Thursday, April 16, 2009

சரத்குமாருடன் சுமுகமான கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது - இல. கணேசன்

சரத்குமாருடன் சுமுகமான கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது - இல. கணேசன்

சென்னை : நடிகர்கள் சரத்குமார், கார்த்திக் கட்சிகளுடன், பா.ஜ., நடத்திய கூட்டணிப் பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்தது.

தமிழகம், புதுச்சேரியில் போட்டியிடும் 12 வேட்பாளர்களின் பட்டியல் பா.ஜ., சார்பில் ஏற்கனவே வெளியிடப்பட்டு விட்டது. இந்நிலையில், பா.ஜ., மாநிலத் தலைவர் இல.கணேசனை, ச.ம.க., தலைவர் சரத்குமார், நாடாளும் மக்கள் கட்சித்தலைவர் கார்த்திக் ஆகியோர் நேற்று சந்தித்து, கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில், நெல்லை, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, திருப்பூர் உட்பட ஆறு தொகுதிகளில் ச.ம.க.,வும், விருதுநகர், தேனி உட்பட ஐந்து தொகுதிகளில் நா.ம.க.,வும் போட்டியிடுவது என சுமுகமாக முடிவு எடுக்கப்பட்டது. வரும் 18ம் தேதி ச.ம.க., சார்பில் இதுகுறித்து அறிவிப்பு வெளியிடப்படுகிறது.

இதுகுறித்து பா.ஜ., மாநிலத் தலைவர் இல.கணேசனிடம் கேட்டபோது, "பா.ஜ., - ச.ம.க., - நா.ம.க.,வுடன் சுமுகமான கூட்டணி உடன்பாடு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே பா.ஜ., போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. மற்ற கட்சிகள் போட்டியிடும் அனைத்து தொகுதிகளின் முழுமையான பட்டியல் இன்று வெளியிடப்படும்' என்றார்.

நன்றி : தினமலர்

தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன?

சரத்துடன் கூட்டணி என்று தமுமுக அறிவித்திருந்தது. இந்த சூழ்நிலையில் நாம் சரத்குமார் பி.ஜே.பி யுடன் கூட்டணியில் உள்ளார் என்று நாம் சுட்டிக்காட்டி தமுமுக பி.ஜே.பி யுடன் கூட்டணியா? என்று கேள்வி எழுப்பியிருந்தோம். அதை மறுக்கும் விதமாக சரத்குமார் பி.ஜே.பி யுடன் கூட்டணியில் இல்லை ஆகவேதான் நாங்கள் சரத்துடன் கூட்டணி என்று தமுமுக வினர் தங்களது இணையத்தில் மறுத்து செய்தி வெளியிட்டிருந்தனர். தற்சமயம் சரத்குமாருடன் பி.ஜே.பி யின் கூட்டணி உறுதி செய்யப்பட்டு இல.கணேசன் அவர்களால் தொகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சியின் நிலைப்பாடு என்ன? இன்றும் சரத்குமாருடன் கூட்டணி தொடர்கின்றதா இல்லையா? - முகவைத்தமிழன்

3 comments:

Anonymous said...

Dear Brother, In the begining, we thought MMK is a very big party,hoped MMK gets at least 2 seats (out of their shouting for 6 seats).Everyone knew Sarath party is having talks with BJP for last 2 months,,but why MMK is so wish to have connection with sarath??? if MMK is for muslims, they should immediately spit on sarath whenever they have contact with sarath on / off.

It seems MMK weight = sarath party weight. Shameful politics.

Abdullah said...

சகோதரர் முகவைத்தமிழன் கவனத்திற்கு. ஆரம்பத்தில் பாஜகவுடன் சரத்குமார் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டிருக்கும் பொழுது தமுமுகவின் மமக தனி கூட்டனிக்கு தயாகிக்கொண்டிருக்கின்றது என்று கேள்விப்பட்டதும் பாஜகவை கழற்றிவிட்டுவிட்டு மமகவுடன் பேச்சுவார்த்தை நடத்ததொடங்கினார். இதனால் தான் சில தினங்களுக்கு முன்பு இலகனேசன் கூட 'சரத்குமார் எங்களுக்கு நேர் எதிரானவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவதால் அவர் எங்கள் கூட்டனியில் இல்லை என்று அறிவித்தார். ஆனால் தமுமுகவுடன் சரத்குமார் பேச்சு நடத்துகின்றார் என்று தெரிந்ததும் சன்டிவி குழுமம் அவரை நேரடியாக மிரட்டாமல் சன்டிவியை வைத்து இன்று பிரபலமாகத்திகழும் ராதிகாவின் மூலம் மிரட்டினார்களாம். எங்களை வைத்து பிரபலமான பின் தயாநிதி மாறனை எதிர்க்கும் தமுமுகவுடனா கூட்டனி என்பது போன்று ராதிகாவிற்கு மிரட்டல் செல்லவே அதன் மூலம் சரத்குமாருக்கு நெருக்கடி முற்றவே அவர் அதோடு மமகவை கடந்த ஒருவாரமாக தொடர்புக்கொள்வதை நிறுத்திவிட்டாராம். இது தான் நடந்தது என்று தமுமுக தரப்பு தெரிவித்தது. (பாஜக கூட்டனி மத்திய சென்னையில் இதுவரை யாரையும் வேட்பாளராக நிறுத்வில்லை என்பதை கவனத்தில் கொள்க)

சுட்டிப் பையன் said...

நீங்க இதையும் சொல்வீங்க! இதுக்கு மேலேயும் சொல்வீங்க! நம்புறதுக்கு உங்க பின்னால ஒரு கூட்டமே இருக்குதே! அது போதாதா?