உறுப்பினர்களுக்கு பயிற்சி? மனித நீதி பாசறை மறுப்பு
ஆகஸ்ட் 05,2008,00:00 IST
சென்னை: தங்கள் அமைப்பைச் சேர்ந்த யாருக்கும் ஆயுதப் பயிற்சி அளிக்கப்படவில்லை என, மனித நீதிப் பாசறை மாநில செயலர் பக்ருதீன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பக்ருதீன் அறிக்கை: "மனித நீதிப் பாசறையில் அங்கம் வகிக்கும் இளைஞர்களுக்கு, அதிநவீன தானியங்கி மற்றும் கைத்துப்பாக்கியை கையாளும் பயி ற்சி, கேரளா வனப்பகுதியில் அளிக்கப்பட்டுள்ளது' என்ற செய்தி முற்றிலும் தவறு. மனித நீதிப் பாசறை ஓர் மக்கள் இயக்கம். எட்டு ஆண்டுகளாக மனித நீதிப் பாசறை பல்வேறு சமுதாய நலப் பணிகளிலும், மக்கள் நலப் பணிகளிலும், தேச நலன் காக்கும் பணிகளிலும் ஈடுபட்டுள்ளன.
சுனாமி, திருச்சி வெள்ளப் பெருக்கு என இயற்கை சீற்றங்களின் போது மீட்புப் பணிகளிலும், துயர் துடைப்பு பணிகளிலும் மனித நீதிப் பாசறை ஆற்றி வரும் தொண்டுகள், அனைத்து சமுதாய மக்களாலும் பாராட்டப்பட்டுள்ளன. கோவையில் கட்டட இடிபாடுகளின் போது மீட்புப் பணியில் ஈடுபட்ட எங்கள் உறுப்பினர் ஜெயினுலாப்தீன், இடிபாடுகளில் சிக்கி வீரமரணமடைந்தார். மழை காரணமாக திருப்பூர் டாஸ்மாக் கட்டட சுவர் இடிந்து விழுந்த போது, எங்கள் உறுப்பினர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டதை கோவை மண்டல ஐ.ஜி., ராஜேந்திரன் பாராட்டினார். சுதந்திரத்துக்காக போராடிய தியாகிகளை நினைவுகூரும் விதமாகவும், தேசப்பற்றுக்கு புத்துயிரூட்டும் விதமாகவும், 15ம் தேதி பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் மூலம் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கு குந்தகம் விளைவிக்கும் வகையில், சங் பாரிவார் சக்திகள் அவதூறு செய்திகளை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இவ்வாறு பக்ருதீன் தெரிவித்துள்ளார்.
தினமலர்
No comments:
Post a Comment