Thursday, February 12, 2009

21 ம் தேதி முகவையில் தியாகி முத்துக்குமாரின் அஸ்தி - திரள்வீர் மக்களே! இலங்கை தமிழர் பாதுகாப்பு பேரியக்கம்


ஐயா. பரந்தாமன் அவர்கள் உரையாற்றுகிறார் அருகில் தோழர்கள்


இராமநாதபுரம், பிப்ரவரி 11, இலங்கையில் சிங்கள பேரினவாத இரானுவத்தால் அப்பாவி தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்டு வரும் இனவாத படுகொலையை தடுத்து நிறுத்தக்கோரி இராமநாதபுரம் நகரி்ன் பல இடங்களில் மக்கள் மத்தியில் விழிப்புணர்ச்சியை ஏற்ப்படுத்துவதற்காக தெருமுனை பிரச்சார கூட்டங்கள் நடைபெற்றது.

ஐயா பழ. நெடுமாறன் அவர்களால் அமைக்கப்பட்டுள்ள இங்கைத் தமிழர் பாதுகாப்பு இய்க்கத்தின் சார்பிலும், தமிழ் பாதுகாப்பு பேரவை சார்பிலும் இந்த தெருமுனை பிரச்சார கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.


இடமிருந்து தோழர் மதுரை வீரன், தோழர் செளந்தரபாண்டியன், தோழர் முகவைத்தமிழன், தோழர் காமராஜ் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.



இக்கூட்டங்களில் கண்டன உரையாற்றுவதற்காக ஈழத்தமிழர்களுக்காக பொடா சட்டத்தில் கைதாகி சிறை சென்ற தமிழர் தேசிய இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஐயா. க. பரந்தாமன் அவர்களும், தமிழ் பாதுகாப்பு பேரவையின் ஆலோசகர் தோழர் சை செளந்தர பான்டியன் அவர்களும், இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் விவசாயிகளின் தலைவர் தோழர் மதுரை வீரன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக வந்து கண்டன உரையாற்றினார்கள்.

ஐயா பரந்தாமன் அவர்கள் தனது உரையில் வலுப்பெற்று வரும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினை பற்றியும், விடுதலைப்புலிகளின் வலிமை பற்றியும், விடுதலைப்புலிகள் அமைப்பினை யாராலும் தோற்கடிக்க இயலாது என்றும், சென்னையில் பல்லாயிரம் பேர் கலந்து கொள்ள நடைபெற்ற நிகழ்வினைப் பற்றியும் விளக்கினார்கள். பின்னர் வரும் 21 ம் தேதி இராமேசுவரம் நோக்கி ஈழத்தமிழர்களுக்காக தன்னுயிரை அற்ப்பனித்த உயிர்த்தியாகி தோழர் முத்துக்குமாரின் அஸ்த்தியை எடுத்து வருவது பற்றியும் அதை இராமநாதபுரம் அரன்மனை முன்பு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைப்பது பற்றியும் இந்நிகழ்வில் பெருமளவில் மாணவ, மாணவிகளையும் பொதுமக்களையும் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தச் செய்வது பற்றியும் கூறினார்கள். இந்நிகழச்சியின் மூலம் மாவட்டம் முழுவதும் ஈழத்தமிழ் பேராதரவு எழுச்சியை ஏற்ப்படுத்த வேண்டுமு: என்றும் கூறினார். இதற்காக ஏற்பாடுகளை இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் தோழர் நாகேசுவரன், தோழர் காமராஜ், தோழர் பிரபாகரன் மற்றும் தோழர் முகவைத்தமிழன் ஆகியோர் முன்னின்று செய்வார்கள்.

கூட்டங்களுக்கு தமிழ் பாதுகாப்பு பேரவையின் பொருளாலர் தோழர் காமராஜ் அவர்கள் தலைமை வகித்தார்கள். தோழர் சி. பிரபாகரன், அமைப்பாளர், தமிழ் பாதுகாப்பு பேரவை, தோழர் முகவைத்தமிழன் - இலங்கைத்தமிழர் பாதுகாப்பு இயக்கம்(முகவை மாவட்டம்) தோழர். க. நாகேசுவரன் - தலைவர், தமிழ் பாதுகாப்பு பேரவை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


இடமிருந்து தோழர் காமராஜ், தோழர் மதுரை வீரன், தோழர் முகவைத்தமிழன், ஐயா பரந்தாமன் அவர்கள், தோழர் நாகேசுவரன், தோழர் செளந்தரபாண்டியன் ஆகியோர்.

இக்கூட்டத்தில் உயர் நீதிமன்ற வழக்கறிஞர் தோழர். இராசிவ் காந்தி B.A. B.L. M.L, பொதுச் செயளாலர், தமிழ் பாதுகாப்பு பேரவை, வழக்கறிஞர். பசுமலை B.A. B.L., மாவட்ட செயலாளர், தமிழ் தேசிய இயக்கம், வழக்கறிஞர். மு.த. முருகேசன் B.Sc., B.L தலைவர் ஆதிசேனா இயக்கம், தோழர் ஜெ. ஜெரோன்குமார், தீவுத்தமிழர் கூட்டமைப்பு, தோழர் நம்புக்குமார், தமிழ் பாதுகாப்பு பேரவை , இராமேசுவரம், தோழர் செகன், தோழர் மா. அன்புகரசன், தோழர் ம. எட்வர்டு , தோழர் வாலிதாசன், தமிழ் பாதுகாப்பு பேரவை, தோழ் ஆதித்ய சேக்கிழார், தமிழக ஆசிரிய படைப்பாளிகள் பேரியக்கம் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

No comments: