Monday, October 06, 2008

முகவையில் IDMK கழக கொடி ஏற்றுவிழா


இராமநாதபுரத்தில் முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் பகுதியும், நகரின் மையப்பகுதியும் ஆன சின்னக்கடை வீதியில் அமைந்துள்ள ஒத்தக்கடை மைதானத்தில் கடந்த 04.10.2008 சனிக்கிழமை மாலை சுமார் 4.00 மனியளவில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் கொடி ஏற்றப்பட்டது.

இந்திய தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்கள் நிகழச்சிக்கு தலைமை வகிக்க இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் டாக்டர். பக்ருதீன் அவர்கள் கட்சியின் கொடியை ஏற்றி வைத்தார்.
நிகழ்ச்சியில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட செயலாளர் திரு. எம்.ஐ ஜஹாங்கீர் அவர்கள், கீழக்கரை நகர தலைவர் திரு. முஹைதீன் அடுமை, திருப்புல்லானி ஓன்றிய செயலாளர் திரு. கிங்காங் முகம்மது இபுறாஹிம் அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். நிகழச்சியில் பெருமளவில் ஆட்டோ ஓட்டுனர்களும், சின்னக்கடை பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

No comments: