Tuesday, April 18, 2006

தோல் உறிந்த விஷப் பாம்புகள்

******************************************************
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) சகோதரர்களே, கீழ்க்கானும் இந்த மடல்களை மின்னஞ்சல் மூலமாக கிடைக்கபெற்றேன் அவற்றிற்கு சகோ. அப்துல் ரவூஃப் அளித்த பதிலையும் எனக்கு அனுப்பியிருந்தார் அவரின் வேன்டுகோளுக்கினங்க அதை இங்கு பிரசுரிக்கின்றேன்.
என்றும் உங்கள்
முகவைத்தமிழன்
****************************************************************
தோல் உறிந்த விஷப் பாம்புகள்
அஸ்ஸலாமு அலைக்கும்.
அன்புள்ள சகோதரர் அப்துல்லாஹ் அவர்களுக்கு, தமுமுக சகோதரர்களை தாங்களும், ததஜ சகோதரர்களை தமுமுகவும் மாறி மாறி தோல் உரித்துக்கொண்டிருக்கும் பாங்கு மிகவும் சிறப்பானது. நீங்கள் இரு சாரரும் தோல் உறிந்த விஷப் பாம்புகள் என்பதை தற்போது பொதுமக்கள் புரிந்து கொண்டார்கள். உங்கள் பணிகள் இன்று போல் என்றும் தொடர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக. ஆமீன்.
வஸ்ஸலாம்.
A.S. Abdul Rauf
OA-I,Gas & Sulphur Division
Marketing & Refining Directorate
P.O. Box 898, Abu Dhabi National Oil Company (ADNOC), Abu Dhabi - United Arab Emirates
Tel: (+971-2-) 6023983 (Dir.)
Mob: (+971-50) 5310726

****************************************************************************************
ஏக இறைவனின் திருப்பெயரால்..

அஸ்ஸலாமு அலைக்கும்,

அன்புள்ள சகோதரர்களே,

தமுமுக சகோதரர்கள் தங்கள் பத்திரிக்கையில் இப்னு ஹசன் என்ற காயல்பட்டினத்தை சேர்ந்தவர் எழுதியது போல ஒரு அவதூறு செய்தியை வெளியிட்டு இருக்கிறார்கள். சகோ.பிஜெவினால் ஆரம்பிக்கப்பட்ட தமுமுகவை விட்டு அவரையும் பல்லாயிரக்கணக்கான சகோதரர்களையும் தனது பதவி மோகத்தால் சகோ.ஜவாஹிருல்லா அவர்கள் வெளியேற்றியது அனைவரும் அறிந்த செய்தி. ஆனால் இவர்கள் சகோ.பிஜெவும் மற்றவர்களும் தானாக வெளியேறியது போல சொல்வது வேடிக்கையானது.

இடஒதுக்கீடு கேட்டு தனக்கு தானே கடிதம் எழுதி நம்மை ஏமாற்றியும் , முஸ்லிம் லீக்கிற்க்;கு கொடுத்த தொகுதியை பரித்தும் நமக்கு துரோகம் மட்டுமே தற்போது செய்து மற்றபடி நன்மை என்று ஒன்றுமே செய்யாத திமுகவை ஆதரிக்கும் நம் சகோதர கழகத்தினர் இடஒதுக்கீடு ஆணையம் அமைத்து அதில் முஸ்லிம் என்ற பெயர் பதத்தை முதன் முறையாக இடம் பெற செய்து இடஒதுக்கீட்டின் முதல் கட்டத்தை முடித்ததற்காக அதிமுகவை ஆதரிக்கும் ததஜவை சொந்த நலன் காரணமாக ஆதரிக்கிறார்கள் என்று சொல்வது நகைச்சுவையானது.

விண் டிவி சகோ.பாக்கரின் சொந்த முயற்சியில் நடத்தப்பட்ட தொலைக்காட்சியாகும். அந்த டிவியை வாங்க முறையான ஒப்பந்தம் செய்யப்பட்டதும் அந்த ஒப்பந்த காலத்திற்க்குள் முழு பணமும் கொடுக்க முடியாததால் அதை அதன் உரிமையாளர் தேவநாதன் விற்கும் சூழ்நிலை ஏற்பட்டதும் அதை ஒரு தணியார் நிறுவனம் வாங்கியதும் பொதுவாக அனைவருக்கும் தெரிந்த செய்தி. ஒப்பந்தப்படி விண் டிவியில் பங்குகளை வாங்கிய சகோதரர்களுக்கு அதை இரண்டு மடங்காக சகோ.பாக்கர் திருப்பி கொடுத்துள்ளார். விண் டிவி பங்குகளை வாங்கிய வளைகுடா சகோதரர்களிடம் தொடர்பு கொண்டால் உண்மை நிலையை அறியலாம்.

தமிழகத்தில் ராஜ் டிவி, விஜய் டிவி, தமிழன் டிவி போன்ற பல சேனல்கள் இருப்பதும், அதில் யார் பணம் கொடுத்தாலும் எந்த நிகழ்சியையும் நடத்தலாம் என்பது அனைவரும் அறிந்த தகவல். ஆனால் தமிழகத்திலேயே விண் டிவி மட்டுமே இருப்பது போலவும் இதை விட்டால் ததஜவின் நிகழ்சியை வேறு எந்த வழிகளிலும் நடத்த முடியாதது போலவும் அதனால்தான் அதிமுகவை ததஜ ஆதரிப்பது போலவும் தமுமுகவினர் செய்தி வெளியிடுவது தார்பாயில் வடிகட்டிய பொய்யாகும்.

இதுவரை தங்கள் கள்ள வெப்சைட்டில் வெளியிட்டு வந்த செய்திகளை தற்போது தங்கள் பத்திரிக்கையிலும், அதிகாரபூர்வ வெளியிட்டு இருப்பதை பார்க்கும் பொழுது ததஜவின் மக்கள் செல்வாக்கை எப்படியாவது குறைக்கு வேண்டுமென்ற நமது சகோதரர்களின் எண்ணம் தெளிவாக தெரிகிறது.

கருணாநிதி ஆட்சிக்கு வந்தால் நமக்கு இடஒதுக்கிடு கெடுப்பார் என்பதற்காகவோ, அவர் முஸ்லிம்களுக்கு நன்மை செய்வார் என்பதற்காகவோ திமுகவை ஆதரிக்காமல் பொதுவான அடிப்படையில்தான் திமுகவை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று தங்கள் பத்திரிக்கையில் தெளிவாக அறிக்கைவிட்டுள்ளனர்;. பொதுவானது என்றால் வக்பு வாரியம், குடிநீர் வாரியம், மின்சார வாரியம் போன்ற பதவிகள்தான் என்பது நான் சொல்லி உங்களுக்கு தெரியவேண்டியது இல்லை. தங்கள் வருங்கால வாரிய பதவிக்காக சமுதாயத்தை அடகு வைத்த இவர்கள். இடஒமுக்கீடு ஆணையம் என்ற ஒரே அளவுகோலுக்காக அதிமுகவை ஆதரிக்கும் ததஜ ஆதரவை போய் சுயநலன் முடிவு என்று கூறுவது மிகப்பெரிய ஏமாற்றுவேளையாகும். இவர்கள் இது போன்ற தரம்தாழ்ந்த செயல்களை நிறுத்தும்வரை இவர்களை தோலுரிக்கும் நமது பணியும் நிற்காது.

வுஸ்ஸலாம்,
அப்துல்லா.
****************************************************************************************
ஏக இறைவனின் திருப்பெயரால்..


பொய்களை பரப்பும் தமுமுக தலைவர்களை அதன் தொண்டர்கள் கண்டிக்க மாட்டார்களா?

அஸ்ஸலாமு அலைக்கும்,

தமுமுக அடிவருடி மன்றத்தினருக்கு,

ததஜ என்ற மக்கள் அமைப்பின் பொது செயலாளர் சவுதி வருகையில் ஜித்தாவில் நடந்த நிகழ்சியை சகோ.தீன் முகமது தனிப்பட்ட ஆர்வத்தில் மெயிலாக அனுப்பி இருந்தார். அதில் தரையில் இருந்த முஜிபுர்ரஹ்மான் உமரியை மேடையேற்றி விட்டார். அது தவறுதான் என்பதை ஒத்து கொண்டு அவர் சில விளக்கங்கள் கொடுத்து இருந்தார். அதை ஏற்று கொள்பவர்கள் ஏற்று கொள்ளட்டும், மறுப்பவர்கள் மறுக்கட்டும். தீன் முகமது கொடுத்தது தவறான தகவல்தான், அதை உங்கள் சுயநலனுக்காக இனையத்தில் வெளியிட்டு வெட்ட வெளிச்சமாக்கிய நீங்கள் பல பொய்களையும், அவதூறுகளையும் அதே நிகழ்சியை கொச்சையாக விமர்சித்து பொய்களை பரப்பும் தமுமுகவினரை விமர்சித்து கட்டுரை வெளியிடாதது ஏனோ?

1) சகோ.தீன் முகமது குறிப்பிட்டது தவறு என்றால் அதை அவருக்குதான் தெரிவிக்க வேண்டுமே தவிற அதை இனையத்தில் வெளியிட்டு ஏதோ ததஜ தொண்டர் மிகப்பெரிய தவரை செய்து விட்டார் என்பது போல பித்னா செய்வது ஏன்?.
2) ததஜ என்ற அமைப்பு நடத்திய நிகழ்சியில் அதன் தொண்டர் வெளியிட்ட கட்டுரையை விமர்சித்த நீங்கள் ததஜவை அழிக்க துடிக்கும் அதற்க்கு சம்மந்தமில்லாத தமுமுகவினரின் கள்ள மெயிலை விமர்சிக்காதது ஏன்?
3) 1000க்கும் மேற்பட்ட சகோதரர்கள் கலந்து கொண்டதை பொறாமையில் இளையவன் கும்பல்
400பேர் என்று குறிப்பிட்டதை ஏன் நீங்கள் தவறு என்று விமர்சிக்கவில்லை?
3) தமுமுகவில் உள்ளபோதே சகோ.பாக்கர் பல முறை பேசிய உரையை தற்போது ஜித்தாவில் பேசி இருக்கிறார், அதை வெறித்தனமாக விமர்சித்த தமுமுகவினரை கண்டித்து தாங்கள் கட்டுரை வெளியிடாதது ஏனோ?
4) ஜித்தாவில் உள்ள 30 பேரை தவிர மற்ற அனைவரும் வெளியிலிருந்து வந்தவர்கள் என்று பெயரையும், வருகின்ற பகுதியையும் குறித்து கொண்டு தாங்கள்தான் உள்ளே விட்டது போல பொய்யை வெளியிட்ட தமுமுகவினரை கண்டிக்காதது ஏனோ?
5) உம்ராவிற்க்கு சென்று மொட்டை போட்டு வந்த சகோ.பாக்கரின் பிடரி முடியை பார்த்து கூட்டத்தின் தலைவர் சிங்கம் என்று பேசியதாக பொய்யை வெளியிட்ட தமுமுகவை தாங்கள் கண்டிக்காதது ஏனோ?.
6) தனிப்பட்ட நபர்களை சைத்தான் என்று சொல்வது மார்க்க அடிப்படையில் கூடாது என்று ஒரு சகோதரர ஆதாரத்துடன் எடுத்து காட்டிய பின் பல மாதமாக யார் பெயரையும் குறிப்பிட்டு சைத்தான் என்று சொல்லாமல் இருக்கும் சகோ.பாக்கரின் அந்த பேச்சை திசைதிருப்பி பொய்யை கூறும் தமுமுகவினரை கண்டித்து மெயில் வெளியடாதது ஏனோ?
7) சகோ.பிஜெயை பற்றி அவதூறு நோட்டிஸிலும், மொட்டை மெயில்களிலும் மட்டுமே சவால் விடும்( நேரிடையான விவாதம் என்றால் பின்னங்கால் பிடரியில் அடிபடும் வரை ஓடுவார்கள்) நமது சகோதர கழகத்தினரின் பித்னா சவாலை கண்டித்து கட்டுரை வெளியிடாதது ஏனோ?.

மேற்கண்டவற்றிக்கு அடிவருடி மன்றம் பதில் சொல்லட்டும். இளையவன் கள்ள வெப்சைட்டை நடத்துவதே ஜவாஹிருல்லா, தமிமுன் அன்சாரி, கணி போன்ற தலைவர்கள்தான் என்பதால் அது எப்படி பொய்யை பரப்பும் தமுமுக தொண்டர்களை அதன் தலைமை கண்டிக்காதா என்று தலைப்பிட முடியும் என்று நினைத்தால் பொய்களை பரப்பும் தமுமுக தலைவர்களை அதன் தொண்டர்கள் கண்டிக்க மாட்டார்களா என்று தலைப்பிட்டு கொள்ளுங்கள். இது குறித்த மன்றத்தினரின் பதிலை எதிர்பார்கிறேன். பதில் தர தயங்கினால் இளையவன் வேறு பெயரில் களம் இறங்கி இருக்கிறான் என்று எடுத்து கொள்ள வேண்டியதுதான்.

வஸ்ஸலாம்,
அப்துல்லா.

No comments: