Sunday, August 31, 2008

குவைத்தில் வட்டியில்லா வங்கி பற்றிய கருத்தரங்கம்

வட்டியில்லா வங்கியும் !!
இஸ்லாமிய நிலையும்!!


இருதின சிறப்பு கருத்தரங்கம்

சிறப்புரையாற்றுகின்றார்
பேரா. டாக்டர். எம்.ஹெச் ஜவாஹிருல்லாஹ் அவர்கள்
தலைவர், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்

காலம் : 04, 05 - 09 - 2008 வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில்
நேரம் :இரவு 8.30 அளவில் தராவிஹ் தொழுகைக்கு பின்
இடம் : ஷஹீத் மெளலவி. பி.எஸ் அப்துர்ரஹீம் நினைவு அரங்கம்
ஜம்இய்த்துல் இஸ்லாஹ், உள்ளரங்கம், ரவ்தா

நிகழ்ச்சி ஏற்பாடு

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம்
குவைத் மண்டலம்

தகவல் : சகோ. திருச்சி அமானுல்லா அவர்கள்


புதிய கட்சி உதயம் : தேசிய ஜனநாயக் கட்சி (DJK)

மேடையில் தேசிய ஜனநாயக கட்சி (DJK) தலைவர்கள்

தமிழகத்தில் முஸ்லிம்களின் அரசியல் விழிப்புணர்வை வெளிப்படுத்தும் விதமாக மீண்டும் ஒரு புதியதோர் அரசியல் கட்சி உருவாகியுள்ளது. முன்னால் வெளிவந்து தற்போது நின்று போய்விட்ட "மாஸ்ட்டர் ரிப்போர்ட்டர்" பத்திரிகையின் ஆசிரியரும் பத்திரிகையாளருமான திரு. வசீகரன் (எ) நாசர் அவர்கள் தமிழ் முஸ்லிம் அரசியல் வெளியில் தனது பங்கிற்கு ஒரு புதிய அரசியில் கட்சி ஒன்றினை நிறுவி அதற்கு தேசிய ஜனநாயக கட்சி (DJK) என்று பெயரிட்டள்ளார்கள்.

தேசிய ஜனநாயக கட்சி (DJK) நிறுவனர் வசீகரனின் வீரமிகு உரை

தேசிய ஜனநாயக கட்சி (DJK) யின் முதல் அரசியல் விழிப்புணர்வு பொதுக்கூட்டம் சென்னை மண்ணடியில் அமைந்துள்ள தம்புச்செட்டி தெருவில் கடந்த 09.08.2008 அன்று வெகு விமரிசையுடன் நடைபெற்றது.தேசிய ஜனநாயக கட்சி (DJK) யின் நிறுவனரும் "மாஸ்ட்டர் ரிப்போர்ட்டர்" பத்திரிகையின் ஆசிரியரும் பத்திரிகையாளருமான திரு. வசீகரன் (எ) நாசர் அவர்கள் சிறப்புரை ஆற்றினார்கள்.தேசிய ஜனநாயக கட்சி (DJK) தலைவர் திரு. எம் ரபீக் அஹமது அவர்கள், பொதுச்செய்லாளர் திரு. தர்மராசன், து.பொதுச் செயளாலர் திரு. அமீன் அவர்கள்,துனைத் தலைவர் திரு. சந்தோஷ் குமார் ஜாலன் அவர்கள், வர்த்தகர் அணி செயலாளர் திரு. ஜாகீர் அவர்கள், அமைப்புச் செயலாளர் ராஜ்குமார், நிர்வாகக்குழு உறுப்பினர் திரு. ஆறுமுகம், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

திரன்டிருந்த மக்கள் வெள்ளம்

தேசிய ஜனநாயக கட்சி (DJK) யின் நிறுவனரும் "மாஸ்ட்டர் ரிப்போர்ட்டர்" பத்திரிகையின் ஆசிரியரும் பத்திரிகையாளருமான திரு. வசீகரன் (எ) நாசர் அவர்களின போற்றத்தக்க சிறப்புரையை பொதுக்கூட்டத்தில் பெருந்திரளாக கலந்து கொண்ட ஆயிரக்கனக்கான மக்கள் பாராட்டினர்.

செய்திகள் மற்றும் புகைப்படம்

திரு. விஜயன்
ஊடக செயலாளர்
தேசிய ஜனநாயக கட்சி (DJK) தொலைபேசி : 9003260744

Saturday, August 30, 2008

திருச்சி பொதுக்கூட்ட அழைப்பிதழ்

எந்த சமுதாயம் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளவில்லையோ...அந்த சமுதாயத்தை அல்லாஹ் மாற்றுவதில்லை (அல் குர்ஆன்)


அரசியல் அதிகாரத்தை நோக்கி....
இரவல் அரசியலுக்கு விடை கொடுக்க..
முஸ்லிம்களின் முதல் பொது அரசியல் கட்சி


இந்திய தேசிய மக்கள் கட்சி

IDMK யின்


அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
அழைப்பிதழ்


நாள் : 31-08-2008 ஞாயிற்றுக்கிழமை
நேரம் : மாலை 6.00 மணியளவில்
இடம் : காயிதேமில்லத் நாகர்
ஆழ்வார் தோப்பு, திருச்சி


தலைமை

B.அப்துல் சலாம் (திருச்சி மாநகர தலைவர் இ.தே.ம.க )

வரவேற்புரை

தமிழகம் S.இக்பால் (மாநில துனைப் பொதுச் செயலாளர்)

முன்னிலை

S.S.A அப்துல் கனி (செயலாளர்)
M.I ஷாகுல் ஹமீது (துனை செயலாளர்)
J. சாதிக் அலி (நகர அமைப்பாளர்)

தாஜ்தீன் (பொருளாளர்)
A.பசூல் அஹமது (மாணவரணி)
A.இபுறாஹிம் (நகர இ.து அமைப்பாளர்)
J. ஜாக்கீர் (து.தலைவர்)

A. ஹீசேன் (இளைஞரணி து.தலைவர்)
விளக்கவுரை

E.M. சாகுல் ஹமீது - மதுரை
M.I ஜஹாங்கீர் (முகவை மாவட்ட செயலாளர்)
Dr. M. பக்ருதீன் (ஆட்சி மன்ற குழு உறுப்பினர்)
A.K சான் பாஷா(வட சென்னை மாவட்ட அமைப்பாளர்)


சிறப்புரை


M. குத்புதீன் ஐபக் M.A
(மாநில தலைவர்)

திருக்குர்ஆன் விரிவுரையாளர்

காஞ்சி அப்துல் ரவூப் பாக்கவி

நன்றியுரை

I. ஷேக் முகம்மது M.Com
(நகர இளைஞரணி தலைவர்)

மீணவரணி

A.சின்ன அப்துல்லா, A.மணி, B.கோபி,B. மணிவேல்,S.ஜெயராஜ், A.அலெக்ஸ், R.ராபர்ட்,J.மூர்த்தி, T.முருகேசன், R.ஜான்,A.கமருதீன், K.கமருதீன், P.கருப்பண்ணன்


மாணவரணி

H.முகம்மது தாகிர், R.செய்யது தெளபீக், A.முகம்மது ஆசீப்,A.முகம்மது ஜாவுதீன், K.கண்ணன்


துவண்டு கிடக்கும் சமுதாயத்தை தூக்கி நிமிர்த்திட
தூங்கிக் கொண்டிருக்கும் சமுதாயத்தை விழிக்கச் செய்திட
துள்ளிக குதித்து வாரீர் !! வாரீர்!!! வாரீர்!!!

அன்போடு அழைக்கிறது

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)

திருச்சி மாவட்டம்

Friday, August 29, 2008

வல்லமை மிக்க இறைவன் அல்லாஹ்வே - முன்னால் கிருத்துவ மத போதகர் சாட்சி

சுவாசுமுள்ள யாவும் இயேசுவின் இறைவனாகிய அல்லாஹ்வே வல்லமைமிக்க இறைவன் என்று சாட்சி கூறும்...அல்லேலுயா!!

"வல்லமை மிக்க இறைவன் அல்லாஹ்வே"

சாட்சி பகர்கின்றார் முன்னால் கிருத்துவ மத போதகர் சகோ. எம்.சி. முகம்மது அவர்கள்


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



ஜனாப் அமீர் ஜவஹருடன் சகோ. எம்.சி முகம்மது அவர்கள்

Thursday, August 28, 2008

குறைந்த செலவில் சமையல் எரிவாயு : திண்டுக்கல் முஸ்லிம் ஆராய்ச்சியாளர் சாதனை


திண்டுக்கல்: குறைந்த செலவில் எரிவாயு உற்பத்தி செய்வதை திண்டுக்கல் ஆராய்ச்சியாளர் அப்துல் அஜீஸ் கண்டுபிடித்துள்ளார். திண்டுக்கல்லை சேர்ந்தவர் அப்துல்அஜீஸ்.இவர் விறகிலிருந்து செலவில்லாமல் மின்சாரம் தயாரிப்பதை கண்டுபிடித்தார். விசாகப்பட்டினத்தில் நடந்த அகில இந்திய விஞ்ஞானிகள் மாநாட்டில் இவரது கண்டுபிடிப்பிற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டு நிதியுதவியும் செய்யப்பட்டது. இதையடுத்து தாவர எரிபொருள் சேர்மானம் கண்டுபிடித்தார். தற்போது புதிய கண்டுபிடிப்பாக பகுதிநீர் எரிவாயு கலன் மூலம் குறைந்த செலவில் சமையல் எரிவாயு கண்டுபிடித்துள்ளார்.


நான்கு அறைகள் கொண்ட கலன் ஒன்றில் மரக்கறி, விறகுத்தூள், முந்திரிக்கொட்டை, தேங்காய் சிரட்டை,வறட்டி இவற்றில் ஏதேனும் ஒன்றை 15 கிலோ போடவேண்டும். இதில் தீ பற்ற வைத்து காற்றை செலுத்தி தொடர்ந்து எரியச்செய்ய வேண்டும். இது எரியும் போது கார்பன்டை ஆக்சைடு உருவாகும்.கலனுக்குள் ஒரு பகுதிக்குள் சென்று கார்பன் மோனாக்சைடாக மாறி வெளி வருகிறது. அதே நேரம் அதிக வெப்பம் கொடுக்கக்கூடியதாக இது இருப்பதில்லை. இதனுடன் சொட்டுச்சொட்டாக தண்ணீரை சேர்க்கும் போது பகுதி நீர் எரிவாயு உருவாகிறது.இது டீசல் ஆயில் எரிபொருளுக்கு சமமானது.ஒரு கிலோ எல்.பி.ஜி.,காஸ் வீட்டு உபயோகத்திற்கு ரூ.25க்கும்,கடைகளுக்கு ரூ.55 க்கும் விற்கப்படுகிறது. ஆனால் இவரது கண்டுபிடிப்பு மூலம் ஒரு கிலோ எல்.பி.ஜி.,காஸ் க்கு சமமான எரிபொருளை 2 கிலோ மரக்கறி மூலம் தயாரிக்கலாம். இதற்கு ஆகும் செலவு ரூ. 16 மட்டுமே. விறகை கொண்டு தயாரித்தால் ஆகும் செலவு ரூ. 8 மட்டுமே.


ஒரு கிலோ எல்.பி.ஜி., திரவ எரிபொருளுக்கு ஈடான எரிபொருள் தயாரிக்க 2 கிலோ மரக்கறி அல்லது 4 கிலோ விறகு அல்லது 3 கிலோ முந்திரிக்கொட்டை அல்லது கொட்டாங்குச்சி 3 கிலோ தேவை. ஹோட்டல் மற்றும் பெரிய நிறுவனங்களின் எரிவாயு தேவையை இவரது கண்டுபிடிப்பு குறைந்த செலவில் பூர்த்திசெய்யும். புதிய கண்டுபிடிப்பை பதிவு செய்து விரைவில் சந்தைப்படுத்தவும் முடிவு செய்துள்ளார்.

நன்றி : தினமலர்

"ஓற்றுமையை நோக்கி" கலந்துரையாடல் (FULL VIDEO)




04.08.2008 திங்கள் கிழமை மற்றும் 05.08.2008 செவ்வாய் கிழமை ஆகிய தேதிகளில் தமிழன் தொலைக்காட்சியில் பிரபல சமூக ஆர்வலர் ஜனாப் அமீர் ஜவஹர் B.A.B.L அவர்களால் நடத்தப்பட்டு வரும் மக்கள் மன்றத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சகோ. குத்புதீன் ஐபக் அவர்கள் ஜனாப் அமீர் ஜவஹர் B.A.B.L அவாகளோடு "ஓற்றுமையை நோக்கி" என்ற தலைப்பில் நடந்த கலந்துறையாடலில் காரசாரமான பதில்களை அளித்துள்ளார்.

இன்றைய அரசியில் சூழலில் விடையை எதிர்நோக்கி காத்து கிடக்கும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு தேவையான விடைகளை வழங்க கூடியதாக இருந்தது இவரது இந்த கலந்துரையாடல்.

04.08.2008 திங்கள் கிழமை மற்றும் 05.08.2008 செவ்வாய் கிழமை ஆகிய தேதிகளில் ஒளிபரப்பான இந்த சூடான கலந்துரையாடலின் வீடியோ Windows Video (WMV) ஃபார்மட்டில் இங்கு வெளியிடப்படுகின்றது. நிகழ்ச்சியின் வீடியோவை பார்ப்பதற்கு அல்லது டவுன்லோட் செய்வதற்கு கீழே உள்ள சுட்டியில் சொடுக்கவும்.
.


Wednesday, August 27, 2008

சுதந்திர தின அணிவகுப்பின் வெற்றி - ஜமாத்தார்கள், அனைத்து இயக்கங்களுக்கும் நன்றி

சுதந்திர தின அணிவகுப்பின் வெற்றி
முஸ்லிம் சமூகத்தின் வெற்றி!
ஜமாத்தார்கள், அனைத்து இயக்கங்களுக்கும் நன்றி


நமது தேசத்தின் சுதந்திரம் என்பது இந்துக்களும் முஸ்லிம்களும் ஒன்றிணைந்து போராடிப் பெற்ற சுதந்திரம். 15ம் நூற்றாண்டிலிருந்து ஏறத்தாழ 400 வருடங்கள் இந்த தேசத்தின் விடுதலைக்காக இரத்தம் சிந்தியவர்கள் முஸ்லிம்கள்.1947ம் ஆண்டு நமது தேசம் விடுதலையடைந்தபோது இருந்த முஸ்லிம்களின் ஜனத் தொகையை விட அதிகமான எண்ணிக்கையில் இந்த தேசத்தின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரையும் தியாகம் செய்தவர்கள் முஸ்லிம்கள்.

சுதந்திரமடைந்து 60 ஆண்டுகள் கழிந்தும் விடுதலை வரலாற்றின் வீர வடுக்களிலிருந்து முஸ்லிம்கள் திட்டமிட்டு அந்நியப்படுத்தப்பட்டு வருகிறார்கள். இந்த தேசத்தின் நச்சுக் கிருமிகளாகவும் புற்று நோயாகவும் திகழ்ந்து கொண்டிருக்கும் சங்பரிவார ஃபாசிஸ்டுகளின் நீண்ட நெடிய சதிச் செயல்களின் ஒரு பகுதிதான் இந்த அந்நியமயமாக்கல் திட்டம் என்பதை தாங்கள் நன்கறிவீர்கள்.போராடிப் பெற்ற சுதந்திரத்தில் முஸ்லிம்களின் உரிமையை பறைசாற்றும் விதமாகவும், இந்துக்களுடன் இணைந்து போராடிய ஒற்றுமையை நிலைநிறுத்தும் முகமாகவும், முஸ்லிம்களின் கண்ணியத்தை இந்த தேசத்திலே உயர்த்திப் பிடிக்கவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கடந்த ஆகஸ்ட் 15ம் நாள் மதுரையில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த நாம் திட்டமிட்டோம்.

அணிவகுப்பின் மூலம் முஸ்லிம்களுடைய சக்தி வெளிப்பட்டால் எங்கே முஸ்லிம் சமூகம் தைரியமும் தன்னம்பிக்கையும் வரப்பெற்றவர்களாக நெஞ்சை நிமிர்த்தி இந்த தேசத்தின் வீதிகளிலே வலம் வரத் துவங்கி விடுவார்களோ என அஞ்சிய சங்பரிவார ஃபாசிஸ்டுகள் முஸ்லிம்களின் இந்த அணிவகுப்பை எப்படியேனும் தடுத்து நிறுத்திட வேண்டும் என சதி செய்யத் துவங்கினர். மேலும் முஸ்லிம்களை அந்நியர்களாகவும் தேச விரோதிகளாகவும் சித்தரிக்கும் சதித் திட்டம் எங்கே நிறைவேறாது போய் விடுமோ என்ற அச்சத்தில் ஒப்பாரி வைத்து கூக்குரலிட்டனர். உளவுத்துறையும் காவல்துறையும் சங்பரிவார்களுடன் இணைந்து நின்று சொல்லொண்ணா இடையூறுகளை நமக்கு ஏற்படுத்தியது. மேலும் நமக்கு மைதானம் தந்த பள்ளிக்கூட நிர்வாகத்தை மிரட்டி மைதானத்தை அனுமதியை ரத்து செய்ய வைத்தனர். அணிவகுப்புப் பயிற்சியில் ஈடுபட்ட மனித நீதிப் பாசறையின் உறுப்பினர்களை கைது செய்து பொய் வழக்கு போட்டனர். இறுதியில் சங்பரிவார்களின் கோரிக்கையை ஏற்று நமது அணிவகுப்பிற்கு தடை விதித்தனர்.

இவ்வாறு சங்பரிவார்களும் காவல்துறையும் உளவுத்துறையும் ஓரணியில் நின்று சதி செய்த போது, இதற்கெதிராக கிளர்ந்தெழுந்த முஸ்லிம் ஜமாஅத்துகள், இயக்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து போராடின. சுதந்திரம் எங்கள் பிறப்புரிமை; முஸ்லிம்களின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு அனுமதி தந்தே ஆக வேண்டும் என ஆதரவுக் குரல்கள் ஓங்கி ஒலித்தன. ஜமாஅத் லெட்டர்களும், தந்திகளும் ஃபேக்ஸ்களும், இயக்கங்களின் கடிதங்களும் தமிழக முதல்வரின் அறையை நிரப்பின.ஆனாலும் தமிழக அரசு முஸ்லிம்களின் சுதந்திர உணர்வுகளுக்கும் உரிமைக் குரலுக்கும் செவிசாய்க்கவில்லை.


இறுதியாக நீதிமன்றத்தின் கதவுகளைத் தட்டினோம். அல்லாஹ்வின் பெருங்கருணையினாலும் உங்கள் எல்லோருடைய துஆ பரக்கத்தாலும் அணிவகுப்பிற்கு அனுமதி கிடைத்தது.நாம் அனைவரும் இணைந்து சுதந்திர தின அணிவகுப்பை திட்டமிட்டபடி செவ்வையாக நடத்தினோம்.முஸ்லிம் சமூகத்தின் சக்தியை வெளிப்படுத்தினோம். சுதந்திர தின அணிவகுப்பின் வெற்றி என்பது ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமைக்கு கிடைத்த மாபெரும் வெற்றி.

நிகரற்ற ஆற்றலுக்குச் சொந்தக்காரனாகிய அல்லாஹ்வும், எம்பெருமானார் ரசூலே கரீம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் காட்டித் தந்த ஒற்றுமை எனும் கயிற்றை பற்றிப் பிடித்ததால் நமது கண்ணெதிரே முஸ்லிம் சமூகத்தின் வெற்றியைக் கண்டோம். சூது மதியாளர்களின் சூழ்ச்சிகள் தவிடு பொடியானதைக் கண்டோம். முஸ்லிம் சமூகத்தின் இஸ்ஸத் கண்ணியம் உயர்ந்து நின்றதைக் கண்டோம். ""கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது.'' அல்குர்ஆன் 63 : 8


சுதந்திர தின அணிவகுப்பை வெற்றிபெறச் செய்து இந்த நிலையை நம் சமூகம் எட்டுவதற்கு பாடுபட்ட ஜமாத்தார்கள், இயக்கங்கள், நல்லுள்ளங்கள் அனைவருக்கும் மனித நீதிப் பாசறையின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழகம், கேரளம், கர்நாடகம் ஆகிய மூன்று மாநிலங்களிலும் நாம் நடத்திய சுதந்திர தின அணிவகுப்பின் மூலம் அகில இந்திய ரீதியில் முஸ்லிம் சமூகத்தின் கண்ணியம் உயர்த்தி நிறுத்தப்பட்டுள்ளது. இந்த அணிவகுப்பின் மூலம் சங்பரிவார சக்திகளின் கனவுகளும் கலைக்கப்பட்டிருக்கின்றது. அல்ஹம்துலில்லாஹ். மேலும் இது மட்டுமின்றி எல்லா நிலையிலும் இதே போன்று நாம் ஒன்றிணைந்தால் இன்ஷா அல்லாஹ் இந்த தேசத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் சக்தியாக முஸ்லிம்கள் மாறும் காலம் வெகு தொலைவில் இல்லை என்பது நிதர்சனமான உண்மை.



இன்னும் நீங்கள் எல்லோரும் அல்லாஹ்வின் கயிற்றை வலுவாகப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்; நீங்கள் பிரிந்தும் விடாதீர்கள்; அல்லாஹ் உங்களுக்குக் கொடுத்த நிஃமத்களை(அருட்கொடைகளை) நினைத்துப் பாருங்கள்; நீங்கள் பகைவர்களாய் இருந்தீர்கள் உங்கள் இதயங்களை அன்பினால் பிணைத்து, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாய் ஆகி விட்டீர்கள்; இன்னும், நீங்கள் (நரக) நெருப்புக் குழியின் கரை மீதிருந்தீர்கள்; அதனின்றும் அவன் உங்களைக் காப்பாற்றினான் நீங்கள் நேர் வழி பெரும் பொருட்டு அல்லாஹ் இவ்வாறு தன் ஆயத்துகளை வசனங்களை உங்களுக்கு தெளிவாக்குகின்றான். அல்குர்ஆன் 3:103


திருமறையும் திருத்தூதரும் காட்டிய வழியில் ஒன்றிணைவோம்! வெற்றி பெறுவோம்!!




இப்படிக்கு,
அ. யா முஹைதீன்,

மாநில பொதுச்செயலாளர்,
மொபைல்: 98406 97079

Saturday, August 23, 2008

கலைஞர் அரசே சமநீதி வழங்கு!! - MNP கருத்தரங்கம் (24.08.2008) திரன்டு வாரீர்...

அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா
சிறைக்கைதிகளை விடுவிப்பதில் சமநீதி கோரும்...
மாபெரும் கருத்தரங்கம்

"ஒரு சமூகத்தின் நாகரீகத்தின் தரத்தை அதன் சிறைச்சாலைகளில் நுழைந்து பார்ப்பதன் மூலம் மதிப்பிட முடியும்" - ஃபியோதர் தஸ்த்தயேவ்ஸ்கி, நூல் : HOUSE OF DEAD


எதிர்வரும் செப்டம்பர் 15 புரரிஞர் அண்ணாவின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழக அரசு தமிழக சிறைகளில் தண்டனைக் கைதிகளில் எட்டான்டு காலம் முழுமையாக தண்டனை கழித்தவர்களை விடுதலை செய்ய ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

இந்த செய்தியை அறிந்தவுடன் முஸ்லிம் தாய்மார்கள் கடந்த 10 ஆண்டு காலமாக சிறையில் தவிக்குமு் தன் கணவனை அரசு விடுதலை செய்து விடும் என்று பூரிப்புடன் எதிர் பார்த்து கொண்டிருந்தனர். ஆனூல் வந்த செய்தியோ முஸ்லிம்கள் காலம் முழுவதும் கவலையில் துவள வேண்டும் என்ற மனூநிலையை வெளிப்படுத்தும் விதமாக முஸ்லிம் தாய்மார்க் / சகோதரிகளிடம் அச்செய்தி வந்து வீழந்தது. ஆம் 10ஆண்டுகள் கழிந்தாலும் முஸ்லிம்களுக்கு விடுதலை இல்லை என்ற செய்தி, கண்ணீர் மல்க கதறி துடித்து துவண்டு வீழந்தார்கள் நம் சகோதரிகள்.

சென்ற ஆண்டு செப்டம்பர் 15, அண்ணா பிற்நத நாள் அன்று சுமார் 118 சிறைவாசிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர். அதிலும் முஸ்லிம்கள் புறக்கனிக்கப்பட்டனர். 10 ஆண்டுகள் கழித்த ஜாகிர் உசேன், அபுதாஹிர், அப்துல் மஜீத், சபூர் ரஹ்மான் ஆகியோர்களை விடுதலை செய்யவில்லை. அத்துயரத்தின் மன அழுத்தத்தால் மூன்று பென் குழந்தைகளின் தந்தையாகிய சபூர் ரஹ்மான் கடந்த அக்டோபர் 31, 2007ல் சிறைக் கொட்டடியிலேயே மரணமடைந்தார்.

மறுபுறமோ இவ்வரசு வழக்கம்போல் பாரபட்சத்துடனும், அநீதியுடனும் இவ்விசயத்தில் நடக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. இதே வகுப்புவாத குற்றததில் கோவையில் குண்டு வெடிப்புக்களும் கலவரங்களும் நிகழ்வதற்கு முக்கிய காரனமான 1997 நவம்பரில் 19 முஸ்லி்ம்கள் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய தன்டனை சட்டத்தின் முக்கிய பிரிவான (302, 147, 427, 435, 435, 436, 370, 379) போன்ற பிரிவுகளில் கைது செய்யப்பட்ட இந்துத்துவ தீவிரவாதிகளில் ஒருவர் கூட இன்று சிறையில் இல்லை. இதுதான் சமநீதி???

