Monday, October 06, 2008

சமுதாய செய்திகள்

கோவை MNP இஃப்தார் நிகழ்ச்சி

கடந்த 21.09.2008 ஞாயிற்றுக்கிழமை அன்று கோவை போத்தனூர் ரோட்டில் உள்ள சங்கமம் திருமன மன்டபத்தில் மனித நீதிப் பாசறையின் சார்பாக இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில் எம்.என்.பி மாவட்ட செய்லாளர் திரு. M.Y அப்பாஸ் அவர்கள் தலைமை தாங்கினார். தேனியில் இருக்கும் அறிவகம் முதல்வர் D.செய்யது இபுறாஹிம் உஸ்மானி எம்.என்.பி மாவட்ட தலைவர் A.S. இஸ்மாயில் ஆகியோர் சிறப்புரை ஆற்றினார்கள்.இறுதியாக் எம்.என்.பி கோவை தெற்கு மாவட்ட செயலாளர் A.A. அப்துல் காதர் அவர்கள் நன்றியுரை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் 2000 த்திற்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பெருநாள் விளையாட்டு போட்டிகள்


கடலூர் மாவட்டம் மங்களம்பேட்டையில் ஈதுல் ஃபித்ர் தினத்தை முன்னிட்டு யுனைட்டட் ஸ்டூடன்ட்ஸ் ஃபிரன்ட் (USF- UNITED STUDENTS FRONT) சார்பாக விளையாட்டு நிகழச்சிகள் நடைபெற்றன. இதில் கபடி, வாலிபால் போன்ற போட்டிகள் நடத்தப்பட்ட இந்நிகழ்ச்சியில் மங்களம்பேட்டை ஆயிஸா (ரலி) பென்கள் கல்லூரி செக்கரட்டரி அபீருதீன் மன்பஈ அவர்கள், மங்களம்பேட்டை காவல்துறை அதிகாரி திரு. சரவனகுமரன் அவர்கள், MNP நகர் தலைவர் அபுல் ஹஸன் அவர்கள், அம்பயர் திரு. அபுசாலிஹ் , நகர் தமுமுக நிர்வாகி திரு. ஹஸன் முகம்மது ஆகியோர் கலந்து கொண்டனர்.

அணுசக்தி ஓப்பந்தம் கண்டித்து ஆர்ப்பாட்டம்

விழுப்புரம் மாவட்டம் கல்லக்குறிச்சியில் தமிழகத்தின் மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (PFI) இந்திய நலன்களுக்கு எதிராக இந்தியாவை அமெரிக்காவிடம் அடகு வைக்கும் மத்திய அரசின் அனுசக்தி ஓப்பந்தத்தை கண்டித்து மபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தியது. MNP விழுப்புரம் மாவட்ட தலைவர் திரு. ரஃபீக் அவர்கள், MNP கல்லக்குறிச்சி மற்றும; சங்கராபுரம் மன்டல தலைவர் திரு. சித்திக் , மங்களம்பேட்டை ஆயிஸா (ரலி) பென்கள் கல்லூரி செக்கரட்டரி அபீருதீன் மன்பஈ அவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.

IIC தாவா மற்றும் இஃப்தார்

இஸ்லாமிய தகவல் மையம் (IIC) சார்பாக விழுப்புரம் மாவட்டம் கல்லக்குறிச்சியில் தாவா மற்றும் இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது.இந்நிகழச்சியில் சமதியா பள்ளி இமாம் மெளலவி இபுறாஹிம் அவர்கள், , MNP கல்லக்குறிச்சி மற்றும; சங்கராபுரம் மன்டல தலைவர் திரு. சித்திக் அவர்கள், மெளலவி ஷம்சுல் இக்பால் அவர்கள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு பயன் பெறற்னர்.

செய்திகள் : திரு. அபீருதீன் மன்பஈ அவர்கள்

No comments: