Wednesday, April 08, 2009

தமிழக அரசியலில் முஸ்லிம்களுக்கு ஏப்ரல் ஃபூல்?

பொதுவாக ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் முதல்நாளை முட்டாள்கள் தினமென்று சொல்வர். அதாவது நெருங்கிய உறவினர்,நண்பர்,சகஊழியரை ஏமாற்றி அதனால் அவர்களிடம் ஏற்படும் அதிர்வலைகளைக் கண்டு மகிழும் ஒரு சிற்றின்பதினம்? பிறரின் துன்பத்தில் மகிழ்வதை உளவியல் சாடிஸம்/சாடிஸ்ட் என்று வகைப்படுத்துகிறது. APRIL FOOL பின்னணியையோ அல்லது காரணத்தையோ அலசி ஆராய்வதல்ல எமது நோக்கம்.மாறாக இத்தினத்தன்று செய்வது போல் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் முட்டாள்களாக்கப்பட்டுள்ளதைப் பகிர்ந்து கொள்ளும் நோக்கில் மனம் திறந்த கருத்துப்பரிமாற்ற முயற்சி.சிலநாட்களுக்கு முன்பு அதிரை எக்ஸ்ப்ரஸில் "காணாமல்போன தவ்ஹீதுவாதிகள்" என்ற பதிவில் துவக்கத்தில் இருந்த தவ்ஹீதுப் பிரச்சார விழிப்புணர்வு இன்று சிலரின் முரண்பட்ட அணுகுமுறைகளால் தடம்புரண்டு, மாற்றார் நகைக்கும் அளவுக்கு தரம் தாழ்ந்துள்ளது என்று நான் அவதானித்தவற்றைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். எனது சொல்லாடல் சிலருக்கு வருத்தத்தை ஏற்படுத்தியதோ அல்லது அவர்களுக்கு என்மீது ஏதும் தனிப்பட்ட விரோதமோ தெரியாது பின்னூட்டத்தில் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்திருந்தார்கள்.

எந்தகருத்துக்கும் எதிர்கருத்து உண்டென்பதை ஒரு நேர்மையான விமர்சகன் மனதில் வைத்தே விமர்சிக்க வேண்டும்.விமர்சனங்களுக்கான எதிர்வினைகளையும் எதிர்கொள்ளும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் அவசியம் என்பதால் பாராட்டுக்களைவிட எதிர்விமர்சனங்களையே கவனத்தில் கொண்டு முந்தையப் பதிவின் தொடர்ச்சியாக இதை வாசிக்கவும்.

மக்களவைத் தேர்தல்தேதி அறிவிப்பிற்குமுன்பே மத்திய மாநில அரசியலில் கட்சிகளிடையே கூட்டணி பேரங்களும் திரைமறைவு பரிவர்த்தனைகளும் நடந்து முடிந்துவிட்டன. சென்ற தேர்தலில் ஓரணியிலிருந்தவர்கள் இந்த தேர்தலில் எதிரணியில் இருக்கிறார்கள். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மீண்டும் பேரங்களும் திரைமறைவுப் பரிவர்த்தனைகளும் நடந்து காட்சிகள் மாறக்கூடும்.அரசியலில் நிரந்தர நண்பருமில்லை; நிரந்தரப் பகைவரும் இல்லை என்று பொதுமொழி அனைத்துக் கட்சியினராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது.

இவ்வுலகமே கதியென்று கட்சிநடத்து தொழில்முறை அரசியல்வாதிகள் எப்படியும் போகட்டும். அவர்களின் கூட்டணி அடுத்த தேர்தல்வரை மட்டுமே. தேவையெனில் கைகொடுப்பதும் தேவையில்லாவிட்டால் காலை வாரிகொள்வதும் அரசியலில் சகஜம். ஆனால் முஸ்லிம் தலைவர்களும் இம்மனநிலைக்கு சமீபகாலங்களில் வந்துள்ளதை எண்ணி வேதனைப் படாமலிருக்க முடியவில்லை. இந்தியளவில் நடக்கும் அவலங்களைவிடவும் தமிழக முஸ்லிம் அமைப்புகள் இடையே நடக்கும் உள்குத்துகள்,காலைவாருதல்,பேரங்கள் சகிக்கமுடியவில்லை. குறிப்பிட்டுச் சொல்வதென்றால் தமுமுக-ததஜ இடையே நடக்கும் பனிப்போர் தமிழக முஸ்லிம்களை எங்குபோய் விடுமோ என்ற அச்சம் எழுகிறது.

1994ல் தமிழக முஸ்லிம்களை மார்க்கம் மற்றும் அரசியல் ரீதியாக விழிப்படையச் செய்து கொடிபிடிக்கும் சமுதாயம் மட்டுமல்ல என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தியதில் தமுமுகவின் பங்களிப்பு மகத்தானது.வாழ்வுரிமை மாநாடு,எழுச்சி மாநாடு என தமிழக முஸ்லிம்களை ஓரணியில் கொண்டுவந்து சகலதரப்பையும் மலைக்க வைத்தனர்.இதுவரை இருந்த முஸ்லிம் இயக்கங்கள் மார்க்கத்தையோ அல்லது அரசியலையோ மட்டுமே முன்னிலைப் படுத்தி வந்ததால் ஒருவருக்கொருவர் தொடர்பின்றி முஸ்லிம்கள் தனித்தனி பாதையில் பிரிந்து கிடந்தனர்.தமுமுக இவ்விருவரையும் சரியான பாதையில் ஒருங்கிணைத்ததால் அழைத்த போதெல்லாம் முஸ்லிம்கள் குடும்பத்துடன் வந்து ஆதரவைத் தெரிவித்தனர்.

பத்தாண்டுகளில் எல்லாமே தலைகீழாக மாறியது! வழக்கமான அரசியல் கட்சிகளைவிடத் தரம் தாழ்ந்து ஒருவரை குற்றஞ்சாட்டிக் கொண்டு பிரிந்து நின்றதோடு, குழிபறிக்கவும் செய்தனர். தமுமுகவில் தவ்ஹீதுப் பிரச்சாரம் செய்ய முடியவில்லை என்ற காரணத்தைச் சொல்லி சகோதர். பி.ஜெய்னுல் ஆபிதீன் தலைமையில் சிலர் பிரிந்து தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத் என்று செயல்பட்டு வந்தனர். ஒருசில மாதங்களில் தமிழக சட்டமன்றத் தேர்தல் வந்துவிட்டதால் சமுதாயப் பணிகளோடு அரசியலிலும் ஈடுபட்டுவந்த தமுமுக திமுகவை ஆதரிக்கும் நிலை ஏற்பட்டது.

தமுமுகவின் அரசியல் அணுகுமுறைகளாலும் சமரசங்களாலும் தவ்ஹீதுப் பிரச்சாரத்தை முழுமையாகச் செய்யமுடியவில்லை என்று பிரிந்தவந்த ததஜ,தமுமுகவுக்கு எதிராக அதிமுக ஆதரவுப் பிரச்சாரம் செய்து தவ்ஹீது+அரசியல் என்று நிலை தடுமாறியதிலிருந்து தமிழக முஸ்லிம்கள் பரிதாப நிலையை நோக்கி மீண்டும் தள்ளப்பட்டுள்ளனர்.

சகோ.பி,ஜெய்னுல் ஆபிதீன் அவர்களின் எழுச்சியான, வசீகரமான மார்க்கப் பிரச்சாரங்கள் தமிழக முஸ்லிம்களை வெகுவாகக் கவர்ந்தன. இதுவே மார்க்கம் என்று சொன்னதையும் கண்டதையும் கேட்டதையும் செயல்படுத்தியவர்கள் குர்ஆனையும் ஹதீஸ்களையும் ஆராயத் தொடங்குமளவுக்கு வீரியமான தர்க்க ரீதியிலான பேச்சுக்கள் அமைந்தன. இவர் சொல்வதும் நியாயமாகத்தானே இருக்கிறது என்று சிலரை நிரந்தர ஆதரவாளர்களாகவும் மாற்றியது.1430 வருடங்களுக்கு முன்பே இறுதிப்படுத்தப்பட்ட இஸ்லாத்தில் இருந்த/இல்லாத விசயங்களை தர்க்கத்திற்கு உள்ளாக்கியது விழிப்புணர்வா அல்லது வீழ்ச்சியா என்பதை அல்லாஹ் நன்கறிவான்.

இமாம்கள் சொல்லியதெல்லாம் மார்க்கமல்ல என்றவர்கள் பிஜே சொல்வதே மார்க்கம் என்று பேசாமடந்தைகளாகினர். அல்லாஹ்வும் ரஸூலும் சொல்லாததைச் செய்பவன் வழிகேடர்கள் என்று சொல்லத் தொடங்கி பீஜெ சொல்வதை எதிர்ப்பவரெல்லாம் வழிகேடர் என்று நிலைபிறழ்தனர்.நேருக்குநேர் விவாதம் செய்ய வேண்டும் அல்லது சொல்வதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற புதியசித்தாந்தம் போதிக்கப்பட்டது.

