இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை நிறுத்தக் கோரியும், இந்திய குடிமக்களான 500 க்கும் மேறப்பட்ட தமிழ் மீனவர்கள் சிங்கள் இன வெறி கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டும் வாய்மூடி மெளனம் காக்கும் தன்மானம் இல்லாத இந்திய அரசை கண்டித்தும், உடனடி நடவடிக்கை எடுத்து இலங்கையில் அப்பாவி தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தும் தீவிரவாத இலங்கை இரானுவத்தை தடுத்து நிறுத்தக் கோரியும், இலங்கையில் நடக்கும் இனப்படுகொலைக்கு ஆயுதம் வழங்குவதை இந்திய அரசு நிறுத்கத் கோரியும் இராமேஸ்வரத்தில் நடந்த பேரனியில் ஆக்ரோச உரை நிகழ்த்திய காரனத்திற்காக பொய் வழக்குகள் புனையப்பட்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு தற்போது பினையில் உள்ள இனமானத் தமிழன், இனப் போராளி திரு. சீமான் அவர்களை இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் திரு. முகவைத்தமிழன், இந்திய தேசிய மக்கள் கட்சியின் முகவை மாவட்ட செயளாலர் திரு. ஜஹாங்கிர், தமிழ் பாதுகாப்பு பேரவையின் தலைவர் திரு. நாகேஸ்வரன் அவர்கள், இந்திய மாணவர் பேரவை (AISF) செயளாலர் தோழர் பிரபாகரன் ஆகியோர் நேற்று மதுரையில் சந்தித்தனர்.
திரு. முகவைத்தமிழன், திரு. சீமான் , திரு. குத்புதீன் ஐபக்
இந்த சந்திப்பின் போது திராவிடர் கழக தோழர் திரு. இலங்கோ உட்பட பலர் உடனிருந்தனர். திரு. குத்பதீன் ஐபக், திரு. முகவைத்தமிழன், திரு. நாகேஸ்வரன், திரு. பிரபாகரன் ஆகியோர் இனப் போராளி திரு. சீமான் அவர்களுக்கு தங்கள் ஆதரவையும் அன்பையும் தெறியப்படுத்தினர். இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக் அவர்களோடும், திரு. முகவைத்தமிழன் அவர்களோடும் இன்ப்போராளி திரு. சீமான் அவர்களும் அவர் உடனிருந்த திராவிடத் தோழர்களும் இரன்டரை மனி நேரத்திற்கும் அதிகமாக கலந்துரையாடினர்.
திரு. நாகேஸ்வரன், திரு. சீமான், திரு. பிரபாகரன் (AISF) ஆகியோர்
இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் திரு. குத்புதீன் ஐபக், தமிழ் பாதுகாப்பு பேரவையின் தலைவர் திரு. நாகேஸ்வரன், இந்திய மாணவர் பேரவை (AISF) செயளாலர் தோழர் பிரபாகரன், இந்திய தேசிய மக்கள் கட்சியின் ஆலோசகர் திரு. முகவைத்தமிழன், திரு. ஜஹாங்கீர் ஆகியோர் தங்களுடன் ஒத்த கருத்துடைய இன்ன பிற அமைப்புக்களை ஒன்றினைத்து விரைவில் முகவையின் தலைநகர் இராமநாதபுரம் அரன்மனை திடலில் இலங்கையில் நடக்கும் இனப்படுகொலையை கண்டித்து மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவதென்றும் அந்த நிகழச்சியில் இனப்போராளிகள் திரு. சீமான் மற்றும் திரு. அமீர் ஆகியோர் கலந்து கொள் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்றுக் கொண்ட திரு. சீமான் அவர்கள் அந்த நிகழச்சியில் தான் கட்டாயம் கலந்து கொள்வேன் என்று வாக்களித்தார்.
பின்னர் அனைவரும் சோந்து தேனீருடன் கூடிய சின்றுன்டியுடன் தங்கள் கலந்துரையாடலை முடித்துக் கொண்டனர். இந்திய மாணவர் பேரவை (AISF) செயளாலர் தோழர் பிரபாகரன் அவர்கள் இந்நிகழச்சிக்காக மாணவர் அமைப்புக்களை கலந்து பேசி இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைமையில் மாணவர்களை ஒருங்கினைத்து போராட துனை புரிவதாக வாக்களித்தார்.இந்த சந்திப்பில் பேராளி திரு. சீமான் அவர்களுடன் பல்வேறு தரப்பட்ட அரசியல் நிகழ்வுகளை பற்றி ஆராயப்பட்டது. இறுதியில் வரும் தேர்தலில் நாம் அனைவரும் ஒருங்கினைந்து தமிழகமெங்கும் அனைத்து தொகுதிகளிலும் களமாடி இனத்துரோகிகளை மக்களுக்கு அடையாளப்படுத்தி அவர்களை தோற்கடிப்போம் என்றும் அதற்கு திரு. அமீர் உட்பட அனைத்து தோழர்களையும் இனைத்து ஓரணியில் நின்று அரச அடக்குமுறைக்கு எதிரான போராடுவோம் என்றும் உறுதியளித்தார்.
செய்தி தொகுப்பு : திரு. ஜஹாங்கீர்
No comments:
Post a Comment