Saturday, October 11, 2008

ஊழல் செய்யப்பட்ட வக்ஃப் சொத்துக்களை மீட்டெடுப்போம் - IDMK தலைவர்கள் சூளுரை

இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாபெரும் அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும சமூக நல்லிணக்கப் பெருவிழா

மேடையி்ல் தலைவர்கள் வலமிருந்து முதலில் திரு. முகவைத்தமிழன், திரு. தங்கம் T. இராதாகிருஷ்ணன், திரு. குத்புதீன் ஐபக், திரு. மேலை நாசர், திரு. அப்துல் ரவூஃப் பாக்கவி உட்பட பலர்

இராமநாதபுரத்தின் மத்தியப் பகுதியும், இஸ்லாமியர் அதிகம் வசிக்க கூடிய பகுதியுமான சின்னக்கடை வீதியில் அமைந்துள்ள காயிதே மில்லத் திடலில் கடந்த 04.10.2008 அன்று சனிக்கிழமை மாலை 6.00 மணியில் இருந்து இரவு 10.00 மணி வரை இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாபெரும் அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் மற்றும் சமூக நல்லிணக்கப் பெருவிழா நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டத்தின் ஒரு பகுதி

பெருமளவில் அனைத்து தரப்பு பொதுமக்களும் கலந்து கொண்ட இந்நிகழச்சிக்கு முகவை மாவட்ட செயலாளர் திரு. M.I ஜாஹாங்கீர் அவர்கள் தலைமை வகித்தார். இந்திய தேசிய மக்கள் கட்சியின் கீழக்கரை நகர் தலைவர் திரு. S. முஹைதீன் அடுமை அவர்கள் வரவேற்புரை நல்கினார். இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில அமைப்பாளர் A.S. அலாவுதீன், இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைமைக் கழக செளலாளர் திரு. ஹாஜா முஹைதீன், முகவை நகர் துனைச் செயலாளர் திரு. அயூப்கான் அவர்கள், திருப்புல்லானி ஒன்றியச் செயலாளர் திரு. கிங்காங் முகம்மது இபுறாஹிம் அவர்கள், சென்னை முஸ்த்தபா மற்றும் J. யூசுஃப் E.E.E ஆகியோர் முன்னிலை வகித்தார்கள்.

மனித உரிமைகள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு சேவை இயக்கத்தை சேர்ந்த திரு. தங்கம் T. இராதாகிருஷ்ணன் அவர்கள், ஏர்வாடி அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் திரு. K. ரவி அவர்கள், சமூக ஆர்வலர் திரு. முகவைத்தமிழன் ஆகியோர் நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கினார்கள்.

இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் Dr.M. பக்ருதீன் அவர்கள், இந்திய தேசிய மக்கள் கட்சியின் வட சென்னை மாவட்ட அமைப்பாளர் திரு. A.K. ஷான் பாஸா அவர்கள் , இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் திரு. தமிழகம் S.இக்பால் ஆகியோர் விளக்க உரை ஆற்றினார்கள்.

நிகழ்ச்சியில் உரையாற்றும் தலைவர்கள்


தமிழ்நாடு சுன்னத் அல் ஜமாத்தின் மாநில பொதுச் செயலாளர் திரு. மேலை நாசர் அவர்களும், பிரபல மார்க்க அறிஞரும், திருக் குர்ஆன் விரிவுரையாளரும் ஆன மெளலவி. காஞ்சி அப்தர் ரவூஃப் பாக்கவி M.A., அவர்களும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. M. குத்பதீன் ஐபக் M.A., அவர்களும் சிறப்புரை ஆற்றினார்கள்.

நிகழச்சியின் இறுதியில் பிரபல மூலிகை மருத்துவர் திரு. அணீஸ் அஹமத் அவர்கள் நன்றியுரை வழங்கினார்கள்.

இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக் உட்பட நிகழச்சியில் பேசிய பலரும் தமிழகத்தில் தற்போது நிலவி வரும் அரசயில் நிலை குறித்தும், அப்பாவி முஸ்லிம்கள் மீது ஏவப்படும் அரசின் அடக்குமுறை குறித்தும், முத்துப்பேட்டை உட்பட தமிழகத்தின் பல இடங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட கொடூர தாக்குதல்களில் எந்த வத நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் காக்கும் தமிழக அரசின் மெத்தனப் போக்கை கண்டித்தும் பேசினார்கள்.

நிகழ்ச்சியில் கலந்து கொண்ட கூட்டத்தின் ஒரு பகுதி

இன்னும் பரமக்குடியில் கொல்லப்பட்ட அப்பாவி முஸ்லிம் மாணவனின் வழக்கில் அரசியல் குறுக்கீடுகள் இல்லாது வழக்க நடத்த வேண்டும் என்றும், இன்னும் இவ்வழக்கில் நீதி கேட்ட காரனத்திற்காக அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதை வண்மையாக கண்டித்தும், தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இத்தனை கொடுமைகள் நடந்து அப்பாவி போல் அரசில் அங்கம் வகித்து கொண்டு போராட்டம் நடத்துவது போல் இரட்டை வேடம் போடும் தமுமுக வின் இரட்டை வேடத்தை கண்டித்தும் உரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியி்ல் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

முஸ்லிம்கள் இல்லாமல் யாரும் அரசியல் பண்ண முடியாது, ஆட்சி அமைக்க முடியாது என்ற நிலையை உண்டாக்குவது.

இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுக்க சுயமாக சொந்த சின்னத்தில் நின்று நிமிர்ந்திட நம் தனித்தன்மையை காக்க பாடுபடுதல்.

தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட, முஸ்லிம், கிறிஸ்த்தவ, தலித் மக்களை ஒன்றினைத்து பொறுப்புக்களை பகிாந்தளிக்கப்பட்டு பொது அரசியல் கட்சியாக செயல்படும்.

வெள்ளம், சுனாமி போன்ற இயற்கை சீற்றங்களில் ஜாதி, மதம், பிராந்தியம் பூன்ற குறுகிய எல்லைகளை கடந்து மானிடத்திற்கு இந்திய தேசிய மக்கள் கட்சி உதவி செய்யும்.

முஸ்லிம்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு உள்ள பலகோடி ரூபாய் மதிப்புள்ள வக்ஃபு சொத்துக்களை அரசிடம் இருந்தும் சமூக விரோதிகளிடம் இருந்தும் மீட்டெடுக்க இந்திய தேசிய மக்கள் கட்சி பாடுபடும்.

தமிழகத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை வண்மையாக கண்டிக்கின்றது. இன்னும் முத்துப்பேட்டை உட்பட தமிழகத்தின் பல்வேறு நகரங்களில் முஸ்லிம்களின் மீது நடத்தப்பட்ட வண்முறைக்கு காரனமானவர்கள் மீதும், சம்பந்தப்பட்டவர்கள் மீதும் அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகின்றது.

என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இழந்த அரசியல் உரிமைகளை மீட்டெடுக்க அழைக்கின்றது
இஸ்லாமியர்களின் முதல் அரசியில் பொதுக் கட்சி


இந்திய தேசிய மக்கள் கட்சி
தொடர்புக்கு : 9443021050, 8789304109

http://www.idmk.org/

No comments: