Wednesday, March 28, 2007

வக்ஃப் வாரியத் தலைவராக ஹைதர் அலி

வக்ஃப் தலைவராக பதவியேற்கும் ஜனாப்.ஹைதர் அலி



கடந்த 27.03.2007 அன்று தமுமுக வின் பொதுச் செயளாலர் ஜனாப். ஹைதர் அலி அவர்கள் தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக ஒரு மனதாக தேர்ந்தெடுக்கப் பட்டு பதவியேற்றுள்ளார்கள்.

தமிழ்நாடு வக்ஃப் வாரியத் தலைவராக புதிதாக பதவியேற்றிருக்கும் ஜனாப் ஹைதர் அலி அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெறிவித்துக் கொள்வதோடு அவர் இப்பதவியின் மூலம் இச்சமுதாயத்திற்கு ஆற்ற வேண்டிய கடமைகள் நிறைய உள்ளதையும் நினைவூட்டுகின்றோம்.

இதற்கு முன்னர் வந்து சென்ற ரப்பர் ஸ்டாம்ப் தலைவர்களைப்போல் அல்லாமல் இவர் பலம் பொருந்தியவராக சமுதாயக் கடமை ஆற்றக் கூடியவராக இருகக் வேண்டும்.

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு சொந்தமான நிறையச சொத்துக்கள் பலம் பொருந்தியவர்களால் பல காலமாக ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன. அவ்வகையான சொத்துக்களை மீட்டெடுப்பது இவரது தலையாயக கடமைகளில் ஒன்று.

இன்னும் சிதறிக் கிடக்கும் ஜமாத்துகளை ஒருங்கிணைப்பதன் மூலம் தமிழகத்தில் முஸ்லிம்களை பலம் பொருந்தியவர்களாக மாற்ற இயலும் அதற்கான காரியங்களிலும் இவர் தனது இந்த பதவியைப் பயன்படுத்தி முனைய வேண்டும்.

தமிழகத்தில் சில பள்ளிகள் சில கூட்டத்தாரால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன அவ்வகைளான பள்ளிகளையும் அதன் சொத்துக்களையும் மீட்டெடுத்து வக்ஃப் செய்ய வேண்டியது அல்லது உரியவர்களிடம் சேர்ப்பிப்பதும் இவரது கடமைகளில் அடங்கும்.

இன்னும் இவரும் இவர் சார்ந்த இயக்கமான தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகமும் கவனத்தில் கொள்ள வேண்டியது, இந்த பதவியை நீங்கள் அடைந்ததால் முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு தற்போது உங்களுடைய நடவடிக்கைகளை கண்கொத்திப் பாம்பாக பலர் கவணித்துக் கொண்டுள்ளனர். இந்த பதவியில் இருந்தபடி நீங்கள் செய்யும் செயல்பாடுகளில் ஏதாவது தவறுகள் இருந்தாலோ அல்லது மார்க்கத்திற்கு புறம்பான காரியங்கள் இருந்தாலோ அவை பெறிதாக்கப்பட்டு மக்கள் மததியில் உங்கள் இயக்கத்திற்கு அவப்பெயர் ஏற்பட வாய்ப்புக்க்ள உள்ளன.

அப்படிப்பட்டவர்களுக்கு வாய்ப்புத் தராமல் தமுமுக இந்தப் பணியை முன்னேப்போதும் இல்லாத அளவிற்கு திறம்பட செய்தது என்ற வகையில் இவரது பணிகள் இருக்க வேண்டும் இவரது பணிகளை தமுமுக வும் தனது இயக்கத்திற்கு எந்த பங்கமும் வராத வகையில் கண்கானித்து வரவேண்டும்.

காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

No comments: