Wednesday, April 26, 2006

த.மு.மு.க வும் சுனாமி கொள்ளையும்!!

த.மு.மு.க-வும் மிலன் மண்டப கணக்குகளும்!! (பகுதி – 1)
த.மு.மு.க வும் சுனாமி கொள்ளையும்!!


அன்புள்ள சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).
இந்த கட்டுறையின் நோக்கம் மக்களிடம் இருந்து பாதிக்கபட்ட மக்களுக்கு உதவுவதற்காக என்று கூறி வசூலிக்கப்பட்ட பணத்தை சமுதாயத்தலைவர்கள் என்று கூறி உலா வரும் இந்த த.மு.மு.க வின் வேடாதாரிகள் எப்படியெல்லாம் கள்ள கணக்கு காட்டி கொள்ளையடித்துள்ளார்கள் என்பதை மக்களும் முக்கியமாக த.மு.மு.க வை கண்ணை மூடிகொன்டு பின்பற்றும் இளையவன் போன்ற தொன்டர்களும் உணர்ந்து திருந்தி நேர்வழி பெற வேன்டும் என்பதற்காகவே!! பிணத்தின் வாயிலிட்ட வாக்கியரிசியை நோன்டி எடுத்து தின்பது போல் இயற்கை சீற்றமாம் சுனாமியில் இறந்த மக்களின் பிணங்களை காட்டி கொள்ளையடித்த வசூல் ராஜாக்களை பற்றிய உண்மை தொடர் ஆவண சாட்சிகளுடன்.

கடந்த கட்டுரைகளில் த.மு.மு.க எப்படியல்லாம் சுனாமிகணக்கு மற்றும் ஃபித்ரா கணக்கு சம்மந்தமாக இரட்டை வேடம் போட்டது என்று பார்த்தோம்! இனி இந்த கட்டுரை மூலம் அவர்கள் மீலன் மண்டபத்தில் கண் இல்லாத கண்மணிகளிடம் என்ன சமர்பித்தார்கள் என்றும் அந்த கணக்குகளிலிருந்து பொதுமக்களும் அவர்கள் பறைசாற்றிக்கொள்ளும் நடுவர்களும் என்ன புரிந்திருப்பார்கள் என்று உங்களின் முடிவிற்க்கே விட்டுவிடுகிறேன்!

சமர்பிக்கப்பட்டுள்ள ஆவனங்கள்!

இந்த ஆவனங்கள் தலைப்பிற்க்கு போகும் முன், ஒரு விஷயத்தை உங்களின் கவனத்திற்க்கு கொண்டு வருகிறேன்! த.மு.மு.க வொளிநாடுகளிடமிருந்து எந்த விதமான பணத்தையும் நன்கொடையாகவோ அல்லது அன்பளிப்பாகவோ வாங்க இயலாது .அன்னிய செலாவனியாக "TMMK" என்ற பெயரில் எந்த வகையான வரவும் வைக்க முடியாது. மத்திய அரசாங்கத்தின் அன்னிய செலவானி குறித்த சட்டத்தில் பகுதி 10 (a) சட்டம் 1976ன் படி த.மு.மு.க-விற்க்கு அனைத்து வகையான வெளிநாட்டு பண வரவும் தடை செய்யப்பட்டுள்ளது(As per Section 10(a) of Foreign Exchange & Regulations Act of 1976> TMMK has been prohibited to receive foreign contribution. For your ready reference> I have attached a list of banned organization> refer Serial number # 22.) மத்திய அரசாங்கத்தால் அன்னிய நாட்டு வரவு தடை செயப்பட்ட இயக்கத்தில் வரிசை எண் 22-ல் த.மு.மு.க வின் பெயர் இடம் பொற்றுள்ளதை இத்துடன் இனைத்துள்ள மத்திய அரசாங்கம் தடை செய்யப்பட்டுள்ள இயக்கங்ளின் விபரத்தில் பார்த்துக்கொள்ளவும். (http://www.mha.nic.in/fcra/forn_div-Section10a.pdf )ஆக இவர்கள் எந்த வகையான அன்னிய நாட்டு வரவும் எந்த வகைக்காகவும் வாங்கினாலும்
வாங்குவதற்க்கு முன் இவர்கள் மத்திய அரசாங்கத்திடம் முன் அனுமதி பெறவேண்டும்! அந்த அனுமதி வின்னப்பத்தில் இவர்கள் எந்த விதமான அன்னிய சொலாவானி நிதி பெற இருக்கிறார்கள், யாரிடமிருந்து மற்றும் எந்த வகைக்கு இவர்கள் இந்த நிதி பொறுகிறார்கள் மற்றும் இந்த நிதி சம்மந்தமாக அந்த நிதிகள் பெற்ற பின் மத்திய அரசாங்திடம் அதற்குன்டான விவரங்களை Form FC-3 (FERA Act) என்ற படிவத்தில் சமர்ப்பிக்க வேண்டும்! படிவத்தை முழுமையாக http://www.mha.nic.in இனை தளத்தில் பார்வையிடவும்.

மக்கள் மன்றத்தில் சமர்பிக்கப்பட்டுள்ள சான்று ஆவனங்கள் என்று இவர்களாள் சமர்ப்பிக்கபட்ட ஆவனங்களின் விபரம் இதோ!

1) சுனாமிவங்கி கணக்கு தொடங்க மத்திய அரசாங்க அனுமதி
2) மத்திய உள்துறை அமைச்சகத்திற்க்கு சமர்பித்த Form FC-3 (FERA Act) அறிக்கை
3) வருமான வரி விளக்கு அளித்த 80G சலுகைக்கான அனுமதி
4) வருமான வரித்துறையில் தாக்கல் செய்த ஆவனம் (Form No- 3A)
5) Balance Sheet First Page - தனிக்கை செய்யப்பட்ட கணக்கின் முதல் பக்கம் மட்டும்
6) ஆந்திரா வங்கியின் கணக்கு 01 நவம்பர் 2005 முதல் 10 டிசம்பர் 2005 வரை

சான்று ஆவணங்கள் என்ற வகையில் சமர்பிக்கப்பட்டவை மேலே கூறபட்டவை தவிர இவர்களின் விளக்கமாக 2004 ரூ 2005 ஃபித்ரா விநியோகித்த பட்டியல் மற்றும் சுனாமிவரவு செலவு கணக்கு என்று இரண்டு இதழ்களையும் இனைத்துள்ளார்கள்!

முதலில் எந்த விதமான ஆவனங்கள் ஆனாலும் அதை முழுமையாக சமர்பித்தால் மட்டுமே படிப்பவர்கள் அதை படித்து புரிந்துக்கொள்ள முடியும்! உதாரணத்திற்க்கு இந்தியா டுடே இதழை படிக்க வோண்டும் எண்றால் அதை முழுமையாக படித்தால் மட்டுமே அந்த இதழின் செய்திகளை அறிந்துக்கொள்ள முடியும்! ஆனால் சகோ. ஜவாஹிருல்லா அன்ட் கம்பனியின் கூற்றுபடி படி அந்த இதழின் முகப்பு பக்கத்தை மட்டும் பார்த்தாலே போதும் உள்ளே இருக்கும் அத்தனை செய்தியும் அறிந்திட முடியுமாம்! எப்படி என்று கேட்கிறீர்களா! மேலே சொல்லப்பட்ட ஆவனங்களின் முதல் பக்கத்தை மட்டும் தான் இவர்கள் மிலன் மண்டபத்தில் அறிவு ஜீவிகளுக்கு மத்தியில் சமர்பித்துள்ளார்கள்! முன்னால் சொன்னது போல், ஆவனங்களின் முகப்பை மட்டும் படித்தால் எப்படி பொதுமக்களாகிய நாம் புரிந்துக் கொள்வது என்று விவரமரிந்த மக்கள் கோட்கிறார்கள்! அரசியல் வாதிகளையும் மிஞ்சி விட்டார்கள், எல்லோரையும் கண் இல்லாத மணிகள் என்று நினைத்து இப்படி வெளியிட்டார்களோ என்னவோ!

இனி ஆவனங்களை பற்றி விரிவாக பார்ப்போம்! மேலே கூறப்பட்டது போல், த.மு.மு.க அன்னிய செலவானி பொறமுடியாது என்ற காரணத்திற்க்காக, முதலில் அரசாங்கத்திடம் அனுமதி பெற்றார்கள்! அது சம்மந்தமாக அரசாங்கம் அனுமதித்த கடிதம் முதல் ஆவனமாக மாறியது!

அரசாங்க அனுமதி பெற்று வாங்கிய அன்னிய செலாவனி வரவு மற்றும் செலவு கண்க்குகளை மத்திய அரசாங்கத்திற்க்கு படிவம் FC3-ல் சமர்பிக்க வோண்டும்! இது தான் இவர்களின் இரண்டாவது ஆவணமாக மாறியது!

ஆனால் மிக தந்திரமாக இதை முழுமையாக வொளியிட்டால் தாங்கள் சுருட்டியவைகள் வொளியில் தெரிந்துவிடும் என்று என்னி படிவத்தின் முகப்பு பக்கத்தை மட்டும் வெளியிட்டுள்ளார்கள்!

இந்த படிவத்தில் மொத்தம் 6 பக்கங்களையும் அத்துடன் விரிவான வரவு மற்றும் விரிவான செலவு விபரமும் உள்ளது! உண்மையில் இவர்கள் முறையாக விநியோகித்து இருந்தால் உள்துறைக்கு சமர்பித்த இந்த படிவத்தின் முழு விபரத்தையும் வெளியிட தயாரா?

இந்த படிவம் 6 பக்கங்களைக் கொண்டு உள்ளதை ஏண் படிவத்தின் முகப்பு பக்கத்தை மட்டும் வெளியிட்டார்கள்! நடுநிலையாளர்களோ சிந்தியுங்கள்! இந்த ம(h)க்கள் கழகம் எப்படியல்லாம் பொது மக்களுக்கும் அவர்களின் மிலன் மண்டபத்தில் இருந்த விசாரனை குழுவினர்களுக்கும் எப்படியல்லாம் அல்வா கொடுத்துள்ளார்கள் என்று! இந்த கழகத்தினர் எல்லோரையும் கண் இல்லாத மணிகள் என்று என்னிவிட்டார்கள் போல்!

இந்த இரண்டு ஆவணங்களையும் கொஞ்சம் விரிவாக பார்ப்போம்! இவர்களின் முதல் ஆவனமாக மாறிய மத்திய அரசாங்கத்தின் அனுமதி கடிதம் இவர்களின் நேர்மைக்கு எந்த வித சான்றும் பகரவில்லை மாறாக இவர்கள் அக்கடிதம் இன்றி வசூலித்து இருந்தால் இவர்கள் அத்தனை போரும் கம்பி என்னியிருப்பார்கள்! ஆகவே அரசாங்கத்தின் நிற்பந்தத்தின் காரனமாக கம்பி என்னாமல் இருப்பதற்காக இவர்கள் அதை பெற்றார்களே தவிர தங்களை பரிசுத்தவாதிகள் என்பதை நிருபிக்க அல்ல!

இரண்டவதாக சமர்பித்த ஆவணங்களில் FC3 (FERA Act) முக்கியம் வய்ந்தது! ஆனால் அதை இவர்கள் முழுமையாக வெளியிட்டால் அதில் வெளிநாடுகளிள் இருந்து பெறப்பட்ட நிதி விபரம் நாடுகள் வாரியாகவும், இன்னும் நிதி அளித்தவர்களில் எத்தனை பேர் ஒரு லட்சம் மற்றும் அதற்க்கு அதிகமாக அளித்தார்கள் என்றும் ஒரு லட்சத்திற்க்குள் எந்தனை நபர்கள் அளித்தார்கள் மற்றுமு; அளித்த தொகையும் காண முடியும். இது தவிர இந்த நிதிகளை விநியோகித்த விபரமும் இதில் நிதி வாரியாக விரிவாக குறிப்பிடுகிறது. அதன் விபரங்களை இரண்டாவது குறிப்பில் உள்ள அட்டவனையில் 1 முதல் 56 வரை விரிவாக பிறித்து காண்பித்துள்ளது! இந்த முழு படிவத்தின் நகலை வெளியிட்டால் மட்டும் போதும், விநியோகித்த முழு விபரத்தையும் அறிந்திடலாம்.எத்தனை சகோதரர்கள் தங்கள் இரத்தத்தை பணமாக வெளிநாட்டில் இருந்து அனுப்பினார்கள் அதை எவ்வாறு இந்த கழகத்தினர் கண்மணிகளின் கண்னை கட்டி எப்படியெல்லாம் ஆட்டையை போட்டார்கள் என்று.

இவர்களின் கோள்வியும் அதற்க்கு நாம் அளிக்கும் பதிலும்!

இவர்கள் கோட்கலாம், மத்திய அரசாங்கத்திடம் சமர்பித்த FC3 படிவத்தின் நகலை எப்படி வெளியிட முடியும்? அது அரசாங்கத்திடம் சமர்பித்த ரகசிய (Confiendtial) ஆவனம் இல்லையா? ஏன்று, ஆம், ஆனால் அதில் உள்ளதை அப்படியோ மொத்தமாக வெளியிட்டுள்ளீர்களே அது மட்டும் ரகசியமில்லையா!(வசூலானது மற்றும் செலவளித்தது) தாங்கள் வசூலித்தது மற்றும் விநியோகித்தது என்று வெளியிட்டுள்ளீர்கள்! ஆனால் அதை தான் படிவம் FC3-ல் விரிவாக அரசிடம் சமர்பித்துள்ளீர்கள்!

மொத்தமாக வசூலான தொகையையும் செலவளித்த தொகையையும் வெளியிட்டால் ரகசியமில்லையன்றும் ஆனால் அதன் விரிவாக வெளியிட்டால் ரகசியம் என்றும் இவர்களுக்கு யார் வரைமுறை கொடுத்தார்கள்!

இன்ஷா அல்லாஹ் மற்றவை அடுத்து வரும் பாகங்களில் காண்போம்!

இப்படிக்கு
தவ்பீக்

7 comments:

வளைகுடா தமிழன் said...

கண்ணாடி வீட்டிலிருந்து கல்லெரியலாமா?
கண்ணாடி வீட்டிலிருந்து விளைவுகளைப் பற்றி கவலைக் கொள்ளாமல் கல்லெரியும் புத்தி உடையவர் பீ. ஜைனுல் ஆபிதீன். தமிழகத்தில் சுனாமி நிவாரண நிதி திரட்டிய பல்வேறு அமைப்புகள் அரசின் வழிமுறைகளைப் பின்பற்றி அதற்கென தனி வங்கிக் கணக்குகளை தொடங்கி நிதியை திரட்டி பயன்படுத்தினர். ஆனால் பீ. ஜைனுல் ஆபிதீன் ஏற்கனவே தான் தொடங்கிய தமிழ்நாடு ஜகாஅத் நிதிக்கே சுனாமி நிவாரண நிதியை அனுப்புமாறு தன் அமைப்பின் மூலம் கேட்டுக் கொண்டுள்ளார். சுனாமி நிதிக்கென தனி வங்கிக் கணக்கும் இல்லாமல் வெளிநாட்டு நன்கொடைகளைப் பெறுவதற்கு உரிய அனுமதியும் பெறாமல் அவர் நிதியை திரட்டியுள்ளார். ஏழைகளுக்கு கட்டாயமாக கொடுக்க வேண்டிய ஜகாஅத் நிதியுடன் சுனாமி நிதியையும் கலப்படம் செய்துள்ளார்.

Anonymous said...

Assalamun Alaikum (Varah),

Thanks for bringing such an informative article. Continue your Journey towards making awarness among the people about the evil acts of such an Organisation.

What TMMK and MHJ are thinking that, we are stupid? we don't know any thing? I would like to remind TMMK and Jawahirullah Company that, we have Thousands of Brothers like Thaufeeque who are bringing out your Corruption and Double Games! You cann't hide truth for a long? at the same time, you cann't fool the public for a long? Know it is your sole reponsibility to answer his questions! still if you are ignoring his comments, know that, the general Public will take a copy of these kinds of report and they will stand in the middle of Road and they will ask you?

O Jawahirullah & Hyder Company! you cann't hear the crying of those Tsunami affected people! This is the way to do social service to your community? mind that, you are a agent for raising Tsunami donation! you never mentioned that, you will manage the donation? who gave you the authority to decide how to use the Tsunami fund? It is your primary responsibility to distribute fully to the affected people as a first Aid? those affected people cann't come out from the first aid itself! you are planning for the future! first let us think for the present and once we fulfill our present requirements only, we should think for the future?

O brothers of innocent TMMK members! your leaders cann't hear the cryings of the suffering people! at least, you brothers cann't hear it! you will not ask your leaders these kind of corruption? mind that, tomorrow in the day of judgement, you too will be answerable for the acts of your Leaders! as you are also a party to the decision?

last but not least, TMMK should not ignore brother Thaufeeqe's allegation! he is raising a valid reason and points which is technical. It is the primary responsibility of TMMK leaders to reply to his allegation and at the same Should declare the details of Form FC3 all the six pages! if really, these people fear the almighty Allah, and the day of judgement, surely they will disclose as well as they will reply to this mail! let us wait and see the feed back.

May the almighty Allah, show his mercy on us and guide us in the right path. Aameen.

Wassalam
Yours brotherly
Abdul Nasser, Arshad Ahmed, Zakir Hussain, Ibrahim, Iqbal, Anwar Basha, Latheef, Abdul Rasheed and other Muslim brothers which is countless!

Anonymous said...

Valuable comments, try to publish in Tamil.

Thanks,
"உஷார் தொண்டன்"

முத்துப்பேட்டை said...

அன்புள்ள அண்ணன் தவ்பீக் அவர்களுக்கு,

தமுமுகவின் சுனாமி பற்றிய தங்களின் இரண்டாம் வெளியீட்டின் முதல் பாகத்தைக் கண்டேன். அவ்வெளியீட்டின் இறுதியிலேயே தமுமுகவின் பதிலை தெரிவித்திருக்கும் அல்லது உண்மையான பதிலை தெரிந்து வைத்திருக்கும் தாங்கள் இதனை வெளியிட்டதன் நோக்கம் பளிச்சென தெரிகிறது.

சமுதாயத்திற்காக பாடுபடும் ஒரு பேரியக்கத்தை, அரசாங்க சிக்கல்களில் மாட்டிவிட வேண்டுமென்ற ஒரே நோக்கம் அதாவது தங்கள் தலைவரின் ஏக கொள்கையான தமுமுகவை அழிக்க வேண்டுமென்ற நோக்கம் தானே அல்லாமல் வேறல்ல.

என்றாலும் இறையருளால் தமுமுக சமுதாய மக்களுக்காக உரிமைகளைப் பெற்றே தீரும். அதுசரி, தங்களின் முதல் பதிப்பிற்கு இட்ட கேள்விகள் குறித்து ஒன்றுமே மூச்சு விட வில்லையே அது ஏன்?

சுமார் இரண்டரை இலட்சத்தை சுனாமியின் பெயரால் சுருட்டியதை மார்க்க சட்டங்களின் படி சரி காண்கிறீர்களா?

அன்புடன்
இறையடியான் 27.04.2006

Anonymous said...

Assalamun Alaikum (Varah)

It is unfortunate that, not a single comment has been made against the article, rather than, it is indirectly attacking irrelevant matters and persons. It is the duty of TMMK leaders to clarify the points raised in the article rather than deviating the subject.

Further, I request Mookavai also, not to publish irrlevant comments and make it clear that, those articles which are inline with the subject alone to be published.

yours brother,
Anwar Basha
Qatar

nabivazhi said...

சகோதரர் தவ்ஃபீக் அவர்களுக்கு ஒரு அன்பு வேண்டுகோள்! நீங்கள் எதையாவது எழுதுங்கள். ஆனால் அதற்கு முன்பாக நாளை மறுமை நாள் இருக்கின்றது – அங்கே நாம் அல்லாஹ்விடம் பதில் சொல்லி ஆகவேண்டும் என்ற பயத்துடன் எழுதுங்கள். நான் கேட்பது என்ன வெண்றால் தமுமுக இத்தனை உன்மையாக பதில் அளித்தும் அதில் மோசடி என்பது போல் சொல்கிறீர்களே! அதைவீட அத்தனை பலவீனத்தையும் கொண்ட ததஜவின் சுனாமி கணக்கு பற்றி என்ன கூறுகின்றீர்கள்? அண்ணனுடைய சுனாமி கணக்குவழக்குகள் அத்தனையும் சரியா என்பதற்கு பதில் தர முடியுமா? அது போக நான் எழுதிய இந்த உன்மைகளுக்கு தயவு செய்து நீங்களாவது பதில் தாருங்கள் ப்ளீஸ். பார்க்க : http://www.pjvstmmk.com/2_seat_vivakaram.htm

இப்படிக்கு

அதிரை அப்துல்லாஹ்
மெயில் : abdullah_maa@yahoo.co.in

Anonymous said...

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோதரர் தவ்பீக் அவர்கள் மிக அழகாக சட்டத்தின் துனை கொண்டு த.மு.மு.க வின் பிராடுகளை ஆதாரங்களுடன் நிருபித்துள்ளார்!

இதுவரை இந்த பகுதியில் வந்த கடிதங்கள் அத்தனையும் ஒரு இயக்கத்தினர் அடுத்த இயக்கத்தின் மீது குற்றச்சாட்டிக்கொண்டு என்ற ரீதியில் இருந்தது. ஆனால் சகோ. தவ்பீக் நடுநிலைமையுடன் மிக துல்லியமாக அவர்களின் கையாடல்களை நிருபித்துள்ளார்கள்!

த.மு.மு.க மிலன் மண்டபத்தில் கணக்கு சமர்பித்த செய்தி TMMK வளைதளத்தில் பார்த்த போது, ஆஹா எந்த அளவுக்கு பரிசுத்தமாக கணக்குகளை நிருபித்துள்ளார்கள் என்று என்னிணோம்! ஆனால் இப்போது, பார்த்தால் த.மு.மு.க நம் எல்லோரையும் முட்டாள் ஆக்கி வந்த நடுவர்களையும் கோவலப்படுத்திவிட்டது! உண்மையில் எந்த அரசியல் கட்சிகளும் செய்ய முடியாத கொள்ளை புரட்சிகளை த.மு.மு.க செய்துள்ளது!

நடுநிலையாளர்களின் கோள்வி!

1) ஆவனங்கள் என்று சமர்பித்த த.மு.மு.க, ஏண் முழுமையாக வெளியிடாமல், ஆவணங்களின் முன் பக்கத்தை மட்டும் காண்பித்து மக்களை மடையார்களாக்கியது?
2) சம்மந்தப்பட்ட ஆதாரங்களை எல்லாம் காட்டாமல் சகோ. தவ்பீக் செல்வது போல், சுற்றி வளைத்து தோவையில்லாதவைகளை சேர்த்து ஆதாரம் ஆக்கினார்கள்?
3) தங்களிடம் உண்மை இருக்கும் பட்சத்தில் பயம் என்னா?

பாரிகாரம்!

சரி, மனிதர்கள் எல்லோரும் தவறு செய்பவர்களாகவோ இருக்கிறார்கள்! இனி இதற்க்கு என்ன பரிகாரம்! த.மு.மு.க உடனோ அந்த FORM FC3 படிவத்தின் முழு நகலையும் அதற்கடுத்து வந்த முழு வரவு செலவுகளையும் தற்போது அறிவித்த திட்டத்தின் படி இதுவரை எவ்வளவு பணிகள் நடைபொற்று உள்ளது மற்றும் மீதம் உள்ள பணிகள் முடிய எவ்வளவு நாட்கள் ஆகும் என விரிவாக பதிலளிக்க த.மு.மு.க கடமை பெற்றுள்ளது! இது தவிர இவர்கள் ஏண் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல் உதவியாக வழங்காமல் வருங்கால திட்டத்திற்க்கு நிதியை ஒதுக்கினார்கள்! இவர்களுக்கு யார் இந்த அதிகாரம் கொடுத்தது! இவைகளுக்கு த.மு.மு.க பதில் கொடுக்க கடமை பட்டுள்ளது! பொறுத்திருந்து பார்ப்போம்!! இவர்களின் நோர்மையை!!!

நாம் என்ன செய்ய வோண்டும்!

பொது மக்களாகிய நாம் அதிக பட்சமாக ஒரு மாதம் காத்திருப்போம்! இவர்களின் இந்த பிராடுகள் தொடர்ந்து இதற்க்கு எந்த பதிலும் வரவில்லை என்றால் சமுதாய அர்வலர்களை கொண்டு போராடுவோம்! இன்னும் வீதி வீதியாக இவர்களின் பித்தலாட்டங்களை தோலுரித்து காட்டுவோம்!

இப்படிக்கு
சாதிக் பாஷா
அஹ்மத் கபீர்
K. யூசுப்
நாகப்பட்டினம்
தமிழ்நாடு