Thursday, November 01, 2007

வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள் (PART-III)

நிராயுதபாணிகளான அப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்! - வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள்- 3

பகுதி-1, பகுதி-2

கோத்ராவிற்க்கப்புறம் குஜராத்தில் நடந்தது தற்செயல் அல்ல. ஏதோ கட்டுப்படுத்த முடியாத, திட்டமிடப்படாத சமூக வன்முறையுமில்லை. வேண்டுமென்றே ஒரு இன மக்களை அழிக்கப் போடப்பட்ட செயல் திட்டம். ஒருங்கிணைந்து நடத்தப்பட்ட படுகொலைகள்.

திட்டமிட்டபடி, தொலை நோக்குப்பார்வையுடன் நகர்ப்புறம், கிராமப்புறம் என்ற எந்த வித்தியாசமுமின்றி முஸ்லிம்கள் வாழும் பகுதிகள்
குறிவைக்கப்பட்டது. பெருமளவில் காவிக்கும்பல் ஒரே நோக்கத்தின்கீழ் ஒன்று சேர்ந்தது. எந்த வகையிலேனும் முஸ்லிம்களை கொல்லவேண்டும். குத்தி, கிழித்து முடமாக்கப்பட்டபின் உயிரோடோ, இல்லாமலோ.

இதில் பங்கெடுத்துக்கொண்ட காவிக் கும்பல்களில் சிலர் தெஹல்காவிடம், இஸ்லாம் எரியூட்டுவதை அனுமதிக்கவில்லை என்பதால் முஸ்லிம்களை உயிரோடு எரித்துக் கொல்வதிலேயே ஆனந்தமடைந்ததாக சொன்னார்கள்.

பெப்ருவரி 27 க்குப்பிறகு, மூன்று நாட்கள் குஜராத்தின் பிஜெபி அரசை இந்துத்வ காவிக்கும்பல் கையிலெடுத்துக்கொண்டு, காட்டுமிராண்டித்தனத்தின் உச்சக்கட்டதிற்க்கு இட்டுச்சென்றது. ஆர்எஸ்எஸ், விஹெச்பி, பஜ்ரங்தள், கிசான் சங்க், அகிலபாரதீய வித்யார்தி பரிஷத், பிஜெபி, கட்சிகளின் உறுப்பினர்களைக் கொண்ட கொலைப்படை உருவாக்கப்பட்டது. மாநிலமெங்கும் பள்ளிவாசல்கள், தர்காக்கள் அழிக்கப்பட்டன. 73 முஸ்லிம் வழிபாட்டுத்தலங்கள் அஹமதாபாதில் மட்டும் தீக்கிரையாக்கப்பட்டது. சபர்கந்தாவில் 55 ம் வடோடராவில் 22ம் பின்னர் கொளுத்தப்பட்டது.

மஹாத்மாவின் பூமிக்கு நீங்கா களங்கத்தை ஏற்படுத்திய இந்த காவிக் கும்பல் அடியாட்கள் இரு வகைப்பட்டனர். திரைமறைவிலிருந்து சதித் திட்டம் தீட்டிய கட்சிநிர்வாகிகள் மற்றும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சிசுக்கொலைகள் நடத்திய காலாட்படை. சிலசமயம் தலைவர்களே காலாட்படையிலும் தைரியமாக பங்கெடுத்தார்கள்...

தெஹல்கா.காம்.

(தொடரும்)

நன்றி : கதிரவன் (வெல்லத் தமிழினி வெல்லும்)

1 comment:

சிந்திக்க உண்மைகள். said...

மோடி இருக்க வேண்டிய இடம் தூக்குமேடை.

தெஹல்கா தோலுரித்துக் காட்டிய குஜராத் கலவர உண்மைகள் குறித்து ?

கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் (அது ஒரு விபத்து என்று முடிவான வேறு விஷயம்) நடந்து முடிந்தவுடன் முஸ்லிம்களைப் பழி வாங்கும் திட்டம் அங்கிருந்த மத வெறியர்களிடம் தோன்றிவிட்டது. அவர்களுக்குத் தேவையெல்லாம் தலைவர் மோடியின் கண்ணசைப்புத்தான்.

வந்தார் மோடி. போலீஸ அழத்து அவர்களை ‘கை கட்டி வாய் பொத்தி வேடிக்கை பாருங்கள், அல்லது இவர்களோடு சேர்ந்து கொண்டு அவர்களை அடித்துக் கொல்லுங்கள்’ என்று கட்டளையிட்டார்.

இந்திய_ பாகிஸ்தான் பிரிவினைக்கு அப்புறம் மகா கோரமான இனப்படுகொலை ஆரம்பித்த. மனிதக்கறி தின்னும் ஓநாய்கள் வெறியுடன் பாய்ந்தன.

படுகொலைகளை, கற்பழிப்புகளை, உடல் உறுப்புகளை அறுத்து எறிந்ததை எவ்வளவு ஆனந்தத்துடன் தெஹல்காவிடம் சொல்கிறார்கள் அந்தக் கொலைகாரர்கள். (‘ஒரு கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றக் கிழித்து உள்ளே இருந்த குழந்தையைக் கொன்றேன்’).

ஒரு மாநிலத்தின் சட்ட ஒழுங்கக் காப்பாற்ற வேண்டியவர் ரத்த வெறி பிடித்த வானரப்படையத் தூண்டி விட்டு ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொன்று குவித்த கொடூரம் காந்தி பிறந்த மாநிலத்திலா நடந்தது?

எத்தனை பேர் அந்தப் படுகொலைகளை சைக்கோத்தனத்துடன் விவரிக்கிறார்கள். எவ்வளவு மகிழ்ச்சியுடன் அந்த சம்பவங்களை அசை போடுகிறார்கள்.

ஒருவர் சொல்கிறார் ”மோடி மட்டும் முதல்வராக இல்லாதிருந்தால் அவரே முஸ்லிம் பகுதியில் குண்டுகளை வீசியிருப்பார்.’’

கொலைகாரர்களை வீடு தேடி வந்து பாராட்டிய ஒரு வெறிநாய், முதல்வர் பதவியில் இருப்பது வெட்கக்கேடு. இருக்க வேண்டிய இடம் தூக்குமேடை..

"அரசு பதில்" குமுதம் 7.11.2007
http://www.kumudam.com/magazine/Kumudam/2007-11-07/pg15.php