Tuesday, April 18, 2006

த.மு.மு.க வும் அதன் நேர்மையும்?

பிஸ்மில்லாஹ் . . .

த.மு.மு.க வும் அதன் நேர்மையும்?

த.மு.மு.க ஃபித்ரா மற்றும் சுனாமி நிதிகள் சரியான முறையில் விநியோகம் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு சுமத்தி அது சமந்தமாக கணக்குகளை பொது விசாரனைக் குழு அமைத்து அவர்களிடம் சமர்பிக்க வேண்டும் என்று தமிழ் நாடு தவ்ஹ“த் ஜமாத் கோரிக்கை வைத்தது. இந்த கேரிக்கையை ஏற்றுக் கொள்வதாக அறிவித்த த.மு.மு.க பொது விசாரனைக் குழு அமைக்கும் பொறுப்பும் தமிழ் நாடு தவ்ஹ்ஹ“த் ஜமாத் மீது சுமத்தியது. ஏன் என்றால் அவர்கள் கண்ட கணவு தவ்ஹ“த் ஜமாத் அழைத்தால் சுன்னத் ஜமாத்தாற்கள் வரமாட்டார்கள் என்றும் பொது விசாரனைக் குழு அமைக்காத பட்சத்தில் அதை காரணம் காட்டி கணக்கு கான்பிப்பதை விட்டு தப்பி விடலாம் என்று தப்பு கணக்கு போட்டது. ஆனால் அல்லாஹ்வின் மிகப் பொரும் கிருபையால் தமிழ் நாடு தவ்ஹ“த் ஜமாத் அறிவித்தஎல்லா இயக்கங்களையும் சந்தித்து அவர்களின் சம்மதத்தை பெற்று நடுவர் விசாரனை குழுவை அமைத்தது.

நடுவர் விசாரனைக் குழுவை புறக்கனித்த த.மு.மு.க - கிழ்கண்ட கேள்விகளுக்கு பதில் அளிக்ககடமைப்பட்டுள்ளது!

:) நடுவர் விசாரனைக் குழுவிடம் கணக்குகள் ஒப்படைக்கப்படும் என்று ஒத்துக் கொண்ட த.மு.மு.க ஏண் நடுவர்குழுவிடம் ஒப்படைக்காமல் பொதுமக்கள் மத்தியில் சமர்பித்தது?
:) நடுவர் விசாரனைக் குழுவை ஏற்றுக் கெண்டதாக அறிவித்த த.மு.மு.க! ஏண் தன்னுடைய அதிகாரப்பூர்வமான இனையதளத்தில் தன்னுடைய அறிவிப்பை வெளியிடாமல் தன்னுடைய கள்ள வொப்சைட்டில் வெளியிட்டது? இப்படி இரட்டை வேடம் போட எடுத்த திட்டமா??
:) ஃபித்ரா புள்ளிவிவரங்களை வெளியிட்ட த.மு.மு.க விரிவான வரவு மற்றும் செலவு கணக்குகள்விபரத்தை வெளியிடவும்?
:) ஊர் வாரியான ஃபித்ரா வினியோக பட்டியல் 2004 & 2005 மற்றும் சூனாமி நிதி விநியோக பட்டியல் வெளியிடவும்?
ஒரு வருடம் கழித்தும் இன்னும் பாதிக்கும் மோல் பணம் வசூலித்த பணத்தை விநியோகிக்காமல் கொள்ளை அடித்த ஹைதர் & ஜவாஹ’ருல்லாஹ் கம்பனி, பாதிக்கப்பட்ட மக்களின் உடனடியான தோவைகள் இருந்தும் வருங்கால சூனாமி பாதுகாப்பு மையம் அமைக்க திட்டமிடும் இவர்கள் இப்போது நடு வீதியில் தங்களுடைய பொருட்களை பரிகொடுத்து நிற்கும் இந்த மக்களுக்கு நிவாரணம் இல்லையாம்!
சூனாமி எற்பட்டு ஒரு வருடத்திற்க்கு மோல் ஆகியும் ஹைதர் & ஜவாஹ’ருல்லாஹ் கம்பனி செல்லும் சூனாமி பாதுகாப்பு மையம் இன்னும் paper வடிவில் தான் உள்ளது! பொதுமக்கள் கோட்டுக் கொள்கிறார்கள், சூனாமி பாதுகாப்பு மையம் கட்டுவோம் என்று அறிவிக்க இவர்கள் எடுத்துக் கொண்டது ஒரு வருடம்! அந்த பாதுகாப்பு மையம் அமைக்க குறைந்தது 25 வருடம் ஆனாலும் அதற்க்கு ஆச்சரியப்படுவதிற்கில்லை! பொதுமக்களின் பணத்தை சூறையாடும் இந்த கொள்ளை கும்பலை மக்கள் சும்ம விட மாட்டார்கள்!
சூனாமி நிதியை த.மு.மு.க நிர்வாகிகள் தன்னுடைய அல்லது அவர்களுடைய நன்பர்களின் வணிகத்தில்பூழக்கத்தில் போட்டுள்ளார்களா?அப்படி போட்டு இருந்தால் இதுவரை அந்த நிதிக்கு வந்த வருமானம் என்னா?
சூனாமி நிதி இதுவரை எந்த நிறுவனத்திலும் பூழக்கத்தில் போடவில்லை என்றால், எல்லா வங்கி கணக்குகளின் மாத கடைசி கையிருப்பை காட்டுவார்களா? இந்த வங்கி கணக்குகளின் விவரங்களை தனிக்கை செய்து பொதுமக்களிடம் வழங்க தயாரா?
கோயம்பத்துர் கலவரத்திற்க்கு வசூலித்த நிதியை உடனுக்குடன் வழங்கிய த.மு.மு.க! சூனாமி நிதி ஏண் ஒரு வருடம் பூர்த்தி அடைந்த போதும் வழங்கவில்லை? அப்போது தவ்ஹ“த்வாதிகள் உடன் இருந்தார்கள். இந்த மாதிரியான தவறுகளை செய்ய விடவில்லையா?
இந்த கேள்விகளுக்கு த.மு.மு.க பதில்லளிக்க கடமை பட்டுள்ளது! பொருத்திருந்து பார்ப்போம் பதிலை(நேர்மையை)!!
இப்படிக்கு
தவ்பீக். அஹ்மத் - தம்மாம்

6 comments:

Anonymous said...

விமர்சனத்திலும், கேள்வியிலும் உள்ள கோளாருகள்! சரி செய்யப்படுமா?

சுனாமி நிதியில் மோசடி செய்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீது அபாண்டமாக த.மு.மு.கவினர் பழி சுமத்தினர். அதன் பிறகுதான் த.த.ஜ த.மு.மு.கவிற்கு பகிரங்கமான அறைகூவல் விடுத்தது.

(1) த.மு.மு.க பொது மக்களிடம் கணக்குகளை காட்டவில்லை. அது தனது ஆதரவாளர்களிடம் மட்டுமே கணக்குகளை காட்டியது. விசாரணைக் குழுவிடம் கணக்குகளை காட்டாமல் இங்கு வந்து காட்டுகிறீர்களே என்று அந்த இடத்தில் சிலரால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு கூட அவர்களால் சரியாக பதில் அளிக்க முடியவில்லை. பதில் அளித்தனர் என்று யாரும் சொன்னால் அது என்ன பதில் என்று இங்கே தெரியப்படுத்தவும்.

(2) கள்ள வெப்சைட்டை நடத்துவது த.மு.மு.கவின் பொருப்பில் உள்ள ஒரு குள்ள நரிதான் என்பதை அவர்கள் இப்பொழுது ஒத்துக் கொண்டுள்ளனர். அந்த குள்ள நரிக்கு முகவை ஏரியாவில் ஏதேனும் ஒரு வாரிய பதவி வாங்கித் தருவதாக வாக்களிக்கப்பட்டுள்ளது. ஏவி விடப்பட்ட எஜமானுக்கு மிகவும் விசுவாசமாக அது நடந்து கொண்டிக்கிறது.

(3) பித்ரா மற்றும் சுனாமி நிதிக்கான கணக்குகளை விரைவில் தங்களுடைய இணையதளத்தில் விரிவாக போடுவதாக சொன்னார்கள். இன்னும் வந்த பாடில்லை. கள்ள வெப்சைட்டா அல்லது அவர்களுடைய அதிகாரப்பூர்வ வெப்சைட்டா என்பதும் தெளிவில்லை.

(4) ஊர் வாரியாக எத்தனை ஃபித்னா இதுவரை செய்துள்ளோம் என்ற விபரத்தை வேண்டுமானால் த.மு.மு.க.வினரால் தர முடியும். பித்ரா மற்றும் சுனாமி நிதிக்கான விபரம் பெறுவது மாட்டுக் கொம்பில் பால் கறப்பதற்கு சமம்.

அருள் அடியான்.

முத்துப்பேட்டை said...

ததஜவும் அதன் நேர்மையும்

விபரங்கெட்டவர்களின் விலாசம் தான் ததஜ என்பதை சகோ. தவ்பீக் மீண்டும் நிரூபித்துள்ளார்.
சுனாமி மட்டுமல்ல ஏகத்துவம் உள்ளிட்ட எல்லா விஷயங்களிலுமே தாங்கள் பிஜேயின் நிரந்தர பினாமிகள் தான், அவர் ஸஹாபாக்களை ஏசினாலும் ஏற்றுக்கொள்வோம், சக அமைப்புகளை, முஸ்லீம் சகோதரர்களை எந்த அளவு கீழ்தரமாக விமரிசித்தாலும் அப்படியே எதிரொலிப்போம் என்ற கொள்கையுடையவர் என தெளிவு படுத்தியுள்ளார்.

பொதுவிசாரணை குழு அமைக்கும் பொறுப்பை தமுமுக, ததஜவிற்கு அளிக்கவில்லை. மாறாக, எவ்வித ஆலோசனையுமின்றி தானாக குழு அமைத்துக்கொண்ட திருவாளர் பிஜேவை அவர் அமைத்த அறுவர் குழுவுடன் மிலன் மண்டபத்திற்கு வரச்சொல்லி அழைத்தது தமுமுக தன்னிச்சையாக குழு அமைத்தவர், தமுமுகவின் அழைப்பை உதாசீனப்படுத்தி ஒடி ஒளிந்தது ஏன்?

அறுவர் குழு இரண்டாம் அமர்விலேயே நால்வர் அணியாக சுருங்கியது ஏன்? நடுவர்கள் என தங்களுக்கு தாங்களே பட்டம் சூட்டிக்கொண்ட நடுநிலையற்றவர்கள் மட்டுமல்ல பொதுமக்கள், அனுதாபிகள் ஏன் எதிரிகளும் கலந்து கொண்டு பார்வையிடவும், விளக்கம் பெறவும் வகை செய்த தமுமுகவின் அறிவிப்பு டிஎம்எம்கே டாட் ஐஎன் என்ற வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டது மட்டுமல்லாமல், ஸ்குரோல் எனப்படும் சிறப்புச்செய்தியாக டிசம்பர் 10 வரை ஓடிக்கொண்டிருந்ததை சகோ. தவ்பீக், ததஜ தலைவரால் பூட்டப்பட்ட விழித்திரையால் . . . பார்க்க முடியாமல் போயிருக்கலாம்.

அல்லது முன்பு ஒரு முறை ஜே.ஏ.க்யூ.ஹெச். என எழுதியிருந்ததை (எம்.ஹெச்.ஜெ) ஜவாஹிருல்லாஹ் என வாசித்தது மட்டுமல்லாமல், அப்படியே பிரச்சாரம் செய்த ததஜவினரைப்போல இப்போழுதும் தவறான செய்தியை பரப்ப முன் வந்திருக்கலாம். ஆனால் உண்மை என்னவோ, தமுமுக தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் தனி நபரின் தன்னிச்சையான அறைகூவiலுக்கான பதில் முதல் டிசம்பர் 10 மிலன் மணடபத்தில் நடந்தது வரை ஒவ்வொரு நிகழ்வையும் விரிவாக வெளியிட்டு வந்தது என்பதுதான்.

ஃபித்ரா வசூல் மற்றும் விpனியோக விபரங்கள் வெளியிடப்படும் நடைமுறையில் தமுமுக ஆரம்பிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை, தேவைப்படும் மாற்றங்களை கோருவதற்கும், ஆலோசனை செய்து முடிவெடுப்பதற்கும் நிர்வாகிகளுக்கு தகுதியுண்டு.
சுனாமி நிதியில் பத்திரிக்கைக்கு லட்சக்கணக்கில் பணம் ஒதுக்கிக்கொண்டவர்கள், பாதிக்கப்பட்டோரின் துயர் துடைக்க வழங்கப்பட்ட பணத்தில் தனக்கு சீருடை வாங்கி படம் காட்ட ஆயிரக்கணக்கில் ஒதுக்கிக்கொண்டு சுனாமி நிதியை சூறையாடியவர்கள், சுனாமியின் சுவடே அறியாத வேலூர் மாவட்டத்திற்கு நிதி ஒதுக்கி முறைகேடு செய்தவர்கள் - இத்தனையையும் செய்த ததஜ தலைமையை தட்டிக்கேட்க வழியில்லாதவர்கள், விழி பிதுங்கி செய்வது இன்னதென்று அறியாமல் பிஜேயின் பினாமிகளாக மாறிவருகின்றனர்.

ததஜ தலைமை சுனாமிக்கென்று நிதி வசூல் செய்த வங்கி கணக்கு எண் என்ன ?

வந்து வழுந்த நன்கொடைகளை சுனாமி என்றும், இயக்கத்திற்கான நன்கொடை என்றும், ஜகாத் நிதி என்றும் எப்படி இனம் கண்டார்கள்?

தமுமுக வெளியிட்டது போல் வங்கி அறிக்கையை வெளியிடத்தயாரா ?

தமுமுக தனது கணக்குகளை தணிக்கை அதிகாரி மூலம் தணிக்கை செய்தது போல் ததஜ கணக்குகளை தணிக்கைக்கு உட்படுத்த தயாரா?

ஏக இறைவனுக்கு கீழ்படிவதே ஏகத்துவம் (தவ்ஹீத்) என்பது போக, இப்போது ஏக ஒருவன் (பீ.ஜே)க்கு கீழ்படிவதே மறுமைவெற்றி என நம்பிக்கைகொண்டுள்ள ததஜவினர் தெளிவு பெறவும், சூனியக்காரர்களின் சூழ்ச்சிகளிலிருந்து விடுபட்டு தூய இஸ்லாத்தை பினபற்றும் நன் மக்களாகவும் எல்லாம் வல்ல அல்லாஹ் அருள்பாலிப்பானாக!

இறையடியான் 20.04.2006

http://muthupettai.blogspot.com/2006/04/blog-post_20.html

Anonymous said...

பொதுவிசாரணை குழுவில் இன்னாரெல்லாம் இடம்பெறலாம் என்று ததஜ கருத்து தெரிவித்ததே ஒரு ஆலோசனைதான். அதை மறுத்து இவர்களை சேர்க்கக் கூடாது, இவர்களை சேர்க்க வேண்டும் என்று எந்த கருத்தையும் தெரிவிக்காத தமுமுக அவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு வர வேண்டும் என்று முழுப் பொருப்யையும் ததஜ மீது சுமத்தியது. அந்த அமைப்புகள் வர மாட்டார்கள் என்றுதான் தமுமுக கருதியது. எல்லாம் வல்ல இறைவன் சரியான நெத்தியடியை சுனாமி நிதி சுருட்டல் செய்த அவர்களுக்கு கொடுத்தான்.

மிலன் மண்டபத்தில் நடந்த கூத்து விபரங்களை தமுமுக தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் போட்டது என்று மார் தட்டும் மாக்கள் கூட்டம் அதன் (வரவு மற்றும் வினியோக) முழு விபரத்தையும் இது வரை சமர்பிக்க வில்லையே ஏன்? என்று கேட்டார்களா? விரைவில் அதன் முழு விபரத்தையும் தங்களுடைய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தருவதாக சொல்லி இன்றோடு நான்கு மாதம் ஆகிறது. கள்ள கணக்கு எழுதும் போலி வாத்தியார்களை காய்ச்சி எடுக்க வேண்டியவர்கள் இங்கு வந்து இப்படி புலம்பி தீர்ப்பது நியாயமா?

இவர்கள் வினியோகம் செய்த விபரம் வந்தால்தானே தெரியும் யார், யாருக்கு அல்லது எது எதுக்கெல்லாம் பெருந்தொகையை ஒதுக்கிக் கொண்டார்கள் என்பது. அதை வெளியிடாமல் கணக்குகளை தெளிவாக வெளியிட்ட ததஜ மீது புழுதி வாறி தூற்றுவது சரியா? தமுமுக கணக்குகளை வெளியிடாமல் மறைத்து வருவதிலேயே இவர்களுடைய தகிடுதத்தம் மக்களுக்கு புரிந்து விட்டது.

அருள் அடியான்

Anonymous said...

Dear Brother of TMMK,

Yes, Brother Thaufeeque is right in raising the Question, it is the duty of the TMMK to clarify rather than Just instigating TNTJ alone.

Let us see and wait.

Abu Noorah

முத்துப்பேட்டை said...

த.மு.மு.க ஃபித்ரா மற்றும் சுனாமி நிதிகள் சரியான முறையில் விநியோகம் செய்யவில்லை என்று குற்றச்சாட்டு சுமத்தி அது சம்பந்தமாக கணக்குகளை பொது விசாரனைக் குழு அமைத்து அவர்களிடம் சமர்பிக்க வேண்டும் என்று தமிழ் நாடு தவ்ஹ'த் ஜமாத் கோரிக்கை வைத்தது.

என்று தவ்பீக். அஹ்மத் - தம்மாம் கூறுகிறார்.

சுனாமி நிதியில் மோசடி செய்ததாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மீது அபாண்டமாக த.மு.மு.கவினர் பழி சுமத்தினர். அதன் பிறகுதான் த.த.ஜ த.மு.மு.கவிற்கு பகிரங்கமான அறைகூவல் விடுத்தது.

என்று அருள் அடியான் கூறுகிறார்.

இதில் எது ததஜவின் நிலைபாடு என்பதை முதலில் அறிவிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பிறகு மற்ற விமர்சனங்களைப் பார்ப்போம்.

அபூஅன்சாரி 22.04.2006

முத்துப்பேட்டை said...

ததஜ சுருட்டிய சுனாமி நிதி:

அன்புள்ள அருளடியானுக்கு,
சுனாமி நிதி விஷயமாக பி.ஜே. அறுவர் குழவை அமைத்துள்ளதாகத்தான் கூறியிருந்தாரேயல்லாமல் இது ஒரு ஆலோசனை என கூறவில்லை. உண்மையில், தான் கூறும் அவதூறை தமுமுக வழக்கம்போல் அலட்சியம் செய்யும். நாம் அதை வைத்து அரசியல் செய்யலாம் என பி.ஜே. தான் எதிர்பார்த்தார்.

தமுமுக கணக்குகள் தயார், மணடபமும் தயார், சுயமாக குழு அமைத்த, அரசியல்வாதி பி.ஜே அந்த மண்டபத்திற்கு தான் அமைத்த குழுவை அழைத்துவர வேண்டிய பொறுப்பு பி.ஜேவிற்கு என பகிரங்க அழைப்பு விட்டதும், தான் அமைத்த குழு ஒரு ஆலோசனை குழுதான் தமுமுக விருமபினால் மாற்றம்; செய்து கொள்ள வேண்டியது தானே என திசை திருப்ப ஆரம்பித்தார்.

அதனையே தாங்களும் பின்பாட்டாக பாடியுள்ளீர்கள்.

தமுமுக அக்குழவை மிலன் மண்டபத்திற்கு அழைத்து வரும் பொறுப்பை பி.ஜேவிற்கு தந்ததே, அவர் ஏன் அங்கு அழைத்துவர வில்லை?

மிலன் மண்டபத்தில் சமுதாய பிரமுகர்களும் தமுமுக அபிமானிகளல்லாத பல பொதுமக்களும் கலந்து கொண்டனர், என்பது யாவரும் அறிந்த செய்தி, அதற்கு தங்களின் பின்னூட்டமே சாட்சி, ஆனாலும் அங்கு தமுமுகவினர் மாத்திரம் தான் கலந்து கொண்டார்கள் எனவும் முரண்பட்டு குழம்பியுள்ளீர்கள்.

பாதிக்கப்பட்டோருக்கான நிவராண நிதியிலிருந்து தனது பத்திரிக்கைக்கோ அத்துடன் இயக்க சீருடைகளுக்கோ நிதி ஒதுக்கிக்கொள்ளாமல் முழுக்க முழுக்க அந்நிதியை பாதிக்கப்பட்டோரின் நலனுக்காகவே செலவிட்ட தமுமுக தனது பத்திரிக்கையின் இடநெருக்கடி காரணமாக முழுவிபரங்களையும் வெளியிட முடியாத நிலையில் உள்ளது.

என்றாலும், தேவைப்படுபவர்கள் நகல் எடுக்கும் கட்டணத்தை மட்டும் செலுத்தி நகல் பெற்றுக்கொள்ளலாம் என பகிரங்கமாக அறிவித்துள்ளது, தேவைப்படுபவர்கள் தலைமையகத்தை தொடர்பு கொள்ளலாம்.

அதுசரி, நண்பர் அருளடியான், பாதிக்கப்பட்டோரின் நிவாரண நிதியிலருந்து தனது இயக்கத்தவர்களுக்கு சீருடை வாங்கவும், பத்திரிக்கையின் கடனை அடைப்பதற்கும் ததஜ சுமார் இரண்டரை இலட்சம் ரூபாய் செலவிட்டது, மார்க்க ரீதியாக சரி என்கிறாரா?

மறுமையில் அம்மக்கள் முறையீடு செய்ய மாட்டார்கள் என ததஜ தலைமை நம்புவது போல் நண்பர் அருளடியானும் நம்புகிறீரா?

இறையடியான் 23.04.2006