Tuesday, October 30, 2007

முஸ்லிம் சகோதரர்களின் கப்பலை காக்க அரசுக்கு கோரிக்கை

காந்திக்கு உதவிய முஸ்லிம் சகோதரர்களின் கப்பலை காக்க பேரன் அரசுக்கு கோரிக்கை




மதுரை: சுதந்திர போராட்டத்தில் காந்திக்கு உதவியதால் கடலில் மூழ்கடிக்கப்பட்ட முஸ்லிம் சகோதரர்களின் கப்பலை மீட்டு, தமிழகத்தில் அருங்காட்சியகத்தில் வைக்க அவர்களது பேரன் கோரிக்கை வைத்துள்ளார்..

மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்திற்கும், அவரது தென் ஆப்ரிக்கா பயணத்தின் போதும் உதவியவர்கள் குஜராத் மாநிலம் போர்பந்தரைச் சேர்ந்த வியாபார சகோதரர்கள் அப்துல்லா ஆதம் ஜவேரி மற்றும் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி. இவர்களது பேரன் அப்துல்கரீம் அப்துல்லா ஜவேரி மதுரையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்தில் எங்கள் தாத்தாக்களுக்கும் முக்கிய பங்கு உண்டு. காந்திக்கு உதவியாக இருந்ததுடன், சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்டதால் எங்கள் குடும்பத்திற்கு சொந்தமான நான்கு கப்பல்கள் 1906ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மூழ்கடிக்கப்பட்டது. அதில், ஒரு கப்பல் போர்பந்தர் கடலில் மூழ்கிய நிலையில் இருக்கிறது. இந்த கப்பலையும், போர்பந்தரிலுள்ள எங்கள் குடும்ப சொத்துக்களையும் அபகரிக்க இருவர் முயற்சித்தனர். அவர்கள் காந்தியின் வாழ்க்கை வரலாறு ஆவணங்களை திருத்தி மோசடியில் ஈடுபட்டனர். இவற்றை கோர்ட் மூலம் முறியடித்துள்ளேன். அந்த இருவர் மீதும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க குஜராத் அரசிடமும், கோர்ட் மூலமும் கோரிக்கை வைத்துள்ளேன். இந்த நடவடிக்கையை நிறைவேற்ற காங்., தலைவர் சோனியா, குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, தமிழக முதல்வர் கருணாநிதி ஆகியோருக்கு கோரிக்கை வைத்துள்ளேன். அத்துடன் போர்பந்தரில் மூழ்கியுள்ள ரூ.10 கோடி மதிப்புடைய கப்பலை மீட்டு, தமிழகத்திலுள்ள அரசு அருங்காட்சியகத்தில் வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அப்துல் கரீம் அப்துல்லா ஜவேரி கூறினார்.
(கடைசில இப்பவாவது ஏற்றுக்கொள்கின்றீர்கள்தானே முஸ்லிம்கள் சுதந்திர போராட்டத்தில் பங்கு வகித்தள்ளார்கள் என்று? அப்படியே உங்கள் சகா தினமனி குருமூர்த்தி ஐயருக்கும் இதை சொல்லிடுங்க தினமலர்)

நன்றிங்க..

FULL VERSION PUBLISHED IN
" KUMUDAM REPORTER " 12.07.07


அணுசக்தியால் இயங்கும் அமெரிக்க போர்க் கப்பல் நிமிட்ஸ், சென்னை துறைமுகத்துக்கு அருகே நங்கூரம் பாய்ச்சி நிற்க, அதையட்டி ஆயிரம் சர்ச்சகள். அமெரிக்காவின் கொடூரமான போர்முகத்தின் அடையாளம்தான் நிமிட்ஸ் கப்பல் எனக்கூறி, சில அரசியல் கட்சிகள் அதை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், போர்பந்தர் துறைமுகத்தில் 1897_ம் ஆண்டில் ஆங்கிலேயரால் மூழ்கடிக்கப்பட்ட வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு கப்பலை மீட்க சத்தமில்லாமல் போராடி வருகிறது, போர்பந்தர பூர்வீகமாகக் கொண்ட ஜவேரி என்கிற குடும்பம்.

வரலாற்றுப் பொக்கிஷங்களோடு மூழ்கிக் கிடக்கும் அந்தக் கப்பலை அரசும் கண்டுகொள்ளாமல் இருக்கிறதே என்ற வருத்தமும் ஜவேரி குடும்பத்தாருக்கு உள்ளது.

போர்பந்தர்! ‘பெயரைக் கேட்டாலே சும்மா அதிருதில்லே’ என்றெல்லாம் நாம் வசனம் பேச முடியாது. இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தி அவதரித்த அமைதியான இடம். குஜராத் மாநிலத்தில் உள்ள இந்தத் துறைமுக நகரம்தான், ஜவேரி குடும்பத்தாரின் பிறப்பிடம்.

இந்த ஜவேரி குடும்பத்தாரின் வழிவந்த அப்ல்கரீம் என்பவர், மதுரையில் மொத்த துணி வியாபாரம் செய்து வருகிறார். போர்பந்தரில் மூழ்கிக் கிடக்கும் தங்கள் குடும்பச் சொத்தான கப்பல் பற்றி பல அரிய தகவல்கள அவர் நம்மிடம் கொட்டினார்.

‘‘எனது கொள்ளுத் தாத்தா அப்ல்கரீம் ஹாஜி ஆதம் ஜவேரி. அவரது அண்ணன் அப்ல்லா ஹாஜி. இவர்கள் இருவரும் ‘அப்துல்லா அண்ட் கம்பெனி’ என்ற பெயரில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் கப்பல் கம்பெனி நடத்தினர். அவர்களிடமிருந்த மொத்த கப்பல்கள் ஐம்பத்து நான்கு. அதில் நான்கு பயணிகள் கப்பல்.

1893_ம் ஆண்டு என் கொள்ளுத்தாத்தா அப்ல்கரீம், அவரது அம்மாவைப் பார்ப்பதற்காக போர் பந்தர் வந்திருக்கிறார். வந்த இடத்தில் காந்தியைச் சந்தித்தார். மகாத்மா காந்தி அப்போது சட்டப்படிப்பு முடித்த இருபத்து நான்கு வயது இளஞர். அவர பண்பு என் கொள்ளுத்தாத்தாவைக் கவர்ந்ததால், டர்பனில் உள்ள அவரது கப்பல் கம்பெனியின் சட்டக்குழுவில் காந்தியைச் சேர்த்துக் கொள்ள விரும்பினார். காந்திக்கு சம்பளம் அப்போது நூற்று ஐந்து பவுன்.

அதே ஆண்டு அப்துல் கரீமுடன் காந்தி கப்பலில் புறப்பட்டு டர்பன் துறைமுகத்க்குப் போய்ச் சேர்ந்தார். மூத்தவர் அப்துல்லா ஹாஜி, காந்தியை துறைமுகத்துக்கு வந்து வரவேற்று இருக்கிறார். காந்தியின் அரசியல் வாழ்க்கைக்கு பிள்ளயார் சுழி போடுகிறோம் என்பது ஜவேரி சகோதரர்களான என் கொள்ளுத்தாத்தாக்களுக்கு அப்போது தெரியாது.

எங்கள் கம்பெனியின் வழக்கு தொடர்பாக டர்பனில் இருந்து பிரிட்டோரியா நகருக்கு காந்தி ரயிலில் சென்ற போதுதான், மாரிட்ஸ்பார்க் ரயில் நிலையத்தில் முதல் வகுப்புப் பெட்டியில் இருந் ஒரு வெள்ளயரால் கீழே தள்ளப்பட்டார். பின்னாளில், இந்தியாவின் விடுதலைக்கே காரணமாக அமைந்தது, இந்தச் சம்பவம்.

1894_ம் ஆண்டு மே 22_ம் தேதி எங்கள் மூத்த கொள்ளுத் தாத்தா அப்துல்லா ஹாஜி ‘நேட்டால் இந்தியன் காங்கிரஸ்’ என்ற அமைப்பை ஏற்படுத்தினார். அது டர்பனில் உள்ள எங்கள் கொள்ளுத்தாத்தாக்களின் வீட்டில்தான் ஆரம்பிக்கப்பட்டது. அதன் முதல் தலைவராக அப்துல்லாவும், பொதுச்செயலாளராக காந்தியும் இருந்தார்கள். அதற்கான ஆதாரங்கள் என்னிடம் இருக்கின்றன. 1896_ம் ஆண்டு அப்ல்கரீம் தலைவராகப் பொறுப்பேற்றார். காந்தி தொடர்ந்து செயலாளராகவே நீடித்து வந்தார்.

1897_ம் ஆண்டு காந்தி இந்தியாவுக்குத் திரும்பி, அவரது குடும்பத்தை எஸ்.எஸ். குர்லேன்ட் என்ற எங்கள் கப்பலின் மூலம் டர்பனுக்கு அழைத்து வந்தார். காந்தியின் மனவி கஸ்தூரிபாய் அம்மயார், இரண்டு மகன்கள், காந்தியின் சகோதரி மகன் ஆகியோர் அந்தக் கப்பலில் வந்தனர்.

காந்தி டர்பனுக்குள் நுழைவத விரும்பாத பிரிட்டிஷ் அரசு, அவரை கப்பலில் இருந்து இறங்க அனுமதிக்கவில்ல. அவரைத் திருப்பி அனுப்ப வேண்டும் என்று ஜவேரி சகோதரர்கள பிரிட்டிஷ் அரசு நிர்ப்பந்தித்தது. அதற்காக நஷ்ட ஈடு தருவதாக ஆசை காட்டியது. ஆனால், ஜவேரி சகோதரர்கள் இணங்கவில்ல. ‘எங்கள் விருந்தாளியாக வந்திருக்கும் காந்தியையும், அவரது குடும்பத்தையும் அனுமதித்தே ஆகவேண்டும்’ என்று பிடிவாதம் பிடித்தனர்.

இருபத்து மூன்று நாட்கள் இழுபறிக்குப் பிறகு டர்பன் துறைமுகத்தில் கால்பதிக்க காந்தி அனுமதிக்கப்பட்டார். இந்தத் தாமதத்தால் கப்பல் கம்பெனி பெரும் நஷ்டமடந்தது.

‘நேட்டால் இந்தியன் காங்கிரஸ்’ சார்பில் எனது கொள்ளுத்தாத்தாக்கள் ‘இந்தியன் ஒபீனியன்’, என்ற பத்திரிகையை வெளியிட்டனர். அது தென்னாப்பிரிக்க இந்தியர்கள் மத்தியில் பிரபலமடந்தது. ‘யங் இந்தியா’ என்ற செய்தித்தாள, எஸ்.எஸ். கேதிவ் என்ற கப்பலில் வைத்து என முன்னோர் அச்சடித்து வெளியிட்டனர். அது இந்தியாவில் பல இடங்களிலும் பரவி வெள்ளயர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. நான் சொல்லும் தகவல்கள் அனைத்தும் காந்தியின் சுயசரிதயான சத்திய சோதனயிலும் உள்ளது. (அதையும் நம்மிடம் காண்பிக்கிறார்.)

அப்துல்லா கப்பல் கம்பெனிக்காக தென்னாப்பிரிக்க நீதிமன்றம் ஒன்றில் காந்தி ஒரு முறை தலைப்பாகை அணிந்தபடி வாதிட்டார். அது வெள்ளக்கார நீதிபதியின் கண்ண உறுத்தியது. ‘அதை அகற்ற வேண்டும்’ என்று நீதிபதி கூறினார். காந்தியும் கழற்றத் தயாரானார். ஆனால் அருகில் இருந்த அப்ல்துலா, ‘தலைப்பாகையை கழற்றி வைப்பது நம்நாட்டு மானத்தக் கீழே இறக்குவதைப் போன்றது. எனவே கழற்றாதீர்கள்’ என்று கூறிவிட்டார். ‘அந்த வழக்கில் நமக்குப் பாதகம் ஏற்பட்டாலும் பரவாயில்ல’ என்றார். இப்படி காந்தியின் சுதந்திர உணர்வுக்கு உறுதுணயாக இருந்தவர்கள் ஜவேரி சகோதரர்கள்.

1906_ம் ஆண்டு காந்தி இந்திய விடுதலையில் மும்முரமாக இறங்கினார். இவருக்குப் பின்பலம் யார் யார் என்று ஆங்கிலேயர்கள் ஆராயத் தொடங்கினார்கள். அப்போது அப்துல்லா கப்பல் கம்பெனிதான் காந்தியின் அஹிம்சை போராட்டத்துக்கு அடித்தளமாக இருக்கிறது என்பது ஆங்கிலேயர்களுக்குத் தெரியவந்தது. எனவே, அப்துல்லா கப்பல் கம்பெனியின் நான்கு பயணிகள் கப்பலை அங்கங்கே மூழ்கடித்துவிட ஆங்கிலேயர்கள் திட்டம் தீட்டினார்கள்.

அதன்படி எஸ்.எஸ். வர்க்கா கப்பல் மகாராஷ்டிரா மாநிலம் அலிபாகு துறைமுகத்திலும், எஸ்.எஸ். நாதிரி கப்பல் டர்பன் துறைமுகத்திலும், எஸ்.எஸ். குர்லேண்ட் கப்பல் கராச்சி துறைமுகத்திலும், எஸ்.எஸ். கேதிவ் கப்பல் போர்பந்தர் துறமுகத்திலும் 1897_ம் ஆண்டு மூழ்கடிக்கப்பட்டன. போர் பந்தர் துறமுகத்தில் சுமார் நாற்பதடி, ஐம்பதடி ஆழத்தில் எஸ்.எஸ்.கேதிவ் ஜல சமாதியான. இன்றும் கூட அதன் புகைபோக்கி வெளியில் தெரிகிறது.

முக்குளிப்பதில் கைதேர்ந்த சிலரை உதவியுடன் இந்தக் கப்பலில் இருந் முத்துக்கள், அலங்கார வேலப்பாடு கொண்ட பீங்கான் பாத்திரங்கள், வெள்ளி ஜாடி, உலக வரலாறு குறித்த புத்தகம் போன்ற சில பொருட்களை வெளியே எடுத்தோம். அந்தக் கப்பலை வெளியே எடுத்தால், காந்தியின் ‘யங் இந்தியா’ பத்திரிகை அச்சடித்த இயந்திரம் கூட கிடைக்கும். இந்த கேதிவ் கப்பல் எகிப்திய அரசர் முகமது கேதிவிடம் இருந்து என் பாட்டனார்கள் ஒரு லட்சத்துப் பதினாறாயிரம் பவுன்டுக்கு வாங்கிய கப்பல். இது தொடர்பாக நான் சொல்லும் தகவல்கள் அனைத்தும் லண்டன் லாயிட்ஸ் பதிவேடுகளில் இன்றைக்கும் உள்ளது.

சுதந்திரப் போர் தொடங்குவதற்கு முன்பே அதற்காக ஏராளமான சொத்துக்களை நாங்கள் இழந்து விட்டோம். இப்போது கூட காந்தியை முன்னிறுத்தி எந்த உதவியையும் நாங்கள் கேட்டதில்லை. இனி கேட்கப் போவதுமில்ல. எங்கள் முன்னோர் தொடங்கிய ஓர் உயர்நிலைப் பள்ளி போர்பந்தரில் இன்றும் செயல்படுகிறது. எங்கள் ஊரைச் சேர்ந்தவர்கள் மதுரையில் மொத்தத் துணி வியாபாரம் செய்து வந்ததால், என் தந்தையின் மறைவுக்குப் பின்னர், 1970_ல் என் தாயாருடன் இங்கே வந்து சேர்ந்தோம். மதுரைவாசியாக நான் மாறிவிட்டாலும் போர்பந்தரை மறக்கவில்லை. 1985_ல் என் சகோதரியை போர்பந்தரில் திருமணம் செய்து கொடுத்தபோது, அங்கு நான் போயிருந்த நேரம்தான் மூழ்கிக் கிடக்கும் எங்கள் கப்பலை வேறு சிலர் உரிமை கொண்டாடி அபகரிக்கத் திட்டமிடுவதைத் தெரிந்து கொண்டேன். அதற்காக வழக்குத் தொடர்ந்தேன்.

உலகில் எங்கு கப்பல் வாங்கினாலும், அத லண்டன் லாயிட்ஸ் பதிவேட்டில் பதிவு செய்ய வேண்டும். அதன்படி, மூழ்கிய கப்பல் எங்களுக்குச் சொந்தமான என அந்த நிறுவனம் சான்றிதழ் அளித்தது. (அதைக் காண்பிக்கிறார்) அதனடிப்படையில் வழக்கு வெற்றியடந்து கப்பல் எங்களுடைய என கோர்ட்டில் தீர்ப்பு வாங்கிவிட்டோம்.

இந்தக் கப்பல் கிட்டத்தட்ட ஐம்பதடி ஆழத்தில் இருப்பதால் இதிலுள்ள பொருட்களை மற்றவர்கள் அபகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அரசே இந்தக் கப்பலை வெளியே கொண்டு வந்து அதில் உள்ள பொருட்களை எடுத்து அருங்காட்சியகத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். இது தொடர்பாக குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை நேரடியாகச் சந்தித்துப் பேசினேன். காந்திக்கு உதவியாக இருந்த காங்கிரஸ்காரர்களுக்கு நாம் ஏன் உதவ வேண்டும் என்று மோடி நினத்தாரோ என்னவோ, எதுவும் செய்யாமல் விட்டுவிட்டார்.

காங்கிரஸ் தலைவர்கள் சிலரிடமும் பேசினேன். அவர்கள் நான் காங்கிரஸில் சலுகைபெற முயல்வதாக தவறாகப் புரிந் கொண்டார்கள். ஜனாதிபதி, பிரதமர், சோனியாகாந்தி என பலருக்கும் கடிதம் எழுதினேன். (கடித நகல்களக் காட்டுகிறார்) மூழ்கிய கப்பலை மீட்க வேண்டுமென்ற என போராட்டம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன் மதுரை காந்தி மியூசியத்தில் நடந்த புகைப்படக் கண்காட்சியில் கூட என் கொள்ளுத் தாத்தாக்கள் படம் இடம் பெற்றிருந்தது. எங்கள் குடும்பச் சொத்துக்கள் தொடர்பாக காந்திஜி கைப்பட எழுதிய உயில் மற்றும் சில கடிதங்கள்கூட இன்றும் என்னிடம் உள்ளது.

இந்தத் தகவல்கள எல்லாம் பி.பி.சி.யில் பேட்டியாக கொடுத்தேன். இங்கிலாந்து அரசு அதைத் தெரிந்து கொண்டு, என்னை அந்த நாட்டின் குடிமகனாக ஏற்றுக் கொள்ள விருப்பம் தெரிவித்தது. ஆனால், என் சொந்த நாடான இந்தியாவை விட்டு நான் எங்கேயும் போகத் தயாராக இல்லை. ஆனால், காந்தி தொடர்பான வரலாற்று ஆவணங்களைத் தேடும் விஷயத்தில் அரசு ஏன் அசிரத்தையாக இருக்கிறது என்பதுதான் தெரியவில்லை.

இந்தக் கப்பலை மீட்டு அதிலுள்ள பொருட்களை காட்சியகத்தில் வைத்தால், என்வசமுள்ள காந்தியின் கடிதம் போன்ற அரிய ஆவணங்களை அதற்குத்தர தயாராக இருக்கிறேன். எனக்கு எதுவும் வேண்டாம். காந்தியின் சுதந்திரப்போராட்டத்தில் என் முன்னோர்களின் பங்களிப்பும் இருக்கிறது என்ற பெயர் மட்டும் போதும்! என வேதனயுடன் சொல்லி முடித்தார் அப்துல் கரீம்.

இதற்கான முயற்சிகளில் அப்துல் கரீமுக்கு உதவி வரும், இந்திய யூனியன் முஸ்லிம்லீக்கின் மதுரை மாவட்ட பொதுச்செயலாளர் எம். அலி அக்பரிடம் பேசினோம்.

‘‘காந்தியின் அரசியல் வாழ்வுக்கு அடித்தளமிட்ட ஜவேரி சகோதரர்கள், அதற்காகவே சொத்துக்களை இழந்தவர்கள். அவர்களுக்கு தபால் தலை வெளியிட வேண்டும் என்று அப்போதைய மத்திய அமைச்சர் தயாநிதிமாறனிடமும், இப்போதைய அமைச்சர் ராஜாவிடமும் கோரிக்கை வைத்துள்ளோம்.

ஜவேரி சகோதரர்களின் வாரிசுகள் பற்றி காங்கிரஸ் பேரியக்கம் கூட கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது. இது தொடர்பாக வேலூர் எம்.பி. காஜாமொய்தீன், வெளியுறவுத்துறை அமைச்சர் அகமதுவிடம் பேசியிருக்கிறார். நம் கண் எதிரே கிடக்கும் ஒரு பொக்கிஷத்தை யாரும் கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக உள்ளது’’ என்றார் அக்பர் அலி.

அரசியல்வாதிகளுக்கு ஆயிரம் வேலை இருக்கும். அதற்கிடையே மகாத்மா காந்தியை நினப்பதற்கெல்லாம் அவர்களுக்கு ஏது நேரம்!
"KUMUDAM REPORTER" 12.07.07

தகவல் : சிந்திக்க உண்மைகள்.

No comments: