Showing posts with label சிறைவாசிகள். Show all posts
Showing posts with label சிறைவாசிகள். Show all posts

Wednesday, November 20, 2013

இந்திய அரசு மீதும் தமிழக அரசு மீதும் வழக்கறிஞா் உமா்கயான் வழக்கு


 


தமிழக சிறைகளில் பல்லாண்டுகாலமாக சிறையில் வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அரசியல் சிறைவாசிகள், ஆயுள்சிறைவாசிகள் விடுதலை தொடர்பில் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம் சார்பாக பல்வேறு முன்னேடுப்புகள் செய்து வருவது தாங்க...ள் அனைவரும் அறிந்ததே.

ஆயுள்சிறைவாசிகள் விடுதலை தொடர்பாக அரசின் கொள்கை முடிவுகள் என்பது ஆட்சியாளர்களின் சுய விருப்பு வெறுப்புகளில் இருந்தே வெளிப்படுகிறது. பொதுவான சொல்லாடல்களாக அனைவரின் மனதிலும் இருப்பது 14 ஆண்டுகள் ஆயுள்சிறைவாசம் அனுபவித்தால் போதுமானது, அவர்கள் மகிழ்சியுடன் வீடு திரும்பிவிடுவார்கள் என்பதே.

ஆனால் எதார்த்தம் என்பது வேறாகவே இருக்கிறது. பல மாநிலங்களில் ஆயுள்சிறைவாசிகள் விடுதலை என்பது 10, 7, 5 ஆண்டுகள் என்று ஒரே சீரான முறையில் இல்லாமல் அரசியல், தேர்தல், தங்களுக்கு விருப்பமானவர்களை விடுதலை செய்வதற்காக விடுதலை செய்வது என்று அனைத்தும் இங்கே அரசியல்மயப்படுத்தியே உள்ளது.

சிறையில் இருப்பவர்கள் என்றால் அவர்களுக்கு என்று ஆன்மா இல்லை என்ற எண்ண‌ங்களும், தப்பு செய்தால் தண்டனை அடைந்துதான் தீரவேண்டும் என்ற பொது உரையாடல்கள் தவிர்த்து நமது சிந்தனை முறை விரிவடைவதில்லை.

தண்டனை முறைகளைப் பற்றி பேசும் நாம் நமது தேசத்தில் நிலவி வரும் சமுக, பொருளாதாரப் பிரச்சனைகள், அரசியல் சூழல்கள் இவை குறித்தும் இவற்றால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்தும் பேசுவதில்லை.

"சட்டங்களை சார்ந்துதான் சமுகம் இருக்கிறது என்பது சட்டப்பூர்வ கற்பனையே. மாறாக சட்டங்கள்தான் சமூகத்தை பிரதிபலிக்க வேண்டும். மக்களுக்காகத்தான் சட்டங்களே அன்றி சட்டத்திற்காக மக்கள் அல்ல என்பதான சட்டமுறைகள்தான் இங்கே சிறந்த சமூக அமைப்பு முறைகளை உருவாக்கும்”

தமிழகம் மட்டும் அல்ல இந்திய துணைக் கண்டம் முழுமைக்கும் இந்த சட்ட வன்முறைகளில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் இசுலாமியர்கள், தலித்துகள், ஏழைகள், அரசியல் காரணிகளுக்காக போராடுபவர்கள், பழங்குடியினர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், ஏதும் அற்ற அப்பாவிகள்.(உதாரண‌மாக கூடன்குளம் அணு உலைக்கு எதிராக கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேல் போராடிவரும் இடிந்தகரை மற்றும் அதைச் சுற்றியுள்ள மக்கள் மீது ஏராளமான பொய் வழக்குகள். சிறுவர்கள், பெண்களையும் இவர்கள் விட்டுவைக்கவில்லை. 70 வயது முதியவர் மீது குண்டர் தடைச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது)

உங்களுக்குத் தெரியுமா, அபுதாஹீர் என்ற இளைஞனை. சிறுவனாக சிறைக்குச் சென்ற இந்த இளைஞன் இன்றைக்கு 10 ஆண்டுகள் கடந்து SLE என்ற சிறை நோயால் தன் உடலில் ஒவ்வொரு உறுப்புகளாக செயல் இழந்து தன் வாழ்நாளை எண்ணிக் கொண்டிருக்கிறான். இடைக்காலமாக ஒரு நீண்ட பரோல் கொடுக்க சிறைசட்டங்களில் இடம் இருந்தாலும் இவனை விடுதலை செய்ய அரசும், ஆட்சியாளர்களும் தயாராக இல்லை. அபுதாஹீருக்கும், மதானிக்கும் கருணை காட்டாத சட்டங்கள், இவர்கள் என்ன வகையான வழக்குகளில் சிறையில் இருக்கிறார்களோ அதே வகையான வழக்குளில் சிறையில் இருக்கும் பெண் சாமியார்களுக்கும், நடிகர்களுக்கும் கருணை காட்டுவது, சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற இந்திய அரசமைப்புச் சட்டத்தை கேலிக்குரியதாக்குவதாக இருக்கிறது.

இங்கே சட்டங்கள் சமூகங்களை இரண்டுவகையான‌ பாகுபாடுகளுடன் அணுகுகிறது. இசுலாமியர்கள், தலித்துகள், பழங்குடியினர், ஏழைகள், சமூக மாற்றத்திற்காக போராடுபவர்களை சட்டம் அணுகும் முறையே எந்த அறங்களும் அற்றதாய் இருக்கிறது.





இந்த பாகுபாடுகளுக்கு எதிரான நமது சட்ட பூர்வமான போராட்ட களத்தை விரிவுபடுத்தவேண்டிய கட்டாயத்தில் கடந்த 14.11.2013 அன்று டெல்லியில் தேசிய மனித உரிமை ஆனையம்(NCHR)ல் மனுதாக்கல் செய்துள்ளோம். இந்திய அரசையும், தமிழக அரசையும் எதிர்மனுதாரர்களாக சேர்த்து தாக்கல் செய்யப்பட்ட இம் மனு விரைவில் விசாரனைக்கு வரும் என்று எதிர்பார்க்கிறோம்.


நீண்ட காலமாக நீதி மறுக்கப்பட்டு சிறையில் வாடும் ஆயுள் சிறைவாசிகளின் விடுதலை நோக்கிய எமது போராட்டம் உங்கள் அனைவரின் கரங்களையும் இனைத்துக்கொண்டு பயணப்படுகிறோம்.
விளிம்பு நிலை மனிதர்களான சிறைவாசிகளின் விடுதலைக்காக தாங்கள் அனைவரும் சாத்தியப்பட்ட அனைத்து வழிகளிலும் செய்திகளை கொண்டு செல்லவேண்டுகிறோம்.

இந்த வேலையில் எம்மோடு இப்போராட்டத்தில் துனை நிற்கும் அனைத்து தோழர்களையும் நன்றியுடன் நினைத்துபார்க்கிறோம்.

முகநூல் வழியாக எமது முயற்சிகளுக்கு துனைநிற்கும் தோழமைகளுக்கும் நன்றிகளும்.நேசிப்புகளும்...

இந்த முயற்சியில் எம்மோடு துனைநின்ற மேபதினேழு இயக்க தோழர்கள். மற்றும் அதன் ஒருங்கினைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, எழுத்தாளர் தோழர் வளர்மதி உள்ளிட்ட அத்தனை தோழர்களுக்கும் நன்றி.

Thursday, August 30, 2012

இஸ்லாமிய மற்றும் அரசியல் சிறைவாசிகளுக்கு எதிரான அநீதிகளும், பாரபட்சங்களும்



சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டம் சரத்து 14 உறுதிப்படுத்துகிறது. இந்தியாவில் அரசியல் சட்டப்படி ஆட்சியதிகாரம் நடக்கிறதா என்றால் சனநாயகம் இங்கே கேலிக்குரிய வடிவில் அரங்கேறி வருவதைப் பார்க்கமுடியும். அதிலும் குறிப்பாக சிறுபான்மை மக்களுக்கு எதிரான போக்குகளில் அரசியல் சட்டமாவது வெங்காயமாவது.


நாடு முழுவதும் இஸ்லாமியர்கள், தலித்துகள், பழங்குடிகள் இவர்களை பிரதிநிதுத்துவப்படுத்தும் அமைப்புகள், நக்சல்பாரிகள், மாவோவியப் போராளிகள் என்று தங்களின் அடிப்படை உரிமைகளுக்குப் போராடும் பிரிவினர் மீது ஆளும் அரசுகள், சங்பரிவார் கும்பல்களின் தாக்குதல்கள் என்பதும் அதற்கு எதிர்வினையான சம்பவங்கள் நடந்து வருவதும் நாம் வரலாற்றுப் பார்வையில் இருந்து புரிந்து கொள்ளவேண்டும்


இந்நிலையில் இருந்தே தமிழக சிறைகளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக அரசு மற்றும் அரசியல் கட்சிகள், மனித உரிமைப் போராளிகள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஒரு பொது விவாதத்தையும், கருத்து பரப்புரையும் செய்ய வேண்டிய தருணத்தில் இருந்து தொடங்குவோம்....


1992ம் ஆண்டு அன்றைக்கு நான் இருந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மக்கள் யுத்தம்) கட்சியின் மீதான ஒடுக்குமுறையின் ஒரு பகுதியாக நான் உட்பட 6 தோழர்கள் பல்வேறு வழக்குகளில் கைது செய்யப்பட்டு 23 நாட்கள் சட்ட விரோதக் காவலில் வைத்து சித்ரவதைகளுக்குப் பின்னால் திருப்பூர் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டோம். எங்களை நீதிமன்றத்தில் நிறுத்தும்வரை எங்கள் மீது என்ன வழக்கு போடப்பட்டது என்று எங்களுக்குத் தெரியாது.


திருப்பூர் கிளைச் சிறையில் அடைத்து வைக்கப்பட்ட போது எங்களுக்கு வெளி உலகில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும், சமூகத்திற்கும் நமக்குமான ஒரே தொடர்பான வானொலியில் டிசம்பர் 6 அன்று கேட்கும் போதுதான் நாங்கள் அறிந்து கொண்டோம், பாபர் மசூதி இடிக்கப்பட்ட செய்தியை... அதன் எதிரொலி சிறைச்சாலையின் கம்பிகளுக்குள்ளும்....


அதற்குப் பின்னிட்ட நாட்களில் திருப்பூர் கிளைச் சிறைக்கு இஸ்லாமிய இளைஞர்கள் அதிகமாக வந்து சேருமிடமாகிப்போனது. நடு இரவிலும் அதிகாலையிலும் இஸ்லாமிய இளைஞர்கள் வந்து கொண்டே இருந்தார்கள்.
அன்றைக்கு ஊருக்கு ஒதுக்குப் புறமாக இருந்த, சித்திரவதை செய்வதற்கே பயன்படுத்தப்பட்ட பெருமாநல்லூர் காவல் நிலையத்தில் இரண்டு மூன்று நாட்கள் 'சரியான கவனிப்புகளுக்குப்' பின் சிறையில் அடைக்கப்பட்டார்கள். அதிக இளைஞர்கள் நடக்க முடியாமல் உடல் ரணத்துடன் கொண்டு வரப்பட்டார்கள். (எனக்கும் அதே காவல் நிலையத்தில்தான் 23 நாட்கள் 'கவனிப்பு' நடந்தது என்பது வேறு விசயம்)


கிளைச்சிறையில் அடைக்கப்பட்டவர்களில் அன்றைக்கு புரட்சியாளர் பழனிபாபாவின் ஜிஹாத் கமிட்டியைச் சேர்ந்தவர்கள், பாட்டாளி மக்கள் கட்சியில் இருந்த இஸ்லாமிய இளைஞர்கள் அதிகம். அவர்கள் மூலம் பாபர் மசூதி இடிப்பும், அதற்கு எதிர்வினையாக இஸ்லாமிய மக்களின் போராட்டங்களையும், சங்பரிவார் கும்பலின் இஸ்லாமிய மக்களுக்கு எதிரான வன்முறைகளையும் அறிந்து கொண்டோம்.


திருப்பூர் கிளைச் சிறையில் இருந்து எங்களை டிசம்பர் மாதம் இறுதியில் கோவை மத்திய சிறைக்கு மாற்றினார்கள். டிசம்பர் 31 அன்று இரவு எங்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ச்சப்பட்டது.

டவர்பிளாக் என்று கூறப்படும் 10 பிளாக்கில் ஒன்றான 1ஏ பிளாக்கில் வைத்து இருந்தார்கள். 10ம் பிளாக்கில்தான் கோவை ராமகிருட்டிணன் உட்பட பல தோழர்கள் தடா கொடுஞ்சிறையில் வைக்கப்பட்டிருந்தார்கள். அதே 10ம் பிளாக்கில்தான் பாபர் மசூதி கலவர வழக்கில் பாஷாபாய், அன்சாரி, நவாப்கான், ஒஜீர் உட்பட பல இஸ்லாமியத் தோழர்கள் தடா சட்டத்தின்படி சிறைபடுத்தப்பட்டிருந்தார்கள் என்று அறிந்து கொண்டோம்.


அவர்களிடம் எனக்கு எந்த அறிமுகமும் இல்லை. நானும் ஆர்வப்படவும் இல்லை. அவர்கள் மத அடிப்படையில் சிறைக்கு வந்துள்ளார்கள் என்ற பார்வையே எனக்கு அப்பொழுது இருந்ததால் அவர்களைப்பற்றி அறிந்து கொள்ள ஆர்வப்படவில்லை.


சிறைப் போராட்டங்கள் ஊடாகவும், தோழர் தடா பெரியசாமி, ஈச்சனாரி கொலைவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்த புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர்கள் மூலமாகவும் எங்களுக்கும் இஸ்லாமிய தோழர்களுக்கும் அறிமுகம் ஏற்ப்பட்டது.


உமர்கயான் என்ற அறிமுகத்தால் என் மீது அவர்களுக்கு ஓர் ஈர்ப்பு இருந்தது. அவர்கள் என்னுடைய கொள்கைகளில் முரண்பட்டாலும் அது நட்பு முரணாகவே இருந்தது. என்னுடன் சாத்தியப்பட்ட நேரத்தில் மார்க்க அடிப்படையில் விவாதித்தார்கள்.


அப்பொழுதுதான் எனக்கு தமிழ் திருமறை குர்ஹான் படிக்க கொடுத்தார்கள். சிறையில் தடா சிறைவாசிகளையும், தேசிய பாதுகாப்புச் சட்டப்படி கைது செய்யப்பட்ட எங்களையும் வாரத்தில் குறிப்பிட்ட இரண்டு நாட்களில்தான் குடும்பத்தினர், தோழர்கள் சந்திக்க முடியும். அந்த நாட்களில் இசுலாமிய சிறைவாசிகளை சந்திக்க வரும் அவர்கள் குடும்பமும் எங்களுக்கு அறிமுகமானது. வெளி உலகம் அறியா இசுலாமியப் பெண்கள் பல சிரமங்களுக்கிடையில் சிறைச்சாலைக்கும் நீதிமன்றங்களுக்கும் அல்லல்பட்டு வரும் நிலையைப் பார்த்தால் பரிதாபத்தை ஏற்படுத்தும். உண்மையிலேயே தண்டனை என்பது அவர்களுக்கும் சேர்த்துதான் என்று நமக்குத் தோன்றும். 1995ம் ஆண்டு ஆகஸ்ட் 25ம் நாள் நாங்கள் அனைத்து வழக்குகளில் இருந்தும் விடுதலை அடைந்து வெளியில் வந்தோம். தடாவின் கொடுங்கரங்களில் அடைபட்டு இருந்த இசுலாமிய சிறைவாசிகளுக்கு மட்டும் விடியலும் இல்லை; விடுதலையும் இல்லை!

வினையும் எதிர் வினையும்

இந்திய வரலாற்றில் இசுலாமியர்களின் தியாகங்கள் ஈடு இணையற்றவையாக இருந்த போதிலும் இந்திய அரசியல் சூழலில் மிகுந்த நெருக்கடிகளுக்கும் ஆளானவர்களாகவும், அதன் விளைவாக ஓரங்கட்டப்பட்டவர்களாகவும், அம் மக்களின் பங்களிப்புகள் வரலாற்றில் இருந்து மறக்கடிக்கப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். ஆளும் கும்பலும், இந்துத்துவா சக்திகளும் அதற்கான வேலைகளில் முன்நின்றன‌.


தமிழகம் தவிர்த்த வடமாநிலங்களில் இசுலாமிய மக்களுக்கு எதிரான கருத்தோட்டங்களும், புனைவுகளும் பெரும்பான்மை மக்களிடம் ஏற்படுத்தப்பட்டது. திலகர் முதல் பட்டேல் வரை, இசுலாமிய மக்களின் எதிர்க்கருத்தோட்டம் கொண்டவர்களாகவே அறியப்பட்டார்கள்.

இந்துமகாசபை, ஆர். எஸ். எஸ். போன்ற அமைப்புகள், அவர்களின் கோட்பாடுகளான‌ அகண்ட இந்தியா, பொதுசிவில் சட்டம், ராமராஜ்யம், இந்துநாடு போன்ற எதிர் முரண் கோட்பாடுகள் இந்து தீவிரவாதத்திற்கு வழி வகுத்தது. வடமாநிலங்களில் விநாயகர் சதுர்த்தி போன்ற விழாக்கள் மூலம் இசுலாமிய மக்களுக்கு எதிராக பெரும்பான்மை மக்களை திசை திருப்புவும், அதன் மூலம் கலவரங்களை ஏற்படுத்தவும் முயற்று அதிலே வெற்றியும் பெற்றனர்.


தமிழகத்தில் ஆர் எஸ் எஸ், இந்து முன்னணி போன்ற அமைப்புகள் இசுலாமிய மக்களால் புனிதமாகக் கருதப்படும் திருக்குரானையும், அவர்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் நபிகள் நாயகத்தையும் இழிவுபடுத்தி ஆபாசமாகப் பேசவும் ஆரம்பித்தார்கள். பல இடங்களில் மேடை போட்டு விசமத்தனத்தைக் கொட்டினார்கள். பெரியாரிய கருத்தோட்டங்களால், சமுக நீதிக்கான போராட்டங்களால் தமிழகத்தில் அமைதியாக வாழ்ந்த மக்களிடம் மதப்பிரிவினைகளை ஏற்படுத்தி உழைக்கும் மக்களிடையே பிளவை ஏற்படுத்தினார்கள்.

தொடக்க காலங்களில் திராவிட இயக்கங்களுக்குப் பின் திரண்ட இசுலாமியர்கள் 80களுக்குப் பிறகு இந்து முண்ணனியின் ஆபாச அராஜகங்களுக்கு எதிராக ஆங்காங்கே ஒன்றிணைய ஆரம்பித்தார்கள். ஜிஹாத் கமிட்டி என்ற அமைப்பை ஏற்படுத்திய புரட்சியாளர் பழனிபாபா இந்து முன்னணியின் ஆபாச பேச்சுகளுக்கு எதிராக பதிலடி கொடுத்து வந்தார்.

கோவை பகுதியில் மார்வாடிகள், பனியாக்கள், சேட்கள் மொத்த வணிகத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்கள். இசுலாமிய மக்கள் சாதாரண நடைபாதை வியாபாரிகளாக இருந்தார்கள். மார்வாடிகள் இவர்களை தங்கள் வியாபாரத்திற்கு இடைஞ்சல் என்று கருதி வந்தார்கள். இவர்கள் மீதான மார்வாடிகளின் வன்மம் இந்து முன்னணியை ஆதரிக்க வைத்தது. இசுலாமியர்களின் அமைதியான வாழ்க்கை முறையை கேள்விக்குள்ளாக்கினார்கள்.

இசுலாமிய மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக ஜிஹாத் கமிட்டி, அல் உம்மா போன்ற அமைப்புகளின் பின்னும் அணி திரண்டார்கள். இருதரப்பிலும் வினைகளும் எதிர்வினைகளும் மாறி மாறி தோன்றியது. கொலைகள், கலவரங்கள், மக்களின் அமைதியான வாழ்வியல் தொலைந்து பதட்ட சூழ்நிலை தொடர்ந்தது. கோவையில் மட்டுமல்ல தமிழகத்தில் இசுலாமிய மக்கள் வாழும் பிற பகுதிகளிலும் கலவரங்கள், பதட்ட சூழ்நிலை உருவாகியது.

1992 பாபர் மசூதி இடிப்பும் எதிர்வினைகளும்

1992 பாபர் மசூதி இடிப்புக்குப் பின் இசுலாமிய மக்கள் ஒரு நிரந்திர பதட்டத்தையும், பாதுகாப்பின்மையும் உணர ஆரம்பித்தார்கள். 1992க்கு முன் ரதயாத்திரை என்ற பெயரில் ஆங்காங்கே கலவரங்களுக்கு சங்பரிவார் கும்பல் விதை போட்டது. தமிழகத்தில் அது நிரந்திர அமைதியின்மையை ஏற்ப்படுத்தியது.

பாபர் மசூதி இடிப்பை எதிர்த்து போராட்ட களத்தில் நின்ற இசுலாமிய இளைஞர்கள் வேட்டையாடப்பட்டனர். வீடுகள் தோரும் சோதனை என்ற பெயரில் காவல் துறை காட்டு தர்பார் நடத்தியது. சுதந்திர இந்தியாவின் ஆள் தூக்கி கருப்புச் சட்டமாம் தடா சட்டத்தில் இசுலாமிய இளைஞர்கள் கைது செய்யப்பட்டார்கள். இறைச்சி அறுக்க வைத்திருந்த கத்தி கூட பயங்கர ஆயுதங்களாகக் கருதப்பட்டன‌; சிறுவர்கள் கூட தப்பவில்லை.

1997 நவம்பர் கருப்பு படுகொலை ஒரு இன அழிப்பின் தொடக்கம்

1997 நவம்பர் 29ம் நாள் போக்குவரத்துக் காவலர் ஒருவர் கொல்லப்பட்டது கோவை முஸ்லீம்களின் மீதான ஒரு பெரும் இன அழிப்பின் தொடக்கமாக அமைந்த நிகழ்வு. இந்துத்துவா திவிரவாதிகளுடன் காவல்துறையும் இணைந்து கோவை மாநகரில் இசுலாமிய மக்கள் மீது பெரும் தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தினார்கள். இப்படுகொலைகளும் கலவரங்களும் குஜராத் இனப் படுகொலையை ஒத்திருந்தது.

இந்துத்துவா வெறியர்கள் இசுலாமிய மக்களை வெட்டியும், குத்தியும் கொன்றார்கள். காவல்துறை சுட்டுக்கொன்றது. கோவை அரசு மருத்துவமனை எதிரே காவல்துறையின் கண்முன்னே அப்பாஸ் என்ற இளைஞன் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டான்.

தாக்குதலுக்கு உள்ளாகி சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்ட முசுலீம்களுக்கு சிகிச்சை கொடுக்கக் கூடாது என்றும் தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் எனவும் மருத்துவர்கள் மிரட்டப்பட்டனர். இசுலாமியர்களின் வணிக நிறுவனங்கள் காவல்துறையின் உதவியுடன் கொள்ளையடிக்கப்பட்டது. பின்பு தீவைத்து கொளுத்தப்பட்டது.

எரிவாயு உருளைகளின் உதவியுடன் வணிக நிறுவனங்களின் கதவுகள் உடைக்கப்பட்டு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது. காவல்துறை இந்த கும்பலுக்குப் பாதுகாப்பாக வல‌ம் வந்தது.

29ம்தேதி முதல் காவியும், காவல்துறையும் சேர்ந்து ஆடிய வெறியாட்டத்தில் 18 முஸ்லீம்கள் கொல்லப்பட்டார்கள்; பல கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் கொள்ளையடிக்கப்பட்டது.

கோவையில் சட்டத்தின் ஆட்சிதான் நடக்கிறதா என்று எண்ணும் அளவிற்க்கு கருணாநிதியின் ஆட்சியில் போலீஸின் வெறியாட்டம் இருந்தது.

இசுலாமியர்களின் நண்பன் என்று வேடமணிந்து பசப்பிய கருணா, இன்று வரை கோவை முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு நேரில் சந்தித்து ஆறுதல் எதுவும் கூறவில்லை, அவர்களுக்கு அநீதியையே கருணாவின் ஆட்சி பரிசளித்தது.

அன்றைக்கு தங்களின் புதுக்கூட்டாளி பா.ஜ.காவின் மனம் கோணாமல் கருணா நடந்துகொண்டார். முஸ்லீம்கள் கொல்லப்பட்டால் என்ன?ஈழத்தில் 1,50,000ம் தமிழ்மக்கள் கொல்லப்பட்டால் என்ன? தன் ஆட்சி அதிகாரத்திற்க்கு எதுவும் நேர்ந்துவிடக்கூடாது என்பதில் மட்டும் அவர் தெளிவாக இருந்தார்.

திருமண வீட்டில் மாப்பிள்ளையாகவும், இழவு வீட்டில் பிணமாகவும் இருந்து பழக்கப்பட்ட கருணாநிதி கோவையில் முஸ்லீம் மக்களுக்கு எதிராக நடந்த காவி + அரச பயங்கரவாதத்திற்குத் துணை நின்றார், முஸ்லீம் மக்களுக்கு எதிராக நீதி பல் இளித்து நின்றது.

கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீதும், காவல் துறையின் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காதவர்கள், பாதிக்கப்பட்ட இசுலாமியர்களையே குற்றவாளியாக்கிய அயோக்கியதனத்தை மறக்க முடியாது. பல முஸ்லீம் இளைஞர்களை தீவிரவாதிகளாக்கியது காவல் துறை. கோவை மத்திய சிறை முஸ்லீம் இளைஞர்களால் நிரம்பியது. வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது போல் முஸ்லீம் மக்கள் துடித்தார்கள். 1997 கலவரத்தில் ஈடுபட்டவர்கள் என்று பேருக்கு சில நபர்களைக் கைது செய்த காவல் புலனாய்வுப் புலிகள் அவர்கள் பினையில் வெளிவர உதவினர். உண்மையில் பாதிக்கப்பட்ட முஸ்லீம் இளைஞர்களுக்கு பிணையில் வெளிவர முடியா நெருக்கடிகளை ஏற்படுத்தினார்கள்.

நீதி தனது கடைசி நேர மரண ஓலத்தை வெளிப்படுத்தியது….

கோவை குண்டு வெடிப்பு

1998 பிப்.14ம் தேதி பாராளுமன்ற பொதுத்தேர்தல். பா.ஜ.க. திமுக, தேர்தல் கூட்டணியில் பா.ஜ.க கோவை தொகுதியில் போட்டியிட்டது. பா.ஜ.க. வேட்பாளருக்கு ஆதரவாக நடந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் மேடை அருகிலும், கோவையின் பல இடங்களிலும் சங்கிலித் தொடராக குண்டுகள் வெடித்தது. இக் குண்டு வெடிப்பில் 58 பேர் கொல்லப்பட்டார்கள், 362 பேர் காயம் அடைந்தார்கள்

இக் குண்டு வெடிப்பு 1997ம் வருடம் நவம்பரில் முஸ்லீம்கள் கொல்லப்பட்டதற்கு பலி வாங்கும் செயலாக நடந்தது என்று காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இவ்வழக்கில் 167 பேர் கைது செய்யப்பட்டார்கள். இதில் கேரள மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் அப்துல் நாசர் மதானியும் ஒருவர். அப்போராளி ஒரு கொடும்தாக்குதலில் ஒரு காலை இழந்தவர்.

இவ் வழக்கில் பல்வேறு விசாரணைகள் முடித்து இறுதி குற்றப்பத்திரிக்கை 5.5.1999ம் ஆண்டு தாக்கல் செய்யப்பட்டு இவ் வழக்கை விசாரிக்க சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டது.

குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்கள் மீது தடா, பொடா போன்ற கருப்புச்சட்டங்கள் எதுவும் போடப்படவில்லை என்றாலும் விசாரணை என்பது ரகசியமாக நடத்தப்பட்டது. நீதிமன்றம் என்ற பெயரில் கூண்டிற்குள் இவர்கள் அடைத்து வைக்கப்பட்டு, பத்திரிக்கையாளர்களை அனுமதிக்காமல், கோவை நடுவண் சிறை அருகில் இருக்கும் ஒரு கட்டிடத்தில் விசாரணை நடந்தது.

இத் தொடர் குண்டு வெடிப்பிற்குப் பிறகு தமிழகத்தில் தீண்டப்படாத கட்சியாக இருந்த பா.ஜ.க அதிக இடங்களில் வெற்றி பெற்று மத்தியில் ஆட்சியைக் கைப்பற்றியது.

இவ் வழக்கில் குற்றவாளிகள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் கண்ணபிரான், திருமலைராசன், விருதாசல ரெட்டியார், முகமது அபுபக்கர், எனது சீனியர் ப.பா.மோகன் அவர்களும் சிறப்பாக வழக்கை நடத்தினார்கள்.

1.8.2007ம் ஆண்டு இறுதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அப்துல்நாசர் மதானி உட்பட 8 பேர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்கள். 43 பேர்களுக்கு ஆயுள் தண்டனையும், 70 பேருக்கு 13 ஆண்டுகள், 10 ஆண்டுகள், 7ஆண்டுகள் என்று தண்டனை வழங்கப்பட்டது. ஏற்கனவே 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த சுமார் 100 பேர் சிறையில் இருந்த நாட்களைக் கழித்து  சிறை மீண்டனர்.

நீதியின் முன் அனைவரும் சமமா?

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான இசுலாமியர்கள் 10ஆண்டுகள் நீதிமன்ற விசாரணையை எதிர்கொண்டார்கள். இவர்களுக்கு வழக்கின் தீர்ப்பு நாள் வரை பிணை வழங்கப்படவில்லை. 18 இசுலாமியர்கள் கொல்லப்பட்ட வழக்கின் குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் பிணை வழங்கியது; காவல் துறையும் பிணை வழங்கலை எதிர்க்கவில்லை. ஆனால் முஸ்லீம்கள் என்ற காரணத்தால் பிணை மறுக்கப்பட்டு தங்கள் தரப்பு நியாயங்களைக் கூற இவர்களுக்கு எந்தவித வாய்ப்பும் அளிக்கப்படவில்லை. அப்துல்நாசர் மதானி ஒரு காலை இழந்தவர். கடுமையாக நோய்வாய்பட்டு இருந்த நிலையில் அவர் உடல் நலனைக் காரணம் காட்டியும் கூட, பிணை மறுக்கப்பட்டது. இந்த நாட்டில் சங்கராச்சாரிகளுக்கு ஒரு நியாயம், மதானிக்கு ஒரு நியாயம்!

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட மதானி மீது புனையப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்றைக் கூட காவல் துறையால் நிரூபிக்க முடியவில்லை.

10 ஆண்டுகள் அநீதியாக சிறை வைக்கப்பட்டதற்கு யார் பொறுப்பு? 18 முஸ்லீம்கள் கொல்லப்பட்ட வழக்கில் ஒருவர் கூட, ஒரு நாள்கூட தண்டிக்கப்படவில்லை.

மேற்கண்ட வழக்குகளில் இஸ்லாமிய மக்களை மட்டுமே தண்டித்து நீதிமன்றங்களும் தங்களின் நீதியை நிலைநாட்டிக்கொண்டு நீதித்துறை வரலாற்றிற்கு சிறப்பு சேர்த்தன‌.

இஸ்லாமிய சிறைவாசிகளும், அவர்களின் முன் விடுதலைக்கான கோரிக்கைகளும்

2008ம் ஆண்டு அண்ணா நூற்றாண்டை முன்னிட்டு ஆயுள் தண்டனை பெற்று தமிழக சிறைகளில் வாடும் சிறைவாசிகளை முன் விடுதலை செய்வதாக அன்றைய கலைஞர் அரசு அறிவித்தது.

10ஆண்டுகளுக்கு மேல் சிறைவாசம் கழித்த இசுலாமிய சிறைவாசிகள் தங்கள் முன் விடுதலையை ஆவலோடு எதிர்பார்த்திருந்த வேளையில், துரோகம் என்பதற்கு மறு பெயர் எடுத்த கருணாநிதி, இசுலாமியர்கள், நக்சல்பாரித் தோழர்கள், தமிழ்தேசிய விடுதலைக்காக‌ சிறைப்பட்ட தோழர்களுக்கு மட்டும் பல்வேறு சட்டப்பிரிவுகளில், அவசர அரசாணைகளைப் பிறப்பித்து இவர்களின் முன் விடுதலையைத் தடுத்து மீண்டும் துரோகம் செய்தார்.

அரசுக்கு எதிராக கலகம் செய்தவர்கள், மத மோதல்களில் ஈடுபட்டவர்கள் என்று குறிப்பிட்டு அந்த வழக்கில் சிறையில் இருப்பவர்களுக்கு முன் விடுதலை கிடையாது என்று அரசாணை வெளியிட்டு அவர்களின் முன் விடுதலையில் மண் அள்ளிப்போட்ட பெருமை கருணாவையே சாரும்.

தனது மகனின் அடியாட்களை விடுதலை செய்ய வேண்டும் என்பதற்கு ஏதுவாக 7 ஆண்டுகள் சிறைவாசம் கழித்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய உத்திரவிட்டவர் இசுலாமிய சிறைவாசிகளுக்கு அந்த உரிமையை மறுத்தார்.

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்றால் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் விடுதலை செய்து இருக்கவேண்டும். ஆனால் சட்டம் இந்த நாட்டில் பாகுபாடு கொண்டதாகவே இருக்கிறது. இசுலாமியர்கள், தலித்கள், நக்சல்பாரிகள் என்று பார்த்துப் பார்த்து சட்டம் கடமையைச் செய்யும் துர்பாக்கிய நிலையில் இருக்கிறது.

இசுலாமிய,அரசியல் சிறைவாசிகளின் துயர சிறைவாழ்வு

தண்டனை என்பதற்கு ஒரு வரையறை வேண்டும். ஆனால் இந்திய சட்டங்கள் அப்படியான முடிவான வரையறைக்குள் வருகிறதா என்று பார்த்தால் இல்லை.

தண்டனையின் நோக்கம்தான் என்ன?

1.குற்றம் செய்பவர்களைத் தடுத்து தனிமைப்படுத்தி வைப்பது. மீண்டும் அக்குற்றம் நிகழாவண்ணம் தடுப்பது.

2.அவர்கள் செய்த குற்றத்திற்குத் தண்டனையாக சமூக அமைப்பில் இருந்து, அவர்களின் குடும்ப வாழ்வியலில் இருந்து தனிமைப்படுத்தி அக்குற்றத்தை உணரவைப்பது.

3.மீண்டும் அக்குற்ற செயல்களில் ஈடுபடாவண்ணம் அவர்களைத் திருத்துவது.

இவைகள்தான் கைது, காவல், சிறை போன்றவற்றின் அடிப்படையாக இருப்பதாகக் கூறப்படுகிறது.

சிறையில் ஒருவரை தடுத்து வைப்பது என்பது அவர்களை திருத்தி சமூகத்தில் மீண்டும் அவர்களை வாழ வைக்கவேண்டும். அதற்கு ஒருகால எல்லை வேண்டும். தமிழக சிறைகளில் இசுலாமிய சிறைவாசிகளுக்கு சில ஆண்டுகள் வரை சிறைகளில் ஏற்பட்ட கடுமையான சூழல் தனது எதிரிகளுக்குல் கூட வரக்கூடாது என்ற எண்ணம் ஏற்படும் அளவிற்கு இருந்தது. எழுத்தில் வடிக்க முடியாவண்ணம் சிறைக்கொடுமைகளை இசுலாமிய சிறைவாசிகள் அனுபவித்தனர். இவர்களைப் பார்க்கவரும் உறவுகள் சந்திக்கும் நெருக்கடிகள் கொஞ்சம் அல்ல. உளவுத் துறையின் கண்காணிப்புகள், சிறைவாயிலில் இருந்து சந்திக்கப்போகும் இடம் வரை தொடரும் சோதனைகள், அவமானங்கள், அதுவும் இசுலாமியப் பெண்கள் படும் துயரம் இனி ஒருமுறை சிறையில் வந்து தன் உறவுகளை சந்திக்க வேண்டுமா என்று எண்னம் கொள்ளும் அளவிற்கு இருந்தது; இருக்கிறது.

சிறைவாசிகளுக்கான உரிமைகளும் இசுலாமிய சிறைவாசிகளும்

தமிழக சிறைகளில் சிறைப்பட்டிருக்கும் சிறைவாசிகளுக்கு பரோல் என்று அழைக்கப்படும் சிறைவிடுப்பு உண்டு. ஒருவாரம், ஒரு மாதம் என்று விடுப்பு அனுமதிக்கப்படுவது உண்டு. வெளியில் வந்தவுடன் அதை நீட்டிக்கவும் வழி உண்டு. அமைச்சர் பரிந்துரை விடுப்பின் மூலம் மாதக்கணக்கில் பரோலில் வெளியில் இருக்கலாம். இது இன்றும் நடைமுறையில் இருக்கிறது. ஆனால் இசுலாமிய சிறைவாசிகளுக்கு இந்த உரிமை முற்றாக மறுக்கப்படுகிறது. மீறி அனுமதித்தாலும் வழிக்காவலோடுதான் அனுமதிக்கப்படுகிறது. இசுலாமிய சிறைவாசிகள் விடுப்பிற்காக விண்ணப்பித்து நீண்ட நாட்கள் காத்திருக்கவேண்டும். 'வழிக்காவலர்கள் இல்லை சில நாட்கள் காத்திருக்கவேண்டும்' என்ற பதிலே வரும்.

சிறையில் இருக்கும் அனைவரும் வழிக்காவலோடுதான் சிறை விடுப்பு அதாவது பரோலில் போகிறார்கள் என்று எண்ணி விடாதீர்கள். மற்ற சிறைவாசிகள் வழிக்காவல் இல்லாமல் தனக்கு வழங்கப்பட்ட விடுப்பு நாட்களில் சுதந்திரமாக எங்கும் சென்று வரலாம். ஆனால் இசுலாமிய சிறைவாசிகள் காவலர் காவலோடு பயங்கர ஆயுதங்களின் பாதுகாப்போடு தான் அதிகபட்சம் இரண்டுநாட்கள் விடுப்பில் செல்ல முடியும். இப்பொழுது கூறுங்கள் சட்டம் அனைவருக்கும் பொதுவானதா?

ஒரு சமுகத்தை தொடர்ச்சியாக குற்றப் பரம்பரைபோல் பார்ப்ப‌தும், தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் என்று அரசு மக்களிடம் பரப்புவதும், அதற்கு ஊடகங்கள் துணை நிற்பதும் அரச பயங்கரவாதத்தின் உச்சமாகவே இருக்கிறது. மதச்சார்பற்ற நாடாக பீற்றிக்கொள்ளும் அரசுகள் ஒரு சமூகத்தின் மீது கொள்ளும் மதிப்பீடுகள் வெட்ககரமாகவே இருக்கிறது.

இசுலாமிய சிறைவாசிகளின் முன் விடுதலையும் போராட்ட களங்களும்

கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக சிறைகளில் துயருற்றுவரும் இசுலாமிய சிறைவாசிகளின் முன் விடுதலைக்காக தமிழகத்தில் பல போராட்டக் களங்களை கண்டாலும், அது இவர்களின் முன் விடுதலைக்கான வலிமையைச் சேர்க்கவில்லை என்பதுதான் உண்மை. தொடர்போராட்டங்களை மக்களிடம் வீரியமாக எடுத்து சென்றால்தான் அரசுக்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்பதுதான் எதார்த்தமான உண்மை. இசுலாமிய மக்களும் அவர்களைப் பிரதித்துவப்படுத்தும் இசுலாமிய அமைப்புகள் மட்டுமே போராடினால் தீர்வு கிடைத்துவிடுமா?

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக்காக அவர்களின் விடுதலைக்கான நியாங்களை பொதுச்சமூகத்திடம் எடுத்துப்போகவேண்டிய தேவை இருக்கிறது. பொதுத்தளத்தில் அனைத்து அரசியல் கட்சிகள், தமிழ்த் தேசியர்கள், பெரியாரியல்வாதிகள், மனித உரிமைப்போராளிகள் என அனைவரையும் ஒன்று சேர்த்து ஒரு பொதுக்களத்தை கட்டியமைப்பதின் மூலமே இவர்களின் விடுதலை சாத்தியம் என்று எண்ணுகிறோம்.

தமிழக இசுலாமிய இயக்கங்களே..!

10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகளின் விடுதலைக்காக ஒரு பொதுக்களம் அமைப்போம்.

இசுலாமிய சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல், ஆயுள் சிறையாளிகளின் முன்விடுதலைக்கு குரல் கொடுப்போம்.

10 ஆண்டுகளுக்கு மேல் தங்கள் குடும்பம் விட்டு, உறவை விட்டு சிறைப்பட்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகளின் முன்விடுதலைக்காக இப்பொழுதே உங்கள் குரல் ஒலிக்கட்டும். அமைப்புகளுக்கிடையே உள்ள வேறுபாடுகளை மறந்து ஒற்றைக் கோரிக்கையாம் தமிழக சிறைகளில் வாடிவரும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலை என்ற முழக்கத்தின் மூலம் ஒன்றிணைவோம்.

தமிழக அரசே..!

தமிழக சிறைகளில் 10ஆண்டுகளுக்கு மேல் இருந்து வரும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகள், மற்றும் ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலையைக் கோருகிறோம்.

முந்தைய ஆட்சியில் ஆயுள் சிறைவாசிகளின் முன் விடுதலையில் அரசின் பாரபட்ச போக்கால் 71 இசுலாமிய சிறைவாசிகள் முன் விடுதலைக்குத் தகுதி இருந்தும் அவர்களை விடுதலை செய்யவில்லை. கடந்த ஆட்சியின் தவறுகளைக் களைந்து எதிர்வரும் செப்.15 அண்ணா பிறந்த நாளில் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் விடுதலையைக் கோருகிறோம்.

இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அரசியல் சிறைவாசிகளின் முன் விடுதலையை தடுக்கும் நோக்குடன் பிறப்பிக்கப்பட்ட ஒரு சார்பான அனைத்து அரசாணைகளையும் ரத்து செய்யக் கோருகிறோம்.

மற்ற சிறைவாசிகள் போலவே இசுலாமிய சிறைவாசிகளுக்கு வழிக்காவல் இல்லாமல் பரோல் விடுப்பு அளிக்கக் கோருகிறோம்.

சிறையில் இனம் புரியா நோயால் தினம் செத்துக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசி அபுதாஹீரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டுகிறோம்.

சிறையில் தங்கள் உறவுகளை சந்திக்கவரும் இசுலாமியர்களை மாத்திரம் அவமானப்படுத்தும் நோக்குடன் சோதனை செய்வதை தடுத்து நிறுத்தவேண்டுகிறோம்.

மனித உரிமைப்போராளிகளே..! சனநாயக சக்திகளே..!

தமிழக சிறைகளில் வாடிக்கொண்டிருக்கும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகளின் முன் விடுதலைக்கு குரல் கொடுங்கள்..!

மார்ச் முதல் ஆகஸ்ட் வரை அரசியல் சிறைவாசிகளின் முன் விடுதலைக்கு தொடர் பிரச்சாரம் மூலம் ஒரு பொதுக்கருத்தை ஏற்படுத்துவோம். செப்.15 இவர்களின் விடுதலையை சாத்தியமாக்குவோம்.

ஒன்றிணைவோம் அரசியல் சிறைவாசிகளின் விடுதலைக்காய்...1

- உமர்கயான்.சே
ஒருங்கிணைப்பாளர்
இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்
தமிழ்நாடு

Sunday, August 26, 2012

ஆகஸ்ட் 31 - ஏன்? ...எதற்காக.....?


 
அன்பின் தோழமைகளே,

கோவை சிறையில் உள்ள 166 முஸ்லிம்கள் உட்பட தமிழகமெங்கும் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள பலநூறு முஸ்லீம் சிறைவாசிகளின் 10 வருடங்களுக்கும் மேற்பட்ட சிறை இருப்பையும், ஆதாரங்களற்ற முறையில் ராசிவ் காந்தி கொலை வழக்கில் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்ட்டிருக்கும் முருகன், பேரரிவாளன், சாந்தன் என தமிழ் சொந்தங்களும், இன்னும் தமிழக சிறைகலெங்கும் பல்லான்டு காலமாக விடுதலைக்கான முகாந்திரமே இல்லாமல் அடைபட்டு கிடக்கும் அனைத்து அப்பாவி சிறைவாசிகளின் நிலை நிச்சயமாக 21 ஆம் நூற்றாண்டு இந்திய சமூகத்தின் அவலமாக வரலாறு பதிவு செய்திருக்கின்றது.

நீதி நியாயம் ஜனநாயகம் சட்டத்தின் முன் அனைவரும் சமம், மதச்சார்பற்ற தன்மை, மனித உரிமை என்பதனை எல்லாம் கோட்பாடுகளாக கொண்ட ஒரு அரசமைப்பில் இருந்து நீண்ட நெடுங்காலமாக நீதி , நியாயம், இந்திய அரசியல் சாசனம் வழங்கியுள்ள அனைத்து அடிப்படை உரிமைகளும் மறுக்கப்பட்டு விசாரணை என்ற பெயரில் இந்திய வரலாறு காணாத நீண்ட சிறை இருப்பில் உள்ள சிறுபான்மை சமுதாயத்தினருக்கும், மேற்கூறிய அப்பாவிகளுக்கும் நம்மாள் நீதி பெற்றுத்தர இயலவில்லை என்றால் அதனினும் ஒரு சமூக இழிவு வேறொன்று இருக்குமோ?

 இந்தியாவில் இதுவரை நடந்த வகுப்பு கலவரங்களில் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது சிறுபான்மை சமுதாயமான இஸ்லாமிய சமுதாயமே. இதன் சொத்துக்கள் சூரையாடப்பட்டுள்ளன, இச்சமுதாயத்தின் பென்கள் கற்பழிக்கப்பட்டுள்ளார்கள், குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளனர், இன்னும் இச்மூகமே தண்டிக்கப்படும் விதமாய அக்கலவரங்களுக்கு காரனம் என குற்றம் சுமத்தப்பட்டு இந்தியாவெங்கும் சிறையிலும் அடைபட்டு கிடக்கின்றனர். இக்கலவரங்களுக்கு காரனமான சங்பரிவார கூட்டங்கள் ஒரு போதும் சிறையில் அடைக்கப்பட்டதுமில்லை, தண்டிக்கப்பட்டதுமில்லை இது தான் ஜனநாயக இந்தியா!! 

ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப்படக்கூடாது என்பதே நீதித்துறையின் தாரக மந்திரம். பல ஆன்டுகளாக யார் குற்றவாளிகள் என நிரூபிக்காமல் முஸ்லிம்களின் வழக்குகளை தாமதப்படுத்துகின்றனர். தாமதப்படுத்தும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு சமமாகும் என உச்ச நீதிமன்றம் பல முறை கண்டனக்குரல் எழுப்பியும் முஸ்லீம்களாகிய நமது சகோதரர்களுக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பிணை கூட மறுக்கப்படுகிறது. நாடறிந்த குற்றவாளியாகிய பாசிச சங்பரிவார கும்பல்கள் குற்றமற்றவர்கள் என உலாவுகின்றனர்.சட்ட மன்றத்திலேயே முதலமைச்சர் ஜெயலலிதாவால் குற்றம் செய்துள்ளார் என பிரகடனப்படுத்தப்பட்டும் கூட காஞ்சி சங்கராச்சாரியார் என்ற கொலைக் குற்றவாளி பிணையில் விடப்பட்டுள்ளார் ஆனால் இஸ்லாமிய சமுதாயத்தை சேர்ந்த பலர் நீண்ட காலமாக பிணைதராமல் கொடிய சிறையினுள் அடைத்து வைத்திருக்கும் மாபெரும் அநீதி நம் தமிழகத்தின் தான் இந்த அநீதிக்கு எதிராக தமிழ் இனம் ஒன்று திரள்வது காலத்தின் கட்டாயமாகும்.

ராஜிவ் காந்தி படுகொலையின் மூல காரன கர்த்தாக்களான "சாமி" வகையராக்கள் சுதந்திரமாக உலா வருகையில் ஏதுமறியாத அப்பாவிகள் தடா சட்டத்தின் கீழ் பெறப்பட்ட வாக்குமூலங்கள் சாட்சிகளின் அடிப்படையில் இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளனர். ராஜிவ்கொலை பயங்கரவாத நடவடிக்கை அல்ல, தடா சட்டத்தின் கீழ் வழக்கு தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது; தடா சட்டமும் காலாவதியாகிவிட்டது இன்னும் ஏன் இந்த அப்பாவிகளை துர்க்கு தண்டனை கைதிகளாக அடைத்து வைத்துள்ளனர்? இது மனித உரிமை மீறல் இல்லையா? இன்னும் இந்த வழக்கில் மதுரை சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தோழர் ரவிச்சந்திரன் உட்பட 4 பேர் ஆயுள் தண்டனை கைதிகளாக 20 ஆன்டுகளை தாண்டியும் அடைபட்டுள்ளனர். ஒரு கைதி எட்டு ஆன்டுகளுக்கு மேல் சிறையில் இருப்பது என்பது அனைத்து மனித உரிமை நெறிமுறைகளுக்கும் எதிரானது என்று மனித உரிமை ஆர்வளர் திரு. வி.ஆர். கிருஷ்னய்யர் என்பவர் கூறியுள்ளார்.

நமது தேசப்பிதா அன்னல் மகாத்மா காந்தி அவர்களை கொன்ற கோபால் கோட்சே என்பவன் 16 ஆன்டுகளில் விடுதலை செய்யப்பட்டான், இவ்வளவுக்கும் கோபால் கோட்சே மகாத்மா காந்தியின் படுகொலையில் நேரடியாக தொடர்புள்ளவன் என்று குற்றம் சாட்டப்பட்டு அது நிருபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டவன். ஆனால் தமிழகத்தில் மட்டும் எந்த வித நேரடி குற்றச்சாட்டுகக்களும் இன்றி சந்தர்ப்ப சாட்சிகளின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டு விசாரனை கைதிகளாகவும், தண்டனை கைதிகளாகவும் 20 ஆன்டுகளை தாண்டியும் சிறைக் கொட்டடிகளில் எமது தமிழ் இனத்தை சேர்ந்த தோழர்கள் பலர் கரையே தெறியாது வாடி வருகின்றனர். தேசப்பிதாவை கொன்ற கொடியவர்கள் எல்லாம் விடுதலையாகும்போது எமது இனச்சொந்தங்களை மட்டும் இந்த அரசு வஞ்சப்பது ஏனோ? 

சட்டம் அனைவருக்கும் சமம் என்ற கோட்பாட்டினை கொண்ட இந்திய திருநாட்டில் சங்கராச்சாரிகளுக்கும், அம்பானி வகையாராக்களுக்கும் ஒரு நீதி சிறுபான்மையினருக்கும் ஒடுக்கப்பட்ட தமிழ் சமூகத்திற்கு ஒரு நீதி!! என்ன ஒரு அவலம்?

பாதிக்கப்பட்டு கொடுஞ்சிறைகளில் அடைபட்டு கிடக்கும் இம்மக்களை பற்றி நாம் அறிந்து கொள்ளாமலோ, அறிந்தும் அறியாமலோ, இவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை மறுக்கவோ , மறைக்கவோ செய்து அல்லது கண்டும் காணாதது போலவோ இருந்து விடலாம். அறிந்து கொல்லுங்கள் வரலாறு நமது மனசாட்சியை விட மிக நேர்மையாக இயங்குகிறது

வரும் ஆகஸ்ட் 31 அன்று தமிழகத்தின் தலைநகர் சென்னையில் கூடும் மாநாட்டில் நம் தமிழ் சமூக அமைப்புகளின் தலைவர்கள், மனித அரிமை ஆர்வளர்கள், ஆன்றோர்கள், சான்றோர்கள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்க உள்ளார்கள் இச்சமூக சங்கமிப்பில் நீங்களும் ஒரு அங்கமாய் நின்று இழைக்கப்பட்ட அநீதிக்கெதிராய குரல் கொடுங்கள், ஜாதி , மத வேறுபாடின்றி உங்களை அழைக்கிறோம், அனைத்து தரப்பு மக்களுக்கான உரிமைப்போர் இது, நமது சக தோழர்களின் அடிப்படை வாழ்வாதாரம் கேட்டு நடக்கும் போராட்டம் இது, சமூக விடியலுக்கான அழைப்பு இது. வாருங்கள் தோழர்களே, தோழ் சேர்ப்போம் மறுக்கப்படும் உரிமைகளை வென்றெடுப்போம்!!

ஆகஸ்ட் 31 - சென்னை மன்னடியில் சங்கமிப்போம், வெஞ்சிறைகளில் வேதனைகளோடு வாடும் நம் இனத்தை மீட்க போராடுவோம் , வாருங்கள் அநீதிக்கெதிரான இந்த களமாடலில் பங்கெடுங்கள் !! பதிவு செய்யுங்கள் உங்களை வரலாற்றின் பக்கங்களில் நீதிக்காக போராடியோர் என்று!!

அழையுங்கள் இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இளைஞர் இயக்கம்: 9944112879 / 7871294143 / 9488159091 / 9944713816

Monday, May 19, 2008

வஞ்சிக்கப்பட்ட சமுதாயத்தின் மறைக்கப்பட்ட உண்மைகள்

எட்டு ஆன்டுகளுக்கும் மேலாக சிறைக்குள் விசாரணைசிறைவாசிகளாக வாழ்க்கையைத் தொலைத்த நம் முஸ்லிம் சகோதரர்களின் குடும்பங்களின் இன்றை நிலையை நமது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தை நாம் அனைவரும் கட்டாயம் காணவேண்டும். இதன் மூலம் இந்த பாவப்பட்ட குடும்பங்களின் உண்மை நிலை உலக மக்கள் உணர வேன்டும் என்ற நோக்கில் இங்கு அந்த ஆவணப்படம் Real Media Format ல் இடப்பட்டுள்ளது. High Quality ஒரே File ஆக உள்ளது.


வஞ்சிக்கப்பட்ட சமுதாயத்தின்

மறைக்கப்பட்ட உண்மைகள்

CLICK HERE TO WATCH / DOWNLOAD VIDEO



Friday, May 16, 2008

தமிழக சிறைகளில் வாடும் சிறைவாசிகளின் இன்றைய நிலை

குறிப்பு : இன்றைய தேதிப்படி இன்னும் நூற்றும் மேற்ப்பட்ட சகோதரர்கள் 11 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடிக்கொண்டிருக்கின்றார்கள். இவர்களில் பலருக்கு ஆயுள் தண்டனை, தூக்கு தண்டனை என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. இவர்களின் விடுதலைக்காக உசச் நீதி மன்றங்களில் முறையீடு செய்யவும், இவர்களின் குடும்ப உதவிக்காகவும் அதிகம் பொருளாதரம் தேவைப்படுகின்றது. இந்த குடும்பங்கள் உங்களிடம் கையேந்தி நிற்கிறார்கள். நம் சமுதாயம் என்றும் இவர்களை கைவிடாது என்ற நம்பிக்கையில் நம்மிடம் கையேந்தி உதவி கோரும் இம்மக்களை நம் சமுதாயம் கைவிடாது என்ற நம்பிக்கையில் நான் இதை இங்கு மீள் பதிகின்றேன்.



''கண்ணீர்க் கதறல்கள்'' வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்
CLICK HERE TO VIEW THE VIDEO

இவர்களின் அவலம் மாறுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பின் சகோதர, சகோதரிகளே.,

நமது சமுதாய இயக்கங்கள் அனைத்தும் யாருடைய விடுதலைக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனவோ அந்த முஸ்லிம் சிறைவாசிகள் சிறைக்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு நீண்ட நெடிய 8 ஆண்டுகளாகிவிட்டன. கொடிய சிறை வாழ்வு., இவர்களின் வாழ்க்கையின் ஒரு பெரும்பகுதி நான்கு சுவர்களுக்கு மத்தியில் விரயமாகிக் கொண்டிருக்கின்றன. இவை என்றுதான் முற்றுபெறுமோ? என்ற ஏக்கப் பெருமூச்சு நித்தம் நித்தம் இவர்களது குடும்பங்களை துளைத்தெடுக்கின்றது. ஆம்! இவர்களின் தேவை குடும்பங்களுக்கு அல்லவா மிக மிக அவசியம்.

எட்டு ஆண்டுகளில் இக்குடும்பங்கள் அடைந்திட்ட துயரங்களை வார்த்தைகளில் வடித்திட இயலாது. வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய ஆண்மக்களெல்லாம் அடைபட்டதால் வருமானங்கள் நிரந்தர தடையாகிவிட்டன. குடும்பத்தை காப்பாற்றிட வேண்டிய நிர்பந்தத்தால் இக்குடும்பத்தின் மென்மையான சகோதரிகள் தங்களின் மென்தோல்கள் வலுவிழக்கும் அளவிற்கு ஆண்களைப் போல் கடினமாக உழைத்திட வேண்டிய பரிதாபமான நிலை. இக்காலத்தில் என்னதான் கடுமையாக உழைத்தாலும் குடும்பத்தை ஒப்பேற்ற ஆணுக்கே மிக கடினம் என்கின்றபோது பெண்களால் என்னதான் செய்ய இயலும்.

வயிற்றுப்பாட்டுக்கே தினம் தினம் பெரும் திண்டாட்டம், மூன்று வேளை உணவைக்கூட முறையாக உண்பதே பெரும்பாடு என்கின்றபோது, குடும்பத்தின் மற்ற அத்யாவசிய செலவினங்களுக்கு என்னதான் செய்வார்கள் இவர்கள். ஒருவர் திடீரென கடும் நோய்வாய்ப்பட்டால் வேறு வழியில்லை, இறக்க வேண்டியது தான். பெரும் மழையினால் வீட்டுக்கூரை சரிந்துவிட்டால்.. என்ன செய்வது? வானம் பார்த்த வீட்டில் தான் சிரமப்பட்டாக வேண்டும். இன்னுமின்னும் நெஞ்சை பிழியவைக்கும் ஏராளமான துன்ப துயரங்கள் சிறைப்பட்ட ஒவ்வொரு வீடடிலும் தினம் தினம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நித்தம் தொடரும் தொடர் துயரங்களால் இவர்களின் குடும்பங்களில் வாழ்க்கையின் போக்கு திக்கு தெரியாத காட்டில் திசைமாறிச் செல்வது போல முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கின்றன..

இந்தச்சிறைவாசிகளின் சகோதரிகளிள் பலர் திருமணம் கூட
ஆகாமல் முப்பது வயதைத்தாண்டியும் முதிர்கன்னிகளாகதங்கள் வாழ்வை தொலைத்து நிராதரவாக நிற்கின்றனர். தங்கள் தந்தையரையும், தமயர்களையும் சிறைகளிள் தொலைத்தது போல். காரணம் பொருளாதாரம்.. தமது வாழ்வாதாரங்களான ஆண்களை சிறைக்கு அனுப்பியபின் இவர்களின் குடும்பங்கள் இன்று திக்குத்தெறியாமல் நிர்க்கதியாய் நிற்கின்றன.
எட்டு ஆன்டுகளுக்கும் மேலாக சிறைக்குள் விசாரணை
சிறைவாசிகளாக வாழ்க்கையைத் தொலைத்த நம் முஸ்லிம் சகோதரர்களின் குடும்பங்களின் இன்றை நிலையை நமது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தை நாம் அனைவரும் கட்டாயம் காணவேண்டும். இதன் மூலம் இந்த பாவப்பட்ட குடும்பங்களின் உண்மை நிலை உலக மக்கள் உணர வேன்டும் என்ற நோக்கில் இங்கு அந்த ஆவணப்படம் Real Media Format ல் இடப்பட்டுள்ளது.

எட்டு ஆன்டுகளாக தங்கள் கணவரை, சகோதரனை, தந்தையை பிறிந்து தவிக்கும் நமது சமுதாயச் சகோதரிகளின் கண்ணீர்க் கதறல்களை காவியமாக வடித்துள்ளார்கள்.


''கண்ணீர்க் கதறல்கள்'' வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்

இதுமட்டுமல்லாது இவர்களின் குழந்தைகள் தங்களின் கல்வியை தொடர இயலாது தவித்து வருகின்றார்கள் இப்படியாக இவர்களின் வாழ்க்கை செல்கின்றது.

இக்குழந்தைகளின் தந்தைமார்களும், சகோதரர்களும் நான்கு சுவர்களுக்கு மத்தியில் விதிவசத்தால் முடங்கிக்கிடப்பது போல் இவர்களது குழந்தைகளின் கல்வியறிவு முடங்கிப் போய்விட சமுதாயம் காரணமாகி விடக்கூடாது. ஒருபோதும் இப்பெரும் பாவத்திற்கு சமுதாயம் ஆளாகிவிடக்கூடாது. குழந்தைகள் தொடர்ந்து தொய்வில்லாமல் படித்திட நம் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தார்மீக பொறுப்புண்டு..


இந்த குழந்தைகளும் கூட நமது சமுதாயத்தின் செல்வங்கள்தான். இவர்களின் தந்தைமார்கள் சிறைவாசிகள் என்ற காரணத்திற்காக இவர்களை நாம் ஒதுக்கிவிட இயலாது. இக்குழந்தைகளின் விபரங்களும் இவர்களின் கல்வி செலவுகளும் (அதிகமில்லை சில ஆயிரங்களே இதை நமது சமுதாயம் கட்டாயம் ஏற்க வேண்டும்) இங்கு பதியப்பட்டுள்ளன. அவற்றை வேண்டுவோர் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


சிறைவாசி குழந்தைகளின் கல்வி விபரம் டவுன் லோட்

இவர்களுக்கு உதவ விரும்புவோர் கீழ்கண்ட அறக்கட்டளையின் முகவரிக்கு தங்கள் உதவிகளை அனுப்பலாம்.


CHARITABLE TRUST FOR MINORITIES

A/C NO. SB 57991

UNITED BANK OF INDIA
OPPANAKKARA STREET BRANCH
COIMBATORE - 641001.
******************************
CHARITABLE TRUST FOR MINORITIES
RAHIM PLASTIC HOUSE
GNANIYAR NAGAR
SARAMEDU,
KARUMPUKKADAI
COIMBATORE - 8
TEL. : 0091-422-2307673 / +91-9786093544

படிப்பறிவில்லாதவர்களின் கல்விக்கண்களை திறக்கச் செய்தமைக்காக பத்ருப்போரின் கடும் எதிரிகளையே விடுதலை செய்திட்டார் நம் அருமைத்தலைவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்.

நம் அருமைத் தலைவர் கல்விக்கு தந்திட்ட முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். படிக்காத உம்மி நபிதான் ஆனால் சமுதாயத்தில் ஒருவர் கூட கல்வியறிவு இல்லாமல் இருந்திடக்கூடாது என அறிவுறுத்தத்தான் "தொலைந்து விட்ட பொருளை தேடுவது போல கல்வியை தேடிக்கொள்" என கல்வியின் மாண்பை எடுத்தரைத்தார்.

சமுதாயத்தில் நிகழ்ந்திட்ட கொடுமைகளை எதிர்த்ததற்காக இச்சிறை வாழ்வை பரிசாக பெற்றவர்களின் குழந்தைகளின் கல்விக்கண்கள் திறக்க எத்தடையும் இருந்துவிடக்கூடாது.
உதவியின்மையால் இவர்களின் கல்வி தடைபடுமானால் இதைவிடக்கொடுமை வேறெதுவும் இல்லை.


அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் இவர்களின் கல்விக்கண் திறக்க தாராளமாய் முன்வந்து உதவிகளை வாரி வழங்கிட வேண்டும். நீங்கள் செய்யக் கூடிய ஒவ்வொரு பைசா உதவியும் வீணாகி விடாது. இதுவே, உங்களின் உண்மையான (மறுமைக்கான) சேமிப்பு ஆகும்..


நிராதரவாகிப் போன இக்குழந்தைகளின் கல்விக்கு உதவுவது மிகவும் போற்றுதலுக்குரியதாகும். உதவிகளிலே மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும். இக்குழந்தைகள் படிக்க, படிக்க, பட்டங்கள் வாங்க வாங்க இவர்களால் சமுதாயம் பயன் அடைய அடைய உங்களின் தர்மத்தின் நன்மை கணக்கில்லை மறுமை வரை பெருகிக்கொண்டே செல்லும்!

இவர்களின் அவலம் கட்டாயம் மாறும்.. மாற்றலாம் நாம் நினைத்தால்... (இறைவன் துணையுடன்)

என்றும் அன்புடன்,
முகவைத்தமிழன்

Friday, April 25, 2008

உயிருக்கு போராடும் சிறைவாசி - அரசு நடவடிக்கை எடுக்குமா?

நீதிபதி இரத்தினவேலு அவர்கள் சிறைவாசி அபுத்தாஹிருக்கு எம்.ஏ பட்டத்தை வழங்குகின்றார் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோசல ராமன் டி.ஐ.ஜி எஸ்ரா ஆகியோர் விரைவில் பி.பி.ஏ தேர்வு எழுத இருந்தவர் ஆனால் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இன்று காவல் துறையின் நிராகரிப்பால் உயிருக்கு போராடுகிறார். .

உயிருக்கு போராடும் சிறைவாசி - அரசு நடவடிக்கை எடுக்குமா?

நடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாய் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விசாரனை கைதியாக வாடி வரும் 30 வயதே ஆன அபுதாஹிர் என்ற முஸ்லிம் வாலிபர் கடந்த சில மாதங்களாக மோசமான வகையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு கொடிய நோயால் வடி வந்தார் இந்நிலையில் கடந்த மே 14ம் தேதி உடல் வீங்கிய நிலையில் விசாரனை சிறைவாசி அபுத்தாஹிர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டி கடந்ம மே 16ம் தேதி வழக்கறிஞர் பஷீர் அகமது அவர்கள் சிறப்பு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார் அதனடிப்படையில் கடந்த மே 21 அன்று அரசு மருத்துவமனையில் சேர்த்து உடனடி சிகிச்சைக்கு உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றம் அவருடன் 2 உறவினர்களும் அவருக்கு உதவியாக மருத்துவமனையில் தங்கியிருக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் நீதிமன்றத்'தின் இந்த தீர்ப்புக்க எதிராக செயல்பட்ட காவல்துறையின் காவிமயமாக்கப்பட்ட கருப்பு ஆடுகள் மனிதாபிமான அடிப்படையில் கூட உடல் வீங்கி உயிருக்கு போராடும் அபுத்தாஹிர் என்ற 30 வயதான முஸ்லிம் வாலிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து சிறைக்கே கடந்த 26.05.2007 அன்று திருப்பி அனுப்பிவிட்டனர்.

கடந்த 28ம் தேதி மீண்டும் வழக்கறிஞர் பஷீர் அகமது அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்குமாரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுச்செய்து உடனடியாக தனியார் மருத்தவமனையில் சிகிச்சைபெறவும் சிகிச்சையின்போது அபுத்தாஹிரின் சகோதரர் மற்றும் அவரது தந்தை உடனிருக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 29ம் தேதி தனியார் மருத்தவமனைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர் அவரது தந்தையையோ சகோதரரையோ நெருங்கவிடாமல் திரைமறைவில் மருத்துவமனை நிர்வாகத்தினரை மிரட்டி உடனடியாக திரம்பவும் சிறைக்கு அழைத்து சென்றுவிட்டனர். இது வரை இருமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும் சரியான சிகிச்சை வழங்காமல் வெறும் கண்துடைப்பு நாடகமாகவே நடத்தி நீதி மன்றத்தின் உத்தரவுக்கு எதிராக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே நிலையில் நீதி மன்றம் பலமுறை உத்தரவிட்டும் காவி மயமாகிப்போன காவல் துறையின் கருப்பு ஆடுகளின் இடையூரால் முறையான சிகிச்சையின்றி இவ்வழக்கின் எதிரி என் 104 ஷெரீஃப் என்ற முஸ்லிம் உயிருக்கு போராடிய நிலையில் அரசு சிகிச்சைக்கு உத்ரவிட்டும் சிறப்பு புலனாய்வு குழு அவருக்கு சிகிச்சை அளிக்க கூடாதென உயர்நீதிமன்றம் சென்று தடை வாங்கியது ஆனால் முஸ்லிம்கள் பெரும் அளவில் வெளியே போராட்டங்கள் நடத்தியதால் பின்னர் பின்வாங்கியது.

இதுபோலவே கடந்த இரன்டான்டுகளுக்கு முன் குடல் வால் அறுவை சிகிச்சைக்காக இவ்வழக்கின் எதிரி என் 49 அப்பாஸ் என்ற முஸ்லிம் வாலிபருக்கு எச்.ஐ.வி எனும் எய்ட்ஸ் கொடுங்கொல்லி நோயை இவரது உடலில் செலுத்தி அவரை மரணத்தை நோக்கியவராக மாற்றியதும் இதே காவி மயமாக்கப்பட்ட காவல் துறைதான்.

கேரளாவை சேர்ந்த அப்துன் நாசர் மதனியினுடைய கதையோ சொல்லிப் புறிய வேண்டியதில்லை. இவ்வாறாக முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த அப்பாவி விசாரனை சிறைவாசிகளுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகளையும் மறுத்து அவர்களை கொலை செய்து வருகின்றது காவல்துறை. நீங்கள் விடுதலையானாலும் உங்களை நிம்மதியாக வாழ விடமாட்டோம் என்று கூக்குரலிடுகின்றது காவி வெறிபிடித்தவர்களால் நிறம் மாறி கிடக்கும் காவல்துறையின் புலனாய்வு துறைகள்.

தீர்ப்பு வரும் சமயத்தில் குன்டு வைக்க சதி, பயிற்சி அது இது என்று பொய்யான செய்திகளை ஊடகங்களில் பரப்பி மக்களை பீதியடையச் செய்யும் செயலை உளவுத்துறையினர் செய்து வருகின்றார்கள். இதுபோன்ற செய்திகளை பரப்ப வேண்டாம் என் ஊடகங்களை கேட:டக் கொள்கின்றோம்.

தற்போது நீதிமன்றத்தின் பல உத்தரவுகளுக்கு பின்னரும் உயிருக்கு போராடும் விசாரனை சிறைவாசி அபுத்தாஹிருக்கு உடனடி சிகிச்சைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும் ஏற்கனவே பலர் இதுபோன்று சிகிச்சை மறுக்கப்பட்டு காவல்துறையின் சதியால் சிறையிலேயே பலியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற அனுமதிக்க கூடாது எனவும் சிறுபான்மை அறக்கட்டளை நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் பவானி பா. மோகன் அவாகள் நேற்று கோவையில் நடைபெற்ற பதிதிரிகையாளர் சந்திப்பில் தெறிவித்தார்.

உயிருக்கு போராடும் விசாரனை சிறைவாசி ஆபத்தாஹிருக்கு உடனடி சிகிச்சைக்கு உத்தரவிடக் கோரி தமிழக மனித உரிமை அமைப்புக்களும் மற்றும் தமிழக முஸ்லிம்களின் சமுதாய இயக்கங்களும் போராட்டத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெறிவிக்கின்றன.

நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சட்ட ஆலோசகர் பவானி பா. மோகன் அவர்களுடன் சிறுபான்மை அறக்கட்டளை நிர்வாகிகள் கோட்டை தங்கப்பா, ஆபத்தாஙிர் மற்றும் வழக்கறிஞர்கள் பசீர் அகமது, கலையரசு ஆகியோர் உடனிருந்தனர்.

நலம் பெற வேண்டி பிரார்த்திக்கின்றோம்

இறைவனின் திருப்பெயரால்

நலம் பெற வேண்டி பிரார்த்திக்கின்றோம்


அன்புடையீர், அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)

கோவை தொடர் குண்டுவெடிப்பு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்குண்டு நீதிக்கு புறம்பாக தண்டனை விதிக்கப்பட்டு றூற்றுக்கும் மேற்ப்பட்ட இளைஞர்கள் கடந்த 10 ஆண்டுகளுக்கும் முலாக் சிறைகளில் அடைபட்டு கிடப்பதை தாங்கள் அறிவீர்கள்.

கொலை கொள்ளை, மோசடி, வழிப்பறி போன்ற சமூக விரோத செயல்களை புரிந்து இவர்கள் சிறை செல்லவில்லை, மாறாக சமூக நலனில் அக்கறையும், தன்னலம் கருதா அர்ப்பணிப்பும் தான் இவர்களின் சிறைவாசத்திற்கான காரனமாகும்.

சிறைக்கூட சித்திரவதைகள்தந்த பரிசாக இவர்களில் நூற்றுக்கணக்கானோனர் தீராத வியாதிகளுக்கு ஆட்பட்டு அவதிப்படுகின்றனர். சபூர் ரஹ்மான் என்ற ஆயுள் கைதி கோவை மத்திய சிறைச்சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் மரணமடைந்தார். மஸ்த்தகீர் என்பவரும் இறந்து சில வருடங்கள் ஆகின்றன.

இப்போது அபுத்தாஹிர் என்ற இளம் வயது ஆயள் கைதி சிறுநீரகங்கள் இரண்டும் பழுதாகி தனியார் மருத்துவமனை ஒன்றில் அவசர சிகிச்சை பிரிவில் சோக்கப்பட்டு மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கின்றார்.

முஸ்லிம் அல்லாத ஆயள் தண்டனைக் கைதிகள் 10 வருடங்கள் நிறைவடைந்தால் விடுதலை பெற்று சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர். ஆனால் முஸ்லிம் ஆயுள் தண்டனைக் கைதிகள் மட்டும் 10 ஆண்டுகள் கழிந்தும் விடுதலை பெறாமல் உயிர் காற்றை சுவாசிக்க கூட வழியின்றி மருத்துவ மனைகளுக்கும், மண்ணரைகளுக்கும் சென்று கொண்டிருக்கின்றனர். அரசின் இவ்வகை அப்பட்டமான போக்கை, அநீதியை கேட்போர் யார்....?

சகோதரர் அபுதாஹிருக்கு தொடாந்து டயாலிஸிஸ் செய்யப்படுகின்றது. சமுதாயம் நலமுடன் வாழ தன் அர்ப்பணித்த இந்த சகோதரரின் நலத்திற்காக சமுதாயமே உன் கரங்கள் உயர, கல்புகள் உருக எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்தனை செய்து உதவிட வேண்டுகின்றோம்.


சிறுபான்மை உதவி அறக்கட்டளை (CTM)
தமிழகமெங்கும் முஸ்லிம் சிறைவாசிகளின் வழக்குகளை நடத்தி வரும் தமிழக முஸ்லிம் நல அமைப்பு

குறிப்பு : இந்த சகோதரருக்காக இது வரை 1.5 லட்சத்திற்கும் அதிகமாக செலவு செய்யப்பட்டுள்ளது, ஒவ்வொரு நாளும் ரூ.800 ல் இருந்து 1200 வரை செலவாகிறது. கருனை உளம் படைத்த சகோதரர்கள் இரன்டு சிறுநீரகங்களும் பழுதாகி எவ்வித உதவியும் இன்றி மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கும் இவருக்கு உதவ என்னினால் தயவு செய்து சிறுபான்மை உதவி அறக்கட்டளையை தொடர்பு கொள்ளவும்.

Thursday, November 01, 2007

கோவை சிறையில் முஸ்லிம் மரணம் - மக்கள் கொந்தளிப்பு

சிறை நிர்வாகத்தின் அலட்சியத்தால் மரணமடைந்த சபூர் ரஹ்மான்

கோவை, அக்டோபர் 31, கோவையில் நடந்த குண்டு வெடிப்பு சம்பந்தமாக அப்பாவி முஸ்லிம்கள் பலர் கைது செய்யப்பட்டு அனைத்து மனித உரிமை நெறிமுறைகளுக்கு மாறாக 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் அகைட்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்ட விஷயம் மக்கள் அறிந்தததே. மனித நேயத்திற்கு எதிரான இந்த கொடுஞ்செயலில் சிலர் ஏற்கனவே போதிய சிகிச்சை அளிக்கப்படாததாலும், சிறைக் கொடுமைகளினாலும் விடுதலையின்றி சிறையினுள்லேயே மரணமடைந்துள்ளனர்.

இன்னும் பல அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள் சிறை நிர்வாகத்தன் அலட்சிய போக்காலும் உரிய சிகிச்சை அளிக்காத காரணங்களினாலும் கொடுமையான பல நோயகளுக்கு ஆளாக்கப்பட்டு வாடி வருகின்றனர். இந்நிலையில்தான் இவர்களின் வழக்கு ஒரு வழியாக முடிவுக்க வந்தபோது பலர் விடுதலை செய்யப்பட்டார்கள் பலர் கொடுமையா முறையில் எவ்வித நேரடி ஆதாரங்களோ, சாட்சியங்களோ இல்லாத நிலையிலும் (நீதிபதி உத்ராபதி சொன்னது) கொடூரமான முறையில் முஸ்லிம்கள் என்ற காரனத்தினால் பல ஆயுள் தண்டனைகள் விதிக்கப்பட்டு வெளியி வர இயலாதபடி செய்யப்பட்டுள்ளனர்.


அணைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில்

இந்நிலையில் பல ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அப்பாவி சிறைவாசி சபூர் ரஹ்மான் (வயது 35) அநியாயமாக கைது செய்யப்பட்டு பத்து ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் இருந்தும் விடுதலை ஆகாமல் மீண்டுமு் அநீதியாக பல ஆயுள் தண்டனை ஒரு சேர விதிக்கப்பட்டிருந்த காரணத்தாலும் மன உளைச்சலில் இருந்த இந்த சகோதரருக்கு நேற்று (31-10-2007) சுமார் 2.00 மணியளவில் கடுமையான நெஞ்சு வலி ஏற்ப்பட்டது.சிறைவாசிகள் அனைவரும் இவருக்கு உடனடி மருத்துவ உதவி வழங்க வேண்டி கூக்குரல் எழுப்பியபோதும் சிறையில் மருத்துவ அதிகாரியாக இருக்கும் சித்ரா என்ற மத வெறியரின் அலட்சியத்தால் கடுமையான நெஞ்சு வலியால் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த சகோதரர் சபூர் ரஹ்மான் அவர்களுக்கு எவ்வித சிகிச்சையும் அளிக்காமல் காலம் தாழத்தியுள்ளனர்.

இந்நிலையில் சகோதரர் சபூர் ரஹ்மான் அவர்கள் மதவெறி பிடித்த சிறை காவலர்களாலும், சிகிச்சை அளிக்காமல் காலம் தாழத்திய மருத்துவ அதிகாரி சித்ராவின் அலட்சியத்தாலும் மரணமடைந்தார்கள் (இன்னாலில்லாஹ் வ இன்னா இலைஹி ராஜிஊன்) விடுதலை காணாமல் அந்த ஏக்கத்திலேயே அவரது உயிர் விடுதலையடைந்த கொடுமையான சம்பவம் கோவை மத்திய சிறையில் நடந்தது.

அணைத்து இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டத்தில்

மறைந்த சகோதரர் சபூர் ரஹ்மான் அவர்களுக்கு மனைவியும் மூன்று பென் குழந்தைகளும் உள்ளனர். இவரின் குடும்பம் மிகவும் வறுமையில் வாடி வருகின்றது. தான் விடுதலையாகி குடும்பத்தின் வறுமை போக்கலாம் என்றிருந்த நிலையில் இவரும் மரணமடைந்து இந்த குடும்பம் மற்றும் இவரது மூன்று பென் பிள்ளைகளும் நிர்க்கதியாக்கப்பட்டுள்ளனர். இவர்களின் இந்த நிலைக்கு அலட்சிய போக்கை கடைபிடித்த சிறைச்சாலை நிர்வாகமும், அரசுமே பொறுப்பேற்க வேண்டும்.

இவரின் மரண செய்தி கேட்டவுடன் கோவை மாநகர முஸ்லிம்கள் கொந்தளித்து போயினர், உடனடியாக அணைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு கூட்டப்பட்டது. இதை எப்படி கையாளவது என்றும், மரணமடைந்த சகோ. சபூர் ரஹ்மானின் குடும்பத்திற்கு எவ்வகையில் உதவுவது என்றும் விவாதிக்கப்பட்டது.

இறுதியில் சகோ. சபூர் ரஹ்மானின் மரணத்தை சந்தேக மரணமாக வழக்கு பதிந்து நீதிபதி தலைமையில் விசாரனை நடத்த வேண்டும் என்றும், அவரது உடலை நீதிபதி முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், மதவெறி பிடித்த சிறை மருத்துவ அதிகாரி சித்ரா மீதும் அந்த நேரத்தில் பணியில் இருந்த காவலர்கள் மீதும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், அரசின் அலட்சிய போக்கால் மரணமடைந்த சகோ. சபூர் ரஹ்மான் அவர்களின் குடம்பத்திற்கு உடனடி நிவாரனமாக அரசு ரூ 10 லடசம் வழங்க கோரியும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு தகுதி அடிப்படையில் வேலை வழங்க கோரியும், இன்னும் கடந்த 10 வருடங்களுக்கும் மேலாக சிறையில் வேதனை அனுபவித்தும் விடுவிக்கப்படாமல் தண்டனை அளித்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள அணைவரையும் உடணடியாக விடுதலை செய்யக் கோரியும், இனியும் இதுபோல் நிகழ்வுகள் தொடாந்து நடக்காமல் இருக்க சிறையில் 24 மணி நேரமும் சயெல்படக்கூடிய வகையில் மருத்துவமனை வசதி ஏற்ப்படுத்தக் கோரியும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கோரிக்கைக் அடங்கிய மனுவை கோவை மாவட்ட ஆடசித்தலைவருக்கும், முதல் அமைச்சருக்கு, தலைமை நீதிபதி, காவல் துறை ஆனையர், சிறப்பு நீதிமன்ற நீதிபதி, தலைமைச் சயெலாளர், உள்துறைச் செயலாளர், சிறைத்துறை தலைவர் உட்பட பலருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் த.மு.மு.க, மனித நீதிப் பாசறை, முஸ்லிம் லீக், த.த.ஜ உட்பட அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். சகோ. சபூர் ரஹ்மானின் மரணத்திற்கு காரணமான சிறை நிர்வாகத்திரனை வண்மையாக கண்டித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சிறைவாசிகளின் உரிமைக்காகவும், அவாக்ளின் விடுதலைக்காகவும் நீண்ட நெடுங்காலமாக தமிழகமெங்கும் பாடுபட்டு வரும் அமைப்பான் சிறுபான்மை உதவி அறக்கட்டலை (CTM) என்ற நிறுவனம் செய்திருந்தது.

செய்திகள் : நமது சிறப்பு நிருபர் கோவை.

Friday, October 26, 2007

அரசுக்கெதிராக முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம்


கோவை அக்டோபர் 27, 2007 : இன்று கோவை மத்திய சிறை முன்பாக கோவையை சேர்ந்த முஸ்லிம்களும் சிறைவாசிகளின் குடும்பத்தார்களும் பெருந்திரளாக திரன்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.


கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை கோவையை சேர்ந்த சுமார் 46 முஸ்லிம்களுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பல ஆன்டு காலமாக குடுமு்பத்தினரை பிரிந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.


தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இவர்களை தமிழகத்தி் பிற மாவட்டங்களில் உள்ள சிறைச்சாலைகளுக்கு மாற்றுவதற்கு அரசு நிர்வாகத்தினர் முயற்ச்சிக்கின்றனர்.


பல்லான்டுகளாக இவர்களை பிறிந்து வாடும் இவர்களின் பாவப்பட்ட குடுமு்பத்தினருக்கு ஒரு ஆருதல் சிறையில் வாடும் தங்கள் உரவுகளை எளிதாக காண முடிகின்றதென்பதுதான். தற்போது இதிலும் மன்னை வாறிப்பூடும் விதமாக இவர்களை கோவை சிறையில் இருந்து வேறு மாவட்ட சிறைகளுக்கு மாற்றுவதென்பது மிகக் கொடுமையான ஒன்றாகும்.


ஏற்கனவே மனம் நொந்து போய் விரக்தியில் இருக்கம் இந்த அப்பாவி சிறைவாசிகளின் குடும்பத்தினர் இனி தங்கள் உரவுகளை காண பல்வேறு ஊருகளுக்கு செல்ல வேண்டும் என்பது அவர்களை சித்திரவதை செய்வதும் கொடுமையான மனித உரிமை மீறலாகும்.


மனத உரிமைகளுக்கு எதிரான அரசின் இந்த முடிவை கண்டித்து இன்று சிறுபான்மை உதவி அறக்கட்டளையின் நிர்வாகியும் அல் உம்மா அன்சாரி அவர்களின் மனைவியுமான திருமதி. சம்சுன் நிஷா அன்சாரி அவர்கள் தலைமையில் திரன்ட நூற்றுக்கணக்கான முஸ்லிம்களும் சிறைவாசிகளின் குடும்பத்தினரும் கோவை மத்திய சிறை முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் பின்னர் கோவை மாவட்ட ஆட்சித்தலைவரை சந்தித்து சிறைவாசிகளை எக்காரனம் கொண்டுமு் கோவையில் இருந்து இமாற்றம் செய்யக் கூடாது என்றும் இது மனித உரிமைகளுக்கு எதிரானது என்றும் இதில் தமிழக முதல்வர் தலையிட்டு உடனடி தீர்வு காண வேண்டுமு் என்று வலியுருத்தியும் மனு ஒன்றை அளித்தனர்.


இம்மனுவின் நகல் தமிழக முதல் அமைச்சர் அவர்களுக்கும், உள்துறை செயளாலர் அவர்களுக்கும் அனுப்பப் பட்டுள்ளது. தமிழக அரசின் இம்முயற்சியானது முஸ்லிம்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்ப்படுத்தியுள்ளது. அரசு சிறைவாசிகளை மாற்ற தொடாந்து மயற்சிக்கும் பட்சத்தில் இம்மக்களோடு விரைவில் தமிழகத்தின் பல முஸ்லிம் அமைப்புகளும் போராட்டத்தில் குதிக்கும் என்று எதிர் பார்க்கப் படுகின்றது.

Sunday, September 30, 2007

உங்கள் உதவி இவர்களுக்கு மீண்டும் தேவை!!

அல்லாஹ் தனது திருமறையிலே கூறுகின்றான்....


"ஜகாத் (எனும்) தருமங்களெல்லாம் வறியவர்களுக்கும், ஏழைகளுக்கும், அவற்றிற்காக (ஜகாத்தை வசூல் செய்வது, கணக்கிடுவது போன்ற துறைகளில்) உழைப்பவர்களுக்கும், எவர்களுடைய இதயங்கள் இஸ்லாத்தின்பால் ஈர்க்கப்படுகின்றனவோ அவர்களுக்கும் (அடிமைகளை) விடுதலை செய்வதற்கும், கடனாளிகளுக்கும்... (அல்-குர்ஆன் 9:60)

ஆம் சகோதரர்களே! அடிமைகளை (சிறைவாசிகளை) விடுதலை செய்வதறடகும் அல்லாஹ் ஜக்காத்தை ஆகுமாக்கியிருக்கின்றான்.

"வறுமையினால் வாடிப்போன் முகங்கள், சோகங்களை சுமந்திருக்கும் நெஞ்சங்கள் பெற்றவனை காண ஏங்கும் பிஞ்சு நெஞ்சங்கள், தளாந்த உடல்கள், சோர்ந்த உள்ளங்கள், இதுபூன்ற சொல்லொன்னாத் துயரங்கள்....


ஏறக்குறைய 10 ஆண்டுகளாக தமிழக சிறைகளிலே 320 க்கும் மேற்ப்பட்ட அப்பாவி சிறைவாசிகள் தன் உற்றார் உறவினர்களை பிரிந்து தவித்தார்கள்,கடந்த வருடங்களில் உங்களைப்போன்ற கருனை உள்ளங்கள் காட்டிய கருனையினால் இவர்களின் வழக்குகள் நல்ல முறையில் நடத்தப்பட்டன, குடும்பங்களுக்கு உதவிகள் செய்தோம், குழந்தைகளின் கல்வித்தேவை நிறைவேற்றப்பட்டது, வழக்குகள் நல்ல முறையில் முறையாக நடத்தப்பட்டதால் சமீபத்தில் சுமார் 90 க்கும் மேற்ப்பட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இன்னும் மீதம் இருப்போர் பலர் இவர்களின் குடும்பங்கள் அளவில்லாத துயரங்களால் விழி பிதுங்கி வழி தெறியாமல் நிற்கிறார்கள்.


இவர்களில் தண்டனை பெற்றோருக்காக உயர் நீதி மன்றங்களிலும், உச்ச நீதி மன்றங்களிலும் வழக்காட வேண்டியுள்ளது. விடுதலையானோர் போக ஏனையோரின் விடுதலைக்காகவும் மற்றும் அவர்களின் குடும்ப செலவுகளும், நம் முன் நிற்கின்றன. அத்துடன் விடுதலையானோரின் மறுவாழ்வும் நம்முன் உள்ளன.

இவர்களின் துயரங்களையும், குடும்பங்களின் சுமைகளையும் துடைத்தெறிந்திட வாருங்கள் கைகோர்ப்போம்!! சிறுபான்மை உதவி அறக்கட்டளை செய்து வரும் சிறைவாசிகள் குடும்ப உதவிகளை நேரடியாக வந்து கண்டோர் பலர்!! இதனுடைய கடுமையான உழைப்பின் விளைவு பல ஆண்டு காலமாக சிறைகளில் அடைந்து கிடந்த பலர் இன்று விடுதலை!! இவர்கள் ஒவ்வொருவர் விடுதலையிலும் உங்கள் பங்கு உள்ளது. ஆம் உங்கள் உதவிகளை கொண்டே இவர்கள் விடுதலை செய்யப்பட்டார்கள்!! இறைவன் மகா பெறியவன்!! எல்லாப் புகழும் அவனுக்கே!!

இந்த அப்பாவி சிறைவாசிகளின் குடும்ப பென்கள் இணைந்து உருவாக்கியதுதான் "சிறுபான்மை உதவி அறக்கட்டளை" வழக்கு நிதிகள், மருத்துவ செலவுகள், திருமன உதவிகள், வீட்டு வாடகைகள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் போன்ற பல அறிய உதவிகளை சிறைவாசிகளின் குடும்பங்களுக்கு தமிழகமெங்கும் செய்து வருகின்றது. இன்னும் மீதமுள்ளன பல பணிகள்!! விடுதலையானோர் போக எஞ்சியுள்ளோரின் விடுதலைக்கா வழக்காட வேண்டியுள்ளது, விடுதலையானோரின் மறுவாழ்வுக்காக ஏற்பாடுகள் செய்ய வேண்டியுள்ளது!! இச்சேவையில் உங்களையும் நீங்கள் இந்த புனித ரமழான் மாதத்தில் இணைத்து கொள்ள வேண்டாமா? எஞ்சியுள்ள உங்கள் சகோதரர்களும் விடுதலை அடைந்திட வேண்டாமா?

கருனையுள்ளம் கொண்ட எமது இஸ்லாமிய சகோதரர்களே இவ்வருடமும் சிறுபான்மை உதவி அறக்கட்டளை உங்களிடம் உங்கள் சகோதர சகோதரிகளின் தேவைக்காக உதவி கேட்டு நிற்கின்றது...நீங்கள் எல்லா வருடங்களையும் போல உதவிடுவீர் என்ற நம்பிக்கையில்!!

உங்கள் ஜக்காத் மற்றும் சதக்காக்களை எமக்கு அனுப்பித் தந்திடுவீர் உமது சகோதரர்களின் விடுதலையில் பங்கேற்றிடுவீர்....உங்கள் உதவிகள் சிறைவாசிகளின் விடுதலைக்காகவும், அவர்களின் குடும்ப உதவிகளுக்காகவும், குழந்தைகளின் கல்விக்காகவும் மட்டுமே செலவளிக்கப்படுகின்றது என்பதை உங்களுக்கு அறியத் தருகின்றோம். எப்போது நீங்கள் அழைத்தாலும் உங்களுக்கு எமது சேவைகளையும் செலவுகளையும் விளக்க கடமைப்பட்டுள்ளோம்.

உங்கள் உதவிகளை எமக்கு அனுப்ப வேண்டிய முகவரி :

சிறுபான்மை உதவி அறக்கட்டளை (Govt. Regd. 882/2001)
ரஹீம் பிளாஸ்ட்டிக் ஹவுஸ்,
ஞானியார் நகர்,
சாரமேடு, கரும்புக்கடை,
கோவை - 8
தொலைபேசி : +91 422 2307673
மொபைல் : +91 944 365 4473 (தங்கப்பா)



CHARITABLE TRUST FOR MINORITIES (REGD NO. 882/2001)
Bank : UNITED BANK OF INDIA,
COIMBATORE BRANCH, TAMILNADU
Saving Account No. #57991#
OR
You can send your donation (by online) to our
ICICI Bank Account No: #605301208490#
Mill Road, coimbatore-1 branch.
Favour of “CHARITABLE TRUST FOR MINORITIES”
.

Sunday, June 03, 2007

உயிருக்கு போராடும் சிறைவாசி - அரசு நடவடிக்கை எடுக்குமா?


நீதிபதி இரத்தினவேலு அவர்கள் சிறைவாசி அபுத்தாஹிருக்கு எம்.ஏ பட்டத்தை வழங்குகின்றார் அருகில் மாவட்ட ஆட்சித்தலைவர் கோசல ராமன் டி.ஐ.ஜி எஸ்ரா ஆகியோர் விரைவில் பி.பி.ஏ தேர்வு எழுத இருந்தவர் ஆனால் கொடிய நோயால் பாதிக்கப்பட்டு இன்று காவல் துறையின் நிராகரிப்பால் உயிருக்கு போராடுகிறார்.

உயிருக்கு போராடும் சிறைவாசி - அரசு நடவடிக்கை எடுக்குமா?

நடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாய் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் விசாரனை கைதியாக வாடி வரும் 30 வயதே ஆன அபுதாஹிர் என்ற முஸ்லிம் வாலிபர் கடந்த சில மாதங்களாக மோசமான வகையில் உடல் நிலை பாதிக்கப்பட்டு கொடிய நோயால் வடி வந்தார் இந்நிலையில் கடந்த மே 14ம் தேதி உடல் வீங்கிய நிலையில் விசாரனை சிறைவாசி அபுத்தாஹிர் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டி கடந்ம மே 16ம் தேதி வழக்கறிஞர் பஷீர் அகமது அவர்கள் சிறப்பு நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்தார் அதனடிப்படையில் கடந்த மே 21 அன்று அரசு மருத்துவமனையில் சேர்த்து உடனடி சிகிச்சைக்கு உத்தரவிட்ட சிறப்பு நீதிமன்றம் அவருடன் 2 உறவினர்களும் அவருக்கு உதவியாக மருத்துவமனையில் தங்கியிருக்கவும் அனுமதி அளிக்கப்பட்டது.

ஆனால் நீதிமன்றத்'தின் இந்த தீர்ப்புக்க எதிராக செயல்பட்ட காவல்துறையின் காவிமயமாக்கப்பட்ட கருப்பு ஆடுகள் மனிதாபிமான அடிப்படையில் கூட உடல் வீங்கி உயிருக்கு போராடும் அபுத்தாஹிர் என்ற 30 வயதான முஸ்லிம் வாலிபருக்கு சிகிச்சை அளிக்க மறுத்து சிறைக்கே கடந்த 26.05.2007 அன்று திருப்பி அனுப்பிவிட்டனர்.

கடந்த 28ம் தேதி மீண்டும் வழக்கறிஞர் பஷீர் அகமது அவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதிக்குமாரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுச்செய்து உடனடியாக தனியார் மருத்தவமனையில் சிகிச்சைபெறவும் சிகிச்சையின்போது அபுத்தாஹிரின் சகோதரர் மற்றும் அவரது தந்தை உடனிருக்கவும் அனுமதி வழங்கப்பட்டது. கடந்த 29ம் தேதி தனியார் மருத்தவமனைக்கு அழைத்து சென்ற காவல்துறையினர் அவரது தந்தையையோ சகோதரரையோ நெருங்கவிடாமல் திரைமறைவில் மருத்துவமனை நிர்வாகத்தினரை மிரட்டி உடனடியாக திரம்பவும் சிறைக்கு அழைத்து சென்றுவிட்டனர். இது வரை இருமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும் சரியான சிகிச்சை வழங்காமல் வெறும் கண்துடைப்பு நாடகமாகவே நடத்தி நீதி மன்றத்தின் உத்தரவுக்கு எதிராக காவல்துறையினர் செயல்பட்டு வருகின்றார்கள்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் இதே நிலையில் நீதி மன்றம் பலமுறை உத்தரவிட்டும் காவி மயமாகிப்போன காவல் துறையின் கருப்பு ஆடுகளின் இடையூரால் முறையான சிகிச்சையின்றி இவ்வழக்கின் எதிரி என் 104 ஷெரீஃப் என்ற முஸ்லிம் உயிருக்கு போராடிய நிலையில் அரசு சிகிச்சைக்கு உத்ரவிட்டும் சிறப்பு புலனாய்வு குழு அவருக்கு சிகிச்சை அளிக்க கூடாதென உயர்நீதிமன்றம் சென்று தடை வாங்கியது ஆனால் முஸ்லிம்கள் பெரும் அளவில் வெளியே போராட்டங்கள் நடத்தியதால் பின்னர் பின்வாங்கியது.

இதுபோலவே கடந்த இரன்டான்டுகளுக்கு முன் குடல் வால் அறுவை சிகிச்சைக்காக இவ்வழக்கின் எதிரி என் 49 அப்பாஸ் என்ற முஸ்லிம் வாலிபருக்கு எச்.ஐ.வி எனும் எய்ட்ஸ் கொடுங்கொல்லி நோயை இவரது உடலில் செலுத்தி அவரை மரணத்தை நோக்கியவராக மாற்றியதும் இதே காவி மயமாக்கப்பட்ட காவல் துறைதான்.

கேரளாவை சேர்ந்த அப்துன் நாசர் மதனியினுடைய கதையோ சொல்லிப் புறிய வேண்டியதில்லை. இவ்வாறாக முஸ்லிம்கள் என்ற ஒரே காரணத்திற்காக இந்த அப்பாவி விசாரனை சிறைவாசிகளுக்கு அனைத்து மனிதாபிமான உதவிகளையும் மறுத்து அவர்களை கொலை செய்து வருகின்றது காவல்துறை. நீங்கள் விடுதலையானாலும் உங்களை நிம்மதியாக வாழ விடமாட்டோம் என்று கூக்குரலிடுகின்றது காவி வெறிபிடித்தவர்களால் நிறம் மாறி கிடக்கும் காவல்துறையின் புலனாய்வு துறைகள்.

தீர்ப்பு வரும் சமயத்தில் குன்டு வைக்க சதி, பயிற்சி அது இது என்று பொய்யான செய்திகளை ஊடகங்களில் பரப்பி மக்களை பீதியடையச் செய்யும் செயலை உளவுத்துறையினர் செய்து வருகின்றார்கள். இதுபோன்ற செய்திகளை பரப்ப வேண்டாம் என் ஊடகங்களை கேட:டக் கொள்கின்றோம்.

தற்போது நீதிமன்றத்தின் பல உத்தரவுகளுக்கு பின்னரும் உயிருக்கு போராடும் விசாரனை சிறைவாசி அபுத்தாஹிருக்கு உடனடி சிகிச்சைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்றும் ஏற்கனவே பலர் இதுபோன்று சிகிச்சை மறுக்கப்பட்டு காவல்துறையின் சதியால் சிறையிலேயே பலியான சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற அனுமதிக்க கூடாது எனவும் சிறுபான்மை அறக்கட்டளை நிறுவனத்தின் சட்ட ஆலோசகர் பவானி பா. மோகன் அவாகள் நேற்று கோவையில் நடைபெற்ற பதிதிரிகையாளர் சந்திப்பில் தெறிவித்தார்.

உயிருக்கு போராடும் விசாரனை சிறைவாசி ஆபத்தாஹிருக்கு உடனடி சிகிச்சைக்கு உத்தரவிடக் கோரி தமிழக மனித உரிமை அமைப்புக்களும் மற்றும் தமிழக முஸ்லிம்களின் சமுதாய இயக்கங்களும் போராட்டத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் தெறிவிக்கின்றன.

நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சட்ட ஆலோசகர் பவானி பா. மோகன் அவர்களுடன் சிறுபான்மை அறக்கட்டளை நிர்வாகிகள் கோட்டை தங்கப்பா, ஆபத்தாஙிர் மற்றும் வழக்கறிஞர்கள் பசீர் அகமது, கலையரசு ஆகியோர் உடனிருந்தனர்.

இஸ்லாம் முஸ்லிம்

Sunday, May 06, 2007

நீதியைத்தேடி...(கவிதை)

ஆயிரக்கணக்கானோரை விசாரித்து முடித்தும், தமக்கெதிரான சாட்சியங்கள் ஏதுமில்லா சூழலிலும், வாழ்க்கையை இழந்து விரக்தியின் விளிம்பில் விசாரணைக்கைதிகளாய் கோவைச்சிறையில் அடைக்கப்பட்டிருப்பவர்கள் பற்றிய "நீதியைத் தேடி!" மற்றும் "கைதியின் கதை!" ஆகிய குறுந்தகடுகள் கண்டதால் மனதில் விம்மியெழுந்த எண்ண அலைகளை கவிதை உருவில் இங்கே வெளிப்படுத்தியுள்ளேன் - ஆக்கம்: இப்னு ஹனீஃப்



கண்ணீரை மையாக்கி, வேதனையெனும்
தூரிகை கொண்டு வரையப்பட்ட
ஓவியமோ காவியமோ அல்ல இது!
எங்களது உடலில் இன்னும்
உயிர் உள்ளது என்ற
மறக்கப்பட்ட உண்மைக்கு
எஞ்சியுள்ள ஒரே சான்று!

எதிர்பார்த்து, எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கும்
வேதனையை வெளிபடுத்த இந்த
உள்ளத்திற்கு கண்ணில்லையே,
கண் கட்டப்பட்ட இவ்வுலக
நீதி தேவதையைப் போல்...
ஆகையால்தான் வேதனை, வெளியே
தெரியும் விழிகளின் வழியே வெப்பமாக!

வேதனையை வெளிப்படுத்த இந்த கண்கள்
இரத்தக் கண்ணீர் வடிக்கும் சாத்தியமில்லை,
பானையில் இருந்தால்தானே
அகப்பையில் வரும்? - தற்போது
எங்கள் உடலிலும் இரத்தம் இல்லையே!
ஈவிரக்கமற்ற காட்டேரிகளைப்போல்
நாங்களுமா நடமாடும் சடலங்களானோம்?

இங்கு சமத்துவம் ஆழமாக இருக்கிறது!
அப்பாவிக்கும், பாவிக்கும் இல்லை
சிறு வித்தியாசங்கள் இங்கு பல,
இருவரும் இருக்கின்றனர்
சமமாக!? - இவ்வுலகில்,
நடமாடிக் கொண்டும், நடைப் பிணங்களாகவும்,
சிறைக்கு உள்ளும், வெளியிலும்!

நாங்களும் வாழ்ந்தோம் சில நாட்கள்!
"அந்த இனிமையான மணித்துளிகளின்
நினைவுகள் போதும், மீண்டும்
நாம் சந்திக்கும் வரை, அல்லது
சத்திய மரணம் நம்மை சந்திக்கும் வரை''
எனும் வார்த்தைகள் இன்னும் எத்தனை
நாட்கள் உதவும் அறியோம் இறைவா!

நீதி தேவதையே, நீ கண்ணை கட்டி இருப்பது
பாரபட்சமற்ற முறையில் நீதி வழங்கிடவே
என்ற எங்கள் நம்பிக்கையை, உன்
நீதித் தாராசில் நிறுத்திப்பார்! - அநீதி
இழைக்கப்பட்டோர் உன்னிடம்
எதிர்பார்ப்பை கைவிட்டு
களத்தில் இறங்கியதன் காரணம் புரியும்!

தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் போன்ற சில
முத்திரைகளுக்கு அஞ்சிடுவர் இவர்களென்று
எதிர்பார்ப்பதில் நியாயம் இல்லை!
இப்போது அவர்களின்
எதிர்பார்ப்புகள் அநியாயமாக
மறக்கவும், மறுக்கவும் பட்டு
வேதனை மட்டுமே தொடர்கதையாக!

நீதி தேவதையே, நீ கண் திறக்க
மாட்டாயா என்று கேட்பவர்கள்
குரல் ஓலமாய் மாறும் முன், உன்
நீதி உடனே வழங்கப்பட வேண்டும்!
அதுவே உன்னுடைய உடலில்
உயிருள்ளது என்பதற்கு எஞ்சி
இருக்கும் கடைசி வாய்ப்பு!!

Sunday, March 18, 2007

செய்திகள் - நீதியைத்தேடி கருத்தரங்கம்

கோவை குண்டு வெடிப்பு விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் வழங்காமல் இருப்பது மனித உரிமை மீறல்: முன்னாள் நீதிபதி

கோவை மார்ச்-11 "நீதியைத் தேடி" கருத்தரங்கின் புகைப்படத் தொகுப்பினைக் காண இங்கு சொடக்கவும் :

புகைப்படத் தொகுப்பு - 1

புகைப்படத் தொகுப்பு - 2



முகப்பில் அமைக்கப்பட்டிருந்த வரவேற்பு வளைவு

கோவை, மார்ச் 12: இந்திய தண்டனைச் சட்டத்தில் விசாரிக்கப்படும் கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதானவர்களுக்கு 9 ஆண்டுகளாக ஜாமீன் வழங்காமல் இருப்பது மனித உரிமை மீறல் என மும்பை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எச்.சுரேஷ் தெரிவித்தார்.

சிறுபான்மை உதவி அறக்கட்டளை சார்பில், 9 ஆண்டுகளாக தமிழக சிறையில் இருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக் கோரும் நீதியைத் தேடி கருத்தரங்கம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

கூடிய கூட்டத்தின் ஒரு பகுதி


கருத்தரங்கில் அவர் பேசியது:

கோவை தொடர் குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை ஜாமீன் வழங்கப்படவில்லை.

ஆனால், மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு வழக்கு தீவிரவாதச் சட்டத்தில் கைதானவரர்களுக்கு விசாரணையின்போதே ஜாமீன் வழங்கப்பட்டது.

கோவை தொடர் குண்டு வெடிப்பு விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் வழங்காமல் இருப்பது மனித உரிமை மீறல்.

அரங்கினுல் கூடிய பென்கள் கூட்டம்



மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தவணை முறையில் தீர்ப்பு வழங்கப்படுகிறது. தீர்ப்பு முழுமையாக இன்னும் வழங்கப்படவில்லை. இந்நிலையில், தண்டனை பெற்றவர்கள் மேல்முறையீடு செய்ய என்ன செய்வது எனத் தெரியாமல் உள்ளனர் என்றார்.

மக்கள் சிவில் உரிமைக் கழக தேசியச் செயலர் கே.ஜி.கண்ணபிரான்: சட்டம் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும். சட்டத்தை பாரபட்சமாகச் செயல்படுத்துவதை நிறுத்தினால் மட்டுமே பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும் என்றார்.




கேரள மாநில மனித உரிமை ஆணைய முன்னாள் தலைவர் எஸ்.பலராமன்: கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மக்கள் ஜனநாயகக் கட்சி நிறுவனர் அப்துல் நாசர் மதானி கேரளம் வருவதற்கு தமிழக அரசு 2003-ல் விதித்த தடையை நீக்க வேண்டும்.

அவரது உடல் நிலையை கருதி அவருக்கு சிகிச்சை அளிக்க ஜாமீன் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம்.

அவர் மீதுள்ள பிற வழக்குகளை விரைந்து முடிக்க கேரள நீதிமன்றத்தில் அவர் ஆஜராக வேண்டும்.




ஆனால், அவரை கோவையிலிருந்து கேரளம் அழைத்துச் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதை உடனடியாக நீக்க வேண்டும் என்றார்.

சிறுபான்மை உதவி அறக்கட்டளை சட்ட ஆலோசகர் ப.பா.மோகன் வரவேற்றார். முஸ்லிம் சிறைவாசியின் குடும்ப நிலையைச் சித்தரிக்கும் குறுந்தகட்டை தமிழக, புதுவை கீழமை நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் பி.திருமலைராஜன் வெளியிட்டார்.

தமுமுக மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா, பியுசிஎல் மாவட்டச் செயலர் முகமது அபுபக்கர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

10 ஆண்டு சிறை தண்டனை பெற்ற ஆயுள் தண்டனை கைதிகளுக்குக் கூட தண்டனைக் குறைப்பு அளிக்கப்படுகிறது.

ஆனால், முஸ்லிம் சிறைவாசிகளுக்கு ஜாமீன் கூட வழங்குவதில்லை. எனவே, 9 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் குண்டு வெடிப்பு விசாரணை கைதிகளுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.

நோய்வாய்ப்பட்ட முஸ்லிம் சிறைவாசிகளுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். ராஜேந்திர சச்சார் கமிட்டி பரிந்துகளை நிறைவேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

செய்திகள் : நன்றி தினமனி

காரைக்குடி, இஸ்லாம் , முஸ்லிம்

Tuesday, June 06, 2006

இவர்களின் அவலம் மாறுமா? (HOT VIDEO)




''கண்ணீர்க் கதறல்கள்'' வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்
CLICK HERE TO VIEW THE VIDEO

இவர்களின் அவலம் மாறுமா?

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
அன்பின் சகோதர, சகோதரிகளே.,

நமது சமுதாய இயக்கங்கள் அனைத்தும் யாருடைய விடுதலைக்காக குரல் கொடுத்துக்கொண்டிருக்கின்றனவோ அந்த முஸ்லிம் சிறைவாசிகள் சிறைக்கம்பிகளுக்குள் அடைக்கப்பட்டு நீண்ட நெடிய 8 ஆண்டுகளாகிவிட்டன. கொடிய சிறை வாழ்வு., இவர்களின் வாழ்க்கையின் ஒரு பெரும்பகுதி நான்கு சுவர்களுக்கு மத்தியில் விரயமாகிக் கொண்டிருக்கின்றன. இவை என்றுதான் முற்றுபெறுமோ? என்ற ஏக்கப் பெருமூச்சு நித்தம் நித்தம் இவர்களது குடும்பங்களை துளைத்தெடுக்கின்றது. ஆம்! இவர்களின் தேவை குடும்பங்களுக்கு அல்லவா மிக மிக அவசியம்.

எட்டு ஆண்டுகளில் இக்குடும்பங்கள் அடைந்திட்ட துயரங்களை வார்த்தைகளில் வடித்திட இயலாது. வேலைக்கு சென்று குடும்பத்தை காப்பாற்ற வேண்டிய ஆண்மக்களெல்லாம் அடைபட்டதால் வருமானங்கள் நிரந்தர தடையாகிவிட்டன. குடும்பத்தை காப்பாற்றிட வேண்டிய நிர்பந்தத்தால் இக்குடும்பத்தின் மென்மையான சகோதரிகள் தங்களின் மென்தோல்கள் வலுவிழக்கும் அளவிற்கு ஆண்களைப் போல் கடினமாக உழைத்திட வேண்டிய பரிதாபமான நிலை. இக்காலத்தில் என்னதான் கடுமையாக உழைத்தாலும் குடும்பத்தை ஒப்பேற்ற ஆணுக்கே மிக கடினம் என்கின்றபோது பெண்களால் என்னதான் செய்ய இயலும்.

வயிற்றுப்பாட்டுக்கே தினம் தினம் பெரும் திண்டாட்டம், மூன்று வேளை உணவைக்கூட முறையாக உண்பதே பெரும்பாடு என்கின்றபோது, குடும்பத்தின் மற்ற அத்யாவசிய செலவினங்களுக்கு என்னதான் செய்வார்கள் இவர்கள். ஒருவர் திடீரென கடும் நோய்வாய்ப்பட்டால் வேறு வழியில்லை, இறக்க வேண்டியது தான். பெரும் மழையினால் வீட்டுக்கூரை சரிந்துவிட்டால்.. என்ன செய்வது? வானம் பார்த்த வீட்டில் தான் சிரமப்பட்டாக வேண்டும். இன்னுமின்னும் நெஞ்சை பிழியவைக்கும் ஏராளமான துன்ப துயரங்கள் சிறைப்பட்ட ஒவ்வொரு வீடடிலும் தினம் தினம் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. நித்தம் தொடரும் தொடர் துயரங்களால் இவர்களின் குடும்பங்களில் வாழ்க்கையின் போக்கு திக்கு தெரியாத காட்டில் திசைமாறிச் செல்வது போல முடிவில்லாமல் சென்று கொண்டிருக்கின்றன..

இந்தச்சிறைவாசிகளின் சகோதரிகளிள் பலர் திருமணம் கூட
ஆகாமல் முப்பது வயதைத்தாண்டியும் முதிர்கன்னிகளாகதங்கள் வாழ்வை தொலைத்து நிராதரவாக நிற்கின்றனர். தங்கள் தந்தையரையும், தமயர்களையும் சிறைகளிள் தொலைத்தது போல். காரணம் பொருளாதாரம்.. தமது வாழ்வாதாரங்களான ஆண்களை சிறைக்கு அனுப்பியபின் இவர்களின் குடும்பங்கள் இன்று திக்குத்தெறியாமல் நிர்க்கதியாய் நிற்கின்றன.
எட்டு ஆன்டுகளுக்கும் மேலாக சிறைக்குள் விசாரணை
சிறைவாசிகளாக வாழ்க்கையைத் தொலைத்த நம் முஸ்லிம் சகோதரர்களின் குடும்பங்களின் இன்றை நிலையை நமது கவனத்திற்கு கொண்டு வருவதற்காக தயாரிக்கப்பட்ட ஒரு ஆவணப்படத்தை நாம் அனைவரும் கட்டாயம் காணவேண்டும். இதன் மூலம் இந்த பாவப்பட்ட குடும்பங்களின் உண்மை நிலை உலக மக்கள் உணர வேன்டும் என்ற நோக்கில் இங்கு அந்த ஆவணப்படம் Real Media Format ல் இடப்பட்டுள்ளது.

எட்டு ஆன்டுகளாக தங்கள் கணவரை, சகோதரனை, தந்தையை பிறிந்து தவிக்கும் நமது சமுதாயச் சகோதரிகளின் கண்ணீர்க் கதறல்களை காவியமாக வடித்துள்ளார்கள்.


''கண்ணீர்க் கதறல்கள்'' வீடியோவைக் காண இங்கு சொடுக்கவும்

இதுமட்டுமல்லாது இவர்களின் குழந்தைகள் தங்களின் கல்வியை தொடர இயலாது தவித்து வருகின்றார்கள் இப்படியாக இவர்களின் வாழ்க்கை செல்கின்றது.

இக்குழந்தைகளின் தந்தைமார்களும், சகோதரர்களும் நான்கு சுவர்களுக்கு மத்தியில் விதிவசத்தால் முடங்கிக்கிடப்பது போல் இவர்களது குழந்தைகளின் கல்வியறிவு முடங்கிப் போய்விட சமுதாயம் காரணமாகி விடக்கூடாது. ஒருபோதும் இப்பெரும் பாவத்திற்கு சமுதாயம் ஆளாகிவிடக்கூடாது. குழந்தைகள் தொடர்ந்து தொய்வில்லாமல் படித்திட நம் சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் தார்மீக பொறுப்புண்டு..


இந்த குழந்தைகளும் கூட நமது சமுதாயத்தின் செல்வங்கள்தான். இவர்களின் தந்தைமார்கள் சிறைவாசிகள் என்ற காரணத்திற்காக இவர்களை நாம் ஒதுக்கிவிட இயலாது. இக்குழந்தைகளின் விபரங்களும் இவர்களின் கல்வி செலவுகளும் (அதிகமில்லை சில ஆயிரங்களே இதை நமது சமுதாயம் கட்டாயம் ஏற்க வேண்டும்) இங்கு பதியப்பட்டுள்ளன. அவற்றை வேண்டுவோர் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.


சிறைவாசி குழந்தைகளின் கல்வி விபரம் டவுன் லோட்

இவர்களுக்கு உதவ விரும்புவோர் கீழ்கண்ட அறக்கட்டளையின் முகவரிக்கு தங்கள் உதவிகளை அனுப்பலாம்.


CHARITABLE TRUST FOR MINORITIES

A/C NO. SB 57991

UNITED BANK OF INDIA
OPPANAKKARA STREET BRANCH
COIMBATORE - 641001.
******************************
CHARITABLE TRUST FOR MINORITIES
RAHIM PLASTIC HOUSE
GNANIYAR NAGAR
SARAMEDU,
KARUMPUKKADAI
COIMBATORE - 8
TEL. : 0091-422-2307673

படிப்பறிவில்லாதவர்களின் கல்விக்கண்களை திறக்கச் செய்தமைக்காக பத்ருப்போரின் கடும் எதிரிகளையே விடுதலை செய்திட்டார் நம் அருமைத்தலைவர் அண்ணல் நபி ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்கள்.

நம் அருமைத் தலைவர் கல்விக்கு தந்திட்ட முக்கியத்துவத்தை புரிந்து கொள்வீர்கள் என நம்புகிறோம். படிக்காத உம்மி நபிதான் ஆனால் சமுதாயத்தில் ஒருவர் கூட கல்வியறிவு இல்லாமல் இருந்திடக்கூடாது என அறிவுறுத்தத்தான் "தொலைந்து விட்ட பொருளை தேடுவது போல கல்வியை தேடிக்கொள்" என கல்வியின் மாண்பை எடுத்தரைத்தார்.

சமுதாயத்தில் நிகழ்ந்திட்ட கொடுமைகளை எதிர்த்ததற்காக இச்சிறை வாழ்வை பரிசாக பெற்றவர்களின் குழந்தைகளின் கல்விக்கண்கள் திறக்க எத்தடையும் இருந்துவிடக்கூடாது.
உதவியின்மையால் இவர்களின் கல்வி தடைபடுமானால் இதைவிடக்கொடுமை வேறெதுவும் இல்லை.


அண்ணலெம் பெருமானார் ஸல்லல்லாஹூ அலைஹிவஸல்லம் அவர்களைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் இவர்களின் கல்விக்கண் திறக்க தாராளமாய் முன்வந்து உதவிகளை வாரி வழங்கிட வேண்டும். நீங்கள் செய்யக் கூடிய ஒவ்வொரு பைசா உதவியும் வீணாகி விடாது. இதுவே, உங்களின் உண்மையான (மறுமைக்கான) சேமிப்பு ஆகும்..


நிராதரவாகிப் போன இக்குழந்தைகளின் கல்விக்கு உதவுவது மிகவும் போற்றுதலுக்குரியதாகும். உதவிகளிலே மிகவும் மதிப்பு வாய்ந்ததாகும். இக்குழந்தைகள் படிக்க, படிக்க, பட்டங்கள் வாங்க வாங்க இவர்களால் சமுதாயம் பயன் அடைய அடைய உங்களின் தர்மத்தின் நன்மை கணக்கில்லை மறுமை வரை பெருகிக்கொண்டே செல்லும்!

இவர்களின் அவலம் கட்டாயம் மாறும்.. மாற்றலாம் நாம் நினைத்தால்... (இறைவன் துணையுடன்)

என்றும் அன்புடன்,
முகவைத்தமிழன்