அளிப்பதில்லை என்பதை மறுபரிசீலனை செய்து முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கின்ற பகுதியிலே தொழிற் பயிற்சி நிறுவனங்கள் அமைப்பீர்களேயானால் இந்த தொழில் பயிற்சி நிலையங் களில் சேர்வதற்கு என்று ஒரு வரைமுறை இருக்கிறது. அதாவது 8வது படித்தால் அவர்களுக்கு சேர முடியும் என்ற நிலையை உருவாக்கினால்தான் அங்கே இந்த பிற்படுத்தப்பட்ட, நலிவுற்ற மாணவர்கள் சேர்வதற்கு வகை செய்யப்படும்.

நவீன உயர்கல்வி, சிறுபான்மையினரால் நடத்தப்படும் பொறியியல் மற்றும் உயர் தொழிற்கல்வி நிறுவனங்களில் நலிவுற்ற சிறுபான்மை மாணவர்கள் குறைந்த கட்டணத்தில் படிக்கவும், முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சிறுபான்மை யினர் தொடங்கும் பள்ளிகளுக்கு மானியம் வழங்கவும் அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மத ரீதியாக சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் கல்வி உதவித் தொகை மிகமிகக் குறைவு. உதவித் தொகையையும், பயனாளிகள் தொகையையும் பெருக்கிட இந்த அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும்.

தமிழகத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்களில் 4.1 விழுக்காடு முஸ்லிம்கள். இதைச் சொல்லும்போது, மொத்தத் தமிழக மக்கள் தொகையிலே 5.66 விழுக்காடு முஸ்லிம்கள் என்பதைக் கருத்தில் கொண்டு பார்த்தால் இந்தக் கொடுமை உங்களுக்கு விளங்கும்.

சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்திற்கான நிதியை பன்மடங்கு உயர்த்த வேண்டும். இதற்கு நீங்கள் அளிக்கும் கடன்களுக்கு வட்டி வசூல் செய்கின்றீர்கள். வட்டி வசூல் செய்வது ஒரு சிறிய தொகையே ஆனாலும் கூட, முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் வட்டி கொடுப்பதும், வாங்குவதும் மத ரீதியாக தடை செய்யப்பட்ட ஒன்று. ஆகவே நீங்கள் அளிக்கும் கடன்களுக்கு வட்டியிலிருந்து விலக்களித்து மேற்கு வங்கத்திலே செய்திருக்கிறார்கள் இதற்கு சேவை வரி ஒன்றைச் செய்யலாம். சேவை வரி என்று சொன்னால் தயங்காமல் அதை வாங்க முடியும். ஆகவே அதற்கு நீங்கள் முயற்சி எடுக்க வேண்டும்.

முஸ்லிம்களுடைய அவல நிலையை நீங்கள் அறிய வேண்டுமென்றால், 1.1.2006, அதாவது சென்ற வருட தமிழக அரசின் விவரக் குறிப்பைப் பார்த்தாலே உங்களுக்கு விளங்கும். 1.1.2006 அன்று தமிழகத்தில் உள்ள 296 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளில் வெறும் 10 பேர்தான் முஸ்லிம்கள். 231 ஐ.பி.எஸ். அதிகாரிகளில் வெறும் 10 பேர்தான் முஸ்லிம்கள். அதிலும் இருவர் ஓய்வு பெற்றுவிட்டனர். 2007ல் குடிமைப் பணியில் 540 அலுவலர்களில் வெறும் 17 பேர்தான் முஸ்லிம்கள். அவர்களில் 3 பேர் ஓய்வு பெற்றுவிட்டனர்.

சச்சார் குழுவின் அறிக்கையை நடைமுறைப் படுத்துவோம் என்ற கலைஞர் அரசின் அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம். அவர்கள் நிறைய சொல்லியிருக்கிறார்கள்; செய்வார்கள். இதில் சுட்டிக்காட்டியுள்ள கேரள இடஒதுக்கீட்டு முறையைப் பின்பற்றி தமிழகத்தில் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு செய்ய வேண்டும். நான் இதையெல்லாம் இங்கே கலைஞரிடம் சொல்லி, 'கலைஞர் அவர்களே, இதையெல்லாம் எனக்கு நீங்கள் செய்ய வேண்டும்' என்று நான் கேட்கும்போது, ஒரு கல்லூரிப் பேராசிரியரிடம் ஒரு எல்.கே.ஜி மாணவன் ஐயா இப்படி, இப்படி நடக்க வேண்டுமென்று சொல்வது போல் இருக்கலாம் ஏனென்றால், கலைஞர் நான் சொன்ன எல்லாவற்றையும் விட கூடுதலாகச் செய்பவர். நான் சொல்வதே சிறிது. இதைவிடச் சிறப்பானத் திட்டங் களை வைத்திருக்கிறார்கள்.

நன்றி : தமுமுக இணையத்தளம்

காரைக்கடி, இஸ்லாம், முஸ்லிம்

Sunday, February 11, 2007

சவுதியில் வேலை வாய்ப்பு (AL-SUWAIDI LTD)

சவுதியில் வேலை வாய்ப்பு

அன்பின் சகோதரர்களே,

அல் சுவைதி நிறுவனத்தில் பணிபுறியும் ஒரு தமிழ் முஸ்லிம் சகோதரர் எமக்கு அனுப்பியிருந்த மின்னஞ்சலில் அவரின் நிறுவனத்தில் பல முக்கிய பதவிகளுக்கு ஆட்கள் எடுப்பதாக தெறிவித்துள்ளதுடன் அந்த பணிகளுக்கான பட்டியலையும் அனுப்பியுள்ளார்.

AL-SUWAIDI SERVICES CO. LTD. (SSC)
AL-SUWAIDI EQUIPMENT AND TRANSPORT CO. LTD (SET)
AL-SUWAIDI SCAFFOLDING SERVICES AND ACCESS SOLUTIONS (SSSAS)
AL-SUWAIDI REAL ESTATE ENTERPRISES CO. LTD. (SRE)
INFORMATION MANAGEMENT TECHNOLOGY (IMT)
PRECISION FORGING FACTORY (PFF)

போன்ற அல் சுவைதி குழுமத்தின் சகோதர நிறுவனங்களுக்கு மேனேஜர் முதல் ஹெல்ப்பர் வரை பல்வேறுபட்ட நூற்றுக்கணக்கான பதவிகளுக்கு ஆட்கள் எடுக்கின்றார்கள். தகுதி வாய்ந்த நமது சகோதரர்கள் இந்த வாய்ப்பை பயன் படுத்தி கொள்ளவும். எந்த எந்த பதவிகளுக்கும் வேலைகளுக்கும் ஆட்கள் எடுக்கின்றார்கள் என்பதை கீழக்கண்ட தொடுப்பை சொடுக்கி டவுன்லோட் செய்து கொள்ளவும்.

Al SUWAIDI VACANCIES

AL SUWAIDI MEMO


தங்களுக்கு தேவையான பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் சகோதரர்கள் கீழ்க்கண்ட மின்னஞ்சல் முகவரிக்கோ அல்லது தொலைநகல் (ஃபேக்ஸ்) நம்பருக்கோ தங்களது RESUME (BIODATA) வை அனுப்பவும்.

Mr. ShafaQattullah Khan
Recruitement Manager
E.Mail : shcrecruitment@alsuwaidi.com.sa
Fax : 00966 3 6670304 Ext. 252


இராமநாதபுரம்,காரைக்குடி,இஸ்லாம்,முஸ்லிம்