Saturday, November 03, 2007

சு.ப.தமிழ்செல்வன் படுகொலை கண்டித்து தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்(eelam)


ஈழ (தமிழின்) செல்வனே

எம் கண்களின் முன்னே
உமிழ்கிறது...
உன் புன்னகையின் வசீகரம்
ஒற்றைக்கால் தாங்கி
நீ பயணித்த திசைகளில்
சமாதானத்தின் தூது செல்ல
உன் விரல் படர்ந்த
ஊன்று கோல் மட்டுமே இனி...

விடுதலையின் நீண்ட பாதையில்
துவண்டு வீழாமல்
தோழர்கள் நடைபயில
உடன்வரும் உன் நினைவுகள்



தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் சிந்திய இரத்ததிலிருந்து ஏராளமான இளைஞர்கள் தோன்றி தமிழீழ விடுதலைப் போரை தொடர்ந்து நடத்துவார்கள் என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார்.



மதுரையிலிருந்து பழ. நெடுமாறன் இன்று வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் பிரிவுப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச் செல்வன் சிங்கள வான்குண்டு வீச்சுக்குப் பலியாகி உயிரிழந்த செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். கடந்த 25 ஆண்டுகாலத்திற்கும் மேலாக தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் நம்பிக்கையினைப் பெற்றவர். பல்வேறு களங்களில் தலைமை தாங்கி போராடியவர்.

சந்திரிகா அரசு இருந்த போது நடைபெற்ற பேச்சுவார்த்தைகளிலும் பின்னர் நார்வேயின் முயற்சியால் நடைபெற்ற அனைத்து பேச்சு வார்த்தைகளிலும் புலிகளின் பிரதிநிதியாக கலந்து கொண்டவர். இளம் வயதில் சர்வதேச ராஜதந்திர அரசியலில் சிறந்து விளங்கியவர். புலிகளின் சார்பில் சமரச பேச்சுக்களுக்கு தலைமை தாங்கிய தளபதியை குறிவைத்து குண்டுவீசி படுகொலை செய்ததன் மூலம் இனி சமரசப் பேச்சுக்களுக்கு சிங்கள அரசு தயாராக இல்லை என்பதை வெளிப்படுத்தி விட்டது.

தமிழ் ஈழ தேசியத் தலைவரின் அஞ்சலி

மாவீரர்கள் புதைக்கப்படுவதில்லை விதைக்கப்படுகிறார்கள் என்பதற்கு இணங்க மறைந்த தமிழ்ச்செல்வன் சிந்திய இரத்தத்திலிருந்து ஏராளமான இளைஞர்கள் தோன்றி விடுதலைப் போரை தொடர்ந்து நடத்துவார்கள் என்பதில் அய்யமில்லை.

மறைந்த தமிழ்ச்செல்வன் அவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் தமிழகமெங்கும் கூட்டங்களை நடத்தும்படி அனைத்து தமிழ்த்தேசிய அமைப்புகளை வேண்டிக்கொள்கிறேன் என்றார் அவர்.

தமிழகமெங்கும் பெறியார் தி.க சார்பில் சு.ப. தமிழ்செல்வன் படுகொலையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டங்கள்

ஆர்ப்பாட்டத்தில் பெறியார் தி.க தோழர்கள்

சிறிலங்கா வான் குண்டுத்தாக்குதலினால் வீரச்சாவடைந்த அரசியல்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு வீரணவணக்கம் செலுத்தும் நிகழ்வுகள் இன்று பெரியார் திராவிடர் கழகம் சார்பில் தமிழ்நாட்டில் நடைபெற்றன. சேலம்சேலம் போஸ் மைதானம் அருகில் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கான வீரவணக்க நிகழ்வும் அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளத்தை அழித்த சிறப்புக் கரும்புலி மாவீரர்களின் வித்துடல்களை நிர்வாணப்படுத்திய சிறிலங்கா அரசாங்கத்தைக் கண்டித்தும் இன்று வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணிக்கு வீரவணக்க நிகழ்வும் கண்டன ஆர்ப்பாட்டமும் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு பெரியார் திராவிடர் கழக நிர்வாகி டைகர் பாலன் தலைமை வகித்தார்.ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம், தமிழ்நாடு மனித உரிமைக் கழகம், புதியன பண்பாட்டுக் கழகம், குடியுரிமை பாதுகாப்பு நடுவம், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சி, தலித் மக்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் நிர்வாகிகளும் பங்கேற்றனர். கோவைகோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் திராவிடர் கழக அலுவலகமான பெரியார் படிப்பகத்தின் முன்பாக இன்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெற்ற இந்நிகழ்வுக்கு பெரியார் தி.க. பொதுச்செயலாளர் கோவை கு. இராமகிருட்டிணன் தலைமை வகித்தார்.இந்நிகழ்வில் பெரியார் தி.க.வின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர்கள் வெ. ஆறுச்சாமி, நிர்வாகிகள், தமிழின உணர்வாளர்கள் பலரும் பங்கேற்று வீரவணக்கம் செலுத்தினர்.பிடிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையில் பெரியார் தி.க.வின் கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. .

No comments: