அன்பின் சமுதாய சொந்தங்களுக்கு,
இந்திய தேசிய மக்கள் கட்சியின் தலைவர் சகோ. குத்புதீன் ஐபக் அவர்களின் காரசாரமான பேட்டி வருகிற 4-8-2008 திங்கள் கிழமை அன்று தமிழன் டிவியில் இந்திய நேரம் இரவு 10.00 மணி அளவிலும் யு.ஏ.இ நேரம் இரவு 8.30 மணி அளவிலும், சவூதி நேரம் இரவு 7.30 மணி அளவிலும் ஒளிபரப்பாகிறது. இதன் தொடர்ச்சி மறுநாள் 5-8-2008 செவ்வாய் கிழமை இரவு இதே நேரங்களில் ஒளிபரப்பாக உள்ளது.
ஆகவே சகோதரர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியை தவறாது கண்டு தமிழக அரசியலில் முஸ்ஸிம்களின் நிலைபற்றி உங்களுடைய மேலாண முடிவினை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இவண்.
இந்தி்ய தேசிய மக்கள் கட்சி,
தமிழ்நாடு..
5 comments:
Congratulations. May Allah bless you all.
அஸ்ஸலாமு அலைக்கும்,
இந்த பேட்டியை சரியான சமயத்தில் காண இயலாதவர்கள் காண்பதற்காக இங்கேயும் வீடியோவாக போடவும்.
நீங்கள் கேட்டாலும் கேட்காவிட்டாலும் இங்கு ஐ டி எம் கே தலைவர் பேட்டி பதிவு செய்யப்படும். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் நிகழ்ச்சி தவிர்த்து அனைத்தும் பதிவு செய்யப்படும். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் ஏதாவது தவறு செய்தால் அதை பதிவு செய்ய இந்த தளம் முன்னுரிமை கொடுக்கும். முஸ்லிம் லீக்கார்கள் கலைஞரிடம் கை கட்டி நின்றார்கள் என்று பதிவு செய்யும். பொன்னாடை போர்த்தும் போது நிற்கத்தானே வேண்டும் - அப்படியெல்லாம் யோசிக்கமுடியுமா? மற்றவர்கள் உட்கார்ந்திருக்கும் போட்டோவை போடுவார்கள். முஸ்லிம் லீக்கார்கள் போட்டோவை மட்டும் நிற்கும் போட்டோவை போடுவார்கள். மற்றவர்கள் நிற்க வில்லையென்றும் உட்கார்ந்து தான் இருந்தார்கள் என்றும் முபாஹலா நடத்தட்டும். ஒன்று சொல்ல மறந்துட்டேனே இப்படி நாம் பதிவு செய்தால் இந்த தளம், எந்த கட்சியையோ அமைப்பையோ சாராதவன் என்று மெகா ஜோக் சொல்லும்.
அஸ்ஸலாமு அலைக்முகு் (வரஹ்)
அன்பின் மதிவாணன் அவர்களுக்கு,
நான் என்ன முஸ்லிம் லீக்கின் செய்திகளை போட மாட்டேன் என்றா சொன்னேன்? நீங்கள் செய்தி கொடுத்தால்தானே போடுவதற்கு?
நானே கெஞ்சி ஒரு லால்பேட்டை சகோதரரிடம் முஸ்லிம் லீக் செய்திகளை போடுவதற்கு யாரும் இல்லை நீங்கள் போடங்கள் என்றென் அவரும் சிறிது காலம் போட்டு வந்தார் தற்சமயம் அவரும் போடுவதில்லை அதற்கு நான் என்ன செய்வது?
முஸ்லிம் லீக்கர்கள் யாரும் நம்மை தொடர்பு கொள்வதும் இல்லை, தமுமுக, MNP, IDMK, போன்று செய்திகளை தருவதும் இல்லை அதற்கு நான் என்ன செய்வது?
வேண்டுமானால் ஒன்று செய்யுங்கள் முஸ்லிம் லீக்கின் அதிகார பூர்வ செய்திகளை போடுவதற்கு யாராவது ஒருவரை ஏற்பாடு செய்யுங்கள் பின்னர் அதிகார பூர்வமாக அடையாளத்துடன் தொடர்பு கொண்டால் தமுமுக, இந்திய தேசிய மக்கள் கடசி போன்றவர்களுக்கு கொடுக்கப்பட்டள்து போன்று தளத்தல் தாங்களே நேரடியா பதிவு செய்யும் வசதிகளை ஏற்படுத்தி தருகின்றென் நீங்களெ பதிவு செய்து கொள்ளுங்கள் அப்படி இல்லையென்றால் செய்திகளை எனக்கு அனுப்பி தருவதற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
நான் ஊரில் இருந்தபோது கூட சில மாதங்களுக்கு மன்னர் முஸ்லிம் லீக் தலைவர் மறியாதைக்குறிய காதர் முஹைதீன் அவர்களை அவரது கைபேசியில் தொடர்பு கொண்டு இது குறித்து கூறினேன் ஆனால் அவர் அப்போது டெல்லியில் இருப்பதாகவும் சென்னை வந்தவுடன் தொடர்பு கொள்கின்றென் என்றால் ஆனால் தொடர்பு கொள்ளவில்லை.
நீங்கள் என்னை எனது தொலைபேசியில் கூட் தெர்டர்பு கொண்டு செய்தியை தரலாம் (+966565116910) இதற்கு மேல் என்ன செய்ய சொல்லகின்றீர்கள்?
நன்றி
நேற்றிரவு பேட்டியை தமிழன் டிவியில் பார்த்தேன்.
காரசாரமான பேட்டி காரசாரமான பேட்டி அப்படியெல்லாம் பேப்பர்ல படிச்சிருக்கேன். இதுக்கு பெயர்தான் காரசாரமான பேட்டியோ..?
Post a Comment