Monday, January 26, 2009

அதோ வருகிறது அரசியல் குழப்பம் - உஷார்! உஷார்!! உஷார்!!!

அதோ வருகிறது அரசியல் குழப்பம்!
உஷார்! உஷார்!! உஷார்!!!


அரசியல் ஹராம், ஜனநாயகம் ஒரு ஷிர்க்கு, ஓட்டு போடுவது இஸ்லாத்திற்கு எதிரானது என்று வாயை வாளாக பயன்படுத்தி , வேஷம் போட்டவர்கள் நம்முடைய ஜமாத் ஒற்றுமையை உடைத்து, அரசியல் வலிமையை சிதைத்து, ஒற்றுமைக்குள் ஒற்றுமையை உடைத்து நம்மை வஞ்சித்தவர்கள்களுக்கு மாறி, மாறி ஓட்டளித்து சமூகத்தை ஓட்டாண்டியாய் ஆககியவர்கள். ஆம் கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவர்கள் வானம் ஏறி வைகுண்டம் போனார்களாம் என்பதைப்போன்று, மார்க்கத்தை குழப்பியவர்கள் இன்று மக்களை குழப்ப இன்று மனித நேய வேஷம் போட்டு சமூகத்திற்கு துரோகம் செய்ய மீண்டும் வருகின்றார்கள். சமுதாயமே எச்சரிக்கை!!

ஊரை அடித்து உலையில் போட்டவர்கள், கோடிக்கு கொள்கைகளை குப்பையில் போட்டவர்கள் சமுதாய இளைஞர்களின் விழி பறித்தவர்கள் , வழிகாட்ட அரசியல் வியாதிகளாக வருகின்றார்கள், தொற்று நோயிடம் எச்சரிக்கையாக இருங்கள். அன்று பாபர் பள்ளி உடைத்த காங்கிரஸ் கூட்டணிக்கு ஓட்டு, கரசேவை ஜெயலலிதாவிற்கு ஆதரவு, இட ஒதுக்கீடு துரோகத்திற்கு பாராட்டு, அண்ணா நூற்றான்டு விழாவில் கைதிகள் விடுதலையில் பாரபட்சத்தில் இவர்களது மெளனம், வக்ஃபு சொத்து அபகரிப்பில் ஆதரவு, திருமங்களத்தில் தி.மு.க விற்கு ஆதரவு, மறுபுரம் தி.மு.க விற்கு பாஸ் மார்க் போட முடியாது, இட ஒதுக்கீட்டில் திருப்தியில்லை த.மு.மு.க தலைவர் பேட்டி, காதர் மைதீன் எம்.பி இஸ்லாமிய அமைப்பை லஸ்க்கரே தய்யிபா என துக்ளக்கில் பேட்டி. இவர்களின் கோமாளி சேட்டைகளை எழுதினால் நாடு சிரிக்கும். நடுநிலையாளர்கள் முகத்தை திருப்பி கொள்வார்கள்.

மூளையை மூலையில் வைத்து விட்டு பாலையில் பணியாற்றும் நம்மவர்கள் நிஜத்திற்கும், நிழலுக்கும் வித்தியாசம் தெறியாமல் குயிலை கோட்டான் என்றும், கோட்டானை குயில் என்றும் கடல் கடந்து காசை கொடுத்துவிட்டு உண்மை நிலை புறியாமல் கத்துகிறார்கள். சோரம் போனவர்களால் சோபிதம் கிடைக்கும் என்று இன்னும் கூட நம்பிக் கொண்டிருக்கின்றார்கள். மரணித்து விட்ட இதயங்களால் மாற்றம் வரும் என்று எண்ணுகிறார்கள். ஏமாற்றம்தான் மிச்சம் என மிரண்டு ஓடியவர்களும், ஏமாற்றுக்காரர்களை சரியாக இனம் கண்டு கொண்டவர்களும், IDMK வில் இளைப்பாரிக் கொண்டிருக்கிறார்கள். பாவம் செய்தி படத்திற்கு தெருக்கூட்டும் மந்திரியை போன்று டி.வி யில் வந்து போகும் கிராபிக் மேஜிக்கில் மயங்கி நிற்கிறாய். அருள்மறையை புறிந்து கொண்டவனே சற்று சிந்தி. தேவைப்பட்டால் எங்களை சந்தி.

உரிமை, உணர்வு என உரக்க முழங்கியவர்களின் அன்றைய நிலை என்ன? சில்லரையை எண்ணிக் கொண்டிருந்தவர்கள், கட்டுக்களை எண்ணிக் கொண்டிருக்கிறார்கள். கட்டுக்களை எண்ணிக்கலைத்தவர்கள் கட்டுக்களை நிறுத்துப் பார்க்கிறார்கள். செந்நீரை சிந்திய நீயோ கண்ணீரை கணக்கு பார்க்கிறாய். எலி வாலை பிடித்துக் கொண்டு ஏழு கடலை தாண்டினேன் என்றால் மதி மயங்கி நம்பகின்றாய். உன் நிலைமையை எப்படி சொல்ல ? பிறருக்கு கைதட்டியே காணாமல் போனவனே, உன் முதுகில் தட்டி சிந்திக்க , ஆம்!! இரவல் அரசியலுக்கு இறுதி விடை கொடுக்க , உஷாராக IDMK க்கு ஓட்டுப் போட உன்னை அழைக்கின்றோம்.


இவன்

இந்திய தேசிய மக்கள் கட்சி
தமிழ்நாடு - 9629471303, 9843160860, 9443021050, 9047507665

No comments: