Showing posts with label துபாய். Show all posts
Showing posts with label துபாய். Show all posts

Wednesday, July 01, 2009

துபாய் ம‌ருத்துவ‌ம‌னையில் சுய‌நினைவிழ‌ந்த‌ நிலையில் இந்திய‌ர்

துபாய் : துபாய் ம‌ருத்துவ‌ம‌னையில் சுய‌நினைவிழ‌ந்த‌ நிலையில் இந்திய‌ர் ஒருவ‌ர் க‌ட‌ந்த‌ ஒரு மாத‌மாக அவ‌ச‌ர‌ சிகிச்சைப் பிரிவில் இருந்து வ‌ருகிறார்.

இந்திய‌ ம‌க்க‌ளுக்கு ப‌ல்வேறு ச‌முதாய‌ப் ப‌ணிக‌ளை ஆற்றிவ‌ரும் ஈமான் அமைப்பின் குழுவின‌ர் அத‌ன் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹா த‌லைமையில் ம‌ருத்துவ‌ம‌னையில் சிகிச்சை பெற்று வ‌ரும் இந்திய‌ர்க‌ளை வார‌ந்தோறும் ச‌ந்தித்து அவ‌ர்க‌ள‌து தேவைக‌ளை நிறைவேற்றி வ‌ருகின்ற‌ன‌ர்.

அவ்வாறு சென்ற‌ பொழுது இந்திய‌ர் ஒருவ‌ர் க‌ட‌ந்த‌ ஒரு மாத‌ கால‌மாக‌ அவ‌ச‌ர சிகிச்சைப் பிரிவில் நினைவிழ‌ந்த‌ நிலையில் சிகிச்சை பெற்று வ‌ரும் த‌க‌வ‌ல் அறிந்து அவ‌ரைப் பார்த்து வ‌ந்த‌ன‌ர்.

இவ‌ர் யார் என்ப‌த‌ற்கான‌ எவ்வித‌ சான்றுக‌ளும் அவ‌ரிட‌ம் இல்லாத‌ நிலையில் ம‌ருத்துவ‌ம‌னியில் சேர்க்க‌ப்ப‌ட்டுள்ளார். இவ‌ரைப் பார்க்கையில் த‌மிழ‌க‌ம், கேர‌ளா, ஆந்திரா உள்ளிட்ட‌ மாநில‌த்தைச் சேர்ந்த‌வ‌ராக‌ இருக்க‌லாம் என‌ க‌ருத்த‌ப்ப‌டுகிற‌து.

த‌மிழ் பேசும் போது ம‌ட்டும் இவ‌ர‌து பார்வை மேலும் கீழும் வ‌ருகிறது. என‌வே இவ‌ர் குறித்து த‌க‌வ‌ல் தெரிந்தால் ஈமான் ம‌க்க‌ள் தொட‌ர்பு செய‌லாள‌ர் ஏ. முஹ‌ம்ம‌து தாஹாவை 050 467 4399 / 050 51 96 433 எனும் அலைபேசியில் அல்ல‌து muduvaihidayath@gmail.com என்ற‌ மின்ன‌ஞ்ச‌லிலோ தொட‌ர்பு கொள்ள‌ கேட்டுக் கொள்ள‌ப்ப‌டுகிறார்க‌ள்.

அவ்வாறு த‌க‌வ‌ல் கிடைக்கும் ப‌ட்ச‌த்தில் இவ‌ர் ப‌த்திர‌மாக‌ அவ‌ர‌து குடும்ப‌த்தாரிட‌ம் சேர்ப்ப‌த‌ற்கான‌ ஏற்பாடுக‌ள் செய்ய‌ப்ப‌டும்.

Thanks:
Muduvai Hidayath

Wednesday, July 23, 2008

IDMK புகைப்பட காட்சிகள் - (சி.டி வெளியீட்டு நிகழ்ச்சி துபாய்)

கடந்த 20.06.2008 அன்று துபாய் மன்டல இந்திய தேசிய மக்கள் கட்சியின் சார்பில் நடத்தப்பட்ட கட்சி உள்ளரங்க பொதுக்கூட்டம் மற்றும் இந்திய தேசிய மக்கள் கட்சியின் பாடல்கள் அடங்கிய குறுந்தகடு வெளியீட்டு விழா நடந்தது. இந்நிகழச்சியில் துபாய் மாகானத்தில் பல்வேறு பெரிய நிறுவனங்களில் பணிபுறியும் முக்கிய புள்ளிகளும், பொறியாளர்களும், அறிவு ஜீவீகளும் கலந்து கொண்டனர். நிகழச்சியின் புகைப்படத் தொகுப்பை கீழே சொடுக்கி காணவும்.






Friday, April 25, 2008

துபாயில் சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி








துபாயில் சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி

துபாய் தேரா ஸ்டார் மெட்ரோ ஹோட்டலில் சென்னை வண்டலூர் கிரஸெண்ட் பள்ளி முன்னாள் மாணவர் சந்திப்பு நிகழ்ச்சி 24 ஏப்ரல் 2008 வியாழக்கிழமை மாலை நடைபெற்றது.

முன்னாள் மாணவரின் இறைவசனத்துடன் நிகழ்ச்சி துவங்கியது. துணை முதல்வர் ஹுமாயுன் கபீர் வரவேற்புரை நிகழ்த்தினார். வாழ்த்துரை வழங்கிய 'சிராஜுல் உம்மத்' மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்கள் தனது உரையில் கல்வியின் முக்கியத்துவம் குறித்து வலியுறுத்தினார். நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே கல்வித்தந்தை அல்ஹாஜ் பி.எஸ். அப்துல் ரஹ்மான் அவர்களது சீரிய சிந்தனையில் உதித்த பிறைப்பள்ளி இன்று தரமான கல்வியினை வழங்கி வருவது குறித்து பெருமிதம் கொண்டார். மார்க்கக் கல்வி மற்றும் உலகக் கல்வி உள்ளிட்டவற்றை ஒரே இடத்தில் கிடைப்பதற்கு ஏற்பாடு செய்து வரும் சீதக்காதி டிரஸ்ட்டுக்கு பாராட்டு தெரிவித்தார். இத்தகைய நல்வாய்ப்பை அனைவரும் பயன்படுத்திக் கொள்ள கேட்டுக் கொண்டார்.

பள்ளி முதல்வர் முனைவர் தாவூத் ஷா பள்ளியின் சிறப்பியல்புகளை எடுத்தியம்பினார். சர்வதேசப் பள்ளிக்கான பிரிட்டிஷ் விருது பெற்றதையும் விவரித்தார். மாணவர்கள் தங்களது திறன்களை வளர்த்துக்கொள்ளும் வகையில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளதையும் தெரிவித்தார். விரைவில் சர்வதேசப் பள்ளி ஒன்று துவங்கப்பட இருப்பதாகவும், கூடுவாஞ்சேரியில் அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார். ஐக்கிய அரபு அமீரகம் பள்ளியின் முன்னாள் மாணவர்கள் அதிக அளவில் இருக்கும் ஒரு நாடு. முன்னாள் மாணவர்கள் பள்ளியின் வளர்ச்சிக்கு பெரிதும் ஒத்துழைப்பு நல்கி வருவது பெரும் மகிழ்ச்சி தெரிவித்தார்.

தொடர்ந்து துணை முதல்வர் ஹுமாயுன் கபீர் பள்ளி குறித்த விளக்கப்படங்களையும், பள்ளியில் செய்யப்பட்டு வரும் மாற்றங்களயும், கல்விக்கட்டணம், விடுதி வசதி உள்ளிட்டவற்றை கணினி வழியே விவரித்தார். கீழக்கரை புகாரி ஆலிம் அரபிக்கல்லூரி முதல்வர் செய்யத் மஸ்ஊத் ஜமாலி அரபிக்கலூரியில் வழங்கப்படும் பாடத்திட்டங்கள் குறித்து விவரித்தார்.

கூட்டத்தில் ஈடிஏ அஸ்கான் நிறுவன இயக்குநர்கள் அல்ஹாஜ் ஆரிஃப் ரஹ்மான், தைக்கா நாஸர் சுஐப் ஆலிம், ஹமீது கான், எஸ்.எம். புகாரி, ஹபிபுல்லாஹ், ஈமான் அமைப்பின் துணைத்தலைவர் எம். அப்துல் ரஹ்மான், பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ. லியாக்கத் அலி, கல்விக்குழு செயலாளர்கள் ஏ. முஹம்மது தாஹா, யு. முஹம்மது ஹிதாயத்துல்லாஹ், ஊடகத்துறை பொறுப்பாளர் முதுவை ஹிதாயத், ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் ஏ. ஹமீது யாசின், ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் நிர்வாகிகள் அஹ்மத் இம்தாதுல்லாஹ், இஸ்மத்துல்லஹ், சேக் முஹம்மது, ஹபிப் திவான்,ஜமால் முஹம்மது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


மேலும் புகைப்படங்களுக்கு

www.muduvaihidayath.blogspot.com
www.muduvaibasheersaitalim.blogspot.com

Tuesday, April 22, 2008

துபாயில் முதுகுளத்தூர் பெரிய பள்ளி தலைமை இமாமுக்கு சிராஜுல் உம்மத் விருது




துபாயில் முதுகுளத்தூர் பெரிய பள்ளி தலைமை இமாமுக்கு சிராஜுல் உம்மத் விருது

துபாயில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் மன்பயீக்கு 17.04.2008 வியாழன் மாலை அஸ்கான் டி பிளாக்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு அமீரக ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் சார்பில் ‘சிராஜுல் உம்மத்' எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

விழாவிற்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவத் தலைவர் அல்ஹாஜ் ஹெச். ஹஸன் அஹ்மத் தலைமை தாங்கினார். இறைவசனங்களை மௌலவி என். சாதிக்குல் அமீன் மன்பயீ ஓதினார்.


ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் பொதுச்செயலாளர் முதுவை கே. எம். ஹிதாயத்துல்லாஹ் வரவேற்புரை நிகழ்த்தினார். மௌலவி பஷீர் சேட் குறித்த அறிமுகவுரையினை மௌலவி ஹாஜி. ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி நிகழ்த்தினார்.


சிறப்பு விருந்தினர் மௌலவி ஏ. முஹம்மது இஸ்மாயில் ஹஸனி சமுதாயப் பணியின் அவசியத்தை எடுத்தியம்பினார். தலைவர் என்.எஸ்.ஏ. நிஜாமுதீன், ஆடிட்டர் ஹெச். அமீர் சுல்தான், அபுதாபி ஜமாஅத் பொறுப்பாளர் எஸ். அமீனுதீன், ஈமான் அமைப்பின் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் கீழக்கரை ஏ. ஹமீது யாசின், ஒருங்கிணைப்பாளர் ஹெச். இப்னு சிக்கந்தர், எம். காஜா நஜுமுதீன், ஏ.ஜே.கல்வி அறக்கட்டளை இயக்குநர் டாக்டர் ஏ. நஸீருல் அமீன், பார்த்திபனூர் ஹமீது, மௌலவி அலி பாதுஷா மன்பயீ, இளங்கோவன், உள்ளிட்டோர் வாழ்த்துரை வழங்கினர்.

துணைத்தலைவர் எஸ். சம்சுதீன் முதுவைக் கவிஞர் எழுதி இயற்றிய வாழ்த்துக்கவிதையினை வாசித்தார்.


'சிராஜுல் உம்மத்' விருதை முதுகுளத்தூரில் மூன்றாம் தலைமுறை இமாமாக மார்க்கப் பணியாற்றிவரும் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி அல்ஹாஜ் எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிமுக்கு ஐக்கிய முதுகுளத்தூர் முஸ்லிம் ஜமாஅத் கௌரவத் தலைவர் ஹெச். ஹஸன் அஹ்மத் மற்றும் தலைவர் என்.எஸ்.ஏ.நிஜாமுதீன் ஆகியோர் வழங்கினர்.

மௌலவி பஷீர் சேட் ஆலிம் ஏற்புரை நிகழ்த்தினார். அவர் தனது உணர்ச்சிப்பூர்வ உரையில் தனக்கு இத்தகைய சிறப்பைப் பெற காரணாமான வல்ல இறைவனுக்கு நன்றி தெரிவித்தார். அமீரக ஜமாஅத்தார்களின் சமுதாயப் பணிகள் மேலும் சிறக்க வாழ்த்தினார்.


பொருளாளர் ஏ. அஹ்மத் இம்தாதுல்லாஹ் நன்றி கூறினார். துஆவுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.


செய்தி : மௌலவி ஏ. சீனி நைனார் முஹம்மது தாவூதி

துபாயில் திருக்குர்ஆன் குறித்த கலந்துரையாடல்

துபாயில் திருக்குர்ஆன் குறித்த கலந்துரையாடல்

துபாயில் திருக்குர்ஆன் குறித்த கலந்துரையாடல் வியாழக்கிழமை இஷா தொழுகைக்குப் பின்னர் தேரா ஃபாத்திமா மஸ்ஜிதில் நடைபெற்று வருகிறது.

தமிழில் நடைபெற்று இந்நிகழ்ச்சியினை துபாய் தமிழ் இஸ்லாமிய நூலகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்நிகழ்ச்சி குறித்து குறித்த மேலதிக விபரம் பெற 04 2716049 / 050 703 1059

Monday, April 21, 2008

துபாயில் தலைமைப் பண்பை வளர்க்க ஒரு பயிற்சி முகாம்

துபாயில் தலைமைப் பண்பை வளர்க்க ஒரு பயிற்சி முகாம்

Center for Information & Guidance India (CIGI) is a non-profit, non-governmental organisation working for the educational and social upliftment of the community. We conduct various programmes for chidlren and adult which are aimed at comprehensive development of our community and the socity in general. One such programme which is being organised by CIGI is "Career Clinic" and "Differential Apptitute Test" (DAT) for Children. We receive our mentors and trainers from CIGI Headquarters in India to be part of these programmes.

Dr. P.T.Abdul Aziz a well known Orator and Trainer who is 'the person' behind the successful grassroot level programmes like 'Vijayabheri' which has changed the face of Malapuram district in the educational front, is currently in Dubai.

He has agreed to do a special session for the CLP in the upcomming CLP session. Due to his presence we are delighted to annonce this session as a SPECIAL CLP without any of our regular modules. It will be worth listening to Dr. Aziz who is famous for his ' The Common Man' approach through his wit and vigour.

Date: Wednesday, 23rd April 2008
Venue: Flora Hotel Apartments, Nasser Square, Deira
Time: 8:00PM

Please come early and be part of this wonderful session which will impart knowledge and training of how to make our community better and brighter!


CIGI CLP - Creating Responsible Leaders for the Community...

For CLP Implementation Team
Ashraf Thayyil
Tel: +9714 282 2890
Fax: +9714 282 5535
Mobile: +97150 453 4427

ashraf.thayyil@gmail.com

Sunday, April 20, 2008

துபாயில் சென்னை கிரஸண்ட் பள்ளி நிகழ்ச்சி

துபாயில் சென்னை கிரஸண்ட் பள்ளி நிகழ்ச்சி

துபாயில் சென்னை கிரஸ்ண்ட் பள்ளி நிர்வாகத்தினர் 24 ஏப்ரல் 2008 வியாழக்கிழமை மாலை 7.00 மணிக்கு அஸ்கான் டி பிளாக்கில் நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் பள்ளி முதல்வர் தாவூத்ஷா உள்ளிட்ட பலர் பங்கேற்க உள்ளனர். சென்னை கிரஸண்ட் பள்ளியில் தங்களது பிள்ளைகளை சேர்க்க விரும்புவோர் இந்நிகழ்ச்சியில் பங்கேற்கலாம்.

மேலும் விபரம் பெற 050 644 04 15 / 050 51 96 433

துபாயில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

துபாயில் கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி

MR. M.S. JALEEL,
Chief Career Consultant &
Resident Counselor,
CIGI –HQ,
Career Presenter in TV Channels and Radios
[Asianet [edutime], Kairali [career pulse],
Asianet Radio- Dubai, AIR-Kannur and Kozhikode]
Will be available on-air at
Asianet Radio
to answer your queries


On 24th April 2008 (Tuesday at 11.15 am -UAE time)
--------------------------------------
Mr. Jaleel will also available
at
Career Expo 2008
At Sharjah Indian Association (on 25th April 2008)
&
Karama Centre Dubai (on 26th April 2008)
&
DAT Assessment Test and Counseling (on May 02nd & 03rd 2008)
At Sharjah Indian School
Mr. Jaleel is………………..
(MSc Applied Psychology, MA History, B.Ed, PG in Journalism)
(Teacher –Trainer- Counselor-Media presenter)
Trainer for Higher Secondary Teachers under department of Higher Secondary Education, Govt. of Kerala;
Career Presenter in TV Channels and Radio [Asianet [edutime], Kairali [career pulse], Asianet Radio- Dubai, AIR-Kannur and Kozhikode]
Author - Career Guidance Training Manual for Rajiv Gandhi National Institute for Youth Development [RGNIYD], Chennai. [a UN funded Project to train teachers in Tamilnadu]
Author - Career Handbook for the Department of Higher Secondary Education, Govt. of Kerala.
Trainer for Career Guidance for VHSC teachers under VHS Department, Govt of Kerala.
Trainer for Career Guidance for college teachers under NSS Calicut University.
Script Designer and Career Program head for PRESS4 [CD Magazine]
Trainer and Designer of Career Module for RGNIYD, Chennai.
Trained in TA, MBTI and TCI. Teacher, Editor & Writer
Regular contributor to Career Columns.

துபாயில் தொழிலாளர் பிரச்சினை தீர்க்கும் நடுவம் துவக்கம்


அல்லாஹ்வின் திருப்பெயரால்..

துபாயில் அடிப்படை தொழிலாளர்களின் பிரச்சனை தீர்க்கும் அரசுத்துறை தொண்டு நிறுவனம் துவக்கம்

அமீரக நாடுகளில் ஒன்றான துபாயில், பல நாடுகளை சார்ந்த பல அடிப்படை தொழிலாளர்கள் சோனாப்பூர் என்ற பகுதியிலும் மற்றும் அல்கூஸ், ஜெபல் அலி போன்ற பகுதியிலும் வசிக்கிறார்கள். இவர்கள் அதிகப்படியாக கட்டுப்பானப்பணி புரிவதிலும், சாலை ஓரப்பணி புரிவதிலும், மற்றும் பல கடினமான பணிகளிலும் ஈடுப்படுகிறார்கள். இவர்களை பணிக்கு எடுக்கும் நிறுவனங்கள் அனைத்தும் ஒப்பந்த அடிப்படையில் உள்ள நிறுவனங்கள் தான் (Contracting Companies). இந்த நிறுவனங்கள் ஒப்பந்தம் செய்யும் போது குறைந்த சம்பளத்தினை தொழிலாளர்களுக்கு தருகிறார்கள். சம்பளம் அதிகம் கிடைக்க வேண்டும் என்பதற்காக தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரங்கள் அல்லது 14 மணி நேரங்கள் பணிபுரிகிறார்கள் இருந்தாலும் அவர்களுக்கு கிடைக்கும் ஊதியமோ மிக மிக குறைவாக இருக்கிறது. வெள்ளிக்கிழமை மற்றும் விடுமுறைக்காலங்களிலும் வேலை செய்தாலும் ஒரு சில நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு குறைந்த கூலியினை தருகிறது. அத்துடன் தொழிலாளர்கள் தங்கக்கூடிய இடங்களும் அடிப்படை வசதி இல்லாத அளவிற்கும் மாறிக்கொண்டு வருகிறது. ஒரு சில நிறுவனங்கள் செய்யும் இத்தகைய தவறுகளால் பல பிரச்சனைகளை இங்குள்ள தொழிலாளர்கள் தினம் தினம் சந்திக்க வேண்டி இருக்கிறது. சென்ற சில மாதங்களாக துபாய், அஜ்மான், ஷார்ஜா போன்ற பகுதியில் உள்ள தொழிலாளர்கள் அடிப்படை வசதி இல்லை, ஆறு மாத சம்பள பாக்கி, அறைகளில் மின்சாரம் இல்லை, தங்கி இருக்கும் பகுதிகளில் சரியான தண்ணீர் வசதி இல்லை மற்றும் இன்னும் பல காரணங்களை காட்டி சாலைகளில் இறங்கி போராட்டங்களை செய்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பல தொழிலாளர்களை அவர்களின் தாய் நாட்டிற்கு திரும்ப அனுப்பி விட்டது துபாய் அரசாங்கம்.

அடிப்படை தொழிலாளர்கள் இல்லை என்றால், துபாயில் கட்டுமான பணிகள் அனைத்தும் முடங்கி விடும் என்பதினை கருத்தில் கொண்ட துபாய் அரசாங்கமானது, தொழிலாளர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்க வேண்டி சோனாப்பூர் பேருந்து நிலைய பகுதியில் நிரந்தரமாக தொழிலாளர்கள் குறை தீர்க்கும் தொண்டு நிறுவனம் ஒன்றினை (Permanent Committee for Labour Affairs (PCLA) 18.4.08 வெள்ளிக்கிழமை மாலை அன்று பல தொழிலாளர்கள் முன்னிலையில் துவங்கியது. இந்நிகழ;ச்சியில் கலந்துக்கொண்டு உரையாற்றிய மேஜர் ஜெனரல் முஹம்மது அஹமது அல் மாரி அவர்கள் (Major - General Mohammed Ahmed Al Marri - Director of the Dubai Naturalisation and Residency Department and Chairman of PCLA) அவர்கள் கூறுகையில், தொழிலாளர்களுக்கு எந்த ஒரு பிரச்சனை எற்பட்டாலும் எங்களிடம் முறையிடலாம், வேலை நேரம் அதிகம் நிறுவனங்கள் தருகிறது, சம்பள பாக்கி, அடிப்படை வசதி குறைவு இது போல் என்ன பிரச்சனை இருந்தாலும் நாங்கள் முக்கியத்துவம் கொடுத்து அந்தந்த துறைச்சார்ந்தவர்களிடம் (Relevant Department) கூறுவோம். ஒரு மணி நேரத்துக்குள் தொழிலாளர்களின் பிரச்சனை சரிப்படுத்த எங்களின் இந்த நிறுவனமானது முயற்சியினை மேற்கொள்ளும். தொழிலாளர்களின் வசதியினை கருத்தில் கொண்டு மாலை நேரத்திலும் எங்கள் தொண்டு நிறுவனம் பணி செய்யும். அரசுத்துறை சார்ந்த நிறுவனங்கள் எப்படி செயல்படுகிறது, எப்படி அந்த நிறுவன அதிகாரிகளை சந்தித்து குறை சொல்வது போன்றவைகளை பற்றியும், கல்வியின் அவசியம் பற்றிய விழிப்புணர்வை அடிப்படை தொழிலாளர்களுக்கு கற்றும் தரும் பணியிலும் இந்த நிறுவனமானது செயல்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார். தற்போது சோனாப்பூரில் துவங்கி இருக்கிறோம் அதன் பின் ஜெபல் அலி, அல் கூஸ் போன்ற பகுதியிலும் மிக விரைவில் துவங்க உள்ளோம் என்றும் சொன்னார்.

இந்த துவக்க நிகழ்ச்சியில் இலங்கை, எகிப்து, பாகிஸ்தான், பங்களாதேஷ் போன்ற நாடுகளை சார்ந்த அரசுத்துறை (Government Diplomats) அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். பாகிஸ்தான் தூதரகத்தினை சார்ந்த முஹம்மது வாஷின் (Mohammed Waseen – Welfare Consul at the Pakistani consulate in Dubai) அவர்கள் குறிப்பிடுகையில், இந்த நிறுவனமானது தொழிலாளர்களின் அடிப்படை வசதிக்காகவும், மற்றும் மகிழ்வுடன் தொழிலாளர்கள் துபாயில் இருப்பதற்கான அனைத்து வசதி வாய்ப்பினை தரும் என்றும் கூறினார்.

நன்றி : கலீஜ் டைம்ஸ் 19.4.2008 முதல் பக்க செய்தி

தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

Saturday, April 19, 2008

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி

துபாய் ஈமான் அமைப்பு நடத்தும் மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி


துபாய் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் (ஈமான்) அமைப்பு மருத்துவ ஆலோசனை நிகழ்ச்சி ஒன்றினை எதிர்வரும் 25 ஏப்ரல் 2008 வெள்ளிக்கிழமை மாலை மஹ்ரிஃப் தொழுகைக்குப்பின்னர் அஸ்கான் டி பிளாக்கில் நடத்த இருக்கிறது.

இந்நிகழ்ச்சியில் காது, மூக்கு, தொண்டை நிபுணர்
காயல் மருத்துவர் P.M. செய்யது அஹ்மது MBBS, DLO, FRCS (ENT)
அவர்கள் உரையாற்ற இருக்கிறார்கள். இதனைத் தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது.

மேலும் 'சிராஜுல் உம்மத்' முதுவை பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹ்மத் பஷீர் சேட் ஆலிம் அவர்களும் 'இஸ்லாத்தில் மருத்துவம்' எனும் தலைப்பிலும் உரை நிகழ்த்த உள்ளனர்.

எனவே, பொதுமக்கள் இவ்வரிய வாய்ப்பை தவறவிடாமல் பயன்படுத்துமாறு மிக்க அன்புடன் வேண்டுகிறோம்.

விபரங்களுக்கு:

ஹமீது யாசீன் - 050 2533712
யஹ்யா முஹிய்யத்தீன் - 050 5853888

நிகழ்ச்சியின் நிறைவில் இரவு உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

துபையில் இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP) நடத்திய இஸ்திமா நிகழ்ச்சி

துபையில் இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP) நடத்திய இஸ்திமா நிகழ்ச்சி


துபை மண்டல இஸ்லாமிய பிரச்சார பேரவை (IPP) சோனாப்பூர் கிளையின் சார்பாக, சோனாப்பூர் பலிதியா கேம்ப் பள்ளிவாசலில் 18.4.08 வெள்ளிக்கிழமையன்று அஸர் முதல் இஷா வரை இஸ்திமா நடைபெற்றது. துபை மண்டல முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் செயலாளர் சகோதரர்.கொடுங்கையூர். மொய்தீன் அவர்கள் தலைமையெற்க, சகோதரர். மேலப்பாளையம். மெளலானா அவர்கள் கிராஅத் ஓதினார். இஸ்திமா நிகழ்ச்சியினை சகோதரர். பரமக்குடி. எ.ஏஸ். இப்ராஹீம் அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். முதல் அமர்வில் சகோதரர். கொடுங்கையூர். அமீர் சுல்தான் அவர்கள் "திருக்குர்ஆன் தொகுக்கப்பட்ட வரலாறு" என்ற தலைப்பிலும், இரண்டாவது அமர்வில் சகோதரர் நூருல் அமீன் அவர்கள் "ஷிர்க்கை ஒழிப்போம்" என்ற தலைப்பிலும் உரை நிகழ்த்தினார்கள்.


இந்நிகழ்ச்சியில் துபை முஸ்லிம் முன்னேற்றக்கழகம் சார்பாக 22.2.2008 அன்று நடைப்பெற்ற இரத்த தான முகாமில் கலந்துக்கொண்டு இரத்த கொடுத்த சகோதரர்களுக்கு, இரத்தம் தானம் செய்ததற்கான அடையாள அட்டையானது சகோதரர். சுலைமான் ஹாஜியார் அவர்களிடம் கொடுக்கப்பட்டு இருந்தது. அதனை சோனாப்பூர் கிளை முஸ்லிம் முன்னேற்றக்கழக நிர்வாகி சகோதரர். திருச்சி. நியாஸ் அவர்கள் பெற்றுக்கொண்டார்.


சகோதரர். நிஜாமுதீன் அவர்கள் நன்றியுரை நிகழ்த்த, இறுதியாக துஆ ஓதப்பட்டு நிகழ்ச்சியானது அல்லாஹ்வின் உதவியால் மிகச்சிறப்பாக முடிவடைந்தது. இந்நிகழ்ச்சியில் துபை மண்டல முஸ்லிம் முன்னேற்றக்கழக பொறுப்பாளர்களும் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர். சோனாப்பூர் பகுதியில் பல நாட்டை சார்ந்த தொழிலாளர்கள் வசிப்பதால், மொழி தெரியாவிட்டாலும் தமிழ் இஸ்லாமிய நிகழ்ச்சியினை ஆர்வமுடன் கேட்க வேண்டி பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் நாட்டை சார்ந்த தொழிலாளர்களும் கலந்துக்கொண்டனர். மற்றும் தொழிலாளார்கள் அதிகம் வசிக்கும் அல்கூஸ் போன்ற பகுதியிலிருந்தும் ஏராளமான சகோதர உள்ளங்கள் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

தகவல் : முத்துப்பேட்டை அபூ ஆஃப்ரின்

Friday, April 11, 2008

துபாயில் பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு

துபாயில் பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு

துபாயில் சுன்னத் வல் ஜமாஅத் ஐக்கியப் பேரவையின் சார்பில் வாரந்தோறும் மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் முதல் மஃரிப் வரை பெண்களுக்கான மார்க்கச் சொற்பொழிவு பெண் ஆலிமா ஹிஸானா ஸமீரா கைறியா அஜீஸ் ரஹ்மான் அவர்களால் நடத்தப்பட்டு வருகிறது.

தாய்மார்களும், சகோதரிகளும் கலந்தி சிறப்பிக்க கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

துபாயில் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை ஏற்பாடு செய்யும் இஸ்திமா

துபாயில் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை ஏற்பாடு செய்யும் இஸ்திமா

துபாயில் இஸ்லாமிய பிரச்சாரப் பேரவை ஏற்பாடு செய்யும் இஸ்திமா சோனாப்பூர் பலுதியா கேம்ப் பள்ளிவாசலில் 18.04.2008 வெள்ளிக்கிழமை மாலை அஸர் தொழுகைக்குப் பின்னர் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்வில் தாயகத்தில் இருந்து வந்துள்ள JAQH ன் மௌலவி நூருல் அமீன் உமரி, எஸ்.எம்.புகாரி, அமீர் சுல்தான் உள்ளிட்டோர் உரை நிகழ்த்த உள்ளனர்.

தொடர்புக்கு - 050 - 7481187 055 - 9292424 055 - 8489410

துபாயில் காயல் நல மன்ற கூட்டம்

ஏப்.18இல் அமீரக கா.ந.மன்ற பொதுக்குழு! செயற்குழுவில் அறிவிப்பு!!


ஐக்கிய அரபு அமீரகங்களில் செயல்பட்டுவரும் காயல் நல மன்றத்தின் மாதாந்திர செயற்குழுக் கூட்டம், இம்முறை அமீரகத் தலைநகர் அபுதாபியில், மன்றத்தின் உறுப்பினர் ஹாஜி மக்ப+ல் அஹ்மது பி.இ. இல்லத்தில், 04-04-08 வெள்ளிக்கிழமை மாலை 05:30 மணியளவில் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு, மன்றத்தின் மூத்த உறுப்பினரும், துணைத் தலைவருமான ஹாஜி இம்தியாஸ் அஹ்மது தலைமை தாங்கினார். நிகழ்ச்சியின் துவக்கமாக மவ்லவீ ஹாபிழ் எம்.ஏ.ஹபீபுர் ரஹ்மான் கிராஅத் ஓதினார்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-

தீர்மானம் 1:
எதிர்வரும் 18-04-08 வெள்ளிக்கிழமை, மன்றத்தின் பொதுக்குழுக் கூட்டத்தை அல்குசைஸ் தவார் பூங்காவில் நடத்துவது. இதற்கான செலவினங்களில் பெரும்பகுதியை செயற்குழு உறுப்பினர்களே மனமுவந்து ஏற்றுக் கொள்வது.

மேலும் விரிவான செய்திக்கு

http://www.kayalpatnam.com/shownews.asp?id=1699

Monday, April 07, 2008

துபாயில் மார்க்கச் சொற்பொழிவு

துபாயில் மார்க்கச் சொற்பொழிவு


துபாய் அஸ்கான் சமுதாயக் கூடத்தில் ( டி பிளாக் ) சுன்னத் வல் ஜமாஅத் பேரவை சார்பில் வாரந்தோறும் புதன்கிழமை இஷா தொழுகைக்குப் பின்னர் மார்க்க அறிஞர்களது சொற்பொழிவுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வரும் புதன்கிழமை 09-04-2008 இஷா தொழுகைக்குப் பின்னர் இஸ்லாத்தில் இறைநேசச் செல்வர்கள் எனும் தலைப்பில் முதுகுளத்தூர் பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் மௌலவி எஸ். அஹமது பஷீர் சேட் ஆலிம் நிகழ்த்த உள்ளார்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மஃரூப் செய்து வருகிறார். மேலதிக விபரங்களுக்கு 050 51 96 433.

பெண்களுக்கு தனியிட வசதி செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சிக்குப் பின்னர் இரவு உணவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Thursday, April 03, 2008

துபாய் கல்விக் கண்காட்சியில் தமிழக கல்வி நிறுவனங்கள் பங்கேற்பு

துபாய் கல்விக் கண்காட்சியில் தமிழக கல்வி நிறுவனங்கள் பங்கேற்பு

துபாய் கல்விக்கண்காட்சி ஏப்ரல் 2 முதல் 5 வரை துபாய் உலக வர்த்தக மையம்
அருகேயுள்ள கண்காட்சி அரங்கில் நடைபெற்று வருகிறது. இக்கண்காட்சியில்
தமிழகத்தைச் சேர்ந்த அண்ணா பல்கலைக்கழகம், சென்னை மற்றும் திருச்சி,
ஸ்ரீஇராமச்சந்திரா மருத்துவக் கல்லூரி, சென்னை ஏ.ஜே. கல்வி ஆலோசனை மையம்,
சென்னை ராஜலெட்சுமி பொறியியல் கல்லூரி உள்ளிட்ட கல்வி மையங்கள் உட்பட
இந்தியா, வளைகுடா, அமெரிக்கா, பிரிட்டன், பாகிஸ்தான், மலேசியா உள்ளிட்ட
பல்வேறு நாடுகளைச் சேர்ந்த முன்னணி கல்வி நிறுவனங்கள் பங்கேற்றுள்ளன.

சென்னை ஏ.ஜே. கல்வி ஆலோசனை மையம் குறைந்த செலவில் மருத்துவப் படிப்புகளை
ரஷ்ய பல்கலைக்கழகம் மூலம் வழங்கி வருகிறது. ரஷ்ய் பல்கலைக்கழகம் குறித்த
விபரங்களை தொலைபேசி வாயிலாகவும் தெரிந்து கொள்ளலாம். தொடர்பு எண் சுபாஷ்
: 050 354 1775

இக்கல்வி கண்காட்சியில் வேலைவாய்ப்பு வழங்கும் பல்வேறு வங்கிகள், வளைகுடா
வேலைவாய்ப்பு ஆலோசனை நிறுவனங்கள், அரசுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்டவையும்
பங்கேற்றுள்ளன. வேலை தேடும் வளைகுடா பயணம் மேற்கொண்டுள்ள தமிழக
இளைஞர்களுக்கு மிகுந்த பயனுடையதாய் இருக்கும் என கண்காட்சிக்கு
வருகைபுரிந்துள்ள வேலை தேடும் தமிழக இளைஞர் நபீஸ் அஹமது தெரிவித்தார்.

இக்கண்காட்சியில் இந்திய மற்றும் வளைகுடா இளைஞர்கள் ஆர்வத்துடன் கலந்து
கொண்டு உயர்கல்வி குறித்த விபரங்களைச் சேகரித்து செல்வதாக சென்னை ஏ.ஜே.
கல்வி ஆலோசனை மைய பிரதிநிதி சுபாஷ் தெரிவித்தார்.

Sunday, March 30, 2008

துபாய் ஈமான் அமைப்பு நிகழ்ச்சியில் மௌலவி ஓ.எம்.அப்துல் காதிர் பாகவி ஹஜ்ரத்


துபாய் ஈமான் அமைப்பு ஏற்பாடு செய்யும் சிறப்பு மார்க்கச் சொற்பொழிவு

துபாய் ஈமான் அமைப்பு சிறப்பு மார்க்கச் சொற்பொழிவினை 31.03.2008 திங்கட்கிழமை மாலை இஷா தொழுகைக்குப் பின்னர் கோட்டைப் பள்ளியில் ( சின்ன ஜர்வூனி மஸ்ஜித் ) நடத்த இருக்கிறது.


சிறப்புச் சொற்பொழிவாளர்

மௌலவி அல்ஹாஜ் ஓ.எம். அப்துல் காதிர் பாகவி


தலைவர், தமிழ்நாடு மாநில ஜமாஅத்துல் உலமா சபை
தலைவர், மஜ்லிஸ் மதாரிஸுல் அரபிய்யா எனும் தமிழக அரபிக் கல்லூரிகளின் கூட்டமைப்பு
முதல்வர், வீரசோழன் ஹைராத்துல் இஸ்லாம் அரபிக் கல்லூரி
முன்னாள் முதல்வர், நீடூர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரி
முன்னாள் இமாம், சென்னை மந்தைவெளி பெரிய பள்ளிவாசல்

நிகழ்ச்சி ஏற்பாடு

விழாக் குழுவினர்
இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் )
துபாய்

தொடர்புக்கு : 050 2533212 / 050 58 53 888


http://niduronline.com/?p=501
http://satrumun.com/localnews/
www.muduvaihidayath.blogspot.com
www.indianmuslimassociation.blogspot.com

Friday, March 28, 2008

பஹ்ரைனில் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி தொகுப்பு நிகழ்ச்சி

பஹ்ரைனில் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி தொகுப்பு நிகழ்ச்சி

பஹ்ரைன் தாருல் ஈமான் தமிழ் இஸ்லாமிக் சென்டர் சார்பில் இஸ்லாமிய சிறப்பு ஒலி ஒளி தொகுப்பு நிகழ்ச்சி 29.03.2008 சனிக்கிழமை மாலை 6 மணி முதல் 9 மணி வரை முஹர்ரக் அல் இஸ்லாஹ் சொசைட்டியில் நடைபெற இருக்கிறது.

இந்நிகழ்ச்சியினை துபாய் ஜலாலுதீன் ஒருங்கிணைத்து நடத்த இருக்கிறார்.

மேலதிக விபரங்களுக்கு 3 9 0 3 2 2 2 3 மற்றும் 3 9 0 7 3 4 6 4
ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Sunday, September 30, 2007

துபாயில் JMC முப்பெரும் விழா மற்றும் நூல் வெளியீட்டு விழா

துபாயில் ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்க முப்பெரும் விழா



துபாயில் திருச்சி ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி, வருடாந்திர சந்திப்பு நிகழ்ச்சி மற்றும் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஆகிய முப்பெரும் விழா 28.09.2007 வெள்ளிக்கிழமை மாலை துபாய் தேரா லேண்ட்மார்க் ஹோட்டலில் நடைபெற்றது.

துவக்கமாக முஹம்மது அனஸ் இறைவசனங்களை ஓதினார். பரீஜ் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார்.

அமீரக ஜமால் முஹம்மது கல்லூரி முன்னாள் மாணவர் மன்ற பொதுச்செயலாளர் அல்ஹாஜ் எம். அப்துல் ரஹ்மான் மன்ற அறிக்கை வாசித்தார். முன்னாள் மாணவர் சங்கத்தின் சார்பில் 'துபாய் பிளாக்' என இரண்டு விடுதிக் கட்டிடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார். வருடந்தோறும் பொருளாதாரத்தில் பின் தங்கிய மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது கல்லூரி வளர்ச்சிக்கு முன்னாள் மாணவர் சங்கம் பல்வேறு வழிகளிலும் ஒத்துழைப்பு நல்கி வருவதாகத் தெரிவித்தார்.

முன்னாள் மாணவர் சங்கத்தின் உலக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான முனைவர் எம்.எம். ஷாகுல் ஹமீது தனது உரையில் ஜமால் முஹம்மது கல்லூரிக்கும், முன்னாள் மாணவர்களுக்கும் உள்ள தொடர்பு தாய், மகன் பாசப்பிணைப்பைப் போன்றது என்றார். தாயகம் வரும் ஒவ்வொரு வரும் தனது சொந்த வீட்டிற்கு வருவதைப் போல் கல்லூரிக்கு வருகை தர கேட்டுக் கொண்டார்.

கல்லூரி முதல்வர் முனைவர் எம். ஷேக் முஹம்மது கல்லூரியில் ஏற்படுத்தப்பட்டு வரும் பல்வேறு படிப்புகள், கேம்பஸ் இண்டர்வியூ, வருடந்தோறும் ஆகஸ்ட் 15 அன்று நடத்தப்பட்டு வரும் முன்னாள் மாணவர் மன்ற விழா, கல்லூரியில் பள்ளிவாசல் விடுதிக்கட்டிடத்திற்கு உதவிய ஈடிஏ அஸ்கான் மேலாண்மை இயக்குநர் அல்ஹாஜ் செய்யது எம் ஸலாஹ¤தீன் மேலும் பல்வேறு வழிகளில் கல்லூரிக்கு உதவி வரும் ஈடிஏ டி என் எஸ் எக்ஸிகியூடிவ் டைரக்டர் அல்ஹாஜ் நூருல் ஹக், HRM ED அல்ஹாஜ் எம். அக்பர் கான் உள்ளிட்ட பலரை நினைவு கூர்ந்தார்.

கல்லூரி தாளாளர் அல்ஹாஜ் எம்.ஜே. அப்துல் கபூர் சாஹிப் கல்லூரியின் வளர்ச்சிக்கு உதவி வரும் முன்னாள் மாணவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி பொருளாளர் அல்ஹாஜ் கே.ஏ. கலீல் அஹமது சாஹிப், பேராசிரியர் கலந்தர் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

முன்னாள் மாணவர் சங்க தலைவர் சாதிக் காக்கா விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து தனது நிறுவனங்களுக்கு கல்லூரி மாணவர்களைத் தேர்வு செய்யும் திட்டத்தை அறிவித்தார்.முதுவை ஹிதாயத் நன்றி கூறினார்.



துபாயில் 'இறைவாக்கும் நபிவாழ்வும்' நூல் வெளியீட்டு விழா



துபாய் ஏகத்துவ மெய்ஞானசபையில் பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் அவர்கள் எழுதிய 'இறைவாக்கும் நபிவாழ்வும்' எனும் நூல் வெளியீட்டு விழா 28.09.2007 வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றது.

ஏகத்துவ மெய்ஞான சபை தலைவர் எம். ஜெ. முஹம்மது இக்பால் விழாவிற்கு தலைமை வகித்து, நூலை வெளியிட்டு உரை நிகழ்த்தினார். பெருங்கவிக்கோ அவர்கள் சகொதர சமுதாய மக்களிடையே குறிப்பாக இஸ்லாமிய மக்களிடம் கொண்டுள்ள அன்பை, நட்பை விவரித்தார். அவர்களின் தமிழ்ப்பணி குறித்து விவரித்தார்.

ஏற்புரை நிகழ்த்திய பெருங்கவிக்கோ வா.மு. சேதுராமன் இஸ்லாமிய தமிழ் ஞான சிறப்பு மற்றும் இஸ்லாமியர்களுடன் தனக்குள்ள தொடர்பு குறித்தும், தனது தமிழ்ப் பணிக்கு அவர்கள் கொடுத்து வரும் அபரிமிதமான ஒத்துழைப்பு குறித்தும் விரிவாகப் பேசினார். மேலும் மெய்ஞான சபை ஞானக்கடல் இமாம் கலீல் அவ்ன் மெளலானா அவர்களுடன் உள்ள தொடர்பு குறித்தும் விவரித்தார்.

சபையின் கவிஞர்கள் பெருங்கவிக்கோவின் சேவைகளை பாராட்டிப் பேசினர்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை எம்.ஜே. அப்துல் ரவூப், இம்தியாஸ் உள்ளிட்டோர் சிறப்புற செய்திருந்தனர்.


தகவல் : முஸ்லிம் நியூஸ் ஏஜென்ஸி ( எம்.என்.ஏ. )

Thursday, September 13, 2007

துபாயில் ரமலான் மாத நோன்பு துவங்கியது

துபாயில் ரமலான் மாத நோன்பு துவங்கியது

துபாயில் ரமலான் மாத நோன்பு வியாழக்கிழமை முதல் துவங்கியது. திருக்குர்ஆன் இறக்கியருளப்பெற்ற புனித மாதம் ரமலான் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்லாமியர்கள் இம்மாதத்தில் பகல் முழுவதும் உண்ணாமலும், பருகாமலும் நோன்பு பிடித்து வருகின்றனர். ரமலான் மாதம் துவங்கப்பட்டதையடுத்து துபாயிலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் பிற பகுதிகளிலும் இரவு நேரங்களில் தராவீஹ் எனப்படும் இரவு சிறப்புத் தொழுகை பள்ளிகளில் தொழவைக்கப்பட்டது.

ரமலான் மாதத்தையட்டி வேலை நேரம் எட்டு மணியிலிருந்து ஆறு மணி நேரமாக அரசுத் துறைகளிலும் தனியார் துறைகளிலும் குறைக்கப்பட்டுள்ளது.

நோன்பு திறப்பதற்கு அரசு சார்பிலும், தொண்டு நிறுவனங்களின் சார்பிலும் அமீரகத்தின் பல்வேறு பகுதிகளிலும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. துபாயில் தமிழக சமுதாய அமைப்பான இந்தியன் முஸ்லிம் அசோஷியேஷன் ( ஈமான் ) சார்பில் தமிழத்து நோன்புக்கஞ்சி தினமும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு வழங்கப்படும் ஏற்பாடுகள் அதன் பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ லியாக்கத் அலியின் மேற்பார்வையில் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இம்மாதத்தில் சர்வதேச அளவிலான திருக்குர்ஆன் மனனப்போட்டிகளில் நடத்தப்பட்டு கோடிக்கணக்கான ரூபாய் பரிசாக அளிக்கப்படுகிறது. ரமலான் குறித்த சிறப்பு சொற்பொழிவுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ரமலான் மாதம் துபாயில் சிறப்பாக அனுசரிக்கப்படுகிறது. இங்கு வரும் சுற்றுலாப்பயணிகளுக்கு இது ஒரு சிறந்த அனுபவமாகும். பகல் நேரங்களில் பொது இடங்களில் உணவருந்த அனுமதியில்லை. எனினும் பார்சல் எடுத்துச் சென்று வீட்டுக்கு சென்று சாப்பிடலாம்.

கடந்த வருடம் துபாய் வருகை புரிந்த வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.எம். காதர் மொகிதீன் நோன்புக்காலம் முழுவதையும் துபாயிலேயே இருக்க விரும்புவதையே குறிப்பிட்டுள்ளது இங்கு நினைவு கூறத்தக்கது.

தகவல் : முதுவை ஹிதாயத்