அரசு ஆணை 1762/87 ன்படி வரும் 15.09.2008 அன்று பொது மன்னிப்பிற்கு தகுதியானவர்கள் என்ற அடிப்படையில் எட்டு ஆண்டுகள் வெஞ:சிறையில் கழித்த பல முஸ்லிம் கைதிகள் விடுதலைக்கு தகுதியாக உள்ளனர். சிறுபான்மையினரின் நலம் காக்கும் அரசாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் கலைஞர் அரசு இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். பாரபட்சமில்லாத சாதி, மதம் பாராத சமநீதி அனைவருக்கும் வேண்டுமென்பதுதான் ஒவ்வொரு இந்திய குடிமகனின் கோரிக்கை ஆகும்.


உங்கள் குரல்களை பதிவு செய்திட..ஓங்கி முழங்கிட அணிதிரண்டு வாரீர்!!!

இன்சா அல்லாஹ் ...

நாள் : 24.08.2008 ஞாயிறு
நேரம் : மாலை 5.45 மணிக்கு
இடம் : சங்கமம் திருமண மண்டபம், போத்தனூர் ரோடு, குறிச்சிப்பிரிவு.

அழைக்கின்றது மனித நீதிப் பாசறை (MNP)

நிகழ்ச்சி நிரல்

தலைமை
M. முகம்மது அலி ஜின்னா MA., JMC.,
மாநிலத்தலைவர், மனித நீதிப் பாசறை

தொகுப்புரை
A.S. இஸ்மாயில்
மாவட்ட தலைவர், மனித நீதிப் பாசறை

வரவேற்புரை
N. முகம்மது ஷாஜஹான் Bsc. B.L

மாநில செயற்குழு உறுப்பினர், MNP

முன்னிலை
வழக்கறிஞர் M. ரஹ்மத்துல்லாஹ் BA.,BL

மாநில செயலாளர் NCHRO

வழக்கறிஞர் A. நவ்ஃபல் Bsc., BL.,

சிறப்பு விருந்தினர்கள்
E.M. அப்துர் ரஹ்மான்
தேசிய பொதுச்செயலாளர், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (PFI)

H.S.J இனாயத்துல்லாஹ் M.A., B.L
மாநிலத் தலைவர், இந்திய தேசிய லீக்

அ.மார்க்ஸ்
துணைத் தலைவர்
அரசியல் கைதிகளை விதடுதலை செய்வதற்கான குழு

மெளலவி A.E.M அப்துர் ரஹ்மான்
மாநிலத் தலைவர், ஜமாஅத்துல் உலமா

அ. உமர் பாரூக்
நிறுவனத் தலைவர், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்

ம.தே. சிந்தனை செல்வன்
பொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள்

ப.பா. மோகன்
மூத்த வழக்கறிஞர்

A.K. முகம்மது ஹனீஃபா
பொதுச் செயலாளர்,
தலித், இஸ்லாமிய, கிறிஸ்த்தவ கூட்டமைப்பு

கோட்டை தங்கப்பா
சமூக நல ஆர்வலர்

நன்றியுரை
M.Y. அப்பாஸ்
மாவட்ட செயலாளர், MNP

முஸ்லிம் லீக் - ஆர்.எஸ்.எஸ். நேர்காணல் நிகழ்ச்சி

சன் நியூஸ் தொலைக்காட்சியில் நேருக்கு நேர் நிகழ்ச்சியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் எம்.பி., ஆர்.எஸ்.எஸ். கொள்கைபரப்புச் செயலாளர் திருமதி ராதாராஜன் ஆகியோர் பங்கேற்கும் அமர்நாத் ஆலய விவகாரம் பற்றிய நேர்காணல் நிகழ்ச்சி, 23-08-2008 சனிக்கிழமை இரவு 9.00 மணிக்கும், இதன் மறுஒளிபரப்பு 25-08-2008 திங்கள் மாலை 5.30 மணிக்கும் ஒளிபரப்பாகிறது - காணத் தவறாதீர்கள்.

Thursday, August 21, 2008

பறவைகளின் அதிசய உலகம்

"பறவைகளின் அதிசய உலகம்"

கோவை திருக் குர்ஆன் அறக்கட்டளை


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



சுதந்திர தின அணிவகுப்பு - மதுரை - புகைப்பட காட்சிகள் (PHOTO GALLERY PART-02)




தமிழகத்தின் மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா கடந்த ஆகஸ்ட் 15, 2008 அன்று மதுரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது தொண்டர் படையை கொண்டு இந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் அணிவகுப்பு நடத்தியது. அந்த அணிவகுப்பின் புகைப்படக் காட்சிகளின் இரன்டாம் பகுதியை காண கீழே உள்ள சுட்டியில் சொடுக்கவும். (முதல்பகுதி இங்கே..)
.
படங்கள் உதவி : கோவை தங்கப்பா

Wednesday, August 20, 2008

அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம் அழைப்பிதழ்


எந்த சமுதாயம் தன்னைத்தானே மாற்றிக் கொள்ளவில்லையோ...அந்த சமுதாயத்தை அல்லாஹ் மாற்றுவதில்லை (அல் குர்ஆன்)


அரசியல் அதிகாரத்தை நோக்கி....
இரவல் அரசியலுக்கு விடை கொடுக்க..
முஸ்லிம்களின் முதல் பொது அரசியல் கட்சி


இந்திய தேசிய மக்கள் கட்சி

IDMK யின்


அரசியல் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்
அழைப்பிதழ்


நாள் : 22-08-2008 வெள்ளிக்கிழமை
நேரம் : மாலை 6.00 மணியளவில்
இடம் : மூர் தெரு சந்திப்பு
மண்ணடி, சென்னை 600001

தலைமை

A.K சான் பாஷா (வட சென்னை மாவட்ட அமைப்பாளர் )

வரவேற்புரை

S.P. ஷேக் அப்துல்லா (திருவள்ளுர் மாவட்ட அமைப்பாளர்)

முன்னிலை

V.S. காஜா முகம்மது (தலைமை நிலைய பொருப்பாளர்)
D.அஸ்கர் (துறைமுக பகுதி அமைப்பாளர்)
A.B ராஜன்
S. நியமத், H. சலீம்
(R.K நகர் பகுதி அமைப்பாளர்கள்)
நேதாஜி நகர் ஷாகுல் (3 வது வட்ட அமைப்பாளர்)
சேப்பாக்கம் கலீலுர்ரஹ்மான், N. ஹமீத் பாஷா (13 வது வட்ட அமைப்பாளர்)

விளக்கவுரை

E.M. சாகுல் ஹமீது - மதுரை

வழக்கறிஞர் கண்ணன் M.A. M.L

M.I ஜஹாங்கீர் (முகவை மாவட்ட செயலாளர்)
Dr. M. பக்ருதீன் (ஆட்சி மன்ற குழு உறுப்பினர்)
V.S. வருசைக்கனி (மாநில பொதுச் செயலாளர்)
தமிழகம் S.இக்பால் (மாநில துனைப் பொதுச் செயலாளர்)

திருக்குர்ஆன் விரிவுரையாளர்
காஞ்சி அப்துல் ரவூப் பாக்கவி அவர்கள்

சிறப்புரை

M. குத்புதீன் ஐபக் M.A
(மாநில தலைவர்)

நன்றியுரை


M. அஜ்மீர் அலிகான்
(துறைமுகப் பகுதி அமைப்பாளர்)

துவண்டு கிடக்கும் சமுதாயத்தை தூக்கி நிமிர்த்திட
தூங்கிக் கொண்டிருக்கும் சமுதாயத்தை விழிக்கச் செய்திட
துள்ளிக குதித்து வாரீர் !! வாரீர்!!! வாரீர்!!!


அன்போடு அழைக்கிறது


இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK)


தொடர்புக்கு : 9940050565 , 944417866
கீழே உள்ள புகைப்படத்தில் செடுக்கி பெரிதாக்கி பார்க்கவும்



Tuesday, August 19, 2008

வீக்கான லீக் - புதுக் கட்சி குத்பதீன் பாய்ச்சல்


வீக்கான லீக்
- புதுக் கட்சி குத்பதீன் பாய்ச்சல்

முஸ்லிம் சமுதாயத்திற்கான புதிய அரசியல் வரவு இந்திய தேசிய மக்கள் கட்சி (ஐ.டி.எம்.கே) "இஸ்லாமிய பணக்காரர்களும் இணைந்த அமைப்பாக மாறிவிட்டது முஸ்லிம் லீக்" என்ற குற்றச் சாட்டுடன் நம்மை சந்தித்தார் ஐ.டி.எம்.கே வின் மாநிலத் தலைவர் குத்புதீனு் ஐபக். 25 ஆன்டுகளுக்கு முன் நெல்லை மாவட்டம் மீனட்சிபுரத்தில் ஏற்ப்பட்ட மதக் கலவரத்தால் பாதிக்கப் பட்ட தலித் மக்கள் ஒட்டுமொத்தமாக இஸ்லாத்துக்கு மாறினார்கள். அதன் தொடர்ச்சியாக ராமநாதபுரம் மாவட்டத்தில் கூறியூர் கிராமத்தில் தேவேந்திர மக்கள் பலர் மதம் மாறினர். அதை முன்னின்று நடத்திய முன்னால் போலீஸ்காரர் முகம்மது அலி ஜின்னா, ஆதிக்க சக்திகளால் படுகொலை செய்யப்பட்டார். அவருடைய வாரிசுகளில் ஒருவர்தான் குத்புதீன் ஐபக்.

இவருடைய முதன்மை கோபம் முஸ்லிம் லீக் மீதுதான். அதுகுறித்த விமர்சனத்துடன் வந்தவரிடம், ஐ.டி.எம்.கே வின் தேவை என்ன என்பது பற்றி கேட்டோம்.

"முஸ்லிம் மக்களுக்காக பல இயக்கங்கள் இருக்கும்போது ஐ.டி.எம்.கே கட்சியை தொடங்க வேண்டிய அவசியம் என்ன?"

இது குறிப்பிட்ட மதத்திற்கான கட்சி அல்ல. ஒடுக்கப்பட்ட, பிற்ப்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களுக்கான கட்சி இது. அதே நேரத்தில் சிதறிக் கிடக்கும் முஸ்லிம்களை பெரும் அரசியல் சக்தியாக உருவாக்க வேண்டுமென்பதுதான்" எங்கள் லட்சியம்."

"திடீரென் முஸ்லிம் லீக் மீது குற்றம் சுமத்த என்ன காரணம்?"

"தனியாக ஒரு நாட்டையே (பாக்கிஸ்தான்) பெற முடிந்த கட்சிதான் முஸ்லிம் லீக் ஆனால், இன்றைக்கு தோடதலுக்காக ஏதாவது ஒரு கட்சியில் சீட் வாங்கி அந்த கட்சி சின்னத்திலேயே போட்டியிட்டு அதற்கு பிரதிநிதியாகிவிடுகின்ற நிலைமைதான் உள்ளது. அதற்கு இப்ப எம்.பி யாக இருக்கிற காதர்மொய்தீன் முஸ்லிம்கள் நலன் பற்றியோ, தமிழ்நாட்டு நலன் பற்றியோ பார்லிமென்டில் பேசியிருக்கிறாரா? லீக் இன்றைக்கு எங்க சமுதாயத்திலிருந்து லீக்காகி, சீக்காகி,வீக்காகி விட்டது அதனால்தான் புதிதாக தோன்றிய த.மு.மு.க தவ்ஹீத் ஜமாத் அமைப்புகள் வேகமாக வளர்ந்தன். ஆனால் அவர்களும் சரியில்லை, இவர்களை அடையாளம் காட்ட எங்கள் இந்திய தேசிய மக்கள் கட்சி பாடுபடும்.

என்று சொன்ன குத்புதீன் ஐபக் "தமிழகத்தன் பல பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் ஐ.டி.எம்.கே யின் கிளைகளை தொடங்கி வருகிறோம்" என்றார். இஸ்லாமியர்களுக்கான இந்த புதிய அமைப்புக்கு தமிழக அரசியல் தலைவர்கள் சிலர் ஆதரவும் ஆலோசனையும் வழங்கி வருவதால் ஐ.டி.எம்.கே யின் கவனம் நாடாளுமன்றத் தேர்தல் களத்தின் மீது பதிந்துள்ளது.

- சேகுவேரா

நன்றி : நக்கீரன் 21.06.2008
.
"முஸ்லிம் மக்களுக்காக பல இயக்கங்கள் இருக்கும்போது ஐ.டி.எம்.கே கட்சியை தொடங்க வேண்டிய அவசியம் என்ன?"
.
சமூக ஒற்றுமைக்கு என்ன செய்வீர்கள்?
.
தமுமுக அரசியலுக்கு வந்துவிட்டதே ஐடிஎம்கே வை கலைத்து விடுவீர்களா?
.
.

Monday, August 18, 2008

சுதந்திர தின அணிவகுப்பு - மதுரை - புகைப்பட காட்சிகள் (PHOTO GALLERY)



தமிழகத்தின் மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா கடந்த ஆகஸ்ட் 15, 2008 அன்று மதுரையில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது தொண்டர் படையை கொண்டு இந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் அணிவகுப்பு நடத்தியது. அந்த அணிவகுப்பின் புகைப்படக் காட்சிகளின் முதல் பகுதியை காண கீழே உள்ள சுட்டியில் சொடுக்கவும். (இரன்டாம் பகுதி இங்கே)
.
படங்கள் உதவி : கோவை தங்கப்பா

Sunday, August 17, 2008

என் மகன் கபூர் குற்றவாளி அல்ல - குண்டு வெடிப்பு சதியின் பின்னணியில் TNTJ - கபூரின் தந்தை பேட்டி


தமிழகத்தின் அமைதியை சீர்குலைக்க முயன்ற தீவிரவாதி அப்துல் கபூர் நெல்லை பேட்டையில் கைது செய்யப்பட்டதாக காலை நாளிதழ்கள் கடந்த ஜூலை 28ம் தேதி காலை முழுக்கமிட்டபோது தமிழகமே ஏன் இந்தியாவே அதிர்ச்சி அடைந்தது என கூறலாம்.



ஜூலை 27ம் தேதி நள்ளிரவு நேரத்தில் நெல்லை களக்காடு காவல் நிலையத்தில் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் திரு.மஞ்சுநாதா சேக் அப்துல் கபூர் (39) I.E.D.(Improvised Explosive Devices) செய்வதில் கைதேர்ந்தவர். மேலும், நெல்லை டவுணைச் சேர்ந்த ஹீரா காவல்துறையிடம் தெரிவித்த தகவலின் பேரில் கைது செய்யப்பட்டதாக கூறியதுடன் கபூர் வீட்டில் கைப்பற்றப்பட்டதாக சில பேட்டரி மற்றும் வயர்கள் போன்றவற்றை காண்பித்தனர்.



நாம் மக்கள் உரிமைக்காக கபூர் தந்தை சேக் முகம்மதுவுடன் சந்தித்ததில் அவர் கூறியதாவது. 'என் மகனின் மைத்துனர் திருமணம் மற்றும் மறுவீடு ஆகிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு இருந்த கபூரை மதியம் சுமார் 3.30 மணிக்கு என் வீட்டுக்கு வந்த இருவர், 'நாங்கள் R.D.O அலுவலகத்திலிருந்து விசாரணைக்காக கபூர் வர வேண்டும் என கூறினார். அப்போது எனது வீட்டை அடையாளம் காட்ட வந்த தவ்ஹீத் ஜமாத்தைச் சார்ந்த செய்யது அலியிடம் நான் எனது மகன் அவனது மாமனார் வீட்டில் இருப்பதாக கூறி அனுப்பிவிட்டேன். பின்பு அவன் வந்தவர்களால் அழைத்து செல்லப்பட்டு வெகு நேரமாகியும் வராததால் பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்தேன். மறுநாள் காலையில் செய்தித்தாள்களை பார்த்த பின்னே அவன் வெடிகுண்டு வழக்கில் கைது செய்யப்பட்டதை அறிந்து கொண்டேன். அவன் தவ்ஹீத் ஜமாத்தில் பரங்கிமலை கிளை பொருளாளராக செயல்பட்டு வந்த நிலையில் எங்கள் ஜமாத்தில் பிரச்சினை செய்து பேட்டை தவ்ஹீத் ஜமாத்தினரை கண்டித்தான். அவர்கள்தான் போலீசில் போட்டு கொடுத்து அப்பாவியான என் மகனை குற்றவாளி போல ஆக்கிவிட்டனர் என கூறினார்.




கபூரின் மனைவி ஜீனத் நஜ்மா நம்மிடம், 'அரசியலில் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். என் கணவர் சமீபத்தில் ஆலந்தூரில் உள்ள ஒரு பள்ளியில் பாலியல் முறைகேடு நடந்தபோது அதை வெளிகொணர்ந்து நடவடிக்கை மேற்கொண்டார். அப்படிப்பட்டவரை தீவிரவாதியாக சித்தரிப்பது மிகுந்த மன உளைச்சலாக உள்ளது'. த.மு.மு.க.தலைமை இதில் தலையிட்டு என் கணவரை காப்பாற்ற வேண்டும் என கண்ணீருடன் கூறினார்.
கடந்த 28ம் தேதி காலையில் கிடைத்த தகவலின் அடிப்படையில் ஹீரா பிடிபட்டு அவர் கொடுத்த தகவலின் பேரில் கபூர் கைது செய்யப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால், ஹீராவின் தந்தை, கபூர் செய்யப்பட்டு சுமார் 4 மணி நேரம் கழித்து தன் மகனிடம் போனில் பேசியுள்ளார். முதலில் வெளி மாநிலங்களுடன் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டது. பின்பு, காவல்துறையினர் விசாரணையில் அவ்வாறு இல்லை என்பது தெளிவானது. ஐ.நு.னு. வெடி மருந்துகள் செய்வதில் வெறும் 7வது வகுப்பே படித்த கபூர் தேர்ச்சி பெற்றவர் எனக் கூறப்பட்டதற்கும், அவர் வீட்டில கைப்பற்றப்பட்ட பொருள்களுக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாக தெரியவில்லை. அவருடைய வீட்டில் பொருள்கள் கைப்பற்றப்பட்டபோது யாரிடமும் கையெழுத்து பெறப்படவுமில்லை.



மேலும், மதுரை பாண்டி கோவில் பகுதியில் கைப்பற்றப்பட்டதாக கிடைத்த வெடி பொருட்கள் எதுவும் பத்திரியாளர்களுக்கு காட்டப்படவில்லை. இது அல்லாமல் கடையநல்லூர் அருகே சேர்ந்தமரம் பகுதியில் பெருமளவில் வெடிமருந்துகள் கைப்பற்றப்பட்டு 3 பேர் (முஸ்லிம் அல்லாதோர்) கைது செய்யப்பட்டுள்ளனர். இத்துடன் பெங்களுர் வெடிகுண்டு சம்பவத்தில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்ட மைசூரை சேர்ந்த வெடிஉப்பு வியாபாரிகள் சந்துரு, சிக்க கவுடா ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில் சிவகாசியை சேர்ந்த பன்னீர் செல்வம், தாமஸ், ராஜ்பால் ஆகியோரை மைசூர் மேட்டுகாளி போலீசார் தேடி வருகின்றனர்.



இவையெல்லாம் ஊடகங்களில் முறையாக வெளிக்கொணரப்படவில்லை. ஆனால், இரண்டு வருடங்களுக்கு முன்பு நாடாளுமன்றத்தை தகர்க்கப் போவதாக நெல்லையிலிருந்து இ-மெயிலில் அனுப்பியதாக நெல்லையில் உள்ள ஒரு கல்லூரியின் பேராசிரியர் கைது செய்யப்பட்டு அதில் உண்மை இல்லை என பின்பு விடுவிக்கப்பட்டார். அவ்வழக்கு பின்பு என்ன ஆனது என்பது யாருக்கும் தெரியாமலேயே போய் விட்டது.

செய்தி : நெல்லை உஸ்மான்.

ஆகஸ்ட் 15 - தடையை தாண்டிய இஸ்லாமிய படை



ஆகஸ்ட் 15 - தடையை தாண்டிய இஸ்லாமிய படை




தமிழகத்தின் மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா கர்நாடகம், கேரளம், தமிழ்நாடு என மூன்று மாநிலங்களில் சுதந்திர தினத்தை முன்னிட்டு தனது தொண்டர் படையை கொண்டு இந்திய சுதந்திர தினத்தை சிறப்பிக்கும் வகையில் அணிவகுப்பு நடத்த போவதாக அறிவித்த தினத்தில் இருந்து இந்த அணவகுப்பை எப்படியாவது தடுத்து நிறுத்திவிட ஃபாசிச சக்திகளோடு உளவுத்துறை, காவல் துறை என அரசின் அனைத்து துறைகளும் கங்கனம் கட்டிக் கொண்டு களம் இறங்கின. காவல்துறையும், உளவுத் துறையும், ஃபாசிச சக்திகளோடு சோந்து பல சதித் திட்டங்களை திடு்டி நிறைவேற்றின. தமிழகத்தில் இது இன்னும் கனஜோராக நடந்தது.



தமிழக காவல்துறை இன்னும் ஒரு படி மேலே போய் ஒட்டுமொத்த முஸ்லிம் சமுதாயத்தையும் தீவிரவாதிகளாக சித்தறிக்கும் முயற்சியில் இரங்கியது. இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டார்கள், வெடி குண்டு புரளிகள் கிளப்பப்பட்டன, தினமலர் போன்ற ஃபாசிச ஆதரவு பத்திரிகைகள் இந்த பதட்டத்தை சற்றும் குறையாமல் தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியல் ஈடுபட்டன.



அதிராம்பட்டினம், காயல்பட்டினம், கீழக்கரை என இஸ்லாமியர்கள் அதிகம் வசித்து வரும் ஊர்களில் முஸ்லிம்களின் வீடுகள் சோதனையிடப்பட்டன, முஸ்லிமகள் சித்திரவதைக்காளாக்கப்பட்டார்கள். இதை எந்த சமுதாய பத்திரிகைகைளும் கண்டிக்காத நிலையில் அதிராம்பட்டினத்தை சேர்ந்த சில சகோதரர்களால் நடத்தப்பட்டு வரும் அதிரை எக்ஸ்பிரஸ் என்ற வலைப்பதிவு மட்டும் காவல்துறை மற்றும் ஃபாசிச பத்திரிகை சக்திகள் நடத்தி வரும் முஸ்லிம்களுக்கு எதிரான செயல்களை கண்டித்து பல கட்டுரைகளை வெளியிட்டு இந்த இக்கட்டான சமயத்தில் சமுதாயத்தின் குரலாக அவ்வப்போது ஒலித்து வந்தது சற்று ஆறுதலான செய்தி.

தமிழகமெங்கும் மனித நீதிப் பாசறையின் உறுப்பினர்கள் மீது பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டனர், காவல்துறைக்கு முறைப்படி தகவல் அளித்து விட்டு நடந்த மனித நீதிப் பாசறையின் சுதந்திர தின அணிவகுப்பு ஒத்திகைகள் ஃபாசிச பத்திரிகைகளால் பயங்கரவாத செயலாக சித்தறிக்கப்பட்டன. எப்படியாவது இந்த அணிவகுப்பை தடுத்து விடுவது என்று மனித நீதிப் பாசறையின் உறுப்பினர்கள் மிரட்டப்பட்டார்கள். இறுதியாக இந்த அணிவகுப்பை தடைசெய்து காவல் துறை ஆனை பிறப்பித்தது. இதை எல்லாம் எதிர் பார்த்திருந்த மனித நீதிப் பாசறை உடனடியாக இன்றும் சாகாமல் இருக்கும் இந்திய நீதித்துறையை அனுகியது. உடனடியாக காவல்துறையின் தடையை நீக்கிய நீதிமன்றம் மனித நீதிப் பாசறை தனது சுதந்திர தின அணிவகுப்பை எந்த சிரமமும் இல்லாமல் நடத்த உத்தரவு பிறப்பித்தது.



திட்டமிட்டபடி கடந்த ஆகஸ்ட் 15, இந்திய சுதந்திர தினத்தன்று அனைத்து தடைகளையும் தகர்த்த மனித நீதிப் பாசறையின் போராளிகள் தங்கள் சுதந்திர தின அணிவகுப்பை செவ்வென நடத்திக்காட்டினர். மதுரை மாட்டுத்தாவனி பேரூந்து நிலையம் அருகில் உள்ள விறகுபேட்டையில் வெள்ளையருக்கு எதிராக போராடிய இந்திய சுதந்திர போராளியான மாவீரன் மருதநாயகம் பெயரில் அமைக்கப்பட்டிருந்த மைதானத்தில் சரியாக மாலை 3.00 மணிக்கு அணிவகுப்பு துவங்கியது.
மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் மறியாதைக்குறிய அபுபக்கர் சாஹிப் அவர்கள் அணிவகுக்க தயாரான முஸ்லிம் படையினரின் முதல் மறியாதையை பெற்றுக் கொள்ள அணிவகுப்பு துவங்கியது. 20 வீரர்கள் அடங்கிய "பேன்ட் ட்ரூப்ஸ்" எனப்படும் இசைக்குழுவினர் தேசிய ஒருமைப்பாட்டு கீதமான "ஸாரே ஜஹான் சே அச்சா" என்ற கீதத்தை உணர்ச்சி பெருக்போடு வாசிக்க மனித நீதிப் பாசறை அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் 800 போராளிகள் அணிவகுத்து செல்ல நிகழச்சிகள் ஆரம்பமாயின.


பின்னர் மனித நீதிப் பாசறையின் பொதுச்செயளாலர் திரு. ஏ. யா முஹைதீன் தனது வரவேற்புரையை வழங்கினார், பின்னர் மனித நீதிப் பாசறையின் தலைவர் திரு.முகம்மது அலி ஜின்னா அவர்கள் சுதந்திர தின உறுதிமொழியை வாசித்தார்.

" இறைவனின் திருப்பெயரால் இந்த உறுதி மொழியை எடுத்து கொள்கின்றோம், சுதந்திர போராட்டங்களில் தங்கள் இன்னுயிரையும், உடைமைகளையும், உடலுறுப்புக்களையும் இழந்து ஏற்றி வைத்த இந்த சுதந்திர கனலை நாங்கள் என்றும் ஏந்திச் செல்வோம், அரும்பாடு பட்டு பெறப்பட்ட இந்த சுதந்திரத்தை நாங்கள் எந்த வலை கொடுத்தேனும் தக்க வைத்து கொள்வோம். எங்கள் தாய்த்திருநாடு இந்தியாவையும், இந்தியர்களனைவரையும் நாங்கள் நேசிக்கின்றோம், இனமோ,நிறமோ, மொழியோ, எவ்வித பேதங்களும் எம்மை பிறிக்காது. பிறப்பினால் யாரும் உயாந்தோர், தாழ்ந்தோர் இல்லை, நாட்டின் சுதந்திரமான அரசியல் சட்ட திட்டங்களையும், பாதுகாப்பையும், நீதியையும் நாங்கள் பாதுகாப்போம். சுதந்திரம் என்பது எமது பிறப்புரிமை, எமது நாடு ஆதிக்க சக்திகளின் முன் அடிமைப்படுத்தப்படுவதை நாம் ஒருபோதும் அனுமதியோம், இந்திய மக்களை தூண்டி விட்டு அவர்களிடையே கலவரத்தை விதைத்து அவர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளச் செய்யும் ஃபாசிச சக்திகளை நாம் தோற்கடிப்போம், வேற்றுமையில் ஒற்றுமை எனும் இந்திய தேசியக் கொள்கைகைய நாம் பற்றிப்பிடிப்போம், இதற்கு கடவுள் சாட்சியாக இருக்கட்டும்"




என்ற உறுதிமொழியை மனித நீதிப் பாசறையின் தலைவர் திரு. முகம்மது அலி ஜின்னா அவர்கள் வாசிக்க திரன்டிருந்த மக்கள் கூட்டமும் அணிவகுத்து நின்ற இஸ்லாமிய படையும் உறுதிமொழியை சோந்து கூறி உறுதி மொழி எடுத்தது. பின்னர் அஸ்ஸாம் மாநிலத்தின் "யுனைட்டட் டெமாக்ரட்க் ஃப்ரன்ட்" என்ற அமைப்பின் தலைவரும் நிகழச்சியின் சிறப்பு விருந்தினருமான ஹாபிழ் ரஷீத் சவுத்திரி அவர்கள் தனது உரையை ஆரம்பித்தார், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் பணிகளை புகழந்த அவர் கட்டாயம் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா அரசியில் அடியெடுத்து வைக்க வேண்டும் என வலியுருத்தினார். அதன் பின்னர் பேசிய உயர் நீதி மன்ற மூத்த வழக்குறைஞர் திரு. பவானி மோகன் அவர்கள், ஃபாசிஸ்ட்டுகள் தான் உண்மையான தீவிரவாதிகள் என்றும், இஸ்லாமியர்கள், ஹிந்துக்கள், சீக்கியர்கள் என அணைத்து தரப்பு மக்களாலும் போராடி பெறப்பட்ட சுதந்திரத்தை திருட முனைவதாகவும், இன்னும் தமிழக அரசு உடனடியாக சிறையில் உள்ள 8 வருடங்களை கடந்த கைதிகள் அனைவரையும் இன பேதம், மத பேதம் இல்லாமல் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு விடுவிகக் வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார்.


பின்னர் நடந்த நிகழ்ச்சியில் சுதந்திர போராட்ட வீரர்களான மறியாதைக்குறிய வைத்தியலிங்கம் அவர்கள், மறியாதைக்குறிய குலாம் அப்துல் ஆரிஃப், மறியாதைக்குறிய சேக், மறியாதைக்குறிய மாயன்டி பாரதி ஐயா ஆகியோரை மனித நீதிப் பாசறையின் தலைவர் திரு முகம்மது அலி ஜின்னா அவர்கள் கவுரவித்தார்கள்.

பின்னர் பேசத் துவங்கிய பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் திரு. ஆபபக்கர் சாஹிப் அவர்கள் பல்வுறு சோதனைகள் மற்றும் தடைகளை தாண்டி சுதந்திர தினத்தை கொண்டாட திரண்டிருந்த மக்களை புகழந்தார். அரசு தனது குடிமக்களை சரிசமமாக நடத்தாததால்தான் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா இந்த அஜென்டாவை கையில் எடுத்ததாக் குறிப்பிட்ட அவர், நாட்டில் நடைபெறும் குண்டுவெடிப்புக்களுக்கெல்லாம் முஸ்லிம்கள் மீது பலியை போட்டுவிட்டு உண்மையான குற்றவாளிகள் எளிதாக தப்பி செல்வதற்கு உதவி வரும் அரசை வண்மையாக கண்டித்த அவர், நம்பிக்கை வாக்கெடுப்பின்போது நடந்த பிரச்சினைகளை மறைக்க மத்திய அரசே அஹமதாபாத்தில் குண்டுவெடிப்புக்களை நிகழ்த்தியாதாக பாரதீய ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் சுஷ்மா சுவராஜின் பேச்சை குறிப்பாக சுட்டிக் காட்டி பேசினார். 1993 ல் இருந்து நாட்டில் நடைபெற்ற அணைத்து குண்டுவெடிப்புக்களையும் விசாரிக்க ஒரு சுதந்திரமான கமிசனை அமைக்க கோரிக்கை விடுத்தார். இந்தியா சுதந்திரமடைந்த கடந்த 61 வருட காலமாக இந்திய முஸ்லிம்கள் அரசியலில் நேரேதிர் நிலையை எடுத்ததன் விளைவு இந்திய முஸ்லிம்கள் சொல்லெனா துயருக்கும் அடக்குமுறைக்கும் உள்ளாக்கப்பட்டார்கள். இனிவரும் காலங்களில் அரசியல் அதிகாரங்களை கைப்பற்றுவதங்காக வேண்டி இஸ்லாமியர்கள் நேரடி அரசியலில் ஈடுபட வேண்டும் இன்னும் தலித்துகளோடு கைகோர்த்து பணி செய்ய வேண்டும் என்றும் குறிபபிட்டார்.

பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் திரு. ஆபபக்கர் சாஹிப் அவர்களின் உரைக்கு பின்னர் அஸ்ஸாம் மாநிலத்தின் "யுனைட்டட் டெமாக்ரட்க் ஃப்ரன்ட்" என்ற அமைப்பின் தலைவரும் நிகழச்சியின் சிறப்பு விருந்தினருமான ஹாபிழ் ரஷீத் சவுத்திரி அவர்களும், நீதி மன்ற மூத்த வழக்குறைஞர் திரு. பவானி மோகன் அவர்களும், NCHRO செக்கரட்டரி SMA ஜின்னா ஆகியோரும் கவுரவிக்கப்பட்டார்கள்.


பின்னர் மனித நீதிப் பாசறையின் துனைத் தலைவர் திரு. தெஹ்லான் பாக்கவி் அவர்கள் தனது சிறப்புரையை துவக்கினார், இந்திய சுதந்திரப் போரில் தங்கள் விகிதாச்சாரத்தை விட அதிக எண்ணிக்கையில் பங்கெடுத்து உயிர் உடமைகளை இழந்த இந்த இஸ்லாமிய சமுதாயத்திற்கு இன்று இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடப்படுவதற்கு அரசே அனுமதி மறுக்கும் நிலையை சுட்டிக்காட்டி பேசுகையில் "இந்திய சுதந்திர தினத்தை கொண்டாடும் உரிமை இந்திய முஸ்லிம்களுக்கே இல்லை என்றால் வேறு யாருக்குமு் அந்த உரிமை கிடையாது" என்றும், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை விதித்த காவல் துறையை கடுமையாக கண்டித்த அவர் மதுரை மாநகர கமிசனர் நந்தகோபாலனுக்கும் ஆர்.எஸ்.எஸ ஃபாசிச சக்திகளுக்கும் இடையே உள்ள தொடர்பை விசாரிப்பதற்கு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுருத்தினார். இன்னும் தமிழக சிறைகளில் 8 வருடங்களுக்கும் மேலாக வாடிக்கொண்டிருக்கும் அனைத்து முஸ்லிம் சிறைவாசிகளையும் வரும் செப்டம்பர் 25 பேரறிஞர் அண்ணா பிறந்த நாளன்று விடுதலை செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

நிகழச்சியின் இறுதியாக மனித நீதிப் பாசறையின் பொருளாலரும், விடியல் வெள்ளி ஆசிரியருமான திரு. எம். முகம்மது இஸ்மாயில் அவர்கள் நன்றியுரை வழங்கினார் அதன் பின்னர் கூடியிருந்த கூட்டம் அமைதியாக கலைந்து சென்றது.

மதுரையை உலுக்கும் வகையில் நடந்த இந்நிகழச்சியில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியாவின் சேர்மன் திரு. ஆபபக்கர் சாஹிப் , அஸ்ஸாம் மாநிலத்தின் "யுனைட்டட் டெமாக்ரட்க் ஃப்ரன்ட்" என்ற அமைப்பின் தலைவர் ஹாபிழ் ரஷீத் சவுத்திரி, மனித நீதிப் பாசறையின் தலைவர் திரு முகம்மது அலி ஜின்னா , மனித நீதிப் பாசறையின் துனைத் தலைவர் திரு. தெஹ்லான் பாக்கவி், உயர் நீதி மன்ற மூத்த வழக்குறைஞர் திரு. பவானி மோகன், மதுரை ஐக்கிய முஸ்லிம் ஜமாத் பொருளாலர் திரு. நிஷ்ட்டர் அஹமத், NCHRO செக்கரட்டரி SMA ஜின்னா உட்பட பலர் கலந்து கொண்டார்கள், நிகழச்சியை காண தமிழகமெங்கும் இருந்து பல ஆயிரக்கணக்கில் பொதுமக்கள் திரன்டு வந்திருந்தனர்.

செய்திகள் உதவி: திரு. A. முகம்மது யூசுஃப் , மிடீயா கன்வீனர், மனித நீதிப் பாசறை

Wednesday, August 13, 2008

இமயத்தை விஞ்சும் தியாகத்தின் சொந்தமே - சுதந்திர தின சிந்தனைகள் (AUDIO)


கடந்த 2007 ம் ஆன்டு இந்திய தேசிய மக்கள் கட்சியினரால் வெளியிடப்பட்ட சுதந்திர தின சிந்தனைகள் ஆடியோ வெளியீடு.

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK) சேர்ந்த ஜனாப். குத்புதீன் ஐபெக் அவர்கள் இமயத்தை விஞ்சும் தியாகத்தின் சொந்தமே!! என்ற தலைப்பில் ஆற்றிய உரையினை கேட்பதற்கு இங்கு சொடுக்கவும்.


.
காரைக்குடி, இஸ்லாம், முஸ்லிம்

இறைச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவோம் - மெளலவி ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி

"இறைச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவோம்"

அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்

Al-Sheikh. Rahmathullah Imthadhi.


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



அஷ்ஷேய்க். ரஹ்மத்துல்லாஹ் இம்தாதி அவர்கள்

தமிழகம் முழுவதிற்கும் ஆம்புலன்ஸ் சேவை தொடர்பு எண்களுடன்

லால்பேட்டை, ஆக.13-

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் தமிழகமெங்கும் உயிர் காக்கும் ஆம்புலன்ஸ் எனும் அவசர ஊர்தி சேவையை நடத்தி வருவது அனைவரும் அறிந்ததே.

தனது இந்த சேவையின் மூலம் தமிழகத்தில் ஏற்ப்பட்ட சுனாமி போன்ற பெரும் இயற்கை சீற்றங்களின் போதும், விபத்துகளின் போதும் ஜாதி, மதம் பாராது இந்த ஊர்திகளின் மூலம் சேவையாற்றி வருகின்றதுஇந்த அமைப்பு.

ஆனால் பெரும்பாலானோருக்கு இந்த சேவையை எப்படி பெருவது என்று தெறியவிலலை அதை மக்களுக்கு அறியப்படுத்தும் முயற்சியாக, தமிழகம் முழுவதும் ஊர்வாரியாக தமுமுக எங்கெல்லாம் தனது ஆம்புலன்ஸ் எனும் அவசர ஊர்தி சேவையை வைத்துள்தோ அங்கு அவசரத்திற்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி மற்றும் தொலைபேசி என்களுடன் இந்த பக்கத்தை கட்டமைத்துள்ளேன்.

கீழே கொடுக்கப்பட்டள்ள இணையச் சுட்டியை சொடுக்கி அதன் பயனை பெறவும், மின்னஞ்சல்கள் மூலமாக மற்றவர்களுக்கும் இந்த தகவலை தெறிவித்து பயனடையச் செய்யவும்.

இந்த தகவல் மனித நேயத்தின் அடிப்படையில் லால்பேட்டை டாட் காம் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.தகவல் அளித்து உதவிய தமுமுக லால்பேட்டை கிளை நிற்வாகிகளுக்கு எங்கள் நன்றியை தெறிவித்து கொள்கின்றோம்.


தமிழகம் முழுவதிற்குமான அவசர ஊர்தி(ஆம்புலன்ஸ்) சேவை தொடர்பு எண்கள் - இங்கு சொடுக்கவும்:CLICK HERE TO ACCESS AMBULANCE SERVICE NUMBERS ALL OVER TAMILNADU

Tuesday, August 12, 2008

பறக்கட்டும் நம் தேசியக் கொடி! சிறக்கட்டும் நம் தேசம்!!

பறக்கட்டும் நம் தேசியக் கொடி! சிறக்கட்டும் நம் தேசம்!!


FLAG


சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகளைத் தொட்டு இருக்கிpறோம். முகில் கிழித்து அசைந்தாடும் நம் தேசியக் கொடியைப் பார்க்க விழிகள் தாவுகின்றன. சுதந்திரத்தின் பெருமை அடிமைகளுக்கு தெரிவதில்லை. ஆர்த்து எழுந்து ஜாதி மதம் இனம் மொழி கடந்து போராடினோம். ஆம், 30 கோடி முகமுடையாள் நம் சிந்தனை ஒன்றுடையாள் என்ற பாரதி கூற்றுக்கு அர்த்தம் கொடுத்தோம். ஆகஸ்ட் 15, தித்திப்பான நாள். வெள்ளை ஆதிக்கம் வெளியேற்றப்பட்ட நாள், நம்மை நாமே ஆளுவதற்கு வழி கண்ட நாள்.


நம்முடைய தேச பிதா அண்ணல் மகாத்மா காந்தி அவர்களைப்பற்றி சர்.மௌண்ட்பேட்டன் பிரபு வேதனையோடு கண்ணீர் மல்க கூறிய வார்த்தைகளை மறந்து விட முடியாது. அடிமை இந்தியாவில் பீரங்கிகளுக்கும், டாங்கிகளுக்கும் இடையில் வந்த போது, ஆம், அடிமை இந்தியாவில் வலம் வந்த போது நாங்கள் அவரைப் பாதுகாத்தோம், ஆனால் சுதந்திர இந்தியாவில் சுட்டுக் கொல்லப்பட்டார். சுதந்திரத்தை நீங்கள் எங்கே காக்கப் போகிறீர்கள் என்று வேதனையோடு கூறினார். மிச்சமுள்ள தோட்டாக்கள் ஆங்காங்கே இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்கும், இறையாண்மைக்கும், எதிராக வெடித்துக் கொண்டு இருக்கின்றன இன்றும். வறுமை, இல்லாமை, கல்லாமை, மூட நம்பிக்கை, ஜாதி, மத மோதல் என் தாய்த் திருநாட்டில் நடப்பது கண்டு வேதனை அளிக்கிறது. நம் தேசியக் கொடியின் மூன்று நிறங்கள் - தியாகம், பசுமை, தூய்மை போன்றவற்றை பாரத மக்களுக்கு பகர்கின்றன.

தேசியக் கொடியை ஏற்றுவோர்களே! ஆட்சியாளர்களே! அரசு அதிகாரிகளே! உங்கள் இதயத்தில் ஒன்றை ஆழமாகப் பதித்துக் கொள்ளுங்கள். தேசியக் கொடி துணியாலும், நூலாலும் நெய்யப்பட்டது அல்ல, இந்திய பன்மைச் சமுதாய மக்களின் இரத்த நாளங்களாலும், நரம்புகளாலும் பின்னப்பட்டது. அதை உடைக்கும் உளுத்தர்களை இனம் கண்டு ஊதையில் துரும்பு போல் ஆக்கிவிடுங்கள். ஆம், நீதி, நேர்மை, வாய்மையை உயரே பறக்க விடுங்கள். வேற்றுமையில் ஒற்றுமை உயரே பறக்கட்டும், மானுடம் சிரிக்கட்டும், இந்தியா உயர்ந்து நிற்கட்டும், உலகமே நம்மைப் பார்த்து படிப்பினை பெறட்டும், பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு என்ற பாடல் பட்டுத் தெறிக்கட்டும் எட்டுத்திக்கும் என்று சுதந்திரப் பொன்நாளை வற்றாத வாஞ்சையோடு வாழ்த்துகிறோம்.

இவண்,

இந்திய தேசிய மக்கள் கட்சி (IDMK), தமிழ்நாடு

50/330, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை,


சென்னை – 600 005


தமிழ்நாடு செல்: 9943802111, 9786011679, 9344510369

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப்) அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் நடத்தவுள்ளது.

எதிர்வரும் 15.08.2008 அன்று இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோடு, நேதாஜி சாலை - மரப்பாலம் அருகிலுள்ள மகாத்மா நினைவு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் ஈரோடு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப்) ஆகியன அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் நடத்தவுள்ளது.

இம்முகாமிற்கு மாவட்ட தலைவர் ஏ.ஆர்.கலீபுல்லாஹ் தலைமையேற்கிறார்.

மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஏ.சாதிக் அலீ வரவேற்புரையாற்றுகிறார்.

வி.ஐ.பி. டெய்லர் பாக்யராஜ், எம்.ஜபருல்லா (எம்.எஸ்.எஃப்.), ஏ.எஸ்.சுஹைல் அஹ்மத் (எம்.எஸ்.எஃப்.), எம்.அன்வர் ஹ{ஸைன் (ஸ்டார் விஷன்), எஸ்.மீரா ஹ{ஸைன் (எம்.எஸ்.எஃப்.), ஏ.பிலால் (எம்.எஸ்.எஃப்.). பி.தவ்ஃபீக் (எம்.எஸ்.எஃப்.), ரியாஜ் முஹம்மது (எம்.எஸ்.எஃப்.) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அ.பஜ்லுர்ரஹ்மான் நன்றியுரையாற்றவுள்ளார்.

இம்முகாமின் சிறப்பம்சங்களாக, இரத்த வகை தெரியாதோருக்கு இலவசமாக அவற்றைக் கண்டறிதலும், பள்ளிக்கூடத்திற்கு மரக்கன்றுகள் அர்ப்பணிப்பும் நடைபெறவுள்ளன.

Monday, August 11, 2008

முஸ்லிம் இந்தியா!! சுதந்திரத்தில் முஸ்லிம்களின் தியாகம்!! (மீள் பதிவு)


தியாகத்தின் நிறம் பச்சை!!
இந்திய சுதந்திரப்போரில் இஸ்லாமியரின் பங்களிப்பு

குறிப்பு : ஆகஸ்ட் 10,2007 தினமனி நாளிதழ் குருமூர்த்தி அய்யர் என்ற வந்தேறி பார்ப்பான் எழுதிய "முஸ்லிம் இந்தியன் - பெயர் மாறுகின்றது" என்ற தலைப்பில் ஒரு துவேஷக் கட்டுரையை பிரசுரித்திருந்தது. இந்த கட்டுரையை (தியாகத்தின் நிறம் பச்சை) டவுன்லோட் செய்து படித்தபின்பு சொல்லுங்கள் "முஸ்லிம் இந்தியன்" என்று மட்டுமில்லை "முஸ்லிம் இந்தியா" என்று பெயர் மாற்றக்கூடிய அளவிற்கு முஸ்லிம் இந்தியர்கள் இந்த இந்திய நாட்டின் சுதந்திரத்திற்காக தியாகம் செய்துள்ளார்கள்.

குருமூர்த்தி அய்யரின் ஜாதிக்காரர்களாகிய வாஜ்பாய், அத்வானி போன்று சுதந்திரப்போராட்ட வீரர்களை காட்டிக்கொடுத்து சேவகம் செய்து வாழ்ந்தவர்களல்ல எம் முஸ்லிம்கள் மாறாக சுதந்திரத்திற்காக ஆங்கிலேய தோட்டாக்களையும், ஈட்டிகளையும் மாரில் தாங்கி தம் செங்குருதி சிந்தி இந்திய சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்த உண்மை செம்மள்கள் எம் முஸ்லிம்கள். தேசத்துரோகிகளான கோட்சேயின் கூட்டங்கள் தேச பக்தர்களாக வேஷம் போடும் இந்தியாவில் இன்று இந்த தேசத்தை பூர்வீகமாக கொண்ட எம்இனம் தேச துரோகிகளாக குருமூர்த்தி போன்ற வந்தேறி அந்நிய பார்ப்பனர்களால் அடையாளம் காட்டப்படுவது வேடிக்கையானது. - முகவைத்தமிழன்.



நன்றி கொல்வதை வாழக்கை வழியாகக் கொண்டவர்கள் மட்டுமே, இந்திய விடுதலைப் போரில் இஸ்லிம்களின் பங்கை மறைப்பார்கள் அல்லது மறுப்பார்கள்.

தேசப் பிரிவினை;க்கு முஸ்லிம்களே காரணம் என்றொரு பொய்யைக்கட்டவிழ்த்து விட்டார்கள் சில பாசிஸ்டுகள். இவர்கள இந்தப் பொய்யை இடைவிடாமல் பரப்பினார்கள். இதை ஒரு பெரும் பகுதி மக்கள் நம்பவும் செய்தார்கள்.

இந்த பாசிஸ்டுகள் மேலே நாம் குறிப்பிட்ட பொய்யைப் பரப்புவதோடு நின்று விடவில்லை. வரலாற்றின் ஒரு முக்கியப்பகுதியைக் குழி தோண்டிப் புதைக்கவும் செய்தார்கள். அப்படி அவர்கள் புதைத்த வரலாறுதான் இந்திய விடுதலைப் பேரில் முஸ்லிம்களின் பங்கு.

இந்த பாசிஸ்டுகள் இன்னொரு பாதகத்தையும் எந்தத் தயக்கமுமின்றி செய்து வருகின்றார்கள். அது இந்தியாவுக்கு இரண்டகம் செய்தவர்கள் முஸ்லிம்கள் என்றொரு வடி கட்டின பொய்யையும் பரப்பி வருகிறார்கள்.

இந்தப் பொய்கள் அவர்கள் எதிபார்த்த பலனை அவர்களுக்குத் தராமல் போய்விடவில்லை இந்தப் பொய்கள் இன்றைய முஸ்லிம்களிiயே ஒரு குற்ற உணர்வை ஏற்படுத்தித் தலைதாழ்த்தச் செய்துவிட்டது என்றால் அது மிகையாகாது.

இந்த நூல் மறைக்கப்பட்ட அல்லது புதைக்கப்பட்ட உண்மைகளை அகழ்ந்து வெளியே கொண்டு வந்து ஒரு வரலாற்று வெளிச்சத்தைத் தருகின்றது.

ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கு எதிராக எழுந்து போராடி தங்கள் இன்னுயிரை ஈந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை ஏராளம்!! இந்த வiலாறு, அதாவது ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக முஸ்லிம்கள் தொடுத்த போர் ஒரு நீண்ட நெடியகாலம் வரை நீடித்தது. ஆகவே முஸ்லிம்களின் விடுதலை;ப் போர் வரலாறு மிகவும் நீண்டதொரு வரலாறு.

இந்த வரலாறு இல்லாத வரலாறு குறையுடையதொரு வரலாறே!!

ஆதலால் இந்திய விடுதலைப் போரில் முஸ்லிம்களின் வரலாறு முழுமையாக மக்கள்முன் கொண்டு வந்து சமர்ப்பிக்கப்பட்டாக வேண்டும்.

இந்த வகையில் நூலாசிரியர் அப்துல் சமது அவர்கள் பக்கம் 11ல் குறிப்பிட்டுள்ளபடி ஆய்வுகள் தொடர வேண்டும்.

இதனாலெல்லாம் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கெதிரான இந்திய விடுதலைப் போர் வரலாறு இன்னும் நிறைவடையவில்லை. ஒரு பெரும் இடைவெளி கொண்டதாகவே இருக்கின்றது. இந்தியாவில் ஒரு வரலாற்றுப் படுகொலை ஒரு பலாத்காரத்தோடு திணிக்கப்பட்டு வருகின்றது. இந்த வகையில் மதுரை பல்கலைக்கழகத்தில் பாட நூலாக வைக்கப்பட்டிருக்கும் ர்ளைவழசல ழுக குசநநனழஅ ளுவசரபபடந in ஐனெயை ஓர் எடுத்துக்காட்டு.

இதேபோல்தான், யாருக்கெல்லாம் இந்திய விடுதலைப் போரில் பங்கில்லையோ அவர்களுக்கெல்லாம் முக்கியத்துவம் தரும் ஒரு டிபாய் வரலாறாக வரையப்பட்டு அரசு அங்கீகாரம் பெறத்துடித்துக் கொண்டிருக்கிறது. இப்படி ஒரு காலகட்டத்தில் இந்த நூல் இன்னும் இரடடிப்பு முக்கியத்துவத்தைப் பெறுகின்றது.

இந்தியாவின் விடுதலை வரலாற்றை வரைகின்றவர்கள் இந்த வரலாற்றை - இஸ்லாத்தின் சீரிய பங்கை மறந்து விடக்கூடாது! இதை இன்னும் குறிப்பாகச் சொன்னால் 'தேசியம்' என்பது பிற்றை நாட்களில் தோன்றிய ஒன்றுதான். ஆனால் முஸ்லிம்களின் விடுதலைப் போர் 'தேசியம்' என்ற கொள்கை அறிமுகப்படுத்;தப்படுவதற்கு எத்தனையோ ஆண்டுகளுக்கு முன்னர் ஆரம்பமானது.

இந்தியாவில் முஸ்லிம்கள் ஆங்கிலேயர்களின் ஆதிக்கத்திற்கெதிராக போராடினார்கள். அதே காலகட்டத்தில் கவ்காஸ் பகுதியில் ஸார் மன்னர்களின் ஆதிக்கத்திற்கெதிராக இமாம் காசிமுல்லாஹ் ஷஹீத் இமாம் ஷாமில் ஆகியோர் போihடினார்கள்.

ஆங்கிலேயர்கள் தோல்வியை முதலில் முத்தமிட்டது ஆப்கானிஸ்தான் முஸ்லிம்களின் கைகளில்தான் (இந்த நூலின் பக்கம் 6). ஆங்கே முஸ்லிம்களை ஆதிக்க ஆங்கிலேயர்களுக்கு எதிராக நிறுத்தியது இஸ்லாம்தான்.

இந்த நூலின் பக்கம் 16,17ல் குறிப்படப்படும் செய்யத் அஹ்மத் ஷஹீத் அவர்களை ஆங்கிலேயர்களுக்கெதிராக கிளர்ந்தெழச் செய்தது இஸலாம்தான். ஷஹீத் செய்யத் அஹ்மத் அவர்களின் வாழ்க்கை வரலாற்றை, 20ம் நூற்றாண்டின் இஸ்லாமிய அறிஞர் அல் மியான் என்ற அபுல் ஹஸன் அலி நத்வீ அவர்கள் இஸ்லாமிய எழுச்சியின் நாயகர்கள் வரிசையில் இணைத்துள்ளார்கள்

ஆங்கிலேயர்களுக்கெதிராக இந்தியாவில் முஸ்லிகள் போராடி தங்கள் உயிரைத் தந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் எகிப்தில் ஆங்கிலேயர்களுக்கெதிராக முஸ்லிம்கள் போராடிக் கொண்டிருந்தார்கள். அந்தப் போராட்டத்தில் அவர்களுக்கு உந்து சக்தியாக இருந்து உற்சாம் தந்தது இஸ்லாம்தான்.

இந்த உண்மைகளின் ஒளியில் இஸ்லாத்தின் பங்கு உரிய அழுத்தத்தோடு எடுத்துச் சொல்லப்பட வேண்டும். இந்த நூலை 'இலக்கியச்சோலை'யின் வெளியீடாக வெளியிட முன்வந்து, இசைவும் தந்த பேரா. அப்துல் சமது அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

'இலக்கிச்சோலை'யின் இலக்கியப் பணியும் இஸ்லாமியப் பணியும் வல்லோன் அல்லாஹ்வின் பெருங்கருணையினால் தொடருகின்றது. அல்ஹம்ந்துலில்லாஹ்.

வாசகர்கள் வழக்கம் போல் தங்கள் ஆதரவைத் தருவர்கள் என எதிர்பார்க்கின்றோம்.

இவண்,

மு. குலாம் முஹம்மது

காப்பாளர், இலக்கியச்சோலை

கட்டுரையை முழுமையாக படிப்பதற்கு இங்கு சொடுக்கி டவுன்லோட் செய்யவும்.

தியாகத்தின் நிறம் பச்சை (WORD DOCUMENT)

தியாகத்தின் நிறம் பச்சை (AS PDF FILE)

Saturday, August 09, 2008

தலைமை நீதிபதி ஏ.எம். அஹமதி அவர்கள் கூறுவது என்ன?



அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்பார்ந்த சகோதரர்களே!

கடந்த 03.08.2008 அன்றைய கல்ஃப் நியூஸ் (GULF NEWS) பத்திரிகையில் ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய தலைமை நீதிபதி பெருமதிப்பிற்குரிய ஏ.எம். அஹமதி அவர்கள் டெல்லியில் கடந்த 02.08.2008 அன்று இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தால் (IICC) நடத்தப்பட்ட கருத்தரங்கு ஒன்றில் பேசியதாக சில கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன. ஓய்வு பெற்ற முன்னாள் இந்திய தலைமை நீதிபதி பெருமதிப்பிற்குரிய ஏ.எம். அஹமதி அவர்கள் கூறுவது என்ன?

முஸ்லிம்கள் இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தை பயன்படுத்த தவறி விட்டார்கள் அன்றியும் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் முஸ்லிம்களை கைவிட்டதில்லை. காரணம்,,

இந்திய அரசியல் அமைப்புச்சட்டம் எல்லா குடிமக்களுக்கும், இந்திய பிரஜைகளுக்கும் சரிசமமான அந்தஸ்து வழங்கி இருக்கிறது.
அரசியல் அமைப்பு சட்டம் முஸ்லிம்களாகிய நமக்கு வழங்கியுள்ள உரிமைகளை முறைப்படி நம் சமுதாய நன்மைகளை கருத்தில்கொண்டு தீர்க்கமாக சிந்தித்து சட்டரீதியாக அடைய முயற்சிக்க வேண்டும்.

அனைத்து முஸ்லிம்களும் ஒருமித்த முயற்சியுடன் அரசியல் சட்டம் நமக்கு வழங்கியுள்ள உரிமைகளை மற்ற சமுதாயத்திரைப்போல் பெற்று சமூக, பொருளாதார, அரசியலில் முன்னேற்றம் அடைய வேண்டும்.

தீர்வு : அனைத்து தரப்பு முஸ்லிம்களும் ஓரணியில் திரண்டு அரசியல் ரீதியாக நம் வாக்குகளை ஒன்றினைத்து சட்டம் இயற்றும் சபைகளில் நம் பிரதிநிதிகளை அதிகமதிகமான அளவில் தேர்தல் களத்தில் வெற்றிபெற்று அனுப்பி நம் இழந்த உரிமைகளைப் பெறவும், இருக்கின்ற உரிமைகளை தக்க வைத்துக்கொள்ளவும், கல்வி-உயர்கல்வி, குறிப்பாக அரசாட்சி செய்யும் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். ஐ.எஃப்.எஸ் போன்ற கல்வி இடங்களில் முஸ்லிம்கள் தங்கள் உரிய இடத்தை எட்டவும் அரசாங்க அதிகாரிகளாகவும், பொது நிறுவனங்களில் இயக்குநர்களாகவும் அமர்வதற்கான ஏற்பாடுகளை சமுதாயத்தில் அக்கறை உள்ள ஒவ்வொரு முஸ்லிமும் செய்யவேண்டும். இதற்கு முதற்படியாக இந்திய தேசிய மக்கள் கட்சியை அரசியல் சாசனத்தில் நமக்கு வழங்கிய உரிமைக்கு ஏற்ப, தலைமை தேர்தல்கமிஷனின் தக்க அங்கீகாரத்துடன் அமைத்துள்ளோம். தமிழகத்தில் 48 அரசியல் கட்சிகள் தேர்தல்கமிஷனின் அங்கீகாரத்துடன் செயல்படுகின்றன. சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சி உட்பட, ஆனால் அந்தோ பரிதாபம் முஸ்லிம் லீக் உட்பட, தமுமுக, ததஜ மற்ற லீக்குகள் என்று எந்த ஒரு முஸ்லிம் அமைப்பும் எந்த அங்கீகாரத்தையும் பெறாமலேயே களத்தில் கவிபாடிக்கொண்டு நிற்கின்றன. இப்படி இருந்தால் தலைமைநீதிபதி அஹமதி கூறுவதைப்போன்று எப்போது நமது அங்கீகாரத்தை எப்படி அடைவது?

தீர்ப்பு உங்கள் கையில்.


இவண்,
அப்துல் ரவூப்.
அபுதாபி

Wednesday, August 06, 2008

வக்பு வாரிய கல்லூரி விவகாரமும், ததஜவின் போராட்டமும்!

கேள்வி : வக்பு வாரியக் கல்லூரி விவகாரத்தில் வாரியத் தலைவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ததஜ போராட்டம் நடத்தியுள்ளதே...?

பதில் : அணுசக்தி ஒப்பந்தம், மின் வெட்டு, விலைவாசி உயர்வு போன்ற வற்றில் போராட்டங்களை நடத்தாதவர்கள், வக்பு வாரியத்தை மட்டும் குறிவைக்கிறார்கள் எனில், அவர்களது பொறாமை குணம்தான் இதற்கு காரணம் என்பதை முதலில் புரிந்துகொள்ள வேண்டும்.

இனி விளக்கத்திற்கு வருவோம். அதாவது வக்பு வாரியக் கல்லூரியை முன்னேற விடாமலும், கண்ணியக் குறை வான செயல்களை செய்துக் கொண்டும் ஒரு கூட்டம் தொடர்ந்து செய்து வந்த பித்தலாட்டத்திற்கு, எதிராக மதுரை மக்கள் வெகுநாட்களாக குமுறிக் கொண் டிருந்தார்கள். அதனடிப்படையில் அக்கல்லூரியை எல்லா வகையிலும் மேம்படுத்துவதற்காக வக்பு வாரியத் தலைவர் செ.ஹைதர் அலி எல்லா முயற்சிகளும் எடுத்து வருகிறார்.

இதற்கு சிலர் அழகிரி பெயரை சொல்லி இடையூறு செய்தனர். அங்கு புதிதாக போடப்படும் 9 பேராசிரியர் களையும் முஸ்லிம் அல்லாதவர் களையே போட வேண்டும் என அடம்பிடித்தனர். இதற்கு வக்பு வாரியத் தலைவர் அசைந்து கொடுக்கவில்லை. பிறகு முதல்வர் கலைஞரை சந்தித்து வாரியத் தலைவர் முறையிட்டார். அதன் பிறகுதான் ஒன்பது பேரில் குறைந்தது ஐந்து முஸ்லிம் பேராசிரியர்களையாவது நியமிக்க வேண்டும் என முடிவானது. ஹைதர் அலி இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால் 9 பேராசிரியர்களும் முஸ்லிம் அல்லாத சமுதாயத்தை சேர்ந்தவர்களாகவே நியமிக்கப்பட்டிருப் பார்கள் என்பது மனசாட்சி உள்ளவர் களுக்கு தெரியும்.

முதல்வரின் மகன் பெயரை பயன் படுத்தி சிலர் துஷ்பிரயோகம் செய்ய வந்த போதும், அதை முதல்வரிடமே முறையிட்டு 9 பேரில் 5 பேரை முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்தவர்களாக நியமித் ததற்கு முறைப்படி பார்த்தால் பாராட்டு தெரிவித்திருக்க வேண்டும். ஆனால் பொறாமை காரணமாக குறை சொல்கிறார்கள்.

இத்தனை வருடங்கள் மோசமான நிலையில் வக்ஃபு வாரியம் இருந்தபோது, அதற்கு எதிராக போராடாதவர்கள் இப் போது தமுமுகவின் பொதுச் செயலாளர் செ.ஹைதர் அலி அவர்கள் வக்பு வாரியத்திற்கு தலைவராக பொறுப்பேற்ற பிறகு போராடுகிறார்கள் என்றால் அதற்கு என்ன காரணம்? யார் துண்டுதல் என்பதை மக்களின் முடிவுக்கு விட்டு விடுகிறோம்.

- தமுமுக இணையத்தளம்

சிமி மீதான தடை நீக்கம்: பயங்கரவாத மாயை தகர்ந்தது

சிமி மீதான தடை நீக்கம்: பயங்கரவாத மாயை தகர்ந்தது

டெல்லி: இஸ்லாமிய தீவிரவாத மாணவர் இயக்கம் என்று குற்றம் சாட்டப்பட்டு தடை விதிக்கப்பட்ட சிமி அமைப்புக்கு 2010 வரை விதிக்கப்பட்டிருந்த தடையை விலக்குவதாக டெல்லி உயர்நீதிமன்றம் பரபரப்பான தீர்ப்பளித்துள்ளது.

இந்தியாவில் கடந்த ஆண்டுகளில் நடந்த பல்வேறு பயங்கரவாதச் செயல்களில் சிமியின் தொடர்பு இருப்பதாகக் கூறி மத்திய அரசு கடந்த 2001-ம் ஆண்டு செப்டம்பர் 27-ம் தேதி சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிமிக்கு 2 ஆண்டுகள் தடை வித்தித்து.

பின்னர் இத் தடை ஒவ்வொரு 2 ஆண்டுக்கும் ஒருமுறை நீட்டிப்பு செய்யப்பட்டு வந்தது. கடந்த பிப்ரவரி 7ம் தேதி இத்தடை மீண்டும் நீட்டிக்கப்பட்டது. அதன்படி வரும் 2010-ம் ஆண்டு வரை தடை செய்யப்பட்ட இயக்கமாக இருந்தது சிமி.

இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது சிமி. மத்திய அரசு புதிதாக எந்த ஆதாரத்தையும் காட்டாமல் இப்படி பொத்தாம் பொதுவாக தடையை நீட்டிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என அந்த இயக்கம் தனது மனுவில் கூறியிருந்தது.

இவ்வழக்கை நீதிபதி கீதா மித்தல் தலைமையிலான சிறப்பு நடுவர் மன்றம் விசாரித்தது. இந்த தடை நீட்டிப்புக்கு போதிய ஆதாரங்களைத் தருமாறு அவர் மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் கடைசி நிமிடம் வரை, சிமிக்கு எதிராக எந்தப் புதிய ஆதாரத்தையும் மத்திய அரசு தாக்கல் செய்யவே இல்லை.

பழைய ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே ஒரு இயக்கத்துக்கு தடையை நீட்டித்துக் கொண்டிருக்க முடியாது என்றும், ஆதாரமில்லாமல் தடைவிதித்து யாருடைய அடிப்படை உரிமையையும் பறிக்க முடியாது எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் பேராசிரியர் எம். ஹெச். ஜவாஹிருல்லாஹ் வெளியிடும் அறிக்கை

சிமி என்றழைக்கப்படும் இந்திய மாணவர் இஸ்லாமிய இயக்கத்தின் மீதான தடையை நீக்கி டெல்லி உயர்நீதிமன்றத்தின் நீதிபதியும், சிமி மீதான தடையை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட சிறப்பு தீர்ப்பாணையத்தின் தலைவருமான நீதிபதி கீதா மிட்டல் அளித்துள்ள தீர்ப்பைத் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் வரவேற்கிறது. 267 பக்கங்கள் கொண்ட தனது தீர்ப்பில் சிமி மீதான தடையை நியாயப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் அளித்துள்ள ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று நீதிபதி கீதா மிட்டல் தெரிவித்துள்ளார்.

இந்திய முஸ்லிம் இளைஞர்களின் முகத்தில் அள்ளிவீசப்பட்ட தீவிரவாத முத்திரையை இந்தத் தீர்ப்பு கனிசமான அளவு துடைத்துள்ளது. நமது நாட்டில் பயங்கரவாதச் செயல்கள் நடைபெறும் போது சிமி மீது பழிப்போடுவதைத் தான் செய்தி ஊடகங்களில் ஒரு சாராரும், புலனாய்வு நிறுவனங்களும் வழக்கமாகக் கொண்டிருந்தன. இருப்பினும் சமீபக்காலப் பயங்கரவாத நடவடிக்கைகளில் சிமி ஈடுபட்டு வந்தது என்பதை நிரூபிக்கும் துளிஅளவு ஆதாரத்தையும் மத்திய உள்துறை அமைச்சகத்தினால் காட்ட இயலவில்லை என்பது நீதிபதி கீதா மிட்டலின் தீர்ப்பில் இருந்து தெரிய வருகின்றது. சிமியை பயங்கரவாதத்தின் பிம்பமாகக் கருதி கானல்நீரைத் தான் செய்தி ஊடகங்களில் ஒரு சாராரும், அரசு புலனாய்வு நிறுவனங்களும் துரத்தி வந்து வந்துள்ளன என்பதை இந்தத் தீர்ப்பு எடுத்துக்காட்டியுள்ளது. இப்படிக் கற்பனையான ஒரு தேடலில் புலனாய்வு துறையினர் ஈடுபட்டதின் காரணமாகத் தான் அஜ்மீர் முதல் பெங்களூர் அஹமதாபாத வரை நடைபெற்ற பல பயங்கரவாதத் தாக்குதகளில் ஈடுபட்ட உண்மை குற்றவாளிகளை இதுவரை காவல்துறையினரால் கைதுச் செய்ய முடியவில்லை.

இந்திய நீதி பரிபாலனத் துறையின் சுயாட்சித்தன்மையை நீதிபதி கீதா மிட்டல் வழங்கியுள்ள தீர்ப்பு மீண்டும் நிரூபித்துள்ளது. தனது பாரபட்சமற்ற தீர்ப்பின் மூலம் இந்திய நீதித்துறையின் அப்பழுக்கற்ற நிலையை நீதிபதி கீதா மிட்டல் கட்டிக்காட்டியுள்ளார். இதற்காக அவரை பாராட்டுகிறோம்.

தடைநீக்கப்பட்ட நிலையில் சிமி அமைப்பைச் சேர்ந்த மாணவர்களும் இளைஞர்களும் நாட்டின் முன்னேற்றத்திற்காக தங்களை அர்பணித்துக் கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொள்கிறது. முஸ்லிம் சமுதாயத்தின் கல்வி நிலையை உயர்த்துவதற்காகவும், நாட்டில் வாழும் அனைத்து தரப்பு மக்களுடன் நல்லுறவு வலுப்பெறுவதற்காகவும் சிமி சகோதரர்கள் முழு அற்பணிப்புடன் பாடுபட வேண்டும் என்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் கேட்டுக் கொள்கிறது.

Tuesday, August 05, 2008

IDMK தலைவரின் தமிழன் TV பேட்டி (ஆடியோ) FULL INTERVIEW




04.08.2008 திங்கள் கிழமை மற்றும் 05.08.2008 செவ்வாய் கிழமை ஆகிய தேதிகளில் தமிழன் தொலைக்காட்சியில் பிரபல சமூக ஆர்வலர் ஜனாப் அமீர் ஜவஹர் B.A.B.L அவர்களால் நடத்தப்பட்டு வரும் மக்கள் மன்றத்தில் இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சகோ. குத்புதீன் ஐபக் அவர்கள் ஜனாப் அமீர் ஜவஹர் B.A.B.L அவாகளோடு "ஓற்றுமையை நோக்கி" என்ற தலைப்பில் நடந்த கலந்துறையாடலில் காரசாரமான பதில்களை அளித்துள்ளார்.

இன்றைய அரசியில் சூழலில் விடையை எதிர்நோக்கி காத்து கிடக்கும் இஸ்லாமிய சமுதாயத்திற்கு தேவையான விடைகளை வழங்க கூடியதாக இருந்தது இவரது இந்த கலந்துரையாடல். .

04.08.2008 திங்கள் கிழமை மற்றும் 05.08.2008 செவ்வாய் கிழமை ஆகிய தேதிகளில் ஒளிபரப்பான இந்த சூடான கலந்துரையாடலின் ஒலி மட்டும் Windows Audio (WMA) ஃபார்மட்டில் இங்கு வெளியிடப்படுகின்றது. நிகழச்சியின் ஆடியோவை கேட்பதற்கு அல்லது டவுன்லோட் செய்வதற்கு கீழே உள்ள சுட்டியில் சொடுக்கவும்.
.


உறுப்பினர்களுக்கு பயிற்சி? மனித நீதி பாசறை மறுப்பு

உறுப்பினர்களுக்கு பயிற்சி? மனித நீதி பாசறை மறுப்பு


ஆகஸ்ட் 05,2008,00:00 IST

சென்னை: தங்கள் அமைப்பைச் சேர்ந்த யாருக்கும் ஆயுதப் பயிற்சி அளிக்கப்படவில்லை என, மனித நீதிப் பாசறை மாநில செயலர் பக்ருதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பக்ருதீன் அறிக்கை: "மனித நீதிப் பாசறையில் அங்கம் வகிக்கும் இளைஞர்களுக்கு, அதிநவீன தானியங்கி மற்றும் கைத்துப்பாக்கியை கையாளும் பயி ற்சி, கேரளா வனப்பகுதியில் அளிக்கப்பட்டுள்ளது' என்ற செய்தி முற்றிலும் தவறு. மனித நீதிப் பாசறை ஓர் மக்கள் இயக்கம். எட்டு ஆண்டுகளாக மனித நீதிப் பாசறை பல்வேறு சமுதாய நலப் பணிகளிலும், மக்கள் நலப் பணிகளிலும், தேச நலன் காக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளன.


சுனாமி, திருச்சி வெள்ளப் பெருக்கு என இயற்கை சீற்றங்களின் போது மீட்புப் பணிகளிலும், துயர் துடைப்பு பணிகளிலும் மனித நீதிப் பாசறை ஆற்றி வரும் தொண்டுகள், அனைத்து சமுதாய மக்களாலும் பாராட்டப்பட்டுள்ளன. கோவையில் கட்டட இடிபாடுகளின் போது மீட்புப் பணியில் ஈடுபட்ட எங்கள் உறுப்பினர் ஜெயினுலாப்தீன், இடிபாடுகளில் சிக்கி வீரமரணமடைந்தார். மழை காரணமாக திருப்பூர் டாஸ்மாக் கட்டட சுவர் இடிந்து விழுந்த போது, எங்கள் உறுப்பினர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டதை கோவை மண்டல ஐ.ஜி., ராஜேந்திரன் பாராட்டினார். சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகளை நினைவுகூரும் விதமாகவும், தேசப்பற்றுக்கு புத்துயிரூட்டும் விதமாகவும், 15ம் தேதி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மூலம் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், சங் பாரிவார் சக்திகள் அவதூறு செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு பக்ருதீன் தெரிவித்துள்ளார்.

தினமலர்

Monday, August 04, 2008

பிறை விளக்கம் - அபூ அப்துல்லாஹ் அவர்கள்

அந்நஜாத் ஆசிரியர் ஜனாப் அபூ அப்தில்லாஹ் அவர்களின் "ஜமாஅத் அல் முஸ்லிமீன்" என்ற வலைப்பதிவிற்கு சென்று மேலதிக கட்டுரைகளையும் தகவல்களையும் வாசிக்கலாம்.

"பிறை விளக்கம்"

ஜனாப் அபு அப்துல்லாஹ் அவர்கள்

Janab Abu Abdullah


CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



ஜனாப் அபூ அப்தில்லாஹ் அவர்கள்

Saturday, August 02, 2008

தமிழன் TV யில் IDMK தலைவர் பேட்டி - வரும் திங்கள் இரவு ஒளிபரப்பாகின்றது

திரு. குத்புதீன் ஐபக் அவர்கள்



அன்பின் சமுதாய சொந்தங்களுக்கு,

இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சகோ. குத்புதீன் ஐபக் அவர்களின் காரசாரமான பேட்டி வருகிற 4-8-2008 திங்கள் கிழமை அன்று தமிழன் டிவியில் இந்திய நேரம் இரவு 10.00 மணி அளவிலும் யு.ஏ.இ நேரம் இரவு 8.30 மணி அளவிலும், சவூதி நேரம் இரவு 7.30 மணி அளவிலும் ஒளிபரப்பாகிறது. இதன் தொடர்ச்சி மறுநாள் 5-8-2008 செவ்வாய் கிழமை இரவு இதே நேரங்களில் ஒளிபரப்பாக உள்ளது.

ஆகவே சகோதரர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை தவறாது கண்டு தமிழக அரசியலில் முஸ்ஸிம்களின் நிலைபற்றி உங்களுடைய மேலாண முடிவினை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.




இவண்.


இந்தி்ய தேசிய மக்கள் கட்சி,


தமிழ்நாடு..


குளச்சலில் 70நாட்கள் தஹ்வாப் பிரச்சாரம்

அன்பான சகோதர, சகோதரிகளுக்கு,
அஸ்ஸலாமு அலைக்கும்.

01/08/2008 வெள்ளிக்கிழமை குளச்சல் முனீஃப் பள்ளியில் நடந்த ஜும்ஆப் பேருரையின் தொகுப்பை செவியுற இங்கே சொடுக்கவும்.

இன்ஷா அல்லாஹ் வரும் 17/10/2008 முதல் 26/10/2008 வரை (70 நாட்கள்) நன்மையை ஏவித் தீமையை விலக்கும் தொடர் தஹ்வாப் பிரச்சாரம் நடைபெற உள்ளது. இதில் தீவிரவாதம், வரதட்சணை மற்றும் சமூகக் கொடுமைகளுக்கெதிராக பொதுக் கூட்டங்கள், தெருப் பிரச்சாரங்கள், பிரசுரப் பிரச்சாரங்கள் மற்றும் வீடுவீடாகச் சென்று நேரடித் தஹ்வாப் பிரச்சாரங்களும் நடைபெற உள்ளது. வெற்றிபெறத் துஆச் செய்யுங்கள்.

அத்துடன் இந்தப் பிரச்சாரங்கள் முழுமையுடன் வெற்றிபெற உங்களால் இயன்ற நிதியுதவியும் செய்து உதவும்படி அன்பாய் கேட்டுக்கொள்கிறோம்.

பிரச்சாரங்களின் முழுவிபரம் அறிய இங்கே சொடுக்கவும்.

உங்களது நிதியுதவியை அனுப்பிவைக்க தொடர்பு கொள்ளவேண்டியது. சகோதரர் மாஹீன் - +91 93452 35598
( மஸ்ஜிதுல் முனீஃபின் தலைவர் - குளச்சல் )

காசோலைகள் அனுப்புவோர் கீழேக் குறிப்பிட்டுள்ள வங்கிக் கணக்கிற்கு அனுப்பிவைக்கலாம் இன்ஷா அல்லாஹ்.

Account Details to send your Donations:
வங்கி: Tamilnad Mercantile Bank Ltd., Colachel Branch, Joint Ac No#000174# Mr.S.Maheen Aboobakker or M.Mujeebu Rahman.

அல்லாஹ் தஆலா இந்த தஹ்வாப் பணிக்கு உதவும் அத்தனை நல்லுள்ளங்களுக்கும் ஈருலகிலும் அதற்குரிய நல்லருளை வாரி வழங்குவானாக! ஆமீன்."

மேலதிக விபரத்திற்கு: sathick@gmail.com -ல் தொடர்பு கொள்ளலாம் இன்ஷா அல்லாஹ்.