எதிர்வரும் 15.08.2008 அன்று இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈரோடு, நேதாஜி சாலை - மரப்பாலம் அருகிலுள்ள மகாத்மா நினைவு மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் ஈரோடு மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் முஸ்லிம் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப்) ஆகியன அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் நடத்தவுள்ளது.
இம்முகாமிற்கு மாவட்ட தலைவர் ஏ.ஆர்.கலீபுல்லாஹ் தலைமையேற்கிறார்.
மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் ஏ.சாதிக் அலீ வரவேற்புரையாற்றுகிறார்.
வி.ஐ.பி. டெய்லர் பாக்யராஜ், எம்.ஜபருல்லா (எம்.எஸ்.எஃப்.), ஏ.எஸ்.சுஹைல் அஹ்மத் (எம்.எஸ்.எஃப்.), எம்.அன்வர் ஹ{ஸைன் (ஸ்டார் விஷன்), எஸ்.மீரா ஹ{ஸைன் (எம்.எஸ்.எஃப்.), ஏ.பிலால் (எம்.எஸ்.எஃப்.). பி.தவ்ஃபீக் (எம்.எஸ்.எஃப்.), ரியாஜ் முஹம்மது (எம்.எஸ்.எஃப்.) ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
மாவட்ட மாணவரணி அமைப்பாளர் அ.பஜ்லுர்ரஹ்மான் நன்றியுரையாற்றவுள்ளார்.
இம்முகாமின் சிறப்பம்சங்களாக, இரத்த வகை தெரியாதோருக்கு இலவசமாக அவற்றைக் கண்டறிதலும், பள்ளிக்கூடத்திற்கு மரக்கன்றுகள் அர்ப்பணிப்பும் நடைபெறவுள்ளன.
Tuesday, August 12, 2008
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் பேரவை (எம்.எஸ்.எஃப்) அரசு மருத்துவமனையுடன் இணைந்து இரத்த தான முகாம் நடத்தவுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment