Sunday, October 28, 2007

வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள் (PART-I)

நிராயுதபாணிகளான அப்பாவிகள் மீது இந்துத்வாவின் கொலை வெறியாட்டம்! - வெளிச்சத்திற்க்கு வரும் உண்மைகள் I

சுமார் ஐந்து ஆண்டு காலமாக நரேந்திர மோடியின் பிஜெபி அரசும் காவிக்கும்பலும், கோத்ராவில் நடந்த சபர்மதி எக்ஸ்ப்ரெஸ் துக்கத்தைத்தான், 2002 ல் குஜராத்தில் நிராயுதபாணிகளான அப்பாவி மக்கள் மீது ஏவி விடப்பட்ட கொடூரக் கொலை, கற்பழிப்பு, சிசுக்கொலைகள் ஆகியவற்றிற்க்கு காரணமாக காட்டிக் கொண்டிருக்கிறது. தெஹெல்காவின் ஆறுமாத புலனாய்வில் இதன் பின்னணியில் உள்ள பொய்கள், அரசாங்கமே அடியாட்களுக்கு உத்தரவுகளும், லஞ்சமும் கொடுத்து நடத்திய கலவரத்தின் பின்னணி அம்பலமாகியுள்ளது.

இதோ, சுருக்கத்தில், நடந்ததாக கண்டறியப்பட்ட உண்மைகள்......

காவல் துறையின் வாதம் :

1. சில முஸ்லிம் அரசியல் வாதிகள் மற்றும் மத முக்கியஸ்தர்கள் சபர்மதி எக்ஸ்ப்ரெஸ்ஸின் எஸ்-6 பெட்டியை February 27, 2002 ல் சதிசெய்து கொளுத்தினார்கள். (கவனிக்க: எதேனும் ஒரு பெட்டியை அல்ல. குறிப்பாக எஸ்-6 பெட்டியை ).

2. முஹம்மது ஹுஸைன், அப்பொதைய கோத்ரா முனிசிபல் கவுன்சில் தலைவர், இரண்டு முஸ்லிம் முனிசிபல் உறுப்பினர்கள் ஆகியோர் இந்த ரயில் பெட்டியை எரிக்கும் குழுவில் இருந்து, எஸ்-6 பெட்டியை எரிக்க தூண்டினார்கள்.

3. போலீஸின் கூற்றுப்படி, எராளமான பெட்ரோல் எஸ்-6 ன் தளத்தில் ஊற்றி, பின் கொளுத்தப்பட்டது. இதற்க்காக 140 லிட்டர் பெட்ரோல் பெப்ருவரி 28ம் தியதி, கலாபாய் என்ற ஒரு முஸ்லிமுக்கு சொந்தமான பெட்ரோல் பம்பில் இருந்து வாங்கப்பட்டது. பின் 9 முஸ்லிம் கூலிதொதொழிலகளாலும், ஒரு ஹிந்து தொழிலாளியாலும் சபர்மதி எக்ஸ்ப்ரெஸ் நின்றுகொண்டிருந்த காபின் A க்கு கொண்டுவரப்பட்டது.

4. சபர்மதி எக்ஸ்ப்ரெஸ்ஸின் எஸ்-6 பெட்டியின் இணைப்பை மூன்று முஸ்லிம் தொழிலாளர்கள் துண்டித்ததால், ரயில் நிறுத்தப்பட்டது.

5. சில தொழிலாளிகள் 6 இன்ச் கனமுள்ள இரு பெட்டிகளையும் இணக்கும் தொடர்பை சாதாரண கத்தரிக்கோலால் வெட்டிய பிறகு எஸ்-6 க்குள் நுழைந்து பெட்டியின் தரையில் பெட்ரோலை ஊற்றினார்கள். கண்ணாடி உடைந்த ஜன்னல் வழியாகவும் பெட்ரோல் ஊற்றப்பட்டது.

மேற்சொன்ன காவல் துறையின் 'தியரி' க்கான சாட்சிகள் :

1. போலீஸ் பெரும்பாலும் சம்பவத்தை நேரில் பார்த்த 9 பிஜேபி உறுப்பினர்களின் சாட்சியையே முக்கியமாக எடுத்தொக்கொண்டிருக்கிறது. இவர்கள் 41 முஸ்லிம்களை அடையாளம் காட்டியிருக்கிறர்கள். (ஒரு பிஜெபி உறுப்பினர் திலீப் தேஸாதியா, பிறகு தன்னுடைய வாக்குமூலத்தை முழுவதுமாக வாபஸ் வாங்கிக்கொண்டார்.)

2. எஸ்-6 ல் பயணம் செய்த கர்சேவகர்களின் வாக்குமூலங்களும் எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கின்றன.

3. அங்கு ஏற்பட்ட புகையால் மயங்கிவிட்டதாகவும், என்ன நடந்தது என்றே காண இயலவில்லை என்றும் சொன்ன இரண்டு கரசேவர்கள், ஆறு மாதங்களுக்கு அப்புறம், தங்கள் நிலையை மாற்றி வெளியிலிருந்து எதோ திராவகம் தரையில் ஊற்றப்பட்டதை பார்த்ததாக சொன்னார்கள். இந்த வாக்குமூலம் தான் - குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்க்கு 15 தினங்களுக்குமுன் சேர்க்கப்பட்டு - போலீஸ் தியரியின் திடீர் சக்தியாக மாற்றப்பட்டுள்ளது.

4. போரென்சிக் ரிபோர்டின்படி, " 60 லிட்டர் பெட்ரோல் தென் திசையிலிருந்து பெட்டியின் தரையில் ஊற்றப்பட்டிருக்கலாம் " என்பது.

5. ஒன்றரை மாதங்களுக்குப்பிறகு, ஒரு டீக் கடை காரர், அஜய் பாரியா என்ற ஒரு சாட்சியை போலீஸ் திடீரென்று கொண்டு வந்து நிறுத்தியது. இந்த அஜய் பாரியா, தன்னை 9 முஸ்லிம் தொழிலாளிகள் எஸ்-6 பெட்டியில் பெட்ரோலை ஊற்றி தீ வைக்குமாறு கட்டயப்படுத்தியதாக விளம்பினார்.

6. இரண்டு முஸ்லிம் தொழிலாளர்கள் கைது செய்த ஒரு வாரத்திற்க்கப்புறம், ட்ரயின் இணைப்பைத் தாங்கள் துண்டித்ததாக ஒப்புக்கொண்டார்கள். அப்புறம் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துமூலமாக இதை வாபஸ் வாங்கிகொண்டார்கள்.

7. இதே போல் இன்னொரு முஸ்லிம் தொழிலாளி எஸ்-6 பெட்டியை கொளுத்திய கும்பலில் தானும் இருந்ததாக ஒப்புக்கொண்ட (?) வர், அப்புறம் உச்ச நீதிமன்றத்தில் எழுத்துமூலமாக இதை வாபஸ் வாங்கிகொண்டார்.

8. சம்பவம் நடந்து 1 வருடம் கழித்து போலிஸ் இரண்டு இந்து சேல்ஸ்மேன்களை ஆஜர் படுத்தியது. பிரபாத்சிங் பட்டேல் மற்றும் ரஞ்சித்சிங் பட்டேல்.

இவர்கள் இருவர்தான், பெட்ரொல் பம்பிலிருந்து 140 லிட்டர் பெட்ரோலை விற்ற சேல்ஸ்மேன்கள். இவர்க்ளுள் ஒருவர், அன்றைய தினத்தில் அப்படி யாருக்கும்ம் பெட்ரோல் விற்கவில்லை என்று தெரிவித்தார்.

9. இன்னொரு போலிஸின் சாட்சி, சம்பவ இடத்தில் இருந்த மற்ற முஸ்லிம் தலைவர்களுடன் மவுலவி யாக்கூப் பஞ்சாபி என்பவரும் கொளுத்த தூண்டிவிட்டார் என்று சாட்சி சொன்னார். பின்பு பொலீஸ் பஞ்சாபியை கைது செய்து பின் விட்டுவிட்டது. காரணம் பஞ்சாபி அந்த நாட்களில் சவூதி அரேபியாவில் வேலை பார்த்துக் கொண்டிருந்தார் என்பதே.

10. இன்னும் இதில் பங்கெடுத்துக் கொண்டதாகவும், கொளுத்தியதாகவும் 'ஒப்புக்கொண்ட' ஆறு முஸ்லிம் தொழிலாளிகள், பின்னர் தங்களுடைய வாக்கு மூலத்தை வாபஸ் வாங்கிகொண்டார்கள்.

இனி தெஹல்கா கண்டறிந்த கொடுமையான உண்மைகள்...

1. பிரபாத்சிங் பட்டேல் மற்றும் ரஞ்சித்சிங் பட்டேல் என்ற இரு பெட்ரோல் பம்ப் சேல்ஸ்மேன்களுக்கும், தலைமை விசாரணை அதிகாரியே லஞ்சம் கொடுத்து, இப்படிச் சொல்லவும், தவறான நபர்கலை அடையாலம் காட்டவும் பணித்தார். தெஹெல்க்காவின் கேமராவில் அந்த அதிகாரியே இதை ஒப்புக்கொண்டிருக்கிறார். 50,000 ரூபாய் இதற்க்காக் இலஞ்சமாக கொடுக்கப்பட்டது.

2. சம்பவத்தை நேரில் பார்த்ததாக சொல்லப்பட்ட 9 பிஜெபி நபர்க்ளும் அப்பொழுது அந்த இடத்திலேயே இருந்திருக்கவில்லை. தெஹெல்க்கா அவர்க்ளுள் இருவரை - Kakul Pathak and Murli Mulchandani - பேட்டி கண்டதில் தாங்கள் அந்த இடத்திலேயே இல்லை என்றும், தாங்கள் பெயெர் இருப்பது தாங்களுக்கே தெரியாது என்றும் கூறினர்.

3. பெட்டியின் இணைப்பை துண்டித்ததாக சொல்லப்பட்ட இரு முஸ்லிம் தொழிலாளிகளும் சித்ரவதை செய்யப்பட்டதாகவும், (பிறப்புறுப்பில் மின்சாரம் செலுத்தியது உட்பட ) தெஹெல்க்காவிடம் அனுமதித்தனர்.

4. பெட்ரோல் எப்படி எங்கிருந்து ஊற்றப்படு எப்படி எரிக்கப்பட்டது என்ற போலீஸின் கூற்றும், போரென்சிக் லாபின் கூற்றும் முற்றிலும் மாறுபடுகிறது.

இது இந்துத்வா நடத்திய கபட நாடகம் ( ஜெயராமன் சல்மா அயூப் நியாபகம் வருகிறதா..? ) வெளிச்சத்திற்ற்கு வந்தது மட்டும்...இனிதான் காவிக்கும்பலின் நரபலி வேட்டைவிழாவின் துவக்கம். கொலைகள், கற்பழிப்புகள், சிசுக்கொலைகள் நடத்திய விதம், பேட்டிகள், செய்முறைகள், உத்தரவுகள்....

மூலம் :

http://www.tehelka.com/story_main35.asp?filename=Ne031107Conspirators.asp

(தொடரும்)

நன்றி : கதிரவன் (வெல்லத் தமிழினி வெல்லும்)

1 comment:

சிந்திக்க உண்மைகள். said...

மோடியிசமும் - இந்திய மதச்சார்பின்மை முகமூடியும் !

மோடி வகையறாக்கள் தொகல்காவிடம் சிக்கியது அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறதா ? என்று பார்த்தால் அப்படி இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஏனென்றால் மோடிவகையறாக்கள் அப்படி செய்யக் கூடியவர்கள், அவர்கள் தான் செய்திருக்கிறார்கள் என்பதை எல்லோருமே ஊகித்தி இருக்கிறார்கள், தற்போது கிடைத்திருக்கும் ஆதாரம் மதவெறியில் அவர்கள் மாபெரும் வெற்றி பெற்று இருக்கிறார்கள் என்ற சான்றிதழ் மாட்டுமே.

குஜராத் கலவரம் தொடர்புடைய சாட்சி அடைப்படையில் வழங்கப்பட்ட நீதிகள்(?), தெகல்கா ஆதாரத்துக்கு முன்பு வெட்கி தலைகுனிகிறது.

இந்தியாவில் இருக்கும் அனைவரும் இந்தியர்களே, குறிப்பாக இஸ்லாமியர்கள், கிறித்துவர்கள் வெளியில் இருந்து வந்தேறவில்லை.

முன்னாள் குடிமக்களான அவர்கள் தீண்டாமை கொடுமைகளில் விடுபட மதம் மாறி சுயமரியாதை மற்றும் அடிப்படை உரிமைகளை பெற்றுக் கொண்டனர். இதில் என்ன தவறு இருக்கிறது ?

எந்த ஒரு குடிமகனுக்கும் அவன் விரும்பிய மதத்தில் இணைய உரிமை உண்டு. ஒருவர் இஸ்லாமியராகவோ, கிறித்துவராகவோ இருப்பதை வைத்து அவர்களை சிறுபாண்மையினர் என்று சிறுமைபடுத்தி பார்ப்பது எதற்கு ?

மதம் அன்பை போதிக்கிறது, இந்துமதமே எல்லா மதங்களுக்கும் 'மூலம்',, அனைத்து மதங்ககளும் கலந்த இந்துமதம் கங்கையைப் போல் ஒரு புனித(?) சாக்கடை என்று புனிதம்(?) பேசிக் கொண்டே, இந்து மதத்தின் பெயரால் தீவிரவாதம் ஒருபக்கம் வளர்ந்து கொண்டிருக்கிறது.

காந்தியை கொன்ற கோமான்களின் இரத்த வேட்டை காந்தி பிறந்த பூமியில் வீறுநடை போட்டு இருக்கிறது. குஜராத் நிகழ்வுகளுக்கு பின்னால், இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்று பெருமை பேசினால் காக்கை கூட பேசுபவனின் நாக்கில் எச்சமிட்டு எள்ளிவிட்டு செல்லும்.

குடிமகன் அடிப்படை தகுதிக்கு முன்பு மதத்தின் பெயரால் மைனாரிட்டி மசுரு(நன்றி அசுரன்) பேசுவதெல்லாம் எதற்கு ?

அவனும் மற்றும் எல்லோரும் இந்திய தாய்க்கு பிறந்தவன் தானே ?

மைனாரிட்டி என்பதால் இராணுவத்தில் இல்லாமல் இருக்கிறார்களா ? மைனாரிட்டி என்பதால் இலவசமாக எல்லாமும் கிடைக்கறதா ?

"அரசியலில் மைனாரிட்டியிஸத்தை புகுத்துவதைத் தான் நான் எதிர்க்கிறேன்" - மோடி

மோடி வெளிப்படையாக சிறுபாண்மையினருக்கு எந்த உரிமையும் இல்லை என்று கருத்து சொல்லும் அளவுக்கு இந்தியர்கள் மதவெறிகளை சகித்துக் கொள்ளுகிறார்களா ? அல்லது விரும்புகிறர்களா ?

பதில் எப்படி இருந்தாலும் மோடியின் கருத்துக்கள் சிறுபாண்மையினரிடையே அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றன,
மோடியின் மைனாரிட்டி பேச்சு இன்னும் பல பாகிஸ்தான்களை இந்தியாவுக்குள்ளேயே உருவாக்கும் ஆபத்து இருக்கிறது.

இந்திய மதச்சார்பற்ற முகமூடி அழுகிக் கொண்டிருக்கும் நிலையில் உள்ளே இருக்கும் இந்துத்துவ கோரப்பற்கள் தெரிய ஆரம்பித்திருப்பது கவலை அளிக்கிறது.

தொட்டதற்கெல்லாம் கருத்து கூறும் நீதிமன்றம் மோடி உதிர்த்தவைகளுக்கு மெளனம் காப்பது ஏன் ?
http://govikannan.blogspot.com/2007/10/blog-post_30.html