மார்க்க விசயத்தில் பிஜே சற்றுஅதிகமாகவே கற்றறிந்தவர் என்பதால் சொல்பவை தவறாக இருக்க வாய்ப்பில்லை என்று நம்புவதில் நியாயமிருக்கிறது.மார்க்கமே பிரதானமென்று போர்க் கொடியேந்தி வெளியேறி, இன்று அரசியலிலும் குழம்பிப்போய் குழப்புவதையும் சகோதரர்கள் நியாயப்படுத்துவதை என்னவென்று சொல்வது?

தவ்ஹீதுப் பிரச்சாரத்திற்கு அரசியல் பின்னணி அவசியம் என்றால் அதை தமுமுகவிலிருந்து தனிக்கொடியுடன் பிரியாமலேயே செய்திருக்கலாமே? ஏப்ரல்-5 கோவையில் நடந்த ததஜ செயற்குழுத் தீர்மானத்தின்படி திமுகவுக்கு ஆதரவு என்ற நிலைப்பாடு எடுத்திருப்பது சரி அல்லது தவறாக இருக்கலாம். (தவ்ஹீதுக்கும் திமுகவுக்கும் என்ன சம்பந்தம்?) ஆனால், தனிக்கட்சியாக அரசியல் களம்கண்டுள்ள முன்னாள் சகாக்கள் போட்டியிடும் தொகுதிகளில் தீவிரப் பிரச்சாரம் செய்து மண்ணைக் கவ்வ வைப்பதாகத் தீர்மானம் இயற்ற வேண்டிய அவசியமென்ன?தவ்ஹீது மட்டும் என்றுப் பிரிந்து வந்ததிலாவது ஓரளவு நியாயமிருந்தது. தமுமுகவை வீழ்த்தியே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அலைவதற்கு எதற்கு தவ்ஹீது ஜமாத்?

"நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே;ஆகவே,உங்கள் இருசகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்; இன்னும் உங்கள்மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்."(49:10) என்ற வேதவரிகளையும்,வெற்றி தோல்விகளைத் தருபவன் அல்லாஹ்வே அவன் நாடியோருக்கு ஆட்சியதிகாரங்களை வழங்குவான் என்பதையும் மறந்து

"மனிதநேயமக்கள் கட்சி எங்கு நின்று போட்டியிட்டாலும் அவர்களுக்கு எதிராக அவர்களின் சமுதாய துரோகங்களை அடையாளம் காட்டி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் களம் இறங்கி அவர்களை தோல்வியை தழுவச் செய்யும் என்று இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது." என்று தீர்மானம் இயற்றுமளவுக்கு சகமுஸ்லிம் ஓரிருவருடங்கள் முன்புவரை ஒரே தட்டில் உணவருந்தி சுக/துக்கங்களில் பங்கேற்ற முன்னாள் சகாக்களை வீழ்த்தியே தீருவோம் / தீருவேன் என்பதற்கு எந்த ஹதீஸில் முன்மாதிரி உள்ளது என்று யாராவது கேட்டீர்களா? உலகளவில் இருதுருவங்களாகப் பிரிந்துள்ள ஷியாளுக்கும் சுன்னத்திக்களுக்கும்கூட இந்தளவுக்கு கொலைவெறியுடன் மோதவில்லையே!

அல்லாஹ்வின் தீர்மானங்கள் மட்டுமே மாற்றமுடியாதவை. அல்லாஹ்வும் ரஸூலும் ஒன்றைத் தீர்மானித்துவிட்டால் மட்டுமே மாற்றுக் கருத்துக் கொள்ளக்கூடாது என்பதில் உறுதியானவர்களாக இருப்பின் தயவுசெய்து செயற்குழுத் தீர்மானம் #8ஐ மாற்றங்கள்.மாற்ற மறுத்தால் அல்லாஹ்வின் கட்டளையை மதிக்கத் தவறியவர்களை அல்லாஹ்வுக்காக வெருத்து ஒதுக்க/ஒதுங்க வேண்டிய தருணம் இதுதான் என்பதை உணராவிடில் நமக்குநாமே ஏப்ரல் ஃபூல் முத்திரை குத்திக் கொண்டுள்ளதாகவே மாற்றார் கருதுவர்.

சில விளக்கங்கள்: இப்பதிவிலும் ததஜவுக்கு எதிரான கருத்துக்களைப் பதிவு செய்திருப்பதால் ததஜ அனுதாபிகள் எதிர்முத்திரை குத்தக்கூடும் என்பதால் நான் இயக்கசார்பற்ற சாதாரண இந்திய முஸ்லிம் குடிமகன் மட்டுமே என்பதை நினைவூட்ட விரும்புகிறேன்.

தமுமுக குறித்து விமர்சனங்களே இல்லையா? என்ற சந்தேகமும் எழும். தமுமுக சமுதாயப் பணிக்கு என்றும் மமக அரசியலுக்கு என்றும் தெளிவாக இருப்பதால் அது குறித்து எழுதவில்லை.

மேலும் அவர்கள் தவ்ஹீது ஜமாத்தை அழித்தே தீருவோம் என்று எந்தத்தீர்மானமும் இயற்றவில்லை என்பதோடு, ததஜ - தவ்ஹீது பிரச்சாரம் என்று விலகி அரசியல் பிரச்சாரம் செய்வதால் தமுமுகவைவிட ததவே எனது பார்வையில் சற்று விமர்சனத்துக்குறியதாகப்பட்டது. தமுமுக அரசியல் நிலைப்பாட்டை தெளிவாக அறிவித்தபிறகு ஏதேனும் விமர்சனம் இருந்தால் இன்ஷா அல்லாஹ் அதையும் பதிவு செய்வேன்.

அன்புடன்,
அபூஅஸீலா

நன்றி : அதிரை எக்ஸ்ப்ரஸ்

7 comments:

Anonymous said...

இட ஒதுக்கீடு வழங்கியதற்கு நன்றி தெரிவிக்கும் முகமாக திமுகவை ஆதரிப்பது என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எடுத்திருக்கும் முடிவை தமுமுகவினர் விமர்சித்து மெயில் அனுப்புகின்றனர்.
இட ஒதுக்கீடு வழங்கிய போது அதை ரோஸ்டா முறை பூஸ்டர் முறை என்று பி.ஜே. விமர்சித்தார். இப்போது ஆதரிக்கிறார். இதுதான் குற்றச்சாட்டு.
உண்மையில் இடஒதுக்கீடு அறிவிக்கப்பட்டவுடன் அதில் ரோஸ்டர் முறையினால் முஸ்லிம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் கிடைக்காமல் போன போது அதை எதிர்த்து டி.என்.டி.ஜே. வீரியமாகப் பேராடியது.
அந்த சமயத்தில் இந்த மாமா கட்சியினர் அப்போதைய தமுமுகவினர் என்ன சொன்னார்கள் தெரியுமா? பி.ஜே. அறிவில்லாமல் இதை எதிர்க்கிறார். மூன்றாம் கிளாஸ் படித்ததால் அவருக்கு ரோஸ்டர் முறை பற்றி விளங்கவில்லை என்று விமர்சித்தவர்கள் தான் இந்த அரசியல் விபச்சாரிகள்.
மக்களிடம் வசூலித்த பணத்தில் நடத்தும் தமிழன் நிகழ்ச்சியில் ரோஸ்டர் முறையில் தப்பே இல்லை என்று மணிக்கணக்கில் பேசினார்கள். எல்லாம் எதற்காக? கேவலம் ஒரு வாரியப் பதவிக்காக!
அதன்பிறகு இடஒதுக்கீட்டில் அதிகாரிகள் தவறு செய்து விட்டனர் அது சரி செய்யப்படும் என்று கருணாநிதியே முரசொலியில் அறிவித்த பிறகு செத்துக் கிடந்தார்கள்.
தற்போது இட ஒதுக்கீட்டின் பயனை முஸ்லிம்கள் அனுபவிக்கத் துவங்கிய பிறகு ரோஸ்டர் முறை பற்றிப் பேசுகிறார்கள் என்றால் இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதை விளங்கிக் கொள்ளலாம்.
இந்துத்துவா சக்திகள் அனைவரும் ஒன்றாகி விட்டார்களாம். அதனால் நாமும் இந்த விபச்சாரிகளின் பின்னால் ஒன்று திரள வேண்டுமாம். இல்லாவிட்டால் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டுமாம். இப்படிச் சொல்ல வெட்கமாக இல்லையா?
சமுதாய நலனில் அக்கறை கொண்ட ஒரு இயக்கம் கூறினால் இதை ஏற்றுக் கொள்ளலாம். ஆனால் இவர்கள்?
கேவலம் வாரியப் பதவிக்காக இட ஒதுக்கீட்டில் சமுதாயத்திற்கு நடந்த ஒரு அநியாயத்தை மூடி மறைத்தவர்கள். இவர்கள் எம்.பி.யானால்? அந்தப் பதவியை வைத்துக் கொண்டு சமுதாயத்தையே விற்று விட மாட்டார்களா?
இவ்வளவு ஏன்? நேற்று வரை... என்று கூடச் சொல்ல முடியாது. இன்று வரை... கருணாநிதி போட்ட வாரியப் பதவி என்ற அந்தப் பிச்சையில் வாழ்ந்து கொண்டு இதைச் சொல்ல வெட்கமாக இல்லையா?
மாமா கட்சிக்கு கருணாநிதி இரண்டு சீட் தந்தால் அவர் நல்லவர். வல்லவர். வாழும் வள்ளுவர். இடஒதுக்கீடு தந்தவர். டாக்டர் கலைஞர். மாமா கட்சிக்கு ஒரு சீட் தந்தால் அவர் முஸ்லிம்களின் விரோதியா?
திமுக இரண்டு சீட் தந்தால் ஜெயலலிதா முஸ்லிம் விரோதி. மோடிக்கு விருந்தளித்தவர். வெற்றுப் பேப்பரைத் தந்தவர். கர சேவைக்கு ஆளனுப்பியவர். தேர்தலுக்குப் பின் பாஜகவுடன் கூட்டணி வைத்து விடுவார்.
மாமா கட்சிக்கு ஜெயலலிதா இரண்டு சீட் தந்து விட்டால் அவர் முஸ்லிம்களின் நண்பர். அவர் செய்த பாவங்களை எல்லாம் மன்னிக்கப்பட்டு அன்று பிறந்த குழந்தையைப் போன்று ஆகிவிடுவாராம்.
காசுக்காக உடலை விற்கும் விபச்சாரிக்கும்
சீட்டுக்காகக் கொள்கையை விற்கும் மாமா கட்சிக்கும் என்ன வித்தியாசம் என்று சொல்லுங்கள்.
இவர்கள் தான் சமுதாயக் காவலர்களாம்! இவர்கள் பின்னால் சமுதாயம் போகவில்லை என்றால் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டுமாம்.
தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் அதிமுகவை ஆதரித்தது. இடஒதுக்கீடு ஆணையம் அமைத்ததற்காக!
திமுகவை ஆதரிக்கிறது. இட ஒதுக்கீடு வழங்கியதற்காக!
காங்கிரஸை எதிர்க்கிறது. இட ஒதுக்கீடு வழங்காமல் ஏமாற்றியதற்காக!
இப்படி ஒவ்வொன்றுக்கும் காரண காரியத்துடன் முடிவெடுக்கின்றது தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத்.
ஆனால் இந்த அரசியல் விபச்சாரிகளின் நிலை அப்படியா?
வாரியம் தந்தால் கலைஞர் நல்லவர். சீட் தரவில்லை என்றால் கலைஞா கெட்டவர்.
இப்படி பதவிக்காக சமுதாயத்தை அடகு வைக்கும் இவர்கள் நாடாளுமன்றம் சென்றால் சமுதாயத்திற்காகக் குரல் கொடுப்பார்களா? இதற்கு டி.ஆர்.பாலு தயாநிதி மாறன் போன்றவர்கள் எவ்வளவோ தேவலை. ஏனென்றால் அவர்கள் தங்கள் பதவிக்காக முஸ்லிம் சமுதாயத்தை அடகு வைக்கவில்லை.
வாரியத் தலைவர் பதவியை வைத்துக் கொண்டே கடையநல்லூல் பள்ளிவாசலை இழுத்து மூடியவர்கள். மேலப்பாளையத்தில் வக்பு வாரியம் மூலமாக பள்ளிவாசலை இழுத்து மூட முயற்சித்தவர்கள் நாடாளுமன்றம் சென்றால்? தவ்ஹீதைக் குழி தோண்டிப் புதைப்பதற்கு முயற்சிக்க மாட்டார்களா? அதனால் தான் இந்த அரசியல் விபச்சாரிகள் எங்கு போட்டியிட்டாலும் அவர்களை எதிர்ப்பது என்று தவ்ஹீது ஜமாஅத் முடிவெடுத்துள்ளது.
இந்த விபச்சாரிகளின் கடந்த மூன்றாண்டு கால அரசியல் விபச்சாரத்தைப் பார்த்த மானமுள்ள எந்த முஸ்லிமும் இந்த முடிவுக்குத் தான் வருவான்.
இவர்களின் ஐந்தாண்டு கால தவ்ஹீது விரோதப் போக்கைப் பார்த்த அல்லாஹ்வை அஞ்சும் எந்தவொரு தவ்ஹீதுவாதியும் இந்த முடிவுக்குத் தான் வருவான்.
இவர்களுக்கு வாக்களித்து நாடாளுமன்றம் அனுப்பினால் தான் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டும்.
பதவியை வைத்துக் கொண்டு இவர்கள் செய்யும் ஒவ்வொரு அநியாயத்துக்கும் அடிக்கின்ற கொள்ளைக்கும் இவர்களுக்கு ஓட்டுப் போட்டால் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாக வேண்டும்.

Anonymous said...

சலாம்

எப்படி சகோதர உங்களால் இப்டி பேச முடிகிறது?...

நமது சமுதாயம் மீண்டும் ஒரு சார்ஜ் போன பேட்டரியக்கப்படுகிறது, நமக்கு இருக்கும் உரிமையே இந்த ஒரு ஓட்டுரிமை தான் அதையும் வீனடிக்க சொல்ல எப்படி மனம் வந்தது.

ஒரு முஸ்லிமுக்கு கூட சீட் குடுக்காத திமுகவிற்கு ஆதரவா? (அதற்காக அதிமுகவிருக்கு ஒட்டு போடுங்கள் என்று சொல்லவில்லை)

இன்று எந்த கட்சிக்கும் ஒட்டு போடா மனம் வரவில்லை, ஏன்? யாரும் நமக்கு எதுவும் செய்வதில்லை... ஏன்? நம்மிடையே இருக்கும் இந்த பிரிவினை தான்

ஒரு முஸ்லிம் இயக்கத்திற்கு இன்னொரு முஸ்லிம் இயக்கம் ஒட்டு போடாதீர்கள் என்று சொல்லுகிறது... இது வேடிக்கையான விஷயமல்ல வேதனையான விஷயம்

நமக்கு உதவி செய்ய எவனும் (எந்த கட்சியும்) வரவில்லை.... நம்முடைய சமுதாயமே நம்மை எதிர்க்கிறது... இது மிகவும் வெட்கக்கேடான வேதனையான அதே நேரத்தில் சிந்திக்கக்கூடிய விஷயம்...

ஒவ்வொரு இயக்கமும் இந்த கட்சி முஸ்லிமிற்கு சீட் குட்க்களை அந்த கட்சி சீட் குடுக்கலை என்று சொல்லுகிறது... ஆனால் முஸ்லிம் இயக்கம் நின்றால் தோற்கடிக்காமல் விடமாட்டேன் என்கிறது?... நெஞ்சு கொதிக்கிறது?...


(முஆத்(ரலி) அவர்களுக்கும் அலி(ரலி) அவர்களுக்கும் நடந்த மனக்கசப்பின் போது, இதைப்பயன்படுத்தி இஸ்லாமின் மீது படையெடுக்க, அழித்து விட சிலர் எண்ணினர், படை எடுத்து போர் புரிய நினைத்தனர், அப்போது முஅத்(ரலி) அந்த இஸ்லாமிய விரோதிகளிடம், நீங்கள் எதாவது செய்ய நினைத்தால், உங்களுடைய படையை எதிர்க்க நான் படை அனுப்புவேன் என்று சொன்னார்கள் என்பதாக ஒரு இஸ்லாமிய அறிஞர் சொன்னார்.

முஅத்(ரலி) அவர்களை மிகவும் கடுமையான விமர்சிப்பவர்கள் இதை சற்று நினைவில் நிறுத்த வேண்டும்... )

அவர்கள் பக்கமும் அதைச்சொல்ல நியாயம் இருக்கிறது, உங்களுக்கு அதிகாரம் இருந்த பொது மறைமுகமாக பழிவாங்கிநீர்கள், மீண்டும் பழி வாங்குவீர்களோ என்ற பயம்... அதுவும் நியாயம்தானே, உங்களுடைய பழைய சில செயல்கள் அவர்களின் இந்த கேள்வியை நியயப்படுதுகிறதே.

ஒன்று படுங்கள் உங்கள் பக்கம் நிற்கிறோம் என்று நாம் (சாமானியர்கள்) தள்ளி நின்றால் தானாக ஒன்ருபடாமலா போக போகிறார்கள்?

நாம் ஒன்று பட வேண்டும்... இல்லையேல், எதாவது பேரிழப்பு தான் நம்மை ஒன்று சேர்க்கும்?... பேரிழப்பிற்கு முன்பே ஒன்று சேர்ந்தால், நாம் முன்னேறலாம்....

சிந்தியுங்கள் சகோதரர்களே?... நாம் நமது சமுதாயம் மாற நினைத்தால் நாம் மாற வேண்டும்

Allah says in Quran 13: 11: Verily! Allâh will not change the (good) condition of a people as long as they do not change their state (of goodness) themselves ---- إِنَّ ٱللَّهَ لَا يُغَيِّرُ مَا بِقَوۡمٍ حَتَّىٰ يُغَيِّرُواْ مَا بِأَنفُسِہِمۡ‌ۗ

பரகல்லாஹு பீகும்
பரதேசி

Anonymous said...

நாடாளுமன்றத் தேர்தலில் திமுக-அதிமுக அணிகளுடன் கூட்டணி இல்லை என மனிதநேய மக்கள் கட்சி அறிவிப்பு.

Anonymous said...

தலைமைத் தகுதியையும் இழந்துவிட்ட சகோ.பீஜே தற்போது தனக்கு அரசியல் அறிவும் இல்லை, நிர்வாகத் திறனும் இல்லை என்பதை நிருபித்து விட்டார். ஆனால் இது இன்ஷா அல்லாஹ் மமக விற்கு நன்மையாகவே முடியும். ஒரு வேளை தமுமுக விற்கு மறைமுகமாக நன்மை செய்யவே இப்படி கூறியுள்ளார் போல் தெரிகிறது. அவரின் ஈகோ நேரடியாக அதைச் செய்ய மனம் தரவில்லை.தந்திரமாக இப்ப்டி வொரு முறையைக் கையாண்டுள்ளார். ததஜவினர் எல்லாம் குமுறிக் கொண்டு உள்ளார்கள்.

Anonymous said...

இவ்வளவு நாள் சீட்டுக்காக இரண்டு அணிகளிலும் அலைந்துக் கொண்டு இருந்த மாமா கட்சி இப்போது இரண்டு கட்சிகளிலும் இடம்கிடைக்காமல் தனித்து எதிரணியில் இருக்கும் இவர்கள் தேர்தல் பிரச்சாரம் எப்படி செய்கிறார்கள் எண்பது மிக முக்கியம். சிறிது நாள் வரை இருவருடனும் இனைந்துக் கௌ;ள முனைந்தவர்கள் இப்போது எதிர்பார்களானால், இனைந்து இருந்தால் சீட்டுக்காக சமுதாய நலத்தை புதைத்து இருப்பார்கள் என்று அல்லாஹ் அழகாக வெளிக்காட்டுவிட்டான். அல்ஹம்துல்லில்லாஹ்...

அல்லாஹ் இவர்களின் முனாபிக் தனத்தை ஒவ்வென்றாக வெளிக் கொண்டு வருகிறான் என்ற காரணத்தால் இவர்களின் நிர்வாகிகள் சுய புத்தியின்றி வாய்க்கு வந்த மாதிரி கொக்கரிக்கிறார்கள் பாவம், உண்மை ஒரு நாள் எப்படியும் வெளிப்படும் என்று தெரியாது...

Anonymous said...

அன்புள்ள சகோதரர் பரதேசி அவர்கள் நடுநிலைமை வகித்து பேசுவது போல் தவ்ஹீத் ஜமாத்தை வசைபாட முயற்ச்சி செய்கிறார்கள்!

இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு கோள்வி? இந்த உலக விஷயத்திற்க்கு இவ்வளவு யோசித்து போசும் நீங்கள் இந்த த.மு.மு.க இயக்கம் தவ்ஹீத் ஜமாத்தையையும் ஏகத்துவத்தையும் எதிர்பதில் பி.ஜே.பி. சங்பரிவர் இயக்கங்களை விடவும் அழிக்க நினைப்பது எதற்க்கு? உலக விஷயங்களுக்கும் சிறிய இலாபங்களுக்கும் மறுமை வாழ்க்கையை இழக்க மக்களை துண்ட தயாராகிறார்கள்? ஒரு முஸ்லீமிக்கு மறுமை வாழ்க்கை தான் முக்கியமே தவிர உலக வாழ்க்கை அல்ல?

இஸ்லாமிய கௌ;கையின் படி தவறு செய்தால் தவறு தான்! அந்த தவறை யாராக செய்தாலும்? உங்கள் கருத்து எப்படி இருக்கு என்றால் த.மு.மு.க செய்யும் கௌ;ளை மற்றும் சமுதாய துரேக செயலை கண்டுக்கௌ;ளாதீர்கள்? முஸ்லீம் அல்லாத மற்றவர்கள் செய்யும் செயலை விமர்சிக்க வேண்டும்? இது எந்த விதத்தில் நியாயம்? உண்மை மார்கத்தையும் ஏகத்துவத்தையும் போசும் நாங்கள் முதலில் நம்முடைய சமுதாயத்தில் இருக்கும் தவறுகளை சரி செய்தால் தான் மற்ற சமுதாயத்தவர்களிடமும் அதை எதிர் பார்க்க முடியுமே தவிர நம்முடைய தவறுகளை மறைத்துவிட்டு கண்டு கௌ;ளாமல் இருந்தால் ஒரு போதும் மாற்றத்தை கொண்டு வர முடியாது.


இவ்வளவு நாள் சீட்டுக்காக இரண்டு அணிகளிலும் அலைந்துக் கொண்டு இருந்த மாமா கட்சி இப்போது இரண்டு கட்சிகளிலும் இடம்கிடைக்காமல் தனித்து எதிரணியில் இருக்கும் இவர்கள் தேர்தல் பிரச்சாரம் எப்படி செய்கிறார்கள் எண்பது மிக முக்கியம். சிறிது நாள் வரை இருவருடனும் இனைந்துக் கௌ;ள முனைந்தவர்கள் இப்போது அன்புள்ள சகோதரர் பரதேசி அவர்கள் நடுநிலைமை வகித்து பேசுவது போல் தவ்ஹீத் ஜமாத்தை வசைபாட முயற்ச்சி செய்கிறார்கள்!

இந்த நேரத்தில் உங்களுக்கு ஒரு கோள்வி? இந்த உலக விஷயத்திற்க்கு இவ்வளவு யோசித்து போசும் நீங்கள் இந்த த.மு.மு.க இயக்கம் தவ்ஹீத் ஜமாத்தையையும் ஏகத்துவத்தையும் எதிர்பதில் பி.ஜே.பி. சங்பரிவர் இயக்கங்களை விடவும் அழிக்க நினைப்பது எதற்க்கு? உலக விஷயங்களுக்கும் சிறிய இலாபங்களுக்கும் மறுமை வாழ்க்கையை இழக்க மக்களை துண்ட தயாராகிறார்கள்? ஒரு முஸ்லீமிக்கு மறுமை வாழ்க்கை தான் முக்கியமே தவிர உலக வாழ்க்கை அல்ல?

இஸ்லாமிய கௌ;கையின் படி தவறு செய்தால் தவறு தான்! அந்த தவறை யாராக செய்தாலும்? உங்கள் கருத்து எப்படி இருக்கு என்றால் த.மு.மு.க செய்யும் கௌ;ளை மற்றும் சமுதாய துரேக செயலை கண்டுக்கௌ;ளாதீர்கள்? முஸ்லீம் அல்லாத மற்றவர்கள் செய்யும் செயலை விமர்சிக்க வேண்டும்? இது எந்த விதத்தில் நியாயம்? உண்மை மார்கத்தையும் ஏகத்துவத்தையும் போசும் நாங்கள் முதலில் நம்முடைய சமுதாயத்தில் இருக்கும் தவறுகளை சரி செய்தால் தான் மற்ற சமுதாயத்தவர்களிடமும் அதை எதிர் பார்க்க முடியுமே தவிர நம்முடைய தவறுகளை மறைத்துவிட்டு கண்டு கௌ;ளாமல் இருந்தால் ஒரு போதும் மாற்றத்தை கொண்டு வர முடியாது.

Anonymous said...

No bloody (in the name of) muslim leaders do not have the rights to sell our votes to any party. It is each people or Muslim’s individual rights. Personnel should evaluate candidate and vote as desired.
Through will power, should not mesmerize fellow muslims for own benefit.
If you have guts, prove independently by presenting your views. Muslims and others will support.
Don’t miscalculate as all our followers can be sold. May be some foolish will blindly follow your political game, don’t expect all.
It is shame to surrendering your followers for your crucial mind.
Don’t paint with islam. Pleaseee.

DMK & ADMK declared themselves as muslims are fool. Throwing money to leaders or giving leadership to party member enough to catch their votes. Such situations are created by your childish people.

See PMK, vijayakanth party’s initial stage. They have proved their vote bank for years. Automatically others (other party members) begged to them. OR planned to elect party candidate from their (PMK) caste to divide or win vote.
So far we have not proved our vote bank strength to let other parties think to choose candidate from muslims to gain advantage. Thatwhy still they are planning to divide and rule policy, because our leaders worst weakness.
If you want muslim vote bank or wish to muslim to participate in election, please let any muslim org. assign candidate to each area to show how muslim votes are. So, next election, they will plan to choose muslim candidate to plan. This will help next generation to allow muslim candidate to all parties.
Or
IF all turned all muslim org. leaders to right (united) path, we can succeed.
Insha ALLAH.

Regards,

Mohamed