Saturday, August 23, 2008

கலைஞர் அரசே சமநீதி வழங்கு!! - MNP கருத்தரங்கம் (24.08.2008) திரன்டு வாரீர்...

அறிஞர் அண்ணா நூற்றாண்டு விழா
சிறைக்கைதிகளை விடுவிப்பதில் சமநீதி கோரும்...
மாபெரும் கருத்தரங்கம்

"ஒரு சமூகத்தின் நாகரீகத்தின் தரத்தை அதன் சிறைச்சாலைகளில் நுழைந்து பார்ப்பதன் மூலம் மதிப்பிட முடியும்" - ஃபியோதர் தஸ்த்தயேவ்ஸ்கி, நூல் : HOUSE OF DEAD


எதிர்வரும் செப்டம்பர் 15 புரரிஞர் அண்ணாவின் நூற்றாண்டு தொடக்க விழாவை முன்னிட்டு தமிழக அரசு தமிழக சிறைகளில் தண்டனைக் கைதிகளில் எட்டான்டு காலம் முழுமையாக தண்டனை கழித்தவர்களை விடுதலை செய்ய ஏற்பாடுகளை செய்து வருகின்றது.

இந்த செய்தியை அறிந்தவுடன் முஸ்லிம் தாய்மார்கள் கடந்த 10 ஆண்டு காலமாக சிறையில் தவிக்குமு் தன் கணவனை அரசு விடுதலை செய்து விடும் என்று பூரிப்புடன் எதிர் பார்த்து கொண்டிருந்தனர். ஆனூல் வந்த செய்தியோ முஸ்லிம்கள் காலம் முழுவதும் கவலையில் துவள வேண்டும் என்ற மனூநிலையை வெளிப்படுத்தும் விதமாக முஸ்லிம் தாய்மார்க் / சகோதரிகளிடம் அச்செய்தி வந்து வீழந்தது. ஆம் 10ஆண்டுகள் கழிந்தாலும் முஸ்லிம்களுக்கு விடுதலை இல்லை என்ற செய்தி, கண்ணீர் மல்க கதறி துடித்து துவண்டு வீழந்தார்கள் நம் சகோதரிகள்.

சென்ற ஆண்டு செப்டம்பர் 15, அண்ணா பிற்நத நாள் அன்று சுமார் 118 சிறைவாசிகள் பொது மன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டனர். அதிலும் முஸ்லிம்கள் புறக்கனிக்கப்பட்டனர். 10 ஆண்டுகள் கழித்த ஜாகிர் உசேன், அபுதாஹிர், அப்துல் மஜீத், சபூர் ரஹ்மான் ஆகியோர்களை விடுதலை செய்யவில்லை. அத்துயரத்தின் மன அழுத்தத்தால் மூன்று பென் குழந்தைகளின் தந்தையாகிய சபூர் ரஹ்மான் கடந்த அக்டோபர் 31, 2007ல் சிறைக் கொட்டடியிலேயே மரணமடைந்தார்.

மறுபுறமோ இவ்வரசு வழக்கம்போல் பாரபட்சத்துடனும், அநீதியுடனும் இவ்விசயத்தில் நடக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. இதே வகுப்புவாத குற்றததில் கோவையில் குண்டு வெடிப்புக்களும் கலவரங்களும் நிகழ்வதற்கு முக்கிய காரனமான 1997 நவம்பரில் 19 முஸ்லி்ம்கள் கொல்லப்பட்ட வழக்கில் இந்திய தன்டனை சட்டத்தின் முக்கிய பிரிவான (302, 147, 427, 435, 435, 436, 370, 379) போன்ற பிரிவுகளில் கைது செய்யப்பட்ட இந்துத்துவ தீவிரவாதிகளில் ஒருவர் கூட இன்று சிறையில் இல்லை. இதுதான் சமநீதி???

அரசு ஆணை 1762/87 ன்படி வரும் 15.09.2008 அன்று பொது மன்னிப்பிற்கு தகுதியானவர்கள் என்ற அடிப்படையில் எட்டு ஆண்டுகள் வெஞ:சிறையில் கழித்த பல முஸ்லிம் கைதிகள் விடுதலைக்கு தகுதியாக உள்ளனர். சிறுபான்மையினரின் நலம் காக்கும் அரசாக தன்னை முன்னிறுத்திக் கொள்ளும் கலைஞர் அரசு இவர்கள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும். பாரபட்சமில்லாத சாதி, மதம் பாராத சமநீதி அனைவருக்கும் வேண்டுமென்பதுதான் ஒவ்வொரு இந்திய குடிமகனின் கோரிக்கை ஆகும்.


உங்கள் குரல்களை பதிவு செய்திட..ஓங்கி முழங்கிட அணிதிரண்டு வாரீர்!!!

இன்சா அல்லாஹ் ...

நாள் : 24.08.2008 ஞாயிறு
நேரம் : மாலை 5.45 மணிக்கு
இடம் : சங்கமம் திருமண மண்டபம், போத்தனூர் ரோடு, குறிச்சிப்பிரிவு.

அழைக்கின்றது மனித நீதிப் பாசறை (MNP)

நிகழ்ச்சி நிரல்

தலைமை
M. முகம்மது அலி ஜின்னா MA., JMC.,
மாநிலத்தலைவர், மனித நீதிப் பாசறை

தொகுப்புரை
A.S. இஸ்மாயில்
மாவட்ட தலைவர், மனித நீதிப் பாசறை

வரவேற்புரை
N. முகம்மது ஷாஜஹான் Bsc. B.L

மாநில செயற்குழு உறுப்பினர், MNP

முன்னிலை
வழக்கறிஞர் M. ரஹ்மத்துல்லாஹ் BA.,BL

மாநில செயலாளர் NCHRO

வழக்கறிஞர் A. நவ்ஃபல் Bsc., BL.,

சிறப்பு விருந்தினர்கள்
E.M. அப்துர் ரஹ்மான்
தேசிய பொதுச்செயலாளர், பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (PFI)

H.S.J இனாயத்துல்லாஹ் M.A., B.L
மாநிலத் தலைவர், இந்திய தேசிய லீக்

அ.மார்க்ஸ்
துணைத் தலைவர்
அரசியல் கைதிகளை விதடுதலை செய்வதற்கான குழு

மெளலவி A.E.M அப்துர் ரஹ்மான்
மாநிலத் தலைவர், ஜமாஅத்துல் உலமா

அ. உமர் பாரூக்
நிறுவனத் தலைவர், மறுமலர்ச்சி முஸ்லிம் லீக்

ம.தே. சிந்தனை செல்வன்
பொதுச் செயலாளர், விடுதலைச் சிறுத்தைகள்

ப.பா. மோகன்
மூத்த வழக்கறிஞர்

A.K. முகம்மது ஹனீஃபா
பொதுச் செயலாளர்,
தலித், இஸ்லாமிய, கிறிஸ்த்தவ கூட்டமைப்பு

கோட்டை தங்கப்பா
சமூக நல ஆர்வலர்

நன்றியுரை
M.Y. அப்பாஸ்
மாவட்ட செயலாளர், MNP

No comments: