Sunday, January 18, 2009

ததஜ (TNTJ) உடைந்தது இந்திய தவ்ஹித் ஜமாத் (ITJ) உதயம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் உடைந்தது; பாக்கர் தலைமையில் புதிய அமைப்பு

சென்னை, ஜன. 16 : தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு உடைந்து அதன் பொதுச் செயலாளராக இருந்த எஸ்.எம். பாக்கர் தலைமையில் 'இந்திய தவ்ஹீத் ஜமாத்' என்ற புதிய அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது.
சென்னையில் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற நிகழ்ச்சியில் தனது ஆதரவாளர்கள் மத்தியில் புதிய அமைப்பை எஸ்.எம். பாக்கர் அறிவித்தார்.
பாக்கருடன் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணைப் பொதுச்செயலாளர் எஸ்.எம். சையது இக்பால், மாநிலப் பொருளாளர் அபுபக்கர் தொண்டியப்பா, மாநிலச் செயலாளர்கள் முகம்மது சித்திக், முகம்மது முனீர், முகம்மது சிப்ளி, அபு பைசல் ஆகியோரும் அந்த அமைப்பிலிருந்து வெளியேறியுள்ளனர்.

எஸ்.எம். பாக்கர் 'இந்திய தவ்ஹீத் ஜமாத்'தின் தலைவராகவும், முகம்மது சித்திக் பொதுச் செயலாளராகவும், எஸ்.எம். சையது இக்பால் துணைப் பொதுச் செயலாளராகவும், அபுபக்கர் பொருளாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
புதிய அமைப்பு குறித்து எஸ்.எம். பாக்கர் செய்தியாளர்களிடம் கூறியது:
பல்வேறு அமைப்புகளில் இருந்து எதுவும் செய்ய முடியாததால் 'இந்திய தவ்ஹீத் ஜமாத்' என்ற அமைப்பை தொடங்கி உள்ளோம்.
இந்த அமைப்பு யாருக்கும் எதிரானது அல்ல. நாங்கள் என்றும் ஓரிறை (ஒரே கடவுள்) கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள். ஓரிறை கொள்கையில் நம்பிக்கை கொண்டவர்கள் எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் எங்கள் அமைப்பில் சேரலாம். இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமான மார்க்கம் அல்ல. எல்லோருக்கும் இஸ்லாத்தை கொண்டுச் செல்வதுதான் எங்களின் முக்கிய நோக்கம். நாங்கள் ஒருபோதும் தேர்தலில் போட்டியிட மாட்டோம். ஆனால் முஸ்லிம்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை பிரசாரம் செய்வோம்.

திருக்குரான் மற்றும் நபி வழியை முஸ்லிம்கள் மத்தியில் போதிப்பது, செயல்படுத்துவது, மக்கள் தொகைக்கேற்ப முஸ்லிம்களுக்கு இட ஓதுக்கீடு கேட்டு போராடுவது, வரதட்சணை, மது, ஆபாசம், தீவிரவாதம், பிரிவினைவாதம், வட்டிக் கொடுமை, மூட நம்பிக்கைகள் போன்ற சமூக சீர்கேடுகளுக்கு எதிராக வீரியமுடன் போராடுவதற்காகவே இந்த இயக்கம்.
வெளிநாட்டு அரசாங்கம் மற்றும் அமைப்புகளிடம் இருந்து நிதி பெறமாட்டோம். இந்தியாவில் இருந்து வெளிநாட்டுக்கு வேலைக்காகச் சென்றிருப்பவர்களிடமிருந்து மட்டுமே நிதி பெறுவோம் என்றார் பாக்கர்.

பாக்கர் நீக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து எஸ்.எம். பாக்கர் நீக்கப்பட்டதாக அதன் துணை பொதுச் செயலாளர் எஸ். கலீல் ரசூல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு அவர் வெளியிட்ட அறிவிப்பு: சேலத்தில் நடைபெற்ற மாநில செயற்குழு கூட்டத்தில் பாக்கரை அமைப்பின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து நீக்குவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து பாக்கருக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துக்கும் இனி எவ்விதத் தொடர்பும் இல்லை என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி: தினமணி

6 comments:

Anonymous said...

Best Comedy of this Year. They have only 7 Members all of them got Post like president, Treasurer, General Secratary ha ha haa

K.Abdul Rahman

Anonymous said...

It is an example that, even 7 peson also can have an organisation naming after All India or India? First they have to get people within Chennai itself and then talk about other district, state etc what a comedy?

tamil said...

Respected Brothers,
I Know that there can not be a uinty anywhere and everywhere when the self satisfation comes and rules a man. Starting new group is good while it's bad when the man is isolated or removed because of some of his behaviour.
Whatever happaned kindly go for prayer and ask forgiveness from God to strenthern you in your personal life. Life is very short. Try to be good to do good for the welbeing of people. God bless you. I know my words will touch someone who has done wrong.
From,
J. ISLAMIA TAMIL SELVAN M.A.,M.L.,
ADVOATE, NAGERCOIL, CELL 9487187193

அன்சாரி - தஞ்சை said...

அஸ்ஸலாமு அலைக்கும்!

நல்ல தமிழ் பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது பகிர்ந்துகொல்ல? ஆசை!

வினை விதைத்தவன் வினை அறுப்பான்!
தினை விதைத்தவன் தினை அறுப்பான்!

இஸ்லாம் மார்க்கம் பொருளாதார நோக்கில் இவர்களால் வியாபாரமாக்கப்பட்டுவிட்டது என்கிற குற்றச்சாட்டு சந்திசிரிக்கிறது! தனது உறவுகளை பிரிந்து வியர்வை சிந்தி இவர்கள் தொப்பையை நிரப்பும் ஒவ்வொரு வெளிநாட்டுவாழ் தமிழ் இஸ்லாமிய சகோதரனும் முட்டளாக்கப்பட்டார்கள் என்பது நிதர்சனம்!

அவதூறு குற்றச்சாட்டாம்? ஏசி ரூம் மஷ்வராவாம்?? பத்திரிக்கை அறிக்கையாம் வெளி நாட்டு சகோதரனிடம் மட்டும் வசூல் செய்வார்களாம்? யார் வீட்டு பரம்பரை சொத்து??

வெளி நாட்டுவாழ் சகோதரர்கள் சிந்திக்க! செயல்பட!! மேலும் ஒரு பிளவு எம் இஸ்லமிய சமுதாயம் சந்திக்கமல் இருக்க, அதற்கு எம் வெளி நாட்டு வாழ் சகோதரன் துனை போகாமல் இருக்க இறைவா நீ அருள் புரிவாய்!!

Ansari B A
London

அன்சாரி - தஞ்சை said...

அஸ்ஸலாமு அலைக்கும்!

நல்ல தமிழ் பழமொழி ஒன்று நினைவுக்கு வருகிறது பகிர்ந்துகொல்ல? ஆசை!

வினை விதைத்தவன் வினை அறுப்பான்!
தினை விதைத்தவன் தினை அறுப்பான்!

இஸ்லாம் மார்க்கம் பொருளாதார நோக்கில் இவர்களால் வியாபாரமாக்கப்பட்டுவிட்டது என்கிற குற்றச்சாட்டு சந்திசிரிக்கிறது! தனது உறவுகளை பிரிந்து வியர்வை சிந்தி இவர்கள் தொப்பையை நிரப்பும் ஒவ்வொரு வெளிநாட்டுவாழ் தமிழ் இஸ்லாமிய சகோதரனும் முட்டளாக்கப்பட்டார்கள் என்பது நிதர்சனம்!

அவதூறு குற்றச்சாட்டாம்? ஏசி ரூம் மஷ்வராவாம்?? பத்திரிக்கை அறிக்கையாம் வெளி நாட்டு சகோதரனிடம் மட்டும் வசூல் செய்வார்களாம்? யார் வீட்டு பரம்பரை சொத்து??

வெளி நாட்டுவாழ் சகோதரர்கள் சிந்திக்க! செயல்பட!! மேலும் ஒரு பிளவு எம் இஸ்லமிய சமுதாயம் சந்திக்கமல் இருக்க, அதற்கு எம் வெளி நாட்டு வாழ் சகோதரன் துனை போகாமல் இருக்க இறைவா நீ அருள் புரிவாய்!!

Ansari B A
London

Anonymous said...

பாக்கர் மேல் உள்ள குற்றசாட்டு உண்மை இது பாக்கர் ஒப்புக்கொள்ளவேண்டும்,