Saturday, April 29, 2006

"பொடா"வை கொண்டு வந்தவர் கருணாநிதி!

இஸ்லாமியர்களை அடக்குவதற்காக பொடா சட்டத்தை முதலில் கொண்டு வந்தவர் கருணாநிதி!
திருமாவளவன்

சிதம்பரம், ஏப்.29: மத்தியில் ஆட்சி நடத்திய பா.ஜ.க.வை திருப்திபடுத்தவும் இஸ்லாமியர்களை அடக்குவதற்காகவும் முதன் முதலில் பொடா சட்டத்தை கொண்டு வந்தவர் கருணாநிதி என விடுதலைச் சிறுத்தைகள் அமைப்பின் பொதுச் செயலர் தொல்.திருமாவளவன் குற்றம் சாட்டினார்.

காட்டுமன்னார்கோயில் அருகே லால்பேட்டையில் விடுதலைச் சிறுத்தைகள் வேட்பாளர் துரை.ரவிக்குமாரை ஆதரித்து வியாழக்கிழமை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தொல்.திருமாவளவன் பேசியதாவது:

கடந்த மக்களவைத் தேர்தலில் எனக்கு இங்குள்ள ஈஸ்லாமிய மக்கள் வாக்களித்து அதிக வாக்குகளை பெற்றுத் தந்ததற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமிய மக்களுக்கு அதிமுக அரசு பாதுகாப்பாக திகழ்கிறது. இஸ்லாமிய மக்கள் நீண்ட நெடுங்காலமாக திமுகவை ஆதரித்து வந்தனர். 4 முறை முதல்வராகவும், ஏறத்தாழ 16 ஆண்டுகள் முதல்வராகவும் இருந்த கருணாநிதி இஸ்லாமிய மக்களுக்கு என்ன செய்தார்?

தற்போது வெற்றிபெற்றால் இஸ்லாமியர்களுக்கு தனி இடஓதுக்கீடு அளிப்பேன் ஏன்கிறார். காயிதேமில்லத் காலத்திலிருந்து இந்த இடஓதுக்கீடு கோரிக்கை இருந்து வருகிறது. ஏன் அப்போது கருணாநிதி நிறைவேற்றவில்லை. அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா இஸ்லாமியர்களுக்கு தனி இடஓதுக்கீடு வழங்க பிற்படுத்தப்பட்டோர் நலவாரிய ஆணையத்தை அமைத்தார். மேலும் இஸ்லாமியர்களின் நீண்டநாள் கோரிக்கையை கொள்கை அளவில் ஏற்றுக்கொள்வதாகவும் அறிவித்தார்.

முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீடு வழங்குவதற்கும், பிற்படுத்தப்பட்டோர் நல வாரியத்திற்கும் என்ன சம்பந்தம் என்று சிலர் பேசி வருகின்றனர். இஸ்லாமியர்களுக்கு தனி இடஓதுக்கீடு வழங்குவது குறித்து மதரீதியானது ஏன்பதால் நமது சட்டத்தில் இடமில்லை. அப்படி அந்த பெயரில் அமைத்தால் ஒரு வழக்கு மூலம் அதற்கு தடைபெற்று விடலாம். எனவே இக்கோரிக்கையை சிக்கலின்றி நிறைவேற்ற முதல்வர் ஜெயலலிதா பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தை அமைத்துள்ளார்.

தற்போது இஸ்லாமியர், தலித் ஓற்றுமை அரசுக்கு தேவை. இஸ்லாமியர்கள் இடஓதுக்கீடு கோரிக்கை குறித்து அவர்களுக்கு உறுதுணையாக இருந்து போராடும். ராணுவத்தில் தாழ்த்தப்பட்டவர்களுக்கு இடஓதுக்கீடு கிடையாது. அதுபோன்று முஸ்லிம்களுக்கும் இடஓதுக்கீடு கிடையாது. இதுபோன்று அனைத்து தரப்பிலும் பிரதிநிதித்துவம் கோரி போராட வேண்டும். இஸ்லாமியர்களை முஸ்லிம் தீவிரவாதிகள் என்ற முத்திரை குத்தியவர் கருணாநிதி. கோவை குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு பின்னர் கருணாநிதியின் ஆட்சியில் போலீஸார் இஸ்லாமிய மக்களை வேட்டையாடிதை யாரும் மறக்கவில்லை. இஸ்லாமியர்களுக்கும், தாழ்த்தப்பட்டவர்களுக்கும் எதிரானவர் கருணாநிதி என்றார் தொல்.திருமாவளவன்.

நன்றி - தினமணி

த.மு.மு.கவின் ஆம்புலன்ஸ் கொள்ளை

த.மு.மு.கவின் ஆம்புலன்ஸ் கொள்ளை - ஆதாரங்களுடன்

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)

தமிழ் முஸ்லிம் சகோதரர்களே ,

ஆதாரபூர்வமான எந்த ஒரு குற்றசாட்டுக்கும் பதில் கொல்ல இயலாத இந்த த.மு.மு.க வினரின் மற்றுமோர் முகமூடி இங்கு கிழிக்கப்படுகின்றது. இராமநாதபுரம் மாவட்டம் புதுமடம் நலச்சங்கம் என்ற பெயரில் புதுமடம் என்ற கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வாங்குவதாக அனைத்து ஊர்களிளும் வசூலில் ஈடுபட்டது ஒரு கும்பல் அனைத்து ஊர்களிளும் முஸ்லிம்களை அனுகிய இவர்கள் புதுமடம் என்ற முஸ்லிம் கிராமத்தில் இருந்து வருவதாகவும் இந்த முஸ்லிம் கிராமம் மிகவும் பின்தங்கிய நிலையில் ஆம்புலன்ஸ வசதியின்றி நம் முஸ்லிம் பெண்கள் அவதிபடுவதால் புதுமடம் வெல்ஃபேர் அசோசியேசன் என்ற அமைப்பின் சார்பில் வசூல் செய்து ஆம்புலன்ஸ் வாங்க இருப்பதாகவும் இந்த புதுமடம் வெல்ஃபேர் அசோசியேசன் என்ற அமைப்பிற்கு த.மு.மு கவோ அல்லது த.த.ஜ போன்ற அமைப்புக்களுடனோ எந்தஒரு தொடர்பும் இல்லையென்றும் இது ஊர் நலன் சம்பந்தபட்டது என்றும் கூறி வசூல் செய்தனர்.

இவ்வசூல் தமிழகம் மற்றுமின்றி கேரளம் மற்றும் புதுமடம் மற்றும் அதைசுற்றி உள்ள ஊர்மக்கள் வசிக்கும் அனைத்து பகுதிகளிளும் வெகு ஜோராக நடந்தது. நமது சகோதரர்களும் இவர்கள் கொடுத்த ரசீதை நம்பி இந்த அமைப்பு இயக்கம் சாராதது என்ற நம்பிக்கையில் வாரி வழங்கினர். இதை வசூல் செய்தவர்கள் பெயர் கீழ்வருமாறு:

1) முகம்மது அணஸ் - தெற்கு தெரு - புதுமடம்.
2) எம.ஐ. மக்தூம் - வடக்கு தெரு - புதுமடம்
3) இபுறாகிம் - நடுத்தெரு - புதுமடம்.


மேற்கன்ட இவர்கள் மூவரும் த.த.ஜ வின் எர்ணாகுளம் முன்னால் துனை தலைவர் புதுமடம் முகம்மது அலி என்பவருடன் இந்த வசூலில் ஈடுபட்டனர். இயக்கம் சாராதது என்ற நம்பிக்கையில் காத்திருந்த முஸ்லிம் சகோதரர்களுக்கு பேரியாக வந்து இரங்கியது அந்த செய்தி , புதுமடம் வெல்ஃபேர் அசோசியேசன் என்ற பெயரில் வசூலித்து வாங்கபட்ட ஆம்புலன்ஸ் வாகனத்தை த.மு.மு.க சார்பில் வாங்கியது போல் கடந்த 23-04-2006 அன்று ஊர்மக்கள் முன்னிலையில் பெருமையுடன் த.மு.மு.க வழங்கியது என்ற செய்தி உன்மையில் தாராள உள்ளம் படைத்த முஸ்லிம் சகோதரர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.





வழங்கபட்ட ரசீது


இது குறித்து அதிகமாக எழுத விரும்பவில்லை மக்களாகிய உங்கள் தீர்ப்பிற்கே இதை விட்டு விடுகின்றோம். இதுபோல் பல த.மு.மு.க வை மக்கள் நம்ப மறுக்கிறார்கள் , த.மு.மு.க வின் சுனாமி மற்றும் ஃபித்ரா திருட்டை அறிந்த மக்கள் இப்போது த.மு.மு.க விற்கு எந்த உதவியும் செய்ய மறுக்கிறார்கள். தங்கள் சுய பெயர்களிள் எந்த வசூலும் செய்ய இயலாத த.மு.மு.க வினர் வருமானத்தை இல்லாததால் இதுபோன்று பல ஊர்களின் பெயர்களிள் வெல்ஃபேர் அசோசியேசன் ஆரம்பித்து வசூலில் ஈடுபட்டு வருகின்றார்கள். இதனால் மக்கள் உஷாராக இருப்பது நலம்.

என்றும் அன்புடன்.
தங்கள் உண்மையுள்ள,


1) அப்துல் ரஹிம் - புதுமடம்
2) அக்ரம் சரீப் - புதுமடம்
3) தாருல் இஸ்லாம் - புதுமடம்
4) ஹக்கிம் - புதுமடம்
5) யாசின் - புதுமடம்
6) ரஸீன் - புதுமடம்
7) ஹீசைன் கோயா - புதுமடம்
8) பயாஸ் - புதுமடம்
9) அப்துல் ரஹ்மான் - படகரை
10) லத்திப் - மகாராஜபுரம்
11) அப்துல் ரஹிம் - கீழக்கரை
12) என்.எஸ். சாகுல் - ஆத்தாங்கரை பள்ளி மற்றும் பெயர் வெளியிட விரும்பாத பலர்.





தமிழ் முஸ்லிம் மக்களே இந்த கொள்ளைக்கார த.மு.மு.க விடம் இனியும் ஏமாராதீர் , இவர்கள் வசூலுக்கு வந்தால் இது குறித்து விசாரியுங்கள். இந்த இயக்கத்தின் தலைவர்களிடமும் கேள்வி கேளுங்கள். ஏனெனில் இவர்வாறு வசூல் ஆகும் தொகையில் தலைமையின் செலவுகளுக்கு என்று ஒரு தொகை கமிஷனாக ஜவாஹிருல்லாஹ் மற்றும் ஹைதர் அலி போன்றவாகளாள் பெறப்படுவதாக தகவல். ஆகவே இவர்களையும் இவர்களின் இந்த திருட்டு இயக்கத்தையும் முற்றிலுமாக புறக்கனியுங்கள்.




தைரியமிருந்தால் இந்த த.மு.மு.கவினர் இந்த குற்றச்சாட்டை மறுக்கட்டும். நாம் இந்த முகவைத்தமிழனின் விவாத அரங்கிலேயே எங்கள் ஆவனங்களை வைத்து விவாதிக்க தயாராக உள்ளோம் . இதற்கான தீர்ப்பு முஸ்லிம் சகோதரர்களாகிய நீங்கள் தான் வழங்கவேன்டும்.

**************************************************

முஸ்லீம் தீவிரவாதிகள்-பதில்"சன் டி.வி"

தேர்தல் களத்தில் இன்று : முஸ்லீம் தீவிரவாதிகள் என்றால் என்ன ? பதில் சொல்வது தி.மு.க "சன் டி.வி" .


தேர்தல் களத்தில் இன்று : சிறுபான்மையினர் சமுதாயம் மொத்தமும் தங்களுக்கு ஆதரவாக இருப்பது போல் காட்டிக்கொள்ளும் சிலரின் தோலை உரித்து காட்டத்தான் இந்த பதிவு. முதலில் இப்படி ஒரு தலைப்பு கொடுத்ததற்க்காக சகோதரரிடம் மன்னிப்பு வேண்டுகிரறேன்..

அந்த சம்பவம் நிகழ்ந்து இன்றைக்கு சில ஆண்டுகள் உருண்டோடிவிட்டன..ஆனால் சில சம்பவங்களை யாராலும் மறக்க முடியாது..

அந்த சம்பவம், கோவை குண்டு வெடிப்பு..அதன் பின்னால் நிகழ்ந்த கலவரம்...போலீசாரின் அத்து மீறல்கள்...சங்கீதாவை தேடுகிறேன் பேர்வழி என்று முஸ்லீம் சகோதரிகளின் பர்தாக்களை கிழித்து எறிந்ததை தான் மறக்க முடியுமா ?

அன்று போடப்பட்ட பொய் வழக்குகளால் இன்றும் எத்தனை அப்பாவிகள் சிறையில் வாடுகிறார்கள் ? தெருவோர டீ கடைக்காரர், பீடா விற்ற சகோதரர், லாட்டரி விற்ற அன்பர்..இன்னும் எத்தனை பேர் தீவிரவாதிகள் என்ற முத்திரையோடு கோவை சிறையில் குடும்பத்தை பிரிந்து நிற்கதியாக நிற்க்கிறார்கள் ?

இந்த நிகழ்ச்சிகளை ஆதியோடு அந்தமாக ஒலிபரப்பிய சன் டி.வி, திரும்ப திரும்ப கிளி பிள்ளை போல் கூறிய வார்த்தைதான் "முஸ்லீம் தீவிரவாதிகள்"..இது முஸ்லீம் பெருமக்கள் இதயத்தை குத்தீட்டி கொண்டு கிழிக்கிற செயல் இல்லையா ? இந்த "நாவினால் சுட்ட வடு" எந்த மருந்தாலும் ஆற்ற முடியாத காயம் இல்லையா ?

இதை வசதியாக மறந்துவிட்ட த.மு.மு.க ஜவாஹருல்லாஹ் போன்றவர்கள் இன்றைக்கு முஸ்லீம் பெருமக்கள் தங்கள் பின்னால் அணிவகுக்கிறார்கள் என்றும், திரு.கலைஞருக்கு வாக்களிப்பர் என்றும் கூறுகின்ற பேச்சு மக்களை ஏமாற்றுகின்ற செயல் இல்லையா ?

இங்கே பிறிதொரு சம்பவத்தையும் சொல்லியாக வேண்டும். மேற்ச்சொன்ன பிரச்சினைகளோடு திரு.கலைஞர் அவர்களை முஸ்லீபெருமக்களின் பிரதிநிதிகள் கோரிக்கை மனு ஒன்றோடு சந்தித்தபோது

" என்னய்யா, சும்மா பாக்க வந்து இருக்கீங்க..செண்டு பாட்டில், பிரியாணி எதாவது கொண்டு வரலாம் இல்ல..மனு குடுக்கறாங்களாம் மனு.." என்று அடித்த நக்கல் இன்று எத்தனை பேருக்கு தெரிந்து இருக்கும் ?

இதனை எனக்கு தெரிவித்த அன்பர், அப்போது முஸ்லீம் மக்கள் சிந்திய கண்ணீர் துளிகளில் ரத்த துளிகளும் இருந்தது உவமை என்றாலும் உண்மையாக இருக்குமோ என்று தோன்றியது..

வாக்களிக்குமுன் சிந்தியுங்கள்....தேர்தல் களத்தில் நாளை சந்திப்போம்...விடைபெறுகிறேன்..

நன்றி - ரவி

தனித்திரு விழித்திரு பசித்திரு.....

Friday, April 28, 2006

ஷரீஅத் சட்டத்தை ஏற்காத வேட்பாளருக்கு..

ஷரீஅத் சட்டத்தை ஏற்காத வேட்பாளருக்கு வாக்கு சேகரிப்பு

அ.தி.முக.வின் திருவல்லிக்கேணி தொகுதி வேட்பாளர் திருமதி. பதர் சயீத். இவருக்கு வாக்கு சேகரிக்கும் த.த.ஜ.வினர் 'முஸ்லிம் வேட்பாளருக்கு வாக்கு அளியுங்கள்' என்று பிரச்சாரம் செய்து வருகின்றனர். அதன் தலைவர் ஜெய்னு லாப்தீன் அவரை ஒரே மேடையில் அமர வைத்து அவருக்காக வாக்கு கேட்டு தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

பதர் சயீத் வக்ப் வாரியத் தலைவியாக உள்ளார். இவர் இஸ்லாமிய ஷரீஅத்திற்கு எதிரானவர் என்ற போதினும் இந்தப் பதவியைப் பெற்றதற்கான ஒரே காரணம் அவர் ஜெயலலிதாவின் தோழி என்பதால் தான்.

தலாக் விஷயத்தில் ஜமாஅத்தார்கள் தலையிடக் கூடாது, அதனை நீதிமன்றம் தான் முடிவெடுக்க வேண்டும் என்று பகிரங்கமாகப் பிரச்சாரம் செய்தவர். இது பொதுசிவில் சட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற சங்பரிவாரின் கருத்துக்கு இணையானதாகும்.

பொதுவாகவே 'பெண்கள் தலைமுக்காடு போட வேண்டும்' என்று இஸ்லாம் கட்டளையிடுகிறது. இஸ்லாத்தின் இந்தக் கட்டளையைத் தூக்கி குப்பை யில் போட்டவர் பதர் சயீத்.

வக்ப் பிரச்சினைகளுக்காக பல்வேறு சமயங்களில் தமுமுகவினர் இவரை சந்திக்க வக்பு வாரியத்திற்கு சென்றிருக்கின்றனர். ஆனால் ஒருமுறை கூட பதர் சயீத் தலைமுக்காடு போட்டு பார்த்ததில்லை என்பதுதான் உண்மை.

மேலும், முஸ்லிம் பெண்கள் பர்தா அணிவதை 'அடிமைத்தனம்' என்று விமர்சித் தவர் பதர் சயீத். பொது இடங்களில் அநாகரீகமாக உடையணிந்து வருவதை சமுதாயப் பெரியவர்கள் வேதனையோடு குறிப்பிடுகிறார்கள்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது திருவல்லிக்கேணிக்குச் சென்ற பதர் சயீத், அங்குள்ள கோயிலுக்குச் சென்று பூஜை நடத்தி, பூசாரியிடம் ஆசிர்வாதம் பெற்றார் என்றும் பரபரப்பாக பேசப்படுகிறது.

முஸ்லிம்களின் மனதைப் புண்படுத்தும் இவரைப் போன்றவர்களை 'முற்போக்கு முஸ்லிம்கள்' எனக் கருதி, வேட்பாளர்களாக அறிமுகப்படுத்தி வருகிறார்.

இவருக்காகத்தான் 'கொடி தூக்கும் ஜமாஅத்'தாக மாறியுள்ளவர்கள் 'முஸ்லிம் பெண்ணுக்கு வாக்களியுங்கள்' என்று கூறிக்கொண்டு திருவல்லிக்கேணி பகுதி முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு:
'கருணாநிதி மீது அவநம்பிக்கை கொள்ள வேண்டாம்...'
ஜெயினுலாப்தீன் கூறுகிறார்


தமுமுகவின் கூட்டுத் தலைமைத் துவம் பிடிக்காமல், 'ஈகோ'வின் காரணமாக வெளியேறிய ஜெய்னுலாபுதீனின் சாயம் தொடர்ந்து வெளுத்து வருகிறது.

ஆறு மாதத்தில் த.மு.மு.க.வை ஒழித்துக் காட்டுவேன் என்று அல்லாஹ்வை மறந்துவிட்டு சபதம் போட்ட ஜெய்னுலாபுதீன், இன்று எல்லா சமரசங்களுக்கும் உட்பட்டு முழுநேர அரசியல்வாதி ஆகிவிட்டார்.

வாழ்வுரிமை மாநாட்டின்போது ஜெயலலிதா இருக்கும் மேடையில் கூட உட்கார மாட்டேன் என்று பேசியவர், இப்போது ஜெயலலிதாவுக்கு முன்பாக அடக்கத் தோடு உட்கார வேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டார்.

தைரியமாகப் பொய் பேசுவது, தீப்பொறி ஆறுமுகம் போல் வெறித்தனமாக ஒருமையில் விமர்சிப்பது, தனது தவறுகளை மறைக்க அடுத்தவர்களின் மீது பழியைப் போடுவது, தனது வாதத்திறமைகளைப் பயன்படுத்தி 'பொய்யை' உண்மையைப் போலப் பேசிக் குழப்புவது என அரசியல்வாதிகளுக்கெல்லாம் 'குரு' ஆகிவிட்டார்.

பிற்படுத்தப்பட்டோருக்கான பழைய ஆணையைப் புனரமைத்த ஜெயலலிதாவின் செயலை, முஸ்லிம்களுக்கு ஆணையம் அமைத்துவிட்டது போலவும், அதனால் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைத்து விட்டது போலவும் பேசுகிறார் ஜெய்னுலாபுதீன்.

''ஒரு பிரச்சினையைத் தூக்கி ஓரமாக வைப்பதும், கமிஷன் அமைப்பதும் ஒன்று'' என்று முழங்கியவர், ''ஒரு பாறாங்கல்லைத் தூக்கி குளத்தில் போடுவதும் கமிஷன் போடுவதும் ஒன்று'' என்று சொன்னவர் இன்று நேர்முரணாகப் பேசுகிறார்.

இக்கமிஷனை த.மு.மு.க., முஸ்லிம் லீக் உள்ளிட்ட அமைப்புகளும், முஸ்லிம் சமுதாயமும் நிராகரித்து விட்டன. இது தேர்தலுக்காக நடத்தப்பட்ட நாடகம் என சமுதாய அறிவு ஜீவிகள் ஏற்க மறுத்துவிட்டனர். கிறித்தவ சமுதாயம் இக்கமிஷனை திரும்பிக்கூட பார்க்கவில்லை. அதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன...

இது புதிதாகப் போடப்பட்ட பிற்பட்டோர் கமிஷன் அல்ல.

1993லிருந்து இருந்துவரும் செல்லாக்காசு ஆணையம்

அதுவும் டிசம்பர் 1, 2005 தேதியுடன் காலாவதியான ஆணையம்

ஏற்கனவே 13 வருடங்களாக எந்த நன்மையும் தராத ஆணையத்தை புதுப்பித்ததால் புதிதாக எந்த நன்மையும் கிடைக்கப் போவ தில்லை.

மார்ச் 1 அன்று தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு அரசாணை வெளியிடப்பட்டதால் இதை தேர்தல் கமிஷன் செல்லாது என்று அறிவித்து விட்டதால் இந்த ஆணையமே ஏமாற்று வேலை என்பது தெளிவாகி விட்டது.

மேற்கண்ட காரணங்களால்தான் த.மு.மு.க.வும், முஸ்லிம் சமுதாயமும் ஜெ. போட்டதாகக் கூறப்படும் ஆணையத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. அதேநேரம் த.மு.மு.க. இன்னொரு யோசனையையும் ஜெயலலிதாவுக்குச் சொன்னது.

ஆந்திரா வேறு! தமிழ்நாடு வேறு! ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு பிற்படுத்தப் பட்டோர் பட்டியலில் இடம் இல்லை. அதனால் அங்கு சட்டசிக்கல் ஏற்பட்டு விட்டது. ஆனால் தமிழகத்தில் முஸ்லிம்கள் ஏற்கனவே பிற்பட்டோர் பட்டியலில் உள்ளனர். எனவே, அவர்களை மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் (ஙஇஈ) சேர்ப்பதற்கு சட்டசிக்கல் எதுவும் வராது. அதை மிக எளிதாக செய்ய முடியும்.

''தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் இருக்கும் 30 சதவிகிதம் மற்றும் மிகவும் பிற்பட்டோர் பட்டியலில் இருக்கும் 20 சதவிதம் ஆகியவற்றிலிருந்து தனியாக முஸ்லிம்களுக்கு உள் இடஒதுக்கீட்டை பிரித்து வழங்குங்கள்'' என்றோம். இப்படி கேரளாவில் ஏற்கனவே முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டிருக்கிறது என்ற ஆதாரத்தையும் தமுமுக கொடுத்தது.

முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கிடைப்பதற்கான எளிமையான பிரச்சினை இல்லாத ஒரு வழி இருப்பதை நாம் சுட்டிக்காட்டியதை ஜெயலலிதா நிராகரித்தார்.

இடஒதுக்கீடு கிடைக்கக்கூடிய வாய்ப்பை ஒதுக்கித் தள்ளிய ஜெயலலிதா, கொடுப்பது போல் கொடுக்க வேண்டும். அது பயனற்றதாகவும் இருக்க வேண்டும் என்ற பார்ப்பனீய சிந்தனையோடு, பயனற்ற அரசாணையை புதுப்பித்து நாடகமாடி இருக்கிறார்.

இதில் வேடிக்கை என்னவெனில், த.மு.மு.க. கேட்டதுபோல ஜெய்னுலாபிதீனும் முஸ்லிம்களை ஙஇஈ பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கேட்டு வந்தார்.

இப்போது ஜெயலலிதா 13 வருடங்களாக இருந்துவரும் ஒரு பயனற்ற கமிஷனை ஆணையை புதுப்பித்ததை முஸ்லிம்களுக்குக் காட்டி 'இதுதான் இடஒதுக்கீடு' என்று முஸ்லிம்களின் காதுகளில் பூச்சுற்றப் பார்க்கிறார்.

களவாடப்பட்ட உணர்வு பத்திரிகையில் அவரே நிறை வேற்றியுள்ள தீர்மானங்கள், த.மு.மு.க.வின் கருத்தை அப்படியே பிரதிபலிக்கின்றன. ஆனால் ஜெய்னுலாபுதீன், தான் நிறைவேற்றிய தீர்மானத் திற்கு எதிராகவே இன்று நிலைப்பாடு எடுக்கிறார். அதனால்தான் மனசாட்சியோடு பேச முடியாமல் மேடையில் திணறுகிறார். இடஒ துக்கீடு குறித்து தமுமுக கேட்டபடி மட்டுமல்ல... ஜைனுலாபிதீன் கேட்டபடியும் கூட ஜெயலலிதா எதையும் செய்யவில்லை என்பதுதான் உண்மை.

ஜெயலலிதா போட்டிருக்கும் ஆணை பயனற்ற ஒன்று என்று ஜெய்னுலாபுதீனின் மனசாட்சி உறுத்துவதால்தான் புத்திசாலித்தனமாக அவர் களவாடியுள்ள உணர்வு பத்திரிகையில் தப்பிக்கும் விதமாக எழுதியுள்ளார்.

ஜெயலலிதாவை சந்தித்த பிறகு, 'வேஸ்ட் பேப்பர்' எனப்படும் அரசாணை வெளியிடப்பட்ட பிறகு உணர்வில் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:

''முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிப்பதைப் பொறுத்தவரை ஆரம்பம் முதலே ஜெயலலிதாவுக்கு அதில் உடன்பாடு இருந்ததில்லை. ஆந்திராவில் ராஜசேகர ரெட்டி முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளித்ததையே கண்டித்தவர். கமிஷன் அறிக்கையை நிறைவேற்றுவதற்கு வாய்ப்பு இருப்பது போல, காரியம் முடிந்ததும் நம்மை (முஸ்லிம்களை) கைகழுவவும் வாய்ப்பு உள்ளது. (உணர்வு (மார்ச் 10-16, 2006)

என்ன சகோதரர்களே...! ஜெய்னுலாபுதீன் உணர்வு பத்திரிக்கையில் எழுதியுள் ளதைப் படித்து அதிர்ச்சி அடைகிறீர்களா?

அவர் தன்னைத்தானே புத்திசாலியாக(?) நினைக்கிறார். ஒருவேளை மீண்டும் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்து விட்டால் அவர் முஸ்லிம்களைக் கைகழுவுவார் என்பதைப் புரிந்து கொண்டு விட்டார்.

1999 ஜூலை 4ல் தமுமுக நடத்திய வாழ்வுரிமை மாநாட்டில் லட்சக்கணக் கான மக்கள் மத்தியில் ''நான் பிஜேபியோடு இனி கூட்டு சேரவே மாட்டேன்'' என்று வாக்குறுதி அளித்த ஜெயலலிதா, அந்த வாக்குறுதிகளைத் தூக்கி வீசிவிட்டு 2004ல் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலில் பாஜகவோடு வெட்கமின்றி கூட்டு சேர்ந்தார். அந்த அனுபவத்தை புரிந்து கொண்டுள்ள ஜெய்னுலாபுதீன், ஒருவேளை ஜெயலலிதா மீண்டும் ஆட்சிக்கு வந்துவிட்டால் அவர் இந்த ஆணையத்தை குப்பையில் போடுவார் என்பதை உணர்ந்து விட்டார்.

அப்போது சமுதாய மக்கள் கேள்வி எழுப்பினால், 'நான்தான் அன்றே பத்திரிக் கையில் எழுதி விட்டேனே... ஜெயலலிதா இடஒதுக்கீட்டை வழங்குவார் என்ற உத்தரவாதத்தை நாம் வழங்க மாட்டோம் என்று'' என பதில் கூறுவார். அதற்குத் தான் இப்போதே உண்மையை எழுதிவிட்டார்.

எனவே, ஜெய்னுலாபுதீனின் நாடகத்தையும், வார்த்தை ஜாலத்தையும் சமுதாய மக்கள் புரிந்து கொள்வார்கள் என்று நம்புகிறோம்.

மேலும் உணர்வு (அக்.28-நவ.03, 2005)ல் தலையங்கம் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி பற்றி ஜெய்னுலாபுதீன் கீழ்க்கண்டவாறு எழுதுகிறார்:

''முஸ்லிம்களின் இடஒதுக்கீடு பிரச்சினையில் கருணாநிதி கடந்த காலங்களில் அசட்டையாக நடந்து கொண்டார். அதுபோல் இனியும் நடந்து கொள்வார் என்று முஸ்லிம்கள் அவநம்பிக்கைக் கொள்ள வேண்டியதில்லை.''


சமீபத்தில் 6 மாதத்திற்கு முன்புதான் களவாடப்பட்ட உணர்வில் இப்படி தலையங்கம் எழுதியிருக்கிறார்கள். அதற்குள் என்ன பேரம் நடந்ததோ தெரியவில்லை. திடீரென கிடைக்காத இடஒதுக்கீட்டிற்காக ஜெயலலிதாவை ஆதரிக்கிறார்.

இக்கட்டுரையைப் படிக்கும் ததஜ சகோதரர்கள் சமுதாய மக்களின் உணர்வு களுக்கு மரியாதை கொடுத்து, ஜெய்னுலாபுதீனின் நாடகத்தைப் புரிந்து கொண்டு செயல்படுவார்கள் என்று நம்புகிறோம்.

த.த.ஜ.வை கைகழுவிய சகோதரர்கள்

தொடர்கிறது ராஜினாமா... த.த.ஜ.வை கைகழுவிய சகோதரர்கள்...

கொடி தூக்கும் கழகமல்ல, கொள்கை காக்கும் கூடாரம் என்ற சொன்னவர்கள் சட்டமன்றத் தேர்தலில் கொடி தூக்கச் சொன்னவர்களின் சாயம் வெளுத்ததால் மனம் வெறுத்துப் போன த.த.ஜ.வினர் ஆங்காங்கே வெளியேறி வருகின்றனர். அந்த வகையில் இயக்கத்திலிருந்து வெளியேறிய அதிராம்பட்டினம் ஜெஹபர் அலியின் கடிதத்தை சென்ற வார இதழில் வெளியிட்டோம். அதனைப் படித்த மனப்புழுக்கத்தில் இருந்த வேறுபல சகோதரர்களும் நமக்கு தங்களது ராஜினாமா கடிதங்களை அனுப்பி வருகின்றனர்.

முதுகுளத்தூர் ராஜா உசேன் (உறுப்பினர் எண்: 37265031), மதுரை அப்துர் ரஹ்மான் (உறுப்பினர் எண்: 35180613) ஆகியோர், தாங்கள் த.த.ஜ. தலைமைக்கு அனுப்பிய ராஜினாமா கடிதத்தின் நகலை நமக்கு அனுப்பியுள்ளனர்.

முதுகுளத்தூர் கிளைத் தலைவருக்கு தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பியுள்ள ராஜா உசேன் தமது கடிதத்தில்,

''த.த.ஜ. தொடங்கும்போது பீ.ஜே. அவர்கள் 'நமது இயக்கம் தவ்ஹீது பணிகளை மட்டுமே செய்யும்' என்றார். அண்மையில் கும்பகோணத்தில் நடைபெற்ற மாநாட்டில் 'நாங்கள் யாருக்கும் விலைபோக மாட்டோம், உங்களைக் காட்டி பணம் வாங்க மாட்டோம்' என்றார். ஆனால் இன்றோ முஸ்லிம்களின் விரோதி யான, முஸ்லிம் மக்களை அழிக்க நினைக்கும் சங்பரிவாரின் பினாமியான ஜெயலலிதா, ஒன்றுக்கும் பிரயோஜனமில்லாத ஆணையத்தை தூசித்தட்டி கொடுத்ததை வாங்கிக் கொண்டு, ஏதோ நமக்கு இடஒதுக்கீடு கிடைத்துவிட்டது போல் இன்று அ.இ.அ.தி.மு.க.விற்கு கொள்கை பரப்புச் செயலாளராகவே மாறி செயல்படுகிறார். ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்ததையே எதிர்த்த இந்த அம்மையார், மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் எப்படி இடஒதுக்கீடு அளிப்பார் என்பதை மாநிலத் தலைவர் சிந்தித்து, நம் சமுதாய மக்களின் நன்மை என்னவென்று யோசித்து நல்ல முடிவை எடுக்க வேண்டும். அ.இ.அ.தி.மு.க.விற்கு நமது அமைப்பு ஆதரவு தெரிவித்ததால் நான் இந்த இயக்கத்திலிருந்து விலகு கின்றேன்.''

இப்படிக்கு ஏ. ராஜா உசேன்(உறுப்பினர் எண்: : 37265031)'' என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுரை ஆர். அப்துர் ரஹ்மான் த.த.ஜ. மாநிலத் தலைவருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,

''த.த.ஜ. கொடி தூக்கும் கழகமல்ல, கொள்கைக் காக்கும் கூடாரம் என்று கூறிய காரணத்தினால் த.த.ஜ.வில் இணைந்து பணியாற்றினேன். ஆனால் கடந்த 21-04-2006 அன்று மதுரையில் வேட்பாளர் அறிமுக விழாவில் பி. ஜெய்னுலாப்தீன் பேசிய வார்த்தைகள் மற்ற இயக்கத்தினரையும் தரக்குறைவாகவும், தி.மு.க. தலைவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிக்கு கொடுத்த தவறான கருத்துக்களும் சுயநலப் போக்கோடு அணுகக்கூடியதாக இருந்தது. சிறையில் நம் சகோதரர்கள் படும் துன்பங்கள், சிறுபான்மையினரின் அரசியல் நிலைப்பாடு, 2006
தமிழக சட்டப் பேரவைத் தேர்தல் நிலைப்பாடு என்ற தலைப்பில் உள்ள கையேடு ஒன்றை உங்களிடம் கொடுத்தேன். அதைப் பொருட்படுத்தவில்லை. முதலமைச்சர் ஜெயலலிதா முஸ்லிம் சமூகத்திற்கு செய்த துரோகச் செயல்கள், கொடுத்த வாக்குறு தியை மீறியது போன்றவை அடங்கிய நூலையும் கொடுத்தேன். ஆனாலும் சுயநலப்போக்கோடு நடந்து கொண்டிருக்கும் த.த.ஜ. அமைப்போடு சேர்ந்து பணியாற்ற விருப்பம் இல்லாத காரணத்தினால் இன்றோடு த.த.ஜ. அமைப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் விலகிக் கொள்கிறேன். ஆர். அப்துர் ரஹ்மான், மதுரை (உறுப்பினர் எண்: : 35180613 )''

தேர்தல் களத்தில் ஈமானை இழந்தவர்கள்...?

கலீல் ரஹ்மான், சவுதி அரேபியா

? தேர்தல் பிரச்சாரம் செய்தால் ஈமான் போய்விடும் என்று கூறியவர்கள் இப்போது, உயிரைக் கொடுத்தேனும் அ.தி.மு.க.வை ஜெயிக்க வைப்போம் என்று கூறி தேர்தல் வேலை செய்கிறார் களே?

! இவர்கள் கடைந்தெடுத்த சந்தர்ப்பவாதிகள் என்பதையே இது காட்டுகிறது. கடந்த 2004தேர்தலின்போது,

''ஈட்டி முனை வேண்டாம், தேர்தல் போட்டி முனையிலேயே ஈமானை இழந்து விடுகின்றனர். இதில் முஸ்லிம் லீக்கினர் மட்டுமல்ல! களப்பணியாற்றச் செல்வோர் அத்தனை பேருமே ஏகத்துவத்தை இழந்து விடுகின்றனர்''

என்று எழுதினார்கள் (ஏகத்துவம் ஏப்ரல் 2004
).

ஆனால் இரண்டே வருடத்தில் தங்களது நிலைபாட்டை மாற்றி, கொள்கையை(?) கைகழுவி விட்டார்கள். அவர்கள் குறிப்பிட்டது போலவே இப்போது ஏகத்துவத்தையும் இழந்து நிற்கின்றனர். முன்பு முஸ்லிம் லீக்கை உதாரணமாகக் காட்டியவர்கள் இப்போது தாங்களே உதாரணமாகி இருக்கிறார்கள்.

நெல்லிக்குப்பத்திற்கு ஜெயலலிதா வந்தபோது அவரை வரவேற்க அ.தி.மு.க.வினர் 'குறவன் குறத்தி' நடனத்திற்கு ஏற்பாடு செய்திருந் தனர். அந்த நடன நிகழ்ச்சியில் த.த.ஜ.வினர் கொடி தூக்கும் ஜமாஅத்தாக மாறி கொடியோடு கலந்து கொண்டு சிறப்பித்துள்ளார்கள்.

நீலகிரி மாவட்டத்திற்கு ஜெ வந்தபோது அவரை வரவேற்று 'படுகர்' இன மக்கள் பாரம்பரிய நடனம் ஆடினர். 'அண்ணாத்தே ஆடுறார் ஒத்திக்கோ ஒத்திக்கோ' என்ற பாடலின் இசைக்கேற்ப அவர்கள் நடனமாட, அதனை ரசித்துக் கொண்டே... தங்களது கொடிகளை அசைத்துக் கொண்டே.... அவர்கள் ஆனந்தமாடியதை ஜெயா டி.வி. யில் பார்க்க முடிந்தது.

கடையநல்லூரில் த.த.ஜ. நடத்தும் மதரஸா மாணவர்களின் கைகளில் அவர்களின் கொடியைக் கொடுத்து 'அம்மா'வை வரவேற்றதைக் கண்டு அவ்வூர் மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர். தூய வடிவில் இஸ்லாத்தை போதிக்கிறோம் என்று கூறியதால் மதரஸாவில் சேர்ந்த மாணவர்களையும், கலிமா கூறி புதிய இஸ்லாமிய வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்துள்ள சகோதரர்களையும் ஜெயலலிதாவை வரவேற்க இவர்கள் அழைத்துச் சென்றது மார்க்க சிந்தனையாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கூத்தாநல்லூரில் ஜெய்னுலாப்தீன் பேசும்போது கூட்டத்தில் 'விசில்' சத்தம் பறந்தது. முன்னதாக, ஆட்டோ பிரச்சாரங்களின் போது 'அம்மாவின் போர்ப்படைத் தளபதி பீ.ஜே. பேசுகிறார்' என்று அறிவிப்பு செய்யப்பட்டது.

கும்பகோணத்தில் சங்கராச்சாரியின் அரசியல் ஏஜெண்டும், ஆர்எஸ்எஸ் ஸின் செல்லப் பிள்ளையுமான 'குடுமி' ராமநாதன் என்ற பார்ப்பனருக்கு உருகி உருகி வாக்கு கேட்டார் ஜெய்னுலாப்தீன். பயான் செய்யப் போகிறார் என்று கூறி அழைத்து வரப்பட்ட பெண்கள் இதனால் கொதித்துப் போயினர்.

இதையெல்லாம் நேரில் பார்க்கும் அல்லது கேட்கும் த.த.ஜ. சகோதரர்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி சிந்திக்கத் தொடங்கி விட்டனர். பலர் மீண்டும் தமுமுகவில் இணைந்து செயல்படத் தயாராகி வருகின்றனர்.

ஜனநாயக நாட்டில் பன்முகம் கொண்ட சமூக அமைப்பில் அரசியல் பணி செய்யும்போது நம்மோடு வருகை தரும் மாற்றுக் கட்சியினர் செய்யும் தவறுகளுக்கு நாம் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? என்று தமுமுகவினர் கூறியபோது அதனைக் கடுமையாகக் கண்டித்தவர்கள் இன்று திராவிடக் கட்சிகளையெல்லாம் தாண்டி அவர்களே சீரழிந்து கிடக்கிறார்கள்.

ஜெய்னுலாப்தீனின் இரட்டை வேடத்தையும், சமுதாய துரோகத்தையும் அம்பலப்படுத்திக் காட்டும் அந்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

நரேந்திர மோடி நல்லவரா?

அப்துல் பாசித், கோவை

? திமுக ஆட்சியில் கோவையில் கலவரத்தில் 19 முஸ்லிம்கள் கொல்லப்பட்டதை நினைவுகூறி திமுகவுக்கு வாக்களிக்கக்கூடாது என்றும், நரேந்திர மோடியை விட கருணாநிதி மோசமானவர் என்றும் ஒருவர் மேடைதோறும் பேசி வருகிறாரே?

! நமக்கும் தகவல் கிடைத்தது. திமுக ஆட்சியில் கோவையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெற்றது உண்மை. அதை நாம் என்றுமே நியாயப்படுத்த மாட்டோம். ஆனால் நரேந்திர மோடியை விட கருணாநிதி மோசமானவர் என்று பேசுவதை ஒருக்காலும் முஸ்லிம் சமுதாயம் ஜீரணிக்காது.

ஆனால் நரேந்திர மோடியோ குஜராத்தில் திட்டமிட்டு பந்த் நடத்தி, அதைத் தொடர்ந்து முஸ்லிம்கள் பெருவாரியாக வசிக்கும் பகுதிகளை கும்பல் கும்பலாக முற்றுகையிட்டு முஸ்லிம்களை அவரது ஆணையின் கீழ் அழித்தொழித்தார்கள். குஜராத் போலீசார் சங்பரிவாருக்கு பாதுகாப்பாக ஒத்துழைத்தனர். இதனை கோவை சம்பவத்துடன் ஒப்பிட்டுப் பேசி நரேந்திர மோடியை நல்லவர் என்று சான்றளிக்கிறார்கள் என்றால் நிச்சயமாக இவர்கள் சமுதாயத்தை விலைபேசி விட்டார்கள் என்பதுதான் அர்த்தம்.

இன்று கோவை அசம்பாவிதங்களை நினைவு கூறுபவர்கள், 19
முஸ்லிம்களின் இரத்தம் காயும் முன்னரே 1998
நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களிக்கச் சொன்னார்கள் என்பதையும், அடுத்து வந்த 1999 நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்கு சேகரித்தார்கள் என்பதையும், 2005தேர்தலில் திமுக அதிமுக நேரடியாக மோதும் 100
தொகுதிகளில் யாருக்குப் பணியாற்றினார்கள் என்பதையும், 2004
நாடாளுமன்றத் தேர்தலில் யாருக்கு வாக்களித்தார்கள் என்பதையும் அவர்கள் முஸ்லிம் சமுதாயத்திற்கு விளக்க வேண்டும். அப்போதெல்லாம் இவர்கள் கோவை அசம்பாவிதங்களை மக்களிடம் கொண்டு செல்லாதது ஏன்? என்றும் சமுதாயம் கேள்வி கேட்கிறது. ஒருவேளை அவர்கள் 'தோட்டத்திடம்' பெற்றுக் கொண்ட ஆதாயம்தான் காரணமோ?

Wednesday, April 26, 2006

த.மு.மு.க வும் சுனாமி கொள்ளையும்!!

த.மு.மு.க-வும் மிலன் மண்டப கணக்குகளும்!! (பகுதி – 1)
த.மு.மு.க வும் சுனாமி கொள்ளையும்!!


அன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இந்த கட்டுறையின் நோக்கம் மக்களிடம் இருந்து பாதிக்கபட்ட மக்களுக்கு உதவுவதற்காக என்று கூறி வசூலிக்கப்பட்ட பணத்தை சமுதாயத்தலைவர்கள் என்று கூறி உலா வரும் இந்த த.மு.மு.க வின் வேடாதாரிகள் எப்படியெல்லாம் கள்ள கணக்கு காட்டி கொள்ளையடித்துள்ளார்கள் என்பதை மக்களும் முக்கியமாக த.மு.மு.க வை கண்ணை மூடிகொன்டு பின்பற்றும் இளையவன் போன்ற தொன்டர்களும் உணர்ந்து திருந்தி நேர்வழி பெற வேன்டும் என்பதற்காகவே!! பிணத்தின் வாயிலிட்ட வாக்கியரிசியை நோன்டி எடுத்து தின்பது போல் இயற்கை சீற்றமாம் சுனாமியில் இறந்த மக்களின் பிணங்களை காட்டி கொள்ளையடித்த வசூல் ராஜாக்களை பற்றிய உண்மை தொடர் ஆவண சாட்சிகளுடன்.

கடந்த கட்டுரைகளில் த.மு.மு.க எப்படியல்லாம் சுனாமிகணக்கு மற்றும் ஃபித்ரா கணக்கு சம்மந்தமாக இரட்டை வேடம் போட்டது என்று பார்த்தோம்! இனி இந்த கட்டுரை மூலம் அவர்கள் மீலன் மண்டபத்தில் கண் இல்லாத கண்மணிகளிடம் என்ன சமர்பித்தார்கள் என்றும் அந்த கணக்குகளிலிருந்து பொதுமக்களும் அவர்கள் பறைசாற்றிக்கொள்ளும் நடுவர்களும் என்ன புரிந்திருப்பார்கள் என்று உங்களின் முடிவிற்க்கே விட்டுவிடுகிறேன்!

சமர்பிக்கப்பட்டுள்ள ஆவனங்கள்!

இந்த ஆவனங்கள் தலைப்பிற்க்கு போகும் முன், ஒரு விஷயத்தை உங்களின் கவனத்திற்க்கு கொண்டு வருகிறேன்! த.மு.மு.க வொளிநாடுகளிடமிருந்து எந்த விதமான பணத்தையும் நன்கொடையாகவோ அல்லது அன்பளிப்பாகவோ வாங்க இயலாது .அன்னிய செலாவனியாக "TMMK" என்ற பெயரில் எந்த வகையான வரவும் வைக்க முடியாது. மத்திய அரசாங்கத்தின் அன்னிய செலவானி குறித்த சட்டத்தில் பகுதி 10 (a) சட்டம் 1976ன் படி த.மு.மு.க-விற்க்கு அனைத்து வகையான வெளிநாட்டு பண வரவும் தடை செய்யப்பட்டுள்ளது(As per Section 10(a) of Foreign Exchange & Regulations Act of 1976> TMMK has been prohibited to receive foreign contribution. For your ready reference> I have attached a list of banned organization> refer Serial number # 22.) மத்திய அரசாங்கத்தால் அன்னிய நாட்டு வரவு தடை செயப்பட்ட இயக்கத்தில் வரிசை எண் 22-ல் த.மு.மு.க வின் பெயர் இடம் பொற்றுள்ளதை இத்துடன் இனைத்துள்ள மத்திய அரசாங்கம் தடை செய்யப்பட்டுள்ள இயக்கங்ளின் விபரத்தில் பார்த்துக்கொள்ளவும். (http://www.mha.nic.in/fcra/forn_div-Section10a.pdf )ஆக இவர்கள் எந்த வகையான அன்னிய நாட்டு வரவும் எந்த வகைக்காகவும் வாங்கினாலும்
வாங்குவதற்க்கு முன் இவர்கள் மத்திய அரசாங்கத்திடம் முன் அனுமதி பெறவேண்டும்! அந்த அனுமதி வின்னப்பத்தில் இவர்கள் எந்த விதமான அன்னிய சொலாவானி நிதி பெற இருக்கிறார்கள், யாரிடமிருந்து மற்றும் எந்த வகைக்கு இவர்கள் இந்த நிதி பொறுகிறார்கள் மற்றும் இந்த நிதி சம்மந்தமாக அந்த நிதிகள் பெற்ற பின் மத்திய அரசாங்திடம் அதற்குன்டான விவரங்களை Form FC-3 (FERA Act) என்ற படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும்! படிவத்தை முழுமையாக http://www.mha.nic.in இனை தளத்தில் பார்வையிடவும்.

மக்கள் மன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள சான்று ஆவனங்கள் என்று இவர்களாள் சமர்ப்பிக்கபட்ட ஆவனங்களின் விபரம் இதோ!

1) சுனாமிவங்கி கணக்கு தொடங்க மத்திய அரசாங்க அனுமதி
2) மத்திய உள்துறை அமைச்சகத்திற்க்கு சமர்பித்த Form FC-3 (FERA Act) அறிக்கை
3) வருமான வரி விளக்கு அளித்த 80G சலுகைக்கான அனுமதி
4) வருமான வரித்துறையில் தாக்கல் செய்த ஆவனம் (Form No- 3A)
5) Balance Sheet First Page - தனிக்கை செய்யப்பட்ட கணக்கின் முதல் பக்கம் மட்டும்
6) ஆந்திரா வங்கியின் கணக்கு 01 நவம்பர் 2005 முதல் 10 டிசம்பர் 2005 வரை

சான்று ஆவணங்கள் என்ற வகையில் சமர்பிக்கப்பட்டவை மேலே கூறபட்டவை தவிர இவர்களின் விளக்கமாக 2004 ரூ 2005 ஃபித்ரா விநியோகித்த பட்டியல் மற்றும் சுனாமிவரவு செலவு கணக்கு என்று இரண்டு இதழ்களையும் இனைத்துள்ளார்கள்!

முதலில் எந்த விதமான ஆவனங்கள் ஆனாலும் அதை முழுமையாக சமர்பித்தால் மட்டுமே படிப்பவர்கள் அதை படித்து புரிந்துக்கொள்ள முடியும்! உதாரணத்திற்க்கு இந்தியா டுடே இதழை படிக்க வோண்டும் எண்றால் அதை முழுமையாக படித்தால் மட்டுமே அந்த இதழின் செய்திகளை அறிந்துக்கொள்ள முடியும்! ஆனால் சகோ. ஜவாஹிருல்லா அன்ட் கம்பனியின் கூற்றுபடி படி அந்த இதழின் முகப்பு பக்கத்தை மட்டும் பார்த்தாலே போதும் உள்ளே இருக்கும் அத்தனை செய்தியும் அறிந்திட முடியுமாம்! எப்படி என்று கேட்கிறீர்களா! மேலே சொல்லப்பட்ட ஆவனங்களின் முதல் பக்கத்தை மட்டும் தான் இவர்கள் மிலன் மண்டபத்தில் அறிவு ஜீவிகளுக்கு மத்தியில் சமர்பித்துள்ளார்கள்! முன்னால் சொன்னது போல், ஆவனங்களின் முகப்பை மட்டும் படித்தால் எப்படி பொதுமக்களாகிய நாம் புரிந்துக் கொள்வது என்று விவரமரிந்த மக்கள் கோட்கிறார்கள்! அரசியல் வாதிகளையும் மிஞ்சி விட்டார்கள், எல்லோரையும் கண் இல்லாத மணிகள் என்று நினைத்து இப்படி வெளியிட்டார்களோ என்னவோ!

இனி ஆவனங்களை பற்றி விரிவாக பார்ப்போம்! மேலே கூறப்பட்டது போல், த.மு.மு.க அன்னிய செலவானி பொறமுடியாது என்ற காரணத்திற்க்காக, முதலில் அரசாங்கத்திடம் அனுமதி பெற்றார்கள்! அது சம்மந்தமாக அரசாங்கம் அனுமதித்த கடிதம் முதல் ஆவனமாக மாறியது!

அரசாங்க அனுமதி பெற்று வாங்கிய அன்னிய செலாவனி வரவு மற்றும் செலவு கண்க்குகளை மத்திய அரசாங்கத்திற்க்கு படிவம் FC3-ல் சமர்பிக்க வோண்டும்! இது தான் இவர்களின் இரண்டாவது ஆவணமாக மாறியது!

ஆனால் மிக தந்திரமாக இதை முழுமையாக வொளியிட்டால் தாங்கள் சுருட்டியவைகள் வொளியில் தெரிந்துவிடும் என்று என்னி படிவத்தின் முகப்பு பக்கத்தை மட்டும் வெளியிட்டுள்ளார்கள்!

இந்த படிவத்தில் மொத்தம் 6 பக்கங்களையும் அத்துடன் விரிவான வரவு மற்றும் விரிவான செலவு விபரமும் உள்ளது! உண்மையில் இவர்கள் முறையாக விநியோகித்து இருந்தால் உள்துறைக்கு சமர்பித்த இந்த படிவத்தின் முழு விபரத்தையும் வெளியிட தயாரா?

இந்த படிவம் 6 பக்கங்களைக் கொண்டு உள்ளதை ஏண் படிவத்தின் முகப்பு பக்கத்தை மட்டும் வெளியிட்டார்கள்! நடுநிலையாளர்களோ சிந்தியுங்கள்! இந்த ம(h)க்கள் கழகம் எப்படியல்லாம் பொது மக்களுக்கும் அவர்களின் மிலன் மண்டபத்தில் இருந்த விசாரனை குழுவினர்களுக்கும் எப்படியல்லாம் அல்வா கொடுத்துள்ளார்கள் என்று! இந்த கழகத்தினர் எல்லோரையும் கண் இல்லாத மணிகள் என்று என்னிவிட்டார்கள் போல்!

இந்த இரண்டு ஆவணங்களையும் கொஞ்சம் விரிவாக பார்ப்போம்! இவர்களின் முதல் ஆவனமாக மாறிய மத்திய அரசாங்கத்தின் அனுமதி கடிதம் இவர்களின் நேர்மைக்கு எந்த வித சான்றும் பகரவில்லை மாறாக இவர்கள் அக்கடிதம் இன்றி வசூலித்து இருந்தால் இவர்கள் அத்தனை போரும் கம்பி என்னியிருப்பார்கள்! ஆகவே அரசாங்கத்தின் நிற்பந்தத்தின் காரனமாக கம்பி என்னாமல் இருப்பதற்காக இவர்கள் அதை பெற்றார்களே தவிர தங்களை பரிசுத்தவாதிகள் என்பதை நிருபிக்க அல்ல!

இரண்டவதாக சமர்பித்த ஆவணங்களில் FC3 (FERA Act) முக்கியம் வய்ந்தது! ஆனால் அதை இவர்கள் முழுமையாக வெளியிட்டால் அதில் வெளிநாடுகளிள் இருந்து பெறப்பட்ட நிதி விபரம் நாடுகள் வாரியாகவும், இன்னும் நிதி அளித்தவர்களில் எத்தனை பேர் ஒரு லட்சம் மற்றும் அதற்க்கு அதிகமாக அளித்தார்கள் என்றும் ஒரு லட்சத்திற்க்குள் எந்தனை நபர்கள் அளித்தார்கள் மற்றுமு; அளித்த தொகையும் காண முடியும். இது தவிர இந்த நிதிகளை விநியோகித்த விபரமும் இதில் நிதி வாரியாக விரிவாக குறிப்பிடுகிறது. அதன் விபரங்களை இரண்டாவது குறிப்பில் உள்ள அட்டவனையில் 1 முதல் 56 வரை விரிவாக பிறித்து காண்பித்துள்ளது! இந்த முழு படிவத்தின் நகலை வெளியிட்டால் மட்டும் போதும், விநியோகித்த முழு விபரத்தையும் அறிந்திடலாம்.எத்தனை சகோதரர்கள் தங்கள் இரத்தத்தை பணமாக வெளிநாட்டில் இருந்து அனுப்பினார்கள் அதை எவ்வாறு இந்த கழகத்தினர் கண்மணிகளின் கண்னை கட்டி எப்படியெல்லாம் ஆட்டையை போட்டார்கள் என்று.

இவர்களின் கோள்வியும் அதற்க்கு நாம் அளிக்கும் பதிலும்!

இவர்கள் கோட்கலாம், மத்திய அரசாங்கத்திடம் சமர்பித்த FC3 படிவத்தின் நகலை எப்படி வெளியிட முடியும்? அது அரசாங்கத்திடம் சமர்பித்த ரகசிய (Confiendtial) ஆவனம் இல்லையா? ஏன்று, ஆம், ஆனால் அதில் உள்ளதை அப்படியோ மொத்தமாக வெளியிட்டுள்ளீர்களே அது மட்டும் ரகசியமில்லையா!(வசூலானது மற்றும் செலவளித்தது) தாங்கள் வசூலித்தது மற்றும் விநியோகித்தது என்று வெளியிட்டுள்ளீர்கள்! ஆனால் அதை தான் படிவம் FC3-ல் விரிவாக அரசிடம் சமர்பித்துள்ளீர்கள்!

மொத்தமாக வசூலான தொகையையும் செலவளித்த தொகையையும் வெளியிட்டால் ரகசியமில்லையன்றும் ஆனால் அதன் விரிவாக வெளியிட்டால் ரகசியம் என்றும் இவர்களுக்கு யார் வரைமுறை கொடுத்தார்கள்!

இன்ஷா அல்லாஹ் மற்றவை அடுத்து வரும் பாகங்களில் காண்போம்!

இப்படிக்கு
தவ்பீக்

பிரதிநிதித்துவத்தை பறித்த கருணாநிதி!!

சேப்பாக்கம் : முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை பறித்துக் கொண்ட கருணாநிதி

சென்னை மாவட்டத்திற்குட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்றான சேப்பாக்கம், முஸ்லிம் மக்களை பெரும்பான்மையாக கொண்ட தொகுதியகும். குறைந்த வாக்காளர் எண்ணிக்கையை கொண்டுள்ள இந்த தொகுதியில் முஸ்லிம் வேட்பாளர் ஒருவர் எளிதாக வெற்றி பெற்று விட முடியும்.

சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க விரும்பும் அரசியல் கட்சிகள், தங்கள் கட்சி முஸ்லிம் வேட்பாளரை சேப்பாக்கத்தில் நிறுத்துவது மரபாகும்.

1977, 1980, 1984 என 3 முறை திமுக சார்பில் ரகுமான்கானும், 1989ல் திமுக கூட்டணியில் இடம் பெற்ற எம். அப்துல் லத்தீப்பும், 1991ல் காங்கிரஸ் கட்சி சார்பாக போட்டியிட்ட ஜீனத் சர்புதீனும் வெற்றி பெற்றனர்.

முஸ்லிம் சமுதாயத்தின் நண்பனாக காட்டிக் கொள்ளும் திமுகவுக்கு தொடர்ந்து வெற்றி வாய்ப்பை அளிக்கும் இந்தத் தொகுதியில் முஸ்லிம் ஒருவரே வெற்றி பெற்று வந்துள்ளார்.

இந்த நிலைக்கு மாறாக முஸ்லிம் சட்டமன்ற பிரதிநிதித்துவத்தைத் தடுத்து நிறுத்தும் வஞ்சக திட்டத்துடன் 1996 தேர்தலின்போது முதன் முதலாக திமுக தலைவர் கருணாநிதி இந்தத் தொகுதியில் போட்டியிட்டார்.

கருணாநிதியின் வஞ்சக குணத்தை அறியாத முஸ்லிம்கள் பெருந்தன்மையுடன் அவருக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்தனர். அதனைத் தொடர்ந்து 2001ல் தேர்தலின் போது அங்கு மறுபடியும் கருணாநிதியே போட்டியிட்டார். அப்போதும் அவரை முஸ்லிம்கள் வெற்றி பெறச் செய்தனர்.

இப்போது மறுபடியும் 2006 தேர்தலிலும் கருணாநிதி சேப்பாக்கத் தொகுதியிலேயே நிற்க முடிவெடுத்துள்ளார். ஆனால் இந்த முறை கலைஞரின் வஞ்சகத்திட்டத்தை அறிந்து முஸ்லிம்கள் விழிப்புடன் இருப்பதால் அவர் வெற்றி பெறுவது கடினமே.

எந்த முஸ்லிம் சமுதாயம் கருணாநிதியின் அரசியல் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்து அவரை வெற்றிச் சிகரத்தில் வைத்து கண்டு களித்ததோ அந்த சமுதாயத்துக்கு அவர் தொடர்ந்து இழைத்த அநீதிகளால், வஞ்சகத்தால் அவரது அரசியல் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடியவர்களாய் சேப்பாக்கம் வாக்காளர்கள் உள்ளனர்.

நன்றி : உணர்வு 10:32
குறிப்பு: கருணாநிதி ஒரு தலைசிறந்த அரசியல் ராஜதந்திரி!! என்ற கட்டுரையின் தொடர்ச்சியை ஆக்டோபஸ் காலில் சிக்கிய கருணாநிதி! என்ற தலைப்பில் தமிழ் முஸ்லிம் வலைமனையில் பார்வையிடவும்.
நன்றியுடன்,
அறிவழகன்

Tuesday, April 25, 2006

தமிழக அரசியலில் ராஜதந்திரி!!

கருணாநிதி ஒரு தலைசிறந்த அரசியல் ராஜதந்திரி!!

இந்த தலைப்பிற்கு முழுத் தகுதி வாய்ந்தவர் கருணாநிதி மட்டுமாகத்தான் இருக்க முடியும். ஏனெனில் தமிழக அரசியல் வரலாற்றில் தனது வாய்ச்சொல் திறமையால் சிறப்பாக கோலோச்சியவர் அவரே.

தமிழகத்தில் பா.ஜ.க. காலூன்ற முதன் முதலாக சிகப்பு கம்பளம் விரித்து வரவேற்பு அளித்தது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. பா.ஜ.க. தலைமையிலான மத்திய அரசில் உளப்பூர்வமாக பங்கேற்று தமிழகத்திலிருந்து முதன்முதலாக அதற்கு சாமரம் வீசியதும் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.தான். அப்போதைய காலகட்டத்தில் தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி அந்த கூட்டணியை சகட்டு மேனிக்கு சாடி விமர்சனம் செய்தார். பத்திரிக்கைகளில் தாரளமான அறிக்கைகளை அள்ளி தெளித்துக் கொண்டும் இருந்தார்.

முரசொலியில் வந்த ஒரு செய்தியிலே..

...பொதுமக்களை ஏமாற்றுவதற்கு வாஜ்பேயி என்கிற முகமூடி அணிவித்து பா.ஜ.க.வை மக்கள் உள்ளத்தில் பதிய வைத்து அறிமுகப்படுத்த எண்ணுகிறார்கள். ...அந்த முகமூடியை அகற்றிவிட்டுப் பார்த்தால் அங்கே என்ன தெரியும் தெரியுமா? ஆர்.எஸ்.எஸ். என்ற காட்டுமிராண்டித் தனமான வன்முறைக் கும்பல் தெரியும். இந்த முகமூடியை விலக்கிவிட்டுப் பார்த்தால் இந்து முன்னணி என்கிற வக்கிரமான வன்முறைக் கும்பல் அங்கே தெரியும். அந்த முகமூடிகளை விலக்கிவிட்டுப் பார்த்தால் பஜ்ரங் தளம் என்ற பயங்கரவாத கூட்டத்தின் உருவம் தெரியும். விசுவ இந்து பரிஷத் என்கிற வன்முறையாளர்களின் கூட்டம் அங்கே தெரியும். (முரசொலி - 26-2-1998)

சங்க்பரிவாரத்தினரை கருணாநிதி அவர்கள் இப்படி அபிசேகம் செய்யும் போது அவர் பா.ஜ.க.விற்கு எதிரணியில் இருந்தார் என்பதை இந்த இடத்தில் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

06-03-1999 அன்று சென்னை கேரள சமாஜத்தில் ஜி.கே.மூப்பனார், ஆர்.நல்லகண்ணு, என்.வரதராஜன், ஜி.ஏ.வடிவேலு போன்றோர் பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் பா.ஜ.க.வையும், அதன் ஆட்சியையும் விமர்சித்து நீண்டதொரு உரை நிகழ்த்தினார் கருணாநிதி. அந்த நீண்ட உரையிலே..

அவர்கள் (பா.ஜ.க.வினர்) மனிதாபிமானத்தை மதிக்கக் கூடியவர்கள் இல்லை. மனித நேயத்தை விரும்பக் கூடியவர்கள் இல்லை. எல்லா மதமும் ஒன்றுதான் என்று மத நல்லிணக்கத்தை போற்றக்கூடியவர்கள் இல்லை. நீதியை, நெறியை, நேர்மையை என்றைக்கும் மதிக்கக் கூடியவர்கள் இல்லை. அப்படிப்பட்டவர்களுடைய கையிலே இன்றைக்கு இருக்கின்ற ஆட்சிப் பொருப்பும் அந்த ஆட்சிப் பொருப்புக்கு ஆதரவாகச் செயல்படுகின்ற சில பரிவாரங்கள், சில கணங்களுடைய அக்கிரம அடாவடிச் சேட்டைகளும் இந்தியாவிற்கு ஒரு தலைகுனிவை அகில உலக அரங்கிலே இன்றைக்கு ஏற்படுத்தியிருக்கின்றது.

இந்த ஓராண்டு பி.ஜே.பி. ஆட்சியிலே சிறுபான்மை இன மக்களுக்கு எதிரான வன்முறை வெறியாட்டாங்களை பட்டியலிடுகிறேன் என்று சொன்ன கருணாநிதி 1998 ஏப்ரல் மாதத்தில் குஜராத்தில் பரோடா என்னும் இடத்தில் கிறித்தவ கூட்டத்தின் மீது நடைபெற்ற தாக்குதலிலிருந்து தொடங்கி 1999 ஜனவரி மாதத்தில் ஒரிசா மாநிலத்தில் சொங்காட் என்னும் இடத்தின் அருகே உள்ள தோஸ்வாடா என்ற கிராமத்தில் இரண்டு கிறித்தவ ஜெபகூடங்களை இடித்து தரை மட்டமாக்கியது வரை பட்டியலிட்டு பி.ஜே.பி. விசுவ இந்து பரிஷத், பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ் போன்ற சங்க்பரிவார கும்பலின் 20 வன்முறை வெறியாட்டங்களை அந்த உரையிலே குறிப்பிட்டார். (முரசொலி 7.3.1999)

இவர் இத்தனை விசயங்களை பட்டியலிடும் போது பா.ஜ.க.விற்கு எதிரணியில் இருந்தார் என்பதை மீண்டும் ஒருமுறை இந்த இடத்தில் நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

பா.ஜ.க.வுடனான தேர்தல் கூட்டணி குறித்து முரசொலியில் முழங்கிய மற்றொரு செய்தி...

ஜெயலலிதா, பா.ஜ.க. என்ற ஒரு பாம்பைக் கொண்டு வந்து தமிழகத்தில் அவிழ்த்து விடுகிறார். ஜாக்கிரதை, ஜாக்கிரதை, நச்சுப் பாம்பு, தமிழ்நாட்டிலே இதுவரை நுழையாத பாம்பு, மதவெறி பாம்பு, இந்த பாம்பை அடித்து நொறுக்குங்கள், நொறுக்குங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம். (முரசொலி - 16-02-1999)

இப்பொழுதும் அவர் பா.ஜ.க. கூட்டணிக்கு எதிரணியில் இருந்தார் என்பதை நினைவில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

இப்படி சங்க்பரிவாரத்தினரைப் பற்றி பச்சை, பச்சையாக, மட்டை இரண்டு கீற்றாக அக்குவேர் ஆணிவேராக அலசி எடுத்த கருணாநிதி, பி.ஜே.பி.யுடனான கூட்டணியை ஜெயலலிதா முறித்துக் கொண்டவுடன் பாய்ந்து போய் பிடித்து பி.ஜே.பி. ஆட்சிக்கு முட்டு கொடுத்தார். அது கீழே விழாமல் தாங்கிப் பிடித்தார், தூக்கி நிறுத்தினார். அதற்கு முன்பு பி.ஜே.பி. தீண்டத்தகாத கட்சி அல்ல என்ற முஸ்திபுகளை அழகாக முழங்கினார். அவர் ஒரு தலைசிறந்த அரசியல் ராஜதந்திரி ஆயிற்றே.

திராவிட கட்சிகளில் ஒன்றான அ.தி.மு.க. பி.ஜே.பி.க்கு தமிழகத்தில் நடைபாவாடை கட்டி வருக, வருக என வரவேற்கிறது என்று விமர்சித்த கருணாநிதி அதே பி.ஜே.பி.க்கு நடைபாவாடை கட்டி வருக, வருக என தமிழகத்திற்கு தோரணம் கட்டி வரவேற்றார்.

பி.ஜே.பி. ஆட்சி தொடர்ந்தால் இன்னும் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு பிறகு பெரியார் இல்லை, அண்ணா இல்லை, அவர்கள் பிறந்த பூமி இது இல்லை என்ற ஒரு சூழ்நிலை உறுவாகும் என்று அண்ணா அறிவாலயத்திலே முழங்கிய கருணாநிதி அதே பி.ஜே.பி. ஆட்சி தொடர அரும்பாடு பட்டார்.

பி.ஜே.பி. ஆட்சி தொடர்ந்தால், பாபர் மசூதியை இடிப்பதற்கு பண்டாரக் கூட்டம், பரதேசிக் கூட்டம் கையிலே வேலாயும், சூலாயுதம், கோடாரிகள் இவைகளையெல்லாம் ஏந்திக் கொண்டு சென்ற அந்த காட்சி போல் தமிழ்நாட்டிலும் இன்னும் 15 ஆண்டுகளுக்குப் பிறகு, நம்முடைய சந்ததியினர், நம்முடைய பிள்ளைக்குட்டிகள் பேரன், பேத்திகள் எல்லாம் அந்த கண்ணறாவிக் காட்சியை காணக்கூடிய நிலை தமிழ்நாட்டிலும் அன்றாட நிகழ்ச்சிகளாக ஆகிவிடக் கூடும் என்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் கவலையோடு உறுக்கமாக பேசினார். (முரசொலி - 28-01-1998) அதே கருணாநிதி பி.ஜே.பி.யோடு கூட்டணியை ஏற்படுத்திக் கொண்டார்.

சங்க்பரிவார கும்பலின் அராஜகங்களை அன்று பட்டியலிட்ட கருணாநிதி பி.ஜே.பி.யுடனான கூட்டணி ஏற்பட்டவுடன் அதே சங்க்பரிவார கும்பலின் தலைமை பீடமான ஆர்.எஸ்.எஸ்-ஐ சமுதாய அமைப்பு என்று நற்சான்றிதழ் வழங்கினார்.

நிருபர்கள் வாஜ்பேயி, ஆர்.எஸ்.எஸ் ஒரு சமுதாய இயக்கம் என்று சொல்லியிருப்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா? என்று கேட்டதற்கு..

ஏற்றுக் கொள்கிறேன். திராவிடர் கழகம் இங்கே சமுதாய இயக்கமாக இருக்கிறது. ஆனால், ஆர்.எஸ்.எஸ். இயக்கத்திற்கும் திராவிடர் கழகத்திற்கும் கொள்கைகளிலே ஏராளமான முரண்பாடுகள் இருக்கின்றன. அது வேறு விசயம். ஆனால், அவர்களும் சமுதாய இயக்கம் என்று சொல்லிக் கொள்கிறார்கள், இவர்களும் சமுதாய இயக்கம் என்று சொல்லிக் கொள்கிறார்கள். ஆனால், இரண்டும் ஒன்றல்ல. நான் திராவிடர் கழகத்திலிருந்து வந்தவன் என்று கருணாநிதி திருவாய் மலர்ந்தார். (முரசொலி - 9-2-2000)

பா.ஜ.க.வுடன் தேர்தலை சந்திக்கவிருக்கும் தி.மு.க. அதன் தொண்டர்களுக்கு சில அறிவுரைகளை அண்ணா அறிவாலயத்தில் வைத்து போதிக்கிறது. என்ன போதித்தது, எப்படி போதித்தது என்பதை பார்ப்போம்.

சிறுபான்மை மக்களிடம் பா.ஜ.க.பற்றி ஒரு சந்தேகத்தை ஒரு சிலர் உருவாக்கி வைத்திருக்கிறார்கள் என்பது உண்மைதான். பொய் பிரச்சாரம் செய்கிறார்கள். அதற்கு ஈடு கொடுத்துவிட்டு, அதை முறியடிக்க வேண்டிய பொறுப்பு இளைஞர்களாகிய உங்களுக்கு உண்டு. (முரசொலி - 23-06-1999)

எப்பேர்பட்டவர்களுக்கு கருணாநிதி அவர்கள் சமுதாய அமைப்பினர் என்ற நற்சான்றிதழும், சிறுபான்மை மக்களிடம் பா.ஜ.க.பற்றி ஒரு சிலர் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கின்றனர் என்று எதுவுமே தெரியாதது போலும் நடித்திருக்கிறார் என்பதை அவருடைய பழைய வாக்குமூலங்களை எடுத்துப் போட்டு ஒருமுறை ஒப்பிட்டு பார்க்க வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் - காட்டுமிராண்டித் தனமான வன்முறைக் கும்பல்,

இந்து முன்னணி - வக்கிரமான வன்முறைக் கும்பல்,

பஜ்ரங் தளம் - பயங்கரவாத கூட்டம்,

விசுவ இந்து பரிஷத் - வன்முறையாளர்களின் கூட்டம்.

அவர்கள் அனைவரும்

மனிதாபிமானத்தை மதிக்காதவர்கள்,

நீதியை, நெறியை என்றைக்கும் மதிக்காதவர்கள்,

மத அடிப்படைவாத அமைப்பினர்,

மத தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தோர்,

விஷமிகள்,

வேலாயும், சூலாயுதம், கோடாரிகள் இவைகளையெல்லாம்

ஏந்திக் கொண்டு சென்ற

பண்டாரக் கூட்டம், பரதேசிக் கூட்டம்,

என்று கருணாநிதி அவர்களாலேயே அபிசேகமும், ஆராதனையும் செய்து பட்டியலிடப்பட்ட சங்க்பரிவார அமைப்பினர் பிற்காலங்களில் அவர்களுடன் கூட்டணி பூண்டவுடன் எப்படி சமுதாய அமைப்பினராக மாறினர்?
அவர்களைப் பற்றி சிறுபான்மை இன மக்களின் உள்ளத்தில் சந்தேகத்தை ஏற்படுத்திவர்களில் மிகவும் பிரசித்தி பெற்றவர் சாட்சாத் திரு.கருணாநிதி அன்றோ?
கருணாநிதியின் மேற்கண்ட பட்டியலில் உள்ள செயல்பாடுகள் தான் ஒரு சமுதாய அமைப்பிற்கான இலக்கணமாக இருந்தால் தி.மு.க. அந்த சமுதாயப் பனியை பிற்காலங்களில் செய்யும் என்று பொருள் கொள்வதா?

நிருபர்களின் கேள்விக்கு பதில் அளித்ததிலாவது தெளிவு இருக்கிறதா என்றால் அதிலும் குழப்பமே மிச்சம்.

முதலில் திராவிடர் கழகம் இங்கே சமுதாய இயக்கமாக இருக்கிறது என்கிறார். பிறகு அவர்களும் சமுதாய இயக்கம் என்று சொல்லிக் கொள்கிறார்கள் என்று சொல்கிறார். கருணாநிதியின் இந்த முரண்பாடான போக்கை கண்டித்து அவர் எந்த இயக்கத்திலிந்து வந்தாரோ அந்த திராவிடர் கழகத்தினரே தங்களுடைய விடுதலை என்னும் பத்திரிக்கையில் சமுதாய இயக்கமா ஆர்.எஸ்.எஸ் என்ற தலைப்பில் தொடர் கட்டுரை வெளியிட்டு கருணாநிதியை கஞ்சி காய்ச்சி காவடி எடுத்தனர். அதை புத்தக வடிவிலும் வெளியிட்டுள்ளனர். அவர்களும் தற்பொழுது கருணாநிதியின் கூட்டணியில் உள்ளனர் என்பதை இந்த இடத்தில் சற்று ஆழமாக பதிய வைத்துக் கொள்ள வேண்டும்.

திராவிடன், தமிழ் மொழி, தமிழன் என்று சொல்லிச், சொல்லியே கருணாநிதி தனது குடும்ப நலன்களை பெருக்கிக் கொண்டாரே தவிர மக்கள் நலனில் அக்கறை காட்டிடவில்லை. குறிப்பாக முஸ்லிம்களுடைய நலனில் அவர் என்றுமே அக்கறை காட்டியது இல்லை. தான் ஏற்றுக்கொண்ட கொள்கைகளை கூட முழங்க முடியாமல் கட்டுண்டு போனது தான் அவருக்கு மிச்சமானது.

ஆகவே, கருணாநிதியின் ஒவ்வோர் சொல்லும், எழுத்தும் நம்பகமானதாக முஸ்லிம் சமுதாயம் இனியும் கருதாமல் இருப்பதுதான் முஸ்லிம் சமுதாயத்திற்கு நன்று. பி.ஜே.பி.யை ஆதரித்து தனது சந்ததிகளுக்கு, பேரன், பேத்திகளுக்கு கருணாநிதி செய்த துரோகங்களை போல் முஸ்லிம்கள் தங்களுடைய சந்ததிகளுக்கு துரோகம் இழைத்து விடமால் கவனமான முடிவு எடுக்கும் சரியான நேரம் இது.

கருணாநிதியுடைய எஞ்சியிருக்கும் வாழ்நாளின் இறுதிக்குள் அவரை ஒருமுறையேனும் தேர்தலில் தோற்கடிப்பது முஸ்லிம்களின் சமுதாய கடமையாக கருதினால் அது தவறுமல்ல, மிகையுமல்ல.
இன்சா அல்லாஹ் நேரம் கிடைக்கும் போது இந்த கட்டுரையை தொடர்கிறேன்.
உறுதிமொழி எடுக்க வேண்டிய நேரம்! என்ற கட்டுரையை தமிழ் முஸ்லிம் வலைமனையில் பார்வையிடவும்.
நன்றியுடன்
அறிவழகன்.

Monday, April 24, 2006

பொய்யுறைத்த சத்தியவாதிகள் (த.த.ஜ)!!



பொய்யுறைத்த சத்தியவாதிகள் (த.த.ஜ)!!

வல்ல இறைவனின் சாந்தியும் சமாதானமும் உங்கள் அனைவர் மீதும் உன்டாவதாக .தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் மாநில பொது செயலாளர் சகோ. எஸ்.எம். பாக்கரின் வருகையில் குஷியாகிப்போன சவுதி த.த.ஜ வினர் ஏகப்பட்ட பொய்களை மின்னஞ்சல்களாக தட்டி விட்டு சகோ.பாக்கரின் வருகையையே கேளிகூத்தாக்கி மக்களின் நகைப்பிற்குறியதாக மாற்றியதை வாசகர்களும் இனைய தமிழ் முஸ்லிம் சமுதாயமும் நன்கறிந்ததே இதில் தீன் முகம்மது என்பவர் உச்சகட்டமாக பக்தி முத்திப்போய் தனது பொய்யை (இஸ்லாமிய அழைப்பாளர் முஜிபுர்ரஹ்மான் உமறி பற்றியது) விமர்சித்தவர்களை எல்லாம்
''இது எந்த வகையான அரிப்போ'' ''லாட்ஜில் விபச்சாரம்
செயதார்'' ''சைட் அடித்தார்'' என்று வார்த்தை சாக்கடையினால்
வசவியருந்தார்.

இப்படி பட்ட ஒரு புணிதமான த.த.ஜ வின் தொன்டனை பற்றி சகோ. பாக்கரிடம் ஜித்தாவிலும் , யான்புவிலும் விளக்கம் கேட்டபோது இவரை பற்றி தனக்கு யாரென்று தெறியாதென்றும் இதுகுறித்து த.த.ஜ வின் அதிகாரபூர்வ இனையதளத்தில் மறுப்பு வெளியிடுவதாகவும் பதில் அளித்துள்ளார் இதைபற்றி மற்ற சவுதி அரேபிய நிர்வாகிகளிடம் கேட்டபோது இந்த தீன் முகம்மது யாரென்று தெறியாதென்றும் த.த.ஜ விற்கும் இவருக்குமு; எந்த ஒரு தொடர்பும் இல்லையென்றும் மறுத்து வந்தார்கள். இதின் உச்சகட்டமாக த.த.ஜ விற்கு அவப்பெயரை ஏற்படுத்த வேன்டும் என்ற நோக்கில் த.மு.மு.க வினரே தீன் முகம்மது என்ற பெயரிலும் மற்றும் பல பெயர்களிளும் எழுதுகிறார்கள் என்றும் கூறினர் .இதை சகோ. பாக்கர் அவர்களும் நன்றாக அறிவார்.

இதை குறித்து கிழக்கு மாகான த.த.ஜ நிர்வாகி சகோ. முனீஃப் அவர்களிடம் கேட்டபோது இதுபோன்ற தவறுகளை த.த.ஜ ஒரு போதும் ஊக்குவிப்பதில்லை என்றும் தீன் முகம்மது செய்தது தவறு என்றும் கூறினார்.

இப்படி பொய்க்கு மேல் பொய்யுரைத்து இவர்களாள் அழைப்பு கொடுக்கபட்டு நிகழ்ச்சிக்கு வந்து சென்ற இஸ்லாமிய அழைப்பாளர் முஜிபுர்ரஹ்மான் உமறி பற்றி நாக்கூசும் அளவுக்கு அவதூருகளை எழுதி (காசிமி விஷயத்தில் எவ்வாறு பி.ஜே நடந்து கொன்டாறோ , காசிமியை அழைத்து சென்றுவிட்டு காசிமி இவர்களுக்கு எதிராக பொய்யுரைத்ததும் அவர் கீழ்த்தரமான காரியம் செய்தது எனக்கு தெறியும் என்று டி.வி யில் கூறியது போன்று) கேவலப்படுத்திய இவர்மீது த.த.ஜ நிர்வாகம் ஒழுங்கு நடவடிக்கையோ அல்லது மறுப்பு அறிக்கையோ கொடுக்கவேன்டும் என்று கோரியபோது இந்த த.த.ஜ வினர் கூறிய பதில் :

"யாரென்றே தெறியாத ஒருவர் எங்கள் பெயரில் பொய்யுரைத்து அவதூரு பரப்பினால் அதற்கு த.த.ஜ வும் நிர்வாகமும் எப்படி பொருப்பாகும் என்று பதில்
கேள்வி எழுப்பி மறுத்தனர்."


இந்த தீன் முகம்மதால் இஸ்லாமிய அழைப்பாளர் முஜிபுர்ரஹ்மான் உமறி பற்றி எழுதபட்டசில அவதூருகளை பாருங்கள் இவர்களின் அழைப்பை ஏற்று மரியாதை நிமித்தமாக இவர்களின் நிகழ்ச்சிக்கு செல்லும் ஆலிம்கள் பின்வரும் வரிகளை படித்து இவர்கள் கொடுக்கும் மரியாதை என்னவென்று தெரிந்துக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன் :

''இஸ்லாமிய வழிகாட்டல் மையத்தில் பணிபுரிந்து வரும் முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்களை ததஜவுடன் பல கருத்துவேறுபாடுகளை அன்னார் கொண்டிருந்தாலும், ஜித்தாவில் நடந்த கூட்டத்திற்கு மரியாதை நிமித்தமாக வந்திருந்தார்;. அவர் மேடைக்கு வந்து பேசுவார் என்று பலரும் எதிர்பார்த்தனர். ஆனால், அவர் கருத்து வேறுபாட்டைக் காட்டுவதற்காக போஸ் கொடுத்து விட்டு போவார் என்று எதிர்பார்க்கவில்லை.''

''முஜிபுர்ரஹ்மான் அவர்கள் அமராதது உண்மையே! கடந்த மாதங்களில் இளையவன் அண்ட் கோவின் அமைப்பான தமுமுக, முஜிபுர்ரஹ்மான் உமரி அவர்களை ரோபார்ட்டாக நடத்தி வந்தாலும், நான் அவர்மீது கொண்ட மரியாதையின் நிமித்தமாக, வந்தார் அமர்ந்தார் கேமரா மின்னியது சென்றார். என்று எழுதிவிட்டேன்.''

இவ்வார உணர்வை பார்த்த எனக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது , த.த.ஜவினராலும் அதன் சவுதி நிர்வாகிகளாளளும் யாரென்றே தெறியாதென்றும் , இயக்கத்திற்கு சம்பந்தமில்லாதவர் என்றும் , இயக்கத்தின் பெயரில் பொய்யுரைத்து இயக்கத்திற்கு கெட்ட பெபயரை ஏற்படுத்துவதற்காக எதிரிகளாள் தூன்டி விடபட்டவர் என்றும் வர்னிக்கபட்ட தீன் முகம்மதுவின் பொய்களுக்கு மெருகூட்டி அவரை அங்கீகரிக்கும் விதமாக விதமாக உணர்வில் (குரல் 33 உரிமை 10) அவரது பொய்களை எழுதியிருந்தார்கள். 800 பேர் வரையே கொள்ளளவு உள்ள தளத்தில் 1500 பேர் கூடியதாகவும் இஸ்லாத்திற்கு மாறிய ஓர் இந்து சகோதரர் இஸ்லாமிய ஒழுக்கவியல் தம்மை எவ்வாறு கவர்ந்தது என்பது குறித்து நிகழ்ச்சியில் விளக்கியதாகவும் பிரசுரித்துள்ளார்கள். உன்மையில் என்ன நடந்தது என்பது சகோ. பாக்கருக்கு நன்றாக தெறியும் உன்மையில் அங்கு கூடியது நேர்மையான த.த.ஜ சகோதரர்களின் கருத்துபடி 800 பேருக்குள்ளேயே மற்றும் முஸ்லிமாக மறிய சகோ. சிவா எதுவும் வேசவில்லை கலிமா சொல்லி விட்டு பின்னால் சென்று அமர்ந்துவிட்டார்.

இப்போது கீழ்க்கானும் கேள்விகளுக்கு பதில் அளிக்க சகோ. பாக்கர் அவாகளும் த.த.ஜ நிர்வாகமும் மற்றும் உணர்வு பத்திரிகையும் கடமைபட்டுள்ளனர்:

  • சத்தியத்தை முழங்க வந்த இயக்கம் மறியாதை நிமித்தமாக பொய் செல்வதை அங்கீகரிக்கின்றதா?
  • அப்படியில்லையெனில் தீன்முகம்மதுவின் பொய்களை விசாரிக்காமல் த.த.தஜ வின் அதிகாரபூர்வ பத்திரிகையில் வெளியிட்டது எவ்வகையில் நியாயம்? ஓன்று தீன்முகம்மது உணர்வின் செய்தியாளராக இருக்கவேன்டும் அல்லது த.த.ஜ வின் நிர்வாகியாக இருக்கவேன்டும் அப்படி இல்லாத பட்சத்தில் உணர்வில் பொய்கள் பிரசுரமானது எப்படி ??

  • இதுபோன்ற பொய்களை பரப்பக்கூடிய சகோதரர்களை த.த.ஜாவின் தலைமை கண்டிக்குமா?

  • குர்ஆன் மற்றும் சுன்னாவின் வழிமுறைகளை ஏற்றுக்கொண்ட நம்மவர்களுக்குள் சில கருத்து வேறுபாடு இருந்தாலும் எதிரணியினர் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு பலர் இன்னும் சென்று வருகிறார்கள். நிகழ்ச்சிக்கு வந்த ஒரு உண்மையை வைத்து சில பொய்களை புனைந்துரைக்கும் த.த.ஜ. சகோதரர்களின் இத்தகைய செயல்பாட்டால் இவர்களின் நிகழ்ச்சிக்கு மற்றவர்கள் வருவதற்கு அஞ்சக்கூடிய நிலையை இவர்களே ஏற்படுத்தி தருகிறார்கள் என்பதை த.த.ஜ. தலைமை நிர்வாகிகள் உணர்வார்களா?

  • பொய்களை எழுதக்கூடிய தீன்முஹம்மது போன்றவர்களை நம்பி அந்த பொய்யை மின்னஞ்சலின் வழியே பரப்பும் த.த.ஜா.வின் பிற சகோதரர்கள் உண்மையை அடையாளம் கண்டு தீன் முஹம்மது போன்ற பொய்யர்களை தனிமைப்படுத்துவார்களா?

  • பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பார்கள். த.த.ஜ.வின் மின்னஞ்சல் படை, பொய்யர்களா? அல்லது உண்மையாளர்களா?

  • தீன்முஹம்மது போன்ற பொய்யர்களை த.த.ஜ.வின் தலைமை பொதுவில் கண்டிக்க முன்வரவில்லையென்றால் த.த.ஜ. தலைமை மேல் உள்ள குற்றச்சாட்டு உண்மைப்படுத்தப்படும் என்பதை இவர்கள் உணர வேண்டும்

தீன் முஹம்மது என்ற அந்த பொய் பரப்பும் எழுத்தாளரை கண்டிக்கவேன்டும் , இவர் த.த.ஜ வினராக இருக்கும் பட்சத்தில் இவர்மீது ஒழுங்கு நடவடிக்க எடுக்கவேன்டும். அப்படி கண்டிக்காவிட்டால், த.த.ஜ.வின் நிழற்படைதான் அந்த பொய் பரப்பும் கும்பல் என்று ஒத்துக்கொண்டதாக ஆகிவிடும்.

மேடைக்கு வந்து அமராத ஒருவரை அமர்ந்ததாக குறிப்பிட்டு தவறான செய்தி பரப்புவது ஆரோக்கியமான செயல் அல்ல. அப்படி செய்தி தந்த தீன் முஹம்மதிற்கு கண்டனம் தெரிவிப்பது ஒரு ஆரோக்கியமான செயல்.

த.த.ஜவினராலும் அதன் சவுதி நிர்வாகிகளாளளும் மற்றும் சகோ. பாக்கராலும் யாரென்றே தெறியாதென்றும் , இயக்கத்திற்கு சம்பந்தமில்லாதவர் என்றும் , இயக்கத்தின் பெயரில் பொய்யுரைத்து இயக்கத்திற்கு கெட்ட பெபயரை ஏற்படுத்துவதற்காக எதிரிகளாள் தூன்டி விடபட்டவர் என்றும் வர்னிக்கபட்ட தீன் முகம்மதுவின் பொய்களை பிரசுரித்த உணர்வு மறுப்பு வெளியிட வேன்டும்.
"நீங்கள் அறிந்து கொண்டே உண்மையைப் பொய்யுடன் கலக்காதீர்கள்; உண்மையை மறைக்கவும் செய்யாதீர்கள் (அல்பகறா 42) என்ற திருமறை வசனத்தை இவர்களுக்கு நினைவூட்ட நாம் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்"

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் மாநில பொது செயலாளா சகோ. பாக்கர் அவர்கள் அருமையான முறையில் இதுபோன்ற தவறுகள் களையப்படும் என்றும் இயக்கம் குறித்த எந்த ஒரு விமர்சனத்தையும் தனக்கு நேரடியாக அனுப்பி வைத்தால் உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தார். இது போன்ற தக்லீதுகளின் செயல்களினால் இயக்கம் பாதிக்கபடுவதையும் ஏற்று கொன்டார். இப்படிபட்ட நல்ல ஒரு தலைவர் உண்மைகளை அறியாதிருந்தது எப்படி??

த.த.ஜ வின் சவுதி நிர்வாகம் தனது மாநில பொது செயலாளரிடமே தீன் முகம்மது குறித்த பொய்யான தகவல்களை வழங்கியதா ? விவாதத்திற்கு வழி வகுத்து சர்ச்சைகளை ஏற்படுத்திய செய்தி தமிழ்நாடு தவ்ஹித் ஜமாத்தின் அதிகாரபூர்வ பத்திரிகையில் வெளி வந்தது எப்படி ?? தெறியாது என்று கூற முடியாது ஏனென்றால் சர்ச்சையை ஏற்படுத்திய முஜிபுர்ரஹ்மான் உமறி மேட்டர் கவனமாக தனிக்கை செய்யபட்டு வெளியிடபட்டுள்ளது.

ஏன் இதே செய்தியை ஜித்தா சகோ. ஷிப்லி பெயரிலோ அல்லது மற்ற அதிகார பூர்வ நிர்வாகிகளின் பெயரிலோ வெளியிட்டிருக்கலாமே !! தீன் முகம்மதின் பெயரிலேயே வெளியிட்டதன் மர்மம் என்ன??

த.த.ஜ கடிவாளத்தை இழந்த குதிரையை போல் செல்கின்றதா ?? மாநில அளவில் முஸ்லிம்களின் நன்மைக்காக செயல்படும் ஒரு இயக்கம் தனது கொன்டர்களையும் , பத்திரிகையையும் நிர்வாகிக்க முடியவில்லை எனில் இது எதில் போய் முடியும் ? சத்தியத்தை சொல்லும் தவ்ஹித் இயக்கம் இன்னும் பொய்களுக்கு வக்காலத்து வாங்கி தீன் முகம்மதுவின் பொய்களை மறைக்க முற்பட்டாலோ அல்லது நியாயபடுத்த முயன்றாலோ வேறு விஷயங்களை கூறி திசை திருப்ப முயன்றாலோ , த.த.ஜ சத்திய மார்க்கமாம் இஸ்லாத்திற்கு கேடு விளைவிக்கிறதென்று அர்த்தம் இதற்கு காலம் பதில் சொல்லும்.

சகோ. பாக்கர் , சகோ. பி.ஜே போன்ற நல்ல தலைவர்கள் தங்களது இயக்கத்தின் அன்றாட செயல்பாடுகள் குறித்தும் தொன்டர்களின் செயல்பாடுகள் குறித்தும் அறிந்து வைத்து கொள்வது நலம் அதுபோல் தங்களின் முகத்தை பிரதிபளிக்கும் உணர்வு போன்ற மீடியாக்களை அச்சிற்கு போகும்முன் ஒரு முறை சரி பார்ப்பது நலம் அல்லது நல்ல ஒரு நிர்வாகியையும் இதழியல் அறிந்த சகோதரர்களையும் கண்கானிப்பாளிராக இடுவது இயக்கத்தின் வளர்ச்சிக்கு நல்லது.

சகோ. பாக்கர் அவர்களே த.த.ஜ நிர்வாகிகளே , த.த.ஜ தொன்டர்களே தங்கள் இயக்கத்தின் மீதான இந்த விமர்சனத்தை எடுத்து நோக்கி தவறுகளை சரி செய்தால் அது தங்கள் இயக்கத்திற்கு நல்லது ஏனெனில் விமர்சனங்களே இயக்கங்களின் வளர்ச்சிக்கும் உறுதிக்கும் துனைசெய்கின்றன. அல்லது உம் இயக்கத்தின் தவறுகளை சுட்டிக்காட்டி விமர்சிக்கும் எங்களை எப்போதும் போல் தங்களின் இயக்க விரோதிகளின் பட்டியளில் சேர்த்தாலும் ஒன்றுமில்லை ஏனெனில் நாம் எமது கருத்துக்களை காலத்தின் சுவடுகளிள் பதிகின்றோம் இவற்றை வளர்ச்சியின் பின்னரோ அல்லது வீழ்ச்சியின் பின்னரோ நாமும் நமது சந்ததியினரும் புரட்டி பார்ப்பர்.

குறிப்பு : சகோ. பாக்கர் கிழக்கு மாகானத்திற்கு வருகை தந்திருந்தபோது அவருடன் ஒரு நாள் முழுவதும் கூடவே இருந்து கவனித்ததில் அவர் தன்மீதும் இயக்கத்தின் மீதும் கூறப்படும் குற்றசாட்டுகளுக்கு மிக அருமையான முறையில் பதில் அளித்தார். ஒரு இஸ்லாமிய தலைவருக்கே உறிய முறையில் இஸ்லாத்தை அடிப்படையாக கொன்டே அவரது ஒவ்வொரு வார்த்தைகளும் அவர்கள் நிர்வாகிகள் ஊடான பேச்சக்களும் அமைந்திருந்தன . எனது பார்வையில் சகோ. பாக்கரின் பயணம் குறித்து எழுதலாம் என்றிருந்தேன் ஆனால் இந்த வார உணர்வு அதற்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டது. சிந்தனைகளை திசைதிருப்பி விட்டது. இன்சா அல்லா, இது குறித்து கூடிய விரைவில் இங்கு மீன்டும் எழுதுவேன்.
மீன்டும் சந்திக்கும் வரை,
முகவைத்தமிழன்

பி.ஜேயின் தாம்பரம் மீட்டிங்

அல்லாஹ்வின் திருப்பெயரால்...

தான் எடுத்த வாந்தியை தானே சாப்பிட்ட தவ்ஹீது தலைவர்

தமிழகத்தின் முக்கியத் தொகுதிகளில் ஓ. பன்னீர்செல்வம், நயினார் நாகேந்திரன், கும்பகோணம் (குடுமி) ரங்கநாதன் போன்ற ஜெயலலிதாவுக்கு வேண்டிய மிகமுக்கிய வேட்பாளர்களையும், மதிமுகவில் பணத்தைப் பற்றிக் கவலைப்படாமல் செலவு செய்யும் வேட்பாளர்களையும் ஆதரித்து அரசியல் தவ்ஹீதுவாதி பீ.ஜே. பிரச்சாரம் செய்து வருகிறார். பீ.ஜே.யின் போக்குவரத்துச் செலவு, போஸ்டர், மேடை, சவுண்ட் சர்வீஸ் என எல்லாச் செலவையும் அந்த வேட்பாளரைச் சார்ந்தது. இந்த வரிசையில்தான் 15-04-06 அன்று தாம்பரத்தில் மதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசிய தவ்ஹீது தலைவர் பீ.ஜே. தமுமுக தலைவர்களையும், மாவட்ட நிர்வாகிகளையும் மிகக்கேவலமாக - தரங்கெட்ட வார்த்தைகளில் பேசி, தாம்பரம் பகுதி மக்கள் காரித்துப்பும் அளவிற்கு பேசி அல்ல ஏசிவிட்டுப் போனார். தமுமுக பொதுச் செயலாளர் ரியாத்தில் இருக்கும்போது விசா எடுத்துத் தருவதாகக் கூறி பலரிடம் பணம் பெற்று திரும்பத் தரமுடியாமல் தனது குடும்பத்தை ரியாத்திலேயே விட்டுவிட்டு வந்தார், நான்தான் பணம் கிடைக்க உதவி செய்து அவரது குடும்பத்தை இந்தியா வர வழிசெய்து தந்தேன். பேராசிரியர் அப்பனுக்கு சோறு போடாதவர், தமுமுக மாவட்ட நிர்வாகிகள் ரவுடிகள் என்பது போன்ற தனிமனித அர்ச்சனைகள். தவ்ஹீது தலைவர் என்னப் பேசுகிறார் என கேட்கச் சென்ற ஒரு முதியவர், பேச்சின் இடையிலேயே எழுந்து, ''பிறகு எதற்கு புடுங்குவதற்காகவா 10 வருடம் அவர்களுடன் ஒன்றாக இருந்தீர். நாளைக்கு பாக்கரையும் - சைபுல்லா ஹாஜாவையும் இப்படித்தானே பேசுவீர்'' என திருநெல்வேலி பாiஷயில் பேசிவிட்டு எழுந்து சென்றதுதான் கூட்டத்தில் ஹைலைட்.

பீ.ஜே. பேசியதில் உண்மை இருக்கிறதா என்பது இரண்டாவது விஷயம். உண்மையாக இருந்தாலும், ''ஒரு முஸ்லிம் செய்த உதவிகளை ஒருபோதும் சொல்லிக் காட்டக்கூடாது'' என்பது ஊருக்குத்தான் உபதேசமா? மறுமை நாளில் மூன்று பேருடன் அல்லாஹ் பேச மாட்டான். அவர்களைப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்கு கடுமையான தண்டனை உண்டு'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அபூதர் (ரலி) அவர்கள் ''அல்லாஹ்வின் தூதரே! அந்த தண்டனைக்குரியவர்கள் யார்? எனக் கேட்டபோது, அந்த மூவரில் ஒருவர், தான் செய்த உதவியை சொல்லிக் காட்டியவர்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தி முஸ்லிம் கிதாபில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்ல, ''செய்த உதவிகளை சொல்லிக் காட்டுபவன் கக்கிய வாந்தியை மீண்டும் சாப்பிட்டவன் போலாவான்'' என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள். நபிகளாரின் இந்தப் பொன்மொழிகள் எல்லாம் மேடையில் கவர்ச்சியாக பேசுவதற்கும், சி.டி. போட்டு விற்பதற்கும் மட்டுமே என பீ.ஜே. நினைத்து விட்டார் போலும். அல்லாஹ்தான் அவரைக் காப்பாற்ற வேண்டும். இப்போது நமக்கு ஏற்பட்டுள்ள கவலை என்னவெனில், இல்லாத பிரச்சினைகளை இருப்பதுபோல் காட்டுவதில் வல்லவர் பீ.ஜே. அவர்கள். பாக்கரின் ஒய்.கே.மேன்சன் மேட்டரையும், சைபுல்லாவின் மதரஸா பையன்கள் மேட்டரையும், எம்.ஐ. சுலைமானின் காதல் மேட்டரையும் சும்மா விடுவாரா? என்பதுதான்.

செய்யது, தாம்பரம
***************************************************************************
மேலே கன்ட செய்தி மின்னஞ்சல் மூலம் அபாபிலிடமிருந்தும் இளையவனின் இனையத்திலிருந்தும் கிடைக்கபெற்றது
முகவைத்தமிழன்
***************************************************************************

ஜெயலலிதாவிற்கு பா.ம.க. ராமதாஸ் கேள்வி!

இஸ்லாமியருக்கு இட ஒதுக்கீடு – ஜெயலலிதாவிற்கு பா.ம.க. ராமதாஸ் கேள்வி

தமிழகத்தில் உள்ள சிறுபான்மை இன மக்களான இஸ்லாமிய சமுதாயத்திற்கு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும். இந்த கருத்தில் அவரின் (ஜெயலலிதாவின்) நிலைப்பாடு என்ன? இஸ்லாமிய சமுதாயத்திற்கு வழங்கினால் இதர சிறுபான்மை இனத்தவரும் இட ஒதுக்கீடு கேட்பார்கள். பிறகு இந்த நிலை எப்போதும் தொடரும் என முதல் அமைச்சர் கருத்து தெரிவித்தார். அந்த கருத்தில் இன்னும் உறுதியாக இருக்கிறாரா?

இது குறித்து அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் ஏதாவது கூறப்பட்டுள்ளதா? இல்லை பழைய நிலைமைதான் இன்றும் தொடர்கிறதா? என விளக்க வேண்டும்.

Sunday, April 23, 2006

முஸ்லிம்களுக்குள் இல்லாத பிரிவு!!

முஸ்லிம்களுக்குள் இல்லாத பிரிவை இருப்பதாக காட்டிய ஜெயலலிதா!!

தமிழகத்தில் தேர்தல் களம் மிகவும் சூடு பிடித்து சுட்டெரித்துக்கொண்டிருக்கிறது. இந்த தேர்தல் களத்தில் முஸ்லிம்கள் அதிகமாகவே அரசியல் கட்சிகளால் கவனிக்கப்படுகின்றனர். முஸ்லிம்களும் இரு பிரிவுகளாக ஒரு பிரிவு அ.தி.மு.க.வையும், மற்றொரு பிரிவு தி.மு.க.வையும் ஆதரித்து பிரச்சாரம் செய்து வருகிறார்கள். முஸ்லிம்கள் ஆதரிக்கும் இந்த இரு திராவிட கட்சிகளும் முஸ்லிம்களுடைய சமூக மேம்பாட்டில் உண்மையாகவே அக்கறை கொண்டவர்கள்தானா என்பதை கடந்த கால வரலாறுகளை அசை போட்டு முடிவு எடுக்க வேண்டும் என்ற நோக்கில் இதை பதிவு செய்கிறேன்.

ஜெயலலிதாவை பொருத்தவரை அவர் கடந்த காலங்களில் என்றுமே முஸ்லிம்களுடனான இணக்கத்தை விரும்பியது இல்லை. அவர் பாபர் மஸ்ஜித் இடிப்பிற்கு ஃ கரசேவைக்கு அயோத்திக்கு ஆள் அனுப்பியவர். பாபர் மஸ்ஜிதை இடித்த இடத்தில் ராமர் கோயில் கட்டுவதை ஆதரித்தவர். ராமருக்கு இந்தியாவில் கோவில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது என்று கேள்வியும் எழுப்பியவர். நான் ஒரு தவறு செய்து விட்டேன் இனி ஒரு போதும் அந்த தவறை செய்ய மாட்டேன் என்று பி.ஜே.பி.யுடனான கூட்டணி குறித்து முஸ்லிம்களின் மத்தியில் சொன்னவர். அதே பி.ஜே.பி.யோடு அரசியல் ஆதாயங்களுக்காக மீண்டும் கூட்டணி அமைத்தவர். குஜராத்தில் முஸ்லிம்களின் ரத்தத்தை குடித்த நரேந்திர மோடியின் பதவி ஏற்பு விழாவிற்கு சென்று மலர் கொத்து கொடுத்தவர். அதன் மூலம் முஸ்லிம்களின் மனதில் வெளிப்படையாகவே குத்தியவர். கடந்த சட்ட மன்ற தேர்தலில் தலித் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்படும் என்று முஸ்லிம்களுக்குள் இல்லாத பிரிவை இருப்பதாக காட்டியவர். பிறகு அதை எழுத்துப் பிழை என்று கூறி சமாளித்தவர். ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கப்பட்டதை விமர்சித்தவர். பெண்களுக்கே உரித்தான அச்ச உணர்வை கலைந்து தாம் நினைப்பது, தாம் சொல்வதுதான் சரி என்று வெளிப்படையாக சொல்லக்கூடியவர்.

இப்படி வெளிப்படையாகவே முஸ்லிம்களுடைய மனதில் ரணங்களை ஏற்படுத்திய ஜெயலலிதாவின் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியை அதற்கு முந்திய கருணாநிதியின் ஐந்து ஆண்டு கால ஆட்சியோடு ஒப்பிட்டு பார்த்தால் நிச்சயமாக அது சிறப்பான ஆட்சியாகவே கருத முடிகிறது. கருணாநிதி ஆட்சியில் ஏவப்பட்ட அடக்குமுறைகள் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் இல்லாமல் போனதும் உண்மையே. பாபர் மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6ல் முஸ்லிம்கள் தங்களுடைய எதிர்ப்பை ஜனநாயக முறையில் காட்டிடக் கூட முடியாமல் முன்னெச்சரிக்கை கைது என்ற பெயரில் மாதக்கணக்கில் சிறையில் அடைக்கும் கொடுமை ஜெயலலிதாவின் ஐந்து ஆண்டு கால ஆட்சியில் நடைபெறவில்லை. எதிரணியில் இருந்தாலும் சங்க்பரிவார கூட்டத்தினருடன் அன்பு பாராட்டும் ஜெயலலிதா அப்பேர்பட்ட சங்க்பரிவார தலைவர்கள் தமிழகத்திற்கு வரும் போது முன்னெச்சரிக்கை கைது என்று சொல்லி முஸ்லிம்களை சிறை பிடிக்கவில்லை. கருணாநிதி ஆட்சியோடு ஜெயலலிதாவின் ஆட்சியை ஒப்பிட்டுப் பார்த்தால் கடந்த ஐந்து ஆண்டுகளில் மதங்கலவரங்கள், ஜாதிக்கலவரங்கள் தாரளமாகவே ஒடுக்கப்பட்டுள்ளது. ஜாதி இல்லை, மதம் இல்லை, கடவுளும் இல்லை என்று சொல்லும் கருணாநிதி ஜாதி சார்பு அரசியலை தனது குடும்ப நலனுக்காக தன்னையும் அறியாமல் தண்ணீர் ஊற்றி வளர்த்தார். அதுபோன்ற ஒரு செயலை ஜெயலலிதா செய்ய வில்லை. ஜெயலலிதாவின் இதற்கு முந்திய ஐந்து ஆண்டு கால ஆட்சி போல் கடந்த ஐந்து ஆண்டு கால ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டுக்களும் அதிகமாக இல்லை. கருணாநிதி கூட செய்யத் துணியாத செயலான காஞ்சி சங்கராச்சாரியார் கைது என்பது ஜெயலலிதா மீதான சிறுபான்மை இன மக்களின் நம்பிக்கையை துளிரச் செய்தது.

இதற்கெல்லாம் மேலாக முஸ்லிம்களின் கல்வி, வேலை வாய்ப்புக்களின் மேம்பாட்டிற்காக ஆணையம் அமைத்திருக்கிறார் என்பது முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தியாகத்தான் கருத முடிகிறது. ஆனால் அதை முழுமையாக முஸ்லிம்கள் நம்பாமல் இருப்பதுதான் சிறந்தது. ஏனெனில் ஒரு காலத்திலும் பி.ஜே.பி.யோடு கூட்டணி வைக்க மாட்டேன் என்று சொல்லிவிட்டு பிறகு பி.ஜே.பி.யோடு கூட்டணி வைத்ததை நாம் மறந்து விட முடியாது.

யார் ஆட்சிக்கு வந்தாலும் முஸ்லிம்களுக்கு நன்மை செய்யப்போவதில்லை. அரசியல் அரங்கில் நிகழும் சதிராட்டங்களால் அவ்வப்போது சில நன்மைகள் ஆட்சியாளர்கள் விரும்பியோ, விரும்பாமலோ தானாகவே நிகழ்ந்து விடுகிறது. அதில் ஜெயலலிதாவும், கருணாநிதியும் ஒரு குட்டையில் ஊறிய மட்டைகளாகத்தான் காட்சி தருகிறார்கள். ஒரு காலம் வரும் போது ஜெயலலிதாவின் அ.தி.மு.க.வும், கருணாநிதியின் தி.மு.கவும் கூட கூட்டணி அமைத்து முஸ்லிம்களுக்கு துரோகம் செய்தாலும் அதில் முஸ்லிம்கள் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஆனால் முஸ்லிம்கள் பா.ம.க. ராமதாஸிடமும், ம.தி.மு.க வை.கோபால்சாமியிடமும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது சாளச் சிறந்தது. ஏனெனில், முஸ்லிம்கள் இன்னும் ஓட்டு வங்கியாகவே அவர்களுடைய பார்வையில் காட்சி தருகிறார்கள் என்பதை அவர்களுடைய அரசியல் அசைவுகள் உணர்த்துகிறது.

தற்போதைய சூழ்நிலையில் ஜெயலலிதாவின் ஆட்சி தேவையா? அல்லது கருணாநிதியின் ஆட்சி தேவையா என்ற ஒரு கேள்வி எழுந்திருப்பதால் ஜெயலலிதாவிற்கே மறுபடியும் வாய்ப்பளித்து அவர் வாக்குறுதி அளித்தபடி முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்க முஸ்லிம்கள் அனைவரும் நிர்பந்திக்க வேண்டும். கருணாநிதியை மீண்டும் ஆட்சியில் அமர்த்தாதிருப்பதன் மூலம் குறைந்த பட்சம் இன்னுமொரு 19 முஸ்லிம்களின் உயிர் பலியையும், நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களின் பல ஆண்டு கால சிறை வாழ்க்கையையும் தடுத்திட முடியும்.

முஸ்லிம்களுக்காக தி.மு.க. தனது ஆட்சியில் செய்த சேவைகளை அறிந்தவர்கள் அதை இங்கு பட்டியலிடவும். மறக்காமல் அது செய்த அநீதிகளையும் பட்டியலிடவும். "கருணாநிதி ஒரு தலைசிறந்த அரசியல் ராஜதந்திரி" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை இன்சா அல்லாஹ் நேரம் கிடைக்கும் போது இங்கு நான் பதிவு செய்கிறேன்.

இது தொடர்பான ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை வரவேற்கிறேன்.

நன்றியுடன்
அறிவழகன்

Thursday, April 20, 2006

தரங்கெட்ட பிரச்சாரங்கள் - ஷிஹாபுதீன்

பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம்.
தரங்கெட்ட பிரச்சாரங்கள் - ஷிஹாபுதீன்
******************************************
எனக்கு மின்னஞ்சல் மூலம் கிடைக்கபெற்ற இதை இங்கு மக்களின் கருத்துக்காக பதிவு செய்கின்றேன். கோயா ஷிஹாப் என்பவரிம் இருந்து shihabi50@yahoo.co.in என்ற முகவறி மூலம் கிடைக்கபெற்றது .- MUGAVAITHAMIZHAN
**********************************************

எல்லாம் வல்ல அல்லாஹ்வின் சாந்தியும் சமாதானமும் நம் மீது என்றென்றும் நிலவட்டுமாக.அன்புள்ளமும் நடுநிலைச் சிந்தனையும் கொண்ட எனதருமை இஸ்லாமிய சகோதரர்களே,
இலக்கணப் பிழைகள் ஏராளம் இருக்கலாம்.
(இதை எழுதி முடித்த பின்னர்தான் இந்த கேள்வி பதில் -இதுதான் இஸ்லாம்- வெப் சைட்டில் வந்தது என அறிந்தேன். அத்துடன் “EXCELLENT ARTICLE:” என்று குவைத்திலிருந்து SHAHUL HAMEED என்ற எஞ்சினியரும், இது நடுநிலையாளரின் பதில் அல்ல என்று சகோதரர் முகவை தமிழன் என்ற ரயீஸுதீனும் தனது கருத்தை பதிவு செய்திருந்ததை (Ervaadi Yahoo Groops மூலமாக) அறிந்து கொண்டேன்.)

(எஞ்சினியர் ஷhஹுல் ஹமீத் அவர்களே, இது கட்டுரை அல்ல, இதை பழி அல்லது இட்டுக் கட்டுரை எனலாம்)

கடந்த இருபதாண்டு காலமாக தமிழகத்தில் இஸ்லாம் அதன் தூய வடிவில் மக்களை சென்றடைந்து கொண்டிருக்கின்றது. இதனை புரிந்து கொண்ட எம் சகோதரர்கள் இறைவனுக்கு நன்றி சொல்லி அவனை மட்டுமே வணங்கி வழிபடுவதை விட்டும்ஷைத்தானின் அடிச்சுவட்டை பின்பற்றும் போக்கில் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு பிறர் மீது (குறிப்பாக பி.ஜெய்னுல் ஆபிதீன் மீது) குற்றச்சாட்டுகளுடன், திரும்பிப் பார்க்கும் இடமெல்லாம் திரிந்து கொண்டிருக்கின்றனர்.

இதன் தெடர்ச்சியாக சமீபத்தில் உலா வந்து கொண்டிருக்கும் -பி.ஜெ. வை பற்றி- என்ற ஒரு குப்பை கேள்விக்கு, ஒருவர் சில பக்கங்களில் தனது அறிவை அள்ளி அள்ளி வீசியிருக்கின்றhர்.

(இவர் கூறுவது அனைத்தும் உண்மையாயின் அதன் விளைவை பி. ஜெய்னுல் ஆபிதீன் அனுபவித்தே ஆகவேண்டும் என்பது முதன் முதலாக நாம் பி. ஜெய்னுல் ஆபிதீன் அவர்களுக்குத் தரும் எச்சரிக்கை.)

வஞ்சபுகழ்ச்சி என்ற வார்த்தையை ஏட்டில் மட்டுமே நாம் படித்திருந்தோம்.
இவரோ ஒருபடி மேலே சென்று தனது பதில் மூலம் வஞ்சபுகழ்ச்சி அணிக்கு தலைவராகலாம் என்று தப்பு கணக்கு போட்டுவிட்டார்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டதை போன்று வஞ்சபுகழ்ச்சி அணிக்கு தலைவராவதில் பலரும் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு செயல்படுகிhர்கள்.

அறிவு பூர்வமான கேள்விக்கு அருமையான பதிலை தந்துவிட்டோம் என்ற மிதப்பில்இருந்தாலும் அவரது கவனத்திர்காக சிலவற்றை இங்கே தருகின்றேhம்.

கேள்விக்கான பதிலை ஆம் என்ற ஒரேயடியாக சொல்லிவிட முடியாதாம்.
ஆனால் ஆம் ஆம் ஆம் ஆம் ஆம் என்று பல(த்த) அடியாக அவர் சொல்லும் விதம் பழ்லுல் இலாஹியையே பின்னுக்கு தள்ளிவிட்டது.

பிறை பார்த்தல் ஜகாத் மற்றும் முதஷhபிஹhத் என்று பட்டியலிடும் சகோதரருக்கு இன்னமும் எதுவெல்லாமோ சொல்லவேண்டும் போலிருக்கின்றது.

எதையுமே தனது சட்டமாக பி.ஜெ. சொல்வதில்லை என்பது இவருக்கு மிக நன்றhகத் தெரியும். ஆனால் இவர்களாக திரித்து வளைத்து ஒடித்து அவர் மீது பழிபோடும் திட்டத்தை சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களிடமிருந்து குத்தகைக்கு எடுத்திருப்பது, சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக்கொண்டிருப்பவர்களின் பாவச்சுமையை சற்று தளர்த்துமே தவிர வேறு ஒன்றும் சாதிப்பதர்காக அல்ல.

ஆரம்ப காலத்திலிருந்து பி.ஜெ. எதை ஒப்புக்கொள்ளாமல் முரண்டு பிடிக்கின்றhரோ அதை அவருக்கும்-மக்களுக்கும் குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் சொல்லத் துணியாதவா,; நேரடியாக இயக்கவியலில் தான் பெற்ற ஞானத்தை எடுத்தியம்ப முற்பட்டு சிலரை பட்டியலிடுகிறhர்.

அபூ அப்தில்லாஹ்-ஜhக் நிர்வாகம் மற்றும் நிர்வாகிகள்-ஹhமித் பக்ரி;-பழ்லுல் இலாஹி;-மொய்தீன் மற்றும் ஜக்கரியா உட்பட பலர் என்கிறhர்.
வக்காலத்து என்றhல் இதுதான்.
நமக்குத் தெரிந்தவரை பி.ஜெ. எதை ஒப்புக்கொள்ளாமல் முரண்டு பிடிக்கின்றhர் என்றhல் அவரது பெயரை பி. இஸட். என்பதை பி.ஜெ. என்று (அன்று அறியாமல் எழுதிவிட்டதை) மாற்ற முற்படவில்லை என்பது தான் (இது உலக விசையம்)அதே சமயம் பிறை-ஜகாத் போன்றவற்றில் முரண்டு பிடிக்கின்றhர் என்றhல் அவற்றை குர்ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரத்தோடு நிரூபிக்க முன்வாருங்கள.; அதை விடுத்து இயக்கமில்லா இயக்கத்தை இயக்கிக் கொண்டிருக்கும் அபூ அப்தில்லாஹ், இல்லாமல் போய் கொண்டிருக்கும் இயக்கங்களுக்காக இயங்கிக் கொண்டிருக்கும் பழ்லுல் இலாஹி போன்றவர்களுக்காக ஏன் வக்காலத்து வாங்குகிறhர்?

குர்ஆன் மற்றும் ஹதீஸை வைத்து பி.ஜெ. விடம் அழகிய முறையில் விவாதம் செய்ய சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களே முன்வந்த போது தவ்ஹீதை மந்திரமாகக் கொண்ட இவர்கள் முற்படாதது ஏன்? ஒரு வேளை இவர்களும் வாதத்திறமை என்று சொல்லி நழுவுகிறhர்களோ என்றுதான் எண்ண முடியும்.
இரண்டு விசையங்கள் தான் இதில் உண்மை எனலாம்.
ஒன்று - குர்ஆன் மற்றும் ஹதீஸ் எவரிடமும் தோற்று விடாது (குர்ஆன் - ஹதீஸுக்கு முன்னால் பி.ஜெ. ஒன்றுமேயில்லை).
இரண்டு - சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக் கொண்டிருந்தவர்களை விட இவர்கள்தான் தொடை நடுங்கிகள்.
பிறருடைய குறைகளை தருவித் துருவி ஆராயாதீர்கள் என்ற குர்ஆன் வசனம் இவருக்கு மட்டும் பொருந்தாது என்ற முறையிலல்லவா எழுதியுள்ளார்.
நஜhத் ஏட்டை அழிக்க முயற்சி............
ஜhக் இயக்கத்தை அழிக்க முயற்சி............
அரும்பாடு பட்டு தமுமுக வளர்ந்த பின்பு வெளியேறி அதை அழிக்க முயற்சி...... (வளர்த்த பின்பு என்றெழுதாமல் வளர்ந்த பின்பு என்று கவனமாக எழுதியுள்ளார்)என்றெல்லாம் தினமலர் பாணியில் தனது கடமைக்காக (அவரது அறிவு பூர்வமான கேள்விக்குஅவரே) பதில் தந்திருக்கிறhர்.
இவ்வாறெல்லாம் புழுதிகளை எழுதுவதர்காக பெட்டி வாங்கினார் என்று (இவரது சகாக்கள் சொல்வது போல) இவர் மீது நாம் பழி போட மாட்டோம். ஒரு வேளை பெட்டி வாங்கியிருந்தால் ஆங்காங்கே பி.ஜெ. வை (வஞ்சமாய்) புகழ்ந்ததர்காக பாதியை இவரது சகாக்கள் திரும்ப வாங்கிவிடுவார்கள்.
கடைசியாக இவரது -அகழ்வாராய்ச்சி-யின் முடிவை இவ்வாறு எழுதியுள்ளார்.. பி.ஜெ.யின் சமுதாயப் பார்வை மிக பலவீனமானது என்பதற்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒரு உதாரணம் என்று அபூ அப்துல்லாவுக்கு ஆள் சேர்க்க முயல்கிறhர்
பி.ஜெ. யின் அரசியல் பார்வை ஜPரோவாகிவிட்டது என்று சமீபத்தில் ஜெயலலிதாவை சந்தித்ததை மேற்கோள் காட்டி -பெயரா-சிரியருக்கு விசுவாசமாக இலக்கியம் படைத்துள்ளார்.
(பி.ஜெ. யின் முன்னாள் சகாக்கள் இப்போது ஷம்ஸுதீன் காஸிமியிடம் ஒப்பந்தம் செய்துவிட்டது தெரியாமல் இருக்காது)வாடகைக்காக குற்றஞ்சாட்டும் பேர்வழிகள் பி.ஜெ. தூங்கியெழும் முன் அவர் கண்ட கனவை இ-மெயில் மூலம் இந்தியாவில் இருக்கும் தனது புதிய சகாக்களுக்கு அனுப்பிவிடுவார்.
தகுதியிருந்தும் தங்களது தரங்கெட்ட பிரச்சாரங்கள் மூலமாக மக்களிடமிருந்து தனியாகிவிட்ட இந்த இந்த இ-மெயில் பேர் வழிகள் தாங்கள் படைப்பதெல்லாம் இலக்கியங்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றhர்கள். தனது ஊர் பெயர் எதுவும் குறிப்பிடாமல் கள்ள வெப் சைட் மூலமாகவும் கருப்பு வெள்ளை பிரதிகள் மூலமாகவும் மக்கள் சேவை செய்து கொண்டிருக்கின்றhர்கள்.
இவர்கள் ஒருவேளை தங்களது இயர் பெயரையே மறந்தாலும் ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை.பி.ஜெ. போகிற போக்கில ஒன்றுமே புரியவில்லை முடித்திருக்கிறhர். இதே மனோபாவத்துடன் இருப்பதாயின் ஒருக்காலும் புரியப்போவதில்லை.இறுதியாக..... இலக்கணமும்-இலக்கியமும்-நாட்டு நடப்பும்-நன்மையும்-தீமையும் நன்றhகத் தெரிந்த ஒருவர்தான் இதை எழுதியிருக்க வேண்டும்.
நல்லெண்ணத்துடன் எழுதுங்கள். நஜhத்-ஜhக்-தமுமுக-பழ்லுல் இலாஹி என்று பட்டியலிட்டிருப்பது உங்களது வஞ்சனையை வெளிப்படுத்துகிறது.
உங்களுக்காக பிரார்தனை செய்யும் போது பிறருக்காகவும் குறிப்பாக பி.ஜெ. வுக்காகவும் பிரார்தனை செய்யுங்கள்.
வல்ல அல்லாஹ் இம்மையிலும் மறுமையிலும் உங்களுக்கும் எனக்கும் நம் அனைவருக்கும் ஈடேற்றத்தை வழங்கிடுவானாக.
ஷிஹhபுத்தீன்.

பாபர் மசூதி இடிப்பு: பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் கூட்டு சதி

பாபர் மசூதி இடிப்பு: பா.ஜ.க - ஆர்.எஸ்.எஸ் கூட்டு சதி - லிபரான் கமிஷனில் மத்திய அரசு குற்றச்சாட்டு

பாபர் மசூதி இடிப்பு சம்பவம் குறித்து லிபரான் கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. அதன் முன்பு மத்திய அரசு தனது இறுதி வாக்கு மூலத்தை எழுத்துப்பூர்வமாக நேற்று சமர்பித்தது. 246 பக்கங்களும், 149 பக்க இணைப்பும் கொண்டதாக வாக்குமூலம் இருந்தது.

அதில் உத்தரபிரதேசத்தில் 1992-ம் ஆண்டு முதல் மந்திரியாக இருந்த கல்யாண்சிங், அவரது மந்திரிகள், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், பஜ்ரங்தள், விசுவ இந்து பரிஷத், சிவசேனா ஆகியவற்றின் தலைவர்கள் ஆகியோர் முன்கூட்டியே திட்டமிட்டு தீட்டிய கூட்டுச்சதியின் விளைவாகவே பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்று கூறப்பட்டுள்ளது.
http://www.dailythanthi.com/article.asp?NewsID=253092&disdate=4/20/2006

Tuesday, April 18, 2006

த.மு.மு.க வும் அதன் நேர்மையும்?

பிஸ்மில்லாஹ் . . .

த.மு.மு.க வும் அதன் நேர்மையும்?

த.மு.மு.க ஃபித்ரா மற்றும் சுனாமி நிதிகள் சரியான முறையில் விநியோகம் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு சுமத்தி அது சமந்தமாக கணக்குகளை பொது விசாரனைக் குழு அமைத்து அவர்களிடம் சமர்பிக்க வேண்டும் என்று தமிழ் நாடு தவ்ஹ“த் ஜமாத் கோரிக்கை வைத்தது. இந்த கேரிக்கையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த த.மு.மு.க பொது விசாரனைக் குழு அமைக்கும் பொறுப்பும் தமிழ் நாடு தவ்ஹ்ஹ“த் ஜமாத் மீது சுமத்தியது. ஏன் என்றால் அவர்கள் கண்ட கணவு தவ்ஹ“த் ஜமாத் அழைத்தால் சுன்னத் ஜமாத்தாற்கள் வரமாட்டார்கள் என்றும் பொது விசாரனைக் குழு அமைக்காத பட்சத்தில் அதை காரணம் காட்டி கணக்கு கான்பிப்பதை விட்டு தப்பி விடலாம் என்று தப்பு கணக்கு போட்டது. ஆனால் அல்லாஹ்வின் மிகப் பொரும் கிருபையால் தமிழ் நாடு தவ்ஹ“த் ஜமாத் அறிவித்தஎல்லா இயக்கங்களையும் சந்தித்து அவர்களின் சம்மதத்தை பெற்று நடுவர் விசாரனை குழுவை அமைத்தது.

நடுவர் விசாரனைக் குழுவை புறக்கனித்த த.மு.மு.க - கிழ்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்ககடமைப்பட்டுள்ளது!

:) நடுவர் விசாரனைக் குழுவிடம் கணக்குகள் ஒப்படைக்கப்படும் என்று ஒத்துக் கொண்ட த.மு.மு.க ஏண் நடுவர்குழுவிடம் ஒப்படைக்காமல் பொதுமக்கள் மத்தியில் சமர்பித்தது?
:) நடுவர் விசாரனைக் குழுவை ஏற்றுக் கெண்டதாக அறிவித்த த.மு.மு.க! ஏண் தன்னுடைய அதிகாரப்பூர்வமான இனையதளத்தில் தன்னுடைய அறிவிப்பை வெளியிடாமல் தன்னுடைய கள்ள வொப்சைட்டில் வெளியிட்டது? இப்படி இரட்டை வேடம் போட எடுத்த திட்டமா??
:) ஃபித்ரா புள்ளிவிவரங்களை வெளியிட்ட த.மு.மு.க விரிவான வரவு மற்றும் செலவு கணக்குகள்விபரத்தை வெளியிடவும்?
:) ஊர் வாரியான ஃபித்ரா வினியோக பட்டியல் 2004 & 2005 மற்றும் சூனாமி நிதி விநியோக பட்டியல் வெளியிடவும்?
ஒரு வருடம் கழித்தும் இன்னும் பாதிக்கும் மோல் பணம் வசூலித்த பணத்தை விநியோகிக்காமல் கொள்ளை அடித்த ஹைதர் & ஜவாஹ’ருல்லாஹ் கம்பனி, பாதிக்கப்பட்ட மக்களின் உடனடியான தோவைகள் இருந்தும் வருங்கால சூனாமி பாதுகாப்பு மையம் அமைக்க திட்டமிடும் இவர்கள் இப்போது நடு வீதியில் தங்களுடைய பொருட்களை பரிகொடுத்து நிற்கும் இந்த மக்களுக்கு நிவாரணம் இல்லையாம்!
சூனாமி எற்பட்டு ஒரு வருடத்திற்க்கு மோல் ஆகியும் ஹைதர் & ஜவாஹ’ருல்லாஹ் கம்பனி செல்லும் சூனாமி பாதுகாப்பு மையம் இன்னும் paper வடிவில் தான் உள்ளது! பொதுமக்கள் கோட்டுக் கொள்கிறார்கள், சூனாமி பாதுகாப்பு மையம் கட்டுவோம் என்று அறிவிக்க இவர்கள் எடுத்துக் கொண்டது ஒரு வருடம்! அந்த பாதுகாப்பு மையம் அமைக்க குறைந்தது 25 வருடம் ஆனாலும் அதற்க்கு ஆச்சரியப்படுவதிற்கில்லை! பொதுமக்களின் பணத்தை சூறையாடும் இந்த கொள்ளை கும்பலை மக்கள் சும்ம விட மாட்டார்கள்!
சூனாமி நிதியை த.மு.மு.க நிர்வாகிகள் தன்னுடைய அல்லது அவர்களுடைய நன்பர்களின் வணிகத்தில்பூழக்கத்தில் போட்டுள்ளார்களா?அப்படி போட்டு இருந்தால் இதுவரை அந்த நிதிக்கு வந்த வருமானம் என்னா?
சூனாமி நிதி இதுவரை எந்த நிறுவனத்திலும் பூழக்கத்தில் போடவில்லை என்றால், எல்லா வங்கி கணக்குகளின் மாத கடைசி கையிருப்பை காட்டுவார்களா? இந்த வங்கி கணக்குகளின் விவரங்களை தனிக்கை செய்து பொதுமக்களிடம் வழங்க தயாரா?
கோயம்பத்துர் கலவரத்திற்க்கு வசூலித்த நிதியை உடனுக்குடன் வழங்கிய த.மு.மு.க! சூனாமி நிதி ஏண் ஒரு வருடம் பூர்த்தி அடைந்த போதும் வழங்கவில்லை? அப்போது தவ்ஹ“த்வாதிகள் உடன் இருந்தார்கள். இந்த மாதிரியான தவறுகளை செய்ய விடவில்லையா?
இந்த கேள்விகளுக்கு த.மு.மு.க பதில்லளிக்க கடமை பட்டுள்ளது! பொருத்திருந்து பார்ப்போம் பதிலை(நேர்மையை)!!
இப்படிக்கு
தவ்பீக். அஹ்மத் - தம்மாம்

தோல் உறிந்த விஷப் பாம்புகள்

******************************************************
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரர்களே, கீழ்க்கானும் இந்த மடல்களை மின்னஞ்சல் மூலமாக கிடைக்கபெற்றேன் அவற்றிற்கு சகோ. அப்துல் ரவூஃப் அளித்த பதிலையும் எனக்கு அனுப்பியிருந்தார் அவரின் வேன்டுகோளுக்கினங்க அதை இங்கு பிரசுரிக்கின்றேன்.
என்றும் உங்கள்
முகவைத்தமிழன்
****************************************************************
தோல் உறிந்த விஷப் பாம்புகள்
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்புள்ள சகோதரர் அப்துல்லாஹ் அவர்களுக்கு, தமுமுக சகோதரர்களை தாங்களும், ததஜ சகோதரர்களை தமுமுகவும் மாறி மாறி தோல் உரித்துக்கொண்டிருக்கும் பாங்கு மிகவும் சிறப்பானது. நீங்கள் இரு சாரரும் தோல் உறிந்த விஷப் பாம்புகள் என்பதை தற்போது பொதுமக்கள் புரிந்து கொண்டார்கள். உங்கள் பணிகள் இன்று போல் என்றும் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.
வஸ்ஸலாம்.
A.S. Abdul Rauf
OA-I,Gas & Sulphur Division
Marketing & Refining Directorate
P.O. Box 898, Abu Dhabi National Oil Company (ADNOC), Abu Dhabi - United Arab Emirates
Tel: (+971-2-) 6023983 (Dir.)
Mob: (+971-50) 5310726

****************************************************************************************
ஏக இறைவனின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்புள்ள சகோதரர்களே,

தமுமுக சகோதரர்கள் தங்கள் பத்திரிக்கையில் இப்னு ஹசன் என்ற காயல்பட்டினத்தை சேர்ந்தவர் எழுதியது போல ஒரு அவதூறு செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். சகோ.பிஜெவினால் ஆரம்பிக்கப்பட்ட தமுமுகவை விட்டு அவரையும் பல்லாயிரக்கணக்கான சகோதரர்களையும் தனது பதவி மோகத்தால் சகோ.ஜவாஹிருல்லா அவர்கள் வெளியேற்றியது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் இவர்கள் சகோ.பிஜெவும் மற்றவர்களும் தானாக வெளியேறியது போல சொல்வது வேடிக்கையானது.

இடஒதுக்கீடு கேட்டு தனக்கு தானே கடிதம் எழுதி நம்மை ஏமாற்றியும் , முஸ்லிம் லீக்கிற்க்;கு கொடுத்த தொகுதியை பரித்தும் நமக்கு துரோகம் மட்டுமே தற்போது செய்து மற்றபடி நன்மை என்று ஒன்றுமே செய்யாத திமுகவை ஆதரிக்கும் நம் சகோதர கழகத்தினர் இடஒதுக்கீடு ஆணையம் அமைத்து அதில் முஸ்லிம் என்ற பெயர் பதத்தை முதன் முறையாக இடம் பெற செய்து இடஒதுக்கீட்டின் முதல் கட்டத்தை முடித்ததற்காக அதிமுகவை ஆதரிக்கும் ததஜவை சொந்த நலன் காரணமாக ஆதரிக்கிறார்கள் என்று சொல்வது நகைச்சுவையானது.

விண் டிவி சகோ.பாக்கரின் சொந்த முயற்சியில் நடத்தப்பட்ட தொலைக்காட்சியாகும். அந்த டிவியை வாங்க முறையான ஒப்பந்தம் செய்யப்பட்டதும் அந்த ஒப்பந்த காலத்திற்க்குள் முழு பணமும் கொடுக்க முடியாததால் அதை அதன் உரிமையாளர் தேவநாதன் விற்கும் சூழ்நிலை ஏற்பட்டதும் அதை ஒரு தணியார் நிறுவனம் வாங்கியதும் பொதுவாக அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஒப்பந்தப்படி விண் டிவியில் பங்குகளை வாங்கிய சகோதரர்களுக்கு அதை இரண்டு மடங்காக சகோ.பாக்கர் திருப்பி கொடுத்துள்ளார். விண் டிவி பங்குகளை வாங்கிய வளைகுடா சகோதரர்களிடம் தொடர்பு கொண்டால் உண்மை நிலையை அறியலாம்.

தமிழகத்தில் ராஜ் டிவி, விஜய் டிவி, தமிழன் டிவி போன்ற பல சேனல்கள் இருப்பதும், அதில் யார் பணம் கொடுத்தாலும் எந்த நிகழ்சியையும் நடத்தலாம் என்பது அனைவரும் அறிந்த தகவல். ஆனால் தமிழகத்திலேயே விண் டிவி மட்டுமே இருப்பது போலவும் இதை விட்டால் ததஜவின் நிகழ்சியை வேறு எந்த வழிகளிலும் நடத்த முடியாதது போலவும் அதனால்தான் அதிமுகவை ததஜ ஆதரிப்பது போலவும் தமுமுகவினர் செய்தி வெளியிடுவது தார்பாயில் வடிகட்டிய பொய்யாகும்.

இதுவரை தங்கள் கள்ள வெப்சைட்டில் வெளியிட்டு வந்த செய்திகளை தற்போது தங்கள் பத்திரிக்கையிலும், அதிகாரபூர்வ வெளியிட்டு இருப்பதை பார்க்கும் பொழுது ததஜவின் மக்கள் செல்வாக்கை எப்படியாவது குறைக்கு வேண்டுமென்ற நமது சகோதரர்களின் எண்ணம் தெளிவாக தெரிகிறது.

கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் நமக்கு இடஒதுக்கிடு கெடுப்பார் என்பதற்காகவோ, அவர் முஸ்லிம்களுக்கு நன்மை செய்வார் என்பதற்காகவோ திமுகவை ஆதரிக்காமல் பொதுவான அடிப்படையில்தான் திமுகவை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று தங்கள் பத்திரிக்கையில் தெளிவாக அறிக்கைவிட்டுள்ளனர்;. பொதுவானது என்றால் வக்பு வாரியம், குடிநீர் வாரியம், மின்சார வாரியம் போன்ற பதவிகள்தான் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை. தங்கள் வருங்கால வாரிய பதவிக்காக சமுதாயத்தை அடகு வைத்த இவர்கள். இடஒமுக்கீடு ஆணையம் என்ற ஒரே அளவுகோலுக்காக அதிமுகவை ஆதரிக்கும் ததஜ ஆதரவை போய் சுயநலன் முடிவு என்று கூறுவது மிகப்பெரிய ஏமாற்றுவேளையாகும். இவர்கள் இது போன்ற தரம்தாழ்ந்த செயல்களை நிறுத்தும்வரை இவர்களை தோலுரிக்கும் நமது பணியும் நிற்காது.

வுஸ்ஸலாம்,
அப்துல்லா.
****************************************************************************************
ஏக இறைவனின் திருப்பெயரால்..


பொய்களை பரப்பும் தமுமுக தலைவர்களை அதன் தொண்டர்கள் கண்டிக்க மாட்டார்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமுமுக அடிவருடி மன்றத்தினருக்கு,

ததஜ என்ற மக்கள் அமைப்பின் பொது செயலாளர் சவுதி வருகையில் ஜித்தாவில் நடந்த நிகழ்சியை சகோ.தீன் முகமது தனிப்பட்ட ஆர்வத்தில் மெயிலாக அனுப்பி இருந்தார். அதில் தரையில் இருந்த முஜிபுர்ரஹ்மான் உமரியை மேடையேற்றி விட்டார். அது தவறுதான் என்பதை ஒத்து கொண்டு அவர் சில விளக்கங்கள் கொடுத்து இருந்தார். அதை ஏற்று கொள்பவர்கள் ஏற்று கொள்ளட்டும், மறுப்பவர்கள் மறுக்கட்டும். தீன் முகமது கொடுத்தது தவறான தகவல்தான், அதை உங்கள் சுயநலனுக்காக இனையத்தில் வெளியிட்டு வெட்ட வெளிச்சமாக்கிய நீங்கள் பல பொய்களையும், அவதூறுகளையும் அதே நிகழ்சியை கொச்சையாக விமர்சித்து பொய்களை பரப்பும் தமுமுகவினரை விமர்சித்து கட்டுரை வெளியிடாதது ஏனோ?

1) சகோ.தீன் முகமது குறிப்பிட்டது தவறு என்றால் அதை அவருக்குதான் தெரிவிக்க வேண்டுமே தவிற அதை இனையத்தில் வெளியிட்டு ஏதோ ததஜ தொண்டர் மிகப்பெரிய தவரை செய்து விட்டார் என்பது போல பித்னா செய்வது ஏன்?.
2) ததஜ என்ற அமைப்பு நடத்திய நிகழ்சியில் அதன் தொண்டர் வெளியிட்ட கட்டுரையை விமர்சித்த நீங்கள் ததஜவை அழிக்க துடிக்கும் அதற்க்கு சம்மந்தமில்லாத தமுமுகவினரின் கள்ள மெயிலை விமர்சிக்காதது ஏன்?
3) 1000க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டதை பொறாமையில் இளையவன் கும்பல்
400பேர் என்று குறிப்பிட்டதை ஏன் நீங்கள் தவறு என்று விமர்சிக்கவில்லை?
3) தமுமுகவில் உள்ளபோதே சகோ.பாக்கர் பல முறை பேசிய உரையை தற்போது ஜித்தாவில் பேசி இருக்கிறார், அதை வெறித்தனமாக விமர்சித்த தமுமுகவினரை கண்டித்து தாங்கள் கட்டுரை வெளியிடாதது ஏனோ?
4) ஜித்தாவில் உள்ள 30 பேரை தவிர மற்ற அனைவரும் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று பெயரையும், வருகின்ற பகுதியையும் குறித்து கொண்டு தாங்கள்தான் உள்ளே விட்டது போல பொய்யை வெளியிட்ட தமுமுகவினரை கண்டிக்காதது ஏனோ?
5) உம்ராவிற்க்கு சென்று மொட்டை போட்டு வந்த சகோ.பாக்கரின் பிடரி முடியை பார்த்து கூட்டத்தின் தலைவர் சிங்கம் என்று பேசியதாக பொய்யை வெளியிட்ட தமுமுகவை தாங்கள் கண்டிக்காதது ஏனோ?.
6) தனிப்பட்ட நபர்களை சைத்தான் என்று சொல்வது மார்க்க அடிப்படையில் கூடாது என்று ஒரு சகோதரர ஆதாரத்துடன் எடுத்து காட்டிய பின் பல மாதமாக யார் பெயரையும் குறிப்பிட்டு சைத்தான் என்று சொல்லாமல் இருக்கும் சகோ.பாக்கரின் அந்த பேச்சை திசைதிருப்பி பொய்யை கூறும் தமுமுகவினரை கண்டித்து மெயில் வெளியடாதது ஏனோ?
7) சகோ.பிஜெயை பற்றி அவதூறு நோட்டிஸிலும், மொட்டை மெயில்களிலும் மட்டுமே சவால் விடும்( நேரிடையான விவாதம் என்றால் பின்னங்கால் பிடரியில் அடிபடும் வரை ஓடுவார்கள்) நமது சகோதர கழகத்தினரின் பித்னா சவாலை கண்டித்து கட்டுரை வெளியிடாதது ஏனோ?.

மேற்கண்டவற்றிக்கு அடிவருடி மன்றம் பதில் சொல்லட்டும். இளையவன் கள்ள வெப்சைட்டை நடத்துவதே ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, கணி போன்ற தலைவர்கள்தான் என்பதால் அது எப்படி பொய்யை பரப்பும் தமுமுக தொண்டர்களை அதன் தலைமை கண்டிக்காதா என்று தலைப்பிட முடியும் என்று நினைத்தால் பொய்களை பரப்பும் தமுமுக தலைவர்களை அதன் தொண்டர்கள் கண்டிக்க மாட்டார்களா என்று தலைப்பிட்டு கொள்ளுங்கள். இது குறித்த மன்றத்தினரின் பதிலை எதிர்பார்கிறேன். பதில் தர தயங்கினால் இளையவன் வேறு பெயரில் களம் இறங்கி இருக்கிறான் என்று எடுத்து கொள்ள வேண்டியதுதான்.

வஸ்ஸலாம்,
அப்துல்லா.

Monday, April 17, 2006

ஒதுக்கீட்டிற்கு ஆணையம் வேண்டும்-தமுமுக

''இட ஒதுக்கீட்டிற்கு ஆணையம் தான் வேண்டும்!''
தமுமுக செயற்குழு தீர்மானம்
ஒரு மாநில அரசு ஒரு சமுதாயத்துக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டுமானால் நேரடியாக அவ்வாறு செய்ய முடியாது. அதை ஆய்வு செய்ய ஒரு ஆணையத்தை அமைத்து அந்த ஆணையம் தரும் பரிந்துரையின் அடிப்படையில் தான் இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதனடிப்படையில் தான் இட ஒதுக்கீடு அளிப்பதற்கு முன் ஆணையத்தை அமைக்குமாறு கடந்த பத்து ஆண்டுகளாக கோரி வருகிறோம். நம்முடைய முன்னாள் சகாக்களும் அப்படித்தான் கோரி வந்தனர்.
ஆனால் அவர்களே எதிர்பார்க்காத வகையில் ஜெயலலிதா அரசு ஆணையம் அமைத்து விட்டது. அதற்கு முன்பே கருணாநிதியிடம் பேரத்தைப் பேசி முடித்து விட்டார்கள் என்பதால் அந்தர் பல்டி அடித்து தங்கள் நிலையை மாற்றிக் கொண்டனர்.
அதாவது ''நேரடியாக இட ஒதுக்கீடு அளித்து ஆணைதான் பிறப்பிக்க வேண்டும். கமிஷன் அமைப்பது கண்துடைப்பு என்றும்இ நாங்கள் ஒருகாலத்திலும் கமிஷன் அமைக்கு மாறு கோரவே இல்லை என்றும் கூறி ஜெயலலிதாவை ஆதரிக்க முடியாது'' என்று மக்களிடம் கூற ஆரம்பித்தார்கள்.
இட ஒதுக்கீடு அளிக்க ஜெயலலிதா விரும்பினால் நேரடியாக சட்டம் இயற்றி இருக்க வேண்டும்! கமிஷன் அமைக்க வேண்டிய அவசியமே இல்லை என்று கண்மூடித்தனமாக கூப்பாடு போட்டு வருகிறார்கள்.
இட ஒதுக்கீட்டிற்கான கமிஷனைக் கண்டு அவர்கள் அரண்டுபோனதற்கு காரணம்இ அவர்கள் திமுகவின் சிறுபான்மைப் பிரிவாகவே மாறிவிட்டதால்இ எங்கே செஞ்சோற்றுக் கடன் தீர்க்க முடியாமல் போய் விடுமோ என்று அஞ்சினர். நம்மீது இவர்க ளுக்கு இருந்த ஆற்றாமை - இறைவன் உதவியால் நம்முடைய தீவிர முயற்சிக்குப் பின் கிடைத்த இந்த வெற்றி அவர்களுக்கு வேப்பிலையாக கசக்கச் செய்கிறது.
''இட ஒதுக்கீட்டிற்கு சட்டமியற்ற வேண்டும் என்று பிரதமருக்கு கடிதம் எழுதியதற்கே நம்முடைய தலைவரை(?) வானளாவப் புகழ்ந்துத் தள்ளினோம். ஆனால் இவர்கள் கமிஷன் அமைத்து அரசாணையையே வாங்கிக் கொண்டு வந்து சமுதாய மக்களிடம் நன்மதிப்பைப் பெற்று விட்டார்களே?'' இதற்கு எப்படி வழி பண்ணுவது என்று யோசித்த கோயபல்ஸின் குருநாதர்களின் திடீர் கண்டுபிடிப்புதான்'' கமிஷன் அமைப்பது கண்துடைப்பு; வேஸ்ட் பேப்பர்; நேரடி யாக இட ஒதுக்கீடு வழங்க முடியும்'' என்ற பொறாமைப் பிரச்சாரம்.
''கேடு வரும் பின்னே; மதி கெட்டு விடும் முன்னே'' என்ற பழமொழிக்கேற்ப அவர்கள் மதிகெட்டு விட்டார்கள்; மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டார்கள்; தங்களுக்குத் தாங்களே முரண்பட்டு கேவலங்களை தொடர்ந்து சந்தித்து வருகிறார்கள்.
''ஜெயலலிதாவை நம்பலமா?'' என்று தலைப்பிட்டுஇ அவர்களின் ஆதாரப்பூர்வ பத்திரிகையில் (மார்ச் 10-16இ 2006) ''தமுமுக என்றுமே ஆணையம் கோரியதில்லை!'' என்ற உள் தலைப்பில்இ ''2001ல் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றதும் தமுமுக தலைவரும்இ பொதுச் செயலாளரும்இ அவரை சந்தித்து முஸ்லிம்களின் கோரிக்கைகளை எடுத்துரைத்தார்கள்.

(மார்ச் 10- 16இ 2006) மக்கள் உரிமை - கட்டுரை

அப்போது பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் உள்ள முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிப்பது தொடர்பான குறிப்புகளைக் கொடுத்தார்கள். அப்போதும் கூட ஜெயலலிதாவிடம்இ ''புதிதாக ஆணையம் எதுவும் அமைக்கத் தேவையில்லை'' என்று தான் விவரித்தார்கள்.

இதில் வேடிக்கை என்னவெனில்இ இன்று ஒரு பேப்பரைக் காட்டி கூத்தாடும் ஜைனுல் ஆபிதீன்இ அன்று நம்மோடு இருந்தபோது முஸ்லிம்களுக்கு தேவை இட ஒதுக்கீடு தான். ஆணையம் எல்லாம் போட்டு ஏமாற்றக் கூடாது என்றே கூறிவந்தார். இன்று அவர்களுக்கு அதிமுகவில் நீடிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால் எதையாவது சொல்லி தொண்டர்களை தக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே ஏமாற்றி வருகிறார்கள்'' என்று எழுதி இருக்கிறார்கள்.
மேலே கடைசி பாராவில் ''எதையாவது சொல்லி தொண்டர்களை தக்க வைக்க வேண்டும் என்பதற்காகவே ஏமாற்றி வருகிறார்கள்'' என்று நம்மைப் பார்த்துச் சொல்கிறார்கள். இந்த வாசகம் யாருக்குப் பொருந்துகிறது என்பதற்கும்இ அவர்கள் எத்தகைய பொய்யர்கள்? எப்படிப்பட்ட புரட்டர்கள்? இவர்கள் எப்படி எல்லாம் சமுதாயத்தையும்இ தங்கள் தொண்டர்களையும் ஏமாற்றி வருகிறார்கள்? என்பதற்கு வெளியிலிருந்து நாம் ஆதாரம் தரவில்லை. அவர்களின் ஆதாரப்பூர்வ ஏட்டிலிருந்தே தருகிறோம். ஆம். அக்டோபர்-29 நவம்பர்-04இ 2004 மக்கள் உரிமையில் வெளியான அவர்களின் மாநில செயற்குழு தீர்மானத்திலிருந்தே தருகிறோம்.

2004 தமுமுக மாநில செயற்குழு தீர்மானம்
2004ம் ஆண்டு அக்டோபர் 23இ 24 ஆகிய இரு தினங்கள் நெல்லை மாவட்டம் களக்காடு அருகில் உள்ள மேலப்பத்தை கிராமத்தில் அவர்களின் ஞான சமுத்திரம்(?)இ சமுதாயத் தலைவர்(?)இ பேராசிரியர்(?) ஜவாஹிருல்லாஹ் சாஹிப் அவர்கள் தலைமையில் நடந்த மாநில செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் 5வது தீர்மானம்இ ''தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்'' என்ற தலைப்பில்இ ''ஆந்திர மாநிலத்தில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது தொடர்பாக ஆந்திர உயர்நீதி மன்றம் வழங்கிய தீர்ப்பில் முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது கூடாது என்று குறிப்பிடவில்லை. முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பது அவசியம் என்றும்இ ஆனால் அதற்கு முன்பு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அமைக் கப்பட்டு அதன் பரிந்துரையை பெற வேண்டுமெனவும் தான் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.
இந்த அடிப்படையில் தமிழக அரசு முஸ்லிம்களின் சமூகப் பொருளாதார நிலையைக் கண்டறிந்து இட ஒதுக்கீட்டை பரிந்துரை செய்ய உடனடியாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை நியமிக்க வேண்டும் என்று இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இந்த ஆணையம் குறுகிய காலத் திற்குள் தனது விசாரணைப் பணிகளை நிறைவு செய்து தனது பரிந்துரையை சமர்பிக்க ஆவண செய்ய வேண்டுமென தமிழக அரசை இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது. இந்த அடிப்படையில் தமிழக அரசு முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு அளிக்க உடனே ஆவண செய்ய வேண்டுமென இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது'' என்று சொல்கிறது.
2001ல் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றதும்இ அவரைச் சந்தித்த தமுமுக தலைவரும்இ பொதுச் செயலாளரும் ''புதிதாக ஆணையம் எதுவும் அமைக்கத் தேவையில்லை என்று தான் விவரித்தார்கள்'' என்று அண்டப்புளுகை 2006இ மார்ச் 10லி26 இதழில் எழுதுகிறார்கள். ஆனால் 2004 அக்டோபரில் நடந்த தங்களின் செயற்குழுவில் ''தமிழக அரசு முஸ்லிம்களின் சமூகப் பொருளாதார நிலையைக் கண்டறிந்து இட ஒதுக்கீட்டை பரிந்துரை செய்ய உடனடியாக பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை நியமிக்க வேண்டும்''என்று தீர்மானம் நிறைவேற்றுகிறார்கள் .
இதில் எது உண்மை?
2001-ல் ஆணையம் தேவையில்லையாம்!
2004-ல் ஆணையம் தேவையாம்!
யார் பொய்யர்கள்இ புரட்டர்கள்இ சந்தர்ப்பவாதிகள் என்பதற்கு இதை விட வேறு எதுவும் சான்று வேண்டுமா?
செயற்குழுவில் கலந்து கொண்ட தமுமுகவின் உறுப்பினர்களே! உங்கள் அனைவரையும் முட்டாள்களாக்கிஇ உங்களைப் பொய்யர்களாக்கி கருணாநிதி யிடம் வந்த விலைக்கு தள்ளிவிட்ட இவர்களை இனியும் நம்பப் போகிறீர்களா?
''இன்று ஒரு பேப்பரைக் காட்டி கூத்தாடும் ஜைனுல் ஆபிதீன் அன்று நம்மோடு இருந்தபோது முஸ்லிம்களுக்குத் தேவை இட ஒதுக்கீடுதான். ஆணையம் எல்லாம் போட்டு ஏமாற்றக் கூடாது என்றே கூறி வந்தார்'' என்று கொஞ்சங்கூட நா கூசாமல் பச்சைப் பொய்யை எழுதி இருக்கிறார்கள்.
''ஆணையம் தான் முதலில் அமைக்கப்பட வேண்டும்'' என்பது தான் அனைவரின் கருத்தாக இருந்தது என்பதற்கு அவர்களின் செயற்குழு தீர்மானமே ஆதாரம்.
திமுகவின் சிறுபான்மை பிரிவாக இவர்கள் மாறி விட்டார்கள். இவர்கள் திமுகவுக்கு விலை போய் விட்டார்கள் என்பதற்கு இதைவிட சான்று தேவையில்லை.
''சத்தியம் வந்தது; அசத்தியம் அழிந்தது; அசத்தியம் அழிந்தே போகும்!'' என்ற இறைவாக்கு பொய்யாகாது.